ஏப்ரல் 30, 2010 - காலை ஐந்து மணி நாற்பத்தி எட்டு நிமிடங்கள். 26, 27, 28, 29 நான்கு நாட்கள் எழுதவில்லை. 26ம் தேதி வீட்டு பால் காய்ச்சுக்கு தாம்பரத்தில். 27ம் தேதி அந்தக் களைப்பில் தூக்கம். 28ம் தேதி காலையில் ராணிப்பேட்டைக்குப் புறப்பட்டு போக வேண்டியிருந்தது. 29ம் தேதி அந்தக் களைப்பில் தூக்கம். இன்றைக்கு மீண்டும் ஆரம்பித்தாகி விட்டது.
ஞாயிற்றுக் கிழமை மாலை அலுவலகத்துக்குப் புறப்பட்டேன். காலையில் துணி துவைத்துப் போட்டு விட்டு புறப்பட்டாலும், கணேஷ் பவனில் போய் சாப்பிட்ட பிறகு வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்தேன். யோகேஷூம் அவனைத் தொடர்ந்து அஷ்வினாவும் எட்டிப் பார்த்தார்கள்.
யோகேஷ் கொண்டு வந்திருந்த வாக்கியம் உருவாக்கும் விளையாட்டு விளையாடினோம். அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு பாய் விரித்துப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன்.
மதியம் சாப்பிடவில்லை. மாலையில் கிளம்பி அலுவலகத்துக்குப் போனால் அங்கு மடிக்கணினியில் கூகுள் தளங்களுக்குள் இணைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு, வண்டியை கட்டிடத்தின் பின்புறம் நிறுத்தி விட்டுப் புறப்பட்டேன்.
விருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது வடபழனி முருகன் கோவில் போகும் பேருந்தில் ஏறி, சாலை நிறுத்தத்திலேயே இறங்கிக் கொள்ள முடிந்தது. நூறடி சாலையில் நிற்கும் போது வடபழனியிலிருந்தே 18N வந்தது, உட்கார இருக்கைகள் ஒழிவாக. அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். தாம்பரம் வரை போவதற்கு 4 ரூபாய்கள்தான் சீட்டு. கே கே நகருக்குள் புகுந்து சுற்றிச் வந்து உதயம், அதன் பிறகு நேராக கத்திப்பாரா, தாம்பரம். இடையில் எல்லா நிறுத்தங்களிலும் நிற்க வேண்டும். இருக்கை கிடைத்து விட்டால் நின்று நின்று போவதில் என்ன ஆட்சேபணை இருக்கப் போகிறது.
அப்பாவுக்குத் தொலைபேசி எங்கு இருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டேன். முல்லை நகருக்கு வந்து விட்டார்களாம். புது வீடு தயாரிப்புகள் நடக்கும் இடத்துக்குத்தானே நாம் போக வேண்டும். தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கி 55 தடப் பேருந்துகள் நிற்கும் நிறுத்தத்துக்கு வந்தேன். சில நிமிடங்கள் காத்திருந்தும் பேருந்து எதுவும் தென்படவில்லை. நடக்க ஆரம்பித்தேன்.
நேஷனல் திரையரங்கு தாண்டி பேருந்து தடத்துக்கு வந்தேன். நிறைய திருமண வரவேற்புகள், கூட்டம். முடிச்சூர் போகும் பாதையில் போகாமல், நேராக போய் கிஷ்கிந்தா போகும் சாலையில் நடக்க ஆரம்பித்தேன். 1991ல் கல்லூரிக்குப் போகும் போது கண்டுபிடித்த தடம் அது. இப்போது நல்ல தார் சாலை போட்டு இரண்டு பக்கமும் நிறைய வீடுகளுடன் கலகலப்பாக இருந்தது. முடிச்சூர் சாலை போய் வருவதை விட இந்த வழி கொஞ்சம் குறுக்கு வழியாக தோன்றியது. மலை, கோவில் தாண்டி இடையில் விசாரிக்கவும் செய்து கொண்டேன். எங்கும் வழி தவறி அலைந்து விடாமல் வீடு வந்து சேர்ந்தேன்.
ஏரி குறுகி குறுகி குட்டையாகியிருந்தது. வீட்டுக்கு முன்பே அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்திருந்தார்கள். களை கட்டியிருந்தது. நிறைய பேர் வந்து விட்டிருந்தார்கள்.
குழந்தைகள் கூட்டமும் களை கட்டியது. சாப்பிடக் கூப்பிட்டார்கள். 'மாலையிலேயே சாப்பிட்டாச்சு, இரவு சாப்பிடுவதில்லை' என்று மறுத்து தவிர்த்து விட்டேன். உட்கார்ந்து உட்கார்ந்து சலித்த போது எட்டு மணிக்கெல்லாம் தொலைக்காட்சித் திரையில் கிரிக்கெட் தென்பட்டது. ஐபிஎல் போட்டிகளை இதுவரை பார்த்ததேயில்லை. எட்டரை அடிக்க சிறிது நேரத்தில் போய்ப் பார்த்தால், போட்டி ஆரம்பித்து விட்டதா என்று கேட்டால, எட்டரை மணிக்கு ஆரம்பிக்கும் என்று பதில்.
சித்துவும், இன்னொரு நிபுணரும், தொகுப்பாளரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். வேறு எதுவும் நடக்கவில்லை என்றால் இதில் அடுத்த மூன்று மணி நேரத்தைக் கழிக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். நமது எண்ணங்கள் சரிதானா என்று பார்க்கவும் உதவும். சென்னை அணி முதலில் மட்டை பிடிக்க முடிவு செய்திருந்தது. ஹர்பஜன் சிங் பந்து வீச ஆரம்பிக்கிறார். முரளிவிஜயும், மேத்யூ ஹேடனும் களம் இறங்கியிருந்தார்கள்.
புது வீட்டுக்குப் போக வேண்டும் என்று புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பாவையும் அழைத்து என்னைக் கை காட்டியிருப்பார்கள் என்று பட்டது. உடனேயே எழுந்து கிளம்பி விட்டேன். அவர், இரண்டு முதியவர்கள் நான் என்று நான்கு பேர்.
பழம் வாங்கியாச்சா என்று ஒரு சந்தேகம். 'பழக் குலை எல்லாம் நிறைய விலை விற்கிறது இங்கு. பேசாமல் ஊரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம். இவர் சொல்வது எதையும் கேட்பதில்லை' என்று குறைபட்டுக் கொண்டே வந்தார். 'சென்னை மாநகரத்தில் வசிக்கும் போது யாரையும் நம்பி செய்ய மனம் வருவதில்லை. கூடுதல் சில ரூபாய்கள் செலவானாலும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து ஏற்பாடுகளை நிறைவு செய்து விட்டால் மன நிம்மதி என்றுதான் செயல்பட தோன்றும்' என்று சமாதானம் சொன்னேன்.
லட்சுமி நகர் பேருந்து நிறுத்தத்தில் சாலையைக் கடந்து அருகில் இருந்த கடையில் பழம் வாங்கிக் கொண்டோம். ஒரு பழம் 3 ரூபாய் என்று சொல்லி 15 பழங்களுக்கு 42 ரூபாய் வாங்கிக் கொண்டார் அந்த கடைக்காரர். வியாபாரிகள் பொதுவாக விலைக் குறைப்பு செய்வது பெயரளவுக்குத்தான் இருப்பதாகத் தோன்றியது. இதையே 15 பழம் 35 ரூபாய் என்று கொடுத்திருந்தால் அவர் மீது பெரிய அபிமானம் வந்திருக்கும். பணம் நான் கொடுத்து விட்டேன்.
பேருந்தில் ஏறி நடத்துனரிடம் சீட்டுக்குக் காசை நீட்டினால், தடுத்து விட்டார். அவர் நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழக ஊழியர் ஆதலால் சென்னையில் அவருடன் பயணிக்கும் யாருக்கும் கட்டணம் கிடையாதாம். நம்ப முடியாமல் நின்று கொண்டேன். நடத்துனரும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார். முதியவர்கள் இரண்டு பேருக்கும் உட்கார இடம் கிடைத்து விட்டது. வழியில் குடித்து விட்டு ஏறிய ஒருவர் இறங்கும் வழியில் நின்று கொண்டு முரண்டு பிடிக்க நடத்துனர் சமாதானமாகவே பேசிக் கொண்டிருந்தார்.
நாமெல்லாம் வாய்ப் பேச்சளவில் நின்று விடுவோம். அவர் கைகலப்புக்கும் தயாராக இருப்பார். அதனால் முன்னெச்சரிக்கை அதிகம் என்று நினைத்துக் கொண்டேன். முடிச்சூர் அட்டைக் கம்பெனி வந்தால் சொல்லும்படி நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். இருக்கையில் அருகில் இருந்தவரிடம் கூடுதல் பொறுப்பாக சொல்லி வைத்துக் கொண்டோம். நிறைய தூரம் இருந்தது பாரதி நகர், பெருங்களத்தூர், என்று நகர்களாக வந்து கொண்டிருந்தன.
நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்தோம். காபி போடுவதற்கு பால், காபித் தூள், சீனி வாங்க வேண்டும். சாலையோரக் கடையில் பால் இல்லை. சாலையைக் கடந்து நடக்க ஆரம்பித்த பிறகு திட்டம் மாறி விட்டது. வீட்டிலிருந்தே போட்டுக் கொண்டு வரச் சொல்லி விடலாம். முன்பு இரண்டு முறை வந்திருக்கிறேன். முதன் முதலில் கல் போடும் போது, அதன் பிறகு வாசக் கால் பூஜை செய்யும் போது. அந்த நினைவில் நடந்து வரதராஜபுரம் விலக்கு வரை வந்து விட்டேன்.
வலது புறம் திரும்பி பள்ளிக்கு முன்பு நடந்து இடது திரும்பல். முதல் வலது பக்கம் திரும்பி நேராக நடந்தோம். சிமெண்டு தரை முடிந்து மண் தரை ஆரம்பித்தது. இந்த வழியில் போகுமா என்று ஐயம். தொலைபேசி வழி கேட்டோம். குழம்பவே, தொலைபேசி வரச் சொல்லி விட்டோம். சரியான திசையில்தான் நிற்கிறோம். சில நூறு அடிகளில் வீட்டுக்கு வந்து விட்டோம்.
வீடு கம்பீரமாக நின்றது. தரைக்கு மேல் நாலைந்து அடி உயர்த்திக் கட்டப்பட்ட வீடு, சுற்றிலும் தொடர் விளக்குகள் பொருத்தி ஜொலித்தது. வெளிக்கதவிலிருந்து வீடு வரை போகும் பாதைக்கு ஒரு அடி அகலத்தில் மண் போட்டு உயர்த்தியிருந்தது இன்னும் சிறப்பாக இருந்தது. உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
சாப்பிடக் கொண்டு வந்திருந்த மேசைகளில் ஒன்றை விரித்துப் படுத்து விட்டார். எனக்கும் நப்பாசைதான், மிகவும் குறுகலாக இருப்பதாகத் தயக்கம். தாழ்ந்த குரலில் பூசை குறித்து முதியவருடன் அவ்வப்போது விவாதித்துக் கொண்டிருந்தார். எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று பதட்டமாக இருந்தது.
