மார்க் ட்வெயினின் லைஃப் ஆன் மிசிசிப்பி என்ற நூலில் நீராவிப் படகை ஓட்டும் கலை பற்றி எழுதியிருப்பார். அவரும் சில ஆண்டுகள் அந்தப் பணியைச் செய்து அதைக் கற்றுக் கொள்வதைப் பற்றி விவரித்திருப்பார்.
முதலில் பயிற்சிக் காலம். ஒரு தேர்ந்த ஓட்டுனரின் கீழ் அவரது விருப்பு வெறுப்புகளுக்கு இணங்கி வித்தை கற்க வேண்டியிருக்கும். பார்த்தால் ஏதோ சுக்கானைப் பிடித்துக் கொண்டு நிற்பது போலத் தோன்றும் அந்தப் பணியின் நெளிவு சுளிவுகள் ஏராளம். ஒரு வித்தையைக் கற்று விட்டோம் என்று பெருமைப்பட ஆரம்பித்தால் இன்னொரு நுணுக்கம் தெரியுமா என்று ஆரம்பித்து அவரது இடத்தைக் காட்டி விடுவார் ஓட்டுநர்.
ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகுதான் ஆற்றின் போக்குகள், வழியில் இருக்கும் வளைவுகள், தண்ணீருக்குக் கீழே என்ன இருக்கிறது என்று உணர்தல் என்று பல நூறு சின்னச் சின்ன அறிவுத் துணுக்குகளைத் திரட்டிய பிறகுதான் சுயமான ஓட்டுநர் ஆக முடியும். அப்படி ஆன பிறகும் கல்வி முடிந்து விடுவதில்லை.
எதிர்த் திசையில் வந்து கொண்டிருக்கும் படகுகளின் ஓட்டுநர்களின் மூலம் அந்த நாள் என்ன நிலைமை நிலவுகிறது என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையும் அது மாதிரியே போகிறது. கொஞ்சம் அசந்து இருந்தால் படகு நிலை தடுமாறி சரியான, தோதுவான பாதையை விட்டு முன்னேற முடியாத கரைப்பகுதிக்குப் போய் விடுகிறது. இன்னும் கவனக் குறைவாக இருந்தால் எதன் மீதாவது மோதி படகே சேதமடைந்து விடலாம்.
தடுமாறிக் கொண்டிருந்த பழக்கங்கள் ஓரளவு நிலைக்கு வந்து விட்டன. ஆறு ஐந்து ஆகி விட்டது என்று சாப்பாட்டை மறுத்து விட்டேன். மதியச் சாப்பாட்டில் அப்பளத்துக்குத் தடா. காபி, தேநீர் வந்ததைத் தவிர்த்தாகி விட்டது.
இது எல்லாவற்றுக்கும் ஈடு கட்டுவது போலத் திரும்பி வரும் போது பேருந்தில் உட்கார இருக்கை கிடைக்கவில்லை. நிற்க, காலூன்ற கூட சரியாக வசதி இல்லாத அளவுக்குக் கூட்டம். ஏதோ பேருந்துகள் குறைந்த, கூட்டம் அதிகமான நாள், இன்னும் இரண்டு மணி நேரம் நிறுத்தத்தில் நிற்பதற்குப் பதிலாக பேருந்தில் நின்று கொண்டு போய் விடலாம் என்று ஏறிக் கொண்டேன்.
வண்டி வேகமாகப் போனது. ஆனால், சின்னத்திரையில், ஆறு என்று பெயரில் சூர்யா நடிக்கும் ஒரு திரைப்படம். தலைவலி, மண்டைக் குழப்பம் என்று திரைப்படம் என்ற கலையை ஊடகத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்பட அவலம். ஐந்து பாட்டுகள், மூன்று சண்டைகள், பொருத்தமே இல்லாத நகைச்சுவைக் காட்சிகள், கூடவே வன்முறை, கைகால் வாங்குதல் என்று போய்க் கடைசியில் நாயகன் மட்டும் நல்ல வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறார். நெஞ்சம் எனும் ஊரினிலே என்று ஒரு பாடல் மட்டும் வந்து போனது.
சுங்குவார்ச் சத்திரம் வந்ததும் நின்றிருந்த கூட்டம் தளர்ந்து விடத் தரையில் உட்கார முடிந்தது. பூவிருந்தவல்லி வரை அந்த வசதி. அங்கு எழுந்திருந்து இருக்கை கிடைக்கும் என்று பார்த்தால் இன்னும் கூட்டம் ஏறியது. போரூரில் இறங்கி மாநகரப் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்ததும் கால்களில் நன்றி காது வரை கேட்டது. அந்தப் பேருந்தில் ஏதோ பரபரப்பாக நடந்திருக்கிறது. எல்லோரும் இரண்டு மூன்று பேராகப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன விபரம் என்று கேட்கும் அளவுக்கு ஆர்வம் பீரிடவில்லை. ஏதோ ஆண், பெண் விவகாரம்.
ஒரு மணி நேரம் வலைப்பதிவுகளுக்கிடையே செலவிட்டு விட்டுத் தூங்கப் போகும் போது 11 மணி. முந்தைய ஒரு மணி நேரத்துத் தாக்கம் வடிந்து காலை முதல் நடந்த நிகழ்வுகள் அலசிப் போய், கனவு நிலைக்குப் போவது வரை உட்கார்ந்திருந்து விட்டு அப்புறம் நல்ல தூக்கம். மூன்று மணிக்கு ஒரு விழிப்பு, ஐந்து மணிக்குக் கைப்பிடித்து எழுப்பி விட்டு விட்டது.
இந்த நாள் நல்ல நாள்.
செவ்வாய், ஜனவரி 30, 2007
திங்கள், ஜனவரி 29, 2007
ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை
நினைவு தெரிந்த நாளிலிருந்தே பெண் என்று யாரையும் சிறப்பிக்க வேண்டும் என்றோ ஒதுக்க வேண்டும் என்றோ தோன்றியதே இல்லை. அதுதான் பிற்காலத்தில் பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது.
நாகர்கோவில் 'ஆணும் பெண்ணும் பேசினாலே போச்சு' என்று சிற்றூர் சூழலில் வளர்ந்த தாக்கம் கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆனால் பக்கத்து வீட்டு அக்காக்களுடன் விளையாடியது உண்டு. வீட்டிலும் எல்லோரும் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும், எல்லோரும் பள்ளிக்குப் போக வேண்டும், எல்லோரும் படிக்க வேண்டும் என்று பழகியதால், பெண் என்பவள் நம்மை விட மாறுபட்டு சிந்திக்கலாம் என்று உணர்வே இல்லாமல் போனது.
முதலில் பெண்ணுக்கான பேதம் பார்த்தது, அக்கா பட்டப் படிப்பு முடித்து உதவித் தொகையுடன் மேற்படிப்புக் கிடைக்க வாய்ப்பு கிடைத்தும் வேலைக்குப் போகட்டும் என்று அப்பா, அம்மா முடிவு செய்ததுதான். 'இன்னும் மேலே படிச்சா அதுக்கேத்த மாப்பிள்ள பார்க்கணுமே' என்று சொன்னார்கள். கொஞ்சம் ஊன்றிப் பார்த்தால் அண்ணனும் பட்ட மேற்படிப்பு படிக்கப் போக முடியவில்லை. 'இதுவரை படிக்க வைச்சோம், இனிமேல் நீங்க கொஞ்சம் உதவி செய்யணும்' என்று நின்று விட்டது. இன்னும் மூன்று பேரை படிக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
நான்கு ஆண்களுக்குப் பிறகு நான் படிப்பை முடித்த பிறகு மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் செய் என்று சொல்லக் கூடிய வசதி இருந்தது. நான் அதை ஒதுக்கி விட்டு வேலைக்குப் போய் விட்டேன். என் தங்கை பட்டம் முடித்து உயர் பட்டயமும் படித்து முடித்தாள்.
வேலைக்குப் போனதும் டாடா நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் சக ஊழியர்களை அவர்களின் திறமைக்கு ஏற்ற மதிப்புக் கொடுத்தே அணுகினேன். ஆண்களை அணுகும் அதே முறைதான். கொஞ்சம் மந்தமாக இருந்த இரண்டு ஆண்டு மூத்தவருக்குக் கொடுத்த மரியாதையை விட இரண்டு ஆண்டு இளையவராக வந்து சேர்ந்த புத்திசாலி தோல் தொழில் நுட்ப பட்டதாரிக்கு அதிக மரியாதை கொடுக்க முடிந்தது. வேலையைப் பொறுத்த வரை பெண் என்பதற்காக சிறப்புச் சலுகைகளோ, பெண் என்பதாலேயே அலட்சியப்படுத்தலோ தோன்றவில்லை.
அது முற்றிலும் சரி கிடையாது. பெண்ணின் எண்ண ஓட்டங்கள், சிந்தனைப் போக்குகள் நம்மை விட மாறுபட்டு இருக்கலாம் என்று உணர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கலாம். திருமண வாழ்க்கையிலும் இந்த வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ள முரட்டுத்தனமாக மறுத்து வந்தேன். 'நான் என்னென்ன செய்ய முடியுமோ அதை என் துணைவியும் செய்யலாம், செய்ய வேண்டும்' என்று என்னைக் கொழுகொம்பாக கொண்டு கொடியாக வளைந்த அவரின் முயற்சிகளைத் தவிர்த்து வந்தேன். விளைவு, தன் காலில் நிற்க வேண்டிய கட்டாயமும், திறமையும் (ஏற்கனவே இருந்ததை) திடப்படுத்திக் கொண்டார்.
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் சார்ந்திருக்காமல், ஒவ்வொருவரும் முழு தனிமனிதர்களாக நிலை பெற்று அதன் அடிப்படையில் கூட்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது, இருக்கின்றது.
பிரச்சனை வந்தது, மறுபக்கத்தில். 'ஒரு பெண் செய்ய முடிகிற எல்லா வேலைகளையும் நானும் செய்யலாம், செய்ய வேண்டும்' என்று நான் இயல்பாகவே நம்பி வந்தேன். பெண்ணீயத்தால் ஆண் வேலைகளை பெண் செய்வது ஏற்றுக் கொண்டிருக்கும் சூழலில், மறு திசைக்கு ஆதரவாக ஆணீயக் கொள்கைகள் இல்லாமல் ஒரே குளறுபடியாகி மிருக இயல்புகள் மேலோங்கி எல்லாம் சிதைந்து போனது.

ஞாயிறு, ஜனவரி 28, 2007
வீடு
பயணம் கிளம்பியதோடு எல்லாம் தலைகீழாய்ப் போனது. பயணம் செய்யும் போது அது வேண்டாம், இது வேண்டாம் என்று இருந்தால் சுகக்கேடுதான் வந்து சேரும் என்று எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொண்டேன். வெண்ணெயை கெட்டியாகத் தடவி உருண்டை ரொட்டி, திரும்பி வரும் போது கோழி இறைச்சி கூடச் சாப்பிட்டுக் கொண்டேன்.
அதன் முன்னரே ஆரம்பித்திருந்த காபி குடித்தல் விரிந்து மாலை உணவுக்குப் பிறகு பால் குடிக்கும் அளவுக்கு விரிந்திருந்தது. சாப்பிட்டதும் சூடாக ஏதாவது குடிக்காவிட்டால் செரிப்பதற்கு சிரமம் இருப்பதாகப் பட்டதால் இது ஒட்டிக் கொண்டது.
பொரித்ததில் பப்படமும், பூரியும் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தன. நண்பர் பெயரைச் சொல்லி மதிய உணவுக்கு முட்டை ஆம்லெட். அப்படியே கடலை முட்டாய் அவ்வப்போது வாங்கிக் கொள்வது. ஏழு மணிக்கு மேலும் எந்த கட்டாயமும் இல்லாத போதும், ஒரு திருமண வரவேற்புக்குப் போய் பூரி சாப்பிட்டது உச்சக் கட்டம். கூடவே தயிர்சாதம்.
தூக்கமும் அளவு மீறிப் போய் முகம் வீங்கிப் போகிறது. எழுதுவதில் ஒழுங்கும் விட்டுப் போனது.
விளைவுகள் தெரிந்தன. சனிக்கிழமை ஒரு சந்திப்பை முற்றிலும் மறந்து விட்டுக் கதைத்துக் கொண்டிருந்தேன். சந்திக்க வேண்டியவர் தொலைபேசிக் கேட்ட பிறகுதான் நினைவே வந்தது. மனப்பயிற்சியும் அமைதியான தூக்கமும் இல்லா விட்டால் இருக்கின்ற அழுத்தத்தைச் சமாளிக்கவே முடியாது. இதமான சூழலே தூரமாகி விட்ட நிலையில் கிரிக்கெட்டில் சொல்வது போலத் தலையைக் குனிந்து, ஒவ்வொரு பந்தாக எதிர் நோக்கும் ஒழுக்கம்தான் கைகொடுக்கும்.
காலையில் எழுந்திருக்கும் போது சோம்பேறியாகப் புரண்டு கொண்டிருந்து விட்டு இது எல்லாம் மனதில் ஓடியது. இன்றைக்கு சாப்பிடாமல், கணினி திறக்காமல் கழித்து ஒரு இடை ஒழுங்கு செய்து கொள்வது என்று தீர்மானம். தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
இரவு படுக்கும் முன், ஞாயிறன்றே ராணிப்பேட்டை போவது என்று முடிவு செய்திருந்தேன். காலையில்தான், நண்பர் ஒருவரைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததும், புது வீட்டை எடுத்துக் கொள்ளும் வேலையும் நினைவுக்கு வந்தன. சாப்பாடும் இணையமும் ஒதுக்கப்பட்ட நிலையில் பல வேலைகளுக்கு நேரம் உருவாகியிருந்தது. துணிகளை எல்லாம் மடித்து வைத்து, அந்த அறையை ஒதுக்கி விட்டு, அடுத்த ஓரிரு மணி நேரத்துக்கு ஒவ்வொரு இன்னும் இரண்டு அறைகளையும் ஒழுங்கு படுத்தினேன்.
உணவு போதையாகி விட்டிருக்கிறது. இணையமும் போதை. படிப்பது மூச்சு விடுவது போல. அது இல்லாமல் நடக்காது என்று நாளிதழ்களுக்கும், புத்தகங்களுக்கும் வழி விட்டிருந்தேன். அலெக்ஸ் ஹீலியின் ஒரு குறுகதையைப் படித்தேன். அடிமை முறை ஒழிக்கப்படுவதற்கு முந்தைய அமெரிக்கச் சூழலில் ஒரு சாதாரண கதை. அப்படியே ஸ்டால்மேனின் குவாண்டம் மின் இயங்கியல் குறித்த சொற்பொழிவுத் தொகுப்புகள். அவரது இயற்பியல் பாடப் புத்தகங்கள் போலவே சிக்கலான பொருளை எளிதாக்கிச் சொல்லி விடுகிறார். ஒரு அளவுக்கு மேல் தொடர முடியாமல் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டேன்.
துணைக்கு பண்பலை வானொலி. சென்னையில் இப்போது எட்டு அலை வரிசைகளாம். அகில இந்திய வானொலியின் வானவில், கோல்ட், சூரியன், மிர்ச்சி, ஆஹா என்று ஒன்று, ஹலோ என்று ஒன்று (தினத்தந்தி குழுமம்?), பிக் என்று ஒன்று, ஒன் என்று ஒன்று திருப்ப திருப்ப ஒவ்வொன்றாக வந்து கொண்டே இருந்தது. எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். 2002ல் சென்னை வந்த புதிதில் அகில இந்திய வானொலியின் பண்பலைச் சேவைகள்தான் உற்ற துணையாக இருந்தன. தொலைக்காட்சி வாங்கக் கூடாது என்ற உறுதியில் வானொலியின் துணையிலேயே நாள் கடத்தியிருந்தேன்.
காலையில் தொலைபேசினால் கட்டிடம் கட்டுபவர் பன்னிரண்டு மணி வாக்கில் பேசச் சொன்னார். அப்போது பேசினால், இப்பதான் பூட்டிக்கிட்டுக் கிளம்பினேன் என்று இழுத்தார்.
இன்றைக்கு விட்டால் இன்னும் ஒரு வாரம் இழுத்து விடும் என்று விடாப்பிடியாக போய்க் கதவைத் திறக்க வைத்துக் கணக்கு வழக்குகளைப் பார்த்து சாவியை வாங்கிக் கொண்டேன். அவரும் கூடவே வந்து எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டுப் போனார்.
வீடு, வீடு, வீடு. அப்பாடா. நமக்கு என்று ஒரு இடம் விட்டு இருக்கும் போதுதான் அதன் அருமை புரிகிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த சுகம்.

புதன், ஜனவரி 24, 2007
அடங்கு மனமே அடங்கு
'கையில் இருக்கும் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தா போதும், வேண்டியது நடக்கும். உலகைப் புரட்டி போடும் திட்டங்களோ, தெருவில் இறங்கி கலாட்டா பண்ணவோ தேவை இல்லை' என்றுதான் காலையிலேயே குரளி சொல்லியிருந்தது. சொன்னதைக் கேட்டு நடந்திருந்தால் எவ்வளவோ தொந்தரவுகளை தவிரத்திருக்கலாமே!
முற்பகல் வேலைகளை முடித்து விட்டு, அமெரிக்கன் நூலகத்துக்குப் போய் வர முடிவு செய்து கிளம்பி விட்டேன். கிண்டி போய், சர்தார் பட்டேல் சாலை வழியாக வந்து கோட்டூர் புரம் தாண்டி, ஆழ்வார்பேட்டை வழியாக கதீட்ரல் சாலைக்கு வந்து எதிர்த்திசையிலிருந்து அணுகினேன். வழக்கமாக நூலகத்துக்கு அருகில் இருக்கும் தேவாலயத்துக்கு முன்பு வண்டியை விட வேண்டும். சாலையைக் கடந்து போக முடியாததால், பொன்ஸ் எழுதியிருந்ததை முன்பே படித்திருந்த நினைவு படி வுட்லண்ட்சுக்குள் வண்டியை விட்டு விட்டு வந்தேன்.
சாலையைக் கடக்கும் முன்பு நான்கைந்து தொலைபேசி உரையாடல்கள். மனிதர்கள் மனதுக்குள் எவ்வளவு வைத்துக் கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்! ஏதோ கதையில் வருவது போல மனதில் குமுறும் உணர்ச்சிகள் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தால் உலகம் மிக சந்தடி நிரம்பிப் போய் விடும் போலிருக்கிறது.
எவ்வளவுதான் அமெரிக்க ஆதரவில், அவர்கள் செலவில் இயங்கும் நூலகத்தின் பலன்களை பெற்றுக் கொண்டாலும், அரசியலில் அமெரிக்கர்களுக்கும், விளையாட்டில் ஆஸ்திரேலியர்களுக்கும் கொஞ்சம், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்று யாராவது புரிய வைத்தால் நன்றாகத்தான் இருக்கும். வர வர கெடுபிடி அதிகமாகத்தான் இருக்கிறது.
பேர் கேட்ட மோக்கிங் பேர்ட் (நன்றி பெனாத்தல் சுரேஷ்) ஸ்கார்லெட் லெட்டர், அலெக்ஸ் ஹீலியின் ஒரு குறுநாவல், ரிச்சர்ட் ஃபெய்ன்மேனின் QED என்ற புத்தகம் என்று பொறுக்கிக் கொண்டு வண்டி எடுக்கும் முன்பு ஒரு சிற்றுண்டி.
திரும்பும் போது வண்டி முரண்டு பிடித்தது. இது ஏதோ மின்னணு இயக்கம் என்று ஜென் அன்டு ஆர்ட் ஆஃப் தயக்கம் என்றுமே உண்டு. கிட்டத்தட்ட தேனாம்பேட்டையிலிருந்து, சைதாப்பேட்டை பாலம் தாண்டி சின்னமலை வரை அப்படியே சமாளித்து ஓட்டிக் கொண்டு வந்து சின்னமலையில் ஒரு வண்டி கடையில் நிறுத்தினேன்.
பெட்ரோல் அடைக்கிறதாம். இருக்கையைத் தூக்கி, உள்ளே இருந்த பெட்டியையும் எடுத்து விட்டு, எண்ணெய் பாயும் குழாயைப் பிடுங்கி விட்டு, இயக்கியதும் சரியாகி விட்டது. தனது வித்தகத்துக்கு பத்து ரூபாய் வாங்கிக் கொண்டார். அலுவலகம் வந்து வீம்புக்கு இன்னொரு முறை மதிய உணவு.
ஒரு சில நிமிடங்களுக்கு மின்சாரத்தடை ஏற்பட வழக்கமான விவாதக் களம் ஆரம்பித்தது. 'எதுக்கு இவ்வளவு குப்பை கொட்டுகிறோம்' என்று பேச ஆரம்பித்து ஒரு குட்டிப் போட்டியில் வந்து முடிந்தது. முந்திய நாள் வாங்கி வைத்திருந்த கிரிக்கெட் நாட்குறிப்பைப் பரிசாக வைத்து ஒரு வினாடி வினா நடத்தினார்கள். இந்தப் போட்டிக்குக் கடைசி நாள் ஜனவரி 31, பரிசு பெங்களூருக்கு உயர் தரத்தில் பயணம், தங்கிக் கொள்ளுதல், அங்கே கற்றுக் கொள்ளுதல்.
இருட்டி நேரம் எல்லாம் தாண்டி தூக்கம் கூட வந்தது. குரளி சொன்னதாலோ என்னவோ வெளியே இறங்கி பேருந்து பிடித்து ஆழ்வார்திருநகர் வந்து ஆச்சீஸுக்கு வேலை கொடுத்து விட்டு, திரும்பினேன். பேருந்திலிருந்து இறங்கி நடக்கும் போது பல மாதங்களாக உறுத்திக் கொண்டிருந்த, சாலையில் கைகழுவ வசதி செய்திருக்கும் தேநீர்க்கடை முன் பொத்துக் கொண்டது.
பார்த்தவுடன், வழக்கம் போல் தாண்டி போக முயன்றால், செருப்பையும் மீறி அடிப்பாதத்தில் நீர் ஊறும் உணர்வு. அருவெறுப்பில் கடுப்பில் ஒரு முடிவு செய்து கொண்டு கடை அருகில் போனேன். அடுத்த பதினைந்து இருபது நிமிடங்கள் கட்டில்லாமல் ஓடின. முதலில் கல்லாவில் இருந்த மலையாள முதலாளி. முகத்தைக் கூடப் பார்க்காமல் மழுப்பி அனுப்ப முயற்சி செய்து கொண்டே இருந்தார்.
'எதிரிலேயே காவல் நிலையம், கொஞ்சம் தள்ளி பஞ்சாயத்து அலுவலகம், எப்படி இவ்வளவு காலமாக இந்த அநியாயத்த செய்றீங்க, எல்லாத்துக்கும் காசு கொடுத்தீட்டீங்களா'
'தொழில் நடத்த வேண்டியதுதான், சம்பாதிக்க வேண்டியதுதான், கொஞ்சமாவது மனசாட்சியோடு, பொது இடத்தை அசிங்கப்படுத்துவதைத் தவிர்க்கலாம் இல்லையா'
'சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதுக்கு கோவில் போய் கொள்ளை அடிப்பது என்று பொருள் இல்லை. பொதுச் சொத்து எல்லாமே சிவனுடையதுதான், நாம சம்பாதிக்கிற காசு நல்ல வழியில் பயன்பட வேண்டாமா'
'உங்களுக்கு வசதி இல்லைன்னா சொல்லுங்க. கடை முன்னேலேயே ஒரு உண்டியல் வைத்து நிதி திரட்டி தருகிறோம். இது போல கை கழுவ, கழுவிய தண்ணீரை ஒழுங்காக வெளியே அனுப்ப வசதி இல்லை என்று எழுதி வைத்தால் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று ஓரிரு மாதத்தில் சேர்ந்து விடும்'
அவருக்குத் தாங்க முடியவில்லை. 'அதோ வராங்களே அம்மா, அவங்கதான் கட்டிட சொந்தக்காரர், அவர்ட்ட கேளுங்க' என்று கைகாட்டி விட்டார்.
இது மாதிரி செயல்களில் பெண்களிடம்தான் கண்மண் தெரியாத தீவிரம் இருக்கும், சொர்ணாக்கா மாதிரி. 'இப்ப, என்னா செய்யணும்கறே! ஏதோ கை கழுவ பக்கெட் வைக்கிறாங்க, கொஞ்சம் சிதறி வெளியே விழுது. என்ன பண்ண முடியும். எதுவும் ஆகாது போ. உள்ளே இடமும் இல்ல, வசதியும் இல்ல'
ஆரம்பத்தில் பொறுமையாகத்தான் பேச்சு தொடர்ந்தது. உறைக்கவே இல்லை என்று உணர்ந்ததும், உள்ளே இருந்த கோபம் விழித்துக் கொண்டது. குரலை உயர்த்தி சத்தமாகப் பேச ஆரம்பித்தேன்.
'கடையில் பாதி நடைபாதையில். அதற்கும் வெளியே சாலையிலேயே அழுக்குத் தண்ணீ. ஏற்கனவே அகலம் பத்தலை என்று நெரிசல். இதில் இந்த இடத்தில் ஓரமா நடக்கவே இடம் இல்லை. எல்லாரும் சாலையிலத்தான் போக வேண்டியிருக்கு. கேட்டா இப்படிப் பேசினா எப்படி' என்று எகிற ஆரம்பித்ததும்
'எங்கிட்ட ஏன் பேசற, வீட்டுக் காரர் வெளியே போயிருக்கிறார். பொம்பளைகிட்ட ஒனக்கு என்ன பேச்சு' என்று பின்வாங்கிக் கொண்டு மேலே அவர்கள் வீட்டுக்குப் போய் விட்டார் அந்த அம்மா. அருகில் வாயே திறக்காமல் நின்றிருந்த கடைக்காரர், 'நீங்க நாளைக்கு வாங்க, பேசலாம்' என்று அனுப்பி வைத்தார். அதற்குள் ஒரு சிறு கூட்டமே கூடி காட்சியாகி விட்டிருந்தது.
கோபத்தில் வசம் இழந்த வெட்கமும், கணபதி ஸ்வீட்ஸில் சொல்லிச் சொல்லி கடைசியில் கிடைத்து விட்ட தீர்வும் கலவையாகக் கலவரப் படுத்தின.
ஒரு ஆண்டு ஆகியிருந்த ஒருவரை பிடித்து நச்சரித்து அவருக்கான வேலைகளைக் கொடுத்திருந்தேன். அவருக்கும் அவ்வளவு திருப்தியில்லை என்று போல் தோன்றியது.
எப்படியே குரளி சொன்னதைக் கேட்காமல் விலைக்கு வாங்கி வந்தாச்சு. இனிமேல் தொடர்ந்துதான் ஆக வேண்டும், கொஞ்சம் கவனமாக.

