இரவு வீடு திரும்பியதும் துணிகளைக் கூட மாற்றாமல், கை கால்கள் கழுவாமல் தொலைபேசினேன். 'ஏன் நீ பேசுவதேயில்லை'. 'அதான் மனசும் மனசும் பேசிக் கொள்கிறதே!'
பெரியமேட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது வண்டியில் ஏதோ குளறுபடி ஆகி இழு இழுவென்று இழுத்துக் கொண்டிருந்தது. ஸ்பென்சர் டேலி அருகில் இறங்கிக் கொண்டு கூட வந்தவரை அனுப்பி விட்டேன். அலுவலகம் நோக்கி நடக்கும் போது வண்டி ஓட்டுகையில் தவற விட்டிருந்த அழைப்புகளின் எண்களைப் பார்த்தேன். முதல் எண் வீட்டு எண், இரண்டாவது அலைபேசி எண். பொறுமை என்பது மருந்துக்கும் கிடையாது.
ஏன் போனை எடுக்கலை'. 'வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். வாகன நெரிசலில் ஓரத்தில் ஒதுங்கி, கண்ணாடியை கழற்றி விட்டு, தலைக் கவசத்தைக் கழற்றி விட்டு, திரும்பவும் கண்ணாடி போட்டுக் கொண்டு அலை பேசியை எடுத்துப் பேச ஆரம்பிக்க வேண்டும். இவ்வளவுக்குள் மணி அடிப்பது நின்று போயிருக்கும். அதான் வண்டி ஓட்டும் போது அலைபேசி மணி அடித்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன். பிற்பாடு கூப்பிட்டுப் பேசிக் கொள்ளலாம்'
அப்படியே சாலையெல்லாம் பேசிப் பேசி நடந்து கடையில் சாப்பிடுவதற்கு பண்டங்கள் வாங்கிக் கொண்டு - அலுவலகத்தில் 14 பேர் இருக்கிறார்கள் என்று தகவல் - அது போதாமல், நந்தினி கடையில் இன்னும் இனிப்புகள் வாங்கிக் கொண்டு நடையைத் தொடர்ந்தேன். 'நடந்து கொண்டே பேசினால் எங்காவது மோதி விடுவாய், அப்புறமா பேசலாம்' என்று வைத்து விட்டோம்.
அலுவலகத்துக்கு வந்தால், திட்டமிட்டிருந்த பணிகள் சுறுசுறுப்பாகவே நடந்து வருவதாகத் தெரிந்தது. இன்னும் மூன்று நாட்களில் எதையும் மீதி வைக்காமல் முடித்து விட வேண்டும் என்று திட்டம். வெளிப்படையாகத் தெரிந்த வழுக்களை களைந்து சிக்கலில் மாட்டியிருக்கும் வேலைகளை விடுவிக்க வேண்டும். மென்பொருளைப் பொறுத்தவரை எந்தக் குறையும் இல்லாமல் கொடுத்து விட்டு அப்புறம் அந்தப் பக்கம் வாட்டிக் கொள்ளலாம். நம் பக்கம் கொஞ்சம் தளர்வுகளை விட்டு விட்டு, வாடிக்கையாளர் இடத்தில் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதால், நம்மைக் குறை சொல்ல இடம் கிடைத்து விடுகிறது.
இன்றைக்குக் காலையில் வழக்கம் போல 7 மணிக்கு சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.
போயிருந்த போது அங்கு அச்சியந்திரம் இயங்காமல் இருப்பதை சரி செய்ய முடியாமல் கையோடு கணினியை எடுத்துக் கொண்டு வந்து விட்டோம். அங்கு உட்கார்ந்திருந்த போது சார் பேசினார். பணம் கேட்டு பல தகவல்களுக்கு இது வரை பதிலில்லை. நான் இருப்பதை அறிந்து தொலைபேசியை எனக்குக் கொடுக்கச் சொல்லிப் பேசினார் 'பணி நிலவரங்களைக் கேட்டு விட்டு, பணம் அடுத்த வாரம் கொடுத்து விடுவதாகக் குறிப்பிட்டார்.
'ஆமா, எங்களிடம் இயந்திரங்களோ, நிலமோ, கட்டிடமோ கிடையாது, நீங்க கொடுக்கும் பணம் வந்தால்தான் வருமானம். தாமதமானால் வயிற்றில் துணிதான்' என்று சொல்லி வைத்தேன். அதை கிண்டலாக மாற்ற முயன்றார், பலிக்கவில்லை. 'அப்படிப் பார்த்தா நாங்க கவனமா இருக்கணும் போலிருக்கே, மென்பொருளைப் பராமரிக்க நீங்க இல்லாமல் போனா என்ன செய்வது' 'அதாவது கம்பெனி முழுகிப் போய் விட்டா என்ன செய்வதுன்னு கேட்கறீங்களா' என்று உடைத்துக் கேட்டதும் விட்டு விட்டார். 'அதுக்குத்தான், ஒழுங்கா சமயத்துக்குப் பணம் கொடுத்து எங்களுக்குக் கை கொடுங்கன்னு சொல்றேன்'
கணினியில் அச்சியந்திரத்தை அமைக்க முயற்சிக்கும் போது, இன்னொரு நகைச்சுவைக்கு முயன்றார். 'ஒரு டெபிட் நோட் போடு, 50000 ரூபாய்க்கு. இங்கு வந்து அச்சியந்திரத்தை அமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டார்'. அதுவும் பெரிதாக எடுபடவில்லை.
'வாணியம்பாடியில் டேனரி மிகவும் மேம்பட்டு விட்டது. நான் மென்பொருளைச் சொல்லவில்லை. பொதுவான நிலவரம்' என்றார். அப்படி பொதுவான பணி முறைகள் மேம்பட்டதற்குக் காரணம் மென்பொருள் பயன்படுத்துவதுதான் என்று அவருக்கும் புரிகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட பல படிகள் முன்னேறி விட்டார்கள். அங்கு வேலை செய்யும் மக்களை வைத்தே எல்லாவற்றையும் செய்ய வைத்தார்.
இங்கு அலுவலகத்திலும், தரகு வேலைக்கான மென்பொருள் செய்து கொடுத்திருக்கிறோம். அது 'ஏப்ரல் 1 முதல் முழுவதுமாக பயன்படுத்தப்பட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தேன். 'மென்பொருளில் மாறுதல் ஏதாவது வேண்டுமானால் சொல்லுங்கள். ஆனா இவ்வளவு சிரமப்பட்டு செய்ததை பயன்படுத்தாமல் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது'. கேட்ட பணிகள் எல்லாம் குழப்பம் இல்லாமல் செய்து கொள்ள முடிந்தது.
ஐந்தரை மணிக்கு வெளியில் வந்த பிறகு இங்கு திரும்பினோம். 3 மணிக்கு சந்திப்பு என்று ஏற்பாடு செய்திருக்க அலுவலகத்திலிருந்து கிளம்பும் போதே இரண்டரை தாண்டிவிட்டிருந்தது. சாப்பிட்டு விட்டு எல்லோரும் முடிப்பது வரைக் காத்திருந்ததில் தாமதம் ஆகி விட்டது. வழியில் பெட்ரோலும் போட்டுக் கொண்டு ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர் வழியாக ஆனைக்கார் வளாகத்துக்கு வந்து சேரும் போது 10 நிமிடங்கள் தாமதமாகியிருந்தது. மேலே அலுவலகத்துக்குப் போனால் எல்லோரும் காத்திருந்தார்கள்.
என்னென்ன பணிகள் முடிந்திருக்கின்றன. இப்போது என்னென்ன பயன்படுகின்றன. என்னென்ன குறைகள், என்னென்ன புகார்கள் எழுந்தன என்று வழக்கம் போல அலசி விட்டு, இன்னும் ஒரு தம் பிடித்தால் 2 மாதங்களில் முற்றிலுமாக முடித்து விடலாம் என்று அந்த விபரங்களைப் பேச ஆரம்பித்தோம்.
இடையிடையே நடந்து கொண்டிருக்கும் பணி விபரங்களில் தலை காட்டிக் கொண்டிருந்தேன். 9 மணிக்கு நடக்க வேண்டிய குழு சந்திப்பு ஒன்பதரை ஆகி விட்டிருந்தது. மாலையிலும் நீண்ட நேரம் வேலை பார்த்து விட்டுப் போய் விட்டுக் காலையில் எழுந்திருக்க முடியவில்லையாம். எல்லோரும் வந்து சேர தாமதமாகி விட்டிருந்தது.
மாலையில் வருத்தமாக இருந்தது. 'இப்படி தூக்கத்துடனும் கலக்கத்துடனும் ஏன் வேலை பார்க்க வேண்டும். இப்படி செய்வதுதான் சரியான நடைமுறையா' 'ஆனால், இதுவும் நல்லாத்தான் இருக்கு. எல்லாரும் சேர்ந்து சுறுசுறுப்பா வேலைகளை முடித்துக் கொள்கிறோம்'
இப்படிப் பட்ட உழைப்பின் பலன்கள் தெரியத்தான் செய்கின்றன. போகும் யாருக்கும் ஏதோ மாறுபட்டு நடக்கிறது என்று புரியும் படி விளைவுகள் ஏற்பட்டு விட்டன.
'நமது பக்க வேலைகளைத் தள்ளிப் போடவே வேண்டாம். மென்பொருள் உருவாக்கத்தில் எந்த சிக்கல் இருந்தாலும் உடனுக்குடன் சரி செய்து கொடுத்து விட வேண்டும். வாடிக்கையாளர் அதைப் பயன்படுத்துவதில் ஏதாவது குளறுபடிகள் இருப்பது வேறு கதை. அதை சரி செய்ய இறங்கி நமது வேலையை கோட்டை விட்டு விடக் கூடாது.'
'உனக்கு வேறு பெண் நண்பர்கள் உண்டா' விளையாட்டாகக் கேட்டாலும் உள்ளுக்குள் கூர்மையாக இருப்பதை உணர முடிந்தது.
'உண்டே, தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பது அவளிடம்தான்'
கொஞ்சம் சீண்டி விட்டு 'எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு துணைதான், மற்ற பெண்கள் எல்லோரும் என் குழந்தைகள் போல'. 'பெரிய தத்துவஞானிதான்' குரலில் நிம்மதி இழையோடியது, 'உனக்கு சிவான்னு யார் பேர் வச்சாங்க, தத்துவஞானின்னு கூப்பிட்டிருக்கணும்' 'ஏன் சிவாதான் தத்துவங்களுக்கெல்லாம் ஊற்றுக்கண்' என்று அந்த இழையை முடித்து வைத்தேன்.
வீடு வாங்கிக் கொள்வதற்கு, டாடா நானோ வாங்கிக் கொள்வதற்கு திட்டம் போட்டுக் கொடுக்கிறாள். 'மாதா மாதம் 30 ஆயிரம் கிடைக்கிறது. 5 ஆயிரம் வாடகை, 5 ஆயிரம் சாப்பிட்டுச் செலவு, 10 ஆயிரம் கடன் தொகை அடைக்கிறாய், மீதி 10 ஆயிரத்தை சேமித்து வந்தால் ஒரு வருடத்தில் நானோவுக்கான தொகை சேர்ந்து விடும்.'
கடன் மாதா மாதம் அடைப்பது 15000. சாப்பாடு மற்ற செலவுகளுக்கு 10000 கூட ஆகி விடுகிறது. இது போக நண்பர்களிடம் கடனாக நிறைய நிற்கிறது. இவற்றையெல்லாம் முடித்து விட்டு நிமிர்ந்தால்தான் சேமிப்பெல்லாம்.
அது இல்லாமல் இப்படி சிறுகச் சிறுக சேமிப்பது மத்தியவர்க்க பழக்கம் என்று ஒரு அலட்சியம். நாமெல்லாம் பணத்திலேயே புரளப் போகிறோம். கார் வாங்க வேண்டுமானால் சில லட்சங்களை எடுப்பது எளிதாக இருக்கும் என்று கனவுகள் உண்டு. சிறுதுளி பெருவெள்ளம் என்பது நினைவில் வைத்திருப்பதில்லை.
ஜிஎன்யு கேஷ் மென்பொருளிப் போட்டு வைத்திருந்த விபரங்கள் எல்லாம் தொலைந்து விட்டன. வியாழக்கிழமை கோப்புகளை நீக்கிக் கொண்டிருந்த போது அதன் விபரக் கோப்பையும் அழித்து விட்டேன் போலிருக்கிறது. 15 நாட்களாகப் போட்டு வைத்திருந்த விபரங்கள் போச்சு. மார்ச்சு 31ம் தேதியிலிருந்து ஒழுங்காக ஆரம்பிக்க வேண்டும் போலிருக்கிறது என்று தேத்திக் கொண்டேன். 45 நிமிடங்களில் 1140 சொற்கள். 25 சொற்கள் தாண்டியிருக்கின்றன.
நேற்றைக்கு மாலையில் தியானம் இல்லை, சாப்பாடும் இல்லை. காலையில் வீட்டிலேயே அவல் தாளித்து சாப்பிட்டுக் கொண்டேன். அலுவலகத்துக்குப் போனால் அங்கு வாங்கி வந்திருந்த இட்லிகளில் 3. எலுமிச்சை தேநீர். மதியம் முட்டைகோஸ், ரசம், மோர், வளைய வளையமாக வற்றல். மாங்காய் போட்ட சாம்பார், சாப்பிட்டு விடலாமா என்று தோன்றியதை அடக்கிக் கொண்டேன். நமது விபரங்களை வெளிப்படையாக அறிவித்து விடுவது ஒழுக்கத்தைக் காக்க உதவும். முந்தைய நாள் பருப்பு வகைகள் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொள்ளாமல் இருந்திருந்தால் நேற்று சாம்பாரில் இறங்குவதற்கு மனம் இளகியிருக்கலாம். இப்போது அருகில் அவர் என்ன கேட்பாரோ என்பதற்காக அந்த நேரத்தின் இளக்கத்தை தவிர்க்க முடிந்தது.
நேற்றுக் காலையில் 5 மணிக்கு எழுத்து. ஆறு மணிக்கு சரியாக முடித்து விட்டு உலாவப் போனேன். வங்கிக்குப் போய் பணம் எடுத்துக் கொள்ளலாமா என்று தோன்றி செய்யவில்லை. பையில் ஒரு பைசா கூட இல்லாமல் துடைத்து வைத்திருந்தேன்.
இந்த இரண்டு காசோலைகளும் போய்ச் சேர்ந்து விட்டால், அடுத்த வாரங்களில் இன்னும் கடன் தருகிறோம் என்று தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்து விடும். கடன் வாங்கி ஒழுங்காகக் கட்டிக் கொண்டிருந்தாலே நாம் கடன் வாங்கத் தகுதி பெற்று விடுகிறோம். 9% வட்டியில் சில லட்சங்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம். இப்படித்தான் கடனில் மூழ்கி மூழ்கிப் போய் விடுகிறார்களோ! இதை வாங்கி அதில் போட்டு அதை வாங்கி இதில் போட்டு புரட்டிப் புரட்டி ஒரு நாள் எல்லாம் சிக்கிப் போய் விடும். கவனமாக இருக்க வேண்டும். பணம் வேண்டுமானால், வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். தங்கச் சுரங்கம் போல ஒரு குழு, ஏற்கனவே சாதித்த வாடிக்கையாளர் நல்லெண்ணங்கள், சிறப்பான ஆதரவளிக்கும் நண்பர்கள், இவற்றை வைத்துக் கொண்டு பறக்க ஆரம்பிக்கவில்லை என்றால் எவ்வளவுதான் பணம் வந்தாலும் வீணாகத்தான் போகும்.
பதில் வந்திருந்தது. இந்தியாவில்தான் இருக்கிறானாம். இன்னும் அகலப்பட்டை இணைய இணைப்புக்கு மாறவில்லையாம். இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தானாம். இப்போது பெங்களூரில், ஓரிரு நாட்களில் கேரளா போய் விட்டு 7ம் தேதி மீண்டும் சென்னை. 17ம் தேதி வரை சென்னையில் இருப்பானாம். '14ம் தேதி திருப்பதி போகிறோம், உன் குழந்தைகளும் வருகிறார்கள், வர முடியுமா' என்று கேட்டிருந்தான். ஒரு வாரத்துக்குள் இரண்டாவது அழைப்பு. பெருமாள் வரச் சொல்லி உத்தரவிடுகிறார் என்று தோன்றியது.
பணிகள் சரிவர முடிந்து எல்லாம் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தால் அவர்களுடனோ அல்லது அதற்குப் பிறகு தனியாகவோ ஒரு தடவை போய் விட்டு வர வேண்டும். திருப்பதிக்குப் போய் வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுகிறது என்றுதான் படுகிறது. இது வரை இரண்டு முறை போய் ஒரு முறை தரிசனம் கிடைக்காமலேயே வந்து விட்டேன். 14ம் தேதி போகவில்லை என்றால் அதற்கடுத்த வார இறுதியில் போய் வர வேண்டும்.
வரிசையில் நின்று அல்லது முன்பதிவு செய்து கொண்டு போக வேண்டாம். மலையில் பெருமாளின் ஊரில் தங்கி விட்டுத் திரும்பினால் போதும்.
சனி, மார்ச் 29, 2008
வெள்ளி, மார்ச் 28, 2008
அலசிக் காய்தல்
மூன்று நாட்கள் விடுமுறை ஆகி விட்டது. செவ்வாய்க் கிழமை ராணிப்பேட்டை போவதற்காக ஆறரை மணிக்குக் கிளம்ப வேண்டியிருந்தது. புதன் கிழமை ராணிப்பேட்டை போய் விட்டு வந்த சோர்வை ஆற்ற 6 மணி வரை தூக்கம். நேற்றும் இழுத்து இழுத்து நீண்ட நேரத் தூக்கம். இன்றைக்கு நாலேகாலுக்கு எழுந்து விட்டேன்.
சனிக்கிழமை மாலை குழந்தைகளுடன் செலவழித்த நேரம் பொன் போன்றது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு பழக முயன்றார்கள். சண்டை போட்டுக் கொள்வது பெரிதாகத் தெரியவில்லை. முன்பு பார்த்ததை விட சிறப்பான நட்பு தெரிந்தது. எலியும் பூனையுமான வாழ்வதைப் பார்த்தால் குழந்தைகளும் தமக்குள் சண்டை போடத்தானே செய்வார்கள். இப்போது அந்த பகை உணர்வு தவிர்த்த வீட்டுச் சூழல் உதவலாம்.
அல்லது என் முன்னால் இரண்டு பேரும் ஒற்றுமையாகி விட்டிருக்கலாம். எது எப்படியோ அந்த மணித்துளிகளின் தாக்கம் விடுபட பல நாட்கள் பிடிக்கும். முதலில் ஒரு ஞாயிற்றுக் கிழமை போய் வீட்டுக்குக் கூட்டி வந்த போது ஒட்டாமல் விலகியே பேசிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள். அடுத்ததாக 21ம் தேதி வெளியில் போவதற்கு முன்பு பார்த்தது. அப்போதும் மூன்றாம் மனிதரைப் போலவே விசாரித்து ஒதுங்கிக் கொண்டோம். மூன்றாவது முறை மடை திறந்து கசிய ஆரம்பித்தது.
பிரிவதற்கு முன்பு சொன்னது போல நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ முடியாவிட்டாலும், குழந்தைகளின் வாழ்வுக்கான பொறுப்பை இரண்டு பேரும் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அப்போது அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்போது பொறுமையாக பேசி திட்டமிடும் உறவும் இல்லை. இப்போது அதை வளர்த்துக் கொள்ளலாம் என்றுதான் முயற்சி.
மீண்டும் சேர்வது என்பது இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்கு அப்புறம் நடக்கலாம். சில மாதங்களுக்குள் பார்க்க வேண்டியது குழந்தைகளுடன் எப்படிப் பேசிக் கொள்வது, அவர்களுடன் வாரத்துக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு இரண்டு முறை நேரம் செலவிடுவது - குறைந்த பட்சம். அவர்களது வளர்ப்புக்கான பொறுப்புகளையும் செலவுகளையும் பகிர்ந்து கொள்வது என்று வளர்வதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.
வீட்டிலேயே போய்ப் பழகிக் கொண்டிருந்தால், ஏற்படுத்திக் கொடுத்த எல்லைகளுக்குள்தான் குழந்தைகளுடன் உறவாட வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான வரையறை மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. குழந்தைகள் ஒரு பந்து கையில் கிடைத்து விளையாட நான்கு தோழர்கள் கிடைத்து விட்டால் மகிழ்ச்சி அடைந்து விடுவார்கள். விலை உயர்ந்த மின்னணு விளையாட்டுப் பொருட்களுடன் அறையில் அடைத்து வைக்கப்பட்டால் சோகமாகத்தான் இருப்பார்கள்.
அந்த மாறுபாட்டை அளிக்க வேண்டுமானால் அவர்கள் என்னுடன் ஒரு நாள் முழுமையாக செலவிடும்படி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நிலை வருவதற்கு முன்பு பயங்கள், ஏமாற்றங்கள் அனைத்துக்கும் சமாதானம் ஏற்பட்டிருக்க வேண்டும். அவளது திட்டப்படி இன்னமும் என்னை திரும்ப அவளது வாழ்க்கை முறைக்குள் அழைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்று கொடுத்து விட வேண்டும் என்பதுதான்.
'எனக்கு அப்பா இல்லையே அதனால்தான் எனது திட்டப்பணி செய்யப்படாமல் போனது' என்று ஒரு நாள் கோபத்தில் சொன்னானாம். அது மனதைத் தைத்து விட்டது. வெளிப்படையாக எதுவும் சொல்லியிருக்க மாட்டாள். அவள் அம்மாவுக்குக் கூட தெரியாமல் தன் உணர்வுகளைப் புதைத்துக் கொண்டிருப்பாள். கடைசி வரை ஒரு புதிராகவே இருந்து வருவாள். தன்னைப் பராமரித்துக் கொள்ள எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திறமையாக உணர்ந்து நடந்து கொள்ளும் திறமை உண்டு.
சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் பல உயரங்களைத் தொட்டு விடுவாள். இப்போது பார்த்தது வரை, எப்படியாவது தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு பல வித்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளாள். அதிகமாக முற்றி விடுவதற்கு முன்பு மனதில் மாற்று எண்ணங்களையும் விதைத்து விட வேண்டும்.
குழந்தைகள் படிப்பைப் பொறுத்த வரை அவ்வளவு சிறப்பாக இல்லைதான். secondary storage என்பதை விளக்க முயற்சிக்கும் போது அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று நினைத்து பேசிய பல புரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புரிதல்களுடன் ஒப்பிடும் போது இப்போது முன்னேற்றம் குறைவுதான்.
பணத்தால் புத்தகத்தை வாங்கலாம் அறிவை வாங்க முடியாது என்று சொல்வார்கள். ஆளுக்கொரு கணினி வாங்கி வைத்து விட்டால் கணினியில் வித்தகர்கள் ஆகி விட முடியுமா? ஏதோ கணக்குப் போட்டி என்று பதிவு செய்து கொண்டு அதற்குத் தயாரிப்பாக நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தாளாம். அதைப் படித்து போட்டியில் வெற்றி பெற்று விட வேண்டியது.
'நான் படுவதெல்லாம் வீணாகப் போகிறது. நான் இல்லை என்றால் படிக்க மாட்டேன் என்கிறார்கள். என்ன செய்வேன்' என்று புலம்புகிறாள். பண்பு இல்லாத கல்வி.
இப்படி எல்லாம் ஆரம்பித்தால் எப்போது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்வாளோ. கவனமாக தூண்டி விட்டு விடாமல் பழக வேண்டும். அதில் அடிப்படை நோக்கம் உதவி செய்வதுதான், அதைத் தாண்டி குழந்தைகளுக்கும் நமது கடமையை செய்ய வேண்டும். அவளுக்கு வருத்தமோ நம்பிக்கையின்மையோ மீதி இருந்தால் குழந்தைகளுடன் பழகுவதைத் தவிர்த்து விடுவதுதான் நல்லது. அதனால் குழந்தைகளுக்கும் நல்லது நடக்காது. அப்படி விலகி இருப்பதால் அவர்கள் எப்படி வளர வேண்டுமோ வளர்ந்து கொள்வார்கள். முதல் கடமையாக மன அமைதிக்கும் நிம்மதிக்கும் முயற்சிப்பதே வேண்டும். குழந்தைகளுடன் அணுக இன்னும் 6 மாதங்கள் ஆனாலும் பெரிய இழப்பில்லை.
நமது முனைப்பெடுக்கப் போய் கண்ணாடி உடைந்து சிதறி விடக் கூடாது. அப்பா என்று கூப்பிட்டது அப்படித்தான் இருந்தது. அழுத்திக் கூப்பிட்டால் எங்கே கனவு கலைந்து அப்பா மறைந்து விடுவாரோ என்று நினைத்தது போல, வலிக்காமல்.
விருந்துகளுக்குப் போவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். குழந்தைகளின் பிறந்த நாள் விருந்துகளாக இருந்தாலும் சரி, அன்று நடந்தது போனற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி. வெளியில் போய் விலை உயர்ந்த இடங்களில் சாப்பிடுவதையும், திரைப்படங்களுக்குப் போவதையும் விட்டு விட வேண்டும்.
கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ என்று சொன்னது போல அவளைச் சமாதானப்படுத்த மகிழ்விக்க அது போன்ற செலவுகளில் ஈடுபடும் போது எனது மன நிம்மதி குலைந்து போகிறது. கடைசியில் விளைவு எதிர்மறையாகத்தான் முடிகிறது. 'என்னை எங்கே அழைத்துப் போகிறாய், சின்ன உணவு விடுதிகளுக்கு நான் போக மாட்டேன்.' என்று அவள் கேட்கும் போது முடியாது என்று சொல்லி விட வேண்டும். வீட்டில் வந்து சமைத்துச் சாப்பிட்டால் போதும்.
அன்றைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டதும், சத்யமில் திரைப்படம் பார்த்ததும், பிட்சா சாப்பிட்டதும் ஒரே நாளில் செலவு ஆயிரம் ரூபாய்கள். திருமணத்துக்குப் பிறகு இது போன்ற நாட்கள் நூற்றுக் கணக்கில் இருந்தன. ஆனால் நான் தேர்ந்தெடுத்திருக்கும் வழிக்கும் இத்தகைய பழக்கங்களுக்கு ஒவ்வாது. மனதில் சமரசம் செய்து கொண்டு மன நிறைவுக்காக இவற்றைச் செய்தாலும் அவளுக்கு முழு நிறைவு இருக்காது. இன்னும் விலை உயர்ந்த இடத்துக்குப் போக வில்லையே. இன்னும் விலை அதிகமான பொருட்கள் வாங்கவில்லையே, காரில் போகவில்லையே என்று அவளும் மனதில் புலம்பிக் கொண்டேதான் இருப்பாள். இரண்டு பேருக்கும் எந்த நன்மையும் இல்லை.
மனம் விட்டுப் பேச வேறு ஒரு நல்ல சூழல் தேர்ந்தெடுக்க வேண்டும்.
யாராவது ஏதாவது சொன்னால் அப்படியே நம்பி விடுகிறேன். இந்த ஓரிரு வார பேச்சுக்களிலேயே என்னுடைய குறுக்கீடுகள் இல்லாமலேயே முன்னுக்குப் பின் முரணாக பல சொல்லி விட்டாள். 'நீ போன பிறகு இரண்டு ஆண்டுகளில் ஓரிரு முறைதான் தியேட்டருக்குப் போயிருக்கிறேன்' என்றாள் முதலில், அதற்குப் பிறகு ஒரு கணத்தில் 'நான் அடிக்கடி ஈகா தியேட்டருக்குத்தான் போவேன். சத்யம் போனதே இல்லை' என்றாள். ஈகா பத்துப் பதினைந்து முறை போயிருக்கிறாளாம். ஒரு வேளை மொத்தமாகச் சொல்லியிருப்பாளோ!
சத்யம் திரையரங்குக்குப் போனதாக அடுத்தது ஒரு முறை தெரிய வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
செவ்வாய்க் கிழமை ராணிப்பேட்டையிலிருந்து திரும்பும் போது தொலைபேசி அடித்து நின்றது. திரும்ப அழைத்தால், ஏன் அழைத்தாய் என்றாள். அந்த நேரம் இணைப்பும் சரியாகக் கிடைக்காமல் அறுந்து போனது. புதன் கிழமை மதியம் தொலைபேசி. சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாளாம்.
தகராறு செய்து கொண்டிருந்த ஒரு சீன வாடிக்கையாளரை திறமையாக கையாண்டு பிரச்சனை தீர்ந்து விட்டது என்றாள். பணம் முழுவதையும் அவர்கள் கொடுத்து விட்ட பிறகும் தோலில் இருப்பதாக அவர்கள் சொன்ன குறையை பரிசீலித்து தீர்வு காண உழைத்ததை குறிப்பிட்டு, அவருடன் நட்பு வலுப்பட்டு விட்டதாகச் சொன்னாள்.
'நான் பழகும் எல்லோரிடமும் நான் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடிகிறது. ஒரே ஒருத்தரைத் தவிர'. 'யார் அது?' தெரியாதது போலக் கேட்டேன். நேரடியாக பதில் சொல்லாமல், 'என்னால் உறவை பேண முடியாமல் போனது எனது தோல்விதானே' என்று வருத்தத்துடன் கேட்டாள். 'நிச்சயமாக உனது தோல்வி இல்லை' என்று சொல்லி வைத்தேன்.
சமையல் வாயு வாங்கும் இடத்தில் நியாய விலைக்கடை அட்டை இருந்தால்தான் தருவேன் என்று சொல்லி விட்டார்களாம். நான் வாங்கியிருந்தது ஸ்பிக் ஜோதிதான். மானியம் இல்லாமல் கொடுப்பார்கள். அதற்கு அட்டையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்.
நியாய விலைப் பொருட்களுக்கான அட்டை வாங்குவதற்கு என்ன வழிமுறை என்று கேட்டிருந்தாள். நான் சொல்வதற்கு முன்பே விசாரித்து விபரங்களை சேகரித்திருக்கிறாள். இதற்கு இவ்வளவு கஷ்டப்படுவதற்குப் பதிலாக மாதம் 300 ரூபாய்கள் அதிகம் கொடுத்து சமையல் வாயு வாங்கிக் கொள்ளலாம் என்றேன். 'அது எனக்குக் கட்டுப்படியாகாது. அட்டை இருந்தால் பல வசதிகள் உண்டு. சீனி வாங்கிக் கொள்ளலாம், சமையல் எண்ணெய் கொடுப்பார்கள்' என்று சொன்னாள்.
அதற்கு விண்ணப்பிக்க திருமண சான்றிதழ் வேண்டுமே என்று சொல்லி விட்டு நீதான் என் திருமண சான்றிதழை கிழித்துப் போட்டு விட்டாய் என்றாள். திருமணத்துக்குப் பிறகு அதைப் பார்த்ததாகவே எனக்கு நினைவில்லை. இவள் சொல்வதால் ஒரு கட்டத்தில் கிழித்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இப்படி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நமக்கு, ஒருத்தரை ஒருத்தர் மதிக்காத நமக்கு சான்றிதழ் ஒன்றுதான் தேவையா என்று கிழித்திருக்கலாம். நினைவில்லை.
சான்றிதழ்களும் சடங்குகளும் என்ன செய்து விட முடியும், இரண்டு மனங்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்றால். எந்த முறையான பிணைப்பும் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டார்கள். இருவருக்கிடையே நிலவும் பாசப் பிணைப்பும், ஒருவரை ஒருவர் பரிந்து பார்த்துக் கொள்வதும் பல முறையான கணவன் மனைவிகளுக்கிடையே இருப்பதற்கு இணையானது.
கணவன் மனைவி உறவில் ஒருவருக்கொருவர் பரிந்து பார்த்துக் கொள்வதுதான் உறவின் அடிப்படை. அதைத் தவிர்த்து வேறு ஏதாவது இடையில் நுழைந்து விட்டால், சிக்கல்தான். பெரும்பாலானோர் அப்படிப்பட்ட ஆரோக்கியமான உறவைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த உணர்வு தொய்வடையும் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் ஏற்படலாம். ஆனால், உறவின் வலிமை அந்த வாக்குவாதங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றிருக்கிறது.
அடிப்படை வேறு வெளிக் காரணியாக இருந்து விட்டால், அந்த உறவு நீடிக்குமா என்பதை விட எப்போது உடையும் என்றுதான் பார்க்க வேண்டும்.
'உன்னைப் போல. செய்வதையும் செய்து விட்டு மாட்டிக் கொள்ளாமல் தப்பி விடுவாள், வெளியில் கேட்டால் சிவகுமாரைப் போல உத்தமன் யாரும் கிடையாது. ஆனால் வீட்டுக்குள் அவன் செய்யும் அடாவடிகள் யாருக்குத் தெரியும்?'
புதன் கிழமை காலையில் பேசும் போது தமிழ்மணத்தில் பல மாறுதல்கள் என்றார். தமிழச்சி பதிவை விலக்கி விட்டார்களாம். லக்கிலுக் பதிவும் போச்சாம்.
லக்கிலுக்கை முந்தேநேற்று ஜிமெயில் டாக்கில் பார்த்து விசாரித்தால், பதில் சொல்லாமல் ஓடி விட்டார். நேற்றைக்கு அவரே அணுகி விபரங்களைச் சொன்னார். அவரது பதிவை நீக்கியதால் அவருக்கு இழப்பா அல்லது தமிழ்மணத்துக்கு இழப்பா என்று பார்த்தால் தமிழ்மணத்துக்குத்தான் அதிக இழப்பு என்று சொல்ல வேண்டும். இப்போது பார்த்தால் அவருக்கு மிகவும் வருத்தமும் கோபமும் என்று தோன்றுகிறது.
இப்படி ஒரே திரட்டியைச் சார்ந்து இருப்பது சரிப்படாது என்று சொன்ன ரவிசங்கர் போன்றவர்கள், பார்த்தீங்களா என்று நினைத்துக் கொள்வார்கள். அதன் குறைகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும், தமிழ்மணம் ஒரு சிறப்பான தனித்தன்மை வாய்ந்த முயற்சி என்பதில் கேள்வியே இல்லைதான்.
அலுவலகத்தில் ஒரு வாரமாக சுறுசுறுப்பாக பணி நடைபெறுகிறது. 31ம் தேதிக்குள் நிர்ணயித்திருந்த இலக்குகளை அடைந்து விட வேண்டும் என்று தூண்டுதல் வந்து விட்டது. பார்க்கலாம். இன்னும் 9 நிமிடங்கள் இருக்கின்றன. 1350 சொற்கள் எழுதி விட்டேன். நிமிடத்துக்கு 27 சொற்கள். இதை முடித்து விட்டு 20 நிமிடங்கள் உலாவப் போக வேண்டும். திரும்பி வந்து தண்ணீர் பிடித்து விட்டு அவல் தாளித்துக் கொள்ள வேண்டும். குளித்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பினால் 8 மணிக்கு அலுவலகம் போய் விடலாம்.
பல்லாவரத்தின் கணினியைத் திரும்பக் கொண்டு சேர்க்க வேண்டும்.
ஞாயிற்றுக் கிழமை வீட்டில் குடியிருப்போர் சங்கக் கூட்டம். மாலையில் வலைப்பதிவர் சந்திப்பு. திங்கள் கிழமை 31ம் தேதி. 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, 7ம் தேதி திங்களுக்குள் சம்பளம் கொடுத்து விட வேண்டும். இந்த முறையாவது வாடிக்கையாளர்களைத் துரத்தி பணம் திரட்டி விட வேண்டும்.

லேபிள்கள்:
உறவுகள்,
சுயமுன்னேற்றம்
திங்கள், மார்ச் 24, 2008
அப்பாடா
காலையில் கண் விழித்துப் பார்த்தால் அலைபேசியில் தவறவிட்ட இரண்டு அழைப்புகள். ஐந்தரை மணிக்கு அழைத்திருக்கிறாள். நான் நாலரைக்கு எழுந்திருப்பேன் என்று நினைத்து அழைத்திருப்பாள். உடனேயே திரும்பி அழைத்தால் அழுகையும் கோபமும் நிறைந்த குரலில் பேசினாள்.
'ஒரே ஒரு நாள் இங்கே தங்கணும் என்றுதானே கேட்டோம்' என்கிறாள். 'உன் வேகத்துக்கு எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைக்காதே. மெதுவாகத்தான் ஒவ்வொன்றும் நடக்கும், அழாதே, தூங்கி ஓய்வெடு' என்று அறிவுரை சொன்னேன். அதன் பின்பு அனுப்பிய மின்னஞ்சல் கோபத்தை அதிகமாக்கித்தான் விட்டது. மாலையில் அனுப்பியிருக்க வேண்டும். கொஞ்சம் இடைவெளி விட்டுத்தானே அனுப்ப வேண்டும். நாளைக்கு மாலையில் அடுத்து ஒரு அஞ்சல் அனுப்பிக் கொள்ளலாம்.
கண் விழித்து எழுந்திருந்தது ஆறரை மணிக்கு. தரை தூத்து துடைக்க வேண்டும், குளிக்க வேண்டும். சமைக்க வேண்டும் என்று இயங்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் மன வேதனைக்கு எனது மன சஞ்சலங்களுக்கும் பரிகாரமாக விரதம் இருக்கலாம் என்று தோன்றியது. வெள்ளிக் கிழமை தரை துடைத்த பிறகு மீண்டும் ஞாயிற்றுக் கிழமை. துணிகளை ஊற வைத்துக் கொண்டேன்.
குளித்து விட்டு தியானம் செய்ய வேண்டும். அலுவலகத்துக்குப் போய் வேலைகளைப் பார்க்க வேண்டும். நண்பர் வருவதாகச் சொல்லியிருந்தார். அப்பா தொலைபேசி தாம்பரத்துக்கு வந்து விடச் சொன்னார்கள். குறுந்தகடு, அப்பா அம்மா பெங்களூரு போவதற்கான பயணச்சீட்டு பிரதி, குழந்தைகளுக்கான புத்தகங்கள், எடுத்துப் போக வேண்டும். அலுவலகம் போகும் வழியிலேயே புட்வேர்ல்ட் போய் பொருட்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். கைவசம் காசு அதிகம் இல்லாததால் கடன் அட்டை மூலம்தான் கொடுக்க வேண்டும்.
கழிவறை கழுவும் திரவம், தரை துடைக்க சேர்க்கும் திரவம், துணி துவைக்கும் பொடி, முகம் மழிக்க பசை, முகம் மழிக்க பிளேடு, கோதுமை மாவு, பச்சைப் பயிறு இவற்றுடன் 110 ரூபாய்களுக்கு சாக்லேட்டு குச்சிகளையும் வாங்கிக் கொண்டேன். ஒவ்வொரு முறை போகும் போதும் கையை ஆட்டிக் கொண்டு போய் வந்து விடுகிறேன். குழந்தைகளுக்கு ஏதாவது புதுமையாக வாங்கிக் கொண்டு போனால்தானே நமது பாசம் புரியும்.
அலுவலகத்தில் உட்கார்ந்து முதல் வேலையாக உள்ளத்தை எழுதுகிறேன் பதிவில் நாட்குறிப்புகளை பதிவு செய்தேன். வெளியார் யாரும் படித்து விட முடியாது என்று இன்னொரு அமர்வாகப் போய் உறுதி செய்து கொண்டேன். அதன் பிறகு மின்னஞ்சல்கள் பதில் போடாமல் இருந்தவற்றை ஒவ்வொன்றாக படித்து நடவடிக்கை எடுப்பது. முதலில் அலுவலக மடல்கள்.
சோர்வும் பசியும் உடலெங்கும் தெரிந்தன. 'சரியாகத் தூங்கவில்லையா' என்று கேட்கும் அளவுக்கு முகம் சோர்ந்து போயிருந்தது. மனத்தை மிகவும் கவனமாக பராமரித்துக் கொள்ள வேண்டும். விவகாரங்களில் அளவுக்கதிகமாக காலை விட்டு பிறருக்கு சேவை செய்யும் திறனை இழந்து விடக் கூடாது.
இடையிடையே இரண்டு மூன்று தடவை போய்த் தூங்கி விட்டு வந்தேன். முதல் முறை தியானத்தைத் தொடர்ந்து கண்ணயர்தல். மதிய உணவு நெருங்கும் போது செய்ய வேண்டிய வேலைகளின் எண்ணிக்கை மனதை நிறைத்தது. பிடித்து உலுக்கினேன். என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியலிட ஆரம்பித்தேன்.
ஏப்ரல் 1ம் தேதிக்குள் செய்ய வேண்டிய பணிகளுக்கான உறுதி மொழியை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கியிருக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் வேண்டாமா! ஒரு கோப்பில் அதை நிரப்பிக் கொண்டேன்.
காலையில் வந்ததும் பக்கத்து வீட்டுக்காரர் எதிர் கொண்டார். 'இன்று இரவு திருப்பதி போகும் வாய்ப்பு இருக்கிறது. வண்டி ஏற்பாடாகி விட்டது. தரிசனத்துக்கான சீட்டும் கைவசம் இருக்கிறது. கூட வருவதாக இருந்தவர் கடைசி நேரத்தில் கழன்று கொண்டார். நீங்க விரும்பினால் வரலாம். கொஞ்ச நேரம் கழித்தும் சொல்லலாம், நல்லா யோசிச்சுக்கோங்க, வீட்டுக்கு தொலைபேசியில் பேசிக் கேட்டு விட்டுச் சொன்னாலும் போதும், அரை மணி நேரத்தில் வருகிறேன்' என்று சொல்லி விட்டும் போனார்.
'திருப்பதிக்குப் போவது அந்த பெருமாளின் அருள் இருந்தால் மட்டும்தான் நடக்கும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு அருளை உங்கள் மூலம் புரிகிறாரோ என்று தோன்றத்தான் செய்கிறது.' வேலை விபரங்களை நினைத்து வேண்டாம் என்று சொல்லி விட்டேன். ஏதோ நிறுவனத்துக்கு இனிப்பு, வடை முதலாக சிற்றுண்டி செய்து கொடுக்கப் போகிறாராம். மனம் தளர்ந்து விடப் போகிறதே என்று உறுதியாக மறுத்து எடுத்துப் போகச் சொல்லி விட்டேன்.
நண்பர் மூன்றரை மணி வாக்கில் வருவதாகச் சொல்லியிருந்தார். நான்கு மணிக்கு முன்பு வந்து விடுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்
நேரத்துக்கு வந்தே விட்டார். அவர் வருவதற்கு முன்பு பராக் ஒபாமா அமெரிக்காவின் இனப் பிரச்சனையைக் குறித்த பேச்சைப் படித்துக் கொண்டிருந்தேன். உயர் தளத்திலிருந்து சிந்தித்து, எழுதப்பட்டு வழங்கப்பட்ட பேச்சு. படிக்கும் போதே நமது மனம் உயர்நிலையைத் தாவிப் பிடித்தது. கண்களில் கண்ணீர் ததும்பி விட்டது.
ஒவ்வொரு சமூகத்திலும் இப்படி கடந்த கால புண்களையும், நிகழ்கால திருத்தங்களையும் நினைத்து பொருமிக் கொண்டு ஒருத்தரையொருத்தர் வெறுக்கும் மக்கள் கூட்டங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நம் ஊரில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் சலுகைகள் கொடுக்கும் போது அதனால் மற்றவர்கள் பொருமுவதும், கடந்த கால அநியாயங்களை எண்ணி அம்மக்கள் கோபப்படுவதும் இருந்து வருகிறது. பராக் ஒபாமா போல ஒரு தலைவர் எப்போது வருவார்?
திருமண அழைப்பு நல்ல தமிழில் புதுமையாக அடித்திருந்தார். நிறைய திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. நிறைய திருமணங்கள் நட்பு வட்டங்களில்.