வாசலில் கட்டியிருந்த வாழை மரங்களில் ஒன்று நுழைபாதையைப் பார்த்துத் திரும்பி வழியை மறித்து நின்றது. அதைச் சரியாகக் கட்டி விடுவோம் என்று போய் அவிழ்த்து கட்டினோம். வாங்கியிருந்த வாழைக் குலை நாளைக்குள் பழுக்கப் போவதில்லை என்று சொன்னவர்களிடம். அப்படி என்றால் இலையில் போடாமல் ஒரு பையில் போட்டு போகும் போது கையில் கொடுத்து விடலாம் என்று ஆலோசனை. அடுத்த நாள் பார்த்தால் அதுதான் நடந்தது.
கட்டிய பிறகு பெரிதாக வேலை எதுவுமில்லை. உட்கார்ந்து நேரம் போக்கிக் கொண்டிருந்தோம். ஒரு மூட்டையில் கட்டப்பட்டு கோழி ஒன்று உதைத்துக் கொண்டு இருந்தது. அப்போதுதான் இரவில் கோழியைப் பலி கொடுக்கப் போகிறார்கள் என்பது உறைத்தது.
பத்தரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். வந்த பிறகு ஆரம்பித்தால் போதும் என்று கட்டிட வேலை செய்த, பூஜை செய்ய வேண்டியவர்கள் காத்திருந்தார்கள். வரும் போது தேநீரும் கொண்டு வர ஆளுக்கு இரண்டு கப் குடித்துக் கொண்டோம். கோழி திமிறி திமிறித் தன்னை விடுவித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் நகர முடியவில்லை. இரண்டு உதை உதைத்து அமைதிப் படுத்தினார்.
வீட்டின் முன்புறம் உட்கார்ந்து கொண்டு வெளியில் பார்த்தால் விமான நிலையத்தில் ஏறும் இறங்கும் விமானங்களின் காட்சி. பின்னிரவு நேரத்தில் வரிசையாக விமானங்கள் இறங்கிக் கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்து விமானங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது நன்றாக இருந்தது.
வீட்டுக்குள் அறையில் இலை விரித்து, விளக்கு வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏற்றினார்கள். இலையில் அரிசி, பழம். பத்தி ஏற்றினார்கள். மஞ்சளில் பிள்ளையார், சந்தனம் கரைத்து, குங்குமத்துடன் விளக்குக்கு எல்லா நிலைகளுக்கும் வைக்க வேண்டும். இதை முடித்து விட்டு வீட்டுக்கு வெளியே பூஜை. வடக்கு எது என்று கேட்டு, வடகிழக்கு மூலையில் செங்கல் சாமி வைத்தார்கள். மண் தரையில் கல் வைத்து அடுப்பு கூட்டி பானையில் சோறு சமைப்பது ஆரம்பித்தது. கட்டிட வேலை செய்தவர்கள் சார்பாக வந்த இரண்டு பேரும் தீ போட்டு சமைத்துக் கொண்டிருந்தார்கள். அரை மணி நேரத்துக்குள் சோறு வெந்து விட்டிருந்தது. அது முடிந்ததும் கோழியின் முறை. எல்லோரும் எழுந்து வாசலுக்கு முன்பு நின்று கொள்ள. உள்ளே ஒவ்வொரு நிலைப்படியாக முட்டை, கத்தரிக்காய், வாழைப்பழம் வெட்டி வந்தார்கள்.
கடைசியாக கோழியைக் கையில் எடுத்து காலில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்து விட்டு, 'அறுத்து ஒரு சொட்டு மட்டும் படும்படி எல்லா கதவுக்கும் கொண்டு போ' என்றார்கள். ஏதோ கொடூரமான காட்சியாக இருக்கப் போகிறது என்று நினைத்தால். முணுக்கென்று ஒரு சத்தம் கூட வரவில்லை, 'கழுத்தைப் பிடித்திருப்பார்கள்', இறக்கைகள் மட்டும் 3-4 விநாடிகளுக்கு படபடத்தன. கழுத்தை வெட்டி சொட்டும் இரத்தத்தை வெளி வாசல் நிலையில் பட வைத்தார்கள். அப்படியே வீட்டுக்குள் கொண்டு போய் எல்லா இடங்களிலும் இரத்தச் சொட்டுகள் விழுந்தன.
வெளியில் வந்து வீட்டைச் சுற்றி பின்பக்கமாக போனார்கள். கொஞ்சம் நேரம் அதிகமாகவே ஆனது. கழுத்தில் வாயை வைத்து ரத்தத்தை உறிந்திருப்பார்களோ? கோழி செத்த பிணமாக வீட்டு வாசலின் முன்பு வீசப்பட்டது. 'உங்களுக்கு வேண்டியதை எல்லாம் ஒரு பையில் எடுத்துக் கொள்ளுங்கள். கழிக்க வேண்டியதை தனிப்பையில் எடுத்துக் கொள்ளுங்கள், எதையும் விட்டு விடாதீர்கள்'
அரிசி, சோறு, சோறு செய்த பானை, காய்கள், பழங்கள், கோழி என்று திரட்டி எடுத்துக் கொண்டார்கள். 'கழிவுகளைக் கொட்டும் வரை யாரிடமும் பேசவே கூடாது'. கட்டணமாக காசும் கிடைத்தது.
'எல்லாம் சுத்தமாகக் கழுவி விட வேண்டும். காலையில் ஐயர் வந்தால் திட்டுவார்கள். அவர்களுக்கு இது எல்லாம் பிடிக்காது'
'அப்படியா' மிக்க மகிழ்ச்சி. 'எப்படியானாலும் அவர்களின் வடமொழி பூஜைகளை முந்திக் கொண்டு இந்த பூஜை நடந்து விட்டதே என்று சந்தோஷம்.
வீட்டில் தண்ணீர் ஊற்றி கழுவ ஆரம்பித்தோம். இரத்தச் சொட்டுகளை தேய்த்துக் கழுவ வேண்டும், கால் பெருவிரலால் தேய்த்தோம். தண்ணீரைத் தள்ள ஒரு தேய்ந்து குட்டையாகிப் போன வாரியல் என் கையில் எடுத்துக் கொண்டேன். குனிந்து தண்ணீர் தள்ளி குளியலறைக்குள் அனுப்பினோம். முக்கால் வாசி வேலை முடிந்த பிறகு வெளியில் வந்து மாடிப்படியேறி மொட்டை மாடிக்குப் போய் விட்டேன்.
தரை சூடாகவும் இல்லை, குளிரும் இல்லை. சட்டை, கால் சட்டையுடன் படுத்து விட்டேன். பைகளில் இருந்த பொருட்களை தூண் முனை நீட்டிக் கொண்டிருந்தன் மேல் வைத்து விட்டேன். இன்னும் ஒருவர் வந்து படுத்துக் கொண்டார். கொசுக்கடி இல்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு கொசு கடிக்க ஆரம்பித்தது. அதையும் சமாளித்துக் கொண்டே கண் அயர முடிந்தது.
எழுந்து நிற்கும் போது கீழிருந்து அம்மா கூப்பிடும் குரல். இரண்டு மூன்று முறை கூப்பிட்டு விட்டார்கள். கீழே வந்தால் வேனிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். நானும் உதவி செய்தேன். அப்பாவும் வந்து விட்டிருந்தார்கள். நாங்கள் நான்கு பேரும் வேனில் போய் வீட்டில் குளித்து தயாராகி விட்டு திரும்ப வேண்டும்.
வேனில் நல்ல பாட்டு ஓட விட்டிருந்தார். வீட்டுக்கு வந்து பல் தேய்த்து, தொலைக்காட்சியில் கிரிக்கெட் மறு ஒளிபரப்பு ஓடிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன். சென்னை வெற்றி பெற்று விட்டதாம். குழாயில் தண்ணீர் வருவது நின்று விட்டது. தொலைபேசி அவசரப்படுத்த தயாரானவர்கள் வேனில் வருவார்கள், நான் பேருந்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி எல்லோரையும் அனுப்பி விட்டேன். அம்மாவின் கண்ணாடி, துடைக்கும் துணி, திருநீறு பொதி என்று பட்டியலும் நீண்டு கொண்டிருந்தது. எல்லாவற்றையும் திரட்டி புறப்பட்டு விட்டான்.
நான் மோட்டாரைப் போட்டும் தண்ணீர் வரும் வழி இல்லாமல் காத்திருந்து பார்த்தேன். கடைசியில் மீந்திருந்த தண்ணீர் கொஞ்சத்தில் குளித்து விட்டு உடை மாட்டிப் புறப்பட்டேன். தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி முடியும் இரண்டு ஓவர்கள் பார்த்தேன். வீட்டைப் பூட்டி விட்டு நடந்து பேருந்து நிறுத்தம். கடையில் ஒரு பழம் சாப்பிட்டுக் கொண்டேன். பேருந்து வந்தது, சொகுசுப் பேருந்து. உட்கார நிறைய இருக்கைகள் ஒழிவாக இருந்தன. முடிச்சூர் அட்டைக் கம்பெனி சீட்டு வாங்கிக் கொண்டேன். ஓட்டுனரும் நடத்துனரும் கலெக் ஷன் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இறங்கி நடந்து வீட்டுக்கு வரும் போது பூஜை ஆரம்பித்திருந்தது. எல்லோரும் வெளியில் உட்கார்ந்திருந்தார்கள். பால் காய்ச்சினார்கள். இடையில் உள்ளே அழைத்தார்கள். போய் கொஞ்ச நேரம் மனதுக்குள்ளாக திருவாசகம் சொல்ல முயற்சித்து விட்டு வெளியில் வந்தேன். குடிக்க பால் கிடைத்தது. காலை உணவு 7 மணிக்கு வர வேண்டும். கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தது. இட்லி, பொங்கல், கேசரி, வடை, சாம்பார், தேங்காய் சட்டினி, தக்காளி சட்டினி.
சாப்பிடும் மேசைகளையும், நாற்காலிகளையும் அமைப்பாகப் போட்டு வைத்தோம். முதல் பந்தியில் வீட்டு ஆட்கள் எல்லாம் உட்கார்ந்தார்கள். உணவு கொண்டு வந்தவர்களுடன் சேர்ந்து பரிமாறினார். எல்லோரும் ஓடி ஓடி விளையாட்டு. இரண்டாவது பந்தியிலும் இடம் இருக்கவில்லை. மூன்றாவது பந்தியில் உட்கார்ந்தேன். இரண்டு இட்லிகள், அவ்வளவு சிறப்பாக இல்லை. வடை பரவாயில்லை. பொங்கல் நன்றாக இருந்தது. காபி. முதலிலேயே காபி குடித்திருந்தோம்.
