அதிகாலையில் அரை மணி நேரமாவது நிறுவன வேலை தொடர்பாக நேரம் செலவளிக்க வேண்டும் என்று இந்த எழுத்துகளை ஆரம்பித்த புதிதில் திட்டமிட்டது நடக்காமலேயே போய் விட்டது. ஒரு மணி நேரத்தை அரை மணி நேரமாகக் குறைத்து மீதி இருக்கும் அரை மணி நேரம் அலுவலகக் குறிப்புகளில் செலவிட வேண்டும். காலையில் முடுக்கி விடுவதுதான் நாள் முழுவதும் ஆக்கிரமிக்கிறது.
நேற்றைய நாள் முழுவதும் வீணாகக் கழிந்தது. செய்ய ஆரம்பித்தது எதுவும் சரியாக முன்னேறவில்லை. உருப்படியாக ஒன்றையாவது முடித்தோம் என்ற நிறைவில்லாமலேயே போய் விட்டது. அந்தக் கடுப்பில் நேரச் செலவுகளை நினைத்துப் பார்த்தேன். மாலை ஏழு மணி முதல் எட்டு மணி வரையிலான ஒரு மணி நேரம் மட்டும் இணையத்துக்கு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நீண்ட நேரம் இரவில் செலவளிக்கக் கூடாது.
வழக்கமான நாளில் எட்டரைக்குள் வீட்டுக்கு வந்து சீக்கிரமாகத் தூங்கவோ, ஒரு மணி நேரம் வேலை பார்க்கவோ செய்யலாம். ஒன்பது மணிக்குள் தூங்கி விட்டால், அதிகாலை மூன்றரை நான்கு மணிக்கு எழுந்து விடலாம். அரை மணி நேரம் நாட்குறிப்புகள்.
எப்படி இருந்தாலும் ஐந்தரை முதல் ஆறு மணி வரையிலான நேரம் அலுவல் தொடர்பான எண்ணங்களில் செலவிட வேண்டும். இடையில் கிடைக்கும் நேரத்தில் மற்ற எழுத்து வேலைகளை வைத்துக் கொள்ளலாம். குறைந்தது ஐந்து மணிக்கு எழுந்து விட வேண்டும். சீக்கிரம் எழுந்தால் அதிகமாக எழுதிக் கொள்ளலாம்.
கனவு காண்பது மட்டும்தான் நனவாகும். எதுவுமே இரண்டு முறை உருவாக்கப் படுகிறது. வீடு கட்ட வேண்டுமானால் காகிதத்தில் படம் வரைந்து பார்த்த பிறகுதான் வேலை ஆரம்பிக்கிறோம். அது போல எந்தப் படைப்புமே படைப்பாளியின் மனதில் ஒரு முறை உருவாகி பின்னர் வெளியுலகில் வடிவம் பெறுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட பொருளைப் பற்றி எண்ணிப் பார்க்க நேரம் செலவளிக்கும் போது புதிதாக உருவாக்கும் சாத்தியங்கள் தென்படும்.
'வெந்தால் தின்போம், விதி வந்தால் சாவோம்.' என்று போய்க் கொண்டே இருக்காமல் முனைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இன்றைக்கு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள். எனக்கு நினைவு தெரிந்து நடந்த மிகப் பெரிய அரசியல் நிகழ்ச்சி இது. எம்ஜிஆர் முதல் முதலில் முதலமைச்சராக ஆன பிறகு அப்பா, 'சினிமா நடிகன் முதல்மந்திரி ஆனான்' என்று கிண்டல் செய்தது நினைவில் இருக்கிறது.
1980 தேர்தலில் ஜனதா தோற்று, இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்ற போது பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பெரிய பரபரப்பு இருந்தது. 'யார் வெற்றி பெற்றது?' என்று அண்ணன் வகுப்பில் வாக்குவாதம் வந்திருக்கிறது. இரண்டு குழுக்களாக கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் வெளிவந்த பிறகு யார் முடிவுகளைச் சரியாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான கருத்துக் கணிப்பு அது.
'இந்திரா காந்தி வந்து விட்டால் தங்கம் விலையெல்லாம் திரும்பவும் ஏறி விடுமாமே, கொஞ்சம் தங்கம் வாங்கி வைத்துக் கொள்ளுவோம்' என்று அம்மா அப்பாவிடம் சொல்வதும் நினைவுக்கு இருக்கிறது. அப்படி வாங்கினதாக நினைவு இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விலை, இப்போதைய விலை என்று அச்சிட்டு விலையெற்றத்தைச் சுட்டிக் காட்டி இ காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது.
'ரொம்ப பருத்துட்டாயே டே' என்று அப்பா நேற்றைக்குப் பார்த்ததும் சொல்கிறார்கள். கிண்டலாம். எனக்கே ஒரு நிமிடம் உண்மையிலேயே சதை போட்டு விட்டோமோ என்று கலவரம் தோன்றி விட்டது. அப்பா கண்ணில் மெட்ராஸ் 'ஐ', மதராஸ் ஐ, சென்'ஐ' என்று மூன்று விதமாகக் கேட்ட கண் வலி. கடந்த நான்கு நாட்களில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மூன்று பேருக்கு வலி என்று செய்தி. அப்படி நோய் வந்தவர்களுடன் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கக் கூடாது, கை குலுக்கக் கூடாது என்று அறிவுரைகள்.
புத்தகம் என்பவை வாழ்க்கையை மேம்படுத்திக் காண்பிக்கின்றன என்று தமிழ்நதி என்பவர் எழுதியிருந்தார்.
செவ்வாய், அக்டோபர் 31, 2006
திங்கள், அக்டோபர் 30, 2006
மாறும் உலகங்கள்
சில இடங்களைப் பார்க்கும் போதே தோன்றி விடும் 'இங்கு சாப்பிட்டால் கோளாறுதான்' என்று. நேற்றைக்கு மதியம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் கெஸ்ட் ஹோட்டலில் மதியச் சாப்பாடு. அவர்களது பாயாசம், தயிர், காரக் குழம்பு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு சாப்பிட்டதால் உடனடி விளைவு அவ்வளவு தெரியவில்லை. ஆனால், ஏதோ குளறுபடி. சரியாக இரவு பதினொன்றரை மணிக்கு எழுப்பி விட்டது. காலையில் ஆறரை வரைத் தூக்கம்.
மழை திறந்து பெய்கிறது. சனிக் கிழமை இரவு அலுவலகத்திலிருந்து புறப்படும் போது மெலிதாகத் தூறிக் கொண்டிருந்தது. கையில் இருந்த மழை அங்கியை அணிந்து கொண்ட பிறகு, தலையை மூட அலுவலக நண்பர் ஒரு பிளாஸ்டிக் பையை விளிம்பு சுருட்டி மாட்டி விட்டார். கிளம்பி அரை கிலோமீட்டர் போகும் முன்னால் 'தொப்பி' கீழே விழுந்து விட்டது. மழை பலத்திருந்தது. வானத்தில் தண்ணீர்க் குழாய் ஒன்றை வைத்து திறந்து விட்டது போலக் குளியலறை பூச்சிதறல் குழாய் போல ஊற்றியது.
சென்ற ஆண்டு அனுபவங்கள் மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாலும், சிறிது தூரத்தில் மழையின் ஊற்றலை ரசிக்க முடிந்தது. சட்டையும் உடலும் நனையாததால் குளிர் தெரியவில்லை.
நேற்றுக் காலையில் மொழிபெயர்ப்பு 2006 என்று குளோபலிங்கோ மற்றும் ஆழி என்ற நிறுவனங்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்குப் போகக் கிளம்பினோம். ஆற்காடு சாலையில் இடது புறம் எங்கும் திரும்ப வேண்டாம் என்று முன்னெச்சரிக்கையுடன் போய் நூறடிச் சாலையைப் பிடித்தாலும், அரும்பாக்கம் அருகில் குறுக்கு வழியில் புகுந்தோம். எம்எம்டிஏ தண்ணீர்த் தொட்டி இருக்கும் சாலையில் ஆரம்பித்து பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்து சேரும் வரை வண்டி நீந்தித்தான் கடக்க முடிந்தது.
மதியம் திரும்பும் போது புத்திசாலித்தனமாக இதைத் தவிர்த்து விட்டு சின்மயா நகர் வழியே வந்தால், ஆழ்வார்த் திருநகர் பகுதி மிதக்கிறது. இந்த ஆண்டும் மதுர வாயல் ஏரித் தண்ணீர் வழிகிறதாம். கொஞ்சமாவது சுரணை இருக்கும் மக்கள் கூட்டம், அரசு நிர்வாகம் ஒரு ஆண்டு அனுபவித்த துயரங்கள் அடுத்த ஆண்டும் தொடரக் கூடாது என்று நடவடிக்கை எடுத்திருப்போம். பத்து மாதங்கள் தூங்கிக் கொண்டிருந்து விட்டு திரும்பவும் அதே மாதிரியான வெள்ளம்.
உலகமயமாக்கலின் விளைவாக பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டிய வேலைகள் பெருகி விட்டனவாம். அதற்கான மொழிபெயர்பாளர்களை உருவாக்குவதற்கான கருத்தரங்கு மற்றும் பட்டறைதான் நேற்றுக் காலையில் நடந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சீன மொழி தொடர்பாக குளோபலிங்கோ செந்தில்நாதனைச் சந்தித்து சில வேலைகளைச் சேர்ந்து செய்திருந்தோம். கருத்தரங்கு வழக்கம் போல பத்து மணி நேரம் குறிப்பிட்டு பத்தே முக்காலுக்குத் தொடங்கியது. சரியான நேரத்துக்கு வருபவர்களுக்கு மரியாதையே இல்லாத ஊர் நம்ம ஊர்.
தாமதமாக வந்த பேச்சாளர் ஒருவர் மட்டும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். வேறு யாருக்குமே அது உறைத்தது போலவே தெரியவில்லை.
எப்படியிருந்தும் மிக பலனுள்ள காலைப் பொழுது. பேசியவர்களில் மு சிவலிங்கம் என்று தமிழில் கணினி தொடர்பான கட்டுரைகளை, புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் பொறியிலாளரின் பேச்சு எல்லோரையும் கட்டிப் போட்டது.
'தமிழ் நாட்டுக் கல்லூரிகளில் ஆங்கில வழிக் கல்வி என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு சொல்லிக் கொடுப்பதைத் தமிழிலேயே செய்கிறேன். அப்படித்தான் மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ' என்று ஆரம்பித்து பல தகவல்களை விவரித்தார்.
சி, சி++ சி# போன்ற கணினி மொழிகளைப் பற்றித் தான் எழுதிய நூல்கள் தமிழ் மாணவர்களுக்குப் புரியும்படியான எடுத்துக்காட்டுகளுடன் இருந்ததால் மிகப் பிரபலம் அடைந்தன என்றும், வகுப்பு நடத்தும் போது ரஜினி பாட்டிலிருந்து பழமொழிகள் வரைப் பயன்படுத்தி கோட்பாடுகளைப் புரிய வைக்க முடிகிறது என்று பேசினார்.
தேநீர் இடைவேளைக்கு முன்னும் பின்னும் தொடர்ந்த பேச்சில், 'புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அனுமதி கேட்கிறார்கள். கூட வேலை பார்க்கும் அதிகாரிகள், 'மகனுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது, இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மாற்றித் தர முடியுமா' என்று கேட்கிறார்கள் என்று வியப்பான தகவலைக் கூறினார்.
'இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு வேறு எந்த மொழியிலும் எழுதப்படாத விபரங்களைத் தமிழில் புத்தகமாக முதலில் எழுதி விட வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்கத் தேவைப்படும் சூழலை உருவாக்க நாம் நினைத்தால் முடியும்' என்றார்.
கடைசியில் ஆங்கிலச் சொற்களை எப்படித் தமிழ் படுத்துவது என்று பல குறிப்புகளையும் எடுத்துக் காட்டுகளையும் கூறினார்.
இப்படி ஒரு அடைமழைக்குப் பிறகு நான் பேச வேண்டியிருந்தது. ஆங்கிலத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்ப்பு வேலைகளை மேற்பார்வையிட்டது. ழ-கணினி திட்டத்தின் கீழ் கேடியீ மொழிமாற்றப் பணிகளில் பங்கு கொண்ட அனுபவங்களைச் சுருக்கமாக சொல்லி நிறுத்திக் கொண்டேன்.
வளர்தொழில் என்ற தொழில்/வணிகப் பத்திரிகையை நடத்தி வரும் ஜெயகிருஷ்ணன்தான் தமிழ் கம்ப்யூட்டர் இதழையும் பல ஆண்டுளாக நடத்தி வருகிறார். அவரும் கூட்டத்துக்கு வந்திருந்தார். அமைதியாக தமிழின் மீதான பற்றின் காரணமாக, தமிழர்கள் உயர்ந்தால் தமிழ் உயரும் என்ற உறுதியோடு மனம் தளராமல் இந்தப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
நான்கு நாட்களாகப் பொருளாதாரம் பற்றியத் தொடரை எப்படி வெளியிடுவது என்று பல எண்ணங்கள். அதிகப்படியானவருக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற எது சிறந்த வழியோ அதைப் பின்பற்ற வேண்டும்.
சனிக் கிழமை இரவு வீட்டுக்கு வந்ததும் கிரிக்கெட் போட்டி நடப்பது நினைவுக்கு வந்தால் SCV தயவால் ஒளிபரப்பாகும் நேரடி ஒளிபரப்பு தெரிந்தது. பெண்ணுரிமை பேசும் இந்தக் காலத்தில் கிரிக்கெட் பற்றி அரைகுறையாகக் கூடத் தெரியாத மந்திரா பேடி தனது சிறப்பு ஆடை அணிகலன்களுடன் உட்கார்ந்திருப்பது எதில் சேரும் என்று தெரியவில்லை. 'பார்ப்பவர் கண்ணில்தான் கோளாறு அவர் சரியாகத்தான் உடுத்தியிருக்கிறார்' என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், கொல்லன் பட்டறையில் ஈ போல அந்த அம்மா அங்கே உட்கார்ந்திருப்பது கடுப்பாக இருந்தது.
நேர்முக வர்ணனையில் ஒரு பெண் குரல் திறமையாகப் பேசுகிறார். அதைப் போலத் தன்னை வளர்த்துக் கொள்ள ஏன் தெரியவில்லை மந்திரா பேடிக்கு?
'எழுத எப்படி நேரம் கிடைக்கிறது?' என்று நண்பர் ஒருவர் கேட்கிறார். குடும்பப் பொறுப்புகள் குறைவாக இருப்பது ஒரு புறம் இருந்தாலும், கிடைக்கும் நேரத்தை ஒரு நாள் கிரிக்கெட் பார்க்க செலவளித்தால் என்ன ஆகும்? இந்தியா விளையாடும் போட்டி என்றால் அதுவும் விடுமுறை நாளாக இருந்தால் வேறு எல்லா வேலைகளையும் ஒதுக்கிப் போட்டு தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்திருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
நாம் ஆதரிக்கும் அணி வெற்றி பெற்று விட்டால் செலவளித்த நேரத்தோடு போய் விடும். தோற்று விட்டால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மனம் தளர்ந்து போய் விடும்.
இப்போதும் போட்டிகளில் ஆர்வம் உண்டு. அவ்வப்போது நிலவரம் தெரிந்து கொண்டு அடுத்த நாள் காலையில் நாளிதழில் கட்டுரை படிப்பது போதுமானதாக இருக்கிறது. இந்த நேரடி ஒளிபரப்புகளில் வரும் விளம்பரங்களை அவற்றின் கதையைச் சொல்லி விடும்.
இன்னொரு நேர விரயம் செய்து கொண்டிருந்தது, இணையத்தில் தேவையில்லாத இடங்களில் மேயப் போவது. slashdotல் மும்முரமாக ஏதாவது படித்துக் கொண்டிருப்போம். ஒரு பின்னூட்டத்தில் ஒரு சுட்டி கொடுக்கப்பட்டிருக்கும். அதைத் தொடர்ந்து போனால் அடுத்த மணி நேரங்கள் விரயமாகிப் போய் விடும். அதன் விளைவுகள் இன்னும் நீளமாக எண்ணப் போக்குகளையே புரட்டிப் போட்டிருக்கும்.
நேற்றைக்கு இந்தியா விளையாடும் போட்டி. அலுவலகத்தில் நண்பர் cricinfo திறந்து வைத்துக் கொண்டு நிலவரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
லோக் பரித்ரன் என்று ஒரு கட்சி. அதைப் பற்றி விவாதிக்கும் ஒரு மடற்குழு யாஹூ குழுமங்களில். அவ்வப்போது ஏதாவது மடல்கள் வந்து கொண்டிருக்கும். இப்போது அஃப்சல் குருவை தூக்கில் போட வேண்டுமா என்று விவாதம். தமிழ் வலைப்பதிவுகளில் விவாதங்களின் தரம் எவ்வளவோ மேல். இந்த ஆங்கில மடல்களில், 'அவனைக் கொல்லுங்கள்'. 'பழிக்குப் பழி' என்ற அளவில்தான் விவாதங்கள். அதிலும் இரண்டு மூன்று நாட்களாக நேரம் போகிறது.
மாலையில் கிடைத்த ஒரு மணி நேரத்தில் வெற்றி பெற ஏழு பழக்கங்கள் (7 Habits of Highly effective people) என்ற பழக்கங்களைப் பற்றிக் குறிப்புகள் எழுதிக் கொண்டேன். கூகிள் டாக்கில் வந்த நண்பரின் கேள்வியால் தூண்டப்பட்டு War and Peace இணையப் பதிப்பை கூட்டன்பெர்க் திட்டத்தில் (project gutenberg) போய்ப் படித்தேன்.
அந்தப் புத்தகம் படிக்க வழக்கமான கண்ணாடிகளைக் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும். டால்ஸ்டாயே, 'அது நாவலா, அரசியல் கட்டுரையா, தத்துவ விளக்கமா' என்று கேள்வி எழுப்பி விட்டு இதில் எதுவும் சேராத ஒன்று முடிவு செய்கிறார்.
முதல் தடவைப் படிக்கும் போது தலையும் காலும் புரியாமல் போகும். அதன் பிறகு எந்த மூலையிலிருந்தும் ஏதாவது அத்தியாயத்தை எடுத்து படித்துக் கொண்டிருக்கலாம். கிட்டத்தட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் போல. பொன்னியின் செல்வனில் தத்துவ விசாரங்கள் கிடையாது. வரலாற்றுக் குறிப்புகள் சார்ந்த நிகழ்ச்சிகள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் பார்த்திபன் கனவுதான் அரச குல வாழ்க்கையையும் சாதாரண மக்களின் வாழ்க்கையும் கலந்து கொடுத்த கதை.
இரவு முழுதும் பெய்த மழை ஓய்ந்திருந்தாலும் நேற்று போல வெயில் இன்னும் ஆரம்பிக்கவில்லை. எப்போது திரும்ப ஆரம்பிக்குமோ என்ற மிரட்டலுடன் வானம் கருத்தே இருக்கிறது. துணிகள் காய்வது ஒரு பெரும்பாடு.
இங்கிலாந்தில் எல்லா வீடுகளிலும் துணி துவைப்பது தவிர காய வைக்கும் இயந்திரங்களையும் வைத்திருக்கிறார்கள். இந்த இயந்திரத்திலிருந்து வெளியில் எடுத்து அதில் போட்டு விட்டால் அடுத்த அரை மணி நேரத்தில் காய்ந்து துணி தயார். தேய்ப்பது மட்டும்தான் வேலை.
ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் சூரியன் காய்ச்சி எடுக்கும் நம்ம ஊருக்கு அது தேவையில்லைதான். ஆனால் மழைக்கால ஈரப்பிசுபிசுப்பின் போது அந்த நினைவு வந்து விடுகிறது.
பல்லவி ஐயர் பெய்ஜிங்கில் சீன மக்களுடன் அவர்களுக்கான வீட்டில் வசிக்கும் அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுகிறார். சீனாவைப் பாருங்கள் என்று மார் தட்டிக் கொள்ளும் யாரும் அந்தப் புகைப்படங்களில் இருக்கும் கோடு போட்ட முகங்களுடனான ஐம்பது வயதில் எண்பது வயதைப் பார்த்து விட்டு சென்ற தலைமுறை சீனர்களைப் பார்க்க வேண்டும்.
ஒரு தலைமுறையையே முடக்கிப் போட்ட, அவர்களின் நொறுங்கிய கனவுகளின் மீது கட்டப்பட்டதுதான் இன்றைக்கு மிளிரும் சீனாவின் வெற்றிக் கதை. இந்தியாவுக்கு மட்டுமல்ல, வேறு எந்த நாட்டுக்கும் அப்படி ஒரு முன்னேற்றம் தேவையே இல்லை.

சனி, அக்டோபர் 28, 2006
உள்நோக்கிப் போ
நேற்றுக் காலையில் எழுதிக் கொண்டிருக்கும் போதே உட்கார்ந்திருக்க முடியாமல் படுத்துத் தூங்கி விட்டேன். அதிகாலைத் தூக்கத்தில் சில கனவுகள். நினைவு தெரிந்த நாள் முதலாக முற்றிலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான கனவு வந்தது இப்போதுதான். உடலெல்லாம் சிலிர்த்து விட்டது.
'இன்னும் உள்ளே போ', காட்டுக்கு மரம் வெட்டப் போன குடியானவனிடம் முனிவர் ஒருவர் சொன்னாராம். முதல் நாள் வெகு தூரம் போன பின்பு விறகுக்குப் பயன்படும் அருமையான மரங்கள் கிடைத்தன. மகிழ்ச்சியோடு திரும்பினான். அடுத்த நாள் அறிவுரையின்படி இன்னும் உள்ளே போனால், மரச்சாமன்கள் செய்யப் பயன்படச் சிறந்த மரங்கள் கிடைத்தன. அடுத்த சில மாதங்களுக்குத் திரும்பி வரும் தேவை ஏற்படாமல் நிறைவாக வாழ்ந்தான்.
அடுத்த முறை இன்னும் உள்ளே போனால் உயர்தர சந்தன மரங்கள் நிரம்பியிருந்தன. அவற்றறைச் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்து பெருவளம் படைத்தவனாகி விட்டான். பல ஆண்டுகள் கழிந்து மீண்டும் அறிவுரை நினைவுக்கு வந்தது. காட்டுக்குள் இன்னும் உள்ளே போனான். காடு முடிந்து விட்டது என்பதுதான் நடைமுறையில் நடக்கும். இந்தக் கதையில் அவன் திரும்பியே வராமல் உண்மை அறிவு பெற்று விடுகிறான்.
