வாழ்க்கையின் நிகழ்வுகளில் பலவற்றில் நாடகத்தன்மை இருப்பதாகத் தோன்றுகிறது. நாட்களை வாழும் போது அப்படி உணரா விட்டாலும் திரும்பிப் பார்க்கும் போது தாவல்கள் நிறைய இருந்திருக்கின்றன.
மற்ற விஷயங்களைப் பற்றி இன்னொரு நேரத்தில் பேசலாம். இப்போது பிஎஸ்ஜி லெதர்லிங்க்.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்வுகள் நிறைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு சாங்காயை விட்டு சென்னை வந்து சேர்ந்திருந்தேன். என்ன செய்ய வேண்டும் என்பது மனதில் திடமாக இருந்தது. பிஎல்சி வேலையிலிருந்து விலகிய பிறகான ஆறு மாதங்களில் அந்த முயற்சிகளைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். இப்போது சென்னையில் குறைந்த செலவில் செய்ய முடியும்.
விமானத்தில் இறங்கி மவுண்ட் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு விடுதியில் கொண்டு விட்டார் ஆட்டோக் காரர். அங்கு 2-3 நாட்கள் தங்கியிருந்தேன். யாரிடமும் நான் திரும்பி வந்த விபரத்தைச் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் கல்லூரி நாட்களிலிருந்து நெருங்கிய நண்பனுக்கு மட்டும் தொலைபேசினேன். அவனும் உடனேயே வந்து பேசிக் கொண்டிருந்து விட்டு 'விடுதியில் தங்கியிருந்தால் செலவு நிறைய ஆகும், ஒரு வீடு பார்க்கும் வரை கூடப் படித்த ஒருவருடைய வீட்டில் இப்போது யாரும் இருப்பதில்லை. போய் தங்கிக் கொள்ளலாம்' என்று சொன்னான்.
அப்படிப் பேசி அடையாறில் கொஞ்ச நாள் கழித்தேன். அந்த நேரத்தில் வீடு தேடும் படலம். ஒரு ஞாயிற்றுக் கிழமை இந்து நாளிதழில் அண்ணா நகர் பகுதி (Aல் ஆரம்பித்தது) விளம்பரங்களைப் பார்த்து இரண்டு பேரிடம் பேசினோம். முதல் வீடு அவ்வளவு நிறைவாக இல்லை. இரண்டாவது வீடு அண்ணா நகர் 9வது பிரதான சாலையில் - சாந்தி காலனி சாலை அருகில் ஒரு அடுக்குக் குடியிருப்பில். முதல் மாடியில். வீடுகள் எல்லாம் ஏதோ அள்ளித் தெளித்தது போல கட்டப்பட்டிருந்தன.
ஒரு முன்னறை, பெரிதாக விரிவாக இருந்தது. மூன்று அறைகள், சமையலறை. ஒரு அறை அலுவலகத்துக்கு, இரண்டுஅறைகள் குடும்பத்துக்கு. அன்றைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது பிஎஸ்ஜி லெதர்லிங்குக்கு.
9வது சாலைக்கும் 8வது சாலைக்கும் இடையே இணைக்கும் தெருவில் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி. காலையில் 8 மணி முதல் 9 மணி வரை, மதியம் 1 மணிக்கு மேல் கல்லூரிப் பெண்கள் கும்பலாக சாலையை நிறைப்பார்கள். தளத்துக்கு நான்கு வீடுகள். நாங்கள் இருந்த வீட்டுக்கு இடது பக்கம் எப்போதுமே மூடியே இருந்த வயதான தம்பதியினர். வலது பக்கம், கல்லூரியில் படிக்கும் இரண்டு பெண்களுடன் ஒரு குடும்பம். எதிர்ப் பக்கம் ஆரம்ப வகுப்புகளில் படிக்கும் பெண்ணின் குடும்பம்.
பணி செய்ய ஒரு மேசையும் நாற்காலியும் வாங்கிக் கொண்டேன். மேசை இன்றைக்கும் அலுவலகத்தை அலங்கரிக்கிறது. 6 அலுவலக மாற்றங்களிலும் தாக்குப் பிடித்து மெருகு குறையாமல் இருக்கிறது. நாற்காலி மெருகு இழந்து கைப்பிடியின் மேல் ஒட்டுகள் எல்லாம் போனாலும், எனது இருக்கைக்கு தோதுவாக இன்றைக்கு பயன்படுகிறது.
சாங்காயிலிருந்து கொண்டு வந்திருந்த கணினிக்கு திரை ரிச்சி தெருவில் வாங்கினேன். 17" திரை. பிஎல்சியிலிருந்து வாங்கியிருந்த சோனி மடிக்கணினி இன்னொருவருக்கு.
தோல் துறையில் உலக வணிகத்தை ஒருங்கிணைக்கும் மென்பொருள் தளம் உருவாக்க வேண்டும் என்பது கனவு. அதற்கான திட்டம் புரிந்த வகையில் செய்து கொண்டிருந்தேன். இணையத்தில் ஒரு வழங்கியில் மென்பொருளை வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்கள் இணையம் மூலம் தமது கணக்கை அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம். மாதா மாதம் 5000 ரூபாய், அல்லது $150 கொடுத்தால் போதும். ஆரம்பத்தில் ஒரு கட்டணம்.
ஒவ்வொரு நிறுவனமும், தமது வாடிக்கையாளர்கள் மற்றும் தாம் பொருள் வாங்குபவர்களுக்கு பரிமாற்றம் பற்றிய விபரங்களை இந்தப் பயன்பாடு மூலம் தெரிவிப்பார்கள். முதல் வாடிக்கையாளர் பயன்படுத்த ஆரம்பித்ததும், தனது விற்பனை விபரங்களை பயன்பாட்டில் உள்ளிட்டு, அறிக்கைகளை இணையம் மூலம் பார்ப்பார். தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தொடர்பான விற்பனை விபரங்களை மட்டும் பார்ப்பதற்கு அனுமதி அளிப்பார். இணையத்திலேயே இருப்பதால் வாடிக்கையாளர் உலகில் எங்கிருந்தாலும் விபரங்களை பார்த்துக் கொள்ளலாம்.