நான்கு மணிக்குக் கிளம்பி வீடு. நினைவாக வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்துக் கொண்டேன். வீட்டுக்கு வெளியில் காவல்காரரும் எதிர்வீட்டு சிறுவனும் அவித்த கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், எனக்கும் ஒரு கை கொடுத்தார். அதில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டேன். கழிவறை தொட்டிகளை கழுவி விடும் வேலையைச் செய்து விட வேண்டும். இரண்டு கழிவறைகள், கை கழுவும் தொட்டி, மேற்கத்திய பாணி கழிவறையின் தண்ணீர் நிரம்பும் தொட்டி எல்லாவற்றையும் தேய்த்துக் கழுவினேன்.
மற்ற பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தேன். கை கால் முகம் கழுவி விட்டு அரை மணி நேரம் தியானம். மனக் கலக்கம் அதிகமாக இருக்கும் போது, பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள இருக்கும் போது அதிகமான நேரம் முழங்கால்களில் செலவிடுவேன் என்று ஒரு முஸ்லீம் தலைவர் சொல்லியிருக்கிறார். மனதை இழுத்துப் பிடித்து சமாதானப்படுத்தி எண்ணங்களை செரித்துக் கொள்ள நிறைய முயற்சிகள் தேவைப்படுகின்றன.
இதற்கிடையே குளறுபடிகளுக்கு வாழ்க்கையில் இடம் இருக்கிறதா என்று நண்பனுக்கும் சரி, அம்மாவுக்கும் சரி உடனேயே தோன்றி விட்டது. ஒரு எல்லைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு இடமே இல்லை என்று ஒதுக்கி விடுவது தர்மமாகாது. அவளுக்காகவே மற்ற எல்லாவற்றையும் புறக்கணிக்கும்படி மனம் குழம்பி விடுவது பெரிய அதர்மமாகி விடும். செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் இருக்கின்றன.
நிறுவனம், சமூகம், குடும்பத்தினர் யாரையும் புறக்கணித்து விட முடியாது.
வாழ்நாள் முழுவதுக்குமான உறவு, அதை துறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. மணமுறிவு வேண்டும் என்று அவள் கேட்பது அவளது உரிமை, அவளது அறியாமை. என்னைப் பொறுத்த வரை இது வாழ்நாள் முழுவதுக்குமான பந்தம். இதைக் கட்டிக் காத்து அவளைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது என் கடமை.
தியானம் முடித்து ஞாபகமாக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டுக் கிளம்பினேன். புறப்படும் முன்பு அப்பாவுக்கு ஒரு தொலைபேசி. அப்பதான் மேற்கு தாம்பரத்தில் வீட்டிலிருந்து கிழக்கு தாம்பரத்தில் வீட்டுக்குப் புறப்படுகிறார்களாம். கிழக்குக்கே போய் விட வேண்டும்.
ராமாபுரம், மணப்பாக்கம், பரங்கிமலை அருகில் தவறான திசையில் நுழையாமல் சுற்றிப் போய் அங்கிருக்கும் சாலையில் நுழைந்து தாம்பரம் சாலைக்கு வந்து சேர்ந்தேன். 40 முதல் 50 கிலோமீட்டர்களுக்கு மேல் வண்டி ஓட மாட்டேன் என்கிறது. இன்றைக்கு எடுத்துக் கொண்டு போய் எஞ்சினை சரியாக அமைத்துத் தரச் சொல்ல வேண்டும். பராமரிப்புச் சேவை முடிந்து மூன்று வாரங்கள் ஆகி விட்டன.
பல்லாவரம், குரோம்பேட்டை, எம்ஐடி கேட் வழியாக ஏறி இறங்கி சிட்லபாக்கம். தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையம் வழியாக, ஏரிக்கரை தெருவைத் தாண்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
வழியில் பெட்ரோல் போடும் போது கடனட்டையில் 200 ரூபாய்களுக்குப் போட்டுக் கொண்டேன். பெட்ரோல் தொட்டியில் இருக்கும் ஒரு ஓட்டை மூலம் வழிய ஆரம்பித்தது. காலையில் இணையத்தில் இணைத்ததும் நண்பர் வந்து வணக்கம் சொல்லி விட்டுப் போனார்.
'எனக்கு ஒரு துறவி வேண்டாம். சாதாரண மனிதன்தான் வேண்டும். சராசரி கணவன்தான் வேண்டும்' என்றாள்.
அப்பா அம்மா வந்து விட்டிருந்தார்கள். மாமா அத்தையும் இருந்தார்கள். அம்மா சுடச் சுட அடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் எனக்கும் அழைப்பு கிடைத்தது. உடனேயே உட்கார்ந்து விட்டேன். அமுதம் போல சுவையுடன் மூன்று அடைகள். வயிற்றில் அப்போதுதான் பசி ஆரம்பித்தது. சாப்பிட்டு விட்டு அனுப்பியிருந்த அடர்வட்டைப் போட்டுப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தோம். சரியாக இயங்க வைக்க முடியவில்லை.
அத்தையும் மாமாவும் இன்றைக்கு ஊருக்குக் கிளம்புகிறார்கள் போலிருக்கிறது. பைகள் நிரப்பி வைத்திருந்தார்கள். ரயிலில் சாப்பிடுவதற்கான உணவுப் பொதிகளும் தயார் செய்து விடுவார்கள். திருக்குறள் விரைவு வண்டியைத்தான் பிடிக்கிறார்களாம். வேறு வண்டிகள் எதுவிலும் இடம் இல்லை. திருமண நாளான ஏப்ரல் 23 அன்றும் வண்டிகள் எல்லாம் நிரம்பி விட்டனவாம்.
மாமா, அத்தையை நிலையத்தில் விட அண்ணன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். நானும் கூடப் போவதா என்று கேட்டு போகாமல் நின்று கொண்டேன்.
அம்மா அப்பாவுக்கு உறவு விபரங்களை தெரிவித்தேன். அம்மாவுக்கு உடனேயே சண்டை போட்டு காவல் நிலையத்துக்குப் போய் விடக் கூடாது, நிறுவன வேலைகள் பாதித்து விடக் கூடாது என்று தோன்றுகிறது. கைவசம் பணப் புழக்கம் சரியாக இருந்தால் அண்ணனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியுமா என்று பார்க்கச் சொல்கிறார். பணத்தை வாங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டது. எந்த பொறுப்பும் இல்லாமல் இருப்பது நியாயமாகாதுதான்.
மாலை உணவையும் சாப்பிட்டு விட்டுக் கிளம்புவோம். எழுப்பி அப்பாவுக்கு அடை சுட்டுக் கொடுத்தார்கள். நான் அவித்து வைத்திருந்த இட்லிகளை சாப்பிட்டேன். 7 இட்லிகள், துவையல், புளிக்கறி, மிளகாய்ப் பச்சடி. மதினியின் பாசமும் அன்பும் தெரிந்தது. கொஞ்சமாவது நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு போவது, சாப்பிடுவது, கணக்கு வழக்குகளை சீராக வைத்துக் கொள்வது எல்லாம்.
அருமையான பண்பாடு. உயர்ந்த மக்கள். இந்தக் குடும்பத்துக்குள் வந்து சேர்ந்தது செய்த புண்ணியத்தினால்தான் என்று சொன்னேன். 8 மணி வரை அண்ணன் வந்து சேரவில்லை. நானும் அப்பாவும் கிளம்பி விட்டோம். பேண்டு போட்டிருந்தது தோலில் உராய்ந்து வலிக்க ஆரம்பித்தது.
வீட்டுக்கு வந்து பொருட்களை வைத்து விட்டுக் கடைக்குப் போய் வாழைப்பழங்கள் வாங்கி வந்தேன். கூடவே தேங்காய், வெங்காயம். காலையில் அவல் தாளித்துக் கொள்ளலாம்.
செய்தியாக எழுத உட்கார்ந்தேன். அப்படிக் குமுறிக் குமுறிக் கொட்டி விட்டால்தான் தெளிவு கிடைக்கிறது. அதை முடித்ததும் தியானம் கூட உட்காராமல் தூங்கி விட்டேன். காலையில் இரண்டரை, மூன்றரை, நான்கரை என்று தூங்கி எழுந்தேன். ஐந்தேகாலிலிருந்து எழுத்து.
இதை முடித்ததும் பொருட்களை ஒதுங்க வைக்க வேண்டும். தேய்க்க வேண்டிய துணிகளை சேகரித்து இன்றைக்குக் கொடுத்து விட வேண்டும். போடுவதற்கு துணிகள் இல்லை. தரை தூத்து வாரி விட்டு, குடிக்கத் தண்ணீர் பிடிப்பு, துணி துவைப்பு, காலை உணவு தயாரிப்பு.
அலுவலகத்துக்குப் போய் ஆண்டு இறுதியையும் அடுத்த ஆண்டு தொடக்கத்தையும் கவனிக்க வேண்டிய பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
பல்லாவரம், திருப்பெரும்புதூர் போன்ற இடங்களில் பணி விபரங்களை விசாரிக்க வேண்டும். பணம் வருவதை துரத்த வேண்டும். 12ம் தேதி சந்திப்புகளுக்கான தயாரிப்பில் இறங்க வேண்டும். அடுத்த ஆண்டு வேலைகளுக்கான ஆர்டர்களை உறுதி செய்யும் பணி மீதி இருக்கிறது. இன்றைய காலை சந்திப்பில் அதை சரியாக சுட்டிக் காட்டி முடுக்கி விட வேண்டும்.
பணிகளை சரிவர திட்டமிட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பற்றிப் பேச வேண்டும்.

ஞாயிறு, மார்ச் 23, 2008
இனிப்பும் காரமும்
இன்று முழுவதும் உண்ணாவிரதம். கடந்த இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை சரியாகப் பொருத்திக் கொள்ள நிதானமும் மனத் தெளிவும் வேண்டும். அதற்கு விரதம் உதவும். என்னில் இருக்கும் அழுக்குகளை எரித்துப் போட இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பசி உறைக்கும் போதெல்லாம் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
வெள்ளிக் கிழமை காலையில் 4 மணிக்கெல்லாம் எழுந்து எழுதி முடித்து விட்டு தரை தூத்துத் துடைத்தேன். துவைக்க வேண்டிய துணிகளை ஊற வைத்தேன். குறுஞ்செய்தியில் வாழ்த்து அனுப்பி விட்டு முகம் மழித்துக் கொண்டிருக்கும் போது கதவை இடிக்கும் சத்தம். நேற்றே வீட்டு முகவரி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள். முகத்தை பூங்கொத்தால் மறைத்துக் கொண்டு வாழ்த்து அட்டை, ஒரு பரிசுப் பொதி, பூங்கொத்து.
வாங்கி வைத்து விட்டு உள்ளே கூப்பிட்டேன். 'எனக்கு தேநீர் போட்டுத் தருவதாகச் சொன்னாயே!'. கடைக்குப் போய் அரை லிட்டர் பால், ஒரு பொதி பிஸ்கட், தேயிலை வாங்கிக் கொண்டேன். வெளியில் காரில் காத்திருந்த ஓட்டுனரையும் உள்ளே வந்து உட்காரச் சொன்னேன். கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அரை லிட்டர் பாலையும் ஊற்றி கொதிக்க வைத்து, சீனி தேயிலை போட்டு நான்கைந்து முறை கொதிக்க வைத்து இறக்கினேன். நன்கு சேர்வதற்காக ஒரு கரண்டியால் கலக்கியும் விட்டுக் கொண்டேன்.
தேநீரை குடித்து விட்டு கிளம்பினாள். நானும் குளித்து தியானம் செய்து விட்டு மீதி இருந்த தோசை மாவு, தக்காளி சட்டினி, முந்திரிப் பழங்கள், வாழைப் பழங்கள் என்று வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். அலுவலகத்தில் எட்டரை மணிக்கு யாரையுமே காணவில்லை. மனம் நொந்துதான் போயிருப்பார்.
சின்னச் சின்ன வேலைகளை முடித்துக் கொண்டிருந்தேன். பதினொன்றரை மணிக்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி '11 மணிக்கே வருவதாகச் சொன்னாயே எங்கு இருக்கிறாய்?' இதோ கிளம்பி வந்து விடுகிறேன்.
பெட்ரோல் பங்கில் 100 ரூபாய்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டேன். காற்று பார்க்க மறந்து விட்டேன். மழை பெய்திருந்ததால் தண்ணீர் நிரம்பி இருக்கும் வழியைத் தவிர்த்து சுற்று வழியைப் பிடித்தேன். அங்கும் ஒரு பகுதியில் தண்ணீர் சாலையில் இரு ஓரங்களையும் தொட்டுத் தளும்பிக் கொண்டிருந்தது.
மிகவும் பலவீனமான தொட்டால் உடைந்து போகும் மனமேடை.
வண்டியை நிறுத்தி விட்டு மேலே போனால், தயாராக இருந்தாள். குழந்தைகள் படிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். secondary storage என்றால் என்ன' கேள்விக்கு விடை அளிக்க முயன்றேன்.
'சாப்பாடு தயாராக இருக்கிறது, சாப்பிடலாம்'. புலவு சோறு, பருப்பு, உருளைக் கிழங்கு, காலி பிளவர் கறி, கடலைக் கறி. பருப்பு மட்டும் வேண்டாம் என்று சொல்லி விட்டு சாப்பிட்டு முடித்தேன். குழந்தைகள் ஒழுங்காகச் சாப்பிடக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 'நீ வெஜிடேரியனா, நான் வெஜிடேரியனா' என்று சந்தேகம்.
சாப்பிட்டு முடிக்கும் வரை கூட உட்கார்ந்திருந்தேன். சாப்பாடு முடிந்து குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டுக் கிளம்பினோம்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு நாற்சந்தி. 100 அடி சாலையில் திரும்பும் போது இன்னொரு வண்டியில் உட்கார்ந்திருந்த பெண் துணி அழுக்கில் புரள்வதாகச் சுட்டிக் காட்டினாள். வண்டியின் பின் சக்கரம் விசிறி அடிக்கும் சேறு அவள் துணியை நனைத்திருந்தது. அருகிலிருந்து கோல்ட்மைன் உணவு விடுதிகளுக்குள் போய் கழுவி விட்டு வெளியில் வந்தோம். அதற்குள் இரண்டு தொலைபேசி அழைப்புகள்
ஒரு ஐஸ்கிரீமும் நான் ஒரு சூடான தேநீரும். யாரும் வந்து எழுந்து போகுமாறு சொல்வதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 2 மணி நேரம் உட்கார்ந்திருப்போம். பக்கத்து இருக்கையில் ஒரு தம்பதியினர் இரண்டு குழந்தைகளுடன், இன்னொரு மேசையில் நடுத்தர வயதைத் தாண்டி விட்டு இரண்டு பெண்கள், மறுபக்க இருக்கையில் இரண்டு இளம் பெண்கள் என்று கூட்டத்துக்குக் குறைவே இல்லை.
இடையில் மழையும் பலமாகப் பிடித்து விட்டது. வேலை, அருமை பெருமைகள், திட்டங்கள் என்று பேசிக் கொண்டே இருந்தாள். நான் என்ன திட்டம் வைத்திருக்கிறேன் என்று கேட்டாள். என்னதான் வேண்டும் இவனுக்கு, இப்படி வந்து இழைகிறானே என்று குழப்பம்.
நாலரை மணிக்கு சத்தியம் சினிமாவில் என்சான்டட் என்ற திரைப்படத்துக்கு சீட்டுகள் எடுத்திருந்தேன். மழை பெய்து கொண்டே இருந்தால் எப்படிப் போவது?
வண்டியை இங்கேயே விட்டு விட்டு ஆட்டோவில் போய் விட்டுத் திரும்புவது என்று முடிவு. மழை விட்டபாடில்லை. குடை பிடித்து ஆட்டோவில் ஏற்றி விட அங்கு வேலை பார்ப்பவர் ஒருவரே வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கி படியில் ஏறுவதற்குள் நனைந்து விட்டோம். அனுமதிச் சீட்டு வழங்கும் பகுதிக்குப் போய்க் கேட்டு விட்டு, கணினியிலிருந்து அச்செடுத்த விபரங்களே போதும் என்று தெரிந்து கொண்டு அரங்குக்குள் நுழையும் வாசலில் போனால், உண்மைத்தமிழன் கையைப் பிடித்தார். ஏதோ படம் பார்க்க வந்தாராம்.
மூன்று மாடிகள் படியேறு ஸ்டுடியோ 5. திரையிலிருந்து நான்காவது வரிசை. பெரிய திரை. விளம்பரங்கள் முடிந்து தேசிய கீதம் போட்டார்கள். குரல் ஆரம்பித்து பாடுவது யார் என்று பார்த்தால் எஸ்பி பாலசுப்பிரமணியம். ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து உணர்ந்து அனுபவித்து பாடினார். பெரிய மகான்!
படம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சித்திரப்படமாகத் தொடங்கி அதில் வரும் சில பாத்திரங்கள், நியூயார்க்கில் வந்து விழுவதாகக் கதை நீண்டது. ஒரு இளவரசி, இளவரசனின் மாற்றாந்தாயால் முதலில் அனுப்பப்படுகிறாள். தொடர்ந்து இளவரசன், அவனைத் தொடர்ந்து மாற்றாந்தாயின் கைத்தடி, கடைசியில் மாற்றாந்தாய் என்று வருகிறார்கள்.
இளவரசி அன்பு, காதல், பாட்டு, ஆட்டம் என்று புதுக் காற்றை தான் சந்திக்கும் ராபர்ட் வாழ்க்கையில் கொண்டு வருகிறாள். ராபர்ட்டுக்கு ஒரு குட்டிப் பெண் குழந்தை. சதிகள் சூழ்ச்சிகளிலிருந்து தப்பித்து இளவரசி ராபர்ட்டையும், ராபர்ட்டின் பெண் நண்பி இளவரசனையும் திருமணம் செய்து கொள்வதோடு கதை முடிகிறது. நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.
3 மணி நேரம் உள்ளேயே அடைபட்டுக் கிடந்தது லேசான தலைவலியைத் தந்திருந்தது. பாப்கார்ன், பெப்சி சாப்பிட்டிருந்தோம். வெளியில் மீண்டும் ஆட்டோவில் 50 ரூபாய்கள் கொடுத்து வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்கு.
அங்கிருந்து கதீட்ரல் சாலை வழியாக மெரீனா கடற்கரை. மாற்றச் சாலை வழியாக பட்டினப்பாக்கம் வரை வந்து மயிலாப்பூரின் வெளிப்புறமாக, அடையார், பிரம்மஞான சபை வழியாக பெசன்ட் நகர் வந்தோம். குளிரும் பசியும் நடுக்கின. சாப்பாட்டுக் கூடத்தில் சூப்புகள், ஸ்பிரிங் ரோல், கட்லெட் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம்.
கடற்கரை மணலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்ததும், குமுறல்கள் வெளி வர ஆரம்பித்தன. சலனங்கள் அதிகம் இல்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்கள் 9 மணி வரை பேசினாள். அவளது உணர்வுகளும் கோபங்களும் புரிந்து கொள்ளக் கூடியவையே.
'நீ குழந்தைகளை என்னிடமிருந்து பிரிப்பதற்குத்தான் வந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். ஆனா அது முடியாது. குழந்தைகள் என்னை விட்டு இருக்க முடியாது. உன்னிடமிருந்து பிரிந்து இருந்து விடுவார்கள், நான் இல்லாமல் இருக்க முடியாது.'
'நான் முன்பு போல் இல்லை, மிகவும் உறுதியானவளாக ஆகி விட்டேன். என்னை எவ்வளவு மலிவாக எடை போட்டு நடத்தினாய்' என்று பழைய புண்களை எல்லாம் ஆற்றிக் கொண்டிருந்தாள்.
'களைப்பாகி விட்டாய் என்றால் நேராக வீட்டுக்குப் போய் விடலாம்' என்றால் சாப்பிட்டு விட்டே போகலாம் என்று சொல்லி விட்டாள்.
சாப்பிடும் போது பொத்துக் கொண்டு வர ஆரம்பித்தது. ஏற்பட்ட மனக் காயங்களை எல்லாம் வெளிப்படுத்தி கண்ணீர் விடவும் ஆரம்பித்தாள். கடையில் பரிமாறுபவர்கள் ஒதுங்கி நின்று கொண்டார்கள். அவள் பேசப் பேச எனக்கும் ஏதோ உடைய ஆரம்பித்தது. எதுவும் வெளிப்படுத்தி விடக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன்.
'என்னை கூப்பிட்டாய், வண்டியில் ஏற்றிக் கொண்டு போனதைக் குத்திக் காட்டினாய், அலமாரி வாங்குவதற்கு திட்டினாய், என்னை முன்னேற்றிக் கொள்கிறேன் என்று சொன்னாய்' என்று சொல்லிக் கொண்டே போனாள். வெளியில் வந்து வண்டியில் ஏறும் போது, 'ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். இவ்வளவு பேசினாயே, என்னை ஒரு தனிமனிதனாக நினைத்து இவ்வளவுக்கும் ஒரு மறுபக்கமும் உண்டு என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா' என்று முகம் துடிக்கக் கேட்டேன்.
அதன் விளக்கத்தைச் சொல்லுமாறு நான்கைந்து முறை வற்புறுத்திய பிறகு, 'நான் என்னென்ன அனுபவித்திருப்பேன் என்று நினைத்துப் பார்த்தாயா'
'குழந்தைகளை பிரிந்து வருத்தப்பட்டிருப்பாய், ஆனா அது உன் செயல்களின் விளைவுதானே' என்று ஒரு குட்டி சலுகையை கொடுத்து மீண்டும் எண்ண ஓட்டத்தில் போக ஆரம்பித்தாள்.
'எனக்குத் தாங்கவில்லை. இவ்வளவு சுயநலத்துடன் ஒரு மனிதப்பிறவி இருக்க முடியுமா?' என்னுடைய சுமைகளை, உணர்வுகளை இவளுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என்று ஏற்கனவே திடம் செய்து கொண்டிருந்தேன். இப்படி பேசியது அதற்கு தோல்விதான்.
