என்னைப் பற்றி

புதன், ஜூன் 17, 2026

அறிவை விரிவாக்கும் உரையாடல்கள்

 இன்று எழுதுவதில் மூன்றாவது நாள். நேற்று எழுதியதை இணையத்தில் பதிவிடவில்லை. நேற்று இரவிலிருந்து தண்ணீர் வரவில்லை என்பதால் பதற்றமும் சோர்வும் இருந்தது. இரவில் தூக்கம் கூட சரியாக இருக்கவில்லை. 4 மணிக்கு எழுந்திருக்கவில்லை. 5 மணிக்குக் கூட எழுந்திருக்காமல் தூங்க முயன்று கொண்டிருந்தேன்.

அதன்பிறகு எழுந்து, பலாப்பழச் சுளைகளையும் லெமன் டீயையும் சாப்பிட்டு விட்டு நடைப் பயிற்சி போய்விட்டு வந்து விட்டேன். சரியாக, 6 மணிக்கு இயற்கையின் இயக்கவியல் வாசிப்பு. எதிர் மரத்தின் கீழ் குடியிருக்கும் அண்ணாச்சி கொடுத்த ஒரு வாளி தண்ணீரை வைத்து காலைக் கடன்களை முடித்து விட்டேன். குழாயில் எப்போது தண்ணீர் வரும் தெரியவில்லை. நடைப் பயிற்சி போவதற்கு முன்னர் மோட்டர் போட்டு தண்ணீர் வருகிறதா என்றும் சோதித்துப் பார்த்து விட்டேன், வரவில்லை.

வாசிப்பிற்கு அனைவரும் உடனேயே வந்து விட்டார்கள். மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் என்ற கட்டுரை. உழைப்பு பேச்சுக்கும் சமூக உறவுகளின் வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றதைப் படித்திருந்தோம். இன்று வாசித்ததில் மூளையின் வளர்ச்சியைப் பற்றிப் படித்தோம். மனித மூளையின் பொதுமைபடுத்தும் திறனும் முடிவெடுக்கும் திறனும் வளர்ந்தது உழைப்பு, பேச்சு இரண்டின் தாக்கத்தினால், இவை இரண்டும் வளர்ந்ததன் தாக்கம் உழைப்பு, பேச்சு இரண்டின் மீதும் இருந்தது என்றும் பார்த்தோம். அதை நான் வலியுறுத்தினேன். அதுதான் முதல் பத்தி. அதற்குள் யாரும் வர மாட்டேன் என்கிறார்கள். மனித மூளையின் பாத்திரத்தை சூக்குமப்படுத்தும் ஆய்வுமுறை என்று மார்க்ஸ் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கு மிகப்பெரியத் தடை இருக்கிறது.

அறிவின் பணி என்று முத்துமோகன் சொல்வதும் இதுதான். மார்க்ஸ் அறிவியக்கத்தின் பொருள், ஆனால் அதனை செயலுடன் இணைக்கிறார். ஃபயர்பாக் பற்றிய ஆய்வுரைகளைக் குறித்து முத்துமோகன் விரிவாக எழுதியிருக்கிறார். மனிதச் செயல்பாடு புறநிலையை மாற்றியமைப்பது குறித்தவைதான் அந்த ஆய்வுரைகள் என்கிறார். அதற்குள் மனிதர்கள் வர மாட்டேன் என்கிறார்கள்.

என்னுடைய வாழ்க்கையின் கட்டங்களை வகுத்துக் கொண்டேன். அதை எழுதியும் விட்டேன். குடும்ப, சாதி வட்டத்தை உடைத்தல் - டாடா, திருமண வட்டத்தை உடைத்தல் - வலைப் பதிவர்கள், தோல் துறை என்று விரிவடைதல் - அதனை உடைத்து மா.அ.கவில் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் - அதிலிருந்து உடைத்து மூலதனம் வாசிப்புக் குழுக்கள், இளம் கம்யூனிஸ்ட் கழகம், என்.சி.பி.எச்சில் மார்க்சிய, அம்பேத்கரிய நூல்கள் என்று பரந்து விரிதல் என்ற கட்டத்தில் நிற்கிறேன். மூலதனம் வாசிப்புக் குழுக்கள் என்ற கட்டிலிருந்து உடைத்துக் கொண்டு விட்டேன். உடைக்க வேண்டும். இப்போதே தனியாக உணர்கிறேன். தனியாகத்தான் இருப்பேன் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

வாசிப்பில், மனித வளர்ச்சியில் இறைச்சி உணவின் பாத்திரம் பற்றிய நீண்ட  வாசிக்க  விளக்கினார். அதில் வந்து அடித்து நகர்த்தத் தொடங்கினார். இந்தக் கட்டுரைகளில் எங்கெல்ஸ் பொதுவான கருத்துகளைப் பதிவு செய்கிறார். அவற்றுக்கான ஆதாரத்தையும் குறிப்புகளையோ தரவில்லை. அவர் பதிவு செய்த கருத்துகள் பிற்கால ஆதாரங்களின் ஒளியில் தவறு என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நமக்கோ எங்கெல்ஸ் எழுதினால் சரியாகத்தான் இருக்க வேண்டும்.

7 மணிக்குக் கீழே போய் குழாயைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வேகமாக விசையுடன் வருகிறது. குடத்தை வைத்தால், சரித்துதான் வைக்க வேண்டும். மஞ்சள் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்து வந்தேன். பபிள் டாப் பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு போனேன். அவற்றையும் நிரப்பினேன். குடத்தில் கொண்டு வந்து, குளியலறை வாளி, துவைக்கும் இடத்து வாளி, அழுக்குத் துணி போடும் டப் இவற்றை நிரப்பிக் கொண்டேன். குடிநீர் வைத்திருந்த குடத்திலிருந்து குடிநீரை இடமாற்றி விட்டு அதிலும் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்தேன். மொத்தம் 8 குடம். எட்டு முறை ஏறி இறங்கினேன்.

மிகவும் களைப்பாகத்தான் இருந்தது. பாத்திரங்கள் கழுவப்படவில்லை. ஓட்ஸ்+சத்துமாவு+உப்பு+முந்திரி காய்ச்சி வைத்திருந்ததை குடித்து முடித்தேன்.  அவரிடம் மோட்டர் சிக்கலையும் தண்ணீர் எடுத்து வந்ததையும் சொன்னேன். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய புதிய சிந்தனைத் தெறிப்பையும் பகிர்ந்து கொண்டேன். அவருக்கு ஏதோ அதிசய விலங்கைப் பார்ப்பது போல இருந்திருக்கும். எனது தன்னம்பிக்கை மட்டும் குறைவதே இல்லை. உள்ளுக்குள் நொறுங்கிக் கிடந்தாலும், கிடைத்தவரை தன்னம்பிக்கையோடுதான் பேசுவேன்.

முற்றிலும் நொறுங்கியது மூன்று முறை. பிரிந்து குழந்தைகளிடமிருந்து விலகி இருந்த 2006 கால கட்டம். பி.எஸ்.ஜி உடைந்து தனியாக இருந்த சென்னை - காட்பாடி கட்டங்கள் - 2010-11 ஆண்டுகள். இதன் பிறகு மா.க.விலிருந்து உடைந்து தனியாக இருந்த 2019-2020 காலங்கள். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று உடைந்தன. புதிதாக விரிந்த தளத்தில் தொடர முடிந்தது.

2024 வரை கோட்பாட்டு உறுதி நொறுங்கிப்போயிருந்தது. இந்திய சமூகம் பற்றிய கருத்தில் உறுதியற்ற நிலை. அம்பேத்கரைப் படித்ததும் இளம் கம்யூனிஸ்ட் கழக உரையாடல் அமர்வுகள் நடத்தியதும் மொழிபெயர்ப்பு/தொகுப்புப் பணிகளும் கோட்பாட்டு உறுதி என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டன. இப்போது தன்னம்பிக்கை கொடிகட்டிப் பறக்கிறது.

அதுவும் குறிப்பாக,  என்னுடைய இடத்தைக் காட்டி விட்ட பிறகு அது தொடர்பான குற்றவுணர்வும் பலவீனமும் கூட இல்லாமல் போய் விட்டது. கடந்த காலத்தில் அப்படி நடந்தது. இன்றைக்கு நான் அதற்குப் பொறுப்பில்லை, அல்லது பொறுப்பு இருந்த அளவில்  பேசி என்னுடைய உணர்ச்சிகளைக் காட்டி விட்டேன். அதைப் பெற்றுக் கொள்ளவோ எதிர்வினை ஆற்றவோ தயாராக இல்லை. என்றால், அதை அப்படியே விட்டுவிடுவதுதான்சரி.

எனவே, தனியாள் அடுத்த விரிந்த தளத்துக்குள் சிறகடித்துப் பறக்க வேண்டும். உலக அளவில் இளைஞர்கள் போராட்டம் என்ற எனது கருத்தை இன்றைக்குத் திருமாவளவன் உரையாடலில் பேசுகிறார். அதை சண்முகமோ வீரபாண்டியனோ பேசியிருக்க வேண்டும். அவர்கள் கியூபாவிலும் ஈரானிலும் நிற்கிறார்கள். ஒன்று, திருமாவளவன்  வீடியோவைப் பார்த்திருக்க வேண்டும் அல்லது அந்தக் கருத்து பரவி அவரைச் சென்று சேர்ந்திருக்க வேண்டும் அல்லது வேறு யாரோ தற்சார்பாக முன்வைத்திருத்ததை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவரே இந்த நோக்குநிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

கூழைக் குடித்து விட்டுப் படுத்து விட்டேன். 8 மணிக்குப் படுத்து 8.30 வரை தூங்கினேன். 8.30க்குச் சமைக்கத் தொடங்கினேன். பிரெட் டோஸ்ட், முட்டை தக்காளி ஆம்லெட், காலிஃபிளவர்+உருளை கூட்டு என்று செய்தேன். காலிஃபிளவர் கூட்டு இரண்டாவது முறை வேக வைக்க வேண்டியிருந்தது. 9.40க்குத்தான் வீட்டிலிருந்தே கிளம்பினேன். 9.50க்கு அலுவலகம் போய்ச் சேர்ந்து விட்டேன். ஜனசக்தியை கொடுத்தார், மதியவாக்கில் தீக்கதிர் இதழை  கொண்டு கொடுத்தார்.

