ஆஹா, ஒரு வாரம் ஆகி விட்டது. போன ஞாயிற்றுக் கிழமை எழுதியது. ஏழு நாட்கள் கணினியில் எழுத உட்காரமலேயே ஓடி விட்டன. திங்கள் கிழமை ராணிப்பேட்டைக்குப் போக வேண்டியிருந்தது. காலையில் சீக்கிரம் எழுந்தாலும் மற்ற வேலைகளைப் பார்த்தேன். வண்டியை கொண்டு வந்தார்கள். ராமாபுரத்தில் ஏறிக் கொண்டேன். வண்டியில் ஏறும் முன்பு தேநீர்க் கடையில் தேநீர் குடித்துக் கொண்டது அசௌகரியத்தைக் கொடுத்திருந்தது.
அடுத்த நாள் ராணிப்பேட்டை போய் வந்த சடைவு. செவ்வாய்க் கிழமை மதியம் நூம்பல். புதன் கிழமை காலையில் ரயில்வே நிலையத்திலிருந்து தொலைபேசிய பிறகுதான் எழுந்திருக்கவே செய்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேலைகளை முடித்து விட்டு அலுவலகத்துக்குப் போனோம். காலையில் முந்தைய நாள் ஆய்வுப் பணிக்கான அறிக்கையை எழுதிக் கொண்டிருந்தேன்.
மதியம் வருகையை முன்னிட்டு வெளியில் கிளம்பி விட்டோம். மேல் அயனம்பாக்கம் என்ற ஊரில் இருக்கும் ஒரு கிளப்புக்குப் போக வேண்டும். சாப்பிடுவதற்கு ஆலமரம் ஒன்றின் கீழ் முகாமிட்டு கொஞ்ச நேரம் பொழுதைக் கழித்து விட்டு கிளப்புக்கு வந்தோம். எட்டு மணி வரை அங்கு ஆகி விட்டது. திரும்பி வந்து 10 மணிக்குக் கிளம்பிப் போன பிறகு, தூங்கி விட்டு காலையில் எழுந்திருக்க தாமதமாகி விட்டது.
வியாழக் கிழமையும் ராணிப்பேட்டை. எல்லா நிறுவனங்களுக்கும் போய் விட்டு வந்தேன். காலையில் அடித்துப் பிடித்து அலுவலகத்துக்குப் போனால் வண்டி வருவதற்கு அரை மணி நேரம் தாமதம். வண்டியும் பயணத்துக்கு இதமாக இல்லை. ஒரு வழியாக இரவில் திரும்பி வந்து தூங்கினால் வெள்ளிக் கிழமை காலையிலும் எழுத உட்கார முடியவில்லை.
வெள்ளிக் கிழமை மதியத்துக்கு மேல் ஏசிடெக் அலுமினி செயற்குழு கூட்டத்துக்குப் போய் விட்டு வந்தேன். அலுவலகத்துக்கு வந்தால், வேலைகளை முடிக்காமல் எல்லோரும் போய் விட்டிருந்தார்கள். அப்போது ஏறிய காட்டம் நேற்று மாலை வரை உறைத்துக் கொண்டிருந்தது. வீட்டுக்கு வந்து தூங்கும் போது 11 மணி ஆகியிருந்தது.
நேற்றுக் காலையில் 7 மணிக்கு அலுவலகம் போக வேண்டும். எழுந்திருக்கும் போது 5 மணி ஆகி விட்டிருந்தது. தரை தூத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், துணி துவைத்தல் முடித்தேன். தரை துடைக்கவில்லை. நேரமும் போதாது, துடைக்கும் திரவமும் இல்லை. சாப்பிடுவதற்கு அவல் தாளித்துக் கொண்டேன். கூடவே மேகி நூடில்ஸ். அதில் கிடைக்கும் சூப்பு வயிற்றுக்கு நன்றாக இருக்கிறது.
தியானத்தை ரத்து செய்து விட்டுச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். சாப்பிட ஆரம்பிக்கும் போது மணி 6.40. முடித்துக் கிளம்பும் போது 7 மணி தாண்டி விட்டது. அலுவலகத்திற்கு வெளியில் வண்டியை நிறுத்தி விட்டு நுழையும் போது அப்போதுதான் வந்திருந்தார். குளித்துக் கொண்டிருந்தார். பின் வாசல் வழியாகப் போய் முன் கதவைத் திறந்தேன். மனம் சோர்வாக கோபமாக இருந்தது. முந்தைய நாள் மாலையில் திட்டமிட்டிருந்ததில் பாதி கூட வேலை முடியாது என்று சொல்லியிருந்தார்.
முற்பகலில் திருப்பதிக்குப் புறப்படுவதால், எழுத்து வேலையை முடித்து விடுவதாகக் கூறியிருந்தார். மூன்று நாட்களில் என்னென்ன வேலைகளை முடிக்கலாம், முடிக்க வேண்டும் என்று பட்டியலிட்டோம். அணியில் யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள். அவர்களை எப்படி வழி நடத்திக் கொண்டு போவது என்றும் பேசிக் கொண்டிருந்தோம்.
'நிறுவனம் இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் என்றால் இது போல இலக்குகளை அமைத்து அவற்றை நோக்கிப் பயணிப்போம். அப்போது பணம் வருவதில் தாமதம், வேலை செய்வதில் அதிக அழுத்தம் போன்றவை இருக்கத்தான் செய்யும். அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இப்போதே நின்று கொள்ளலாம்' என்று சொல்ல முற்பட்டேன்.
வரும் அக்டோபரிலிருந்து எல்லோருக்கும் சம்பளம் இரு மடங்காக வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் போது, அதற்கேற்ற முனைப்பும் தாங்கும் சக்தியும் இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி விட வேண்டும் என்று முடிவு செய்தோம்.
மொத்தக் குழுவினருக்குமாகவும் ஒரு கூட்டம் நடத்த வேண்டும். அக்டோபரில் சம்பள விகிதங்கள் இரண்டு மடங்காக வேண்டும் என்றால், என்னென்ன மேம்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்துத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அடுத்தப் பொதுக் குழுவில் அதைக் குறித்துப் பேச வேண்டும்.
பணிக்கான ஆவணங்களை தயார் செய்து கொண்டிருந்தேன். பன்னிரண்டரை மணிக்கு தொலைபேசினால், வரச் சொல்லி விட்டார்கள். அவசர அவசரமாக ஆவணங்களை முடித்து விட்டுக் கிளம்பினேன். முதல் தடவை கோப்பை எடுத்துக் கொள்ளவில்லை. தலைக் கவசத்தில் முகக்காப்பு உடைந்திருந்தது. வண்டியில் பெட்ரோல் போதுமான அளவு இருக்கிறதோ என்று சந்தேகம்தான்.
'இயல்பாகவே குதூகலம் குறைந்த பேர்வழி. நீ அப்படிச் சொன்ன பிறகு இன்னும் மோசம்' என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். 'என்னுடன் பொழுது போக்க மட்டும்தான் நீ வருகிறாய். எனக்கு வேலைகள் நிறைய இருக்கின்றன. அதற்கு நேரம் இல்லை' என்று சொல்லியிருந்ததற்கு எதிர்வினையாக. அனுப்பியது வியாழக் கிழமை மாலையில் ராணிப்பேட்டையிலிருந்து திரும்பும் போது. பதில் சனிக் கிழமை காலையில் எழுந்திருக்கும் போது நள்ளிரவில் வந்ததாகக் காட்டியது.
அதைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தேன் காலையில். மதியம் அவர் தொலைபேசி அழைப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்த போது பதிலளிக்கும் பொத்தானை அழுத்தி ஒரு சிரிப்பானை மட்டும் அனுப்பி வைத்தேன். இன்னும் கோபம்தான் வரும். நாம் அவ்வளவு கோபப்பட்டு சிரித்து மழுப்பி விடப் பார்க்கிறானே என்று. எப்படியோ போகட்டும்.
ஆற்காடு சாலை, இடது புறம் திரும்பி சின்மயா நகர் வழியைப் பிடித்து கோயம் பேடு பேருந்து நிலையத்தின் பின் வாயில் கடந்து நூறடி சாலையைக் கடந்து சந்து வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை. ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன். பேசியிருந்தது பதினொன்றே முக்கால் மணி. போய்ச் சேரும் போது ஒரு மணி ஆகி விட்டது.
வண்டியை கீழே நிறுத்தி விட்டுத் தலைக்கவசத்தையும் அதிலேயே விட்டு விட்டேன். மேலே எடுத்துப் போக மாச்சமாக இருந்தது. வண்டி தூசி படிந்து கேவலமான நிலையில் இருந்தது. அழைத்துப் போகலாம் என்று சொல்லக் கூடத் தயக்கமாக இருந்தது. அவர் வண்டியில் மகனையும் மனைவியையும் அனுப்பி விட்டிருந்ததால் ஆட்டோ பிடித்துக் கிளம்பினார்.
முதலிலேயே வேலை தொடர்பான பேச்சுக்கள். எல்லா பணிகளும் முடிந்து விட்டதாக சான்றிதழ் கொடுத்து விட்டார். கொஞ்சம் பயமும் வந்தது. அவரது நம்பிக்கையையும் பெயரையும் நல்லபடியாகக் காப்பாற்ற வேண்டும்.
அதன் பிறகு கொஞ்ச கொஞ்சமாக பேச முயற்சித்தார். வேலை செய்பவர்களின் வேலைப் பிடிப்பு, அந்தக் கால நிகழ்வுகள், அவர் பொறுமை இழப்பது என்று திணறித் திணறித்தான் போனது. முன்பு ஓரிரு முறை பார்த்தது போல சாப்பிட்ட பிறகு இருக்கும் அசௌகரியம் அவர் முகத்தில் தெரிந்தது. வெளிப்படையாகச் சொல்லவும் செய்தார்.
இப்படி அவருடன் உட்கார்ந்து பலவற்றையும் வெளிப்படையாகப் பேசுவது மதிப்பைப் பல மடங்கு உயர்த்தத்தான் செய்கிறது. அவரிடம் தேவை இல்லாத கருத்துக்களை, கோள் மூட்டல்களை சொல்வது கனவில் கூட நடந்து விடாத ஒன்றுதான். அதனால்தான் வரவேற்பும் இருக்கிறது. ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் இனம் புரியாத பயம் இருக்கத்தான் செய்யும்.
தன்னுடைய பெருமைகளை வழக்கம் போல சொல்லிச் சென்றார். குடும்பத் தொழில் என்ற அமைப்புக்குள் செயல்பட வேண்டிய கட்டாயங்களால் நான் சொல்லும் முறைகளை பின்பற்றி விட முடியாது என்கிறார். 5 மணிக்கு வருகிறேன் என்று யாருக்கோ நேரம் சொல்லி விட்டு பேச்சை நீட்டிக் கொண்டே போனார்.
ஆட்டோ வந்ததும் கிளம்பினார். அவர் வெளியில் வந்து என் பைக்கையும் தலைக்கவசத்தையும் பார்க்கும் முன்பு கிளம்பி விட வேண்டும் என்று அவசர அவசரமாகப் புறப்பட்டேன். பசி நன்கு எடுத்தது. ஒரு தேநீர் கொடுத்ததைக் குடித்திருந்தேன்.
செல்வத்தை சேமிப்பது, செலவுகளைக் கண்காணிப்பது போன்ற பாடங்கள் ஆழமாக இறங்கியிருந்தன. செல்வமகளைப் போற்றினால்தான், கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொண்டால்தான் கூட இருப்பாள். இல்லை என்றால் போய்க் கொண்டே இருப்பாள். அந்த உணர்வு வந்தது. இல்லை என்றால் இது வரை நடப்பது போல எவ்வளவு வந்தாலும் போய்க் கொண்டேதான் இருக்கும். ஒவ்வொரு ரூபாய்க்கும் அளவு வைத்து பார்த்துப் பார்த்துச் செலவழிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டியதும் பெட்ரோல் தீர்ந்து விட்டது. வண்டியைச் சரித்து இயக்கி ஓட்டி முதல் நிலையத்தை விட்டு விட்டு அடுத்ததை நாடினால் அங்கு சரக்கு இல்லை என்று மூடி விட்டிருந்தார்கள். ஆழ்வார்த் திருநகர் வழியாக வந்து ஆற்காடு சாலையில் திரும்பி ஹாட் சிப்ஸ் அருகில் வண்டி நின்று விட்டது. அங்கு சாப்பிட்டு விடச் சொல்கிறது என்று நினைத்துக் கொண்டேன். 4 இட்லிகள் ஒரு கோப்பை தேநீர். வெள்ளிக் கிழமை மாலையில் அடையாறில் ஹாட்சிப்சில் அதே உணவு.
அலுவலகத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் வேலையைக் கண்காணித்தல் என்று கச்சேரி ஆரம்பித்தது.
போன் மூன்று மாதங்களில் ஆன செலவில் 10% குறைக்க வேண்டும். சம்பளம், வாடகையைத் தவிர மற்ற எல்லா செலவினங்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாதம் 50000 ரூபாய் செலவாகிறது என்றால் 10% சேமித்தால் 5000 ரூபாய் மிச்சப்படுமே! பணிகள் எல்லாரும் அவரவர் பொறுப்பை முடித்துக் கொண்டிருந்தார்கள்.
நாளைக்கு ஏதோ சிக்கல் ஏற்படப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்கிறது. உள்ளுணர்வு என்பது நமக்குத் தெரிந்த தகவல்களின் தொகுப்புதான். அந்தத் தகவல்களைப் பட்டியலிட்டு அலசி விட்டால், உள்ளுணர்வு சொல்வதை மாற்றிக் கொள்ளலாம்.
ஒன்று தொலைபேசியில் பேசி முன்தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக விலையை இப்படி முழு எண்ணாக வைத்திருக்காமல், கணக்குப் போட்டு கொடுக்க வேண்டும்.
ஆட்சேபணைகளை முறிக்க வேண்டும்.
சேர்ந்து கொள்ளும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வளவும் செய்து விட்டால், ஆர்டர் நமக்குத்தான். தெளிவாகச் சிந்தித்துத் திட்டமிட்டுக் கொடுத்து விட வேண்டும். ஆவணத்தை அழகாக தொகுத்து வழங்க வேண்டும். மூன்று பக்க குறிப்புத் தகவல் வழங்க வேண்டும்.
வீட்டுக்குக் கிளம்பும் முன்பு மின்னஞ்சல்களுக்குப் பதில் அளிப்பதை முடித்து விட்டுக் கிளம்பினேன்.
கடைக்குப் போய் பப்பாளிப் பழம், தரை துடைக்கும் திரவம், கழிவறை கழுவும் திரவம், பாத்திரம் தேய்க்கும் தேய்ப்பு வாங்கினேன். வெங்காயம் முதலானவை வாங்கியிருக்கவில்லை. இரவில் தண்ணீரைக் குடித்து விட்டுப் படுத்து விட்டேன். படுப்பதற்கு முன்பு ஏதோ படித்துக் கொண்டுமிருந்தேன். தவிர்க்க முடியாத கவர்ச்சியுடனான புத்தகம். என்ன என்பதைக் கூட மறந்து விட்டேன் இப்போது. இந்தியன் எக்ஸ்பிரசின் சனிக்கிழமை நாளிதழ் இணைப்பு.
முன்னிரவில் பெங்களூருவிலிருந்து திரும்பியவன் ஜன்னல் வழியாக எழுப்பினான். நல்ல வேளை ஜன்னலை திறந்து போட்டுப் படுத்திருந்தேன். தொலைபேசியில் அழைத்திருந்தான். நள்ளிரவு 12.04க்கு அழைப்பு காட்டுகிறது. காலையில் ஐந்தே முக்கால் வரை தூங்கி விட்டு எழுந்திருந்தேன். மார்க் ட்வெயினின் புத்தகம், 1 மில்லியன் பவுண்டு நோட்டை வைத்துக் கொண்டு சக்கை போடு போட்ட கதை படிப்பதில் எழுத ஆரம்பிக்கவும் நேரமாகி விட்டது.
இதை முடித்ததும். பொருள்களை ஒதுங்க வைத்து, தூத்துத் துடைத்து, பாத்திரம் கழுவி விட்டு ரவை உப்புமா கிண்ட வேண்டும். அதற்கு தேங்காய் இருக்கிறது. வெங்காயம், கறிவேப்பிலை வாங்கி வர வேண்டும். தண்ணீர் வருகிறதென்றால் பிடித்து வர வேண்டும். மேலே வடிகட்டி செயல்படுதலை பார்வையிட வேண்டும்.
ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பிப் போய் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். ஆவணப் பணிகளை சுறுசுறுப்பாக முடித்து விட வேண்டும். அலுவலகத்துக்கு வருபவர்களை சாப்பிட அழைத்துப் போக வேண்டும்.
எழுத்துக் குறிப்புகளை ரெட்டைவால் மாதேவன், ஒய்யாரி கலைமகள், கூட ஒரு பெரிய யானை இவர்களின் பார்வைக்கு மாற்றலாம் என்று எண்ணம் வந்தது. அப்படிக் கதை சொல்வது வழக்கம். அவர்களுக்கும் கேட்பதில் மிகவும் ஆசை. அதே போல கேள்விகள் கேட்பது, பதில்கள் சொல்வது என்று வினாடி வினா போட்டி நடத்துவோம். மிக உற்சாகமாக கேள்வி கேட்பவராக செயல்பட முன்வருவாள்.
ஞாயிறு, ஜூன் 29, 2008
ஞாயிறு, ஜூன் 22, 2008
தேடலும் கிடைத்தலும்
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி எடுக்கும் என்கிறது பாட்டு. நேற்று இரவில் அப்படி ஒரு பசி. காலையில் இரண்டே முக்காலுக்கு எழுந்து மந்திரக் கம்பளத்தின் கடைசி பகுதியைத் தட்டச்சி முடித்தேன். தரை தூத்து, பாத்திரங்களை கழுவி, துணிகளை மடித்து வைத்து விட்டு எழுத்து. எழுதிக் கொண்டிருக்கும் போது வழி காட்டலுக்கு ஒரு பெண் தெய்வம் என்று தோன்ற அரை மணி நேரத்தில் நிறுத்திக் கொண்டேன். குளித்து விட்டு தியானம். ஆறே முக்காலுக்கெல்லாம் அலுவலகம் போய் விட்டேன்.
பை நிறைய 11 துணிகளை தேய்க்கக் கொண்டு போயிருந்தேன். கூடவே வெற்று தண்ணீர் பாட்டில்களும். பாட்டில்களை அலுவலகத்தில் எடுத்து வைத்து விட்டு வெளியில் கிளம்பினேன். மற்றவர்கள் வரும் முன்னர் போய் ஏதாவது சாப்பிட்டு விட்டு வந்து விடுவோம். ஏழு மணிக்கு என்ன கிடைக்கும்?
தேய்க்கும் கடையில் வயதானவர் இருந்தார். இன்றைக்கே வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு நடந்தேன். டாடா உடுப்பி இன்னும் செயல்பட ஆரம்பித்திருக்கவில்லை. வளசை சுபாவில் எனக்கு முன்பே சாப்பிட ஒருவர் வந்திருந்தார். நான் உள்ளே போனதும் இன்னொரு வயதான தொழிலாளரும் சேர்ந்து கொண்டார். இட்லி நேரமாகும், பொங்கல், கிச்சடி மட்டும் தயாராக இருக்கிறது. எனக்கு முந்தையவர் பொங்கல் வாங்கிக் கொண்டார். நான் கிச்சடியும் தேநீரும்.
முதல் போணி. எடுத்துக் கொடுப்பவர் பணி ஆரம்பிக்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அடுக்கி வைத்திருந்த இலைக்கட்டுகளை தொடப் போய் அவை சரிந்து விழுந்திருந்தன. தலைமை சமையல்காரர் பொங்கல், கிச்சடி வேலைகளை முடித்து தேநீர் உறிந்து கொண்டிருந்தார். நீராவியில் இட்லிகள் வெந்து கொண்டிருந்தன. பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார் ஒருவர். வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தார் ஒருவர்.
நிரம்பியிருந்த பாத்திரத்தில் நன்கு கிளறி பொங்கல் எடுத்துக் கொடுத்தார். அடுத்து எனக்குப் பின்பு வாங்கியவருக்கும் பொங்கல். எனக்கு கிச்சடி. அந்த நேரம் பருப்பு வடைகளை ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றார் இன்னொருவர். கிச்சடி என்றால் ரவை உப்புமா. போன தடவை சாப்பிட்டது போல இல்லைதான். கொஞ்சம் வேகவைத்தது குறைவாகத்தான் இருந்தது. மதியம் வரை வருத்திக் கொண்டிருந்தது.
சாப்பிட்டு விட்டு தேநீர். அவ்வளவு சிறப்பாக இல்லைதான். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வந்து நின்று புறப்பட்டு போகும் பேருந்துகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்துக்குத் திரும்பும் போது ஏழே கால் ஆகி விட்டிருந்தது. மூன்று பேருமே வந்து விட்டிருந்தார்கள். நான்தான் தாமதப்படுத்தி விட்டேன். மன்னிப்பு கேட்டு விட்டு உட்கார்ந்தேன்.
அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களை எப்படி கை பிடித்து மேலே கொண்டு வர முடியும் என்று பேச ஆரம்பித்தேன். ஒவ்வொருவரும் இரண்டு மூன்று பேருக்கு வழி காட்ட வேண்டும். எல்லோருமே ஒரே உயர் தளத்தில் வந்து பணியாற்ற வேண்டும். இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு யார் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பவர் யாரும் இருக்கக் கூடாது. ஒரு பணியின் மதிப்பையும், அவசரத்தையும், சிக்கலையும் தீர்மானித்து விட்ட பிறகு, ஒவ்வொருவரும் தாம் எதைச் செய்வது என்று தீர்மானித்து எடுத்துக் கொள்ளலாம். வாரத்துக்கு இத்தனை ரூபாய் என்று இலக்கை மட்டும் நிர்ணயித்துக் கொள்ளலாம்.
