2008 பிறந்து முதல் மாதமும் முடியப் போகிறது. நிகழ்ச்சிகள் நிறைந்த மாதம்தான். பொங்கல் விடுமுறைகள், குடியரசு தினம் சனிக்கிழமை வர அதை ஒட்டி இரண்டு நாட்கள் விடுமுறைகள் என்று ஒரு பக்கம். நிறுவனத்தில் மேலும் மாற்றங்கள் வேர் பிடிப்பது ஒரு புறம். உள்ளத்திலும் மேலும் மேலும் அகழ்வுகள்.
நேற்றைக்கு 'ரிலையன்சு தோல் துறையில் நிறுவனம் ஆரம்பித்து அதற்கு மென்பொருள் சேவை அளிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்' என்று அதியமான் கேட்டிருந்தார். நினைத்துப் பார்த்திருக்காத ஒரு கோணம்தான்.
1. இத்தகைய புறக்கணிப்பை மேற்கொண்டது திடீரென்று செய்தது இல்லை. பல மாதங்களாக வெளியில் சொல்லாமல் புறக்கணித்து பார்த்து செய்ய முடியும் என்று பார்த்துதான் எழுதினேன். எழுதி வைத்ததையும் பல வாரங்கள் கழித்துதான் வெளியிட்டேன்.
இவ்வளவு அலசல் கூட போதாது என்பது தெரிகிறது. ஒரு கோணம் விட்டுப் போனது. இது போன்ற முடிவுகளை வெளிப்படுத்தும் முன்பு இன்னும் முழுமையாக பல கோணங்களில் அலசிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. இந்தக் கேள்வியை இன்னொரு விதமாகவும் கேட்கலாம். ரிலையன்சு போல ஒரு நிறுவனம் தோல் துறையில் இருந்தால் என்ன செய்வேன்? அல்லது நமது வாடிக்கையாளர்களில் யாராவது ரிலையன்சு போல செயல்பட ஆரம்பித்தால் என்ன செய்வேன்?
3. மூன்று கேள்விகளுக்குமே விடை ஒன்றுதான். ரிலையன்சு போன்ற நிறுவனம் என்ற கேள்விக்கே இடமில்லை. பல நிறுவனங்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலும், ரிலையன்சைப் போல ஒரு கார்பொரேட் செயல்முறையாக, என்னவானாலும் பரவாயில்லை, நாம் பணம் ஈட்டி விட வேண்டும் என்று செயல்படும் நிறுவனங்கள் அவ்வளவு சீக்கிரம் வளர்ந்து விடப் போவதில்லை. அப்படியே ஒரு நிறுவனம் அதை விட மோசமாக செயலாற்ற ஆரம்பித்தால், பெரிதாக வளராமலேயே மறைந்து விடும் சாத்தியங்கள்தான் அதிகம்.
ரிலையன்சு எல்லா தர்ம தடைகளையும் உடைத்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டு போகிறது. அதனால் ரிலையன்சு என்பது மிகச் சிறப்பாக உணர்ந்து புறக்கணிக்கப்படும் ஒன்று.
4. தோல் துறையில் அப்படி ரிலையன்சு போன்ற பெரு நிறுவனங்கள் நுழைவதற்கான சாத்தியங்கள் வாய்ப்புகள் குறைவு. அப்படியே நுழைந்தவர்களும் சிறு/நடுத்தர அளவில் மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவில்தான் செயல்பட முடிந்திருக்கிறது. அதனார் ரிலையன்சு தோல் துறையினுள் வர மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
5. அப்படி ரிலையன்சு தோல் துறையில் நுழைந்தால் என்ன செய்வேன்?
தனிப்பட்ட முறையில் அவர்களுடன் எந்த விதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்பதுதான் விடையாக இருக்கும். அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
அப்படி அவர்கள் வந்து விட்டால் அவர்களுக்கு சேவை வழங்குவதை எப்படித் தவிர்ப்பேன்? அது நிறுவனத்தின் மற்றவர்கள் மீது கொள்கையை திணிப்பது போல் ஆகி விடாதா? முதலீட்டாளர்கள், பணி செய்பவர்கள் என்று எல்லோருக்கும் ஏற்படும் இழப்புக்கு என்ன பதில்?
நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் நாம் கடைப் பிடிக்கும் நேர்வழிகள் பெரும் அடித்தளமாக இருக்கின்றன.
'எவனோ கொடுத்தான் என்று 50 ரூபாய் ஒரு நாள் வாங்கிட்டு வந்துட்டா, அன்னைக்கு வீட்டுக்கு வரும் போதே ஏதோ குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அதை அப்படியே கொண்டு டாக்டருக்கு கொடுத்து விட்டு வந்தோம். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பணத்தைத் தொடுவதேயில்லை'
ஏன் நியாயத்துக்குப் புறம்பான வழியில் பணம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு அம்மாவின் விளக்கம். சின்ன வயதிலேயே இதைக் கேட்டு வளர்ந்தது கூட இது போன்ற செல்வம் ஈட்டுவதை நினைத்துப் பார்க்க முடியாமல் செய்திருக்கலாம். யாராவது கையூட்டு அல்லது அன்பளிப்பு கேட்கும் போது 'நம் பணத்தை பிடுங்குகிறானே' என்பதை விட 'இந்தப் பணத்தை எடுத்துப் போனால், இவருக்கு வீட்டில் என்ன குழப்பம் ஏற்படுமோ' என்று அனுதாபம் விஞ்சி நிற்கிறது. அதனால் மறுத்து விடுவதும் எளிதாகி விடுகிறதோ!
அதே போல் 'ஒரு நிறுவனத்துடன் உறவு வைத்துக் கொண்டு பணம் ஈட்டுவது நிறுவனத்தின் அடிப்படையைக் குலைத்து வளர்ச்சியை முறித்து விடும்' என்பது என் நிலைப்பாடாக இருக்கும். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கலாம். எல்லோரையும் மனம் மாற்றம் செய்யும் அளவுக்கு வலுவான நடைமுறை காரணங்கள் என்னிடம் இல்லாமல் போய் விடலாம்.
அதனால் 'நிறுவனம் ஆரம்பித்து இவ்வளவு நாள் சரியாக வழி காட்டினார். இப்போது ஒத்து வராது. வேறு யாராவது பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நேரம் வந்து விட்டது' என்று குழுவினர் முடிவு செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட நாளில் நான் முழு நிறைவுடன் பொறுப்பில் இருந்து இறங்கி அடுத்து பொறுப்பேற்பவரிடம் விட்டு நகர்ந்து விடுவேன்.