ஒரு தோல் நிறுவனம் - 10 வாடிக்கையாளர்கள் என்று வைத்துக் கொண்டால், நமது வாடிக்கையாளர் 10 புதிய பயனாளர்களை கொண்டு வருவார். அவர்கள் பயன்பாட்டின் சேவையை பார்த்து நிறைவடைய வேண்டும்.
தோல் வாங்கும் ஒவ்வொரு நிறுவனமும் பல நிறுவனங்களிடமிருந்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். 'ஒரு சப்ளையர் இது போல இணையம் மூலம் நமக்குத் தகவல் தருவது எவ்வளவு வசதியாக இருக்கிறது' என்று பார்த்து மற்றவர்களையும் இதே போல தகவல் தரும்படி தூண்டுவார்கள். அப்படி மற்றவர்கள் லெதர்லிங்கை அணுகும் போது அவர்களுக்கும் பயன்பாட்டை அமைத்துக் கொடுத்து மாதக் கட்டணம் வாங்கிக் கொள்வோம்.
வைரல் மார்கெட்டிங் என்று சொல்லப்படும் வாய்வழியாக பரவும் தன்மை கொண்ட சேவை. இப்போது புதிதாக சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தாம் பொருள் விற்கும் நிறுவனங்களுக்கெல்லாம் அணுகல் வழங்குவார்கள். வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும்.
இதை யார் ஏற்றுக் கொள்வார்கள்?
கல்லூரியில் ஓராண்டு முன்பு படித்தவர், டாட்டாவில் சேர்ந்து வேலை பார்த்தவர் அப்போதும் இப்போதும் டாடா நிறுவனத்தில்தான் இருந்தார். ஜனவரி தோல் கண்காட்சிக்கு முன்னதாக அவரை பார்க்க முடிந்தது. அவர் 'தான் தோல் வாங்கும் ஒரு தோல் நிறுவன உரிமையாளர் நமது கல்லாரி பட்டதாரிதான். இது போன்ற புதிய நுட்பங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார். அறிமுகப்படுத்துகிறேன்' என்று சொல்லியிருந்தார்.
அப்மா லெதர்ஸ் - செல்வராஜ். தோல் கண்காட்சியில் சுற்றிக் கொண்டிருக்கும் போது எதிரில் வந்தார். இவரும் அறிமுகப் படுத்தினார். அலுவலகத்தில் வந்து பாருங்கள் என்று சொல்லி விட்டார். உருண்ட முகம், பெரிய உருவம், மென்மையான பேச்சு. கல்லூரியில் படிக்கும் போது பெரிய தாதாவாக இருந்தாராம். அவரே பல முறை சொல்லியிருக்கிறார். 'பிற்காலங்களிலும் கோபம் நிறைய வரும், ஆனால் அடக்கப் பழகிக் கொண்டேன்' என்றார்.
தோல் கண்காட்சியில் தயாராக இருக்க வேண்டும் என்று 17000 செலவில் professional algorithm என்ற வேளச்சேரியில் இருந்த நிறுவனத்தில் ஆரம்ப வடிவமைப்பை நிரலாக்கிக் கொண்டோம். அதற்கான html பக்கங்களை நான் உருவாக்கி தந்திருந்தேன். அவர்களிடமிருந்து நிரலையும், தரவுத்தள வடிவமைப்பையும் வாங்கி நாம் தொடர்ந்து உருவாக்கலாம் என்று ஆரம்பித்திருந்தேன்.
படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சித்தப்பா பையன், நண்பன் ஒருவனின் தம்பி. இவர்கள் அவரவர் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். இணையத்தில் நமது சேவையை விற்கும் போது, வேலை செய்வதை ஏன் இணையம் மூலம் ஒருங்கிணைக்க முடியாது? வாரா வாரம் ஓரிரு நாட்களில் சந்தித்துப் பேசிக் கொள்வோம்.
செல்வராஜ் சாரை ஒரு நாள் அலுவகத்தில் சந்தித்து எப்படி நமது பயன்பாடு அவருக்குப் பயன்படலாம் என்று விளக்கினேன். அதை விட நான் சீனாவில் இருந்த தொடர்புகளை வைத்து அவரது தோல்களை விற்க உதவி செய்ய முடியுமா என்று பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. காசு எதுவும் தர வேண்டாம், பயன்படுத்திப் பாருங்கள் என்று மென்பொருளுக்குச் சொல்லி விட்டு, சீனத் தொடர்புகளுக்கும் உதவ ஒத்துக் கொண்டேன்.
அவரிடம் வாங்கிய 8000 ரூபாய்தான் பிஎஸ்ஜி லெதர்லிங்க் சம்பாதித்த முதல் தொகை. அது மென்பொருள் விற்பனைக்காக இல்லை, சீன வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்காக. அதன் பிறகு மென்பொருளையும் பயன்படுத்த ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அலுவலக உதவியாளரை வரும் ஆர்டர்களை எல்லாம் உள்ளிட வைத்தார். மாலையில் வீட்டிலிருந்த படியே அறிக்கைகளை பார்க்க முடிகிறது என்றார். தனது இத்தாலிய வாடிக்கையாளருக்கு ஒரு அணுகல் கொடுக்கவும் முயற்சித்தார். எங்களை அறிமுகப் படுத்தி வைத்த நண்பர் மூலமாக டாடாவுக்கும் தோல் விற்றுக் கொண்டிருந்தார். அந்த நண்பருக்கும் ஒரு கணக்கு ஏற்படுத்தச் சொன்னார். அவருக்கு இருந்த ஆர்வமும் முன் முயற்சியும் அவரது வாடிக்கையாளர்களுக்கு இல்லை.
அதற்கிடையில் விரிவடைந்திருந்த மென்பொருளில் சரக்கு விபரங்களை உள்ளிடலாம் என்று ஆரம்பித்து அதில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மாதா மாதம் பணமும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு நின்று போனது.
இரண்டாவது வாடிக்கையாளரையும் அறிமுகப்படுத்தியது டாடா நண்பர்தான். அவர் கூடப் படித்தவர்கள், (எனக்கு ஒரு ஆண்டு மூத்தவர்கள்) நிறுவனம் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது தொழிற்கூடத்துக்குப் போய் இணையத்தில் பயன்பாட்டைக் காட்ட முயற்சித்தேன். இணைய இணைப்புக்கே ராணிப்பேட்டையில் முனகியது தொலைபேசி. 14400 bps வேகத்தில் விருப்பமிருந்தால் பக்கங்களை காட்டும் இணைப்பு. எதுவும் உருப்படியாகக் காட்டி அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்த முடியவில்லை.