வீட்டிலிருந்தே வேலை செய்வது, வசதியான நேரத்தில் வேலை செய்வது போன்ற கருத்துகளை கூறினார். ஏற்றத் தாழ்வுகள், கட்டளை கொடுப்பவர்கள், அவற்றை பின்பற்றுபவர்கள் என்று இரண்டு பிரிவுகள் தேவைதான் என்று விவாதித்துப் பார்த்தனர். இருக்கும் மனமொப்பு மிகவும் வியப்பானது. இரண்டு பேரும் வெவ்வேறு இடங்களில் ஒரே மாதிரியான மனநிலையையும் கொள்கைகளையும் கருத்துக்களையும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒன்பது மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு அடுத்த வேலை. டேனரி மென்பொருளை பிரிவுகளாக பிரித்து விலை கொடுத்தது போல காலணி மென்பொருளுக்கும் தயாரித்துக் கொண்டேன். இடையில் மின்சாரம் தடைப்பட்டுத் திரும்பி வந்தது. அவற்றை அச்செடுத்துக் கொண்டு கிளம்ப முடிவு செய்தேன்.
பாட்டிலில் தண்ணீர் பிடித்து கணினிப் பையின் உள்ளே வைத்துக் கொண்டேன். அதை பக்கவாட்டு பையில் வைத்துக் கொண்டதாக நினைப்பு. தண்ணீரைக் கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு ஒரு கோப்பை குடித்துக் கொண்டு புறப்பட்டேன். வண்டியை எடுத்துக் கொள்ளாமல் பேருந்திலேயே போவதாக முடிவு. பத்து மணிக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வந்து விட்டேன். பேருந்துகள் கூட்ட நெரிசலாகவே வந்தன. 37G சாதாரண பேருந்து வந்தது. உட்காரவும் இடம் இல்லாமல் அதில் போனால் வெறுத்து விடும்.
ஒரு பேருந்தில் பயணச்சீட்டு வாங்கவில்லை என்று நான்கு பையன்களை இறக்கினார்கள் நிறுத்தத்தில் காத்திருந்த பரிசோதகர்கள். ஒரு பையனிடமிருந்து செல்பேசியை எடுத்துக் கொண்டு அபராதம் கட்டி விட்டு வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். முதலில் காசே இல்லை என்று சாதித்தவ பையன்கள் சிறிது நேரத்தில் சில நூறு ரூபாய்களைத் தேத்தி விட்டிருந்தார்கள். ஆனந்த விகடன் வாங்கலாம் என்று சாலையைக் கடந்து கடையில் வாங்கிக் கொண்டு திரும்பவும் நிறுத்தத்துக்கு வரும் போது 17M சொகுசுப் பேருந்து வந்தது. அதில் ஏறி சென்ட்ரலில் இறங்கலாம் என்று ஏறி சீட்டும் வாங்கிக் கொண்டேன். வசதியாக உட்கார்ந்து கொள்ள இருக்கையும் கிடைத்தது.
ஆனந்த விகடனை புரட்டிக் கொண்டே இருந்தேன். வள்ளுவர் கோட்டம் அருகில் சாலை நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். ஸ்டெர்லிங் சாலையில் திரும்பி வள்ளுவர் கோட்டத்துக்குப் பக்கவாட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்றேன். காசோலையாக வாங்கி விட்டதாகவும், வங்கியில் போட்டு விடலாமா என்றும் தொலைபேசினார். இது குறித்து பேச முடியாது என்று நினைத்து திங்கள் கிழமை வரை காத்திருக்கச் சொன்னேன்.
எழும்பூர், சிந்தாதிரிப் பேட்டை, சென்ட்ரல் வழியாகப் போகும் சாலிகிராமம் - பிராட்வே பேருந்தில் ஏறி சிந்தாதிரிப்பேட்டை சீட்டு வாங்கிக் கொண்டேன். எழும்பூர் நிலையம் தாண்டி ஏற்றத்தில் இறங்கிக் கொள்ளலாம். பேருந்து ஆல்பர்ட் திரையரங்கு வழியாக வந்து நிலையம் பக்கம் திரும்பாமல் வலது புறம் திரும்பி நிறுத்தினார்கள். சரியாக சாலை ஏற்றத்தின் ஆரம்பத்தில். வசதியாக இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஏத்தம் ஏறி வந்து கொண்டிருந்து ஒரு ஆட்டோ நிறுத்தி ஏற்றிக் கொண்டார். ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். மீட்டர் யாரும் போடுவதில்லை. கோல்டன் லாட்ஜ் அருகில் இறங்கி 10 ரூபாய் கொடுத்தால், குறைந்தது 15 ரூபாய்கள் என்றார். கொடுத்து விட்டு 'மீட்டர் போட்டு விட்டு குறைந்த கட்டணம் என்று பேசினால் பொருள் உண்டு' என்று இடித்துரைத்து விட்டு நடந்தேன்.
வெளியில் காத்திருப்பவர்கள் நிறைய இல்லை. உள்ளே இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். கணினியை விரித்துப் படிக்க ஆரம்பித்தேன். ஸ்லாஷ்டாட், மோசில்லா, பில்கேட்ஸ் பேட்டி. இடையில் போய் தண்ணீர் குடித்துக் கொண்டேன். பையைத் திறக்கும் போதுதான் தண்ணீர் பாட்டில் உள்ளே இருப்பது தெரிந்தது. அது வரை யாரோ பக்கவாட்டு பையிலிருந்து உருவி விட்டார்கள் என்று நினைத்திருந்தேன். என்னைச் சுற்றியிருந்த எல்லோரையும் திருடர்களாக உருவகப்படுத்திய பாவம்.
அதிகாரமாகப் பேசியபடி வந்த ஒருவர் கொஞ்சம் பந்தா விட்டுப் பார்த்தார். ஆனால் யாரும் அசைந்து கொடுக்கவில்லை. 1 மணி வாக்கில் வந்து சாப்பிட்டு வரச் சொன்னார். கணினியை மூடி வைத்து விட்டு வெளியில் வந்து கோல்டன் டவர்ஸ் விடுதிக்குச் சென்றேன். பணப்பையில் காலையில் வாங்கிய 200 ரூபாய்கள் இருந்ததால், சப்பாத்தி ஒரு தட்டும் (இரண்டு சப்பாத்திகள்), தொடர்ந்து சர்க்கரை குறைவாகத் தேநீரும் வரவழைத்தேன். தேநீரை முழுவதும் குடித்து முடிக்கவில்லை.
திரும்ப வந்து காத்திருத்தல் ஆரம்பித்தது. அதன் பிறகுதான் மதிய உணவு ஆரம்பித்து முடிந்தது. அவர் மதியத்துக்கு மேல் வெளியே போக வேண்டியிருந்தது ரத்து செய்து விட்டார் என்று பட்டது. அவர் சோபாவிலிருந்து எழுந்திருக்கும் போது என்னைக் கூப்பிட்டார்கள்.
சோபா வாங்கிய கதையிலிருந்து, அதன் தரத்தைக் குறித்து ஆரம்பித்தார். வீட்டு வேலை செய்வதில், மரத்தில் மேலொட்டு ஒட்டுபவர்கள், தோட்டம் அமைக்க அழைத்தவர்கள், அளிக்கதவு போட்டவர்கள், என்று வீடு கட்டி முடிப்பதன் சிரமங்கள். ஒவ்வொருவர் மீதும் கோபப்பட்டு நிதானத்தை இழப்பது. உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை சாப்பிட்டதும் கண்கள் சொக்குகின்றன. அதை சாப்பிடாவிட்டால் இது போலக் கத்தும் போது அபாயமாகப் போய் விடும் என்று திசை திரும்பியது பேச்சு.
தியானம், பொறுப்புகளை பகிர்ந்தளிப்பது. எதிர்பார்ப்புகளை விளக்குவது, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்று விவாதித்துக் கொண்டே போனேன். தனது வாழ்க்கையின் போக்கை, சவால்களை சந்திக்கும் ஆர்வம், கடைசிப் படுக்கையில் படுக்கும் வரை ஓடிக் கொண்டே இருப்பேன் என்று பேசினார். யாருக்கோ 60ம் கல்யாணமாம். இவருக்கும் 5 ஆண்டுகளில் அறுபது வயதாகி விடும். இந்த ஆண்டு 55 ஆகி விட்டது. மகளுக்குத் திருமணம் ஜூலை 14ல், 19ல் வரவேற்பு.
கடைசியில் பணி விபரங்களுக்கு வந்தார். சின்னச்சின்ன குறைகளை சொல்லாமல் எல்லாம் முடிந்து விட்டது என்று சொன்னார். ஆனாலும் தொழிற்சாலைகளிலிருந்து அறிக்கைகள் வருவதில்லை ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதில் இறங்காமல் 'இனிமேல் செய்ய வேண்டிய பணிக்கு நான் 2 லட்சம் ரூபாய்கள் என்று சொல்லியிருக்க எப்படி 4 லட்சத்துக்கு விற்பனை ஆவணம் அனுப்பலாம், இரண்டு லட்சத்துக்கு நீ செய்தே தீர வேண்டும்' என்று இரண்டு ஆண்டுகளில் அவர் கொடுத்த ஆதரவு, நாங்கள் செய்த தவறுகள், ஆரம்பத்தில் பேசி தொகைக்குப் பல மடங்கு கொடுத்தது என்று தாக்கிக் கொண்டே போனார். நம்முடைய வேலையைத் தொடர வேண்டும், விலை மட்டும் குறைவு என்று நிற்பது அவருக்குக் கோபமோ ஏமாற்றமோ இல்லை, பேரம் பேசுவதுதான் என்பதை உணர வைத்தது.
வர வேண்டிய தொகையில் ஒரு பகுதியை மட்டும் காசோலை தரச் சொன்னார். மிகவும் ஏமாற்றத்துடன் வாதமிட்டேன். இரண்டு பேருக்குமே எனது வலி புரிய ஆரம்பித்தது. ஓரிரு நாட்களில் சரி பார்த்து விட்டு திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் மீதிப் பணத்தைக் கொடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டேன். 'அறுபதாம் கல்யாணம் முடிந்து வருவதற்கு புதன் கிழமை ஆகி விடும். அன்று வா' என்று சொல்லி விட்டார். அவர் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்டார். 2 லட்சத்துக்கு அடுத்த வேலைகளை செய்து வாங்க வேண்டும். இப்போதும் முழுப்பணத்தைத் தர வேண்டாம்.
பிறகு எனது மனத்துக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தார். எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து அவர் முதலீடு செய்கிறார். தவறுகள் நடந்தும் தொடர்ந்து பணம் கொடுத்து ஆதரவளிக்கிறார். 'இது வரை செலவழித்த பணம் எல்லாம் இதை வெற்றிகரமாக முடித்தால்தான் நியாயப்படுத்த முடியும். தணிக்கையாளர்களுக்கும், தொழில் கூட்டாளிகள் தன்னைப் பின்பற்றும் மற்ற போட்டியாளர்களுக்கும் தான் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இது எனக்கும் உனக்கும் இடையேயான பரிமாற்றம் மட்டுமில்லை' என்று சமாதானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
மதியத்துக்கு மேல் எல்லோரும் திரைப்படத்துக்குப் போயிருக்கிறார்கள். கோயம்பேடு ரோஹிணியில் தசாவதாரம். நான் பேருந்தில் ஏறி குறுஞ்செய்தி அனுப்பினேன். பேருந்து போரூர் போகும். நேரடியாக போரூர் சீட்டு வாங்கிக் கொண்டு கடைசி வரிசையில் நடு இருக்கையில் கால் நீட்ட வசதியாக உட்கார்ந்து கொண்டேன். எழும்பூர் அருகே மேம்பாலம் ஏறி இறங்கி அண்ணா சாலைக்கு வந்ததும் பேருந்து நிறைந்து விட்டது. நான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு சன்னலோர இருக்கையில் ஒரு ஆணும், மற்ற இருக்கைகளில் பெண்களும் நிரம்பி விட்டார்கள். அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறிய பெண்கள் அருகில் நிற்கவும் ஆரம்பித்தார்கள்.
பார்வையை வெளியில் பதித்துக் கொண்டேன். ராமாபுரத்தில் அருகில் இருந்த பெண் இறங்கி விட நின்று கொண்டிருந்த இரண்டு பேர் உட்கார்ந்து விட்டார்கள். போரூர் சாலை நிறுத்தத்துக்கு வெகு தூரத்துக்கு முன்பே நெரிசலும் வாகனக் காத்திருப்பும். பேருந்தின் கதவு திறந்ததும் இறங்கிக் கொண்டேன்.
தொலைபேசி பிரைம் ஆர்டர் வந்த விபரத்தைக் குறிப்பிட்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட கட்டணத்தை விட 10 மடங்கு அதிக கட்டணத்தில் வாங்கப் போகிறார்கள். அவருக்கும் மகிழ்ச்சி என்று சொன்னார். போரூர் பேருந்து நிறுத்தம் வரை வந்து இன்னொரு சொகுசு பேருந்தில் வளசரவாக்கத்துக்கு 3 ரூபாய்கள் சீட்டு.
நான் இதை முடித்து விட்டு கஞ்சிக்கு வேக வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும். வீட்டை ஒதுங்க வைத்துத் தூத்து வாரி விட்டுக் குளியல், தியானம். இவ்வளவுக்கும் எட்டரை மணி ஆகி விடும். சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்குப் போனால் 11 மணிக்கு முன்பு பிற வேலைகளை முடித்து விட்டு சந்திக்கலாம்.

சனி, ஜூன் 21, 2008
காவல் தெய்வம்
மூன்று நாட்களாக எழுதவில்லை. 18ம் தேதி, 19ம் தேதி, 20ம் தேதி. முந்தா நேற்று வேண்டுமென்றே எல்லா நியமங்களையும் உடைத்துக் கொண்டேன். தூங்கப் போகும் முன்பு கதைப் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டே தூங்கினேன். தியானம் செய்திருக்கவில்லை, விளக்கை அணைத்திருக்கவில்லை. நேற்றுக் காலையில் எழுந்திருக்கும் போது மணி ஏழேகால்.
விழிப்பு வந்தும் புரண்டு புரண்டு எல்லா சோர்வையும் விரட்டி விடும் உத்தேசத்தோடு தூங்கிக் கொண்டிருந்தேன். முந்தைய நாள் பெரியமேட்டுக்குக் கிளம்பி பேருந்தில் அண்ணாசாலையில் இறங்கினேன். தொலைபேசினால் அலுவலகத்துக்கு சார் வரவில்லை. நாளைக்குத்தான் என்று சொல்லி விட்டார்கள். சாலையைக் கடந்து எதிர்புறம் பேருந்தைப் பிடிக்க வேண்டும். பசிக்கவே, வசந்தபவனில் 4 இட்லிகள். காலையில் சாப்பிட்டிருந்த அடை இன்னும் வயிற்றை சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. சூடாக பால் ஒன்றும் குடித்துக் கொண்டேன். பேருந்து நிறுத்தத்தில் தேவையான பேருந்துகள் நிற்பதாகத் தெரியவில்லை. கொஞ்ச தூரம் நடந்து வாலாஜா சாலை முனையில் இருந்த நாற்சந்தி நிறுத்தத்தில் நின்றால் ராமாபுரம் போகும் பேருந்து ஒன்று வந்தது. பழைய உடைந்த, லொலொடவென்று ஓடும் பச்சை நிற வண்டி. உட்கார இருக்கை இருந்ததால் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
ஜிஎன்செட்டி சாலையில் திரும்பி, திநகர், ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், அசோக்நகர் வழியாக வடபழனி, மீண்டும் ஆற்காடு சாலை. ஆழ்வார் திருநகர் அருகில் திரும்பி ராமாபுரம் வருகிறது. ஒரே புழுக்கமும் தாகமுமாக இருந்தது. கையில் ராபின் குக் எழுதிய கோமா என்ற கதைப்புத்தகம். பேருந்தில் பெரியமேடு போவதற்குத் துணையாக வைத்திருந்தேன்.
பிள்ளையார் கோவில் அருகில் இறங்கி நடந்தேன். வாடிக்கையாளரை சந்திக்கப் போவதற்காக காலில் காலணி. வழியில் கடையில் ஏதுவாக எதுவும் தென்படவில்லை. வீட்டிற்குள் வரும் போது ஒரு குழந்தை இரு சக்கர வண்டியை வைத்து விட்டுப் போனாள். வீட்டில் காலையில் செய்த களேபரங்கள் அப்படியே கிடந்தன. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேகி நூடில்ஸ் கொதிக்க வைத்து தண்ணீருடன் சாப்பிடத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.
தொட்டித் தண்ணீருக்கு வடிகட்டி அமைப்பதற்காக பல நாட்களாக பேசிக் கொண்டிருந்தோம். மேல்வீட்டு அம்மா கதவைத் தட்டி அவர்கள் பங்கு காசைத் தருவதாகச் சொன்னார்கள். பையனைக் கீழே விட்டுப் போய் காசை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். இரண்டாவது மாடியில் இதற்குப் பொறுப்பு ஏற்பதாகச் சொல்லியிருந்த அம்மாவிடம் காசைக் கொண்டு கொடுத்து விட்டேன். என்னுடைய பங்கை ஓரிரு நாட்களில் தருவதாகச் சொல்லி விட்டேன்.
சூடான நீருடன் மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு விட்டுப் புத்தகம் படித்துக் கொண்டே தூங்கியிருந்தேன். காலையில் எழுந்ததும் அதிக குற்றவுணர்வு இல்லாமல் இருந்தது. 'ரொம்பவும் நல்லவனாக இருந்தால் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்' என்ற கோபம் கனன்று கொண்டிருந்தது. நம்முடைய உரிமைகளை கறாராக நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.
வெளியில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தால் நாளிதழைக் காணவில்லை. இவ்வளவு நேரத்துக்கு இன்னும் போடவில்லையா என்ன? அப்புறம் பார்த்தால், வெளியில் தூக்க வந்த அம்மா அதை ஜன்னலில் எடுத்து வைத்துப் போயிருந்திருக்கிறார்கள். காலைக் கடன்களை முடித்து விட்டுத் தண்ணீர் பிடிக்கப் போனால், தண்ணீர் நின்று போயிருந்தது. ஏழரை மணி வரைதான் வருகிறது. பாத்திரங்களை தேய்த்து வைத்து விட்டு, அடுக்களையை மட்டும் சுத்தம் செய்து விட்டுக் குளித்துப் புறப்பட்டேன்.
20 நிமிடங்கள் தியானம் உட்கார்ந்தேன். முந்தைய நாள் மனிதவள மேலாண்மை தொடர்பான கொள்கை ஆவணம் தயாரிக்க தியானத்தை ரத்து செய்திருந்தேன். தியானம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும். வண்டி அலுவலகத்தில் இருக்கிறது. 10 நிமிடங்கள் கைபேசி கடிகாரத்தில் அமைத்துக் கொண்டு நடையைப் போட்டேன். எஸ்ஆர்எம் தாண்டியதும் மணி அடித்து விட்டது.
அதையும் தாண்டி ஊருக்குள், துர்காபவனில் 4 இட்லிகள், பொங்கல் சாப்பிட்டேன். 16 ரூபாய்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தொலைபேசி. 'வண்டி இங்கு நிற்கிறதே, எப்படி வருகிறீர்கள்? யாரையாவது வந்து அழைத்துப் போகச் சொல்ல வேண்டுமா?'
சாப்பிட்டு விட்டு நடையைத் தொடர்ந்தேன். அலுவலகத்துக்கு வந்ததும், தண்ணீரைச் சுட வைத்து கடும் காபி. எலுமிச்சம் பழம் இருந்தும். அப்போது இருந்த உணர்வுக்கு காபிதான் தேவைப்பட்டது. உட்கார்ந்து பிரைம் தேவைகளை கண்டறியப் போகும் பணிக்கான ஆவணத்தைத் தயாரிப்பதில் ஈடுபட்டேன். அரை மணி நேரம் சந்திப்பு. வர வேண்டிய பணம் திரட்ட வேண்டிய முறை, இந்த மாதம் பணி முடித்து பணம் கேட்க வேண்டிய விபரங்கள் என்று பேசி முடித்தோம்.
ஆவணம் தயாரிக்க 2 மணி நேரங்கள் ஆகி விட்டது. அதை சரிபார்க்கக் கொடுத்து விட்டு இஷ்யூடிராக்கரில் செய்திருந்த மாற்றங்களை பயன்பாட்டில் சேர்ப்பதில் ஈடுபட்டேன். நேரம் போனதே தெரியவில்லை. இடையிடையே எலுமிச்சை நீர் குடித்துக் கொண்டேன். சாப்பாட்டு வேளையில் ஒரு கப் சுடுநீர் குடித்த பிறகுதான் வயிறு தெளிவடைந்து பசி எடுத்தது.
ஆவணத்தை சரிபார்த்துக் கொடுத்ததும், வாடிக்கையாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். சாப்பாட்டில் ரசம், பீட்ரூட் துவரன், வெண்டைக்காய் பொரியல். சாப்பிட்டு விட்டு இணையத் தளத்தில் பக்கங்களை மேம்படுத்தித் திருத்தினேன். இன்டெக்ரேஷன் சோதனை என்று 1 மணி நேரம் செய்ய ஆரம்பித்தேன். அது நாற்பது நிமிடங்களுக்கு மேல் ஓடியது. மின்னஞ்சல்களை படித்து பதில் போட வேண்டியவற்றுக்குப் பதில்.