அதியமான் சொன்னது போல கேனைத்தனமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். எல்லா சாதக பாதகங்களையும் அலசி மனதுக்குப்பட்ட வரை சரி என்று படுவதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
நேற்றைக்கும் எழுதி முடித்த பிறகு விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் உலாவல். திரும்பி வந்து துணி துவைத்து விட்டு, புதிதாக வாங்கியிருந்த பிளேடில் முகம் மழித்தல். குளித்து விட்டு 7 மணிக்குத் தயாராகி விட்டேன். கொஞ்ச நேரம் நாளிதழ். 7.30க்கு முகலிவாக்கம் வருவதாக சொல்லியிருந்தேன். இப்போதே கிளம்பினால் மிக சீக்கிரமாகப் போய் விடுவேன்.
சில நிமிடங்களுக்குப் பின் புறப்பட்டே விட்டேன். 7.15க்கு எல்லாம் முகலிவாக்கம் வந்து விட்டது. இப்போதே தொலைபேசினால் காலையில் எழுந்து தயாராகிக் கொண்டிருக்கும் அவரை அவசரப்படுத்தியது போல் இருக்கும். நல்ல பசி வேறு வந்திருந்தது. சாலையோரம் ஆரம்பித்து விட்டிருந்த ஒரு சின்னக் கடையில் போய் இட்லிகள். ஆறு இட்லி சாப்பிட்டு விட்டு எவ்வளவு என்று கேட்டால் 9 ரூபாய் வாங்கிக் கொண்டார்கள். கையில் 11 ரூபாய்கள் மட்டும்தான் சில்லறையாக இருந்தது. அப்புறம் 100 ரூபாய் நோட்டுகள். இட்லி விலை ஒன்று 2 ரூபாய் என்று இருந்தால் 'காலையிலேயே நூறு ரூபாயை தூக்கிக்கிட்டு வந்தா என்ன செய்வது' என்று கடிந்து கொள்வார்களே என்று நினைத்துக் கொண்டிருந்தது நடக்காமல் தப்பித்து விட்டேன்.
ஒன்றரை ரூபாய் இட்லியும் கிடைக்கத்தான் செய்கிறது.
7.35க்குத் தொலைபேசினால் அவர் இன்னும் தயாராகவில்லை. மெதுவாக அவர் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் போனேன். ஏழே முக்காலுக்கு வந்து விட்டார். பூத்தப்பேடு வழியாக நேராக அலுவலகம். 8 மணிக்கு என்னையும் சேர்த்து 6 பேர்தான் வந்திருந்தார்கள். மூன்று பேர் தாமதமாக வந்தார்கள். ஒருவர் மறந்தே போய் விட்டாராம். வரவேயில்லை.
8 மணிக்கெல்லாம் சரியாக ஆரம்பித்து விட்டோம். எந்தத் தயாரிப்புகளும் இல்லாமல் ஆரம்பித்து சரியான கேள்விகள் அதற்கான துணைக்கேள்விகள் என்று வழி நடத்தி மிக முக்கியமான பாடங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டார் ஒரு மணி நேரத்தில். இப்போது கொடுக்கும் பொருள்/சேவை முழுமையாக இருக்கிறதா? வாடிக்கையாளர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் கூறில் என்னென்ன விட்டுப் போயிருக்கிறது என்று ஆரம்பித்து சரக்குகளின் மதிப்பீடு, பல்வேறு பயனர்களுக்கு அணுகல் அனுமதிகள் கொடுப்பது, கணக்கியல் தொடர்பான பகுதி என்று அடையாளம் கண்டு கொள்ள வைத்தார்.
சரியாக 9 மணிக்கு முடித்து விட்டோம். அவரை மணப்பாக்கம் கொண்டு விட வேண்டும் என்று கிளம்பினோம். மணப்பாக்கத்தில் வங்கிக்குப் போக வேண்டும் என்று சொல்லியிருந்தார். விட்டு விட்டுக் கிளம்பி விடலாம் என்று நினைத்திருந்தேன். சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லி விட்டு வங்கிக்குள் போனவர், 'கணக்கட்டை வாங்குவதுதான் வேலை. முடிந்து விட்டது. இனி இதற்கு ஒளிநகல் எடுத்து ஆசிரமத்தில் கொண்டு வந்து தர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அது திட்டமிடாத எதிர்பார்க்காத வேண்டுகோள். மனம் சிணுங்கியது. எனக்கு கூடுதல் 20 நிமிடங்கள், அவருக்கு அதை விட பல மடங்கு பலன்கள் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒளிநகல் கடைக்குப் போக பயணம். அவர் மட்டும் போய் எடுத்துக் கொண்டு வந்தார்.
ஆசிரமத்துக்குள் அவர் போக நான் நுழைவாயில் அருகில் காத்துக் கொண்டிருந்தேன். பல நாடுகளைச் சேர்ந்த மனிதர்கள் உள்ளும் வெளியும் போய்க் கொண்டிருந்தார்கள். 'நீயும் எங்க ஆசிரமத்தில் சேருவதற்கு நேரம் வந்து விட்டது' என்று சில முறை சொல்லியிருக்கிறான். ஒவ்வொரு முறையும் உறுதியாக மறுத்து விடுவேன்.
'ஆன்மீகம் என்பது தனி மனிதர் தேவை. மிதமிஞ்சிப் போனால் ஒருவரை குருவாக வரித்து ஒருவர் - ஒருவர் இணைப்பு இருக்கலாம். இது போன்று கூட்டம் சேர்த்து மடம் வளர்ப்பதற்கும் மனவளத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு சமூக அமைப்பு. அதில் தவறான காரணங்களுக்காக சேருவதில் எனக்கு உடன்பாடில்லை'
மடங்களுக்கும் சாமியார் இயக்கங்களுக்குமான பொருளில்லாமையில் அடிப்படை இதுதான். 'வெளியில் இருந்து பழகுவதை விட ஒத்த மனதுடையவர்களுடன் உறவு வைத்து மனத்தைப் பண்படுத்துவது நல்லதல்லாவா' இப்படித்தான் நண்பனின் கடைசி வாதம் வந்தது.
'நகரெங்கும் காற்று மாசு அதிகம். அதற்காக நுங்கம்பாக்கத்தில் ஆக்சிஜன் பார்லர் என்று ஆரம்பித்து தூய்மையாக காற்றை சுவாசிக்க வசதி ஏற்படுத்தித் தருகிறார்கள். அது போன்ற வசதியில் போய் உடல் நலம் பேணுவது எவ்வளவு வேடிக்கையாகப் படுகிறதோ அதே போலத்தான் ஒரு அமைப்பில் சேர்ந்து ஆன்மீகத்தையும் மனவளத்தையும் பேணுவது எனக்குத் தோன்றுகிறது.' என்று ஒரே அடியாக முடித்து விட்டேன்.
'நீ சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் நாம் இருவரும் கருத்து மாறுபடுவதாக வைத்துக் கொள்வோம்' என்று அவனும் முடித்து விட்டிருந்தான்.