தோண்டத் தோண்ட புதையலாக வெளி வரும் போது எந்தக் கட்டத்தில் நிறைவடைந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். பேராசை பெருநஷ்டம் என்று இன்னும் கிடைக்கும் என்று போய்க் கொண்டே இருந்தவர்களுக்கு வாய்த்த துயரம் பற்றியும் அம்புலிமாமா கதைகள் உண்டு.
'கொள்கைக்காக வாழ்வது வேறு, கொள்கையாகவே வாழ்வது வேறு' என்று நண்பர் ஒருவர் கூறினார். 'கொள்கையாகவே வாழ்ந்தால் ஒருவருக்கும் உதவாமல் எல்லோரும் விட்டுப் போய் விடுவதாக ஆகி விடும்., நம்மளவில் மட்டும் புரிதல்களை வைத்துக் கொள்ளாமல் நான்கு பேருக்கு சொல்லி கூட்டாக செயல்பட வேண்டியதின் அவசியத்தையும் உணரவேண்டும்' என்று பேசிக் கொண்டே வந்தார்.
'அறிந்தும் அறியாமலும் முப்பதைந்து ஆண்டு வாழ்க்கைகளுக்குப் பிறகு குறிப்பிட்ட நாற்சந்தியில் நின்று கொண்டிருக்கிறேன். போக வேண்டிய பாதை என்னவென்று தெளிவாகி விட்டது. அதில் கூட வருபவர்கள் வர மறுத்து விடலாம். ஆனால் அதுதான் சரியான பாதை என்று தெரிகிறது. எந்த விபத்துகளும் நிகழா விட்டால் இன்னும் முப்பது ஆண்டுகள் வரை குறைந்தது வாழலாம். அதற்குத் தயாரிப்பாக ஒரு ஆண்டு செலவளிப்பது அதிகமில்லை என்று படுகிறது' என்று சொன்னதையும் ஏற்றுக் கொண்டார்.
இன்றைக்கும் படித்த பெண்களுக்கும் வரதட்சிணை பிரச்சனை இருக்கிறது என்பதை நம்பக் கஷ்டமாக இருந்தது. நம் கண்களுக்கு பட்டி கட்டிக் கொண்டு நாம் பார்ப்பதே உலகம் என்று இல்லாமல் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. வரதட்சிணை கேட்பவர்களும், அது அப்பா/அம்மா செய்வது என்று வாளாவிருக்கும் இளைஞர்களும், நம் தலைவிதி இது என்று வாளாவிருக்கும் பெண்களும் ஆச்சரியமாகப் படுகிறார்கள்.
'மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா' என்று இவ்வளவு படித்தும் தன்னிச்சையாக சம்பாதித்தும் பெண்களுக்கு ஏன் தைரியம் வரவில்லை. திருமணத்துக்குப் பிறகு 'தனக்கு முதல் முதலில் வரன் பார்க்கப்பட்டு, பெண் பார்க்க வந்தவனிடம் மனதைப் பறி கொடுத்து, மேல் விபரங்களைப் பேசி முடிக்கப் போன அப்பா/அம்மாவிடம் வைக்கப்பட்ட சீர் கோரிக்கைகளைப் பற்றி அறிந்து வெகுண்டு, எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம் என்று மறுத்து விட்டதாகச் சொன்ன போது' பெருமையாக இருந்தது.
'நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், புவியில் யார்க்கும் அஞ்சாத நெஞ்சமும்' மட்டும் போதும்.
நேற்று சூரன் திருவிழா. எங்கள் ஊரில் மலை மேல் முருகன் கோயில்கள் சிறப்பானவை. அம்மா ஊரான தோவாளை, அப்பா ஊரான மருங்கூர், நாகர்கோவில் நகரிலேயே இருக்கும் கோயில்கள் என்று பெரிய சூரன் செய்து முருகனை அலங்கரித்துக் கொண்டு வந்து, சிறுவனின் கையால் பெரிய சூரனை சம்ஹாரித்து எரித்துப் போடுவார்கள். ஆண்டு தோறும் ஏதாவது இடத்துக்குப் போய்ப் பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஓரிரு ஆண்டுகள் விரதம் இருந்ததும் உண்டு.
சென்ற ஆண்டு போரூர் பால முருகன் கோவிலுக்குப் போயிருந்தேன். மிகச் சிறிய முருகனை விட உருவில் தாழ்ந்த சூரனை வதைத்தார்கள். ஆணவம் என்ற மலத்தை தெய்வ பக்தியால் கொன்று போடுவதுதான் இந்த திருவிழாவின் பொருள் என்று விளங்கிக் கொண்டிருந்தேன்.
சூரன் பெற்ற வரத்தின்படி சாவே கிடையாதாம். வெற்றி வடிவேலிலிருந்து தப்பிக்க மரமாகி நின்றவனை இரண்டாகப் பிளந்ததும், செய்த பாவங்களில் பெரும்பகுதி மயிலாக மாறி முருகனின் வாகனமாகவும், புண்ணியங்களின் தொகுப்பு சேவலாக உருவெடுத்து முருகனின் கொடியாகவும் இடம் பெற்றனவாம்.
எழுத்து பதிவில் எழுதியுள்ளவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து வகைப்படுத்த வேர்ட்பிரஸ்ஸில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி விட்டேன். சில நாட்கள் நான்கு பதிவுகளாக வருகின்றன. மொத்தத்தில் நூற்றிப் பதினைந்தும் தொகுத்து முடிக்க ஓரிரு மாதங்கள் ஆகி விடலாம்.
நேற்று் முற்பகலில் பெருமழை, உடனேயே மின்னிணைப்பையும் துண்டித்து விட்டிருந்தார்கள். குழுவாக அமர்ந்து விவாதங்களில் ஈடுபட்டிருந்தோம். ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு வரும் போதுதான் மின்சாரம் இணைப்பு வந்து விட்டிருந்தது.
வாடிக்கையாளர் ஒருவருக்குத் தொலைபேசினால், சளி, காய்ச்சல், கண்வலி என்று சொல்கிறார். இன்று அதிகாலை எழுந்திருக்கும் போது அடைத்து வைத்து மழை. மழை என்றால் வரும் குதூகலம் மறைந்து போன ஆண்டின் அனுபவங்களின் கொடூரம்தாம் மிஞ்சி நிற்கிறது.
தெருக்கள் எல்லாம் தண்ணீர் நிரம்பி தொழிலும் வாழ்க்கையும் தேங்கிப் போய் விட்ட நாட்களின் நினைவு பெய்யும் மழையை பயத்துடன் பார்க்க வைக்கிறது. கூடவே நோய்கள்.

வெள்ளி, அக்டோபர் 27, 2006
தூக்கம் வென்றது
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது இது போலக் காலையில் எழுந்து கொள்வது. சில நாட்களில் எழுந்திருக்கும் போது அசதி ஆளைத் தாக்கும். விடாப்பிடியாக எழுந்து பல்லைத் தேய்த்து விட்டு உட்கார்ந்திருப்பேன். சில சமயம் அப்படியே புத்தகம் கையில் இருக்கத் தூங்கி விடுவது உண்டு.
எல்லாவற்றையும் உதறிப் போட்டு விட்டு உருப்படியாகத் தூங்கி வாழ்வதற்கான வழியைப் பார்க்கலாம் என்று தோன்றும் தருணங்கள் இவை. வலி இல்லாமல் ஏதாவது நடக்கிறதா? வெப்ப இயக்கவியலின் மூன்றாவது விதிப்படி வேலை என்பது கலைந்து கிடப்பதை சீர்செய்வது. யாருமே எதுவுமே செய்யா விட்டால் ஒழுங்கு குறைந்து கொண்டே போய் எல்லாம் சிதறிக் கொண்டே போகும். வேலை என்றால் முனைப்பு, விட்டுக் கொடுத்தல்.
ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று மனதில் தோன்றி விட்டால் அதற்கான ஆயத்தங்கள் பின்னணியில் ஓட ஆரம்பித்து விடுகின்றன. குமுதத்தில் வெளியான 'நீங்கள் வேண்டுவது எது வேண்டாலும் நடக்க வேண்டுமா" என்று காப் மேயர் என்பவர் எழுதிய தொடரின் தமிழாக்கத் தலைப்பு மட்டும் நினைவில் நிற்கிறது. முதலில் என்ன வேண்டுமோ அதை மனதில் அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும். அதற்கு பல முறைகளை விளக்கும் அந்தத் தொடர்.
கலாம் சொல்வது போல முதலில் கனா காண வேண்டும். அதுதான் முதல் படி. அதிலேயே நின்று விடாமல் அடுத்த படிகளுக்குப் போவதுதான் வேலையை நடத்திக் காட்டும் என்றாலும் கனாக் காண்பதுதான் அடிப்படை, அது இல்லாமல் கட்டிடமே உருவாகாது. நம் ஊரில் கனாக் காண்பது, கனாக் காண்பவர்களின் எண்ணிக்கை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்.
நான்கு பேர் சேர்ந்தால், திட்டங்கள் தூள் பறக்கும். பேச்சிலேயே திரைப்படம் எடுத்து விடுவார்கள். படம் பார்த்த ஒவ்வொருவரும் தன்னை இயக்குநராக உருவகம் செய்து கொள்ள முடியும். யார் என்ன பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும், கதை எப்படி நகர வேண்டும் என்று அங்குலம் அங்குலமாக அலசி விடுவார்கள்.
கீழே இறங்கி வேலை செய்வதற்கு ஆள் வரும் வரைக் காத்திருப்போம். சுஜாதாவின் நாடகங்களில் ஒன்றில் ஒருவர் பெரிய பெரிய திட்டங்களை தாளில் வரைந்து வைத்துக் கொண்டு அதைப் பார்த்து கோடிக் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பார். எல்லோருமே மதிப்பு, பாசம் முன்னிட்டு அவருக்குப் போலியான ஊக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். உண்மை தெரிய வழியே இல்லாமல் ஏமாந்து போய்க் கொண்டிருப்பார்.
அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான புது கண்டுபிடிப்புகள், யோசனைகள் பதிவாகின்றன. அதில் எத்தனை உருப்படியான பொருளாக வெளி வருகின்றன. ஒவ்வொரு உருப்படியான யோசனைக்கும், அதைக் கையில் தூக்கிப் பாலூட்டிப் பாதுகாத்து வளர்த்து விட ஒரு தாய் தேவை. பிறக்கும் போது அவற்றால் எதுவும் செய்ய முடியாது. ஒரு குழந்தையை வளர்த்து சுயசார்பு அளிக்க பத்து ஆண்டுகள் ஆகலாம். அந்த நேரத்தில் பார்த்துப் பார்த்து கவனித்து பேண வேண்டியிருக்கும்.
அது போல விதை விதைத்து விட்டு வாளாவிருந்து விட முடியாது. அப்புறம்தான் வேலையே தொடங்குகிறது.
ஜோயல் ஸ்பால்ஸ்கி வேலைக்கு எடுப்பவர்களிடம் இரண்டு பண்புகளைப் பார்ப்பதாகக் கூறுகிறார். ஒன்று புத்திசாலித்தனம், இரண்டாவது செய்முனைப்பு. இரண்டில் ஒன்று மட்டும் இருப்பவர்கள் அபாயகரமானவர்கள். இரண்டுமே இல்லாதவர்கள் பயனற்றவர்கள். இரண்டும் இருப்பவர்கள்தான் ஒரு நிறுவனத்துக்கு உதவ முடியும்.
வெறும் புத்திசாலித்தனம் மட்டும் இருந்தால், ஏட்டுச் சுரைக்காயை நம்பிக் கொண்டு புதிது புதிதாக திட்டங்களைக் கொண்டு வருவார்கள்.

வியாழன், அக்டோபர் 26, 2006
உறவுகளும் உணர்வுகளும்்
மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் நிரம்பி வழிகின்றன. துயரம் நிரம்பிய உறவுகளில் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான பின்னணிகள். டால்ஸ்டாய் சொன்னதை மாற்றிப் போட்டால்தான் இந்த நூற்றாண்டுக்குப் பொருந்தும் போலிருக்கிறது.
காலையில் ஒரு நிறைவான தம்பதியினருடன் சந்திப்பு. யின்னும் யாங்கும், மூளையின் வலது புறமும் இடது புறமும் ஒன்றாக இயைந்து இருக்கும் போது உணர முடியும் ஒத்திசைவு அறையை நிறைத்து விட்டது.
சீன சோதிடத்தில், தாவோயிச முறையில் மனிதர்களை ஐந்து வகையினராகப் பிரிக்கிறார்கள். நீர், நெருப்பு, மண், உலோகம், மரம். நீரும் நெருப்பும் சேர்ந்து வாழ முயன்றால் நெருப்பு நீரை கொதிக்க வைத்து ஆவியாக்கி விடும் அல்லது நீர் நெருப்பை அவித்து விடும், மரமும் மண்ணும் சேர்ந்தால் ஒன்றை ஒன்று வளப்படுத்திக் கொள்கின்றன. நீரும் மரமும் சேர்ந்தால் அதற்கு தனி விளைவு என்று திருமணப் பொருத்தம் பார்ப்பதாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.
மதியத்துக்கு மேல் ஒரு இணைய உரையாடலில் கேட்ட விபரங்கள் உடலளவில் வலி தெரிவது போல மனதை பிசைந்தன. ஒரு மனித மனம் இவ்வளவு உளைந்து வருந்துவது தேவையில்லாதது. இத்தகைய உறவுகளில் தெரியும் பொதுப்படையான கூறுகள்,
"என் மனைவியை சமாளிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை நான் வெளியூர் பயணம் போகும் போது, மாலையில் தொலைபேசியில் அழைத்துக் குடைந்து எடுத்து விடுகிறாள். 'என்ன சாப்பிட்டீங்க, யாரையெல்லாம் பார்த்தீங்க, யார் கூட வெளியே போனீங்க? யார் யார் வந்திருந்தாங்க' என்று ஒவ்வொரு நாளும் அரை மணி நேரத்துக்கு மேல் விசாரணை போல நடத்தி விடுகிறாள். அவளை எப்படி மாற்றுவது என்று ஒரு வழி சொல்லுங்களேன்" என்று கேட்கிறார்.
"உங்கள் பயணத்தில் நடக்கும் விபரங்கள் அவளுக்கு எப்படி விபரமாகத் தெரிகிறது?"
"அவளுக்கும் தெரியும். நாங்கள் ஒருவரை ஒருவர் முதல் முதலில் சந்தித்ததே நான் இது போல ஒரு பயணத்தில் அவள் ஊருக்குப் போயிருந்த போதுதான். அவளைச் சந்தித்த பிறகு என் முதல் மனைவியைப் பிரிந்து இவளைத் திருமணம் செய்து கொண்டேன்" என்று ஒரு அசட்டுச் சிரிப்போடு கூறுகிறார்.
"இப்போ எப்படியாவது உங்கள் மனைவியின் தலையைக் கழற்றி மூளைக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்து, அவரது எண்ணங்களை சரி செய்து விட வேண்டும் என்று உங்களுக்கு ஆசை. நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்களோ அதைப் பொறுத்துதான் பிறர் உங்களை நடத்துவார்கள். என்னதான் பேசி அவர்கள் மனதை மாற்ற முயன்றாலும், உங்கள் நடத்தையால் விளைந்த அபிப்பிராயங்களை பேச்சால் மாற்றி விட முடியாது".
எதிர்மறையான உறவுகளில் மாற்றிக் கொள்ளும் ஒவ்வொருவரும் எதிர் தரப்பை மந்திரம் போட்டு மாற்றி விடலாம் என்று கனவு காண்கிறார்கள். ஆண்டவனுக்கு விரதம் இருத்தல், மனநல மருத்துவரிடம் கூட்டிப் போதல், பொது நண்பர்கள் மூலம் அறிவுரை கூறுதல் என்று பார்வை எல்லாம் வெளி நோக்கியே இருக்கிறது. வெளிச்சம் உள் நோக்கித் திரும்ப வேண்டும்.
மனமாற்றத்துக்கான கதவுகள் பூட்டி இருக்கின்றன, உள்பக்கமாக. ஒவ்வொரிடமும் தம் மனமாற்றத்துக்கான கதவை மட்டும் திறக்க சாவி இருக்கிறது. அடுத்தவர்களைச் சரிப்படுத்த வேண்டும். நாம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்ற நினைப்பில் பூட்டிக் கிடக்கும் கதவுகளை வெளியிலிருந்து இடித்துக் கொண்டிருக்கிறோம்.
என் நெருங்கிய நண்பன் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்தான். பல ஆண்டுகளாகக் காத்திருந்தும் அவர்கள் வீட்டிலும் அந்தப் பெண்ணின் தரப்பிலும் சாதகமான பதில் இல்லை. இவனும் மன உளைச்சலில் இருந்தான். அவன் பின்பற்றும் குருவின் ஆசிரமத்தில் அதிகம் ஈடுபாடு.
ஒரு நாள் குருவின் அறைக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் போது, அவர் காரில் வருகிறார். கார் நின்றதும் இவன் ஓடிப் போய் கார்க்கதவை திறந்து உபசரிக்க முயல்கிறான். இவன் எவ்வளவு இழுத்தும் கதவு திறக்கவில்லை.
குரு கண்ணாடியை இறக்கி இவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து 'உள்ளே இருந்து பூட்டி இருக்கும் ஒன்றை இவ்வளவு இழுப்பு இழுத்து ஏன் கஷ்டப்படுகிறாய். விட்டு விடு, உள் பூட்டு திறந்து நானே இறங்குகிறேன்' என்றாராம்.
இதைச் சொன்ன அவன், "எனக்கு குரு சொல்வது ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையது. அந்த நிமிடத்தில் அவர் காரைப் பற்றிச் சொல்லவில்லை. என் வாழ்க்கையைப் பற்றிதான் இடித்துரைக்கிறார் என்று பட்டது. அந்தப் பெண்ணின் மனம் உள்ளேயிருந்து பூட்டியுள்ளது. நான் என்னதான் இழுத்துப் பார்த்தாலும் வழி திறக்காது என்று பளிச்சென்று உறைத்தது. "
அப்புறம், ஓரிரு மாதங்களுக்குள் அதே பெண்ணின் தங்கைக்கும் இவனுக்கும் திருமணம் அதே குருவினால் நடத்தி வைக்கப்பட்டது.
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் விட்டு விடக் கற்றுக் கொண்டால் வர வேண்டியது தானாகவே வந்து விடும்.
நேற்றுக் காலையில் வெகு நாட்களுக்குப் பிறகு மனதின் ஆழங்களை இறங்கிப் பார்க்க முடிந்தது. இருபது நிமிடங்கள் உட்கார முடிவது இல்லை. பத்து நிமிடம் ஓடிய பிறகே ஏதோ உலகமே இடிந்து விழுந்து விடும் அவசரத்தில் எழுப்பி விடுகிறது. 'இந்த இருபது நிமிடங்களில் எதுவும் மூழ்கி விடப் போவதில்லை, நாளில் எவ்வளவோ நேரம் வீணாக்குகிறோம்.' என்று விடாப்பிடியாக பிடித்து வைத்துக் கொள்வது பெரும்பாடுதான்.
முந்தைய நாள் முக்கால் வாசி முடித்திருந்த வேலை காலையில் முழுமையாக முடிந்து விட்டது. அப்புறம் நண்பருடன் சந்திப்பு. வெகுநேரம் நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்புறம் மதிய உணவுக்குப் பிறகு இன்னொரு நண்பருடன் இணைய உரையாடல். பத்து நிமிடங்கள் நடந்த அந்த உரையாடலுக்காகத்தான் காலையிலிருந்தே தயார்ப்படுத்தல் என்று தோன்றுகிறது.
யூனிசெஸ் என்ற கணினி நிறுவனம், தனது பெரிய வாடிக்கையாளர்களைக் கவர தனிப்படுத்தப்பட்ட விளம்பரங்களை ஏற்பாடு செய்ததாம். அந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு குறிப்பிட்ட மாத ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் அந்த தனிநபர்களின் படம் போட்ட சிறப்பு அட்டைப்படத்தோடு பத்திரிகையை அனுப்பி வைத்தார்களாம். இதழின் உள்ளே அந்த நிறுவனத்துக்கு யூனிசெஸ் எப்படி உதவலாம் என்று கட்டுரை. ஒற்றைப் பிரதிகளாக உருவாக்கி தமது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுப்ப ஏற்பாடு செய்தார்களாம்.
பத்திரிகையில் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து பொதுப்படையாக விளம்பரம் கொடுப்பது சோப்பு விளம்பரத்துக்குச் சரிப்படலாம். கோடிக்கணக்கில் மதிப்பிலான பொருட்களுக்கு விளம்பரம் பொதுப்படையாகக் கொடுப்பது வீண் செலவுதான். வாங்குபவருக்கு மட்டும் போய்ச் சேரும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டதாம்.
இப்படி நாமும் செய்து கொள்ளலாமே என்று பேசிக் கொண்டோம்.
நூற்கண்டில் விழும் முடிச்சுகளில் ஏற்படும் திகைப்புகளில் வருபவர்களுக்குப் பொறுமையாக ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து நூலை நேராக்கிக் கொடுப்பது அழகான பணி. அப்படி போய்க் கொண்டிருந்து மாலையில் இன்னொரு பெரிய வேலையும் முடிந்தது.
நிறுவனத்தில் இணையக் கணினியில் கோப்புகளின் தளங்களின் அமைவு ஒரு வடிவத்துக்குள் வர ஆரம்பித்திருக்கிறது.