வெள்ளி, ஏப்ரல் 30, 2010
ஞாயிறு, ஏப்ரல் 25, 2010
திமிறல்கள்
நேரம் 7.50
நேற்றைக்குக் காலையில்தான் வீட்டுக்கு வந்தேன். வெள்ளிக்கிழமை இரவில் கணினியில் ஓடிக் கொண்டிருந்த சரக்கு மதிப்பு மாற்றும் நிரலை இயக்குவதற்காக அலுவலகத்திலேயே தூங்கி எழுந்து தூங்கி எழுந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காலையில் முகம் கழுவி, காலைக் கடன்களை முடித்து விட்டு அடுத்தடுத்த நிலைகளை தொடர்ந்து கொண்டிருந்தேன். சட்டை அழுக்கு படிந்து கறுப்பு கறுப்பாகத் தெரிந்தது. தலை முடி பரட்டையாக பறந்திருந்தது. இப்படியே நாளைக் கடத்த முடியாது. இடையில் வீட்டுக்குப் போய் விட்டு வரலாம் என்று நினைத்தாலும், ஓடிக் கொண்டிருப்பதை விட்டு விட்டுப் போக மனதில்லை.
ஏழரை மணிக்கு தூரத்துக் கணினியின் இணைய இணைப்பு துண்டித்துப் போனது. இப்போது செய்வதற்கு எதுவும் இல்லை. இயக்கி விட்டது ஓடிக் கொண்டுதான் இருக்கும். தொலைபேசி விபரம் தெரிவித்து விட்டுப் புறப்பட்டேன். பாட்டிலில் குடிக்கத் தண்ணீர், கீழே படியில் கிடந்த நாளிதழ் எடுத்துக் கொண்டேன். இரவில் கட்டிடத்தின் பின்புறம் கிணற்றின் அருகில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியில் ஏறி இயக்கிக் கொண்டு வெளியில் கொண்டு வந்தேன். புறப்பட்டு வீடு நோக்கி. வேக வேகமாக விரட்டி வீடு வந்து சேர்ந்தேன். 11 மணிக்கு சந்திப்புக்குப் போகலாம் என்று வழியிலேயே தொலைபேசியில் பேசி ஏற்பாடு செய்து கொண்டோம். வீட்டுக்குப் போய் படுத்து சுகம் கொண்டாட நேரம் இருக்கப் போவதில்லை.
பல் தேய்த்து, தரை தூத்து, முகம் மழித்து, குளித்து தியானம் செய்து புறப்படும் போது ஒன்பது மணி தாண்டியிருந்தது. சாப்பிடுவதற்கு எதிர்த் திசையில் போய் கணேஷ்பவன். பக்கத்துக் கடையில் குமுதம்.
ராமாபுரம் தொலைபேசி தொடர்பகத்தில் தொலைபேசி இணைப்பை மாற்றுவது குறித்துக் கேட்க வேண்டும், வீட்டில் சமையல் வாயு வாங்கி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த இரண்டையும் செய்ய முடியாது. அலுவலகம் நோக்கி ஓட்டினேன். வழியில் அழைப்பு. 'உங்கள் அலுவலகத்துக்கு வருகிறேன்.' புறப்பட்டு விட்டார். 11 மணி சந்திப்பை உறுதி செய்து விட்டுச் சொல்ல வேண்டும்.
சந்திக்க வேண்டியவருக்குத் தொலைபேசினால், 'அலுவலகத்தில்தான் இருப்பேன் எப்போது வேண்டுமானாலும் வா' என்று சொல்லி விட்டார். முதலாமவருக்குத் தொலைபேசி வாருங்கள், 'நாம் ஒரு மணிக்குப் பிறகுதான் சந்திக்க முடியும்' என்று தெரிவித்து விட்டேன்.
கணினியை இயக்கி ஒரு மின்னஞ்சல் எழுதி விட்டு புறப்பட்டேன். 25Gல் ஏறி குமணன் சாவடி, அங்கு இறங்கி கடையில் ஒரு எலுமிச்சை சாறு. பனிக்கட்டி போடாமல் தயாரித்த பானம் என்றால் கொடுங்கள், போட்டிருந்தால் வேண்டாம் என்று சொல்லியும் பொய் சொல்லிக் கொடுத்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் தொண்டையில் கரகரப்பு வந்து விட்டது.
சாலையைக் கடந்து பகிர்வூர்தியில் ஏறினோம். மூன்று பேரையும் வைத்துக் கொண்டு வண்டி நகர்ந்தது. எங்கு இறங்க வேண்டும்? எனது உள்ளுணர்வு ஒத்துக் கொள்ளாமல் இன்னும் தொடர்ந்து போனோம். அலுவலகத்துக்குப் போகும் இடத்துக்கு அருகில் இறங்கிக் கொண்டோம். சாலையைக் கடந்து தெருவினுள் நடந்தோம். சுந்தம் பாஸ்டனர்ஸ் என்று பெரிய தொழிற்சாலை வலது புறமும் இடது புறமும் தெரு முனையில் திரும்பி டாடா.
வரவேற்பறையில் பதிவுச் சீட்டு வாங்கிக் கொண்டு மேலே போனோம். அறையில் யாரோ இருந்தார்கள். அவர் என்னைப் பார்த்து விட்டு அறையில் காத்திருக்கச் சொன்னார். என்ன அருமையான முறைமைகள், ஒழுங்குகள் என்று வியப்பாக இருந்தது. கணினியை இயக்கினால் உள்ளுறை கம்பியில்லா வலையிணைப்பில் இணைந்து கொள்ள முடிந்தது. மின்னஞ்சல்கள், நமது இணையத்தளம் நமது பயன்பாடுகளின் செயல்முறைப் பக்கங்கள் என்று திறந்து வைத்துக் கொண்டோம்.
காபி கொண்டு வந்து கொடுத்தார்கள். வெளியில் நிறைய நடமாட்டங்கள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் காக்க வைத்துதான் வந்து சேர்ந்தார். முந்தைய சந்திப்பு அவர்கள் தோல் வாங்கும் தொழிற்சாலையில் முதலாளியுடன். நலன் விசாரித்த பிறகு எனது பாணியில் நேரடியாக வேலை விபரத்துக்கு வந்தேன்.
அவர்கள் நிறுவனத்துக்கு நமது சேவையை அளிக்க வேண்டுமானால் என்ன வழி? அவர் தோல் வாங்கும் நிறுவனங்களுக்கு நம்மை அறிமுகம் செய்து வைப்பது என்று இரண்டு கோணங்களில் பேச்சைத் தொடர்ந்தோம். அவர்களது பிரிவு செய்யும் நடவடிக்கைகளையும் SAP செயல்படுத்தியது பற்றியும் விளக்கினார். புதன் கிழமை அவருடன் ராணிப்பேட்டை போகும்படி சொன்னார். அவர்கள் நிறுவனத்துக்குள் சேவை அளிப்பது இன்னும் சிக்கலானது.
இன்னொரு நண்பர் எட்டிப் பார்த்து கண்ணைக் காட்டி விட்டுப் போனார். வெளியில் போனால் பேசிக் கொண்டிருந்தார். சில நொடிகளிலேயே அனுப்பி வைத்து விட்டார். ஏதோ பகைவன் போல நடத்துகிறார். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு தொலைபேசி விற்பனை முகவர்கள் போல செயல்பட முடியுமா என்று கேட்டது பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. ஏதாவது செய்ய வேண்டும். பார்க்கலாம்.
வெளியில் வந்து சாலைக்கு வந்ததும், தொலைபேசி புறப்பட்டு விட்டதாகச் சொன்னேன். அப்போது மணி 12.55. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். பகிர்வூர்தியில் குமணன் சாவடி 25Gல் ஆழ்வார் திருநகரில் இறங்கினோம். தேநீர்க்கடையில் போய் ஒரு தயிர் டப்பா, இரண்டு மிக்சர் பொதிகள். பேசிக் கொண்டிருக்கும் சாப்பிடும் ஆயத்தங்கள் நடக்க அவரையும் அழைத்தோம்.
இரண்டு பேர் சாப்பாட்டை நான்கு பேரும் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டோம். தயிரை மோராகக் கலக்கிக் கொடுத்தார். கூகுள் அனலிடிக்ஸ் போடலாம் என்று சொல்லி விபரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் இதில் வேலை பார்ப்பதாகச் சொல்ல, 'வியாபார முறை பணியில் ஈடுபட்டால் அதில் வருமானம் வரும்படி இருக்க வேண்டும், அதற்கு என்ன கட்டணம் என்பதையும் பேசி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்' என்று தெளிவாகச் சொல்லி விட்டேன்.
'நான் முதலில் வேலையை ஆரம்பிக்கிறேன். நீங்கள் என் அணுகுமுறையை பார்த்து விட்டுச் சொல்லுங்கள். பணம் பேசி விட்டால், நானும் பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக ஆகி விடுகிறது' என்கிறார். அந்தப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதாக ஆவது இல்லாமல் ஆரம்பிக்கவே கூடாது என்று சொல்லி விட்டேன்.
அதன் பிறகு பிரைமின் வேலைகள் மீதி இருக்கும் பணிகளை மறு திட்டமிடுவது என்று ஆரம்பித்தேன். தேநீர் குடிக்க என்று கீழே வந்து சிற்றுண்டி கடைக்கு வந்தோம். கொழுக்கட்டை, நவதானிய இனிப்புக் கொழுக்கட்டை, பட்டாணி சுண்டல், சன்னா சுண்டல், போளி என்று வைத்திருந்தார். என்னுடைய இரவு உணவும் ஆகி விட்டிருந்தது.
தேநீர்க் கடையில் ஆளுக்கொரு தேநீர். தொங்கிக் கொண்டிருந்த வாழைப்பழங்கள் 6 வாங்கிக் கொண்டேன். ஒன்று ஒன்றரை ரூபாய். 10 ரூபாய்க்கு 7 பழங்கள் என்று கேட்டேன். மனதிலிருந்து பாரத்தை இறக்கி வைத்து விட ஒரு வழி வகுத்துக் கொண்டு தினமும் தவறாமல் செய்து விட வேண்டும் என்று அறிவுரை. சொல்வது யார்க்கும் எளியவாம்!
பிரைமுக்கு இயக்கி விட வேண்டிய நிரல் தயாரித்துக் கொண்டிருந்தேன். 8 மணிக்கு மேல் அவர்கள் வேலைகளை முடித்த பிறகுதான் ஓட்ட முடியும். இடையில் பழங்களை சாப்பிட்டுக் கொண்டோம். தனது புதிய அணுகுமுறை என்று விளக்க ஆரம்பித்தார்.
உரையாடல் ஓடுவது மிகவும் எளிதாக இருக்கிறது. இடையில் தொலைபேசி ஞாயிற்றுக் கிழமையே வந்து விடச் சொன்னான். இந்த மரபுகள் எல்லாம் எனக்கு தேவை இல்லைதான். 'நாஞ்சில் நாட்டு பழக்கங்களை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறார், நான் அவற்றை எவ்வளவு விட்டு விலக முடியும் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னேன். 8 மணிக்கு புறப்பட்டு வீட்டுக்கு. வழியில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணங்களை தவிர்த்து பத்திரமாக வீடு வந்தேன். குமுதம் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். நேரம் பார்க்கும் போது ஒன்பதரை மணி. படுக்கை விரித்துப் படுத்து விட்டேன்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஐபிஎல் பற்றி பக்கம் பக்கமாக செய்திகள். இரண்டாவது ஐபிஎல் தென்ஆப்பிரிக்காவுக்கு நகரப் போகிறது என்று சேதி வந்த போது போகட்டும் சனியன் என்று வலைப்பதிவில் எழுதியிருந்தேன். உள்ளூடாக வலுவான ஒரு அருவெருப்பு அதன் மீது இருந்தது. பந்தயங்களை பேசிவைத்துக் கொண்டு வெற்றி தோல்வி காட்டுவது, பணத்தை வாரி இறைப்பது, மக்களின் கீழ்த்தரமான இயல்புகளை தூண்டி விட்டு பணம் பார்ப்பது என்று சமூகத்தைச் சீரளிக்கும் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது இந்த ஐபிஎல்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாடில்லாத செயல்பாடுகளின் உச்சக்கட்டம்தான் ஐபிஎல். இந்த குண்டு வெடித்த தெறிப்பில் எல்லா சீர்கேடுகளும் சரியானால் பார்க்கலாம்.
பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியது தொடர்பாக அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு இது வரை பதிலே இல்லை. அடுத்த நினைவு படுத்தலும், உறுதியான நடவடிக்கை கேட்டலுமாக ஒரு மடல் இன்று அனுப்பி விட வேண்டும்.
நேரம் 8.27. இதை முடித்து விட்டு தரை தூக்க வேண்டும். அதன் பிறகு ஊற வைத்திருக்கும் துணிகளைத் துவைத்துப் போட வேண்டும். நடுவில் துவைத்த துணிகளை தேய்க்க வேண்டும். நேற்றைக்குப் போட்ட உடைகளோடு தேய்த்து வைத்திருந்தவை தீர்ந்து போயாச்சு. இவ்வளவும் முடிப்பதற்கு 10 மணி ஆகியிருக்கலாம்.
அலுவலகத்துக்குப் போய் வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் பற்றிய அடுத்த பகுதி, உள்துறை அமைச்சருக்கு அடுத்த மடல் அனுப்பி விட்டு தாம்பரத்துக்குப் புறப்படலாம். நிறைய பேர் தங்க வருவார்கள் போலிருக்கிறது. நான் எங்காவது இடம் பார்த்து தூங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
பெண்ணியம் பேசுபவர்களிடம் கேட்க வேண்டும் என்று பல கேள்விகள் இருக்கின்றன. எழுதும் பெண்களுடன் எல்லா பெண்களும் ஒத்துப் போகிறார்களா? இப்படி அறிவுபூர்வமாக சிந்தித்து, எழுதுபவர்களும் அதைப்படிப்பவர்களும் அந்த நிகழ்வுகளுக்குத் தொடர்பில்லாதவர்கள்தானே?
எப்போதுமே ஆண்களை எல்லாம் வில்லன்களாக பேசுகிறீர்களே? பெண்கள் பக்கம் தவறை இல்லையா? ஆண்கள் பக்கம் நல்லபடியாக நடப்பவர்கள் இல்லையா? அவர்களைப் பற்றி ஏன் பேச முடியவில்லை.
இது போன்று மனத் தளைகளிலிருந்து விடுதலை கிடைத்த பிறகு பெண்கள் தமது சக்திகளை எந்தத் திசையில் செலுத்துகிறார்கள். சமூகக் கட்டமைப்பில் அப்படி விடுதலை பெற உறுதுணையாக இருக்கும் இணை ஆண்களை எப்படி நடத்துகிறார்கள்? விடுதலை கிடைத்த பிறகும், தளைபட்டுக் கிடக்கும் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை அமைப்புகளைப் பயன்படுத்தி ஆண் உறவினர்களை துன்புறுத்தும் பெண்களை என்ன செய்வது?
விடுதலை வேண்டும் ஆனால் அதற்கான பொறுப்புகளை சுமக்க மாட்டேன் என்பவர்களை என்ன செய்வது.
இதைப்பற்றி எழுதுவது மனதிற்கு மிகவும் சோர்வைத் தருவது. அடாவடிதான் நினைவுக்கு வருகிறது. அவ்வளவு குரூரமாக வேண்டுமென்றே திட்டங்கள் எல்லாம் போட்டு வஞ்சித்து பிரித்து வைத்திருக்கும் புத்திசாலி. என்ன தண்டனை கொடுக்க வேண்டும்? அந்த அமெரிக்கத் தகப்பன் போல அவர்கள் பின்னால் போய், நடு இரவில் தொலைபேசி குடும்பத்தைத் தொந்தரவு செய்கிறானாம். ஏன் அதற்குக் கூட உரிமை இல்லையா என்ன? வெறுப்பு மக்களை விலங்குகளாக மாற்றி விடுகிறது.
வாணிஜெயராமின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காற்றினிலே வரும் கீதம் என்று உருகுகிறார். வெளியில் பெந்தேகோஸ்டல் சபையின் பாடல்களும் கூச்சல்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. குடிதண்ணீர் பிடிப்பதற்கு கோடி வீட்டு அம்மா இரண்டு மூன்று முறை போன பிறகு இப்போது அவரது பையன் நான்கைந்து நடை நடந்து விட்டார்.
புரட்டிப் போட்ட புத்தகங்களில் மோகமுள், கரித்துண்டு என்று எழுதிய இடுகைகளில் நிறைய பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. நரேந்திர மோடி குறித்து எழுதிய இடுகையில் நூறைத் தொடும் அளவில் பின்னூட்டங்கள்.
சச்சின் டெண்டூல்கருக்கு நேற்றோடு 37 வயது. டெண்டூல்கர் வாழ்க்கையின் சாதனைகளை எல்லாம் தொட்டு விட்டார்.
அடுத்த பாடல், 'சாகும் போது 5 நிமிடம் கேட்டு, அனுபவிக்க வேண்டும்' என்று யாழ் சுதாகர் சொல்லும் பாடல். நான் பாடிக் கொண்டே இருப்பேன். அதற்கடுத்து 6 நிமிடங்களுக்கு ஏழு சுவரங்களில் எத்தனை பாடல் என்று பாட்டு.
செவ்வாய் அல்லது புதன் கிழமையில் ராணிப்பேட்டை போய் சந்திக்க வேண்டும். இன்றைக்கு 25ம் தேதி. சாரிடம் பணம் வாங்க வேண்டுமானால், weighing machine இயங்க வைக்க வேண்டும்.
'சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது, சாரீரம் என் சீதனம், நான் பாடிக் கொண்டே இருப்பேன், உன் பக்கத் துணை இருப்பேன். என் ஜென்மம் இருக்கும் வரை, என் ஜூவன் காக்கும் உனை, நான் பாடிக் கொண்டே இருப்பேன், உன் பக்கத் துணை இருப்பேன்.'
என்ன அருமையான இசை, உண்மையிலேயே ஒரு இசை ஓவியம்தான்.
'என் வீடு பொன் கோவில், உன் நாமம் என் நாவில், நாள் தோறும் இசை அர்ச்சனை, என் பாடல் நீ கேட்க , என் கண்கள் உனைப் பார்க்க, நானே உன் வரதட்சணை, நான் பாடிக் கொண்டே இருப்பேன், உன் பக்கத்துணை இருப்பேன். என் ஜென்மம் இருக்கும் வரை, என் ஜீவன் காக்கும் உனை, நான் பாடிக் கொண்டே இருப்பேன், உன் பக்கத் துணை இருப்பேன்.'
'கால தேவன் மேலும் அனுமதித்தால் மேற்கொண்டு ஆறு நிமிட அவகாசம் கேட்பேன். அந்த அவகாசம் கிடைத்து விட்டால். இந்த சங்கீத ஷேத்ரத்தையும் கடைசியாக தரிசனம் செய்வேன். '
'ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல், இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி. காணும் மனிதருக்குள் எத்தனை சலனம். காணும் மனிதருக்குள் எத்தனை சலனம். வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம். ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல், ஆ...........ஆ.........ஆ......'
'காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி, காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி. அது கையில் கிடைத்தபின்பும் துடிக்குது ஆவி.'
'ஏழை கச்சேரி ஒன்று என்றைக்கும் தங்கும். மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும். ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல். ல்ல்ல்ல்'
'எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும். எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும். நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும். நமக்கென்று பூமியில் கடமைகள் உண்டு.'

லேபிள்கள்:
சுயமுன்னேற்றம்,
நிறுவனம்
வெள்ளி, ஏப்ரல் 23, 2010
தக்காரும் தகவிலாரும்
நேற்றைக்குக் காலையில் எழுந்திருக்கும் போது நேரமாகி விட்டது. பழக்கங்களை விட வேண்டாம் என்று பல் தேய்த்து விட்டு எழுத உட்கார்ந்தேன். ஒரு மணி நேரம் அதில் ஓடியது. துணி தேய்க்க வேண்டும் என்பது நினைவில் வந்தது. ஞாயிற்றுக் கிழமை தேய்த்து வைத்த கால்சட்டையும் மேல் சட்டைகளும் நேற்றோடு உடுத்து தீர்ந்து விட்டன. அடுத்த மூன்று நாட்களுக்கு துணி வேண்டும்.
வீட்டைத் தூத்து விட்டுக் குளியல், குளித்து தியானம் முடித்த பிறகு தேய்க்க ஆரம்பித்தேன். தேய்க்க ஆரம்பிக்கும் போது மணி 8.40, 15 நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டு ஒரு கால் சட்டையும் மூன்று சட்டைகளும் தேய்த்து விட்டேன். ஒன்பது மணிக்குப் பிறகு அலுவலகம் புறப்பட வேண்டும். வண்டியில் புறப்பட்டுப் போனார்கள். நான் வெளியில் போனதும் அதிகம் பேசாமல் வண்டி நகர்ந்து விட்டது.
நெசப்பாக்கம் வழியாக வந்து வேம்புலியம்மன் தெருவில் நுழைந்து ஆற்காடு சாலை தாண்டி அலுவலகம் போகும் முன்பு, தேநீர்க் கடையில் ஒரு தேநீர். ஒரு சமோசாவும் உள்ளே தள்ளிக் கொண்டேன். அது 8 ரூபாய். அந்த தேநீர்க் கடைக் காரர்கள் நம்மைத் தவற விட்டு விடக் கூடாது என்று மிகவும் கவனமாக நட்பு பாராட்டுகிறார்கள்.
முதலில் வங்கிக்குக்கொடுக்க வேண்டிய கடிதம். கணக்கு எண்களை சரி பார்த்து அச்செடுத்துக் கொண்டேன். அதை முடித்ததும் வலைப்பதிவு. லீனா மணிமேகலையும், அவரது கவிதைகளும் என்று காலையில் நாட்குறிப்பில் எழுதிய கருத்துக்களை பதிந்து, பின்னூட்டப் பெட்டியையும் மூடி விட்டேன். மதிப்புக் கணக்கு மேம்படுத்துதல் ஓடிக் கொண்டிருந்தது.
ஸ்கூட்டியிலேயே கிளம்பினேன். வளசரவாக்கத்தில் பழைய அலுவலகம் இருந்த தெருவில் திரும்பி, பேனா வாங்கிக் கொள்ள முடிவு. எழுதுபொருள் கடை மூடியிருந்தது, இடது புறம் கொஞ்சம் தள்ளி நன்னாரி சர்பத் எல்லாம் வெளியில் வைத்து ஒரு கடை இருந்தது. திரும்பி வரும் போது இங்கு சர்பத் குடிக்க வேண்டும். அழகுப் பொருட்கள் விற்கும் கடைக்குப் போய் பேனா கேட்டேன். மாற்று முனை இல்லை, புதிய பேனாதான் வாங்க வேண்டும் என்று கொடுத்தார். 35 ரூபாய்கள். ஏற்கனவே இருந்த பேனா வீண்தானே என்று ஒரு வருத்தம்.