வெளியில் வரும் போது 'சிவா, எனது பணப்பையை எங்கோ தவற விட்டு விட்டேன்' என்று கலக்கத்துடன் சொன்னான். இவனுக்குக் கலக்கம் என்றால் முகத்தில் ஒரு சின்னச் சுழிப்பு, குரலில் நுண்ணிய மாற்றம் அவ்வளவுதான். உணர்ச்சி வசப்பட்டு பதறுவது, கத்துவது எல்லாம் சாத்தியமே இல்லாதவன்.
வந்த வழியைப் பார்த்துக் கொண்டே போனோம். கடைக்குள் போய்க் கேட்டால் அங்குதான் விட்டு விட்டு வந்திருக்கிறான்.
'எங்கோ செய்முறையில் பழுது. ஒளிநகல் செய்து விட்டு பணத்தைக் கொடுத்து விட்டு வந்திருக்க வேண்டும். இடையில் பர்சை திரும்ப எடுத்துக் கொள்ளாமல் போனது செய்முறை தவறு' என்று தரமேம்பாட்டு முறை தத்துவத்தைக் குறிப்பிட்டான். சில நாட்களுக்கு முன்தான் இதே விஷயத்தில் விவாதம் செய்திருந்தோம்.
'செய்முறை பிறழ்வு இல்லை. செய்பவரின் கவனக்குறைவு' என்றேன். 'என் கட்சி, என்னதான் அலசி ஆராய்ந்து செய்முறை வகுத்தாலும் அதைச் செய்யப் போகிறவர்களின் மனநிலையும் விருப்பமும் பொருத்தமாக இல்லா விட்டால் தரத்தை எதிர்பார்க்க முடியாது.'
'நீங்கள் என்னதான் செய்முறையைச் சீர்படுத்தினாலும், மக்களை மையமாகக் கொண்டு சிந்திக்க ஆரம்பிக்காதது வரை விளைவுகள் உங்கள் கையில் இருக்காது. சில இடங்களில் குழுவினரின் ஒருங்கிணைப்பு, குழு நட்புணர்வு உறுதியாக இருக்கும் இடங்களில் செய்முறை அடிப்படையிலான உங்கள் அணுகுமுறை வெற்றி தரும். ஒரு இடத்தில் அந்த மனிதக் கூறு சரியாக இல்லா விட்டால் முயற்சிகள் வீணாகித்தான் போகும். அதனால் செய்முறையை மையமாகக் கொண்டு செயல்படுவதை விடுத்து, செய்யப் போகிறவர்களை மையமாக வைத்து தரமேம்பாடு குறித்து யோசிக்க வேண்டும்' என்று விவாதித்திருந்தேன்.
இரண்டுக்கும் மேலோட்டமாகப் பார்க்கும் போது பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் அத்தகைய அணுகுமுறை மாற்றம் பெரும் மாறுதல்களை தரும் என்று தோன்றியது.
மணப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் விட்டு விட்டு ராமாபுரம் வழியாகவே அலுவலகம் திரும்பி வந்தேன். 10 மணிக்கு தொடங்க வேண்டிய பணி 10.30க்கு தொடங்கியது. அதற்கு கால் மணி நேரம் வெட்டு. 11.15க்கு காலை விவாதத்தைத் தவற விட்டவர். 'ஒரே மனக் குழப்பம் இரண்டு நாட்களாக' என்று சுருக்கமாக தனது சிக்கலைச் சொன்னார். உயர்ந்த மன உறுதி படைத்தவர்.
பழகிய சில மாதங்களுக்குள் நான் பகிர்ந்து கொண்ட கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு பல நிலைகள் மாறிவிட்டிருந்தவர். இப்போதும் ஓரிரு நிமிடங்கள் மட்டும் என் கருத்தைச் சொன்னேன். 'நம் கடமையை, நமக்குச் சரி என்று படுவதை நாம் செய்கிறோம். மற்றவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள் என்பது நம் கையில் இல்லை. அதனால் நம் வரை முழு முயற்சி செய்து விட்டு மற்றதைப் பற்றிக் கவலைப் படுவதை விட்டு விட வேண்டும்' அப்படியே உள்வாங்கி செயல்படுத்தி விடும் அற்புதப் பாத்திரம்.
பல நாட்களாக நச்சரித்து 'முதலில் தொழில் நுட்ப வழிமுறையை எழுதி வைத்துக் கொண்டு நிரல் எழுத வேண்டும்' என்று கற்றுக் கொடுத்திருந்தவரின் பணியைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருந்தது. அழகாக கச்சிதமாக எழுதியிருந்தார். அவருக்கும் தனது பணியின் அழகு நிறைவாக இருந்தது. அவரிடமும் சில நிமிடங்களிலேயே பேச்சு முடிந்து விட்டது.
8-9ஐ 12-1 என்று மாற்றியிருந்தவரிடம் பேச்சு. ஏற்றுக் கொண்ட பொறுப்பை நிறைவேற்ற முடியாததற்குக் காரணம், யாரும் தான் சொல்வதை கேட்காதுதான் என்றார்.
'மற்றவர்கள் நாம் சொல்வதை செய்யாமல் இருக்கிறார்கள் என்றால், ஒன்று நாம் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தேவைப்பட்டால் நம் தகவலை திருத்திக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களுக்கு சொல்லும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, சொல்வதை ஏற்றுக் கொண்டாலும் செய்வதற்கு வசதி சரியில்லாமல் இருக்கலாம். நாம் சொல்வதை செய்வதற்கான கருவிகள் வழிமுறைகளை எப்படி எளிதாக்குவது என்று சிந்திக்க வேண்டும்'
அரை மணி நேரத்துக்கு மேல் போனது. இவரும் நிறுவனத்தில் சேரும் போது வாய் திறந்து பேசவே மாட்டார். இப்போது பல படிகள் முன்னேறி விட்டிருக்கிறார்.
'குறிக்கோள் என்ன?' 'ஒரு ஆண்டில் இரண்டு படிகள் ஏறி விட வேண்டும்' 'இருபது ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும்?'
'குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டால்தான் போகும் பாதை பொருள் பொதிந்ததாக இருக்கும். சரியான முடிவுகளையும் எடுக்க முடியும். நடைமுறை காரணங்களுக்காக, சில நாட்களுக்கு குறிக்கோளுக்கு மாற்றான திசையில் போனாலும், அந்த உணர்வுடன் இருந்து முதல் வாய்ப்பில் சரிப்படுத்திக் கொள்வோம்.'
மற்றவர்களை குறை சொல்லும், சூழல் மீது பழி போடும் பேச்சாக ஆரம்பித்தது, சூழலும் மற்றவர்களின் செயல்பாடும் என்னால் பாதிக்கப்படுகிறது என்ற உணர்வு மாற்றம் வந்து விட்டதாகப் பட்டது.
ஒரு மணிக்கு யாரும் சாப்பிட ஆரம்பிப்பதில்லை. ஒன்றரை மணிக்கும் இல்லை.
வியாழன், ஜனவரி 31, 2008
புதன், ஜனவரி 30, 2008
பரவாயில்லையே!