மென்பொருள் உருவாக்கம் என்பது புதியதோர் உலகம் செய்யும் பெரிய பணி. யாரோ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கணினி மொழிக்கு மேல் பல அடுக்குகள் உருவாகி இன்றைக்கு நாமும் நம் பங்குக்கு மேல் தளங்களில் கைவண்ணம் காண்பித்துக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கில் சிற்பிகள் சேர்ந்து ஏதோ ஒரு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படையில் கட்டம் கட்டமாக இந்த பூமி உருண்டையை உருவாக்கினார்கள் என்று வைத்துக் கொண்டால் அதைப் போல உருவாகி வரும் புதிய உலகம்தான் கணினிகளும் அவற்றை இயக்கும் மென்பொருட்களும்.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் தமக்குப் புரிந்த வகையில் வடிவமைக்கிறார்கள். சரியான அமைப்புகள் உறுதி பெற்று பிறரும் அதே அமைப்பைச் சார்ந்து மேலும் அடுக்குகளை உருவாக்குகிறார்கள். சரியில்லாத வடிவங்கள் இடித்துப் போடப்படுகின்றன.
இந்த வகையில் ரிச்சர்ட் ஸ்டால்மானின் கட்டற்ற மென்பொருள் இயக்கம் இந்த புதிய உலகம் உருவாவதலில் பெரும்பங்கு வகிக்கிறது. 'நான் செய்த வேலையை நானே எனக்கு மட்டுமாக வைத்துக் கொள்வேன், என் மூலைக்கு யாரையும் வர விட மாட்டேன், நான் உருவாக்கிய அமைப்பின் விபரங்களை ஒழித்து வைத்துக் கொள்வேன்' என்று பிறரை முடக்கிப் போடும் தனியார் மென்பொருள் உருவாக்க முறையின் எதிர்மறை விளைவுகளை எண்பதுகளிலேயே உணர்ந்து, அதை எதிர்கொள்ள ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்து இருபது ஆண்டுகளில் புது உலகின் உருவாக்கத்தைச் சரியான வழியில் செலுத்தி வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
ஒரு சில ஆண்டுகளில் தமிழக அரசியலிலும் பெரிய மாறுதல்கள் வரும் என்று மாலை சூப் குடிக்கும் போது குறி சொன்னேன். கருணாநிதியின் எழுச்சிக்குப் பிறகு தமிழக அரசியலில் அவர்தான் மையமாக இருந்து வருகிறார். அவரை ஆதரிப்பவர்கள், தீவிரமாக எதிர்ப்பவர்கள் என்று இரண்டு பக்கமும் நடத்துவதுதான் கடந்து முப்பத்தைந்து ஆண்டு அரசியல். அவரது காலத்துக்குப் பிறகு அதிமுக, திமுக, மதிமுக மூன்று கட்சிகளிலுமே ஒரு மையவிலக்கு விசை செயல்பட்டு உடைந்து சிதறும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த சிதறலின் போது பாமக, காங்கிரஸுக்கு வாய்ப்புகள் அதிகம்.
அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் தமது சொந்த ஆதாயத்துக்காக இருந்தாலும் ஒரு கட்சியை இணைத்துப் பிடிக்க ஒரு பொது உணர்வு, கொள்கை தேவை. திமுகவுக்கு அது இருந்தது. பதினைந்து ஆண்டுகளாக குடும்ப வணிகமாக மாறி அந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு விட்டன. அதிமுகவுக்கு ஆரம்பத்திலிருந்தே அது கிடையாது. பாமகவுக்கு இருப்பது ஜனநாயகத்துக்கு ஒவ்வாத உணர்வு. காங்கிரஸுக்கு எந்த முயற்சியும் இல்லாமல், அகில இந்தியக் கட்சி என்ற வகையில் ஒரு அடையாளம் நிலைக்கிறது.
வெகு நாட்களுக்குப் பிறகு திவ்யசரண்யா கடையில் சூப் சாப்பிட்டோம். பகல் வேளைகளில் பழச்சாறுகள், மாலையில் சூப்புச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது, இனிப்பை ஒதுக்க ஆரம்பித்த பிறகு அங்கு கிடக்கும் சாறுகள் ஒத்து வராமல் போய் விட்டிருந்தன. மாலையில் சூப் சாப்பிடும் வேளையில் மாலை உணவு நேரமாகி விடுகிறது. நேற்றைக்கு மதியம் கூடுதலாக வாங்கி வந்து மீந்து போயிருந்த தயிர் சாதத்தை நான்கரைக்கே சாப்பிட்டு விட்டிருந்ததால் ஆறேகால் மணிக்கு சூப் சரியாக இருந்தது.

- ஒவ்வொருவரும் எதிராளியை மன நோயாளி, கொடுமைக்காரர் என்று நினைத்துக் கொள்வது,
- தான் மட்டும் ஏதோ ஒரு காரணத்துக்காக விட்டுக் கொடுத்து வாழ்வதாக நினைப்பது,
- உண்மையான காரணத்தை முற்றிலும் தனக்குத் தானே மறைத்துக் கொண்டு மாறான நோக்கங்களுக்காகப் பாடுபடுவதாகத் தன்னைத்தாமே ஏமாற்றிக் கொள்வது என்பவை.

புதன், அக்டோபர் 25, 2006
பேச்சும் செயலும்
இருபத்தி மூன்று மணி நேரம் நடந்தவற்றை ஒரு மணி நேரம் அசை போடுவதாக இப்படி உட்காருவது அவற்றை செரிக்க உதவத்தான் செய்கிறது.
மாடுகள் சாப்பிடும் போது அரைகுறையுமாக மென்று தள்ளி விட்டு ஓய்வு கிடக்கும் போது அவற்றையே வாய்க்குள் அசை போடும், 'எவனாவது தோட்டக்காரன் வருகிறானா' என்ற பதட்டத்தில் சரியாக மென்று தின்ன அவகாசம் இருக்காது. பாதுகாப்பான இடத்தில் வந்ததும் படுத்துக் கிடந்து அசை போடுகிறது என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார் கதையாக விளக்கினார்.
இதைப் பொருளாகக் கொண்டு நேற்று ஒருவருக்கு வெறுப்பேற்றியாகி விட்டது. கல்கியில் 'ஏட்டிக்குப் போட்டி' என்ற கட்டுரைத் தொகுப்பில் 'பொறாமைப்படு' என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பார். நாம் அன்றாட வாழ்வில் சொல்லும் பல எதிராளியை பொறாமைப்பட வைக்கும் நோக்கம் கொண்டவை.
'தீபாவளிக்கு புதிய உடைகள், எங்கள் வீட்டில் இரண்டாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வெடித்தோம். இந்த மெகாத் தொடரை ஆரம்பத்திதலிருந்து ஒரு பகுதி கூடத் தவற விடாமல் பார்க்கிறேன்' என்பதெல்லாம் பற்றி ஏன் பேசுகிறோம். கேட்பவர்கள், நமது அருமை பெருமைகளை உணர்ந்து அவர்களிடம் அது இல்லையே என்று பொறாமைப்பட வேண்டும் என்றுதானாம். கல்கி தனக்கே உரிய நகைச்சுவை எழுத்தில் வயிறு குலுங்க சிரிக்கும்படி எழுதியிருப்பார்.
அவரும் 'தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நாங்களெல்லாம் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு எவ்வளவு பாடுபட்டோம். முரசொலி மாறனைச் சந்தித்து மணிக்கணக்கில் காத்திருந்து நடக்க வேண்டியதை நிறைவேற்றி வைத்தோம்.' என்று அவர் பங்குக்குச் சொல்லி அதில் எல்லாம் ஈடுபட முடியாத என்னுடைய பொறாமையைத் தூண்டினார்.
இதில் தேவை இல்லாத ஒன்று, காஷ்மீரப் பிரச்சனையையும், ஈராக் போரையும் நாம் வாதிட்டு தீர்வு காண முயல்வது. எப்படியாவது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இது மாதிரி விவாதங்களில் சிக்கி விடுகிறேன். இரண்டு நாட்களாக அஃப்சல் குருவைத் தூக்கில் போடுவது பற்றிய வி த பீப்புள் பதிவில் வந்த கட்டுரையில் நடந்த விவாதம். சொல்ல வேண்டியதை இது போல விவாதம் இல்லாமல் தகவல் அறியும் தெரியும் நோக்கத்தோடு பகிர்ந்து கொண்டால் வேலை முடிந்து விடும்.
இனிமேல் இது போன்ற விவாதங்களுக்குப் பின்னூட்டத்தில் இறங்காமல் ஒரு இணைப்புக் கொடுத்துப் பதிவு போட்டு விட்டு அத்தோடு விட்டு விட வேண்டும். ஏற்கனவே நான்கைந்து வலைப்பூக்கள் கணக்கில் நீண்டு விட்டன. இதற்கென புதிதாக ஒன்று ஆரம்பிப்பது சரிப்படாது. வோர்ட்பிரஸ்ஸில் ஆரம்பித்த கணக்கும் அப்படியே கிடக்கிறது. செயலில் ஊக்கம் குறைந்து பேச்சிலும் எழுத்திலுமே முனைப்பு மிஞ்சி விட்டது.
குப்பைக் கூடை வாங்கி வைத்திருந்த அடி பிய்ந்து விட்டது. மீண்டும் குப்பைகள் பறக்க ஆரம்பித்துள்ளன. 'உள்ளாட்சி தேர்தல் முடிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரிடம் உறை கட்டித் தரச் சொல்லியுள்ளதாக' பக்கத்து வீட்டு அம்மா சொல்கிறார். மகளிர் குழுவாக செயல்பட ஆரம்பித்துள்ளார்களாம். 'பத்து ஆண்டுகளில் நம்ம ஊரிலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் நடைமுறை வந்து விடும்' என்று சவடாலாகப் பேசி விட்டு வந்த பிறகு இன்னும் பொறுப்புணர்ச்சி அதிகமாகிறது.
'மாற்றம் என்பது புரட்சி என்பது துன்பப்படும் மக்கள்தான் கொண்டு வருவார்கள், அப்படி ஒரு மாற்றம் வந்து விட்டால், அதற்கேற்ப வாழ்வதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் அது வரை இப்போது இருக்கும் சூழலுக்கேற்ப வாழ்வதுதானே எனக்கு நல்லது' என்ற அருளுடன் பெரிய விவாதம். மாலையில் ஆறு மணிக்குக் கிளம்பி இரவு பத்து மணிக்குத் திரும்பும் வரை காற்றில் ஓரிரு கோட்டைகள் கட்டி முடித்து விட்டுத் திரும்பவும் இரண்டு பேருக்கும் வழக்கமான பொருளுக்கு பேச்சு வந்து விட்டிருந்தது.
'விவசாயத்தில் இறங்க வேண்டும் என்றால் எப்படிச் செயல்படலாம்' என்று ஆரம்பித்து எண்ணங்களின் அலசலிலேயே பல அணுகுமுறைகளை ஒதுக்கித் தள்ளி விட்டு அடுத்து துரித உணவுக் கடைகள் அமைக்கும் தொழில் ஆரம்பிக்கலாம் என்று விவாதங்கள், கணக்குகள், ஆதாய இழப்பு கூட்டல்கள் எல்லாம் முடிந்து விழுந்த இடைவெளியில் இது ஆரம்பித்திருந்தது.
'உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் போயிருந்தால் யாருக்கு இழப்பு, எப்படி கையூட்டே கொடுக்காமல் இருப்பது உங்களுக்குப் பலன் தரும்' என்று ஆரம்பித்து காரசாரமாகப் போனது.
கடைசியில் பத்து மணிக்கு மேல் உட்கார்ந்து, தமிழ் ஓவியத்துக்காகக் கட்டுரை எழுதி முடித்து பன்னிரண்டு மணிக்கு மேல் தூங்க முடிந்தது நடந்தது. 'ஏற்கனவே பதிவில் போட்டவை இல்லாமல் புதிதாக எழுதிக் கொடுங்களேன்' என்று முந்தைய நாளே சொல்லி விடப் புதிதாக எழுதுவது எதுவும் நிறைவாக வரவில்லை. கடைசியில் சாங்காய் போய் குளிர்காலங்களில் பட்டுப் புரிந்து கொண்ட சில விபரங்களைக் கொண்டு எப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று எழுதி அனுப்பினேன். பொருந்துகிறதோ இல்லையோ.
இந்தூரில் போய் இருந்த நான்கு ஆண்டுகளில், நடுக்கும் குளிரிலும் கம்பளிச் சட்டை கூடப் போடாமல் வேலைக்குப் போவதை ஒரு வீரமாகக் காட்டி மகிழ்ந்தோம். அக்டோபர் மாதமே ஸ்வெட்டர்களை மாட்ட ஆரம்பித்து விடும் அந்த ஊர்க்காரர்களைப் பார்த்துக் கிண்டல் அடித்துக் கொண்டு, 'எங்களைப் பாருங்கள், இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை' என்று அதிகாலை ஆறரை மணிக்கு உடலெல்லாம் சில்லிட்டுப் பற்கள் கிடுகிடுக்க பேருந்துக்குக் காத்திருப்போம். அந்த ஊரில் குளிர் ஏழு முதல் பத்து டிகிரி சென்டிகிரேடு வரை போகும்.
சாங்காயில் ஒரு டிகிரி, மைனஸ் இரண்டு டிகிரி என்று வெப்பநிலை குறைந்து பனிப் பொழிவு கூடச் சமயத்தில் ஏற்பட்டு விடும். முதல் ஆண்டுகளில் சரிவரச் சமாளிக்கத் தெரியாமல் நொந்து போய் விட்டிருந்தேன். ஒவ்வொன்றாகப் புரிந்து சரிவரப் பொதிந்து கொள்ளும் சூட்சுமம் புரிய இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகி விட்டிருந்தன.
ஒரு அக்டோபரில் போலோன்யா (Bologna) தோல் கண்காட்சிக்காக இத்தாலிக்கும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, ஜெர்மனி என்று ஒரு வாரம் சுற்றிப் போனதுதான் முதல் அனுபவம். ஆஸ்திரியாவில் முட்டளவு பனிப் பொழிவு. நம்ம ஊரில் போடும் துணிகள், மேலே ஒரே ஒரு கம்பளிச் சட்டை, வழக்கமான காலணி, காலுறை போட்டு ஒவ்வொரு நாளும் நரகமாகக் கழிந்தது. காலையில் எழுந்திருக்கவே மனசு வராது. நாள் முழுவதும் சோர்வாக இருக்கும். குளிரில் உடல் எங்கும் விறைத்துப் போய் அரைப்பிணமாகப் போய் விட்டு வந்தேன்.
மார்கழிக் குளிரிலும் முண்டாசு பனியனும், அரை வேட்டியும் உடுத்துக் கொண்டு போய் விடும் ஊரிலிருந்து போகும் நமக்கு யாரும் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்காமல் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நேற்று அதிகாலையில் எழுந்து விட்டிருந்த போதும் பகல் முழுவதும் சோர்வில்லாமலேயே போனது. சில நாட்கள் தொடர்ச்சியாக வெளியில் பயணப்படாமல் கழிந்ததால் திட்டமிட்டபடி மேசைப் பணிகளைக் கொஞ்சம் ஒதுக்கி விடலாம் என்று போனது. தீபாவளிப் பண்டங்களின் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. திங்களன்று மட்டம் போட்டு விட்ட ஒருவர் தனது பங்கு பலகாரங்களோடு வந்து சேர, இன்னொருவர் சமையலறையில் இரண்டு மூன்று டப்பாக்களை முறுக்கு, தட்டை, ரவா உருண்டை என்று நிரப்பியிருக்க, மிகப் பெரிய உறுதியுடன்தான் தவிர்க்க முடிகிறது.
ரம்சானை முன்னிட்டு முஸ்லீம் நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி வாழ்த்து அனுப்பிய பிறகுதான் பிறை தெரிந்து நோன்பு முடிந்து விட்டதா என்று உறுதி செய்து கொள்ளாதது உறைத்தது. காலையில் ஞாயிற்றுக் கிழமையின் தொடர்ச்சியாக உளுந்து கஞ்சி செய்து குடித்து விட்டுப் போய் விட்டு, முந்தைய நாள் மீந்திருந்த சோறில் பருப்புப் பொடி(பூண்டு பொடி) கலந்து எடுத்துப் போன ஒரு சம்புடம் சோறும் உள்ளே போனது.
மதியம் டாட்டா உடுப்பியில் சாம்பார் சாதமும், ஊத்தப்பும். சோற்றில் சாம்பாரை ஊற்றி, நான்கு கரண்டி சாம்பார் பொடியைப் போட்டுக் கலந்து தருவதுதான் இவர்களது சாம்பார் சாதத் தயாரிப்பு முறை என்று பட்டது. காரமும், புளிப்பும் தனியாக மிதந்தன.
மதியத்துக்கு மேல் ஓரிரு ஆண்டுகளாகப் பார்த்திராத நண்பர் வந்து வார இறுதியில் மொழிபெயர்ப்புத் தொடர்பான கருத்தரங்குக்கு வர அழைத்தார். அவர் தமிழ்க் கணினி, மொழிபெயர்ப்பு, பதிப்புலகில் விடாமல் செயலாற்றி வருபவர். ஆழி என்ற புதிய பதிப்பகம் தொடங்கி இருக்கிறாராம். தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி ஒரு நான்கு பக்கக் கட்டுரை எழுதிக் கொடுங்களேன் என்று கேட்டுக் கொண்டார்.
இரவுப் பத்து மணிக்கு அருள் அலுவலகத்திலிருந்து வெளியில் வரும் போது சென்னை வந்திருக்கும் நண்பரிடமிருந்து தொலைபேசி. அவரைச் சந்திக்க விரும்பிப் போட்ட மடலைப் பார்த்து என் எண்ணை அழைத்திருக்கிறார். இன்று சந்திக்கலாம் என்று பேசிக் கொண்டோம்.

செவ்வாய், அக்டோபர் 24, 2006
நழுவும் பழக்கங்கள்
எல்லாவற்றுக்கும் விடுமுறை ஐந்து நாட்களாக. 'சாப்பாடா, தீபாவாளியாச்சே எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்வோம். தூக்கமா, காலங்காத்தாலே எழுந்து என்ன செய்யப் போகிறோம், நிதானமா எழுந்திருக்கலாம், டிவியா - எல்லோரும் பார்க்கிறாங்க நாமும் கலந்து கொள்வோம், அப்புறம் நாமே தனியாக் கூடக் கொஞ்சம் பார்ப்போம், புத்தகங்களா கிடைப்பதெல்லாம் படித்து வைப்போம்' என்று அடித்து ஆடிய நாட்கள் ஓடி விட்டன.
எண்ணெயில் செய்த முறுக்கு சாப்பிட்டதும் உடனடியாக, ஒரு சில நிமிடங்களுக்குள் வயிற்றில் ஆரம்பித்து உணவுக் குழாய் முழுவதும் வாய் வரை எதிர்விளைவு தெரிகிறது. இனிப்புகளில் நெய், பால், இனிப்பாக மிதப்பவற்றைத் தவிர்த்து பொரிகடலை உருண்டை, அதிரசம் என்று நின்று விட்டாலும் சர்க்கரை அளவை ஏற்றி விடும் போக்கு புரியத்தான் செய்தது. தொலைக்காட்சிகளை பத்து நிமிடங்களுக்கு மேல் தாங்க முடியவில்லை. தடுப்பூசி போட்ட விதமாக இனிமேல் முயன்றாலும் சிலவற்றைச் செய்ய முடியாத எதிர்ப்பு சக்தி வந்து விட்டது போல இருந்தது.
சிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை தியாகுவுக்குக் குடிப் பழக்கத்தை மறக்க சிகிச்சை கொடுத்த பிறகு, ஒரு நாள் மருத்துவரே குடிக்கத் தருவதாக ஆயத்தம் செய்கிறார். ஒரு மடக்கு உள்ளே போனதும் வன்மையான எதிர்வினை. 'குறிப்பிட்ட மாத்திரை சாராயத்தை உடலுக்கு ஒவ்வாததாக மாற்றி விட்டதால் இனிமேல் குடித்தால் உயிரே போய் விடும்' என்று மிரட்டுவார் மருத்துவர்.
ஞாயிற்றுக் கிழமைக் காலையில் அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் எழுதுபவற்றையும் ஒரு இடத்தில் பதிந்து வைக்கக் கேட்டுக் கொண்டேன். நம்மைப் போன்று வலிந்து முயலாமல், இயல்பாக வரும் எழுத்து அவருடையது. சின்ன வயதில் மூன்று நான்கு ஆண்டுகளாக 'பாரதி' என்ற பெயரில் எல்லோரையும் எழுத வைத்து பெரும்பகுதி தானே எழுதி, வெளியீட்டு விழா எல்லாம் நடத்தி கையெழுத்து பத்திரிகை நடத்தியவர். நாஞ்சில் பாரதி என்ற பெயரில் சிறுகதைகள் ஒரு சில வெளியாகி இருக்கின்றன.
வட்டாரப் பத்திரிகைகள், அவரது துறை சார்ந்த இதழ்கள் என்று எழுதுகிறார். அடுத்து வெளியாக வேண்டிய இதழுக்காக ஒரு கையெழுத்துப் பிரதியைக் காண்பித்தார். சின்ன வயதில் கேட்ட நிகழ்ச்சி, உணர்ந்த பாத்திரங்களை அனுபவித்து முத்து முத்தான கையெழுத்தில் ஒரு சிறுகதை. 'பத்து, பன்னிரண்டு சிறுகதை சேர்த்து வைத்திருக்கிறேன்.' என்று சொன்னார். 'எல்லாவற்றையும் ஒரு வலைப்பூவில் பதிந்து விடுங்கள்' என்று அவருக்கு ஒரு கணக்கு ஏற்படுத்தினேன்.
பிளாக்கர் திறக்கவே மறுத்ததால், வோர்ட்பிரெஸ்ஸில் கணக்கு ஏற்படுத்திக் கொண்டேன். இதில் வகைப்படுத்திக் கொள்ளும் வசதியும் இருப்பதால் இன்னும் வசதி. சோதனை ஓட்டமாக பதிந்தும் காண்பித்தேன். e-கலப்பையும் நிறுவிக் கொடுத்து விட்டேன். அவருக்கு இருக்கும் வேலையில் இதில் நேரம் செலவிடுவது சந்தேகம்தான். அவ்வப்போது கேட்டுப் பதியச் செய்ய வேண்டும்.
ஞாயிற்றுக் கிழமைக்கான உளுந்தங்கஞ்சி. வேலை நாட்களில், இட்லி, தோசை, ரவை, என்று போனாலும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு பானை நிறைய அரிசியும், உளுந்தும் சிறிதளவு வெந்தயமும் போட்டு வேக வைத்துக் கடைசியில் தேங்காய் சேர்த்து தொட்டுக் கொள்ள தேங்காய்த் துவையலுடன் கஞ்சிதான் காலை உணவு என்று பல ஆண்டுகளாக அம்மா ஏற்படுத்திய பதிவு. அவர்களுக்கும் வேலை குறைவு, நாங்களும் விரும்பிச் சாப்பிடும் ஒரு உணவு.