லேபிள்கள்:
சமூகம்,
பொது சுகாதாரம்
திங்கள், ஜனவரி 22, 2007
இனிய உளவாக....
"எவ்வளவு அழகா வண்டி ஓட்டறீங்க! சில டிரைவர்கள் அடாவடியா, விடாமல் ஹார்ன் அடிச்சு ஓட்டுவது போல இல்லாமல் நிதானமா பொறுமையா ஓட்டுவது நல்லா இருக்கு"
அவரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.
வடபழனியில் ஏறிய பேருந்தில் பின் வாசலின் அருகில் உட்கார்ந்திருந்த நடத்துனரிடம் சீட்டு வாங்கிக் கொண்டு, அவரது வழக்கமான 'முன்னால போங்க'வுக்குப் பணிந்து முன்னால் போக முயன்றால் வழியில்லை. பேருந்தில் நடுவில் கொத்தாகக் கூட்டம், முன்னே ஓட்டுனரின் அருகில் யாரும் நிற்கவில்லை. ஓரிரு முறை முயற்சித்து விட்டுப் பின்னாலேயே நின்று கொள்ள முயன்றேன். நடத்துனரின் முறைப்பு தெரிந்தது போல் ஒரு உணர்வு.
விடாப் பிடியாக ஆட்களை ஒதுக்கிக் கொண்டு முன் வாசலுக்கு அருகில் போய் விட்டேன். ஒரே ஒரு பெண் மட்டும் கனமான பையுடன் இருக்கையில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். அவளுக்கும் முன் போய் ஓட்டுனருக்கு பின்னால் இருக்கும் தடுப்புக் கம்பியைப் பிடித்து நின்று கொண்டேன். கண்ணாடியில் ஏதோ படிந்து பார்வையை மறைக்க இருக்கையின் அருகில் சாய்ந்து அதைத் துடைத்துக் கொண்டு மீண்டும் முன் கண்ணாடி வழியாக சாலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.
ஆற்காடு சாலையில் வண்டி ஓட்டுவது, இரு சக்கர வண்டியிலேயே கொஞ்சம் அழுத்தம் தந்து விடும். பேருந்து ஒன்றை ஓரிரண்டு முறை ஓட்டி விட்டால் புத்தருக்குக் கூட பொறுமை போய் விடும். குறுகலான சாலை, அதன் ஓரங்கள் வரை திமிறிக் கொண்டு ஓடும் வாகனங்கள், விருப்பம் போல் திரும்பும், குறுக்கே புகுந்து கொள்ளும் ஒழுக்கம் என்று வரும் தொல்லைகளைச் சமாளித்து ஓட்டினால் மனம் கலங்கி விடும்.
இந்தப் பேருந்து கொஞ்சம் புதிது. ஏறியதிலிருந்து ஒலிப்பானைப் பயன்படுத்தவில்லை வலிக்குமோ என்பது போல மெதுவாக கியர் மாற்றுகிறார். வழியில் இடைஞ்சலாக வரும் வண்டிகளையும் ஆட்களையும் கடுப்புடன் விரட்டாமல், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பொறுமையாக நிறுத்தி நகர்ந்து கொண்டிருந்தார்.
முதல் இருக்கையில் உட்கார்ந்திருந்தவர் இறங்க, கொஞ்சம் தள்ளி நின்றிருந்த பெண்ணைத் திரும்பிப் பார்த்தேன். எனக்கு உட்கார அவசரம் ஒன்றும் இல்லை. மாலை நேர உலாவலாகத்தான் இந்தப் பயணமே. 'என்னச் செய்யப் போகிறான்!' என்ற கேள்வி அந்தப் பெண்ணின் கண்களில். ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஆணின் அருகில் உட்காருவாரோ என்று நினைத்துக் கொண்டு பேசாமல் நானே உட்கார்ந்து கொண்டேன். நல்ல வேளையாக அடுத்த நிறுத்தத்திலேயே அவர் அருகிருந்த இருக்கையில் இருந்தவர் எழுந்து விட, அங்கு அமர்ந்து கொள்ள முடிந்தது.
நான்கைந்து பையன்கள் விளையாட்டுப் பொருட்கள் தாங்கிய பையுடன், சீருடையில் ஏறினார்கள். கிரிக்கெட் வீரர்கள் போல் தோன்றியது. வழக்கமான வேறு யாரையும் பற்றிக் கவலைப் படாத அவர்களுக்குள் பேச்சு.
இறங்கும் போது ஓட்டுனரைப் பாராட்டி நாலு வார்த்தை சொல்லி விட்டுப் போக வேண்டும் என்று எண்ணம். கொஞ்ச தூரம் போன பிறகு, 'ஏன், இறங்கும் வரை தள்ளிப் போட வேண்டும், நல்லதை உடனேயே செய்ய வேண்டியதுதானே' என்று கம்பித் தடுப்பைத் தாண்டி, அவரது ஓட்டும் பாணியைப் பாராட்டிச் சொன்னேன். எந்த எதிர்வினையும் இல்லை. பொதுவாக ஓட்டுனர்கள் பயணிகளுடன் பேசுவதை விரும்புவதில்லை. கொஞ்சம் அசடு வழிய பின்னால் சாய்ந்து கொண்டேன்.
அதன் பிறகு அவரது முகத்தில், குறுக்கே நின்ற ஆட்டோவைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளில் கொஞ்சம் மலர்ச்சி தென்பட்டதாகத் தோன்றியது. அல்லது வெறும் தோற்றம்தானோ!
இறங்க வேண்டிய இடம் வந்ததும், இறங்கி நடையைப் போட்டேன். இறக்கி விட்ட பேருந்து மீண்டும் கிளம்பி கடந்து செல்லும் போது அனிச்சையாக உள்ளே பார்த்த போது, ஓட்டுனர் பக்கவாட்டில் திரும்பிக் கையை உயர்த்தி உற்சாகமாக விடை சொல்லி விட்டுக் கடந்து போனார்.
வெள்ளிக் கிழமை வாணியம்பாடியில் இருக்கும் போது ஒரு நண்பர் தொலைபேசியிருந்தார். கேரளாவைச் சேர்ந்த அவர் வசித்தது எல்லாம் வளைகுடா நாடுகளில். ஆங்கிலத்தில் அபார எழுத்துத் திறமை படைத்தவர். டிஜிட் பத்திரிகையில் தகவல் தொழில் நுட்பம் குறித்துக் கட்டுரைகள் எழுதுகிறார்.
'இந்திய மொழிகளில் தகவல் தொழில் நுட்பம் குறித்த எழுத்துக்கள் அதிகம் இல்லை. வையவிரிவு வலையில், ஆங்கிலத்தில் கொட்டிக் கிடக்கும் அறிவுக் கருவூலத்தில் ஒரு சிறு பகுதிகூட நம் மொழிகளில் இல்லை' என்று ஆரம்பித்தார். அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் எழுத வரும் என்று நினைவு. மலையாளம் பேசுவது மட்டும்தான்.
நீண்ட உரையாடலுக்குப் பிறகு அவரது திட்டத்தைத் தெளிவாக்கினார். தகவல் தொழில் நுட்பம் குறித்து அந்தத் துறை சாராத ஆரம்ப நிலை பயனர்களுக்கு உதவும் படி கட்டுரைகளை அவர் ஆங்கிலத்தில் எழுத மலையாளம், தமிழ், கன்னட மொழிகளில் மொழி மாற்றம் செய்து மூன்று பேர் எழுத ஒரு இணையத் தளத்தை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் ஏற்கனவே செய்து வைத்த ஆராய்ச்சிகளின் படி, இதை வணிக முறையில் பணம் ஈட்டவும் பயன்படுத்த வழிவகுப்பது இதன் முக்கியக் கூறு.
'நல்ல பணி, தமிழில் மொழிமாற்ற எனக்கு முழுச் சம்மதம்' என்று சொன்னேன். அப்புறம் மனம் சும்மா இருக்காமல் அதை விரித்துப் பார்த்தது. இப்போது வலைப்பதிவுகளாக வெளியாகுபவற்றில், அவற்றைத் திரட்டும் திரட்டிகளில் சரியான வகைப்படுத்தல் இல்லை. தகவல் தொழில் நுட்பம் குறித்தக் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமானல் இன்ன சுட்டிக்குப் போகலாம், சென்னையைப் பற்றிய பதிவுகளுக்கு இன்ன இடம், புத்தக ஆய்வுகளுக்கு என்ன இடம் என்று திட்டமாக இல்லை.
இதற்கு விடையாகக் கூட்டு வலைப்பதிவுகளை ஆரம்பித்தோம். இவர் சொல்லும் திட்டத்திலும் சரி, கூட்டு வலைப்பதிவுகளிலும் சரி பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஏழெட்டு பேரோடு மட்டுப்பட்டு விடுகிறது. சென்னைப்பட்டிணம் வலைப்பூவில் சென்னையைப் பற்றி எழுத விரும்பி பலர் கேட்டாலும் அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது புரியாமலேயே இருந்து வருகிறது. வலைப்பதிவர் உதவிக் குழுவில் ஆரம்பித்த உற்சாகம் வடிந்து தொடர்ச்சியான பதிவுகள் இல்லாமல் இருக்கிறது.
குறிப்பிட்ட பொருளில் தலைப்பில் பதிவுகளை உருவாக்க கூட்டு வலைப்பூக்கள் சரியான வழி இல்லை என்று தோன்றியது. நான்கைந்து பேர் சேர்ந்து செயல்பட ஆரம்பிப்பது, வலைப்பூக்களின் தனித்தன்மையான எல்லோரும் எழுத முடியும் சாத்தியங்களை மட்டுப்படுத்துவது போல் ஆகி விடுகிறது.
மாலையில் அவருக்கே பேசி, சிறப்பாக எழுதப் போகும் கட்டுரைகளுடன், ஏற்கனவே எழுதப் பட்ட இனிமேலும் வெளிவரப்போகும், தகவல் தொழில் நுட்பம் குறித்தக் கட்டுரைகளைத் தொகுத்து தளம் உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவருக்கும் அதன் நியாயம் புரிந்தாலும் உள் வாங்கிக் கொள்ள சிறிது நேரம் பிடித்தது.
தொடர்ச்சியாக, இது போல குறிப்பிட்ட இடுகைகளை மட்டும் திரட்டிக் காண்பிக்க ஏதாவது கருவி இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முயன்றேன். தண்டோரா விக்கி தன்னுடைய வலைப்பூவில் அப்படி ஒரு கருவியை நிறுவியிருப்பதாகவும் அதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்றும் சொன்னார். பொன்ஸ் கூகிள் ரீடர் மூலம் பதிவுகளைச் சேர்த்து, அதன் பகிர்ந்து கொள்ளும் வசதியைப் பயன்படுத்தி, பொதுப் பக்கத்தில் வெளியிடலாம் என்றார்.
சென்னை வந்ததும் முதல் வேலையாக கூகுள் ரீடரில் ஏழெட்டு பதிவுகளை பகிர்ந்து கொள்ளச் சேர்த்துப் பொதுப் பக்கத்தில் பார்க்க முடிந்தது குறித்து வியந்தேன். ஆனால் பகிர்ந்து கொள்ளும் பக்கத்தில் கூகுள் தரும் வடிவமைப்புதான், நாம் எதையும் மாற்றி அமைக்க முடியாது.
அப்படியே மேய்ந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரிடமிருந்து மடல். தமிழ் வலைப்பதிவு உலகில் பெருகி விட்ட வலைப்பூக்களிலிருந்து செறிவான பதிவுகளை மட்டும் தேர்ந்து காண்பிக்க ஒரு சேவையை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டு அதன் வழிமுறையை விளக்கியிருந்தார். கூகுள் ரீடரில் அவதானிக்கும் வலைப்பூக்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு பிடித்ததைப் பொருள் வாரியாக பகிர்ந்து கொண்டு, அந்தப் பகிர்வை கூட்டு வலைத்தளத்துக்குச் செலுத்தி திரட்டும் முறை.
பொதுப்படையாக இல்லாமல் ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு வலைத்தளம் என்று தகவல் தொழில்நுட்பத்துக்கு தனியாக ஒரு சுட்டி கிடைத்து விட்டால், நான் விரும்பும் விளைவு கிடைத்து விடும். அதைச் செய்ய முடியும் என்று பதில் போட்டார். எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
சனிக் கிழமை இரவு தூங்கி விட்டு ஞாயிறு அதிகாலையில் கிளம்பவிருந்த திட்டத்தை மாற்றி பத்து மணிக்கு ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கப் போனால், அங்கு இரண்டு மணி நேரம் வேலை வாங்கி விட்டு மேலாளர் வராமலேயே கிளம்ப வேண்டியிருந்தது. எப்படியோ, இனிமேல் காசு தராத வரை இங்கு வர வேண்டியிருக்காது. தொலைபேசியிலேயே பேசிக் கொள்ளலாம்.
அறைக்குப் போய் துணிகளைத் திரட்டிக் கொண்டு சேர்ந்து விட்டிருந்த தண்ணீர் பாட்டில்களையும் பையில் அடைத்து எடுத்துக் கொண்டு திரும்ப பேருந்து நிறுத்தம் வந்து சேரந்தேன். எப்படியோ தவறி உட்கார இடம் இல்லாத பேருந்தில் ஏறி விட்டேன். இறங்கும் படிகள் அருகில் சிறிது நேரம், நாளிதழ் படித்துக் கொண்டே சிறிது நேரம் என்று கடத்தி சுங்குவார் சத்திரம் வந்த பிறகு கிடைத்த இருக்கையில் உட்கார்ந்து சிறிது நேரம் கண்ணயரவும் முடிந்தது.
மூட்டையாகத் துணி துவைப்புக்குப் பயந்து அன்றன்றைக்கே நான்கைந்து உருப்படிகளாகத் துவைத்துப் போட்டு விடுவது வழக்கம். நேற்றைக்கு வழக்கமான காலை நேரமும் தவறிப் போய் எண்ணிக்கையும் அதிகமாக துணி துவைப்பு. முடிக்கும் போது ஏதோ சாதித்துத் தளர்ந்த உணர்வுடன், இனிமேல் இப்படிச் சேர்த்துத் துவைக்கவே கூடாது என்ற மறு உறுதியும் சேர்ந்து கொண்டது.
'புதன் கிழமைக்குள் வேலைகள் முடிந்து விடும், 24ம் தேதி புது வீட்டில் வந்து விடலாம்' என்று கட்டிடம் கட்டுபவரின் செய்தி. நவம்பர் பதினைந்து அன்று ஆரம்பித்து, டிசம்பர் 1, டிசம்பர் 15, பொங்கல் என்று இழுத்தடித்து இங்கு வந்து நிற்கிறது. பார்க்கலாம்.