இன்று ஜனவரி 30. பள்ளியில் படிப்பது வரை ஒவ்வொரு ஜனவரி 30லும் 11 மணிக்கு 2 நிமிடங்கள் எல்லோரும் எழுந்து நின்று மவுனம் கடைப்பிடிக்க வேண்டும். 11 மணிக்கு நகராட்சி சங்கு ஊதும். அது ஊதி முடிக்கவே ஒரு நிமிடத்துக்கு மேல் ஆகி விடும். அதன் பிறகு எழுந்து நிற்க வேண்டும். அடுத்த முறை சங்கு ஊதும் வரை நிற்க வேண்டும். பல தடவை, ஊத ஆரம்பிக்கும் போது எழுந்து நிற்கும் நாங்கள் ஊதி முடித்ததும் உட்கார்ந்து விடுவோம். எல்லோரையும் திரும்ப எழுந்திருக்க வைப்பதில் மவுனமாக இருக்க வேண்டிய நிமிடங்கள் கரைந்து போயிருக்கும்.
சங்கு ஊதுவதை ஒட்டி பள்ளியின் மணியும் அடிக்கும். அதை அடிப்பவர் கூட குளறுபடி செய்து விடுவார்.
எங்க பள்ளியில் மணி வெளிக் கதவின் நேர் எதிரில் இருக்கும் கட்டிடத்தில் நடுபகுதியில் இருக்கும். நாற்கரமாகக் கட்டப்பட்ட அந்த கட்டிடத்தில் ஒரு கரம் வெளிப்புறத்தை நோக்கி இருக்கும். இடது புற கோடியில் தலைமை ஆசிரியர் அறை. அடுத்து நூலகம். நடுவில் மேலே சொன்ன ஆலய மணி போன்று பெரிய வெண்கல மணி கூரையிலிருந்து தொங்கும் பகுதி. அதன் வலது புறம் வகுப்பறைகள். பெரும்பாலும் 10ம் வகுப்பு, 9ம் வகுப்பு பெண்கள் பிரிவுகள் அங்கு நடக்கும்.
நாற்கரத்தின் நடுப்பகுதியில் பூங்கா. பின்பக்கம் மற்றும் இடப்புறம் இருக்கும் கரங்களில் வகுப்பறைகள். வலது புறக் கரத்தில் தண்ணீர் தொட்டி. 12ம் வகுப்பில் மட்டும் இந்த நாற்கரத்தின் பின்பக்க கரத்தில் இருக்கும் வகுப்பில் படிக்க முடிந்தது.
இந்தக் கட்டிடத்தைச் சுற்றி பின்பக்கமும் வலது புறமும் விளையாட்டு மைதானங்கள். இடது புறம் ஒரு நடைபாதை. அதிலிருந்து கீழே இறங்கிப் போக படிகள். மேடு பள்ளமான நிலப்பரப்பில் அமைந்த பள்ளி. பள்ளிக்கு உள்ளேயே மூன்று அடுக்குகளாக நிலப்பரப்பு. புதிய கட்டிடம் என்று சொல்லப்படும் கட்டிடம் சரிவான பகுதியில் கட்டப்பட்டிருக்கும்.
12 ஆண்டுகள் படிக்கும் போது அவ்வளவு உயர்வாக எடை போடாத பள்ளி நிர்வாகம், கட்டட அமைப்பு, திட்டமிடல்களின் அருமை இப்போது புரிகிறது. அப்போது பிற பள்ளிகளுடன் ஒப்பிட்டு எப்போதும் தாழ்வு மனப்பான்மையோடுதான் இருப்போம். 'நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களை மட்டும்தான் எடுப்போம்' என்று வடிகட்டாமல், சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருக்கும் மாணவ மாணவிகளை ஏற்றுக் கொள்ளும் பள்ளி எங்கள் பள்ளி.
பள்ளியை நடத்திய சமூகத்தினர் பொதுவாக நல்ல வசதி படைத்தவர்கள். 'பள்ளி வீட்டுக்கு அருகில் இருக்கிறது, நம்ம பள்ளிக் கூடம்' என்ற பாசத்தில் கணிசமான எண்ணிக்கையினர் படிப்பார்கள். அதை விட அதிக எண்ணிக்கையினர், தூரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று வேறு பள்ளிகளுக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.
பெரும்பான்மையாக படிக்க வருவது நகரின் விளிம்பில் இருக்கு கிராமங்களைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்கள். ஆசிரியர்கள் மிகக் கடுமையாக நடந்து கொள்வார்கள். பையன்கள் நல்ல அடியும் தாங்குவார்கள். பொதுவாக சாதியைக் குறிப்பிட்டு யாரையும் எந்த ஆசிரியரும் திட்டியதாக நினைவில்லை. குழலி சொன்னது போல குறிப்பிட்ட சாதியினரை இழிவு படுத்தும்படி பேசியவர்கள் என்று இல்லா விட்டாலும். ஊர்களைக் குறிப்பிட்டு இளப்பமாகப் பேசியவர்கள் உண்டு.
மற்றபடி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆதிக்க சாதியினைச் சேர்ந்த மாணவர்களும் தூர தூர கிராமங்களிலிருந்து படித்தார்கள். ஒரு வகுப்பில் மேலே சொன்ன பிரிவினர் 7-8, 10-15, 7-8 என்று விகிதத்தில் இருப்பார்கள்.
அரசு உதவிப்பணத்தால் நடத்தப்படும் பள்ளி என்றாலும் நிர்வாகம் தனியார் அறக்கட்டளையின் கையில் இருப்பது. தேசிக விநாயகர் தேவஸ்தானம் மேல்நிலைப் பள்ளி என்று கோவிலின் அறக்கட்டளையின் பெயரால் நடத்தப்படுவதால், இந்துக்களின் பள்ளி என்று சொல்லப்பட்டு வந்தது. இந்துத்துவா இயக்கத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் குறிப்பிடும் எண்ணிக்கையில் இருப்பார்கள். அதிகார பூர்வமாக அத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கா விட்டாலும், அவற்றை தடுக்கவும் செய்ததில்லை.
மாவட்டம் எங்கும் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளுக்கிடையே எங்கள் பள்ளி ஒரு தீவு போல விளங்கியது. எங்கள் வீட்டுக்கு அருகில் கார்மல் பள்ளி மாணவர்களுக்கு, லிட்டில் ஃபிளவர் பள்ளி மாணவிகளுக்கு, இன்னொரு பக்கம் போனால் டதி பள்ளி மாணவிகளுக்கு, சற்று எட்டி ஸ்காட் கிருத்துவ பள்ளி. இன்னும் கொஞ்சம் நடந்தால் சேது லட்சுமி பாய் (SLB) பள்ளி. முதல் நான்கும் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்படுபவை. SLB அரசுப் பள்ளி. அப்படியே சுற்றி வந்தால் நகரின் மையத்துக்கு அருகில் ஜோசப்ஸ் கான்வென்ட், மாணவிகளுக்கு மிகப் பிரபலமான பள்ளி.
