"இந்த இடத்தில் படுத்துத் தூங்கி விட வேண்டாம். மொபைலே திருடிக் கொண்டு போய் விடுவார்கள், பர்ஸ், பை எல்லாம் மாயமாகி விடும்" என்று எச்சரித்தான் அந்தப் பையன்.
அவனை விட்டு விலகிச் சென்று டிக்கெட் வாங்கும் இடத்தில் படுத்திருந்தேன். அங்கு எதுவும் நடக்கவில்லை. எழுந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு, நிலையத்துக்குள் போய் பிளாட்பார்மில் உட்கார்ந்தேன். அங்கு தண்ணீர் ஊற்றி கழுவுவதற்கான தொழிலாளர்கள் வேலை ஆரம்பிக்கத் தொடங்க, அதிலிருந்து ஒதுங்கி உட்கார்ந்தேன். அவர்கள் நகரத் தொடங்கியதும் படுத்து விட்டேன். கண் அயர்ந்து விட்டு எழுந்து பார்த்தால், பையில் மொபைல் இல்லை. போய் விட்டது என்று தெரிந்து விட்டது, அடி வயிற்றுக்குள் கத்தி எதுவும் இறங்கவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்தில் இருந்தவரை தொலைபேச சொன்னால், போகவில்லை. சிறிது நேரம் கழித்து இன்னொருவரை கேட்டேன். அவர் நிறையவே அனுதாபப் பட்டார். அங்கும் இங்கும் நடந்தேன். டிக்கெட் கவுண்டர் அருகே போய் பார்த்தேன். ரயில்வே போலீசை அணுக வேண்டுமா வேண்டாமா என்று யோசனை. திரும்பவும் இங்கு வந்து அதே நபரிடம் போன் கேட்டு நண்பரை அழைத்தேன். முதல் அழைப்பில் எடுக்காமல் அவரே பின்னர் அழைத்தார். அவரிடம் விபரம் சொன்னேன். "போலீஸ் புகாரில் பலன் இல்லை. பி.எஸ்.என்.எல்-க்கு தொலைபேசி முடக்கக் கோரலாம். அதற்கு பி.எஸ்.என்.எல் எண்ணில் இருந்து அழைக்க வேண்டும்" என்றார். "அது என்னிடம் இல்லை, உங்களால் முடிந்ததை செய்யுங்கள்" என்று முடித்துக் கொண்டேன்.
அதன் பிறகு பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை எழுப்பி விபரம் சொன்னேன். அவர் லாத்தூர் போவதற்காக காத்திருக்கிறார். அவரது ரயில் நள்ளிரவுக்குப் பிறகு வரும். அவரும் மகனும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு முழுவதுமாக உதறி விட்டு சென்னை விரைவு வண்டி 4-வது நடை மேடைக்கு வருவதை அறிந்து அங்கு போய்ச் சேர்ந்தேன். மொபைல் போயிந்தே!
மொபைல் தொலைந்ததன் விளைவுகள்

- முதலில், ரூ 5,500 மதிப்பிலான கருவி போய் விட்டது. அதன் மூலம்தான் லேப்டாப்பை இணையத்தில் இணைத்து வந்தேன். அது இனிமேல் சாத்தியமில்லை. இதனால் ஏற்படும் இழப்பு பண ரீதியிலானது. [உடனடியாக ஒரு பழைய போனில் போட்டு எல்லா வேலைகளையும் தொடர முடிந்தது]
- இரண்டாவதாக, மாற்று சிம் எழுதிக் கொடுத்து வாங்க வேண்டும். அடையாள ஆதாரம், முகவரி ஆதாரம் கொடுத்து, கடிதம் எழுதிக் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இதனால் ஏற்படுவது நேர இழப்பும், சிறிதளவு பண இழப்பும். [சென்னை திரும்பிய அடுத்த நாளே சிம் மாற்ற முடிந்தது]
- மூன்றாவதாக, பயணத்தின் போது பதிவான விபரங்கள் அனைத்தும் போய் விட்டன. யார் யாரை எப்போது அழைத்தேன், யாருடன் எப்போது பேசினேன், சுவிக்ஞன் எண், பிரதீக் எண், பயண ரயில் விபரங்கள் தேடிய வரலாறு, இடம் பெயரும் தொழிலாளர்கள் பற்றி எழுதிய குறிப்பு எல்லாம் போய் விட்டன. அவை எல்லாம் போனில் மட்டுமே கிடைக்கக் கூடியவை அவற்றை மீட்கவே முடியாது. [தொடர்பு எண்கள் எல்லாம் கூகிள் பேக்-அப்-ல் இருந்தன, புதிய போனுக்கு வந்து விட்டன]
- நான்காவதாக, போனில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகள், SD கார்டு கோப்புகள், தகவல்கள், தொடர்பு விபரங்கள் போன்றவை. கோப்புகள், தகவல்கள் எல்லாமே கணினியில் இருப்பவை அல்லது பிறரிடமிருந்து கேட்டுப் பெறக் கூடியவை.
- ஐந்தாவதாக, இதுதான் மிக சீரியஸ் ஆனது. வெறும் போனை மட்டும் எடுக்காமல் அதை அறுவடை செய்ய முயற்சித்தால் பேஸ்புக் கணக்கில் தொடர்புகள், மின்னஞ்சல் கணக்குகள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவற்றுக்கு எதிராக உடனடி தடுக்கும் வழி எடுக்க வேண்டும். [புதிய இணைப்பு கிடைத்ததும், எல்லா கணக்குகளிலையும் அந்த போன் கருவியில் இருந்து லாக் அவுட் செய்து விட்டேன்