மதியம் நான்கு மணி வாக்கில் கொஞ்சம் சாம்பார் சோறு சாப்பிட்டு விட்டு வயிற்றையும் சுத்தப்படுத்திக் கொண்டேன். இரவு ஏழு மணிக்கு மேல் வேலை ஓடவில்லை. இன்று வரச் சொல்லியிருந்தார்கள். தகவலைச் சொல்லி, தாமதமானால் நாளை பார்க்கலாம் என்று சொல்லி விட வேண்டும். திங்கள் கிழமை திட்டத்தை உறுதி செய்து கொண்டேன். இன்று காலை தொலைபேசி மன்னிப்பு கேட்டுக் கொண்டு காசு வாங்கிக் கொள்ளலாமா என்று விசாரித்து வாங்கி விட வேண்டும்.
வீட்டுக்கு வரும் வழியில் பசுமை கடையில் கோதுமை மாவும் வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டேன். கோதுமை மாவு 30 ரூபாய், பழங்கள் 12 ரூபாய். வீட்டுக்கு வரும் போது வெளியில் இரட்டையர்களும், காலையில் விளையாடும் பையனும் இன்னொரு சின்னப்பையனும் உட்கார்ந்திருந்தார்கள். கோதுமை மாவைப் பிசைந்து சப்பாத்தி போட்டு சாப்பிட்ட பிறகுதான் தெம்பே வந்தது. குடிக்கத் தண்ணீர் இருக்காது என்று தெரிந்திருந்ததால், அலுவலகத்திலிருந்து பாட்டிலில் எடுத்து வந்திருந்தேன். அதைக் குடித்துக் கொள்ள முடிந்தது.
சாப்பிட்டு விட்டு படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டே கோமா என்ற கதையைத் தொடர்ந்தேன். திரைக்கதை வடிவிலேயே இந்த ராபின் குக்கின் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனது கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட வேண்டும் என்ற உள்ளுணர்வோடுதான் கதையை ஓட்டிச் செல்வதாகப் பட்டது.
குறிப்பிட்ட பக்கம் வரை கூட முடிக்காமல் தூங்கி விட்டேன். விளக்கை அணைத்திருக்கவில்லை. பாதி இரவில் எழுந்து விளக்கை அணைத்து மின்விசிறியையும் அணைத்துக் கொண்டேன். தூங்கித் தூங்கிப் பார்த்து இரண்டே முக்காலுக்கு விழிப்பு வந்து அதன் பிறகு தூங்க முடியவில்லை. எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு எழுத முடிவு செய்தேன்.
மந்திரக் கம்பளத்தின் கடைசிப் பகுதியை தட்டச்சிட வேண்டும். நேரத்தை உள்ளிட்டு விட்டு அமைக்காமலேயே தட்டச்சிட ஆரம்பித்தேன். எதிர்பார்த்தது போலவே நாற்பது நிமிடங்களுக்கு மேல் ஆனது. கணினியில் இயங்கும் நேரம் 50 நிமிடங்கள் என்று காட்டியது. வலைமனையில் ஏற்றியிருந்ததை அனுப்பியிருந்தேன். இரண்டு பேருமே பாராட்டி பதிலளித்திருந்தார்கள், பாலபாரதி தொலைபேசியில்.
வீட்டைத் தூய்மை செய்து விட்டு அடுத்த எழுத்து என்று எழுந்திருந்தேன். முதலில் துணிகளை மடித்து வைத்து விட்டு படுக்கை விரிப்பையும் துவைக்கப் போட்டேன். அடுக்களையில் பாத்திரங்களை கழுவப் போட்டு விட்டு அடுப்பையும் மேடையையும் தூய்மை செய்தேன். பொறுக்குகள், அழுக்குகள் தரையில் விழுந்தன. எண்ணெய் கீழே விழுந்து அதில் செத்துக் கிடந்த பூச்சியையும் சேர்த்துத் துடைத்து குப்பைத் தொட்டியில் போட்டேன். அடுக்களையை மட்டும் தூத்து ஒதுக்கினேன்.
மீண்டும் கையில் புத்தகத்துடன் கழிவறையில். மிகவும் தத்ரூபமான ஒரு துரத்தல் நிகழ்ச்சியை விவரித்திருந்தார். அதைத் தொடர்ந்து தரை தூத்து, பாத்திரங்களைக் கழுவி விட்டு, மீந்திருந்த ஒரு வாழைப்பழத்தையும் சாப்பிட்டு விட்டு எழுத்தை ஆரம்பித்தேன்.
ஒரு முறை கடற்கரையில் உட்கார்ந்திருந்த போது குறி சொல்லும் ஒரு அம்மா என்னைப் பார்த்து விட்டு பரம்பரையில் ஒரு பெண் தெய்வம் உன்னைக் காத்து வருகிறது. அதை நினைவு கூர்ந்து வழிபாடு செய்தால் நலம் என்று சொல்லியிருந்தார்கள்.

செவ்வாய், ஜூன் 17, 2008
பயணமும் முக்குளிப்பும்
காலை ஐந்து இருபத்தியாறு.
நேற்றுக் காலையில் ரயிலில் எழுதி முடித்ததும் கீழே இறங்கிக் கொண்டேன். ரயில் பெட்டியிலேயே மின்னூட்டும் வசதி இருந்தது. ஆனால் கதவுக்கு அருகில் மட்டும் இருந்தது. ரயில் தாமதமாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆறு மணிக்கு விழுப்புரம் என்றால் சென்னை வந்து சேர ஒன்பது மணிக்குக் குறையாமல் ஆகி விடும். மடிக்கணினியின் மின்கலனில் மின்னூட்டம் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று கதவுக்கருகிலான இருக்கையில் உட்கார்ந்து இணைத்துக் கொண்டேன். மின்சாரம் ஏறிக் கொண்டிருந்தது. இணையத்தில் இணைந்து மின்னஞ்சல்கள், கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நான் முடிப்பதற்கு முன்பே நான்கைந்து பேர் தத்தமது செல்பேசி மின்கலன்களுக்கு மின்னூட்ட இணைத்தார்கள். ஒருவர் பலமுனை பிளக் ஒன்றை சொருகி விட சென்னை வந்து நேரும் போது நான்கைந்து ஒயர்கள் கதவுக்குக் குறுக்காகத் தொங்கிக் கொண்டிருந்தன.
மடிக்கணினியில் மின்னூட்டம் போதும் என்று தோன்றியதும், அதை மூடி பையில் வைத்து விட்டு இருக்கைக்குத் திரும்பி விட நினைத்தேன். பார்த்தால், கீழ் படுக்கையில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார். இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். உட்கார்ந்திருந்த பக்கவாட்டு இருக்கைக்கு மேல் படுக்கையில் பக்கவாட்டுக் கம்பியில் துணி எல்லாம் கட்டி, தூங்குபவர் உருண்டு விழுந்து விடாமல் பாதுகாப்பு செய்திருந்தார்கள். ஒரு சின்னப் பையன் அரைக்கால் சட்டை போட்டு தூங்குகிறான் என்று பார்த்தேன். உண்மையில் ஒரு குட்டிப் பெண். இறங்க முயற்சித்து முடியாமல் திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் கூட வந்தவர் அவளை இறக்கி விட்டார்.
20 நிமிடங்கள் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தேன். மடிக்கணினி பையையும் அருகில் வைத்துக் கொண்டேன். தியானத்துக்கு அப்புறமும் பசியில்லை. வயிறு திம்மென்று இருந்தது. எதிரில் இருக்கையில் இருந்தவர் ஒரு டப்பாவைத் திறந்து இட்லிகளை உள்ளே தள்ளினார். இன்னொருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் என்னுடைய இருக்கைக்கு மாறி திறந்து ஆறு இட்லிகளையும் உள்ளே தள்ளினேன். இரவு தூங்கப் போகும் முன்பு வாங்கியிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் குடித்துக் கொள்ள முடிந்தது.
திண்டிவனம், செங்கல்பட்டு எங்கும் நாளிதழ் வாங்க வாய்க்கவில்லை. சகபயணி ஒருவர் வாங்கி வைத்திருந்த குமுதம் படிப்பாரெல்லாம் முடித்துக் கிடந்தது. அதைக் கைப்பற்றி புரட்டிக் கொண்டிருந்தேன். தசாவதாரம் விமரிசனம்தான் இந்த இதழின் சிறப்பாக அட்டையில் போட்டிருந்தார்கள். மற்றபடி நினைவில் நிற்கும்படி எதுவும் இல்லை. குட்டிக் கதைகள், துணுக்குகள், மேலோட்டமான கட்டுரைகள் என்று மூளைக்கு வேலை கொடுத்து விடாத உள்ளடக்கம். விகடனை எவ்வளவு திட்டினாலும் கொஞ்சம் கனமான உள்ளடக்கத்தைக் கொடுப்பதில் வெற்றி பெற்று விடுகிறார்கள்.
மீண்டும் கணினியைப் பிரித்து வைத்து நாட்குறிப்புகளை பதிய ஆரம்பித்தேன். மொத்தம் மூன்று நாட்களுக்குப் பதிய வேண்டும். 16ல் ஆரம்பித்து, 13ம் முடித்தேன். 11ஐ பதிந்து கொண்டிருக்கும் போது கிண்டி தாண்ட ஆரம்பித்தது. நிதானமாக கணினியை மூடி, பொருட்களை எல்லாம் பையில் அடைத்து மேலிருந்த பையையும் கீழே எடுத்து தண்ணீர் பாட்டிலை உள்ளே வைத்து எடுத்துக் கொண்டு கதவருகே வந்தேன்.
தூங்கிக் கொண்டிருந்த நிக்கர் போட்ட குட்டிப் பெண்ணும் கீழே இறங்குகிறாள். கூடவே இன்னொரு பெரிய பெண். ஏதோ நிகழ்ச்சிக்கு போய் விட்டுத் திரும்புகிறார்கள். கூட வந்தவர், தொலைபேசியில் பேசி விட்டு, குட்டிப் பெண்ணின் அம்மா வண்டியுடன் வந்திருப்பதாகவும், பெரிய பெண்ணையும் அதே வண்டியில் அண்ணாசாலையில் இறங்கிக் கொள்ளுமாறும் சொல்கிறார். வண்டி நின்றதும் வழி விட்டு விட்டு நானும் இறங்குகிறேன்.
நடைபாலத்தில் ஏறி மேற்கு மாம்பலம் பக்கத்தில் இறங்கி ஆட்டோ பிடிக்காமல் நடக்க ஆரம்பித்தேன். ஆர்ய கௌடா சாலை வருவதற்கே ஓரிரு கிலோமீட்டர் ஆகி விட்டது. இடையிடையே தண்ணீர் குடித்திக் கொண்டேன். முதுகில் வாயுப் பிடிப்பு கொஞ்சம் வசமில்லாமல் அசைந்தால் வலித்துக் கொண்டிருந்தது. அதற்கு மேல் நடக்க முடியாது என்று தோன்றிய போது, பேருந்திலும் கூட்டத்தில் பைகளையும் வைத்துக் கொண்டு ஏறி விட முடியாது என்று பட்டது. இரண்டரை ரூபாய்க்கு இந்து நாளிதழ் வாங்கிக் கொண்டு ஆட்டோவை கூப்பிட்டேன்.
என்ன கட்டணம் என்று சொல்லாமலேயே புறப்பட்டு விட்டார். கூட்டம் குறைவான தெருக்களில், சாலைகளில் திட்டமிட்டு ஓட்டி ஒன்பதரைக்கு அலுவலகம் கொண்டு சேர்த்து விட்டார். 100 ரூபாய் கேட்டார். எத்தனை கிலோமீட்டர் என்று கேட்டுக் கொண்டு கொடுத்து விட்டேன்.
வேலைக்கு வரச்சொல்லி உட்கார்ந்திருந்தார். அவரை காத்திருக்கச் சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். தேய்த்து வைத்த துணிகளை எடுத்துக் கொள்ளவில்லை. பையில் இருந்த திருநெல்வேலியில் வாங்கிய அல்வா, வீட்டிலிருந்து கொண்டு வந்து மிச்சமிருந்த முறுக்குகள், தண்ணீர் பாட்டிலை வெளியில் வைத்து விட்டு அழுக்குத் துணிகளுடன் கிளம்பினேன். பைக்குக்கு சாவி இல்லை. எடுத்துக் கொண்டு போய் விட்டாராம்.
ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். காவலர், தண்ணீர் வடிகட்டுவதைக் குறித்துப் பேச எல்லோரும் தேடுவதாகச் சொன்னார். துணிகளை அழுக்குக் கூடையில் போட்டு விட்டு, அவலை பாத்திரத்தில் வைத்து விட்டு, காலைக்கடன்களை முடித்து விட்டு முகம் மழிப்பு. அதன் பிறகு குளியல். குளிக்கும் போது குளிர்ந்த தண்ணீர் ஊற்றலாமா என்று ஐயம். குளித்து முடித்து விட்டேன். முந்தைய நாளும் குளித்திருக்கவில்லை.
10.35. குளித்து விட்டு தியானமும் செய்து கொண்டேன். போன வாரம் சிறிது நேரம் போட்டுக் கழற்றியிருந்த சட்டையை அணிந்து கொண்டேன். துவைத்த பேன்டு, தேய்த்த பேன்டு இல்லாததால், ரயிலில் போட்டு வந்த பேன்டையே போட்டுக் கொண்டேன். தேய்த்த துணிப்பையை எடுத்து வரவில்லை.
லட்சுமி பவனில் சாப்பிட்டு விட்டுப் போவது என்று முடிவு. பசுமைக் கடைக்கு எதிரிலான தெருவில் போய் லட்சுமி பவனுக்கு வந்தேன். முதலில் ஒரு தோசை. இதுவரை பார்த்திராத ஒருவர் பரிமாறுபவராக இருக்கும் மேசை. நான் வரும்போதெல்லாம் சின்னப் பையன்களை வேலைக்கு வைப்பது குறித்து அவர்களுக்கும் நினைவு வருகிறது என்று தோன்றியது. தோசைக்குப் பிறகு பொங்கல். அதில் கொண்டு வந்திருந்த சாம்பாரையும் சேர்த்துக் கொண்டேன். படிப்பதற்கு நாளிதழ் எதுவும் எடுத்து வராததால் அப்படியே சாப்பிட்டு முடித்தேன். சர்க்கரை குறைவாக கடுப்பம் குறைவாக ஒரு காபியும் குடித்துக் கொண்டேன்.
அலுவலகத்துக்குப் போய்ச் சேரும் போது 11 மணி. எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள். பயிற்சி மாணவிகள் தமது அறிக்கையை முடித்துக் கொடுத்து விட்டுப் போக வேண்டும்.
இந்த மாதம் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைக் குறித்துப் பேசினோம். காலணி மென்பொருளில் வேலைகளைக் குறைத்துக் கொண்டு கை வசம் இருக்கும் வாய்ப்புகளை நிறைவு செய்து பணம் ஈட்டும் வழியைப் பார்க்கச் சொன்னேன். காலணி மென்பொருளில் பணியாற்றும் மூன்று பேரையும் அழைத்து அவர்கள் பணித்திட்டத்தை மாற்றிக் கொள்ளச் சொன்னேன்.
மின்னஞ்சல்களுக்கு பதில் போட்டது போக, இஷ்யூ டிராக்கரில் மாலை வரை ஈடுபட்டிருந்தேன். போன வாரம் வரை முடித்திருக்க வேண்டிய இஷ்யூக்களை எல்லாம் நகர்த்தி விட்டிருந்தார்கள். இந்த வாரத்துக்கு நூற்றுக்கு மேல் இருந்தன. அவற்றை வாடிக்கையாளர் வாரியாக, பில் செய்ய வேண்டிய குறிப்புரை வாரியாக பிரித்து 99ஆகக் குறைத்தேன். சமீபத்தில் சேர்த்த டெலிவரபிள் - குறிப்புரை, மற்றும் ஒவ்வொரு பணிக்கும் நேரத்தை திட்டமிட்டு, உள்ளபடி எவ்வளவு ஆச்சு என்று பதிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது.
இந்த வாரம், அடுத்த வாரம், இந்த மாதம் என்று எல்லா பணிகளையும், குறிப்புரைகளுடன் இணைத்தேன். இப்போது அழகான தெளிவு வந்து விட்டது. அதைப் பற்றிய விளக்கத்தை இரண்டு மின்னஞ்சல்களாக எல்லோருக்கும் அனுப்பினேன். தினம் ஒரு கட்டளையில் who பற்றிய விளக்கத்தில் இரண்டு உள்ளீடுகளாக எதைக் கொடுத்தாலும் பயனாளரின் பெயரை மட்டும் காட்டும் என்ற குறிப்பை எடுத்து நகைச்சுவை முயற்சியில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.
மதியம் சாப்பாட்டுக்கு, ரசம், உருளைக் கிழங்கு பொரியல், முட்டை பொடிமாஸ் சாப்பிட்டேன். சாம்பார், அப்பளம் தொடவில்லை. சாப்பாடு கொடுப்பவருக்கும் பணம் கொடுத்திருக்கவில்லை. அவர் முகத்தில் ஈயாடவில்லை. இன்றைக்குக் கொடுத்து விட வேண்டும்.
மாலையில் மூன்று தொழிற்சாலைகளிலிருந்து வந்த கருத்துக்கள் குறித்த மின்னஞ்சல். அதற்கான பதில் தயாரிப்பதில் எல்லோரும் மும்முரமானோம். நம் பக்கம் எந்தப் பழுதும் இல்லை. அதற்கு பதிலளித்து விட்டு தொலைபேசினேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் ஃபினிஷிங் பகுதிக்கான மென்பொருள் செயல்படுத்தலை ஆரம்பித்து விடலாம் என்றார். பல நாட்களாக முயன்று தொடர்பு கிடைக்காமல் இருந்து வந்தது. நான் ஓரிரு நிமிடங்கள் பேசியதில் தெளிவு கிடைத்து விட்டது.
காலையில் அனுப்பியிருந்த மடலுக்குப் பதில் வந்திருந்தது. இன்றைக்கு வரச் சொல்லியிருக்கிறாராம். அடுத்தக் கட்டப் பணிகள், தர வேண்டிய பணம் குறித்துப் பேச வேண்டும். கொடுத்த காசோலையை இன்னும் வங்கியில் போட்டிருக்கவில்லை. இன்றைக்கு முதல் காரியமாக அதைச் செய்ய வேண்டும்.
இன்றைய நாளுக்கான திட்டமிடலை செய்து கொள்ளலாம். அப்படியே oocalc திறந்து நினைவில் வந்த பணிகளைக் குறித்துக் கொண்டேன்.
குமுதத்தில் சுவாமி நித்யானந்தர் இரவில் குறைவாகச் சாப்பிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். அதன் தாக்கத்தில் சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தேன். மதிய உணவுக்குப் பிறகு வாங்கி வந்த பனிக்கூழ் சாப்பிட்டது வேறு நிறைந்திருந்தது.
பயிற்சி மாணவிகளின் இறுதி அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். இரவு 8 மணிக்குப் புறப்படுவதாகத் திட்டமிட்டிருந்தார்கள். இருக்கும் நிலையைப் பார்த்தால் சீர்செய்ய ஏழெட்டு மணி நேரம் ஆகும் என்று சொன்னேன். பல விபரங்களை சேர்க்கவே இல்லை. ஏதோ அள்ளித் தெளித்துக் காண்பிப்பது போல இருந்தது. ஏழரை மணிக்கு நான் கிளம்பும் வரை முடித்திருக்கவில்லை. நான் வெளியில் வரும் போது ஓடோடி வந்து காலையில் முடித்து விடுவதாகச் சொன்னார்கள். ஊருக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு விட்டார்கள்.
தற்காலிக சாவியால் பைக்கை திறந்து ஓட்டிக் கொண்டு வந்து விட்டேன். ஏழரை மணிக்கே கிளம்பினேன். வீட்டுக்குள் நுழையும் போது வெளியில் குழந்தைகள் எல்லாம் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். தொலைபேசி கருவிக்கு 1500 என்று சொன்னதும் 2000 கிடைக்குமா என்று கேட்டார்கள். பராமரிப்புக்கு 500 ரூபாய்கள் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து சிறிது நேரத்தில் கதவைத் தட்டி இன்னொரு தொலைபேசி கருவியை வாங்கிக் கொண்டார்கள்.
தர்பூசனியில் பாதியையும் ஒரு ஆப்பிளையும் தின்றேன். கடையில் ஆப்பிள், தர்பூசனி, தேங்காய், வாங்கியிருந்தேன். இன்றைக்கு அவலை ஊற வைத்துத் தேங்காய் போட்டுச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று திட்டம். தண்ணீர் வரவில்லை என்றால் கதை மாறி விடும்தான். தண்ணீர் வருகிறது என்றால் சின்ன பிரெட் பொதியும் வாங்கி வந்து ஜாம் தடவி வாட்டிச் சாப்பிடலாம். இல்லை என்றால் மேகி நூடில் வாங்கி தண்ணீருடன் கொதிக்க வைத்துச் சாப்பிடலாம்.
சோம்பலை உதறி ஒரு மணி நேரம் மந்திரக் கம்பளம் எழுத உட்கார்ந்தேன். 16, 16 என்று இரண்டு அத்தியாயங்கள் கொடுத்திருந்தார்கள். 16ல் பாதி முடிந்திருந்தது. அதை நிறைவு செய்து, அடுத்த 16ஐ முடிக்கும் போது சரியாக 1 மணி அடித்தது. தியானம் செய்ய உட்காரும் முன் நாளிதழ்களை ஒதுக்கி விட்டு போர்வையைத் தேடினேன். கிடைக்கவில்லை.
மின்விசிறி இல்லாமல் தூக்கம் வந்து விடப் போவதில்லை. ஜன்னல்களை அடைத்து வைப்பதால் உள்ளே தூசி அவ்வளவாகப் படியவில்லை. தூத்து விட்டுப் படுத்தேன். வாயுத் தொல்லை வயிற்றிலும், மூட்டுகளிலும் உருண்டு உருண்டு வந்தன. முதுகில் வலிக்கிறது என்றால் அங்கு மட்டும் வாயு மிஞ்சியிருக்காது உடலெங்கும் பரவியிருக்கும் அதிகப்படி முதுகுப்பகுதியில் வெளியில் காட்டுகிறது.