எங்கள் பள்ளியும் அருகிலேயே இருக்கு அரசால் நடத்தப்படும் கவிமணி ஆசிரியர் பயிற்சி பள்ளியும் இந்த வட்டத்தை நிறைவு செய்கின்றன. வடசேரி பக்கமாக போனால் SMRV என்ற பள்ளி. அதுவும் அரசுப் பள்ளிதான் என்று நினைவு.
அது 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை. அதன் பிறகு மெட்ரிகுலேஷன், ஆங்கில வழிப்பள்ளிகள் என்று நூற்றுக்கணக்கில் நடத்தப்படுகின்றன. கல்லூரிகளிலும் கிட்டத்தட்ட இந்தக் கதைதான்.
பல காலமாக எந்த ஒரு தொழில்முறை பட்டப் படிப்புக் கல்லூரிகளும் இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. திருநெல்வேலியில் அரசு பொறியியல் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி என்றுதான் போக வேண்டும். மாவட்டத்தில் தொழில்களோ வணிக முயற்சிகளோ பெரிதாகக் கிடையாது. நிலத்தில் விவசாயம் அல்லது கடலில் மீன்பிடிப்பு செய்பவர்கள் தவிர பிறர் பள்ளிகளில் ஆசிரியப் பணி, நகரில் பல்கிப் பெருகியிருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவப் பணி அல்லது அரசுப் பணி செய்வார்கள். வியாபாரம் என்றால் நகருக்கும் கேரளாவிலிருந்து வந்து வாங்கிச் செல்பவர்களுக்கும் சேவை செய்யும் உணவுப் பொருட்களை விற்கும் பணிதான்.
கயிறு திரிக்கும் தொழில் என்று பார்த்த நினைவு. நாகம்மாள் மில் என்று இருந்து மூடி விட்டதாகவும் நினைவு.
பல் தேய்த்து தயாராவதற்கு அரை மணி நேரம் பிடித்து விடுகிறது. 3.45க்கு எழுந்திருந்தாலும் 4.15க்குத்தான் எழுத உட்கார முடிகிறது. அப்படியே முடித்து விட்டு அடுத்த 20 நிமிடங்கள் வீட்டை ஒதுங்க வைத்து தூத்து முடித்தேன். 5.40க்கு உலாவப் புறப்பட்டேன். முந்தைய நாளை விடக் குளிர் வெகுவாகக் குறைந்திருந்தது. வேகமாக நடக்கும் போத வேர்க்கக் கூட ஆரம்பித்தது. ஞாயிற்றுக் கிழமை நடக்கப் போகும் போது கழுத்தைச் சுற்றி போர்வை சுற்றி, தலையில் முக்காடாகப் போட்டிருந்தேன். அந்தச் சூட்டில் வேர்த்தது.
திரும்பி வந்ததும். தரை துடைக்கும் வேலை. ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது. அடுக்களையில் வெள்ளை ஓடு ஒட்டப்பட்ட சுவர்களையும் சேர்த்து துடைத்தேன். காயப்போட்டு துணிகளிலிருந்து வடிந்த தண்ணீர் பட்டு உருவான கறைகள் போய் விட்டன. டிசம்பர் 29ம் தேதி நடத்திய நிகழ்ச்சியில் பயன்படுத்திய மினுக்குத் துகள்களில் ஒன்று இன்னும் தப்பிப் பிழைத்து இருந்தது.
ஆறரை மணிக்கு நாளிதழ் வந்து விழும் சத்தம். முகம் மழித்து விட்டுக் குளித்துத் தயாராகும் போது 7.10. நண்பரும் தயாராகி விட்டார். குடிதண்ணீர் பிடிக்க வெளியில் போனால், இறகுப் பந்து விளையாட்டு சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. 7-6 என்று சொல்லி விளையாடினார். முந்தைய நாள் 9-1 என்ற கணக்குகள் காதில் விழுந்தன. 'பரவாயில்லையே போட்டி பலமாகி விட்டதே' என்று சொல்லி வைத்தேன். மும்முரமாக தீவிரமாக விளையாடுகிறார்கள்.
ஏழரை மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட்டோம். 8 மணிக்கு நிமிடக் கச்சிதமாக சந்திக்க வேண்டியவர் வந்து விட்டார். 'அன்னைக்கே வேலை குறித்து சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி விட்டோமே, எதுக்கு திரும்பவும் பேசக் கூப்பிட்டீங்க' என்று ஆரம்பித்தார். இப்படி ஓரிரு நாட்கள் முன்னதாகவே நேரம் ஒத்துக் கொண்டு பேசுவது இரண்டு பேருக்குமே நல்லத் தயாரிப்பைக் கொடுக்கிறது.
'ஒரு வாரமாகவே குழுவில் சுணக்கமாக இருக்கிறது' என்று குழுவின் ஒரு உறுப்பினரைக் குறிப்பிட்டுச் சொன்னார். 'அவருக்கு எல்லாரோடும் சேர்ந்து வேலை பார்க்கத் தெரியவில்லை.' 'அவரைக் குறை சொல்லவில்லை' என்று சமாதானமும் சொல்லிக் கொண்டார். 'குறை நிறைகளை தெரிவிக்கும் பழக்கம் இருந்தால்தான் நாம் வளர முடியும். தேவையற்ற அடக்கம், கரிசனத்தால் ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தாமல் விட்டால் அது எல்லோரையும்தான் பாதிக்கும்'
அவர்கள் சேரும் போது கூடவே சேர்ந்த ஒருவரை 2 மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு திருப்பி அனுப்பி விட்டோம். 'அப்போ மனசுக்கு கஷ்டமாத்தான் இருந்தது. ஏன் அவரை சேர்த்துக்கலை என்றே புரியவில்லை' என்றார்.
'நம்ம அலுவலகம் ரொம்ப நல்லா இருக்கு. எங்க அண்ணன் நிறுவனம் போய்ப் பார்க்கிறேன். நண்பர்களிடம் பேசுகிறேன். அதிலெல்லாம் பார்த்தால் நம்மைப் போல நட்புடன் மகிழ்ச்சியாக வேலை பார்க்கும் சூழல் எங்குமே இல்லை என்று படுகிறது. உலகத்திலேயே நாமதான் பெஸ்ட்'.