அதே மாதிரியான கஞ்சி இந்த ஞாயிறும். பத்து மணி போல, கிளம்பி விடலாம் என்று விடை பெற்று விட்டுத் திரும்பி விட்டேன். அப்புறமும் சுறுசுறுப்பு வரவில்லை. ஒரு மணி நேரம் தூக்கம், அப்புறம் கோதுமை தோசை, துணிகள் மடித்து வைத்தல், துணி துவைத்தலும் முடித்து விட்டேன். அலுவலகத்துக்குப் போனால் சாவி இல்லை. எதிர் வீட்டில் கொடுத்து வைத்தது அவர் நேற்று கூட வீட்டுக்கு வராமல், காலையில் பூட்டை உடைத்துதான் உள்ளே போனோம்.
திரும்பி வீட்டுக்கு வந்துதான் 'படிக்காதவன்' என்ற முன்பே பார்த்த ரஜினி படம் ஒரு பதினைந்து நிமிடங்கள் பார்த்தேன். ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக என்ற பாடல் சில நாட்களாகவே உருக்கிக் கொண்டிருந்தது.
'செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்,
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்,
நேர்மை அது மாறாமல், தர்மம் அதை மீறாமல்,
நாளும் நடை போடுங்கள் நியாயம் பெறலாம்,
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்'
என்று சொல்லிப் பார்த்துக் கொண்ட வரிகள்.
நான்கு மணிக்கு மேல் ஒரு மணி நேரம் இணைய மையத்தில் இணைப்பு, அப்புறம் கேகே நகர் போய் ஆனந்த விகடனுடன் மாலை உணவு. விகடனில் 'உலகெங்கும் எழுபது லட்சம் பிரதிகள் விற்ற' கோல் என்ற நூலைத் தமிழில் தொடராக ஆரம்பித்திருக்கிறார்கள். டாடாவில் வேலை பார்க்கும் போது எல்லோரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டியது என்று அன்றைய இயக்குனர் வாங்கிக் கொடுத்த நூல். இந்தியாவின், தேசிய உற்பத்திக் குழுமம் மலிவு விலைப்பதிப்பாக வெளியிட்ட நூல்.
மேலாண்மை தத்துவம் ஒன்றை, அணுகுமுறை வழிகளைக் கதையாகச் சொல்லும் நூல். திரும்பி மாலை வேளையில் ஒரு தூக்கம். எட்டரை மணிக்கு இணைய வழி உரையாடலுக்குப் போய் சீக்கிரமே முடிந்து விட்டது. பத்து மணிக்குள் தூங்கியாச்சு.
சாப்பிட்டதற்கும், சோம்பலாக இருந்ததற்கும் விளைவுகள் தெரிந்தன. காலையில் நான்கு மணிக்கு விழிப்பு வந்தும் ஆறு மணி வரை எழுந்திருக்கவில்லை. எழுந்த பிறகு எதைச்செய்வது என்று குழம்பும் படியாக வேலை வரிசைகள். தவறிப் போய்க் கொண்டிருக்கும் பொறுப்புகள் ஒவ்வொன்றாக வந்து பயமுறுத்தின. பைக் துடைத்து, பால், சோறு, பருப்பு, ஓட்ஸ் கஞ்சி அடுப்பில் வைத்து,
உப்புமா செய்து முடித்து வேலைகள் முடிய மணி எட்டரை.
அலுவலகத்துக்கு வந்தால் பூட்டைத் திறக்கச் சாவி இல்லாமல் வெளியே நண்பர். ஆயுதங்களுடன் அதை உடைத்து விட்ட பிறகு தீபாவளி முடிந்து மழை மேளங்களைச் சமாளித்து ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு ரம்சானை முன்னிட்டு கொஞ்சம் மூச்சு விடக் கிடைக்கும் நேரத்தில் இணைய வழங்கியைச் சீர் செய்து விடுவோம் என்று ஆரம்பித்தேன். கோப்புகளின் இடத்தை வரையறை செய்து புதிய திட்டப்படி எல்லாவற்றையும் அமைத்து, சேர்க்க வேண்டிய புதிய பகுதிகளையும் சேர்த்தோம். ஆறு மாதங்களுக்கு மேலாக துருப்பிடித்துக் கிடக்கும் விவாத மையத்தையும் சோதனை செய்து பார்த்து ஒரு புதிய இழையையும் போட்டு வைத்தேன். எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பி மீள் உயிர் கொடுக்க வேண்டும். ஆயிரத்துக்கு மேற்பட்ட விவாத இழைகள் உருவாகி விட்டதாக நினைவு.
மதிய வேளையில் நம் நிறுவனம் உருவாகிய போது வேலை பார்த்து அப்புறம் நான்கு நிறுவனம் மாறி விட்டவர் வந்தார். கடைசியாகக் கிடைத்த வேலைக்கு டிரீட் என்று மதியச் சாப்பாட்டுக்கு அவரைப் பிடித்துக் கொண்டோம். 'Go Fish' என்று போய் சோள சூப்பும், பரோட்டாக்களும் சாப்பிட்டுக் கொண்டேன். 'ஏன், அசைவம் சாப்பிட மாட்டேங்கறீங்க, எதை அசைவம் என்று சொல்வீங்க' என்று வம்புக்கு இழுத்தவர்களை, 'ஏழு பேருக்கு ஒரு ஆளாக இருக்கும் போது விவாதம் வேண்டாம் என்று, வயிற்றுக்குப் பிடித்ததைச் சாப்பிட வேண்டியதுதான்' என்று சொல்லி முடித்தேன்.
மழை கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது. சாப்பாடு, கால நிலை கிறக்கத்திலிருந்த எல்லோருடனும் ஒரு கூட்டு விவாதம்.
மாலையில் ஒரு ஆப்பிளுடன் கடையைக் கட்டி விட்டேன். 'தீபாவளிக்குப் பிறகு உயர் சர்க்கரை அளவுடன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விடுகிறது' என்று ஒரு மருத்துவர் எழுதியிருந்தார். 'ஒரு வாரத்துக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்' என்று ஒரு நண்பரின் உறுதி மதியம் சாப்பிடும் போது மட்டனாக, மீனாக கரைந்தது.
பொருளாதாரம் பதிவுகளுக்கான பின்னூட்டங்கள், போன வாரம் இரண்டு பதிவுகள் விட்டுப் போனது, சென்னப்பட்டிணத்துக்கு அடுத்த சுற்று வந்து விட்டது, தமிழ் ஓவியத்துக்கு அடுத்த வாரக் கட்டுரை, விவாதங்களில் குதித்திருந்த பதிவுகள் புத்தகங்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தது என்று நான்கு நாட்களுக்கு தூங்காமல் எழுதினால் நன்றாயிருக்கும் என்று படுகிறது. எதையும் தள்ளிப் போடாமல் உடனுக்குடன் முடித்து விட்டாலே பாதி வேலை முடிந்து விடும்.
ஒன்பதரை மணிக்கு ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது சேமிக்காத கோப்பு தொகுப்பியோடு உயிரை விட அத்தோடு மூடி வைத்து விட்டுக் கிளம்பினேன். நண்பரை வீட்டில் விட்டு விட்டுக் கிளம்பினால் மழை பிடித்துக் கொண்டது. போரூரில் மழையில் நனைந்து விட்டு, மழையை முந்திக் கொண்டு வந்து விட்டது போல ராமாபுரத்தில் காய்ந்த சாலைகள், சில நிமிடங்களில் மழையும் எட்டிப் பிடித்து விட்டது. வாசல் கதவு திறந்தே கிடக்க வண்டியை வசதியாக ஏற்றி வைத்து விட முடிந்தது.
நல்ல மழை, காற்று வெளியே. குளிரில் காலையில் எழுந்திருப்பது ஒரு சாதனையாகப் போய் விடும். அடிக்கும் காற்றுக்கு மீண்டும் போர்வைக்குள் புகுந்து விடலாமா என்று நப்பாசை விடவே செய்யாது. இந்தூரில் குளிர் காலங்களில் காலையில் ஆறரை மணிக்கு பேருந்தைப் பிடித்த நாட்கள் ஒவ்வொன்றும் தொப்பியில் ஒரு இறகு போலத் தோன்றும்.
நான்கு மணிக்கு எழுந்திருக்கும் போதும் குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆறு மணிக்குள் எழுத நிறைய நேரம் கிடைக்கும் என்று உந்தலில் எழுந்திருக்க முடிந்தது.

திங்கள், அக்டோபர் 23, 2006
பொழுதைப் போக்குதல்
நேற்று அதிகாலையில் கேடியி மேசைச் சூழல்களுக்கான கோப்புகள், மொசில்லா உலாவி, ஜாவா கோப்புகளை தகவிறக்கம் செய்து முடிக்க முடிந்தது. அத்துடன் தீபாவளி வந்து விட்டது. காலையில் நான்கரைக்கே அண்ணன் பையன் எழுந்து விட்டான். 'கடவுள் என்னை எழுப்பி விட்டார்' என்று காரணம். சுறுசுறுப்பாகக் குளித்து புது ஆடை மாட்டி கீழே ஓடி விட்டான். நானும் குளியலை முடித்து கடைக்குப் போய் வரலாம் என்று ஒரு உலாவல்.
நடந்து நடந்து பழைய தாம்பரம் குளத்துக்கருகே வரை வந்து விட்டோம். பையன் கால் வலிக்கிறது என்று ஒரு முறை கூட புகார் செய்யவே இல்லை. இரண்டு பாக்கெட் கம்பு மத்தாப்பூ, ஜெல்லி, இந்து பேப்பர் வாங்கிக் கொண்டு திரும்பினோம். வழியில் ஒரு தகப்பன், தோளில் குழந்தைப் பையனுடன் கையில் நூறு குத்து வெடிகள் கொண்ட பொதிகள். 'இது பணக்கார பண்டிகைதான், புதுத் துணி, பண்டங்கள், மத்தாப்பூ என்று செய்து முடிக்க எல்லாராலும் முடியாது' என்று அண்ணன் அப்புறமாகச் சொன்னது போல அன்றாடங்காய்ச்சிகளுக்கு இது போல பண்டிகைகள் சோதனைதான். குழந்தைகளுக்குத் தெரியுமா 'நமக்கு உபரித் தொகை எல்லாம் கிடையாது, பட்டாசு வாங்க வசதி இல்லை' என்று.
இட்லி, பொரிகடலை மாவுருண்டை, ரச வடை என்று காலை உணவு. அதற்குப் பின் கொஞ்ச நேரம் பேச்சுக்கள், தொலைக்காட்சி என்று ஆகி விட்டு, 'தொலைக் காட்சி முன்பே மாட்டி விட வேண்டாம்' என்று மூத்த அண்ணன் வீட்டுக்கு வந்தோம். அங்கு அப்போதுதான் வடை சுடுதலும் இட்லி அவித்தலும் நடந்து கொண்டிருந்தன. தொலைக்காட்சியை தீர்மானமாக மூடி வைத்திருந்தார்கள். பத்து மணிக்கு இரண்டாவது சுற்று இட்லி, ரசவடை, உளுந்து வடை சாப்பாடு.
அப்புறம் தொலைக்காட்சி உயிர் பெற சாலமன் பாப்பையா பட்டிமன்றம். இவரதும், லியோனி பட்டிமன்றங்களும் கூடப் பொதி போட்டுக் குறிப்பிட்ட நிகழ்ச்சியமைப்பை பின்பற்றி உருவாக்குகிறார்கள் என்று தோன்றியது. விளம்பர இடைவேளையிலிருந்து தப்ப யாரோ ஓடைகளை மாற்ற மக்கள் தொலைக்காட்சியில் வந்து நின்றது. மகாபாரதத்தின் விராட பருவம், கிராமீயக் கூத்து.
விராடன் நாட்டில் மழை இல்லை என்று தானம் செய்ய உத்தரவிடுகிறான். தருமர் கங்க பட்டராகவும், பீமன் மடப்பள்ளியாகவும், அருச்சுனன் பிருகன்னளையாகவும், நகுலன் குதிரைக்காரனாகவும் வருகிறார்கள். எல்லோரையும் வரவேற்று 'ஆயுசு பரியந்தம்' வேலை கொடுக்கிறார், மன்னர். 'ஒரு வருடம் போதும், பஞ்ச பாண்டவர்கள் மீண்டும் தோன்றியதும் அவரிடம் போய் விடுவேன்' என்று ஒவ்வொருத்தரும் ஓராண்டு தஞ்சம் வாங்கிக் கொள்கிறார்கள்.
கங்கர் மன்னனுக்கு ஆலோசகராகவும், பீமன் சமையல்காரனாகவும், பிருகன்னளை இளவரசி உத்தரைக்கு நடன ஆசிரியையாகவும், முஸ்லீமாக சித்தரிக்கப்பட்ட நகுலன் குதிரை லாயத்திலும் வேலை பெறுகிறார். திரௌபதி என்ற பாஞ்சாலி சைரந்தரி முதலான ஐந்து பெயர்களுடன் அரசியைச் சந்தித்து தாதி வேலை கேட்டுச் சேர்கிறாள்.
கதை சொல்லும் பாணியும், ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவத்துடன் மிளிர்வதும், சிறப்பான தமிழும் குழந்தைகளைக் கூடக் கட்டிப் போட்டிருந்தன. தான் தாதியாக வேலை பார்த்ததாகச் சொல்லும் போது பாஞ்சாலிக்குத் தொண்டை அடைக்கிறது. திரௌபதி அம்மனைப் போற்றிச் சொல்லும் போது முகமெல்லாம் துடிக்கிறது, அழுகை பொங்குகிறது. அரசியாக நடிப்பவரும் தனது திறமைக்குறைவை அழகாகச் சமாளிக்கிறார்.
ஜெயராமன் மக்கள் தொலைக்காட்சி பற்றிப் புகழ்ந்து எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. இது போல எத்தனை புதையல்களை அறியாமல் ஹாரி பாட்டர் படித்துக் கொண்டிருக்கிறார்கள் நம் குழந்தைகள்.
சித்தி வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பினோம். இந்தச் சித்தி அம்மாவின் தங்கை, சித்தப்பாவுக்கு முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம்தாரமாக மணம் செய்து கொடுக்கப்பட்டவள். நாங்கள் சின்ன வயதாக இருக்கும் போதே சென்னையில் குடும்பம் அமைத்து விட்டிருந்தாள். சித்தப்பா மிக எளிய மனிதர், வயது வேறுபாடும் அதிகம். அவர், தொழிற்பூங்காக்களில் பாதுகாப்பு வேலை செய்பவர். இப்போதும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.
சித்தி மிக அறிவுக் கூர்மை உடையவள். சென்னையிலிருந்து எங்களுக்குக் கடிதம் எழுதுவாள், கதை போல சுவாரசியமாக. அப்புறம் கல்லூரியில் படிக்கும் போது வார இறுதிகளில் அவர்கள் வீட்டுக்குப் போவோம். ஈக்காட்டுத் தாங்கலில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்தார்கள். சித்தி ஒரு ஆயத்த உடை நிறுவனத்தில் வேலைக்குப் போவாள்.
ஒரு பையன், இரண்டு பெண்கள். அம்மா செல்லத்தில் வளர்ந்த பையன் மிகத் திறமைசாலி, ஆனால் சோம்பேறி. மூத்த மகள் குண்டாக இருக்கும், இரண்டாவது தங்கச்சி ஒல்லியாக அழகிய முகத்துடன். மூன்று பேரையும் ஊருக்குக் கொண்டு போய் திருமணம் செய்து வைத்தாள்.
ஒவ்வொருத்தராக சேலையூர் தாண்டி, அகரம் போகும் வழியில் வீடு கட்டி இப்போது மூன்று பிள்ளைகளும் அங்கேயே அமைந்து விட்டார்கள். அங்குதான் போனோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த வீட்டுக்கு முதல் முறையாக நான் போகிறேன்.
போகும் போது தவிர்க்க முடியாத தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. வசூல் ராஜா கமல் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு தங்கைகள், தம்பி குழந்தைகள் எல்லாம் கூடி இருந்தார்கள். அங்கு ஒரு அதிரசம் மட்டும் சாப்பிட்டு நிறுத்திக் கொண்டேன். பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினோம்.
போகும் முன்பே அகரம் கிராமத்துக்குப் போய் ஆளரவம் இல்லாத காட்டில் உருவாகி வரும் சிவன் கோயிலைக் காட்டினார் அண்ணன். இப்போதும் பிரத்யங்கரா தேவி கோயில் என்று சோளிங்க நல்லூரில் இருக்கிறது என்று வண்டி அங்கு ஓடியது. வழியில் இளநீர். கடையில் தீபாவளி புத்தாடை உடுத்த குழந்தைகளுடனான அம்மாவிடம் இளநீர் வாங்கிக் குடித்துக் கொண்டோம். கோயில் மூடி விட்டிருந்தது, மாலை நான்கு மணிக்குத்தான் திறப்பார்கள் இனிமேல்.
'எங்கே போகலாம், வீட்டுக்குப் போனால் டிவிதான் நடக்கும்' என்று பேசிக் கொண்டே விஜிபி போகலாமா என்று சொன்னதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் அண்ணன் மகள். இங்கு ஆளுக்கு நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம். குழந்தைகள் இரண்டு பேரும் விளையாட்டுக்களில் ஏறிக் கொண்டார்கள். பசியில் தளர்ந்து போயிருந்த எல்லோரும் கடைசியில் தயிர் சாதம் வாங்கி ஒரு பிடி பிடித்தோம். கொடுத்த காசுக்கு ஒன்றைக் கூட மீதி வைக்காமல் சாப்பிட வேண்டும் என்று துடைத்துச் சாப்பிட்டுக் கொண்டோம். ஊறுகாய் மட்டும் விட்டு விட நேர்ந்தது.
கடற்கரையில் கொஞ்ச நேரம் இருந்த பிறகு திரும்ப ஆரம்பித்தோம். சென்னையில் இருந்து கொண்டே கடற்கரைக்குப் போகாமல் இருப்பவர்களைப் பழித்த காலம் உண்டும். ஞாயிற்றுக் கிழமை தோறும் மெரினா கடற்கரைக்குக் குழந்தைகளை கூப்பிட்டுச் செல்வதை பழக்கமாகவே வைத்திருந்தோம். இருட்டும் வரை நேரம் செலவளித்து விட்டு மதுரை மீனாட்சி பவனில் சாப்பிட்டு விட்டுப் போய்ச் சேருவோம்.
சுனாமி வந்தது முதல் இதற்கு ஒரு வெட்டு விழுந்தது. இரண்டு ஆண்டுகளாக கடற்கரையும் தூரமாகிப் போய் விட்டிருக்கிறது. நம்மிடம் இருக்கும் வளங்களை அனுபவிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
திரும்பும் வழியில் பிரத்யங்கரா தேவி கோயில். பிரத்யங்கரா சாமிகளும் வழிபடப் படுகிறார். பெரிய கோயில் திட்டமிட்டு உருவாகி வருவது புலப்பட்டது. கூட்டத்துக்குக் குறைவேயில்லை. இதற்குள் எல்லோரும் தளர்ந்து போய் கொட்டாவி விட ஆரம்பித்திருந்தார்கள்.
வீட்டுக்கு வந்ததும் கைகால் கழுவி புத்துணர்ச்சியடைந்து அண்ணன் அடுத்த வேலை செய்யப் போய் விட்டார். தொலைக்காட்சியில் சாமி படம். எட்டு மணிக்கெல்லாம் சிறிது நேரம் கிரிக்கெட் போட்டி, அப்புறம் போகோ. ஒன்பது மணிக்கெல்லம் தூங்கக் கிடைத்து விட்டது.
நாள் முழுவதும் பத்திரிகைகள், விகடன் தீபாவளி மலர் வாரந்தோறும் வரும் விகடனை பெரிய அளவில் தந்திருந்தார்கள். ஜூனியர் விகடன், குமுதம், இந்து, டெக்கான் குரோனிக்கள், தினமலர் என்று எல்லாம் ஒரு சுற்று கிடைத்தது.
மெரீனா என்று சுஜாதா எழுதிய ஒரு கதைப் புத்தகம் படிக்கக் கிடைத்தது. சின்ன முடிச்சுகளை எடுத்துக் கொண்டு சமூக அவலங்களை படம் பிடித்துக் காட்டுவதில் அவர் திறமை மிளிரும். கொலை செய்து விட்டதாக நினைத்தும் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாத பணக்காரப் பழக்கம், பாலியல் தொழில் செய்யும் பெண் உயிர் போகக் காரணமாக இருந்திருப்போமோ என்று கலங்குவது, காவல் துறையில் ஊழல் என்று பத்தி பத்தியாக எழுதி குவிக்காமல் அனாயசமாகத் தொட்டுச் சென்று விடுகிறார். தொடர்கதையாக வெளி வந்த படைப்பில் இவ்வளவு பொதிந்தது ஆச்சரியம்தான்.
மாலை முழுவதும் வெடிகள் வெடித்துத் தீர்ந்தன. இன்று காலையில் முழு அமைதி திரும்பி விட்டது. வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தீபாவளி வெடி வெடிக்க முடியுமா என்று பேச்சு வந்தது. சாங்காயில் சிறப்பு அனுமதி வாங்கி ஒரே இடத்தில் கூடி இந்தியத் தூதரகம் வெடி வெடிக்கும் நிகழ்ச்சி நடத்தும். திடீரென்று வெடிச் சத்தம் கேட்டால் ஊரில் கலக்கம் ஏற்பட்டு விடாது?

ஆன்மீகமும் நாட்டுப்பற்றும்
061021
இன்றைக்கு தீபாவளி, தாம்பரத்தில் அண்ணன் வீட்டில். சின்ன வயதில் ஒவ்வொரு தீபாவளியும் ஓரிரு மாதங்களாக நாட்களை எண்ணி எண்ணி எதிர்பார்த்த ஒன்று. அப்புறம் அந்த ஆர்வங்கள் வடிந்து வேறு பல அனுபவங்கள் வந்து விட்டாலும் இன்றைக்கும் பட்டாசு வெடிக்கும் போது அந்த நினைவுகள் சுகமாக தாலாட்டுகின்றன.