காலையில் 5 மணிக்கு எழுந்து கொண்டேன். போக்கர் குறித்த புத்தகத்துடன் கழிவறை. பல் தேய்ப்பு. அதைப் படித்துக் கொண்டே எழுதுவதைக் கூட சில நிமிடங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டேன். 5.25க்கு எழுத்து ஆரம்பித்தது.
இதை முடித்ததும் நாளிதழ்களை துணிகளை ஒழுங்குபடுத்தி தரை தூக்க வேண்டும். தண்ணீர் வருகிறதா என்று பார்க்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். துணிகளின் ஒரு பகுதியை மட்டும் ஊற வைத்திருக்கிறேன். உள்ளாடைகள் மற்றும் சாரம் மட்டும். சட்டைகள், போர்வை, மற்றும் பேன்டை நாளைக்குத் துவைக்க வேண்டும்.
தண்ணீர் வருகிறது என்றால் கடையில் மேகி நூடில் வாங்கி சமைக்க முடியாதே! ஏனென்றால் காஸ் உருளையை எடுத்துப் போயிருக்கிறார்.
தண்ணீரை வேண்டுமானால் நுண்ணலை அடுப்பில் சுட வைக்கலாம்.
தண்ணீரும் வரவில்லை என்றால் பழங்களைச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிப் போய் துர்காபவனில் காலைச் சிற்றுண்டியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எட்டரைக்கெல்லாம் அலுவலகம் போய் விட வேண்டும். வங்கியில் காசோலையை செலுத்துவது, ஆவணங்களை தயாரிப்பது, நேற்றைய மின்னஞ்சலை எடுத்துக் கொள்வது என்று செய்து போக வேண்டும்.
கறாராகப் பேசி விட வேண்டும். எங்கள் பணியை வாங்குவதற்கு மேலாகவே முடித்து விட்டோம். இனி இருக்கும் தேவைகளுக்கு நீங்கள் அதிகம் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும். இல்லை பலனில்லை என்று நினைத்தால் இத்தோடு நிறுத்திக் கொள்வோம். தர வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்து விடுங்கள் என்று சொல்லலாம்.
எல்லோரும் நம்மைப் போலச் சிந்திப்பது இல்லை, மற்றவர்கள் மாறுபட்டு இருக்கலாம் என்பது அவருக்கு இன்னும் பிடிபடவில்லை. இன்னொன்று அவர்கள் நிறுவனத்தில் எல்லா ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை இரட்டிப்பாக்கும் ஆலோசனையைச் சொல்ல வேண்டும். அதுதான் இவர்களைத் தாங்கிப் பிடித்து அடுத்த நிலைக்குக் கொண்டு போகும் ஒரு வழி.
வர வேண்டிய பணத்தின் வயது முற்றிக் கொண்டே போகிறது. அடுத்த மாதத்திட்டத்துக்கு புதிய ஆர்டர் கிடைக்கும் என்று நினைத்து விட வேண்டாம் என்று எச்சரித்திருந்தேன்.
அது எனக்கும்தான் பொருந்தும். 1440 சொற்கள் இன்னும் 4 நிமிடங்கள் இருக்கின்றன. இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். அதிகாலையில் பண்பலை வானொலியில் சத்தமாகப் பாட்டு வைத்திருந்தவர், நான் எழுந்திருந்த ஓசை கேட்டதும் நிறுத்தி விட்டிருந்தார்.

திங்கள், ஜூன் 16, 2008
பயணத்தில் சறுக்கல்கள்
நேரம் காலை ஐந்து மணி 10 நிமிடங்கள், நாகர்கோவிலிலிருந்து சென்னை போகும் ரயிலில் மேல் தட்டுப் படுக்கையில் குனிந்து உட்கார்ந்து கொண்டு எழுத முயற்சிக்கிறேன்.
வெள்ளிக் கிழமை காலையில் நாலரைக்கு எழுந்து ரயிலில் ஒரு மணி நேரம் எழுதிய பிறகு சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் எல்லாவற்றுக்கும் டிமிக்கி. வெள்ளிக் கிழமை மாலையில் தியானம் செய்யாமலேயே படுத்து விட்டேன். சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் விழிப்பு வந்தும் ஆறு மணி வரை தூங்கிக் கொண்டிருந்தேன். சனிக்கிழமை காலை எழுத ஆரம்பித்து, கோப்பு எல்லாம் உருவாக்கி வைத்து விட்டுத் தொடர முடியாமல் விட்டு விட்டேன். ஒரு வாக்கியம் கூட எழுதியிருக்கவில்லை.
ஞாயிற்றுக் கிழமை காலையில் பல் தேய்த்த உடன் சித்தப்பாவைப் பார்க்கக் கிளம்பி விட்டேன். சனி இரவில் மட்டும் தூங்குவதற்கு முன்பு தியானம் செய்து கொள்ள முடிந்தது.
மற்றபடி உணவுக் கட்டுப்பாடுகளும் காற்றோடு பறந்து போயின. வெள்ளிக்கிழமை காலையில் திருநெல்வேலி வந்ததும் இட்லி பொதி ஒன்று வாங்கி கூடவே பூரி பொதியும் வாங்கிக் கொண்டேன். பத்து பத்து ரூபாய்கள். கடையில் பண்டம் வாங்கும் போது கூடுதலாக வாங்கியிருந்த கைமுறுக்குப் பொதியிலிருந்து மிஞ்சியிருந்தவற்றை முழுவதுமாகத் தின்று தீர்த்திருந்தேன்.
வீட்டுக்குப் போன பிறகு, எனக்காக செய்து வைத்திருந்த இட்லிகள் அத்தனையையும் சாப்பிட்டு விட்டேன். குளித்து தியானம் செய்து விட்டுச் சாப்பிட வேண்டும் என்று நேரம் சொல்லியிருக்க தியானம் செய்யாமலேயே சாப்பிட்டு விட்டேன்.
மதியச் சாப்பாடு, பருப்புப் பொடி, ரசம், பப்படம், வத்தல். மாலையில் கோதுமை தோசை. இடையிடையில் தட்டைகள், கேக்குத் துண்டுகள். எப்போதும் கட்டுப்பாடாக இருப்பவர் இது போல தளர்த்தி விட்டால் பின்விளைவுகளைச் சந்தித்துத்தான் தீர வேண்டும். நேற்று ரயிலுக்குக் காத்திருக்கும் போது ஆரம்பித்து முதுகு பக்கத்தில் நல்ல வலி. வாயுக் கோளாறு ஏற்பட்டு அங்கு பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பட்டது.
இப்படி கட்டுப்பாடு இல்லாத வண்டியாக ஓடும் போது எல்லா புலன்களும் தம் கூர்மையை இழந்து விடுகின்றன. அம்மாவின் எண்ணங்களும், விருப்பங்களும், அப்பாவின் கருத்துக்களும் மனதில் ஒட்டாமல் போய் விடுகின்றன. நேற்று கிட்டத்தட்ட எல்லோரும் என்னிடமிருந்து தப்பித்து ஓடும்படி ஆகி விட்டிருந்தது.
காலையில் சித்தப்பாவைப் பார்த்து நெடு நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்திருந்தால், அவர்கள் கைப் பிடித்து எழுப்பி விடாத குறையாக பேச்சுக்கள் திரும்பிய பிறகு, நான் விடைபெற்றுக் கிளம்பினேன். நேரம் வகுத்துக் கொண்டு இத்தனை நிமிடங்களுக்குப் பிறகு கிளம்பி விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்க வேண்டும். நான் முதலிலேயே நினைத்தது போல, நான் அப்படியே தோவாளைக்குப் போய் விட்டு வந்து விடுவேன் என்று நினைத்திருந்திருப்பார்கள். அதைச் செய்திருக்கலாம்.
வடசேரியில் இறக்கத்தில் இறங்காமல் இடது புறம் திரும்பியிருந்தால் தோவாளை போகும் பாதையைப் பிடித்திருக்கலாம்தான். அதை நேரடியாகச் சொல்லாமல் பல முறை குறிப்பால் உணர்த்த முயன்றும் நான் புரிந்து கொள்ள முடியாத மண்ணாந்தையாக இருந்தேன்.
மொத்தத்தில் இந்த மூன்று நாட்களும் சோம்பேறியாக சுயநலமியாகத்தான் நேரம் கழித்திருந்தேன். வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவி செய்வதோ, மற்றவர்களிடம் போய்ப் பேசிக் கொண்டிருப்பதோ, வெளியில் பணிகளை பொறுப்பேற்றுக் கொள்வதோ எதையும் செய்யவில்லை. தாழக்குடிக்குப் போயிருந்த போது அங்கும் வேலைகளில் பங்கேற்றிருக்கலாம். யாராவது வேண்டாம் என்றே சொல்லியிருப்பார்கள்! ஏதோ வேற்றாள் போல சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டேன்.
விமானத்தில் வேகத்தை இப்படித் திடீரென்று குறைத்தால் இது போன்று சிக்கல்கள்தான். கீழே விழுந்து முதுகில் வலி, உறவுகளில் வருத்தம், மனதில் சோர்வுதான் மிஞ்சும்.
மூன்று நாட்கள் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
வெள்ளிக் கிழமை ரயில் நாகர்கோவில் போய்ச் சேரும் போது ஒன்பதே முக்கால் ஆகியிருந்தது சீருடை அணியாத ஓட்டுனரை தேர்ந்தெடுக்க அறுபது ரூபாய்களுக்கு சைமன் நகர். காலைக் கடன்களை முடித்துக் குளித்து சாப்பிட்டு விட்டு அரைத் தூக்கத்தில் நேரம் ஓட்டிக் கொண்டிருந்தேன். அழுக்கான துணிகளைத் துவைத்துப் போடுவது கூட நடக்கவில்லை.
பேசிக் கொண்டே மதியம் முழுவதும் போனது. அம்மா தாத்தா வீட்டுக்குப் போயிருந்தார்கள். மேரி அக்கா வந்தவருக்கு மீந்திருந்த சோற்றைக் கொடுக்காமல் விட்டிருந்தேன். இரவில் கோதுமை தோசை சுட்டுக்கொடுத்தேன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும். எனக்குச் சுட ஆரம்பிக்கும் போது தொலைபேசி அழைப்பு. பேர்ல் வகுப்பு குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அதைக் குறித்து சனிக்கிழமை காலையில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். என்ன பதில் போட்டார்களோ தெரியவில்லை.
சனிக்கிழமை காலையில் எழுந்து 20 நிமிடங்கள் நடக்கப் போய் விட்டு வந்தேன். எழுதுவதற்கு ஆரம்பித்து ஒரு சொல் கூட எழுதாமல் பேச்சில் இறங்கி விட்டேன். சீர் செய்து அனுப்ப வேண்டியிருந்த விற்பனை ஆவணத்தை தயார் செய்து அனுப்பினேன். பத்தரை மணிக்கு ஆட்டோவில் ஏறி மறுவீட்டுக்குக் கிளம்பிய பிறகுதான் வந்த தொலைபேசி அழைப்பில் அனுப்பிய கோப்பு சீர் செய்யாத எதையும் மாற்றாத கோப்பு என்று திருப்பி அனுப்பச் சொன்னார்கள். வீட்டுக்குத் திரும்பி வந்து நான்கு மணிக்குத்தான் நேரடியாக வாடிக்கையாளருக்கே அனுப்ப வேண்டியிருந்தது.
ஆட்டோவில் போய் குறுந்தெருவில் இறங்கினோம். பெண்ணின் மாமா வீடு அங்கிருக்கிறதாம். பெண்ணும், மாப்பிள்ளையும் அங்குதான் தங்கியிருந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் சடங்கு அன்றைக்கு. அங்கிருந்து தாழக்குடி போக ஒரு வேன் ஏற்பாடு செய்திருந்தார்கள். நல்ல வேளையாக நெருக்கடியாக இல்லாமல் வசதியாக ஆளுக்கு ஒரு இருக்கை என்ற கணக்கில் உட்கார்ந்து போய்ச் சேர்ந்தோம்.
வேனில் போகும் வழியில் நல்ல நல்ல பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள். வெள்ளிக் கிழமை மாலை தொலைபேசி குழந்தைகளின் பாதுகாவலரிடம் பேசி விட்டதாகவும் அவர்களுக்கு சம்மதம்தான் என்றும் சொல்லியிருந்தார். அந்தக் குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். முதலில் அவர்களைச் சந்திக்க வேண்டும். ஒரு நாள் குழந்தைகளையும் வீட்டுக்கு வரச் சொல்ல வேண்டும். எல்லாம் சுவிட்சு போட்டது போல தானாக நடந்து விடப் போவதில்லைதாம். ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து கவனமாக அக்கறையாக செய்ய வேண்டும்.
நல்ல தாகம். குடிப்பதற்கு சர்பத் கரைத்து ஒரு கப்பில் கொடுத்தார்கள். அதில் இரண்டு கப்புகள் குடித்துக் கொண்டேன். இவர்களிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அத்தானை பேச்சில் இழுக்க முயற்சித்து தோல்வி அடைந்து விட்டார்.
பக்கத்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேச்சு. அழைத்துப் போய் மாமாவைப் பார்க்கச் சொன்னார்கள். சாப்பிடுவதற்கு அத்தையின் வீட்டுக்குப் போக வேண்டுமாம். ஏற்கனவே நடந்து கொண்டிருந்த பந்தி முடிந்து நாங்கள் இடம் பிடித்தோம். மேசை நாற்காலி போட்டு அதில் இலை போட்டுப் பரிமாறினார்கள்.
நார்த்தங்காய் பச்சடி, மாங்காய் பச்சடி, இனிப்புப் பச்சடி, வெஜிடபிள் பிரியாணி, உள்ளிக் கிச்சடி, பப்படம், அதைத் தொடர்ந்து தயிர் சோறு, கப்பில் சேமியா / பால் பாயாசம் என்று வெளுத்துக் கட்டினேன். சாப்பிட்டு முடிந்ததும் வீட்டுக்குக் கிளம்பி விட்டோம்.
அந்த ஊர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் பேருந்து ஒன்று வந்தது. ஸ்டேடியம் அருகில் இறங்கிக் கொண்டார்கள். பொருட்கள் வாங்கி வர வேண்டும். அப்பா பேருந்து நிலையத்திலிருந்து வண்டி எடுக்கப் போய் விட்டார்கள். அம்மாவும் நானும் வீட்டுக்கருகில் போகும் பேருந்தைப் பிடித்தோம். அப்பா தனியார் பேருந்தில் நேசமணி நகர் பலகைக்கு அருகில் இறங்கும்படி சொல்லிப் போக, சீக்கிரமாகக் கிளம்பி நின்றிருந்த அரசுப் பேருந்தில் ஏறி கன்கார்டியா அருகில் இறங்கினோம். நடப்பதற்கு கொஞ்சம் தூரம் அதிகம். அதனாலென்ன பரவாயில்லை என்று சொல்லி விட்டார்கள் அம்மா.
இறங்கியவுடன் அருகில் இருந்த கடையில் இடியாப்ப மாவு வாங்கினோம். ஏதாவது குடித்துக் கொள்ளலாம் என்று தோன்றினாலும் கட்டுப்பாடு தடுத்தது. சக்தி ஸ்டோரில் எலுமிச்சம் பழங்களும், வாழைப்பழங்களும் வாங்கினோம். சிங்கம்பழம், மோரீஸ் பழம், பேயன் பழங்கள். கல்யாண வீட்டிலிருந்து டப்பாக்களில் தீயலும், நார்த்தங்பாய் பச்சடியும் கொடுத்து விட்டிருந்தார்கள்.
தீயல் சோறு, இட்லிகள், மோர் சோறு சாப்பிட்டோம். ஏதோ ஒன்று ஒத்துக் கொள்ளவில்லை. வாயு பிடிப்பு வந்திருக்கிறது.
முதலில் போவதற்கு ஆட்டோ பிடித்து வந்தோம். பேருந்து தாமதமாகத்தான் வருகிறது என்று தொலைபேசி சொல்ல, அவர்கள் அழைப்பின் படி பேருந்து நிலையத்துக்குப் போனோம். திரும்பும் போது உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், பேச்சை நிறுத்தி விட்டு வீடு வந்து சேர்ந்தோம். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் கேட்டாலொழிய வலிய பேச்சு கொடுக்கவே கூடாது.
நேற்றுக் காலையிலும் ஆறு மணிக்கு எழுந்திருந்தேன். ஓட்சு கஞ்சி சரியாக கலக்காமல் ஓட்சு தானியங்கள் முழித்துக் கொண்டிருந்தன. இரு சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு புத்தேரி.
வெட்டூர்ணி மடம் வழியாக போய் வடசேரி. கிருஷ்ணன் கோவில் போவதற்கு அது வசதி, புத்தேரிக்கு கொஞ்சம் சுற்றுதான். வடசேரிக்கு அருகில் திரும்பி வந்து பக்கத்துச் சாலையைப் பிடிக்க வேண்டும். நினைவில் நின்ற பாதையை மறக்காமல் குழப்பங்கள் இல்லாமல் சித்தப்பா வீட்டுக்குப் போய் விட்டேன். என்னைப் பார்த்து பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை.
குடிபபதற்கு அரை டம்ளர் பால் கிடைத்தது. பேசிக் கொண்டிருந்ததில் நாஞ்சில் நாடு, குமரி மாவட்ட வரலாறு குறித்து விபரங்கள் கிடைத்தன. சமூகத்தினருக்கு சரியான வரலாற்று இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஊரில் ஒரு நூலகம் அமைக்கப் போவதாகவும் சொன்னார். நூலகத்தில் இணைய இணைப்புடனான கணினி ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை சொன்னேன்.
அங்கிருந்து கிளம்பி நேராக வீடு. மீந்திருந்த பழையது, தீயல், கூடவே தட்டைகளின் மிச்சங்கள். எங்கு வாயுப்பிடிப்பு ஆரம்பித்தது என்று தெரியாமல் இதுவாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
தூக்கம் கண்ணைச் சுழற்றவே, அப்பா அம்மா சாப்பிட்ட பயறுக் கஞ்சியையும் குடித்து முடித்தேன். கொஞ்சம் நீளமான பேச்சு. அதற்கிடையில் அவன் அம்மாவும் வந்தார்கள். அவனிடம் கொஞ்ச நேரம் பேச்சு.
சீக்கிரம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பியிருந்தேன். புளிக்கறி, அவியலுடன் சாப்பாடு. கூட வருவாதகச் சொல்லிப் பார்த்தான். பையன் நன்கு வளர்ந்து முதிர்ச்சியாகப் பேசுகிறான். தேவையில்லாமல் அடம் பிடிப்பது இல்லை. சுந்தரம் தாத்தா, பூதலிங்கம் தாத்தா, இரண்டு பேரும் கலந்து செய்த மூளையாக இருக்கிறான். பெரிய ஆளாக வருவான்.
1 மணிக்குக் கிளம்ப வேண்டிய ரயில். 2 மணிக்கு சென்னையிலிருந்து வந்து சேர்ந்து இரண்டரைக்குப் புறப்படும் என்றார்கள். வந்து சேர்ந்தது இரண்டே முக்கால் வாக்கில். மூன்றரைக்குக் கிளம்பியது. திருநெல்வேலி வரை எதுவும் நடக்கவில்லை. திருநெல்வேலியில் தேங்காய் போளி, வடை 10 ரூபாய்க்கு. இரண்டு போளிகள், ஒரு வடை. சாப்பிட்டு விட்டேன். முன்பே சென்னைக்குக் கொண்டு போகக் கொடுத்திருந்த முறுக்குகளை அரைத்துக் கொண்டிருந்தேன்.
முதுகில் வலி ஆரம்பித்திருக்கவே, அத்தோடு வாங்கியிருந்த தி வீக், இந்தியன் எக்ஸ்பிரஸ் படித்துத் தீர்த்திருக்க இட்லிப் பொதியைச் சாப்பிட்டு விட்டு மேல் தட்டில் ஏறிப் படுத்து விட்டேன். எனக்கு ஒதுக்கப் பட்டிருந்தது கீழ்த்தட்டுதான். அதில் படுத்துத் தூங்க வேண்டுமானால் 10 மணி வரை காத்திருக்க வேண்டும்.
ரயில் ஓடி ஓடி, காலையில் 5 மணிக்கு எழுந்து விட்டேன். பல் தேய்த்து விட்டு எழுத ஆரம்பித்தேன். பல் தேய்க்கும் போது உளுந்தூர்ப் பேட்டை என்று காட்டியது. இப்போது விழுப்புரம் வந்து சேர்ந்திருக்கிறது. நேரம் ஆறு மணி ஆகியிருக்கிறது. விழுப்புரத்தில் வண்டியை நிறுத்தி விட்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி விரைவு வண்டி நாகர்கோவிலில் ஐந்தரைக்குக் கிளம்பி முந்திப் போய்ச் சேர்ந்திருக்கும். முத்துநகர் விரைவு வண்டியும், அனந்த புரி விரைவு வண்டியும் இங்கு இதை நிறுத்தி வைத்து விட்டு முந்திப் போய்க் கொண்டிருக்கின்றன.
குறைந்தது 10 மணிக்குத்தான் போய்ச் சேர முடியும் என்று தோன்றுகிறது. இன்னும் 7 நிமிடங்கள் எழுதுவதற்கு இருக்கின்றன. அதற்குள் ரயிலும் கிளம்பி விடும்.
இதை முடித்ததும் வெளியில் நாளிதழ் ஏதாவது வாங்கிக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் தியானம். அதன் பிறகு காத்திருத்தல்தான். மதிய உணவுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று தயாரித்துக் கொள்ள வேண்டும். மடிக்கணினிக்கு மின்னூட்டம் தரும் வசதி இந்தப் பெட்டியில் உள்ளது. இணையத்தில் இணைப்பதற்கான கருவியும் கைவசம் இருக்கிறது. மின்னூட்டம் ஏற்றிக் கொண்டு இணையத்தில் வழக்கமான வேலைகளை 8 மணி முதல் ஆரம்பித்து விட வேண்டியதுதான். சரியான உடைகளை மாற்றிக் கொண்டு, சவரம் செய்து கொண்டு நேராக அலுலகத்துக்குப் போய் விட வேண்டியதுதான்.