அவர்களது தொழில் விபரங்களை விரிதாளில் போடுவதற்கான ஆலோசனைகள் சொல்லி அவற்றை அமைத்தும் தந்தேன். சில நாட்கள் போய் வந்திருப்பேன். ஒரு நாள் அவரே அழைத்து செய்த வேலைக்கு எவ்வளவு காசு தர வேண்டும் என்று கேட்டு 10000 ரூபாய் அனுப்பி வைத்தார். அவர்கள் சொந்த தொழிற்சாலைக்கு மாறிய பிறகும் மீண்டும் அணுகி, நமது மென்பொருளை பரவலாக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். தொழிற்சாலை முழுவதும் கணினிகள் அமைத்து இணையம் மூலமாக இல்லாமல் உள்ளுறை வழங்கி மூலம் பயன்படுத்தினார்கள். அவர்களிடமும் நிறைய வேலை செய்தோம்.
மூன்றாவதாக, சென்னையில் இருந்த பெரிய நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை சந்திக்கும் வாய்ப்பு. லெதர்லிங்கின் நோக்கத்தைச் சொன்னவுடன் அவருக்கு பயனுள்ளதாகப் பட்டது. 'நம்ம ஹாங்காங் முகவர் இது போலத்தானே கேட்கிறார்' என்று சொல்லி முயற்சிக்கச் சொன்னார். அவர்கள் கணினித் துறை அலுவலர் ஒரு மாத தகவல்களை உள்ளிட்டு அறிக்கைகளை எடுக்க வேண்டும். பல நாட்கள் போய் தரவு உள்ளிடச் சொல்லி முயற்சித்தோம். யாரும் சரிவர ஆர்வம் காட்டவில்லை. உரிமையாளரை அதன் பிறகு சந்திக்கவே இல்லை. இணைய இணைப்பும் சரியாக இல்லை.
செய்த வேலைக்கு ஒரு பைசா கூட தராத நிறுவனம்.
இதற்கிடையில் உதவிக்கு இருந்த இரண்டு பேரும் பணி முறை ஒத்து வராமல் தத்தமது வழியில் போய் விட்டார்கள். முழு நேர வேலைக்கு ஆள் வேண்டும் என்று professional algorithmsல் நமக்கு நிரல் செய்து தந்த அரவிந்திடம் யாராவது தெரிந்தால் அனுப்பி வைக்கச் சொன்னேன்.
ஞானவேலும், லட்சுமி நாராயணனும் சேர்ந்து மென்பொருள் மேற்பயிற்சி பெற்றிருந்தார்கள். எனக்கு ஒருவர் வேண்டும், மாதச் சம்பளம் 5000 ரூபாய் கொடுக்கலாம. இரண்டு பேரும் சேர்ந்து வேலை பார்க்க விரும்பினார்கள். ஆளுக்கு 2500 என்ற பிரித்துக் கொடுத்து இரண்டு பேரையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். எனக்கும் சம்மதம்தான்.
அப்மா லெதர்ஸ், சென்னையின் பெரிய நிறுவனம் இரண்டிலும் இவர்கள் நிறைய வேலை செய்தார்கள். பெரும்பாலான வேலை இணையம் மூலம் பயன்பாட்டை சரி செய்து கொள்வதுதான். இது போக அப்மா லெதர்சில் சொல்லச் சொல்ல மென்பொருளில் நிறைய மாற்றங்களை செய்து வந்தோம்.
2002ம் ஆண்டு முழுவதும் இப்படியே ஓடியது. கல்லூரி மூத்த மாணவர் ஒருவரின் அறிமுகத்தின் மூலம் இன்னொரு பெரிய பாரம்பரியமிக்க நிறுவனத்தின் உரிமையாளரை சந்திக்க முடிந்தது. அவருக்கும் இணைய வழி பயன்பாட்டில் நல்ல ஆர்வம். ஆம்பூரில் தனது தொழிற்சாலையில் நடப்பதை சென்னையிலிருந்தே பார்த்துக் கொள்ளலாம். பல சந்திப்புகள், பல மாதங்களுக்குப் பிறகு அதை எல்லாம் விட்டு சின்னதாக சரக்கு விபரங்களை உள்ளிட பயன்பாடு செய்து தரச் சொன்னார். விலையும் ஆகக் குறைவாக வைத்துக் கொண்டார். அதே விலையை மூன்று நிறுவனங்களுக்கு என்று நீட்டித்துக் கொண்டார்.
அவர்களுக்காக ஆம்பூர் போய் பல மாதங்கள் வேலை செய்தேன். (2003, 2004ல்) அவர்கள் இடத்திலேயே உட்கார்ந்து நிரல் எழுதிக் கொண்டிருந்தேன். மொத்தம் 33000 ரூபாய் கொடுத்தார்கள். அதன் பிறகு தொடர்பு விட்டுப் போனது.
2003ம் ஆண்டு ஜனவரி மாதம் தோல் கண்காட்சியில் பங்கேற்றோம். கையில் இருந்த சேமிப்புகளை எல்லாம் துடைத்து செலவழித்து 2002ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. 2003ல் உறவினர்கள், நண்பர்களிடமிருந்து கடன் வாங்குதல் ஆரம்பித்தது. அன்று கொடுத்த நண்பன் இன்று வரை கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.
2003ல் வருமானம் வருவது மிகக் குறைவாகவும், செலவுகள் கொஞ்ச கொஞ்சமாக அதிகரிப்பதுமாக கழிந்தது. அப்போதும் வீட்டிலிருந்துதான் இயங்கிக் கொண்டிருந்தோம். பெரிய செலவுகள் என்பது வாடிக்கையாளர்களை சந்திக்கப் போவது, சம்பளம், தொலைபேசி கட்டணம், இணைய வழங்கிக்கான வாடகை. இது போக எனது வீட்டுச் செலவுக்கான எனது சம்பளம்.