நேற்றுக் காலை வேலைகள் முடிந்த பிறகு புறப்பட்டு தாம்பரத்துக்குக் கிளம்பும் போது மணி பன்னிரண்டரை ஆகி விட்டிருந்தது. காலை முழுவதும் தூறித் தீர்த்திருந்த மழை ஓய்ந்து வெயில் தலைகாட்டியிருந்தது. மிதமான வேகத்தில் சாப்பிடும் நேரத்தில் தாம்பரம் வந்து விட்டிருந்தோம். அவர்களும் தாமதமாகத்தான் சமையல் ஆரம்பித்தார்களாம். காலையில் கடைகளுக்குப் போய் விட்டு வந்ததில் நேரமாகி விட்டிருக்கிறது.
மடிக்கணினியில் தகவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய வேலைக்காக கையோடு கொண்டு வந்திருந்தேன். இலவச தகவிறக்கம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை எட்டு மணி வரையாம். ஆனால், சும்மா மின்னஞ்சல் பார்க்கவும், வலை பதியவும் பகலிலும் செய்து கொள்ளலாமே என்று அதில் ஓரிரு மணி நேரம் செலவளிக்கலாம் என்று உட்கார்ந்தால் இடை இடையே மின்சாரம் தடைப்பட்டது. அண்ணன் மகன் கணினியில் விளையாட ஓடி வந்து அதற்கு ஓரிரு மணி நேரம்.
சாப்பிட்டு, கொஞ்ச நேரம் தூங்கி மாலை வரை ஓடி விட்டது. இடை இடையே ஒரு பாலகுமாரன் கதை. ஆன்மீகச் சித்தராக கேள்வி பதில்களும், குறுநாவலும், தொடர்கதையும் அவரது படைப்புகள் வெளியாகியிருந்த ஏதோ ஒரு மாத நாவல் வெளியீடு. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கும் என்று தோன்றியது. தீபாவளி சிறப்பிதழ்.
ஆன்மீகத்தை பொட்டலம் போட்டு விற்க முயல்வது போலப் பட்டது. அதுவும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும், ரமண மகரிஷியையும் கலந்து கோயில், சாமி வருவது, மாயம் நடப்பது என்று இந்து மத லேகியம் விற்கிறார். தாடியுடன் உருண்ட கண்களுடன் மூன்று கோணங்களில் புகைப்படங்கள் கொண்ட அவரது சின்னம் வேறு. தாவித் தாவிப் படித்து முடித்தேன்.
'ஏதோ அவருக்குப் புரிந்ததை எழுதுகிறார், யாருக்காவது உதவி கிடைத்தால் நல்லது' என்று சமாதானப்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், இந்த அபத்தத்திலும் அபத்தமான எழுத்துக்கள் அவரது குருக்களுக்கு செய்யும் அவமரியாதை என்று சொல்லி விடலாம். ஒரு காலத்தில் பாலகுமாரன் எழுத்துக்களைப் படித்து உருகிக் கொண்டிருப்போம். அன்று நமக்குத் தெரிந்த உணர்வுகளை எழுதினார், இன்று அதையெல்லாம் தாண்டிப் புனிதமாகி விட்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
மின்னஞ்சல்களுக்கும் பதில் அளித்து விட்டு பல நாட்களாக பொறி பறந்து கொண்டிருக்கும் அஃப்சல் குரு பற்றிய விவாதங்களில் ஒன்றில் பின்னூட்டம் இட்டேன். நாம் ஏற்படுத்திய வரையறைகளை ஏதோ அடிப்படைச் சட்டங்களாகக் கொள்ளாமல் என்றும் அழியாத எப்போதும் இருந்து வரும் பண்புகளை வழிகாட்டிகளாகக் கொண்டால் பல சச்சரவுகள் மறைந்து விடும்.
தேசபக்தி, மதப் பற்று, மொழி வெறி, சாதிப் பெருமை என்று ஆரம்பிக்கும் போது அதன் கூடவே தவிர்க்க முடியாத முரண்பாடுகளும் வந்து விடுகின்றன. 'என் நாடு எனக்குப் பெரிது, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்றால் அடுத்த நாட்டுக் காரனுக்கும் அதே உரிமை இருக்கிறது. அப்புறம் போர் வருவதற்கு என்ன தடை?
திருக்குறளில் இது போன்ற குறுகிய பண்புகளுக்கு இடம் இருந்ததாக நினைவு இல்லை. அறிவுடமை, அடக்கமுடமை, அன்புடமை, வெஃகாமை என்ரு அடிப்படைப் பண்புகளை வரையறுப்பதால் யாரிடமும் போரிட வேண்டிய தேவை இல்லாமல் போய் விடுகிறது. இதையே ஸ்டீபன் கோவி தன்னுடைய நூலில், கொள்கை சார்ந்த வாழ்க்கை என்கிறார்.
நாடு என்ற சேர்க்கை நேற்று இல்லை, இன்று இருக்கிறது, நாளை இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். 'தேசப்பற்று எப்போது வரும் உங்களுக்கு' என்ற கேள்விக்குப் பதில் 'வரவே வராது'. என்னுடைய மதம் என் தனி வாழ்க்கைதான். என்னுடைய சாதி மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதுதான். என்னுடைய தேசம் எல்லோருக்கும் நன்மை கொண்டு வர உருவான அமைப்புதான்.
எந்த ஒரு அமைப்பின் பேரிலும், அடுத்தவர்கள் உயிரை எடுக்கவோ, வன்முறையை நியாயப்படுத்தவோ செய்வது மனித இன நலன்களுக்கு விரோதமானது. அறுநூற்றைம்பது கோடி மனிதர்களையும் ஒரு மாயம் செய்து பூமியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் என்ன நடக்கும் என்று ஒரு கணினி மூலமாக உருவகித்து ஆராய்ந்திருக்கிறார்கள். பெரிதாக ஒன்றும் கெட்டுப் போய் விடாதாம். நாம் விளைவித்த ஊறுகள் ஆறிப் போய், அணூஉலைகள் கூட பல ஆயிரம் ஆண்டுகளில் சுற்றுப் புறத்தோடு இயைந்து போய் விடுமாம்.
இந்த பூமியை மட்டும் எடுத்துக் கொண்டாலே, பல லட்சம் ஆண்டு வரலாற்றில் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளில்தான் நாம் நடமாடுவது. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளோ? அடிப்படை பிழைக்கும் வழிகளை மறந்து நாட்டின் பெயரால், பாதுகாப்பின் பெயரால் ஆயுதங்களையும், கொடும் சட்டங்களையும் உருவாக்குவதுதான் தேசப்பற்று என்றால் அது வேண்டவே வேண்டாம்.
மதியமும் சரி, மாலையிலும் சரி நாஞ்சில் நாட்டுச் சாப்பாடு. நன்கு வெந்திருந்த புழுங்கலரிசி சோறு, புளிக்கறி, முட்டைகோஸ் துவரன். 'சாப்பிட்டு இரண்டு, மூன்று மணி நேரத்தில் செரித்து மீண்டும் பசி எடுக்க விடுவதுதான் நல்ல சாப்பாடு' என்று ஒரு வரையறை. நகர விடுதிகளில் சோறு என்றால் ஒன்றொடு ஒன்று ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று கொட்டி விடுகிறார்கள். நன்றாக வேக வைத்து நீரை வடித்து சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு இந்த பச்சை அரிசி - அரை வேக்காடு - பொங்கிய சோறு வயிற்றுக்குச் சங்கடம்தான்.
நாஞ்சில் நாட்டுச் சமையலில், எங்கள் வீட்டில், தேங்காய்தான் நாயகன். ஒரு நாளைக்கு ஒரு தேங்காயாவது பயன்படுத்தா விட்டால் சமையல் முழுமை பெறாது. குழம்பு என்பது தேங்காய் அரைத்துக் கலந்தவைதான், புளிக்கறி (தேங்காய், மஞ்சள், சிறிது மிளகு, மிளகாய் காரத்துக்கு, ஒரே ஒரு சின்ன உள்ளி அரைத்து, புளியில் காயுடன் கொதிக்க வைத்து விடுவது), தீயல் (தேங்காய் முதலானவற்றை வறுத்து அரைத்துப் புளியில் காயுடன் சமைப்பது), மோர்க்குழம்பு, கூட்டுக்கறி, பருப்பு என்று எதிலும் தேங்காய் தலையைக் காட்டி விடும்.
வாரத்துக்கு ஒரு நாள் சாம்பார் வைத்தால், அதில் போடாத தேங்காயை, துவையலாக அரைத்து விடுவார்கள். ஊரில் தேங்காய் அதிகம் கிடைப்பதால் இந்தப் பழக்கமா அல்லது அந்த ஊர் காலநிலைக்கு இது தேவையா என்று தெரியவில்லை. ஆனால் நவீன மாறுதல்களுக்குப் பிறகு சர்க்கரை வியாதியையும் இருதய நோய்களையும் ஊக்குவிக்கும் வழியாகவே இந்த உணவு முறை போய் விட்டது.
மாலை சாப்பிட்டு விட்டு ஓரிரு மணி நேரம் அண்ணன் பையனுடன் பட்டாசு வெடித்தல். ஏகப்பட்ட ஆர்வம், பயம் என்பது வெளியே தெரியவே மாட்டேன் என்கிறது. மத்தாப்பூ, தரைச்சக்கரம், பூவாணம் என்று வரிசையாக விட்டு முதல் சுற்று முடித்து விட்டு வந்து அப்புறம் இடைவெளி விட்டு மீண்டும் ஆரம்பம்.
சின்ன வயதில் நாள் முழுவதும் வெடிக்க வேண்டும் என்று நூறு வெடிகள் சின்ன சின்னதாக அடைத்துக் கிடைக்கும் பொதிதான் உதவும். சித்தப்பாவின் அலுவலகத்தில் எல்லோரும் சேர்ந்து காசு போட்டு சிவகாசிக்கு வேன் அனுப்பி வாங்கி வருவார்கள். எங்களுக்கும் ஒரு பெரிய பொதி வந்து விடும். அந்த ஆண்டுகளில் கடைகளில் போய் வாங்கி விட்டிருக்க முடியாத திருப்திகரமான அளவு கிடைத்தன. என்ன, ஓரிரு ஆண்டுகளில் தீபாவளிக்கு முதல் நாள் மாலை வரை வண்டி வந்து சேராமல், இடைக்கால நிவாரணமாக உள்ளூர் கடைகளில் வாங்க வேண்டியிருந்தது.
ஒன்பது மணிக்கெல்லாம் படுத்து விட்டேன். ஒரு மணிக்கு எழுந்து தகவிறக்கம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே. விழிப்பு வரும் போது மூன்றரை மணி. நல்ல வேளையாக கணினி அறையிலேயே தூங்கச் சொல்லி விட்டிருந்தார்கள். எழுந்து வேலையை ஆரம்பித்து விட்டு விட்டு, மீண்டும் படுத்துக் கொண்டேன். ஐந்து மணிக்கு இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.
வெளியில் பட்டாசுக் களேபரங்கள் ஆரம்பித்து விட வீட்டிலும் ஒவ்வொருவராக எழுந்து விட்டார்கள். மற்ற நாட்களில் எல்லாம் ஏழு மணி ஆனாலும் எழுந்திருக்காத பிள்ளைகள், தீபாவளி அன்று மட்டும் நான்கரைக்கு எழுந்து நின்று விடுவார்கள். அதற்காக ஓரிரு முறை திட்டுக் கூட விழுந்திருக்கிறது. அம்மா, அந்த நேரத்தில் உட்கார்ந்து காலையில் செய்ய வேண்டிய வடைக்கு வெங்காயம் வெட்டிக் கொண்டிருப்பார்கள்.
முதல் சுற்று வெடி வெடிப்பு முடிந்து குளித்து, புது ஆடை உடுத்து இட்லி, சட்னியுடன் முறுக்கு மற்றும் இனிப்பு சாப்பிடுவது ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்க்கும் சேர்க்கை. அதற்குப் பிறகு நாள் முழுவதும் ஊர் சுற்றல்தான். கொஞ்சம் சுதந்திரமான பையன்கள் புதுப் படங்களுக்குப் போய் விடுவார்கள். மற்றவர்கள் தெருத் தெருவாகப் போய் பட்டாசு வேடிக்கை பார்ப்போம். கைச்சரக்குகளையும் வெடித்துத் தீர்ப்போம்.
தொலைக்காட்சி வந்து அதிகாலையிலிருந்தே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஓட ஆரம்பித்த பிறகு இந்த நிறமே மாறி விட்டது. பட்டி மன்றங்களும் திரைப்படங்களும் முன்னறையை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடுகின்றன.

வெள்ளி, அக்டோபர் 20, 2006
எங்கிருந்து எங்கு வரை ?
நேற்றைக்குக் காலையில் கண் விழிக்கும் போதே வெளியில் மழை பெய்யும் ஓசை. வழக்கமாகக் கேட்கும் சாலைச் சத்தங்களையும், தூரத்தில் ஒலிக்கும் ஏதோ இயந்திரம் ஓடும் சத்தத்தையும் மீறி தெளிவான மழை சத்தம். கொசுவுக்காக மூடி வைத்திருந்த சன்னலைத் திறந்து பார்த்தால் நிறைவான மழை.
முந்தைய நாளின் அனுபவத்தை முன்னிட்டு சீக்கிரமாகவே வேலைகளை ஆரம்பித்து விட்டேன். அதிகமாக ஒன்றும் செய்ய வேண்டாம். நேற்றைக்கே மீந்திருந்த பாலில் உறை ஊற்றி வைத்திருந்த தயிரை மோராக்கி தாளித்து, கேரட் பொரியல் செய்து விட வேண்டியதுதான். காலையில் கஞ்சி. எந்த காரமும் உலர்ந்த பொருட்களையும் சேர்க்க வேண்டாம் என்று மட்டுப்படுத்திய உணவு.
சீக்கிரமே முடித்து விட்டு, இரண்டு நாள் தாடியை மழித்து விட்டு, நாளிதழ் மேயவும் நேரம் பார்த்து எட்டரை மணிக்கு நனைந்து கொண்டே அலுவலகம் போய் விட்டேன். அலுவலக நண்பர்கள் சாப்பிடப் போகும் போது கூடவே போய் கூடுதல் உணவும். போன ஆண்டு கணக்குகளை முடிவு செய்ய தணிக்கையாளர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு.
மூன்றாவது ஆண்டாக கடைசி நேரம் வரை தள்ளிப் போட்டு விடுவதுதான் நடக்கிறது. நாள்தோறும் சரியான விபரங்களை எழுதி, ஆவணங்களைப் அடுக்கி வைத்திருந்தால் ஆண்டு இறுதியில் ஓரிரு மணி நேரத்தில் முடிந்து விடக் கூடிய இந்த வேலை, பல நாட்கள் இழுத்தடித்து விடும் அலட்சியமான முறைகள்தாம் நம்மிடம்.
அண்ணாநகருக்குப் போக வேண்டும். இன்றைக்கு பிரதான சாலைகளிலேயே போகலாம் என்று ஆற்காடு சாலை முழுவதையும் விட்டு விடாமல், வடபழனி நிறுத்தத்தில் வந்து நூறடி சாலையைப் பிடித்து, மீண்டும் எங்கும் திரும்பாமல் திருமங்கலம் நிறுத்தத்தில் வலது புறம் திரும்பல்.
சென்னையில் முதல் நான்கு ஆண்டுகளில் மிகவும் பழக்கமாகி விட்ட இடங்கள். ரவுண்டானாவில் இடது பக்கம் திரும்பி, புதிதாக வந்துள்ள சுசுகி சேவை மையத்திற்கு அருகில் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
பக்கத்திலேயே ஒரு செட்டிநாடு உணவுப் பொருட்கள் கடை. போகும் போதே போய்ப் பார்த்து எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. மதிய நேரத்தில் பொரிகடலை வெல்லப்பாகில் புரட்டிய பொதி ஒன்று பத்து ரூபாய்க்குக் கிடைத்தது. அதைத் தின்ற விளைவுகள் இன்று காலை வரை தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தன.
போன ஆண்டுகளில் பார்த்திராத ஒரு பெண் கணக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். வாய் ஓயாமல் பேச்சு. கணினியைத் திறமையாகக் கையாளுகிறார். 'ஏதோ ஐம்பது வயது ஆளை எதிர்பார்த்து பயந்து கொண்டிருந்தேன், இப்படி எதிர்பார்க்கவே இல்லை' என்று ஐஸ் வைத்து வரவேற்றார்.
மாலை ஆறு மணி வரை இழுத்து விட்டது. 2005 மே மாதம் வந்திருந்த ஆயிரம் ரூபாய்க்கு ஆவணங்களைக் காணோம். 'உங்களிடம்தாம் கொடுத்தேன்' என்று நம்ம அலுவலகத்து ஆளும், 'திரும்பி எடுத்துப் போயிட்டீங்களோ' என்று அவர்களும் உருண்டு கொண்டிருந்தார்கள்.
இந்த கணக்கு வைக்கும் வேலை எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்யப் பிடிக்காது. அதனால், இந்த கணக்கியல் வல்லுனர்கள், தணிக்கையாளர்கள் மீது பிரமிப்பு கலந்த மரியாதை உண்டு. சின்னச் சின்ன விதிகளின் மூலம் பெரும் கணக்கு வழக்குகளையும் எண் கணம் ஒன்றுக்குள் வடித்து விடும் கணக்கு முறையும் அற்புதமானது. டேலி மென்பொருள் இதற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
மதியம் சாப்பாட்டுக்கு எதிரிலேயே இருந்த அபூர்வா சங்கீதா, முன்பெல்லாம் வரும்போது இருந்த அழுது வடிந்து கொண்டிருந்த உள்ளமைப்பை மாற்றி சுறுசுறுப்பான சூழலை உருவாக்கியிருந்தார்கள். 25 ரூபாய்க்குச் சாப்பாடு, கடைசியில் ஐஸ்கிரீம் வரைக் கொடுத்து விடுகிறார்கள்.
மேசையில் ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் பேச்சுக் கொடுக்கலானார். 'இதே சாப்பாட்டுக்கு சரவண பவனில் இருபத்தைந்து ரூபாய் வாங்கி விடுகிறான்' என்று ஆரம்பித்து அவரது உணவுப் பழக்கங்களை விவரித்தார்.
மாலையில் வெறும் பழங்களும் காய்கறிகளும்தானாம், 'ஒரு வயசுக்கப்புறம் நம்ம ஆரோக்கியம் நம்ம கையிலதான் இருக்குங்க, சாப்பாட்டை முறைப்படுத்தினாலே பல வியாதிகளை தூர வைத்து விடலாம்' என்று சொல்கிறார்.
நேற்றைக்கு இப்படி பல தொடர்புகள். காலையிலேயே அமெரிக்கா வந்தால் சந்திக்க வேண்டும் என்று ஒரு நண்பரின் அஞ்சல், 'பின்னூட்டம் இடாவிட்டாலும் தொடர்ந்து எழுத்து படித்து வருவதாகவும், ஆசிரியராகத்தான் கற்றல் அதிகம்' என்றும் இன்னொரு நண்பரின் மடல். செல்தொலைபேசியில், எண் மாறிவிட்டதாகப் பல மாதங்கள் பார்த்திராத ஒருவரிடம் இருந்து செய்தி.
நண்பகல் வேளையில் அவரது அழைப்பு. டாட்டாவில் வேலை பார்க்கும் போது பயிற்சிக்கு வந்த போது முதலில் பழக்கம். அப்புறம் அடுத்த பத்து ஆண்டுகளில் பல கட்டங்களில் தொட்டுப் பிரிந்த உறவு. நிறுவனம் ஆரம்பித்த புதிதில் தீவிரமாக நடத்தி வந்த விவாத மன்றத்தில் அவரும் ஆவலுடன் பங்கு கொண்டு வந்தார். அது கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக தேங்கிக் கிடக்கிறது. மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
'வட இந்தியாவிலும் உங்கள் நிறுவனம் கிளை பரப்பலாமே' என்று சொல்லி, தானும் முடிந்த உதவிகளைச் செய்வதாகச் சொன்னார். தீபாவளிக்கு ஊருக்குக் கிளம்ப வேண்டியவரின் அவசரம், பிரோதோஷ நாளைக்குக் கோயிலுக்குப் போக வேண்டிய அவரது ஆர்வம், தீபாவளி பொருள் வாங்கலுக்கான தேவை என்று எப்படியோ ஆறு மணிக்கு முன் கடையைக் கட்டி விட்டோம்.
சின்மய நகர் வழியாக ஆற்காடு சாலை வந்து வழியில் இட்லிப் பொதி வாங்கிக் கொண்டோம். கூட யாராவது பகிர்ந்து கொள்வார்கள் என்று ஆறு இட்லி வாங்கி அலுவலகத்தில் யாரும் உதவி செய்யவில்லை. கணினியில் மேய்ந்து கொண்டே சாப்பிட்டுக் கொண்டு திரும்பிப் பார்த்தால் ஆறும் உள்ளே போய் விட்டிருந்தது. 'இதுதான் நீங்க டயட் இருக்கும் அழகா' என்று கூட இருந்தவர்களின் கிண்டல்.
எட்டு மணிக்கு ஒரு தொலை பேசி மூலமான விவாதத்துக்குத் திட்டம். அது ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. வழக்கம் போல நான்தான் அதிகமாகப் பேசினேன், கடைசியில் தொண்டை வலிக்க ஆரம்பித்து நிறுத்தினோம்.
வலைப்பதிவுகளை பதிந்ததோடு பின்னூட்டங்களுக்கு பதில் போடவோ, மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவோ செய்யாமலேயே வீட்டுக்குக் கிளம்பி விட்டேன். தீபாவளியும் பட்டாசுச் சத்தங்களும் ஆரம்பித்து விட்டன. மருந்துப் புகையின் நெடி எப்போதுமே விருப்பமான ஒன்று. கொஞ்ச நேரம் குழந்தையுடன் விளையாடி விட்டு தியானத்துக்குப் பிறகு படுத்தால் அதிகாலையில் விழிப்பு வந்தது. எழுந்திருக்க மறுத்து இன்னும் இரண்டு மணி நேரத்தூக்கம்.