பேருந்து,
வலைப்பதிவு
ஞாயிறு, ஜனவரி 21, 2007
அழகிய மனம்
இந்து நாளிதழில் நிர்மல் சேகர் ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியைப் பற்றி எழுத நேரில் போய் தினசரி அறிக்கை எழுதுகிறார். அவருக்கே உரிய கவிதை நடையில் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை அழகுபடுத்திக் காட்டுகிறார். ரோஜர் ஃபெடரர் விளையாடும் அழகைக் குறிப்பிட்டு "அழகிய உள்ளம்" என்று காரணம் சொல்கிறார்.
மனம் மாசு மறுவில்லாமல், யார் பேரிலும் வன்மம் இல்லாமல், தனது திறமையில் முழு நம்பிக்கையுடன், எதிர்காலத்தைப் பற்றிய உறுதியுடன், பார்ப்பவர் மேலெல்லாம் அன்புடன் இருக்கும் போது செய்யும் செயலெல்லாம் கச்சிதமாக அழகாக அமைந்து விடுகிறது. ரோஜர் தவிர்க்கக் கூடிய தவறுகளை தனது ஆட்டத்தில் செய்தாலும் அவரது ஆட்டத்தின் அழகு குறையவில்லை என்கிறார் நிர்மல் சேகர். பார்ப்பவர்கள் எல்லாம் உருக, வர்ணனையாளர்கள் ஆகா, ஓகோ என்று மாயந்து போக, பத்திரிகையாளர்கள் காதலாகி கண்ணீர் மல்கி எழுதிக் குவிக்க இது ஒரு தனி அவதாரம் எனறு இவரும் எழுதுகிறார்.
டெண்டூல்கர் போலவே விளையாடுகிறார் என்று சேவாக் வந்து விட்டாலும், டெண்டூல்கரின் மாயக் கவர்ச்சி குறைந்து போய் விடுவதில்லை. தொடர்ச்சியாக முட்டை அடித்தாலும், இந்தியாவின் தோல்விகளுக்கிடையே இவர் மட்டையால் தடவுவது கூட வெறுப்பை உண்டாக்கி விடுவதில்லை. ஒரு அழகான அடி, ஒரு நாள் ஐம்பது அல்லது நூறு அடித்ததும் எல்லாவற்றையும் மறந்து விட்டு உருக ஆரம்பித்து விடுகிறோம்.
சின்னக் குழந்தை தடுமாறி நடப்பதும் அழகுதான். நடக்கத் தெரியவில்லை என்று கோபிக்கவோ, வெறுக்கவோ செய்து விடுவதில்லை. தடுமாற்றத்திலும் ஒரு அழகு. அழகிய இளம் பெண்ணுக்கு இருக்கும் கவர்ச்சியும் இதே மாதிரிதான். அழகிய மனது.
மனம் அழகாக இருக்கும் போது சுற்றியிருக்கும் உலகமே மயங்கி நிற்கிறது. முற்றும் துறந்த உண்மையான சாமியார்கள், போப் ஜான் பால் II, பகவான் ரஜ்னீஷ், நாற்பதுகளுக்கு முற்பட்ட 1920, 1930களில் காந்தியின் உருவம் இவர்கள் எல்லாம் பல்லாயிரக் கணக்கானவரைக் கட்டிப் போட்டு விட்டது உள்ளத்தின் அழகால்தான். நடக்கும் போது தடுமாறினாலும் அழகு, பேசும் போது குழறினாலும் அழகு, கண்ணீர் சிந்தினாலும் அழகு என்று அகத்தின் அழகு பொங்கிச் சிந்துகிறது.
வளர வளர உள்ளத்தின் தெளிவு மறைந்து போய்க் கண்டதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம். உண்மையான அல்லது உருவகித்துக் கொண்ட அவமானங்கள், பகை உணர்வுகள், ஆற்றாமைகள், பொறாமை என்று சின்ன நூல் கண்டுகளால் கட்டுண்டு அணையில் அடைபட்ட நீராக நம்மை நாமே மட்டுறுத்திக் கொள்கிறோம்.
ஷில்பா ஷெட்டி பங்கு பெறுவதால் பேர் அதிகமாகி விட்ட பிக் பிரதர் என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சி போல நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் கள்ளமின்றி வெளிச்சம் போடுவது நல்ல திட்டமாகவே தோன்றுகிறது. போட்டுக் கொள்ளும் முகமூடிகள் கழன்று, தனிமனித விவகாரம் என்று அறையின் இருட்டுக்குள், கதவுகளின் மறைவுக்குள், மனதின் நிழல் பகுதிகளில் ஒழித்து வைக்க முயலுபவை வெளிச்சம் விழும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு அசைவிலும் வெளியே தெரியத்தான் செய்கின்றன.
இரண்டு வயது குழந்தைக்கு என்ன அழகு? மறைக்க எதுவும் இல்லை. இடுப்புக்கு மேலே மட்டும் உடை அணிந்து கொண்டு கம்பீரமாக நடந்து வரும் குழந்தையின் அழகின் ஈர்ப்புதான், கவனமாக அலங்கரித்து சிறப்பான உடை அணிந்து கொள்ளும் குமரியிடமும் வெளிப்பட வேண்டும். அந்தக் குழந்தை மனத்தைத் தொலைத்து விட்டால் எத்தனை சிறப்பான முத்துக்களும், உயர்தர வைரங்களும் அழகு சேர்த்து விட முடியாது.
இப்போதெல்லாம் தூக்கம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளது. திங்கள் கிழமை பின்னிரவில் பயணம் ஆரம்பித்து செவ்வாய் முழுவதும் ஓடிக் கொண்டே இருந்து விட்டு புதன் காலையில் சென்னையில். அதனால் வியாழன் காலையில் எழுந்திருக்க ஏழரை ஆனதற்கு சமாதானம் இருந்தது. வெள்ளியன்றும் அதிகாலையில் எழுந்திருக்காமல் ஆறு மணிக்கு மேல்தான் எழுந்திருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.
சனிக் கிழமை வாலாஜாவில், இரவில் ஒன்பதரைக்கெல்லாம் உறங்கி விட்ட போதும், அதிகாலையில் விழிப்பு வந்து எழுந்து விட்ட போதும் மீண்டும் சோம்பிப் படுத்து உப்பிய முகத்துடன் எழுந்தது உறுத்தலாகத்தான் இருந்தது. அந்த உறுத்தலுடனேயே நாள் ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே ரோஜர் ஃபெடரர் பற்றி நிர்மல் சேகரின் கவிதையுடன் காலை உணவு.
முதல் நிறுவனத்திற்குப் போனால் சொதப்பலின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. கூட வந்தவரிடம் முகம் காட்டி விட்டு பதினொரு மணிக்கு வரச் சொல்லியிருந்த இடத்துக்குப் போனால் ஒன்றரை மணி வரை அவருக்கு நேரம் இல்லை. முந்தைய நாள்தான் வெளி நாட்டுப் பயணம் முடித்து வந்திருந்தாராம். அங்கேயே சாப்பிட்டு விட்டு மூன்று மணிக்குப் பேசலாம் என்று சொல்லி விட்டார். பேசும் போது கண்கள் களைப்பாகத்தான் தெரிந்தன.
இருந்தும் வழக்கமான கூர்மையுடன், நடப்பதைப் புரிந்து கொண்டார். அடுத்தக் கட்ட வேலைகளுக்கான பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டார். 'நீங்க சொல்வதை மட்டும் மறுத்துச் சொல்லாமல் ஒத்துக் கொள்கிறார்' என்று சொன்னவரிடம், 'நிறுவனத்தின் நலனுக்காகத்தான் சொல்கிறேன் என்பதைப் புரிந்து கொள்வதால் ஒத்துக் கொள்கிறார். எனக்கு சொந்த நலனுக்காக ஏதாவது சொன்னால் கேட்கவே போகிறார்'.
அடுத்த இடத்தில் எதிர்பார்த்ததை விட எல்லாம் சுமுகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இது ஒரு மகிழ்ச்சியான அதிர்ச்சி. அங்கிருந்து நான்காவது இடத்துக்குப் போய்ச் சேரும் போது அவர்களது வேலை நேரம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
'இங்கேயே தங்கி விட்டு, நாளைக் காலையில் வந்து விடுங்கள். பத்து மணிக்கு சந்திக்கலாம், நிறுவன உரிமையாளரை' என்று சொல்ல, ஏற்கனவே 'தங்கி விட்டு அதிகாலையில் கிளம்பலாம்' என்று திட்டமிட்டிருந்ததால் உடனேயே ஏற்றுக் கொண்டேன். கூட வந்தவரை பேருந்து நிறுத்தத்தில் விட்டு விட்டு, என்ன செய்யலாம் என்று கேள்வி.
இணைய மையத்தில் மேயப் போகலாம், யாரையாவது சந்திக்கப் போகலாம், சாப்பிடலாம், அல்லது அறைக்குப் போய் தனிமையில் இனிமை காணலாம். அரைக் கிலோ ஆரஞ்சு பழங்களை வாங்கிக் கொண்டு அறைக்கே வந்து பார்த்தால், காலையில் ஒதுக்கி பெருக்கி விட்டுப் போயிருந்த ஒழுங்கு வரவேற்றது. ஓரிரு தொலைபேசி அழைப்புகளை முடித்து விட்டு ஏழு மணிக்கு சூழலில் மூழ்க முனைந்தேன்.
மூடிய கண்களை உறுத்தும் வெளிச்சம் போச். இறுக்கமாகக் கட்டிப் போட்ட ஆடை தளர்ச்சி. காலுக்கடியில் மாட்டிக் கொண்டிருந்த துண்டு விலக்கல். ஒவ்வொன்றாகப் போய் பாரமில்லாமல் உணரும் வாக்கில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டேன். இடையிடையே இரண்டு தொலைபேசி அழைப்புக்கள். அப்படியே அதிக நேரம் போய் விடவில்லை என்றுதான் தோன்றியது. ஒரு கட்டத்தில் படுத்துத் தூக்கம். ஒரு முறை விழிக்கும் போது பத்தரை மணி, அப்படியே ஓடி அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருக்க முடிந்தது.
சுவர்க் கோழிகளின் சத்தம், எங்கோ நாய்க்குரைக்கும் சத்தம் தவிர வேறு எதுவுமே கேட்காத சூழல் மாலையில். சுற்று வட்டாரத்தில் நூறு மீட்டர் கனவட்டத்தில் வேறு மனிதத் தொடர்பே இல்லாத தனிமை. எழுந்து பொத்தானை அழுத்தினால் உள்ளே வந்து குதித்து விடும் தொலைக்காட்சி அபாயமோ, உள்ளே இழுத்துக் கொண்டு விடும் இணைய வெளி கவர்ச்சியோ இல்லாத தனிமை. விடாப்பிடியாக எட்டிப் பிடித்து விடும் செல்பேசி மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதையும் விட்டு விட்டு இருந்து பார்க்க வேண்டும்.
தமிழ் டாட் நெட் பாலா அப்படித்தான் சொல்வார். இணைக்கப்பட்ட உலகில், இணையம், செல் பேசி என்று ஆண்டின் பெரும்பகுதியைக் கழித்து விட்டு ஓரிரு மாதங்கள் எதுவும் தொட்டு விடாமல் தலைமறைவு வாசம் செய்வதாக. தலைமறைவு வாசம் என்று வலுக்கட்டாயமாக இல்லாவிட்டாலும் கிடைக்கும் தனிமைகளில் மூச்சு முட்டாமல் இருக்கிறதா என்று உரசிப் பார்த்துக் கொள்வது உதவும்.
தனிமையைத் தாங்கிக் கொள்வதுதான் உள்ளதில் அரிது. அடுத்தவர்களின் வெறுமையால் நம்மை நிறைத்துக் கொள்ளும் வரை ஓடிக் கொண்டே இருக்கலாம். எல்லாவற்றையும் இறைத்துப் போட்டு விட்டு ஒன்றுமில்லாமல் செய்த பிறகு எஞ்சியிருக்கும் நம்மை நாமே ஏற்றுக் கொள்வது என்பதை முயற்சித்துப் பார்க்காமலேயே முழு வாழ்க்கையே ஓடி விடலாம்.
அதுதான் அயன் ராண்டின் ஹோவார்டு ரோர்க்கின் நல்ல பாம்புக் கவர்ச்சி. இப்படி ஒரு மனிதன் எப்படி இருக்க முடியும். 'சும்மா இரு சொல்லற' என்று எப்படி முடிகிறது. பீட்டர் கீட்டிங்கால் ஒரு நிமிடம் சும்மா இருக்க முடியவில்லை. உடனேயே எழுந்து அறையில் ஒரு பொருளை நகர்த்தி வைக்கிறான். தன் மனைவியுடன் தாங்க முடியாத தனிமையில் இருக்கும் போது, தொலை பேசி மணியழைப்பை வரவேற்று பள்ளி விட்டக் குழந்தை போல் ஓடிப் போய் விடுகிறான்.

(070119) கலவை
நேற்றுக் காலையில் எழுந்திருக்கும் போது ஏழே கால் மணி. பெட்டியைப் பின்னால் விட்டு விட்டு ஆளை மட்டும் சென்னை கொண்டு சேர்த்திருந்த எமிரேட்ஸ் விமானச் சேவையால் போட்டுக் கொள்ள துணிக்குப் பஞ்சம். துவைக்கலாம் என்று எடுத்துப் போட்டால், கிளம்புவதற்கு முந்தைய நாள் போட்டது, வழியில் வரும் போது நமக்காக இல்லாவிட்டாலும், அடுத்த விமானத்தில் அருகில் உட்காரப் போகும் பயணியின் நன்மைக்காக என்று குட்டிப் பையில் அடைத்து வந்திருந்த துவைத்த மாற்றுத் துணி , அதை மாற்றிய அழுக்குத் துணி என்று மூன்று கணங்கள் தேறி விட்டிருந்தன. பெட்டியில் வந்து சேரப் போகின்றவை எல்லாம் அதிகப்படிதானோ!
எப்படியோ, பெட்டியைக் குடைந்ததில், தேய்க்காமல் வைத்திருந்த ஒரு சட்டை கிடைத்து, அதைத் தேய்த்துப் போட்டுக் கொள்ள முடிவு. பல் தேய்த்து, முகம் மழித்து, துணி துவைத்து, குளித்து முடிக்கும் போது எட்டரை மணி ஆகி நடமாட்டம் ஆரம்பித்து விட்டிருந்தது. இதற்கு மேல் எழுதவும் முடியாது, அறையை மூடிக் கொண்டு தியானமும் கிடையாது.
கையோடு கொண்டு வந்திருந்த யூரோ காசோலையைக் காசாக்க வங்கிக்குப் போய்ப் பேசினால், வழக்கம் போல ஐசிஐசிஐ வங்கியின் மீஉயர் நெறிமுறைகள். காலம் மாறும் போது, இது போன்ற மனித இயந்திரங்களால் இயங்கும் இந்த நிறுவனம் எப்படித் தாக்குப் பிடிக்கும் என்று புரியவில்லை.
அதே போன்று விப்ரோ பற்றி ஒரு கருத்து, அதில் வேலை பார்க்கும் ஒரு நண்பரிடமிருந்து. ஏதோ காலத்தின் சாதகமான சூழல்களால் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீணட காலத்துக்குத் தாக்குப் பிடிக்க முடிவது சந்தேகம்தான் என்று சொன்னார்.
துபாய்-சென்னை விமானத்தில், டுஸ்ஸல் டோர்ஃபிலிருந்து விமானம் மாற்றி ஏறியிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி குடியேறி, உணவகங்களை நடத்திக் கொண்டிருக்கும் நண்பரும் சொன்னது போல், 'எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் நம்ம ஊர் போல் வருமா!'. சில ஆண்டுகளில் நிரந்தர தீர்வு ஏற்பட்டு சொந்த ஊர் திரும்ப வாழ்த்தியிருந்தேன்.
இவரிடமும், 'திரும்பி வந்திடுங்க, இங்கேயே ஒரு தொழில் ஆரம்பித்து விடலாம்' என்று அவர் எண்ணத்தை நேர்மையாகப் பிரதிபலிக்க முடிந்தது.
வாடிக்கையாளர்களுக்குத் தொலைபேசி, நிலவரங்களை விசாரித்துக் கொண்டு, மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டு, திட்டங்களை வகுத்துக் கொண்டு நேரம் போனது. ஆறு மாத திட்டப் பணிக்காக வந்திருந்த மாணவர்களுக்கு தொடக்கக் கோளாறு. இது வரை பணியின் நோக்கமே புரியவில்லை அவர்களுக்கு. அவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்த போது, பழகி விட்டிருந்து எமிரேட்ஸ் கச்சிதத்துடன், பெட்டி கண்ணாடித்தாளில் பொதியப்பட்டு வந்து சேர்ந்தது.
நான்கைந்து ஆண்டுகளில் பொதுவாகவே விமானச் சேவைகளின் தரம் உயர்ந்து விட்டதா, அல்லது எமிரேட்ஸ் அதனுடன் இணைந்து போன ஆப்பிரிக்கியா சேவை இரண்டுமே நல்ல வேலை செய்கிறார்களோ, விமானப் பயணம் தாலாட்டுவது போன்ற சுகத்துடன் முடிந்திருந்தது. கொஞ்சம் செயற்கையாக ஒட்ட வைத்திருந்தது போலத் தெரிந்தாலும், புன்னகையும் செயல்களும் இதமாக இருந்தன.
முந்திய நாள் மாலையில் ஏழு மணி வாக்கில் நுங்கம்பாக்கம் அருகில் இருந்து புத்தகக் கண்காட்சி போகலாமா என்ற எண்ணத்தைக் கைவிட்டதோடு, நேற்றும் போய் விட்டது. இன்றும், நாளையும் சென்னைக்கு வெளியே. கடைசி நாளில் எல்லாம் நீக்கப் பட்டிருக்கும் என்ற ஞாயிற்றுக் கிழமை மட்டும் மிஞ்சும். சென்னையில் இருந்து நாம் போகாமலே புத்தகக் கண்காட்சி நடந்து முடிந்து விடப் போகிறது. வலைப்பதிவுகளில் வரும் பட்டியல்களைப் பார்த்தால் அதனால் விற்பனை எதுவும் குறைந்து விட்டதாக படவில்லை.
ஒரு ஆண்டு வெற்றியோடு நின்று விடாமல், ஆண்டுக்கு ஆண்டுக்கு மெருகேற்றி வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
'வெளி நாடுகளில் புத்தகங்கள் நிறைய இருக்கும், வாசகர்கள் அதிகம் காணப்பட மாட்டார்கள். இங்கு புத்தகங்களும் ஏராளம், வாசகர் கூட்டமும் தாராளம்'
'புத்தகங்களைப் படிக்கும் ஒரு சமூகம் முன்னேற்ற வழியில்'
என்று குமுதம், ஆனந்த விகடனில் படித்தது. ஆனந்த விகடனில் பொறுப்பாசிரியர் வேறு நிரம்பி வழிகிறார், மார்கழியின் இசை விழாவின் வெற்றியைக் குறித்து. தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் அறுவடையின் பரிசுகள் சென்னையில் புரளும் பொருள் வளமும் பணப் புழக்கமும்.
அப்படி வரும் பணத்தின் பெரும்பகுதி தங்கம் வாங்கவும், நிலம் வாங்கவும் பாய்கிறதாம். தங்க விலை ஆண்டுக்கு ஏழரை சதவீதம் என்றுதான் கடந்த இருபது ஆணடுகளில் உயர்ந்திருக்கிறதாம். வெள்ளிக்கு ஆண்டுக்கு பத்து சதவீதம். வங்கி வட்டியை விட சிறிதளவே அதிகம். அதில் பணத்தை முடக்குவது எந்த வகையில் அறிவுடமை என்று புரிவில்லைதான்.
ஒன்பதரைக்கே படுத்து விட்டாலும், இன்றைக்கு வாணியம்பாடி போகத் தயாராக இரண்டு மணிக்கு எழுந்து நான்கு மணி வரை எழுதி ஐந்து மணிக்கு பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும், முதல் முறை விழிப்பு வந்தது நள்ளிரவு ஒன்றரைக்கு, அதற்குப் பிறகு அதிகாலை ஐந்து, எழுந்தது ஐந்தே முக்காலுக்குத்தான்.
முந்தைய நாளை மனதில் ஓட்டிப் பார்த்தால் பல நிகழ்ச்சிகள் நினைவுக்கு வரவில்லை. ஒரே குளறுபடி. காலையில் எழுதுவதன் மூலம் மனப்பயிற்சி விட்டுப் போனதால் விழிப்பும் குறைந்து விட்டிருக்கிறது.
லினக்சு ஃபார் யு என்ற பத்திரிகையில் உமாசங்கரின் இன்னும் விரிவான பேட்டி. பரிநிரல் புரட்சியின் தமிழகத் தளபதியாக வாள் சுழற்றுகிறார். ஒரு சில தப்பான வீச்சுக்கள் இருந்தாலும் மொத்தத்தில் வலுவான வீரர். இவரை எதிர் கொள்வது எதிர்த்தரப்புக்கு குதிரைக் கொம்பாகத்தான் இருக்கப் போகிறது.

வெள்ளி, ஜனவரி 12, 2007
ஒருநாள் கழிந்தது
காலையில் இரண்டு மணிக்கே எழுந்து நின்றால் அப்புறம் என்ன செய்வது? அரை மணி நேரம் அரை மணி நேரமாக எழுதி முடித்த பிறகு நேரம் நாலரை மணி. உள்ளே உடம்பின் கடிகாரத்தில் பத்து மணி அடித்து விட்டிருக்கிறதே!
சேர்ந்திருந்த துணிகளைத் துவைத்து வெளியில் காயப் போட்டேன். குளிருக்கு உடல் பழகி விட குளித்து தியானம் பண்ணி விட்டு, முந்தைய நாள் வேலைக் குறிப்புகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள எழுதிக் கொண்டேன். எவ்வளவு விபரங்களை அனுப்புகிறோமே அவ்வளவு அவர்களுக்குத் தெளிவும் வேலையில் ஈடுபட ஆர்வமும் கிடைக்கும் என்று எண்ணம்.
ஆறு மணி, வெளிச்சமும் வர ஆரம்பித்து விட்டிருந்தது. முழு உடைகளை அணிந்து கொண்டு மெதுவாக தொழிற்சாலையைச் சுற்றி வெளி வாசலுக்கு வந்து சேர்ந்தேன். அந்த நேரத்திலும் ஆள் நடமாட்டம் ஆரம்பித்து விட்டிருந்தது. வாசலில் இருந்த காவலர், கதவைத் திறந்து வெளியே விட்டார். சென்னையில் மார்கழி மாதக் குளிர் போன்ற சூழல், ஆனால் வறண்ட காற்று மண்டலம்.
பத்து நிமிடம் அமைத்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வந்து திரும்பிய சாலைச் சந்திப்பில், திரும்பாமல் தொடர்ந்து போகும் சாலையைப் பிடித்தேன். எதிர் திசையில் மிதிவண்டியில், இரு சக்கர மோட்டார் வண்டியில் நிறைய பேர் கடந்து போனார்கள். தலையையும் முகத்தையும் மூடிக் குளிரிலிருந்து காப்பு. வலது பக்கம் கடைகள் விழிக்க ஆரம்பித்திருந்தன. சாலை ஓரத்தில் காலை உணவு விற்பனையும் உண்பதும் நடந்து கொண்டிருந்தது.
எதிரில் ஒரு சின்ன கழுதை இழுக்கும் வண்டியில் இரண்டு பெண்கள், தங்கள் வீட்டு சாமான்கள் எல்லாம் எடுத்து வந்து விட்டது போல் கடந்து போனார்கள். நகரத்துக்கு வெளியிலான பகுதி போலிருந்தது. பத்து நிமிட மணி அடித்ததும் சாலையைக் கடந்து எதிர்த் திசையில் திரும்பினேன். அந்தப் பக்கத்தில் நூறு மீட்டருக்கு ஒரு இடத்தில் நம்ம ஊர் குழிப் பணியாரம் பாணியில் ஏதோ சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். கலக்கி வைத்திருந்த மாவைப் பார்த்தால் கோதுமை மாவு போல இருந்தது. பின்னர் கேட்டதில், சோள மாவில் புளியும், சர்க்கரையும் கலந்து சுடுவார்கள் என்று தெரிந்தது.
சில இடங்களில் பெரிய பானையில் கஞ்சி போல ஏதோ கலக்கிக் கொண்டிருந்தார்கள். மாற்று முகம் என்று பெரிதாக யாரும் வெறிக்கவில்லை. சில சிறுவர்கள் மட்டும் கூர்ந்த கவனித்து விட்டுப் போனார்கள்.
இங்கேயே மூன்று ஆண்டுகள் பணி புரியும் நண்பரைக் கேட்ட போது, அவர் தொழுகைக்குப் போகும் போது பிச்சை எடுக்கும் சிறுவர்களைப் பார்ப்பதாகக் கூறினார். மிக பணக்காரர்கள், மிக ஏழைகள் என்று இரண்டே பிரிவுகள்தானாம்.
திரும்பி வந்து அலுவலக அறையைத் திறந்து வேலை ஆரம்பிக்க முடிந்தது. அனுப்ப வேண்டிய விபரங்களை சென்னைக்கு அனுப்பி வேலை முடிக்கக் கேட்டுக் கொண்டேன். அறையில் சமையல் வாயு தீர்ந்து விட்டதால் காலையில் தேநீர் கிடையாது என்று சொன்னான் காலையில் வந்து துணிகளை எல்லாம் துவைக்கும் பையன். அவனிடமே காசு கொடுத்து ரொட்டி வாங்கி வரச் சொன்னேன். ரொட்டியில் வெண்ணெய் தடவி சாப்பிட்டு விட்டு அப்படியே முந்தைய மாலையின் சப்பாத்திகளையும் உள்ளே தள்ளிக் கொண்டேன்.
தலைமை மேலாளர் வந்து நேற்று பேசிக் கொண்டபடி பொறுப்புகளை தீர்மானித்துக் கொண்டார். மென்பொருளை நிறுவி இணைத்துக் கொண்டோம். மதியத்துக்கு மேல் பயனர்களுக்கான கையேடு ஒன்றை எளிமையாக எழுதி முடித்தேன். அதை அச்செடுக்கப் போகும் முன் அலுவலக அறையில் வேலை செய்யும் பெண் வேலை முடிந்து கிளம்பி விடவே அது அடுத்த நாளுக்குத் தள்ளிப் போய் விட்டது.
அப்படியே தொழிற்சாலையில் ஒரு சுற்று சுற்றி விட்டு சில விபரங்களைத் திரட்டி விட்டு அறைக்குத் திரும்பித் தூங்கி விட்டேன். சீக்கிரம் எழுந்து விடாமல், காலை வரை தூங்கி இந்த நேரத்துக்கு இசைந்து போக வேண்டும் என்ற முடிவோடு, இரண்டு மணிக்கு இழுத்துப் போர்த்திக் கொண்டேன். நாலரை மணிக்கு இன்னும் தூங்க முடியாமல் எழுந்து கொண்டேன்.