அடுத்து வெளியில் முதலீடு தேடலாம் என்று ஆரம்பித்ததில், ஒரு நாளிதழ் விளம்பரம் மூலம் முதலீடு செய்ய வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த ஒருவரின் தொடர்பு. அவர் 5 லட்ச ரூபாய் கடனாகத் தருவார் என்று ஒப்பந்தம். அவரும் நிறுவனத்திலேயே வேலை செய்வார்.
வீட்டில் அலுவலகம் இருந்தால் சரிப்படாது என்று அவரது கருத்து. ஏற்றுக் கொண்டேன். அரும்பாக்கம், ஜெய்நகர் முதல் சாலையில் ஒரு சின்ன இடம். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மிக அருகில். அங்கு நகர்ந்தால் வீட்டுக்கு அவ்வளவு வாடகை ஏன் கொடுக்க வேண்டும் என்று வீட்டையும் மாற்றிக் கொண்டோம். மொத்த வாடகை செலவு 1000 ரூபாய்தான் கூடியது. வீட்டை குழந்தைகளின் பள்ளிக்கு அருகில் மாற்றிக் கொண்டதால் கொண்டு விட்டு அழைத்து வரும் பணியும் குறைந்தது.
சாங்காயில் இருக்கும் போதே மின்னஞ்சல் மூலம் அறிமுகமான செந்தில்நாதன் சீன மொழி வகுப்புகள் நடத்த அழைத்து வாரா வாரம் அதை செய்து கொண்டிருந்தேன். அது வளர்ந்து தோல் வேதிப் பொருட்கள் விற்கும் நிறுவனம் ஒன்றில் சென்னையிலும் வகுப்புகள் நடத்தினேன். அவர்கள் தொடர்பு மூலம் துறையில் விபரம் பரவியது.
சீன மொழியில் பெயரட்டை, நிறுவன விபரங்களை மொழி பெயர்க்க வேண்டும் என்று தேவைகள் வந்தன. அந்த சேவையையும் விளம்பரப்படுத்தி விற்றுக் கொண்டிருந்தோம்.
நிறுவனத்தை தனியார் பங்கு நிறுவனமாக பதிவு செய்தோம். 5 லட்ச ரூபாயை ஒழுங்காக முதலீடு செய்து சம்பாதித்து விட வேண்டும். சீனாவுக்குப் போய் மென்பொருளை விற்க முயற்சிக்கலாம் என்று போய் வந்தேன். சந்தித்த தோல் நிறுவன உரிமையாளர் ஆர்வம் இருப்பது போல சொன்னாலும், அதன் பிறகு எதுவும் நகரவில்லை. கிட்டத்தட்ட 1 லட்ச ரூபாய் அந்த பயணத்தில் செலவு. 2004 தோல் காட்சிக்கு இன்னொரு லட்சம் செலவு.
2004 பிப்ரவரியில் பணமெல்லாம் கரைத்தாகி விட்டது. அந்தக் கண்காட்சியில் கூடுவாஞ்சேரியில் புதிதாக மீள ஆரம்பித்திருந்த நிறுவனத்தில் மென்பொருள் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. 2004லிருந்து இணையம் வழியாக மட்டுமில்லாமல், உள்ளுறை இணைப்பாகவும் மென்பொருளை நிறுவிக் கொடுக்க ஆரம்பித்திருந்தோம்.
சீன மொழி வகுப்புகளுக்காக வாணியம்பாடியில் இருக்கும் ஒரு தோல் தொழிற்சாலைக்கு போனேன். வாரா வாரம் சனி ஞாயிறுகளில் வகுப்பு. வார இறுதிகள் எல்லாம் அங்கு கழிந்தன. அந்தத் தொடர்புகள் மூலம் 2 நிறுவனங்களில் மென்பொருள் வாய்ப்புகள்.
சனி, மார்ச் 13, 2010
புதன், மார்ச் 10, 2010
சுமையிறக்கம்
முற்பகல் பதினொரு மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் போக வேண்டும். அதற்கான தயாரிப்புகள்தான் காலையில் செய்ய வேண்டியிருந்தது. ஆறரை மணிக்கு அலுவலகத்தில் உட்கார்ந்து வருகைப்பதிவு செய்து விட்டேன். அதன் பிறகு முந்தைய நாள் நிரப்பாமல் விட்டுப் போன வேலை விபரங்களை பதிவு செய்தல், செய்யாமல் இருந்து விட்ட பணிகளை மறு திட்டமிடுதல், என்று ஒரு மணி நேரம் ஓடியது.
பேசுவதற்கு தேவையான ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும். சென்ற முறை பார்த்த போது ஒவ்வொரு துறைக்கும் என்ன முடித்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். அவரது தேவையை போலவே துறை வாரியாக வேலை விபரங்களை பட்டியலிட்டேன். பட்டியல் என்றால் அட்டவணைகளாக நெடுக்குக் கட்டங்களில் விபரங்களைக் காண்பிப்பது அவருக்குப் பிடிக்காது, இடமிருந்து வலமாக தாவிப் படிப்பது சிரமம், மேலிருந்து கீழாக எழுதுங்கள் என்று ஒரு முறை சொல்லியிருந்திருக்கிறார்.
முடித்து விட்ட பணிகள் முதல் பகுதி - மூன்று மாதங்களாக செய்த வேலை. நடந்து கொண்டிருக்கும் வேலைகள் இரண்டாவது பகுதி - அடுத்த சில நாட்களில் முடித்து விடுவோம். மூன்றாவது பகுதியில் தொடர்ந்து என்னென்ன செய்யலாம் என்றகுறிப்புகள்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் ஓடி விட்டது. அச்செடுத்து, மின்னஞ்சலும் அனுப்பி விட்டு நிமிர்ந்தால் எட்டே முக்கால். ஒன்பது மணிக்கு யாராவது வந்து விட்டால் அவர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பலாம். அதற்குள் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம். ஒரு சின்னஞ்சிறு கடையில் போய் ஆப்பம் 3 சாப்பிட்டுக் கொண்டேன். 12 ரூபாய்க்கும் காலை சிற்றுண்டி முடிக்கும் வசதி இருக்கத்தான் செய்கிறது. அதன் பிறகு தேநீர் 5 ரூபாய்.
