ஜூன் மாதம் 30ம் தேதி, காலை 5.10. நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தது, 45 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. 3 மணிக்கு விழிப்பு வந்தது. திரும்பப் படுத்து அடுத்த முறை விழிப்பு வந்த போது எழுந்து பார்த்தால் 4.45 ஆகியிருந்தது. கண்கள் எரிச்சல், கால்கள் உளைச்சல். திரும்பவும் படுக்கைக்கு அனுப்பும் அறிகுறிகள். பழக்கத்தை உடைக்கவும் சரி, உருவாக்கவும் சரி நிறைய மன உறுதி தேவையாக இருக்கிறது.
நேற்றைக்கு கிட்டத்தட்ட வெற்றிகரமாகவே கழிந்தது. காலையில் 4 மணிக்கு எழுந்து கொண்டேன். பல் தேய்த்து தயாராவதற்கு 4.35 ஆகி விட்டிருந்தது. அடுத்த 1 மணி நேரம் எழுத்து. அதைத் தொடர்ந்து வீட்டை ஒதுங்க வைக்க ஆரம்பித்தேன். துவைத்த துணிகள், படித்த நாளிதழ் பக்கங்கள், பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாவற்றையும் மடித்து, ஒதுங்க வைத்து அதனதன் இடங்களில் வைத்தேன். சமையலறை பொருட்கள் வைக்கும் தட்டுகளில் தாள் விரிப்புகளை மாற்ற வேண்டும். ஒவ்வொரு டப்பாவாக பாட்டிலாக எடுத்து கீழே வைத்து விரித்திருந்த செய்தித்தாளை அகற்றி, தூசி தட்டி, வேறு தாளை விரித்து, டப்பாக்களை துடைத்து வரிசையாக அடுக்கி வைத்தேன்.
ஒரு பிளாஸ்டில் அடுக்கில் கரண்டிகள் ஒரு தட்டில், சமையல் கருவிகள் இன்னொரு தட்டில், உருளைக்கிழங்கு, வெங்காயம் மூன்றாவது தட்டில் வைப்பது வழக்கம். இரண்டு நாட்கள் முன்பு வாங்கி வந்திருந்த கீரையை அதிலேயே வைத்து அது அழுகிப் போயிருந்தது. அதையும், பல மாதங்களுக்கு முன்பு வாங்கிய வெல்லத்தையும், ஆர்லிக்சு பாட்டிலில் இருந்த சர்க்கரையையும் குப்பையில் கொட்டினேன். பிளாஸ்டிக் அடுக்கிலும் நாளிதழ் விரிப்புகளை மாற்றி காய்கறிகளை கீழ்த் தட்டுக்கும் கருவிகளை மேல் தட்டுக்கும், நடுவில் உள்ள தட்டில் அகப்பைகளையும் போட்டு வைத்தேன். சமையல் மேடையையும் துடைத்துக் கீழே தள்ளி விட்டு தரை பெருக்க ஆரம்பித்தேன்.
தினமும் பெருக்கினாலும் கணிசமான அளவு குப்பையும் தூசியும் சேர்ந்துதான் விடுகின்றன. இவ்வளவுக்கும் ஒரே ஒரு ஆள் புழங்கும் நாட்கள்தான். வெளியிலிருந்து காற்றில் அடிக்கப்பட்டு வரும் தூசி. சுவர்கள், மற்ற பொருட்களை தூசி தட்டும் போது கீழே விழும் தும்புகள் என்று சேர்கின்றன. சமையலறையில் கொஞ்சம் உணவுப் பொடிகள் இருக்கலாம். குப்பைத் தொட்டியில் விரிப்பதற்கு பிளாஸ்டிக் பைகள் இல்லை. கடைக்குப் போகும் போதெல்லாம் கையில் ஒரு பையையும் எடுத்துப் போய், பிளாஸ்டிக் பைகளை மறுதலித்து விடுவதால் பிளாஸ்டிக் பைகள் அதிகம் சேர்வது இல்லை.
சன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த கொசு வலைகளில் தூசி படிந்து போயிருந்தது. சன்னலை மூடி வைத்த பகுதியில் வெளிர் மஞ்சள் நிறத்திலும், திறந்து வைத்த பகுதியில் கறுப்பாகவும் மாறி விட்டிருந்தன. அவற்றை பிடுங்கி குளியலறைக்குள் போட்டேன். தண்ணீரில் அலசி காய வைத்து மறுபடி மாட்ட வேண்டும். இதெல்லாம் செய்வதற்குள் நேரம் ஓஓடி விட்டிருந்தது. 1 மணி நேரத்துக்குள் வீட்டை தூய்மை செய்வதை முடித்து விட்டு உலாவப் போக வேண்டும் என்பது நடக்கவில்லை. தொடர்ந்து கொசு வலைகளை கழுவி வெளியில் மாட்டி விட்டு தரை துடைக்க ஆரம்பித்தேன்.
தரை துடைக்க ஃபினாயில் 5 மூடிகள் ஊற்றி ஒரு வாளியில் இரண்டு மக் தண்ணீரில் துடைக்கும் நீர்மத்தை வைத்துக் கொண்டு இன்னொரு வாளியில் நிரம்பும் வரை தண்ணீர் பிடித்து துடைத்த துணியை அலசும் பாத்திரமாக பயன்படுத்துவது சரியாக இருக்கிறது. முந்தைய நாள் வந்த குழந்தைகளில் யாரோ காலையில் நாளிதழ் வாங்கும் போது கிடைத்திருந்த கேண்டிமேன் மிட்டாயைத் தின்று பாதியில் துப்பி, தரையெல்லாம் அப்பியிருந்தது. துடைக்கும் போது போய் விடுமா அல்லது கரையாக படிந்து விடுமா என்று சந்தேகம். துடைத்ததும் போய் விட்டது.
மேசையின் மீது வைத்திருந்த காசு 9 ரூபாய்கள் மட்டும் இருந்தன. திங்கள் கிழமை காலையில் 100 ரூபாயை பகிர்வூர்தி காரரிடம் கொடுத்து மாற்றியதில் எட்டு 10 ரூபாய் நோட்டுகளும், 3 ரூபாய் சில்லறையும் இருந்தன. ரயில் சீட்டு வாங்க ஒரு பத்து ரூபாய் நோட்டை மாற்றி, 5 ரூபாய் சில்லறை கிடைத்தது. கிண்டியில் நாளிதழ் வாங்க 3 ரூபாய் சில்லறை தீர்ந்தது. பேருந்தில் சீட்டு வாங்க 5 ரூபாயைக் கொடுத்து 2 ரூபாய் சில்லறை கிடைத்தது.
மாவு வாங்க 22 ரூபாய் - இரண்டு 10 ரூபாய்களும், 2 ரூபாய் சில்லறையும் சரியாக இருந்தது. இப்போது 50 ரூபாய் கையில் இருக்க வேண்டும். பால் வாங்கப் போகும் போது 10 ரூபாய் நோட்டுகளை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு போனேன். வழியில் எண்ணி எண்ணிப் பார்த்ததில் 5 நோட்டுகள் இருந்தன. கடைக்குப் போய் 11 ரூபாய் பாலுக்கு இரண்டு 10 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து சில்லறை வாங்கிக் கொண்டேன், 9 ரூபாய் சில்லறை. அந்த சில்லறை மட்டும் இருக்கிறது. 30 ரூபாய்க்கான மூன்று 10 ரூபாய்களைக் காணவில்லை. கடையில் பால் வாங்கும் போது மேசையில் வைத்து விட்டு வந்து விட்டேனோ? சாத்தியம் மிகவும் குறைவு, எனது கையும், கண்ணும் ஏமாற்றியிருந்தாலும், கடைக்காரர் கூப்பிட்டுக் கொடுத்திருக்கலாம். வீட்டில் மேசையிலிருந்து யாராவது எடுத்திருப்பார்களோ? யாரைப் போய் கேட்க?
இப்படி இரண்டு நாட்களில் மூன்று இடங்களில் 240 ரூபாய் ஏமாந்திருக்கிறேன்.
முதலில் செல்பேசி சரி செய்யும் கடையில் கொண்டு கொடுத்தால் '1 மணி நேரத்தில் சரி செய்கிறேன், அதை மாற்ற வேண்டியிருக்கும், இதை மாற்ற வேண்டியிருக்கும்' என்று சொல்லி 200 ரூபாய் வாங்கிக் கொண்டார். அதன் பிறகும் செல்பேசியைப் பயன்படுத்த முடியவில்லை. வேறு ஏதோ imei எண் போய் விட்டது அதை அமைக்க இன்னும் 150 ரூபாய் வேண்டும் என்று கேட்டதும் கொஞ்சம் வாக்குவாதம் செய்து விட்டு கருவியை எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். 200 ரூபாய் கூட சும்மா வைத்துக் கொண்டிருந்து விட்டுத் தண்ணீரைத் துடைத்துக் கொடுத்து விட்டதாகத் தோன்றியது. அப்படிச் செய்யும் போது imei எண்ணையும் நீக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறானோ அந்தப் பையன். மிகப் பெரிய ஏமாற்றமாக உணர்ந்த நிகழ்வு.
யாரையும் கண்மூடித்தனமாக நம்ப முடியாது. 1 மணி நேரத்தில் சரி செய்கிறேன் என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக திங்கள் கிழமை காலை தாம்பரத்தில் பகிர்வூர்தி ஓட்டுனர் சில்லறை கொடுக்கும் சாக்கில் 20 ரூபாய் வசூலித்துக் கொண்டது. இதுவாவது நான் உணர்ந்து என் அறிவில் நடந்தது. சூழ்நிலைக்கு ஏற்றபடி தயாரிப்புடன் எதையும் செய்ய வேண்டும். கையில் சில்லறை இல்லாத நிலைமையைத்தானே அவர் பயன்படுத்திக் கொண்டார். இனிமேல் அத்தகையை நிலைகளில் நிற்கக் கூடாது.
மூன்றாவதாக 30 ரூபாய் தொலைந்தது. இது எனது கவனக் குறைவால், போயிருக்கிறது. பணத்தை மிகவும் கவனமாக ஒரே இடத்தில் வைத்து எடுக்க வேண்டும். பயன்படுத்த வேண்டும். பொதுவான இடங்களில் வைத்து தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.
உலாவப் போவதை மட்டும் ரத்து செய்து கொண்டேன். குளித்து விட்டு கடைக்குப் போய் வந்தேன். திருவள்ளுவர் சாலைக்கே சென்று விட்டேன். டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ், ஆவின் பால் அரை லிட்டர், புளி 100 கிராம், பூண்டு 50 கிராம், புளியோதரைப் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி 50 கிராம் பொதிகள். 2+11+5+6+10+10=44 ரூபாய்கள். நூறு ரூபாய் தாளை மாற்றி மீதியைக் கொடுத்து விட்டார்.
வீட்டிற்குள் வரும் போது வெளியில் குழாயில் குடிக்கும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக் கிழமை காலையில் வராமல் மாலையில்தான் விட்டார்கள். அதனால் இன்றைக்குக் காலையில் வருமா அல்லது அடுத்த நாள்தானா என்று ஒரு நிச்சயமற்ற நிலைமை. இன்றைக்கே விட்டிருந்தார்கள். எதிர்வீட்டு அம்மா குடத்தில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். காவலர் வீட்டின் முன்பிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். என்னைக் கூப்பிடப் போயிருந்திருப்பார். ஞாயிற்றுக் கிழமை பிடித்த தண்ணீரே வாளியிலும் குடத்திலும் இருந்தது.
வீட்டுக்குள் போய் வாங்கி வந்திருந்த பொருட்களை டப்பாக்களில் தட்டி விட்டு, வாளித் தண்ணீரை கொதிக்க வைக்கும் பாத்திரங்களில் ஊற்றி விட்டு போய் ஒரு வாளி நிரப்பிக் கொண்டு வந்தேன். காலை உணவுக்கு உப்புமா செய்வதாக முடிவு செய்து அரை வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் வெட்டி வைத்துக் கொண்டேன். பாலை அடுப்பில் வைத்து குறைந்த அனலில் அமைத்து விட்டு தியானம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டும் போயிருந்திருக்கும், எழுந்து விட்டிருந்தேன்.
பாலை இறக்கி குடிக்க எடுத்து விட்டு, ரவை வறுக்க ஆரம்பித்தேன். தேங்காயும் கீறி வைத்திருந்தேன். ரவையை வறுக்க சின்ன சட்டி, உப்புமா செய்ய பெரிய சட்டி. வறுத்து கீழே இறக்கிய பிறகு பெரிய சட்டியை வைத்து எண்ணைய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து அவை எண்ணையில் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய்த் துண்டுகளைப் போட்டு வதக்கி, எடுத்திருந்த 2 உழக்கு ரவை வேகுவதற்கு மூன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். ஒரு கரண்டி உப்பும் சேர்த்துக் கொதிக்க விட்டேன். கொதித்த பிறகு ரவையைச் சேர்த்து கிண்டினால் உப்புமா தயார்.
பாலைக் குடித்துக் கொண்டே முறுக்குகளில் ஒன்றிரண்டை உள்ளே தள்ளினேன். டெக்கான் குரோனிக்கிளில் கால்பந்து விளையாட்டுச் செய்திகள், நடுப்பக்கத்தில் காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவின் பேட்டி, மூன்றாவது பொருளாதார முடக்கம் (third great depression) என்ற பால் குரூக்மேனில் பத்தி, ஜயதி கோஷ் என்பவரின் எரிபொருள் விலை உயர்வு குறித்த கட்டுரை என்று நிறையவே படிக்க ஆர்வமான கட்டுரைகள்.
சாப்பிட்டு விட்டுக் கணினியை இயக்கினேன். ஜாவாஸ்கிரிப்டு, Jquery படித்து அதை செயல்படுத்த வேண்டும்.
முதலில் எழுதி வைத்து பதியாமல் இருந்த பதிவுகளை எல்லாம் ஒரு மூச்சாக சேர்த்து விட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அதில் ஓடியது.
அதன் பிறகு இணையத்தில் தேடி jquery பற்றிய கற்பித்தல் படக்காட்சி அல்லது இலவச புத்தகங்களை கண்டு கொள்ள முயற்சித்தேன். படக்காட்சியில் 12 வயதான ஒரு சிறுவன் கூகுள் நுட்ப உரையில் பேசியது கிடைத்தது. அது கொஞ்ச நேரம் பார்த்து விட்டு மூடி விட்டேன். தேடித் தேடி jqueryஐ விளக்கும் புத்தகத்தின் பிடிஎஃப் கோப்பை கோப்பு பகிர்ந்து கொள்ளும் தளம் ஒன்றில் பிடித்தேன். கடையில் வாங்கினால் 500 ரூபாயிலிருந்து செலவாகலாம். இப்போது அந்தக் கோப்பை தகவிறக்கி படிக்க ஆரம்பித்தேன்.
நாள் முழுவதும் அந்தப் புத்தகத்தைப் படித்து எப்படி jquery மூலம் வலைஉலாவியில் பயன்பாடுகளை எளிதாக உருவாக்கலாம் என்று தெரிந்து கொண்டேன். இடையிடையே மடல்கள், கூகுள் பஸ்சில் செய்திகள் எட்டிப் பார்த்துக் கொண்டேன். பெரும்பாலும் நேரத்தில் படிப்பதிலிருந்து விலகவில்லை.
மதிய உணவுக்கு சோறு அழுத்தக் கலனில் வைத்து விட்டு, வாங்கி குளிர் பெட்டியில் வைத்திருந்த பாகற்காயை வெட்டி, காலையில் வைத்திருந்த அரை வெங்காயத்தையும் வெட்டி பொரியல் செய்ய தயாரித்துக் கொண்டேன். 'பொரியல் செய்கிறேன் பேர்வழி என்று காய்களை சட்டியில் கருக வைத்து சாப்பிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது' என்று அண்ணன் சொல்லியிருக்கிறான். முறுகலான உணவுகளில் சத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடுகிறது என்பது அதிலிருந்துதான் பதிந்தது.
போதுமான அளவு எண்ணெய் சேர்த்து, தீயை தாழ் நிலையில் வைத்து சட்டியில் கிளறிக் கொண்டே இருந்தால் கரிந்து விடாமல் பொரியல் தயாராகி விட்டது. சனிக் கிழமை கத்தரிக்காய் பொரியல் இப்படி செய்ய முடிந்தது, இப்போது பாகற்காய் பொரியலும்.
ஊற்றிக் கொள்வதற்கு ரசம் அல்லது சாம்பார் வைக்கவில்லை. புளியோதரைப் பொடி, தயிர் என்று சாப்பிட்டுக் கொண்டேன். தயிரும் பாலில் உறை ஊத்தியது உறைந்திருக்கவில்லை. உறைக்காக வாங்கிய தயிர் டப்பாவில் மீந்திருந்ததை ஊற்றிச் சாப்பிட்டுக் கொண்டேன். மதியத்துக்கு மேலும் jquery விபரங்கள் தொடர்ந்தன. சோறு வடித்த கஞ்சி மாலையில் குடிப்பதற்கு. அதிகமாக செய்து வைத்திருந்த பாகற்காய் பொரியலுடன் இரவு உணவுக்கு சப்பாத்தி செய்து கொள்ளலாம் என்று முடிவு.
மாலையில், இரவு உணவுக்காக சப்பாத்தி மாவு பிசைந்து வைத்து விட்டுக் கணினியில் வேலையைத் தொடர்ந்தேன். போய் சப்பாத்திகளாக விரித்து விட்டு, 5 சப்பாத்திகள் போக மீதிமாவை குளிர் பெட்டியில் வைத்து விட்டு உட்கார்ந்தேன். ஏழரை தாண்டி விட்டிருந்தது.
சட்டையை மாட்டி விட்டு வெளியில் 20 நிமிடம் உலாவி விட்டுத் திரும்பும் போது வீட்டில் மின் தடை ஏற்பட்டிருந்தது. மின் அலுவலகம் அருகில் போகும் போது ஏதோ பெரிய சத்தமும் ஒரு வெளிச்ச மின்னலும் கேட்டது. அது நம்ம வீட்டுப் பக்க இணைப்புகளைத்தான் தூக்கிப் போட்டிருக்கிறது என்று புரிந்தது.
இணையக் கருவியை அணைத்து எனது கணினியையும் அணைத்து வைத்தேன். அவரது கணினி மின் வெட்டில் அணைந்து போயிருந்தது. மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, எதிர்பார்த்திருந்தால் மின்சாரம் இணைக்கப்பட்டது. புத்தகம் ஒன்றுடன் வெளியில் நாற்காலி கொண்டு போய் உட்கார்ந்தேன்.
புதன், ஜூன் 30, 2010
செவ்வாய், ஜூன் 29, 2010
ஒடுக்கம்
நேரம் 4.38. இன்றைக்கு ஜூன் 29 ஆகி விட்டது. இன்னும் ஒரு நாளில் இந்த மாதமும் முடிந்து அடுத்த மாதம் ஆரம்பித்து விடும்.
நேற்றைக்குக் காலையில் தாம்பரத்தில் கண் விழித்தேன். நேரம் என்ன என்று கேட்டால் ஐந்தேகால் என்று சொல்ல எழுந்து விட்டேன். இன்னும் நிறைய நேரம் தூங்கிக் கொண்டிருக்கலாம் என்று குட்டியாக எட்டிப் பார்த்த எண்ணத்தை நடைமுறைக்கு சரிப்படாது என்று புறங்கையால் ஒதுக்கித் தள்ளினேன். அக்காவும் எழுந்து மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்தாள். எனக்கு இடையில் என்ன நடந்தது என்று நினைவே இல்லை.
'இரவு கரண்ட் போய் விட்டு போய் விட்டு வந்ததே, தூங்க முடிந்ததா?' என்று அக்கா கேட்க, அதைப் பற்றிய உணர்வே இல்லாமல் தூங்கியதாகச் சொன்னேன். 'நல்ல மழை இரவெல்லாம்' என்றதற்கும் அதே பதில். மழை பெரிதாக பெய்ததை உணர்ந்து அதைப் பற்றி ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தது அப்புறமாக நினைவு வந்தது. கழுவும் தொட்டியில் முகம் கழுவி வாய்க் கொப்பளித்துக் கொண்டேன். பல் தேய்க்க பிரஷ் கொண்டு வந்திருக்கவில்லை. மாற்றுத் துணி கொண்டு வந்திருக்கவில்லை. நேராக ராமாபுரம் போய் விட வேண்டியதுதான்.
அக்காவிடம் சொல்லும் போது, 'குடிக்க எதுவும் வேண்டாமா' என்ற கேள்விக்கு வேண்டாமென்று மறுத்து விட்டு புறப்படத் தயாரானேன். 'மழை இன்னும் பெய்கிறதா பார்' என்று கேட்டு பின் வாசலைத் திறந்து பார்த்தால் மழை சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. மழைத்துளி தரையில் விழுவதைத்தான் பார்க்கமுடியவில்லை. 'கொஞ்சமாகத்தான் பெய்கிறது போலிருக்கிறது. கிளம்புகிறேன்.'
வெளிக்கதவைத் திறப்பதற்கு திறவுகோல் வேண்டும். கதவுக்கு ஒரு பூட்டு, அதற்கு வெளியில் அளிக்கதவில் ஒரு பூட்டு, சுற்றுச் சுவரின் அளிக்கதவில் இன்னொரு பூட்டு, சுற்றுக் கதவு பூட்டைத் திறக்கப் போகும் போது மழை துளிகள் ச்சின்னதாக விழுவதை உணர்ந்தேன். திரும்பி வந்து சாவியை கொடுக்கும் போது, குடை எடுத்துக் கொண்டு போகும் படி சொல்லி, ஒரு குடை எடுத்துத் தரச் சொன்னாள் அக்கா. என்ன மாதிரி அன்பு இந்த அக்காவுக்கு, நான் ஒன்றுக்கும் உதவாமல் மண் போல இருந்தாலும் மாய்ந்து மாய்ந்து என்னை பார்த்துக் கொள்கிறாள். என்னைப் பற்றி பெரிதாக எல்லோரிடமும் பேசுகிறாள். இது போல ஒரு அக்காவுக்கு என்ன தவம் செய்திருந்தேன். யாரோ வலைப்பதிவில் அக்கா பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.