துணிகளைத் துவைக்காமல் குவிந்து விட்டிருந்தன. சிதறிக் கிடந்த புத்தகங்களை அடுக்கி வைத்து, பாத்திரங்களை இடத்தில் அடுக்கி, அழுக்கானவற்றையும் கழுவி முடித்த பிறகு ஓட்ஸ் கஞ்சியும், பாலும் அடுப்பில் ஏறின. அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு இடைவிடாமல் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டுச் சாப்பாடும் முடிக்கும் போது மணி பத்து.
எழுதுவதையும் ஒரு கட்டுப்பாடாகத் தவறாமல் செய்ய வேண்டும் என்றால் சலிப்பு வந்து விடுகிறது என்று பரவலான கருத்து. 'விருப்பப்பட்டால் பதிவு போட வேண்டும், இல்லாவிட்டால் நமக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டியதுதானே. இதிலும் என்ன கட்டாயம்' என்ற வீம்பும் நன்றாகத்தான் இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமையில் தான் போன போக்கில் இருக்க விரும்பி வெளிவேலைகளையெல்லாம் தவிர்ப்பதாக நண்பர் (சாரு நிவேதிதா சந்திப்பு குறித்த) பதிவில் எழுதியிருந்தது போல இருப்பது சுகமாக இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமைகளுக்கும் பிற நாட்களுக்கும் வேறுபாடு பெரிதாக இருக்கும் போது மன அழுத்தமும் அதிகமாகி விடுகிறது.
புரட்டிப் போட்டப் புத்தகங்கள் என்று ஒரு வலைப்பூவைப் பதிந்து கொண்டேன். பட்டியல் போட்டதில் இருபத்தைந்துக்கு மேலே வந்து விட்டிருந்தன. நாம் புரட்டிப் பார்ப்போம் என்று இறங்கி நம்மையே புரட்டிப் போட்டப் புத்தகங்களைப் பற்றி, புத்தக விமர்சனமாக இல்லாமல் புத்தகத்துடன் நம் உறவை விவரிக்கும் விதமாக எழுதத் திட்டம். புத்தகப் பிரியர்கள் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு பட்டியல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மூன்று நாள் விடுமுறை என்பது மலைப்பாக இருக்கிறது. பல மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் வழக்கமான வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுக் குடும்பத்துடன் வேறு நகருக்கு, வேறு வேலையில் போய் தனக்குப் பிடித்த வழியில் நேரம் செலவிடுவதை sabbaatical என்று செய்து கொள்கிறார்கள். ஒரு புத்தகம் எழுதுவது, உறவுகளை மேம்படுத்திக் கொள்வது, ஓவியம் வரைவது என்று பல வெளிப்பாடுகள் இருக்கலாம்.
உருப்படியாக எழுதுவது என்று ஆரம்பித்தால் என்ன வடிவில் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையில் எந்தக் கட்டம் மிகவும் பாதித்தது, சந்தித்த மனிதர்களில் பாதித்தவர்கள் யார் யார்? எழுதுவதில் சுஜாதா போல சுயகதையை கண்ணுக்கே தெரியாமல் எழுதுவது ஒரு வகை, பாலகுமாரன் போல எழுதுவதில் எல்லாம் தன்னையையே பாத்திரமாக வரித்துக் கொள்வது இன்னொரு வகை.
டிக்கன்ஸ் டேவிட் காப்பர்ஃபீல்டு என்று சுயசரிதையயும் எழுதி விட்டு, Oliver Twist, Great Expectations என்று பிற கதைகளையும் பின்னியிருக்கிறார். டால்ஸ்டாய் கதைகளிலும் டால்ஸ்டாய் மிக முக்கிய பாத்திரமாக வந்து விடுகிறார். ஜானகி ராமன் மோகமுள்ளில் நாயகனின் எழுத்தாளர் நண்பராக தலைகாட்டி விடுகிறார்.
மகாபாரதமே வியாச முனிவரின் குடும்பக் கதைதான். அதை அவரே எழுதியிருக்கிறார். ஆரம்பக் கட்ட மகாபாரதக் கதைகள் தலையைச் சுற்றும். கிட்டத்தட்ட பைபிளின் பழைய ஏற்பாடு போல கதைகள் அடித்துக் கொண்டு போகும்.
சாந்தனுவுக்கும் கங்காதேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். சாந்தனுவின் இரண்டாவது மணத்துக்காக தன் உரிமையைத் துறந்துதான் சத்திய விரதன் பீஷ்மராகிறார். அவரது சித்தியாக வரும் சத்தியவதிக்கும் மூன்று மகன்களில் விசித்திரவீரியனுக்கு இரண்டு மனைவிகள். சந்ததி இல்லாமல் அவன் இறந்து விட, சத்தியவதிக்கும் திருமணத்துக்கு முன்பு பிறந்த மகனான (?) வியாச முனிவரை வேண்டி குழந்தைப் பேறு பெறுகிறார்கள்.
தாடி மீசையுடன் வந்த அவலட்சணத்தைக் கண்டு கண்களை மூடிக் கொண்டதால் ஒரு மகன் குருடாக பிறக்கிறான் - திருதராஷ்டிரன். இரண்டாவது மனைவி பயத்தில் வெளுத்துப் போக பிறக்கும் மகன் ரத்தச் சோகையுடன் வாழ்கிறான் - பாண்டு. இன்னொரு வாய்ப்பு என்று அழைத்ததும், வேலைக்காரியை அனுப்பப் பிறப்பது அறிவில் சிறந்த விதுரன்.

வியாழன், அக்டோபர் 19, 2006
நோய் முதல் நாடி....
நேற்றைக்குக் காலையில் எழுந்திருக்கும்போது நாள் எப்படிப் போகும் என்பதற்கான அனுமானம் வேறு மாதிரியாக இருந்தது. ஆறேகாலுக்கு உலாவப் போய் விட்டு வரும் போது, இட்லி மாவு அரைத்து வைத்திருந்ததை நினைவு கூர்ந்து அரை மூடி தேங்காயும் இரண்டு ரூபாய்க்கு பச்சை மிளகாயும் வாங்கிக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்து பாத்திரங்களைக் கழுவி முடித்த பிறகு ஒரு அடுப்பில் பாலையும், மற்றொன்றில் சோறையும் வைத்து விட்டு காய்கறிகளை வெட்ட ஆரம்பித்தேன். பீன்ஸ் சின்னச் சின்னதாக வெட்டி துவரன், அதற்கும் சட்டினிக்கும் தேங்காய். அப்புறமாகக் கடைக்குப் போய் கொஞ்சம் தக்காளியும் தீர்ந்து போய் விட்டிருந்த உப்புப் பொடிப் பொதியும் வாங்கிக் கொண்டேன்.
இரண்டு அடுப்பு, சமைக்க வேண்டியவை 4-5 உருப்படிகள், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழிமுறை என்று எல்லாவற்றையும் பொருத்திச் செயல்படுவது சமையலில் அற்புதமான அனுபவம். ஒரு மணி நேரத்தில், இட்லி, அதற்குச் சட்னி, சோறு, ரசம், துவரன் எல்லாவற்றுக்கும் அரைத்துக் கரைத்து, காய் வெட்டி வேக வைத்து, சிறு பாத்திரங்களில் கொட்டி வேலை முடிந்து விட்டது.
இடையில் கெட்டியாகக் குடித்த ஓட்ஸ் கஞ்சி பசியைத் தூரத்தில் வைத்து விட்டிருந்தது. எட்டரை மணிப் பள்ளிக்கு எட்டே முக்காலுக்குப் போனாக் கூடப் போதும் என்ற போக்குக்குக் கண்டனம் தெரிவித்து விட்டுப் பள்ளியில் விட்டு வரக் கிளம்பினால், அம்மாவும் வந்தால்தான் வருவேன் என்று அழுகை. போய் விடும் போது, இன்னொரு அம்மா இரண்டு பையன்களை இறக்கி விட்டு விட்டு, 'வெளியேயே நிறுத்தி விடுங்கள், அப்பதான் புத்தி வரும் லேட்டா வரக்கூடாது என்று' என்று சொல்லி விட்டுப் போகிறார்கள்.
வீட்டுக்கு வந்து தியானம் முடித்து விட்டு இட்லி சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்குக் கிளம்பும் போது ஒன்பதேகால் மணி. வழியிலேயே தங்கையை மருத்துவமனையில் விடல். 'நெஞ்சிலும், வயிற்றிலும், முதுகிலும் எரிவது போல வலி' என்று ஒரு வாரமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
அலுவலகத்தில் மேலும் நல்ல சேதிகள். இழுத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர், பல தொலைபேசி அழைப்புகளை ஏற்காமல் விட்டு வைத்திருந்தவர், தானேக் கூப்பிட்டு விவாதித்தார். 'வெளி நாட்டுக்குத் திட்டம் போடுவது போல இரண்டு மூன்று வாரம் அங்கேயே போய்த் தங்கி மொத்தமும் முடித்துக் கொடுத்து விட்டு வந்தால் என்ன' என்று இரண்டு பேரும் ஒத்துக் கொண்டோம்.
அதற்கான வரைவுத் திட்டத்தை அவருக்கு அனுப்பி விட்டு, டிசம்பர் வரை பணம் பாயும் வழிகளை வரையறுக்க ஆரம்பித்தோம். 'ஒரு புறம் எந்த வழியில் பணம் வருகிறது என்று, மறு பக்கத்தில் பணம் தேவைப்படும் வகைகள். எந்த நாளிலும் எவ்வளவு பணம் கையில் இருக்கும் என்று இரண்டையும் சேர்த்துக் காண்பிக்கும்' என்று உருவாக்கப்பட்ட ஒரு விரிதாள்.
மதியம் சாப்பாடு சாய் ஆந்திரா மெஸ் என்ற இடத்தில். கொஞ்சமே கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தாலும் வயிற்றுக்குத் தொந்தரவு கொடுக்காத சாப்பாடு. மாலை நான்கு மணிக்கு தொலைபேசி, 'எல்லாம் மீந்து போய் விடும், நீயும் வேணும்ணா வந்து சாப்பிட்டு விட்டுப் போயிடு' என்றாள் தங்கை. முந்தைய நாள் 'ஏன், காய், குழம்பு எல்லாம் வீணாக்குகிறாய். காயையாவது சாப்பிட்டுத் தீர்க்க வேண்டியதுதானே.' என்று சொன்னதற்கு எதிர்வினை என்று கிண்டலாகச் சொல்லி விட்டு ஐந்தரைக்கு வீடு.
சாப்பிட்டு விட்டுப் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து விட்டு மீண்டும் அலுவலகம் போய் விட்டு வருகிறேன் என்று கிளம்பினேன். 'நெஞ்சு வலி அதிகமாகிறது' என்று கலக்கம். போன வார இறுதியில் மருத்துவர்களைப் பார்த்து, கழுத்து எக்ஸ் ரே ே படம், மாத்திரைகள், வயித்து அமில அரிப்புக்கு அறிவுரைகள் என்று போய்க் கொண்டிருந்ததை மீறி கலக்கம். இருதய நோயாக இருக்குமோ என்று எண்ணம் வந்து விட்டிருக்கின்றது.
'கொஞ்சம் மோர் சோறு சாப்பிட்டால் எரிச்சல் அடங்குகிறதா பார்' என்று அதைச் சாப்பிட்டதும் தெளிவு வந்தது. கூடவே இளநீர் குடிக்கலாம் என்று கேட்க, நானும் போய் வாங்கி வந்தேன். என்னுடைய சொந்த அனுபவத்தில் மோர் சோறுக்கு மேல் குளிர்ச்சியாக எதையும் குடித்தால் நெஞ்சு எரிச்சல் அதிகமாகும்தான்.
ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தால் நிலைமை மோசமாகி விட்டிருந்தது. அண்ணனிடம் பேசினால், 'அவள் திருப்திக்காக போய் ஈசிஜி பார்த்து விடுங்களேன்' என்று சொன்னார். எனக்கு இது போல மருத்துவமனை படி ஏறி இறங்குவது கசப்பு மருந்து சாப்பிடுவது போல. உள்ளதில் கெடுதல் குறைவாக இருக்கும் மருத்துவமனையை தேர்ந்து கேதார் மருத்துவமனைக்குப் புறப்பட்டோம்.
இந்த பக்கம் மணப்பாக்கத்தில் மியாட் மருத்துவமனை. அங்கெல்லாம் போனால், தேவைப்படுகிறதோ இல்லையோ, பிடித்துப் படுக்கை பதிவு செய்து எல்லா சிகிச்சைகளையும் ஆரம்பித்து விடுவார்கள்.
இங்கு ஒரு ஆலோசனை மருத்துவர். இளைஞர்தான். விபரங்களைக் கேட்டதும் ஒரே சிரிப்பு. 'நாற்பத்தைந்து வயதுக்குள்ளாக பெண்களுக்கு இருதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இது நிச்சயமாக அமில அரிப்பு என்றுதான் படுகிறது' என்றார். 'அப்புறம் ஏன் முதுகெல்லாம் வலிக்கிறது' என்றால் அதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.
'சரி, ஈசிஜி எடுத்து விடுவோம்' என்று எழுதிக் கொடுத்தார். தொண்ணூறு ரூபாய்தான் கட்டணம். கடைசியில் ஆலோசனை/ஊசி கட்டணம் முப்பது ரூபாய். ஈசிஜி வரைபடத் தாளைக் கொண்டு வந்து அட்டையில் ஒட்டக் காத்திருக்கும் போது வெளியில் தாரை தப்பட்டைகளோடு ஊர்வலம். யாரோ தேர்தலில் வென்று விட்டிருக்கிறார்கள். மருத்துவமனை என்று கூடப் பார்க்காமல் எதிரில் நின்றும் ஒரே சத்தம்.
ஈசிஜி வரைபடத்தை கவனமாகப் பார்த்த மருத்துவர், எல்லாம் சரியாக இருப்பதாக உறுதி அளித்தார். 'அமில அரிப்புக்கு, நிறைய மாத்திரைகள் சாப்பிடுவது நிலைமையை மோசமாக்கி விடும், ஒரு ஊசி போட்டுக் கொள்ளுங்கள், பொரித்த உணவுகள், டீ காஃபி, அதீத காரம் தவிர்த்து விடுங்கள்' என்று இரண்டு மருந்து எழுதி கொடுத்தார். கிடைத்தால் தீட்டி விடும் மருத்துவர்களைப் பார்த்து சலித்திருந்ததற்கு இவர் கடவுளாகப் பட்டார்.
'ஒருவர் நோய் என்று வந்து விட்டால் எல்லா பரிசோதனைகளும் செய்து பார்த்து விட்டால் பாதுகாப்பு' என்ற நோக்கில் மருத்துவமனையில் இருக்கும் விலை உயர்ந்து கருவிகள், மருந்து நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும் பல விதமான மருந்துகளை பரிந்துரைப்பதில் ஓரளவு நியாயம் இருக்கலாம்.
'சோதித்துப் பார்த்து எதுவும் பிரச்சனை இல்லை என்றால் நல்லதுதானே' என்று பணம் போனாலும் ஆபத்தைத் தவிர்க்க முனைபவர்களுக்குப் பரிசோதனைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும், ஒவ்வொரு முறையும் அரைப்பக்கத்துக்கும் மருந்து வகைகள் எழுதிக் கொடுக்கப்படுவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
'பாதி நோய் மனதில்தான் அம்மா. குறிப்பாக இந்த அமிலஅரிப்பு வருவது மனதைப் போட்டு அலட்டிக் கொள்வதால்தான்.' என்று கூட அறிவுரை சொன்னார் அந்த மருத்துவர். சின்ன வயதில் காய்ச்சல் வந்தால், மருத்துவரிடம் போய் சிவப்பு நிற கலவை மருந்து குப்பியில் வாங்கி வந்து விட்டால் பாதிக் காய்ச்சல் இறங்கி விட்டது போல இருக்கும். அந்த மனவியல் மருந்தாளுமைதான் இப்போது பெரியவர்களுக்கும் தலை விரித்து ஆடுகிறது போலிருக்கிறது.
எங்கள் வீட்டு நாய் சில சமயம் புல்லைக் கடித்துக் கொண்டிருக்கும். 'ஏதோ வயிறு சரியில்லை, இதைத் தின்றால் சரியாகி விடும்' என்று அம்மா சொல்வார்கள். உணவையும், வாழ்க்கை முறையையும் கொஞ்சம் விழிப்போது அவதானித்து வந்தால் தேவையான மாற்றங்கள் நமக்கே புலப்பட்டு விடும். 'அடி பட்டு விட்டது, மார்பு வலி வந்து விட்டது' என்று வெளிப்படையான நோவுகளைத் தவிர்த்து சின்னச் சின்ன சளி, காய்ச்சலுக்கும் மருந்துகளை விழுங்கும் பழக்கத்தைத் தவிர்த்து விடலாம்.
இன்றைய வர்த்தக உலகின் மிகப்பெரிய சாபங்களில் ஒன்று மருந்துகளை விற்கும் துறை. தோல் துறையில் தோல் பதனிடத் தேவைப்படும் வேதிப் பொருட்களை விற்பதில் நடக்கும் பழக்கங்களைப் பார்க்கும் போது அதை விடப் பல நூறு மடங்கு நடைபெறும் மருந்து வர்த்தகத்தை நினைத்தால் குலை நடுங்குகிறது.
பொதுவாக தோல் பதனிடும் நிறுவன உரிமையாளர்களுக்கும் சரி, தோலைப் பயன்படுத்தும் தோல்பொருள் உற்பத்தியாளர்களுக்கும் சரி தோல் பதப்படுத்தும் வேதி முறைகளைப் பற்றி முழுமையாகத் தெரியாது. நான்கு ஆண்டுகள் கல்லூரியில் குப்பைக் கொட்டி வந்த என் போன்ற பட்டதாரிகள் அல்லது பட்டயதாரிகள்தான் உற்பத்தியை கவனித்துக் கொள்வார்கள்.
நூற்றுக் கணக்கான வகை தோல்கள், ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள். ஒவ்வொரு தோலுக்கும் ஒவ்வொரு மாதிரியான சேர்க்கையில் முப்பது முதல் அறுபது வேதிப் பொருட்கள் பயன்படுகின்றன. நான் பார்த்தது வரை இந்தப் பொருட்களின் எண்ணிக்கையும் அளவும் கூடிக் கொண்டேதான் போகின்றன். ஏதாவது புது பண்பு தேவைப்பட்டால் ஒன்றைச் சேர்ப்பார்கள், ஏதாவது சிக்கல் வந்தால் இன்னொன்றைச் சேர்ப்பார்கள், எந்த நிலையிலும் எதையாவது நீக்குவது பற்றி அலசலே கிடையாது.
இங்கும் வேதிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களில் பல மருந்து, பெயின்டு போன்ற பல துறைகளில் தோல் துறையையும் ஒன்றாகக் கொண்டு செயல்படுபவைதான். ஒரு தோல் பதனிடும் நிறுவனத்துக்கு பத்து வேதிப் பொருள் விற்கும் நிறுவனங்கள் என்று கடும் போட்டி.
'கடன் கொடுப்பது, சலுகைகள் கொடுப்பது' என்று ஆரம்பித்து, தோல் பதனிடுதலுக்கு பொறுப்பாய் உள்ள மேலாளருக்கு நிறுவனம் வாங்கும் வேதிப் பொருள் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம் பணமாகக் கொடுப்பது வரை பலவிதமான பழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள்.
'இந்த கெமிக்கல் போட்டாதான் செய்ய முடியும். நீங்க சொன்னா, இதை நீக்கி விடுகிறேன். அப்புறம் குவாலிட்டி பிராப்ளம் வந்தா என்னக் கேக்காதீங்க' என்று ஒரு போடு போட்டால் எந்த முதலாளியும் கலங்கி விடுவார். 'இரண்டு ரூபா கெமிக்கலில் மிச்சம் பிடிக்கப் போய், நூறு ரூபாய் தோல் பாழாக வேண்டாம்' என்று தலையிடுவதை விட்டு விடுவார்.
'உடம்பு நன்றாக இருக்க வேண்டும், அதுதான் முதலில், டாக்டர் என்ன சொன்னாலும் கேட்க வேண்டியதுதான்' என்ற நம்பிக்கையில் வரும் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும் நேர்மை மருத்துத் துறையில் வளர வேண்டும். குறிப்பாக மருந்துகளைச் சாப்பிட்வதால் வரும் பக்க விளைவுகள் மருத்துவர்களுக்கு மிக நன்றாகப் புரியும். மிக அவசியம் என்று பட்டால் ஒழிய மருந்துகளைப் பரிந்துரைப்பதை தவிர்க்கலாம்.
என்ன பெரிய மருந்து நிறுவனங்களின் விற்பனை குறைந்தால் பொருளாதாரம் நொடித்தா போய் விடும்?

புதன், அக்டோபர் 18, 2006
சுமைதாங்கி
எவ்வளவு தூரம் வலைப்பதிவுகளைச் சார்ந்திருக்கிறோம். 'தேசிபண்டிட் கடையை மூடப் போகிறார்கள்' என்று பாலா எழுதியிருந்ததைத் தொடர்ந்து மாலையில் போய்ப் பார்த்தால், சொந்த வேலைகளை முன்னிட்டு தொடர்வதை நிறுத்தி விடுவதாக எழுதியிருந்தார். அதற்கான விரிவான விளக்கமும் இன்னொரு தளத்தில்.
நூற்றுக் கணக்கான வாசகர்களை விட்டு விடலாம், கூடவே சேர்ந்து பணியாற்றிய தன்னார்வலர்களைக் கருத்தில் கொண்டாவது வேறொருவரிடம் இந்தச் சேவையை விட்டுச் சென்றிருக்கலாம். அந்த வகையில் காசி ஆறுமுகம் மிகப் பாராட்டும்படி நடந்து கொண்டார்.
ஒரு ரைசர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால் ரைசர் எஃப் எஸ் என்னாகும்? தனி நபரைச் சார்ந்திருக்கும் முயற்சிகள் இடையில் மறைந்து விட வாய்ப்புகள் அதிகம் என்பதில் ஓரளவு உண்மையிருந்தாலும், திறந்த நிரல் உரிமத்தின் கீழ் மேலாளப்படும் மென்பொருட்களை ஒருவர் வடத்தைக் கீழே போட்டு விட்டால், இன்னும் பலர் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நிறுவனமாக உருவாகும் மென்பொருட்களை விட இந்த முறையில் நிச்சயத்தன்மை அதிகம்.