அலுவலகத்துக்கு வந்து சொல்லி விட்டு பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன். சாலையின் வலது ஓரமாகவே நடந்து ஆழ்வார் திருநகர் பேருந்து நிறுத்தம் வரை வந்து சேர்ந்தேன். பேருந்தில் ஏறி போரூருக்கு சீட்டு. காரம்பாக்கத்தில் இறங்கி குறுக்குச் சந்து வழியாக போரூர் வங்கிக் கிளைக்குப் போய் காசோலையையும் கடிதத்தையும் கொடுத்து விட்டு நடந்தே நாற்சந்தி தாண்டி பூந்தமல்லி போகும் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன். நாற்சந்தியில் போக்குவரத்து நெரிசலை காத்திருப்பை தவிர்க்க முடிந்தது.
பூந்தமல்லி பேருந்தில் உட்கார இடம் கிடைத்தது. 9.50க்கு பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு விட்டார்கள். போக வேண்டிய நமச்சிவாயபுரத்துக்குப் போகும் பேருந்து நிற்கும் இடத்துக்கு வந்தேன். பேரம்பாக்கம் பேருந்தில் ஏற வேண்டும். மண்ணூர் வழி என்று போட்டு இன்னொரு பேருந்து சரியாக 10 மணிக்குக் கிளம்பி போனது. அது நமச்சிவாயபுரம் போகுமா என்று கேட்கக் கூட இல்லை.
வெயில் சுள்ளென்று அடித்தது. ஒதுங்கி நிற்க நிழற்குடை எதுவும் இல்லை. கடைகளின் கூரை அடியில் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு புறநகர் பேருந்து வந்தது. சாலையில் U திருப்பம் அடித்து இந்தப் பக்கம் நிறுத்தினார்கள். அடித்துப் பிடித்து ஒரு கூட்டமே ஏறி உட்கார்ந்தது. எல்லோருக்கும் உட்கார இடம். நடத்துனர் சுறுசுறுப்பாக எல்லோருக்கும் சீட்டு கொடுத்து விட, அடுத்த சில நிமிடங்களில் பேரம்பாக்கம் போகும் மாநகரப் பேருந்து சொகுசுப் பேருந்து வந்து கடந்து போனது. அது நகரத்திலிருந்து வருகிறது. சீட்டு வாங்கி விட்ட பிறகு பேருந்து மாற்றிக் கொள்ள மனமில்லை. அதிலும் உட்கார இருக்கை இருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஏறிப் போயிருந்திருக்க வேண்டும்.
பத்தே முக்காலுக்கு வண்டி எடுத்தார்கள். வண்டி மிகவும் மெதுவாகத்தான் ஓடியது. 11 மணிக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வருத்தம் தெரிவித்துக் கொண்டேன். கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக நேரம் வாங்கி விட்டு தாமதமாகப் போகிறேன். நேர மேலாண்மை எல்லாம் என்ன ஆச்சு? தேவையான இடைவெளி வைத்துதான் பயணங்களைத் திட்டமிட வேண்டும்.
போகும் வழியில் சாலையில் ஏதோ பால வேலை நடைபெறுவதால், பக்க வாட்டு நிலங்கள் வழியாக திருப்பி விட்டிருந்தார்கள். அதில் 10 நிமிடங்கள் கூடுதல் ஆகியிருக்கும். ஒரு வழியாக இறங்கும் இடம் வரும் போது தொலைபேசி அழைப்பு. நிறுத்தத்தைக் கோட்டை விட்டு கொஞ்சம் தள்ளி இறங்கி திரும்பி நடந்தோம். அதிலும் எனக்குக் குழப்பம்.
வெளி வாசலிலேயே நிறுத்தி தொலைபேசி உள் வாசலில் இருக்கும் காவல் அதிகாரியிடம் அனுமதி கேட்டுத்தான் போக விட்டார். அவர் சுறுசுறுப்பாக சீட்டு போட்டு அலுவலகத்துக்குள் அனுப்பி விட்டார். சந்திப்புக்குத் தயாரிப்பாக இருந்தார்கள். விவாத அறைக்குள் போய் காத்திருந்தோம். கீழே உற்பத்தித் தளத்தில்தான் இருக்கிறாராம். நமக்காகக் காத்திருந்து கடுப்பாகியிருப்பாரே என்று வருத்தம். தாமதத்து தகவலையும் வருத்தத்தையும் சொன்னதால் அவ்வளவு கோபம் இருக்காது.
வந்த உடனேயே வாய்மொழியாகவும் மன்னிப்புக் கேட்டேன். அதை ஒரு தலையசைப்பில் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒதுக்கி விட்டார். நேரம் தவறாமை என்பது மிக மிக முக்கியமானது. அடுத்தவர்கள் நம்மைக் காத்திருக்க வைத்தாலும், நம்மால் யாரும் காத்திருக்க நேர்ந்து விடக் கூடாது.
கணினியில் திரையை இணைத்து முடித்த வேலை விபரங்களை காட்டினேன். அவர் கேட்டிருந்த முறையில் விபரங்கள் இருந்தன. செய்து முடித்த வேலைகளும் கச்சிதமாக இருந்தன. எந்த விதமான சங்கடமான கேள்விகளும், நிகழ்வுகளும் இல்லாமல் அடுத்த மூன்று மணி நேரம் ஓடின. செய்து முடித்த ஒரு பகுதிக்கான இணைப்பு விட்டுப் போயிருந்தது. அதை தொலைபேசி இணைப்புக் கொடுக்கச் சொல்ல வேண்டியிருந்தது. அதைத் தவிர என்ன செய்வோம் என்று சொல்லியிருந்தோமோ அவற்றை எல்லாம் காட்ட முடிந்தது.
எது எதை முடிக்க வில்லை என்ற பட்டியலையும் காட்டி விட்டேன். நமது மென்பொருள் உருவாக்கத் தரப்பில் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறோம். அந்த உழைப்பும், தரமும் திரையில் தெரிந்தது. 'போன தடவையை விட இந்தத் தடவை ரொம்ப நல்லா இருக்கு சார்' என்று அவர் தரப்பு ஆமோதிப்பும் கிடைத்தது. அவர்கள் பக்கத்தில் மற்று தொழிலகங்களில் ஸ்ரீபெரும்புதூரில் பயன்படுத்துவதைப் போல பயன்படுவது இல்லை. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பேசினோம்.
இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு மற்றவர்களைப் போகச் சொல்லி விட்டு அவர்கள் குறைகளில் ஓரிரண்டையும் சொல்லி விட்டு நமக்குத் தர வேண்டிய பணம் பற்றிய தாளை கொடுத்தேன். 'அடுத்த வாரம் பார்க்கலாம், இன்னும் கொஞ்சம் வேலைகளை முடித்து விடுங்கள்' என்று இழுத்தவரிடம். 'முடிக்க வேண்டிய சிறு பணிகளை அடுத்த 2 நாட்களில் முடித்து விடுகிறோம். மூன்று மாதங்கள் செய்த வேலைகளுக்கான தொகையை முழுமையாகக் கொடுத்து விடுங்கள்' என்று கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னதும் ஒத்துக் கொண்டார். 'நீங்கள் எல்லா வேலைகளையும் முடித்து விடுங்கள், அடுத்த புதன் கிழமை முழுத் தொகையையும் வாங்கிக் கொள்ளுங்கள்'. எனக்கு இருக்கும் அவசரத்தில் இன்றைக்கே காசு கிடைத்தால் தேவலை. 20ம் தேதிக்குள் முழுவதும் கிடைத்து விடுவது பெரிய உதவிதான்.
புறப்படும் போது இரண்டரை மணி. மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கவில்லை. பசியும் வந்து அடங்கியிருந்தது. கீழே தொழிலக பொதுமேலாளரிடமும் சொல்லி விட்டு வெளியில் வந்தோம். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது வந்த ஒரு பேருந்து நிறுத்தாமலேயே போய் விட்டார்கள். நிழற்குடையின் கீழ் உட்கார்ந்திருக்கும் போது இன்னொரு பேருந்து வருவதை கவனித்து கை காட்டாமல் தவற விட்டோம். சாலையோரமாகக் காத்திருக்கும் போது தொழிற்சாலையிலிருந்து ஒரு ஊர்தி வெளியில் வந்தது. பார்த்து நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். பேசிக் கொண்டே பூந்தமல்லி வந்து சேர்ந்து விட்டோம். அங்கிருந்து குமணன் சாவடி, அடுத்த பேருந்தில் விருகம்பாக்கம்.
மதிய உணவு அலுவலகத்தில். இரண்டு-மூன்று வாடிக்கையாளர் முறையிடல்கள். காலையில் போட்டிருந்த இடுகையில் பலூன் மாமாவின் கருத்து. நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படாத எனது கனவு உலகத்தை செயல்படுத்த முயன்றால் இப்படித்தான் முடியும் என்று சொல்லியிருந்தார். நான் மாறி விடவே போவதில்லைதான். நெருப்பைத் தொட்டு சூடு பட்டாயிற்று. இனிமேல் கொஞ்சம் கவனமாக இன்னும் தெளிவாக பேசி செயல்படுவோம் அவ்வளவுதான்.
வாடிக்கையாளர் முறையிடல்களில் இரண்டை முடித்து விட்டு, திட்டமிட்டிருந்த பணி ஒன்றை ஆரம்பித்தேன். அடுத்த 2 மணி நேரங்கள் விறுவிறுப்பாக ஓடியது. இடையில் மற்றவர்கள் செய்யும் பணிகள் குறித்த சின்னச் சின்ன விவாதங்கள். ஏழு மணிக்கு மேல் தொலைபேசி அவர்கள் நிறுவனத்தில் நமது மென்பொருளை செயல்படுத்த உரிமையாளரிடம் பேசினானாம். அவர் மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். அடுத்த வாரத்தில் சந்தித்துப் பேசலாம். அதற்குள் இந்த வாரத்தில் அவர்களது கணக்கியல் மற்றும் கணினி மேலாளர்களிடம் பேசி விட வேண்டும்.
வேதிப் பொருட்கள் வினியோகம் செய்யும் நிறுவனங்களிலிருந்து மூன்றாவது அழைப்பு கடந்த வாரங்களில். எப்போதோ போட்ட விதைகள் இப்போது முளைக்க ஆரம்பித்திருக்கின்றன.
வேலைக் குறிப்புகளை எல்லாம் எழுதி முடித்து விட்டு கணினியைக் கட்டும் போது ஒன்பதரை மணி இருக்கும். தொலைபேசி நிலைமையைச் சொல்லி தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியையாவது கொடுத்து விடக் கேட்டுக் கொண்டேன். இன்று நிறுவனக் கணக்கில் செலுத்தி விடுவதாக உறுதி அளித்தான்.
இந்த வாரத்துக்குள் எல்லா பணிகளையும் முடித்து விட்டால், அடுத்த வாரம் மேலும் புதிய தேவைகளைக் கேட்டுப் பெற்று வேலை செய்யலாம். கதவுகள் திறந்து விட்டது போன்ற ஒரு உணர்வு. வாடிக்கையாளர்கள் நமது மென்பொருளை சேவையை நேசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தி விட்டிருந்திருக்கிறது. நினைத்தது, சொன்னது நிச்சயம் நடக்கும்.

செவ்வாய், மார்ச் 09, 2010
ஊதியம்
'வேலைக்கு சேர்ந்து கொள்பவர்கள் நிறுவனத்தின் மேலாளர்கள் போல உரிமையாளர்கள் போல செயல்படுவார்கள். எல்லோரும் வேலை செய்து வரும் பணத்தில் ஊதியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பணம் வரவில்லை என்றால் ஊதியமும் இல்லை' என்பது என்னுடைய கோட்பாடு, எண்ணமாக இருந்திருக்கிறது.
அதை யாருமே ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்தது. 'வேலை செய்தோம், சம்பளம் வேண்டும்' அந்த வேலை எப்படி இருந்திருந்தாலும் மாத இறுதியில் சம்பளம் ஒருவரது உரிமை.
'நானும் அப்படித்தான் இருந்தேனோ' என்று நேற்றைக்கு நினைத்துக் கொண்டிருந்தேன். டாட்டாவிலும், பிஎல்சியிலும் வேலை பார்க்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் சம்பளம் தராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?