'நீங்க இருந்த வீடு இப்பவும் பூட்டித்தான் கிடக்குது, உங்களை வெளியில் அனுப்பி விட்டு அப்புறம் சும்மா இருக்காங்க'. 'நாங்களும்தான் போகணும் என்று நினைத்தோம். ஆனா, அந்த அம்மா எங்க முன்பணத்தைத் திருப்பித் தரவேயில்லை. தரவே மாட்டேன் என்று சொல்லிட்டாங்க. எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம். வீட்டுக்கு வெள்ளை அடித்தோம் என்று செலவுக் கணக்குக்காட்டி பணத்தைத் தரவில்லை' என்று நானும் மனக்குறையைச் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
பூத்தப்பேடு, பிபிசி ஹோம்ஸ் வழியாக போரூர் போகும் வழியைப் பிடித்தேன். கோவிலுக்கு எதிர்த் தெருவில் நிழலில் வண்டியை நிறுத்தி விட்டு வங்கிக்கு வந்தேன். நமது கணக்கில் போட வேண்டிய காசோலைக்கு விபரச் சீட்டு நிரப்பி, இந்த கடிதத்தையும் சேர்த்து மேலாளரிடம் கொடுக்கப் போனேன். வழக்கமாக இல்லாமல் கொஞ்சம் மலர்ச்சியாக இருந்தார். மூன்றாவது சாளரத்தில் கொடுத்து விடச் சொன்னார். அந்த அம்மா வாங்கிக் கொண்டார்கள். மதியத்தில் பண மாற்றலும் நடந்து விட்டிருந்தது.
வெளியில் வந்த பிறகுதான் பணமாகவில்லை என்று நினைவு வந்தது. திரும்பிப் போய் மேலாளரைக் கேட்டால், காசோலை கையாளுபவரை கைகாட்டினார். அவர் கை வேலையை முடித்து விட்டு வர சிறிது நேரம் பிடித்தது. வழியில் அரட்டை எல்லாம் அடித்து விட்டு பெட்டியைத் திறந்தார். நமது காசோலையை உடனேயே அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. தேதியில் 4வது மாதம் என்பதற்கு பதிலாக 10வது மாதம் என்று இருந்தது. அதையும் கொடுத்து செய்து விடச் சொன்னார். சாலையைக் கடந்து வண்டியை எடுத்து வந்த வழியிலேயே திரும்பினேன்.
வழியில் துணி தேய்க்கும் கடைக்காரர். என்னைப் பார்த்ததும் நின்று வண்டியை நிறுத்திக் கொண்டார். 'எப்படி சார் இருக்கீங்க!' என்று அக்கறையாக விசாரித்தார். பாலா வந்தாராம். ஊரில் விவசாயம் பார்ப்பதாகச் சொன்னாராம். நாலைந்து தடவை எப்படி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டார். எச்சங்கள் தக்கதாகவே இருக்கின்றன.
சர்பத் கடையில் நன்னாரி சர்பத், ஐஸ் போடாமலேயே வேண்டும். 7 ரூபாய். நான்கு கரண்டி சர்பத், எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்தால் போதும். இப்போது எழுதுபொருள் கடையும் திறந்து விட்டிருந்தார். அங்கும் வண்டியை நிறுத்தி பேனாவுக்கு மாற்று எழுது பகுதி வாங்கிக் கொண்டேன். 15 ரூபாயில் முடிந்து விட்டது.
முந்தைய நாள் வேலைக் குறிப்புகளை உள்ளிட்டேன். மீதி இருக்கின்ற பணிகளை ஒழுங்குபடுத்தித் திட்டம் போட்டுக் கொண்டேன். இன்றைக்குச் செய்ய வேண்டியவை ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்து நகர்த்தினேன். அத்தான் வரும் போது ஆழமாக வேலைகளில் இறங்கியிருந்தேன். வேறு எதிலும் மனம் ஓடவில்லை.
'தொலைபேசினால் இன்றைக்கு மாலையில் வேண்டாம், நாளைக்கு அல்லது சனிக்கிழமை அலுவலகத்திலேயே பார்க்கலாம்' என்று சொன்னார். தொலைபேசி எடுக்கவில்லை. மாலையில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். தொலைபேசியில் பேச முடியாததற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு இன்றைக்கு 11 மணிக்கு அழைக்கச் சொல்லியிருந்தார்.
தொலைபேசி எடுக்கவேவில்லை. மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. அவர்களது முடிந்து விட்ட ஒரு பணி விபரத்துக்கான மின்னஞ்சல் அனுப்பினேன். இன்னும் முடித்து விட்ட பணிகளை கொண்டு சேர்க்க பேசி விட்டு, நான் வேலைகளையும் தொடர்ந்து OB, CB கூட்டுத் தொகையில் காட்டும் பணியையும் ஆரம்பித்தேன். சாப்பாட்டு வேளை. கீழே போய் மோர் வாங்கி வர வேண்டும்.
தயிரைத் திறந்து பார்த்து அதில் பூஞ்சணம் பூத்திருப்பதை சுட்டிக் காட்ட அதைத் தொடாமல் ஒதுக்கி வைத்து விட்டோம். சாப்பிட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்த பிறகு கடைக்குப் போய் அதைத் திருப்பிக் கொடுத்து காசை வாங்கிக் கொண்டேன்.
மதியத்துக்கு மேலும் நிரலாக்கப் பணிகள் தொடர்ந்தன. OB, CB முடித்து விட்டு, ஓடி முடித்திருந்த சரக்கு மதிப்பு மாற்றும் பணியில் இறங்கினேன். இதற்குள், செலவுக் கணக்குகளை எழுத ஆரம்பித்து பிப்ரவரி மாதச் சாப்பாட்டு தொகையே இன்னும் கொடுக்கவில்லை என்று தொலைபேசி கேட்டால், அவருக்கு எத்தனை சாப்பாடு எவ்வளவு தொகை என்பது கூட மறந்திருந்தது. குறித்து வைத்திருந்தேன். அதைச் சொல்லி காசோலை வாங்கிக் கொண்டு போகச் சொன்னேன். கூடவே மாலை வேளை தீனிகளும் அனுப்பி வைத்தார்.
அதைச் சாப்பிட்டு விட்டு தேநீர் சாப்பிடக் கிளம்பினோம். அவர்களது நலனை இன்னமும் கவனிக்கிறோம் என்று காட்ட வேண்டும். அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும். அதுதான் அடிப்படை.
5ம் தேதியே நமது பணத்தைக் கொடுத்திருந்தார்கள் என்றால் அடுத்த இரண்டு வாரங்களில் இன்னும் பல வேலைகளை அவர்களுக்காக செய்து விட்டிருப்போம். பணத்தை இழுத்தடித்தால்தான் வேலை செய்வார்கள் என்பது மாறி பணம் கொடுத்தால் நமக்கு அதிகமாகக் கிடைக்கும் என்பது அவர்களுக்கும் புரியும். சரக்கு மாதாந்திர அட்டவணையை கணக்கிடும் பயனர் இடைமுகம் பற்றிய விபரங்களை முன்கூட்டியே அறிவித்து விட்டு அதன் பிறகு சொல்லுவோம் என்று பேசிக் கொண்டோம். அதன் படி ஒரு மின்னஞ்சலும் தயாரித்து காட்டி விட்டு அனுப்பி விட்டேன்.
வலைப்பதிவில் இணையப் பக்கங்கள் பற்றிய அழகுக் குறிப்புகளை வெளியிட்டேன். ராதாகிருஷ்ணன் பின்னூட்டம் போட்டு தொடர்ந்து படித்துக் கற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். ஊக்க மருந்து சாப்பிட்டது போல இருந்தது.
தொலைபேசி இணைய இணைப்பு ஏற்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். ராணிப்பேட்டை போகும் அலைச்சல் மிச்சம். உடனேயே இணைத்து மாற்றங்களை சேர்த்து விட்டேன். அடுத்த மேம்படுத்தல்களை செயல்படுத்தும் முன்னர் வாடகைக்கு ஆள் கூட்டி வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் செலவழித்தார்.
11 மணிக்கெல்லாம் புறப்பட்டு வெளியில் வந்து விட்டேன். பாட்டிலில் தண்ணீர் பிடித்துக் கொண்டேன். ஸ்கூட்டியில் ஏறி விரட்டி விரட்டி வீடு. தியானம் கூட 10 நிமிடங்கள் உட்கார்ந்து தூங்கப் போனேன். மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாமல் அதையும் போட்டுக் கொண்டேன்.

உறவுகள்,
சுயமுன்னேற்றம்
வியாழன், ஏப்ரல் 22, 2010
மூன்று நாள் கதை
தினமும் காலையில் எழுதுவதையும் தியானம் செய்வதையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகு தடங்கல்கள் இல்லாமலா போய் விடுகின்றன? தியானம் நடந்து விடுகிறது. எழுதுவதற்கு கொஞ்சம் இடையூறுகள்.
ஞாயிற்றுக் கிழமை காலையில் எழுதி விட்டுத்தான் அலுவலகம் போனேன். அலுவலகத்தில் நாள் முழுவதும் உட்கார்ந்து விட்டு மாலையில் தாம்பரத்துக்குக் கிளம்பினேன். ஆறு மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து, விருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் வடபழனி பேருந்து. நூறடி சாலை நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்து எதிர்ப்புற பேருந்து நிறுத்தம்.
வடபழனியிலிருந்து அப்பாவுக்குத் தொலைபேசி வந்து கொண்டிருப்பதாகத் தகவல் சொல்லி விட்டேன்.
நேராக தாம்பரம் ரயில் நிலையத்துக்கு முன்பிருக்கும் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். ரயில் நிலையத்தைக் கடந்து போகும் மாடிநடைபாதை வழியாக கிழக்கு பக்கம் போய் சாலையை அடைந்தேன். பகிர்வூர்தி ஓட்டுனர் ஒருவர் அழைத்துக் கொண்டிருக்க அதில் ஏறிக் கொண்டேன். 'கேம்ப்ரோடில் இருந்து நேராகத்தான் போகிறது' என்றதும் 'கேம்ப் ரோடுக்கு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொள்கிறேன்' என்று சொன்னேன் 'மகாலட்சுமி நகரா?' 'ஆமாமா'.
கேம்ப் ரோடு தாண்டுவது வரை வேறு யாரும் கூட இறங்கவில்லை. மகாலட்சுமி நகரில் என்னையும் சேர்த்து மூன்று பேர் இறங்கினோம். 10 ரூபாய் கட்டணம். வேக வேகமாக நடந்து சிட்லபாக்கம் பிரதான சாலை வழியாக பாபு தெரு நோக்கி நகர்ந்தேன். பாபு தெருவிற்கு இடது புறம் திரும்பும் இடத்தில் வலது புறம் புதிதாக ஒரு பெயர் பலகை.