'இப்படி ஒரு சூழல் தானாக அமைந்து விடவில்லை. ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுப்பதிலிருந்து, சரியான உணர்வுச் சூழலைத் தோற்றுவிக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டியிருக்கும். நமது வளர்ச்சியும், இதே போன்ற நல்ல சூழலை பாதுகாப்பதும் தானாக நடந்து விடாது. நாமெல்லாரும் சேர்ந்து செயல்பட வேண்டும்'
'யாருக்கும் ஈகோ வந்து விடக் கூடாது. இப்போ ஒருவர் செய்யும் பணியைப் பற்றித் தெரிந்து கொள்ள மற்றவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நம் பயன்பாட்டில் இருக்கும் பல விபரங்கள் நம்முடைய வாடிக்கையாளர்களுக்குப் போய்ச் சேருவதில்லை' என்று குறைப்பட்டுக் கொண்டார். அதை நிவர்த்தி செய்ய முன்முயற்சி எடுப்பதாகவும் சொன்னார். தினமும் ஒரு மின்னஞ்சல் என்று மென்பொருள் நுட்பங்களை குழுவினருக்கு அனுப்பலாம். வாரத்துக்கு 2 அல்லது மூன்று தகவல்கள் என்று வாடிக்கையாளர் பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பலாம் என்று திட்டமிட்டோம்.
10 மணிக்கு வாடிக்கையாளர் பயன்பாட்டு அலசலிலும் பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. வாடிக்கையாளர் சேவையில் தன் முனைப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தேவைகளை திட்டமிட்டு சொன்ன நேரத்தில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்படி செய்து முடிக்க வேண்டும் என்று அந்தப் பிரிவினர் விவாதிக்கும் கூட்டம் நடந்தது. அதில் சற்று நேரம் மட்டும் உட்கார்ந்து விட்டு மின்கட்டணம் கட்டவில்லை என்று நினைத்திருந்ததைத் தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்துக்குப் போனேன். அடுத்த மாதம்தான் கட்ட வேண்டுமாம்.
கண் கண்ணாடியை மாற்ற வேண்டும் என்பது நண்பனின் உத்தரவு. வங்கி பணம் எடுக்கும் மையத்தில் இயந்திரம் இயங்கவில்லை. அலுவலகம் திரும்பி விட்டேன். சாப்பாட்டு வேளையில் போரூர் போய் பணம் எடுத்து விட்டு கண்ணாடிக் கடைக்கு வந்தால் அங்கும் சாப்பாட்டுக்குப் போயிருந்தார்கள். கடைசியில் மாலையில் வடபழனியில் போய் ஒரு சின்னக் கடையில் கொடுத்து விட்டு வந்தேன்.
தோல் கண்காட்சியின் போது வினியோகிக்கத் திட்டத்துடன் ஒரு விளக்க கையேடு தயாரித்துக் கொண்டிருக்கிறோம். 'employees என்று போட்டா எல்லாரும் சண்டை போட வந்து விட்டார்கள். team members என்றுதான் எழுத வேண்டுமாம்'.
'தான் ஒரு சம்பளம் வாங்கும் ஊழியர் இல்லை. குழுவில் ஒரு உறுப்பினர்' என்ற உணர்வு பரவலாக இருக்கிறது.
இரண்டு நாட்களாக வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தவருக்கு உதவும்படியாக ஒரு திட்டத்தை வகுத்துப் பொறுமையாக மின்னஞ்சலில் எழுதி அனுப்பினேன். அவரும் அதே வேலையை வேறு முறையில் செய்ய முயன்று முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். மின்னஞ்சலைப் பார்த்தீர்களா என்று கேட்டதும் மகிழ்ச்சியாக அப்படியே செய்வதாக ஏற்றுக் கொண்டார்.
'தன் தந்தையை மதிக்கத் தெரியாத ஒருவர் வாழ் நாளில் எந்த ஆணையும் மதிக்கத் தெரியாமல் போய் விடும். தன் தாயை நேசிக்கத் தெரியாத ஒருவர் வாழ்நாளில் எந்தப் பெண்ணையும் நேசிக்க முடியாமல் போய் விடும்' என்று ஓஷோ சொல்லியிருப்பார். தந்தை, தாயுடனான நம் உறவு வாழ்வில் பிறருடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளுக்கு ஒரு வார்ப்புருவாக அமைந்து விடுகிறது.
திங்கள் மாலையில் போட்ட ரிலையன்சு குறித்த இடுகைக்கு தமிழ்மணத்தில் இணைக்காமலேயே இரண்டு பின்னூட்டங்கள். காலையில் இணைத்து விட்டால், நிறைய எதிர்வினைகள். குறைந்தது ஓரிருவருக்காவது மனதில் கேள்விகளை ஏற்படுத்தியிருக்கும். ஆதாரச் சுட்டிகளைக் கேட்டு ஒருவர் எழுதியிருந்தார்.
'ஆற்றிடம் கோபித்துக் கொண்டு கழுவாமல் போனவன்' என்று எழுதிய முகமிலிக்கு கடுமையாகவே பதிலளிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி பின்னூட்டங்கள் அனைத்துக்கும் பதில் போட்டு விட்டேன். திட்டமிட்டதில் வலைத்தளத்தை மேம்படுத்துவதாக வாக்களித்திருந்தது மட்டும் நடக்கவில்லை.
வலைப்பதிவுகளில் எழுதியிருப்பவற்றை பிறர் பயன்படுத்தும் உரிமை, அனுமதி குறித்து ஒரு குறிப்பு சேர்க்க வேண்டும் என்று தோன்றியது. யார் வேண்டுமானாலும் எடுத்து மாற்றி, திருத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். என் பெயரைக் குறிப்பிட வேண்டிய தேவை கூட அல்லை. நான் எழுதியது என்று குறிப்பிட்டு பயன்படுத்தினால் எந்தப் பகுதி மாற்றப்பட்டது என்று தெளிவாக குறித்து விட வேண்டும்.
வேண்டுமென்றே ஒரு கட்டுரையை எடுத்து பெயர் குறிப்பிடா விட்டாலும் நோக்கத்தைத் திரித்து இன்னொரு தளத்தில் போட்டால்? கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.
மாலையில் நான்கு மணிக்குப் பிறகு ஒரு எலுமிச்சை தேநீர். ஆறு மணிக்கு மேல் மதியம் மீந்திருந்த சோறு சிறிதளவு. வீட்டுக்கு வந்து சில முறுக்குகள். வந்ததும் குடிப்பதற்கு தண்ணீர் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தேன். காலையில் எழுந்ததும் அதில் ஒரு டம்ளர் குடித்துக் கொண்டேன்.
எழுந்திருக்கும் போது 4 மணி ஆகி விட்டிருந்தது. நாலரைக்குத்தான் எழுத உட்கார முடிந்தது. இதை முடித்ததும், நடக்கப் போதல். ஆறு மணிக்குத் திரும்பி வந்து துணி துவைத்துப் போட்டு விட்டு குளியலறை சுவர்களையும் கழுவி விட வேண்டும். ஏழே காலுக்குக் கிளம்பிப் போய் ஏழரை மணிக்கு நண்பனை அழைத்து வர வேண்டும். 8 மணிக்கு அலுவலகத்தில் பேசுவதற்கு ஏற்பாடு. 9.30, 10-11, 11.30, 12-1 என்று வேலைகள் திட்டமாகியிருக்கின்றன.