இருக்கைக்கு வந்த போது ஜனசக்தியைப் புரட்டி முடித்தேன். மின்னஞ்சல்கள் இணைய வழிக் கடை ஆர்டர்களை பார்த்துக் கொண்டேன். அதன்பிறகு தொகுதி 99, 100 இரண்டையும் தொடர்ந்தேன். 99 இல் அம்பேத்கருக்கு பாராட்டுச் சான்றிதழ் அளித்ததும் அதைத் தொடர்ந்த அவரது உரையும் இருந்தன. அதில்தான் அம்பேத்கர் பெண்களைப் பற்றி மிக மோசமாகப் பேசியிருந்தார். அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முந்தைய கூட்டம்.

தொகுதி 100 இல் பௌத்தம் பற்றி, இந்து மதத்தின் மீதான விமர்சனம், சமயம் தழுவல் அறிவிப்பு, அதற்கான பரப்புரை என்று போனது. காட்மாண்டு, கொழும்பு பௌத்த மாநாடுகளில் கலந்து கொள்கிறார். பௌத்த பரப்புரையில்தான் வாழ்வைக் கழிக்கிறேன் என்றார்.  தொகுதி 57 திருத்தங்களை அனுப்பச் சொன்னார். அவருக்கு அனுப்பி விட்டு அனைத்துத் திருத்தக் கோப்புகளையும் டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டேன். ஃபோனில் அழிந்து போனால் வம்பு.

10 தொகுதிகளையும் முடித்த பிறகு நான் தொடங்க வேண்டும். ஒரு வாரம் ஒதுக்கலாம். கட்டுரைகளையும் முடித்து விட்டார் என்றால்  அனுப்பி இறுதி செய்து அச்சு வடிவத்தைத் தரச் சொல்ல வேண்டும். ரோமன் பக்க உள்ளடக்கத்தைத் திருத்த வேண்டும்.

கண் சுற்றியது, மூத்த ஓட்டுநர் ஓய்வுபெறுகிறாராம். சம்பளம் போதவில்லை, கூட்டிக் கொடுத்தால் தொடர்வேன் என்கிறார். சாக்லேட் கொடுத்தார் அதைச் சாப்பிட்டதும் கண்ணைக் கட்டியது. காஃபி குடிக்கப் போன இடத்தில் என்னுடைய தன்வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி விட்டேன். காலையில் எண்ணிப் பார்த்த சட்டகத்தில் சொல்லி விட்டேன். அதன் பிறகு தொகுதி 100 தொகுப்பு தொடர்ந்தது. தூக்கக் கலக்கமாகத்தான் இருந்தது. இந்த விடால்பிரைட், வைட்டமின் சாப்பிட்ட இரவுகளில் நல்ல தூக்கம் வருகிறது. மாற்று இரவில் வருவதில்லை. அதையும் மருத்துவரிடன் அடுத்த முறை சொல்ல வேண்டும். அடுத்த முறை என்பது ஜூலை மாதம் 24 ஆம் நாள் வரும். அதை அடுத்து அக்டோபர் மாதம். அத்தோடு இந்த மருத்துவத்தை நிறுத்திக் கொள்ளலாம்.

12.15க்கே ஆம்லெட் ஒரு பகுதியை உள்ளே தள்ளினேன். 12.45க்குப் போய்  அருகில் தூக்கத்தைப் போட்டேன். சாப்பிடும் போது ஈரான் ஒப்பந்தம் பற்றிய விவரங்களைப் படித்தேன். 1.30க்கு தொகுப்புப் பணியைத் தொடங்கி விட்டேன். 2.30 வாக்கில் மீட்டிங் இன்வைட் போட்டு விட்டு தொடர்ந்தேன். 3.15க்கு தேநீர், அப்போதும்  பேச்சு கொடுத்தேன். அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்று தோன்றுகிறது. கேட்கவில்லை. 4.45, 4.50 வரை தொகுப்புப் பணியைத் தொடர்ந்தேன்.

காலையில் காஃபி நேரத்தின் போது மாற்றுக் களம் பகத்சிங் வந்திருப்பதாக குமார் அழைத்துச்சென்றார். அவரிடம் அறிஞர் பார்வையில் சிங்காரவேலர் புத்தகத்தை மீண்டும் படித்ததாகச் சொன்னேன். அவர்கள் புத்தகக் கடை திறக்கப் போகிறார்களாம். திரு.வி.க நகரில்தானாம். மூலதனம் வாசிப்பு, செங்கல்பட்டு சிவகுமார் என்று பல செய்திகளைப் பேசினோம். மூலதனம் வாசிப்பில் நாம் ஒரு அரைக் கோளத்தில்தான் முழுமை பெறுவோம், முழுக் கோளமும் நிறைவடைய அம்பேத்கரை வாசிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் சி.பி.எம் பொறுப்பில் இருக்கிறாராம். புதுச்சேரியில் ஆய்வு நிறுவனத்தில் வேலை செய்கிறாராம். துறைசார் வல்லுநர்கள் கட்சிக்குத் தேவை என்று சொன்னேன்.

தருமபுரி ராஜனுக்கு அழைத்து புத்தகம் அச்சிடுவது பற்றிக் கேட்டேன். அவர் அழைத்தால்  பேசுகிறார். இன்றைக்குத் திரும்பி அவர் அழைத்தபோதும் சுருக்கமாகப் பேசி விட்டு வைத்து விட்டார். வெளியில் எங்கோ இருக்கிறார் போலிருக்கிறது.

காலையில் வேலை நிலைமையை விசாரித்துச் சென்றார். வேண்டுமென்றால் அழைத்து கேட்கட்டும். என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசுவதற்குக் கூட அவருக்கு மனமில்லை, சம்பளம் கொடுக்கிறார்கள் வேலை செய்கிறோம் அதற்கு மேல் எதிர்பார்க்கக் கூடாது, எதிர்பார்க்கப் போவதில்லை என்று முடிவுசெய்த பிறகு ஏன் ஊசலாட்டம்.

முதலமைச்சர், அமைச்சர் அணிந்துரைகளை மாற்ற வேண்டுமா என்று பேசுவார்களாம். தாளம் போடும் அதிகாரிகள் உலகம் இப்படித்தான் இருக்கும்.

கூட்டம் முடித்து வந்து வேலையைத் தொடங்கினால் காலையில் பாரதிராஜா திரைப்படங்கள் பற்றிப் பேசியிருந்தோம். சிவாஜி பற்றி சொல்லியிருந்தார். சங்கரின் ஜென்டில்மேன், சங்கர் தயாரித்த காதல் திரைப்படங்களைப் பற்றி விமர்சித்தார். அம்பேத்கரின் தேர்தல் மனுவைப் பற்றிச் சொன்னேன்.

இமயவரம்பன் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டேன். தொலைபேசியில் ஈரான்-அமெரிக்கா கருத்துக் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். வெளியே வந்து மீண்டும் வேலையைத் தொடங்கினேன். 6 மணிக்குப் புறப்பட்டு விட்டேன்.

நாற்சந்திக்கு அந்தப் பக்கம் தோண்டத் தொடங்கி விட்டார்கள். வெள்ளாளர் தெரு ஒருவழிப் பாதை ஆகி விட்டது. வாகன ஓட்டத்தை சமாளிக்கப் பொருத்தமான வழியைக் கண்டு கொண்டு விட்டிருக்கிறார்கள். பெஸ்ட் கடையில் 4 எலுமிச்சம் பழங்கள் 25 ரூபாய், விலை பற்றிச் சொன்னதும் அவரது முகம் மாறி விட்டது. பழங்கள் பெரிதாகத்தான் இருந்தன.

நெல்லை ஸ்டோர்ஸ்-இல் பிரெட், எண்ணெய், மெடிமிக்ஸ், 300 ரூபாய்க்கு மேல் போய் விட்டது. காய்கறிக் கடையில் கால் கிலோ கத்தரிக்காய் 25 ரூபாய். சுமை ஏறியிருந்தது. சுமந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். துணி தேய்க்கும் அம்மா காலையில் குட்டை கவுன் போட்டுக் கொண்டு வீட்டுக் போய்க் கொண்டிருந்தார். அழகாக இருந்தார். மாலையில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

வீட்டுக்கு வந்து வேலைகளைத் தொடங்கினேன். துணிகளை ஊற வைத்தேன். பாத்திரங்களை ஒதுக்கிப் போட்டேன். திருமாவளவன் - மு வீரபாண்டியன் - சண்முகம் - ஐயுஎம்எல் தலைவர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் நிகழ்ச்சியை ஓட விட்டுக் கொண்டேன். வீட்டுத் தூத்து வாரினேன். பாத்திரங்களை தேய்த்து முடித்தேன். தோசை மாவு வாங்கப் போனால் அரை கிலோ பொதி இல்லை. 1 கிலோதான் இருந்தது என்று அனுப்பி வைத்து விட்டார்கள். கோதுமை மாவைக் கரைத்துக் கொண்டேன். காலையில் செய்த ஆலுகோபி கறியை வைத்து மூன்று தோசைகள் சாப்பிட்டேன்.

உரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. கேள்விக் கணைகளும் விரிவான விடைகளும் திருமாவளவனை நோக்கியும் அவரிடமிருந்தும்தான். அவரது செயலுத்திகளும் அரசியல் கொள்கைகளும் நிலைபாடுகளும் மிக மிக நுண்ணியனவாக இருக்கின்றன. எங்கும் அவர் திகைத்து நின்றுவிடவில்லை. ஒவ்வொன்றையும் பற்றி தெளிவாக வெளிப்படையாக விளக்கினார். அதை விடுத்து வேறு ஆயுதம் அவரிடம் இருக்கவில்லை.

அவரே சொன்னது போல வி.சி.க, திருமாவளவன் இவர்களை டிஸ்கிரெடிட் செய்வது ஒரு சாதிய உளவியல். மிகவும் முற்போக்கான அறிவுஜீவிகள் கூட இதிலிருந்து தப்ப முடிவதில்லை. பிரியனை நேரடியாகக் குற்றம் சாட்டினார், திருமா. மு.வீ அம்பேத்கரையும் அரசமைப்புச் சட்டத்தையும் தாங்கிப் பேசினார். அவரால் உறுதியாகப் பேச முடியாமல் தடுப்பது அவரது கட்சியின் பொருளாதார வாதம்தான். சுருக்கமாகச் சொன்னால் சந்தானம்தான். திருமாவின் முன்பு இவர்கள் இருவரும் பள்ளிக் கூட மாணவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அதைக் கேட்டு முடித்த பிறகுதான் இந்த எழுத்து. இதை முடித்த பிறகு மார்க்சின் குருண்ட்ரிசவுடன் தூக்கம். காலையில் எழுந்ததும் முதல் வாசிப்பும் அதுதான். நடைப் பயிற்சி, காய் செய்தல், தோசை சுட்டுத் தின்றல், மதியத்துக்கு குஸ்கா கூட வாங்கிக் கொள்ளலாம். 6 மணிக்கு சூத்திரர்கள் யார் வாசிப்பு. மோட்டர் சரியானதா என்று  கேட்டால் அது வீட்டுச் சொந்தக்காரரின் வேலை என்று சொல்ல வேண்டும். 7 மணிக்குத் தண்ணீர் எடுக்க வேண்டும். இரண்டு பபிள் பாட்டில்களும் நிரம்பியிருக்கின்றன. பச்சைக் குடத்தை காலி செய்து விட வேண்டும். குடி தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். மஞ்சள் குடம், பாத்ரூம் வாளி, துணி துவைக்குமிட வாளி, வெள்ளை டப் இவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும். 5 அல்லது 6 கடம் வரும். பார்க்கலாம்.