இன்னும் நான்கு நிமிடங்கள் இருக்கின்றன. வண்டி நிற்கும் நடைமேடையில் எதுவும் கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. ஆரம்பத்தில் கிளம்புவதற்கு தாமதமானதால் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. பதட்டமோ குழப்பமோ இல்லாமல் நிதானமாக அமைதியாக எல்லோரையும் இட்டுச் செல்ல வேண்டும்.

லேபிள்கள்:
உணவு,
உறவுகள்,
சுயமுன்னேற்றம்,
பயணம்
வெள்ளி, ஜூன் 13, 2008
மீண்டும் ஏமாற்றங்கள்
ஓடும் ரயிலில் நாகர்கோவிலுக்கு. காலை மணி 4.50.
நேற்று வேண்டுமென்றே அதிகமாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். ஐந்து மணிக்குத்தான் எழுந்திருந்தேன். இன்றைக்குப் போகும் போது எந்த விதமான பதற்றங்களும் இல்லாமல் அமைதியாகப் போக வேண்டும் என்று முடிவு. அதற்கு கொஞ்சம் கூடுதலாகத் தூங்குவது உதவத்தான் செய்கிறது. வீடு ஒரு மாதிரி கலைத்துப் போட்டது போல இருந்தது. அடுக்களையில் பாத்திரங்கள், தக்காளி சாறெடுத்ததன் மிச்சப் பாத்திரங்கள், நாற்றம் அடிக்க ஆரம்பித்திருக்கும் குப்பைக் கூடை என்று கசகசவென்று இருந்தது. துவைத்துப் போட்டிருந்த துணிகள் கொடியில் தொங்கிக் கொண்டிருந்தன. தரையில் கால் தடங்கள், வேறு கறைகள் தெரிய ஆரம்பித்திருந்தன.
தரை துடைப்பது அவசியம் என்று முடிவானது. அடுக்களையிலிருந்து ஆரம்பித்தேன். சமையல் மேடையை ஈரத் துணி கொண்டு துடைக்கும் போது அரவை எந்திரத்தையும் தூய்மை செய்தேன். அதன் பிறகு வாயு அடுப்பு, மைக்ரோஅலை அடுப்பு இரண்டையும் துடைத்துக் கொண்டேன். நேற்றைக்கு விளக்கு வெளிச்சத்தில் மோதி மோதி விளையாடிக் கொண்டிருந்த குழவிகள் செத்துக் கிடந்தன. இவை எல்லாவற்றையும் தரையில் தள்ளி விட்டு கழுவ வேண்டிய பாத்திரங்களை எல்லாம் குழியில் போட்டேன்.
தரையையும் கையோடு தூக்கும் போது குப்பைக் கூடையில் தக்காளிச் சக்கையை வீசும் போது தரையில் விழுந்து விட்டு ஒரு விழுது தக்காளி குழவை கிளம்ப மறுத்தது. அடுக்களைக்கு வெளியில் குப்பையை ஒதுக்கி விட்டு குழியில் கிடந்த பாத்திரங்களில் இறங்கினேன். நேற்று கழுவி வைத்திருந்த பாத்திரங்களை அடுக்கி வைத்து விட்டு அழுக்காகக் கிடந்தவற்றை ஒவ்வொன்றாகத் தேய்த்து வட்டிக்குள் போட்டேன்.
தூங்கும் அறை, மற்ற தூங்கும் அறை, முன்னறை தூத்து விட்டு துவைத்துப் போட்டிருந்த துணிகளை நாற்காலி ஒன்றின் மீது போட்டேன். கட்டிலை மடக்கி உள்ளறையில் நிற்கவைத்து விட்டிருந்தேன். துணிகளை மடித்து அவ்வவற்றின் இடங்களில் வைத்து விட்டு தரை துடைத்தல். குப்பைக் கூடையில் பிளாஸ்டிக் பையைக் கட்டி வெளியில் வைத்து விட்டேன். அதை எடுத்துப் போவதற்கு மிதிவண்டியில் வருபவரை அழைக்கச் சொன்னால் இன்னும் நடக்கவில்லை. வெளியில் கூட்டிப் பெருக்கும் அம்மாதான் இதையும் எடுத்துப் பக்கத்து காலி மனையில் வீசி விடுகிறார்.
காலையில் உலாவப் போய் பல நாட்கள் ஆகி விட்டதே என்று வெளியில் நடந்தேன். 20 நிமிடங்களில் சுற்றி வந்து விட்டேன். புத்துணர்வாக இருந்தது. இன்றைக்கு நினைத்த வேலைகள் முடியும். பணம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து விடுவார் என்று மட்டும் தோன்றியது
கால் மிதிகளாகப் போட்டிருந்த எல்லா மெத்தைகளையும் வாளியில் போட்டு சோப்பில் ஊற வைத்தேன். கூடவே அடுக்களையில் துடைக்கும் துணிகளாகப் பயன்படுத்தப்படும் கைத்துணிகளையும். தரை துடைக்கும் போதே நாளிதழ் வந்து விழும் சத்தம். இரண்டே இரண்டு தக்காளிகள் மீதி இருந்தன. அவற்றை நன்கு கழுவி விட்டுச் சாப்பிட்டு விட்டேன். போன இரண்டு மூன்று நாட்கள் சாறு எடுத்துக் குடித்தல். இரண்டு பழங்களில் செய்வது கஷ்டம்தான்.
சாப்பிடுவது லஷ்மி பவனில் என்று காலையிலேயே முடிவு செய்து விட்டிருந்தேன். நேற்றைக்கு சும்மா படுத்துத் தூங்கி விட்டதற்கும் சேர்த்து இன்றைக்கு 1 மணி நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஊற வைத்திருந்த துணிகளை அலசி வெளியில் கொடியில் காயப் போட்டேன். பெருமையாக இருந்தது. 'இப்படி அழுக்குத் துடைக்கும் துணிகளை எல்லாம் துவைத்துப் போடுகிறோமே, பரவாயில்லையே.'
கொஞ்ச நேரம் நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்து விட்டு குளியல், ஜன்னல்களை எல்லாம் அடைத்து விட்டேன். குளித்து விட்டு தியானத்துக்கு 40 நிமிடங்கள் அமைத்து உட்கார்ந்தேன். முந்தைய நாளின் நிகழ்வுகளை நினைத்துக் கொண்டே 20 நிமிடங்கள் ஓட்டமாக ஓடி விட்டது. இரண்டு மடங்கு நேரம் உட்கார்ந்தால், மனம் கலங்கலாகப் போய் விடும் என்ற நினைவு உறுத்த எழுந்து விட்டேன். 7.40 ஆகியிருந்தது.
ஊருக்குப் போக துணிகளை எடுத்து வைக்க வேண்டும். சட்டைகள், உள்ளாடைகள், அதை பையில் தேய்க்கக் கொடுக் வேண்டியிருந்த துணிகள், பல் தேய்க்கும் கருவிகள், மூடிக் கொள்ள ஒரு போர்வை, துடைத்துக் கொள்ள ஓரிழைத் துண்டு, சவரம் செய்து கொள்ளும் தளவாடங்கள் எடுத்துக் கொண்டேன். பயணப் பை எடுக்கலாம் என்பது மறந்து போய் ஒரு கட்டைப் பையில் எல்லாவற்றையும் வாரிக் கொண்டிருந்தேன்.
வெளியில் வந்து பைக்கில் கிளம்பும் போதுதான் போன தடவை ஊருக்குப் போகும் முன்பு வாங்கியிருந்த பயணப்பை நினைவுக்கு வந்தது. (மீண்டும் மறதி). கதவைத் திறந்து தூங்கும் அறையில் மேல் தட்டில் தேடிப் பார்த்ததில் கிடைத்து விட்டது. அதை வெற்றுப் பையாகவே தொங்க விட்டுக் கொண்டேன்.
லஷ்மி பவனுக்குப் போக பசுமைக் கடையின் எதிரிலிருக்கும் தெரு வழியாகத் திரும்பினேன். வண்டியை வெளியில் நிறுத்தித் தலைக்கவசம், துணிப்பைகள் எல்லாம் விட்டு விட்டு உள்ளே போனேன். வெற்றுப் பையை மட்டும் வெளியில் தெரியாத வண்ணம். கட்டைப்பையின் பின்னால் போட்டுக் கொண்டேன்.
பொங்கல் சாப்பிட வேண்டும் என்று ஒரு முரட்டு எண்ணம். உள்ளே போனதும் நல்ல பிள்ளையாக இட்லி சொன்னேன். கட்டுப்பாட்டை எதிர்க்கும் மனதுக்கு இட்லியுடம் வடைக்கு ஒப்புதல் கொடுத்ததோடு நிறுத்திக் கொண்டேன். இட்லிக்குப் பிறகு தோசை. கடைசியில் சர்க்கரை போடாமல் கடுப்பம் குறைவாக ஒரு காபி. மொத்தம் 29 ரூபாய்கள். இட்லி 4 ரூபாய். தோசை 12 ரூபாய். வடை 8 ரூபாய். காபி 5 ரூபாய். பணத்தைக் கொடுத்து விட்டு வெளியில் கிளம்பினேன்.
அலுவலகத்துக்கு வந்தால் சட்டையை மாட்டிக் கொண்டே வந்து கதவைத் திறந்தார். நான் செய்ய வேண்டிய வேலைகளை நினைவு கூர்ந்து கொண்டேன். ஒன்பதரை மணிக்குப் பிறகு பெரியமேடு கிளம்ப வேண்டும். அதற்குள் வேண்டிய ஆவணங்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் ஆரம்பிக்காமல் வந்திருந்த மின்னஞ்சல்களுக்கு என் பதில்களைப் போட்டேன். உயர் படிப்புப் படிக்கப் போவதாக அனுப்பியிருந்த மின்னஞ்சலுக்கும் என் கருத்தை எழுதித் திருப்பி விட்டேன்.
அறிக்கை மாதிரிகளை எடுத்து அனுப்பியிருந்தார்கள். தடாலடியாக இருபதுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை எடுத்திருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக நிறைவாக இருந்தது. அவருக்கு நன்றி சொல்லி பாராட்டி ஒரு மறுமொழி.
கொடுக்க வேண்டிய விற்பனை ஆவணத்தை மாற்றியமைத்தேன். பணியை இரண்டாகப் பிரித்து ஒவ்வொன்று முடியும் போதும் பணம் தர வேண்டும் என்று எழுதிக் கொண்டேன். அறிக்கை நகல்களை தனித்தனி அடைவுகளில் சேமித்தும் வைத்துக் கொண்டேன். ஒரு வேளை மின்னஞ்சல் பிரதிகளை திறக்க முடியாவிட்டால், இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சாலைகளில் வாகன நெருக்கடி அவ்வளவாக இல்லைதான், அந்த நேரத்தைப் பார்க்கும் போது. வழிகாட்டலின் படி விருகம்பாக்கம் ஆக்சிஸ் வங்கியின் அருகிலேயே இடது பக்கம் திரும்பி விட்டோம். பல இடங்களில் பச்சை விளக்கு சாதகமாகவே இருந்தது. கொஞ்சம் அவசரமாகவே வண்டிகளை இடது புறத்திலிருந்தும், வேகமாகவும் முந்திப் போய்க் கொண்டிருந்தேன். வைஷ்ணவா கல்லூரியிலிருந்து அமைந்தகரை சந்தை நிறுத்தம் வரை மூன்று நிறுத்தங்களிலும் நிற்காமல் பச்சை தொடர்ந்து கிடைத்தது.
சரியாக பத்தரை மணிக்கு வந்து விட்டோம். 10 நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார். மடிக்கணினியை இயக்கி சுந்தர் கையிலிருந்த கையடக்க சேமிப்புக் கருவியில் அறிக்கை நகல்களை எடுத்துக் கொண்டோம். இணையக் கருவி இருக்கிறதா என்று ஒரே ஒரு இடத்தில் மட்டும் பார்த்தேன். உள்ளே இன்னொரு உள்பையில் வைத்திருந்ததை மறந்து விட்டிருந்தேன்.
கூப்பிட்டதும் உள்ளே போனோம். அவரது மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்திருந்த அறிக்கை நகல்களை திறக்க முயற்சித்து பிடிஎஃப் கோப்புகளில் பின்னொட்டு இல்லாமல் திறக்க முடியவில்லை. பேனா வடிவ சேமிப்புக் கருவியைச் செருகி அறிக்கைகளையும் பயர்பாக்சு கோப்பையும் நகல் செய்யச் சொன்னேன் பயர்பாக்சையும் நிறுவிக் கொடுத்து விட்டோம்.
அறிக்கைகளை ஒவ்வொன்றாகப் பார்த்தார். இது சரியில்லை, அது சரியில்லை, இது இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதற்கெல்லாம் பொருத்தமான மறுமொழிகளை அழித்தோம். கடைசியில் பார்த்தால் பல்லாவரத்திலிருந்தும் அறிக்கைகள் வந்திருந்தன. அடுத்தது என்ன என்று கேட்டவரிடம் அடுத்த பணிகளுக்கான விற்பனை ஆவணங்களைக் கொடுத்தோம்.
தான் இவற்றை பரிந்துரைப்பது கடினம். நிறுவன உரிமையாளர்கள் ஆயிரம் கேள்விகள் கேட்கிறார்கள். நான் சொல்லித்தான் நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள் என்று கூடச் சொல்லி விடுவார்கள் என்று தன் இயலாமையைச் சொன்னார். அதைப் புரிந்து கொண்டதோடு, என்னுடைய பார்வையை விளக்கினேன். அவர்கள் அடாவடியாகப் பேசுவது உண்மையில் விடை தேடும் கேள்விகள்தான் என்று நான் எடுத்துக் கொண்டு விடை சொல்வதை விளக்கினேன்.
பார்ப்பதற்கு வெளியில் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருக்கும் பகுதியில் மூன்று இருக்கைகளும் நிரம்பியிருந்தன. நின்று கொண்டிருந்த எங்களை உள்ளே நாற்காலி போட்டு உட்காரச் சொன்னார்கள்.
முதலில் முன்பே காத்திருந்த வெட்புளு விற்பவர்களை அழைத்தார்கள். வெளியில் வந்து விட்டவரை அழைத்து மின்னஞ்சல், இணையத் தளம் குறித்து பேச உட்காரச் சொன்னோம். கூகுள் பயன்பாடுகள் சேவையில் பதிந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தங்களது இணையத் தளம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கலானார். அவர் படித்த பல்கலைக் கழகத்தின் இணையத் தளத்தின் வடிவமைப்பையும் பல்வேறு பகுதிகளையும் காட்டி சிறப்புகளை விளக்கினார். இது போல ஒரு தளம் வேண்டும் என்று சொன்னார்.
அவர்கள் இணைய முகவரியின் உரிமை வேறு ஒருவர் பேரில் இருந்தது. அந்த வேறு ஒருவர் ஆளே தலைமறைவாகி விட்டிருந்தார். உரிமையை மீட்டெடுத்தால்தான் அதைப் பயன்படுத்த முடியும் என்பதை விளக்கிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக வெட்புளூ ஆட்கள் வெளியில் வந்து நம்மை அழைத்தார்கள். உள்ளே போகும் போது, வெளியில் காத்திருந்த இரண்டு விற்பனையாளர்கள் 10 நிமிடம் என்று சொல்லி முந்தி அனுப்பினார்கள். அப்போதே மணி 1. அவர்களும் அரை மணி நேரம் ஆகி விட்டது.
அப்புறம் உள்ளே போனால், புறப்படும் அவசரத்தில் இருந்தார். பணி முடித்த விபரங்களைச் சொன்னால் பாதிக் காதில் கேட்டு விட்டு சனிக்கிழமை காலையில் வந்து விடு என்கிறார். 'ஒரு தடவை சொல்லி விட்டேனானால் அதை மாற்றவே முடியாது. உன் பாஸூக்குத் தொலைபேசி அவர் அழைத்துச் சொன்னாலும் நான் முதலில் சொன்னதை மாற்ற மாட்டேன். என்னை வற்புறுத்த முயற்சிக்காதே என்கிறார். இப்படி சொல்வதன் அடையாளம் அவர் கணக்கில் கொடுப்பதற்கு பணம் இல்லை என்பது. அதனால் வீணாக வாதத்தில் இறங்காதே என்று குறிப்பு.
மிகவும் ஏமாற்றத்துடன் என் உள்ளத்தை வெளிப்படுத்தினேன். சனிக்கிழமை நான் வர முடியாது, ஊருக்குப் போகிறேன் என்றால், திரும்பி வந்து வாங்கிக்கோ என்கிறார்.
வெளியில் வந்து கொஞ்ச நேரம் கடுப்பாக நின்று கொண்டிருந்தேன். போகலாம் என்று சேர்ந்தோம். வண்டியை நிறுத்தும் போது ஒரு ஆட்டோவில் பின் இருக்கை பகுதி நிரம்பி வழியும்படி பைகளுடன் ஒரு பெண் வந்து இறங்குகிறார். என்ன பைகள் என்று ஊகிக்க முயற்சித்துத் தோல்வியடைந்தோம்.
எல்லா சிக்கல்களும் சரியாக விட்டிருந்தன. அவர்கள் கேட்ட இன்னொரு தகவலையும் எடுத்துக் கொடுத்து விட்டோம். பணம் கேட்டால், நாங்கள் கேட்ட எல்லா அறிக்கைகளும் வரவில்லையே என்கிறார். விடாப்பிடியாக விவாதித்ததில், பணத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று அவரே சொல்கிறார். அடாவடியாகப் பேசும் போக்கு எல்லோருக்குமே. நாம் திரும்பி ஒரு தள்ளு தள்ளினால் சரசரவென்று பல படிகள் பின்வாங்கி விடுகிறார்கள்.
'எங்களையும் உங்க மாதிரி ஆக்கி விட்டீங்களே' என்று பாதி நகைச்சுவையாகச் சொல்லி விட்டுக் கிளம்பினோம். பசியோடு அலுவலகமே போய் விடலாம், சாப்பாடு எப்படியும் மீந்திருக்கும் என்று வந்து விட்டோம். எல்லோரும் சாப்பிட்டு முடித்து கொஞ்சம்தான் இருந்தது. ஆளுக்கு ஒரு பிடி சாப்பிட்டுக் கொண்டோம். முட்டைக் கோஸ் கூட்டு, பீட்ரூட் துவரன் கொஞ்சமாக, காரக் குழம்பு, மோர் இருந்தன.
இதற்கு மேல் எதுவும் ஓடும் என்று தோன்றவில்லை. சனிக்கிழமை போவதற்கான ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பணிகளைச் செய்து விட்டு வீட்டில் விட்டு வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த இணையக் கருவியை எடுத்து வரக் கிளம்பினேன்.
சுப்ரபா கடையில் தட்டை, கேக்கு, முறுக்குகள் வாங்கினேன். முறுக்குகள் நான்கைந்து உள்ளே போயின. காலையில் வந்திருந்த மின்னஞ்சலில் எந்த விதமான எண்ணெயும் இதயத்துக்குக் கேடு விளைவிப்பவைதான் என்று இருதய நிபுணர் சொல்லியிருந்ததைப் படித்திருந்தேன். எண்ணையில் பொரித்த, எண்ணைய் கொட்டிச் செய்த எதையும் தவிர்த்து விடுவது சாலச் சிறந்தது.
இணையக் கருவி கிடைக்கவில்லை. அலுவலக சட்டையை மாற்றி அரைக்கைச் சட்டை போட்டுக் கொண்டேன். குடியிருப்போர் சங்கத்தின் வரவு செலவு கணக்கின் அச்சுப் பிரதியை ஒட்டுவதற்குக் கொடுத்தேன். பைக்கின் பட்டன்களில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்னேகாவுக்கு அதை விளக்கி விட்டுக் கிளம்பினேன். அலுவலகம் வந்து மடிக்கணினியையும் பொதிந்து கொண்டு, நாச்சி வைத்திருந்த புத்தகங்களில் ஸ்ரீரங்கத்து தேவதைகள், ராபின் குக் எழுதி டாக்சின் என்று இரண்டையும் எடுத்துக் கொண்டேன். தின்பண்ட பொதிகளையும் பையில் திணித்து வெளியில் வந்தேன்.
சாலையைக் கடக்கும் போதே பேருந்து தாண்டி சென்றது. ஓடிப் போய் ஏறிக் கொண்டேன். கூட்ட நெரிசல் அதிகம் இல்லை. ஒரு இருக்கையில் நானும் பக்கத்து இருக்கையில் பைகளுமாக உட்கார்ந்து கொண்டேன். ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் புத்தகத்தைப் படித்துக் கொண்டே கீழ்ப்பாக்கம் வரும் வரை உட்கார்ந்திருந்தேன். மருத்துவக் கல்லூரி நிறுத்தத்தைத் தாண்டிய அடுத்த சாலை நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன். ஒரு ஆட்டோவை அழைத்து 35 ரூபாய்க்கு எழும்பூர் கொண்டு விட ஏறிக் கொண்டேன்.
ரயில் நிற்குமிடத்தில் இறங்காமல் தாண்டிச் சென்று வசந்தபவன் போவதற்கு அருகில் இறக்கிவிடச் சொன்னேன். 2 இட்லிகள், தோசை, இனிப்பு/கடுப்பம் குறைவாக தேநீர். 39 ரூபாய்கள். சாப்பிட்டு விட்டு ரயிலுக்கு வந்தேன். நான்காவமு மேடையிலேயே நிறுத்தியுருந்தார்கள். முதலில் S3லி ஏறி விட்டு அதில் இருந்த ஒரு பெரியவரை அது S4 என்று கடுப்பேற்றி விட்டு கடைசியில் நான் தெளிந்து அடுத்த பெட்டிக்குள் வந்தேன். பைகளை வைத்து விட்டு ராபின் குக்கின் நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். பின்னட்டை கதைச் சுருக்கத்திலேயே குழந்தை இறந்து போகும் என்று சொல்லி விட்டிருந்தார்கள்.