உயிர்க்கூள நவீன எரியூட்டும் இடம் என்று உயிர்களை என்று முதலில் படித்தேன். "களை" என்று இல்லை "கூள" என்றிருக்கிறது என்று கொஞ்சமாக உறைத்தது. திரும்பும் போது பார்த்து சொன்னதில் தெளிவு ஏற்பட்டது.
வீட்டில் வெளிக்கதவைத் திறந்து உள்ளே போனால், அப்பாவும் அம்மாவும் படிக்கட்டுகளில் உட்கார்ந்திருந்தார்கள். 'என்ன இவ்வளவு நேரம் ஆகி விட்டது' என்று விசாரிப்பு. நான் தொலைபேசி சொல்லி ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கிறது.
சாய் பாபா கோவிலின் பிரசாதம் என்று சப்பாத்திகள். நன்றாகவே இருந்தது. அங்கு கிடந்த ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இன்றைய தமிழ் சமூகத்தின் சரியான வெளிப்பாடு இந்த ஆனந்த விகடன். எல்லாவற்றையும் பொதி போட்டு விற்று விட வேண்டும் என்ற முனைப்பு.
வழக்கம் போன்ற பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. திரும்பவும் அலுவலகம் போய்ப் பார்க்க வேண்டும். சரக்கு மதிப்பு திருத்தத்துக்கான கட்டளைகள் இயங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டேன். அண்ணன் காரில் கிளம்பும் போது நாங்களும் சேர்ந்து கொண்டோம். தாம்பரம் சானடோரியம் நிலையத்தில் இறக்கி விட்டார்கள். ஆதம்பாக்கத்தில் வீட்டு தரகர் செல்வத்துக்குத் தொலைபேசினால் வீட்டு உரிமையாளர் டாக்டர் இன்னும் வரவில்லை என்று சொன்னார். அதனால் ரயிலில் போவதை விடுத்து சாலைக்கு வந்தோம். பேருந்தில் ஏறி வடபழனி சீட்டு. நல்ல கூட்டம். இரவில் இவ்வளவு நேரத்துக்குப் பிறகு குறைவான எண்ணிக்கை பேருந்துகளில் கூட்டம் அதிகம்.
வடபழனி நூறடிச் சாலையில் இறங்கி பின்னோக்கி நடந்து விருகம்பாக்கம் போகும் பேருந்துகள் நிற்கும் நிறுத்தத்துக்கு வந்தோம். கொஞ்ச நேரத்துக்கு எந்தப் பேருந்துகளும் இல்லை. எல்லாப் பேருந்து நிறுத்தம் வரை போகக் கூடியவைதான். கடைசியில் கூட்டம் ததும்ப வந்த பேருந்தில் ஏறிக் கொண்டோம்.
ஞாயிற்றுக் கிழமை இரவு அலுவலகத்திலேயே தூங்கி விட்டோம். தாம்பரத்துக்குப் புறப்படும் போது வண்டியை இயக்கிப் பார்த்தால் எஞ்சின் கிளம்ப மறுத்தது. அதை தள்ளி அலுவலகத்தின் பின்பக்கத்தில் கிணற்றுக்கு அருகில் விட்டுப் போயிருந்தேன். காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இன்னும் கொஞ்சம் நிரலாக்க வேலைகள் செய்து விட்டு, இங்கேயே தங்கிக் கொள்ளலாமா அல்லது வீடு போய் விட்டு வரலாமா என்று அலசி விட்டுக் கிளம்பினோம். வண்டியை வெளியில் எடுத்து உதைத்து இயக்கினால் இயங்கி விட்டது. நேராக வீடு. வீட்டைத் தூத்துக் குளித்து தியானம் முடித்து விட்டுக் கிளம்பினோம்.
அலுவலகம் வந்து வேலையைத் தொடர்ந்தோம். சாருக்குத் தொலைபேசினால் மாலையில் வரச் சொன்னார். 6 மணி வாக்கில் போக வேண்டும். அலுவலகத்திலிருந்து இறங்கி விருகம்பாக்கம் சந்தை நிறுத்தம் வரை நடந்தோம்.
மதிமுகவின் சார்பில் வைகோ, நாஞ்சில் சம்பத் பங்கு பெறும் பொதுக்கூட்டத்துக்கான பந்தல் போடப்பட்டு பாடல்கள் அலறிக் கொண்டிருந்தன. பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் போகும் பேருந்தில் ஏறி, அங்கிருந்து 15Bல் பெரியமேடு.
அவர் வந்து பேசி விட்டுக் கிளம்பும் போது 8 மணி தாண்டியிருந்தது. பேருந்து ஏறி கோயம்பேடு பேருந்து நிலையம். அங்கிருந்து பேருந்தே கிடைக்கவில்லை. பேருந்து நிலையத்தின் உள்ளேயே நடந்து கோயம்பேடு சந்தை நிறுத்தத்துக்குப் போகலாம் என்று பார்த்தால் சுற்றிச் சுற்றி வந்து இந்த வாசலுக்குத்தான் சேர்ந்தேன். ஆப்பிள் ஜூஸ் ஒன்று 10 ரூபாய்க்குக் குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது. அப்படியே நடந்து நூறடி சாலை வழியாக சுற்றி நிறுத்தத்துக்கு வந்தேன். பகிர்வூர்தி ஒன்றில் விருகம்பாக்கம் சந்தை. மதிமுக கூட்டம் ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது.
அடுக்கு மொழி தமிழில் உணர்வுபூர்வமாக பொழிந்து கொண்டிருந்தார் ஒரு பேச்சாளர். 'எங்க தலைவர் மீது கை வைத்தாயே காக்கி சட்டை போட்ட தைரியத்தில். வைகோ யார்' என்று ஆரம்பித்து அவரது அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.
அலுவலகத்தைப் பூட்டி விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் எழுந்திருக்கும் போதே ஐந்தே முக்கால் ஆகி விட்டது. குறுஞ்செய்தி அனுப்பி விட்டு பல் தேய்த்துக் குளித்து விட்டுப் புறப்பட்டேன். அலுவலகத்துக்குப் போக வேண்டிய சந்திப்பு இருக்கிறது.

ஞாயிறு, ஏப்ரல் 18, 2010
பயணம் எங்கே!
நேற்றைக்குக் காலையிலும் பொறுமையாக எழுந்திருந்து புறப்பட்டேன். முந்தைய இரவு படித்துக் கொண்டே விளக்கை அணைக்காமலேயே தூங்கி விட்டிருந்தேன். காலையில் எழுந்து எழுதுதல், தரை தூத்தல், தியானம் செய்தல் மூன்றையும் தவற விடாமல், நேரம் குறையாமல் செய்ய வேண்டும் என்று உறுதி. பல் தேய்த்து விட்டுப் படித்துக் கொண்டிருந்த if tomorrow comes என்ற நாவலை முடித்து விட்டேன்.
மார்க் ட்வைனின் Life in Missisippi, ஆர்தர் ஹீலியின் The Hotel, சிட்னி ஷெல்டனின் if tomorrow comes இந்த மூன்று கதைகளும் நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தை களமாகக் கொண்டிருக்கின்றன. கறுப்பு இனத்தவர்கள், அடிமை முறை, நிறப்பிரிவினை, பழமை, பாரம்பரியம் என்று பின்னணி தேவைப்படுபவர்களுக்கு இந்த நியூ ஆர்லியன்சு களம் தேவையாக இருக்கிறது போலிருக்கிறது.
எழுதும் போது முதல் அரை மணி நேரம் இணையப் பயன்பாடுகளைக் குறித்த கட்டுரை. அடுத்த அரை மணி நேரம் நாட்குறிப்பு. தரை தூத்து விட்டுக் குளியல். துவைக்க வேண்டிய துணிகள் குவிந்திருந்தன.
குளித்து விட்டு தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தியானம். தியானத்திலும் 20 நிமிடங்கள் வரை விட்டுக் கொடுக்கவில்லை. முந்தைய நாள் இருந்த பதற்றம் மற்றும் சோர்வுக்கு பல மடங்கு தெளிவு ஏற்பட்டிருந்தது.
தேவைகள் மிக சொற்பம்தான். வசதியாக வேலை செய்ய மேசை. நாற்காலி, கணினி, இணைய இணைப்பு, தொலைபேசி, ஒரு அலுவலக அறை. பசி எடுத்தால் சாப்பிட ஏற்பாடு. இரவில் அமைதியாக தூங்குவதற்கு ஒரு இடம். பணி தொடர்பாக பயணம் செய்யும் போது வசதியான வாகன ஏற்பாடு.
தியானம் முடித்து விட்டு உடை உடுத்தி ஸ்கூட்டியில் கிளம்பினால், தண்ணீர் பிடிக்க வெளியில் நின்றிருந்தார், கையசைத்தார். பதிலுக்கு கையசைத்து விட்டு வேகமாக நகர்ந்து விட்டேன்.
வண்டியில் புறப்பட்டு நேராக வேம்புலி அம்மன் கோவில் வழியாக அலுவலகம். வேம்புலி அம்மன் கோவில் அருகில் இடது பக்கம் திரும்பாமல், சாலையைக் கடந்து நேராகப் போய் பக்க வாட்டுச் சந்து வழியாக அலுவலகம். இடது புறம் ஆற்காடு சாலையில் திரும்பிப் போனால் வலது புறம் திரும்பக் கூடாது என்று பலகை வைத்த இடத்தில் U திருப்பம் செய்ய வேண்டியிருக்கிறது. அதைத் தவிர்க்க இந்த வழி.
அலுவலகத்துக்குப் போய் முதலில் மதிப்பு கணக்கீடு இயங்கி கொண்டிருப்பதை சரி பார்த்தேன். இயங்குகிறது. ஏதோ தவறாக வருவதாகச் சொன்னதை பயன்படுத்திப் பார்த்தேன். நான் பார்த்த வரை சரியாகத்தான் இருந்தது. எந்த இடத்தில் தவறு வருகிறது என்று விளக்கமாக எழுதி அனுப்பச் சொன்னேன்.
மூன்றாவதாக வலைப்பதிதல், இணையப் பயன்பாடுகள் பற்றிய குறிப்புகளை 4வது பகுதியை பதிந்து விட்டேன். மின்னஞ்சலுக்கு மறுமொழி. ஒன்பதேகாலுக்கு சாருக்குத் தொலைபேசினேன். இன்றைக்குச் சந்திக்க வேண்டிய இடத்தை காலையில் தொலைபேசி கேட்டுக் கொள்ளச் சொன்னார் என்று கேட்டால், 'தொழிற்சாலைக்கு வந்து விட வேண்டும். மதியம் 2 மணிக்கு வந்து விடு, அரை மணி நேரம் போதும்தானே' என்று சொல்லி விட்டு, 'கொஞ்சம் சீக்கிரமே வந்து விட்டு தயாரிப்புகளை செய்து வைத்திரு. எனக்கு இன்னும் மூன்று சந்திப்புகள் இருக்கின்றன. அவற்றுக்கு நடுவில் உங்களையும் பார்க்க வேண்டும்' என்றார்.
முன்பெல்லாம் இது போன்ற நாட்களில் நம்மை அருகிலேயே நெருங்க விட மாட்டார். மதியம் 4 மணிக்கு அவர்களது சந்திப்பாம்.