செவ்வாய், ஜனவரி 29, 2008
இன்னும் ஒரு விழிப்பு
திமிரும் வாய்க் கொழுப்பும் தலைக்கனமும் அதிகமாகி விட்டன.
'சில பேருக்கு ஒல்லியான உடல்வாகு இயல்பாகவே இருக்கும். எவ்வளவுதான் சாப்பிட்டாலும், உடற்பயிற்சியே இல்லாமல் இருந்தாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். என்னைப் போன்றவர்களுக்கு உடலை சரியான தோற்றத்தில் வைத்துக் கொள்வது போராட்டமாகவே இருக்கிறது. சாப்பிடுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும். அதை எல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும். ஓரிரு வாரங்கள் விட்டு விட்டாலும் உடல் பெருத்து விடும்'
இப்படி சொல்வாள் ஒரு நண்பி.
எனது பணிவும் அடக்கமும், சேவை மனப்பான்மையும் அதைப் போன்றதுதான். சிலருக்கு சேவை மனப்பான்மையும் பிறர் மீது அன்பும் இயல்பாகவே பொங்கிப் பெருகுகிறது. நான் அதற்காக உழைக்க வேண்டியிருக்கிறது. மனப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று எண்ணங்களின் போக்கைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. நகைச்சுவை, கிண்டலடிப்பது என்று எப்படி ஆரம்பித்தாலும் அடுத்தவர்களைப் புண்படுத்துவதிலேயே வந்து முடிகிறது
தொடர்ச்சியாக சோதனைகள் வரும் போதுதான் சமநிலை பராமரிக்கப்படுகிறது. கொஞ்சமும் வசதியான சூழல் வந்து விட்டால் கொடூர போக்குகள் அரும்பத் தொடங்கி விடுகின்றன.
நேற்றைக்குக் காலையில் திட்டமிட்ட நேரத்துக்கு எழுந்து திட்டமிட்டபடி நாட்குறிப்பு எழுதி, திட்டமிட்ட படி நடக்கப் போய் விட்டு வந்து, வீட்டை ஒதுங்க வைத்து, துணி துவைத்துக் குளித்து, திட்டமிட்டிருந்த நேரத்துக்கு முன்பே புறப்பட முடிந்தது. அதுவே மிதப்பின் அடித்தளமாகப் போய் விட்டது. 8 மணிக்குச் சந்திப்பதாக ஒருவருடன் ஏற்பாடு. ஏழரை மணிக்கு அலுவலகம் போய் விட்டேன். ஆள் வருவதற்கான அடையாளமே காணவில்லை. எட்டே காலுக்கு அருகில் கேரளா விடுதிக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வரும் போது வந்து விட்டிருந்தார்.
வந்தவரும் உடனேயே அணுகவில்லை. 'மணி எட்டாகி விட்டதா' என்று இணைய உரையாடல் மூலம் சீண்டினேன். அவர் மிகக் கவனமாக உழைத்து தனது வேலையே மேம்படுத்த முயன்றிருக்கிறார். 'இவ்வளவு தாமதமாக வந்து என்னைக் கடுப்பேற்றியிருக்கிறார். ஏதாவது பிறளல் இருந்தால் தீர்த்து விடுகிறேன், தீர்த்து' என்று மனதில் கருவிக் கொண்டிருக்கிறேன். அவரது நோக்கம், உழைப்பில் எதுவும் குறை காண முடியாதது ஏமாற்றமாகவே இருந்தது சிறிது நேரத்துக்கு.
அதன் பிறகு இயல்பாகப் பேசி அவருக்காக பணித்திட்டம் வகுத்துக் கொடுத்து விட்டு அடுத்த பணிகளில் இறங்கினேன். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தாமதமாக வருபவர்கள், இன்னும் ஒரு நாள் விடுமுறை எடுப்பதாகத் தகவல் அறிவித்தவர்கள், வெள்ளிக் கிழமையும் விடுப்பு எடுத்துக் கொண்டவர்கள் என்று ஒவ்வொருவர் மீதும் கடுப்பை உமிழ்ந்தேன்.
ஒன்பதரை மணிக்கு தினசரி சந்திப்பு. வெள்ளிக் கிழமை நடந்த சந்திப்புகள், ஞாயிற்றுக் கிழமை நடந்த விவாதங்கள் என்று விளக்கியதும் நீண்டு விட்டது. ஏதோ சரியில்லை என்பதை உணர முடிந்தது. எல்லோரிடமும் எதிர்வினைகள் எதிர்மறையாகவே இருந்தன.
'காலையில் வண்டியை எடுத்துக் கொண்டு வரும் போது ஒருவர் குறுக்கே வந்து விடுகிறார். அவரை மனதுக்குள் திட்டி விட்டு தொடர்கிறோம். சிறிது தூரத்தில் இன்னொருவர் இடையில் விழுகிறார். அப்போதே நிதானித்து விட வேண்டும். இப்படி எல்லோருமே நம் வண்டிக்கு இடையே வருகிறார்கள் என்றால் தவறு அவர்கள் மீது இல்லை. நமக்குதான் இன்றைக்கு நிதானம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்' இப்படி நண்பன் பல காலம் முன்பு சொல்லியிருக்கிறான்.
10 மணிக்கு ஒரு வாடிக்கையாளருக்குக் கொடுத்திருக்கும் பயன்பாட்டை பார்க்கும் ஏற்பாடு. அதில் பார்த்து புத்திசாலித்தனமான குறிப்புகளைச் சொல்லிக் கொண்டு போனேன். 11 மணியிலிருந்து செய்யாமல் விட்டிருந்த நிர்வாகப் பணிகளை ஒவ்வொன்றாக மேற்கொண்டேன்.
12 மணிக்கு மென்பொருள் உருவாக்கம் குறித்து விவாதம். அதில் வாய் திறக்கவே மறுக்கிறார்கள். நான் முயலும் எல்லா கோணங்களும் தடுக்கி நின்று விடுகின்றன. 'பொறுப்பைக் கொடுத்த பிறகு ஏன் இவ்வளவு விபரமாக விவாதிக்க வேண்டும்' என்று ஒருவர் சொன்ன பிறகு உறைத்தது. அத்தோடு வேகம் தணிந்து போய் பரிசோதனை வந்து விட்டது.
மதியத்துக்கு மேல் நத்தை உடலைக் குறுக்கிக் கொள்வது போல கூட்டுக்குள் அடங்கி விட்டேன். சின்னச் சின்னப் பணிகள், செய்யாமல் விட்டுப் போயிருந்தவை என்று எடுத்துக் கொண்டேன். அலுவலகமெங்கும் ஒரு கலங்கித் தெளியல் நடந்து கொண்டிருப்பது புரிந்தது. என் முரட்டுக் கைகளை விட்டுச் சிதறடித்து விடாமல் அடக்கிக் கொண்டிருப்பதுதான் அந்த நேரத்தின் தேவை.