கத்தரிக்காய் உருளைக் கிழங்கு பொரியல், சப்பாத்தி போட நேரமிருந்தால் அது. இல்லையென்றால் பிரெட் சாண்ட்விச். அலுவலகத்தில் தொகுதி 100 ஐ முடிக்க முயல வேண்டும். நாளை முடியவில்லை என்றால் வியாழக் கிழமை. வெள்ளி முதல் தொகுதி 90இல் வேலை செய்யத் தொடங்க வேண்டும். அதில் புகைப்படங்களைச் சேர்க்க வேண்டாம். ஒன்றிரண்டைச் சேர்க்கலாம். அவ்வளவுதான்.

செவ்வாய், ஜூன் 16, 2026

வளர்வதும் விரிவதும்

என்னுடைய வட்டம் விரிந்து கொண்டேதான் போகிறது. வெள்ளாள சாதிய வட்டத்தை உடைத்து திருமணம் செய்த பிறகு, வெள்ளாள திமிர் ஆண் திமிர் அனைத்தையும்  அடித்து நொறுக்கினாள். டாடா நிறுவனம் அதன் ஷாங்காய் அலுவலகம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து இணைய உலகம், மென்பொருள் நிறுவனம் என்ற பெரிய வட்டத்துக்குள் நுழைந்தேன்.

அந்தக் கட்டத்தில் பதிவர் உலகம் மூலம் தமிழ் எழுத்து/நுட்ப உலகிலும் லெதர் லிங்க் மூலம் தோல் துறையிலும் பரந்து விரிந்த வட்டத்துக்குள் காலடி எடுத்து வைத்தேன். அதில் பலருடைய தொடர்புகள் பலருடைய நல்லெண்ணங்கள். ஆனால், அவை அனைத்தும் நடுத்தர வர்க்க நலன்களை மையமாகக் கொண்டவை.

அது உடைந்து நொறுங்கியபோது ம.க.இ.க வில் நுழைந்தேன். இந்த மாறிச் செல்லும் கட்டத்தில் மிகவும் தனிமைப்பட்டிருந்தேன். ம.க.இ.க தோழர்கள் குட்டி முதலாளித்துவ, முதலாளித்துவ அற்பத்தனங்களை உடைக்கும் மார்க்சியக் கல்வியை வழங்கினார்கள். ஆனால், அது ஒரு குறுகிய வட்டத்துக்குள்தான் இருந்தது. அறிவுத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தாலும் அது நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருந்தது.

மா.அ.க.விலிருந்து வெளியேறிய அந்த அறிவுத்தளம் மூலதனம் வாசிப்பு, இளம் கம்யூனிஸ்ட் கழகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்ற அடித்தளங்களில் அடுத்த தளத்தில் விரிவடைந்தது. மூலதனம் வாசிப்பு வட்டங்களிலும் அம்பேத்கரிய வட்டங்களிலும் ஓரளவு பரவலாக முடிந்தது. நேர்முகங்கள், புத்தக வெளியீடுகள் மாநிலம் முழுவதும் அரசியல் கருத்துகளைக் கொண்டு செல்ல உதவியுள்ளன. மூலதனம் வாசிப்பு வட்டத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறேன். 

 அடுத்த கட்டம் இன்னும் அறிவை விரிவாக்கி பணியை ஆழமாக்கி தளத்தை பரவலாக்குவதாக இருக்க வேண்டும். லெனின் தேர்வு நூல்கள், திறந்தநிலை மார்க்சியம், அம்பேத்கர் மக்கள் பதிப்பு, மூலதனம் சிறுநூல்கள் என ஒவ்வொன்றிலும் எனது முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் குறைபாடாகவும் போகப் போக மேம்பட்டும் இருக்கின்றன.

 இப்போது இந்த வட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய கட்டம். தனிமைப்படுத்தலின் ஊடாகத்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.

வாசிப்பும் பணியும்

இரண்டாவது நாள். இன்றைக்கு எழுத்தைத் தள்ளிப் போட்டு விடலாம் என்று நிறைய வாய்ப்பு வந்தது. மெய்ப்பு நண்பர் சந்திக்க வந்தார். 6 மணி போல வருவதாகச் சொல்லி 6.30க்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார். அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டில் தண்ணீர் இல்லை. அதற்கு கொஞ்சம் ஓடி விட்டு வந்தேன். அதன் பிறகு லெமன் டீ போட்டுக் குடித்தோம். 7.50க்குச் சாப்பிடக் கிளம்பி விட்டேன். அவருக்கு இன்னும் நிறைய நேரம் உட்கார்ந்து பேசுவதற்கு விருப்பம்தான். என்னுடனேயே சாப்பிடும் இடத்துக்கு வந்து விட்டார். சாப்பிட்டு விட்டு 73 நிறுத்தத்துக்குப் போனோம். 8.15 ஆகியிருந்தது. அப்போதுதான் பேருந்து எதிர்த் திசையில் போனது. கோயம்பேடு போய் திரும்பி வருவதற்கு 9 மணி ஆகி விடும். அதற்கு நடந்தே போனாலே அம்பத்தூர் ரயில் நிலையத்தை அடைந்து விடலாம். இல்லை என்றால் தொலைபேசி இணைப்பக நிறுத்தத்துக்குப் போய் விடுங்கள் என்று வழி சொல்லி அனுப்பி விட்டேன்.

அவரது கவிதை புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்குகிறார். ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பக்கம் ஒரு கோட்டோவியம் வரைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதைச் செய்து தருவதற்கு பணம் நிறைய கேட்கிறார்கள். ஓர் ஓவியத்துக்கு 500 ரூபாய் என்றாலும் 10,000 20,000 வரும். பக்கங்களைப் பொறுத்தும் கட்டண வீதத்தைப் பொறுத்தும் எகிறும். அதை அவரால் கொடுக்க இயலாது. நீங்கள் வரையுங்கள் பெரிய வி.ஐ.பிகளுக்கு எல்லாம் புத்தகம் போகும். உங்கள் ஓவியத்தைப் பார்த்து உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொன்னாராம். அவர் அதற்கு மயங்கவில்லை.

இன்னொருவர் தொடர்பையே துண்டித்துக் கொண்டிருக்கிறார். இவர் சுட்டி விகடனில் வேலை செய்யும்போது அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். அந்தத் தொடர்பு எடுபடவில்லை. ஃபேஸ்புக்கில் மும்பை ஓவியரின் படங்களைப் பார்த்து அவரைத் தொடர்பு கொள்ள என்னை மெசேஜ் எழுதத் தரச் சொன்னார். அதற்குத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். இரவு உணவு சாப்பிடுவதில்லையாம். தினமும் ரயிலில் சென்ட்ரல் போய் அங்கிருந்து பேருந்து பிடித்து தேனாம்பேட்டை போய் வருகிறார். முரசொலிக்கு பக்கம் தயாரித்துக் கொடுக்கும் குழுவில் உள்ளார். தினமும் ஒரு பக்கம் முடிக்க வேண்டுமாம். கூடவே, காணொலிகளுக்கு உரை சரிபார்க்க வேண்டும்.

தந்தித் தொலைக்காட்சி வேலைக்கு நேர்முகம் போயிருக்கிறார். அவர்களுக்கு நேரடி தொலைக்காட்சி அனுபவம் உள்ளவர்கள் வேண்டுமாம். இவரை எடுக்கவில்லை. எப்படியோ, நிறுவனத்தில் ஆயுத பூஜை பரிசும் தீபாவளி போனசும் வாங்கிய பிறகு வேலையை விட்டிருந்தார். ஊருக்குப் போகிறேன் என்று காரணம் சொல்லியிருந்தார். இப்படி ஒரு பாதை ஓடியிருக்கிறது.

காலையில் அம்பேத்கர் வாசிப்பு நடக்கவில்லை. இன்றைக்கு சென்னை வருவதாகச் சொல்லியிருந்தார், அவர் வரவில்லை. மாலை வீட்டுக்கு வந்தால் தண்ணீர் ஏறவில்லை. புழங்குவதற்குத் தண்ணீர் இல்லை.

காலை 4 மணிக்கு விழிப்பு வந்தது. 9.30 முதல் 4 வரை இடைவெளியில்லாத தூக்கம். அதன் பிறகு முக்கால் மணி நேரம் புரண்டு படுத்தேன். குருண்ட்ரிச வாசித்தேன். சப்பாத்தி+கீரையைச் சூடாக்கிச் சாப்பிட்டேன். லெமன் டீ குடித்துக் கொண்டு பின்னர் நடைப்பயிற்சிக்குப் போனேன்.

திரும்பி வந்ததும் அழைப்புகளை அனுப்பி விட்டேன். தன் விவரக் குறிப்பு தயாரிக்க வேண்டும். நேற்று எழுதிய நாட்குறிப்பை பதிவிட வேண்டும். வாசிப்பு கைவிடப்பட்டதால் நேரம் கிடைத்தது. ஓட்ஸ் ஊற வைத்துக் கொண்டேன், அப்படியே பீன்ஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டிக் கொண்டேன்.

தன்விவரக் குறிப்பை எழுதிக் கொண்டேன். அதை வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிக் கொண்டேன். ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்று டிரம்ப் அறிவித்திருந்தார். ஹோர்முட்ஸ் நீரிணை திறக்கப்படும் முற்றுகை நீக்கப்படும் என்பதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தம். தாக்குதல்கள் நிறுத்தப்படும், லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் உட்பட. இரு தரப்பும் வெற்றி கொண்டாடுகிறார்கள்.

சி.என்.என், கார்டியன் ஒரு பக்கம் ஈரான் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது, அரசியல் தலைமை அழிக்கப்பட்டு விட்டது, ஆனால் ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தத் தொடங்கியதும், பக்கத்து அரபு நாடுகள் மீது மிரட்டல் ஆற்றல் பெற்றதும் அதற்கு வெற்றி என்கின்றனர். போர் தொடங்குவதற்கு முன்னர் ஹோர்முட்ஸ் நீரிணை திறந்துதான் இருந்தது, முற்றுகையும் இருக்கவில்லை. ஒரே வேறுபாடு, ஈரானில் பல பொதுமக்களும் தலைவர்களும் கொல்லப்பட்டது, அமெரிக்க படைவீரர்கள் சிலர் கொல்லப்பட்டது. வளைகுடா நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு ஏற்பட்ட கடும் சேதம்.