அவர்களுக்கான தயாரிப்புகளை செய்து, கோப்புகளை தனி அடைவில் சேமித்துக் கொண்டேன். எல்லாவற்றையும் காண்பித்து விட்டு அவரையும் கூட வரும்படி அழைத்தேன்.
விருகம்பாக்கம் பேருந்து நிறுத்தம் போக வேண்டும். பூந்தமல்லி போகும் 25G வந்தது. பேருந்தில் பேசிக் கொண்டே போனோம். கண்கள் அயர்ந்தன. கொஞ்ச நேரம் பொறுக்க வேண்டும். பூந்தமல்லியில் வெளியூர் பேருந்து நிறுத்தம் அருகிலேயே இறங்க முடிந்தது.
பேரம்பாக்கம் பேருந்து பிடிக்க வேண்டும். நெமிலி என்று ஒரு பேருந்து நின்றிருந்தது, அதில் விசாரிக்காமல் காத்திருந்தோம். கூரிய பார்வை பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்றின் பலகையைப் படித்து அதில் போக அழைத்து வந்தார். அது அரை மணி நேரத்துக்கு மேல் ஆகுமாம். கூண்டுக்குப் போய் விசாரித்ததில் நெமிலி பேருந்து போகும் என்று தெரிந்தது. அந்த நேரம் அருகில் வந்த ஓட்டுநர் நடத்துனரிடம் கேட்டு ஏறி உட்கார்ந்து கொண்டோம். விற்பதற்கு வந்த முறுக்க பொதி ஒன்று வாங்கி எனக்கு இரண்டு முறுக்குகள் கிடைத்தன. என்ன கலக்கு கலக்கப் போகிறதோ!
பேருந்து 12 மணிக்குப் பிறகுதான் கிளம்பியது. மெதுவாக ஓடி, 12.45க்கு அருகில் போய்ச் சேர்ந்தோம். சரியா 14 ரூபாய் சில்லறை கொடுத்ததில் நடத்துனருக்கு மிக மகிழ்ச்சி. 'நீங்க மட்டும்தான் சரியான சில்லறை கொடுத்தீங்க சார்' என்று உளம் மலர சொன்னார். தொழிற்சாலைக்குள் போய் பாதுகாப்பு அலுவலரிடம் பதிவு செய்து கொண்டு தொழிற்சாலை அலுவலகம்.
இணையம் இணைந்து கொள்ள முடிந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சந்திப்பு அறைக்கு நகர்ந்து விட்டோம். அறிக்கைகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போது வந்து விட்டார். மிகவும் கவனம் எடுத்து இருப்பதாகத் தோன்றியது. தொழில் தேவை இன்னொரு பக்கம் இருக்கலாம்.
சந்திப்பு வழக்கம் போல போனது. நமது பக்கம் நிறைய விட்டுக் கொடுக்காமல், அவரது தேவைகளையும் கேட்டுக் கொண்டே குறித்துக் கொண்டே வந்தேன். என்னென்ன சேவைகள் தேவைப்படலாம் என்று பட்டியலைக் கையில் கொடுக்கும் போது இப்படி அப்படி தடுமாறி கடைசியில் விலைப்பட்டியலும் சேர்ந்த பிரதியைக் கொடுத்து விட்டேன். அதைப் படித்து விட்டு தாம் தூமென்று குதித்தார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு எதுவுமே வேண்டாம் என்று உதறினார். பல முறை பார்த்ததுதான் என்றதால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தேன்.
காஃபி, குடிக்கத் தண்ணீர் கிடைத்தது. சாப்பிடாமல் தளர்ந்து போயிருந்தேன். கிளம்பி வெளியில் வந்து பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தை தவற விட்டோம். அது சொகுசுப் பேருந்து. அதன் பின்னால் வந்த ஊர்ப் பேருந்தில் ஏறினோம்.

சனி, ஏப்ரல் 17, 2010
கோபம்
நேரம் 6.33. 6 மணிக்கு எழுத ஆரம்பித்து இணையப் பயன்பாடுகள் செயல்படும் முறை பற்றி எழுதிக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் ஓடி விட்டது. இவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று நிர்ணயிக்கும் எழுத்து, தியானம் இரண்டையும் நேரம் முடியும் முன்பு முடித்து விடக் கூடாது என்று ஒரு எண்ணம். அதனால் இணையத்தைப் பற்றிய கட்டுரையை முடித்த பிறகு இப்போது நாட்குறிப்பு.
நேற்றைக்குக் காலையில் அப்படித்தான் தியானத்தில் உட்கார்ந்து 20 நிமிடங்களுக்கு முன்பு எழுந்து விடும் உந்துதலை தவிர்த்து 20 நிமிட மணி அடிப்பது வரை உட்கார்ந்திருந்தேன். அவ்வளவு தயாரிப்பு வேண்டியிருந்தது அந்த நாளுக்கு.
நேராக வளசை சுபாவுக்குப் போய் வண்டியை நிறுத்தி விட்டு இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டேன். GSLV ராக்கெட் கடலில் விழுந்தது என்று வழியில் தலைப்புச் செய்தி பார்த்திருந்தேன். ஐபிஎல் ஊழல் இன்னொரு பக்கம். பாகிஸ்தானின் அணுஆயுத அரசியல் இன்னொரு பக்கம்.
முழுக்கவனமும் நாளிதழ் படிப்பதில்தானே இருந்தது. சாப்பிட முடியாமல் சாப்பிட்டு வயிறும் நிறைந்திருந்தது.
இணையப் பயன்பாடுகள் பற்றிய இடுகைக்கு மூன்று பின்னூட்டங்கள் - கல்வெட்டு, இராமகி, வடுவூர் குமார். காலையில் எழுதி வைத்திருந்ததையும் பதிந்து விட்டு மூன்றாவதாக தமிழ் ஆங்கிலச் சொற்கள் பட்டியலையும் தயாரித்து வெளியிட்டு விட்டேன். சந்தோஷ் மட்டும் வந்து இதைஎல்லாம் தமிழில் மொழி பெயர்ப்பதால் என்ன பலன் என்று கேட்டிருந்தார், அதற்கான பதில் சொல்லியிருந்தேன்.
ஆதம்பாக்கத்திலிருந்து செல்வம் தொலைபேசினார். இன்னொரு வீடு பார்த்து வைத்திருக்கிறேன். வந்து பாருங்கள் என்றார். தொலைபேசி அவர் எடுக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவரே பேசினார். சரக்கு விபரங்கள் குறித்த விளக்கங்கள் சொன்னேன். VAT தவிர்த்து சரக்கு மதிப்புக் கணக்கிட வேண்டிய தேவையில் நிரல் பார்க்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஆதம்பாக்கம் போய் வரலாமா என்று சொல்லக் கிளம்பி விட்டோம்.
88 பேருந்து ஒன்று வந்தது. அதை விட்டு விட்டு விருகம்பாக்கம் பேருந்து நிறுத்தம் வரை நடந்து விட்டோம். செருப்பு தைக்கும் தொழிலாளரின் கூண்டுக்கு முன்பு அதன் நிழலில் நின்று கொண்டோம். 37Gல் நூறடி சாலை என்று பேருந்து நிலையத்தில் உட்காரவும் இடம் கிடைத்தது. மனம் உர்ரென்றிருந்தது.
வடபழனி நிறுத்தத்தில் தாம்பரம் போகும் பேருந்தில் இடம் பிடித்தோம். தொலைபேசியில் குளோவியூவில் அறிக்கை ஒன்றை எப்படி உருவாக்குவது என்று அவருக்குத் தெரிய வேண்டும். இப்படி தொலைபேசியில் கேட்பதற்கு சேவை ஒப்பந்தம் இருந்தால்தான் சரிப்படும் என்று சொல்லி வைத்து விட்டேன்.
கத்திப்பாரா பாலத்தில் கீழிறங்கும் போது கூட நின்று விட்டிருக்கவில்லை. கீழிறங்கி நடக்க ஆரம்பித்தேன். பேருந்து நிலையங்களுக்கு பின்னால் இருந்த மரம் சூழ்ந்த இடத்தைப் பற்றி கருத்து சொல்லும் போது குரல் நிதானத்துக்கு வந்திருந்தது. தொலைபேசி 'சனிக்கிழமை சந்திப்புக்கான இடம்தான் இன்னும் முடிவாகவில்லை. காலையில் ஒன்பதரை மணி வாக்கில் சாருக்குத் தொலைபேசி எந்த தொழிற்சாலையில் சந்திக்க வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளுமாறு சொன்னார்.
வழியில் பசிப்பதாக சொல்ல, ஒரு தேநீர் விடுதிக்குள் நுழைந்து விட்டோம். கேக் ஒன்று தேநீர் ஒன்று. இப்போது கோபம் பொங்கிக்கொண்டிருந்தது. தேவையில்லாமல் எதையும் பேசவோ செய்யவோ கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் இருந்தேன்.

வியாழன், ஏப்ரல் 15, 2010
ஞாயிற்றுக் கிழமை
கணினியை இயக்கினால், கம்பியில்லா வலையமைப்பில் இணைய கடவுச்சொல் கேட்டது. யாரோ தமது இணைப்பை இயக்கியிருக்கிறார்கள். வார இறுதியில் நடந்தவற்றை எழுதுவது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன்.
எழுதும் போது தொலைபேசி அழைப்பு. இன்றைக்கு வந்து சான்றிதழ்களை வாங்கிச் செல்வதாக சொல்லியிருந்தவர். பத்தரை மணிக்கு வரச் சொன்னேன். எழுதி முடித்து விட்டுக் குளியல். தியானம். தியானம் 10 நிமிடங்களில் முடிந்து விட்டது. பையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.
SRM திருப்பத்தில் திரும்பி வளசரவாக்கம் வரை போய் வலது புறம் திரும்பி ஆற்காடு சாலை. காலையில் இணையத்தில் இன்போசிஸ் ஆண்டுக் கணக்கு விபரம் வெளிவந்திருப்பதையும், சசி தாரூர் மாட்டிக் கொண்டு முழிப்பதையும் பார்த்திருந்ததால். இந்து நாளிதழுக்கு அடித்தது யோகம். 2.50 காசுக்கு எதிரில் போய் வாங்கிக் கொண்டேன்.
நல்ல கூட்டம், சாப்பிடுபவர்களின் தலைகள் கூடத்தை நிறைத்திருந்தன. ஒரு கரண்டி எடுத்து அதால் சாப்பிட்டுக் கொண்டேன். அலுவலகம் வரும் போது 10 மணி தாண்டி விட்டது.
இணையத்தில் இருக்கும் கணினியில் இயக்கி விட்ட நிரல் பாதியிலேயே நின்று போயிருந்தது. அதற்கு மாற்று ஏற்பாடாக, இன்னொரு கணினியில் மென்பொருளை நிறுவி இயக்க வேண்டும். அதற்கான தேடல்களை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பார்த்திருந்தவரின் தொலைபேசி. அவருக்கு அலுவலக அடையாளம் சொல்லி விட்டு, கோப்புகளுக்கான கணினியை இயக்கி விட்டேன். அவர் வந்ததும், அவரது கோப்புகளைத் திறந்து விபரங்களைத் திரட்டினேன். அனுபவச் சான்றிதழ், கணக்கு முடித்தல் என்று இரண்டு கடிதங்கள். 10-15 நிமிடங்களில் தயாரித்து, அச்செடுத்து அவரிடம் கொடுத்து விட்டேன்.