குடை பிடித்துக் கொண்டே வெளியில் வந்தேன். இன்னமும் விடிந்திருக்காத இளம் காலை. முடிச்சூர் சாலை வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டேன். எதிர்த் திசையில் பேருந்துகள் ஒன்றிரண்டு போயின. இந்தத் திசையில் பேருந்துகளுக்கு முன்பு ஒரு பகிர்வூர்தி வந்தது. அதில் இரண்டு பேர் ஏறிக் கொண்ட பிறகு எனக்கும் இடம் ஏற்படுத்தி ஏற்றிக் கொண்டார். ஓட்டுனரின் அருகில் வலது புறத்தில். காலை உள் அடக்கி உட்கார வேண்டும். அடுத்த வண்டி ஏதாவது இடித்துக் கொண்டு போய் விட்டால் கதை கந்தலாகி விடும்.
ஒரு வழிப்பாதை எல்லாம் பொருட்படுத்தாமல் முடிச்சூர் சாலையில் நேராகப் போய் புதிய பாலம் கட்டும் இடத்தில் இடது புறம் திரும்பி சண்முகம் சாலை கடைத்தெரு வழியாக நெடுஞ்சாலையை அடைந்தார். ரயில் நிலையத்தின் முன்பு நிறுத்தி இறங்கச் சொல்லி விட்டார். என்னிடம் 100 ரூபாய் நோட்டுதான் இருந்தது. 3 ரூபாய் சில்லறை. பேருந்தில் ஏறியிருந்தால் 3 ரூபாயில் சீட்டு வாங்கியிருக்கலாம். இவருக்கு 10 ரூபாய் கொடுக்க வேண்டும். நல்ல வேளையாக மற்றவர்கள் எல்லாம் 10, 10 ஆகக் கொடுத்தார்கள். சில்லறை இல்லை என்று சொல்லி விட்டார். அதன் பிறகு ஆறு பேர் கொடுத்த கட்டணத் தொகை, அவரது பையில் இருந்தது எல்லாம் சேர்த்து 80 ரூபாய்கள்தான் இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்தார். இரட்டை கட்டணம். மூன்று ரூபாய் பேருந்து கட்டணம் இல்லாமல், 10 ரூபாய் பகிர்வூர்தி கட்டணமும் இல்லாமல் 20 ரூபாய் செலவழித்து வந்து சேர்ந்திருக்கிறேன். மனம் நொந்து கொண்டது.
சாலையைக் கடக்க தரையடி சுரங்க நடைபாதையில் இறங்கினால் பெருமழையில் தண்ணீர் தேங்கியிருந்தது. நல்ல வேளையாக படி இறங்கியதுமான இடத்தில் மட்டும் தண்ணீர். அதில் எல்லோரும் இறங்கி நடந்தார்கள். பாதம் நனையும் அளவுதான் தண்ணீர். கால் சட்டையை இடுப்பில் உயர்த்திப் பிடித்த படி இறங்கினேன். அந்த வேளையிலேயே நிறைய கூட்டம். நிறைய பேர் வேலைக்குக் கிளம்பி விட்டிருந்தார்கள். ரயில் நிலையத்துக்குள் போய்ப் பார்த்தால் பயணச் சீட்டு வாங்கும் இடத்தில் நீண்ட காத்திருக்கும் வரிசை.
கிண்டி வரை 5 ரூபாய் என்று எழுதிப் போட்டிருந்தார்கள். பேருந்தில் 9 ரூபாய் வரை ஆகிறது. இனிமேல் இப்படி ரயிலைப் பிடித்து விட வேண்டியதுதான். 5 ரூபாயில் வேலை முடிந்து விடும். மூன்று வரிசையில் சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நிற்கும் போது கடற்கரைக்குச் செல்லும் வண்டி என்று ஒன்று புறப்படும் அறிவிப்பு (முதல் நடைமேடையிலிருந்து) கேட்டது.
சீட்டு வாங்கி வெளியில் வருவதற்கு முன்பே அடுத்த வண்டி இரண்டாவது நடைமேடையில் நிற்பதாக அறிவிப்பும் வந்து விட்டது. நெல்லையிலிருந்து வரும் நெல்லை விரைவு வண்டி வந்து கொண்டிருப்பதாக இன்னொரு அறிவிப்பு. படியேறி 1,2ம் நடைமேடைகளில் இறங்கினேன். வண்டி நின்று கொண்டிருந்தது. கூட்டம் அதிகமில்லை. ஏணிப்படியிலிருந்து இறங்கியதும் அருகில் இருந்த பெட்டியில் ஏறிக் கொண்டேன். உட்கார இடம் கிடைத்தது. முதலில் உட்கார்ந்திருந்த இடத்தில் நேராக மின்விசிறி காற்று அடித்துக் கொண்டிருந்ததால், எழுந்து எதிர்ப் புறத்தில் சன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். கதவை அடுத்த இருக்கை. எதிரில் ஒரு வயதான அம்மா, சன்னலை மூடி வைத்திருந்தார்கள்.
எதிரில் மறுபக்கம் இளம் பெண் ஒருத்தி சன்னலோரமாக உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்க்காதது போல பார்த்துக் கொண்டே ஒருவர் எதிர் இருக்கையில் உட்கார்ந்தார். இன்னொரு இளம் பெண்ணும் கூட ஒரு வயதான பெண்மணியும் வர அவர்களுக்கு இடம் விட்டு தான் இந்தப் பக்க இருக்கைக்கு மாறி தான் ஒரு கனவான் என்பதை அந்தப் பெண்ணுக்குக் காட்டிக் கொண்டார். அதன் பிறகும் பார்க்காமல் பார்த்துக் கொண்டார்.
வண்டி கிளம்புவதற்கு முன்பு எல்லா இருக்கைகளும் நிறைந்து கதவருகில் நான்கைந்து பையன்கள் நிற்கவும் ஆரம்பித்திருந்தார்கள். வழக்கமான தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல் என்று வண்டி தாண்டிக் கொண்டிருந்தது. இடையில் கொஞ்சம் கண்களை மூடினேன். தூங்க முடியவில்லை. எதிரில் தெரிந்த பெண் கரிய நிறம். களையான முகம், கூரான மூக்கு. குண்டாக இல்லாவிட்டாலும், அதே போன்ற துறுதுறுப்பு. செல்பேசியில் யாரிடமோ பேசி விட்டு அடுத்து அம்மாவிடம்.
பழவந்தாங்கல் தாண்டி கொஞ்ச தூரம் ஓடி பரங்கிமலை, அடுத்ததாக கிண்டி. பரங்கிமலை அருகிலேயே எழுந்து கதவருகில் நின்று கொண்டேன். கிண்டியிலும் ஏணிப்படியின் அருகில் வண்டி நின்றது. ஏறி இறங்கி, சுரங்க நடைபாதைக்கு பக்கவாட்டு வெளிப்பாடு வழியாக சாலைக்கு வந்தேன். பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கும் வழியில் கடையில் இந்து நாளிதழ். 3 ரூபாயைக் கொடுத்தால் நாளிதழ் கொடுத்து விட்டு 50 பைசா பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தான். கொஞ்ச நேரம் தயங்கி நின்ற பிறகு ஒரு இனிப்பு மிட்டாயைக் கொடுத்து அனுப்பினான். கேண்டிமேன்.
ராமாபுரம் போகும் 18E அல்லது M49R வண்டி வந்தால்தான் ஏற வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தேன். வேறு பேருந்தில் போய் இறங்கி நடப்பது தேவையில்லை. பூந்தமல்லி போகும் பேருந்துகள் எதிரில் கடந்து போயின. பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் போய்ச் சேரும் போது தூரத்தில் பச்சை நிற பேருந்து ஒன்று தெரிந்தது, 18Eதானோ? அதேதான். இது என்ன அதிசயம்.
நாம் வந்ததும் நமக்குப் போக வேண்டிய பேருந்து வருகிறது. அரை மணி நேரத்துக்கு ஒன்று என்ற அளவில்தான் பொதுவாக ஓடிக் கொண்டிருக்கும். ஏறி உட்கார்ந்து சீட்டு வாங்கினேன். 3 ரூபாய். மொத்தம் 28 ரூபாய் செலவழிந்திருக்கிறது. முடிச்சூரிலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை 20 ரூபாய் அதன் பிறகு ராமாபுரம் வீடு வரை 8 ரூபாயில் வந்தாச்சு. முந்தைய நாள் போகும் போது ராமாபுரத்திலிருந்து கிண்டிக்கு 5 ரூபாய், கிண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பேருந்து 9 ரூபாய், தாம்பரத்திலிருந்து முடிச்சூர் சாலைக்கு 3 ரூபாய் என்று 17 ரூபாய்கள்.
நேராக தோசை மாவு விற்கும் கடைக்குப் போய் 1 கிலோ மாவு வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே கட்டி வைத்திருந்ததைக் கொடுத்தார். கொஞ்சம் உப்பிப் போயிருந்தது. ஆவின் பால் எங்கும் தென்படவில்லை. வீட்டுக்குப் போய் குளித்து விட்டு பால் வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் வந்தால் முதல் வேலையாக கணினியை இயக்கிக் கொண்டேன். உடை கூட மாற்றவில்லை. பல் கூடத் தேய்க்கவில்லை. மின்னஞ்சலில் பெரிய சேதி எதுவும் இல்லை.
பாத்திரங்கள், நாளிதழ்கள், துணிகளை ஒதுங்க வைத்து விட்டு சமையல் மேடையைத் துடைத்துத் தள்ளி விட்டு பெருக்கி வாரினேன். அடுத்தது தூங்கும் அறையில் ஒதுங்க வைத்து பெருக்கிறேன். சமையலறையில் மேடைக்குக் கீழே தட்டுகளில் தூசி அடைந்திருந்த நாளிதழ் விரிப்புகளை மாற்றி தூசி வாரினேன். அது ஒரு வெளிச்சத்தையே கொடுத்து விட்டது போலிருந்தது. ஞாயிற்றுக் கிழமை துவைத்தது போக சேர்ந்திருந்த நான்கைந்து துணிகளைத் தண்ணீரில் ஊற வைத்திருந்தேன். துணி துவைக்கும் பொடி தீர்ந்து விட்டிருந்தது.
நானும் பணி மேசைகளை தூசி தட்டித் துடைத்து, உள் அறையிலிரும் தூத்து வாரிப் போட்டு விட்டு, தரை துடைக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு துணிகளுக்கு சோப்பு போட்டு வைத்திருந்ததை அலசிக் காயப் போட்டு விட்டேன். நான்கே துணிகள் இருந்ததால் இரண்டு வாளி தண்ணீரில் அலசி முடித்து விட்டேன் நிறைய துணிகள் இருந்தால் இரண்டு வாளிகளாக இரண்டு முறை அலசியிருப்பேன்.
தரை துடைத்து விட்டு அடுத்தது முகம் மழித்தல், குளியல். குளித்து விட்டு கடைக்குப் போய் பால் வாங்கிக் கொண்டேன். தயிர் வாங்க மறந்திருந்தேன். பாலை காய வைத்து விட்டு தியானத்தில் உட்கார்ந்தேன். 20 நிமிடங்கள் கிட்டத்தட்ட முழுமையாக உட்கார்ந்து விட்டேன். தூக்க, மயக்க, கனவு நிலைகள் நிறைய ஏற்பட்டன. 20 நிமிடங்கள் விழித்திருக்கக் கூட முடியாமல் குப்பைகள் பாரங்கள் குவிந்து கிடக்கின்றன, மனதில். கொஞ்ச கொஞ்சமாக இறக்கி தூய்மைப்படுத்த வேண்டும்.
தோசை மாவு நன்கு புளித்து நுரைத்துதான் போயிருந்தது. தோசைகள் மெலிதாக வந்தன. இரண்டு நாட்கள் முன்பு செய்திருந்த உருளைக்கிழங்கு போட்ட காரக் குழம்புடன் ஏழெட்டு தோசைகளை உள்ளே தள்ளின். இன்னும் 2-3 தோசைகளுக்கு மீந்திருக்கும் போது நிறுத்திக் கொண்டேன்.
தோல் பதனிடும் வேதிப் பக்குவங்களை பகிர்ந்து கொள்ளும் இணையப் பயன்பாட்டைப் பற்றி விவாதித்தோம். அது எப்படி செயல்பட வேண்டும். யார் யாரிடம் அதற்காக பண முதலீடு செய்யச் சொல்லலாம் என்று சேர்த்துக் கொண்டோம்.
வர வேண்டிய பணம், எனது தொலைபேசி இல்லாத நிலைமை எல்லாவற்றையும் பேசினோம். ஜாவாஸ்கிரிப்டில் புதிதாக கற்க வேண்டியது, இன்னும் மேம்படுத்த வேண்டியது என்று பேசினோம்.
இரவு சாப்பிடுவதற்கு கஞ்சி போட்டிருந்தேன்.
இரண்டு உழக்கு அரிசி, மீந்திருந்த சிறுபயறு, தேங்காய் காலையிலிருந்தே வெளியில் வைத்திருந்ததைக் கீறி உலர் அரவையில் பொடியாக்கி சேர்த்தேன். மீதி தேங்காயில் ஒரு மிளகாய் போட்டு துவையல். புளி, பூண்டு இரண்டும் இல்லை. வாங்க வேண்டும். கஞ்சி முழுவதையும் குடித்தேன்.
கணினியை மூடி விட்டு ஒன்பதரை மணிக்குப் படுக்கப் போனேன். கையில் இந்து நாளிதழ், படித்துக் கொண்டே இருக்கும் போது, அப்படியே சுருண்டு தூங்கி விடுவோம் என்று ஒரு தளர்ச்சி. ஏதோ ஒரு உந்தலில் எழுந்து உட்கார்ந்து தியானம் செய்தேன். மின் விளக்கை அணைத்து, மின் விசிறியை இணைத்து, மேற்கு பக்கமாக தலைமாட்டை மாற்றிக் கொண்டு தூங்கினேன். 2 மணிக்கு ஒரு முறை விழிப்பு, மூன்றரைக்கு இன்னொரு முறை. அப்படியே மறுபடியும் படுத்துக் கொண்டேன். 4 மணிக்கு எழுந்து கொண்டேன்.
இதை முடித்ததும், வீட்டை ஒதுங்க வைத்து தூத்துத் துடைத்தல் (1 மணி நேரம்). அடுக்களையில் செய்தித்தாள் விரிப்புகளை மாற்ற வேண்டும். கொசு வலை அடைப்புகளை கழற்றி கழுவிப் போட வேண்டும். உலாவி வருதல், கூடவே பால் வாங்கிக் கொள்ள வேண்டும் (7 மணி ஆகியிருக்கும்). முகம் மழித்து, குளித்து விட்டு (7.30), பால் ஏற்றி விட்டு தியானம் (8). சாப்பிட்டு விட்டு வேலை ஆரம்பிக்க வேண்டும். tentschool பதிவில் எழுத ஆரம்பிக்க வேண்டும். ஜாவாஸ்கிரிப்ட் குறித்து எழுத வேண்டும்.
tentschool லினக்சு, போஸ்ட்கிரெஸ்கியூஎல், அபசே, பிஎச்பி, எச்டிஎம்எல், ஜாவாஸ்கிரிப்ட், சிஎஸ்எஸ் தொழில் நுட்பங்களைப் பற்றி முதல் கட்டுரைகளை முடித்து விட வேண்டும். ஜாவாஸ்கிரிப்டு குறித்து தமிழில் எழுத ஆரம்பிக்கலாம்.

லேபிள்கள்:
உணவு,
உறவுகள்,
சுயமுன்னேற்றம்
திங்கள், ஜூன் 28, 2010
திட்டமிட்டுதான் வாழ வேண்டும்
9.05
விமான நிலையத்தில் வரவேற்கப் போக வேண்டியிருந்தது. நேற்றைக்குக் காலையிலேயே அக்கா வீட்டுக்கு தாம்பரம் போய் விட்டு அங்கிருந்து போயிருக்கலாம். காலையில் எழுந்திருந்தால், கைபேசி உயிரை விட்டிருந்தது. தண்ணீரில் விழுந்தது என்று பண்டுவம் பார்த்து ஓரளவு சரியாகி நன்றாகத்தான் வேலை செய்து கொண்டிருந்தது. இன்றைக்கு திடீரென்று சுத்தமாக உயிரே இல்லை.
யாருடைய எண்ணையும் பார்க்க முடியாது. வீட்டு எண் மட்டும் நினைவில் இருக்கிறது. கடையில் கொடுத்து சரி செய்யக் கேட்டுக் கொள்ளலாம்.
காலையில் எழுந்து வீட்டை தூய்மை செய்து, குளித்து வேலை ஆரம்பிக்க வேண்டியதை சுருக்கி விட்டேன். இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே என்று ஒரு சமாதானம். வீட்டில் அறைகளை எல்லாம் தூசி தட்ட வேண்டும், அதற்குப் பிறகு தூத்து வாரலாம் என்று ஒரு காரணம். வீட்டை தூய்மை செய்யாமலேயே சாப்பிட வழி வகுத்துக் கொண்டேன். குளிக்கக் கூட இல்லை.
புறந்தூய்மை நீரான் அமையும். வீட்டை தினமும் தூத்துத் துடைக்க வேண்டும், பாத்திரங்களை கழுவ வேண்டும். சமையல் மேடை, கதவுகள், பொருட்கள் வைக்கும் அலமாரிகள், பணி மேடை, கணினிகள் எல்லாவற்றையும் தூசி தட்டி, ஈரத் துணியால் துடைக்க வேண்டும். காலையில் பல் துலக்கி, வயிற்றை தூய்மை செய்து, குளிக்க வேண்டும்.
இவ்வளவும் முடிந்த பிறகுதான் எதுவும் சாப்பிடவோ, படிக்கவோ முடியும். சாப்பிடுவதற்கு சமையல் செய்ய வேண்டும். இதுதான் திட்டம். 5 நாட்கள் எப்படியோ செய்து விட்டேன். சனிக் கிழமை கொஞ்சம் சறுக்கம். நேற்றைக்கு முற்றிலும் போய் விட்டது.
ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று பல நாட்களாகவே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது போன்று பொழுது போவதால் நடக்காமலேயே இருந்து வந்தது. இன்றைக்கு எழுதப் பழகும் போது வந்து விட்டது.
நமது வன்மைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். 2006ம் ஆண்டில் எழுத ஆரம்பித்தது, தினமும் எழுத எழுத, தொட்டனைத்தூறும் மணற்கேணி போல எழுத எழுத வாழ்க்கையின் நிலைமையும் உயர்ந்து கொண்டே போனது. 2008ம் ஆண்டு மார்ச் மாதம் எழுதுவதை நிறுத்துவதாக முடிவு செய்து நிறுத்தினேன். அப்போதிலிருந்து சறுக்கி சறுக்கி கீழே வந்து விட்டேன். விமானம் மேலே பறப்பதற்கு ஆரம்ப வேகம் வேண்டும். பறக்கும் போது அதே வேகத்தை குறைக்காமல் வைத்திருக்க வேண்டும். வேகம் குறைந்து விட்டால் விமானம் கீழே விழுந்து விடும்.
மேலே கொண்டு போன வாழ்க்கையை அதே நிலையில் வைத்திருக்கத் தேவையான பழக்கங்களை விட்டு விட்டதால் வேகம் போதாமல் கீழிறங்கி விட்டிருக்கிறது. மீண்டும் ஆற்றல் வேகம் தேவை.
இந்த இரண்டுக்கும் மனப் பயிற்சி மிகவும் அவசியம். மனப் பயிற்சிக்குத் தினமும் 1 மணி நேரம் எழுதுவது (குறைந்த பட்சம்), காலையில் சாப்பிடுவதற்கு முன்பு 20 நிமிடங்கள், மாலையில் தூங்குவதற்கு முன்பு 20 நிமிடங்கள் தியானம் செய்வது இரண்டும் மிகவும் அவசியம்.
இப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தால் தினசரி செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் மூன்று ஆண்டுகளுக்கு முந்தி இருந்தது போலவே இருக்க வேண்டும்.
அதிகாலை 4 மணி - தூக்கம் எழுதல்
4.30 - 5.30 எழுதுதல்
5.30 - 6.30 வீடு தூத்தல், பாத்திரம் கழுவுதல், தூசி தட்டுதல், துணி துவைத்தல், தரை துடைத்தல்
6.30 - 6.50 உலாவி வருதல் (உடலை ஆரோக்கியமாக பேண மிகவும் அவசியம்)
6.50 - 7.50 துணி துவைத்தல் குளியல்
7.50 - 8.10 தியானம்
8.10 - 9.00 காலை உணவு, நாளிதழ் படித்தல்
9.00 - 13.00
14.00 - 18.00 வேலை
வேலை என்பதில் எதையும் நுகர்வது அடங்காது. படிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது பணியில் அடங்காது. வேலை என்றால் என்னிலிருந்து மதிப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மட்டும்தான். எழுதுவது, நிரல் எழுதுவது, பொருட்களை அடுக்கி வைப்பது, கணினிகளை பராமரிப்பது இது போன்று மதிப்பை உருவாக்கும் பணிகளை மட்டும்தான் பகல் வேளையில் செய்ய வேண்டும்.
13.00 - 14.00 மதிய உணவு
18.00 - 19.00 மாலை உணவு
19.00 - 21.30 இணையம் - வலை பதிதல், மடற்குழுக்கள்
21.30 - 22.00 தியானம் --> தூக்கம்
இதுதான் வாழ்க்கைக்குத் திருப்பிக் கொடுப்பதோ மதிப்பை உருவாக்குவதோ நடக்கக் கூடிய முறையாக இருக்க முடியும். இதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இன்று முழுவதும் முடிவு செய்தது போல செயல்படுவோம். அடுத்தடுத்த நாட்களில் தேவையான படி திட்டமிட்டுக் கொள்வோம். தர்மம், உழைப்பு, நேர்மை, நியாயம் வெல்லும்.