நாலரை மணிக்கு எழுந்து அதிகம் அரவம் செய்யாமல், பல் தேய்த்து துணிகள், நாளிதழ்கள், மற்ற பொருட்களை சீர்படுத்தி தூத்து வாரினேன். ஹோலி பண்டிகையை முன்னிட்டு மாலையில் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லியிருந்தாள். அவளும் எழுந்து அதற்கான வேலைகளைப் பார்க்க வேண்டும். நான் 7 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
மழை கொட்டிக் கொண்டிருந்தது. மிகவும் சோர்வாக இருப்பதாகவும், இன்னும் தூங்கப் போவதாகவும் சொன்னாள். ஆட்டோ பிடிக்கச் சொல்லி விட்டு நான் அலுவலகத்துக்கு வந்தேன்.
ஏழரை மணிக்கு ஆரம்பித்தோம். 9 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய பணி வரலாறு, அனுபவங்கள், கருத்துக்கள் என்று நன்றாகவே போனது. 9 மணிக்கு கேரளா விடுதியில் 4 இட்லிகள், ஒரு வடை, ஒரு பூரி. மூன்று பேருக்கும் சேர்த்து 50 ரூபாய்கள் ஆகி விட்டன.
அலுவலகத்தில் வந்து பணி திட்டமிடல். நிறுவன மேலாளர்களுக்கான கட்டுப்பாட்டு மேசை வடிவமைப்பதில் இறங்கினேன். இடையிடையே வாடிக்கையாளர் சேவைப் பணிகள். 2 மணிக்கு போக வேண்டும். 11.30க்கு வாராந்திர குழு விவாதம். இடையில் சேர்ந்து கொண்டார்.
அந்த விவாதத்துக்குப் பிறகு அரை மணி நேரம். 2 மணிக்கு பெரியமேட்டில் சந்திக்க வேண்டும். சேர்ந்து கொண்டார். மழை பெய்து விடுவதாக பயமுறுத்தவே, ஆட்டோ அல்லது பேருந்து என்று முடிவு செய்தோம். தாமதமாகும் என்று தொலைபேசி சொல்லி விட்டுக் கிளம்பினோம்.
பாம்குரோவ் வரை போகலாம் என்று ஒரு பேருந்து. கோடம்பாக்கத்திலேயே இறங்கி முன்னால் போய்க் கொண்டிருந்த பேருந்தில் கீழ்ப்பாக்கம் சீட்டு வாங்கிக் கொண்டோம். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அருகில் இறங்கி ஆட்டோவில் பெரியமேடு. இரண்டே முக்காலுக்கு போய்ச் சேர்ந்தோம்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் வந்ததும் பேச்சைத் தொடர்ந்தோம். பணிகளை எப்படி மீள ஆரம்பிப்பது என்று பேச்சு. சாப்பிடவில்லை என்று அறிந்து பிஸ்கட்டுகளும், மிக்சரும், தேநீரும் ஏற்பாடு செய்தார். நல்ல தெளிவாகவே பேசி முடித்து விட்டுக் கிளம்பினோம். பூந்தமல்லி சாலைக்கு வந்து சாலிகிராமம் வழியாக வடபழனி போகும் 15Fல் ஏறிக் கொண்டோம். ஆவிச்சி பள்ளி சீட்டு. இடையில் பேருந்து தாவலாம் என்று யோசித்து அதைக் கைவிட்டோம்.
ஆவிச்சி பள்ளி அருகில் இறங்கி, பூட்டுப் போட்டிருந்த சாலை கடக்கும் பிளவைத் தாண்டி, சொகுசுப் பேருந்தில் ஏறிக் கொண்டோம். வளசரவாக்கத்தில் இறங்கிக் கொண்டு அலுவலகம்.
வீட்டுக்குப் போய் உடை மாற்றிக் கொள்ள வேண்டும். மனதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்தால் ஊற வைத்துக் காலையில் தோய்க்காமல் விட்டிருந்த துணிகள் வரவேற்றன. கொஞ்ச நேரம், கழிவறை, துணி துவைப்பு, உடம்புக்குக் குளியல். அப்புறம் தியானம். 20 நிமிடங்கள் போதாது என்று இன்னொரு 15 நிமிடங்கள்.
அதை முடித்து விட்டு அலுவலகம் நோக்கிக் கிளம்பும் போது பாரி அரசுவின் தொலைபேசி. ராமாபுரத்தில்தான் இருக்கிறாராம். எஸ்ஆர்எம் கல்லூரி எதிரில் நிற்கிறாராம். அவரது நண்பரின் வண்டியில் அவர் ஏறிக் கொள்ள அலுவலகம் போய்ச் சேர்ந்தோம்.
தமிழ் 99 முறைக்கான விசைப்பலகை ஒட்டுகளை தயாரித்திருக்கிறார். 25000 ரூபாய்கள் செலவழித்து 10000 செட்டுகள் அடித்திருக்கிறார். அதை எப்படி வினியோகிப்பது என்று பேசிக் கொண்டிருந்தோம். என்னிடம் 1000 செட்டுகளைக் கொடுத்து விட்டார். பாலபாரதிக்கும் பேசி விபரம் சொல்லி விட்டு பாலபாரதிக்கு மின்னஞ்சல் அனுப்ப ஒரு படம் வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. தொலைபேசி அழைப்பு வந்து விட்டது. ஏழரை மணிக்கு. 'எல்லோரும் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்'
பாரி அரசுவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வேளாங்கண்ணி பள்ளி வழியாகப் போகலாம் என்று கிளம்பி பாதியில் திரும்பி விட்டேன். பெட்ரோல் பங்கில் 50 ரூபாய்களுக்கு பெட்ரோல், போட்டு விட்டு ஆலப்பாக்கம் முதன்மை சாலை வழியே தொடர்ந்தேன். தேங்கியிருந்த தண்ணீர் உடைந்த சாலைகள் என்று தாண்டி போய்ச் சேரும் முன்பு இரண்டு அழைப்புகள். இணைக்காமலேயே தொடர்ந்தேன். போய்ச் சேரும் போது 8 மணி.
மாடிக்கு வழி காட்டினார்கள். கைகளைக் குலுக்கி விட்டு மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னேன். ஒவ்வொருவராக நகர்ந்து கொண்டே இருந்தார்கள். உயிர் இல்லை. சாப்பாடு இருந்தது, ஆட்கள் இருந்தார்கள், களை கட்டவில்லை. வந்தவர்கள் விடைபெறுவதும், புதிதாக வருபவர்கள் சேர்வதுமாக இருந்தது.
எனக்கு வேண்டியதைச் சாப்பிட்டுக் கொண்டேன். இடையில் மழை ஆரம்பிக்கவே எல்லாவற்றையும் கீழே எடுத்துப் போனார்கள். விளையாடிக் கொண்டே நேரம் போனது. கடைசி விருந்தினர் ஒன்பது மணிக்கு மேல்தான் வரவே செய்தனர். நான் உட்கார்ந்திருந்த சோபாவிலேயே பொருந்திக் கொண்டான். அடுத்த வாய்ப்பில். புதிர்கள், கேள்வி பதில்கள், வித்தைகள் என்று கலக்கிக் கொண்டிருந்தார்கள். முகத்தில் மலர்ச்சியை முதல் முறையாகப் பார்த்தேன்.
உறுத்தலாகத்தான் இருந்திருக்கும். வீடு கட்டுவது குறித்த அவர்களது பேச்சில் நான் அக்கறையே காட்டவில்லை. யாருடைய வீடு பெரியது, எதற்கு அதிக செலவானது என்று வெறுப்பை அளிக்கும் பேச்சுக்கள் காதில் விழுந்து கொண்டிருந்தன. பரிசுப் பொருட்களை பிரிக்கலாமா என்ற வேண்டுகோளுக்கு மறுப்பு சொல்லி விட்டாள். எனக்குப் பிடிக்காத ஒரு நடவடிக்கை என்று அவளுக்குத் தெரியும்.
நீ இங்கேயே தூங்கு என்று வற்புறுத்தல், மாற்று உடை இல்லை, கணினி இல்லை. காலையில் எழுந்திருப்பது பொருளற்று இருக்கும். விளையாடித் தூங்கி விட்ட பிறகு குழந்தைகள் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருப்பார்கள். அதிகாலையில் தூங்கி வழியும் வீடு எனக்கு வெறுப்பை அளிக்கும்.
இதை எல்லாம் யோசித்து மறுதலித்தேன். நீங்க எல்லாம் தூங்குவது வரை உட்கார்ந்து விட்டுக் கிளம்புகிறேன். அதை பேச்சுக்கு ஏற்றுக் கொள்வது போல வண்டியை உள்ளே ஏற்ற வைத்தாள்.
மேலே போனது வாக்குவாதம் ஆரம்பித்தது. 'என்னால் சுகவாழ்வு வாழ முடியாது. என்னுடைய பணிகள், ஒழுக்கம், கடமை என்னைக் கட்டி இழுத்துக் கொண்டே இருக்கும். சிலுவையைச் சுமந்து கொண்டு மலை மேல் ஏறி அந்தச் சிலுவையிலேயே அறையப்பட்டவர் ஏன் அதைத் தாங்கிக் கொண்டார். என் வாழ்வு அத்தகையதுதான்.' என்று சொன்னது ஆழமாகப் பாய்ந்து விட்டது.
மிக மோசமாக சொல்லம்புகளை விட்டுத் தாக்க ஆரம்பித்தாள். 'பொறுப்புகளை எடுத்துக் கொள்ளாமல், சுற்றித் திரியப் பார்க்கும் ஆள் நீ. தேவைப்பட்டால் எங்களைப் பயன்படுத்திக் கொள்வாய், உன் சுயநலம் மட்டும்தான் முக்கியம்' என்று தாக்க ஆரம்பித்தாள்.
என்னுடைய பொறுமையின் ஆழமும் வற்றிப் போக ஆரம்பித்திருந்தது. நானும் வாயைத் திறந்து விட்டால் நிலைமை மிக மோசமாகி விடும். எழுந்து பொருட்களைத் திரட்டிக் கொண்டு கிளம்பினேன். தூங்கப் போய் விட்டிருந்த குழந்தைகளை உரக்க அழைத்து, 'போறான் அவன், அவனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவனுக்கு நாம எல்லாம் வேண்டாம்' என்று சொன்னாள். மனம் கிழிந்து அலைபட்டது. இந்தக் குழந்தைகளை வதைக்க இவளுக்கு என்ன உரிமை இருக்கிறது.
இறுகிய முகத்துடன் யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல், கீழே இறங்கி வண்டியில் ஏறி பறந்து விட்டேன். பாம்பைக் கண்டதும் பதறி ஓடுவது போல ஓடி வந்து விட்டேன்.
வளசரவாக்கம் வருவதற்கு முன் நிதானம் வந்து விட்டிருந்தது. அலுவலகத்தில் கணினியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் போது பதினொன்றரை மணி. தியானம் முடித்து மணி அடித்துப் படுத்து நன்கு தூங்கி விட்டேன்.

வெள்ளி, மார்ச் 21, 2008
மாறிக் கொண்டேதான் இருக்கு
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாமா? நேற்றுக் காலையில் பணம் குவிப்பது குறித்து எழுதி எழுந்திருந்தால் நாள் முழுவதும் ஆட்களை கிண்டலடித்து திட்டி நோகடிப்பதாக முடிந்தது.
காலையில் நான்கு மணிக்கு முன்பே எழுந்து விட்டேன். ஐந்தேகால் வரை எழுத்து. அதன் பிறகு என்ன செய்வது? பொருள்களை ஒதுங்க வைத்து தூக்கலாம், முன்னறையில் பொருட்களை வைக்கும் மாடம், வழிபாட்டு அறையில் சாமிப் படங்களை வைத்திருக்கும் பலகைகளில் விரித்திருந்த நாளிதழ்களை மாற்றி கொஞ்சம் ஜன்னல்களையும் துடைத்தேன். ஒட்டடை அடித்துக் கொண்டேன். தரை தூத்து வாரி விட்டு துணி துவைத்தல்.
நீல நிற சட்டையில் அழுக்கு போகவே இல்லை. அடை அடையாக அப்பியிருந்தது. காய்ந்த பிறகு இன்னொரு முறை துவைக்கப் போட்டு விட வேண்டும் என்று தோன்றியது. துணிகளைக் காயப் போட்டு விட்டு பாத்திரங்களைக் கழுவிய பிறகு நடக்கப் போக வேண்டும். மணி ஆறு.
பொழுது புலரும் நேரம். அரை இருட்டாக இருந்த சூழல் பாதி தூரம் போவதற்கு முன்பு பளிச்சென்று வெளுத்து விட்டது. வீட்டுக்கு வந்து, வாளியில் தண்ணீர் பிடித்துக் கொண்டேன். சாப்பிட என்ன செய்யலாம்? கஞ்சி? பயறு இல்லை, உளுந்து என்றால் தேங்காய் இல்லை. கோதுமை தோசைக்கு கோதுமை மாவு இல்லை. அவல் முந்தைய நாள்தான் செய்தது. அடைக்கு ஊறப் போடவில்லை, ஏனென்றால் தண்ணீர் விடியக் காலையில் கிடைத்திருக்கவில்லை.
கடையில் தோசை மாவு வாங்கிக் கொள்ளலாம், தக்காளியும் பழங்களும் சேர்த்து வாங்கி சாப்பிடலாம். கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது அப்படியே முடி வெட்டிக் கொள்ளலாமே என்று தோன்றியது. ஏழு மணி கூட ஆகியிருக்கவில்லை. முடி வெட்ட திருவள்ளுவர் சாலைக்குப் போக வேண்டும். நடக்கும் தூரம் அதிகம்தான்.
கடை அப்போதுதான் திறந்திருந்தார், அருகிலிருந்த பத்திரிகைக் கடையில் குமுதம் வாங்கிக் கொண்டேன். நல்லகண்ணுவின் பேட்டி வெளிவந்திருந்தது, அரசு பதில்கள், ஓ பக்கங்கள், பாலகுமாரன் பதில்கள் என்று படித்துக் கொண்டிருந்தேன். முடி வெட்டும் கடைக்காரர், கடை எல்லாம் தூய்மை செய்து, சாம்பிராணி ஏற்றி வைத்து பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே கூப்பிட்டார். நான்தான் முதலில்.
உள்ளே போய் உட்கார்ந்த பிறகும் அவரது தயாரிப்புகள் தொடர்ந்தன. எனக்கு வெட்ட ஆரம்பிக்கும் போது இன்னொருவர் நுழைந்தார். வெளியில் மழை நன்கு பலத்திருந்தது. இன்னொருவரும் வந்தவுடன், வேலை பார்க்கும் இரண்டு பேரும் வந்து சேரவில்லை என்று உறைக்கிறது. என் வேலையை பாதியில் விட்டு விட்டு செல்பேசியில் காதை ஒட்டிக் கொள்கிறார். நேரத்துக்கு வர மாட்டேங்கிறாங்க என்று கருவிக் கொள்கிறார். இரண்டு பேருமே பதில் கொடுக்கவில்லை. வைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தார்.
முடி வெட்டிக் கொண்டிருக்கும், அலைபேசி மணி அடித்தது. வேலைபார்ப்பவர்களில் ஒருவர். 'அப்படி வா வழிக்கு' என்று உணர்வு தெரிந்த முகத்துடன் தொலைபேசியை எடுத்தார். சில விநாடிகள் கையில் வைத்து ஏதேதோ அமுக்கி விட்டு காதருகில் கொண்டு போனார். முகம் கடுகடுத்துக் கிடந்தது. திட்டித் தீர்க்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால், குழைவான குரலில் 'எப்போ வரப் போறீங்க' என்று உற்சாகமாக கேட்கிறார்.
எதிர் முனையில் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பணிவாக பதில் சொல்கிறார், 'ஆமாமா, வேலை இருக்கு, இங்க மழை அதிகம் இல்லை. வந்துடுங்க' என்று சொல்லி வைத்து விடுகிறார்.
நாற்காலியில் உட்கார்ந்ததுமே, மொட்டை போட்டீங்களா? என்று கேட்டு விட்டார். மொட்டை போட்டால் முன்பக்கத்தை விட பக்கவாட்டில் முடி வேகமாக வளருமாம். வெட்டல் என்னவோ ஏனோதானோ என்றுதான் செய்தார். 40 ரூபாய்களும் வாங்கிக் கொண்டு வந்திருந்த குமுதமும் அவருக்குக் கட்டணம்.
திரும்பும் வழியில் கடையில் தோசை மாவு, பால், தக்காளி 3, முந்திரிப் பழம், வாழைப்பழங்கள் வாங்கிக் கொண்டேன். வீட்டுக்கு வந்து மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொண்டேன். பாலையும் வெட்டி ஊற்றி வைத்தேன். பொருள் போட்டுக் கொடுத்திருந்த பைகளில் ஒன்றுக்குள் குப்பைகளை திரட்டி வைத்துக் கொண்டேன். நான்கைந்து நாட்களாக குப்பை கொட்டவில்லை.
மாவில் உப்பு போட்டுக் கலக்கி வைக்காமலேயே குளிக்கப் போய் விட்டேன். குளித்து விட்டு வெளியில் வரும் போது வேலையை ஆரம்பித்து விட்டிருந்தார். வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தார். நேற்று பாதி வெட்டி வைத்திருந்ததையும் எடுத்துக் கையில் கொடுத்து விட்டு தியானத்தில் உட்கார்ந்து விட்டேன்.
மனதில் எண்ணங்களின் ஓட்டம் வேகம் அதிகமாகத்தான் இருந்தது. நினைத்திருந்தபடி இரட்டை மடங்கு தியானம் தேவைப்படும் நாட்கள். ஏதோ சாக்கு போக்கு சொல்லி 20 நிமிடங்கள் கூட முழுமையாக செய்வதில்லை. இரவில் தூங்கும் முன்பு இரண்டு மடங்கு செய்து விட்டுத் தூங்கினேன். அவ்வளவு சஞ்சலம் ஏற்பட்டிருந்தது.
காலையில் தியானம் முடிக்கும் சமயத்தில் தோசை ஊற்றும் சத்தம் கேட்டது. எழுந்து அடுக்களைக்குப் போய் பாலைக் கொதிக்க வைத்து, பரப்பி வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக ஒதுங்க வைக்க முயற்சித்தேன். முந்திரிப் பழத்தைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் உதிர்த்துக் கொண்டேன். அதற்குள் ஒரு தோசை தந்து விட்டார். தக்காளி சட்டினியில் காரம் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தார், மிளகாய்ப் பொடியும் வைத்துக் கொண்டேன்.
தோசை மாவில் அரிசி முழுவதும் அரைந்து விடுவதில்லை, மாவு புளித்திருப்பதும் இல்லை. இதனால் தோசை சாப்பிட்டால் செரிப்பது சிரமமாக இருக்கும். அதுவும் எல்லாவற்றையும் தீர்த்து விட வேண்டும் என்று எட்டு ஒன்பது எண்ணிக்கையில் சாப்பிட்டு விட்டால், நாள் முழுவதும் வயிற்றில் இருக்கும். ஐந்து தோசைகளோடு நிறுத்திக் கொண்டேன். மீதி இருக்கும், மாவு தக்காளிச் சட்டினி இரண்டையும் வழித்து பாத்திரத்தில் வைத்துக் கொண்டேன்.
அரை லிட்டர் பாலையும் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்திருந்தேன். கொதித்துக் கொண்டிருக்கும் போதே தேயிலையும், சர்க்கரையும் போட்டு சுழற்றி விட்டேன். இந்தூர் பாணி தேநீர் தயார்.
சாப்பிட்டு முடிக்கும் போது சூடு ஆறி குடிக்கும் பதத்தில் இருந்தது. முந்திரிப் பழம், வாழைப்பழங்களும் உள்ளே போயிருந்தன. அவற்றில் மீதி இருந்தவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து விட்டேன். ஒன்றரைக் கோப்பை தேநீரைக் குடித்து விட்டு பாத்திரங்களை எல்லாம் அங்கணத்தில் போட்டு விட்டுக் கிளம்ப ஆரம்பித்தேன்.
ஒரு சட்டையை ஒரே ஒரு நாள்தான் போட வேண்டும் என்பது சரியான அறிவுரை. ஆனால் அரைக்கைச் சட்டை பற்றிய அறிவுரை ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லைதான். நீல நிற அரைக்கைச் சட்டை போட்டுக் கிளம்பினேன். வண்டி ஓட்டுவதாக சாவியை வாங்கிக் கொண்டார்.
மணி எட்டரை ஆகியிருந்தது. அலுவலகத்துக்கு வரும் போது வெளியில் நின்றிருந்தார். நேற்று இரவுதான் வாணியம்பாடியிலிருந்து வந்திருப்பார். அதிகாலை 2 மணிக்குத்தான் வந்து சேர்ந்தாராம், புத்துணர்ச்சியோடுதான் தெரிந்தார்.
முதல் வேலையாக, மின்னஞ்சல் எழுதினேன். அதைப் பார்த்து விட்டு அனுப்பி விட்டார்கள். இன்னொருவர் ஒன்பதரைக்குத்தான் வந்தார். காலை விவாதம் ஆரம்பித்து 10 மணி வரை போனது, என்னென்ன வேலை நடக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று புதிதாக செய்திருந்த உறுதிப்பாட்டின்படி அடாவடியாக விரட்ட ஆரம்பித்தேன். வழக்கம் போல அமைதியாகக் கேட்டுக் கொண்டார், முகம் மட்டும் சிறிதளவு சுழிக்கும் அவ்வளவுதான். மற்றவர்களுக்கும் ரசிக்கவில்லை.
10 மணிக்கு மேல் காலணி குழுவினரைக் கூட்டி முந்தைய நாள் செய்த மாறுதல்களை விளக்கினேன். எல்லோரும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டார்கள். அதிலும் சீண்டி முறைத்துக் கொண்டேன். புரிதல்கள் ஆழமானவை. செய்த மாற்றங்களை விளக்கி விட்டு, மற்ற தொழிற்சாலைகளிலும் அவற்றைப் போட்டு விட்டு அவர்கள் கேட்ட மாறுதல்களையும் செய்து கொடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டேன்.
கொஞ்சம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 11 மணிக்கு பேசலாம் என்று செய்தி அனுப்பியிருந்தார். அந்த நேரத்தில் போராடிக் கொண்டிருந்தேன். 12 மணிக்கு அதற்காக உட்கார்ந்தேன். ஏதோ சின்ன வேலைக்கு மாலை வரை ஆகும் என்கிறார்.