புதன், ஜூன் 11, 2008
சாது மிரண்டால்....
நேற்றுக் காலையில் ஐந்து மணிக்கு எழுந்ததாக நினைவு (மறந்து போய் விட்டிருந்தது). நிரல்களின் தொகுப்பை அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருந்ததை மறந்து விட்டிருந்தேன். நேற்று நினைவாக மாமாவின் மகன் எண் வாங்கி வைத்திருக்கிறேன், அவனிடம் பேச வேண்டும். அதே போல பேச வேண்டும். உன் பையன் என்றுதான் தாத்தா என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள். இன்றைக்குப் பேசி விட வேண்டும். விகடன் சந்தா அனுப்பி வைக்க வேண்டும். மின்கட்டணம் கட்ட வேண்டும். வீட்டில் தண்ணீருக்கு வடிகட்டி போட முன்முயற்சி எடுக்க வேண்டும்.
நேற்று எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து விட்டு எழுத்து. வெகு வேகமாக எழுதி, பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் 1700க்கும் அதிகமான சொற்களை எழுதி விட்டேன். அதைத் தொடர்ந்து அழுக்காகக் கிடந்த பாத்திரங்களைக் கழுவி, தரை தூத்து வார வேண்டும். பசியும் தளர்ச்சியும் இருப்பது போலத் தோன்றவே மீந்திருந்த தண்ணீர் ஊற்றிய சோற்றில் ஒரு தவணை சாப்பிட்டுக் கொண்டேன். சோறு, தயிர், வத்தக்குழம்பு கலவை, சாப்பிட்டது தெம்பு வந்தது போலிருந்தது.
துணிகள், நாளிதழ்கள் புத்தகங்களை ஒழுங்கு செய்து, சமையலறை மேடையைத் துடைத்து தூய்மை செய்து, தரை தூத்து வாரினேன். முந்தாநேற்று அப்படியே விட்டு விட்டுப் போயிருந்தேன். வெளியில் போகும் போது ஜன்னல்களை மூடி விடுவதால், தூசி படிந்திருப்பது குறைவாக இருக்கிறது. துவைக்க வேண்டிய துணிகளும் நிறைந்து கொண்டிருந்தன. ஓரளவு நியாயமான நேரத்தில் அலுவலகத்துக்குப் போய் விட வேண்டும் என்று மற்ற வேலைகளை எடுத்துக் கொள்ளவில்லை.
எழுதிக் கொண்டிருக்கும் போது ஆறரை மணிக்கு முன்பே நாளிதழ் வந்து விழுந்து விட்டது. அவற்றையும் எடுத்துக் கொண்டேன். சஷ்டிக் கவசம் முணுமுணுத்துக் கொண்டே வேலைகள் முடித்தேன். முகம் மழிக்கும் முன்பு உபரியாக இருந்த தக்காளிகளை சாறு பிழிந்து குடிக்கலாம் என்று அரைப்பானில் போட்டு கொஞ்சம் இனிப்பும் போட்டு அடித்து முடித்தேன். அதை வடிகட்டியில் போட்டு சாறை மட்டும் பிரித்துக் குடித்துக் கொண்டேன்.
குளித்து விட்டு 20 நிமிடங்கள் தியானம். முந்தைய நாளின் நினைவுகளை அசை போடுதல் என்று விடாப்பிடியாகச் செய்தேன். மாலை வரை முடிந்தது. அத்தோடு எழுந்திருக்கும் போது வயிறு நிறைந்துதான் இருந்தது. சோற்றை தீர்த்து விடுவோம் என்று சட்டியில் எண்ணெய் ஊற்றி பப்படம் வறுத்துக் கொண்டு மீண்டும் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டேன்.
சாப்பிட்டக் களைப்பு தீர அரை மணி நேரம் ஓய்வு. அந்த நேரம் வாங்கி வைத்திருந்த தொலைபேசிக் கருவியை அலுவலகத்துக்குப் பயன்படுமா என்று பார்க்கச் சொல்லியிருந்த அம்மா வந்து கேட்டார்கள். அவர்கள் ஞாயிறு மாலை சொல்லியிருந்ததையும் மறந்து போயிருந்தேன். அவர்கள் இதை நினைவூட்டி மாலையில் கொண்டு காண்பிப்பதாகச் சொன்னார்கள்.
எட்டே முக்காலுக்கு அலுவலகத்துக்குக் கிளம்பி வந்தேன். நான் மேசையைத் துடைத்து விட்டு கணினியை இயக்கினேன்.
முதலில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல். நாளில் செய்ய வேண்டிய வேலைகளின் திட்டமிடல். தொடர்ந்து சந்திப்பதற்கான திட்டமிடல். அடுத்த பணிக்கான விற்பனை ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டேன். ஏற்கனவே முடித்த வேலைகளின் விபரங்கள், வர வேண்டிய பண விபரங்கள் என்று எடுத்துக் கொண்டேன். இதற்கிடையில் வந்து விடவே அவரை வாட்ட வேண்டிய கேள்விகளை ஒவ்வொன்றாக வீசினேன். எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்பின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பதாக கோபம் வந்தது. சொல்ல வேண்டியதை அமைதியாக அன்பாகச் சொல்லி முடிக்கலாமே என்று அப்புறம் நினைத்துக் கொண்டேன்.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் என்ன அணுகுமுறை, அணியினர் பணி செய்வதில் என்னென்ன மேம்பாடுகள் என்று பேசி முடித்தோம்.
பதினொன்றே முக்கால் வாக்கில் போய்ச் சேர்ந்து விட்டேன். வழியில் போகும் போது ஒவ்வொரு நிகழ்வையும் நினைவில் பதிக்க முயன்று நாளைக்கு நாட்குறிப்பில் குறிப்பிடத் தேவை என்று நினைத்துக் கொண்டேன். அதிகமாக நெருக்கடி இல்லாமல் வந்து சேர்ந்துதான் விட்டேன். தினத்தந்தி அலுவலகம் அருகில் நேராகப் போகாமல் பெரியமேட்டுக்கு உள்ளே போய் போகலாம் என்று இடது புறம் திரும்பிக் கொண்டேன். வேப்பேரி நெடுஞ்சாலையில் திரும்ப வேண்டிய இடத்தில் திரும்பி விட்டாலும், உள்ளே போக வேண்டிய சந்தைத் தவற விட்டு மீண்டும் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்தேன்.
வண்டி நிறுத்தும் போது பூட்டியிருந்த ஒரு கடையின் முன்பு விட்டேன். இவர்கள் நடை திறந்தால் என்ன செய்வார்கள் என்று அப்போதே உதித்தது. நினைத்தது போலவே திரும்பி வரும் போது கடை திறந்திருந்தது, வண்டிகளையும் நகர்த்தி விட்டிருந்தார்கள். திட்டுவார்களோ என்று நினைத்தால் எதுவும் சொல்லவில்லை. அது தோல் நிறுவனம்தான். நான்கு பேர் உட்கார்ந்து பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினார்கள் என்பது மறந்து போய் விட்டது :-(
கஞ்சி போட்டு வெள்ளை வேட்டியுடன் ஒருவர் கீழேயே உலாவிக் கொண்டு தொலைபேசிக் கொண்டிருந்தார். நிறைய பேர் காத்திருக்கிறார்களோ என்று போனால், ஓரிருவர் காத்திருந்தார்கள். உட்காருவதற்கும் வசதியான இடம் இருக்கவில்லை. முகத்தைக் காட்டி விட்டு உட்கார்ந்தேன். கொஞ்ச நேரம் தினத்தந்தி நாளிதழைப் புரட்ட முயன்றேன். வந்திருப்பவர் யாரோ வாங்கி வந்ததோ? வழக்கமாக எகனாமிக் டைம்ஸ் இருக்கும்.
சிறிது நேரம் கழித்து கணினியைப் பிரித்து இணையத்தில் இணைந்து கொண்டேன். 'சாரிடம் சொல்லி விட்டேன், வேறு எங்காவது போக வேண்டுமானால் போய் விட்டு வரும்படி சார் சொல்றாங்க. வந்த பிறகுதான் சந்திக்க வேண்டும். அவர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகலாம்' ஆக சாப்பாட்டுக்குப் பிறகுதான்.
தொடர்ந்து இணையத்தில் செய்து கொண்டிருந்த பணிகளை முடித்தேன். பன்னிரண்டரை மணி வாக்கில் கணினியை மூடி விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினேன். தெருக்களின் உள்ளாகவே சுற்றி, பெரியமேட்டின் மறுமுனையிலிருந்த அலுவலகத்துக்குப் போய் விட்டேன். அச்சிடும் எந்திரம் பயன்படுத்த முடியவில்லை என்று முந்தைய நாள் தொலைபேசி சொல்லியிருந்தார் சார். அதைப் பற்றிய விபரம் பார்த்தேன்.
நேற்று அவர் பேசும் போது அதன் நிலவரம் நினைவுக்கு வரவில்லை. தொலைபேசியைத் துண்டித்த பிறகுதான், ஒரு முறை போய் அதை செய்து முடித்து விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. வேலை செய்து கொண்டுதான் இருந்தது. அவரிடம் விபரம் சொன்னவர்கள் சொதப்பியிருந்தார்கள். அவருக்குத் தொலைபேசினால், அலுவலகத்தில்தான் இருப்பதாகச் சொன்னார். கீழே போய் அவரிடம் பேசி விட்டு மீண்டும் மேலே வந்து அவர்களின் கணக்கியல் மென்பொருளை லினக்சில் பயன்படுத்த வழி இருக்கிறதா என்று முயன்றேன்.
வைன் தகவிறக்கி நிறுவிக் கொண்டேன். இடையில் எஸ்விஎன் என்ன துறை திறந்து விட வேண்டும் என்று தேடினேன். அவர்கள் கணினிகளைப் பராமரிப்பவர் வந்திருந்தார். அவரிடம் சொல்லி அந்தத் துறையை இணைய இணைப்பில் செயல்படுத்த வைக்க வேண்டும். லினக்சு கணினியில் குறுவட்டு இயக்கி வேலை செய்யவில்லை. அவர் இன்னொரு இயக்கியைப் போட்டுத் தர அவர்களின் கணக்கியல் மென்பொருளையும் நிறுவிப் பார்த்தேன். விண்டோசில் நிறுவுவது போலவே நிறுவிக் கொண்டது. அழகாக ஒரு மெனுவும் உருவாகி விட்டது.
இயக்கும் போது தரவுத் தளத்துடன் இணைவதற்கான அமைப்பை வடிவமைக்கக் கேட்டுக் கொண்டது. அது பற்றிய விபரங்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.
அதைக் காட்டுவதற்கு அழைத்த போது அவர் டேனரியில் மென்பொருள் பயன்படுத்துவது குறித்து தனது கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் எப்போதும் கடுப்பேற்றிக் கொண்டிருப்பவர், இப்போது நன்கு ஈடுபாட்டுடன் ஆலோசனைகளை சொல்கிறார். பயன்பாட்டிலிருந்து நேராக மின்னஞ்சல் அனுப்புவது, வேதிப் பொருள்கள் வாங்குவதை ஒவ்வொரு ஆர்டருக்கும் இணைப்பது என்று நல்ல மேம்பாடுகளைக் குறிப்பிட்டார்.
அவர் சாப்பிடக் கிளம்பவே, தொலைபேசினேன். வந்து விட்டாராம். இரண்டரை மணி. நேராக அங்கு போய் அவரிடம் முகத்தைக் காட்டினேன். காத்திருக்கச் சொன்னார். வந்திருந்த அறிக்கை கோப்புகளை திறக்க முடியவில்லை என்று காட்டினார். ஒரு கோப்பை ஓப்பன் டாகுமென்டாக அனுப்பியிருந்தேன். இன்னொன்று பிடிஎஃப் ஏதோ குளறுபடி. அதைத் திரும்ப அனுப்பச் சொல்லி விட்டு, அங்கிருந்த கணினி பராமரிப்பாளரிடம் ஓடிஎஃப் மாற்றிக் கொடுக்கச் சொன்னேன்.
காத்திருக்கும் இடத்தில் கணினியை இயக்கி வேலைகளைப் பார்க்கலானேன். மின்னஞ்சல்கள். பேச வேண்டி நேரம் அமைத்தல், கட்டுரைகள் படித்தல் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். லெதர்லிங்க் தளத்தில் டெமோ சுட்டியை கிளிக்கினால் எரர் வருகிறது என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
அடைவுகளை இடம் மாற்றும் போது இந்த அடைவில் இன்குளூட் பாதையை மாற்ற விட்டிருந்தேன் (மறந்திருந்தேன்). அதே போல, இஷ்யூ டிராக்கருக்கான சுட்டியை மாற்றமல் விட்டிருந்தேன். அதை சனிக் கிழமை காலையில் சுட்டிக் காட்டி சரி செய்தேன். இது போல அரைகுறையாக வேலை செய்து கொண்டிருந்தால் அபாயகரமாகப் போய் விடும்.
சீக்கிரத்தில் அழைத்து விட்டார்கள். பொதுத் திசையில் பேச்சை ஆரம்பித்தார். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் வீட்டு பொருட்களின் தரம் பற்றிப் பேச ஆரம்பித்தார். காலணிகளும் நம்மை விட அவர்கள் சிறப்பா என்று கேட்டால், அந்த திசையில் பேச்சு திரும்பியது.
தோலை சரியாக கையாளுவது இல்லை. தரத்தை பராமரிப்பது இல்லை. அதனால்தான் நம்மைப் போல் ஒழுங்காக செய்பவர்களை வாடிக்கையாளர்கள் தேடி வருகிறார்கள். ஆனால் இங்கு வேலையாட்களின் தரம் சரியில்லை என்று அந்தத் திசையில் ஆரம்பித்தார். அருகில் இருக்கும் நிறுவனத்தினர் கூட நம்முடைய நல்லுறவைப் பற்றிக் கவலைப் படாமல், ஆட்களை பிரித்துச் செல்வது போன்ற காரியங்களைச் செய்து விடுகிறார்கள் என்றார்.
அப்போது, குறுகிய காலத்தில் எது தேவை என்று மட்டும் யோசிக்கக் கூடாது. மகாபாரதத்தில் நச்சுப் பொய்கையில், தருமன் 'பீமனும் அர்ச்சுனனும் காப்பு இல்லை. தருமம்தான் காப்பு' என்று சொன்னதைக் குறிப்பிட்டேன். அதில் பிடித்துத் துண்டு துண்டாக அந்த நிகழ்வையும், பொதுவாக மகாபாரதம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். இடையில் இணையத் தளம், மின்னஞ்சல்கள் ஏற்படுத்துவது குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். நினைவாக அவரிடம் பேச வேண்டும்.
ஒரு வழியாக பேச்சு நம்முடைய பணிக்கு வந்தது. பணி முடிந்தது தனக்குத் தெரியவே செய்யாது என்று சாதித்து விட்டார். நான் அவருக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் குறித்து பேச்சே இல்லை. அவரை மெலிதாகக் கடிந்து கொண்டார். அவர்கள் முன்னிலையிலேயே தொலைபேசி ஏன் அறிக்கைகள் அனுப்பவில்லை என்று நான் கேட்டேன். அவரிடம் பேசி அறிக்கைகளை தயார் செய்து விட்டு வரும்படி சொல்லி விட்டார். கையில் காசோடு திரும்பலாம் என்று நினைத்திருந்தது பாழானது.
கோபம் ஏற ஆரம்பித்தது. பேசி அறிக்கைகள் பற்றிக் கேட்டால், அவருக்கும் விபரம் தெரியவில்லை. மீண்டும் அழைத்து ஏதோ நுணை சொல்ல ஆரம்பித்திருந்தார். இறங்கி வண்டியில் ஏறி அங்கு உட்கார்ந்து பணி முடிந்ததை அறிவிக்கும் மின்னஞ்சலை திரும்ப அனுப்பி சாரிடம் இதை கவனிக்கவில்லையா என்று எழுதினேன். அது தேவையில்லாமல் அவரைச் சீண்டும் வேலை என்று மனம் வருந்தியது. அதனால் நமக்குப் பாதகம் வரலாம் என்று தோன்றியது.
இது வரை பார்த்தது வரை அவரது இயல்பு அப்படியில்லை என்று படுகிறது. இதோ போல அவரது தவறலைச் சுட்டிக் காட்டினால், நம் பக்கம் வரத்தான் செய்வார். இப்போது சரியாகவே படுகிறது. இன்றைக்கும் நாளைக்கும் தீவிரமாக ஒருங்கிணைத்து அவரை திருப்திப் படுத்தி விட வேண்டும். வியாழன் காலையிலேயே அவர்கள் அலுவலகத்துக்குப் போய் அவரது கணினியில் இணையம் வழி அறிக்கைகளைப் பார்ப்பதை அமைத்து விட்டு மதியம் பேசி விடலாம்.
நம்முடைய மென்பொருள் பயன்பாடு முழு அளவில் வர ஆரம்பித்திருக்கிறது. கொஞ்ச நேரம் காத்திருக்க வைத்தார்கள். பணம் கேட்டால் தர முடியவில்லை என்று பஞ்சப் பாட்டு பாடினார். நல்ல பசி எடுக்க ஆரம்பித்தது. வெளியில் வரும் போது பையன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறு பெண் பையில் துண்டுத் துணிகளுடன் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தாள். எதிரில் வருபவர்களிடம் எல்லாம் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
நம் மென்பொருள் குறைபாட்டினால் அவரது வேலை சரிவர முடியவில்லை. வேறு ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். கொஞ்சம் கடுமையாகச் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
கோபம் ஏறிக் கொண்டிருந்தது. நம் தலையில் மிளகாய் அரைப்பதற்கு எவ்வளவு பேர். ஒவ்வொருவரின் பாவத்தை நாம் ஏன் சுமக்க வேண்டும் என்று குமுற ஆரம்பித்தது. எண்ணங்கள் ஓடி ஓடி நின்றது. எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டு நிராயுதபாணியாக நிற்கும் நான் கேட்பதை செய்யாமல் இருக்கும் ஆவணத்தைச் சாடினேன். தலைக் கவசத்தின் முக மூடியை இறக்கி விட்டுத் திட்டித் தீர்த்தேன். இதை விட நான் இன்னும் எப்படி எனது தவறுகளையும் உனது நிறைகளையும் அங்கீகரிக்க முடியும். தான் நினைத்ததையே சாதிப்பேன் என்று நிற்கும் அற்பத்தை சாடினேன். என் கோபமும், வருத்தமும், கண்ணில் நீர் வந்தால் அந்த கண்ணீர்த் துளிகளும் வாட்டி விடும் என்று சபித்துக் கொண்டேன்.
நல்ல வேளையாக தொலைபேசி. கோபத்தின் வேகம் மட்டுப்பட்டது. வண்டியில் பெட்ரோலும் தீர்ந்திருந்தது. அடுத்த நிலையத்தில் நிரப்பிக் கொண்டு தொடர்ந்தேன். அலுவலகத்தில் எல்லோரும் உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். என் ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினேன். என்னைப் போலவே சிந்திப்பவர். என்னைப் போலவே பணி செய்பவர். 'என்னால் முடியவில்லை, நீங்கள் எல்லோரும் சேர்ந்து இதை முடித்துக் கொடுங்கள்' என்று கேட்டுக் கொண்டேன்.
இஷ்யூ டிராக்கரில் செய்ய வேண்டிய வேலை ஒன்று ஏற்றிருந்தார். அதை எடுத்து காலைக்குள் முடித்துத் தந்து விடுமாறு சொன்னேன். இரவு தூங்காவிட்டாலும் பரவாயில்லை. நாளையிலிருந்து இது செயல்பட ஆரம்பித்திருக்க வேண்டும்.
வெளியில் பேசினோம். அவ்வளவு ஆர்வம் இல்லை என்றுதான் மூன்று பேரும் சொன்னார்கள். வீட்டுக்குக் கிளம்பி வழியில் துர்கா விடுதியில் 2 புரோட்டா, 2 கல் தோசை. மொத்தம் 20 ரூபாய்கள். வீட்டுக்கு வந்து மீந்திருந்த சோற்றில் ஒரு பிடி. தொடர்ந்து சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ் படித்துக் கொண்டு அரை மணி நேரம். அதற்கு மேல் தியானம் எங்கே! தூங்கி விட்டேன்.
பல கனவுகள், பல விழிப்புகள். காலையில் நான்கு மணிக்கு எழுந்தேன். நாலரை முதல் ஐந்தரை வரை எழுத்து. நேரம் அமைக்காமலேயே எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். இப்போது பார்க்கும் போது off என்று சொல்கிறது. கணினியை இயக்கி எவ்வளவு நேரமாகிறது என்று பார்த்து நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். 58 நிமிடங்கள் ஆகி விட்டன. 1476 சொற்கள். இடையிடேயே திட்டமிடல் கோப்பையும் நிரப்பிக் கொண்டிருந்ததால் குறைவாக இருக்குமோ! எப்படியானாலும் 60 நிமிடங்களுக்கு 1500 சொற்கள்தான். 25 சொற்கள் நிமிடத்துக்கு.

செவ்வாய், ஜூன் 10, 2008
ஒவ்வொரு அடியாக
நாளின் நிகழ்வுகளை அசை போட்டுப் பார்த்துக் கொள்வது நினைவுத் திறனை அதிகரிக்கும் முக்கியமான வழி. நேற்று மறதிகள் குறைந்திருந்தன. இருந்தும் ஓரிரு நிகழ்வுகள் எச்சரித்துக் கொண்டே இருந்தன.