- பொன்னியின் செல்வன் முதல் மூன்று பாகங்களை மதுரைத் திட்ட உரையின் மூலம் படிப்பது. நான்காம் மற்றும் ஐந்தாம் பாகம் வீட்டில் இருக்கிறது. அவற்றை பல முறை படித்து விட்டிருக்கிறேன். முதல் மூன்று பாகங்களை குழந்தை உண்டாகியிருக்கும்போது படிப்பதற்காக வாங்கிக் கொண்டு போனார்கள். இது வரை திருப்பித் தரவேயில்லை. கேட்கலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. இணையத்தில் படிப்பது என்று படிக்க ஆரம்பித்தேன்.
- தமிழ் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு தொடர்பான இடுகைகள், கருத்து சொல்லுதல்.
- சென்னை லினக்சு பயனர் குழுவில் மடல்களைப் பார்த்து படிப்பது, பதிலளிப்பது.
ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று பல நாட்களாகவே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இது போன்று பொழுது போவதால் நடக்காமலேயே இருந்து வந்தது. இன்றைக்கு எழுதப் பழகும் போது வந்து விட்டது.
நமது வன்மைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். 2006ம் ஆண்டில் எழுத ஆரம்பித்தது, தினமும் எழுத எழுத, தொட்டனைத்தூறும் மணற்கேணி போல எழுத எழுத வாழ்க்கையின் நிலைமையும் உயர்ந்து கொண்டே போனது. 2008ம் ஆண்டு மார்ச் மாதம் எழுதுவதை நிறுத்துவதாக முடிவு செய்து நிறுத்தினேன். அப்போதிலிருந்து சறுக்கி சறுக்கி கீழே வந்து விட்டேன். விமானம் மேலே பறப்பதற்கு ஆரம்ப வேகம் வேண்டும். பறக்கும் போது அதே வேகத்தை குறைக்காமல் வைத்திருக்க வேண்டும். வேகம் குறைந்து விட்டால் விமானம் கீழே விழுந்து விடும்.
மேலே கொண்டு போன வாழ்க்கையை அதே நிலையில் வைத்திருக்கத் தேவையான பழக்கங்களை விட்டு விட்டதால் வேகம் போதாமல் கீழிறங்கி விட்டிருக்கிறது. மீண்டும் ஆற்றல் வேகம் தேவை.
இந்த இரண்டுக்கும் மனப் பயிற்சி மிகவும் அவசியம். மனப் பயிற்சிக்குத் தினமும் 1 மணி நேரம் எழுதுவது (குறைந்த பட்சம்), காலையில் சாப்பிடுவதற்கு முன்பு 20 நிமிடங்கள், மாலையில் தூங்குவதற்கு முன்பு 20 நிமிடங்கள் தியானம் செய்வது இரண்டும் மிகவும் அவசியம்.
இப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தால் தினசரி செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் மூன்று ஆண்டுகளுக்கு முந்தி இருந்தது போலவே இருக்க வேண்டும்.
அதிகாலை 4 மணி - தூக்கம் எழுதல்
4.30 - 5.30 எழுதுதல்
5.30 - 6.30 வீடு தூத்தல், பாத்திரம் கழுவுதல், தூசி தட்டுதல், துணி துவைத்தல், தரை துடைத்தல்
6.30 - 6.50 உலாவி வருதல் (உடலை ஆரோக்கியமாக பேண மிகவும் அவசியம்)
6.50 - 7.50 துணி துவைத்தல் குளியல்
7.50 - 8.10 தியானம்
8.10 - 9.00 காலை உணவு, நாளிதழ் படித்தல்
9.00 - 13.00
14.00 - 18.00 வேலை
வேலை என்பதில் எதையும் நுகர்வது அடங்காது. படிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது பணியில் அடங்காது. வேலை என்றால் என்னிலிருந்து மதிப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மட்டும்தான். எழுதுவது, நிரல் எழுதுவது, பொருட்களை அடுக்கி வைப்பது, கணினிகளை பராமரிப்பது இது போன்று மதிப்பை உருவாக்கும் பணிகளை மட்டும்தான் பகல் வேளையில் செய்ய வேண்டும்.
13.00 - 14.00 மதிய உணவு
18.00 - 19.00 மாலை உணவு
19.00 - 21.30 இணையம் - வலை பதிதல், மடற்குழுக்கள்
21.30 - 22.00 தியானம் --> தூக்கம்
இதுதான் வாழ்க்கைக்குத் திருப்பிக் கொடுப்பதோ மதிப்பை உருவாக்குவதோ நடக்கக் கூடிய முறையாக இருக்க முடியும். இதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இன்று முழுவதும் முடிவு செய்தது போல செயல்படுவோம். அடுத்தடுத்த நாட்களில் தேவையான படி திட்டமிட்டுக் கொள்வோம். தர்மம், உழைப்பு, நேர்மை, நியாயம் வெல்லும்.
லேபிள்கள்:
சுயமுன்னேற்றம்,
நிறுவனம்
செவ்வாய், ஜூன் 22, 2010
பாலில் ஊறிய செல்பேசி
காலையில் சுறுசுறுப்பாக வீட்டை தூய்மை படுத்தி, குளித்து கால் சட்டை, மேல் சட்டை உடுத்து சட்டைப் பையில் பேனா, செல்பேசி அணிந்து கொண்டு காலை உணவுக்கு வழி தேட ஆரம்பித்தேன். சப்பாத்தி மாவு பிசைந்து வைத்தது இருந்தது.
பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் வழக்கப்படி காய்ச்சிய பால் இறக்கி கிண்ணத்தில் ஆறிக் கொண்டிருக்க, அடுப்பில் ஒன்று கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் சப்பாத்தி சுடும் கல் போட்டு விட்டு, சப்பாத்தி போடும் கட்டையில் உருண்டைகளை விரிக்க ஆரம்பித்தேன். முதல் சப்பாத்தி கல்லில் ஒழுங்காக போய்ச் சேர்ந்தது.
இரண்டாவதை கட்டையில் வைத்து விட்டு நிமிர்ந்தால் தொலைபேசி அடித்து நின்றது. கூப்பிட்டவர்கள் காலை வேளையில் தொந்தரவு வேண்டாம் என்று திரும்பி அழைக்கும் போது அழைக்கட்டும் என்று ஒரே மணி ஒலிக்குப் பிறகு நிறுத்தி விட்டிருந்தார்கள் (என்று நினைக்கிறேன்).
அந்தப் பொறுமை இல்லாமல் உடனடியாக திருப்பி அழைத்து முகத்துக்கும் தோளுக்கும் நடுவில் செல்பேசியை இடுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துத் தொடர்ந்தேன். கூடவே சப்பாத்தி இடுவதையும் நிறுத்தவில்லை, கல் காய்ந்து அடுத்த சப்பாத்தி தயாராகி விட வேண்டுமே! கை அசைவில் உடல் அசைவில் செல்பேசி நழுவி (அவசரப்படாதீர்கள்) தரையில் விழுந்தது. எதிரில் பேசியவர்கள் என்ன நினைத்தார்களோ, அவசர அவசரமாக எடுத்து மீண்டும் இடுக்கிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தேன், கை வேலையும் நிற்கவில்லை.
இந்த முறை விழுந்தது நழுவி சூடான பால் பாத்திரத்துக்குள் விழுந்தது. உடனடியாக எடுக்கும் அளவுக்கு பால் ஆறியிருக்கக் கூடவில்லை. இடுக்கி தேடி தொலைபேசியை வெளியில் எடுத்துப் பார்த்தால் காட்சி சன்னலில் வெள்ளையாக ஒரு புகை மூட்டம் தெரிந்தது.
ஒரு தடவை மழையில் நனைந்து கொண்டே பாலபாரதியைப் பார்க்கப் போயிருந்த போது, 'நனைந்திருந்த செல்பேசியை உடனே அணைத்து, மின்கலனை நீக்கி தண்ணீர் போக காய வைத்து விடுங்கள்' என்று சொன்னார். 'தண்ணீர் மின்சுற்று எதிலாவது புகுந்தால் எல்லாம் புகைந்து போய் விடலாம் என்று அந்த முன்னெச்சரிக்கை, நன்கு காய்ந்த பிறகுதான் மின்கலனையோ மின்னிணைப்பையோ இணைக்க வேண்டும். '
அந்த நினைவில், வெளியில் எடுத்த செல்பேசியைத் தண்ணீரில் ஒரு முறை காட்டி விட்டு, மின்கலனை கழற்றி, முன்பக்க மூடியையும் நீக்கி வைத்து விட்டேன். இருக்கிற நிலைமையில் இது வேறு செலவு வைக்கப் போகிறதா என்ன?
செல்பேசியின் தொலைபேசி பட்டியலில் 200 எண்கள் சேமித்து வைத்திருக்கும் வசதி இருந்தது. இப்போது எத்தனை எண்கள் இருக்கின்றன? சேவை அட்டையிலும் 200 எண்கள் வசதி இருக்கிறது. அதனால் எதில் எந்த எண் சேமிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாது (அதைப் பார்க்கும் வசதி இந்தக் கருவியில் இல்லை), இரண்டும் சேர்ந்து ஒரே பட்டியலாகத்தான் தெரியும்.
இப்போ யார் யார் எண்களை இழக்கப் போகிறோம்? ஈரம் காய்ந்த பிறகு மீண்டும் செயல்பட ஆரம்பிக்குமா என்று எண்ணங்கள் குமுறிக் கொண்டிருந்தன. பாலில் விழும் போது பேசிக் கொண்டிருந்தவர் அவரிடம் கோபித்துக் கொண்டு இணைப்பைத் துண்டித்து விட்டதாக நினைக்கலாம். (அவர்களது எண் சேமித்து வைத்திருக்கவில்லை).
அப்படி கோபிக்கும்படியான பேச்சுத்தான் நடந்து கொண்டிருந்தது. பேசிக் கொண்டிருந்தால் மழுப்பி விட்டு வைத்திருப்பேன். இப்போது திரும்ப அழைக்கும் வாய்ப்பும் இல்லை. மின்கலனை கழற்றி விட்டதால் மீண்டும் கருவி உயிர் பெற்றாலும் வந்த அழைப்புப் பட்டியல் எல்லாம் மறைந்திருக்கும்.
11 மணிக்கு ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கப் போக வேண்டும். ஓரிரு மணி நேரம் காய்ந்து விட்டதே என்று மின்கலனை பொருத்த முயன்றால், NOKIA என்று ஒரு மின்னு மின்னி விட்டு காட்சி சன்னல் வெறுமையாகி விட்டது. 'இன்னும் சில மணி நேரம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். இப்போ மின்கருகல் நடந்து விட்டது போலிருக்கிறதே' என்று நொந்து கொண்டு, அலுவலக நண்பரின் செல்பேசியை இரவல் வாங்கி, சேவை அட்டையைப் பொருத்திக் கொண்டேன்.
செல்பேசி உயிர் பெறும் வரை வரும் அழைப்புகளை இன்னொரு எண்ணுக்கு அனுப்பும் சேவையை செயல்படுத்த முயன்றால் வோடபோன் காலை வாரி விட்டது. கடைசி வரை அதைச் செயல்படுத்தவே முடியவில்லை.
மதியம் திரும்பி வந்து, மின்விசிறிக்குக் கீழே வைத்திருந்த கருவியின் பாகங்களை இணைத்துப் பார்த்தால் உயிர் வந்தே விட்டது. பாலும், நீரும் உலர்ந்து போய் வழக்கமாக இயங்கும் நிலை திரும்பி விட்டிருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை அணைத்துப் பிரித்து காய வைத்து, இரவிலும் பிரித்து போட்டு தூங்கி காலையில் பொருத்தினால் எதுவும் நடக்காதது போல இயங்க ஆரம்பித்தது.
நினைவுச் சின்னமாக ஒரு மேகம் போல திரையின் ஒரு பகுதியில் தெரிகிறது. திறந்து துடைத்துக் காய வைக்கும் தேவை இருக்கிறதோ!

ஞாயிறு, ஜூன் 20, 2010
எறும்புகள்
வீட்டில் ஒரு குளியலறையில் கதவு நிலை ஓரமாக எறும்புகள் புற்று மண் குவித்துக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பே இது ஆரம்பித்து விட்டிருந்தது. ஒரு சில நாட்களுக்கு ஒரு முறை மணலை அள்ளி வெளியில் கொண்டு போட்டு விடுவேன். மணலை அள்ளிப் போடுவதும் கொஞ்சம் சிக்கலான வேலைதான், கைகளில் கால்களில் ஏறி கடித்த்த்து விடும் போர் எறும்புகள். மணலோடு வெளியில் போன எறும்புகள் தவிர மிஞ்சியவற்றைத் தண்ணீரோடு தள்ளி விட்டு விடுவேன்.
இரண்டு மூன்று நாட்கள் எதுவும் தெரியாது, மீண்டும் தம் முயற்சியில் மனம் தளராமல் மீண்டும் மண் குவிய ஆரம்பித்திருக்கும். 'ஏதாவது மருந்து வாங்கிப் போட வேண்டும்' என்று பரிந்துரைகள் வந்தாலும், அது போன்று வேதி மருந்துகளை தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாம், தேவையில்லாமல் எறும்புகளைக் கொன்று குவிக்கவும் வேண்டாம் என்று அள்ளி வெளியில் போடும் முறையிலேயே தொடர்ந்து கொண்டிருந்தேன்.
கடைக்குப் போகும் போது மனதில் நினைவிருக்கும் அளவுக்குப் பொறுமை மீறிய பிறகு எறும்புப் பொடி வாங்கி வந்தேன். ஒரு குளியலறையை கிட்டத்தட்ட தமது ஆதிக்கத்தில் எடுத்துக் கொண்டது போல நடந்து கொண்டிருந்த எறும்புகளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டிய நாள் வந்தாச்சு.
6 ரூபாய்க்கு QUEENS ANT POWDER என்று எறும்புப் பொடி, 100 கிராம் - 100% சுத்தமான கமாக்சைன் (Gamaxine) பொடி என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள். பொத்தூர் கிராமம், சென்னை - 62ல் இருந்து சேர்மா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் பொதி.
சின்ன வயதில் எறும்புப் பொடிக்கு மசியாத எறும்புகள் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். "பொடி போட்டால் அதையும் தின்று விட்டு தமது வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள்" என்று சலித்துக் கொள்வார்கள். இந்தப் பொடியும் அது போலவா அல்லது உண்மையிலேயே வேலையைக் காட்டி விடுமா?
உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தோடு, ஒரு பிளாஸ்டிக் பையில் குவிந்திருந்த மணலை எறும்புகளோடு அள்ளினேன். பரபரவென்று சிதறி இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன. துடைப்பத்தால் கூட்டிக் கூட்டி மணலை எல்லாம் அள்ளி விட்டேன். இதற்குள் அள்ளும் முறம் வழியாகவும், பையிலிருந்தும் கைகளிலும், தரையிலிருந்து கால்களிலும் தாக்குதல் ஆரம்பித்திருந்தது. கடைசியாக சிதறியிருந்த எறும்புகளை ஒரு கூட்டு கூட்டி பையில் தள்ளினேன். இருந்தும் சில நூறு இன்னும் ஓடிக் கொண்டிருந்தன.
பையை வெளியில் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு (குப்பைகளில் கொஞ்சம் தளைக்கட்டும்), திரும்பி வந்து பொடிபொதியை வெட்டித் திறந்து எறும்புகள் துளை செய்திருந்த இடுக்குகளில் தூவினேன். எனது வளமை போல தேவைக்கு அதிகமாகவே தூவினேன்.
கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் ஹிட் போல அடித்தது செத்து விழுவது போல இல்லை. எறும்புகள் பொடிக்குள்ளும் தமது ஓட்டங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தன. (கரப்பான் பூச்சிகளை ஒரு அடி அடித்து வீட்டுக்கு வெளியில் கொண்டு விடுவதுதான் வழக்கமாகி விட்டிருக்கிறது.) அப்படியே கையோடு, குளியலறை சுவர்களையும், தரையையும் தேய்த்துக் கழுவி விட்டு விட்டு, விடாப்பிடியாக இருந்த கறைகளை கழுவும் அமிலத்தால் கரைத்துத் தள்ளி விட்டு வெளியில் வந்தேன்.
ஒரு மணி நேரம் கழிந்து போய்ப் பார்த்தால், தூவிய பொடியின் நடுவில் அதைச் சுற்றி கும்பல் கும்பலாக எறும்பு உடல்கள். வருத்தமாகத்தான் இருந்தது.
எறும்புகளின் குடியிருப்பை வைத்து இரண்டு திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டியாக ஓரிரு மாத இடைவெளியில் வெளியான சித்திரப் படங்கள்.
ANTZ என்ற படத்தில் வேலைக்கார எறும்புகள், போர் எறும்புகள், ராணி, இளவரசி, சூழ்ச்சி செய்யும் அடாவடி தளபதி என்று கொண்டு போய் Z என்ற வேலைக்கார எறும்பு தளபதியின் சூழ்ச்சியை முறியடித்து இளவரசியின் காதலைப்பெற்று கைப்பிடிக்கும் கதை. எறும்புக் கூட்டுக்குள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பெரிதாக சிந்தித்து நுணுக்கமாக படம் எடுத்திருந்தார்கள். எல்லாமே வரையப்பட்ட சித்திரங்கள், பாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தது மட்டும் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள்.
A Bugs Life என்ற படத்தின் கதை பெரும்பாலும் திறந்த வெளியில் நடைபெறுகிறது. இதுவும் வரை ஒளிப்படம்தான். எறும்புகளை மிரட்டி தமக்கு உணவு சேர்த்துத் தரும்படி அடாவடி செய்யும் வெட்டுக் கிளிகளை முறியடிக்க flik என்ற எறும்பு முன் முயற்சி எடுத்து, பல குளறுபடிகளுக்குப் பிறகு இறுதியில் எறும்புகள் வெட்டுக் கிளிகளை துரத்தி அடித்து flik இளவரசியைக் கைப்பிடிக்கிறது. வெளிப்புறக் காட்சிகள் அங்குலம் அங்குலமாக செதுக்கி அசத்திய படம்.
இந்த இரண்டு படங்களையும் பார்த்த பிறகு, எறும்புகள்தானே என்று தேய்த்து விட்டு அல்லது மருந்து போட்டு படுகொலை செய்து விட்டு போக முடிகிறதில்லை. 'எறும்புக் குழுமத்தில் என்னென்ன உள் நிகழ்வுகள் இருக்கும், எவ்வளவு உழைப்பில் தமது புற்றை உருவாக்குகின்றன, அவற்றை குலைக்கும் போது எப்படி உணர்கின்றன' என்று மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது.
இன்றைக்கு குறைந்தது ஒரு நூறு எறும்புகளின் உயிரற்ற உடல்களைப் பார்க்க வேண்டிய செயலை செய்து விட்டு அதை பதிவும் செய்தாகி விட்டது.
தமிழ் டாட் நெட், சிட்னி பாலா இணையத் தமிழ் இளைஞர்களை ஒன்று சேர்த்து சாதிப்பதற்கு ஆரம்பித்த மடற்குழுவின் பெயரும் எறும்புகள்தான். எறும்புகள் போல சுறுசுறுப்பாக கூடு கட்டி, கடைசியில் யாரோ வந்து காலால் உதைத்துப் போட்டு விட்டுப் போவது, அல்லது பாம்பு ஒன்று எறும்புகளைத் தின்று விட்டு தான் குடியேறி விடுவது மனித சமூகங்களிலும் நடக்காமலா இருக்கிறது!

திங்கள், ஜூன் 07, 2010
பயணம் - 9 (திருமலை)
முன்பெல்லாம் வரும் போது பேருந்து நிலையத்திலிருந்து அலிப்பிரி வரை நடந்து வந்து மலையில் ஏறி விட்டு திரும்பும் போது பேருந்து பிடித்து இறங்கிக் கொள்வேன். ஏறும் போது எவ்வளவு சீக்கிரமாக எவ்வளவு வேகமாக ஏற முடியும் என்று என்னுடன் நானே போட்டி போட்டுக் கொண்டு ஏறுவது வழக்கம். ஒன்றரை மணி நேரத்தில் ஏறியது கூட உண்டு.
திருப்பதியிலிருந்து அலிப்பிரி வரை 4 கிலோமீட்டர் தூரம் இருக்கும். மலையின் மீது நடந்து ஏற 9 கிலோமீட்டர் தூரம். முதல் கட்டத்தில் சுமார் 3000 படிகள் கொண்ட செங்குத்தான மலை. அதன் பிறகு படிகளும், மெலிதான ஏற்றங்களுமான பாதை. ஒன்றரை மணி நேரம் முதல் 3,4 மணி நேரம் வரை ஏறுவதற்கு பிடிக்கும்.
பிற்பகல் இரண்டு அல்லது இரண்டரை மணிக்கு ஏற ஆரம்பித்தது, அடுத்த நாள் காலை விடியும் நேரத்தில் போய்ச் சேர்ந்தேன். சில இடங்களில் நான்கைந்து படிகள் ஏறிய உடனே உட்கார வேண்டியிருந்தது. இடையிடையே தண்ணீர் குடிக்க குழாய்கள் நிறைய இருக்கும். கழிவறைகளையும் இந்த தண்ணீர் குழாய்களையும் அங்கங்கு இடித்து புதிதாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஜூன் மாத வெயிலில் அதிகம் கூட்டமாக இருப்பது போலத் தெரியவில்லை.
நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், களைப்படையும் போது உட்கார்ந்து கொள்ள வேண்டும், தோதுவாக இருந்தால் படுத்து கண் மூடித் தூங்க வேண்டும். வழி நெடுக மின் விளக்குகள் பொருத்தியிருக்கிறார்கள். இருட்டிய பிறகும் நிறைய பேர் நடந்து கொண்டுதான் இருந்தார்கள். திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு கூர்க்கா போல தென்படும் காவலர்கள். பூசைக்கு தமிழ் பூசாரிகள் வழிவழியாக உரிமை வைத்திருப்பது போல காவலுக்கு இவர்களுக்கு தனி உரிமை இருக்கலாம்.