இப்போது ஹோர்முட்ஸ் நீரிணையைத் திறக்கிறோம் முற்றுகையை நீக்குகிறோம் என்றால் அதற்கு அரிசி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டும். 2016 இல் ஈரானின் அணு ஆயுதங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் இருந்தது, ஈரான் மீதான பொருதாரத் தடைகள் தளர்த்தப்பட்டிருந்தன. அந்த இடத்துக்குக் கொண்டு போய் விடுவதுதான் டிரம்பின், நெதன்யாகுவின் சாதனையாக இருக்கும்.

உக்ரைன் ரசியா மீது தாக்குதல் தொடுத்தால் வெற்றி வெற்றி என்றும், ரசியா உக்ரைன் மீது தாக்கினால் அய்யோ அநியாயம் என்றும் கூப்பாடு போடுகிறது கார்டியன். என்ன அரசியலோ தெரியவில்லை.

குளித்து விட்டு சாப்பிடுவதற்கு முன்னர் கண்ணயர்ந்தேன். 10 நிமிடங்களில் எழுந்து விட்டேன். சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டு போனேன். அழைத்தால் அவர் இன்னும் கிளம்பியிருக்கவில்லை. புத்தகங்களை நான் எடுத்துப் போகவில்லை. தண்ணீர் பாட்டிலை எடுத்துப் போனது மட்டும்தான் எனது நம்பிக்கையின் வெளிப்பாடு.

9 மணிக்கெல்லாம் அலுவலகம் போய் விட்டேன். ஓட்டுநர் தோழர் நின்றிருந்தார். அவர் வண்டி ஓட்டுவதைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டேன். மாலை வரும்போது இன்னொரு தோழரிடம் அவரது இளமைக்கால புகைப்படத்தைப் பார்த்தது பற்றிக் குறிப்பிட்டதும் உற்சாகம் ஆகிவிட்டார். நிறைய கதைகள் சொன்னார். அவருடன் 17 பேர் இருந்தார்களாம். இப்போது அவர் மட்டும் எஞ்சியிருக்கிறார். உற்சாகமாக வேலை செய்வார்களாம். இவரை நிரந்தரமாக்கும் நேரத்தில் கடிதம் எழுதிக் கேட்டாராம் எம்.டி. நான் எதற்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று இவர் எதிர்க்கேள்வி எழுப்ப இவருக்கு மட்டும் நிரந்தரம் ஆக்கி, மற்றவர்களை நிறுத்தி வைத்து விட்டார்களாம். நானும் விட்டுப் போனவர்களைப் பற்றி வருத்தத்துடன் சொன்னேன்.

மெய்ப்புப் பார்க்கும் ஒரு பெண் முதலில் நின்றது, திடீரென்று ஒரு நாள் அலுவலகத்துக்கு வரவில்லை, அவ்வளவுதான். அதற்கு முன்னர் எனக்கு காஃபி கப் கொடுத்த பெண் வருவது நின்று போனது. அதன் பிறகு பதிப்பக நண்பர் ஓய்வு பெற்றார். ----, ------, ---- தொடங்கி ---, --- என்று ஓய்வு பெறுவதும் விட்டு அனுப்பபடுவதுமாக போனார்கள். -----, -----, --- திருமணம், வேறு வேலை என்று சொல்லிப் போனார்கள். --- இறந்து விட்டார். அவர் இறந்த அன்றே -- அலுவலகத்துக்கு வந்திருந்தார், தற்செயல் நிகழ்வா என்று வியப்பாக இருக்கிறது. அவர் ஆசிரியர் ஆகி விட்டார்.

தோழர் சிவசுப்பிரமணியம் அவரது மாணவர்தான் முத்துமோகன். அவருக்கு நேற்று விருது வழங்கும் விழா. தோழர் அரசு உரையாற்றியிருக்கிறார். சீர் வாசகர் வட்டம் நடத்திய விழா. ஓர் இலட்சம் ரூபாய் விருது வழங்கியிருக்கிறார்கள். பேராசிரியர் முரளியும் பேசியிருக்கிறார். தோழர் முத்துமோகனும் வந்திருந்து 2-3 நிமிடங்கள் பேசினாராம். அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்து போனார்களாம். கலை இலக்கியப் பெருமன்றம் தோழர்கள் வந்திருந்தார்களாம்.

அரசு தோழர்  இரண்டு மூன்று நாட்களாக அதற்காகத் தயாரித்தார். படைப்பின் அற்புதத் தருணங்கள் புத்தகத்தை அஞ்சல் மூலம் பெற்றுக் கொண்டார். மொழிபெயர்ப்பு செவ்வியல் நூல்கள் 30 பற்றிய விவரங்களைக் கேட்டார். எனக்குத் தெரிந்தவற்றை அனுப்பினேன். அவரைப் பொறுத்தவரையில் இந்த இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தது அவரது பெரும் பணி. அதற்குப் பின் இருக்கும் சிந்தனைப் போக்கைப் பற்றிப் பேசத் துணியவில்லை. காமராசன் முத்துமோகனிடமிருந்துதான் இந்தச் சிந்தனையைக் கற்றுக் கொண்டிருக்கிறார். ஒருவரியில் சொன்னால் திறந்தநிலை மார்க்சியம்.

முத்துமோகனின் பணி மகத்தானதுதான். சிங்கார வேலர் பற்றி அவர் எழுதியிருந்ததைப் படித்தேன். இந்தியத் தத்துவமும் தமிழ்த் தடங்களும் என்ற நூலில் தமிழ்த் தடங்கள் பற்றி வாசித்தேன். தமிழில் மார்க்சியத்தை சரியாகக் கொண்டு வருவதில் பங்காற்றிய மகத்தான சிந்தனையாளர் அவர். அவர் கட்சிக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருந்திருக்க வேண்டியவர்.

உரையாடலின் பின்பகுதியை  அறையில் உட்கார்ந்து முடித்தேன். அவரும் கேட்டுக் கொண்டிருந்திருப்பார். மார்க்சியத்தின் இயக்கவியல் தத்துவத்தை வலியுறுத்துவதில் அதாவது புரட்சியில் அறிவின் பாத்திரத்தை முன்நிறுத்துவதில் அவரது சிந்தனைப் போக்கு அமைந்திருக்கிறது. இந்தியாவில் மார்க்சியர்களில் இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருப்பவர் அவர் மட்டும்தான். கோபால் குருவும் ஹெகலிய கருத்தினங்களின் அடிப்படையில் சாதி, தீண்டாமையைப் பற்றி விரித்துரைத்ததை நேற்று எழுதியிருந்தேன்.

அம்பேத்கர் தொகுதியில் சுதந்திரத்துக்குப் பிறகு அவரது அரசியல் செயல்பாடுகள். 1952 தேர்தலுக்குக் கூட்டணிக்குத் தயாராதல். மராட்டியத்திலும் பஞ்சாபிலும் பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் பரப்புரை செய்கிறார். சோசலிசக் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார். வட பம்பாய் தொகுதியில் நான்காம் இடத்துக்குத் தள்ளப்படுகிறார். ஒவ்வொரு வாக்காளரும் இரு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று பொது வேட்பாளருக்கு இன்னொன்று பட்டியலின வேட்பாளருக்கு. டாங்கே இரண்டு வாக்குகளையும் ஒரே வேட்பாளருக்குப் போடுங்கள். அம்பேத்கரும் வாக்ளே என்ற காங்கிரஸ் பட்டியலின வேட்பாளரும் என்ற இரண்டு பேருமே பட்டியலின உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடக் கூடாது என்று செய்த பரப்புரைகளை எடுத்துக் காட்டி தேர்தல் மனு அளித்திருக்கிறார்கள். தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதன் பின் நடந்த இடைத் தேர்தலிலும் அம்பேத்கர் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார்.

அவ்வளவு பெரிய தலைவரைத் தோற்கடித்திருப்பது பெரிய செய்தியாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. வெற்றி, தோல்வியால் நான் துவண்டு விடப் போவதில்லை, எம் மக்களுக்கு கல்வியும் அரசியல் அதிகாரமும் பெறுவதுதான் நோக்கம் என்று விடாப்பிடியாகப் போராடுகிறார். இந்தியக் குடியரசுக் கட்சிக்கான சட்ட திட்டங்களை வகுத்து தருகிறார். கட்சி தொடங்கப்படுகிறது.

அடுத்த தொகுதி பௌத்தம் பற்றியது. இந்து மதத்தின் மீதான விமர்சனம். இந்து மத வெளியேற்றம்தான் தீர்வு என்ற முடிவுக்கு வருகிறார்கள். இயோலா மாநாட்டு அறிவிப்பு பற்றிய பகுதி. அதன் பிறகு சமயம் தழுவல் பற்றி பரப்புரைகள். அனைவரையும் இணைத்துக் கொண்டுதான் மாறுவேன் என்று சொல்கிறார். ஒரு கோயில் விழாவுக்கு அவரை அழைத்த போது அங்கு போய் கோபமாகப் பேசுகிறார். அவருக்கு மகாராஜா, கடவுள் என்று பாராட்டுப் பத்திரம் வழங்கிய போது அங்கும் கோபப்படுகிறார். தொடர்ந்து பௌத்தம் பற்றிய பரப்புரைகள், சமயம் தழுவுதம் வலை போகிறது.

சர்வாதிகாரம் பற்றி என்ற திமோத்தி ஸ்னைடர் எழுதிய நூலைத்தான்  விமர்சித்திருந்தார். மார்கியத்துக்கு எதிரான நூலை வெளியிட்டு விட்டது என்பது விமர்சனம். ஸ்டாலினை சர்வாதிகாரி என்று சொல்லியிருக்கிறார், ஸ்டாலினும் ஹிட்லரும் கூட்டு வைத்து போலந்தை ஆக்கிரமித்தனர் என்று சொல்வது, முதலாளித்துவ சனநாயகத்தை வியந்தோதுவது அது லெனினின் அரசும் புரட்சியும் நூலுக்கு முரணாக இருப்பது என்று பல புள்ளிகளைத் தொட்டிருந்தார் அந்தக் கட்டுரையை இளம் கம்யூனிஸ்ட் கழகம் இணைய தளத்தில் படித்தேன்.