வியாழன், ஜனவரி 11, 2007
பாலை சேர்ந்த நிலம்
முதல் நாள் வேலை ஆரம்பிப்பது ஒரு மாதம் எடுக்காத இரு சக்கர வண்டியை அடித்து ஓட வைப்பது போலத்தான். காலையில் எழுந்து பார்த்தால் குளிர், வறண்ட காற்றும். சகாரா அருகில் இருப்பதால் காற்றில் தூசிப் படலம் மிதக்கும். குளிரில் தோல் காய்ந்து வெடிக்க ஆரம்பித்து விடும் என்றார்கள். உள்ளூர் மக்களின் சாப்பாடு, பழக்க வழக்கங்களைப் பிடித்துக் கொள்ளா விட்டால் அவதிதான்.
காலையில் சாப்பிட மக்காச்சோள ரொட்டியில் முட்டை நடுவில் வைத்து சின்னதாக ஒன்று. பார்வைக்குப் பெரிதுதான், ஆனால் பொங்கல், தோசை என்று சாப்பிட்டு நிறைத்துக் கொள்ளும் வயிறுக்குப் போதாது. பத்து மணிக்கு சந்திக்கலாம் என்று சொன்ன நிறுவன உரிமையாளர் நிதானமாக வந்து சேர்ந்தார். அதற்குள் தொழிற்சாலையினுள் ஒரு சுற்று சுற்றி விட்டு தண்ணீர் குடிக்க மீண்டும் அறைக்கு வந்தோம்.
தொழிலாளர்கள் எல்லாம் உப்பிய கன்னங்களோடு, பளபளக்கும் தோலோடு ஆரோக்கியமாக இருந்தார்கள். இந்த தலைநகரம் மட்டும்தான் இப்படி இருக்கிறதா, அல்லது நாடு முழுவதும் நல்ல செழிப்புதானா என்று கேள்வி எழுந்தது. ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் இவ்வளவு முழுமையான மனிதர்களைப் பார்த்தது இப்போதுதான் இருக்கும். வழக்கமாக ஆப்பிரிக்கா என்றவுடன் வரும் சோமாலியா, எத்தியோப்பியா உருவங்கள் இங்கு இல்லை. சண்டை போடாமல் தொடர்ச்சியான நிர்வாகம் இருந்தால் எல்லா இடமும் முன்னேறித்தான் தீர வேண்டும்
பிரெஞ்சு ஆப்பிரிக்க சமுதாயம் என்று இருக்கிறதாம். இந்த நாடுகளின் கூட்டமைப்பாக ஒரே இணைப்பு மொழி, ஒரே நாணயம் என்று வைத்திருக்கிறார்களாம். சிஃபா என்று சொல்லப்படும் cfaதான் உள்ளூர் நாணயம்.
இங்கு தங்கி இருப்பவர்களுக்கு வீட்டு வேலை செய்ய - துணி துவைக்க, வீடு சுத்தம் செய்ய, சமைக்க - ஆள் கொடுத்திருக்கிறார்கள். நம் ஊர் சமையலாகக் கற்றுக் கொடுத்து விட்டிருக்கிறார்கள்.
ஒரு நண்பர் இதற்கு முன்பு நைஜீரியாவில் வேலை பார்த்தவராம். 'அங்கு வெளியில் இறங்கி நடக்க முடியாது, ஆனால் வீட்டுக்குள் வசதிகள் அதிகம். இங்கு காந்தி சொன்னது போல் நள்ளிரவு நகைகள் அணிந்து கொண்டு ஒரு இளம்பெண் நடாமாட முடியும் வெளிப்புறச் சூழல், நைஜீரியாவில் இருந்த ஆடம்பர வசதிகள் வீட்டில் கிடையாது' சொன்னார்.
உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பதினொன்றரை வாக்கில் ஒல்லியான உயரமான சூட்டு அணிந்த உரிமையாளர் வந்து சேர்ந்தார். பார்த்ததில் இவர்தான் உடலில் சதைப் பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்.
அவர் ஒரு முறை இந்தத் தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டி விட்டு அடுத்த தொழிற்சாலைக்குக் கூப்பிட்டு போனார். வழியில் அவர்கள் அலுவலகம். தமிழ்நாட்டில் தோல் நிறுவனங்கள் இப்போது பளபளப்பான அலுவலகங்கள் என்று இறங்கி விட்டாலும், பத்து பதினைந்து ஆண்டுகள் முன்பு அங்கு இருந்தது போன்ற பழைய தோற்றமளிக்கும், ஆனால் உள்ளே வசதிகள் நிறைந்த அலுவலகம்
அலுவலக வளாகத்தில் வேப்ப மரம், யூக்கலிப்டஸ் மரம் என்று நம்ம ஊருக்கு வந்து விட்டத் தோற்றம் மீண்டும். உறுதி செய்து கொள்வதற்காக வேப்பமரத்திற்கு அருகில் போய் பூத்துக் குலுங்கும் அதன் இலைகளில் இரண்டை பறித்துக் கொண்டேன். வேம்பேதான்.
சென்னை கடலை ஒட்டி இருப்பது போல் இந்த ஊர் பாலைவனத்தை ஒட்டியது. கடற்கரையே கிடையாது. இன்னொரு நாட்டு எல்லைக்குள் போய்தான் கடல் துறைமுகங்களை அணுக முடியும். அதனால் தொழில்கள் வளருவதற்கு தடைகள் அதிகம்.
நல்ல வெயில் அடித்தது. சாலை நிறுத்தத்தில் தொலைபேசி அட்டைகளை குச்சியில் சொருகி வைத்துக் கொண்டு விற்க முயலும் பதின்ம வயதினர். கார்க் கதவை அணுகி பிச்சை எடுக்கும் கந்தலாடை சிறுவர்கள் சத்தியமாக இல்லை.
பெயர்ப்பலகைகள் குறியீடுகள் எல்லாம் பிரெஞ்சு மொழியில்தான். எல்லோருமே பிரெஞ்சு பேசுகிறார்கள், உள்ளூர் மொழி அவ்வளவாகக் காணவில்லை. இன்னொரு தொழிற்சாலையையும் சுற்றிப் பார்த்து விட்டு, கேட்க வேண்டியதைக் கேட்டு விட்டு திரும்பினோம். கணினிப் பொறியாளர் கூடவே வந்தார். 'இனிமேல் வேலை சாப்பிட்டு விட்டுத்தான்' என்று காலையிலிருந்தே தொந்தரவு செய்து கொண்டிருந்த வயிற்றுக்கு உணவிடப் போனோம்.
அதன் பிறகு கணினி, வேலை செய்ய இடம் அமைக்க முயன்றோம். இரண்டு மடிக்கணினிகளையும் உள்ளுறை கணினிப்பின்னலுடன் இணைக்க இணைப்புகள், இரண்டுக்கும் மின் இணைப்பு, கூடவே மென்பொருளை நிறுவும் கணினிக்கு இணைப்புகள் என்று அரைகுறை ஆங்கிலத்தில், பிரெஞ்சில் உருண்டு முடிவு செய்யும் போது சிறிது நேரம் ஓடி விட்டிருந்தது. இணைய இணைப்பும் கிடைத்து விட்டது.
அதன் பிறகுதான் ஆரம்பித்தது போராட்டம். புதிய கணினியில் மென்பொருளை நிறுவ டிவிடி இயக்கி வேண்டும். கணினியுடன் வந்த இயக்கி வேலை செய்யவே மாட்டேன் என்றது. அதைச் செய், இதைச் செய், இந்த உதவிக் கையேடடைப் பார், இணையத்தில் தேடிப்பார், பல அமைப்புகளை மாற்று என்று சொதப்பிக் கொண்டே இருந்தோம்.
இது போன்ற பிரச்சனைகளில் முதல் வழி காணும் படி எல்லா இணைப்புகளும் சரியாக பொருத்தப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பது. கணினியின் மூடியைத் திறக்க, திறந்த பிறகு அதன் உள்ளிருக்கும் சிக்கல்களை அகற்றிப் பரிசோதிக்க மனம் வராது. வேறு எல்லாவற்றையும் முயற்சித்து விட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின் மூடியைத் திறந்தார். இணைப்பின் மறு முனை இன்னும் உள்ளே புதைந்திருந்தது.. இந்த முனையில் பல மாற்றங்களைச் செய்து பார்த்தார். கடைசியில் ஆறு மணிக்குப் பிறகு மறு முனையை அணுகி வெளியே எடுத்தால் அது இணைக்கப்படாமலேயே இருந்தது.
விலை உயர்ந்த கணினி வாங்கி வைத்து விட்டிருக்கிறார்கள். மூன்று இடங்களிலும் இணைய இணைப்பு கூட. இணையத்தை எட்டிப் பிடித்து சேர்ந்திருந்த மின்னஞ்சல்களைப் படித்து பதிலளித்து விட்டுப் பதிவுகளிலும் சிறிது நேரம். நேரத்தோடு படுத்து விட்ட அதிகாலையில் எழுந்து வேலையைப் பார்க்கலாம் என்று கிளம்பி விட்டேன்.
அப்போது நேரம், ஏழேகால். உணவு வேண்டாம் என்று மறுத்து விட்டு, ஒரு பாட்டில் நிறைய நீரை நிரப்பிக் கொண்டு எட்டு மணிக்குள் சாய்த்து விட்டேன். கணினியில் கடிகாரத்தை மாற்றாததால், நள்ளிரவு பன்னிரண்டரை, அதிகாலை ஒரு மணி என்று காட்டிக் கொண்டிருந்தது. இங்கத்திய நேரம் இரண்டு மணி வரை தூங்கி விட்டு எழுந்தால் உள்ளுறை கடிகாரம் சகித்துக் கொள்ளும் என்று தோன்றியது.
நல்ல தூக்கம், ஒன்றே முக்காலுக்கு விழிப்பு. இப்போது மூன்று மணி. கணினியின் கடிகாரத்தில் காலை எட்டரை.

புதன், ஜனவரி 10, 2007
புதியதோர் உலகம்??
நேற்று முழுவதும் விமானத்தில் விமான நிலையத்தில். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்தால், ஐந்தரை மணி ஆகி விட்டதாக இந்திய நேரத்தை மாற்றிக் கொள்ளாத நண்பர் சோர்வாக கூறினார். ஆறு மணிக்குக் கிளம்பத் திட்டம்.
கிளம்பி அறையை விட்டுக் கீழே வந்து அப்போதே ஆரம்பித்து விட்டக் காலை உணவுச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டோம். வெளியே வாடகை ஊர்தியைப் பிடிக்கும் போது ஆறரை மணி. ஓட்டுனர் இந்திய முகம். வானொலியில் ஏதோ பாட்டு. தமிழ் சொற்களாக இல்லாமல், ஆனால் தென்னிந்திய மெட்டு. பாட்டு முடிந்து பேச்சு ஆரம்பிக்கும் போது மலையாளம்.
'தமிழும் இருக்கிறது. தமிழ், மலையாளம், இந்தி பண்பலை வரிசை கூட வருகிறது' என்று தமிழுக்கு மாற்றப் போனார். 'மலையாளமும் நன்றாகத்தான் இருக்கிறது, அதுவே இருக்கட்டும்' என்று சொன்னதும் விட்டு விட்டார். கொஞ்சம் அதிகம் பேசாது இயல்பு என்று பட்டது.
'எங்க ஊர் நாகர்கோவில்தான்' என்று சொன்னதும் இளக ஆரம்பித்தார். அவருக்கு திருவனந்தபுரம் என்று சொன்னார். தனியாகத்தான் இருக்கிறார். குடும்பம் இந்தியாவில். முன்பு போல நிறைய சேமிக்கும் வாய்ப்பு எல்லாம் துபாயில் இல்லை. நூறு திராம், நூற்றைம்பது திராமாக இருந்த ஒருவர் தூங்கும் வசதி இப்போது ஏறி ஏறி அறுநூறு திராம் வரை போய் விட்டது.
அதுக்கு மேல் சாப்பாட்டுச் செலவு. வண்டி ஓட்டி மாதம் மூவாயிரம் திராம் பார்க்கலாம். அதில் பாதி இங்கேயே செலவழிந்து போகிறது. இந்தியாவில் வீட்டுக்கும் அனுப்ப வேண்டும். கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றும் மிஞ்சுவதில்லை.
காலையில் ஆறு மணிக்கு வண்டி எடுக்க நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டும். கொஞ்சம் உடற்பயிற்சி மனப்பயிற்சி செய்து கொண்டால்தான் நாள் முழுவதும் வண்டியில் உட்கார்நதிருப்பதைத் தாக்குப் பிடிக்க முடிகிறது. இரவு பத்து மணிக்கு மேல் ஆகி விடும். இவ்வளவு உழைத்தால்தான் மாதம் மூவாயிரம், நாலாயிரம் நிற்கும். வேலை நேரத்தைக் குறைத்துக் கொண்டால் வருமானமும் குறைந்து போகுமே.
ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்குப் போக விடுப்பு உண்டு. அதற்கு செலவு எல்லாம் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களில் இந்த ஆண்டுக்கான விடுப்புக் காலம் வந்து விடும். அதற்கு என்ன செய்வது என்று திட்டம் கூட இல்லை.
எப்படியோ காலம் ஓடுகிறது.
சரியான முனையத்தில் போக வேண்டிய கதவின் அருகில் இறக்கி விட்டு விட்டார்.
எமிரேட்ஸ் விமானத்துக்குள், விமான நிலையத்துக்குள், 'தாமதமாக விமானத்தில் ஏற வந்தால் உங்களை விட்டு விட்டுப் போய் விடுவோம்' என்று அறிவிப்புகள் நிறைய இருக்கின்றன. இருந்தும் நீண்ட வரிசைகளில் விமான அனுமதி அட்டை வாங்கி, குடியேற்ற சரிபார்த்தல் முடித்து, பாதுகாப்புச் சோதனையையும் செய்து விட்டு வேகமாக வந்து ஏறி உட்கார்ந்தால், 'சில பயணிகள் வந்து சேர தாமதமாகி விட்டதால் விமானம் புறப்படுதல் தாமதமாகிறது' என்று அறிவிப்பு.
விமானம் கிளம்புவதற்கு முந்தைய ஓரிரு மணி நேரங்கள் குழப்பமான ஒன்று. தரை ஊழியர்கள், விமான ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என்று பல தரப்பினர் அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். யார் யாரைக் கேட்டு நடப்பது என்று குழப்பம். ஒரு வழியாகக் கதவை அடைத்தவுடன், விமான ஊழியர்களின் பொறுப்பு மட்டும் எஞ்சியிருக்கும்.
'விமானம் கிளம்பப் போகிறது. தரைப் பணியாளர்கள் எல்லோரும் கீழே இறங்குங்கள்' என்று விமான ஓட்டி சொன்ன போது, கொஞ்சம் குத்தலான மகிழ்ச்சி தொனித்ததாகப் பட்டது. அப்படிக் கிளம்பிய பிறகும் போக்குவரத்து நெருக்கடியால் இன்னும் வெகு நேரம் இழுத்தடித்தது.
இந்த விமானத்தில் முன் நோக்கும், தரை நோக்கும் படக் கருவிகள் வேலை செய்தன. துபாய் வரை வரும் தூரம்தான் அதிகம். அதற்குப் பிறகு குறுகிய பயணங்கள்தாம் இருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக திரிபோலி வரை ஆறு மணி நேரப் பறப்பும், அங்கிருந்து வோகாதோகுவுக்கு நான்கு மணி நேரப் பரப்பும் சென்னை துபாய் பயண நேரத்தை விட அதிகம்.
முன்திரையில் திரைப்படங்கள். இரண்டு நாள் முன்பு பார்த்த The Queen படத்துக்கே வந்து விட்டேன். லகே ரஹோ முன்னாபாய் என்ற படத்தை பார்க்கலாம் என்று ஆரம்பித்துத் தாங்க முடியாமல் மாற்றிக் கொண்டேன்.
விமானத்தில் சிறப்பு உணவுக்குச் சொல்லியிருந்தால் மற்றவர்களுக்கு உணவு கொண்டு வரும் முன்பே தனியாகக் கொண்டு தந்து விடுவார்கள். ஆரம்பத்தில் மேற்கத்திய காலை உணவு. இறங்குவதற்கு முன்பு மதிய உணவு என்று திட்டம்.
நீஈளமான பயணத்துக்குப் பின் திரிபோலி விமான நிலையத்தில் இறங்கும் போது, இருபது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய சென்னைக்கு வந்து விட்டது போன்ற பின்தங்கிய தோற்றம். திரிபோலி விமான நிலையத்தின் காத்திருக்கும் கூடமோ அதை விட மோசம். சீனாவில் குக்கிராம விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டு விட்ட உணர்வு.
மொழி புரியாத ஊர். சாப்பிட ஏதாவது வாங்க, தொலைபேச, இணையம் பயன்படுத்த உள்ளூர் நாணயம்தான் ஏற்றுக் கொள்வார்கள். மாற்றுவதற்கு செலவாணி மையம் வேலை நேரம் முடிந்து போய் விட்டார்கள். தலை விதியே என்று உட்கார்ந்திருந்தோம். சுற்றிலும் புகை மூட்டம். ஊதித் தள்ளும் சுதந்திரம். கழிவறை நம்ம ஊர் பேருந்து நிலையம் போல்.
கடைசியில் ஒரு வழியாக, திராம் கொடுத்து மின்னஞ்சல் மேய வழி செய்து கொண்டோம். ஆப்பிரிக்க விமான நிறுவனத்தின் விமானத்தில் வோகாதோகுவுக்குப் பயணம். நீண்ட வரிசை. வெள்ளை, கறுப்பு, மஞ்சள் தோல்கள். இந்திய முகங்கள் எதுவும் தெரியவில்லை.
சென்னைக்கும் துபாய்க்கும் ஒன்றரை மணி நேர வித்தியாசம். துபாயிலிருந்து திரிபோலிக்கு வந்தால் இரண்டு மணி நேரம் மிச்சம். வோகாதோகுவுக்குப் போக இன்னும் இரண்டு மணி நேர பின்தங்கி விட்டோம். பத்தரை மணிக்கு விமானம் கீழிறங்குகிறது, நம்ம ஊர் நேரத்தில் காலையில் எழுந்திருக்கும் நேரம் ஆகி விட்டிருந்தது.
திரிபோலியில் காய்ந்து விட்டு வந்ததால் இந்த ஊர் புத்துணர்ச்சியளித்தது. செழிப்பான அமைதியான கறுப்பு முகங்கள். பணிவான, மரியாதையான பேச்சு. மொழி புரியாவிட்டாலும், விமான நிலையத்தின் திட்டமிடலும், தலைமையும் புரிந்தது.
வெளியே வந்தால் கூப்பிட யாரும் வந்திருக்கவில்லை. மறந்து விட்டிருப்பார்கள். இங்கும் பணம் மாற்றும் அலுவலம் மூடி விட்டிருந்தது. இருட்டான இடத்தில் 100 திராமுக்கு 10000 சிஃபா பெற்றுக் கொண்டு, தொலைபேசினால் 500 சிஃபா வாங்கிக் கொண்டார்கள். நிறுவனத்தின் தொலைபேசி எண்ணில் ஆங்கிலம் புரியாத ஒரு குரல் சிறிது நேரத்துக்குப் பின் இன்னொருவர் வந்தார்.
ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்ததும், தயங்கிய அந்தக் குரல், தமிழ் என்று தெரிந்து கொண்டு தமிழில் இறங்கி விட்டார். இங்கேயே தங்கி வேலை செய்ய இரண்டு மூன்று பேர் நம்ம ஊரிலிருந்து வந்திருக்கிறார்களாம். அவர்களே வழி சொல்லி விபரங்கள் விளக்க, 5000 சிஃபா என்று கேட்டுக் கொண்டிருந்த வாடகை ஊர்தி ஓட்டுனரிடம் 2000 என்று ஆரம்பித்து 3000 முடிவு செய்து கொண்டோம்.
'உங்க ஊர் போல் செல்வம் இல்லா விட்டாலும், எங்கள் ஊரில் பிச்சை எடுக்க விடுவதில்லை யாரையும்' என்று முதல் சந்திப்பில் கேட்டிருந்தது பொய்யாக இருக்கலாம் என்று சிலர் சொன்னாலும், அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கு இரவு நேர வெப்பநிலை 25 டிகிரி சென்டிகிரேடு, சென்னைக்கு வந்து விட்டது போல. குண்டு குழிகள் இல்லாத சாலைகள், விமான நிலையத்துக்கு அருகிலாவது. சாலை ஓரங்களில் குப்பைக் குவியல்களும் இல்லை, குடிசை போட்டு தூங்குபவர்களும் இல்லை. முதல் நாள் பார்த்தது வரை நம்ம ஊரை விட உத்தமம்தான்.
போகின்ற இடத்துக்கு வெளியிலேயே காத்திருந்தார்கள், நண்பர்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவர்கள் காட்டிய அறையில் அடைந்து கொண்டோம்.