காலையில் ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலையில் மத்திய பிரிப்பில் மோதி ஏறிக் கிடந்த வேனைப் பார்த்திருந்தேன். மாலையில் திருப்பெரும்புதூர் தாண்டி சென்னைக்கு அருகில் ஒரு வேன் நின்றிருக்க, 'இதுதானே காலையில் விபத்துக்குள்ளான வேன்' என்று கேட்டேன். அப்புறம்தான் உறைத்தது. மாலையில் ் திருமண வரவேற்பில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் பெயர் வைத்திருப்பதாகவும் சொன்னார். அவர் சொன்ன பிறகும் அவருக்கு எப்போது திருமணம் நடந்தது போன்ற விபரங்கள் நினைவுக்கு வரவில்லை. திரும்பி வரும் போதுதான் திருமணத்துக்குப் பார்க்கும் போது பெண் வீட்டார் வந்து விசாரித்துப் போனதெல்லாம் நினைவுக்கு வந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, 4 நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருந்தது மூளையைப் பாதித்திருக்குமோ என்றும் ஒரு எண்ணம். கவனமாக இருக்க வேண்டும். 40 வயது வருவதற்கு முன்னமேயே மறதி ஆரம்பித்து விட்டால், சாதிக்க வேண்டியது எவ்வளவு கிடக்கிறது.
நேற்றுக் காலையில் 5 மணிக்கு எழுந்திருந்தேன். முதலிலேயே விழிப்பு வந்தாலும் புரண்டு புரண்டு படுத்தேன். எழுந்து தயாராக ஆரம்பித்ததும் நானும் எழுந்து விட்டேன். கழிவறைக்குப் போய் விட்டு வந்து பல் தேய்க்கப் பார்த்தால் பற்பசை குளித்துக் கொண்டிருக்கும் குளியலறையில் இருந்தது. மடிக்கணினியைத் திறந்து எழுத ஆரம்பித்து விட்டேன். முந்தைய தின நினைவுகளை அசை போடுதல், ஞாபக மறதிக்கு பரிகாரங்கள் என்ற போக்கில் எழுதிக் கொண்டிருந்தேன்.
வெளியில் வந்ததும் நிறுத்தி விட்டேன். 15 நிமிடங்கள் போயிருந்தது. பல் தேய்த்து விட்டு ராமாபுரம் பேருந்து நிறுத்தத்துக்கு இட்டுச் சென்றேன்.
விட்டு விட்டு வந்து எழுதுவதைத் தொடர்ந்தேன். 1 மணி நேரம் அமைத்துக் கொண்டேன். முந்தைய நாள் குறிப்புகளுக்கு 1 மணி நேரம் போக கூடுதல் 15 நிமிடங்கள் ஏதாவது கருத்தாக்கத்துக்குச் செலவிடலாம் என்று நினைப்பு. ஆனால். ஏற்கனவே எழுதி வைத்திருந்ததையும் சேர்த்து 1 மணி நேரம் ஆனதும் நிறுத்திக் கொண்டேன்.
தரை தூக்கவோ, பாத்திரங்கள் தேய்க்கவோ செய்யவில்லை. நல்ல வேளை, பெரும்பாலான பாத்திரங்களை ஞாயிறு மாலையிலேயே கழுவி வைத்து விட்டான். குளித்து விட்டுத் தயாராக வேண்டியதுதான். இடையில் நாளிதழும் சீக்கிரமாகவே வந்து விழுந்திருந்தது.
கழிவறையிலும் பின்னர் சாப்பிடும் போதும் இந்தியன் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ் முறையே படித்துக் கொண்டிருந்தேன். சிறப்பான, நினைவில் நிற்கும் செய்திகளாக ஏதும் இல்லைதான்.
தூங்கும் அறையில் ஜன்னலை அடைக்கும் போது பக்கத்து கட்டிட காவல்காரர், 'நேற்றைக்கு இப்படி அடைக்கவில்லையே! இப்போ ஏன் அடைக்கிறீங்க' என்று பேச்சுக் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அவர் என்னைப் பார்த்து நான் அவரை அவதானித்துக் கொண்டிருந்தாலும், இது வரை பேச்சுக் கொடுத்ததில்லை. 'ஆமா, இது வரை அடைப்பதேயில்லை. தூசி நிறைய வந்து விடுகிறது. அதான் பகலில் அடைத்து விட்டுக் காலையில் மட்டும் திறந்து கொள்ளலாம்' என்று எண்ணம். அடுக்களையிலும் அடைத்து வைத்தேன்.
தியானத்திலும் முந்தைய நாள் நிகழ்வுகளை வருடிக் கொண்டிருக்க முடிந்தது. எலுமிச்சம் பழச் சோறு பப்படங்களுடன் உள்ளே தள்ளினேன். வத்தக்குழம்பு கலவையைத் தொட்டுக் கொள்ள. அடுத்தது, பழைய தண்ணீர் விட்டச் சோற்றைப் பிழிந்து, தயிருடன், உப்பு போட்டு, வத்தக் குழம்பு கலவையும் சேர்த்து.
அவ்வளவு அதிகமாகச் சாப்பிட்டு விடாமல் மட்டுப் படுத்திக் கொண்டேன். கிளம்புவதற்கு முன்பு தொலைபேசி வண்டிக்குச் சொல்லச் சொன்னேன். அவர் ஏற்பாடு செய்து விட்டு அழைப்பார். 7.40க்கு அவரை அழைத்திருந்தேன். 8 மணி வாக்கில் ராயலா நகர் முனையைத் தாண்டும் போது அழைத்து எட்டே முக்காலுக்கு வண்டி வந்து விடும் என்றார்.
8 மணிக்கு அலுவலகத்தில் யாரும் வந்திருக்கவில்லை. நானே திறந்து, கணினியை இணைத்து மின் வழங்கியை போட்டு விட்டு வேலைகளை ஆரம்பித்தேன். ரயில் பயணச்சீட்டு பதிவு செய்ய வேண்டும். தத்காலில் நாகர்கோவில் விரைவு வண்டியில் கிடைத்து விட்டது. வியாழக்கிழமை மாலை 7 மணிக்குக் கிளம்புகிறது. அடுத்த நாள் தாமதமாகத்தான் போய்ச் சேரும் என்று நினைவு. நேரம் என்னவோ 8 மணிக்குச் சேருவதாகப் போட்டிருந்தது.
வீட்டுக்கும் பேசி அதைக் குறித்து விசாரித்துக் கொண்டேன். வீட்டு தரைவழி இணைப்புத் தொலைபேசிக்கு பேச முடியவில்லை. கை பேசிக்கு அழைத்தால் அம்மா எடுத்தார்கள். மாலையிலும் அதைக் குறித்தே அழைத்துச் சொன்னேன். தாமதமாக வந்தால் அடுத்த நாள் மறுவீட்டுக்குப் போய்க் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.
விற்பனை ஆவணம், சேவை நெறிமுறைளை வரையறுக்கும் ஆவணம் இரண்டையும் தயாரித்து அச்செடுத்துக் கொண்டேன். ரயில் பயணச் சீட்டும் அச்செடுத்தேன். கம்பளம் இரண்டு பகுதிகளையும் போட்டு விட்டேன். எழுத்து போடுவதற்கு பொறுமை இல்லை.
மறக்காமல், அலுவலகத்துக்கான தட்டுகளையும் சாப்பிடாமல் வைத்திருந்த பப்பாளிப் பழங்கள், சோன்பப்டி டப்பாவையும் எடுத்துப் போயிருந்தேன்.
ராமாபுரம் வழியாகப் போக வேண்டும். தொலைபேசினால் எடுத்திருக்கவில்லை. பிறகு, அவரே அழைத்தார். மேசை மின் விசிறியையும் எடுத்துக் கொண்டு வண்டி கிளம்பியது. வாகன நெரிசலைத் தவிர்ப்போம் என்று எஸ்ஆர்எம் வழியாகவே வந்து வளசரவாக்கம், ஆற்காடு சாலை வழியாக போரூர் வந்தோம். நாற்சந்தியில் பெரிய நெருக்கடி இல்லை. ஒரே ஒரு நிறுத்தலுக்கான வரிசை நின்று கொண்டிருந்தது. சில நிமிடங்களில் கடந்து விட்டோம்.
வண்டிக்கு டீசல் போட வேண்டும். குமணன் சாவடி அருகில் புறவழிச்சாலைக்குப் போகும் திருப்பத்தில் கொஞ்ச தூரம் தாண்டி ஒரு எச்பி நிலையம் இருக்கிறது. அங்கு போய் கடனட்டையைத் தேய்த்து 500 ரூபாய்க்கு டீசல். வழக்கமான டீசல் இல்லை, விலை உயர்ந்த டீசல்தான். 'இப்படிக் குறைந்த தொகைக்கெல்லாம் கடனட்டையை வாங்காதே' என்று டீசல் போடும் பெண் சொன்னாள். 'எவ்வளவு தொகைக்கு மேல் பெரிய தொகை' என்று பாதிக் கிண்டலாகக் கேட்டதும் வெட்கத்துடன் 2000 ரூபாய் என்று சொன்னாள். அவளது மாதச் சம்பளமே அவ்வளவுதான் இருக்கும்.
அத்தோடு எனது வேலைகள் முடிந்து விட்டன. நிம்மதியாக ஓய்வெடுக்கலாம், தூங்கலாம். சம்மணம் போட்டு உட்கார்ந்து 1 மணி நேரம் தியானம் என்று அமைத்துக் கொண்டேன். சுங்கச் சாவடியில் காசு கொடுப்பதற்காக ஒரு முறை விழித்தேன். கடைசியாக கண் திறந்து வெளியில் பார்க்க ஆரம்பிக்கும் போது காஞ்சிபுரம் தாண்டி விட்டிருந்தது. ஓரிரு நிமிடங்களில் ஒரு மணி அமைத்திருந்த மணியும் அடித்தது. பத்தே கால் ஆகியிருந்தது. சரியான சொன்ன நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.
'எம்ஏகேஎச்சில் சேவைக்கட்டணம் குறித்து பேசிய பிறகுதான் வேலை ஆரம்பிக்க முடியும் என்கிறார்கள். நீங்க இங்கு வருகிறீர்களா' என்றார். 'உங்களுக்கும் விபரங்கள் தெரியுமே, நேற்றைக்கே மின்னஞ்சலைக் காண்பித்தேனே. நான் எதுக்கு வர வேண்டும்'. அவரே சமாளித்துக் கொள்வதாகச் சொன்னார்.
வாலாஜாவில் கட்டண சாவடியில் 10 ரூபாய் நோட்டுக்களாக 4 எண்ணிக் கொடுத்தேன். புறவழிச் சாலையிலேயே வந்து சரியாக இடத்துக்கு முன்பு ஒரு வேன் சாலை மத்தியப் பிரிப்பில் ஏறி நிற்பதைப் பார்த்ததால், திரும்புவதற்கான அளவு வேகம் குறைந்திருந்தது. அது இல்லை என்றால் கோட்டை விட்டிருந்திருப்பேன்.
வாசலில் நுழையும் போது வெளியில் புறப்பட்டுக் கொண்டிருந்தார். 'போய் விட்டு ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன்' என்று சொல்லித் திரும்பினேன். 'பாஸ் இன்னும் வரவில்லை. நான் 10 நிமிடங்களுக்கு வங்கி போய் விட்டு வந்து விடுகிறேன்' என்று சொல்லியிருந்தார்.
தொலைபேசி நிலவரம் கேட்டு விட்டு, நானும் வருவதாகச் சொன்னேன். வழக்கம் போல குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தார். அவர்களிடம் நம் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டு, கேட்டிருந்த ஒரு மாறுதலை அங்கேயே உட்கார்ந்து செய்து கொடுத்தேன். அதற்குள் ஒரு மணி நேரம் தாண்டி 12 மணியைத் தொட்டிருந்தது.
அங்கேயே வேலையைப் பார்க்கக் கிளம்பி விட, நான் காருக்கு வந்தேன். நேற்று முழுவதும் நிறைய தடவை சிறுநீர் முட்டிக் கொண்டே இருந்தது. ஒன்று பச்சரிசி சோற்றால் இருக்கலாம். அல்லது தண்ணீர் ஊற்றி வைத்த சோற்றைச் சாப்பிட்டதால் இருக்கலாம். அல்லது நீரிழிவு நோயாகவும் இருக்குமோ!
இறங்கி அறையைத் தாண்டும் போது பார்த்தேன். தனியாகத்தான் இருந்தார். ஈடிபிக்குள் போனால் வணக்கம் சொல்லி விட்டு கணினியில் உட்கார்ந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் பாஸ் அழைக்கிறார் என்று கூப்பிட்டுப் போனார். சிறிது நேரம் காத்திருந்த பிறகு, 'இப்போது பேச வேண்டாம். மதியச் சாப்பாட்டுக்கு மேல் பேசலாம் என்று சொல்லி விட்டார்' என்று திரும்பி அழைத்துப் போய் விட்டார்.
நல்லதுதான், இன்னும் நன்கு தயாரித்துக் கொள்ளலாம் என்று குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தவற்றை கணினியில் உள்ளிட ஆரம்பித்தேன். ஒன்றரை மணி வரை அந்த வேலை நடந்து கொண்டிருந்தது. டிரம் பிரிவில் எப்படி வேதி முறைமையை செய்வது என்ற நடைமுறையை விளக்கி 2 பக்கம் வந்தது. கடைசி வரியாக கட்டணத்தையும் சேர்த்து விட்டேன். இடையில் சாப்பிடுவதற்கான நேரம் ஆகி விட்டது.
போகும் வழியில் ஒண்ணுக்கு ஒரு முறை போய்க் கொண்டேன். லட்சுமணனையும் மேலே போய்ச் சாப்பிடச் சொன்னோம். கீழே அறையில் ஏற்கனவே நிறைந்திருந்தார்கள். எனக்கு ஒரு தட்டு கிடைத்தது. சாம்பார் - முள்ளங்கி, ஒரு பொரியல் இன்னொரு குழம்பு. சிறிதளவு சாப்பிட்டுக் கொண்டேன். சாப்பிட வரும் முன்னர் சிறப்பான அசைவ உணவுகளைக் குறித்துச் சொல்லி ஒரு நாள் வீட்டுக்கு வரும் படி அழைத்தார். 'சாப்பாட்டில் சிறப்பான சுவைகளை எல்லாம் தேடிப் போவது நின்று போய் விட்டது' என்று நிறுத்திக் கொண்டேன்.
தயாரித்து வைத்திருந்த ஆவணத்தை பிடிஎஃப் ஆக மாற்றி அவர்களின் விண்டோசு கணினி மூலமாக அச்சிட முயற்சித்தேன். ஜெராக்சு கருவியில் எடுக்க முடியாது. எப்சானில்தான் எடுத்தேன். இரண்டரைக்கெல்லாம் கூப்பிட்டு விட்டார்கள்.
மாதிரி அச்செடுப்புகளைக் காட்டும்படி கேட்டார். ஏற்கனவே அனுப்பி வைத்திருந்தவை இருக்குமே என்றேன். எடுத்து வைத்திருந்தார். அது மிகவும் உதவியாக இருந்தது. காலையில் எடுத்துப் போன சேவை நிலை ஆவணமும், மதியம் தயாரித்த விற்பனை ஆவணமும் உதவியாக இருந்தது. அதை வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.
இடையில் தோல் வாங்கும் பிரிவினர் வந்தார்கள். கெமிக்கல் வழங்கும் அச்செடுப்பை எடுத்து வருமாறு என்னை அனுப்பி விட்டார். அதை அச்செடுத்துக் கொண்டு வரும் போது காத்திருந்தார். கொஞ்ச நேரக் காத்திருப்புக்குப் பிறகு இயக்குனர் என்று ஒருவர் வந்தார். அவரும் குள்ளமாக, கணுக்கால் தெரியும் படி பேண்டு அணிந்து பெரிய கண்களை உருட்டியபடி, வளர்ந்த குழந்தையாக தாண்டி போனார். எல்லோரும் எழுந்து நிற்கவே நானும் எழுந்திருக்க வேண்டியதாயிற்று.
'அறுபதாயிரம் பேர் வேலை செய்கிறார்கள் அவரிடம். நல்ல சரியான மூளை' என்று வியந்து கொண்டார். நடைமுறை வணிக முறை பேச்சுக்கள் தொடர்ந்தன. உடனடியாக வேலைகளை ஆரம்பித்து விட வேண்டும். என்று கேட்டுக் கொண்டார். கட்டணம் குறித்து மட்டும் எதுவும் சொல்லவில்லை. பார்க்கிறேன் என்று வெளியில் போய் விட்டார்.
அவர் டெக்னிஷியனிடமிருந்து வாங்கிக் கொடுத்த பக்குவத்தை கணினியில் உள்ளிட்டு அவருக்கு ஒரு மாதிரி காட்ட வேண்டும். நானே போட்டு முடித்தேன். வேதிப் பொருட்களின் பெயர்களைச் சொல்லித் தர வந்திருந்தார். போட்டு முடித்து உற்பத்தியில் இருந்த ஒரு சின்ன மாதிரி தோல் லாட்டில் இணைத்து அச்செடுத்தேன். முதல் முறை போட்டதில் சில விட்டுப் போயிருந்தன. அவற்றையும் சேர்த்து மாற்றங்கள் செய்து அச்செடுத்து முடித்தேன்.
7 மணிக்கு திருமண வரவேற்பு. இங்கிருந்து கிளம்ப வேண்டும். பின்பக்கம் புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்திற்குப் போய் விட்டிருந்தார். அவருக்கு அச்செடுப்பைக் காட்டப் போய்ச் சேர்ந்தோம். 'இன்னும் போட்டு நாளை மறுநாள் உற்பத்தியிலிருந்து ஆரம்பித்து விடலாம்' என்றார். திரும்பி அலுவலகம் வரும் வழியில், 'நீங்கள் சொன்னால் பணம் கொடுத்து விடுகிறார்கள், சார். இனிமேல் நான் பாஸிடம் பேச மாட்டேன். நீங்கதான் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டும்' என்று சொன்னேன்.
முதலில் வரி கழித்துக் கொண்டு கொடுப்பதாகச் சொன்னவர், வேண்டுமென்றால் முழுதாகக் கொடுத்து விடவா என்று கேட்டுக் கொண்டார். இன்றைக்குத் தொலைபேசி விபரம் சொல்வதாகச் சொன்னார்.
தொலைபேசி விட்டுக் கிளம்பி விட்டேன். காரில் ஏறும் முன்னர் இன்னொரு முறை சிறுநீர் கழிப்பு.
அங்கு போய் மூவருமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு முடியும் நேரத்தில் தொலைபேசி அழைப்பு. இன்றைக்க அல்லது நாளைக்கு உட்காருவதாக ஏற்பாடு செய்து கொண்டோம். பகலில் கூப்பிட்டிருந்தார். அவரையும் இன்றைக்கு விட்டு விட்டு புதன் கிழமை பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். இன்றைக்கு சாரைப் பார்க்கப் போக வேண்டும். அழைத்து தகவல் சொல்லியிருந்தார்.
இன்றைக்கு எல்லா ஆவணங்களையும் தயாராக எடுத்துக் கொண்டு போக வேண்டும். திரும்ப இறக்கி விட்டு விட்டு வாலாஜா ஊர் வழியாகவே புறப்பட்டோம். வழியில் இரண்டு விபத்துக்களைப் பார்க்க வேண்டி வந்தது. தூக்கம், கால்களை நீட்டி வைத்துக் கொள்வது என்று நேரம் போனது. பூவிருந்தவல்லி வந்து அங்கிருந்து ஆவடி திரும்பலாம் என்று வழி கேட்டிருந்தேன். திருப்பெரும்புதூரிலிருந்து திரும்பும் பாதைகளெல்லாம் சாலை மோசமாக இருக்கும்.
ஆவடி போய் போகும் பாதை நன்றாக இருந்திருக்கும். முதலில் திரும்பிய பட்டாபிராம் போய்ச் சேரும் சாலையைப் பிடித்தோம். குறுகிய சரியாக பராமரிக்கப்படாத சாலை. 10 கிலோமீட்டர் தாண்டுவதற்கு அரை மணி நேரம் ஆனது. சாலை முனையில் பேருந்துக்குக் காத்திருந்த இரண்டு பேரையும் ஏற்றிக் கொண்டோம். அவர்கள் வழியில் இறங்கி விட்டார்கள்.
பட்டாபிராம் வந்து சேர்ந்த பிறகு ரயில் பாதைக் கடப்புக்காக கட்ட ஆரம்பித்து பாதியில் விட்டிருந்த பாலத்துக்கருகில் மிக சிரமத்துடனேயே கார் புகுந்து வர முடிந்தது அதைத் தாண்டி வந்தால் ரயில் பாதைக் கடப்புக்கு கதவை மூடி விட்டிருந்தார்கள். முன்னதாகவே வந்து இன்னோவா காரில் காத்திருந்தார். ஓட்டுனர் இருக்கையில் அவர். அவரும் கல்யாணத்துக்குத்தான் வந்து கொண்டிருந்தார்.
இருப்புப்பாதைகளைத் தாண்டி சாலைக்கு வந்து வலது புறம் திரும்பினோம். காரைப் பின்பற்றியே போனோம். சாலையிலேயே இருந்தது மண்டபம். வெளியில் பெயர்த் தட்டிகளும் வைத்திருந்தார்கள். வாசலில் கை கூப்பி தலை அசைக்கும் பொம்மை ஒன்று. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் மனம் மாறி நல்ல ஒரு பெண்ணைக் கைப்பிடித்திருந்தார். பெண் குடும்பம் கூடுதல் பதவிசான குடும்பம் என்று பட்டது. அன்புடனும் பண்புடனும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு குடும்ப வாழ்க்கைக்கு ஆண்டவனிடம் பிரார்த்தனை.