ஆ. சிவசுப்பிரமணியத்தின் புத்தக முன்னுரைகளை அம்மாச்சத்திரம் சரவணன் தொகுத்திருந்தார். ஒரு வட்டத்தை வைத்து இயக்கிக் கொண்டிருந்திருக்கிறார். இயங்கிக் கொண்டிருந்திருக்கிறார். பெரிய வேறுபாடு ஊழியர்களை நடத்துவதிலும் ஊழலிலும்தான். ஊழியர்களை அவமானப்படுத்துவதில் இன்னும் மாற்றம் வந்துவிடவில்லை. எல்லோரும் அஞ்சி நடுங்குகிறார்கள்.

55, 56 தொகுதிகளை முடித்துக் கொடுத்து விட்டார். அவற்றிலும் திருத்தம் போட்டுக் கொடுக்க வேண்டும். அவற்றை எடுத்தால் ஒரு வாரம் எடுக்கலாம். அதற்குள் வெளிநாடு போவதற்குள் அறிமுகக் கட்டுரை எழுதிக் கொடுத்து விட்டால் நல்லது.  

கேட்ட கட்டுரையை எழுதவில்லை. காலையில் மெரீனா கடற்கரைக்குப் போனதை stolen moment என்று எழுதலாம். கூடுதலாக, இமயவரம்பன் எழுதிய பார்ப்பனர்கள் மன்னர்களைக் கவிழ்த்த கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் மகத மன்னன் நந்தனை சாணக்கியன் வீழ்த்தியது அசோகன் ஆட்சியில் பார்ப்பனர்களின் கலகங்கள் பிரகத்ரதனைக் கொலை செய்து சுங்கமித்ரன் ஆட்சிக்கு வந்தது, குப்தர்கள் காலத்தில் கலிங்க மன்னனிடமிருந்து புத்தரின் பல்லைப் பறிக்க சதி செய்தது. ஹர்ஷரின் ஆட்சியில் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த கொண்டாட்டங்கள். காஷ்மீர் மன்னராட்சி என்று பட்டியலிட்டுக் கொண்டே போகிறார்.

பெரும்பாலும் பௌத்த மன்னர்களைத் தோற்கடிப்பது, பௌத்த விகாரங்களை இடிப்பது என்பது இந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 600-700 ஆண்டுகள் இது நடந்து குப்தர்களின் காலம் பார்ப்பனர்களின் பொற்காலம் ஆகியிருக்கிறது. 

திங்கள், ஜூன் 15, 2026

நிகழ்காலம் - வருங்காலம்

 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள். நாம் தனியாள், ஊரும் இல்லை வேரும் இல்லை என்ற நிலையில் உள்ள ஆள். எந்த அமைப்புப் பின்புலமும் இல்லாமல் உதிரியாக இருக்கும் ஆள். இது மாறும், இதை மாற்ற வேண்டும், பிறர் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஓர் அமைப்பு நமக்கு இடம்தர வேண்டும், இவை எல்லாம் எதிர்பார்ப்புகள் மட்டுமே. இப்போதைய நிலைமை தனியாள் என்பதுதான். எதிர்பார்ப்புகள் நிறைவேறுவது நமது கையில் இல்லை. எனவே, இப்போதைக்கு தனியாள் என்ற நிலையிலேயே வாழ்ந்து மறைந்து போவோம் என்ற வகையில் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்திச் செல்ல வேண்டும்.

அதற்கு உடல்நலம், மனநலம் பேண வேண்டும். பொருள் ஆதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல்நிலை மோசமானாலோ இறப்பின் போதோ அநாதையாக இருக்கும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது. பணம் என்றால் பிணமும் வாய்த் திறக்கும். நான்காவதாக, சமூக ஆதாரங்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். தனிமனிதர் என்ற முறையில் அடையாள அட்டைகள், காப்பீடுகள், வங்கிக் கணக்குகள் இவற்றை முறையாகப் பேண வேண்டும்.

மகனும் மகளும் வயது வந்தவர்கள், அவர்களுக்கு இப்போது ஓர் அப்பா தேவையில்லை. அவர்களுக்கு அப்பா தேவைப்பட்ட போது நான் இருக்கவில்லை. இப்போது போய் நான் ஒட்டிக் கொள்வது அவர்களுக்குத் தேவையில்லை. அதிக அளவில், ஒரு மனிதர் என்ற வகையில் சிறிது இடம் கொடுக்கலாம் அவ்வளவுதான். அதற்குமேல் எந்த வகையான உறவையும் எதிர்பார்ப்பது சரியாகாது.

முன்னாள் மனைவி தெளிவாகவே ஒதுக்கிவிட்டாள். பேச விருப்பமில்லை, சந்திக்க விருப்பமில்லை என்று தெளிவுபடுத்தி விட்டாள். அப்படியே தொடரும் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் முயல்கிறேன் என்று இந்த வயதில் அவளைத் தொந்தரவு செய்வது நாகரிகமாகாது. அவள் வயதான வாழ்வை அனுபவிக்கும் காலம் இது, இதில் என்னைத் தூக்கிச் சுமக்க அவள் விரும்பப் போவதில்லை.

அண்ணன்கள், அக்கா, தங்கை - அவர்களும் என்னை ஒரு பெயரளவு உறவாகச் சுருக்கிக் கொண்டார்கள். அதுதான் என்னுடைய விருப்பமும். ஏதோ ஓர் உறவு என்று தொட்டுச் செல்கிறார்கள். அதற்கு மேல் பாசமோ பிணைப்போ இல்லை.

நட்பு வட்டங்களைப் பொறுத்தவரை, கல்லூரியில் கூடப் படித்தவர்களிடமிருந்து தனிமைப்பட்டு நிற்கிறேன். அவர்களது வாழ்க்கை முறையும் வாழ்க்கைத் தரமும் எனக்குப் பொருந்தப் போவதில்லை.

இப்போது செயலில் இருப்பது வேலை செய்யும் நிறுவனம், மூலதனம் வாசிப்புக் குழுக்கள், இளம் கம்யூனிஸ்ட் கழகம். நிறுவனம் என்னை குட்டிமுதலாளித்துவ அறிவாளி, பயன்படுத்தப்பட வேண்டியவர் என்று வைத்திருக்கிறார்கள். அவர்களது நிருவாக அமைப்பில் என்னை அனுமதிக்கத் தயாராக இல்லை. கட்சி உறுப்பினர்களுக்குத்தான் இடம் என்று சொன்னாலும் என்னுடைய செயல்பாடுகள் அவர்களுக்கு உகந்ததாக இருக்கவில்லை. இப்போது அம்பேத்கர் வேலை முடிவது வரை நான் உறுதியாக வேண்டும். அதன் பிறகு நிறுவனத்துக்காக அவர்கள் போடும் திட்டத்துக்குள் நான் பொருந்திக் கொள்ள வேண்டும். நான் மூலதனம் சிறுநூல்களை தயாரித்துக் கொடுத்ததும் சரி, மின்நூல் செயலியை உருவாக்கிக் கொடுத்ததும் சரி, இணையதளத்தை உருவாக்கிக் கொடுத்ததும் சரி அனைத்துமே கொடுத்த சம்பளத்துக்கு வேலை செய்த கணக்குதான். லெனின் தேர்வு நூல்கள் தொகுப்புப் பணி தொடர்பாகவும் அதன் வெளியீட்டு விழாவில் எனது பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை. நான் என்ன வேலை செய்தேன் என்று தெரிந்தும் அந்த நிலை. வடிவமைப்பாளர் அதில் வேலை செய்தார், அவர் பெயரையும் குறிப்பிடவில்லை. அச்சிட்டவர் வேலை செய்தார் அவர் பெயரையும் குறிப்பிடவில்லை. எல்லோருமே பணத்துக்கு உழைப்புச் சக்தியை அல்லது சேவையை விற்றவர்கள். அதற்கு மேல் அந்தக் கட்டமைப்புக்குள் இடம் இல்லை.

மூலதனம் வாசிப்புக் குழுவைப் பொறுத்தவரை, கட்சித் தோழர் தனது அறிக்கையில் ஒரு பதிவாக அதை நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கு இரண்டாவது வரிசையாக நான் வந்து விட்டேன் என்று எழுதியிருப்பார். அதைக் கடந்து செல்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. மூலதனம் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்தவோ வளர்த்துச் செல்லவோ தயாராக இல்லை. அதாவது அளவு வழி மாற்றம் சிக்கல் இல்லை. பண்பு வழியில் அதனை ஓர் அமைப்பாகக் கொண்டு செல்வதில் உடன்பாடு இல்லை. நான் எவ்வளவு வலியுறுத்தினாலும் அதற்கு மேல் அது நகர்வதாக இல்லை. நானும் என்னுடைய பங்கேற்பை வரம்பிட்டுக் கொண்டேன்.

இளம் கம்யூனிஸ்ட் கழகத்திலும் தோழமை என்பது இல்லை. என்னை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் ஒருவர் தெளிவாக இருந்தார். தலைவரை சந்திக்க அழைத்துச் செல்லக் கூடத் தயாராக இல்லை. வாங்கிக் கொண்ட பணத்தைத் திருப்பித் தருவது என்ற எண்ணமே இல்லை.  இன்னொருவரும் அப்படித்தான். அவருக்காக இரண்டு மூன்று முறை செலவு செய்திருக்கிறோம். அது எதற்கும் அவர் பணம் தருகிறேன் என்று முன்வரவில்லை. ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வாங்குகிறார். ஆனால், இதில் தோழர்கள் செலவழிக்கட்டும் என்று விட்டு விடுகிறார். கூட்டாக வாசிப்பதில் ஒவ்வொருவரும் பலன் பெறுகிறோம் அதற்கு மேல் தோழமை இல்லை. மூன்றாவது தோழர் மட்டும் தனிப்பட்ட முறையில் தோழமை ஆதரவு காட்டுகிறார். அது ஒரு குழுவாக இல்லை.

இந்நிலையில் எனக்கு வேரும் இல்லை ஊரும் இல்லை உறவும் இல்லை அமைப்பும் இல்லை ஆதரவும் இல்லை. நான் தனியாக எனது காலில் நிற்க வேண்டும். எனது வேலைகளைச் செய்ய வேண்டும். கூட பயணிப்பவர்களுடன் பயணிக்க வேண்டும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

இதில் புதிய வரவு பெண் தோழர், தன்னலம் பாராத ஓர் அன்பு. அது எதிர்பாலினக் கவர்ச்சியாகத் தொடங்கியது, நானும் அதை ஒட்டி நிறைய முரண்டினேன், அதை சரிசெய்து கொண்டு இப்போது ஒரு தோழமையாக் அக்கறை எடுத்துக் கொள்கிறார். உங்களுக்கு ஒருகுடும்பம் இருக்கிறது, தானும் தனது கணவனும் மகளும் என்கிறார்.