நேற்றைக்கு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்து வேலைகளை முடித்து விட்டுக் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் சமைத்து விடலாம் என்று வெண்டைக்காய் பொரியலும், கத்திரிக்காய்/தக்காளி/வெங்காயம் போட்ட ஒரு விதக் கலவை குழம்பும் வைக்க முடிந்தது. வேலை எல்லாம் முடிந்ததும் அழுக்கான பாத்திரங்களைக் கழுவி மேடையையும் துடைத்து விட்டு விட்டால் மனதுக்கு ஒரு பாரம் இறங்கியது போல இருக்கும்.
ஒரு வேலையைச் செய்வதை விட இப்படி ஒரு வேலை நிலுவையில் இருக்கிறதே என்ற எண்ணம்தான் அதிக அழுத்தம் தருவது. துவைக்க வேண்டிய துணிகள் குவிந்து கிடந்தால், இது எல்லாவற்றையும் துவைத்து முடிக்க வேண்டுமே என்ற சோர்வு இரண்டு மூன்று நாட்களாக ஓட விட்டு அப்புறம் உட்கார்ந்து துவைக்க ஆரம்பித்தால், வேலை விறுவிறுவென்று நடந்து விடும். செய்ய வேண்டுமே என்று மனதை உழப்பிக் கொண்டிருந்தது வீண்தான்.
அப்படி ஒரு பூதமாக உருவாகாத படி பார்த்துக் கொண்டால் வசதி. பள்ளியில் படிக்கும் போது 'அழுக்கான சீருடையை வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் முதல் வேலையாகத் துவைத்துப் போட்டு விட்டால் அத்தோடு அந்தப் பாரம் தீர்ந்து விடுகிறது' என்று புரிந்தது.
வேலை பார்க்கும் போது எங்களது மேலாளர் சொன்ன ஒரு சம்பவம். ஒரு நாள் ஏதோ குளறுபடிக்குப் பிறகு இவர் மிகவும் சோகமாக இருந்தாராம். மாலைக்கு வீட்டுக்குப் போகும் முன்னால் எதிரில் எங்கள் இயக்குநர் அவரைப் பார்த்தாராம். அவர் சொன்ன கதை:
முற்றும் துறந்த துறவிகள் இரண்டு பேர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு ஆறு குறுக்கிடுகிறது. ஆழம் அதிகம் இல்லாவிட்டாலும் இழுவை அதிகம். படகு எதுவும் கிடையாது. இருவரும் உறுதியான உடம்புடையவர்கள், நீந்திக் கடக்க ஆயத்தமாகிறார்கள். அப்போது ஒரு இளம்பெண் தனக்கு ஆற்றைக் கடக்க உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறாள்.
ஒருவர் எதுவும் பேசாமல் அவளைத் தோளில் தூக்கிக் கொண்டு நீந்திக் கரையேறி விடுகிறார். அவள் அவள் வழியில் போய் விட, இவர்கள் இருவரும் பயணத்தைத் தொடர்கிறார்கள். ஓரிரு மணி நேரம் மௌனத்தில் நடந்து பிறகு கேட்கிறார், "சாமி, முற்றும் துறந்த நீங்க எப்படி ஒரு பெண்ணைத் தொட்டுத் தூக்கி வந்தீர்கள். துறவுக்குப் பங்கம் இல்லையா?" என்று.
முதலாமவர் சொல்கிறார், "அப்பனே, நான் தூக்கியது பத்து நிமிடங்களுக்கு. அதன் பிறகு நீ இரண்டு மணி நேரமாக இதை மனதில் சுமந்து கொண்டு வந்திருக்கிறாயே, ஏன்?"
செய்யும் செயலுக்குப் பொருள் கற்பித்து சுமையாக மாற்றி விடுவது மனம்தான். செய்தது, செய்யப் போவது இரண்டுமே மனதில் ஏறிக் கொண்டால் தள்ளாட்டம்தான். இதற்குத்தான் கத்தோலிக்க மதத்தில் செய்த தவறுகளை சொல்லி மன்னிப்புக் கேட்டு விடும் பழக்கம் இருக்கிறது.
அப்படியே சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் போது ஒன்பதே முக்கால் ஆகி விட்டிருந்தது. பத்தரைக்குத்தான் வருவேன் என்று அனுமதி கேட்டிருந்தாலும் பத்து மணிக்கே போய்ச் சேர்ந்து விட்டேன். போனதும் சுறுசுறுப்பாக வேலைகள் சில ஓடின. எதிர்பாராவிதமாக தொடர்பு விட்டிருந்த வாடிக்கையாளர் தொலைபேசி, 'என்ன நிலவரம்?' என்று விசாரித்தார். இன்னொருவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ரம்சான் மாதத்தில் எல்லா கதவுகளும் ஓரளவே திறந்திருந்தன.
'என்ன கிடைக்க வேண்டுமோ அது இந்த நாட்களில் கிடைக்கப் போகிறது' என்றது ஆருடம். சண்டை போட்டுக் கொண்ட வாடிக்கையாளர் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு தரப்புக்கு வருத்தம். 'என்ன சார், எம் மீது தப்பு இருக்கற மாதிரி எழுதிட்டீங்க?' என்று தொலை பேசினார். அத்தகைய சூழலில் மூழ்கியிருக்கும் போது சின்ன குறிப்பு கூட வருத்த ஆரம்பித்து விடும். அன்றைக்குப் பேசும் போதே 'இப்படிப்பட்ட சூழலை உருவாக்கி மாட்டி விடாதீர்கள்' என்று சொன்னது வாழ்க்கையில் நான் பட்டு அனுபவித்த பாடத்தின் அடிப்படையில்தான்.
பசி வந்து விடவே 'டெக்கான் குரோனிக்கிள்' வாங்கிக் கொண்டு டாட்டா உடுப்பி விடுதியில் சாப்பாடு. தோசையும், என்ன ஆகிறது என்று துணிந்து தயிர் சாதமும். அந்தத் தயிர் சாதம் மாலை வரை வேலையைக் காட்டிக் கொண்டிருந்தது.
மதியம் துரித தபால் சேவையில் வெளிநாட்டிலிருந்து ஆவணங்கள் வந்து சேர்ந்தன. கடவுச் சீட்டை துரிதப்படுத்தும் தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போக்கு. சரியாக நோக்கங்களைப் புரிந்து கொண்டு நான்கைந்து பேராக ஒரு குழு உருவானால் ஒவ்வொருவரும் தனது பங்கை ஆற்றி குழு நோக்கத்தை செயல்படுத்தலாம். முதன்முதலில் அப்படி ஒரு குழுவாகச் செயல்பட்டது ழ-கணினி உருவாக்கத்தில்.
எழுத்தாளர் சுஜாதா, ஜெயராதா, சாந்த குமார், நான் அப்புறமாகச் சேர்ந்து கொண்ட ஹரிராம். சுஜாதா எல்லோரையும் சேர்ந்து செயல்பட வைத்து, இணையப் பல்கலையில் உதவி வாங்க உதவி, தனது எழுத்தின் வருகைகளின் மூலம் தேருக்கு உயிர் கொடுத்தார். ஜெயராதா மாணவர்களையும் பிற குழு உறுப்பினர்களையும் கையாண்டு அவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளித்துச் சென்றார். சாந்தா வணிக முகம். இணையப் பல்கலைக்கு ஆவணங்கள் தயாரிப்பதாகட்டும், வேலைகளில் நிறுவன உதவி பெறுவதாகட்டும் சத்தம் போடாமல் தன் பங்கை செய்து கொண்டிருந்தார்.
எனக்கு லினக்ஸ், கேடிஈ மேசைச் சூழலில் ஆர்வமும் புரிதல்களும், அது தொடர்பான சண்டைகளைப் போட்டுக் கொண்டிருந்தேன். ஹரி தொழில் நுட்பம் தொடர்பான வேலைகளில் இறங்கி விட்டால் முடித்து விட்டுதான் வெளியே வருகிறார்.
இதில் எந்த ஒருவர் இல்லாமல் இருந்திருந்தாலும் அந்த முயற்சியே சாத்தியமாயிராது. யாருக்குமே யாரைப் பற்றியும் கவலையோ, மனத் தாங்கலோ இருந்ததாக நினைவே இல்லை. அவரவருக்குப் புரிந்த வரையில் வேலையைப் பார்த்துக் கொண்டே போக மொத்தமும் அழகாக உருவெடுத்தது. குறிப்பிட்ட கட்டத்தில் அப்படி ஒரு மனத்தாங்கல் வரும் சூழல் உருவான போது குழுவே கலைந்து விட்டது.
எழுதி விட்டு அப்படியே போய்க் கொண்டிருக்கும் போக்கு வந்து விட்டதாக உணரும் வண்ணம் ஒரு தொலைபேசி. 'ஏதாவது செய்ய வேண்டும். நம் ஊரில் வந்திருப்பவர்களுக்கு உதவி செய்ய நம்மாலானதை செய்ய ஆரம்பிக்க வேண்டும்' என்று பேசியவர் புதுவை சுகுமாரன் எழுதியிருந்த அகதி முகாம்களின் நிலை பற்றிய ஆய்வறிக்கைக்கான சுட்டியையும் அனுப்பியிருந்தார்.
பொதுவாக காட்டைப் புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தனி மரங்களைப் புறக்கணித்து விடும் போக்கு என்னுடையது. காலையில் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைப்பை நீதிமன்றம் ரத்து செய்தது, தற்கொலைப் படைத் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட சாவுகள் என்று செய்தி படித்தபோது கூடிய சீக்கிரத்தில் தீர்வு வந்து அகதிகளும் நல்வாழ்வு பெற்று விடுவார்கள் என்று தோன்றியதே தவிர, உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று உறைக்கவே இல்லை.
மாலையில் தேவையில்லாத பதற்றம் தொத்திக் கொண்டது. மாற்றுக் கருத்தைச் சொல்பவர்கள், பொறுப்புணர்ந்து செயல்படாதவர்கள் என்று நமக்குப்படுபவர்கள் என்று ஒவ்வொன்றுக்கும் மனதை குழப்பிக் கொண்டது தேவையில்லாதது. மாற்றுக் கருத்தை சொல்லும் விதம் முதலிலிருந்தே பிடிக்காமல் இருந்தது ஒருவரிடம். அவரது இயல்பு என்று புரிந்தாலும் சில சமயங்களில் பொறுமை போய் விடுகிறது.
அப்படி ஓரிரு முறை எரிந்து விழ நேரிட்டது. எனக்கே இவ்வளவு சோர்வாக இருந்தால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? ஏதோ எல்லாம் நம் தலையில் ஓடுகிறது என்று பதட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படி மாலை இரண்டு மணி நேரம் நரகமாகப் போய் விட்டது. இணைய உரையாடலின் மறு பக்கம் கூட புரிந்திருக்க முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்து விட்டு, பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கூட கைப் பிடித்து வழி நடத்தி விட்டு கிளம்பும் போது மொத்தமாக வடிந்து விட்டிருந்தது.
வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஓரளவு நிதானம் வந்து, வீட்டுக்கு வந்து உடை மாற்றிய பிறகுதான் சமநிலை திரும்பியது. கை கால் கழுவி தியானத்தில் அமர்ந்ததும் பைத்தியக் காரத்தனங்கள் உறைத்தன. அப்படியே ஆழ்ந்து போய் தூக்கத்தில் விழுந்து அமைதியான தூக்கம்.
இதற்கே இவ்வளவு பதட்டம் என்றால் இன்னும் வளர்ந்து பெரிய அளவில் பொறுப்புகள் வந்தால் என்ன ஆகும்? மாதா மாதம் ஒன்றரை லட்சம் கொண்டு வந்து சேர்க்கும் வழி உருவாக்குவதில், இந்த ஒற்றையடிப் பாதை போடுவதில் இவ்வளவு நாசங்கள், எட்டு வழிச் சாலையாக மாறும் போது என்ன நடக்கும்?
நான்கு பக்கத்திலிருந்தும் அழுத்தங்கள். முதலீடு செய்பவருக்கு ஒரு கவலை, வேலை பார்ப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம். ஒன்றரை டசன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் என்று நிரம்பி வழிகிற தட்டில் என்னுடைய சொந்தக் கவலைகளையும் போட வேண்டாம் என்று போய் விட்டார். அந்தக் கணத்துக்கான சுமையை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை அவ்வப்போது இறக்கி வைக்கா விட்டால் இப்படித்தான் ஒருவருக்கும் பயன்படாமல் போய் விடுவோம்.
இதற்கிடையில் தேவையில்லாமல் கருணாநிதி அரசியல் பற்றிய விவாதம். மிக முக்கியமான ஒரு விவாதம் ஆரம்பிக்கும் முன்னால் சிக்குன் குன்யாவை முன்னிட்டு தாக்குதல் நடத்தினேன். 'நீங்க திமுகவுக்கு எதிராக சொல்ல வேண்டும் என்றே சொல்கிறீர்கள்' என்று ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டார்.
மூத்த மென்பொருள் பணியாளருக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும், எப்படி பரிசோதிக்க வேண்டும் என்று கேட்டு முடிவு செய்தோம். இணையத் தளங்களில் தேடிக் கிடைத்த தேர்வுகளில் ஒன்றை முயன்றதில் 'ஒன்றும் தெரியாத, ஆனால் அது கூடப் புரியாத ஆள்' என்று தீர்ப்பு வந்தது.
கேள்வி அமைக்கும் ஆசிரியருக்கு விடைகள் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்களைப் போலவே வாழ்பவராக இருக்க வேண்டுமா என்று ஹாமில்டன் விவாதிக்கிறார். மக்களின் கவலைகளைப் புரிந்து கொண்டு அவற்றை சரியான முறையில் விவாதித்துத் தீர்வு கிடைக்கச் செய்யும் திறமைதான் பிரதிநிதி ஆகுபவரின் பணி. அதனால்தான் நம்ம ஊரில் நிறைய வக்கீல்கள் சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டி போட்டு வெற்றி பெறுகிறார்கள்.

செவ்வாய், அக்டோபர் 17, 2006
நோய்களும் தீர்வுகளும்
'அன்பு இரண்டு முறை ஆசீர்வதிப்பது, கொடுப்பவனையும் ஆசீர்வதிக்கும், வாங்குபவனையும் ஆசிர்வதிக்கிறது' என்று ஒரு ஆங்கில கவிதை உண்டு.
"மனசில காழ்ப்புணர்ச்சியோட செயல்படாதீங்க சார், அது ஒங்களையும் கஷ்டப்படுத்தும், எதிராளியையும் கஷ்டப்படுத்தும். நம்ம மனசை தேவையில்லாம எதுக்கு பாரம் ஏத்திக்கிறோம்" இப்படி ஒரு அறிவுரை வாடிக்கையாளர் நிறுவன ஊழியர் ஒருவருக்கு.
பொதுவாக, நிறுவனங்களில் சேவைப் பிரிவில் பணிப் புரிபவர்களுக்கும் உற்பத்தி பிரிவில் பணி புரிபவர்களுக்கும் இழுபறி இருந்து கொண்டே இருக்கும். மனித வளத்துறையில் போய் ஒரு குறிப்பிட்ட கடிதம் கேட்டால், "அதெல்லாம் இப்ப ஆகாது சார், நாலு நாள் ஆகும். நான் ரொம்ப பிஸி, இந்த லெட்டருக்கு பெரிய வேலையிருக்கு" என்று அலட்டிக் கொள்வார்கள். உண்மையில் அது பத்து நிமிட வேலையாகத்தான் இருக்கும். உடனேயே கொடுத்து விட்டால் அவரது முக்கியத்துவத்தை எப்படிக் காட்டுவது.
இதே போல கணினிப் பிரிவினரிடம் ஏதாவது மாறுதல் செய்யச் சொல்லிக் கேட்டால், "இதெல்லாம் ஆகாது சார், இத மாத்தினா பெரிய சிக்கல்கள் வரும்" என்று பயமுறுத்துவார்கள். உற்பத்தி ஆளுக்கு பற்றிக் கொண்டு வரும். "என்னடா இது, இந்த ஜுஜுபி வேலைக்கு இந்த அலட்டலா" என்று கடுப்பாவார்கள்.
அப்படி கடுப்பாகி இருந்த புதிதாக வந்திருந்த உற்பத்தித் துறை மேலாளருக்கும், கணினிப் பிரிவு மேலாளருக்கும் இடையே என் முன்னால் கைகலக்கும் அளவுக்கு சண்டை. வாடா, போடா என்று அடிக்க நிற்கிறார்கள். எப்படியோ விலக்கி கூடியிருந்தவர்கள் அனுப்பினார்கள். "இவனுக்கு என்ன தெரியும், எனக்கு என்ன வேணுமோ அத ஒங்கள்ட்ட நேரடியா சொல்லிக்கிறேன்" என்று உற்பத்திப் பிரிவு மேலாளர் என்னையும் இழுத்து விட்டார்.
'நிறுவனத்தின் சேவைப் பிரிவுகளில் பணிபுரிபவர்கள் மற்றப் பிரிவினரை தங்களது வாடிக்கையாளர் போல மதித்து அவர்களுக்கு நல்ல சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டுமே தவிர தம்முடைய முக்கியத்துவத்தைக் காட்டுவதற்கு தேவையில்லாத பந்தா காட்டக் கூடாது. அதே நேரம் வெளியிலிருந்து வரும் நாங்கள், கணினிப் பிரிவின் மூலமாகவே எல்லா வேலைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவதுதான் சரியான முறை' என்று இரண்டு பேருக்கும் தனித்தனியே சொன்னேன். அதற்கு இரண்டு மணி நேரம் இழுத்து விட்டது.
இதில் கணினிப் பிரிவு ஊழியர் நிறுவனத் தலைவரிடம் போய் முறையிட்டு விட்டார். 'தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், இது போல பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு வருபவர்களை விரும்புவதில்லை. பிரச்சனைகளைக் கொண்டு செல்ல வேண்டுமானால், அதற்கான தீர்வையும் கைவசம் கொண்டு போய், அதற்கு அவரது ஒப்புதலைப் பெறுவதுதான் நல்ல மேலாளரின் அழகு. நீங்கள் உற்பத்திப் பிரிவு மேலாளரிடம் போய் வருத்தம் தெரிவித்து, சுமுகமாகப் போய் விடுவதுதான் எல்லாத் தரப்புக்கும் நல்லது'
'அவரது வயது, அனுபவம், நிறுவனத்தில் அவரது முக்கியத்துவம் இவற்றைக் கருதி, நீங்கள் தாழ்ந்து போவதால் எந்த விதத்திலும் உங்களுக்கு குறைவு ஏற்படாது. வீட்டுக்குப் போகும் முன் இந்தப் பாரத்தை இறக்கி வைத்து விட்டால், உங்கள் மனமும் இயல்பாகி விடும். இல்லையென்றால் தேவையில்லாமல் காழ்ப்புணர்ச்சி என்ற சுமையை ஏற்றிக் கொண்டிருப்பீர்கள்' என்று சொல்லி விட்டு வந்தேன்.
சனி ஞாயிறில் சென்னை லினக்ஸ் பயனர் மடற்குழுவில் ஒரு விவாதம். ரைசர் என்பவர் லினக்ஸில் பயன்படும் ஒரு வகை கோப்புக்கட்டமைப்பை உருவாக்கி வருபவர். அவர் தன்னை விட்டுப் பிரிந்து வாழும் மனைவியைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் கைதாகி விட்டிருந்தார். இந்த செய்தியை முன்னிட்டு திறந்த மூல முறையில் மென் பொருள் உருவாக்கம் தோல்வியடைந்து, தனியார் நிறுவன மென்பொருள் உருவாக்க முறை வெற்றி பெறுகிறதா என்று ஒரு இழை ஆரம்பித்திருந்தது.
நான் படிக்க ஆரம்பிக்கும் போது எண்பதுக்கும் மேற்பட்ட மடல்கள் சேர்ந்து விட்டிருந்தன. அதற்குப் பிறகு என்னுடைய கருத்துக்களையும் எழுத ஆரம்பித்தேன். 'தனியார் நிறுவன மென்பொருள் உருவாக்கத்தின் காலம் முடிந்து போகிறது. இணையத்தின் மூலம் பலரும் சேர்ந்து செயல்படும் வசதி வந்து விட்ட பிறகு திறந்த நிரல் மென்பொருள் உருவாக்கம் இனிமேல் எல்லா துறைகளையும் ஆக்கிரமிக்கப் போகிறது' என்பது என் கட்சி.
பொதுவாக இது மாதிரி விவாதங்களில் தீப்பொறி பறக்கும். விவாதம் புரிபவர்கள் முகத்துக்கு முகம் பார்க்கா விட்டாலும் உணர்ச்சிகள் பொங்கி வழியும். இந்த விவாதத்திலும் இது மாதிரி போய்க் கொண்டிருந்த போது நானும் நுழைந்த பிறகு கொஞ்சம் குளிர்ந்தது போல தோற்றம். நான்கைந்து மடல்களுக்குப் பிறகு ஒருவர் 'இது போல தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லாமல், உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் விவாதம் புரிவது நிறைவாக உள்ளது' என்று எழுதியிருந்தார்.
எந்த ஒரு பிரச்சனையிலும் உணர்ச்சிகள் நுழைந்து விட்டால் அப்புறம் எல்லாமே குட்டிச் சுவர்தான். 'ஒன்னை ஒரு கை பார்த்து விடுகிறேன்' என்று ஆரம்பித்து விட்டால் வீடானாலும் சரி, நிறுவனம் ஆனாலும் சரி இரண்டு பேருமே அழிந்து போய் விடுவார்கள். நேரமும் ஆற்றலும் அடுத்தவருக்குத் தொல்லை கொடுப்பதிலேயே, செலவாக கடைசியில் எதுவும் மிஞ்சாது.
இதைத்தான் sunfever.blogspot.com பதிவில் gumption sucking சூழல் என்று எழுதுகிறார். இத்தகைய சுழலில் மாட்டிக் கொண்டால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாமல் வாழ்க்கை வீணாகி விடும்.