பணி மிகவும் விறுவிறுப்பாக வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. சில சில குறைபாடுகள். அவற்றைப் பேசி முடித்தோம். கணக்குப் போடுவதில் மென்பொருளில் இருக்கும் குறைபாட்டை உடனுக்குடன் சரி செய்து கொடுத்து விட வேண்டும் என்று பேசிக் கொண்டோம். இன்று காலையில் ஷூஸ்க்கான தோல் பயன்பாட்டு அறிக்கையும், டேனரிக்கான பேட்ச் ஹிஸ்டரி அறிக்கையும் பார்த்து விளக்கி முடிக்க உதவி விட வேண்டும்.
ஆடிட்டரிடம் பேச வேண்டும். மூன்று ஷூ நிறுவனங்களிடமிருந்தும் அறிக்கைகள் எடுத்து அனுப்புவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த விவாதம் முடிந்ததும் சாப்பாட்டுக் கடை ஆரம்பித்தது. இரண்டாவது பந்தியும் உட்கார்ந்து விட என்னுடைய இருக்கை அருகில் இடம் இல்லாமல் போனது. 3 மணிக்கு ஒரு சந்திப்பு என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அது முடிந்ததும் பேச வேண்டும். 3 மணிக்கு வேலை முடிந்து விடாமல் இருக்கவே, பேச ஆரம்பித்தேன். என்ன கற்றுக் கொள்ள வேண்டும். எது முக்கியம் என்று விளக்கினேன்.
எல்லோருக்கும் நிரல் எழுதக் கற்றுக் கொள்வதுதான் முக்கியமாகப் படுகிறது. அவருக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக் கொடுத்து விட்டேன். அலுவலக நடைமுறைகளையும் கற்றுக் கொடுத்துக் கொண்டேன். நேர்முகத்தின் போது தைரியமாகப் பேசிக் கொண்டிருந்தவர், இப்போது ஏன் இவ்வளவு பம்முகிறார் என்று புரியவில்லை. கேட்டால் பல இடங்களில் அது நடக்கிறதாம்.
நேர்முகத்தின் போது நிறுவனத்துடன் உறவு எதுவும் இல்லை. தைரியமாக என்ன ஆகும் என்று பேசலாம். நிறுவனத்தில் சேருவதாக முடிவு செய்த பிறகு பொறுப்புணர்வும், பயமும் மிகுந்து விடுகிறது. அதுதான் ஆரம்ப நாட்கள் மெதுவாக அடியெடுத்து வைக்க ஆரம்பிக்கிறார்கள்.
மூன்றரை மணிக்கு சந்திப்பு. வெளியில் எடுக்கப் போகிறோம், மூன்று பேரும் சமாளிக்க வேண்டும் என்றதும் நல்ல எதிர்வினைதான். மீண்டும் முழு நிறைவு இல்லை என்று தோன்றியது. இந்தக் கூட்டத்துக்கு தீனி போட சீக்கிரம் ஆர்டர்களை வளைத்து முடிக்க வேண்டும்.
கடைக்குப் போய்ப் பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டும். இயக்குனர்கள் சந்திப்புக்கு அறிவிப்பு அனுப்பி விட்டேன். கனெக்க்ஷனில் வாங்கிக் கொள்ளலாம். பயிற்சியில் இருக்கும் பெண்களுக்கு அவர்கள் செய்த வேலைக்குக் கைம்மாறாக பரிசுகள்.
வளைய ஒட்டு போட்ட பளபளப்பான நோட்டுப் புத்தகங்கள் 4 வகைகளாக வாங்கிக் கொண்டேன். 5 பேருக்கு 4 போதுமா? ஒருவர் வேலை செய்யவில்லை என்று நினைவு. ஆனால் ஒருத்தருக்கு மட்டும் கொடுக்காமல் இருப்பது எப்படி? அந்தக் கேள்விக்கு விடை அலுவலகம் திரும்பும் வரை கிடைக்கவில்லை. போய் இன்னொன்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.
4 நோட்டுப் புத்தகங்களும் சேர்த்து 445 ரூபாய்கள், ஐந்தாவது 70 ரூபாய்கள். கனெக் ஷனில் பணம் கட்டுமிடத்தில், கடனட்டையைத் தேய்க்கக் கொடுத்து விட்டுச் சுற்றிப் பார்த்தால் ஷேக்ஸ்பியர் என்று ஒரு பொதி, டிவிடிக்களின் தொகுப்பு, 1599 ரூபாய்கள். இதே போன்று வேறு ஏதாவது தொகுதி இருக்கிறதா என்றும் பார்க்கலாம். அப்படிப் பார்க்கப் போய் ஒரு வாழ்த்து அட்டையும் வாங்க முயன்றேன்.
நோட்டுகளில் வாழ்த்து எழுதிக் கையில் கொடுத்து விட்டேன்.
நண்பருடன் சாப்பிடப் போவதாக ஏற்பாடு. தொலைபேசினால், எதிரில் மூன்றாம் நபர் இருக்கும் போது பேசும் செயற்கைத் தொனியுடன் பேசினாள். அலட்டலாக பதில் சொல்லி வைத்து விட்டாள். அமைதியாக யோசிக்க வேண்டும் என்று உட்கார்ந்தவுடன் சிறிது நேரத்திலேயே மணி. வகுப்புக்குப் போக ஆரம்பித்து விட்டாராம். தனது திட்டங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். ஐந்து நிமிடங்கள் வரை பேசியிருக்கலாம். அத்துடன் பேச்சை முடித்து வைத்து விட்டேன்.
20 நிமிடங்களில் மனம் தெளிந்து அடங்கி முடிவுகள் தெரிந்தன.
வெளியில் மழை நன்கு பெய்து குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. சாப்பிடப் போவதற்கு மற்றவரின் வண்டியை எடுத்துக் கொள்வாராம். வீட்டுக்கு வேறு வழி பார்த்துப் போய்க் கொள்ள வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏதோ விளையாட்டுக்குத்தான் பேசுகிறார்கள் என்று நினைத்தால் உண்மையிலேயே அவர் வண்டியில் போவதாக முயன்று கொண்டிருந்தார்.
முடியாது என்று சொல்ல முடியாத குழந்தை போல அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டுருந்தார். போன முறை வந்திருந்த போதே புதிய விற்பனையை நான் பார்த்துக் கொள்கிறேன் பேர்வழி என்று இவரை அதிகாரம் செய்து கொண்டிருந்தார். இரண்டு பேருக்கும் ஒரே வயது ஒரே படிப்புத் தகுதிதான் இருக்கும்.
பேச்சு ஏற ஏற எனக்குக் கடுப்பானது. 20 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணித்து வீட்டுக்குப் போய் விட்டுக் காலையில் ராணிப்பேட்டை போக வேண்டியவர் ஒருவர். ஆறேழு கிலோமீட்டர்கள் போய் நண்பருடன் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வந்து காலையில் சிறப்பாக வேலை எதுவும் இல்லாத ஒருவர். பின்னவர் தனக்குத்தான் வண்டி வேண்டும் என்று முன்னவரை தள்ளித் தள்ளி எடுத்துக் கொள்ளப் பார்க்கிறார்.
எளியவரை வலியவர் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு. அப்பட்டமாகத் தெரிந்தது. நடுவில் புகுந்து அதை உடைத்து விட்டேன். ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் இன்னொருவரை பின்தள்ளத்தான் வேண்டும், இன்னொருவருக்கு சிரமம் வரத்தான் வேண்டும் என்று ஆரம்பித்தார். வாக்குவாதம் வளர்ந்து பேச்சு உரக்கப் போனது. உட்கார்ந்திருக்க முடியாமல் கிளம்பி விட்டார். பக்கத்து வீட்டில் எல்லாம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
பள்ளியில் எல்லோரையும் மிரட்டும் மாணவனை ஒரு நாள் ஒருவன் நிமிர்ந்து விட்டால், முரடனின் முகமூடிகள் நெகிழ்ந்து எல்லோருக்கும் உண்மை தெரிந்து விடும். அதுதான் வேண்டும். மிகத் தந்திரமாகத் திட்டமிட்டு தனது நலன்களைப் பார்த்துக் கொள்ளும் கீழ்த்தரமான போக்கு. அதை மாற்ற வைக்க நானும் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறேன். பையன் கேட்க மாட்டேன் என்கிறான்.
ரிலையன்சு, டாடா, நிக் லீசான் என்று வாக்குவாதம் வளர்ந்தது. பேரிங்ஸ் வங்கி குறித்து அலசல் நடத்தியதாக ஒரு சவடால் விட்டதையும் சவால் செய்தேன். பல இடங்களில் தாக்குப் பிடிக்காமல் தனி மனிதத் தாக்குதலில் இறங்கினார். மனம் வெறுத்துப் போயிருந்தது. இது ஆரோக்கியமான போக்கு இல்லவே இல்லை.
உபுண்டுவுக்கு உதவி கேட்டு ஒருவரது தொலைபேசி அழைப்பு. எல்லோரும் சாப்பிடக் கிளம்பியதும் நானும் வீட்டுக்கு. பரிசுப் பொருளையும் எடுத்துக் கொண்டேன். மழை தூறிக் கொண்டிருந்தது. தலைக்குக் கவசம்.
வீட்டுக்கு வரும் வழியில் தொலைபேசி அழைப்பு. மழையில் ஒதுங்கி அழைக்காமல் வீட்டுக்குள் நுழைந்ததும் அழைத்தேன். 40 நிமிடங்கள்.
மனம் தாங்காமல் வழியும் குற்றுவுணர்ச்சிகள். ஒரே ஒரு கேள்வி கேட்டதும் மூச்சு விடாமல் பேசி முழுக் கதையையும் பத்து பதினைந்து நிமிடங்களில் கொட்டித் தீர்த்தாள்.

வியாழன், மார்ச் 20, 2008
எவ்வளவு படிக்க வேண்டியிருக்கிறது?
மார்ச்சு 20. மேற்கத்திய சூரிய நாட்காட்டியில் மீன ராசி முடிந்து மேஷ ராசி இன்னும் ஓரிரு நாட்களில் ஆரம்பித்து விடும். நேற்றைக்கு பகலில் ஒருவர், மாலையில் இன்னொருவர் தமது உயர்வை காட்டினார்கள். தன்னுடைய கணக்கிடும் திறமையை வெளிப்படுத்தி நான் உணர்ந்து கொண்டதை இன்னும் அரக்கி தேய்த்து புகட்ட முயன்றாள்.
எரிச்சல் அடைந்து விடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். பேச்சிலிருந்தும் ஒரு நல்ல கருத்து கிடைத்தது. கணினியில் சொந்தக் கணக்கு வழக்குகளை, நிதி நிலை விபரங்களை பராமரிக்க ஆரம்பிக்க வேண்டும். பணத்தை கவனமாக, ஒவ்வொரு துளியாக பராமரித்தால்தான் அது தங்கும், வளரும், செழிக்கும். திருமகளையும் வரவேற்று போற்றி கவனமாக திட்டமிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவள் வேறு இடத்துக்கு நகர்ந்து கொண்டே இருப்பாள்.
டிசம்பரில் ஆரம்பித்து கடந்த மூன்று மாதங்களாக பணம் குறித்த பாடங்கள்தான். நிதிநிலை விபரங்கள் மென்பொருளில் உள்ளிட்டுப் பார்த்தால் கடந்த ஆறு ஆண்டுகளில் கடனாளியாகத்தான் நிற்கிறேன்.
இவற்றுக்கு மறுபக்கத்தில் காட்டுவதற்கு லெதர்லிங்க் நிறுவனம் மட்டும்தான் இருக்கிறது. அதன் மதிப்பு நியாயமான வட்டி வீதம் போட்டுப் பார்த்தால் கூட ஒன்றரை கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். பணம் வருவதைத் தள்ளிப் போட்டிருப்பதையும் கணக்கிட்டால், மதிப்பு இரண்டரை கோடிக்கு அருகில் இருக்க வேண்டும்.
இது வரை மொத்த வருமானமே ஒரு கோடி தாண்டியிருக்கவில்லை. மீதி மதிப்பு அனைத்தும் பல இடங்களில் தேங்கிக் கிடக்கிறது. முதலில் மென்பொருள் அது தொடர்பான அறிவு, அதைப் புரிந்து பணி புரியும் குழுவினர். இரண்டாவதாக, மென்பொருளைக் கொடுத்து குறைவான பணத்தைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்கள், மூன்றாவதாக, இந்த மென்பொருளை பயன்படுத்தக் கூடிய பெரும் சந்தை.
இந்த மூன்றையும் இணைத்து நிறுவனத்தின் வருமானத்தை உதைத்து கிளப்பி விட வேண்டும்.
வாடிக்கையாளர்களிடமிருந்து செய்த வேலைக்கு ஊதியம் சரிவர வாங்காமல் இருந்திருக்கிறோம். இனி வரும் நாட்களில் ஒவ்வொரு நிறுவனத்தையும் கண்காணித்து சேவைக் கட்டணத்தில் வசூலித்து விடும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சேவையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிறுவனங்கள், சேவை ஒப்பந்தம் இல்லாத நிறுவனங்கள், முற்றிலும் நின்று போன நிறுவனங்கள் என்று பிரித்துக் கொண்டு தாக்க வேண்டும். இந்தப் பணம் அடுத்த ஆண்டுக்குள் கையில் வந்து விட வேண்டும்.
அடுத்ததாக மென்பொருளில் அறிவுத்திறனில் குழுவினரின் மதிப்பில் முடங்கிக் கிடக்கும் மதிப்பு. புதிய வாடிக்கையாளர்கள், புதிய சந்தைகள், இருப்பதை கொஞ்சம் சீர் செய்து கொடுத்து ஈட்ட வேண்டும்.
இந்த மூன்றையும் செய்து எனக்கு வர வேண்டிய பணம் அனைத்தும் நிறுவனத்திலிருந்து திரும்பக் கிடைத்து விட வேண்டும். அடுத்த ஆண்டு இறுதியில் என்னுடைய கணக்கில் சேர்ந்திருக்க வேண்டும். கடன்களை எல்லாம் தீர்த்திருக்க வேண்டும். பலருக்கு சேவை செய்ய, உதவிகள் செய்ய திறன் வளர்ந்திருக்க வேண்டும்.
நேற்றுக் காலையில் 5 மணிக்கு எழுத ஆரம்பித்து 6 மணி வரை எழுத்து. கோபமான எழுத்து. வளங்களைப் பராமரித்து பெருக்கத் தெரியாத மூடத்தைச் சாடி எழுத்து. வேகத்தில் நிமிடத்துக்கு எழுதும் சொற்களின் எண்ணிக்கை 30 வரை போனது. எழுதி முடித்ததும், துணிகள், நாளிதழ்களை ஒதுக்கி விட்டு, தூசி தட்டுதல், தூத்தல், தரை துடைத்தல் என்று இறங்கினேன். ஏழு மணிக்கெல்லாம் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. காலையில் 1 மணி நேரம் செலவழித்தால், வீட்டை மற்ற பொருட்களை பராமரித்தல் நடந்துதான் விடுகிறது.
முடி வெட்டிக் கொள்ளலாம் என்று போனால், வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை மூடியிருந்தது. பெரிய சாலையில் இருக்கும் கடையில் காத்திருப்போர் வரிசை நீளமாக இருந்தது. ஒரு அப்பா இரண்டு பையன்களோடு வந்திருந்தார். இன்னொருவர் காத்திருந்தார். மொத்தம் 4 வெட்டுகள் முடிந்துதான் என் முறையே வரும். அரை மணி நேரத்துக்கு நாளிதழ் படித்துக் கொண்டிருக்க முடியுமா! அதற்கு முன்பே முகம் மழித்து விட்டுதான் போயிருந்தேன்.
வீட்டுக்கு வந்து குளித்து விட்டு தியானம். தியானத்தின் போது, முதுகை வளைத்துக் கொள்ளுதல், சுவரில் சாய்ந்து கொள்ளுதல், கால்களை நீட்டிக் கொள்ளுதல் என்று பல வளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன். ஒரு 20 நிமிடங்களுக்கு நேர் முதுகோடு, சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்க முடியாமல் என்ன அலைச்சல்?
நன்றி சொல்லி ஒரு குறுஞ்செய்தி, அலுவலகம் போனதும் அதைப் பற்றி ஒரு மின்னஞ்சலும். வாழ்க்கையின் குறிக்கோளை நிர்ணயிப்பது சுலபமில்லை, அதை அடைவதற்கான நடைமுறைகள் இன்னும் கடினமானவை. நான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது.
அதில் தொக்கி நின்ற, குறிக்கோள்கள் சொத்தையானவை என்ற கருத்தை கண்டு கொள்ளாமல், தொலைபேசியில் அறிவுரைகள். 'இத்தனை லட்சங்கள் சேர்த்திருக்கலாம், இத்தனை திட்டங்கள் செய்து கொண்டிருக்கவில்லை. நாளைக்கு உடம்புக்கு ஏதாவது ஆகி விட்டால், ஏதாவது தேவை ஏற்பட்டால் யார் வந்து நிற்பார்கள்.'
'அதெல்லாம் தனிக்கதை, ஆனால் வரும் பணத்தை கவனமான கணக்கு வைத்து செலவழிக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை' என்று சொல்லி வைத்தேன். நிறுவனத்திலும் கணக்கு வைப்பது சரியில்லாமல் இருப்பது என்னுடைய குறைபாட்டினால்தான்.
அவல் ஊற வைத்து தாளித்திருந்தேன். கடையில் கற்பூர வாழை வாங்கப் போனால், அந்த பாட்டி 6 பழங்கள் கொடுத்து விட்டு 10 ரூபாய் வாங்கிக் கொள்ளச் சொன்னது. பையன் எடை போடச் சொன்ன போது எரிச்சலாக இருந்தது. பார்த்தால் 6 ரூபாய்க்குத்தான் இருந்தது. இன்னும் 2 பழங்கள் சேர்த்து விட்டு 2 ரூபாய் திரும்பக் கொடுத்து விட்டான்.
குளிப்பதற்கு முன்பே பழங்களை உள்ளே தள்ளியிருந்தது தவிர்த்திருக்கலாம், குளித்து விட்டுக் கிளம்பினேன். சரியான சட்டை, காலுறை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டேன். சரி, பல்லாவரம் போகும் வழியில் மாற்றிக் கொண்டு போகலாம் என்று முடிவு செய்து கொண்டேன். காலை வேலைகளை முடித்து விட்டு பத்து மணிக்குக் கிளம்பினேன்.
சந்திப்புக்குத் தேவையான படங்களை பெரிய அட்டைக் காகிதத்தில் அழகாக வரைந்து கொடுத்து விட்டார்கள் பயிற்சி மாணவர்கள். அவர்களுக்கு நன்றிப் பரிசாக ஏதாவது கொடுக்க வேண்டும். அதை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டேன். வழியில்தான் காலணியை மாற்றிக் கொள்ளவில்லை என்பது நினைவுக்கு வந்தது. கையில் எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகச் சொன்னார்.
வீட்டுக்குப் போனால், மேல் வீட்டில் வசிப்பவர் தனது காரை கழுவிக் கொண்டிருந்தார். அவரது மகன் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தான். கார் பராமரிப்பதில் இருக்கும் சிரமங்களை பேச ஆரம்பித்தார். இன்னும் கிளம்பியிருக்கவில்லை ஆதலால், நானே திரும்ப அலுவலகம் போய் விட்டேன். நீல நிற சட்டை கறுப்பு நிற காலுறை.
அலுவலகத்துக்குப் போய் தாள்களை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பத்தே முக்கால் தாண்டி விட்டது. நேர உணர்வே இல்லை. கொஞ்ச சிக்கலாக இருந்த வாகன நெரிசலில் சமாளித்து வரும் போது 11.15. பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்குள் வந்து விட்டிருந்தார். உடனேயே உள்ளே போகச் சொல்லி விட்டார்கள். தாமதத்துக்கு மன்னிப்பு கேட்டு விட்டு படத்தைப் பிரித்தேன்.
அவர் குறை சொல்ல முடியாத படி முழுமையாக இருந்தது. இடையிடையே என்னென்ன விபரங்கள் வேண்டும் என்று மட்டும் பேசிக் கொண்டிருந்தார். ஒரு வாரமாக அவ்வளவு இறுக்கமாக இருந்தது தளர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிக்கையை எடுத்துக் கொடுத்து விடலாம் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தால் வேலை எதுவும் நடந்திருக்கவில்லை.
ஒரு மணி நேரம் ஆகலாம் என்றார். வண்டியைக் கிளப்பி தாம்பரம் போகலாம் என்று புறப்பட்டேன். குரோம்பேட்டை, எம்ஐடி, சிட்லபாக்கம், தாம்பரம் சானடோரியம் வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். இருக்கிறார்களோ என்னவோ!
மணியை அழுத்தி விட்டு உள்ளே ஏறினால் இரண்டு பேரும் இருந்தார்கள். உள்ளே சாப்பிடும் மேசையில் மாமாவும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த அத்தையும் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
மாதுளம் பழ முத்துக்களை உதிர்த்துக் கொண்டிருந்தவர் என்னை எடுத்துக் கொள்ளச் சொன்னார். கையில் ஏதாவது வாங்கிக் கொண்டு போயிருக்கலாம்.
பேசிக் கொண்டே இருக்கும் போது பானகம் கரைத்துக் கொடுத்தார்கள்.
புளிக்கறி, கீரைக்கறி, மாங்காய் கறி, உருளைக்கிழங்கு பொரியல், மோர் சாப்பிட்டு விட்டு உடனேயே கிளம்பி விட்டேன். போராடிக் கொண்டிருந்தார். காலையில் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன என்று சொன்னது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. பிரச்சனையின் வேரை அடையாளம் கண்டு தீர்வு சொல்வதில் சுணக்கமாகவே இருக்கிறார். கை கால்கள் பறக்கின்றன. பாவம், மதியம் சாப்பிடாமல் இருப்பதாலும் நிலை இல்லாமல் இருக்கலாம்.