அவர் சொல்லித்தான் வி.சி.க தோழர், தலைவரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார். நாளை சென்னை வருவதாக மாலையில்தான் தொலைபேசினார். காலை 8 மணி வாக்கில்  இருந்து புறப்படுகிறார்களாம். 10.30, 11 மணி வாக்கில் வந்து சேருவார்களாம். தகவல் சொல்கிறேன் என்றார்.

அவர் தகவல் சொன்னால் விடுப்பு எடுத்துக் கொண்டு போக வேண்டும். மூலதனம் சிறுநூல்கள், லெனின் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்கள், நாட்டுப் புற ஏழை மக்களுக்கு, மூலதனம் கற்க முடியுமா, லெனினின் போராட்ட வாழ்க்கை, மூலதனம் சிறுநூல்கள், முதல் மூன்று நிமிடங்கள் இவற்றைக் கொண்டு கொடுக்கலாம். தன்விவரக் குறிப்பையும் புதுப்பித்து எடுத்துக் கொள்ளலாம். அச்செடுத்துக் கொள்ள வேண்டும். நாளை சந்திப்பது இயலாமல் போகலாம். ஆனால், போய் விட வேண்டும்.

இன்னின்ன வேலைகள் செய்கிறேன், உங்களைத் தலைவராகவும்  கட்சியை இந்தியாவில் பாட்டாளி வர்க்க சனநாயகப் புரட்சியின் தலைமை ஆற்றலாகவும் ஏற்கிறேன். இந்த இயக்கத்துக்கு நான் என்ன பணி செய்வது பொருத்தம் என்று சொல்லுங்கள். நிறுவனத்தில் வேலையைத் தொடர்வது, தமிழ்நாட்டு சமூகம் பற்றிய ஒரு கோட்பாட்டு நூலை எழுதுவதுதான் எதிர்காலத் திட்டம். மூலதனம், அம்பேத்கர் வாசிப்பு வட்டங்களில் கலந்து கொள்வதையும் செய்யவிருக்கிறேன். இது பொருத்தமானதுதானா, வேறு ஏதாவது வேலை செய்ய வேண்டியிருக்கிறதா என்று சொல்லுங்கள்.

லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள், அம்பேத்கர் மக்கள் பதிப்பு 100 தொகுதிகள் தொகுப்புப் பணியில் வேலை செய்திருக்கிறேன். திறந்தநிலை மார்க்சியம் தொகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறேன். உங்கள் நூலகம் இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் - மார்க்ஸ் பற்றியும், மார்க்சியம் பற்றியும். குறிப்பாக சீனாவைப் பற்றிய நூல் அறிமுகங்களை எழுதியிருக்கிறேன்.

அதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்தான் பத்திரிகை தோழருடன் பேசியிருந்தேன். மதியம் அழைத்த போது மாலையில் கூப்பிடுவதாகச் சொன்னார். எதிர்காலத்தில் என்னமாதிரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று அவரது வழிகாட்டலைக் கேட்க வேண்டும் என்று சொன்னேன். ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று அம்பத்தூர் வருவதாகக் கூறினார். அவரிடமும் மேலே சொன்ன பணிகளைப் பற்றிச் சொல்லி விட்டு அரசியல் இலக்கையும் சொந்த வாழ்க்கைக்கான தேவைகளையும் கூற வேண்டும். இதை நிறைவேற்ற நிறுவனத்தில் தொடர்ந்தால் இயலாததாகி விடும். நல்ல ஊதியத்தில் வாரம் 5 நாட்கள் வேலை என்ற முறையில் வேறு ஒரு பதிப்பகம் அல்லது பத்திரிகையில் வேலை கிடைத்தால் நல்லது. அரசியல் சார்பு இருந்தால் நல்லது. தமிழில் தொகுப்புப் பணி செய்ய முடியும், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடியும், ஆங்கிலத்தில் எழுத முடியும், கணினி தொடர்பான பணிகளைச் செய்ய முடியும் என்று விளக்க வேண்டும்.

அவர் அழைப்பதற்கு முன்னர் கன்னிமரா நூலகத்தினுள் உட்கார்ந்திருந்தேன். கோபால் குரு தொகுத்த ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். humiliation பற்றியது, அது குறிப்பாக சமூக இழிவுபடுத்தல் பற்றியது. ஒரு கட்டுரை மும்பை பஞ்சாலைத் தொழிலாளர்கள் அவமதிக்கப்பட்டது குறித்தது, அடுத்து காந்தியும் அம்பேத்கரும் தீண்டாமையை ஒழிக்க எவ்வாறு இணை பாதைகளில் செயல்பட்டார்கள், அவர்களிடையே தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது என்பதைப் பற்றியது. இறுதிக் கட்டுரை கோபால் குரு எழுதிய recognition, reduction, rejection, counter rejection பற்றியது. ஹெகலிய கருத்தினங்களை தீண்டாமைக்குப் பொருத்துகிறார். குறைத்தலையும் மறுத்தலையும் வேறுபடுத்திக் காட்டுகிறார். நல்ல கட்டுரை.

இது போல வாரம் ஒருமுறையாவது நூலகத்துக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டேன். ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் போகலாம். கன்னிமரா நூலகம் அல்லது அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் போகலாம்.

முன்னதாக விடியற்காலையில் எழுந்து மெரீனா கடற்கரைக்குச் சென்றேன். முதன்முதலில் முன்னாள் மனைவி சென்னைக்கு வந்த போது சந்தித்த இடம் மெரீடா கடற்கரை. அதன் பிறகு குழந்தைகளுடன் இருந்த போது வாரம் தோறும் ஞாயிறு மாலை மெரீனா கடற்கரைக்கு பைக்கில் நான்கு பேருமாக போய் வருவோம். இருட்டிய பிறகு சாந்தோமில் இருக்கும் ஒரு சைவ உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவோம். போக வர 30 கிலோமீட்டர். அது குடும்பமாக பிணைப்பை ஏற்படுத்திய ஒரே இடம் என்று சொல்லலாம். குழந்தைகளுடன் கதை சொல்வது நடந்திருக்கிறது நான்கு பேரும் சேர்ந்து செய்தது இப்படி கடற்கரைக்குப் போனது மட்டும்தான்.

பையில் குடிநீர், குடை, டேப் எடுத்துக் கொண்டு போனேன். டீக்கடையில் வடையும் டீயும் குடித்து விட்டு பேருந்து நிறுத்தத்துக்குப் போனால் 40 A வந்தது. அது நேராக கண்ணகி சிலை வரை கொண்டு விட்டது. மூலதனம் வாசிப்பு அமர்வுக்கான பகுதியை வாசித்து விட்டேன். போகும்போது தினத்தந்தி வாங்கியிருந்தேன். கடற்கரையில் இருந்து திரும்பும்போது ரத்னா கஃபே நிறுத்தம் வந்து  ஒரு போண்டா, டீ. தி ஹிந்து ஆங்கிலச் செய்தித் தாள் வாங்கிக் கொண்டேன். டீ குடித்து முடிப்பதற்கு முன் நின்றிருந்த 40 A கிளம்பிப் போய் விட்டது. அதன் பிறகு வந்த 40 L இல் ஏறிவிட்டேன். வாவினில் இறங்கினேன். அங்கிருந்து 77B இல் ஏறி ஆம்பிட் இறங்கி ஆனந்தா பவன் வரை நடந்தேன். 2 இட்லி, 3 பூரி, 1 காஃபி என்று மொத்தம் 155 ரூபாய் கட்டணம், ரூ 15 சேவை அளிப்புக்கு. அப்போது அமர்வு தொடங்கிவிட்டது.

ஒருவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இருவரும் விளக்கினார்கள். சிறப்பாக விளக்குகிறார். சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் இயந்திர பாதுகாப்பு சாதனங்கள், பணியிட சுகாதாரம் என்ற தலைப்புகளில் தொழிலாளர் நலனைப் பலி கொடுத்து மாறா மூலதனத்தை மிச்சப்படுத்தல் பற்றிப் படித்தோம். அதன் பிறகு விசையூட்டல், விசைக் கடத்தல் இரண்டிலும் மேம்பாடுகளைப் பற்றிய விவரணை, அதனை அடுத்த தோழர் விளக்கினார். நானும் இரண்டு தலைப்புகளிலுமே தலையிட்டு கருத்து சொன்னேன். ஒருங்கிணைப்புத் தோழர் படித்து வரவில்லை. அடுத்த வாரம் விளக்குகிறேன் என்றார்.

நேற்று இரவு கீரை வாங்கி வைத்திருந்தேன். அதை ஆய்ந்து முடித்தேன். துணியையும் துவைக்க ஊற வைத்திருந்தேன். கழிப்பறையைக் கழுவுவதற்கு ஊற வைத்தேன். கீரையை சமைப்பது, துணி துவைப்பது, சப்பாத்தி போடுவது என்று நேரம் போனது. அல்கா அஜித்தின் சிங்கார வேலனே பாடல் பார்த்தேன். கஜினி படத்தில் அசின் - சூர்யா காட்சிகளைப் பார்த்தேன்.

11 மணிக்கு ஆங்கில வாசிப்பு.  ஒப்பீட்டு மதிப்பு வடிவத்தின் இயல்பும் தன்மையும் என்ற தலைப்பை வாசித்தோம். கொஞ்சம் திணறித்தான் விளக்கினார்கள். ஒருவரிடம் அலட்சியம் தெரிகிறது. இரண்டு பேரும் துல்லியமாக விளக்கி விடுகிறார்கள். இன்னொருவர் கொஞ்சம் சுற்றி வளைத்தாலும் சாரத்தைப் பிடித்து விடுகிறார். நடத்தியவர் கூர்மையான புரிதலைப் பெறுகிறார். பத்திரிகையாளர்தான் கொஞ்சம் பின்வாங்குகிறார். அந்த வாசிப்பு முடிந்த பிறகு சப்பாத்திகளைப் போட்டு முடித்து குளித்து விட்டேன். பாத்திரங்களைக் கழுவிவைத்து விட்டு ஆடைகளை மாட்டிய பிறகு 3 மணிக்கு மேல் போகலாம் என்று ஆங்கில தி இந்து கட்டுரைகள் வாசித்தேன்.

தி ஹிந்து நாளிதழில் புத்தக மதிப்புரைகள், ஓப்பன் பேஜ் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள் வாசித்தேன். பன்மைத்துவத்துடன் உள்ளது அந்தப் பத்திரிகை.  அதில்தான் வேலை செய்கிறார். தினத்தந்தியில் தி.மு.கவின் கள ஆய்வு முடிவுகள் தலைப்புச் செய்தி.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஞாயிறன்று கையெழுத்தாலும் என்று டிரம்ப் சொல்ல, ஈரான் அதை மறுத்திருக்கிறார்கள். ஒப்பந்தத்தை நெருங்கி வந்து விட்டோம், ஆனால் ஞாயிறன்று கையெழுத்தாகும் என்று சொல்ல முடியாது.