இரவு ஏற ஏற, நடப்பவர்களின் எண்ணிக்கைக் குறைந்து ஆங்காங்கே நடைபாதையின் ஓரங்களில் குடும்பங்களாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். இரு பக்கமும் இருக்கும் கடைகளும் ஏறக் கட்டி மூடியிருந்தார்கள். அந்தக் கணக்கு எல்லாம் பார்க்காமல், நடப்பது, உட்காருவது, தூங்குவது என்று நகர்ந்து கொண்டே இருந்தேன்.
நடந்து போகும் யாத்திரிகர்களுக்கு உடனடி தரிசனம், இலவச தங்குமிடம், இலவச உணவு, இலவச லட்டு, மொட்டை போட்டுக் கொள்வதும் இலவசம் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்கிறார்கள். காலி கோபுரம் என்ற இடத்தில், நடந்து போகும் பாதையில் இருக்கும் இடத்தில், அடையாளச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சில கிலோமீட்டர்கள் தூரத்தில், அதில் முத்திரை வாங்கி நடந்து போவதை சான்று படுத்திக் கொள்ள வேண்டும். இந்தச் சீட்டைப் பயன்படுத்தி இலவச வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.
PAC எனப்படும் பயணிகள் வசதிகள் மையத்தின் ஒரு கட்டிடத்தில் இந்த வசதிகள் கொடுக்கிறார்கள்.
1. தங்குமிடம் என்பது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு ஒரு லாக்கர், அந்த லாக்கர் இருக்கும் கூடத்தில் ஒரு இடம் பிடித்து தூங்கும் வசதி. லாக்கர் சாவி வாங்க வைப்புப் பணம் கொடுக்க வேண்டும்.
2. உணவு, அந்தக் கட்டிடத்தில் அன்னதானம் என்று சாப்பாடு போடுவது.
3. மொட்டை போடுவதற்கு சீட்டு வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்க வேண்டும். அதிகார பூர்வமாக இலவசமாக இருந்தாலும் மொட்டை போடும் தொழிலாளிக்கு 15 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது எழுதிய விதிக்கு மாற்றான நடைமுறை.
4. கோயிலுக்குள் போவதில் நடைபாதைப் பயணிகளுக்காக தனி நுழைவாயில். அதிக நேரம் காத்திராமல், உடனேயே கூண்டிலிருந்து வெளியில் அனுப்பி வரிசையில் சேர்த்து விடுவார்கள். வரிசை கோவிலைச் சுற்றி வெளியில் வர ஒரு மணி நேரத்துக்கு மேல் பிடிக்கலாம்.
5. இலவச லட்டு தரிசன வரிசையில் கிடைக்கும் சீட்டை வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வெளியில் லட்டு வினியோக மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பொது தரிசனம் என்ற முறையில் போனால் கூண்டில் காத்திருப்பது ஏழெட்டு மணி நேரம் வரை நீளலாம். காத்திருக்கும் போது சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
அதிகாலை விடிய ஆரம்பித்திருக்கும் பொழுது. பயணிகள் சேவை மையத்துக்குப் போய் மொட்டை போட சீட்டு வாங்கிக் கொண்டேன். மொட்டை போடும் இடத்துக்குப் போகாமல், முதல் தளத்துக்கு ஏறி, நன்றாக குளித்துக் கொண்டேன். நடந்து அழுக்கும் தூசியுமாக மொட்டை போடுபவரை அவதிப் படுத்துவானேன்! துணிகளையும் நனைத்துப் போட்டுக் கொண்டேன்.
சாப்பிடுவதற்கு அன்ன தானம் பகலில்தான் நடக்கும். மொட்டை போட்டுக் குளித்து விட்டு கோவிலை நோக்கிப் போனால், சில நிமிடங்கள் காத்திருக்கும் கூண்டில் தாமதிக்க நேர்ந்தால் அங்கு ஏதாவது சாப்பிடக் கிடைக்கலாம். எதுவும் சாப்பிட்டு ஒன்றரை நாள் ஆகி விட்டிருந்தது.
மொட்டை போடும் இடத்தில் நீளமான வரிசைகள். சீட்டில் போட்டிருந்த எண் வரிசையில் நின்றால் ஒவ்வொருவராக மொட்டை போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார். பெண்களுக்கு மொட்டை என்று மிகச் சில பேர், மற்றவர்கள், நீண்ட கூந்தலில் மூன்று இழைகளை மட்டும் வெட்டிக் கொண்டார்கள். குழந்தைகள் கதறிக் கொண்டு மொட்டை, வளர்ந்த ஆண்களுக்கு தலை மட்டுமில்லாமல், மீசை தாடியும் மழிக்க வேண்டிய அதிக வேலை.
தரையெல்லாம் தண்ணீர். முடியை திரட்ட, தண்ணீரை தள்ளி விட பணியாளர்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவு பேர் நின்றிருந்தாலும், முடி குவிந்து கொண்டிருந்தாலும் தாக்குப் பிடிக்கக் கூடிய அளவில் உயரமான கூரை, காற்று சுழற்சிக்கு exhaust விசிறிகள். ஒன்றரை இரண்டு மணி நேரக் காத்திருப்பு. ஈரத்தைப் பார்க்காமல் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன்.
மொட்டை போட்டுக் கொண்டு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டிய 15 ரூபாயைத் தராமல் நகர்ந்து கொண்டிருந்தார்கள் ஓரிருவர். நானும் அப்படித்தான் செய்ய வேண்டுமா? ஆரம்பத்திலேயே, காசு தரப் போவதில்லை என்று சொல்லி விடுவது என்று முடிவு செய்து கொண்டேன். இடையிடையே மொட்டை போடுபவர் ஓய்வு இடைவெளி என்று போக வேண்டும். நான் காத்திருந்த அந்த நேரத்தில் இரண்டு முறை போய் வந்தார்.
கடைசியாக என் முறை வரும் போது, 'காசு இல்லாமல் வந்தேன். உங்களுக்குத் தர வேண்டிய காசு தர முடியாது' என்று சொன்னதும் சிரித்து தலை ஆட்டிக் கொண்டார். எந்தக் கீறலும் இல்லாமல் தலையையும் முகத்தையும் மழித்து முடித்து விட்டார்.
மறுபடியும் முதல் தளத்துக்குப் போய் குளித்து, இன்னும் காய்ந்திராத உடைகளையே மாட்டிக் கொண்டு கீழே வந்தால் சாப்பாட்டுக் கடை எதுவும் ஆரம்பித்திருக்கவில்லை. கோவிலுக்குப் போக ஒரு கிலோமீட்டர் நடை தூரம் இருக்கும். நடைபாதை யாத்திரிகர்கள் நுழைவதற்கு இன்னும் விரிவாக கம்பிகள் போட்டு ஏற்பாடு செய்திருந்தார்கள். நடந்து வந்தால் இலவச தரிசனம் என்பது பரவலாக தெரிந்து நிறைய பேர் நடந்து வர ஆரம்பித்திருக்கலாம்.
பாதுகாப்பு சோதனை தாண்டி கூண்டுக்குள் நிற்கவே தேவையில்லாமல் கதவு திறந்திருந்தார்கள். இங்கும் சாப்பிட எதுவும் கிடைக்காது. வரிசையில் சேர்ந்து கொண்டேன்.
வரிசை என்பது நெருக்கமான ஒரு கூட்டம் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டே முன்னேறுவதுதான். லட்டுக்கான இலவச சீட்டு எதுவும் கொடுக்கவில்லை. காசு கொடுத்து வாங்கும் சீட்டுகள் மட்டும் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே நகர்ந்து நகர்ந்து அதிகம் தேக்கம் இல்லாமல் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் கோவிலைச் சுற்றி வெளியில் வந்து விட்டேன். வெளியில் வரும் போது பிரசாதம் என்று ஒரு கையளவு பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் என்று ஏதாவது கொடுப்பார்கள். பொங்கல் கிடைத்தது. அதை வாயில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன்.
நேராக சாலைக்கு வந்து போன ஒரு இரு சக்கர வண்டியில் பயணிகள் வசதிகள் மையத்தில் விட்டு விடச் சொன்னால் ஏற்றிக் கொண்டு வந்து விட்டார். நேராக அன்னதான வரிசை. அப்போதுதான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. கூடம் நிறையும் வரை உள்ளே விட்டு விட்டு கதவை மூடி விடுவார்கள். அடுத்த பந்திக்கு வரிசை வளர ஆரம்பிக்கும். இப்போது வரிசை நகர்ந்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட கதவின் அருகில் போகும் போது நிறுத்தி கதவை சாத்தி விட காத்திருத்தல். அந்த பந்தி சாப்பிட்டு முடித்து, தூய்மை செய்யப்பட்டு, அடுத்த பந்திக்கு இலை போடுவதை வரை காத்திருப்பு. அதற்குள் வரிசை வளர்ந்து விட்டிருந்தது. அது ஒரு முக்கால் மணி நேரம் ஆகியிருந்திருக்கும்.
சோறு, சாம்பார், ரசம், பொரியல், மோர் பெரிய வண்டிகள் போலக் கொண்டு வந்து இரண்டு பேர் இரண்டு பக்கமும் ஊற்றிக் கொண்டே போவார்கள். வேக வேகமாக எவ்வளவு முடியுமோ சாப்பிட்டுக் கொள்ளலாம். முன்பு ஒரு முறை சாப்பிட்டதை விட இப்போது தரம் குறைந்திருப்பதாகத் தோன்றியது.
சாப்பிட்டு விட்டு திரும்பும் வழியைப் பிடித்து விட்டேன். 'கோயிலுக்கு வந்தோம், கூட்டத்தில் பணப்பை களவு போய் விட்டது, ஊருக்குப் போகக் காசு இல்லை' என்று குழந்தையுடன் தம்பதியினர், குடும்பமாக என்று கேட்பவர்களை நடந்து வரும் பாதையில் சந்திக்கலாம். அது போல 'கோவிலுக்கு மெட்ராசிலிருந்து நடந்தே வந்தேன், திரும்பிப் போக பேருந்துக்குக் காசு வேண்டும்' என்று கேட்க மனமில்லை.
காலில் போட்டிருந்த செருப்பு திருப்பதியில் வாங்கியதுதான். பேருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு கடையில் ஒரு ஆண்டுக்கு முன்பு, போட்டிருந்த செருப்பு தொலைந்து போய் விட்டிருக்க வாங்கினேன். அந்தக் கடைக்குப் போய் செருப்பைக் காட்டி பழைய வாடிக்கையாளர் என்று நினைவூட்டி 'செருப்பை வைத்துக் கொண்டு சென்னைக்குப் பேருந்து கட்டணம் கொடுங்கள், இரண்டு நாளில் திரும்பி வந்து பணத்தைக் கொடுத்து செருப்பை எடுத்துக் கொள்கிறேன்' என்று ஒரு பரிமாற்றம் நடத்தலாம் என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டு மலை இறக்கத்தை ஆரம்பித்தேன்.
கடைகள் மூடுவதற்கு முன்பு போய்ச் சேர வேண்டும். மதியம் மூன்று மணி தாண்டியிருக்கலாம். இறங்கும் போது வேகமாக இறங்கி விடலாம். தெம்புக்கு வயிறும் நிறைந்திருக்கிறது. திட்டம் பலித்து விட்டால், காசை வாங்கி இரவுப் பேருந்து. காலையில் சென்னையில் இறங்கி காசு எடுத்துக் கொண்டு வார இறுதியில் திரும்பி வந்து கடைக்காரருக்குக் கொடுத்து விடலாம். பலிக்குமா?
மாற்றுத் திட்டங்கள் எதுவும் ஒத்து வரவில்லை. கீழே இறங்குவபர்கள் யாரிடமாவது கேட்பதும் நடக்கவில்லை. அவ்வளவு வேகமாகவும் இறங்கி விட முடியவில்லை. அலிப்பிரி வந்து சேரும் போது இருட்ட ஆரம்பித்து விட்டிருந்தது.
திருப்பதி பேருந்து நிலையம் வரை ஏற்றிச் செல்லும் நடைபாதை யாத்திரிகர்களுக்கான இலவச பேருந்து வந்தது. அதில் ஏறி பேருந்து நிலையத்துக்கு முன்பு இறங்கிக் கொண்டேன்.

ஞாயிறு, ஜூன் 06, 2010
பயணம் - 8 (திருப்பதி)
பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. சாலையின் பக்கத்தில் தோட்டங்கள் தென்பட்டன. தண்ணீர் அவ்வளவு தாராளமாகத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் போல பெரிய கிணறுகளிலிருந்து பெரிய மோட்டார்கள் மூலமாக தண்ணீர் பாயும் இடங்கள் இருப்பது போலத் தெரியவில்லை. சாலை நீண்டு கொண்டே போனது, ஊர்கள் எதுவும் வருவது போலத் தெரியவில்லை.
விளம்பரப் பலகைகள் ஆரம்பித்திருந்தன, திருப்பதியில் இருக்கும் தங்கும் விடுதிகள், பிரயாணிகளை வரவேற்கும் பலகைகள். பாண்டிச்சேரி போகும் போதும் இதே போன்ற தங்கும் விடுதி அறிவிப்புகள் நிறையக் காணக் கிடைக்கும். இவற்றைத் தவிர ஊர் இன்னும் இவ்வளவு தூரம் இருக்கிறது என்ற மைல் கற்களோ, திசை காட்டிப் பலகைகளோ எதுவும் தென்படவில்லை.
முந்தைய நாள் மூன்று வேளையும் சாப்பிட்டிருக்கிறேன். நடந்த களைப்புதான் இருக்க வேண்டும். எப்படியோ, சீக்கிரம் சேர்ந்து விட வேண்டும் என்று ஒரு துடிப்பு. சாலையில் போகும் வாகனங்கள் எதிலாவது ஏற்றிச் சென்றால் நன்றாக இருக்கும்.
ஒரு இடத்தில் பிரதான சாலை வளைந்து திரும்ப அந்த வளைவிலிருந்து திரும்பி இன்னொரு சாலை நீண்டது. நெடுஞ்சாலையிலேயே தொடர்ந்தேன். வீடுகள் எதுவும் இல்லை, ஏதேதோ விவசாய வேலைகள் செய்யும் வளாகங்கள். சுற்றுச் சுவர் கட்டி, கூரைகளுக்குக் கீழ் உழைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில் தண்ணீர் வாங்கிக் குடித்துக் கொண்டேன். வலது பக்கம் வயல் வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது, இறங்குவதற்கு வழி இல்லாமல் முள்ளும் சேறுமாக நிரம்பியிருந்தது. கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, நகர வேண்டியாகி விட்டது.
எதிரில் வந்த ஒரு முதியவரிடம் திருப்பதி எவ்வளவு தூரம் என்று கேட்டால், 'இந்த வழியா போனா ரொம்ப சுத்து, ரேணிகுண்டா எல்லாம் போய் போகணும். அந்த ரோட்டில போனா சீக்கிரம் போய் விடலாம்' என்று தெலுங்கில் சொல்லி கடந்து வந்த கிளைச் சாலையைக் காட்டினார். கொஞ்ச தூரம் நடந்து விட்ட தூரத்தை திரும்ப அளக்க வேண்டும். அவருக்கு நன்றி சொல்லி விட்டுத் திரும்பி நடந்தேன்.
அந்தச் சாலையிலும் இரு சக்கர வண்டிகள், மூன்று சக்கர வண்டிகள் திரும்பின. கிளைத்து கொஞ்ச தூரத்திலேயே ஒரு வளைவு. அந்த வளைவின் வலது முனையில் ஒரு சாலையோரக் கோவில். மரங்கள். கொஞ்ச நேரம் உட்கார்ந்து படுத்து ஓய்வெடுத்துக் கொண்டேன். அங்கிருந்த தண்ணீர்க் குழாயில் குடிக்கத் தண்ணீரும் நிறைய கிடைத்தது.
ஒன்பது மணி தாண்டியிருக்கும் என்று தோன்றியது. வெயில் ஏறி விட்டிருந்தது. இரண்டு சக்கர வண்டிகளில் நிறைய பேர் போனார்கள். யாரிடமாவது ஏற்றிப் போகச் சொல்லலாமே என்று ஒரு எண்ணம்.
எழுந்து சாலையின் வளைவில் நின்று கொண்டு கையைக் காட்டியதில் ஒரு இளைஞர் நிறுத்தி ஏற்றிக் கொண்டார். 'திருப்பதி வரை போகவில்லை, வழியில் கிராமத்தில் இறக்கி விடுகிறேன்'
அதுவே நாலைந்து கிலோமீட்டர்கள் இருக்கும். இரண்டு மூன்று கிராமங்கள் தாண்டி அவரது இடம் வந்து விட்டது. ஊருக்கு உள்ளே புகுந்து சாலையில் இறக்கி விட்டார். ஊரின் கடைசியில் பேருந்து நிறுத்தம், அதிகமாக பேருந்துகள் வருவது போலத் தெரியவில்லை. மரத்தடியில் சிமென்டு மேடை, உட்கார்ந்திருக்கும் மக்கள். எதிரில் சாப்பாட்டுக் கடை. அடுத்த வண்டியில் இடம் பிடிக்கலாம் என்று வெகு நேரம் உட்கார்ந்திருந்தேன். இன்றைக்கு திருப்பதி போய்ச் சேர்ந்து விட வேண்டும்.
முதல் நாள் பகல் செங்குன்றத்தில் கழிந்தது, இரண்டாவது நாள் பகல் ஊத்துக் கோட்டையில், மூன்றாவது நாள் பகல் நாகலாபுரத்தில், இன்றோடு நான்கு நாட்கள் முடிந்து விடும். அதன் பிறகு திரும்பிப் போகும் வழியையும் பார்க்க வேண்டும். பை சுத்தமாக காலியாக இருந்தது. திருப்பதி மலை ஏறி விட்டால் இலவச உணவு கிடைக்கும். வயிற்றுக்குக் கவலை இல்லை. அதுவரை போய்ச் சேர வேண்டும்.
அடுத்து நடக்க ஆரம்பிக்கும் போது ஊருக்கு வெளியில் இடது புறம் ஒலி பெருக்கி வைத்து ஏதோ பூசை நடத்திக் கொண்டிருந்தார்கள். திருப்பதியில் செய்வது போலவே திருப்பாவையை ஒரு மாதிரி இழுத்து சிதைப்பது போல பாடிக் கொண்டிருந்தார்கள், ஒரு குழுவாக. இவர்களின் பாணியே அப்படி இருக்குமோ? ஏதோ தமிழ் தெரியாதவர்கள், வேறு மொழியில் எழுதி வைத்துப் படிப்பது போன்ற உச்சரிப்பு.
சாலையின் இடது பக்கம் கோவில். சந்தாக பிரிந்து உள்ளே தள்ளி கோயில் போலத் தெரிந்தது. சந்தின் நெடுகிலும் மண்டபம் போல இருந்தது. அங்கு படுத்துக் கொள்ளலாமே! ஒரு பெரிய வெளியூர் கும்பல் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தது. தமிழில் பேசிக் கொண்டார்கள். மைசூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று பேச்சில் தெரிந்தது. வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று சரசரத்துக் கொண்டிருந்தார்கள்.
உள்ளூர் மக்களும் கொஞ்சம் கூடி, சுற்றியிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் சாமி வந்தது போல ஆட ஆரம்பித்தார். அவருடன் கூட இருந்தவர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தவரை தாங்கிப் பிடித்தார். வெளியூர் ஆட்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் அவர் இயல்பாகி உட்கார்ந்திருந்தார்.
ஒரு சிறு குழந்தை ஓடி ஆடி நாய்களைத் துரத்திக் கொண்டிருந்தான், அவன் அம்மா பின்னாலேயே ஓடினார். ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் செய்யவும் அந்த பையனுக்குக் கொடுத்தார்கள். அரை மணி நேரம் அங்கு செலவழித்திருப்பேன். இங்கேயே இருந்தால் எதுவும் நடக்காது என்று சாலைக்கு வந்தால் உடனேயே இன்னொரு இரு சக்கர வண்டியில் சவாரி கிடைத்து விட்டது. அவர் திருப்பதி போகிறார்.
தூரம் நீண்டு கொண்டே போனது. நடந்து கொண்டிருந்தால் இருக்கிற வேகத்துக்கு இன்றைக்கும் போய் நாளைக்கும் ஆகியிருந்திருக்கும். சில கிராமங்களைக் கடந்து ஒரு சிறு நகரத்தைக் கடந்து திருப்பதி வந்து சேர்ந்தார். வெளியூர் பேருந்துகள் நிலையத்துக்குத் திரும்பும் இடத்தில் இறக்கி விட்டார். முற்பகல் வெயில் பலத்திருந்தது.
அடுத்தது என்ன? ஊர் வந்து சேர்ந்தாகி விட்டது! யாத்திரிகர் தங்குவதற்காக ஒரு பெரிய கட்டிட வளாகம் பார்த்திருக்கிறேன். இது வரை அதைப் பயன்படுத்தியதில்லை. வந்ததும் நேராக அலிப்பிரி போய் மலையில் ஏற ஆரம்பித்து விடுவேன். ஒரே ஒரு முறை மட்டும் உள்ளே போய் எட்டிப் பார்த்திருக்கிறேன். பெரிய கூடங்கள், தங்கும் அறைகள், குளியலறைகள், சாப்பிடும் இடங்கள். திருமலையில் இது போன்ற பயணிகள் வளாகத்தில்தான் அன்னதானமும். இங்கு அது இருக்காதா? இல்லை.