நானே நிரலில் இறங்கி ஒவ்வொன்றாக சீர்படுத்தி அறிக்கை எடுத்துக் கொடுத்தேன். 5 மணி ஆகி விட்டது. சின்னச் சின்ன விஷயங்களை கவனிக்காமலேயே விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை அழுத்திச் சொல்லவும் செய்தேன்.
ஓரளவு திருப்தியடையச் செய்து விட்டுக் கிளம்பினோம். பாவம் சாப்பிடாமல் வீட்டில் விட்டு விட்டு வந்திருந்தார்கள்.
அலுவலகத்துக்கு வந்து சேரும் போது 6 மணி தாண்டியிருந்தது. அதற்கு மேல் கை வேலை எதுவும் ஓடப்போவதில்லை. காலணி குழுவினருக்கு எப்படி தொழில் நடக்கிறது என்று விளக்கினேன்.
இடையில் அழைப்பு, தொலைபேசி கூட்டத்துக்கான நாளை உறுதி செய்தேன். வாழ்க்கையின் குறிக்கோள்கள் நெறிகள் குறித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.
3 பேராக வேலைகளைப் பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டேன். பதவி இறக்கம் செய்வது போலத் தோன்றுகிறது அவர்களுக்கு. இன்று தெளிவாக விளக்கி விட வேண்டும்.
வெளியில் வந்ததிலிருந்து அந்தப் பிரிவில் வேலைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. அதே போல இவரையும் வெளியில் எடுத்து விட்டால், மற்றவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
உயர் நிலையில் இருக்கும் யாரும் வாடிக்கையாளர் பொறுப்பாளராக இல்லை.
இதை விளக்கிக் கொண்டிருந்தேன். அவரையும் சேர்த்தால் அந்தக் குழுவில் நான்கு பேர். எல்லா நிரல் உருவாக்கப் பணிகளின் இயக்குனர் என்று சொல்லலாம். கூடவே அக்டோபரிலிருந்து புதிய நிறுவனப் பிரிவின் தலைவர் என்றும் அறிவித்து விடலாம்.
வலைப்பதிவுகளை விட்டது நான் ஆதரிக்கிறேன் என்று இரண்டு பேருக்கும் காலையிலேயே பதில் போட்டு விட்டேன். ஒரு ஏழெட்டு பேரை இப்படி மெனக்கெட்டு விசாரிக்கும் அளவுக்கு பாதித்திருக்கிறேன்.
ஒன்பதரை மணி ஆகி விட்டது, கிளம்பலாம் என்று பார்த்தால் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவரை பாதியில் ஏற்றிக் கொண்டு வண்டியில் போனால் அவரது பேச்சு தடைபட்டது. வீட்டுக்கு வந்து மீண்டும் ஆரம்பித்து விட்டார்.
ஜிஎன்யு கேஷ் பயன்பாட்டில் கணக்குகளை போட்டு ஆரம்பித்து வைத்தேன் இன்றும் தொடர வேண்டும். 55 நிமிடங்களில் 1495 சொற்கள். மோசமில்லை. 27 சொற்களை எளிதாக தாண்டி விடுகிறேன். தொட்டு விடுகிறேன் என்று சொல்ல வேண்டுமோ!
இதை முடித்து விட்டு, தூசி தட்டி தரை தூக்க வேண்டும். தொடர்ந்து துணி துவைத்தல், குடிக்கத் தண்ணீர் பிடித்தல், காலை உணவு செய்தல். அலுவலகத்தில் பணிகளை இற்றைப்படுத்ததல் என்று தொடர வேண்டும்.
வாழ்க்கை என்றால் இப்படிப் போக வேண்டும். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையில்லை, இப்படித்தான் வாழ வேண்டும் என்று வகுத்துக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். அதை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். விழித்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதற்கு பயன்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

புதன், மார்ச் 19, 2008
ஒட்டுண்ணி வாழ்க்கை ?
நான் ஒரு ஒட்டுண்ணியாகவே இருந்து வருகிறேன். வாடிக்கையாளருக்கு நிறைவான சேவை கொடுத்து எப்படி பொருள் ஈட்டுவது என்று தெரியவில்லை. எனக்குப் பணத்தின் மீது மதிப்பு இல்லை.
வங்கியில் நிறைய பணம் இருந்து ஆடம்பர வாழ்க்கையையும் சுகங்களையும் புறக்கணித்தால் தியாகி என்று ஒத்துக் கொள்ளலாம். இல்லாதவன் நான் விரதம் இருக்கிறேன் என்பதில் என்ன சிறப்பு இருக்கிறது.
இத்தனை ஆண்டு வேலை பார்த்து, இத்தனை ஆண்டுகள் தொழில் புரிந்து இன்னும் வரவு செலவை மிஞ்சவில்லை. மிஞ்ச வைக்க வழி தெரியவில்லை. வாடிக்கையாளருக்கு வேண்டிக் கேட்ட பணம் வெளி வர மாட்டேன் என்கிறது.
தத்துவம் பேசும் முன்பு, வளத்தை ஈட்டிக் கொள்வதைப் பார்க்க வேண்டும். செய்யும் வேலையின் தரம் அதிகமாக வேண்டும். வாடிக்கையாளருக்கு நிறைவளிக்கும்படி செய்து கொடுத்து பணத்தைக் குவிக்க வேண்டும்.
நான் தனிப்பொறுப்பெடுத்து பண்ண ஆரம்பித்தேன். இரண்டு மாதங்களுக்கு அப்புறமும் அதே நிலைமைதான் இருந்து வருகிறது. அதற்கு யார் பொறுப்பு? ஒவ்வொருவரிடமிருந்தும் கடன் வாங்கி, பிச்சை எடுத்து, முதலீடு என்று சொல்லி வாங்கி செலவு செய்து கொண்டே இருப்பது என்ன நியாயம்? இதை விட கோயில் வாசலில் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.
பணிகள் வெள்ளிக் கிழமைக்குள் முழுமையாக முடித்திருக்க வேண்டும். திட்டமிட்டதில் முடித்திருக்க வேண்டும். வேலைகள் முடுக்கி விட வேண்டும். தரமான மென்பொருள் போய்ச் சேர வேண்டும். திட்டமிட்டதில் ஒரு ரூபாய் கூட குறைந்து விடக் கூடாது.
தரம், நேரம், வேலை அளவில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. மாதா மாதம் வருமானம் வந்து விட வேண்டும். கடன் வாங்கி போன ஆறு மாதம் ஓடி இருக்கிறது. செய்த வேலையின் மதிப்பு? அதில் கடன் என்றால் வருத்தமாக இருக்கிறது.
கை நிறையப் பணம் இருக்க வேண்டும். அதை மற்றவர்களுக்கு சேவை செய்யப் பயன்படுத்த வேண்டும். யாரிடமும் கடனோ அன்பளிப்போ உதவித் தொகையோ கேட்கக் கூடாது. இந்த நோக்கம் வேண்டும்.
ஆண்டவன் சரியான நேரத்தில் சரியான திருப்பங்களைக் கொடுத்து விடுகிறான். துடிப்பும், பணம் திரட்டும் ஆர்வமும் எனக்கு வந்து சேர வேண்டிய நல்ல பண்புகள். பணம் சேர்ப்பது நேர்மையான வழியாகவும் பணத்தை செலவழிப்பது நியாயமான வழியாகவும் பார்த்துக் கொள்ள எனக்கு நிறையவே சரக்கு இருக்கிறது பணத்தைச் சேர்ப்பதற்கு முனைப்பு போதாது.
நேற்றுக் காலையில் நாலரை மணிக்கு எழுத்து ஆரம்பித்தது. எழுதி முடித்து விட்டு தரை தூத்து வாரி விட்டு உலாவக் கிளம்பினேன். கால் ஆடு சதையில் ஒரு வாரமாகவே வலி இருந்து வந்தது. இரண்டு கால்களிலுமே வலித்தது. நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வந்தால், நீண்ட தூரம் நடந்தால் ஏற்படும் வலி. அப்படி எதுவும் நடக்காமலேயே வலித்தது. சனிக்கிழமைக்கு அப்புறம் ஆரம்பித்ததாக நினைவு.
சனிக்கிழமை உணர்ச்சிகளின் வேகத்தில் தூக்கி அடிக்கப்பட்டது. மாலையில் காய்ந்த ரொட்டியும் மசாலை வாரி இறைத்த கறியும் சாப்பிட்டது. ஞாயிற்றுக் கிழமையும் அதே உணர்வுகள் வேகம். அன்பு வெள்ளம் ஞாயிறு, திங்கள் கிழமைகளில், நேற்றைக்கு கோபமும் ஆற்றாமையும்.
உலாவி விட்டு வந்து துணி துவைத்தல். நிறைய இல்லை, ஒரு சட்டை, ஜட்டிகள், பனியன்கள், சாரம், காலுறை. சட்டைகள் எல்லாம் அழுக்காக சரியாக பராமரிக்கப்படாதது போல தோன்ற ஆரம்பித்து விட்டன. மதியத்துக்கு மேல் சுட்டிக் காட்டவும் செய்து விட்டார். மாதம் ஒரு புதிய சட்டையும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய பேண்டும் வாங்க விட வேண்டும். பழைய உடைகளை போட்டு விட்டு ஓட்டாண்டி போல போகக் கூடாது என்று முடிவு. இப்போது இருக்கும் சட்டைகளில் உருப்படியாக எதுவும் இல்லைதான். எல்லாமே பல்லிளிக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆள் பாதி, ஆடை பாதி என்று, சரியாக உடை உடுத்தவன்தானே தரமான சேவையை வழங்க முடியும். தன் உடைகளில் கவனம் செலுத்தாதவன் மென்பொருளின் தரத்தில் என்ன கவனம் செலுத்துவான் என்று வாடிக்கையாளர் நினைக்கத்தானே செய்வார்கள்.
குளித்து விட்டு தியானம். உடை அணிந்து கொண்டு, ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து வந்து கொண்டேன். குடிப்பதற்கு இருந்த தண்ணீர் நன்றாக இல்லை. இனிமேல் தினமும் தண்ணீர் பிடித்துக் கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தரையைத் துடைத்தே ஆக வேண்டும். ஜன்னல்களை, கதவுகளை வாரத்துக்கு இரண்டு முறை துடைக்க வேண்டும். குளியலறை சுவர்கள், பீங்கான் பொருட்கள், சமையலறை மேடையை மூன்று நாட்களுக்கு ஒரு முறை துடைத்தே ஆக வேண்டும். வாளிகள், பாத்திரங்களை வாரத்துக்கு ஒரு முறை கழுவியே ஆக வேண்டும்.
இன்றைக்கு தரை துடைத்தலும், கதவுகளைத் துடைத்தலும் செய்து விடுவோம். ஈரத் துணி வைத்து ஜன்னல்களும் கதவும் துடைக்கப்பட்டு பளபளவென்று மின்ன வேண்டும். பராமரிக்கும் எந்தப் பொருளிலும் தனி கவனம் தெரிய வேண்டும். பைக்கைத் துடைப்பது பராமரிப்பது, அலுவலகத்தில் வண்டிகளைப் பராமரிப்பது என்று நமது பொருட்களின் பராமரிப்பு மென்பொருள் தரத்திலும், சேவை தரத்திலும் வெளிப்பட வேண்டும்.
அவல் தாளிக்கலாமா என்று யோசித்து வேண்டாம் என்று கிளம்பி விட்டேன். ஹாட்சிப்சில் சாப்பிடலாம் என்று போய் விட்டேன், 4 இட்லிகள் முதலில், ஒரு தோசை இரண்டாவது, சர்க்கரை குறைவாக ஒரு தேநீர் கடைசியில். முதல் இரண்டு 20, 20 ரூபாய்கள், மூன்றாவது 8 ரூபாய்கள். காலை உணவை கட்டாயமாக வீட்டில் செய்து கொள்ள வேண்டும். அலுவலகத்துக்கு சீக்கிரம் போக வேண்டும் என்றால் எழுந்திருப்பதில் நேர மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
வீட்டை, பொருட்களை பராமரிக்க, உணவு தயாரிக்க, சொந்த வேலைகளைப் பார்க்க ஆகும் நேரத்தில் சமரசமே கிடையாது. அலுவலகத்துக்கு முன்பிருக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்த வேண்டும். செய்யும் வேலை ஒவ்வொன்றிலும் தரமும் தனிச் சிறப்பும் பளிச்சிட வேண்டும். ஏனோ தானோ வென்று செய்வதை விட்டு விட வேண்டும். வளங்களை வீணாகப் பயன்படுத்தும் பாவம் அது.
அலுவலகத்துக்குப் போய் உட்கார்ந்தால் ஒருவர் வந்து இறங்கினார். ஒன்பதரைக்கு அருகில்தான் மற்றவர்கள் வந்து சேர்ந்தார்கள். காலைக் கூட்டம். பத்து மணி வாக்கில் தொலைபேசினால் மதியத்துக்கு முன்பு வந்து விடச் சொன்னார். செட்டப்புகளை செய்து கொண்டு தாள்களை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ஏற்கனவே போட்டு வைத்திருந்த பணி நகரும் முறைக்கான தாளை எடுத்துக் கொள்ளவில்லை, எழுதுவதற்கு சரியான பேனா கிடையாது.
இப்படி ஒரு வாடிக்கையாளர் இடத்துக்குப் போனால் என்ன பொருள்? சரியான தயாரிப்பு இல்லாமல் போனால் அழுது வடிந்து விட்டுத் திரும்புவதுதான் நடக்கும். வழியில் நிறுத்தி தொலைபேசியில் விபரங்கள் கேட்பதும் நடக்கவில்லை. 5 நிமிடங்கள் இருக்கும் போது போய்ச் சேர்ந்தேன். 11 மணிக்கு வருவேன் என்றால் நேரம் தவறாமல் போய் விடும் பழக்கமும் உள்ளுணர்வும் ஏற்பட்டது போல சரியான தரம் கொடுத்து முழுமையான மதிப்பைக் கேட்டுப் பெறுவதற்கான பழக்கமும் உள்ளுணர்வும் உண்டாக வேண்டும்
செய்வன திருந்தச் செய் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆணி போல உறுதியாக இருந்தார். திட்டியதைச் சொல்லி ஆரம்பித்தேன். என்னுடைய கருத்துக்களில் இறங்கி அவர் சொல்வதைக் கேட்க தவறி விடக் கூடாது என்பதில் வெற்றி. சந்திப்பு முழுவதும் அவரது எண்ணங்கள் கருத்துக்களை கேட்டுக் கொள்ள முடிந்தது. எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் கேட்டு பொறுப்பை ஒத்துக் கொண்டு விட்டேன். ஆரம்பத்தில் திட்டப்பணியில் சரியான முறையில் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்தது என்று ஒரே ஒரு குற்றச்சாட்டு மட்டும் சொன்னேன்.
அவர் சொன்ன வழிமுறைகளை ஏற்றுக் கொண்டு என்ன திட்டம் வைத்திருக்கிறோம் என்று டேஷ்போர்டு வடிவமைப்பைக் காட்டினேன். அதற்கு அழகான வடிவம் கொடுத்து அச்சிட்டு எடுத்துப் போயிருந்தால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் ஒரு தாளில் அழகாக வரைந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு முதல் வேலையாக அதை செய்து கொள்ள வேண்டும்.
இறுதியாக டேனரி சிஸ்டத்தில் இருக்கும் சிறப்புகளை, மேம்பாடுகளை கோடு காட்டினேன். ஒரு மாதத்தில் வேலை முடித்து விடுவதற்கான திட்டத்துடன் எழுந்து கொண்டோம்.
வண்டியை நகர்த்திக் கொண்டு திரும்பி சாலையைப் பிடித்தேன். இயக்குனர்களின் சந்திப்பு, பங்குதாரர்களின் சந்திப்பு என்று நடத்த வேண்டும். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் 12, 13 தேதிகளில் வைத்துக் கொள்ளலாமா என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்ள வேண்டும். அதே தேதிகளில் சீட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 12 அன்று அலுவலகத்தில் எல்லோரிடமும் உறவாடுதல், ஒரு நாள் தாமதமாக வருபவர்கள் 13ம் தேதி உயர்மட்ட சந்திப்பில் கலந்து கொள்ளலாம்.
இன்றைக்கு படங்களை எடுத்துக் கொண்டு 11 மணிக்கு பார்க்க வேண்டும். அவர்கள் சரியாகப் பின்பற்றாத வழி முறைகளைச் சுட்டிக் காட்டி மாற்றத் தேவைப்பட்டதை மாற்றச் சொல்ல வேண்டும். அதற்குத்தான் மென்பொருளில் எல்லாம் சரியாக வேலை செய்தால் எங்கள் பக்கம் என்ன குறை இருக்கிறது என்று மாற்றிக் கொள்வோம் என்று சொல்கிறார்கள். மென்பொருளில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டி எங்கள் ஆட்கள் வேலையைத் தள்ளிப் போட்டு விடுகிறார்கள் என்று அவர்கள் சொல்வதும் நியாயம்தான்.
பசி வந்து விட்டது, வறண்டு போயிருந்தது என்று வழியில் கூழ் குடிக்கலாம் என்று முடிவு செய்தேன். நெசப்பாக்கம், ராமாபுரம் விலக்கில் நிற்கும் கூழ் வண்டிகளில் குடிக்கலாம் என்று அந்தச் சாலையைப் பிடித்தேன். இரண்டிலுமே நிற்கும் ஆட்களைப் பார்த்தால், கூழ் விற்பனை செய்பவர்களைப் பார்த்தால் அழுக்காகத் தெரிந்தார்கள். நிற்காமலேயே கடந்து விட்டேன். இது போலத்தான், நாம் அழுக்காகத் தெரிந்தால் நிறைய பேர் நமது சேவையை வாங்க நினைக்காமலேயே போய் விடுவார்கள்.
வளசை சுபாவிற்குப் போய் தயிர் சாதம் சாப்பிட நிறுத்தி விட்டேன். 12 ரூபாய்கள். பெரிய பாத்திரத்திலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டார்கள். அந்த தயிர் சாதம் இரவு வரை தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. காலையில் கடையிலி கற்பூர வாழைப்பழங்களும் எலுமிச்சம் பழங்களும் வாங்கி வைத்திருந்தேன். வாழைப்பழங்களில் இரண்டை அலுவலகம் வந்ததும் காலி செய்தேன்.
மிகவும் சோர்வாக இருந்தது. ஒரு விரிதாளில் காலணி நிறுவனத்தில் என்ன நடைமுறை இருக்கும் என்று எழுதினேன். பின்னர் எல்லா இடங்களிலும் இதே வழிமுறை பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். அதையும் ஆவணப்படுத்தி விட வேண்டும். இதை முடித்து விட்டு வேகவேகமாக வேலைகளில் இறங்க வேண்டும்.
வலைப்பதிவுகளில் நேரம் செலவழிப்பதை நிறுத்திய பிறகு, இணையத்தில் நேரம் வீணாவது குறைந்து நிறுவனப் பணிகளில் சொந்த வேலைகளில் கவனம் அதிகமாகும் வாய்ப்பு. அலுவலகம் போனதும் வேலைகளில் மும்முரமாக இறங்கி விடலாம்.
37 நிமிடங்களில் 1100 சொற்கள் எழுதி விட்டேன். சரியாக 30 சொற்கள் ஒரு நிமிடத்துக்கு. மதிய உணவில் காரக்குழம்பு. அதைத் தொட்டுக் கொள்ள வைத்துக் கொண்டு ரசம் இரண்டு முறை, மோர், காய்கள் என்று சாப்பிட்டுக் கொண்டேன். ஏற்கனவே சாப்பிட்ட தயிர் சாதத்துக்கு ஈடாக இங்கு மோரைத் தவிர்த்திருக்கலாம். கடைசியில் சோறு போதாமலும் ஆனது. பூனைக்கு சோறு கிடைக்கவில்லை. இப்படி பழக்கி விடப்பட்ட பூனைக்கு ஒரு நாள் சோறு போடா விட்டால் அது எங்கு போகும்.
ஒரு பழக்கத்தை ஆரம்பித்து விட்டு அதைச் சார்ந்து இருப்பவர்களின் மனதைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் என் விருப்பப்படி திடீரென்று நிறுத்திக் கொள்வது நியாயம் கிடையாதுதான். பின்மாலையில் தொலைபேசியில் அழைத்து நீளமாக பேசிக் கொண்டிருந்தார். அவரைப் போல ஏழெட்டு பேராவது உள்ளத்தை எழுதுகிறேனை தினமும் படிப்பவர்கள். அவர்களுக்கு மரியாதை கொடுத்தாவது நடந்து கொண்டிருக்க வேண்டும்.
சாப்பிட்டு விட்டு வேலை தொடர்ந்தது. தொலைபேச நேரம் கிடைக்கவில்லை. அவரை தொலைபேசியில் பிடிக்கவே முடியவில்லை. இன்றும் உடல் சரியில்லையோ என்னவோ! போய்ப் பார்த்து விடலாம் என்று கிளம்பினேன். மிகவும் மன வருத்தத்தைக் கொடுத்திருக்கிறோம். அறிக்கைகள் துல்லியமாக தவறில்லாமல் இருக்க வேண்டுமல்லவா!
அறிக்கையைக் காட்டியிருக்க வேண்டியதில்லை. அவரது மதிப்பில் இறங்கி விட்டோம். அவரும் இறுக்கமாக பேச ஆரம்பித்து விட்டார். காட்டாமல் இருந்திருந்தால், தன் பங்குக்குக் கொஞ்சம் திட்டுகளைப் பொழிந்திருக்கலாம். அதன் பிறகு அதிகம் பேசாமல் அனுப்பி வைத்து விட்டார்.
அலுவலகத்துக்கு வந்து படம் வரைவதற்கான விபரங்களைக் கொடுத்து விட்டு என்னென்ன வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தேன். வயிறும் மந்தம், மனதும் மந்தமாக இருந்தது. எகனாமிக் டைம்ஸ் தமிழ்நாடு சிறப்பிதழோடு ஒரு பத்து நிமிடங்கள் கழிவறையில் உட்கார்ந்து விட்டு வந்தேன். தமிழ்நாட்டை பெரிதும் போற்றி எழுதியிருந்தார்கள். உள்ளதை உள்ளபடி சொல்லி தொழில் முனைவோரை கவரும்படி எழுதியிருந்தார்கள்.