துபாய்க்கு பை பை
உடம்புக்குள்ளே இருக்கும் கடிகாரம் வெளியே மாறி விட்ட நேரத்தோடு ஒத்துப் போக வேண்டும். பள்ளியில் படிக்கும் போது மேற்கு வங்காளத்தில் என்சிசி முகாமுக்காக போயிருந்தோம். இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் எல்லா இடத்திலும் ஒரே நேர மண்டலம். ஒரிசாவிலும், மேற்கு வங்கத்திலும் பகலும் இரவும் நம்ம ஊர் போல் இல்லாமல் நேரம் கெட்டு வருவதாக பெரிய வியப்பாக இருந்தது.
உலகமெங்கும் நேரம் மாறாமல் ஒரே புள்ளியைச் சார்ந்து இருந்தால் பயணிகளுக்கு பெரிய ஆச்சரியங்கள் கிடைக்கும். இப்போதைய முறையில் ஆரம்பத்தில் கடிகாரத்தை மாற்றி அமைத்துக் கொண்டால், படிப்படியாக புதிய நேரத்துக்குப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். பெரிய நட்சத்திர விடுதிகளில், வெளிநாட்டுப் பயணிகள் வந்து போகும் நகரங்களில் 24 மணி நேரக் காலை உணவு என்று ஒரு வழக்கம் உண்டு. எந்த நேரத்தில் வந்து சேர்ந்தாலும், உங்கள் சொந்த ஊரில் அது காலை உணவு நேரம் என்றால் அந்த நேரத்துக்கான காலை உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இந்த நேர வேறுபாட்டை எப்படி சமாளிப்பது என்று பெரிய பாடங்கள் எல்லாம் உண்டு. கிழக்கிருந்து மேற்கே போகும் போது நேரம் ஈட்டியிருப்போம். நான்கு மணி நேரம் பறந்து இறங்கிப் பார்த்தால் அந்த இடத்து நேரப்படி இரண்டு மணி நேரம்தான் செலவிட்டிருப்போம். மேற்கிலிருந்து கிழக்கே வரும் போது, மணிகள் மாயமாக மறைந்து விடும். அதிகாலையில் இரண்டு மணி நேர விமானப் பயணத்துக்குப் பின் விழித்தால், நன்கு சூரியன் மேலேறி வெயில் சுள்ளென்று அடிக்கும் சிங்கப்பூர் பகலுக்கு வந்து சேர்ந்து விடுவோம்.
உலகைச்சுற்றி 80 நாட்கள் என்ற எச் ஜி வெல்ஸ் கதையில் கதை நாயகரின் உதவியாள், இடத்துக்குத் தகுந்தது போல் நேரத்தை மாற்ற மறுத்து விட அவரது கடிகாரம் லண்டன் நேரத்தையே காட்டுகிறது. கடைசியில் சரியான நேரத்தில் வந்து சேர முடியாததால் பந்தயத்தில் தோற்று விட்டதாக ஃபாக் நினைத்து வீட்டில் இருக்க, உண்மையில் கிழக்கு நோக்கிப் பயணித்து வந்ததால் ஒரு முழு நாளை இழந்து விட்டதாக அவர்களுக்கு தோன்றினாலும் உண்மையில் இன்னும் ஒரு நாள் இருந்திருக்கிறது.
நன்றாகச் சாப்பிட்டு விட வேண்டியது.
காலையில் எழுந்து பார்த்தால் குடிக்கத் தண்ணீர் இல்லை. அறைச் சேவை எண்ணை அழைத்தால் எடுப்பதற்கு ஆளில்லை. அப்புறமாக சாப்பிட்டு வந்து தண்ணீர் கொண்டு வரச் சொன்னால், தட்டின் மீது பாட்டிலை வைத்து 5 திராம் விலையுடன் கொண்டு கொடுக்கிறார்கள். வெளியே வாங்கினால் 1.50 திராம்தானாம். அப்புறமாக அறையை சுத்தம் செய்ய வந்த இளைஞர், 'இங்க தண்ணீ, டீ எல்லாம் வாங்கிக் குடிச்சிடாதீங்க, டீ வெளிய 0.75 திராம், இங்க 10 திராம். காலையில தனியாக் கட்டணம் கொடுக்கத் தேவையில்லாத பிரேக்ஃபாஸ்டை மட்டும் நல்லா சாப்பிடுங்க அப்புறம் வெளிய பார்த்துக்குங்க. மதுரா ரெஸ்டாரன்டில் எல்லாம் கிடைக்கும்' என்றார்.
ஐந்து ஆண்டுகள் ஆகிறதாம் இங்கு வந்து. ஒரே ஒரு முறை போய் விட்டு வந்திருக்கிறார். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து சென்னையில் குடும்பம், சொந்த வீட்டில். இங்கு மெழுகுவர்த்தியாகத் தேய்கிறார். 'குடும்பத்தை எல்லாம் கூட்டி வருவது நடக்காது, சார்' என்று விரக்தியாகச் சொல்கிறார். வளைகுடா நாடுகளில் தனிமையில் இருக்கும் நண்பர்கள் எழுதும் கவிதைகளின் சோகங்கள் புரிகிறது போல் இருக்கின்றது.
காலை உணவை ஒரு கை பார்க்கத்தான் செய்தோம். இத்தாலியன் பான் கேக் எனப்படும் சிறிதே இனிப்பான குட்டி தோசைகள், பரோட்டாக்கள், பிரெட் துண்டுகள், பழச்சாறு, காஃபி. இவை தவிர முட்டை ஆம்லெட், கோழி இறைச்சியிலான ஒரு தின்பொருள். அறை எண்ணைச் சொல்லி விட்டு விருப்பம் போல சாப்பிட வேண்டியதுதான்.
நாலைந்து குடும்பங்களாகச் சேர்ந்து சுற்றிப் பார்க்க வந்த குடும்பங்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். அதற்குள்ளும் உட்குத்து, விவாதங்கள் கேட்க முடிகிறது.
இணைய இணைப்புக்கு 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 1 திராம். 10 முதல் மதியம் 1 மணி வரை 2 திராம். ஒரு மணிக்கு மேல் அதிகாலை இரண்டு மணி வரை மணிக்கு மூன்று திராம்.
காலை நேரக் கட்டணத்தில் ஒரு மணி நேரம் செலவளித்தேன். இங்கு திருட்டுத்தனமாக போலி மென்பொருள் நகல்களைப் பயன்படுத்துவது முடியாது என்று பட்டது. விண்டோஸ் மில்லெனியம் பதிப்பு, மைக்ரோசாப்டு ஆபிசுக்குப் பதிலாக ஓப்பன் ஆபிசு. ஒரு கணினியில் ஓப்பன் ஆபிசு ஆவண உருவாக்கியை, எம்எஸ் ஆபிசு என்றே பெயர் கொடுத்து வைத்திருந்தார்கள்.
இந்திய மொழி எழுத்துக்களைக் காட்டும் இண்டிக் ஆதரவு நிறுவப்படாததால் தமிழ் எதுவும் தெரியவில்லை. இது மாதிரி கணினிகளில் தமிழ்மணம் மட்டும் நன்கு தெரிகிறது. அதற்கு என்ன தொழில் நுட்பம் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
காலையில் சிறிது நேரம் வேலை ஆரம்பித்தேன். செய்ய மீதி இருந்த வேலைகளைப் பட்டியல் போட்டால் கூட வந்தவர் தான் போய் மின்னஞ்சலில் அனுப்பி விடுவதாகச் சொல்லிப் போனார். அதன் பிறகு இறக்கி வைத்திருந்த உண்மை மனிதனின் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும், ஆங்கிலத்திலும் அந்தக் கதையின் மாயம் அப்படியே இருக்கிறது.
மதியம் சாப்பிட மதுரா விடுதிக்குப் போனோம். வெளி நாடு வந்தது போலவே இல்லை என்று கூட வந்தவருக்கு மனக்குறை. எங்கே கேட்டாலும் தமிழ்க்குரல்கள், சாப்பாட்டுக்கு நம்ம ஊர் விலையிலேயே நம்ம ஊர் சாப்பாடு (6 திராமுக்கு சப்பாத்தியுடன் முழுச் சாப்பாடு, சென்னை சரவணபவனை விடக் குறைவு), மளிகைக்கடைகள் நம்ம ஊர் பொருள் விற்கின்றன, குமுதம் இதழ் கூட வாங்கக்க கிடைக்கிறது.
நாளிதழ்கள் விற்பவை பெரும்பாலும் மேலே சொன்ன இந்தியர்களால் நடத்தப்படும் மளிகைக்கடைகள்தான் என்று பட்டது. மாலையில் வெளியே சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று துபாய் ஷாப்பிங் திருவிழாவைப் பார்க்கக் கிளம்பினார். எனக்கு பக்கத்தில் இருக்கும் இடங்களிலேயே தெருக்களைக் காலால் அளக்க ஆர்வம் அதிகம்.
அப்படியே போய் தெருத்தெருவாகப் புகுந்து ஒரு மணி நேரம் நடந்திருப்பேன். எல்லாக் காய்கறிகளுமே இறக்குமதி செய்யப்படுவதால் விலை அதிகம் போலிருக்கிறது. உருளைக்கிழங்கு 3 திராம் கிலோவுக்கு என்று சிறப்பு அங்காடி ஒன்றில் விற்பனை. இறைச்சியை தொங்க விட்டு சீவல் சீவலாக பொதிந்து கூடவே தேநீர் விற்கும் கடைகள், பெரிய பெரிய ரொட்டி போட்டு விலை 0.75 ஆக உயர்ந்து விட்டது என்று வெள்ளை உடை உடுத்த ஊழியர்கள் வெளியிலேயே போட்டு விற்கும் கடைகள், இந்திய உணவு என்று அமெரிக்க, ஐரோப்பிய உணவுகள் பெரிய விடுதிகளுக்குள் அடங்கியுள்ளன என்று பட்டது. ஒரே ஒரு தென்னாப்பிரிக்க பிட்சா கடையும், நேற்றே பார்த்திருந்த கேஎஃப்சியும்தான் கண்ணில் பட்டவை.
பெரிய ஊரின் ஒரு பகுதியை மட்டும் பார்த்து விட்டு எதுவும் புரிந்து கொள்ள முடியாதுதான். ஒரு கடையில் மடிக்கணினிக்காக ஒரு யுஎஸ்பி சுட்டெலி வாங்கிக் கொண்டேன். சாப்பிடுவதற்கு முந்தைய நாள் நம்மவீடு வசந்த பவனுக்கே போய் விட்டேன். நாட்டை விட்டு வந்து புதுப் பொறுப்பெடுத்து ஒரே மாதம் ஆகியிருந்த அந்த உணவக பொறுப்பாளர் சிறிது நேரத்துக்குப் பின் மேசையிலேயே நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்.
சின்ன வயதிலிருந்தே அவரது வாழ்க்கைக் கதையைச் சொல்லி, இன்றைய நிலையையும் சுருக்கமாகச் சொல்லி முடித்தார். 'ஓரிரு மாதம் கடுப்பாக இருக்கும், அப்புறம் பழகி விட்ட பிறகு வேலையில் மனம் ஈடுபட்டு விட்ட பிறகு சரியாகி விடும். ஓரிரு ஆண்டுகள் இருந்து விட்டு அப்புறம் திரும்பிப் போவதைப் பற்றி யோசிக்கலாம்' என்று சொன்னேன்.
'இந்தத் தடவைதான் இவ்வளவு குளிர், இல்லைண்ணா சூடாத்தான் இருக்கும்' என்று சொல்லியிருந்தார்கள். அதனால்தானோ என்னவோ, குளியலறையில் சுடுதண்ணீர் வந்தாலும், அறையைச் சூடாக்கும் கருவி வேலை செய்யவில்லை. கோடைக்காலத்தில் ஒரு குளிரூட்டப்பட்ட கட்டிடத்திலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவுதான் சுற்றிப் பார்க்கும் வழி என்று எழுதியிருந்தார்கள்.
கனத்த கம்பளியால் போர்த்திக் கொண்டாலும், உடம்பின் ஈரத்தை எல்லாம் உறிஞ்சி தோலை வறண்டதாக்கி விடும் குளிர் படுத்தத்தான் செய்கிறது. சிறப்பு உடைகள் எல்லாம் உடுத்த வேண்டிய அளவுக்கு பெருங்குளிர் இல்லாவிட்டாலும், சென்னை வெயிலுக்கும், இதமான குளிருக்கும் பழகிய நமக்கு சோர்வளிக்கும் குளிர்.
காலையில் ஒன்பது மணி விமானத்தைப் பிடிக்க வேண்டும். வரும் போது வாடகை ஊர்தியில் அதிக செலாவனதே என்று பேருந்து பற்றி விசாரித்தால் வெளியிலிருந்து வாடகை ஊர்தி பிடித்தால் 20 திராம் குறைவாகத்தான் ஆகுமாம். எந்தக் கட்டணத்திலுமே வரிகளும், சேவைக் கட்டணமும் சேர்ந்துதான் குறிப்பிடுகிறார்கள். அந்த 20 திராம் விமான நிலையத்தில் இறங்கி நகருக்குள் வரும் பயணிகளிடம் வசூலிக்கும் வரியாக இருக்கலாம்.
மொத்தத்தில் நல்ல ஊர், பார்த்தது வரை.

திங்கள், ஜனவரி 08, 2007
துபாய்
எமிரேட்ஸ் விமானச் சேவை நன்றாக இருந்தது. மேற்கு ஆசிய, கிழக்கு ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க முகங்கள் சேவைக்கு. புன்முறுவல்கள் ஒட்டப்பட்டவையாகப் பட்டாலும் குறை சொல்ல முடியாது சேவை. மறு சுழற்சி செய்யப்பட்ட காற்றினால் ஆன உட்புற சூழலில் அதிகாலை விமானத்தில் பயணம் செய்வது அயற்சி தருவது. ஒரு முறை சுற்றி வந்த காற்றையே ஆக்சிஜன் சேர்த்து மீண்டும் அனுப்பும் முறையினால் விமானப் பயணத்துக்கான செலவு குறைந்து விட்டாலும், பயணிகளின் உடல் நலனுக்குக் கெடுதல்தான்.
சரியான நேரத்துக்குத் தரையைத் தொட்டு விட்டது. இதமான தரை தொடல். அதன் பிறகு சில நிமிடங்களுக்கு சுற்றிச் சுற்றி வந்து, கடைசியில் தரையில் இறக்கி பேருந்துகளில் ஏற வைத்தார்கள். நேரடியாக முனையத்தில் இறங்க இடம் இல்லை போலிருக்கிறது. பேருந்து பத்து நிமிடங்களுக்கு மேல் பயணித்து முதல் நிறுத்தத்தில் தொடர்ந்து பயணம் செய்பவர்களை இறக்கி விட்டு விட்டுக் கடைசியில் துபாய்க்குள் போகிறவர்களுக்கான இடத்தில் இறக்கியது.
இரண்டு நாட்கள் கழித்துதான் அடுத்த விமானம். அதை மாற்ற முடியுமா என்று தொலைபேசினால், திரிபோலியிலிருந்து அவுகாதௌகு போகும் விமானச் சேவையைத் தொடர்பு கொள்ள வழியில்லாமல் திட்டப்படி இங்கேயே தங்கி செவ்வாய்க் கிழமை பயணத்தைத் தொடர முடிவு செய்தோம்.
தங்கும் இடம் பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்பியிருந்த விடுதிக்கு தொலைபேசி, அதற்கான ஆவணத்தை விமானச் சேவைக்கு தொலைநகலில் அனுப்பி வைக்குமாறு கேட்டோம். அப்படி அனுப்பினால்தான் இடைத்தங்கலுக்கான உரிமத்துக்கு ஏற்பாடு செய்வார்களாம். 'அப்படி எதுவும் வரவில்லையே, உங்களுக்கு பதிவு செய்யப்படவில்லையே. ஒன்பது மணிக்கு என் மேலாளர் வந்த பிறகுதான் சொல்ல முடியும்' என்று காத்திருக்க வைத்து விட்டார்.
ஒரு மணி நேரத்துக்கு அகதிகளாக காத்திருந்த சிறு கும்பல்களுக்கிடையே காத்திருப்பு. ஒன்பது மணிக்குப் பேசினால், 'மின்னஞ்சல் வரவில்லை, இப்போது கடவுச்சீட்டுப் பக்கங்களை தொலைநகலில் அனுப்பினால், பதிவு உறுதியை நாங்கள் அனுப்புகிறோம்' என்றார்கள். கடைசியில் விடுதிக்குப் போய்க் கேட்டால், மின்னஞ்சல் வரத்தான் செய்திருக்கிறது. ஆனால், யாரும் அதைக் கண்டு கொண்டிருக்கவில்லை. இணைய வசதி கூட இல்லாத குறைந்த விலை தங்கும் விடுதி.
உள்ளூர் தொலைபேசிக்கும் கட்டணம் இல்லை, கடவுச்சீட்டுப் பக்கங்களை நகல் செய்யவும், தொலை நகலில் அனுப்பவும் கட்டணம் இல்லை. ஒரு வழியாக விமான நிறுவனத்தின் தொலைநகலிக்கு தகவல் வந்து சேர உரிமத்துக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டோம். ஆளுக்கு 50 அமெரிக்க டாலர்கள்.
காத்திருக்கும் போது இலங்கையிலிருந்து நகை வேலை செய்ய வந்திருக்கும் ஒருவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். கொழும்புவுக்கு அருகில் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த நகைக்கடை குண்டு வைத்து அழிந்து விட்டதாம். திரைகடலோடி வந்திருக்கிறார். அவரை உள்ளே அழைத்துச் செல்ல வர வேண்டியவர் அடுத்த நாள்தான் வருவாராம். அதுவரை இந்த விமான நிலைய கூடம்தான் கதி.
குடியேற்றக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கும் விடுதியின் பெயரைக் கேட்டு விட்டு முத்திரை அடித்து அனுப்பி விட்டார்கள். சாமான்களை எடுத்துக் கொள்ளும் பகுதியில் பெட்டிகளை ஓரமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். தமிழில் தேடிக் கொண்டிருந்த எங்களைக் கேட்டு கடந்து போய்க் கொண்டிருந்த ஒரு ஊழியர் தமிழிலேயே வழி காட்டினார்.
வாடகை ஊர்தி வரிசையில் ஏறிக் கொண்டோம். 'வாகன நெருக்கமான வழியில் போனால் ஒரு மணி நேரம் ஆகும், வேகமாகப் போக சுற்றிப் போக வேண்டும் பத்து திராம் அதிகமாகும்' என்று கேட்டார். மெதுவாகப் போனால் போதும் என்று சொல்ல, மனதுக்குள் திட்டிக் கொண்டே ஊர்ந்து போகும் வாகன வரிசையைப் பிடித்தார். வழி முழுவதும் மகிழ்ச்சியே இல்லை அவருக்கு. கடைசியில் மீதிச் சில்லறை மூன்று திராமை வைத்துக் கொள்ளச் சொன்னதும் கொஞ்சம் மலர்ந்திருக்கலாம். பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடிப்படை வசதிகளுடன், தூய்மையான அறை. தொலைக்காட்சியில் சன் தொலைக்காட்சியும், வரிசையாக இந்தி அலைவரிசைகளும். சுடு தண்ணீர் உண்டு. குளித்து விட்டு வெளியே போகும் முன்னால், விடுதி முன்பதிவு செய்ய உதவியவரைப் பார்த்து நன்றி சொன்னேன். விடுதியின் கணக்காளராக வேலை பார்க்கிறாராம். மும்பையிலிருந்து வந்திருக்கிறாராம்.
தனியாக விடுதியிலேயே தங்கிக் கொள்கிறார். பொறுப்பும் அதிகம், காசும் நிறைய, தனிமையும் ஏராளம் இறுகிய மனம். அருகிலேயே நிறைய இந்திய உணவு விடுதிகள் உண்டு எங்கு போய்ச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்.
அந்த நேரத்தில் அவ்வளவு விரிவாகச் சாப்பிட வேண்டாம் என்று நினைத்துக் கொண்டே தெருக்களில் சுற்றி வந்தால், ஒரு இடத்தில் கேஎஃப்சி கிளை. ஏதோ பழைய நினைவில், இரண்டு பன்கள், உருளைக் கிழங்கு வறுவல்கள், முட்டைகோஸ் சீவல், மிரிண்டா பானம் என்று வாங்கிக் கொண்டேன். இங்குதான் தரம் சரியில்லையோ, எப்போதுமே இப்படித்தான், இப்போதுதான் உறைக்கிறதோ, எப்படி இத்தனை தடவை இது போன்று சாப்பிட்டிருக்கிறோம் என்று வியந்து கொண்டேன்.
அத்தோடு அறைக்கு வந்து தூங்கி எழுந்திருக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. கூட இருந்தவர் கொண்டு வந்திருந்த பிஸ்கட்டுகளைச் சாப்பிட்தோடு சரி, அப்படியே தூங்கி விட்டிருந்தார். ஒழுங்கான சாப்பாடு சாப்பிட்டு விட்டு தொடரலாம் என்று முகம் கழுவிக் கொண்டு வெளியில் போனோம்
காலையில் பார்த்திருந்த வசந்த பவனைத் தவிர்த்து இன்னொரு நம்ம வீடு வசந்த பவனை வழியில் கடந்தோம். இங்கேயே சாப்பிட்டு விடலாம் என்று நுழைந்ததும், மலர்ந்த முகத்துடன் ஒருவர் வரவேற்றார். பொதுவாக இது போன்று வெளிநாட்டில் இந்திய விடுதிகளுக்குள் நுழைந்தால், புன்னகைத்தால் காசு கேட்டு விடுவார்களோ என்று கடுகடுத்த முகத்துடன் வரவேற்பவர்களையே பார்த்திருக்கிறேன்.
இவர் இங்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறதாம். 'எங்கு வந்து மாட்டிக் கொண்டோம்' என்று சலிப்பு வந்திருக்கும் நேரம். திருநெல்வேலிக் காரர், நெற்றியில் மெலிதான குங்குமப் பொட்டு. 'முதலில் இப்படித்தான் இருக்கும். போகப் போகச் சரியாகி விடும்' என்று ஆறுதல் சொன்னோம். முழுச் சாப்பாடு என்று, சப்பாத்தி, சோறு, சாம்பார், ரசம் என்றும் மற்றபடி தோசை வகைகளும் இருக்க, மிதமான விலையில் நல்ல உணவு.
கணினி, கணினிப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் மேய்ந்து விட்டு நான் அறைக்குத் திரும்ப, கூட வந்தவர் இன்னும் சற்று நேரம் சுற்றி விட்டு வருவதாகப் போனார். அறைக்கு வந்து தூங்க ஆரம்பித்த பிறகு, 'தனியாகச் சுற்றுகிறாரே, எங்காவது மாட்டிக் கொண்டால், ஏதாவது சாகசம் செய்வதாக இறங்கி விட்டால்' என்று முட்டாள்தனமான அச்சங்கள் வர, அவர் திரும்பி வந்து கதவு திறக்கும் சத்தம் கேட்ட பிறகுதான் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போக முடிந்தது.
ஒரு நாளில் அவதானித்தது, பணியாள், கடை விற்பனையாள் என்று எந்த கீழ்த்தர வேலைகளிலும் பெண்கள் இல்லை. விமான நிலையத்தில் குடியேற்ற உதவி அலுவலகத்தில் பெண் அதிகாரி, அவருக்கு உதவியாக ஒரு பெண் என்று பார்த்தது.