குளித்து உடை துவைத்து விட்டு, நாள் முழுவதும் படுத்துத் தூங்கி விட்டு வெயில் குறைந்ததும் எழுந்து அலிப்பிரிக்குப் போகலாம். பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்ளே நுழைந்து கீழ்த் தளத்தை ஒரு சுற்று சுற்றினேன். குளியலறைகள் இருந்தன. நிறைய பேர் தரையில் பெட்டி படுக்கைகளுடன் குடும்பமாக உட்கார்ந்திருந்தார்கள். சில பேர் படுத்துத் தூங்கிக் கொண்டு கூட இருந்தார்கள். குடிப்பதற்கான தண்ணீர் விசாரணை மேசை பெண்மணியிடம் கேட்டால் தூரமாக ஒரு மூலையைச் சுட்டினார். ஒரு மாடிப்படியின் பக்கவாட்டில் கண்ணில் படாத வண்ணம் தண்ணீர்க் குழாய் இருந்தது.
ஒரு தூணோரம் இடம் பிடித்துத் படுத்து விட்டேன். உள்ளே வெயில் தெரியாத குளுமை. மின்விசிறிகள் உயரமான கூரைகளுக்குக் கீழ் சுழன்று கொண்டிருந்தன. சின்னப் பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படியே கண்ணயர்ந்திருப்பேன்.
யாரோ எழுப்புகிறார்கள். குள்ளமான, காவல் சீருடையுடன் ஒரு பெண்மணி, வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும், ஒல்லியான உருவம், கையில் கைத்தடி. 'லக்கேஜ் எதுவும் இல்லையா?' அவர் தெலுங்கில் கேட்க நான் தமிழில் பதில் சொல்ல சந்தேகக் கேஸ் ஆகி விட்டேன்.
'கையில் மூட்டை முடிச்சுகள் இல்லை, கூட ஆட்கள் யாரும் இல்லை, பையில் பணம் இல்லை, எதற்கு இங்கு படுத்திருக்கிறாய்?'
தன் கூட வரச் சொன்னார், கூடத்திற்கு வெளியில் வெளி வாசலிற்கு உள்ளே காவல் உதவி அறைகள். அங்கு தனது அதிகாரிகளிடம் அழைத்துப் போகிறார். காரனோடையில் அவர் அறிவுறுத்தியது நடக்கிறது. காவல் உதவி அறையின் படிக்கட்டுகளில் ஏறும் போது பெரிய மீசையுடன், வெள்ளையாக ஒரு அதிகாரி வெளியிலிருந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் அவரைப் பார்த்தால் புரிந்து கொள்கிற முகமாகத் தெரிந்தது.
அறைக்குள் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் இளைஞர், அமைதியாகத் தெரிந்தார். மேசைக்குப் பின்னால் இன்னொருவர், அவர்தான் இவர்களுக்கெல்லாம் மூத்த அதிகாரி போலிருக்கிறது, அந்த மூத்த அதிகாரிதான் bad cop விசாரணை செய்தார். பெரிய மீசைக்காரர் எனக்கு ஆதரவாகத் தெரிந்தார். இளைஞர் அமைதியாக நான் சொல்வதை புரிந்து கொள்வதாகத் தெரிந்தது.
என்னை அழைத்து வந்த அம்மாவும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அதிகாரி கேள்விகள் கேட்கக் கேட்க நான் பதில்கள் சொல்லச் சொல்ல அவருக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பிற்பாடு மீசைக்காரரின் கேள்விப் பார்வைக்கு, 'நான் என்ன செய்தேன்! சந்தேகமாக இருந்தால் அழைத்து வர வேண்டும், அதுதான் செய்தேன்!'
அவர்களுக்குள் தெலுங்கிலேயே பேசிக் கொண்டார்கள். என்னிடம் தமிழில் பேசினார்கள். அதிகாரியின் தமிழ் கொஞ்சம் அரைகுறையாகவே இருந்தது. ஆனால் போலீஸ் மொழிக்குத் தேவையான சொல் வளம் தாராளமாக இருந்தது.
'லக்கேஜ் எதுவும் இல்லை, கையில் காசு இல்லை, கூட யாரும் இல்லை' என்பதுதான் என் மீதான குற்றச்சாட்டு. நான் சொல்லும் விளக்கங்களை எப்படி ஏற்றுக் கொள்வது?
'ஜெயிலிலிருந்து எப்போ வெளியில் வந்தே? திரும்ப ஜெயிலுக்குப் போறேயா?'
'கோயிலுக்கு வந்தா நேராக அலிப்பிரி போக வேண்டியதுதானே! இங்கு ஏன் வந்தே!'
'ஏதாவது சான்ஸ் கிடைச்சா கிடைச்சதை சுருட்டிக் கொண்டு போவாய் தானே!'
'நாங்க நாலு பேர் இருக்கிறோம், இன்னும் உன் மேல் கை வைக்கவே இல்லை, உண்மையைச் சொல்லி விடு!'
'நான் என்ன உனக்கு மச்சானா, என்னப் பார்த்து சிரிக்கிறே!, உள்ளே தள்ளி நாலு தட்டு தட்டினா எல்லாம் சரியாகி விடும்'
பத்து பதினைந்து நிமிடங்களாக இதையே திருப்பித் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடைய விபரங்கள், பயணக் கதை எல்லாம் சொன்னேன். வழியில் கடந்த ஊர்கள், தங்கிய இடங்கள், பயணித்த வழிமுறைகள். நான் சொல்வது மட்டும்தான் ஆதாரம். அது அவர்களை நம்ப வைப்பது வரை நான் சந்தேகிக்கப்படும் குற்றவாளிதான்.
குறைந்த பட்சம், காவித் துணியும், நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையும் மாட்டியிருந்தால், தோளில் ஒரு மூட்டை தொங்க விட்டிருந்தால் நம்பலாம். இப்படி கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்து, வளர்ந்த முடியும், மூன்று நாள் தாடியுமாக இருந்தால் பிரயாணிகளின் உடமைக்குப் பொறுப்பான காவலருக்கு என்ன நம்பிக்கை வரும்?
அதிகாரியாக மிரட்டிக் கொண்டிருந்தவர் உள்ளே கழிவறைக்குப் போய் விட்டு வந்தார். என்ன செய்வது என்று அவர்களுக்கும் கொஞ்சம் சங்கடமான நிலைமை. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு மீசைக்காரர், 'சரி சரி, போய் நேரா அலிப்பிரி போய் விடு, சார்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பு' என்று எடுத்துக் கொடுத்தார்.
சார், 'நேரா போயிடணும். இனிமேல் இந்தப் பக்கமா பார்த்தா உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டித் தட்டி விடுவேன்' என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
பசி, தாகம், களைப்பு எல்லாம் ஓடிப் போய் விட்டிருக்க வேண்டும், ஆனால் இன்னும் இருந்தன. நேராக அலிப்பிரி நோக்கிய சாலையில் நடையைத் தொடர்ந்தேன். நடந்து போகும் பிரயாணிகளுக்காக அலிப்பிரி வரை இலவச பேருந்து சேவை உண்டு. அது வருமா என்று பேருந்து நிறுத்தம் ஒன்றில் உட்கார்ந்தேன். கட்டணப் பேருந்துகளுக்கு, மலை மீது ஏறும் பேருந்துகளுக்கு, அங்கு சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு ஊழியர். நிறைய பேருந்துகள் வந்து நின்று ஆள் ஏற்றிப் போயின. அலிப்பிரி சேவைப் பேருந்து வரவே இல்லை.
பக்கத்திலேயே ஒரு குளிர்பான நடைபாதைக் கடை. குடிக்கத் தண்ணீர் கேட்டேன், அந்தப் பையன் சாத்துக்குடிகளைப் பிழிந்து கொண்டிருந்தான். அதில் ஐஸ் போட்டு தனக்கு ஒரு கப், கூட இருந்தவருக்கு ஒரு கப் எடுத்துக் கொண்டு எனக்கும் ஒரு கப் கொடுத்து விட்டான். 'காசு இல்லை'. 'பரவாயில்லை.' பழத்தின் கசப்பு மறைய நிறைய சர்க்கரை போட்டிருந்தது. இது போன்று ஐஸ் போட்ட பானம் சாப்பிட்டால் சளி பிடித்து விடும். beggars can not be choosers என்பதன் முழு உண்மை புரிந்தது. நன்றியுடன் குடித்து விட்டு, அங்கேயே காத்திருந்து பார்த்தேன்.
நடக்க வேண்டியதுதான். திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரமான அலிப்பிரிக்குப் போக முதலில் நீளமான ஒரு சாலை, அதன் கடைசியில் ஒரு கோயில், இடது புறமாக கோணத்தில் இரண்டு சாலைகள். நீளமான சாலையின் இரண்டு பக்கமும் தங்கும் விடுதிகளும் குளிர்பானக் கடைகளும் வரிசையாக இருக்கும். திரும்பிய பிறகு வீடுகளும் மரங்களும்தான், வலது புறம் காடு. இழுத்து இழுத்து காட்டுப் பகுதிக்கு வந்து விட்டேன்.
மதியம் ஒரு மணி இருக்கும். முன்பு வரும் போது வனமாலி, யாத்திரிகருக்கு அன்னதானம், கோவிலுக்குப் போகும் யாத்திரிகருக்கு மட்டும் என்று எழுதிப் போட்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன், கதவு பூட்டியிருக்கும். இன்றைக்கு சரியாக மதிய வேளையில் பார்த்தால், உள்ளே நிறைய ஆட்கள், வெளியிலிருந்தும் போய்க் கொண்டிருந்தார்கள். அன்ன தான நேரம், மலை ஏறுவதற்குத் தேவையான உணவு இங்கு கிடைக்கப் போகிறது.
கிடைக்க வில்லை. நான் போகும் போது இடம் நிறைந்து விட்டிருந்தது. அடுத்த பந்தி இருக்கும் என்று காத்திருந்துதான் மிச்சம். ஒரே பந்திதான். சாப்பாடு இல்லாமலேயே தொடர்ந்தேன்.

பயணம் - 7 (புத்தூர்)
சில கிலோமீட்டர்கள் நடந்த பிறகு நெடுஞ்சாலையின் வழியிலேயே ஒரு ஊர். ஊரின் பெயர் மறந்து விட்டது. நெடுஞ்சாலை கடந்து செல்லும் ஊருக்கு இலக்கணமாக இருந்தது. கடைத்தெரு/பேருந்து நிறுத்தம் பகுதியில் கலகல என்று நிறைய கூட்டம். கடைகளில் சுறுசுறுப்பாக விற்பனை.
பேருந்து நிறுத்தம் தாண்டி, இரு சக்கர வாகன சேவைக் கடை ஒன்றிற்கு அருகில் மூடியிருந்த கடை வாசலில் உட்கார்ந்து கொண்டேன். இருசக்கர வாகனக் கடையின் வாசலில் மூன்று பேர் உட்கார்ந்து சூடாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் உயரமாக குண்டாக இருப்பவர் கடையின் உரிமையாளர் என்று தோன்றியது.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவரை அணுகி,
'திருப்பதி வரை போகணும். அடுத்த ஊர் வரை போவதற்கு உதவி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும்'
அவரது முகத்தில் ஒரு அவசரம், பதட்டம். உடனேயே சட்டைப்பையில் கை விட்டு 10 ரூபாய் தாளை நீட்டினார்.
'புத்தூர் வரை பஸ் டிக்கெட் எவ்வளவு இருக்குங்க?'
'புத்தூருக்கு இது பத்தாதே! இந்தாங்க இதையும் வச்சுக்கோங்க!' இன்னொரு 5 ரூபாயை நீட்டினார். 'இதுக்குள்ளதான் இருக்கும். ஆர்டிசி பஸ் நிறைய வரும் ஏறிப் போகலாம்'
எதிர்பாராமல் கையிருப்பு 20 ரூபாய்க்கு ஏறி விட்டது. அவருக்கு நன்றி சொல்லி விட்டு பேருந்து நிறுத்தத்தில் முனைக் கடையின் முனையில் இருந்த கல் ஒன்றில் போய் உட்கார்ந்து கொண்டேன். பேருந்துகளில் பல நிற்கவே இல்லை. நிறைய லாரிகள் கடந்து போய்க் கொண்டிருந்தன.
முனைக் கடையில் தண்ணீர் பொதி, ரஸ்னா பொதி, சிகரெட்டுகள் என்று சுறுசுறுப்பான விற்பனை. கடைக்கார இளைஞர் பதவிசாக உடை உடுத்தி ஒட்டிய சிரிப்போடு வேலைகளை செய்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குடிக்கத் தண்ணீர் கேட்டால், அடுத்த கடையை கை காட்டி விட்டார்.
அடுத்த கடையில் ஒரு அம்மா கூடை பின்னிக் கொண்டிருந்தார்கள். அங்கு அவ்வளவு விற்பனை அதிகமில்லை. தண்ணீர் கேட்டவுடன், உட்பக்கமாக குரல் கொடுத்தார். பதில் எதுவும் வராததால், தானே எழுந்து போய் ஓரிரு நிமிடங்களில் சொம்பில் தண்ணீர் கொடுத்தார். எப்படி எல்லாம் மனிதர்கள்!
கால்கள் வலி தீரும் வரை உட்கார்ந்திருந்தும் எந்தப் பேருந்தும் நிறுத்தி ஏற்றிப் போவது போலத் தெரியவில்லை. அடுத்த ஊருக்கு நடந்தால் இன்னும் கட்டணம் குறையும். இருட்டு ஏறி விட்டிருந்தது. எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டேன். அடுத்த பெரிய ஊர், பிச்சாட்டூர் (பிச்சாட்டூர் அணை இருக்கிறது என்று பிற்பாடு தெரிந்தது).
பிச்சாட்டூரில் நெடுஞ்சாலை புறவழிச்சாலையாகப் போய் விடுகிறது. ஊருக்குள் போகத் தனிச்சாலை. நன்கு இருட்டி விட்டிருந்தது. இரவு எட்டு மணி தாண்டியிருக்குமோ! காலையில் சாப்பிட்ட சர்க்கரை பொங்கலும், மதியம் சாப்பிட்ட சோறும் செரித்து வயிறு அடுத்த வேளைக்கு ஓலம் விட்டுக் கொண்டிருந்தது. மணி இரவு எட்டு இருக்கும் என்று தோன்றியது.
'எப்படியோ, பேருந்து ஒன்றைப் பிடித்து புத்தூர் வரை போய் விடலாம், புத்தூரிலிருந்து ஒரே சாலைதான் திருப்பதிக்கு. ஏதாவது லாரி அல்லது வண்டியில் இடம் கேட்டுப் போய் விடலாம். வழிபாட்டுத் தலத்துக்கு அருகில் ஆதலால் சாப்பிடவும், இளைப்பாறவும் குறை இருக்காது'.
பிச்சாட்டூரில் பேருந்து நிலையம் ஒன்று இருந்தது. பேருந்துகளில் ஊர் பெயர்கள் எல்லாம் தெலுங்கில் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. காளஹஸ்தி போகும் பேருந்து, அந்தப் பக்கம் போகும் பேருந்து என்று ஒன்றிரண்டு கிளம்பிப் போயின. புத்தூர் போகும் தனியார் பேருந்து ஒன்று கூட்டமாக வந்தது. உட்கார இடம் கொடுத்தால்தான் ஏற வேண்டும் என்று காத்திருந்தேன்.
ஆந்திர அரசுப் பேருந்தும் ஒன்று வந்தது. வெளியில் எட்டிப் பார்த்த நடத்துனரிடம்
'புத்தூர் போகுமா?', 'புத்தூருக்கு எவ்வளவு டிக்கெட்' இரண்டையும் கேட்டுக் கொண்டேன். 12 ரூபாய்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். இந்த நேரத்தில் நன்கு தூங்கிக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்தால் தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது. கடைசி சில நிமிடங்களில் சிறிது தூக்கம்.
'புத்தூர் பைபாஸ்' என்று பேருந்து நின்றவுடன், அவசர அவசரமாக விழித்து இறங்கி விட்டேன். இந்தப் புறவழிச்சாலைதான் திருப்பதி போகும் நெடுஞ்சாலை. ஊருக்குள் போனால் பேருந்து நிறுத்தத்தில் அடுத்து பேருந்துக்குத்தான் காத்திருக்க வேண்டும்.
புத்தூர் சாலையிலிருந்து வந்து திருப்பதி நோக்கி திரும்பிய பேருந்தின் அருகில் போய் திருப்பதிக்கு பேருந்து கட்டணம் எவ்வளவு என்று விசாரித்தால் 19 ரூபாய்கள். தூரத்துக்கு கட்டணம் அதிகமாகத்தான் பட்டது. 30-40 கிலோமீட்டர் என்று நினைவு.
திருப்பதி நோக்கிய திசையில் நகர்ந்து வரும் போது இடது பக்கம் ஒரு சாலையோர சாப்பாட்டுக் கடை. பையில் இருந்த 8 ரூபாய்கள் சாப்பிடத் தூண்டின. அவ்வளவு கூட்டம் இல்லை. நேரமும் ஆகி விட்டதே.
'சாப்பிட என்ன இருக்கிறது?' இட்லி.
'என்ன விலை?' 4 இட்லி 10 ரூபாய்
'எங்கிட்ட 8 ரூபாய்தான் இருக்கு' அப்போ ஒண்ணும் செய்ய முடியாது. 3 இட்லி விற்கிறோம் என்று அவர்களுக்கும் தோன்றவில்லை. 3 இட்லி கொடுங்கள் என்று எனக்கும் கேட்க உறைக்கவில்லை.
சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் தெலுங்கில் ஏதோ சொன்னார். அதற்கு கடைக்கார அம்மா மறுமொழி சொன்னார். கடைசியில் தட்டில் 4 இட்லிகள் கொடுத்து விட்டார்கள். 2 ரூபாயை, தான் தந்து விடுவதாக அவர் சொல்லியிருப்பார் போலிருக்கிறது.
உப்பலாக ஆரோக்கியமான இட்லி. சாப்பிட்டால் அடுத்த நான்கு வேளைக்குத் தாங்கும். அடுத்த நாளும் அதற்கடுத்த நாள் மதியம் வரையிலும் சாப்பிடாமல் இருக்க வேண்டியது வரும் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. 'இந்த வேளைக்கு இது கிடைக்கிறது. இதை நன்றியுடன் சாப்பிட்டுக் கொள்வோம். அடுத்தது அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.'
சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடித்து விட்டு 8 ரூபாய்களைக் கொடுத்து புறப்பட்டேன். எனது புரவலர் தனது சாப்பாட்டை முடித்து விட்டு இன்னும் உட்கார்ந்திருந்தார்.
இதற்கிடையில் திருப்பதியிலிருந்து வரும் ஒரு பேருந்து நாற்சாலை சந்திப்புக்கு சற்று முன்பு ஏதோ கோளாறாகி நின்று விட்டிருந்தது. குறுகலான அந்தச் சாலையில் அதன் பின்னால் வரிசையாக லாரிகள், பேருந்துகள், மகிழ்வுந்துகள் நின்று போயின. நடந்து கொண்டே இருக்க கடக்கும் வாகன வரிசையின் நீளம் அதிகமாகிக் கொண்டே போனது.
'என்ன ஆச்சு' என்ற பதட்டமான விசாரணைகள். அந்தத் திசையிலிருந்து வந்த காரணம் தெரிந்த நான் கேட்டவர்களுக்கு அதைச் சொல்லி விட்டு நடந்தேன்.
இந்தச் சிக்கலுக்கு அப்பால் சாலையின் இடது புறம் ஒரு லாரி நின்றிருந்தது. ஓட்டுனரிடம்
'திருப்பதி வரை ஏற்றிக் கொண்டு போக முடியுமா?' என்று கேட்டால் பக்கத்து இருக்கையில் ஏறிக் கொள்ளச் சொன்னார். 'திருப்பதி போகாது, ரேணிகுண்டா வரை தான் போகும்' என்று தெலுங்கில் சொன்னதாகப் புரிந்தது. இன்று இரவே போய்ச் சேர்ந்து விடுவோமா!
ஆந்திர வண்டிதான், தெலுங்கு பேசும் ஓட்டுனர்தான். ஏதேதோ கேட்டுக் கொண்டே வந்தார், பாதி புரியவில்லை. தூக்கக் கலக்கம். அரை விழிப்பில் சாலையைப் பார்த்தபடியே இருந்தேன். கொஞ்ச தூரத்தில் வண்டியை ஓரங்கட்டினார். ஒரே ஒரு கடை மட்டும் அருகில் இருந்தது.
'ரேணிகுண்டா வந்தாச்சா?' என்று கேட்டால்,
'ஆமா, தூங்கிட்டீங்களா?' என்று சொல்லியபடியே கதவைத் திறந்து இறங்கினார். நானும் என் பக்கக் கதவைத் திறந்து இறங்கி விட்டேன். நடையைத் தொடர வேண்டியதுதான்.
நெடுஞ்சாலையின் இருள் வரவேற்றது. சாலையின் இரண்டு பக்கமும் விளக்குகளோ, கடைகளோ, வீடுகளோ இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே தெரியவில்லை. எதிரெதிராக சீறிப் போகும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் கடந்து போன பிறகு கும்மிருட்டுதான். சாலையின் இரண்டு பக்கமும் காடு என்று தெரிந்தது. நடக்க நடக்க மேன்மேலும் இருட்டுதான் தெரிந்தது. எங்கு போகிறோம், என்ன இலக்கு என்று எந்த உணர்வுமே இல்லை.
ரேணி குண்டாவுக்கு இன்னும் வெகுதூரம் இருக்கிறது என்பது மட்டும் உறைத்தது. இவர் வழியில் நிறுத்தியவுடன் இறங்கி விட்டிருக்கிறோம். சாலையும் அவ்வளவு அகலம் கிடையாது. சாலையை விட்டு இறங்கி பக்க வாட்டில் நடக்கவும் வசதியில்லை. பக்க வாட்டு நடை பாதையில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாத அளவுக்கு இருட்டு. சாலையின் ஓரமாகவே நடந்து கொண்டிருந்தேன்.