டைம்ஸ் குழுமத்தினரின் செய்நேர்த்தி அழகாக இருக்கிறது. நாளிதழை விற்பதில் மட்டுமில்லாமல் அதற்கான சூழலை உருவாக்குவதை சிறப்பாக செய்கிறார்கள். செய்திகளை உருவாக்குகிறார்கள். ஒரு இடத்துக்கு வந்து விட்டால் அதற்கான தேவைகளை முழு ஆர்வத்துடன் நிறைவு செய்கிறார்கள். அது நிரம்பிக் கிடக்கிறது. தான் சேவை செய்ய நினைப்பவர்களுக்கு எந்த வகையில் முழு நிறைவு கொடுக்க முடியும் என்று நினைத்து நினைத்துச் செயல்படுகிறாள்.
நான் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு அது. ஒருவரை கவனிக்கும் போது அவரை எப்படி எல்லாம் மகிழ்விக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் இது உன் முடிவு, நீ அனுபவி என்று நின்று விடுவது என்ன சேவை? முதலீட்டாளர்கள், கடன்காரர்கள் எல்லோரிடமும் ஒழுங்காக நடந்து கொள்வது மிக முக்கியமானது. அவர்களது தேவைகளை எதிர்பார்ப்புகளை முழுமையாக எல்லாக் கோணங்களிலும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும்.
இன்னும் 3 நிமிடங்கள் இருக்கின்றன. 1602 சொற்கள் எழுதியிருக்கிறேன். 60 நிமிடங்களில் 1800 சொற்கள் எழுதினால் நிமிடத்துக்கு 30 சொற்கள். 1620 எழுதினால் 27, 1680 எழுதினால்தான் 28 கூட வரும்.

செவ்வாய், மார்ச் 18, 2008
நெடும் பயணம்
மணி நான்கு மணி நாற்பது நிமிடங்கள். நேற்று இரவு பத்து மணிக்கு வேலைகள் முடிந்தன. வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு, ஒரு அரை மணி நேரம் பேசியிருப்போம், கையிருப்பு தீருகிறது என்று சொல்லி, என்னை அழைக்கச் சொல்லி அதில் அரை மணி நேரத்துக்கும் மேல்.
நான் எழுதியது போல விடை தேடும் கேள்விகளும் தீர்வு தேடும் குறைபாடுகளும் இருக்கின்றன. ஒருவொருக்கொருவர் அலுக்கவே செய்யாத உரையாடல்கள். பேசியதைக் கேட்க வருத்தமாக இருந்தது.
பெரிய ஆறு ஒன்று. ஆற்று வெள்ளத்தை ஒரு சொம்புக்குள் பிடித்து வைத்துக் கொள்வது போல தனது திறமைகளை சின்ன வட்டத்துக்குள் அடைத்து கொண்டிருக்கிறாள். செயற்கரிய செய்வார் பெரியார் என்பதை விளங்க வைக்க முடியவில்லை. செய்ய விரும்புபவது ஏற்கனவே நடக்கும் ஒரு தொழிலில் சின்ன மாற்றத்துடன் நடப்பதுதான் என்பது புரியவில்லை. அந்த 2 டிகிரி திருப்பத்துடனான மாற்றம் முற்றிலும் வேறு திசைக்கு இட்டுப் போகலாம்.
ஆனால், உலகைப் புரட்டிப் போட வேண்டுமானால் அப்படிப் புரட்டிப் போடுவதற்கான குறிக்கோள் வர வேண்டுமே. முயல் பிடிப்பதாக கிளம்பி விட்டு சாதித்து விட்டதாக மார் தட்டிக் கொண்டிருக்கும் முட்டாள்தனம்.
சொன்னபடி 'தேவையில்லாமல் இருப்பதை எல்லாம் பணயம் வைக்க மாட்டேன். எதிர்காலத்துக்கு போதுமான காபந்து செய்து கொள்வேன்' என்று சொல்லும் போதும் அதிகமாகக் குத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை எதிர்காலத்துக்கு காபந்து எல்லாம் தேவையில்லை. குழந்தைகள் படிக்க, சாப்பிட, உடுத்தத் தேவையான பணம் எப்போதுமே இருந்து வருகிறது. நாமே உருவாக்கிக் கொள்ளும் தேவைகளை நிறைவேற்றத்தான் பெரும்பணம் தேவைப்பட்டு விடும்.
ஏழாவது குடத்தின் பொன் என்ற கதையில் ஒருவனுக்கு ஏழு குடங்களில் பொற்காசுகள் கிடைத்து விடுகின்றன. ஆறு குடங்கள் தளும்பத் தளும்ப நிரம்பி வழிகின்றன. ஏழாவது குடத்தில் பாதி வரைதான் பொன் நிரம்பியிருக்கிறது. ஏழாவது குடத்தையும் நிறைத்து விடுவது வரை நான் மற்ற குடங்களிலிருக்கும் பொன்னையும் தொடப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டான்.
கைவசம் இருக்கும் செல்வங்களை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது குடத்தில் போட்டான். போதவில்லை. மாதா மாதம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் பெருமளவு மிச்சப்படுத்தி தங்கக் காசுகளாக மாற்றி ஏழாவது குடத்தில் போட்டான். அது நிரம்பும் வழி தெரியவில்லை. வாழ் நாள் முழுவதும் வறுமையில் பற்றாக் குறையால் வாடி ஏழாவது குடத்தை நிரப்ப முயற்சித்துக் கொண்டே உழைத்தான். சாகும் வரை கைவசம் வந்த பொன்னின் பலனை அனுபவிக்க முடியாமலேயே இறந்து விடுகிறான்.
அந்த ஏழு குடங்களும் சாவு வீட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன. பக்கத்துத் தெருவில் வசித்து வந்த ஒரு நண்பர் சாவு வீட்டுக்கு வருகிறார். 'அந்த ஏழு குடங்களா, அவற்றை நான் கண்ணாலும் பார்க்க விரும்பவில்லை' என்று ஓடி விடுகிறார்.
நம் வாழ்க்கையும் அது போலத்தான். வழிய வழிய செல்வங்களை வளங்களை கொடுத்திருக்கிறது இயற்கை. நமது திறமைகள், அறிவுக் கூர்மை, செயல் வேகம் எல்லாம் நிரம்பியிருக்கின்றன. கல்வி, குடும்பம், வசதிகள் போதுமான அளவு இருக்கின்றன. ஏழாவது குடமாக ஒரு பகுதியை உருவகித்துக் கொண்டு அதை நிரப்ப முயல்வோம். அது நிரம்பிய பிறகு மற்ற சாதனைகளில் கவனம் செலுத்தலாம் என்று திட்டமிடுவோம். இறக்கும் வரை அந்த ஏழாவது குடத்துக்காகவே உழைத்து உழைத்து நம் வாழ்க்கையை வீணாக்கி விடலாம்.
செய்து காட்ட நினைக்கும் செயற்கரியனவற்றை சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல் ஏழாவது குடத்தையே சிந்தித்துக் கொண்டிருப்பது போல நிலம், கூட செலவழித்து வீடு கட்டுதல், உயர் வாழ்க்கை முறை என்று தனது இலக்குக்கு தொடர்பில்லாத வாழ்க்கையின் பகுதிகளை நிரப்புவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்!
இதை இப்படிச் சொன்னால் பொத்துக் கொண்டு வந்து விடும். சிறிது சிறிதாக பேசிப் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது என்னுடைய கொள்கைகளின் பறக்கும் தன்மையும் குறைந்து தரை மட்டத்துக்கு வந்து சேர்ந்து விடலாம்.
நேற்றுக் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருந்தேன், என்னென்ன செய்தேன் என்பது மங்கலாகத்தான் நினைவிலிருக்கிறது. காலையில் 4 மணிக்கு எழுந்திருந்ததாக நினைவு. துணிகளை, நாளிதழ்களை சேகரித்து ஒதுங்க வைத்த பிறகு தரை தூத்து பாத்திரங்கள் கழுவினேன். அதைத் தொடர்ந்து முகம் மழித்து குளியல், தியானத் செய்ய உட்காரும் போது 5.30 மணி. 40 நிமிடங்கள் உட்காரலாம் என்று தீர்மானித்திருந்தால் முதல் 20 நிமிடங்கள் ஓடி விட்டன. அடுத்த 10 நிமிடங்களுக்கு மேல் உட்கார முடியவில்லை. உடம்பில் பல குடைச்சல்கள்.
நேற்று இரவு வீட்டுக்கு வரும் போது வயிற்றில் பாரம், அசௌகரியமான உணர்வு. 20 நிமிடங்கள் தியானத்தில் உட்கார்ந்து எழுந்ததும் எல்லாம் தெளிவாக இறங்கி விட்டன.
தியானத்தில் இருக்கும் போது உடலின் சூடு இறங்குகிறது, பல மாற்றங்கள் நடக்கின்றன என்று பேசிக் கொண்டிருந்தார். அதிகமாக எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உடலில் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து விடுகிறது. அதை அமைதிப்படுத்திக் கொள்வது காலையிலும் மாலையிலும் தவறாமல் செய்ய வேண்டிய ஒன்று.
எதைச் செய்தாலும் சேவை மனப்பான்மை வேண்டும். இல்லையென்றால் புத்திசாலித்தனத்தால், திறமைகளால், அறிவுச் செறிவால் என்ன பலன் என்று கேட்டேன். மாலையில் பேசும் போது பயிற்சி என்பது ஒரு ஒழுங்கைப் பின்பற்றி நியமங்களின் படி செய்ய வேண்டியது. முரட்டுத்தனமாக பயிற்சி என்று போனால் முட்டு உடைவதுதான் மிஞ்சும்.
அலுவலகத்துக்குப் போய்ச் சேரும் போது 10 நிமிடங்கள் தாமதமாகியிருந்தது. வண்டியும் அதற்குப் பிறகுதான் வந்தது. முதலிலேயே சொல்லியிருந்ததால், வளசரவாக்கத்தில் இருந்த எரிபொருள் நிலையத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொண்டார். கடனட்டையில் 1000 ரூபாய்கள் கட்டி விட்டேன். அங்கிருந்து விரட்டி விரட்டி சாலையைப் பிடித்தார். சில நிமிடங்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைப்பு, எடுத்துப் பேச முயன்று கொண்டிருந்தார். ஒரு அழைப்பில் பேச்சு நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் நீளவே, 'வண்டியை நிறுத்தி பேசி முடித்து விட்டுக் கிளம்பலாம்' என்று அதட்டியதில் அதன் பிறகான அழைப்புகளை தவிர்த்து விட்டார், அல்லது ஓரிரு நிமிடங்களில் முடித்துக் கொண்டார்.
அழைப்பைத் தொடர்ந்து மடிக்கணினியில் நாட்குறிப்புகள் எழுதினேன். எட்டரை மணிக்குக் கூப்பிட்டால் எடுக்கவில்லை. அவரே ஒன்பது மணி வாக்கில் அழைத்தார். என் எண்ணைக் குறித்து வைத்திருக்கவில்லை போலிருக்கிறது. யார் என்று சொல்லி சந்திக்க நேரம் கேட்டுக் கொண்டேன். யாரிடமும் காலையில் பேச முடியவில்லை.
6.45க்கு வளசரவாக்கத்திலிருந்து கிளம்பியது, எட்டே காலுக்கு வேலூர் வந்து விட்டோம். அங்கும் நிற்காமல் தொடர்ந்து ஒன்பதேகாலுக்கு வாணியம்பாடி. இடையில் ஒரு முறை நான் சில நிமிடங்கள் வண்டியை நிறுத்தினார். மிக திறமையாக வேகமாக அதே சமயம் கட்டுப்பாட்டுக்குள் வண்டி ஓட்டினார்.
சரவண பவனில் இட்லி கேட்டால் வடையும் வந்தது. சாம்பார் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டேன். தோசை ஒன்றும் சட்னிகளுடன். தேநீர் இல்லை காபிதான். சாப்பிட்டு பணம் கொடுத்து வெளியில் வந்தேன். ஓட்டுனரை சாப்பிடக் கூப்பிட்டால் பக்கத்திலேயே சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். வண்டியைத் திருப்பி வந்தோம்.
வண்டியை வெளியிலேயே நிறுத்தச் சொல்லி விட்டார்கள். அவருடன் உட்கார்ந்து உற்பத்தித் திட்டமிடுதல் குறித்து விளக்கிக் கொண்டிருந்தேன். அவருக்குத் தேவையான அறிக்கைகள் விபரங்களை எப்படி எடுப்பது என்று சொல்லிக் கொடுத்தேன். சில விபரங்கள் உள்ளிடப்படாமல் காட்டிக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினேன்.
பளிச்சென்று திருத்தமாகப் பேசினார். ஆர்வத்துடன் சேர்ந்து கொண்டார். முடித்து விட்டு உட்கார்ந்து உற்பத்தித் திட்டமிடலைப் பார்த்தேன். புதுக் கணினியில் கணினி வலைப்பின்னலை வடிவமைத்துக் கொடுத்தேன். உட்கார்ந்திருக்கும் போது வண்டி வந்தது. நான் வருவதாகச் சொல்லியிருந்ததும் அவர் இன்றை வருவதற்கு காரணமாக இருக்கலாம். எப்படியோ சரியான முடிவெடுத்து இங்கு வந்து விட்டிருந்தது நிறைவாக இருந்தது. என்னைப் பார்த்ததும் அவருக்கு மகிழ்ச்சி.
அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவருக்கும் திட்டமிடுதலை விளக்கி விட்டுப் புறப்பட்டேன். புறப்படும் போது மணி 1. 12 மணிக்குள் இங்கு முடித்து விட்டுக் கிளம்பினால் வழியில் சாப்பிட்டு விட்டு 2 மணிக்கு போய் விடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். அப்படி தொலைபேசியில் பேசியதை ஓட்டுனரும் கேட்டுக் கொண்டிருந்திருப்பார். ஒரு மணிக்குக் வாணியம்பாடியிலிருந்து கிளம்பி ஆற்காடு தாண்டி ராணிப்பேட்டை உங்களை வரவேற்கிறது என்று பலகையைத் தாண்டும் போது மணி 2.
நேராக போய் விட்டு ஓட்டுனரை சாப்பிடப் போகச் சொல்லி விட்டேன். 3 மணி வரைதான் இருப்பேன் என்று சொல்லியிருந்ததாக நினைவு. அன்று ஏற்பட்டிருந்ததாகச் சொன்ன குளறுபடிகளுக்காக எல்லோரையும் கலக்கிக் கொண்டிருந்தேன். மாலைக்குள் எல்லாவற்றையும் சரிசெய்து கொடுத்து விட்டிருந்தார்கள்.
திமிரெடுத்து உரக்கப் பேசியதில் தவறான அபிப்பிராயத்தைத் தோற்றிவித்திருக்கலாம். சண்டை போட்டு நம்ம வழியில் பணிகளைத் தொடங்கச் சொன்னேன் .இன்றைக்கு முழுவதும் முடித்து இந்த வார இறுதிக்குள் எல்லாவற்றையும் சீர்படுத்திக் கொடுத்து விடலாம்.
இருக்கும் போது பசி தாங்காமல் போய் விட காரில் கற்பகம் விடுதிக்குப் போய் 2 இட்லி, ஒரு ரவை தோசை சாப்பிட்டேன். தோசையில் ஏகத்துக்கும் எண்ணைய் அது இரவு படுக்கப் போவது வரை தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்தது.
தொழிலாளர்களைக் கையாளுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். யாரும் மதிப்பதில்லை, அடாவடி செய்கிறார்கள், அக்கறை இல்லை என்று வழக்கமான பல்லவிகள். மனித வள மேம்பாடு, மதித்து சொல்லிக் கொடுத்தல் குறித்து கோடிட்டுப் பார்த்தேன். ஒரு துளியளவாவது மாற்றம் வந்தால் மகிழ்ச்சிதான்.
அங்கிருந்து கிளம்பும் போது தொலைபேசி வாலாஜா பேருந்து நிறுத்தத்தில் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். நான் வண்டியில் வருவதாகச் சொல்லியிருக்கவில்லை. வண்டி நிறுத்தம் அருகில் காரை நிறுத்தியதும் எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். தொலைபேசியில் அழைத்து உள்ளே வரச் சொன்னேன். கூடி இருந்தவர்களில் பலர் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். கொஞ்சம் மரியாதையாகத் தெரிந்த ஒருவர் போரூர் போவதாகச் சொல்ல அவரை முன்னிருக்கையில் ஏறிக் கொள்ளச் சொன்னோம்.
வழியெங்கும் விவாதித்துக் கொண்டே வந்தோம். அவரது பணிகள், நிறுவனத்தில் மேம்பாடுகள், வாடிக்கையாளர்கள் என்று எல்லா திசைகளிலும் தொட்டுச் சென்றது. உண்மையான முஸ்லீம் ஒருவர் தினமும் 5 வேளை தொழுகை செய்தாலே வாழ்க்கையின் அடிப்படைகள் தவறாமல் நடந்து விடும். வட்டிக்கு சம்பாதிக்க நினைக்காமல் இருப்பது, ஏழைகளுக்கு தானம் செய்வது, ஆண்டுக்கு ஒரு முறை ரமலான் நோன்பிருப்பது என்று இசுலாமில் கடமைகளைச் செய்வது தவிர எந்த சிறப்புப் பயிற்சியும் தேவையில்லை.
காலையில் 4 மணிக்கு ஒரு தொழுகை செய்ய வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு கடைசி தொழுகை. நான்கு மணிக்கு நாளை ஆரம்பித்து 9 மணிக்குத் தூங்க ஆரம்பித்தாலே பல வழிகளில் மேம்பட்டு விடுவோம்.
இரவு எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் தூங்கிக் கொள்ளலாம், காலையில் எழுந்து விட வேண்டும் என்றார் நண்பர். பிரம்ம முகூர்த்தம் என்று அழைப்பது 4 மணி முதல் தொடங்குகிறதாம். நான்கு மணிக்கு மேல் தூங்கும் ஒவ்வொரு மணி நேரமும் நாளின் மிக அதிக வீரியம் உடைய நேரத்தை இழப்பது போன்றதாகும்.
பின்னூட்டப் பெட்டியை மூடி விட்டது கோபத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். பின்னூட்டங்களுக்கு மறுமொழி கொடுப்பதற்கு நேரமும் கவனமும் தேவைப்படுமே என்றுதான் அதை மூடி வைத்தேன்.
இப்போது மின்னஞ்சலைத் திறந்தால் பதிவுகளிலிருந்து தகவல்கள் வரப்போவதில்லை. வலை உலாவியை திறந்தால் தமிழ்மணம், கூகுள் ரீடரின் ஊட்டங்கள் முளைத்து நிற்கப் போவதில்லை. எத்தனை பேர் வந்து போனார்கள் என்று ஸ்டாட்ஸ் கவுண்டரில் நுழைந்து நுழைந்து பார்க்கப் போவதில்லை. பதிவுகளில் இத்தனை இடுகைகள் எழுதி விட வேண்டும் என்று முனைப்பு தலைகாட்டப் போவதில்லை. எழுத்துக்களை மட்டும் தொகுப்பதற்கு வழி செய்து கொள்ள வேண்டும்.
இந்தப் பழக்கத்தை கைவிட்டு விட்டதற்கு மாற்றாக வேறு ஒன்றை இதை விடச் சிறந்ததாக ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிக்கலாம் என்று ஒரு யோசனை. ஸ்லாஷ்டாட் போன்ற விவாதத் தளங்களில் கருத்துக்களை எழுத ஆரம்பிக்கலாம். தொழில்நுட்ப மடற்குழுக்களில் பங்கேற்க ஆரம்பிக்கலாம்.
இவை எல்லாம் கடந்த காலத்தின் தொடர்ச்சிகள். இன்றையு முதிர்ச்சியுடன் முயன்றால் சிறப்பாகவே செய்யலாம். ஆனால் இவற்றைத் தவிர்த்து இதுவரை செய்யாத இன்னும் சிறப்பான உயர்நிலையில் ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.
அதற்கு முன். எழுதுவதை விட்டு விடக் கூடாது. தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் எழுத வேண்டும். லெதர்லிங்க் விவாதக்களம், வலைப்பதிவுகள், விக்கி என்று அதிகமாக எழுத வேண்டும். எழுத்து பதிவுகளை தொடர வேண்டும்.
இது வரை எழுதி வைத்தவற்றை தொகுத்து இன்னும் பலருக்குப் பரவலாகப் போய்ச் சேரும்படி இற்றைப்படுத்துவதில் ஈடுபடலாம். அடுத்த ஒரு ஆண்டில் புத்தக வடிவில் ஒன்றை எழுத ஆரம்பிக்கலாம். என்ன கருத்து என்ன பொருள் என்பதை முடிவு செய்து விட்டு ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அந்தப் புத்தக வேலையில் ஈடுபடுவதாக தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரு வாரத்துக்குக் குறைந்தது நான்கு நாட்கள் அந்த அரை மணி நேரம் செலவழிக்க வேண்டும். ஒரு ஆண்டில் 100 மணி நேரங்கள் உழைத்திருப்போம்.
2009ம் ஆண்டு அந்த நூல் வெளியாக வேண்டும். மூல நூல் தமிழில் வெளி வர வேண்டும்.
நூல் அச்சு வடிவில் மின்னூலாக, இணையத்தில் உரையாக வெளியிடப்பட்டு விட வேண்டும். யார் வேண்டுமானாலும் இலவசமாக படித்துக் கொள்ளும் உரிமை இருக்க வேண்டும் என்ற ஒரே நிபந்தனையுடன் நூல் உரிமையை பரவலாகக் கொடுத்து விட வேண்டும்.
பரவி நிற்கும் தாக்கம் ஏற்பட வேண்டும்.
நூல் அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சி குறித்து இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. முதலில் ஒரு அட்டவணை உருவாக்கிக் கொள்ளலாம். அதைச் சுற்றி கட்டின்றி எழுத ஆரம்பிக்கலாம். அரை மணி நேரத்தில் 600 சொற்கள் என்றால் 60,000 சொற்களுக்கு 50 மணி நேரங்கள் ஆகும். கிட்டத்தட்ட பாதி காலம் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும். கிட்டத்தட்ட 60 நாட்களின் நாட்குறிப்பு போல.