அன்புருவாக
வயதாக வயதாக கொஞ்சம் கிறுக்கு பிடித்து விடும் போலிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கிண்டலாகப் பட்ட பலவற்றில் நம்பிக்கை வந்திருக்கிறது. அதை எல்லாம் எழுதி அவற்றுக்கு இன்னும் வலுக் கொடுக்க வேண்டியதில்லைதான்.
தூரப் பயணம் கிளம்பும்போது வரும் பரபரப்பைச் சமாளிப்பது ஒரு கலைதான். ஒரு கட்டத்தில் போவதற்கு பயணச் சீட்டு, கடப்பதற்கு கடவுச் சீட்டு செலவுக்குப் பணம் இந்த மூன்றும் இருந்து விட்டால் மற்றதை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டு அமைதியடைய வேண்டியதுதான்.
முந்தைய நாள் இரவு தூங்குவதற்கு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டிருந்ததால், காலையில் ஐந்துக்குத்தான் எழுந்திருந்து அரை மணி நேரங்களாக ஒரு மணி நேர எழுத்து. இன்னும் தொண்டையும், மூக்கும் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டிருக்கவில்லை. இணையத்தில் மேய்ந்து விட்டிருந்து விட்டு, பொதிந்து கொள்ளத் தேவைப்படும் துணிகளை நனைத்துப் போட்டுக் குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு அப்புறம் நாள் முழுவதும் பயணத்தைப் பற்றிக் கவலைப்படுவதுதான்.
ஒருவர் பயண அலுவலகத்துக்குப் போய் சீட்டு, செலாவணி வாங்கி வரத் தயாராக, வெளியில் போய் காசு எடுத்து காலுறைகளும், செருப்பும், சில தின்பண்டங்களும் வாங்கிக் கொண்டேன். இங்கிருந்து எவ்வளவு எடுத்துப் போக முடியுமோ அவ்வளவு நல்லதுதானே. திரும்பி வந்தவுடன் தாமதத்தைத் தவிர்க்க 6x4 செமீ, வெள்ளைப் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். மின்னணு புகைப்படக் கருவி மூலம் எடுத்த ஒரு மணி நேரத்தில் தந்து விடுகிறார்கள். அதையே யுஎஸ்பி சேமிப்பானில் கோப்பாக வாங்கிக் கொண்டேன். வெட்டி, அளவு குறைத்து, கூகிள் வரையறைக்குக் குறைக்கும் போது அரைகுறையாக ஆகி விட்டிருந்தது.
உள்ள, உண்மையான முகத்தைப் போடுவோம் என்று போட்டு விட்டேன். மதியம் முழுவது, துபாயில் தங்குவதற்கு இடம் பிடிப்பதில் கழிந்தது. இணையத்தில் முயன்று, பயண அலுவலகத்தில் அவர்கள் முயன்றதாகச் சொல்லி, எதுவும் நடக்காமல் ஒரு நண்பரின் துணையுடன், அவரது அண்ணன் மூலம், நேரடியாக துபாய் ரஷ் இன் விடுதியில் குறைந்த செலவில் தங்க இடம் ஏற்பாடு ஆயிற்று.
நான்கு மணிக்கு இணைய வழி உரையாடல். அது சூடு பிடித்தாலும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நிறுத்தி விட்டு கிளம்பும் ஆயத்தங்களை ஆரம்பிக்கும் முன்னால் கொஞ்சம் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம் என்று போய் ஆனந்த விகடனுடன் இட்லியும் தோசையும் டாடா உடுப்பி விடுதியில். நள்ளிரவு ஒன்றரை மணிக்கு வருமாறு வாடகை ஊர்தியையும் ஏற்பாடு செய்து கொண்டேன்.
புதிய ஆண்டிலாவது, சொன்னதைச் செய்வது, செய்வதை மட்டுமே சொல்வது என்று கடைப்பிடிக்கப் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம். பின்னூட்டங்கள் அனைத்துக்கும் முடிந்த வரை உடனுக்குடன் பதில் அளிப்பது, ஏற்றுக் கொண்ட பொறுப்புகளைத் திறம்படச் செய்வது என்று ஆரம்பிக்கலாம். முடியாது என்று படுபவற்றை ஆரம்பத்திலேயே அன்பாக மறுத்து விட வேண்டியதுதான்.
பெட்டியில் பொருட்களை அடுக்கி வைத்தால் ஒரு சின்ன பெட்டி, தங்கையின் பொருட்களைத் தாங்கிய இன்னொரு பை. புர்கினா ஃபாசோவிற்கு அருகில் கானாவில்தான் அவர்கள். அவுகாதௌகுக்கும், அக்ராவுக்கும் இரண்டரை மணி நேரம் விமானப் பயணமாம். இருக்கும் நெருக்கடியில் நேரில் போவது சாத்தியமில்லாமல் போனாலும், பொருட்களைச் சேரக்க ஏற்பாடு செய்து விடலாம். அவளும் இரண்டு தடவை தொலைபேசி விட்டாள். உறவுகள் என்பது வரம். சகோதரிகளும், சகோதரர்களும், அவர்களது துணைகளும் அன்பைச் சொரியும் வரம்.
கணினியில் நகல் எடுக்க வேண்டிய கோப்புகள், செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல், போட வேண்டிய கையெழுத்துகளின் வரிசை என்று போனது. காலையில் பொருளாகச் செய்ய விரும்புவது பற்றிய பதிப்பில் எழுதியதை ஒட்டி, சில நாட்களாகப் பேசாமல் இருந்த ஒரு வாடிக்கையாளரை தொலைபேசியில் துரத்திப் பிடித்து பேசியே விட்டேன். மிக நட்பாகப் பேசினார். நமது அருமை உணர்ந்து பேசினார். அதற்கு அடுத்த வாரம் செய்ய வேண்டிய பொறுப்புகளை விளக்கினேன்.
அடுத்ததாக எடுத்துச் செல்ல சின்னச்சின்ன பொருட்களை சேகரித்துக் கொண்டேன். காகிதம், நிறுவன பெயரிட்ட காகிதம், உறைகள், எழுதுகருவிகள், தேவையான இணைப்பு வடங்கள் என்று இங்கு எளிதில் கிடைத்து விடும், வெளியூரில் காசை பிடுங்கி விடும் பொருட்களை எடுத்துக் கொண்டேன். காலையிலேயே போகின்ற இடத்தில் துணி துவைக்க சோப்புத் தூள், குளியல் சோப்பும் வாங்கிக் கொண்டிருந்தேன்.
அப்புறம் இணையத்தில், கைகழுவும் இடத்தில் விமானங்களில் இருக்கும் குறிப்பைக் கொண்டு ஒரு பதிவும், வெகு நாட்களாக பதிலளிக்காமல் தங்கியிருந்த தோல் நிறம் குறித்த தமிழரின் தாழ்வுணர்ச்சியைப் பற்றிய பதிவுக்கான பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்கும் விதமாக இரண்டாவது பகுதியையும் வெளியிட்டுக் கொண்டேன்.
பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தவர்களுக்கு நன்றி. வயது முதிர்ந்தவர்களின் ஆசிகள் நிறைவைத் தந்தன. இன்று காலையிலிருந்து மகம் நட்சத்திரம். புதிதாக வந்திருந்த நாட்காட்டியில் விபரம் பார்த்ததில் காலை மூன்றரை மணிக்கு மகம் ஆரம்பிக்கிறது. கிளம்பும் விமானத்தின் புறப்படும் நேரமும் 3.30 தான். தற்செயல்? அல்லது ஏதோ கடவுளின் செய்தியோ! :-)
ஐந்தாம் தேதியே வந்திருந்த சீட்டுக் கட்டு மூலம் வாழ்க்கையை அலசும் தளத்தின் இலவச பரிசான 11 சீட்டுக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது அலசலைப் படித்து பொழுது போனது. இப்படியே போனால், இமயமலைக் காடுகளில் மூலிகை தேடிப் போக ஆரம்பித்து விட வேண்டியதுதான். எடுத்த சீட்டுக்களில் ஒன்று அது போன்ற பக்கிரியின் படம் :-)
பத்து மணிக்கெல்லாம், குட்டித் தூக்கத்துக்கு ஒதுங்கிக் கொண்டேன். பன்னிரண்டு மணிக்கு மீண்டும் விழிப்பு. எழுந்து கடைசி நேரப் பொதியல்களை முடித்துக் கொண்டு ஒரு மணிக்கு வண்டி வந்து விட ஒன்றே காலுக்குக் கிளம்பி விட்டோம். ஃபாஸ்ட் டிராக் சேவையின் வண்டி. வெளியில் மட்டும் நல்ல மஞ்சள் நிறம், வண்டி டப்பாவாகியிருந்தது.
நீண்ட வரிசையில் நின்று பயண அட்டையைப் பெறுவதற்கு முக்கால் மணி நேரம். நாங்கள் நின்றிருந்த வரிசையைக் கையாளும் அம்மாவின் சுறுசுறுப்பால் எல்லா வரிசைகளும் முடிந்து ஒவ்வொருவராக வேறு வரிசைகளுக்குப் போய், கடைசி இரண்டு மூன்று பேராக அட்டை வாங்கிக் கொண்டோம். அப்புறம் குடியேற்றத் துறை சோதனைக்கு இன்னொரு வரிசை.
அங்கும் தாமதமாகி வந்ததால் ஏறும் கதவின் அருகில் காத்திருப்பும், வரிசையில் நிற்றலும் இல்லாமல் நேராக உள்ளே போக முடிந்தது. சென்னை விமான நிலையத்தில் வசதிகளும், சேவைகளும் முன்பை விட மிக சுறுசுறுப்பாகி இருக்கின்றன. விமானத்தின் முன் பகுதியிலேயே பத்தாம் எண் இருக்கையில் இடம். மூன்றாவது வரிசை. சரியாக துரத்தியிருந்தால் கடைசி இருக்கைகளில் குறைந்த கட்டணத்தில் கிடைத்திருக்கலாம். சரி, கிடைத்ததை அனுபவிக்க வேண்டியதுதான்.
அந்த நேரத்திலேயே இந்துவின் முதல் பதிப்பைக் கொண்டு வந்திருந்தார்கள். கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா மூன்றாவது பந்தயத்தில் வென்றே விட்டது. அஸ்ஸாமில் கொலை வெறி.
விமானத்தின் இருக்கையின் பின்புறம் பொருத்தப்பட்ட திரையில் நூற்றுக்கணக்கான ஓடைகள். விமானத்தில் முன் பக்கம் நோக்கி, கீழே நோக்கி வைக்கப்பட்ட படக் கருவிப் பார்வை என்ற ஓடைகள் பார்க்கலாம் என்றால் இயங்கவில்லை. வரிசையாக மேய்ந்து கொண்டே வந்து. The Queen என்ற பிரித்தானிய படம். பிரிட்டனில் எடுக்கப்பட்ட படங்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
அந்த வரிசையில் முதலில் ஈர்த்தது, ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற முதல் எலிசபெத. ராணிக் காலத்திலய கதை. ராஜா ராணிகள் எல்லாம் அசடுகளாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தற்கு நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய அந்த ராணியின் கூரிய அறிவும் திறமையும் வியப்பாக இருந்தது. அடுத்து பார்த்த இங்கிலாந்து படம், நாட்டிங் ஹில் என்ற ஜூலியா ராபர்ட்ஸ், டாம் (யாரோ) நடித்த படம். அதையும் விமானங்களில் துண்டு துண்டாகப் பார்த்தது.
இன்றைக்கு இந்தப் படம். டோனி பிளேர், எலிசபெத் ராணி, டயானாவின் இறப்பு என்று சமகால நிகழ்வுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கதை. ஒவ்வொரு பாத்திரத்தின் குணங்களை திறமையாக வெளிக் கொண்டிருந்தார்கள். ராணி, அவரது அம்மா, கணவர் டியூக் ஆஃப் வின்ட்சர், இளவரசர் சார்லஸ், ராணியின் தனி உதவியாளர், செரி பிளேர் என்று பொருத்தமான் பாத்திரமாக்கங்கள்.
முதலில் ஒதுங்கியிருந்து விட்டு, ஒருவரின் துன்பத்தையும் கிண்டி சுகம் காணும் பிரித்தானிய பத்திரிகை உலகின் குடைச்சல்களால், பிளேரால் தூணடப்பட்டு ராணி அரண்மனைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பூங்கொத்துகளில் டயானவுக்கு அன்பு தெரிவுக்கும் அதே நேரத்தில் அரச குடும்பத்தை குதறும் வாக்கியங்களைப் பார்த்து விட்டு திரும்பி, கையில் மலர்க்கொத்தோடு நிற்கும் ஒரு சிறுமியிடம், தன்னிடம் கொடுத்தால் அதை வைத்து விடுவதாகக் கேட்க, அந்தக் குழந்தை கொடுக்க மறுத்து விடுகிறது. தனது குடிமக்களைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே, ஏன் இவ்வளவு வெறுப்பு என்று மனம் உழற்சியுறும் அந்த மூதாட்டி அவமானத்தை அடக்கிக் கொண்டு நகர, அந்தக் குழந்தை இது உங்களுக்குத்தான் என்று பூங்கொத்தை நீட்டுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் முக பாவங்களிலேயே மனதை கொட்டி விடுகிறார். அந்த நடிப்பின் ராணி.
ராணிக்கு ஆதரவாக பிளேர் தனது சக ஊழியர்களிடம் கத்தி பேசி விட்டு வெளியேறுவது, இறுதிக் காட்சியில் இருவருக்கும் இடையே நட்பு மலர்வது என்று கவிதையான படம். 'உன் அம்மா இருந்திருந்தால் இதே வயதுதான் இருக்கும்... அதானோ...' என்று செரி பிளேர் தன் கணவனின் அரசிக்கான ஆதரவை மனவியல் விளக்கமாக சொல்வது, 'அவள் தன் உணர்ச்சிகளைக் காட்ட தயங்கியதே இல்லை, மனத்தளவிலும் சரி, உடலளவிலும் சரி, சிறந்த அம்மாவாக இருந்தாள்' என்று இளவரசர் சார்லஸ் தனது தாய் அரசியிடம் சொல்வது என்று கனமான பொருட்களை மென்மையாகச் சொல்லி மனதைத் தொட்டு விடுகிறார், இயக்குநர்.
'நீங்கள் பட்டம் ஏற்ற போது சின்ன வயது இல்லையா' என்று டோனி பிளேர் கேட்கும் போது, முதலில் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டாலும், ஓரிரு நிமிடங்களில் 'ஆமாமா, சின்னப் பொண் நான்' என்று இளகுவது, காட்டில் மானைப் பார்த்து மலர்ந்த முகத்தை விநாடிகளில் மீண்டும் இறுக்கிக் கொள்வது என்று ஒரு அரசக் குடும்பத் தலைவரின் மனிதப் பக்கத்தை அழகாகக் காட்டியிருப்பார்.
ஒன்றரை மணி நேரம் ஓடிய கவிதை அது.
சாப்பிட பொங்கலும், பன்னும், பழ வெட்டுகளும், ஆரஞ்சு சாறும், காபியும் கிடைத்தன. அப்படியே இன்னும் இரண்டு மணி நேரம் இருப்பதால், மடிக்கணினியை விரித்து எழுத உட்கார்ந்து விட்டேன். ஏழாயிரம் அடி உயரத்தில் பதிவு எழுதியாச்சு.

சனி, ஜனவரி 06, 2007
தொல்லைகள் எல்லாம் மறந்த...
நேற்று பிறந்த நாள், ஆங்கில தேதிக் கணக்கில். எங்கள் வீட்டில், சூரியக் கணக்கிலான தமிழ் மாதத்தில் சந்திரக் கணக்கிலான நட்சத்திர நாள் அன்று பிறந்த நாள் கொண்டாடுவோம். கல்லூரியில், வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு ஆங்கில நாள்கணக்கு மட்டுமே மிஞ்சுகிறது.
காலையில் நன்கு தூங்கி நிதானமாக எழுந்திருந்தேன். முந்தைய நாள் இரவு சோர்வில் அப்படியே படுத்து உறங்கி விட்டிருந்த குறையை ஈடு செய்ய அரை மணி நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று அமைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இருபது நிமிட விழிப்புக்குக் காத்திருக்காமல் பதினைந்து நிமிடங்களில் நிறுத்தி வைத்துக் கொண்டு எழுந்து விடும் வழக்கத்தைத் தாண்டி இருபத்தைந்து நிமிடம் வரை ஓடியது. மணி அடிக்கும் வரை உட்கார வேண்டும் என்று விடாப்பிடியோடு தொடர்ந்ததில் எதிர்பாராத இடத்தில் மணி அடித்தது.
வாழ்த்துக்கள், ஒரு புது சட்டை, மதியத்துக்கு மேல் கேக், மாலையில் சிற்றுண்டி - கூடவே கூட்டு குறிக்கோள் உருவாக்கம் என்று நாள் அடையாளங்களுடன் ஓடியது. 'இன்றோடு முழு முடிவு' என்று நினைத்திருந்ததும் முடிந்தது.
'ஒன்பதரை மணிக்கு கிங் நிலையத்தில் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுவார்கள், சீக்கிரமே போனால் நல்லது' என்று எட்டரை மணிக்குக் கிளம்பி விட்டோம். ஒன்பது மணி முதல் வரிசையைப் பிடித்து பதினொரு மணி வரை நேரம் பிடித்தது. கரையான் அரித்துத் தின்றிருக்க வேண்டிய பழைய அலுவலக நடைமுறை. கையில் வரிசை எண் கொடுக்க ஒருவர், பதிவேட்டில் பதிய ஒருவர், கட்டணத்தை வாங்கிப் போட ஒருவர், என்று தேவையில்லாமல் நேரத்தை இழுத்தடிக்கும் வழிமுறை. கடைசியில் மருத்துவர் ஊசி போட பத்து நிமிட வேலையை ஒழுங்கு படுத்த மூன்று பேர் முப்பது பேரை சில மணி நேரங்கள் இழுத்தடித்தார்கள்.
கடைசி நிமிடம் வரை பயண ஏற்பாடுகள், பொதி கட்டலை ஒத்திப் போடுவது என்பது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. அதை எப்படி நியாயப்படுத்தலாம் என்றும் ஒரு எண்ணம்.
ஓசை செல்லா சென்னை வரவிருப்பதை தொலைபேசியிருந்தார். காலையில் அழைத்து மதிய வேளையில் அலுவலகத்தில் பார்க்கலாம் என்று பேசியிருந்தோம். எப்படியும் மாலையில் பெரியமேட்டுக்குப் போக வேண்டியிருப்பதால், அதற்குப் பிறகு அவர் தங்கியிருக்கும் எழும்பூர் அறையிலேயே சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.
வாகன நெரிசலில் பெரியமேடு போய்ச் சேர ஒன்றரை மணி நேரம். சரியான நேரத்தில் போய்ச் சேர சந்திக்க வேண்டியவர் ஒரு மணி நேரம் தாமதம். அது வரை இன்னொரு அலுவலரிடம் பேசிக் கொண்டிருந்தோம். செய்து வைத்திருக்கும் திட்டத்தை வாடிக்கையாளரிடம் முன் கூட்டியே விவாதித்து அவர்களது தேவைகளையும் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு நல்ல சான்றுகள் கிடைத்தன.
'இன்னொரு வாடிக்கையாளரிடம் பேசிய போது உங்கள் சேவை சரியில்லை என்று கூறினாரே' என்று இவர் கூற அதை உடனடியாக விசாரிப்பதாக உறுதியளித்தேன்.
எட்டு மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்து இம்பாலா லாட்ஜுக்கு வந்து செல்லாவின் அறையை அடைந்த போது ஏற்கனவே தொலைபேசியிருந்த படி டோண்டு ராகவனும் வந்திருந்தார். செல்லா தனக்கு நிறைவளிக்கும் வேலையில் நேரம் செலவிடும் நிறைவில் பூரித்திருந்தார். கடைசியாகப் பார்த்ததை விட முகத்தில் வளம், கண்களில் மலர்ச்சி என்று சந்திக்கவும் பேசவும் புத்துணர்ச்சி கொடுக்கும் தோற்றம்.
பேசிக் கொண்டிருக்கும் போது அருள் குமாரிடமிருந்து தொலைபேசி. டோண்டு சார், தன்னுடைய ஹைப்பர் லிங்கிங் மூளை நுட்பங்கள், மொழி பெயர்ப்பு வேலைகள் குறித்தக் குறிப்புகள் என்று நிறைய விளக்கினார். செல்லா வாங்கி வைத்திருந்த ஆரஞ்சு பழத்தில் ஒரு பகுதியை தீர்த்து விட்டு, ஒன்பது மணிக்குப் பிறகு சாப்பிடக் கிளம்பினோம்.
பகலில் இனிப்பு, மாலையில் கட்லெட் என்று தேவைக்கு அதிகமாகவே உள்ளே போயிருந்தும், இந்த வாய்ப்பிலும் இட்லி, தோசை என்று சாப்பிட்டுக் கொண்டேன். பத்தே காலுக்குக் கிளம்பலாம் என்று வண்டியை எடுக்க வரும் போது நின்று கொண்டே முடிக்க மனமில்லாத நீண்ட பேச்சில் பதினொரு மணி ஆகி விட்டது. ஒரு வழியாகக் கிளம்பி குளிரில் வண்டியை ஓட்டிக் கொண்டே வந்து தூங்கும் போது நள்ளிரவு தாண்டி விட்டிருந்தது.
A9 சாலையைத் திறக்கக் கோரும் விண்ணப்ப மனுவில் தான் வாங்கிய கையெழுத்துக்களை அனுப்புவதாக சொன்ன தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து நானும் முயற்சிகளை முடுக்கி விட்டு அலுவலகத்தில் கையெழுத்துக்கள் தேறின. ஜனவரி 26 வரை தொடர்ந்து அப்புறம் மொத்தமாக அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்தோம்.