இரவு ஒன்பது, பத்து மணி தாண்டி விட்டால் பாதி தூக்க நிலை வந்து விடும். இந்த அரை விழிப்பு நிலையில் நடப்பது சிரமமாக இருந்தது. கொஞ்ச நேரம் தூங்கி விட்டுப் போகலாம் என்றால் உட்கார கூட இடம் தெரியாத இருட்டு. கொஞ்ச தூரத்தில் சாலையின் வலது புற ஓரத்தில் சில ஓலைக் கூரைகள் தெரிந்தன. வரிசையாக ஓலை கூரை போட்டு நான்கு பக்கமும் திறந்து இருக்கும் சாலையோரக் கடை போன்ற அமைப்பு.
'இந்த அத்துவானக் காட்டில் யார் இதை போட்டு வைத்தார்கள், இப்போது அவர்கள் எங்கே' என்று கேள்விகள் தோன்றினாலும், 'இதுவாவது இருக்கிறதே' என்று போய் உட்கார்ந்தேன். தரைதான். அப்பால் காட்டு வெளி. படுத்துக் கொண்டால், கரடுமுரடான மண் தரை உறுத்தியது. சமாளித்துத் தூங்கி விடலாம் என்று முயற்சித்தால் சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. கூரையின் இடுக்குகள் வழியாக தூறல் சிறிதளவே வந்தாலும், மழை பலத்து விட்டால், சாலையிலிருந்து தண்ணீர் இறங்கி இதனுள்ளும் வந்து விடும். படுத்திருக்கும் இடம் தண்ணீர்க் காடாகி விடும்.
இதற்கு நடுவில் சாலையில் கடந்து செல்லும் வாகனங்களுக்கு குறைவே இல்லை.
இன்னொரு பிரச்சனை, மழைக்கு ஒதுங்கி பூச்சி பொட்டுகள் கூரைக்கு அடியில் வர முயற்சிக்கலாம். வேறு என்னென்ன விலங்குகள் வருமோ! சிறிது நேரத்தில் எழுந்து வெளியில் வந்து விட்டேன். அடுத்த நடை படலம் தொடர்ந்தது.
மழை நின்று விட்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் சாலை ஓரத்தில் பாதி இடிந்து போன மதகு போல தெரிந்தது. அதன் மீது உட்கார்ந்து, படுத்துக் கொள்ளவும் செய்தேன். லேசாக ஈரமாக இருந்தாலும் படுக்க தோதுவாகத்தான் இருந்தது. தரையில் படுப்பதை விடக் கொஞ்சம் உயரத்தில் படுத்துக் கொண்டால் நல்லதுதான்.
ஓரிரு நிமிடங்களில் மீண்டும் மழைத் தூற ஆரம்பித்தது. மழையில் எப்படித் தூங்க முடியும்? எழுந்து நடக்க ஆரம்பித்ததும் சிறிது நேரத்தில் நின்று விட்டது. நான் உட்கார்ந்து விடக் கூடாது, படுத்து விடக் கூடாது என்று காத்திருந்தது போல மழை பெய்தால் என்ன நியாயம்!
இன்னும் வெளிச்சமோ, மனிதர் வாழும் அறிகுறிகளோ தெரியாத சாலை. சாலை மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. நடந்து நடந்து இனிமேலும் நடக்க முடியாது என்று தோன்றும் போது கொஞ்ச தூரத்தில் நிறைய விளக்குகள் போட்ட ஒரு கட்டிடம் தெரிந்தது. கட்டிடம் கூட முதலில் தென்படவில்லை. சாலையின் இடது புறம் இறங்கி விளக்கு வெளிச்சம் பிரகாசமாக தெரிந்தது.
'ஏதாவது நெடுஞ்சாலை சாப்பாட்டுக் கடையாக இருக்கலாம், அல்லது சாராயக் கடையாக இருக்கலாம்' என்று நினைத்து கொஞ்ச நேரம் உட்கார இடம் கிடைத்து விடும் என்று நெருங்கினால் அது ஒரு கோவில்.
கோவிலுக்குள் யாருமே இல்லை. கோவிலுக்குள்ளும், சுற்றியும் மின் விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. சாலையிலிருந்து கீழிறங்கி நுழையும் வாசல் அகலத் திறந்திருந்தது. உள்ளே சாமி இருக்கும் அறை அளிக்கதவால் மூடப்பட்டிருந்தது. வெளியில் செருப்பை விட்டு சுற்றிப் பார்த்தேன். இடது புறம் ஒரு மண்டபத்தின் மத்தியில் நாய் ஒன்று படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. வலது புறம் திறந்த வெளி. கிரானைட்டில் பெஞ்சுகள் போல நிறையப் போடப்பட்டிருந்தன. ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி, குழாய் பொருத்தப்பட்டு. இன்னமும் ஒரு தலை கூடத் தென்படவில்லை.
தண்ணீர் குடித்து விட்டு ஒரு பெஞ்சில் படுத்துக் கொண்டேன். கடந்த ஒரு மணி நேரத்தின் அத்துவானத்துக்கு நடுவில் இப்படி ஒரு இடம் இருக்கும் என்று நம்பவே முடியவில்லை. சாலை வழியாக போகும் வண்டிகள் நிறுத்தி சாமி கும்பிட வரும் கோவில் என்று பின்னர் புரிந்தது. இரவில் இரண்டு மூன்று வண்டிகள் நிறுத்தி ஆட்கள் வந்தார்கள். அவர்களாகவே சாமி கும்பிட்டு விட்டு கொண்டு வந்திருந்த பொருட்களை படைத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால், பெரிய கோவில். இந்த ஆள் நடமாட்டத்தால் தூக்கத்துக்கு கொஞ்சம் இடைஞ்சல்.
சிறிது நேரத்தில் மீண்டும் மழை தூற ஆரம்பிக்கவே கிரானைட் பெஞ்சை விட்டு கோயிலைச் சுற்றி இருந்த கூரைக்கு அடியில் படுத்துக் கொண்டேன். அதிகாலையில் நிறைய பேர் தட தடவென்று இறங்கும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். கோயில் பூசாரியும் வந்து விட்டதாகத் தோன்றியது. அதிகாலை 4 மணி இருக்கலாம்.
எழுந்து முகம் கழுவி தண்ணீர் குடித்து விட்டு சாலையில் ஏறி விட்டு நடையைத் தொடரலானேன்.

சனி, ஜூன் 05, 2010
பயணம் - 6 (நாகலாபுரம்)
'இப்ப எல்லாம் பூட்டி விட்டுப் போயிட்டாங்களே! மதியானமா வாங்க, சாப்பிடக் கூடக் கிடைக்கும்' என்று சொன்னார் அந்த நல்ல மனிதர்.
'நான் தொடர்ந்து போக வேண்டும். இங்கேயே காத்திருக்க மாட்டேன். நன்றி' என்று நகர முயற்சித்தேன்.
'இப்படியே ஊருக்குள் போங்க, தங்க இடம் கிடைக்கும். சாப்பிடக் கூட யாராவது கொடுப்பார்கள்'. அப்படியா!
ஊரின் பெயர் நாகலாபுரம்.
ஊருக்குள் நுழையும் முன்பே ஊரின் விளிம்பில் சாய் பாபா கோயில். சிர்டீ சாயிபாபா. நவீன முறையில் கட்டப்பட்டிருந்தது. திறந்திருந்த கேட் வழியாக நுழைந்து மையத்தில் இருந்த பெரிய அறைக்குள் நுழைந்தேன்.
அறையின் ஒரு பக்கத்தில் உயரமான மேடையில் சாயிபாபா உருவம் நிறுவப்பட்டிருந்தது. இடது பக்கம் மேலே கோவிலை உருவாக்கியவரில் புகைப்படம். ஆட்கள் யாரும் தென்படவில்லை. அப்படியே வலது புற கதவு வழியாக வெளியில் வந்தால் பக்கவாட்டில் இன்னொரு சாமி. அதன் முன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். கோயில் பணியாளர் போல தெரிந்தார். சாமி அறைக்குள் இன்னொருவர் நின்று சாமிக்கான பணிவிடைகளை செய்து கொண்டிருந்தார்.
தயங்கித் தயங்கி அங்கு போய் நின்றேன். வழக்கமாக கோவிலுக்கு வருகிறவர்கள் இப்படி நிற்பது இயல்புதான். நான் கொஞ்சம் அதிகமாக தாமதிக்கவே, பணியாளர் என் முகத்தை கேள்வியோடு பார்த்தார்.
'இப்படி திருப்பதிக்கு வழிப்பயணமாக வந்திருக்கிறேன். கொஞ்சம் இங்கு உட்கார்ந்து இளைப்பாறி விட்டுப் போகலாமா?'
உள்ளிருந்து கணீர் என்று குரல் வந்தது.
'தாராளமா தங்கி விட்டுப் போகலாம். படுத்துத் தூங்கக் கூடச் செய்யலாம்'. திரும்பிக் கூடப் பார்க்காமல் உள்ளே இருந்தவர் வரவேற்றார். ஏதோ கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து விட்டது போல உள்ளம் நிறைந்தது.
'குளிக்கணும்னா அந்தப் பக்கம் பாத்ரூம் இருக்கு. போயி குளித்துக் கொள்ளுங்கள்' என்றார் வெளியில் நின்றிருந்தவர்.
'காலையிலேயே குளிச்சாச்சு' கிடைத்த இடத்தில் அப்பாடா என்று கால் நீட்டிப் படுக்க வேண்டும். வெயில் வெளியில் அடிக்கும் உக்கிரத்துக்கு இங்கு சொர்க்கமாக தெரிந்தது.
கோயில் நடு மண்டபத்தின் பின் சுவர் அருகில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டேன். பிரகாரத்தைச் சுற்றி வருபவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கலாம். ஆள் நடமாட்டமே இல்லை. இவர்கள் இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் வரவே இல்லை. அடுத்த ஓரிரு மணி நேரத்துக்கு தூக்கம், விழிப்பு, எழுந்து உட்கார்ந்திருத்தல் என்று நேரம் போனது.
இதற்கிடையில் பூசை செய்பவர் வெளியில் போய் விட்டிருந்தார். மற்றவர் மட்டும் கோயில் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். நானும் 'எவ்வளவு நேரம்தான் படுத்திருப்பது, எழுந்து ஏதாவது வேலைகளைப் பார்க்கலாம்' என்று எழுந்தேன். அவர் என்னிடம் பேச்சுக் கொடுத்து விபரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
'திருப்பதிக்குக் கால்நடையாக நிறைய பேர் வருவார்கள். ஆனால் இது போல தனியாக வர மாட்டார்கள். ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்கு அப்புறம் வரத் தொடங்குவார்கள், பிப்ரவரி வரை வருவது இருக்கும். காலையில் வந்து சேர்ந்தால், எல்லோரும் குளித்து சமைத்துச் சாப்பிட்டு விட்டு பயணத்தைத் தொடர்வார்கள். அவர்களுக்குத் தேவையான சாமான்கள் அவர்களுடனேயே வண்டியில் வந்து கொண்டிருக்கும். நடக்க முடியாதவர்கள், இடையில் களைத்தவர்களை வண்டியில் ஏற்றிக் கொள்வார்கள்'
நான் மாலை வரை தங்கிக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டேன். 'ஏதாவது கோயில் வேலை இருந்தால் சொல்லுங்க. சும்மா இருப்பதற்கு நான் செய்கிறேன்'
'இங்க என்ன வேலை இருக்கு.' 'மதியம் சாப்பிட என்ன செய்வீர்கள்? ஊருக்கு உள்ளே போனால் உணவு விடுதிகள் உண்டு. சாப்பிட்டுக் கொள்ளலாம்' என்றார்.
'உணவு விடுதிகளில் சாப்பிட கையில் காசு கிடையாது. நீங்கள் பிரசாதம் ஏதாவது கொடுத்தால் சாப்பிட்டுக் கொள்வேன். இல்லை என்றாலும் பரவாயில்லை'
சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். மேலும் சில விபரங்களைக் கேட்டு விட்டு, 'சரி, மதியம் சாமிக்கு நைவேத்தியம் செய்கிற சோத்துக் கட்டியைத் தரச் சொல்கிறேன். குழம்பு மட்டும் எதிரில் இருக்கும் வீடுகளில் வாங்கிக்கோங்க, நான் சொல்றேன்' என்றார்.
'ரொம்ப நன்றிங்க! குழம்பு எல்லாம் இல்லா விட்டாலும், சாப்பிட்டுக் கொள்வேன்'
குளிக்கும் இடம் எங்கிருக்கிறது என்று விசாரித்து கோயில் வெளிச்சுவருக்கு அருகில் போனால் பாத்ரூம்கள் பூட்டப்பட்டிருந்தன. ஆனால் வெளியில் தண்ணீர்க் குழாய்கள் வரிசையாக இருந்தன. துண்டைக் கட்டிக் கொண்டு துணிகளை நன்கு அலசி, காயப் போட்டேன். வயல் வெளித் தண்ணீரில் குளித்ததற்கு மாற்றாக குழாய்த் தண்ணீரில் குளிரக் குளிரக் குளித்துக் கொண்டேன்.
துணிகள் வெயிலில் காய்ந்து கொண்டிருக்க துண்டை கட்டிக் கொண்டு உள்ளே போனேன். இதற்குள் நண்பகல் தாண்டியிருந்தது. மதிய வழிபாடு நடத்த பூசை செய்பவர் வந்திருந்தார். வழக்கமான பூணூல் போட்ட பூசாரி இல்லை. ஏதோ தனக்குத் தெரிந்த பழகிய முறையில் பூசை செய்யும் வேறு வேலை செய்பவர்தான். நானும் மண்டபத்துக்குள் போய் உட்கார்ந்து கொண்டேன். ஊதுபத்தி காண்பிப்பது, சூடம் காண்பிப்பது, என்று வெகு நேரம் பூசை செய்து கொண்டிருந்தார். தானாகவே அடித்துக் கொள்ளும் மேள தாளங்கள் மின்சாரத்தால் இயங்கின. வேறு ஈ காக்கை கூட எட்டிப் பார்க்கவில்லை. மூன்று பேர்தான் கோவிலுக்குள்.
பூசை முடிந்ததும், நான் எனது இடத்துக்குப் போய்ப் உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்துக்குப் பிறகு கோவில் பணியாளர் வந்து ஒரு தொன்னை நிறைய சோற்றுக் கட்டியை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்து விட்டார். அடுத்த இரண்டு வேளைக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய அளவு. வெளி வாசல் அருகில் பூசாரி நின்றிருந்தார். நானும் எழுந்து அவர்கள் அருகில் போனேன்.
'நல்லா சாப்பிட்டு விட்டு படுத்து ரெஸ்ட் எடுங்க. நாங்க இந்த வெளிக்கதவைப் பூட்டாமல்தான் போகிறோம். நீங்கள் போகும் போது தாள் போட்டு விட்டு விடுங்கள். செருப்பை உள் பக்கமாகப் போட்டுக் கொள்ளுங்கள்.' 'சாப்பிடுவதற்கு எதிரில் இருக்கும் வீட்டில் சாம்பார் ஏதாவது வாங்கிக்கோங்க. நான் சொல்லி விட்டுப் போகிறேன்'
சாலையைக் கடந்து எதிர்ப் பக்கம் போனார். கட்டிய துண்டோடு, கையில் சோற்றுக் கட்டியோடு நானும் போனேன். வெளியிலிருந்தே குரல் கொடுத்து உள்ளிருந்து வந்த வயதான அம்மாவிடம், தெலுங்கில் பேசினார். 'போய் உடை எல்லாம் மாட்டிக் கொண்டு வந்து, கேளுங்க. சாம்பார் ஏதாவது கொடுப்பாங்க.'
இரண்டு பேரும் கிளம்பிப் போய் விட்டார்கள். அவர் சொன்னது போல காய்ந்தும் காயாமலும் இருந்த ஆடைகளை மாட்டி விட்டு கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு அந்த வீட்டுக்கு முன்பு போனேன். ஒரு இளம் பெண் வந்து பாத்திரங்களைக் கையில் கொடுத்தார். ஒரு டம்ளர், அதற்கு மேல் ஒரு சின்னக் கிண்ணம், கிண்ணத்துக்கு மேல் ஒரு சின்னத் தட்டு. தட்டில் வடுமாங்காய் ஊறுகாய் இருந்தது.
'இங்கேயே உட்கார்ந்து சாப்பிடுங்க. அங்க கல் கிடக்கு பாருங்க அதில் உட்கார்ந்து பக்கத்துக் கல்லில் வைத்துக் கொள்ளுங்கள்' எதிரில் இருந்த அவர்களது களம் போன்ற இடத்தைக் காட்டினார். அதற்கு அப்பால் வயல் வெளி. அந்தக் கல்லுக்கு அருகில் கட்டிலில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த அம்மாவின் அண்ணனாக இருக்கலாம்.
போய்க் கல்லில் உட்கார்ந்து கொண்டேன். நாய் ஒன்று அருகில் வந்து வாலாட்டியது. கிண்ணத்தில் ஏதோ ஒரு காய்கறிக் கூட்டு. டம்ளரில் ரசம். சோற்றில் ஒரு பகுதியை நாய்க்கு இன்னொரு கல்லின் மீது வைத்தேன். அது சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டது. மேலே மேலே கேட்கும் என்று நினைத்ததற்கு மாறாக அமைதியாகப் படுத்துக் கண்களை மூடிக் கொண்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பிறகு வழக்கமான சாப்பாடு, கூட்டு, ரசம், ஊறுகாய் என்று நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்த சமயம் இன்னொரு நாய் வந்து தூரத்திலேயே நின்றது. கொஞ்சம் முறைப்பாக பார்த்ததது. ஏற்கனவே சாப்பிட்டு விட்டுப் படுத்திருந்த நாய் எழுந்து அதனருகில் போய் மூக்கை உரசியது. அதன் பிறகு மீண்டும் அருகில் வந்து வாலை ஆட்டியது.
'தனது நண்பனுக்குக் கேட்கிறதோ' என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டே இன்னும் கொஞ்சம் சோற்றை அதே கல்லில் வைத்ததும், இந்த நாய் சாப்பிடுவது போல அருகில் போய் விட்டு ஒதுங்கி நின்றது. மற்ற நாய் தயங்கித் தயங்கி வந்து சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தது. நாம் வேடிக்கையாக நினைத்ததுதான் நடக்கிறது. தனது நண்பனுக்காகத்தான் இரண்டாவது முறை வாலாட்டி வாங்கிக் கொடுத்திருக்கிறது.
சாப்பிட்டு முடித்து இலையை எறியும் போதுதான் மற்ற நாய்க்கு உற்சாகம் வந்தது. அது இலையை எறிந்த இடத்தை நோக்கி சுறுசுறுப்பாக ஓடியது. மனிதரை அண்டிப் பிழைப்பதை விட, தானாகத் தேடிப் பிழைப்பது இதற்கு பழக்கம் போலிருக்கிறது.
பாத்திரங்களை தண்ணீர்க் குழாயில் கழுவி விட்டு நன்றிகளோடு திருப்பிக் கொடுத்து விட்டு கோவிலுக்குள் வந்து மீண்டும் படுத்துக் கொண்டேன். மதியத்துக்கு மேல் இரண்டு பேர் கோவிலுக்கு வந்து கும்பிட்டு விட்டுப் போனார்கள். ஒருவர் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்ட நடுத்தர வயதுக்காரர். இன்னொரு பெண், இரு சக்கர வண்டியில் ஆண் காத்திருக்க வந்து கும்பிட்டு விட்டுப் போனார்.
எவ்வளவு நேரம்தான் படுத்திருக்க முடியும். எழுந்து கோயிலின் உள் மண்டபத்தைச் சுற்றி வந்தேன். கோயிலின் வலது புறம் மண் மண்டிக் கிடந்தது. முன்பகுதி, பின்பகுதி, வெளிப்புறம் பார்த்திருக்கும் இடது புறம் சுத்தமாக இருந்தது போல இங்கு இல்லை. அந்தப் பக்கம்தான் வெயிலும் குறைவாக இருந்தது. இந்த இடத்தைக் கொஞ்சம் தூத்து வாரினால் என்ன?
ஒரு சின்ன அறையில் துடைப்பங்கள் கிடந்தன. ஒன்றை எடுத்து மணலைத் தள்ள ஆரம்பித்தேன். கை கால்களில் சக்தி வெகுவாகக் குறைந்து போயிருந்தது (அல்லது அப்படி ஒரு நினைப்பு). அடிக்கடி உட்கார்ந்து எழுந்து மணயை எல்லாம் வெளியில் தள்ளினேன். கோயிலுக்கு அப்பால் இருந்த இடம் வெட்ட வெளியாக இருந்தது. அதனால் இந்தப் பக்கத்தில் நல்ல காற்று. காற்று அள்ளி வரும் மணல்தான் சேர்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அந்த சின்ன இடத்தை தூய்மை செய்ய அரை மணி நேரம் ஆகியிருக்கும்.
நான்கு மணி வாக்கில் புறப்பட்டு விட வேண்டியதுதான். 'நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமல் போவது' அவர்களும் நான் இருப்பதாக எதிர்பார்க்கவில்லை. நான்கு மணி வரை கழித்து விட்டுப் புறப்பட்டு விட்டேன்.
நாகலாபுரம் என்ற ஊரின் மீது பெரிய பாசம் வந்து விட்டது. வயிறு நிறைய சாப்பாடு, தங்குவதற்கு பெரிய மனதோடு அனுமதி, இப்படி எத்தனை இடத்தில் செய்வார்கள். விவசாயக் கிராமம். பசுக்கள் கட்டப்பட்ட வீடுகள். சுறுசுறுப்பான இயக்கங்கள். ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே நகர்ந்தேன். பாதி ஊருக்குப் பிறகு தண்ணீர் குடம் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார்கள். ஊரின் அந்தப் பக்கம் வயல்களில் தண்ணீர் பொங்கி வழிகிறது. சாய் கோயிலில் குழாயில் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இந்தப் பக்கம் தண்ணீர் சுமக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே தொடர்ந்தேன்.