பாதி காலத்துக்குப் பிறகு புத்தகத்தின் வடிவத்தை உருவத்தை சீர்படுத்தவும் முழுமைப்படுத்தவும் ஆரம்பிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 1529 சொற்கள் எழுதியிருக்கிறேன். 25 சொற்கள் வரம்பை உடைத்து 26க்கு நகர்ந்தாகி விட்டது. கோப்பின் பெயர் மட்டும் 2007க்குப் போய் விட்டிருக்கிறது.

சமூகம்,
சுயமுன்னேற்றம்,
பயணம்
திங்கள், மார்ச் 17, 2008
சேவை நோக்கம்
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகில் வாடகை ஊர்தியில். இன்றைக்கு வாணியம்பாடி போக வேண்டும் என்று முடிவு செய்த பிறகும் வண்டிக்குச் சொல்லியிருக்கவில்லை. நேற்றுக் காலையில் எழுதிக் கொண்டிருக்கையில் தொலைபேசி உரையாடிக் கொண்டிருந்தார். பேச்சுக்கிடையில் நீங்க பேருந்தில் பயணம் போவதாக முயற்சிப்பது தவறு என்ற அவரது கருத்தை மீண்டும் அழுத்தமாகச் சொன்னார். மதியம் அலுவலகத்துக்குப் போன போது சொல்லி காருக்கு ஏற்பாடு செய்து விட்டேன்.
எழுத்து எல்லாம் முடித்த பிறகு குளித்து விட்டு தியானத்தில் உட்காரலாம் என்று முடிவு. அதற்கு முன்பு பச்சைப் பயிறை தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டேன். உயர் அழுத்தக் கலனில் அரிசியும், பயறும் தனித்தனியே வேக வைத்துக் கொள்ளலாம். சுடுகஞ்சியும், பயறு துவரனும் சாப்பிடலாம் என்று திட்டம். குளித்து விட்டு வெளியில் வரும் போது நிறைவாக இருந்தது. நேற்று முழுவதும் இருந்த மன நிலைக்கு, நடந்த நிகழ்வுகளுக்கு இன்னும் நான்கு நாட்களுக்கு மனம் குழம்பிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
மாறாக, மிகவும் தெளிவாக நிர்மலமாக இருந்தது. அத்தோடு 20 நிமிடங்கள் தியானமும் முடித்தது காலையில் சாப்பிட்டிருந்த இட்லிகளும் செரித்துப் போய் பசி எடுக்க ஆரம்பித்தது. குக்கரில் வேக வைத்து விட்டுக் கடைக்குப் போய் தேங்காய், ஏதாவது பழங்கள் வாங்கி வரப் போனேன். முந்திரிப் பழம் - வெள்ளை முந்திரி 350 கிராம், ஒரு தேங்காய், 50 கிராம் அண்டிப் பருப்பு வாங்கிக் கொண்டு வீடு வந்தேன். டப்பாவில் அவல் நிறைய நாட்களாக மீந்திருந்தது.
முந்திரிப் பழமும், அண்டிப் பருப்பும் சேர்த்து சாப்பிடுவதற்கு முன்பு, தேங்காயை உடைத்து சின்ன முறியைக் கீறி, மிக்சியில் பொடியாக்கி வைத்துக் கொண்டேன். இன்னொரு அரவைப் பாத்திரத்தில் அவல், சீனி, தேங்காயில் பெரும்பகுதியைப் போட்டு பொடித்துக் கலந்து கொண்டேன். அந்த அவல் பொடியை தட்டில் போட்டு வெந்நீர் தெளித்து விரவி வைத்து விட்டு கையில் நாளிதழுடன் முந்திரிப் பழம் சாப்பிட ஆரம்பித்தேன்.
அதற்குள் குக்கர் மூன்று முறை சப்தம் போட்டு விட, அதை அணைத்து விட்டு அவலையும் சாப்பிட்டு முடித்தேன். குக்கரைத் திறந்ததும். கஞ்சியில் கூடுதல் வெந்நீர் சேர்த்து வேக வைக்கவும், பயறை தாளித்து அரைத்து வைத்திருந்த துவரனுக்கான கலவையை போட்டு இறக்கவும் வேலை. 1 மணி நேரம் கழித்து 2 மணிக்கு சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பலாம். அது வரை தூங்க வேண்டும்.
வயிற்றில் பழங்கள், ஊற வைத்த அவல் சாப்பிட்டு விட்டு மதிய வேளையில் தூங்கினால் என்ன ஆகும்? கொஞ்சம் மந்தமும், சீரணக் குளறுபடியும் ஆகலாம். பாயில் படுத்துப் படித்துக் கொண்டே தூங்கிக் கொண்டேன். சரியாக 2 மணிக்கு எழுந்து கஞ்சியின் மேல் பாய்ந்தேன்.
ஒரு டம்ளர் அரிசி போட்டிருக்கக் கூடாது, அரை டம்ளர் போட்டிருந்தால், தண்ணீர் நிரம்பி மெலிதான கஞ்சியாக இருந்திருக்கும். இப்போது தண்ணீர் எல்லாம் வற்றி இறுகிப் போன கஞ்சியாக இருந்தது. ஒரு தட்டில் கஞ்சியும் தொட்டுக் கொள்ள கிண்ணத்தில் பயறு துவரனும் எடுத்துக் கொண்டேன். சாப்பிடும் போது இன்பமாக இல்லாமல், வலிந்து இறங்குவது போல எரிந்தது. பாதி சாப்பிட்டு விட்டு வைத்து விட்டேன்.
உடைத்த தேங்காயில் பெரிய முறியை காவல் காரருக்குக் கொடுத்து விட்டேன். அவர் அப்போதுதான் சாப்பிட்டாராம், இல்லையென்றால் கஞ்சியையுப் பயறு துவரனையும் கூட கொடுத்திருக்கலாம். 3 மணிக்கு தொலைபேசி விட்டு அலுவலகத்துக்கு வருவதாக நண்பர் சொல்லியிருந்தார்.
கிளம்பி அலுவலகம் வந்து சேரும் போது 3 மணி ஆகியிருக்கவில்லை. வீட்டிலிருந்து தொலைபேசினால் குளித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அப்புறமா கூப்பிடுகிறாயா என்று வைத்து விட்டான்.
கணினியைத் திறந்து வலைப்பதிவுகளை முடித்து வைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தேன். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், மற்றும் பொருள் செய்ய விரும்புவில் பின்னூட்டம் வலைப்பதிவு உரிமையாளர்கள் மட்டும்தான் போட முடியும் என்று அமைத்துக் கொண்டேன். எழுத்து பதிவை உரிமையாளர்கள் மட்டும்தான் படிக்க முடியும் என்று அமைத்துக் கொண்டேன். என் விபரம் பக்கத்தில் மூன்றே பதிவுகள் மட்டும் காட்டினால் போதும் என்று அமைத்துக் கொண்டேன்.
உள்ளத்தை எழுதுகிறேனில் எழுதி வைத்திருந்த இரண்டு பகுதிகளையும் போட்டு விட்டேன். தொடர்ந்து எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமில் பதிவுலகிலிருந்து விலகி இருப்பதாக சொல்லும் இடுகை. ஏற்கனவே எழுதி வைத்திருந்ததில், வாக்கியங்களை பல முறை மாற்றி அமைக்க வேண்டியிருந்தது. அதை தமிழ்மணத்தில் இணைக்க வேண்டுமா என்று யோசித்து இணைக்காமலேயே விட்டு விட்டேன்.
கூகுள் ரீடரில் பதிவுகளை நீக்குவது நடக்கவில்லை. ஏதோ குளறுபடி இருந்தது. கூகுள் முதற்பக்கத்திலிருந்து தமிழ்மணம், கூகுள் ரீடர் ஊட்டிகளை நீக்கிக் கொண்டேன்.
புள்ளிவிவரத் தொகுப்பு சேவை ஸ்டாட்ஸ் கவுண்டரிலும் போய் எல்லா விபரங்களையும் நீக்கி விட்டேன். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுமில் ஒரு 60000, மற்ற இரண்டு பதிவுகளிலும் தலா 25000 எண்ணிக்கை காட்டியது. நீக்கினால் விபரங்கள் நிரந்தரமாக அழிந்து போய் விடும் என்று எச்சரிக்கையை நன்கு புரிந்து கொண்டு அழித்து விட்டேன்.
அலுவலகத்துக்கு வந்தால், இணையத்தில் இணைந்தால் தமிழ்மணமும், ஸ்டாட்ஸ்கவுண்டரும், தமிழ் வலைப்பதிவுகளும் நேரம் எடுத்துக் கொள்ள மாட்டா. இந்த நேரத்தை எடுத்துக் கொள்ள இன்னொரு பழக்கம் பணி வரத்தான் போகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட முதிர்ச்சி அதிகமாக இருப்பதால் இப்போது தேர்ந்தெடுக்கும் பழக்க்ம சிறந்ததாகவே இருக்கும் என்று சொல்லலாம்.
நண்பர் வந்ததும் அவரிடமும் பேச்சோடு பேச்சாக முடிவை சொல்லி விட்டேன். இடுகையையும் வாசிக்கக் கொடுத்தேன். பதிவுலக நண்பர்கள், தன் பணி விபரங்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே இருக்கும் நிறுவனம் அட்வென்ட் நெட். அங்குதான் சேர்ந்திருக்கிறார். அந்த நிறுவனத்தில் தலைவரை சந்தித்துப் பேச வேண்டும். அவரது அனுபவங்கள், அறிவுரைகள் பலனுள்ளதாக இருக்கும்.
டேஷ்போர்டு உருவாக்குவது குறித்து விளக்கி அவரது உதவியையும் கேட்டேன். நந்தினி ஸ்வீட்ஸ் போய் அவர் ஒரு பேல்பூரியும் நான் ஒரு கடலைக் கறியும் சாப்பிட்டோம். என்றும் இல்லாத ஆச்சரியமாக எல்லா மேசைகளும் நிரம்பி இருந்தன. பரிமாறுவதற்கு 2 பேர்தான் இருந்தனர். நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. பழச்சாறு குடிக்கலாம் என்று நினைத்திருந்ததை அதனாலேயே ரத்து செய்து எழுந்து விட்டோம்.
பக்கத்து மேசையில் மூன்று இளம்பெண்களும் ஒரு சின்ன பையனும் உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெண ஓரக்கண்ணிலும் நேர்க் கண்ணிலும் பார்வை. முகமெல்லாம் உணர்ச்சி வேகத்தில் வெளிறியிருந்தது.
அலுவலகத்துக்குத் திரும்பி கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினார். . கேள்விகளுக்கு விடை உங்களிடமே இருக்கிறது. நீங்களும் உட்கார்ந்து யோசித்தால் விடை தேடி விடலாம் என்று சொன்னேன்.
நல்லபடியாக வேலையை முடித்து விட்டு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வன்மம் ஒட்டிக் கொண்டிருந்தது. மற்றவர்கள் எல்லோரையும் திருப்திப் படுத்தி விட்டு பணி விபரங்களை சாதனைகளை விளக்கி விட்டு அதன் பிறகு ஏன் கீழ்த்தரமான முறைகளைக் கையாண்டு என்னை துன்புறுத்தினீர்கள் என்று கேட்க வேண்டும். அவரது நேர்மையின்மையை சுட்டிக் காட்டி அவர்கள் நிறுவனத்துடன் உறவையே துண்டித்து விட வேண்டும் என்று கூட பகல் கனவுகள். அவர்களுக்கு மாற்றாக வேறு ஒரு நிறுவனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று ஒரு எண்ணம்.
அதற்கெல்லாம் சரியான வழி காட்டும் விதமாக காரில் இருக்கும் போது பேசிக் கொண்டிருந்தார். மனிதப் பிறவியின் நோக்கம் சக மனிதர்களுக்கு தொண்டு செய்வதுதான். சேவை நோக்கம் இல்லா விட்டால், எவ்வளவு பெரிய புத்திசாலித்தனம், எவ்வளவு பெரிய திறமை இருந்தாலும் வீண்தான் என்று அறிவுரை சொன்னேன்.
அதே அறிவுரை எனக்கும் பொருந்தும் அல்லவா? எனக்கு நேர்ந்த அவமானத்தை பொருட்டாக மதித்து சேவை செய்வதிலிருந்து பின்வாங்குவது எதிர் சேர்த்தி? அதனால், சேவைக் குறைபாடு எவ்வளவு வரும்? இப்படி ஆணவத்திலிருந்து பிறக்கும் முடிவுகளை விழிப்பாக ஒதுக்க வேண்டும். சேவை செய்வதுதான் ஒரே நோக்கம்.
எந்த வகையில் சிறந்த சேவை அளிப்பது என்பதை மட்டும் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மீதி எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

ஞாயிறு, மார்ச் 16, 2008
பிரிவோம் சந்திப்போம்
காலையில் கன்னியாகுமரி விரைவு வண்டியில் அப்பா அம்மா வருகிறார்கள். அம்மாவுக்கு மூட்டு வலிக்கு சிகிச்சை கொடுத்து இப்போது வலி பெருமளவு குறைந்திருக்கிறதாம். தாம்பரம் நிலையத்தில் இறங்கி படி ஏறி இறங்குவது எப்படி என்று கவலை. நிலையத்தில் சக்கர நாற்காலி இல்லாமலா இருக்கும் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
நானும் காலையில் நிலையத்துக்கு வந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன். அதற்கு எழுந்திருக்க வேண்டும். ஆறரை மணிக்கு வருமா என்று கேட்டால் ஆறுக்கெல்லாம் வந்து விடும் என்று அண்ணன் சொல்லியிருந்தான். சொன்ன நேரத்துக்குப் போய்ச் சேருவதற்கான உள்ளுணர்வு எப்படித்தான் வளர்ந்ததோ, தாம்பரம் நிலையத்தில் நுழையும் போது மணி 5.58.
புரண்டு புரண்டு, போர்த்திப் போர்த்திப் படுத்து 5 மணிக்குத்தான் எழுந்திருந்தேன். காலையில் எழுந்தால் பெரிய சுமையும் எளிதாகத் தெரியும் என்று நினைத்திருந்த அளவு தெளிவு இல்லை. முதலில் பல் தேய்த்து விட்டு கழிவறை. முழுதும் செரித்து வயிறு லேசானது.
தலைக்கவசம் போட்டு போவதால் சளி பிடித்து விடும் பயம் இல்லை. அதிகாலை இளம் குளிரில் வண்டி நகர்ந்தது. நெரிசல் இல்லை. ராமாபுரம் இறக்கத்தில ஏறி நெடுஞ்சாலைக்கு வந்தால் வாகனங்கள் உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தன. 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலேயே ஓட்டுங்க என்று சொல்லியிருந்தார்கள் கடைசி பராமரிப்பு சேவைக்குப் பிறகு.
முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்தன. நம் பக்கத்துக் குறைகள் களைந்து கொள்ள வாய்ப்பு. எல்லோரையும் இவ்வளவு பேரும் ஒன்று சேர்ந்து இரண்டு நாட்கள் முனைந்து குறைகளைக் கழைந்து கொள்ள வேண்டும். நாளைக் காலையில் மூன்று பேரிடமும் பேசி விட்டு சந்திக்க நேரம் வாங்கிக் கொள்ள வேண்டும். திட்டப்பணியின் முழுப்பலன்களை விளக்கிச் சொல்ல வேண்டும்.
நான் திட்டமிட்டது போல வாணியம்பாடிக்குப் போக வேண்டும். நான் அலுவலகத்தில் சுக வாழ்க்கை வாழாமல் வாரத்துக்குக் குறைந்தது 3 நாட்கள் வாடிக்கையாளர் பணியிடங்களுக்குப் போவதாக திட்டம் வைத்துக் கொள்ள வேண்டும். 3 நாட்கள் அலுவலகத்தில் 3 நாட்கள் வாடிக்கையாளர் இடத்தில். திங்கள், புதன், வியாழன் வாடிக்கையாளர் இடத்துக்குப் போதல். வெள்ளி, சனி, செவ்வாய் அலுவலகத்தில்.
எதிர்காலத் திட்டங்களுக்கு முன்னால் நிகழ்கால பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வேலைகளை நல்லபடியாக முடித்த பிறகு என்னை நடத்திய விதத்தைக் கண்டித்து பணிவாக தெரிவித்து விட வேண்டும். அவர்களிடம் நல்ல பேர் வாங்கிய பிறகு மரியாதையாக அவரது நடத்தையின் கீழ்மையைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
தனி வாழ்க்கையிலும் ஒழுங்குகளை மறு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
1. பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு குறைவாக, மெலிதாக தேநீர் மட்டும் விதிவிலக்கு.
2. பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். மதிய வேளை பப்படம் மட்டும் விதிவிலக்கு
3. இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை நீரில் சேர்ப்பது மட்டும் விதிவிலக்கு.
4. மீன், முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள் அனைத்தும் தவிர்க்க வேண்டும்.
5. காபி குடிக்கக் கூடாது.
கூடுதலாக, மஞ்சள் நிறத்திலான பருப்பு வகைகளைத் தவிர்த்து விட வேண்டும். வடை, பூரி, தட்டை, முறுக்கு போன்றவை ஒதுக்கி விட வேண்டும். பச்சைப் பயிறு, இட்லி, தோசையில் உளுந்து எடுத்துக் கொள்ளலாம்.
சாம்பார், பருப்பு வடை, தட்டை முதலான பருப்பு சேர்ந்த உணவுகளை விட்டு விட வேண்டும். ஒரு ஆண்டுக்கு மஞ்சள் பருப்புகளை ஒதுக்கி விட வேண்டும்.
ஆறு மணிக்கு மேல் சாப்பிடக் கூடாது.
இரண்டு மடங்கு மன உறுதியும் மனத் தெளிவும் தேவை. அதனால் காலையிலும் மாலையிலும் இரண்டு 20 நிமிடங்களுக்கு தியானம் செய்து கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் பணி வன்மை இரண்டு மடங்காகி விடும்.
வலைப்பதிவுகளை நிறுத்தி விட வேண்டும். இன்றைக்கு ஒரு பதிவு எழுதி அறிவித்து விட வேண்டும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் பழைய பதிவுகள் படிக்கக் கிடைக்கும், பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டு விடும். குறைந்தது ஒரு ஆண்டுக்கு புதிய இடுகைகள் கிடையாது. பொருள் செய்ய விரும்பு அதே போல.
உள்ளத்தை எழுதுகிறேன் பூட்டப்பட்டு தனி வாசிப்புக்காக ஆகி விடும். தினந்தோறும் எழுதுவதை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
புரட்டிப் போட்ட படைப்புகள் மற்றவர்களுக்குத் தேவையானால் வைத்துக் கொள்ளலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த வலைப்பதிவு வாழ்க்கையில் நினைத்ததில் ஓரளவு நிறைவாகவே செய்ய முடிந்திருக்கிறது. வாழ்க்கையும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. ஒரு நேரத்தில் சரியாகப் பட்ட, பலனுள்ளதாக இருந்த பழக்கங்கள் எல்லா நேரத்திலும் தேவை என்று சொல்லி விட முடியாது.
இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடுகைகள் போட்டு பல நட்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இப்படி ஒரு தருணம் வரும் போது கொஞ்சம் நிதானித்து, செய்கைகளை ஆராய்ந்து இதற்கு அடுத்த நிலை என்று அலசிப் பார்க்க வேண்டும். வலைப்பதிவுகளுக்கு அடுத்த நிலைக்கு நான் எப்படி நகர முடியும்.
இதே பழக்கங்கள், தேடல்கள், கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவை இன்னொரு தளத்தில் இன்னொரு வடிவத்தில் வெளிப்படலாம். வலைப்பதிவுகள் என்ற வடிவத்துக்கு, தமிழ் மணம் சமூகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி. இதன் மூலம் வேறு ஒரு தளத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வாய்ப்பு கிடைக்கலாம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்ற விதிப்படி பழையவர்கள் திட்டமிட்டு புதியவர்களுக்கு வழி விட்டு நிற்க வேண்டும். என்னுடைய இருப்பு பல இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு மனத்தடையாக இருக்கலாம். அப்படி ஒருவர் இருந்தாலும் எனது விலகல் அவருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
பொருள் சார்ந்த ஆக்க பூர்வமான பதிவுகள் அதிகமாக வேண்டும் என்று ஆர்வமுடைய நண்பர்கள், தாம் எழுத திட்டமிட்டிருப்பதை தள்ளிப் போடாமல், உடனேயே ஆரம்பித்து விடுமாறு என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நான் எழுதியதான் சிறிதளவாவது பலனடைந்ததாக உணரும் ஒவ்வொருவரும் தம் பங்குக்கு 10 இடுகைகளாவது எழுதி வெளியிட்டு எனக்கு கைம்மாறு செய்யுங்கள்.
அடுத்த ஒரு ஆண்டுக்கு நான் வலைப்பதிவுகள் சமூகம் பக்கம் எட்டிப் பார்க்கவே போவதில்லை. தமிழ் மணத்தில் இற்றைப்படுத்தப்படும் இடுகைகள் படிப்பதை விட்டு விடுவேன். கூகுள் ரீடரில் நான் இணைத்து வைத்திருக்கும் பதிவுகளும் என் கவனத்தை விட்டுப் போய் விடும். ஒரு ஆண்டுக்குப் பிறகு ஈர்ப்பு பலமாக இருந்தால் திரும்பி பார்க்கலாம். அது வரை எல்லோருக்கும் வணக்கம்.
இன்னொரு தளத்தில், இன்னொரு உருவில் நாம் எல்லோரும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். அப்படியொரு தளத்தில் மீண்டும் சந்திப்போம்.
என்னுடன் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் பெட்டி இருக்கவே இருக்கிறது. மீண்டும் சந்திப்போம்.
தினமும் எழுத வேண்டும். நிறுவனப் பணிகளுக்காக எழுத வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் பணியை ஆரம்பிக்கலாம். இன்னும் முனைப்பாக பணிகளை திட்டமிடலாம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)