சுயமுன்னேற்றம்,
வலைப்பதிவு
வியாழன், ஜனவரி 04, 2007
இன்றைக்கு கதை கந்தல்தானா?
காலையில் எழுந்திருக்கும் போதே தெரிந்து விட்டது. இரவு பன்னிரண்டு மணிக்கு முதல் விழிப்பு. ஒரு மணி நேரம், ஒன்றரை மணிநேரம் என்று மணி பார்த்து எழுந்திருக்கும் போது ஐந்து அடித்து விட்டிருந்தது.
உடம்பு சூட்டில் வலது கண் பொங்கி எரிந்தது. இன்றைய பொழுது அம்போதான் என்று தோன்றியது. முந்தைய நாளின் முழு நிறைவுக்குப் பிறகு ஒரு இழுத்துப் பிடிப்பு தேவைதானோ!
இதைப் போல அதிகாலை உள்ளுணர்வுகள் கடுப்படிப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. இந்தூரில் வேலை பார்க்கும் போது காலையில் எழுந்து பேருந்துக்குப் போகும் போது குறிப்பிட்ட புள்ளியில் தோன்றும் உணர்வைப் பொறுத்துதான் அன்றைய நாள் அமையும் என்று உருவகித்துக் கொண்டேன். தானாக நிறைவேற்றிக் கொள்ளும் நம்பிக்கையாகவோ, எப்படி இருந்தாலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் புத்தியினாலோ, சில நாட்களில் அது தவறாமல் நடப்பதாக நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.
அதனுடன் போராடி, விளையாடி, சீண்டிப் பார்த்து ஒரு வழி பண்ணினேன். எதிர்மறை எண்ணம் வந்தால் உடனேயே நல்ல எண்ணத்தை வலுவில் நுழைத்து அதன் விளைவு என்ன என்று பார்ப்பது, நல்ல எண்ணம் வரும் போது, எதற்கு வருவதைக் கெடுப்பானேன் என்ற தோன்றினாலும், எதிர்மறையை நுழைப்பது என்று பல சோதனைகளைச் செய்து இந்த அதிகாலை உள்ளுணர்வுகளை அவற்றுக்கு உரிய இடத்தைக் காட்டி மூலையில் உட்கார வைக்க முடிகிறது.
ஒரு மணி நேரம் எழுத அமைத்து விட்டு ஆறரை மணிக்குள் முடித்து விட்டேன். அப்புறம் தலைக்குக் குளிக்காமல் உடம்பை மட்டும் குளித்து விட்டு வந்தது முதல் தவறான தேர்வுகள். திங்கள் கிழமை போட்ட சட்டை, செவ்வாய்க் கிழமை உறுத்தாமல் போட்டது, நேற்றும் அவ்வளவு அழுக்காகாதது போலத் தோன்றியது. கை விளிம்புகளிலும், கழுத்துப் பட்டையிலும் அழுக்கை போட்ட பிறகு உணர முடிந்தது. துணியிலும் அங்கங்கே திட்டுத் திட்டாகத் தெரிகிறதோ என்ற சந்தேகம்.
சாப்பிடப் போகும் போது அடுத்த சறுக்கல். ஆச்சிஸ் கிச்சன் காலை வேளையில் எதுவும் இருக்காது, சோம்பேறிகள் எட்டு மணிக்கு மேல்தான் எல்லாம் ஆரம்பிப்பார்கள் என்று தெரிந்தும் அங்கே போய் அரைகுறையாகத் தயாராகியிருந்த, அப்போதுதான் மேசை/தரை துடைத்துக் கொண்டிருந்த இடத்தில் போய் இருந்த பருப்பே தெரியாத பொங்கல் சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
போதாத குறைக்கு திரும்பி இன்னொரு விடுதியில் ரவை தோசை கேட்டால் முறுகலாக முறுக்கு போல வந்தது. கதை கந்தல்தான் என்று வந்து வேலைகளை ஆரம்பித்தேன்.
மாணவப் பயிற்சியாளர்களுக்கு முதல் நாள். ஒருவர் ஒரு மணி நேரம் தாமதமாக வர, எல்லோரிடமும், ஒரு ஆரம்ப உரையாடி விட்டு அவர்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள். இதற்கிடையே இரண்டு நாளாக ஒருவர் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பச் சிக்கலில் என் கைவரிசையைக் காட்டுகிறேன் என்று உட்கார, அது பாதியில் எதிர்பாராத இடத்தில் இடக்கு பண்ணி நின்று போனது.
வாடிக்கையாளர் ஒருவருக்கு தொலைபேசியதில் பெரிய வாக்குவாதம். பெருமுயற்சி செய்து அவரிடம் பணிவாகப் பேசி அடுத்த வேலைக்கு நகர முடிவு செய்தோம். எரிச்சல் மண்டிக் கொண்டே வந்தது. அலுவலகத்தில் தொடர்ந்து இருந்தால் யாராவது மாட்டிக் கொள்வார்கள் என்று பயண அலுவலகத்துக்குப் போய் ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு அப்படியே அமெரிக்க நூலகத்தில் புத்தகங்களை மாற்றிக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன்.
பையில் எடுத்து வைக்கும் போது நான்கு புத்தகங்களை வைத்தேன். அப்போதே உறுத்தல். வழியில் எடுத்துப் பார்க்கும் போதுதான் தெரிந்தது நான்கில் ஒன்று நூலகப் புத்தகத்துக்குப் பதிலாக வேற்று புத்தகம். சரி, அதை நீட்டித்துக் கொள்ளலாம் என்று பயண வேலைகளைப் பார்க்கப் போனேன்.
அங்கு நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு தூக்கம் போதாத கண்களுடன், படியாத தலைமுடியுடன் ஊழியர் வரவேற்றார். அது தொடர்பான அழுத்தங்கள் அவருக்கு. வரிசையாக தொலைபேசி அழைப்புகள். கடைசியில் கடவுச் சீட்டை மட்டும் வாங்கிக் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை அவரிடமே ஒரு தாள் வாங்கி எழுதிக் கொடுத்து விட்டேன்.
ஏழாம் தேதியே கிளம்பி இணைக்கும் விமானச் சேவை இல்லாததால் ஒன்பதாம் காலை வரை துபாயில் காத்திருக்க வேண்டியதைத் தவிர்க்க 8 அல்லது 9 அன்று சென்னை துபாய் விமானத்தில் இடம் பிடிப்பது, அப்படிக் காத்திருக்க நேர்ந்தால் தேவையான நுழைவு அனுமதி, தங்குமிடம் ஏற்பாடு செய்வது, கூட வருபவரின் திரும்பும் பயணத்தை மாற்றி அமைப்பது, எனக்கு திரும்பி வந்ததும் சவுதி அனுமதி வாங்கி, பயண ஏற்பாடுகள் செய்வது, இவை அனைத்தையும் அவரது கவனத்தைப் பிடித்து சொல்லி முடிக்க ஓரிரு மணி நேரம் ஆகியிருக்கும்.
முதல் புத்திசாலித்தனமான வேலை என்று என்னை நானே பாராட்டிக் கொண்டு திரும்பும் வழியில் அமெரிக்கன் நூலகம். வெளிச் சோதனை எல்லாம் முடித்து நூலகம் போகும் படியில் ஏறும் போது, ஒரு பெண்மணி எனக்கு முன்னால் படியில் ஏறிக் கொண்டிருந்தார். இந்திய முகம், முகத்தை அறையும் உதட்டுச் சாயம், நடுத்தர வயதைத் தாண்டி விட்ட அதை மறுக்க முயலும் ஒப்பனைகள், பருத்த புடவை சுற்றிய உடம்பு. கழுத்து வரை வெட்டிய தலைமுடி.
நூலகத்துக்குள் நுழையும் இடத்தில் ஒரு பாதுகாப்புக் காவலர் அமர்ந்திருப்பார். அங்கும் பெயரும் முகவரியும் எழுத வேண்டும். வெளியில் ஒரு முறை, கதவுக்குள் நுழைந்து ஒரு முறை, பை கொடுக்கும் இடத்தில் ஒரு முறை, அங்கிருந்து கட்டிடம் நோக்கி நடக்கும் போது வழியில் நிற்கும் காவலரின் முறைப்பில் ஒரு முறை, கட்டிடத்தில் நுழைந்ததும் வரவேற்பில் உட்கார்ந்திருக்கும் சீருடைக் காவலரின் கேள்வி ஒரு முறை என்று முடித்து விட்டு இந்தப் புள்ளிக்கு வரும் போது எல்லோருக்குமே அலுப்பு தோன்றி விடும்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமது அலுப்பை வெளிப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ஓரிரு முறை பழகி விட்ட பிறகு ஒரு விறைப்பாக செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டியதைச் செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள் பெரும்பாலானோர். முதல் முறை எல்லோருக்குமே சோதனைதான்.
இந்த அம்மா, அமெரிக்காவின் உரத்த குரலை வெளிப்படுத்தினார். எல்லாமே ஆங்கிலத்தில், அவர் முடித்து விட்டு நகரும் போது காவலுக்கு உட்கார்ந்திருந்தவருக்கு பாதி உயிர் நைந்து விட்டிருந்தது.
"அப்போ, நீதான் இங்ங்க காவலாளி. ஊஊம்....?" உரத்த குரலில், அதட்டல்
"ஆமாங்க"
"சரி, இங்க என்ன செய்யணும்????????"
"இதில ஒங்க பேரும் முகவரியும் எழுதணும்"
"ஹும்...!" பெயரை கிறுக்குகிறார். "இப்போ போகலாமா" இன்னும் உரத்த குரல்.
"இங்க முகவரி எழுதணும், அம்மா!"
"ஹாங், முகவரியா? என் முகவரி எழுதச் சொல்றியா? இந்தியா முகவரியா... எனக்கு இங்க முகவரியே கிடையாது, என்ன செய்ய..." எழுத ஆரம்பிக்கிறார். "அல்லது என்னுடைய அமெரிக்க முகவரியை எழுதவா.."
"எழுதுங்க.." ஏதாவது எழுதித் தொலை.
எழுத ஆரம்பித்ததை அடித்து விட்டு, இன்னொரு முகவரியைக் கிறுக்கி விட்டுப் போகிறார்.
அடுத்தது என் முறை. அவர் பெயர் படிக்க முடியவில்லை. முகவரியில் லாஸ் வேகாஸ் என்று மட்டும் தெரிகிறது. அடுத்தவங்க சொந்த விபரங்களைப் பார்த்தாய் என்று அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு, 'அமெரிக்காவில் இருந்து விட்டு வந்தாலே இந்த பெரிய வாய் வந்து விட்டதோ' என்று சொன்னதை அந்தக் காவலர் புரிந்து கொள்ளவில்லை.
நூல் பரிந்துரைகள், In search of excellence என்று மேலாண்மை சிந்தனைகளைப் புரட்டிப் போட்ட எழுபதுகளின் நூல் ஒன்று, 1930களிலிருந்து அமெரிக்க அதிபர்களைப் பற்றிய ஒரு நூல் என்று எடுத்துக் கொண்டு வெளிப்பட்டேன்.
ஜனவரி 1 அன்று அனுப்ப முயன்று போக மறுத்த குறுஞ்செய்தி பதினெட்டு முறை போக மறுத்தது என்று அணைத்து வைத்திருந்த கைபேசிக்கு உயிர் கொடுத்ததும் சொன்னது.
அண்ணாசாலை, பாண்டி பஜார், பனகல் பூங்கா சுற்றி, கோடம்பாக்கம், கலைஞர் நகர் வழி. வழியில் வெட்டிய் பப்பாளிப் பழங்கள். மண்டை ஓரளவு குளிர்ந்திருந்தது.
திரும்பி வந்து பார்த்தால் மதியம் சாப்பிடாத சாப்பாடு நிறைய மீந்திருந்தது. வேலைகளை முடித்து ஐந்தரைக்கு அதை ஒரு வெட்டு வெட்டினேன்.
மாணவப் பயிற்சியாளர்கள் நம்ம ஊரின் மந்திரமான புதிய கருவி கற்கும் வேலையில் இறங்கி விட்டிருந்தார்கள். நாளைக்கு திறமைகளில் ஒன்றாக PHPஐயும் போட்டுக் கொள்வதுதானே முக்கியம். இரண்டு நிமிடங்களுக்கு திட்டப் பணியை முடிப்பதற்கு சரியான திட்டமிட வேண்டியதன் தேவையை விளக்கி முதலில் ஐந்து மாதமும் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு வழித் திட்டம் வாரம் தோறும் முடிவு அளக்கும் படியாக உருவாக்கி விட்டு வேறு வேலைகளைப் பார்க்கச் சொன்னேன்.
அடுத்த ஒரு இரண்டு மணி நேரத்தில் அதைச் செய்து, இன்னும் ஒரு நாள் எடுத்துக் கொண்டு விபரமான திட்டம் உருவாக்குவதாகச் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.
'மாமா பையன் ஒருவன் சென்னையில் இருக்கிறான், கொஞ்சம் உதவி செய்யேன்' என்று அம்மா சொல்லியிருந்தார்கள். மாமாவே தொலைபேசி முந்தாநாள் சொன்னார். அவன் காலையில் பேசினான். மாலையில் வந்து பார்க்கச் சொன்னேன். நெருங்கிய உறவினரை வேலைக்கு வைத்துக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆரம்பத்திலேயே சரியான புரிதல் இருந்து விட்டால் பின்னால் வருத்தங்களைத் தவிர்க்கலாம்.
சரியாகப் பார்த்துப் பழகியிராத உறவு. சின்ன வயதில் ஏதோ சின்னப் பையன் என்று பார்த்துப் போயிருந்த உறவு. உயரமாக வளர்ந்து பொறியியல் பட்டம் முடித்து நிற்கிறான். மின்னணுத் தகவல் தொழில் நுட்பத் துறை.
திறமையாகப் பேசி சொந்த நலனைப் பார்த்துக் கொள்ள ஆங்கிலத்தில் அடித்து விடத் தெரியாது. இப்போது செய்யும் வேலையில் குறைந்த சம்பளம், வாரத்துக்கு ஏழு நாட்கள், நாளுக்கு கிட்டத்தட்ட இருபத்திநான்கு மணி நேர வேலை. செல்பேசிக் கோபுரங்களை நிறுவும் குத்தகையாளரிடம் நிறுவிய பிறகு மென்பொருள் வடிவமைக்கும் வேலை. மடிக்கணினியில் வேலை பார்க்க வேண்டியதுதான்.
'கடினமாக உழைக்க வேண்டியதுதான், ஆனால் நம்முடைய நேர்மையை, அப்பாவித்தனத்தை யாரும் ஏமாற்றி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கண்டிப்பாக எடுத்துக் கொள். ஞாயிற்றுக் கிழமை அவசர வேலை இருந்தால் அன்று வேலை பார்த்து விட்டு இன்னொரு நாள் ஓய்வை வைத்துக் கொள். ஒரு நாளைக்கு எட்டு முதல் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்காதே. அப்படி விருப்பப்பட்டுப் பார்த்தால் கூடுதல் ஊதியம் கேட்டுப் பெற்றுக் கொள்.
அவனுக்கு மென்பொருள் உருவாக்கத்தில் எதுவும் ஆர்வம் இல்லை. அதே துறையில் பெரிய செல் நிறுனங்களில் சேர்ந்து விடலாம் என்று எண்ணம். கொஞ்சம் கூச்சப்பட்டு சரிவரப் பேசாமல் இருந்தாலும் மன ஆழமும் உறுதியும் தெரிந்தது.
'வேறு வேலைக்குப் பஞ்சமில்லை. உனக்குக் கிடைக்கும் சம்பளத்துக்குக் குறைவில்லாத மாற்று வேலைக்கு உத்தரவாதம் உண்டு. அதனால் பயப்படாமல் நியாயமான உரிமைகளைத் தேவைகளைக் கேட்டு வாங்கிக் கொள். அடிக்கடி தொலைபேசி தகவல் சொல்'
கூட உட்கார்ந்து தகுதிப் படிவத்தை சீர்படுத்தி நண்பர் ஒருவரிடம் பேசி அவருக்குத் தெரிந்த தொலைதொடர்பு நிறுவனங்களில் பேசி ஏதாவது ஏற்பாடு செய்யும்படிக்' கேட்டுக் கொண்டேன்.
நாளின் கடைசிச் செய்தியாக வாடிக்கையாளர் ஒருவர் காசோலை கொடுத்து அனுப்பி விட்டதாக தொலைபேசியில் சொன்னார். ஒன்பதரைக்குப் படுத்து அமைதியான உறக்கம். இரண்டரை மணிக்கு விழிப்பு.

நிறுவனம்
புதன், ஜனவரி 03, 2007
சும்ம்மா
குடுவை ஒன்றில் அடைபட்டிருக்கும் பூதம் போன்று சரியான கோணத்தில் செயல்படாமல் முடங்கிக் கிடந்த ஆற்றல்கள் வெளி வர ஆரம்பித்திருக்கின்றன. புது ஆண்டில் புதுப் பொறுப்புகள் என்று எல்லோருக்கும் தெளிவாக பகிர்ந்தளிக்க முடிந்தது.
காலையில் நான்கு மணிக்கு முன்பே எழுந்து ஆறரைக்குள் மனதுக்குப் பயிற்சிகளை முடித்து விட்டேன். படித்ததற்கும், உணர்ந்ததற்கும் நடைமுறையில் செய்வதற்கும் பெரிய இடைவெளிகள் இருக்கின்றன. நடைமுறையில் செயல்படுத்தும் போது தேவைப்படும் தெளிவுக்கு எழுதிப் பார்த்துக் கொள்வது பேருதவியாக இருக்கிறது.
'ஒரு தடவை எழுதுவது, நான்கு தடவை படிப்பதற்கு சமம்' என்று அம்மா சின்ன வயதில் பாடம் படிக்க அறிவுரை சொல்வார்கள். தனியாக உட்கார்ந்து மண்டையைக் குழப்பிக் கொள்வது, ஆன்றோர் வாக்குகளை மணிக்கணக்கில் படிப்பதுடன், மனதில் ஓடுபவற்றை எழுத்தாக வடிக்கும் போது எண்ணங்கள் ஒழுங்கு அடைந்து விடுகின்றன.
அப்படிக் கிடைத்த புத்துணர்ச்சியுடன், காலை நேர இணைய வேலைகள், காலை உணவு முடித்து விட்டு உட்காரும் போது, அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தவரிமிருந்து அழைப்பு. கிண்டி வரை பேருந்தில் வந்து விட்டார், இன்னும் பேருந்தை நம்பி அடுத்த வண்டிகளில் ஏறி அலுவலகம் வந்து சேர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விடும். நான் என்னுடைய வண்டியில் கூட்டி வரக் கிளம்பினேன்.
எட்டரை மணிக் காலை நெரிசல். 21E பேருந்தில் இரண்டு படிகளிலும் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் படிக்கட்டில் கால் வைக்கக் கூட இடமில்லாமல், படிக்கட்டில் சாய்வாக போகும் கம்பிக் கைப்பிடியில் ஏறி நின்று கொண்டிருந்தான். பதைப்பில் பின்னாலேயே போய், நிறுத்தத்தில் பேருந்து நின்றதும், யாராவது ஒருவர் என்னுடைய வண்டியில் பின்னால் ஏறிக் கொள்ளலாமே என்று கேட்டேன். அவர்களுக்கு திகைப்பில் என்ன சொல்வது என்று தெரியாமல், அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியதுதான் என்று சொல்லி விட்டு மீண்டும் தொத்திக் கொண்டார்கள்.
கத்திப்பாரா சந்திப்பில் பால வேலை நடைபெறுவதால் போரூரிலிருந்து கிண்டி நோக்கிப் போகும் வண்டிகளை இடது புறம் திரும்பி ஜவஹர்லால் நேரு சாலை வழியாக விட்டுக் கொண்டிருந்தார்கள். கிண்டி சங்கீதா விடுதி முன்னால் நின்று கொண்டிருந்தவரை சாலையைக் கடந்து வர அழைத்து விட்டு திரும்பும் போது கிண்டி தொழிற்பேட்டை, ஜவஹர்லால் நேரு சாலை, கருணாநிதி நகர் என்று வந்தோம். எவ்வளவுதான் வாகன நெருக்கடி இருந்தாலும், எப்படியாவது சமாளித்து நெரிசலைக் குறைத்து விடுகிறார்கள் போக்குவரத்துக் காவல் துறை.
காலை முழுவதும் இடைவிடாமல் பேச்சு, மூளைக்கு அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலைகள். மதியத்துக்கு மேல் கொஞ்சம் குறைந்து, மாலையில் எல்லா மின்னஞ்சல்களுக்கும் பதில் அளித்து முடிக்காமலேயே கணினியை மூடி விட்டேன்.