டாட்டாவில் சம்பளம் வாங்கும் போது, தேவாசில் வேலை பார்க்கும் போது, 'நாம் செய்யும் வேலை இந்த சம்பளத்துக்கு நியாயமானதுதானா' என்ற கேள்வி உறுத்திக் கொண்டே இருக்கும். ஆகக் கூடுதல் எவ்வளவு உழைக்க முடியும் எப்படி எல்லாம் நிறுவனத்தில் நமது மதிப்பை காட்ட முடியும் என்று முயன்று கொண்டே இருப்பேன். கடைசி வரை தேவாசிலும், சென்னையிலும் சம்பளம் என்பது ஒரு சுமையாக, கடனாகவே தெரிந்தது.
சென்னையில் 5 மாதம் தங்கியிருக்க வேண்டியிருந்த நேரத்தில் தேவாசிலிருந்து என்னை இட மாற்றம் செய்திருக்கவில்லை. சென்னை அலுவலகத்தின் கணக்காளர், மாதச் சம்பளம் போக இங்கு தங்கும் ஒவ்வொரு நாளைக்கும் தினப்படி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கருத்து சொன்னார். கிட்டத்தட்ட சம்பளத்தை விட ஒன்றரை மடங்கு படி வாங்கியிருக்கலாம்.
'இங்கு அக்கா வீட்டில் தங்கியிருக்கிறேன். சொந்த ஊரில் சாப்பிட்டு சுகமாகிருக்கிறேன். இதுக்குப் போய் ஒரு நாளைக்கு 300 ரூபாய் என்று எப்படி கோரி பெறுவது' என்று அந்த வெளியூர் பயணப்படியை தொடவே இல்லை. மாதா மாதம் வழக்கமான சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டிருந்தேன். அவ்வளவு பெரிய நிறுவனத்தில் விதி முறைகளின் படி கூடுதல் பணம் வாங்கிக் கொண்டிருந்தால், மேலாளர்களுக்குத் தெரிந்து என் பணி மாற்ற உத்தரவு கொடுப்பதற்கே இரண்டு மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். அதற்குள் பல ஆயிரம் ரூபாய்கள் சேர்த்திருக்கலாம். செய்ததில்லை.
சாங்காய்க்குப் போனால், திடீரென்று மாதா மாதம் 1500 டாலர்கள் சம்பளம்.இந்தியாவில் வாங்கிய சம்பளத்தை விட 5 மடங்கு. அப்போதும் தவிப்புதான். 'வெளிநாட்டிற்கு அனுப்புவது, இரண்டு ஆண்டுகள் நல்ல ஓய்வெடுத்து பணம் சேர்த்து விட்டு வருவதற்குத்தான்' என்று பலர் அறிவுரை சொல்லி அனுப்பியிருந்தார்கள். அலுவலகமும் அப்படித்தான் இருந்தது. சின்ன அலுவலகம், எனக்கு முன்பு செஸ்டர் என்பவர் இருந்தார். இரண்டு பேர்தான் உட்கார வேண்டும்.
நினைத்திருந்தால், அந்த இரண்டு ஆண்டுகளை கற்பதற்கும், பணம் சேர்ப்பதற்கும் பயன்படுத்தியிருந்திருக்கலாம். செஸ்டரும் பெரிய முனைப்புடையவர் இல்லை. நாள் முழுவதும் அலுவலகத்தில் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். மதியம் சாப்பாடு வரும், சாப்பிட்டு விட்டு இன்னும் கொஞ்ச நேரம் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டும். அலுவலகத்தில் இரண்டு பணி மேசைகள், ஒரு சோஃபா, ஒரு வட்ட மேசை இருந்தன.
செஸ்டர் சாங்காயின் மிகப்பெரிய மிதிவண்டி நிறுவனத்திலிருந்து மிதிவண்டிகளை தான்சானியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒருங்கிணைப்பை செய்து கொண்டிருந்தார். அந்த அளவுக்கு அவரது சம்பளம் நியாயப்படுத்தப்படுகிறது. நான் என்ன செய்வேன்?
'சும்மா உட்கார்ந்திரு, தோல் விற்கப் பார்க்கலாம்' என்றுதான் எல்லா திசைகளிலிருந்தும் அறிவுரை. என்னால் பொறுக்க முடியவில்லை.
யாருக்காவது நிறுவனத்தை அறிமுகப்படுத்தி தொலைநகல் அனுப்பலாம் என்றால் கையால் எழுதித்தான் அனுப்ப வேண்டும். அலுவலகத்தில் கணினி கிடையாது. இரண்டாவது மாதச் சம்பளம் முழுவதையும் கொடுத்து கணினி ஒன்றை வாங்கி விட்டேன். அதற்கு செஸ்டர்தான் பேரம் பேசினார். கொடுத்த விலைக்கு லாயக்கில்லாத கணினிதான். ஆனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
அந்த சமயத்தில் சாங்காய் வந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் என்னைப் பார்த்து கடும் சொற்களைச் சொன்னார். 'செஸ்டருடன் போய் தொழில் செய்வதற்கு எதற்கு இவ்வளவு சம்பளத்தில் ஏன் இங்கு உட்கார்ந்திருக்க வேண்டும். இரண்டு பேரும் தனித்தனியாக வேலை பார்க்க வேண்டும்' என்றார். சியாமல் குப்தா என்ற அந்த பெரியவர் என்னுடைய மகிழ்ச்சியின்மையையும், செஸ்டரின் வரையறைகளையும் உணர்ந்திருக்க வேண்டும். என்னுடைய உடனடி மேலாளருக்கு ஈயாடவில்லை. அவர்தான் 'செஸ்டருடன் போய் தொழில் கற்றுக் கொள்கிறேன். சீன மொழி தெரியாததால் தனியாகப் போக முடியாது' என்று சொல்லச் சொல்லியிருந்தார்.
சீன மொழி கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு கல்லூரியில் போய் சேருவதற்கான ஏற்பாடுகளைக் கூட செய்து கொண்டு வந்தேன். அதற்கான பணமும் சரி, கணினிக்கான பணமும் சரி நிறுவனம் தர வேண்டும் என்று ஒரு நிமிடம் கூட யோசித்திருக்கவில்லை. கையில் காசு இருக்கிறது, செலவு செய்வோம் என்றுதான் செயல்பட்டேன்.