எதுவும் தேவையில்லாமல் பேசக் கூடாது என்று நினைத்திருந்தேன். புறப்படும் போது 'அப்பா அம்மா எல்லாம் விசாரித்தார்கள்' என்றார். போன ஆண்டு அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது அண்ணனைப் போய்ப் பார்க்கச் சொல்லியிருந்தேன். பார்த்திருக்கவில்லை இவர். எதனால் வருகிறது என்று தெரியாத, எப்படி குணப்படுத்துவது என்று தெரியாத நோய் என்று இணையத்தில் தகவல் பக்கங்கள் சொல்லின. இடம் மாற்றம் உதவுமா என்று பார்க்கச் சொன்னேன்.
அதன் பிறகு வந்த வேலையைத் தொடர்ந்தேன். இடையிடையே இணையத்தில் படிப்பதும், செய்திகளை மேய்வதுமாக நேரம் போனது. மதியமானதும் நல்ல பசி எடுத்தது. ஒன்றரை மணிக்குக் கிளம்பி அன்னபூர்ணா போனேன். சாப்பாட்டைக் கொடுத்து விட்டு அதன் பிறகு எட்டிக் கூடப் பார்க்கவில்லை அந்த சிடுசிடு சப்ளையர். தொந்தரவு இல்லாமல் சாப்பிட்டு முடித்து விட்டு அலுவலகம் வந்தால் பைக் நின்றிருந்தது.
அலுவலகத்துக்கு வந்து இணையத் தளத்தில் மாதிரி செயல்பாட்டுக்கான தயாரிப்புகளை செய்தேன். அதுவும் ஓரிரு மணி நேரத்தில் முடிந்தது. இணைய உரையாடலில் வந்து கேட்கும் மாற்றங்களைப் பற்றிச் சொன்னார். அது ஏற்கனவே நாம் தயாரித்து அனுப்பியதுதான் என்று ஆவணத்தை இணைப்பாக அனுப்பி வைத்தோம். காலணி மென்பொருளுக்கான மாதிரி செயல்பாட்டை மேலேற்றுவதற்கு தரவுத்தள மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அதை இன்றைக்குச் செய்யலாம்.
கூகுள் கியர்ஸ் மூலம் இணைய இணைப்பு இல்லாத போது தரவு உள்ளிடுவதற்கான தயாரிப்புகளையும் இன்றைக்குச் செய்ய வேண்டும். தேவையான செலவுக் கணக்கில் சேராத வரி வகை உருவாக்கத்தையும் முடித்து விட்டேன்.
இன்றைக்கு போய் ஆர்டர் உறுதி செய்து கொண்டு வர வேண்டும். அவர்கள் இன்னும் முறுக்கினால், பணத்தைக் குறைக்க முயற்சித்தால் தவிர்த்து விடலாம் என்று சொல்லி அனுப்ப வேண்டும். அடுத்த கட்ட வேலைகள் என்னவென்று எழுதி தயாரித்துக் கொண்டு போக வேண்டும்.
இன்றைக்குக் காலையில் எழுந்து உலாவப் போகும் போது சாரு நிவேதிதா குறித்து எண்ணங்கள். மலர்வனம் லட்சுமி அவரை இன்னொரு தோலுரித்து விட்டார். 'இங்கே இருக்கிற இந்தி மொழியைக் கூட ஒழுங்காக மொழி பெயர்க்கத் தெரியாத இவர் என்ன லத்தீன் அமெரிக்கப் படங்களையும் போர்ச்சுக்கீசிய படங்களையும் மொழிபெயர்க்கிறார்' என்று ஆதாரங்களுடன் ஒரு வாங்கு வாங்கி விட்டார்.
தமிழ்மணம் போட்டியில் வென்ற இடுகைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஜெயகாந்தன் என்று தேடினால் அவரது மகளை மணம் புரிந்த பதிவரின் இடுகை கிடைத்தது. மனதைத் தொட்ட இடுகை. கண்ணில் நீர் வந்து விட்டது.
வீரேந்தர் சேவாக் 2009ன் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக விஸ்டனில் தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஐந்து நாள் போட்டிகளில் அவரது அடித்தாடும் போக்கு கிரிக்கெட்டை இன்னொரு தளத்துக்கு நகர்த்தி விட்டதாக சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
ஏழரை மணிக்குப் புறப்பட்டு விட்டேன். பக்கத்தில் மணப்புரம் நிதிநிறுவனத்தில் மணி அடிக்க ஆரம்பித்து விடவே ஓசை தாங்க முடியாமல் ஓடி விட்டேன். வண்டியைக் கிளப்பி 8 மணிக்கெல்லாம் வீடு. இன்றைக்கு தியானம் செய்யாமல் தூங்கக்கூடாது என்று முடிவு. if tomorrow comes அரை மணி நேரம் படித்து விட்டு தியானம். அதன் பிறகு தூக்கம் என்று நினைத்திருந்தேன். கதையை 25 நிமிடங்கள் மட்டும் படித்தேன், தியானம் 10 நிமிடங்கள். தூக்கம் கண்களைச் சொக்கவே தூங்கி விட்டேன்.

உணவு,
நிறுவனம்,
வலைப்பதிவு
சனி, ஏப்ரல் 10, 2010
சில பதிவுகள்
இன்றைக்கு தேதி 10-04-10. நேரம் ஐந்து மணி நாற்பத்தி ஆறு நிமிடங்கள்.
நேற்றைய நாளின் சில பதிவுகள். நிறைய மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இதையும் நாம் கற்றுக் கொண்டு மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் பேசக் கூடாது, நன்கு யோசித்து பேச வேண்டும். வாடிக்கையாளர் பேசுவதை வெட்டக் கூடாது.
நேற்றைக்கு அவருக்கு மிகவும் நிறைவாக இருந்திருக்கும். நாம் தயாரித்துக் கொண்டு போயிருந்த வரைபடங்கள், அலசல்கள் அவருக்கு மிகவும் மதிப்புடையவனாவாக இருந்தன. அடுத்தக் கட்டத்துக்கு நகர உற்சாகமாக வரவேற்றார்.
இரண்டாவது காட்சி, பார்ப்பதற்கு அவர்கள் வீட்டிற்கு போனது. குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்தி விட்டு திரும்பும் போது ஒரு குட்டிப்ப எண் எதிர் முனையிலிருந்து நேராக என்னை நோக்கி வந்தது. நானும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதுவுமே பேசவில்லை. கையில் ஒரு தொப்பி. அவள் மனதில் என்ன என்ன நினைவுகளோ!.
'உனக்கு பேட்டிங் கிடைக்கவில்லையே' என்று கேட்டேன். 'இனிமேல்தான் பேட்டிங் செய்யப் போகிறாயா! உனக்கு பேட்டிங் பிடிக்குமா பவுலிங் பிடிக்குமா.' முதல் கேள்விகளுக்கு தலை அசைப்பும், முக பாவனைகளும் மட்டும்தான். கடைசியில் பேட்டிங் என்று சொன்னாள். கனத்த குரல்.
ஏதோ ஒன்றை என்னில் பார்த்திருக்கிறாள். அவளுக்குத் தெரிந்த யாரோ போல நான் தோற்றமளித்தேனோ என்னவோ!
மூன்றாவது நாள் முழுவதும் இருந்த சோர்வு. காலையில் எழுந்து தூத்து, துடைத்து, குளித்து தியானம் செய்வது வரை நன்றாகத்தான் இருந்தது. இடையில் வெளியில் உலாவி விட்டும் வந்தேன்.
முடிக்கும் போது 6.45. வெளியில் போய் கடையில் சோப்பு வாங்கிக் கொண்டு வர வேண்டும். ஊற வைத்த துணிகளை அலசிப் போட வேண்டும். அதற்குள் ஏழரை மணி ஆகி விடும். இடையில் துணிகளை தேய்க்க வேண்டும். அதன் பிறகு குளித்து தியானம் செய்து விட்டுப் புறப்பட வேண்டும்.
9 மணிக்கு அருகில்தான் அலுவலகம் போக முடியும்.
ஒரு நிறுவனத்தைக் கட்டிக் காப்பதில் இருக்கும் சிரமங்களை புரிந்து கொள்ளாமலேயே நாம் நிறுவன மேலாண்மையில் உதவப் போகிறோம். இப்போது அந்த சிரமங்கள் தெரிந்து விட்டிருக்கின்றன.
'நாளைக்கு பதிவர் சந்திப்பு இருக்கிறதே'.
பணம் வாங்குவதில் அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது. 'நம்ம பணத்தை நாமதான் வாங்க வேண்டும்'.
நேற்றைக் காலையில் எழுந்திருக்கும் போது நான்கு மணி அடித்திருக்கவில்லை. சரியாக தூங்கியிருக்கவில்லை என்று நினைக்கிறேன். செருப்பையும் நமது பொருட்களையும் தினமும் துடைத்துப் பயன்படுத்த வேண்டும். அதில்
பல் தேய்த்து விட்டு படுக்கையை சுருட்டி வைத்து விட்டு எழுத்து. எழுதி முடித்து விட்டு உலவாப் போனேன். உலாவல் நீண்டு கொண்டே போவதாக ஒரு உணர்வு. நடக்க நடக்க வந்து கொண்டே இருந்தது. எதிரில் நடக்கப் போவதாக யாரையும் பார்த்து விடவில்லை.
வீட்டுக்கு வந்து தரை தூத்து தொடர்ந்து துடைக்க ஆரம்பித்தேன். மடிக்கணினியில் வாணி ஜெயராம் பாடிய பாடல் தொகுப்பை ஒலிக்க விட்டிருந்தேன். மல்லிகை முல்லை பூப்பந்தல் என்ற பாடல், நான் பாடிக் கொண்டே இருப்பேன் என்ற பாடல், ஏழு சுவரங்களுக்குள் என்ற பாடல், எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது என்ற பாடல்.
தரை துடைத்து நிமிரும் போது உடல் களைத்துப் போயிருந்தது, குளித்து விட்டு தியானம். தியானத்தில் உட்கார்ந்ததும் வேர்வைக் குளியலாக கொட்டியது. ஊற்றிக் கொண்டே இருந்தது 15 நிமிடங்களுக்குப் பிறகும் ஓயவில்லை.
என்னென்ன பொறுப்புகள். வரி கட்டுவது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். கொஞ்சம் முறுக்கிக் கொண்டு இருந்து விட்டு அதன் பிறகு அவராக பேச்சை ஆரம்பித்தார்.
நமக்கு வரும் பணத்தில் 10% வரிக்காக ஒதுக்கி விட்டுத்தான் மற்ற கணக்குகளை போட வேண்டும். சேவை வரி கட்டி விட்டோம்.
எல்லா வேலைகளையும் முடித்து நிமிர்ந்த பிறகு ஒரு ஓய்வு விடுமுறை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 'வேலை செய்வதுதான் ஓய்வு. விடுமுறை என்று எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தால் சோர்வு அதிகமாகத்தான் செய்கிறது' பார்க்கலாம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)