செவ்வாய், ஜனவரி 02, 2007
மூலதனமா, மனித வளமா?
'எழுதுவதற்கு மிகப் பொருத்தமான நேரம் அதிகாலைதான்' என்று சல்மான் ருஷ்டி சொல்லியிருந்ததாக படித்தேன். ஆங்கில வாழ்க்கை வாழும் அவருக்கு அதிகாலை என்பது பொழுது நன்றாக விடிந்த பிறகுதான் ஆரம்பிக்கிறது.
காலையில் எழுந்து நமது எண்ணங்களுடன், வேறு யாரிடமும் தொடர்பு கொள்ள ஆரம்பிக்கும் முன்பு மனதுக்கு இருக்கும் தெளிவு ஒவ்வொன்றாக கற்கள் விழ ஆரம்பித்ததும் அலைகளாக விரிந்து குழப்பமாகி விடும்.
வெளித் தொடர்பு என்பது நேரடியாக முகத்துக்கு நேர் பேசுவது மட்டுமில்லாமல், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களில் மடல்களை செய்திகளைப் படிப்பதும் கூட மனதில் சலனங்களை ஏற்படுத்தி விடுகின்றன. எனக்கு ஏதாவது படிக்காமல் இருக்க ஓடாது. அதையும் தவிர்த்து விட்டால் மனதைக் குவிக்க எளிதாக இருக்கும்.
ஓரிரு வாரங்களாக இணைய இணைப்பு உள்ள இடத்தில் எழுந்து, பல்லைத் தேய்க்கும் முன்னாலேயே மின்னஞ்சல் வந்திருப்பதைப் பார்த்து விட்டு ஆரம்பித்தால் குறுக்கீடு இல்லாமல் எழுத முடியாது. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கவனம் மறு சாளரத்துக்குத் தாவிக் கொண்டிருந்தது. புத்தாண்டு புதுப்பித்தலாக, இரணடு மணி நேரமும் எழுதி முடித்து, காலைக் கடன்களை முடித்து, இருபது நிமிடம் பயிற்சியும் முடிக்கும் வரை வலை இணைப்பையே நீக்கிக் கொள்வது என்று நேற்று முதல் ஆரம்பித்தாகி விட்டது.
மற்றொரு பழக்கம். மடிக் கணினியை மடியில் வைத்து அல்லது சம்மணம் போட்டுக் கொண்டு தரையில் வைத்துக் கொண்டு பாயின் மேல் உட்கார்ந்து கொண்டு எழுதுவது. அதை விட்டு விட்டு மேசையில், சொகுசு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எழுதினாலும் எண்ண ஓட்டங்கள் மாறுபட்டு விடுகின்றனவோ என்று ஒரு தோற்றம்.
எல்லாவற்றையும் விட்டு விட்டு மடிக்கணினியை வலைஇணைப்பிலிருந்து துண்டித்து, அறையினுள் பாயின் மீது உட்கார்ந்து எழுத ஆரம்பித்தது நேற்றுக் காலை நான்கே கால் மணிக்கு. முதலில் பொருள் செய்ய விரும்பும் அனுபவங்கள் முடித்து விட்டு நாட்குறிப்புகளாக எழுதுவதும் ஒரு மணி நேரத்துக்குள் நின்று விட்டது.
பகலில் முக்கிய விருந்தினர்கள் வருவதால் அவர்களை அழைத்து வர, அவர்களுடன் விவாதிக்க, அவர்களுடன் நேரம் செலவளிக்க வேண்டியிருக்கும். காலையிலேயே ஒதுங்க வைக்க வேண்டியவை, துவைக்க வேண்டியவை எல்லாம் முடித்து விட வேண்டும்.
வலைப்பதிவு வேலைகளுக்கு அரை மணி நேரம் என்று ஆரம்பித்து முக்கால் மணி நேரம் வரை இழுத்து விட்டது. ரயில் வந்து சேரும் நேரம் பத்து மணி என்று நினைத்திருந்து இணையத்தில் பார்த்ததில் பதினொன்று என்று தெரிந்ததில் ஒரு நிதானம் கிடைத்தது. பதட்டம் இல்லாமல் குளித்து, கடைசியாக வாங்கியிருந்த சட்டை பேன்டைப் போட்டுக் கிளம்பினால், நன்றாகக் குளிப்பாட்டிப் படியச் சீவி முதல் நாள் பள்ளிக்குப் போகும் உணர்வு வந்தது.
திரும்பி வரும் போது மூன்று பேராக வர வேண்டியிருக்கும் என்று பேருந்துக்குப் போனேன். வழியில் டெக்கான் குரோனிக்கிள் நாளிதழும் வாங்கிக் கொண்டேன். நேராக சென்ட்ரல் ரயில் நிலையம் போக ஒரே ஒரு வழித்தடம் இருந்தாலும், முதலில் வடபழனியில் இறங்கிச் சாப்பிட்டு விட்டுப் போவதாக முடிவு.
சரவணபவனை நினைத்துப் போய், விலையையும், கொஞ்சம் தொலைவில் இருந்ததையும் கருதி, அருகிலேயே இருந்த நம்ம வீடு வசந்தபவனில் சாப்பிட்டுக் கொண்டேன். மீண்டும் வெளியில் வந்து காத்திருந்து, ரயில் நிலையம் போகும் பேருந்தைப் பிடித்தேன்.
ஆரம்பத்தில் நல்ல கூட்டமாக இருந்தாலும் ஆட்கள் இறங்க இறங்க உட்கார இருக்கை கிடைத்து விட்டது. சில தடங்களில் ஏறி இறங்குபவர்கள் நிறைய இருப்பார்கள். 21பி தாம்பரம்-உயர்நீதி மன்றம் பேருந்தில் காலைப் பொழுதில் காந்தி மண்டபம் நிறுத்தம் வரை ஏறுபவர்கள் மட்டும்தான் உண்டு. தாம்பரத்திலேயே நிரம்பி, குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம் என்று இன்னும் அடைத்து, கிண்டியில் நிற்கும் போது உள்ளே யாரும் புதிதாக நுழைந்து விட முடியாது. காந்தி மண்டபத்தில் முதல் கூட்டம் இறங்கும். அதற்குப் பிறகு ஏறுபவர்கள் அதிகம் கிடையாது.
புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் குறுஞ்செய்திகள் ஆரம்பித்தன. அனுப்ப வேண்டுமா என்று தயங்கி விட்டு பேருந்து பயணத்தின் போது ஆரம்பித்து விட்டேன். செல்பேசியின் தொடர்பு பட்டியல் மூலம் சில காலமாகத் தொடர்பு இல்லாதவர்களைக் கூட நினைவு கூர்ந்து வாழ்த்து அனுப்பவது சாத்தியமாகி விடுகிறது. ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்து அப்புறம் இடம் போதாதாலோ வேறு காரணங்களாலோ எண்ணை நீக்கி விட்டவர்களுடன் தொடர்பு அற்று விடுகிறது. அப்படி நீக்கப்பட்ட ஓரிருவர் வாழ்த்து அனுப்பியிருக்க, அவர்களது எண்களை புதிய கருவியின் நினைவகத்தில் சேமித்துக் கொள்ள முடிந்தது.
ரயில் நிலையத்தில் வரும் போது அரை மணி நேரம் இருந்தது. ஹிக்கின்பாதம்ஸில் துக்ளக் வாங்கிக் கொண்டு இருக்கை ஒன்றில் அமர்ந்தேன். சிறிது நேரம் படித்து விட்டிருந்து அருகிலேயே தரையில் அமர்ந்திருந்தவர்களை நோட்டம் விட்டேன். காதில் பாம்படம் போட்ட, மேலாடை அணியாது சேலை மட்டும் சுற்றிய கருத்த மேனியளாக ஒரு அம்மா கால் நீட்டி இருக்க, சற்றே அருகில் இரண்டு மூட்டைகளுக்குப் பின்னால் தலையில் தலைப்பாகையுடன் நரைத்த தாடியுடன் முகம் சரியாகத் தெரியாமல் அவரது துணைவர் போல் ஒரு பெரியவர்.
இவர்கள் இரண்டு பேர் வயதுக்கும் பொருந்தாத ஒரு பெண்குழந்தை அந்த அம்மாவின் முன்னால் அமர்ந்து கொண்டு ஒரு கிண்ணத்தில் நீரில் போட்ட சோற்றை விரல்களால் அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. துணிப்பை ஒன்றில் பொதிந்த பாத்திரத்திலிருந்து சோற்றை எடுத்துப் போடச் சொல்லி கேட்டுக் கொண்டே இருந்தது. இன்னும் சரியாகப் பேச்சு வரவில்லை. உருண்ட கன்னம், புஸ்ஸென்று கைகால்கள். காய்ந்து கருத்திருந்த முதிய தம்பதிக்கு முரணாக செழிய, மாநிறத்தில் இந்தக் குழந்தை.
மகளாக இருக்காது, பேத்தியாக இருக்குமோ என்று தோன்றியது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஒரு இளைஞன் வந்து சேர்ந்து கொண்டான், அவன் தந்தையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு முறை சோறு போடு என்று குழந்தை கேட்கும் போது, ஒரு சிறிய அகப்பையில் அரை நிறைவுக்கு சோற்றை நிரப்பி தண்ணீருக்குள் போட்டார் அந்த அம்மா. குழந்தை பெரிய பெண் போல் விரல்களைச் சேர்த்து சிந்தாமல் சிதறாமல் பருக்கைகளைத் திரட்டி வாயில் போட்டுக் கொள்கிறது. தொட்டுக் கொள்ள அருகில் இருந்த ஊறுகாயைத் தொட்டு நாக்கில் தடவிக் கொள்வதைப் பார்த்தால் மூன்று வயது குழந்தையா, முப்பது வயது குமரியா என்று ஆச்சரியம் வந்தது.
அவ்வப்போது அருகில் இருந்து தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் குடித்துக் கொண்டது. அந்தப் பெண்மணியை அம்மா என்றே கூப்பிட்டது. ஏழெட்டு முறை சோறு வாங்கிப் பிழிந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. அம்மாவும் சளைக்காமல் போட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் எழுந்து நின்றதும், அம்மா பாத்திரத்தை விலக்கி கீழே உதறியிருந்த பருக்கைகளை கவனமாகப் பொறுக்கிப் பாத்திரத்திலேயே போட்டு தரையை தூய்மை செய்து கொண்டார்.
யாரோ வயது வந்தவர்களைக் கவனித்துக் கற்றதைப் போல் முதிர்ச்சியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த குட்டிப் பெண் எழுந்து நின்றதும், தரையில் ஈரம் படர்ந்தது. யாரும் எதுவும் சொல்லவில்லை. குழந்தையை சிறிது விலக்கி விட்டு, கையில் இருந்த துணியால் தரையைத் துடைத்து விட்டாள் அந்த அம்மா. குழந்தைக்கு இன்னும் முடியவில்லை. அதே பாத்திரத்தை எடுத்துக் கொண்டு இன்னும் சோறு கேட்டது.
அதுவரை தரையைப் பொறுப்பாக தூய்மை செய்ததை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கீழே விழுந்த பருக்கைகளைப் பொறுக்கிப் போட்ட அதே பாத்திரத்தில் இன்னும் சோறு போட்டுக் குழந்தை கையில் கொடுத்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நனைந்து விட்ட துணிகளையும் கண்டு கொள்ளவில்லை. குழந்தை ஊட்டி விடக் கேட்க, அம்மா ஊட்ட ஆரம்பித்தாள்.
இவ்வளவு நேரத்துக்கும் குழந்தையின் குரலைத் தவிர பெரியவர்கள் சத்தமே செய்யாமல் உட்கார்ந்திருந்தார்கள். நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது உலகில்.
பதினொரு மணி வண்டி பதினைந்து நிமிடம் முன்னதாகவே வந்து விட்டிருந்து. முந்தைய நாள் இரவில் வேறு ஊரிலிருந்து பயணம் செய்து சரியாக உறங்காமல் அதிகாலை எழுந்து இந்த வண்டியைப் பிடித்து வந்த இரண்டு பேரும் முகம் சோர்ந்து தெரிந்தார்கள். இரவு விமானத்தில் திரும்பி, அடுத்த நாள் நள்ளிரவில் வெளிநாட்டுப் பயணம்.
அந்த நினைப்பே எனக்கெல்லாம் காய்ச்சலைக் கொடுத்திருக்கும். சரவணபவனில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். நிலையத்துக்குள் 150 ரூபாய் கேட்க, முன்பதிவு நிலையத்தை அணுகாமல் சாலையைக் கடந்து 120 ரூபாய்க்கு ஏறிக் கொண்டோம். ஜனவரி மாதமாக இருந்தாலும் வெயில் சீண்டிக் கொண்டுதான் இருந்தது. அலுவலகம் போய்ச் சேரும் முன் வாயெல்லாம் வறண்டு போனது.
ஓரிரு மணி நேர விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு தாமதமாக மூன்று மணிக்குச் சாப்பிடப் போனால் இரவு ஒன்பதரை விமானம் மூன்று மணி நேரம் தாமதாகக் கூடும் என்று தகவல். இரண்டு பேருக்கும் ஈயாடவில்லை. நள்ளிரவு விமானத்தைப் பிடித்து இன்னொரு இரவை தூங்காமல் கழிப்பது கொடுமையாகி விடும். சாப்பிட்டு விட்டு நேரடியாக ரயில் நிலையம் போய் மாலை ரயிலைப் பிடித்து விடலாம் என்று கிளம்பினோம்.
ரயிலிலும் இருக்கை இல்லை. ஒருவர் பேருந்து நிலையத்தில் பார்க்கப் போயிருக்க அவரும் தொலைபேசி எல்லா பேருந்துகளும் பதிவு செய்து நிறைந்து விட்டன என்று தகவல் சொன்னார். அலுவலகத்தில் இணையத்தின் மூலம் மாற்று விமானச் சேவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் சொன்ன தகவலை வைத்து நேரடியாக விமான நிலையம் போய் ஏதாவது ஏற்பாடு செய்யலாம் என்று கிளம்பினோம்.
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அருகில் வந்து, விமான நிலையம் என்று கேட்டு 200 ரூபாய் கேட்டார். முன் பதிவு நிலையம் நோக்கி நடந்தோம். 'சரி, எவ்வளவுதான் தருவீங்க?' என்று விடாப்பிடியாக கூட வந்தார். நிலையத்துக்கு பத்து அடி தூரத்தில் 150 என்றால் வரச் சொல்ல, 170 கொடுங்க என்று அடம் பிடித்தார். காத்திருக்கும் வரிசை கூட இல்லாமல் வெறிச்சோடியிருந்த முன்பதிவு காவல் துறை அலுவலரை அணுக 127 ரூபாய்க்கு சீட்டு போட்டுக் கொடுத்து விட்டார்.
இவ்வளவு அருகில் இருக்கும் போது கூட அடாவடியாக 170 ரூபாய் கேட்பதை எப்படிப் புரிந்து கொள்வது என்று பேசிக் கொண்டோம். ஏற்றிக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் வழியில் எரிபொருள் போட நிறுத்தினார். மூன்று பேரும் இறங்கி தண்ணீர் வாங்கப் போனோம். திரும்ப ஏறியதும், 'உங்களை விட்டு விட்டு நாங்க மூன்று பேரும் வேறு வண்டி பிடித்துப் போயிருந்தால்.... ' என்று கேட்டதற்கு, 'மனுசங்க அவ்வளவுதான் என்று நினைச்சுக்கிட்டு போயிருப்பேன்' என்று அப்பாவியாக சொல்கிறார் அந்த ஓட்டுநர்.
மாலை நேரக் கடற்காற்று தொட்டுச் செல்ல அண்ணாசாலை வழியே கிண்டி வந்து விமான நிலையச் சாலையைப் பிடிக்கும் போது சென்னை சூட்டில் வாடியிருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. விமான நிலையத்தில் பதட்டம் இல்லாமல் இறங்கி மாற்றுச் சேவையில் ஒன்பது மணி விமானத்தில் இருக்கை கிடைத்து உள்ளே போனார்கள்.
தில்லியில் பனிமூட்டம் காரணமாக தில்லியைத் தொட்டுச் செல்லும் எல்லாச் சேவைகளும் பாதிக்கப்படுகின்றனவாம்.
ஆறு ரூபாய்க்கு வடபழனி வரை வெளியூர் பேருந்தில், அங்கிருந்து நான்கு ரூபாய் செலவில் (மூன்றரை ரூபாய் சீட்டு, ஐம்பது காசு கைமாறி காசு அனுப்பி சீட்டு வாங்கியதில் நடத்துனரோ வேறு யாராவதோ எடுத்துக் கொண்டது), வளசரவாக்கம் வந்து விட்டேன். பல முறை வழியில் மனம் ஊசலாடினாலும், கடைசியில் நேரம் தவறி சாப்பிடாமலேயே தூங்கி விட்டேன். காலையில் எழுந்ததும் பசித்தால் சாப்பிட கற்பூர வாழைப் பழங்கள் வாங்கிக் கொண்டேன்.

பொது சுகாதாரம்,
வறுமை
திங்கள், ஜனவரி 01, 2007
பழக்கத்தைத் தொடர வேண்டும்
புதிய ஆண்டு பிறந்து விட்டது. போன ஆண்டில் மேற்கொண்ட நல்ல பழக்கங்களையாவது தொடர வேண்டும். புதிய பிளாக்கரில் மாத வாரியாக மொத்தம் எத்தனை இடுகைகள் உள்ளன என்று காண்பித்து விடுகிறது. இப்போது லினக்சு முனையத்தில் எண்ணியது.
ஜூன் மாதம் எழுத ஆரம்பித்தது.
டிசம்பரில் எழுதுவது மிகவும் சலிப்பாகி விடுகிறதோ என்று ஒரு வாரம் நிறுத்தி வைத்திருந்தேன். எழுத ஆரம்பித்த போது வலைப்பூவாகப் போடும் எண்ணம் இருக்கவில்லை. வலைப்பூவில் போட ஆரம்பித்த பிறகு கூட திரட்டிகளில் இணைக்காமல் பின்னூட்ட வசதியை ஏற்படுத்தாமல்தான் ஓடிக் கொண்டிருந்தது. எனவே சலிப்பேற்படுத்தி விடுமோ என்று காரணம் காட்டி நிறுத்த வேண்டியதில்லை. புதிய ஆண்டிலும் தினமும் ஒரு மணி நேரம் தவறாமல் தொடர்ந்து எழுத வேண்டியதுதான்.
வேண்டுமானால் திரட்டிகளில் இணைப்பதை நிறுத்திக் கொள்ளலாம். நாட்குறிப்பு எழுதுவதால் கிடைக்கும் பலன்களில் பிற்பகுதியில் வரும் பிறருடன் பகிர்ந்து கொள்வது இல்லாமல் போய் விட்டாலும் தன்னளவில் பலன் நிச்சயம் உண்டு.
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி முடிந்து தை முதல் வாரம் நம்ம ஊரில் விடுமுறை கட்டமாக போய் விடுகிறது. சரஸ்வதி பூஜையில் ஆரம்பித்து, தீபாவளி, திருக்கார்த்திகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பிறப்பு, கடைசியாக பொங்கல் விடுமுறைகள். அந்த வரிசையில் இந்த வார இறுதியில் மூன்று நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை. சனிக் கிழமை வேலை பார்த்தாலும் ஞாயிறு, திங்கள் என்று இரண்டு நாட்கள் ஓய்வு.
டிசம்பர் 25 பணி புரிந்து விட்டு ஜனவரி 1 விடுப்பு விடலாம் என்று முடிவு செய்திருந்தோம். அதற்கு முந்தைய வாரம் சனிக் கிழமை மாமல்லபுரம் செலவுக்காக அலுவலகத்துக்கு விடுமுறை.
'இன்றைக்கும் அலுவலகத்தில்தான் இருக்கிறீர்கள், வேலைக்கு இடையே தொந்தரவு செய்கிறோமோ என்று படுகிறது' என்று தொலைபேசிய நண்பர்கள். அலுவலகத்திலேயே இருந்தால் வேலை என்று கிடையாது. வெளியே போனால்தான் வேலை என்று விளக்கமாகச் சொல்லவில்லை.
இருந்த வீட்டை வாடகை மிச்சப்படுத்த காலி செய்து விட்டு, பத்து நாட்களுக்குள் புது வீட்டை முடித்து கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்க, அவர் தை 1 தான் முடிப்பேன் என்று சொல்லி விட்டார். இப்போது சென்னைக்கு வந்தால் அலுவலகத்தில்தான் தங்கல். ராணிப்பேட்டையில் நேரம் செலவளிக்க வாய்ப்பு. என்னுடைய பணி வாடிக்கையாளர்களுடன் பழகி, புதிய வாய்ப்புகளைத் தேடுவது, ஏற்கனவே நடக்கும் வேலைகளில் உதவி புரிவது என்பதில்தான். மென்பொருள் உருவாக்க அதற்கென தனியாக மேலாளர் வேண்டும் என்று பேசிக் கொண்டோம்.
அதுவும் நடந்து விட்டால், சென்னையில் தங்குவது வாரத்துக்கு ஓரிரு நாட்கள் என்று அரிதாகி விடலாம். மடிக்கணினியில் கம்பியில்லா இணைப்பாக இணைய வசதி செய்து கொண்டால், நிறுவன நடவடிக்கைகளை இணைய வழங்கியில் தினமும் ஏற்றும் வேலையைச் செய்து கொண்டால், அலுவலகத்துக்கு நேரடியாக வரமாலேயே எங்கிருந்தாலும் பணிகளைக் கண்காணித்து வழி நடத்திக் கொள்ளலாம்.
ஏழாம் தேதி கிளம்புவதற்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் நிறைய. அவற்றை எல்லாம் சரிவரத் திட்டமிட்டு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான அளவு தேவைகளை திரட்டிக் கொண்டுள்ளோம். இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி அவற்றை எல்லாம் திருப்திகரமாக நிறைவேற்றி பணம் ஈட்டும் வழியைப் பார்க்க வேண்டும்.
சனிக் கிழமை ஆஸ்திரேலிய, பெங்களூர் ஆலோசகர்களின் உதவியோடு கிடைத்த தெளிவுடன் நேற்று பல வேலைகளைத் திட்டமிட முடிந்தது. ஸ்டீபன் கோவியின் புத்தகத்தில் படித்திருந்த பொறுப்பு ஒப்படைத்தலை சரிவரச் செய்யும் முறையையும் செயல்படுத்த முடிந்தது.
தொழில், நிறுவனம், மேலாண்மை குறித்த சிந்தனைகளை எழுத ஆரம்பிப்பது என்று பல முறை திட்டமிட்டு பாதியில் நிறுத்தியது. நமக்கு இருக்கும குழப்பங்களைத் தெளிவு படுத்தவும் அது தேவைப்படும். போன வாரம் எழுத்து நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்து மேலாண்மை குறிப்புகளை தினமும் எழுதலாம் என்று தீர்மானம். அப்படி ஆரம்பித்து ஐந்து கட்டுரைகள் ஆகி விட்டன. அதற்கும் பொருள் செய் என்று வலைப்பூ தொடங்கி போட ஆரம்பித்தாகி விட்டது.
இதுவரை செய்து முயற்சிகளுக்கு, பட்ட பாடுகளுக்கு பலன் கிடைக்கும் நாள் வந்து விட்டது என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாவது தடவையாகத் தோன்றுகிறது. கொஞ்சம் பற்றற்று, விழிப்போடு செயலாற்றினால் எல்லாம் எளிதாகவே நடந்து விடும்.
பொதுவாக ஒற்றை நோக்கோடு போகும் மனம். ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகள் வந்து விட்டால் இரண்டையும் சமப்படுத்த முடியாமல் இரண்டுமே நின்று விடுவது நடக்கும். பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு சரியான பயிற்சிகள் அளித்து முடிவுகளைக் கண்காணிக்கும் முறைகளை ஏற்படுத்திக் கொண்டால் பல பந்துகளை எறிந்து பிடிக்கும் வித்தையும் கைவந்து விடலாம்.
புதிய முடிவின் படி காலையில் இரண்டு மணி நேரமாவது எழுத வேண்டும். ஒரு மணி நேரம் முந்தைய நாளுக்கான பொது நாட்குறிப்பு. மற்றொரு மணி நேரம், அல்லது அரை மணி நேரம் நிறுவனத்தை நடத்துவது மூலம் உணரும், உணர்ந்து கொள்ள வேண்டியவற்றை எழுதுவதற்கு. இதைத்தவிர்த்து கூட்டு வலைப்பதிவுகள், ஏற்றுக் கொண்ட சமூகப் பணிகள் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கையெழுத்து வேட்டை நடத்த வேண்டும். அச்சடித்த படிவங்கள் தயாராகி விட்டன. கையெழுத்துப் பக்கத்துக்கு நகல் எடுத்து வரிசை எண் இட்டு ஆரம்பித்து விட வேண்டியதுதான். குறைந்தது 100 கையெழுத்துக்களாவது வாங்க வேண்டும். நூறு பேருக்கு தகவலை விளக்கிய நிறைவாவது கிடைக்கும். ஒவ்வொரு கையெழுத்துக்கும் ஐந்து நிமிடங்களாவது ஆகலாம். கூட்டமாக சிலர் சேர்ந்து விளக்கத்தைக் கேட்டால் அது கொஞ்சம் குறையலாம். ஆனால், நூறு கையெழுத்துக்கு எட்டு மணி நேரம் கணக்கு போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
ஜூன் மாதம் எழுத ஆரம்பித்தது.
- ஜூன் - 26
- ஜூலை - 29
- ஆகஸ்டு - 26
- செப்டம்பர் - 16 பத்து நாட்களுக்கு மேல் எழுதாமல் இருந்திருக்கிறேன். இந்த நேரத்தில்தான் விரலில் காயம் பட்டிருந்தது.
- அக்டோபர் - 28
- நவம்பர் - 26
- டிசம்பர் - 21

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)