போகப் போக தண்ணீர் எடுத்து வரும் வரிசை நிறையவே தென்பட்டன. சின்னக் குழந்தைகள் கூட தண்ணீர் பாத்திரங்களுடன் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு பனை மர நிழலில் உட்கார்ந்து (உட்காரும் தூரம் கடந்து விட்டிருந்தது) பார்த்துக் கொண்டிருந்தேன். ஊரிலிருந்து வெளியில் போகும் தெரு நெடுஞ்சாலையில் போய்ச் சேர்ந்தது. நெடுஞ்சாலையில் போய் எடுத்து வருகிறார்களோ? கண்ணுக் கெட்டிய தூரம் வரை அவர்கள் தண்ணீருக்காக நிற்கும் இடம் தெரியவில்லை.
இளைப்பாறி எழுந்து கொஞ்ச தூரம் நடந்த பிறகு அதே சாலையில் இடது பக்கம் இருந்த பம்ப்செட்டில் குழந்தைகள் எல்லாம் போய் தண்ணீர் பிடிப்பது தெரிந்தது. அப்போதுதான் கிணற்று மோட்டாரை அணைத்து விட, வீட்டுக்குள் போய் தண்ணீர் பிடித்து வந்து கொண்டிருந்தார்கள்.
ஊரை விட்டு வெளியில் வந்து நெடுஞ்சாலையைச் சேர்ந்தேன். அடுத்த இலக்கு புத்தூர். இரவில் எங்கு தூங்குவது? புத்தூர் வரை அடுத்த சில மணி நேரங்களில் நடந்து போய் விட முடியாது. பிச்சாட்டூர் வரை போய் விடலாம். அங்கிருந்து பேருந்து பிடித்து புத்தூர் போய் விட்டால், நாளைக்கு திருப்பதி போய் விடலாம் என்று கணக்கு. பேருந்து?
கால்கள் சலிக்கும் வரை நடந்த பிறகு வழியில் ஒரு கிராமத்து நுழைவாயிலில் நெடுஞ்சாலை ஓரமாக சாப்பாட்டுக் கடை, அருகிலேயே சாராயக் கடை. சாப்பாட்டுக் கடையில் தண்ணீர் கேட்டுக் குடித்துக் கொண்டேன். அருகிலேயே பேருந்து நிறுத்தம். ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டேன். சாலையில் போகும் வண்டிகள் நின்று கடையில் பாட்டில் வாங்கிக் கொண்டார்கள். 'இந்தப் பக்கமாக போகும் வண்டியில் யாராவது ஏற்றிச் செல்ல மாட்டார்களா' என்று ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. ஓரிரு வண்டிகளில் கை காட்டி அவர்கள் கண்டு கொள்ளாமலேயே நகர்ந்து போனார்கள்.
நடப்பதற்கு நம் காலும், உதவி கேட்பதற்கு நம் கையும்தான் ஒரே வழி என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். பேருந்து ஏற வந்து அதே கல்லில் மறுபக்கம் உட்கார்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் 5 ரூபாய் வாங்கிக் கொண்டு எழுந்து நடையைத் தொடர்ந்தேன். இருட்ட ஆரம்பித்தது. 5 ரூபாயில் புத்தூர் போக முடியாது. புத்தூர் 35 கிலோமீட்டர் தூரம் இருக்கும். 10, 12 ரூபாய் கட்டணம் இருக்கும். நடக்கும் வரை நடந்து தூரத்தைக் குறைத்துக் கொண்டே வரலாம். நடை தொடர்ந்து கொண்டே இருந்தது.

பயணம் - 5 (ஊத்துக் கோட்டை)
ஊத்துக் கோட்டையில் உட்கார்ந்திருந்த கடைத் திண்ணையின் வலது புறம் ஒரு சந்து.
அதற்கு அடுத்து பெரிய உலோகக் குழாய்களை வெல்டிங் மூலம் இணைக்கும் ஒரு கடை. சில மணி நேரங்களுக்குத் தொடர்ச்சியாக வெல்டிங் அடித்து, முடிந்தது குழாயை இரண்டு பேராகத் தூக்கி சந்தின் ஓரத்தில் கிடத்திக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கடைக்கு அப்பால் ஒரு சாப்பாட்டுக் கடை. அங்கு போய் குடிக்கத் தண்ணீர் கேட்டால் தாராளமாக அனுமதித்தார்கள்.
இடது பக்கத்தில் அடுத்தத் திண்ணையில் புதிய மற்றும் பயன்படுத்திய இரு சக்கர வண்டிகளுக்கு கடன் கொடுக்கப்படும் என்று அறிவிப்புப் பலகையோடு ஒரு நிதி நிறுவனத்தின் அலுவலகம். வாசலை திரை போட்டு மறைத்திருந்தார்கள். அதற்கு நேரெதிரே திருமண மண்டபம் ஒன்று. வட்டிக் கடை தொழில் நடத்தி இப்போது வாகன நிதி உதவி என்று கிளை விட்டிருக்கும் குடும்பம், எதிரிலிருக்கும் மண்டபமும் இந்த கடன் கடையும் ஒரே குடும்பத்துக்குச் சொந்தம்.
அதற்கு அப்பால் அலுமினிய மற்றும் பாத்திரங்களில் உலோக வேலை செய்யும் கடை.
பெரியபாளையத்தில் வயல்களுக்கு அருகில் இருக்கும் போதே 'யாரிடமாவது வேலை செய்ய வாய்ப்பு கேட்டு கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாமா' என்று மனம் ஓடியது. 'வெயிலில் நடக்கவே முடியவில்லை, வயல் வேலை செய்ய எப்படி தெம்பு இருக்கும்? அதுவும் புதிய அறிமுகமில்லாத வேலை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்' என்று மனதுக்குள்ளாகவே அந்த ஆலோசனையை புதைத்து விட்டிருந்தேன்.
இங்கு இந்த ஊரில் அலுவலகம் போல ஒரு அமைப்பைப் பார்த்ததும் மீண்டும் அந்த எண்ணம் துளிர் விட்டது. 100 ரூபாய் வரை சம்பாதித்து விட்டால் நன்றாக இருக்கும். திண்ணை மாறி நிதி நிறுவனக் கடைக்கும் அலுமினியக் கடைக்கும் இடையிலான திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி கட்டியவர்கள் வெளியே வருவதும், வாடிக்கையாளர்களை உள்ளே அழைத்துப் போவதுமாக இருந்தார்கள். மதியம் ஒன்றரை மணி தாண்டியிருக்கும் என்று தோன்றியது. ஒரு அம்மா வெளியில் வந்து காரில் ஏறி வீட்டுக்குப் போனார்கள். கூட்டம் குறைந்த பிறகு உள்ளே அணுகி ஏதாவது வேலை இருக்கிறதா என்று கேட்கலாம்.
கணினி தொடர்பான வேலை, கணக்குத் தொடர்பான வேலை என்று ஏதாவது செய்து அவர்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். ஒட்டிப் பிறந்த, அறிமுகம் இல்லாத மனிதர்கள் அணுகுவதற்கு உள்ள தயக்கம் தடுத்துக் கொண்டே இருந்தது.
குண்டாக, கறுப்பாக ஒரு பையனும் அதே திண்ணையில் கீழ் படியில் வந்து உட்கார்ந்தான். பள்ளிக்குப் போகும் வயது. அந்தப் பையன் எங்கு வேலை பார்க்கிறான் என்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் வேலை பார்க்கவில்லையாம். பள்ளியில் படிக்கிறான்.
'இன்றைக்குப் பள்ளிக்குப் போகவில்லையா?'
'இல்லை, யூனிஃபார்ம் வாங்கலை என்று வாத்தியார் வெளியில் அனுப்பி விட்டார்.'
' யூனிஃபார்ம் அரசாங்கமே இலவசமாக தருவதில்லையா' என்றால் அப்படி எதுவும் இல்லை போலிருக்கிறது.
'அப்பா என்ன வேலை பார்க்கிறார்' என்றால்,
'அப்பா இல்லை, அம்மாதான் பார்த்துக் கொள்கிறார்கள். '
'யூனிஃபார்ம் வாங்க எவ்வளவு செலவாகும்?'
'500 ரூபாய் வரை ஆகும்.'
ஏதாவது சம்பாதிக்க முடிந்தால் இவனுக்குக் கூட பண உதவு செய்யலாம்.
அலுமினியக் கடையில் ஒரு பால் பாத்திரம் வந்து சேர்ந்தது. பால் கறந்து எடுத்துப் போய் வியாபாரம் செய்யக் கூடிய பாத்திரம், அடி வளைந்து போய் இருந்தது. நெளிந்திருந்த அடிப்பகுதியை வெண்ணெய் வெட்டுவது போல வெட்டி எடுத்து இன்னொரு புதுத் தகடை அடியில் பொருத்தி அதை பாத்திரத்தின் விளிம்பில் அடிக்க ஆரம்பித்தார். அதைப் பார்க்க நான்கைந்து பேர் கூடியிருந்தார்கள். அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மாய வித்தை போல புத்தம் புது பால் பாத்திரம் தயாராகி விட்டது. அதற்கு ஒரு கைப்பிடி வளையமும் பொருத்தி விட்டிருந்தார். தேர்ந்த ஒரு தொழிலாளியில் கைத்திறம் எப்போதுமே மனதைக் குளிர வைக்கக் கூடிய ஒன்றுதான்.
நான்கைந்து பேர் அண்ணன் தம்பிகள் நிறுவன கூட்டாளிகள் என்று தோன்றியது. கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தவருடன் எல்லோரும் வெளியில் வந்தார்கள். மூத்தவராகத் தெரிந்தவர் காரில் ஏறி நகர்ந்தார். அடுத்தவரும் நடந்து வீட்டுப் பக்கமாக போக, இரண்டு பேர் மட்டும் வாசலில் நின்றிருந்தார்கள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனியாக நின்றிருந்த ஒருவரிடம் போய் இது போல 'மெட்ராசிலிருந்து திருப்பதிக்கு வழிப்பயணமாக வந்திருக்கிறேன். ஏதாவது வேலை கொடுத்தீங்கன்னா அதில் கிடைக்கும் பணம் உதவியாக இருக்கும்' என்று கேட்டேன், தயங்கித் தயங்கித்தான் கேட்டேன்.
'இங்க இருப்பவங்களே வேலை இல்லாம கிடக்கிறோம். வேலை எதுவும் இல்லை' என்று சொல்லி விட்டார். இப்படி பொத்தாம் பொதுவாகக் கேட்டிருக்காமல் குறிப்பாக கணினி அல்லது கணக்கு முறை என்று கேட்டிருந்தால் அவருக்கு ஆர்வம் வந்திருக்குமோ என்னவோ! 'என்னடா இது, இப்படி ஒருவன் கேட்டும் அதற்கு உதவி செய்ய மனமில்லாத உலோபியாக இருக்கிறாரே' என்ற வெறுப்புடன் மனதில் திட்டிக் கொண்டே மீண்டும் திண்ணையில் சரண் புகுந்தேன்.
உச்சி வெயில் இறங்கி கொஞ்சம் மட்டுப்பட ஆரம்பிக்கும் போது நிலை கொள்ளவில்லை. இன்னமும் சூடு குறையவில்லை, அடுத்த கட்டத்துக்கு நகரலாம் என்று கிளப்பி விட்டது. வயிற்றில் பசி, இளைப்பாறிய தெம்பும் அடுத்து ஏதாவது கிடைக்காதா என்று நகர வைத்தது. இறங்கி புத்தூர் நோக்கிய திசையில் நடந்தேன். கடைத்தெரு சீக்கிரமே முடிந்து வீடுகள் தென்பட ஆரம்பித்தேன். மூன்றரை, நான்கு மணி இருக்கும். ஏதாவது வீட்டில் சாப்பிட ஏதாவது கேட்கலாமா என்று நினைப்பதோடு சரியாக இருந்தது.
ஊத்துக் கோட்டை ஆந்திர எல்லையில் இருக்கிறது. ஊர்க் கோடியில் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய ஒரு வரித் துறை சாவடி. இந்தப் பக்கமிருந்து போகும் வாகனங்களுக்கு எந்த சோதனையும் இருப்பதாகத் தோன்றவில்லை. அதைத் தாண்டி இன்னொரு பூட்டியிருந்த கட்டிடமும் ஏதோ அரசுத் துறை பயன்படுத்தும் சாவடிதான். அதன் நிழலில் உட்கார்ந்தேன். மணல் மண்டி பாழடைந்திருப்பதாகத் தோன்றியது. நேரெதிரே வீடுகள், எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து மக்கள் வந்து இந்தப் பக்கம் இருக்கும் கடைகளிலிருந்து பொருள்கள் வாங்கிக் கொண்டு போனார்கள். ஒருவர் அரை லிட்டர் ஃபுரூட்டி பாட்டில் வாங்கிக் கொண்டு போனார். தாகமும், பசியும். 'அடடா இதற்குப் போய் 50 ரூபாய் செலவழித்திருக்கிறாரே!.' பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.
ஆந்திர எல்லைக்குள் நுழைந்தவுடன் இடது பக்கம் முதல் வீட்டில் தண்ணீர் பிடித்து ஊற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டால் குழாயில் குடித்துக் கொள்ள அனுமதித்தார்கள். கிட்டத்தட்ட அரை உயிராக ஆந்திராவுக்குள் நுழைந்தேன்.
'இதுவரை மொழி தெரிந்த ஊர், ஏதாவது பேசி சமாளித்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை இருந்தது. இனிமேல் தெரியாத மொழி பேசும் இடம்' என்று ஒரு பக்கம் தோன்ற, 'திருப்பதியில் கூட தமிழில்தான் பேசுகிறார்கள். இந்த எல்லைப் புற கிராமங்களில் தாராளமாகத் தமிழ் பேசுவார்கள்' என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
ஊத்துக் கோட்டைக்கு இந்த ஆந்திரப் பகுதிக்கும் பெரிய வேறுபாடு. சாலையின் இரு பக்கமும் எந்த விதமான கடைகள், கட்டிடங்கள் இல்லாமல், வயல் வெளிகள், வெற்று நிலங்கள் விரிந்தன.
ஒரு லாரி எடை மேடை, அதன் பக்கத்தில் கடை ஒன்று இருந்தது. கடையில் சாத்துக்குடி சாறு பிழியும் திருகு எந்திரத்துடன் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அந்தக் கடைக்குப் பக்கத்தில் இருந்த லாரி எடை மேடை கட்டிடத்தின் நிழலில் உட்கார்ந்தேன். இங்கும் இரண்டு மூன்று பேர் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். யாரும் என்னை அணுகவும் இல்லை எதையும் கேட்கவும் இல்லை.
வெயில் இன்னும் குறைந்திருக்கவில்லை. போதுமான அளவு இளைப்பாறுதல் கிடைத்த பிறகு நகர ஆரம்பித்தேன். வலது பக்கம் சாலையை விட உயரமான வீடுகள். கிராமத்து அமைப்புகள். ஒரு வீட்டின் வெளியில் குவித்திருந்த மணலில் உட்கார்ந்தேன். இன்னும் நகர வேண்டும்.
கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கிராமம் தென்படுவதாகப் பட்டது. தொடக்கத்திலேயே இடது பக்கம் ஒரு கோயில் கோபுரம் தெரிந்தது. 'இருட்டுவது வரை கோயிலுக்குள் போய் விடலாம்' என்று போனால் வெளியில் செருப்புப் போட இடம். 'அதற்கு காசு கொடுக்க வேண்டுமா?' பையில் 1 ரூபாய் மீந்திருந்தது. எவ்வளவு கட்டணம் என்று கேட்காமல் ஒரு ரூபாயைக் கையில் கொடுத்து விட்டு வேகமாக நகர்ந்து விட்டேன்.
கோயிலில் அதிகம் கூட்டம் இல்லை. மாலை வேளை பூசை ஆரம்பிக்கும் சமயம். இன்னும் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். முன் பக்கம் உயரமான தூண்களுடன் அகலமான மண்டபம். நூறு பேருக்கும் மேல் உட்கார முடியும்.
காவி உடையுடன், ஜடாமுடியுடன் ஒரு சாமியார் மண்டபத்தின் நுழைவாயிலுக்கு அருகிலான தூண் பக்கத்தில் இரண்டு இளைஞர்களுடன் உட்கார்ந்திருந்தார். அவர்களுடன் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு இயல்பான முடி நீளமாகத் தொங்கியது. ஜடாமுடி பொருத்தியது போல இருந்தது. உயரமாக கம்பீரமாக இருந்தார்.
கோயிலுக்குள் போகும் வாசல் அருகில் நாதசுவரம் வாசிக்க ஒருவர் உட்கார்ந்திருந்தார். இன்னும் ஆரம்பிக்கவில்லை. குடி தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்தது. அதை எடுத்து தண்ணீர்க் குழாயில் நன்கு கழுவி தண்ணீர் பிடித்து அருகில் வைத்துக் கொண்டேன். தாகம் தீரும் வரை ஆசை தீரும் வரை குடித்துக் கொண்டே இருந்தேன்.
இரண்டு குடும்பங்கள் கார் நிறைய வந்தார்கள். இரண்டு அல்லது மூன்று தம்பதியர், அவர்கள் பெற்றோர், குழந்தைகள் என்று கோயில் முழுவதும் பரவினார்கள். நானும் ஒரு முறை கோயிலுக்குள் உள்ளே போய் சாமி பார்த்து விட்டு வெளியில் வந்து உட்கார்ந்து கொண்டேன். நாதஸ்வர குழுவிற்கு இன்னோரு நாதஸ்வர வித்வான் பெண்மணி ஒருவரும், தவில் அடிப்பவர்களும், சிங்கி அடிப்பவரும் உட்கார்ந்தார்கள். பூசைப் பொருட்கள் உள்ளே போய்க் கொண்டிருந்தன. பூசை முடிந்து ஏதாவது பிரசாதம் சாப்பிடக் கிடைக்கும் என்று ஒரு எண்ணம்.
'சாமி, நீங்க எப்படி இருக்கீங்க' என்று அப்போதுதான் உள்ளே நுழைந்த ஒரு மேட்டுக் குடி அம்மா சாமியாரின் அருகில் போனார்கள். அவரது கணவர், வளர்ந்த பையனும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். 'உங்களை அங்கு காணவில்லை என்று விசாரித்தோம். இங்குதான் வந்திருப்பீர்கள் என்று வந்தோம்' என்று விளக்கமும் சொன்னார். நல்ல டிமாண்ட் உள்ள சாமியார்தான்.
சாமியார் இளைஞர்களை தொடரச் சொல்லி விட்டு இவர்களோடு நடக்க ஆரம்பித்தார். அவர்கள் கோவிலை விட்டுப் போகும் வரை அவர்களுடனேயே சுற்றி வெளியில் போய் கார் வரை வழியனுப்பி விட்டு வந்தார். அதன் பிறகுதான் இளைஞர்களுக்கு வழி காட்டுதலை முடித்து வைத்து அவர்களையும் அனுப்பினார். நாமும் போய் இவரிடம் பேசிப் பார்க்கலாமா?
'திருப்பதியில போய்ப் பார்த்திருக்காங்க, அங்க இல்லைன்னா இந்தக் கோயிலுக்குத்தான் வந்திருப்பேன்னு நினைத்து இங்கயும் தேடிக்கிட்டு வந்துட்டாங்க' என்று இன்னொருவரிடம் பெருமை பொங்கச் சொல்வதைப் பார்த்ததும் அவர் மீதிருந்த மதிப்பெல்லாம் இடிந்து விழுந்தது. இது கார்பொரேட் துறவி, காசுதான் இவருக்குக் கடவுள் என்பது உறைத்தது.
இதற்குள் மாலை வழிபாடு தொடங்கும் அறிகுறிகள் தெரிந்தன. மங்கள இசை இசைக்க ஆரம்பித்தார்கள். ஒரு அம்மா தனது குழந்தைகளுடன் வந்து ஒரு ஓரமாக நின்றார்கள். இரட்டைக் குடும்பத்தினர் உள்ளே போனார்கள். பரபரப்பாக மணி அடிக்க ஆரம்பித்தார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்து விட்டு கொஞ்ச நேரம் எழுந்து நிற்கவும் செய்தேன்.
எதிர்பார்த்தது போலவே கோவிலின் வெளிக் கதவின் அருகில் இருந்த சின்ன அலுவலக வாசலில் பாத்திரத்துடன் ஒரு பூசாரி வந்து உட்கார்ந்தார். எல்லோரும் வரிசையாகப் போய் தொன்னையில் பிரசாதம் வாங்க ஆரம்பித்தார்கள். கேசரி. ஒரு சின்னக் கரண்டி அளவு கிடைத்தது. சிறிது சிறிதாக சாப்பிட்டு முடித்து, கையைக் கழுவி தண்ணீரும் குடித்துக் கொண்டேன். இன்னும் எவ்வளவு நேரம் இங்கு இருக்க முடியும். இந்தக் கோயில் வழக்கமான பிராமணீய கோவிலாகத்தான் தெரிந்தது. பசிக்கு சாப்பாடு, தங்க அனுமதி எல்லாம் எதிர்பார்க்க முடியாது. வேறு இடம் பார்க்க வேண்டியதுதான்.
வெளியில் வந்து செருப்பை மாட்டிக் கொண்டு ஊருக்குள் நடந்தேன். ஊரில் சாலையின் இரண்டு பக்கமும் நெருக்கமான வீடுகள். பார்த்துக் கொண்டே நடந்தேன். வீட்டிலிருந்து கிளம்பியது வரை வேளா வேளைக்கு ஏதாவது சாப்பிடக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
முதல் நாள் காலையில் எதுவும் சாப்பிடவில்லை. மதியம் ஒரு குச்சி ஐஸ். மாலையில் ஒரு தேநீர். இரவு ஒரு தோசை. இன்றைக்குக் காலையில் இட்லி. தொடர்ந்து குச்சி ஐஸ். மதியம் ரஸ்னா. இப்போது மாலையில் கேசரி. இரண்டு நாட்கள் கூட முடியவில்லை. எத்தனையோ மாதங்கள் ஓடி விட்டது போன்ற உணர்வு.