கையில் பரிசுப் பொருள் எதுவும் கொண்டு போயிருக்கவில்லை. சும்மா ஏறி கை குலுக்கி விட்டு வந்த பிறகு மேலே சாப்பிடப் போனோம். இலை போட்டு முழுச் சாப்பாடு. பூரிகள், சாம்பார், ரசம், மோர், இனிப்பு, ஐஸ்கிரீம். இரவு எட்டரை மணிக்கு சாப்பிட சிரமம்தான். சாம்பாரும் மறுத்து விட்டேன், ஐஸ்கிரீமும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். பூரி, இனிப்பு சாப்பிட்டு விட்டேன். சேனைக் கிழங்கை தவிர்த்து விட்டேன்.
சாப்பிட்டு விட்டுக் கீழே வந்து இன்னொரு முறை சொல்லி விட்டுக் கிளம்பினோம். ஆவடி வழியான சாலை நன்றாக இருந்தது.
1732 சொற்கள். 29 சொற்கள் வேகம்.

திங்கள், ஜூன் 09, 2008
மறதி
பல விஷயங்கள் மறந்து போய் விடுகின்றன. முதலில் உணர்ந்தது, பயிற்சி முடித்து ஊருக்குக் கிளம்பி விட்டவருக்கு கடிதம் தயாரித்துக் கொடுக்காமல் அந்த பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காமல் போய் விட்டிருந்தது. இரண்டாவதாக வெள்ளிக் கிழமை வருவதாகச் சொல்லியிருந்ததை அவர் முந்தைய நாள் கூப்பிடும் வரை மறந்து விட்டிருந்தது.
நேற்று மாலை பேசிக்் கொண்டிருக்கும் போது 'ஊருக்குப் போக முன்பதிவு செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டு 'போகும் போது தத்கால் முறையில் பதிவு செய்யும் நாள் இரண்டு நாட்கள் முன்பே ஆரம்பித்து விட்டது' என்றதற்கு, 'வியாழக் கிழமை பயணத்துக்கு நெருக்கடி குறைவாகத்தான் இருக்கும், சீட்டு கிடைத்து விடும்' என்று பதில். 'அப்போ வருவதற்கு பேருந்தில்தான் பார்க்க வேண்டும்' என்றால், 'வருவதற்கு தத்காலில் பதிந்து கொள்ளலாமே, நாள் அவகாசம் இரண்டு நாட்கள் கழித்துதானே தொடங்கும்' என்கிறார் அவர். அது எனக்குத் தோன்றவில்லையே!
திருமணம் 6ம் தேதி என்பது மறந்து போயிருந்தது. நேற்று மாலையில் தியானத்தில் உட்காரும் வரை அவரது திருமண வரவேற்பு இன்று என்பதையும் மறந்து போயிருந்தேன்.
இது போன்று பல நிகழ்ச்சிகள். மறதி. செய்ய வேண்டியதை விட்டு விடுகிறேன். நினைவில் வைத்திருக்க வேண்டியதை தவற விட்டு விடுகிறேன். புரிந்து கொள்ள வேண்டியதை கோட்டை விடுகிறேன். மிகவும் ஆபத்தான, சிக்கலான சறுக்கல்கள்.
இதற்கு காரணங்கள் என்னவாக இருக்கலாம்? முதலில் தோன்றியது, முந்தைய நாளின் நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக நினைவு கூர்ந்து பயிற்சி அளிப்பதை செய்யாமல் விட்டு விட்டதாக இருக்கலாம். தியானத்தின் போது பொதுவாக மனம் போன போக்கில் விட்டு விடுகிறேன். நாட்குறிப்பிலும் பொதுவான குறிப்புகள்தான் இடம் பெறுகின்றன. முந்தைய நாளின் நிகழ்வுகளை வருடிச் செல்லும் பயிற்சி மிகத் தேவையானது, பலனுள்ளது. அப்படிச் சிறப்பாக எதைப் பற்றியாவது எழுத வேண்டும் என்றால் தனியாக நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நாட்குறிப்பில் கை வைத்து விடக் கூடாதுதான்.
நேற்றுக் காலையில் ஐந்தே முக்காலுக்கு எழுந்திருந்தேன். மதியம் சாப்பிட வரப் போகிறார்கள். உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைவு இருந்தது (மறந்து விடவில்லை). காலைக் கடன்களை முடித்து விட்டு, கடைக்குப் போய் பால் வாங்கி வரக் கிளம்பினேன். ஆரோக்கியா பால் வாங்கலாம் என்று போய்க் கொண்டிருக்கும் போது பசுமை மளிகைக் கடை திறந்து விட்டிருந்தார்கள். வேலைகளை ஆரம்பித்து விட்டிருந்தார்கள். அவர்களின் சித்தப்பா காய்கறி வாங்கக் கிளம்பி விட்டிருப்பார். கடும் உழைப்பாளிகள்.
கதவுகளைத் திறக்க ஆரம்பித்திருந்த அவர்களிடம் 'பால் வாங்கிக் கொள்ளலாமா' என்று கேட்டால் முகம் சுளிக்காமல் கொடுத்து விட்டார். 4 பொதிகள் - 2 லிட்டர் - 40 ரூபாய்கள். இந்தப் பெண் ஏன் இவ்வளவு பால் வாங்குகிறான் என்று நினைத்துப் புரிந்து கொள்ளும் என்று எண்ணிக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்து அடுப்பில் பாலைக் காய்ச்ச ஊற்றி வைத்து விட்டு குறிப்புகள் எழுத உட்கார்ந்தேன். பிறந்த நாளை முன்னிட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து கொண்டிருந்தேன். அதைத் தொடர்ந்து வரப் போகிறவர்கள், என்னென்ன வேலை இருக்கிறது என்றும் பட்டியலிட்டேன். இடையிடையே அடுப்பில் வைத்திருந்த பாலைப் போய்ப் பார்த்துக் கொண்டேன். பால் காய்ந்ததும் நான் தூங்கும் அறையில் மின்விசிறியைப் போட்டு பாலை அதன் கீழ் ஆற வைத்து விட்டேன்.
வீட்டைத் தூத்து ஒதுக்கி, கழுவி வைத்திருந்த பாத்திரங்களை எடுத்து வைத்து, கழுவ வேண்டியிருந்த பாத்திரங்களைக் கழுவி வைத்துக் கொண்டேன். தண்ணீர் வந்து கொண்டிருந்தது வெளியில். போய் ஒரு வாளி நிரப்பிக் கொண்டேன். இறகுப் பந்து விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இரண்டு இளைஞர்களும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாடியிலிருந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் குறுமுறுவலோடு போய் யாருமே இல்லாத குழாயடியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து விட்டேன்.
தியானம் செய்து விட்டுச் சாப்பிட வேண்டும். குளியல் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். தியானத்தில் உட்காரும் போது செல்பேசிக்கு மின்னூட்டமேற்ற வைத்திருந்தேன். அது மணி அடிக்கும் வரை தள்ளியே உட்கார்ந்திருந்தேன். எழுதிக் கொண்டிருந்த மனச் சுமைகளைத் தாண்டி அலுவலக அரசியல்கள். வாடிக்கையாளர்களைக் கையாளுதல் என்று மனம் தாண்டிப் போய் விட்டிருந்தது. சுமையை வைத்துக் கொண்டே இருந்தால் அடுத்த எண்ணங்கள் வருவதற்கு வாய்ப்பில்லாமல் போய் விடும்.
வியாழக் கிழமை இரவு வாங்கி வைத்திருந்த பிரெட்டு பொதியைப் பிரித்து டப்பாவில் போட்டு வைத்திருந்தேன். காய்ச்சிய பாலில் இரண்டு டம்ளர்கள் எடுத்து வைத்திருந்தேன். ரொட்டித் துண்டுகளில் வத்தக்குழம்பு அரைப்பைத் தடவியும், சிலவற்றில் இனிப்புக் குழைவையைத் தடவியும் வாட்டும் கருவியில் வைத்து எடுத்தேன். அவற்றை ஒவ்வொன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே பாலிலும் சிறிதளவு இனிப்புப் போட்டுக் குடித்துக் கொண்டேன்.
அதற்குப் பிறகு மந்திரக் கம்பளம் இன்னொரு அத்தியாயம் முடித்து விடலாம் என்று உட்கார்ந்தேன். 9 மணிக்கு ஒரு மணி நேரம் அமைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். 10 மணிக்கு சமைக்க ஆரம்பிக்கலாம் என்று திட்டம். ஒரு அத்தியாயம் ஒரு மணி நேரத்துக்கு முன்பு முடிந்து விட்டால், மீதி இருக்கும் நேரத்தில் குளித்துத் தயாராகி விடலாம். குளித்து விட்டு பசுமை மளிகைக் கடைக்குப் போய், 2 கிலோ உருளைக் கிழங்குகள், தக்காளி சோற்றில் போடுவதற்கு இரண்டு குடைமிளகாய்கள் (15 ரூபாய்), எண்ணைய் அரை லிட்டர் என்று கேட்டு 200 மிலி பொதிகளாக இரண்டு வாங்கிக் கொண்டேன். 'உங்க வீட்டில் நிறைய பேர் வந்திருக்காங்களா' என்று கேட்டே விட்டார். நல்ல கூரிய மதி அவருக்கு.
பக்கத்தில் வீட்டு வேலை நடக்கும் இடத்திலிருந்து குழந்தைகளில் இரண்டு பேர் கடையில் மூத்த பையன் சில்லறைக் காசுகளை நீட்டி மிட்டாய் கேட்டான். கூடவே கடைக்குட்டித் தங்கச்சி. குட்டே பிஸ்கட் பொதி என் கணக்கில் கொடுக்கச் சொல்லி விட்டேன்.
வீட்டுக்கு வந்ததும், 'சமையல் ஆரம்பித்து விடலாமா' என்று கேட்க, அழுத்தக்கலனில் உருளைக் கிழங்குகளை வெட்டிப் போட்டு வேக அடுப்பில் ஏற்றினேன். வெங்காயத்தையும் தக்காளியையும் வெட்ட கார்த்தி எடுத்துக் கொண்டான். அது தக்காளி சோற்றுக்கு. காய்ச்சி வைத்திருந்த பாலில் தயிரைக் கலக்கி அடுப்பு மேடைக்கு கீழே வைத்திருந்தேன். 8 மணிக்கு வைத்தால் 12 மணிக்கு உறைந்து விடும் என்று கணக்கு. 1 மணிக்கு மேல்தான் அது தயாராகியிருந்தது.
மைக்ரோவேவ் அலை அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சோறு வேக வைத்தேன். முதல் இரண்டு தடவை சரியாக வேகாமல் வந்து விட்டிருந்தது. மொத்தம் மூன்றரை கப்புகள் அரிசி வைத்திருந்தேன். நுணுக்கம் பிடிபட்டு முழுவதுமாக வெந்து வழி வரும் போது பார்த்தால் மூன்று டம்ளர்கள் கொள்ளாமல் நிரம்பி வழிந்திருந்தது. அதில் சரியாக சோறு வேகுமா என்ற ஐயத்தில் அடுப்பிலும் வெந்நீர் வைத்திருந்த பானையில் அரிசி மூன்று கப்புகள் போட்டு வைத்தேன். பச்சை அரிசி குழைவாகப் போய்க் கொண்டிருந்தது.
இதற்கிடையில் வெங்காயம் வெட்டி முடித்து விட குடை மிளகாயையும் வெட்டிப் போட்டு வதக்கலானேன். அதனுடனேயே பூண்டுப் பல்களும். தாழ் தணலில் வைத்து வதக்கிக் கொண்டே மூடி வைத்தேன். இதற்குள் தொலைபேசி. அவரது நண்பருடன் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வழி சொல்லி விட்டு வெளியில் எட்டிப் பார்ப்போம் என்று செல்பேசியை எடுத்துக் கொள்ளாமல், காலில் செருப்பு போட்டுக் கொள்ளாமல் வெளியில் வந்து விட்டேன். திரும்பிப் போய் செல்பேசியே எடுக்க என்று வேறு வேலையில் இறங்கி விட்டேன். அவரிடமிருந்து அழைப்பு. அப்போதும செருப்பு போட்டுக் கொள்ளாமல் போய் விட்டேன்.
அவரது நண்பரின் வண்டி வெளிக் கதவில் புகுந்து வர முடியாது. முழுவதுமாக கதவைத் திறந்து விடப் போகும் போது ஒரு கல் குத்தி அடிப்பாதத்தில் காயம். அது நாள் முழுவதும் வலித்துக் கொண்டிருந்தது. இறக்கி விட்டு விட்டு நண்பர் போய் விட்டார். அவர் திரும்பிப் போக வேண்டுமே என்று உணர்வின்றி கதவை மீண்டும் சாத்தியிருந்தேன். செருப்புப் போட்டுக் கொண்டு போய் கதவைத் திறந்து விட்டேன்.
வீட்டுக்குள் அழைத்துப் போய் சமையல் வேலைகளுக்கு அருகில் உட்காரச் சொன்னேன். குடிக்கக் கூட எதுவும் கொடுத்திருக்கவில்லை. அவரே கேட்டு எலுமிச்சைத் தண்ணீர் போட்டு வாங்கிக் கொண்டார். எல்லோரும் குடித்தோம்.
'தாமதமாகத்தான் வர முடியும். வெளி வேலை வந்து விட்டது' என்றார் தொலைபேசி. தொலைபேசும் போது 11 மணி வரை வீட்டில் இருப்பதாகத்தான் தகவல். பன்னிரண்டரை மணிக்கு நாங்கள் மூன்று பேரும்தான் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொண்டிருந்தோம். போய் குடிக்கத் தண்ணீரும், பப்பாளிப் பழங்களும் வாங்கி வந்து விட்டார்.
தொலைபேசி, கோபாலபுரத்தில் இருப்பதாகவும் வந்தால் சரியாக இருக்குமா என்றும் கேட்டார். அப்போது மணி 12.40. பேசினால் பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார். 'வடபழனி போக வேண்டாம். கிண்டியில் இறங்கி போரூர் நோக்கி தொடரலாம்' என்று வழி சொன்னேன். அவர் தொலைபேசும் போது ஒரு மணி தாண்டி விட்டது. அவரை அழைக்க வண்டியில் கிளம்பினேன். அவர் ராமாபுரத்தைத் தவற விட்டு முன்னால் போய் விட்டிருந்தார். அவர் தொலைபேசியிருந்தது கூட நினைவிலிருந்து தவறிப் போயிருந்தது. அவர் நினைவூட்டியபிறகுதான் ஓர்மை வந்தது.
அவருக்காகக் காத்திருக்கும் போது தொலைபேசினேன். திருவள்ளுவர் சாலைக்குள் வந்து விட்டாராம். அய்யனார் கடைக்கு அருகில் இருப்பதாகச் சொன்னார். அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழி சொன்னேன். பாலபாரதியை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தால் காணோம். மீண்டும் தொலைபேசிக் கொண்டே வெளியில் வந்தால் கேட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தார், கையில் இனிப்புப் பொதிகளுடன்.
'இதெல்லாம் வாங்கியிருக்க வேண்டாமே' என்று உபசாரத்துக்குக் கூடச் சொல்லாமல் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தோம். காலையில் சாப்பிடவில்லையாம். சாப்பாடு 2 மணிக்கு என்று சொல்லி விட்டு தேங்காயை மிக்சியில் போட்டேன். சட்னி அரைக்கும் வேலையைக் கையில் எடுத்தார். நான் பப்படம் பொரிக்க ஆரம்பித்தேன். அதை முடித்து விட்டு மோர் தாளிப்பு. தயிர் உறைந்திருந்தது, புளிப்பும் இல்லை. நன்கு தண்ணீராக தாளித்த மோருக்கு வாகாக வந்து விட்டிருந்தது.
பாத்திரங்களை எல்லாம் எடுத்து பரப்பி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தோம். எதிலும் உப்பும் இல்லை உறைப்பும் இல்லை. பச்சரிசி சோறு வேறு. முதலில் தக்காளி சோறு, பப்படம். வெள்ளரிக்காய் வெட்டுகள். எலுமிச்சை சோறு. கடைசியில் வெள்ளை சோறு போட்டு மோர்.
கை கழுவி விட்டு முன்னறையில் உட்கார்ந்தோம். பேச்சு, விவாதம் ஆரம்பித்தது. இலக்காகத் தாக்குவது முறையற்றது என்று கதிரேசன் ஆரம்பித்து வைக்க பார்ப்பனீயம் வேறு என்று விளக்கம் சொல்ல முயன்றார். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல்லை வைத்துத் தாக்கும் போது அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மனம் நோகத்தானே செய்யும். வேறு ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டியதுதானே என்றேன்.
தேநீர் அருந்த கடைக்குப் போகலாம். வீட்டிலேயே போட வேண்டும் என்றால் பால் வாங்கி வர வேண்டும். அந்த நேரம் கிளம்பி வருவதாகத் தொலைபேசி. நான் வண்டியில் ஏற்றிக் கொள்ள, 'போய் வழி காட்டி அழைத்து வாருங்கள்' என்றார் . அதிலிருந்த அபத்தத்தைக் கவனிக்காமல், எச்சரித்த மனதை சட்டை செய்யாமல் கிளம்பி ராமாபுரம் மணப்பாக்கம் வரை போய் விட்டுத் திரும்பினேன். எங்களைத் தாண்டி நாங்கள் கவனிக்காமலேயே இவர்களைச் சந்தித்து விட்டார். தேநீர் கடையில் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள்.
வீட்டுக்கு வரும் வழியில் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளைப் பார்த்ததும் மீதியிருந்த சாப்பாட்டை அவர்களுக்குக் கொடுக்கலாமே என்று தோன்றியது. அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாமே என்றார். திரும்பிப் போய் அந்தக் குடும்பத்து ஆண்மகனை அழைத்து சாப்பாடு குறித்து சொன்னோம். ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு வரச் சொன்னோம்.
தக்காளி சோற்றை அதில் எடுத்தால் அது நிரம்பி விட்டது. உருளைக் கிழங்கு கறியை அப்படியே பாத்திரத்தோடு கொடுத்துத் திரும்பிக் கொண்டு வரும்படி சொன்னோம். அவர் எடுத்துக் கொண்டு போனார். 'அடுத்த கதைக்கு கரு கிடைத்து விட்டது' என்று நிறைவுபட்டுக் கொண்டார்.
பாத்திரத்தைத் திரும்பி கொண்டு வந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம். 'விழுப்புரத்தைச் சேர்ந்தவராம், நான்கு குழந்தைகள், இப்போதுதான் சென்னை வந்திருக்கிறார்கள், விழுப்புரத்தில் கரும்புக் காட்டில்தான் வேலை, மூத்த பையன் பள்ளிக்குப் போகிறான், ஞாயிற்றுக் கிழமை மட்டும் தண்ணி அடிப்பாராம்' தண்ணி அடிப்பதை மட்டும் விட்டு விட்டு குழந்தைகளை நன்கு வளர்த்து ஆளாக்கும்படி சொன்னேன்.
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தூக்கம் கண்ணைச் சுழற்றவே ஐந்தரையிலிருந்து ஐந்தே முக்கால் வரை தூக்கம்.
வீட்டுக்குள் அழைக்கவே போய் உட்கார்ந்து தொலைக்காட்சியை எதிர்த்து, இணையத்தை ஆதரித்து, எதையும் மட்டோடு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி பேசிக் கொண்டிருந்தான். அம்மா தேநீர் போட்டுக் கொடுத்தார்கள். தம்பி வரலாறு முதுகலை படித்துக் கொண்டிருக்கிறான். இந்திய ஆட்சிப் பணித் தேர்வு விபரங்கள் சேகரித்துக் கொடுக்கும்படி கேட்டேன். அவரும் எழுதலாமே என்று சொன்னேன்.
ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியின் அக்கிரமங்களைக் குறித்துப் பேசினேன். எண் பொறித்து உட்கார இடம் இருக்கும் அளவுக்குத்தான் சீட்டு கொடுக்க வேண்டும். அதற்கு மேல் ஆள் ஏற்றக் கூடாது என்று விஜயவாடாவிலிருந்து வரும் ரயிலில் ஒரு குழந்தை இறந்து போனதையும் மைசூரிலிருந்து நாங்கள் வந்து சேர்ந்த கதையையும் குறிப்பிட்டேன்.
புறப்பட்டு வீட்டுக்கு வந்தேன். எலுமிச்சை சோறு, மோர் ஊற்றி என்று சோறும் பப்படங்களும் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிக்கும் போது 'கணக்கை கணினியில் போட வேண்டும்.' கணினியை இயக்கி உட்கார்ந்தேன். அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்தவரின் பேராசையையும் காசு பண்ணும் முறைகளையும் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த முறை வெளியில் வெள்ளை அடிக்கும் செலவை அவரிடம் கொடுத்து விடலாம் என்று சொன்னேன். 'இவர் சொன்னால் அவர் கேட்டாலும் கேட்பார்' என்று அந்த அம்மா சொல்ல பெருமையாக இருந்தது.
ஒன்பது மணிக்குத் தூங்கப் போகும் முன் கழிவறை. தியானம் 20 நிமிடங்களில் நாளின் நிகழ்வுகளை வருடி முடித்துத் தூங்கப் போனேன்.
காலையில் சீக்கிரம் விழிப்பு வந்தும். உடலை வருத்த மாட்டேன் என்று 5 மணி வரை படுத்திருந்தேன்.
இதை முடித்து விட்டுக் குளியல் - 7 மணி. தியானம் 7.20 சாப்பாடு 7.45. புறப்பட்டு அலுவலகம் போய் (தட்டுக்களை எடுத்துக் கொண்டு), கே எச்சுக்கான தாள்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இணையம் வழியாக வியாழக் கிழமை ரயிலில் இடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். திருமண வரவேற்பு போகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
8.45க்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி 9 மணிக்கு போரூர். 9.30க்கு ராணிப்பேட்டை பேருந்து. 11 மணிக்கு வாலாஜா.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)