ராணிபேட்டையில் நடந்த இவ்வளவுக்கும் பிறகு மாலையில் சாப்பிட்டு விட்டு சென்னையிலிருந்து வந்து சேர்ந்து கொண்ட இரண்டு பேரோடு விற்பனை சந்திப்புக்குப் போனோம். ஒரு ஆண்டு முன்பு சந்தித்தபோது வேண்டா வெறுப்பாகப் பேசிக் கொண்டிருந்த இவர் கொஞ்சம் மேம்படைந்து ஆர்வம் காட்டினார்.
கடைசியில் 'ஒரு சிறு பகுதியை மட்டும் முயற்சி செய்து பார்த்து விட்டு பிறகு முழுமையாக வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். அதற்கான விலையை நாளைக்குச் சொல்லுங்கள்' என்று முடித்து விட்டார்.
பேருந்து பிடித்து அலுவலகம் வரும் போது மணி பத்தரை. அதற்குப் பிறகு ஒன்றரை மணி நேரம் மின்னஞ்சல்களிலும் வலைப்பதிவுகளிலும் மூழ்கியிருந்து விட்டு அந்த நேரத்தில் தூக்கத்தைக் கலைக்க வேண்டாம் என்று அலுவலகத்திலேயே கட்டையைச் சாய்த்தேன்.
பேருந்தில் பயணிக்கும் போதும் நேரம் கிடைக்கும் போதும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் தொடர்பான விவாதக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ஹாமில்டனும், மேடிசனும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கருத்துக்களும், மனித இயல்பு - மக்களாட்சி - கூட்டாட்சி - குடியரசு போன்றவற்றின் பண்புகலை அலசும் திறனும் பல உண்மைகளைப் புரிய வைத்தன.
தனி மனித நலன், மாநிலங்களின் உரிமை, குடியரசின் தேவை, நடுவண் அரசுக்கு இருக்க வேண்டிய உரிமைகள், அதைச் செயல்படுத்த தேவைப்படும் அமைப்புகள் என்று இந்தியாவின் பிரச்சனைகளுக்கும் பல புரிதல்கள் கிடைத்தன. சொல்லப் போனால் உலக நீதி மன்றம் என்று அமைத்து நாடுகளுக்கு மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் ஒரு பன்னாட்டு ஆட்சி நடப்பது இன்றைய ஆட்சி முறைகளை மேம்படுத்தும் ஒரு வழியாக இருக்க வேண்டும்.
பிரித்தானிய, அமெரிக்க அரசியலமைப்புகளை மாதிரியாகக் கொண்டு ஒவ்வொரு படியிலும் நமக்குத் தேவையானவற்றை, இரண்டிலும் சிறந்ததை எடுத்து உருவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அறுபது ஆண்டுகள் நாட்டை ஒருங்கிணைத்துக் கொண்டு போகும் ஆழமும் உழைப்பும் அதில் அடங்கியிருக்கிறது.
பல குறைகள் இருந்தாலும் அவ்வப்போது திருத்தங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டு இன்னும் மேம்படுவதற்கான வழி முறைகளோடு செயல்படும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய சபையினருக்கு வணக்கங்கள்.
'இது ஆம்பளைங்க சமாச்சாரம்' என்று ஆண்களுக்கு மட்டும் என்ற பகுதியைத் தொடராக வெளியிடலாமா என்று ஒரு இணைய இதழ் நண்பரிடமிருந்து மடல். எது கவனத்தை ஈர்க்கிறது என்று எழுதும் போது புலப்படாமலே போய் விடுகிறது.
இன்னொரு விடுமுறைச் சுழற்சி வரப் போகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என்று எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அக்டோபர், நவம்பர் வந்தாலே பயமாக இருக்கிறது என்று இன்னொரு நிறுவனத் தலைவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
பள்ளியில் படிக்கும் போது, வேலை செய்யும் போது இது போல மூன்று நான்கு நாட்கள் சேர்ந்து விடுமுறை வரும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைச் சொந்தமாகத் தொழில் செய்யும் போது ஏன் இழந்து விடுகிறோம்? 'இந்த இடைவெளி வருவதால் வேலை முடிவது தாமதமாகி விடுமே, அந்த மாத வருமானம் குறைந்து விடுமே' என்ற பதட்டம்தான். சரியாக இந்த விடுமுறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டமிட்டால் இந்தப் பதட்டத்திற்கு இடமிருக்காது.
ஆனால், 'மூன்று வாரங்களுக்குள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களில் மூன்றில் இரண்டு எண்ணிக்கையிலானவர்களுக்கு சிக்குன் குனியா, டைஃபாய்டு, சிறுநீர் உளைச்சல் என்று வரும் போது, பார்ப்பவர்கள் எல்லாம் ஏதாவது நோயில் உழல்வதாகச் சொல்வது' மனத் தளர்ச்சியைத் தருகிறது. நோய்வசப்படாத வீடுகளே இல்லை என்று சொல்லும் படியாக பல பகுதிகளிலிருந்து பல தரப்பினரிடமும் நோய்கள் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலானவை கொசுக்களின் மூலம், தண்ணீர் தேங்குதல், குப்பை குவிதல், பொதுத் தூய்மைக் குறைவால் வருபவை. இப்படி ஒரு நெருக்கடியே இல்லை என்று சாதிக்கும் மாநில அரசு ஒரு புறம், நெருக்கடி வந்தால் மட்டும் செயல்படும் பிற அரசுகள் என்று எதுவும் சுகமில்லை. நீண்ட கால நோக்கில் பொது இடங்களை மேம்படுத்தி, மக்களின் ஒத்துழைப்போடு அரசு செயல்பட்டு ஆரோக்கிய சூழலை உருவாக்க முன்வரவில்லை என்றால் இனி வரும் காலங்கள் இன்னும் மோசமாக ஆகி விடலாம்.
இலவச வண்ணத் தொலைக்காட்சியும், தேர்தலில் வன்முறையும் அரசியல் கட்சிகளின் முதல் வேலைகளாக இருக்கும் போது மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் கனவுகளாகவே இருந்து விடுகின்றன. சுனாமி வந்தது போல, மழை வெள்ளம் வந்தது போல இந்த கொள்ளை நோய்களும் பெரிய இயற்கைப் பேரழிவு என்று கருதப்பட்டு அரசு செயல்பட்டால் பல மேம்படுத்தல்களை செய்து விடலாம்.

திங்கள், அக்டோபர் 16, 2006
அரசியல்
காலையில் நாட்குறிப்பு எழுதிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி, கோயம்புத்தூரிலிருர்ந்து செல்லா. எறும்புகள் மூலம் அறிமுகமாகி, இணைய தள வடிவமைப்பு வேலை செய்து, கோவையில் நேரில் சந்தித்து, சென்னையிலும் ஒரு முறை சந்தித்து, அவ்வப்போது தொலைபேசியில் தொடரும் பழக்கம். ஆர்வத்தை தூண்டும் பலதுறை மன்னர்.
இணைய தளங்களில் பல முதல்களுக்கு சொந்தக் காரர், கொஞ்சம் தாமதமாகவே தமிழில் வலைப்பதிவிட ஆரம்பித்தார். இணைய நாடோடி என்ற பெயரில் ஆரம்பித்ததும், வருகையை ஈர்க்கும் பதிவுகளில் இறங்கியிருந்தார். அப்புறம் அருமையான பதிவுகள் வர ஆரம்பித்தன. அவரது பக்க வடிவமைப்பும் தனிப்பட்டு தெரியும்.
நேற்று பேச ஆரம்பித்ததும், 'சென்னையில் தேர்தலின் போது என்ன நடந்தது?' என்று கேட்டார். எனக்கு நேரடியாக எந்த விபரமும் கிடைக்கவில்லை, வலைப்பதிவுகளில் படித்ததும், எஸ்கே ஐயாவின் கண்டனப் பதிவின் மூலமும் விபரங்கள் தெரிந்ததுதான். இங்கிருந்து பிடித்து கருணாநிதி, எம்ஜிஆர் வித்தியாசங்கள், அண்ணாவின் பெருங்குணங்கள், காமாரசரின் அருமை என்று நிறைய பேசினார். மனம் இருந்தால்தான் நல்லது செய்ய முடியும் என்று ஒரு கதை கூட சொல்லி விட்டார்.
பேச்சு அப்படியே போய் ஈழப் போருக்குத் திரும்பியது. ஆரம்ப கால போராட்டங்கள், தமிழகத்துடன் இருந்த உறவுகள், எம்ஜிஆர்/இந்திரா காந்தியின் அறிவுடமை, ராஜீவ் காந்தியின் பேதைமை என்று அவரது பார்வைகளை சொல்லிக்கொண்டே போனார். போன வாரம் தீராநதியில் கவிஞர் வ ஐ ச செயபாலனின் எட்டு பக்க நேர்முகம் படித்திருந்தேன்.
கவிஞர் கொஞ்சம் இளைத்துத் தெரிந்தார் புகைப்படத்தில். அவரும் தமிழ் டாட் நெட் மூலம் அறிமுகமாகி சென்னை வந்திருந்த போது, நானும் என் நண்பனும் அவரை பெசன்ட் நகரில் போய்ச் சந்தித்தோம். சிட்னி பாலா நம் வீட்டில் தங்கியிருந்த போது அவரைச் சந்திக்க வீட்டுக்கும் வந்திருந்தார். இந்த நேர்முகத்தில் இன்றைய ஈழத் தமிழரின் நிலையை சுருக்கமாக திறமையாக விளக்கியிருந்தார்.
செல்லாவுடன் பேசிப் பேசி கைத் தொலைபேசி சூடாகி விட்டிருந்தது. அவர் சொன்ன விபரங்களையெல்லாம் ஒரு தொடராக பதியும்படி கேட்டுக் கொண்டேன். 'நம் உறவின் ஒரு பகுதி கூப்பிடு தூரத்தில் போராடிக் கொண்டிருக்கும் போது நாமெல்லாம் நம்மால் முடிந்த கல்லைத் தூக்கிப் போடச் செய்யாவிட்டால் எதிர்காலம் நம்மை மன்னிக்காது' என்று சொன்னேன்.
வல்வெட்டித் துறை பிரபாகரனுக்கு படகு ஏறி ராமேஸ்வரம் வழியாக மதுரை வருவதுதான் நகருக்குப் போய் பொருள் வாங்கி வரும் வழியாம். இன்றைக்கு அகதிகளாக வருபவர்களுக்குக் கூட ஒரு விருந்தினருக்குக் கொடுக்கும் வரவேற்பு கூட கொடுக்காத தமிழகம் பதில் சொல்லும் நாள் வரும்.
மாலையில் மூத்த அண்ணன் தங்கையைக் கொண்டு விட்டுப் போக வந்தார். 'உடனேயே போக வேண்டும், கோயிலுக்கு நேரமாகிறது' என்று கிளம்ப இருந்த ஐந்து நிமிடங்களில் பேச்சு தமிழ், மொழி, ஈழம் என்று போய் விட்டது. அவரிடம் உட்கார்ந்து பேசி பல மாதங்கள் ஆகி விட்டன. வழக்கமாக இந்து/சோ/தினமலர் பாதிப்புகளால் பேசக் கூடிய அவர் மிகவும் உருகிப் போய் நம்முடைய அவலத்தைக் கொட்டித் தீர்த்து விட்டார்.
'ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்த பிறகுதான் தமிழுக்கு உயிர் வரும். நாமெல்லாம் நம் பெருமையையும், வளத்தையும் சல்லிக் காசுக்கு விற்று விட்டு புல் புடுங்க உதவாத வேலைகளில் நேரத்தை செலவளிக்கிறோம். கடந்து நான்கு நாள் சண்டைகளில், தம் இருப்பிடத்தைப் பாதுகாக்க நூற்றுக் கணக்கான தியாகிகள் உயிர் கொடுத்ததற்கிடையில், நாம் இங்கு கவலைப்படும் விஷயங்கள் பரிதாபத்துக்குரியவை.'
மாலையில் மேடிசன், ஹாமில்டன், இன்னும் ஒருவர் எழுதி வெளியிட்ட The Fedaralist என்ற தலைப்பிலான கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். வீட்டுக்குப் போகும் வழியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வந்த அழைப்புக்கு லாயிட்ஸ் ரோடு போவதை மறுமுடிவு செய்து விட்டுப் புத்தகத்தில் மூழ்க முடிவு செய்து வீடு வந்த போதுதான் அண்ணனுடன் சந்திப்பு.
1777ல் விடுதலை அறிவிப்புக்குப் பிறகு பதின்மூன்று மாநிலங்கள் ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்குகின்றன. செயல்படவே முடியாத அந்த மத்தியக் கூட்டமைப்பின் (Confederation) குறைகளை நீக்கிப் புதிய அரசமைப்பை உருவாக்க பன்னிரண்டு மாநில உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய வரைவை அறிவிக்கிறார்கள். இதற்கு முந்தைய வழிகாட்டல் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு அடியிலும், புதிய முறைகளை கண்டுபிடித்து வெற்றிகரமாக எல்லோரும் விட்டுக்கொடுத்து வரைவு வந்து விட்டது.
'இந்த வரைவு ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களால் தேர்ந்தடுக்கப்பட்ட பிரநிதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்' என்று முடிவு செய்து தேர்தல் நடக்கப் போகிறது. 'புது அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களின் அதிகாரங்களைப் பிடுங்கி நடுவண் அரசுக்கு மிக அதிக சக்தியைக் கொடுத்து விடும்' என்று எதிர்ப்பாளர்கள் பிரச்சாரம் ஆரம்பிக்கின்றனர். ஜார்ஜ் வாஷிங்டனும், பெஞ்சமின் ஃபிரான்ங்கிளினும் புது அரசமைப்புச் சட்டத்து ஆதரவு கொடுத்தார்கள் என்ற மதிப்பு இருந்த போதும், நியாயமான ஐயங்களைத் தீர்க்க The Federalist என்ற தலைப்பில் அறுபதுக்கும் மேலான கட்டுரைகளை முறை வைத்துக் கொண்டு மூன்று பேரும் எழுதினார்களாம்.
அப்படி அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து உருவான அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள இன்று இந்தக் கட்டுரைகளை நாடுகிறார்களாம்.
ஜார்ஜ் புஷ் போன்ற தலைவர்களையும் தாங்கிக் கொள்ளும் வல்லமை அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குக் கிடைத்திருப்பது இந்த உருவாக்கிய தலைவர்களின் உழைப்பும், அறிவுக் கூர்மையும்தான்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான வரலாற்றின் சிறு பகுதிகள் நாளிதழ்களில் ஏதாவது விவாதங்களில் படித்ததுதான். அரசியலமைப்பு உருவாக்கக் குழுவில் நடந்த விவாதங்கள் சட்டத்தைப் புரிந்து கொள்ள வழிகாட்டியாகப் பயன்படுத்துகிறார்கள்.
மீண்டும் அந்தக் கேள்வி! கடந்த ஐநூறு ஆண்டுகளில் தமிழ் மண்ணிலிருந்து மனிதப் பண்பாட்டுக்கு கொடையாக வந்த பங்களிப்பு என்ன?
சூர்யா தன்னுடைய கதை எழுதும் போது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு முறை திரைப்படத் துறையினருடன் ஏதோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரயிலில் திரும்புகிறார்கள். அப்போது அவர் சூர்யாவாக பிரபலமாகாத சரவணன்.
தூங்கும் நேரம் வந்ததும் படுக்கையைத் தட்டிப் போட்டு தூங்க ஆயத்தம் செய்தாராம். அருகில் பிரகாஷ் ராஜ், 'உன்னால எப்படித் தூங்க முடியுது சரவணன், எதுவுமே செய்யல வாழ்க்கையில, இன்றைக்கும் சிவகுமார் மகன் என்றுதான் உனக்குப் பேர், எப்படி நிம்மதியா தூங்க முடியுது' என்றாராம். அன்றைக்கு வந்த தாக்கம் அவரை கண் மூடவிடாமல் இங்கு வரை கொண்டு வந்திருக்கிறதாம்.
தூங்குவதை விடுங்கள். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசிப் பேசி மாய்கிறோமே, எது எப்படிப் போனால் எனக்கென்ன என்று நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறோமே, நமக்கெல்லாம் நிம்மதியா இதை எப்படிச் செய்ய முடிகிறது. வள்ளுவனையும், பழைய சிற்பங்களையும், மறைந்து கொண்டே போகும் கலைகளையும் மறந்து விட்டு அமெரிக்கர் அமைத்துத் தந்த பாதையில் வேகமாக ஓடுவது நம்மால் எப்படி முடிகிறது?
ஒரு பாரதியை இந்த மண்ணோடு மக்கிப் போக விட்டவர்கள்தானே நாம்? இன்னும் எவ்வளவு நாள் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறோம்? தமிழகம் தலையெடுக்கும் வரை, கடைக்கோடித் தமிழன் தன் திறமைகளைப் பயன்படுத்தி நல்வாழ்வு பெறும் வரை நம் நேரம் நமக்கு உரிமை என்று வாளாவிருப்பதைக் கைவிட வேண்டும்.
எதை எதையோ எழுதினால் வராதவர்கள் எல்லாம் வந்து கல்லெறிந்து விட்டுப் போகிறார்கள். நமக்கு நம்முடைய அற்ப சுகங்கள் முக்கியம்.
நீடித்த அமைதிக் காலத்தில் 'எந்த நேரத்தில் குண்டு வந்து விழுமோ, நம் வாழ்க்கையைப் பாதுகாக்க எப்போது உயிர் போகுமோ என்று பதட்டம்' இல்லாமல் வாழும் வாழ்க்கை கிடைத்த நமக்கு இருக்கும் பொறுப்புகளைப் பற்றிக் கவலையே இல்லை.
ஆஸ்திரேலியாவில் இந்தியப் படங்கள் சக்கைப் போடு போடுகின்றனவாம். தமிழ் நாடும் இந்தியாவில்தானே இருக்கிறது? ஆஸ்திரேலியாவின் இந்தியத் தூதரகம் இந்தியாவுக்கும்தானே? ஏன் இந்தியப் படங்களின் வரிசையில் தமிழ் படம் எதுவும் இல்லை. இல்லாவிட்டாலும் போகிறது, அப்படி இந்திப் படத் துறைக்கு வெளியே தெலுங்கும், தமிழும், மலையாளமும் இருக்கிறது என்று ஒரு குறிப்பு கூட ஏன் கொடுக்க முடியவில்லை?
பிராங்க்பர்ட் புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர் நாடு இந்தியாவாம். எத்தனை தமிழ் எழுத்தாளர்கள் போனார்கள்? ஆங்கிலமும் இந்தியும்தான் இந்தியாவா? இது இந்திய அரசின் தவறா, தமிழக அரசின் தவறா, தமிழ்ப் பதிப்பாளர்களின் தவறா?
ஐரோப்பாவிலும், அமெரிக்க நாடுகளிலும், கனடாவிலும் வாழ்ந்து அந்த நாடுகளின் வளத்தைப் பார்க்கும் தமிழர்கள் தமிழ் நாட்டிலும், மலேசியாவிலும வாழும் கோடிக் கணக்கான வாய்ப்புக் கிடைக்காத தமிழர்களைப் பற்றி, ஈழத்தில் தம் இருப்புக்காகப் போராடும் சகோதரர்களைப் பற்றி சிந்திப்பதைத் தவிர வேறு என்ன வேலை இருக்க வேண்டும்? தூக்கமே வரக்கூடாதே ஐயா?
இன்றைக்குக் காலையில் ரீடர்ஸ் டைஜ்ஸ்டில் நரேந்திர ஜாதவ் என்ற மகாராஷ்டிர தலித் பற்றியக் கட்டுரை, நேர்முகம். சேரியில் பிறந்து, போராடி, முன்னேறி, அம்பேத்காரைப் பின் தொடர்ந்து ஐம்பது வயதுகளில் பெருமதிப்பான நிலை அடைந்திருக்கிறார். அவரது அப்பாவின் உறுதியால் எல்லா சகோதரர்களும் படித்து முன்னேறியிருக்கின்றனர்.
காந்தி தலித்துகளை குழந்தைகள் போல நடத்தினார் (patronizing). 'அரிசனம் என்ற பெயரே எங்களுக்கு அவமானம் தருவது, நாங்கள் மட்டும் கடவுளின் குழந்தைகள் என்றால் மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் படைப்புகளா' என்று அவரது அப்பா சொல்வாராம். காந்தியும் அம்பேத்காரும் பல நிலைகளில் ஒருவரையொருவர் தீவிரமாக எதிர்த்தாலும் இருவருக்குமிடையே மதிப்பு இருந்ததாம்.
இந்தியாவின் முதல் அமைச்சரவைப் பட்டியலை நேரு காந்தியின் கையில் கொடுத்த போது, அம்பேத்கரின் பெயர் அதில் இல்லை என்று தெரிந்ததும், அதை திறக்காமலேயே திருப்பிக் கொடுத்து விட்டாராம் காந்தி.
அசுரன் சொல்வது போல காந்தி சூழ்நிலைகளால் மட்டுப்படுத்தப்பட்டவர். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய பிறப்பையும் வளர்ப்பையும் தாண்டி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நினைக்க முடிந்தது காந்தியின் சிறப்பு. 'உயர்ந்த' சாதியில் பிறந்த வேறு யாருக்கும் (நேரு உட்பட), கற்பனையில் கூடத் தோன்றியிராத அன்பும், சமத்துவமும் காந்தியின் கொடை. அதில் அவர் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் 'அவர் முயற்சி செய்யவில்லை, மனதளவில் கபடு கொண்டிருந்தார்' என்று மட்டும் சொல்ல முடியாது என்று தோன்றுகிறது.
எட்டரை மணி இணைய உரையாடலும் நீளமாகப் போனது. joelonsoftware.com என்று வலைப்பூ எழுதும் (2000ம் ஆண்டு முதல்) ஜோயல் ஸ்பால்ஸ்கி ஆரம்பித்த நிறுவனம் FogCreek. இந்த வலைப்பூவின் ஒரு பகுதியாக வேலைக்கு ஆள் கேட்கும் பகுதியை ஆரம்பித்துப் பார்க்கலாம் என்று ஓரிரு மாதங்கள் முன்பு ஆரம்பித்தார் ஜோயல். முதல் மாதத்தில் நானூறுக்கும் மேல் விளம்பரங்கள் வந்தனவாம். ஒரு லட்சம் டாலருக்கும் மேலான வருமானம்.
திறமையும், கடின உழைப்பும் மட்டும்தான் வேண்டும். வேறு எல்லாம் அடுத்த பட்சம்தான்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)