ஊரை விட்டு வெளியில் வந்து கொஞ்ச தூரம் நடந்த பிறகு இடது பக்கம் வெளிச்சப் புள்ளிகள் தெரிந்தன. அடுத்த சின்ன கிராமம், சாலையை விட்டுக்கொஞ்சம் விலகி இருந்தது. அவர்களுக்கான பேருந்து நிறுத்தம் சாலையோரத்தில். வலது புற நிறுத்தத்துக்கு பயணியர் நிழல் கட்டிடம் ஒன்றும் இருந்தது. அதன் வெளியில் கல்லில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார்.
'ஐயா கால் நடையாக போய்க் கொண்டிருக்கிறேன். இங்கு படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு போகலாமா' என்று கேட்டதற்கு அனுமதி கொடுத்து விட்டார். அது அவரது இடமாக இல்லா விட்டாலும் உள்ளூர் ஆள் ஒருவர் அறிய படுத்துக் கொள்வது மற்றவர்களின் கேள்விகளைக் குறைத்து விடலாம். நிறைய பேர் வந்து நின்று பேருந்து ஏறினார்கள். இவர் வெகு நேரம் உட்கார்ந்திருந்தார் போலிருக்கிறது. உட்கார்ந்து, படுத்த கொஞ்ச நேரத்தில் தூக்கம் தழுவிக் கொண்டது.
தூக்கத்திலேயே வெளியில் பெரிய மழை பெய்யும் ஓசை கேட்டது. இந்த பேருந்து பயணியர் மண்டபம், அழுக்கில்லாமல், ஒழுகாமல் பாதுகாத்தது. மழை கொட்டித் தீர்த்தது. எழுந்திருந்து நகர வேண்டும். இரவில்தான் தூரத்தைக் கடக்க முடியும் என்று மனம் துடித்துக் கொண்டே இருந்தாலும், தூக்கம் அரைகுறையாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது. நல்ல தூக்கம்! இரவெல்லாம் வாகனங்கள் நகர்ந்து கொண்டிருந்ததை மட்டும் உணர்ந்து கொண்டே இருந்தேன்.
அதிகாலையில் பேருந்து ஏற வந்த ஒரு இளைஞன் பேச்சுக் கொடுத்தான்.
'எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கு போகிறீர்கள்?'
'சாப்பிட ஏதாவது கிடைக்குமா, எங்கே கிடைக்கும்' என்று நான் கேட்க,
'கொஞ்ச தூரம் போனால் ஒரு உணவு விடுதி இருக்கிறது. பேருந்துகள், லாரிகள் நிற்கும் இடம்' என்று வழி காட்டினான்.
'கையில் காசு இல்லை, திருப்பதி வரை போவதற்கு ஏதாவது உதவி?'
'அந்த உணவு விடுதியிலேயே ஏதாவது லாரியில் கேட்டால் ஏற்றிச் செல்வார்கள்' என்று அனுப்பி விட்டான்.
இதற்குள் பொழுது புலர ஆரம்பித்திருந்தது. மழையில் பூமியும் நன்கு குளிர்ந்திருந்தது. வயல்கள் இரண்டு பக்கமும். சாலையில் நடந்து நகர்ந்தேன். சாப்பிடும் இடம் என்பது நெடுஞ்சாலை ஓர வண்டி நிறுத்தும் உணவு விடுதி. அங்கும் உள்ளே போய் தண்ணீர் குடித்துக் கொண்டேன். அதற்கு வெளியில் நின்று ஏற்றிச் செல்ல ஏதாவது வாகனம் வருமா என்று காத்திருந்தேன். பல வாகனங்களை கை நீட்டி நிறுத்த முயற்சித்தாலும் யாருமே நிறுத்தவில்லை.
ஓரிரு கிலோமீட்டரில் இடது புற வயல் ஒன்றில் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரில் முகம் கழுவி துணி நனைத்துக்கொண்டேன். அதன் அருகில் இருந்த மதகில் உட்கார்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டேன். அத்துவானக் காடு, மலைகள், காடுகள் என்று வர ஆரம்பித்தது.
'எங்கு வந்து மாட்டிக் கொண்டோம். போய்ச் சேருவதற்கு உடம்பில் சக்தி இருக்குமா? அடுத்த இரவில் எங்கு தங்குவோம்? திருப்பதி போன பிறகு திரும்பி வர வழி என்ன? கோயில் நிர்வாகியிடம் போய் ஏதாவது வேலை கேட்டு ஊர் திரும்ப பணம் கேட்கலாம்' என்று ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.
'என்னடா இவ்வளவு வண்டிகள் போகின்றன, ஒருவருக்காவது நிறுத்தி ஏற்றிக் கொண்டு போக வேண்டும் என்று தோன்ற மாட்டேன் என்கிறதே' என்று கோபமும் பொங்கியது.
'இப்படி மண்டிய தலை முடியும், அழுக்கான துணியும், பசி படர்ந்த முகமும் இருந்தால் யார்தான் ஏற்றிக் கொள்ள நினைப்பார்கள்' என்று இன்னொரு பக்கமும் காரணமும் கற்பித்தது. நடந்து கொண்டே இருந்தேன்.
நெடுஞ்சாலை புறவழிச்சாலையாகப் பிரிய, ஊருக்குள் போகும் சாலை கவட்டையாக பிரிந்தது. அதற்கு முன்பு சாலையின் வலது புறம் ஒரு மரத்தடி சாமிக்கு பூசை செய்யும் ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார் ஒரு இளைஞர். அதுவும் உட்காருவதற்கு தோதுவான இடமாகப் பட்டது. போய் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டேன். மரத்துக்கு அப்பால் வயல் வெளிகள். குளுமையான சூழல்.
இரு சக்கர வண்டியில் வந்திருந்தார். தொழில் முறை பூசாரி இல்லை என்று தெரிந்தது. ஏதோ வேண்டுதலுக்காக வழிபடுகிறார். அவருக்கும் இப்படி ஒருவர் சாமி கும்பிட வந்ததில் நிறைவு. கொஞ்ச நேரத்தில் என் பக்கம் திரும்பி, 'இருங்க, பிரசாதம் உங்களுக்குத் தருகிறேன்' என்று தெலுங்கில் சொன்னார். எனது பசி அவருக்குக் கேட்டிருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட உணர்ச்சிகள் மரத்துப் போன நிலையில் உட்கார்ந்து அவரது செயல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். 10-15 நிமிடங்களுக்கு, தான் செய்யும் வழிபாட்டு செயல்களை எல்லாம் செய்து விட்டு சூடம் காட்டி முடித்தார். ஒரு பாத்திரத்தில் நிறைய இருந்த சர்க்கரை பொங்கலை ஒரு சிறிதளவு மட்டும் தான் எடுத்து பிரசாதமாக சாப்பிட்டு விட்டு ஒரு தொன்னையில் மீதியை என்னிடம் கொடுத்து விட்டார். நன்றியுணர்வுடன் அதைச் சாப்பிட ஆரம்பித்தேன். அவர் இரு சக்கர வண்டியில் கிளம்பி விட்டார்.
சாப்பிட்டு விட்டு மர நிழலில் படுத்து இளைப்பாறினேன். சாலையின் அந்தப் பக்கம், ஒரு பண்ணை வீடு போன்ற கட்டிடம், வெளிச் சுற்றுச் சுவருடன். வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், அதற்குள் போய் கூடியிருந்தார்கள். அவர்களுக்குச் சாப்பிடும் இடம் என்று தோன்றியது. அரை மணி நேரம் ஒரு மணி நேரம் தாண்டியதும் எதிரில் போய்க் குடிக்கத் தண்ணீர் கேட்டேன். ஒரு தொட்டியில் தண்ணீரில் தண்ணீர் பாட்டில்களை மிதக்க விட்டிருந்தார்கள். அதிலிருந்து எடுத்துக் குடித்துக் கொள்ளச் சொன்னார்.

பயணம் - 4 (பெரியபாளையம்)
பெரியபாளையம் வழக்கமான கோயில் நகரமாக இருந்தது. கடைத்தெருவில், பக்தியையும் கடவுளையும் பொட்டலமாகப் போட்டு 2 ரூபாயில் ஆரம்பித்து விற்று விடும் வழக்கமான கோயில் நகரமாகத் தெரிந்தது.
பூக்கடைகளையும் பூசைப் பொருள் கடைகளையும் தாண்டி ஒரு கோவில் கோபுரம் தெரிந்தது. அதற்கு இறங்கிப் போகும் படிகளில் போனால் புதர் மண்டிக் கிடந்தது. கதவும் சாத்தியிருந்தது. சரி அதிகம் ஆள் வராத கோயில் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இறங்கிப் போய் மரங்களில் நிழலில் சாத்தியிருந்த நிலையில் உட்கார்ந்து கொண்டேன். வெயில் குறையும் வரை இங்கேயே கழித்து விட்டு அடுத்தக் கட்ட பயணத்தைத் தொடரலாம்.
உட்கார்ந்து சில நிமிடங்களிலேயே கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது. எழுந்து விலகி நின்றால் கதவு திறந்து ஒரு பூசாரி நின்றார். 'இங்க எப்படி வந்த?' என்று அதிர்ந்து விட்டார். 'இது உள்ளே வரும் வழி கிடையாது, முன்பக்கம் வாசல் இருக்கிறது. இங்கே உட்கார எல்லாம் கூடாது' என்று பேசிக் கொண்டே அவருடனேயே என்னையும் மேலே சாலைக்குக் கொண்டு வந்து விட்டார். அவர் கடைகள் பக்கம் போக நான் சாலையில் நடந்து இடது புறமாகத் திரும்பிய ஊத்துக் கோட்டை போகும் சாலையில் திரும்பினேன். ஊரும் கோயில்களும், தங்கும் விடுதிகளும் அந்த பாலம் தாண்டியும் தென்பட்டன.
பாலத்தைத் தாண்டி வலது புறம், 'தங்கும் அறைகள் கிடைக்கும்' என்று எழுதப்பட்ட இடத்தில் தென்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த சூழ்நிலை. வேலிப் படலைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். ஆள் நடமாட்டமே இல்லை. அறைக்கதவுகள் எல்லாமே வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தன. வரிசையாக அறைகள், ஒரே திண்ணை முன்புறம். கொஞசம் குரல் கொடுத்தும் யாரும் வரவில்லை. திண்ணையில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டேன். மரக் கிளைகளுக்கு அப்பால் சூரியன் தாக்கிக் கொண்டிருந்தான். இங்கு குளுமையாக இருந்தது.
கொஞ்ச நேரம் படுத்துக் கண்ணயர்ந்தும் இருப்பேன், அந்த இடத்தின் மேலாளர் வந்து விட்டார். 'கொஞ்ச நேரம் இங்கு படுத்து ஓய்வெடுத்து விட்டுப் போகலாமா?' என்று கேட்டால், 'அதெல்லாம் முடியாது, அந்தப் பக்கமா போய்ப் பாருங்க, இங்க எல்லாம் தண்ணீர் ஊற்றி கழுவி விடும் நேரம்' என்று மரியாதையாக அனுப்பி வைத்து விட்டார். வெளியில் வந்து தெருவோர குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டேன். கிராமக் குடிநீர் திட்டம் என்று கறுப்பு தொட்டிகளில் குழாய் பொருத்தி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி இன்னொரு தங்கும் அறைகள் வளாகம், வெளிச்சுவரை ஒட்டி திண்ணை போலக் கட்டியிருந்தார்கள். அதில் உட்கார்ந்து கொண்டேன். யாருக்கும் தொந்தரவாகி விடாத இடம். பசி, தாகம், களைப்பு, மனச் சோர்வு என்று அழுத்திக் கொண்டிருந்தன. பையில் 5 ரூபாய் மீந்திருந்தது. முந்தைய நாள் போலவே அந்த வழியாக வந்த ஐஸ் காரரிடம் ஒரு ஐஸ் வாங்கி 5 ரூபாய் செலவழிந்தது. அதை ரசித்து, வெகு நேரம் சாப்பிட்டேன். இனிமேல் ஊத்துக் கோட்டை நோக்கி நடக்க வேண்டியதுதான்.
இந்தத் தங்கும் விடுதியில் அறைகள் எடுத்திருந்தவர்கள் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள். உடம்பில் கொஞ்சம் உயிர் வந்திருக்க சாலையில் நடக்க ஆரம்பித்தேன். சில நூறு மீட்டர்களில் ஊர் முடிந்து வயல் வெளிகள் வந்து விட்டன. வயல் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. வெயில் கடுமையாகத் தாக்கியது.
சிறிது நேரத்திலேயே நடக்க முடியாமல் சாலையோர மர நிழலில் உட்கார்ந்து கொண்டேன். அருகிலேயே குடிநீர்த் தொட்டி இருக்கும் மரமாகப் பார்த்து உட்கார்ந்தேன். தாகம் எடுத்தால் தண்ணீர் குடித்துக் கொள்ளலாம் அதிகம் நடக்க வேண்டியதில்லை.
கொஞ்ச நேரம் உட்கார்ந்து, படுத்து இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது வாடகை மகிழ்வூர்தி ஒன்று சாலையில் U திருப்பம் எடுத்து இந்த மரத்தை நோக்கி வந்தது. 'சாலையில் அவ்வளவு இடம் இருக்கிறது இங்கு ஏன் வரப்போகிறார்' என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, ஓரம் கட்டி மரத்தை நோக்கியே வண்டியை ஓட்டினார். நான் எழுந்து ஒதுங்க வேண்டியிருந்தது. உட்கார்ந்திருக்கும்படி உள்ளிருந்து சைகை காட்டினாலும் மேலும் மேலும் நெருக்கி மர நிழலில் வண்டியை நிறுத்திக் கொண்டார்.
வேலூரிலிருந்து வரும் வாடகைக் கார். காரில் வந்தவர்கள் கோவிலுக்குப் போயிருக்கிறார்களாம். இவர் காத்திருப்பதற்காக நிழல் தேடி இந்த மரத்தடியைத் தேடிப் பிடித்திருக்கிறார். செல்பேசியில் பாட்டு ஒலிக்க விட்டார், கார்க் கதவைத் திறந்து வைத்து சொகுசாகச் சாய்ந்து கொண்டார். என்னையும் உள்ளே இருக்கையில் உட்கார்ந்து கொள்ள அழைப்பாரா என்று ஒரு எண்ணம் இருந்தது. நின்று கொண்டே இருந்தேன்.
பல முறை மனதில் ஒத்திகை பார்த்த பிறகு
'மெட்ராசிலிருந்து திருப்பதிக்கு கால்நடையாக போய் கொண்டிருக்கிறேன், நீங்க ஏதாவது உதவி செய்தால் அடுத்த ஊர் வரை பேருந்தில் போய் ஓய்வெடுத்துக் கொள்வேன்' என்று கேட்க, 5 ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்தார். நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மரங்கள் தாண்டி உட்கார வசதியாக கல் ஒன்று போட்டிருந்த மரத்தடியில் அந்தக் கல்லில் உட்கார்ந்து கொண்டேன்.
'வயலுக்கப்பால் அன்னா தெரியுதுல்லா, அதுதான் எங்க ஊரு' என்று ஒரு பெரியவர் வந்து பேச்சுக் கொடுத்தார். விவசாயத் தொழிலாளியாம். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கு போய் விடுவாராம். நான் உட்கார்ந்திருந்த இடத்தில் இரு சக்கர வண்டிகளையும் மிதிவண்டிகளையும் நிறுத்தி விட்டு வயலுக்குள் வேலை செய்ய பல பேர் போயிருந்தார்கள். வயலைத் தாண்டி கிணற்றடியில் ஏதோ பணிகள் நடந்து கொண்டிருந்தன.
இந்தப் பெரியவர் போன பிறகு நான்கைந்து பேர் வந்து அதே மரத்தடியில் உட்கார்ந்தார்கள். ஒருவர் மட்டும் இரு சக்கர வண்டி ஓட்டி வந்திருந்தார். மற்றவர்கள் அவரிடம் வேலை பார்ப்பவர்களாக இருக்கலாம்.
ஊர் நடப்புகள், ஊர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் 'குழம்பு வைக்க அண்ணே' என்று சொல்லி புளியம் பழங்களை துண்டிலிருந்து தட்டி உறிக்க ஆரம்பித்தார் பீடி பற்ற வைத்தார் இன்னொருவர். 'இங்க ஒரு கல் இருக்குமே' என்று பேச்சு வர, 'அதோ அவர் உட்கார்ந்திருக்கிறார்' என்று மறுமொழி. என்னிடம் நேரடியாக யாரும் பேசவில்லை.
வெகு நேரம் அங்கு கழிந்தது. அந்த இடத்திலோ, கண்ணுக்கெட்டிய தூரத்திலோ இளைப்பாறுவதற்கோ படுப்பதற்கோ இடம் தென்படவில்லை. தொடர்ந்து நடப்பதும் சாத்தியமில்லை. இந்த பெரியபாளையம் ஊரில் எதுவும் நடக்காது, ஊத்துக் கோட்டை போய்ச் சேர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஊத்துக் கோட்டைக்கு 19 கிலோமீட்டர்கள், பேருந்தில் 6 ரூபாய் கட்டணம் இருக்கும். 5 ரூபாய்தான் இருந்தது. 'பேருந்தில் ஏறி 1 ரூபாய்க்கு சமாதானம் சொல்ல முயற்சிக்கலாமா அல்லது முன்பே யாரிடமாவது காசு வாங்கி பேருந்தில் மதிப்பாக போகலாம். அல்லது அந்தப் பக்கமாக போகும் லாரி எதிலாவது இடம் கேட்டு ஏறிக் கொள்ளலாம்.'
ஒரு சின்ன லாரி தண்ணீர் குடிக்கும் இடத்தினருகில் நின்றது. எழுந்து அதனருகில் போய் ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன். இது போல 'திருப்பதி போக வேண்டும், ஊத்துக் கோட்டை வரை கொண்டு விட்டு விட முடியுமா?'. 'இல்லைங்க, ஊத்துக் கோட்டை போகவில்லை. இங்கிருந்து ஊத்துக் கோட்டை போக லாரி எதுவும் கிடைக்காது. பஸ்தான், அதோ பெரியபாளையம் ஊர்ப் பக்கம் போய் ஸ்கூல் முன்னாடி நின்றால் பஸ் வரும்'
'ஊத்துக் கோட்டைக்கு பஸ் டிக்கெட் எவ்வளவு இருக்கும்?, என்கிட்ட 5 ரூபாய்தான் இருக்கும். நீங்க உதவி செய்ய முடியுமா?'
'பஸ் டிக்கெட் 6 ரூபாயோ, 7 ரூபாயோ' என்று ஒரு 5 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்து விட்டார்.
இங்கேயே உட்கார்ந்திருந்தால் வெயிலில் வாடிக் கருவாடாகி விடுவேன் என்று பேருந்தைப் பிடிக்க முடிவு செய்தேன். 'பெரியபாளையத்திலிருந்து ஓரிரு கிலோமீட்டர்கள் நடந்து விட்டோம். திரும்பிப் போவதை விட முன்னோக்கி நடந்து அடுத்த நிறுத்தத்துக்குப் போகலாம். பேருந்து கட்டணத்தில் கூட ஒரு ரூபாய் மிச்சப்பட்டு விடலாம்' என்று நினைத்தால் அடுத்த நிறுத்தம் வெகு தூரத்தில் என்றார்கள். பெரிய பாளையம் திரும்பிப் போகும்படி அறிவுறுத்தினார்கள். ஒரு வயதான அம்மாவும் கைக் குழந்தையுடன் ஒரு அம்மாவும் அதே போல வழி கேட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். நானும் அதே திசையில் நடக்க ஆரம்பித்தேன்.
ஊரின் மேல்நிலைப் பள்ளிக்கு முன்பு பேருந்து நிறுத்தம். வெயிலில் கூரை கொதித்து தணல் இறங்கிக் கொண்டிருந்தது. போய் நின்று கொண்டேன். பல நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து வந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
6 ரூபாய் கட்டணத்தில் ஒரு பேருந்தில் உட்கார்வது இப்படி ஒரு சொர்க்கம் என்பதை உணர்ந்ததே இல்லை. முதுகை சாய்க்க இதமான பின் ஆதரவு, நிம்மதியாக கண்களை மூடிக் கொள்ளலாம், அடி அடியாக நகர வேண்டிய தூரத்தை வேகமாக தாண்டிக் கொண்டிருக்கும் இயந்திர ஆற்றல். பேருந்து தொடர்ந்து போய்க் கொண்டே இருக்க வேண்டும், நன்கு தூங்கி எழுந்து விடலாம் என்று எண்ணம்.
முன்புற இருக்கையில் கைக்குழந்தையுடன் ஒரு அம்மா, குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டே வந்தார்கள். ஊத்துக் கோட்டை வந்து விட்டது. பேருந்து நிலையத்தில் நின்றதும் எல்லோரும் இறங்கினார்கள். உடனேயே இறங்கி விடும் படி யாரும் அச்சுறுத்த வில்லை. பேருந்து மறுபடியும் புறப்படுவது வரை உட்கார்ந்திருக்கலாமோ? ஆனால் இறங்கி விட்டேன்.
பையில் 4 ரூபாய்கள் இருந்தன. வயிற்றில் பசித்தீ மூண்டிருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்து சாலையில் நடந்தேன். அடுத்த ஊர் போகும் திருப்பதி, புத்தூர், பிச்சாட்டூர் என்று கிலோமீட்டர் அடையாளங்கள். கடைத்தெருவில் பூட்டியிருந்த கடை ஒன்றின் முன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். எதிரில் இருந்த குளிர்பானக் கடையில் 3 ரூபாய்க்கு ரசனா பொதி ஒன்று வாங்கிக் குடித்ததில் கொஞ்சம் சர்க்கரை சத்து கிடைத்தது. வெயில் குறைவே இல்லாமல் அடித்துக் கொண்டிருந்தது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)