கேந்திரிய வித்யாலயாக்களில் சமஸ்கிருதம் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் தென் கொரியா வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்க அணி வெற்றிபெற்றிருக்கிறது. மெக்சிகோ வெற்றிபெற்றிருக்கிறது. மொராக்கோ வெற்றிபெற்றிருக்கிறது.

FIDE பற்றிய ஒரு கட்டுரை தி ஹிந்துவில் இருந்தது. 2022 இல் கத்தாரில், 2018 இல் ரசியாவில், 2026 இல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் 2030 இல் 2034 இல் சவுதி அரேபியாவில் நடக்கவிருக்கிறது. இந்த அமைப்பு உலகின் பெரும்பணக்கார விளையாட்டுக் கழகமாக உள்ளது. அது பணக்காரர்களை உள்ளுக்கு இழுக்கிறது, விளையாட்டைப் பரப்புவதை விட அதன் தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கைப் பரப்புவதுதான் விளைவாக இருக்கிறது.

திருமண வாழ்வு கசந்து விட்ட அப்பா, அம்மாவுடன் வளர்ந்த ஒருவர் எழுதிய புத்தகம். அவர் ஓர்பாலின ஈர்ப்பாளர். ஓர் ஆணுடன் 30 ஆண்டுகளால சேர்ந்து வாழ்கிறார். அப்பாவையும் அம்மாவையும் நியாயமாக நடத்த முயன்றதையும் அதில் இருந்த போராட்டத்தையும் எழுதுகிறார். அம்மாவின் கண்ணாடி வழியாகத்தான் அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்கிறார்.

இன்னொருவர் கொங்கண அப்பாவுக்கும் யூத ஜெர்மானிய பெண் அமெரிக்காவைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர். சலுகை பற்ற வர்க்கம். படித்த படிப்பை விட்டு விட்டு உணவுத் தொழிலில் இறங்கியிருக்கிறார்.

பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீரில் என்ன கலவரம் என்று ஒரு கட்டுரை. அகதிகளாக வந்தவர்களுக்குக் கொடுக்கும் இட ஒதுக்கீடுதான் மையமாக உள்ளது. தேர்தலில் போட்டி போடவிருக்கும் 45 தொகுதிகளில் 14 ஒதுக்கப்படுகிறது. அதுவும் 14 இலட்சம் மக்களுக்கு 14 தொகுதிகள், 1 கோடி மக்களுக்கு 30 தொகுதிகள் என்று பாகுபாடு இருக்கிறது. இது போக மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல் போன்ற கோரிக்கைகளும் இருக்கின்றன.

அரசோ எல்லா அரசுகளையும் போல போராட்ட அமைப்பைத் தடைசெய்வது, போலீஸ் அடக்குமுறையே ஏவுவது என்று நடந்து கொண்டிருக்கிறது. பதிப்புத் துறையில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்படும் புத்தகங்கள் பற்றிய ஒரு உரையாடல் இடம் பெற்றிருக்கிறது. விருது பெற்ற ஒரு சிறுகதை செய்யறிவால் எழுதப்பட்டது என்று அம்பலப்பட்டிருக்கிறது. கிரந்தா என்ற தளத்தில் அது வெளியிடப்பட்டிருக்கிறது.

3 மணிக்கு ஓய்வெடுக்க அரை மணிநேரம் கண்ணயர்ந்தேன். எழுந்து லெமன் டீ போட்டுக் குடித்து விட்டு கிளம்பினேன். நல்ல வெயில்தான். அந்த வெயிலிலும் நிறைய இளைஞர்களும் இளம்பெண்களும் போய் வந்து கொண்டிருந்தார்கள். 120 சென்ட்ரல் போகும் பேருந்தில் ஏறி விட்டேன். தர்மபிரகாஷ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 29 A பிடித்து கமிஷனர் அலுவல நிறுத்தத்தில் இறங்கி நடந்து போனேன். அருங்காட்சியக அரங்கில் மேஜிக் காட்சி நடப்பதாக தட்டி வைத்திருந்தார்கள். சென்ற வாரமே முடியப் போவதாக வெளியில் அறிவிப்பு இருந்தது. ஆனால், இன்றும் நடந்திருக்கிறது.

டி.பி.ஆர் ஜோசப்பின் என்கதையுலகத்தைத் தேடினேன். அவர் சூரியன் பகுதிகளை நீக்கி விட்டிருக்கிறார். இன்டர்நெட் வேபேக் மெசினில் உள்ளது. அதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் தூங்கப் போவதற்கு முன் 1 மணி நேரம் நாட்குறிப்பு எழுத வேண்டும். வாரம் ஒரு முறை (வியாழக்கிழமை காலை) மெரீனா கடற்கரை செல்ல வேண்டும். வாரம் ஒரு முறை (ஞாயிறு) நூலகம் செல்ல வேண்டும்.

இரவில் மட்டும் தூங்க வேண்டும். முழுமையான ஆழமான தூக்கத்தைப் பெறுவதற்கு முயல வேண்டும்.

சனி, ஜூன் 13, 2026

தேக்கத்திலிருந்து மீண்டு வருதல் - 4.0

2019 இல் ம.க.இ.க.வில் இருந்து வெளியேறிய பிறகு வாலறிந்த பட்டமாக ஆகியிருந்தேன். அதை உணர்ந்திருக்கவில்லை. முதல் சில மாதங்கள் அதே அமைப்பிலிருந்து வெளியேறிய பிற தோழர்களுடனான உரையாடல்கள், அமைப்பின் குற்றச்சாட்டுகளுக்கு மறுமொழி எழுதுதல் என்று கழிந்தது. வட நாடுகளுக்கு ரயில் மூலம் பயணிப்பது என்று சென்று வந்தேன்.

 சென்னை - விஜயவாடா - விசாகப்பட்டினம் - புவனேஷ்வர் - கொல்கத்தா - தன்பாத் - லக்னோ - டெல்லி - கோட்டா - சூரத் - மும்பை - பூனா என்று பயணித்தேன். இந்த இடத்தில் பூனா ரயில் நிலையத்தில் அலைபேசியை திருட்டு கொடுத்துவிட்டேன். டேப் ஒன்று இருந்தது அதில் இருந்து எண்ணை எடுத்து தோழர் ஒருவரிடம் பேசி விட்டு, நேரடியாக சென்னை ரயிலைப் பிடித்து விட்டேன்.

 மூலதனம் வாசிப்பு அமர்வுகளில் சைதாப்பேட்டையிலும் பெருங்குடியிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கலந்துகொண்டேன். வார நாட்களில் அதிகாலை 6 மணி முதல் 7 மணி வரை தொலைபேசி மூலம் வாசிப்பைத் தொடங்கினோம். 2020 புத்தகக் கண்காட்சியில் விளம்பரப்படுத்தி புதிய குழுவைத் தொடங்கினோம். ஆங்கிலக் குழு சனிக்கிழமையன்றும் தமிழ் குழு ஞாயிற்றுக் கிழமையன்றும் தொடங்கின. மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு செயலுக்கு வந்தது.

அது மே இறுதி வரையில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இரவு நேர வாசிப்பைத் தொடங்கினோம். அதுவும் தொலைபேசி வழியாகத்தான். 2021 குழுவுக்கு இணையாக கூடுதல் வாசிப்புகள் நடத்தினேன். மதிய வேளைகளில் வாசிப்பு, பிற்பகலில் வாரத்துக்கு மூன்று நாட்கள் ஜான் ஸ்மித் மொழிபெயர்ப்பு புத்தகத்தைச் சரிபார்த்தல், அதற்கு முன்னதாக முதல் மூன்று நிமிடங்கள் புத்தக வாசிப்பு என்று நாளை எப்படியோ நிரப்ப முயன்று கொண்டிருந்தேன். இதற்கிடையில் ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு, இளம் கம்யூனிஸ்ட் கழகம், கொரோனா நோய்த்தொற்றும் ஏற்பட்டன.

2021 மே மாதம் இளம் கம்யூனிஸ்ட் கழகம் செயல்பாடுகளைத் தொடங்கினோம். அது ஓராண்டு கூட நீடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கடியில் தள்ளப்பட்டேன். மாதா மாதம் ரூ 10,000 அனுப்பிக் கொண்டிருந்தார். அதை வைத்துதான் செலவுகளை நடத்திக் கொண்டிருந்தேன். அப்பா ஒரு முறை 50,000 ரூபாய் தந்ததை பிறருடன் பகிர்ந்து கொண்டேன். பணத்துக்குப் பெரிய அளவு தட்டுப்பாட்டை உணரவில்லை. தேவைகளையும் அவ்வளவு சுருக்கிக் கொண்டேன்.

2022 பிப்ரவரி மாதம் ப.கு. ராஜன் சி.பி.எம், பாரதி புத்தகாலயத்தை விட்டு விட்டு சி.பி.ஐ, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் சேர்ந்து விட்ட செய்தி கிடைத்தது. ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, மொழிபெயர்ப்புப் பணி செய்ய முடியுமா என்று கேட்டார். முன்னதாக, லெனின் தேர்வு நூல்கள் ஒரு தொகுதியைச் சரிபார்த்தல், அதீஷ் தாபோல்கர் நேர்முகத்தை மொழிபெயர்ப்பது, முதல் மூன்று நிமிடங்கள் நூல் மொழிபெயர்ப்பு இவற்றை அவர் வழியாகச் செய்திருந்தேன். லெனின் தேர்வு நூல்கள் வெளியாகியிருக்கவில்லை. அதீஷ் தாபோல்கர் மொழிபெயர்ப்பு புத்தகம் பேசுது இதழில் வெளியானது, முதல் மூன்று நிமிடங்கள் பாரதி புத்தகாலயத்தில் வெளியிடப்பட்டது.

செவ்வாய், ஜூன் 09, 2026

ஆய்வு - எழுத்து

 2026 இல் புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நூலகம் இதழில் சீனா பற்றி எழுதிய கட்டுரைத் தொடரை தோழர் செல்வா குறிப்பிட்டுச் சொன்னார். மற்றபடி, மொழிபெயர்ப்புகள் செய்தோம், மூலதனம் வாசிப்பு அமர்வுகள் நடத்தினோம் என்று மட்டும் இருந்தால் தேவையான தாக்கங்களை உருவாக்கிட முடியாது. புத்தகம் எழுத வேண்டும்.