எம்டி சொன்னது நியாயம்தானே, மொழி தெரியாமல் என்ன சாதிக்க முடியும். உள்ளூரில் ஒருவரை நமது மொழிபெயர்ப்பாளராக வைத்துக் கொள்ளலாம். எனக்கே தண்ட சம்பளம் இதற்கு மேல் இன்னொருத்தரை சேர்க்கிறோம் என்றால் என்ன ஆகும். அந்த மாதிரி கேள்விகள் எழாமலேயே, அப்படி மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளத்தை நான் கொடுப்பேன் என்று நானாகவே முடிவு செய்து கொண்டேன்.
நமக்கு ஒன்று தேவை என்றால் அதற்கான கதவு திறந்துதான் விடும். தரையடி ரயிலில் வரும் போது என்னை அணுகி ஆங்கிலத்தில் பேசிய ஒரு சீன இளைஞரின் பெயரட்டை கையில் இருந்தது. அவரது தொலைபேசி எண்ணில் அழைத்து, எனது தேவையைச் சொன்னேன். 'ஆங்கிலம் தெரிந்த யாராவது எனக்கு மொழிபெயர்ப்பாளராக பணி புரிய கிடைப்பார்களா?'
அவர் ஒரு தில்லாலங்கடி பேர்வழி. அடுத்த ஒரு வாரத்துக்குள் சாங்காய் ஜியாவ்தோங் பல்கலைக்கழகத்து மேலாண்மை படிக்கும் மாணவ கூட்டத்துக்குள் கொண்டு சென்று விட்டார். ஒரு ஞாயிறு பிற்பகலில் ஒரு மணி நேர சந்திப்பில் இறுதி ஆண்டு மாணவி ஒருவரை பகுதி நேர வேலைக்கு ஏற்பாடு செய்து கொண்டேன். ராயும் மற்றவர்களும் சொன்ன கணக்கை ஏற்றுக் கொண்டு, வாரம் 400 RMB என்று ஊதியம் நிர்ணயம் செய்து கொண்டேன். மாதத்துக்கு கிட்டத்தட்ட 200$. எனது சம்பளத்தில் 15% அதில் செலவானது.
அதைப்பற்றி எதுவும் சிறப்பாக நினைக்கவில்லை. அந்தப் பெண் வந்து புதிதாக நான் வாங்கியிருந்த கணினிக்கு இணைய இணைப்பு பெற்று தந்தாள். தோல் விற்க வேண்டும் என்று தனக்குத் தெரிந்த தொடர்புகளுக்கெல்லாம் தொலைபேசி எந்த ஊரில் தொழில் நடக்கிறது என்று துப்பு பிடித்தாள். டாட்டா நிறுவனத்தை சாங்காயில் அறிமுகப்படுத்துவதற்கு ஆங்கிலத்தில் நான் எழுதிக்கொடுத்த கடிதங்களை சீன மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்தாள்.
அவள் வேலையில் சேர்ந்து ஓரிரண்டு மாதங்களுக்குள் சாங்காய்க்கு அருகிலேயே இருந்த ஊருக்குப் போய் தோல் ஆர்டர் கொண்டு வந்து விட்டோம். ஆர்டர் கிடைப்பது வரை திரும்பி வரப் போவதில்லை என்று உறுதியுடன் போயிருந்தேன். முதல் நாள் எல்லா நிறுவனங்களையும் சுற்றிச் சுற்றி வந்தேன். இரண்டாவது நாளும் அப்படியே நகர்ந்தது. மாலை நெருங்கும் போது மெங்னு என்ற நிறுவனத்துக்குப் போனால் அதன் இயக்குனர் தோல் தேவை, வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டார்.
எப்படியோ பிஎஸ்ஜி லெதர்லிங்கில் சேரும் ஒவ்வொருவரும் என்னைப் போலத்தான் நினைப்பார்கள் என்று கருதியிருந்தேன். யாரையும் சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் என்று நினைக்கவே இல்லை. நம்மைப் போலவே அவர்களும் சிந்தித்து வளம் உருவாக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது எனது பொறுப்பு என்று உறைத்ததே இல்லை.
வேலை செய்ய இடம் கொடுத்திருக்கிறோம். எல்லா வாய்ப்புகளையும் தடையின்றி தந்திருக்கிறோம். மாதா மாதம் இவ்வளவு சம்பளம் என்று நிர்ணயித்திருக்கிறோம். ஒவ்வொருவரும் தனது சம்பளத்தை சம்பாதிக்க முனைந்து நிறுவனத்தை வெற்றிப் பாதையில் செலுத்துவார்கள் என்பது எனது எளிமையான கணக்காக இருந்தது. ஏதாவது சறுக்கல்கள் வரும் போது ஒருவராக இல்லாமல் 20 பேர் சேர்ந்து அதை சிடுக்கு விடுவித்து பணம் வரும் வழி கண்டு விடுவோம் என்று நம்பிக்கை இருந்தது.
சம்பளம் கொடுக்கத் தாமதமானால், செலவுக்குத் தவித்து விடக் கூடாதே என்ற பதட்டம் எப்போதுமே இருந்தது. சம்பளம் வேலை செய்பவர்களின் பிறப்புரிமை என்று எனக்கு என்றுமே தோன்றியதில்லை. எப்போதும் தோன்றி விடப் போவதுமில்லை என்றுதான் படுகிறது. வேலை செய்து தனது சம்பளத்துக்கான மதிப்பை நிறுவனத்துக்கு ஈட்டித் தந்தால் சம்பளத்துக்கு தகுதியுடையவராகிறார்.
உலகின் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் அப்படியிருக்கவில்லை. அந்தப் பாடத்தை தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்கள், யாருமே என்னைப் போல நினைத்திருக்கவில்லை என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது.
நான் அவர்கள் நிறுவனத்துக்குக் கடன் பட்டிருக்கிறார்கள் என்று நினைத்திருக்க, என்னை கடனாளி என்று ஒவ்வொருவரும் நினைத்திருக்கிறார்கள். ஏதோ பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்து நமக்கு உதவி செய்திருக்கும் உணர்வில்தான் இருக்கிறார்கள்.
தூங்கி அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழுந்து விட்டேன். பல் தேய்த்து விட்டு முந்தைய நாளே ஊற வைத்திருந்த துணிகளை துவைத்துப் போட்டு முகம் மழித்து குளித்து அலுவலகத்துக்குக் கிளம்பி விட்டேன். போகும் வழியில் முடிவு தெரிந்தது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)