 

1. சீனாவும் சோசலிசமும்

2. அம்பேத்கர் - இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன்தேவைகள்

 

என்ற இரண்டு நூல்களை எழுத வேண்டும்.

3. 21 ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டில் மூலதனம்

 

சீனாவும் சோசலிசமும் என்பதில் 1839 வரையிலான சீன வரலாறு, பண்பாடு, கண்டுபிடிப்புகள், சாதனைகள். 1839 முதல் 1949 வரையிலான தேசிய அவமதிப்பு நூற்றாண்டு. 1949 முதல் 1979 வரையிலான புரட்சிகர அரசியல். 1978 முதல் 2012 வரையிலான சீர்திருத்தம் - திறந்த கொள்கை. 2013 முதல் இன்று வரையிலான சீனத் தன்மையிலான சோசலிசம் என்று எழுத வேண்டும்.

 இதில் சீனா பற்றிய வரலாற்று நூல்கள் (when China rules the world முதலியன), சீனப் புரட்சி நூற்றாண்டு பற்றிய மாவோவின் எழுத்துகள், 1949-க்குப் பிந்தைய பண்பாட்டுப் புரட்சி, அமெரிக்காவுடன் அரசுறவு ஏற்படுத்துதல், 1980க்குப் பிந்தைய கட்டுக்கடங்கா ஆட்டங்கள், 2012க்குப் பிறகு கட்டுப்பாடும் ஒழுங்குபடுத்தலும் என்று வகுத்துக் கொள்ள வேண்டும்.

 இவற்றை எழுதுவதற்குப் போதுமான தகவல்கள், சீன நூல்கள், சமகால இலக்கியம் - லு ஷ்யுன், லியோ சென்யுன், மாவோ, ரஷ் தோஷி, ரோலண்ட் போயர், கைலே ஃபெர்ரனா, கார்லோஸ் மார்ட்டினஸ், க்ரோபர் முதலியோரின் நூல்களைப் பற்றி எழுத வேண்டும்.

 அம்பேத்கர் இந்தியாவில் பொதுவுடைமைக்கான முன் தேவைகள் அல்லது இந்தியாவில் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சி என்பதில் அம்பேத்கரின் ஆய்வு, அரசியல், போராட்டங்களையும் அவற்றின் மார்க்சியப் புரிதலையும் வழங்க வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தின் உட்பொருள் சனாதன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, பார்ப்பனியத்தை வீழ்த்துவது. அந்த உட்பொருளைச் சுற்றிக் கட்டப்பட்டது அம்பேத்கரின் ஜனநாயக அரசமைப்பு. அந்த ஜனநாயக அமைப்பின் அடிப்படை சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம். அது தீண்டாமைக்கு எதிரானது சாதிய பாகுபாடுகளுக்கு எதிரானது.

 21 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் மூலதனம் - 

Weekly Schedule

 

Monday (Morning Meeting 6–7 am + Evening Meeting 8–10 pm)

Time

Activity

5:30 am

Wake, hydrate, no screens. Read print newspaper (your daily news intake).

5:45–5:55 am

Premeeting buffer – Review the text/topic for the 6 am meeting. Write down 2–3 key points or questions you want to raise.

6:00–7:00 am

Morning meeting.

7:00–7:10 am

Dead time – Stand, walk away from screen, look outside, deep breaths, drink water.

7:10–7:30 am

Capture session – On Writer account: bullet summary of 3 insights from the meeting. Optionally extend one idea into a paragraph for your own writing.

7:30–8:30 am

Breakfast, prepare for office. No screens (except maybe a physical book).

8:30 am

Leave for office.

9:30 am–5:30 pm

Office hours. During breaks: walk, hydrate, or jot notes in a small notebook (no news/social).

5:30–6:30 pm

Commute home. Use this time to decompress: listen to music, silence, or an audiobook related to your interests—no social media.

6:30–7:30 pm

Unwind, cook/eat dinner. Screenfree zone. If you feel the urge to scroll, remind yourself: your evening meeting starts at 8.

7:30–7:55 pm

Premeeting buffer – For the 8 pm meeting: review the text, note your thoughts, prepare a question or a point to contribute.

8:00–10:00 pm

Evening meeting.

10:00–10:10 pm

Dead time – Stand, stretch, hydrate, no screens.

10:10–10:30 pm

Capture session – On Writer account: summarise the discussion. If you have energy, note one idea to develop tomorrow morning.

10:30–11:00 pm

Wind down. No screens. Read a physical book. Prepare for next day.

11:00 pm

Sleep.

Tuesday (Morning Meeting 6–7 am, No Evening Meeting)

Time

Activity

5:30 am

Wake, print newspaper, hydrate.

5:45–5:55 am

Premeeting buffer – Prepare for 6 am meeting.

6:00–7:00 am

Morning meeting.

7:00–7:10 am

Dead time.

7:10–7:30 am

Capture session (meeting insights).

7:30–8:30 am

Breakfast, prepare for office.

8:30 am–6:30 pm

Commute + office hours. Use office breaks for walking, not scrolling.

6:30–7:30 pm

Unwind, cook/eat dinner. Screenfree.

7:30–9:00 pm

Extended writing/theorizing block – On Writer account. Use this time for your own writing. You can start with the idea you captured this morning or from a previous meeting.

9:00–9:30 pm

Free time / physical reading / light chores.

9:30–10:30 pm

Wind down, prepare for next day, read.

10:30 pm

Sleep.

Wednesday (Morning Meeting 6–7 am, No Evening Meeting)

Wednesday is identical to Tuesday, but note that after the 7:30 am capture session, you enter a meetingfree stretch until Friday 6 am. Use the evenings for writing.

Time

Activity

5:30–7:30 am

Same as Tuesday: premeeting, meeting, dead time, capture.

7:30–8:30 am

Breakfast, prepare for office.

8:30 am–6:30 pm

Office + commute.

6:30–7:30 pm

Dinner, screenfree.

7:30–9:00 pm

Writing block (on Writer account).

9:00–9:30 pm

Free / reading.

9:30 pm

Wind down, sleep.

Thursday (No Meetings Outside Office Hours) 

This is your most open day for writing and theorizing.

Time

Activity

6:00 am

Wake (you can sleep a little later if you wish). Print newspaper. Morning routine.

6:30–7:30 am

Writing block 1 – On Writer account. Use the morning freshness for deep thinking.

7:30–8:30 am

Breakfast, prepare for office.

8:30 am–6:30 pm

Office + commute. During office breaks, you can jot down ideas for your evening writing.

6:30–7:30 pm

Dinner, screenfree.

7:30–9:00 pm

Writing block 2 – On Writer account.

9:00–9:30 pm

Wind down, reading.

9:30 pm

Sleep.

Friday (Morning Meeting 6–7 am, No Evening Meeting)

Time

Activity

5:30–7:30 am

Premeeting, meeting, dead time, capture (same as Tuesday).

7:30–8:30 am

Breakfast, prepare for office.

8:30 am–6:30 pm

Office + commute.

6:30–7:30 pm

Dinner, screenfree.

7:30–9:00 pm

Writing block (on Writer account).

9:00–9:30 pm

Wind down.

9:30 pm

Sleep.

 

Saturday (Office Day + Morning & Evening Meetings)

Time

Activity

6:00 am

Wake, print newspaper, hydrate, light stretching.

6:15–6:45 am

Early writing block – Use the Writer account for 30 minutes of focused writing/theorizing. This is your main creative window before the day gets busy.

6:45–7:15 am

Breakfast, prepare for office.

7:15 am

Commute to office.

7:45 am

Arrive at office.

7:45–7:55 am

Premeeting buffer – Review text/topic for the 8 am meeting. Write down 2–3 points or questions.

8:00–10:00 am

Morning meeting (at office).

10:00–10:10 am

Dead time – Step away from screen, walk around the office, hydrate.

10:10–10:30 am

Capture session – Use a notebook or a text file (on your work computer, if permissible) to summarise 3 insights from the meeting. Keep it brief.

10:30 am–1:00 pm

Office work. During breaks: walk, hydrate, no news/social.

1:00–1:45 pm

Lunch break. Eat away from your desk. No screens. If possible, take a short walk.

1:45–5:30 pm

Continue office work.

5:30–6:30 pm

Commute home. Use this time to decompress (silence, music, or an audiobook related to your writing).

6:30–7:30 pm

Unwind, cook/eat dinner. Screenfree zone.

7:30–7:55 pm

Premeeting buffer – For the 8 pm meeting: review the text, note your thoughts, prepare a contribution.

8:00–10:00 pm

Evening meeting (at home).

10:00–10:10 pm

Dead time – Stand, stretch, hydrate, no screens.

10:10–10:30 pm

Capture session – On Writer account: summarise the evening discussion. Note any ideas for your own writing.

10:30–11:00 pm

Wind down. Read a physical book. Prepare for Sunday.

11:00 pm

Sleep.

Sunday (Five Meetings)

Sunday is your most packed day. The key is to use the gaps only for essential preparation, capture, meals, and short writing sprints—never for scrolling.

Time

Activity

7:00 am

Wake, print newspaper, breakfast.

7:30–7:55 am

Premeeting buffer – Prepare for 8 am meeting.

8:00–10:00 am

Meeting 1.

10:00–10:10 am

Dead time – Step away, hydrate, look outside.

10:10–10:30 am

Capture session – Summarise meeting 1 (bullet points).

10:30–10:55 am

Premeeting buffer – Prepare for 11 am meeting.

11:00 am–1:00 pm

Meeting 2.

1:00–1:10 pm

Dead time.

1:10–1:30 pm

Capture session – Meeting 2.

1:30–2:15 pm

Lunch. No screens.

2:15–2:55 pm

Short writing sprint – Use this 40minute gap on the Writer account for a focused writing/theorizing session.

2:55–3:00 pm

Brief break.

3:00–4:00 pm

Meeting 3.

4:00–4:10 pm

Dead time.

4:10–4:30 pm

Capture session – Meeting 3.

4:30–5:25 pm

Short writing sprint – Another 45minute block on Writer account.

5:25–5:55 pm

Premeeting buffer – Prepare for 5:30 pm meeting.

5:30–7:00 pm

Meeting 4.

7:00–7:10 pm

Dead time.

7:10–7:30 pm

Capture session – Meeting 4.

7:30–8:15 pm

Dinner. No screens.

8:15–8:25 pm

Premeeting buffer – Quick review for 8:30 pm meeting.

8:30–10:00 pm

Meeting 5.

10:00–10:10 pm

Dead time.

10:10–10:30 pm

Capture session – Meeting 5. Note any crosscutting themes from the day.

10:30–11:00 pm

Wind down. Read. Prepare for Monday.

11:00 pm

Sleep.