இருந்தாலும் அத்தோடு பேச்சுக்கள் குறைந்து விடவில்லை. பணி தொடர்பில்லாத மற்ற பொருள்களிலும் பலருக்கு மனம் புண்படும்படி பேசுவதாகப் புரிந்தது. நான் கிண்டல் அடிப்பது மற்றவர்கள் கிண்டல் அடிப்பது போலில்லை. அதை சீரியசாகவே எடுத்துக் கொள்கிறார்கள். யாரும் திருப்பித் தாக்குவதே இல்லை. தாக்க முடியாத நிலையில் நான் இருப்பதால் நானும் அது போன்ற கிண்டல்களை செய்யாமல் இருப்பதுதான் முறை.
யாரையும் நகைச்சுவைக்காக கிண்டல் அடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். வெற்றான விளையாட்டுப் பேச்சுக்களால் மனம் புண்பட்டு விடும் ஆபத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
மற்றவர்கள் கொடுத்த சின்னச் சின்னப் பணிகளை தொடர்ந்தேன். விட்டு விடுதலையாகும் சிரமமான பொழுதுகள்.
இரண்டு நாட்களாக நாட்குறிப்பில் எழுதுவதும் கொஞ்சம் திமிரில்தான் தெரிகின்றன. அது தொடர்பாக நண்பரின் தொலைபேசி அழைப்பு. உண்மையிலேயே மனம் புண்பட்டு வருந்தி பேசினார். அப்படி எழுதுவது சரியில்லைதான். அடுத்தவர்களின் மீது கருத்து சொல்வது என்பது ஒரு கருத்தியல் வன்முறைதான். ஒருவரது பொது வாழ்க்கை பற்றி, கொள்கைகள் பற்றி சொல்வது வரை ஏற்றுக் கொள்ளலாம். தனி வாழ்க்கை, பண்புகளைக் குறித்து சொல்வது அசிங்கமானதுதான்.
இப்படியே பல பாடங்கள். எட்டு மணி வாக்கில் வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் நாளை முடித்து விட்டு உட்கார்ந்தேன். பாரதி வளர்ந்தால் எப்படி இருப்பாளோ அதே போல ஒரு பெண். அவளையும் இன்றைக்கு வாட்டி எடுத்தாகி விட்டது.
போன வாரம் நோன்பு இருக்கவில்லை. முந்தைய வாரம் நோன்பு இருந்த நாளைத் தொடர்ந்து வாரா வாரம் ஒரு நாள் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். இன்றைக்கு நல்ல நாள். இது வரை உணர்ந்த, எழுதிய உண்மைகள் உறைப்பதற்கு உதவியாக இருக்கும்.
இதை முடிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. அதன் பிறகு வீட்டை ஒதுங்க வைத்து விட்டு உலாவப் போய் வர வேண்டும். 6 மணி முதல் 6.30 வரை தரை துடைத்து விட்டு. 7 மணிக்குள் குளித்து விட வேண்டும். 7.30க்கு அலுவலகம் கிளம்பி விட்டால் 8 மணிக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.
செய்யும் ஒவ்வொரு பணியிலும், எதிர் வரும் ஒவ்வொரு மனிதரிலும் சேவை நோக்கை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். அது இடை விடாமல் நினைவில் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக வந்து விட்டால் என்ன ஆகி விட்டது. அவர் தனது வாழ்வில் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அக்கறையுடன் அதைப் பற்றிப் பேச ஆரம்பிப்பது ஓரு வகை. நான் காத்திருக்கும் போது எப்படித் தாமதமாக வரலாம் என்று பொறுமுவது கீழ்மை.
போன வாரம் முடிவு செய்தது போல இரண்டு குழுத் தலைவர்களிடமும் பொறுப்புகளை முழுமையாக விட்டு விட வேண்டும். வேறு யாருடனும் நேரடியாக பணி விபரங்களை உரையாடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்ற சுழற்சியில் தனிப்பட்ட உரையாடல் செய்து அவர்கள் மனப் போக்கைத் தெரிந்து கொள்ளலாம். தினமும், வாரந் தோறும், மாதந் தோறும் தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்களை, கண்காணிக்க வேண்டிய விபரங்களை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் இது வரை செய்த வேலைகள் இல்லாமல் போய் நேரம் காத்திருக்க வேண்டும். நிச்சயம் திறமையாக எடுத்து செய்து விடக் கூடியவர்களாக நான்கைந்து பேர், ஏன் 10-15 பேர் கூட இருக்கிறார்கள். அவர்கள் கையில் விட்டு விட்டு சற்றை விலகி இருக்கும் பண்பு வந்து விட வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு எழுதியது போல் குறிக்கோள்கள், நோக்கங்கள் எளிமையாக இருந்து விட்டால் தொந்தரவே இல்லை. கூட வேலை பார்ப்பவர்கள் தமது திறமையின் சாத்தியங்களை முழுமையாக வெளிப்படுத்த உதவி செய்யும் பணி இருந்தால் போதும். அப்போது கோபத்துக்கோ, வருத்தத்துக்கோ இடமில்லாமல் போய் விடும்.
20 பேர் பணியாற்றும் போதே இவ்வளவு குளறுபடிகள். இன்னும் பல நூறு பல ஆயிரம் பேர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் போது குழப்பம் வராமலிருக்க இந்த அளவிலேயே அடிப்படைகளை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
'எவ்வளவுதான் சொன்னாலும் பட்டு அனுபவித்த பிறகுதான் காதில் விழும்' எவ்வளவு உண்மையான வார்த்தைகள். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல நாம் வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும் போது சரியான பாடங்கள் கிடைத்து விடுகின்றன. இன்னொரு நேரத்தில் அதே பாடத்தைப் படித்தால், கேட்டால் பாதிக்கப்படாமல் நகர்ந்து சென்று விடுவோம்.
'சரியாக நமக்கே சொன்னது போல கண்ணில் பட்டு விட்டதே' என்று வியக்க ஒன்றுமேயில்லை. சொல்லி வைத்தது பல காலமாக இருக்கத்தான் செய்கிறது. கண்ணில் படும் ஒவ்வொரு படைப்பிலும் செய்திகள் இருக்கின்றன. நாம் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும் போது ஏற்கனவே புதைந்திருக்கும் உண்மைகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
யாரும் அற்ற ஒரு காட்டில் ஒரு மரம் கீழே விழுந்தால், அதை அவதானிக்க யாரும் இல்லை என்றால், மரம் விழுந்தது என்பது நடந்தது இல்லை என்று ஆகி விடுமா?
நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்னரே புவிஈர்ப்பு விசை செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது. அவர் கேள்வியை சரியான வடிவில் கேட்கவும் அந்தக் கோட்பாட்டை அவர் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. பாறையில் சிலை ஒன்றைச் செதுக்கும் சிற்பி ஏற்கனவே உள்ளிருக்கும் சிலை வடிவை வெளிக் கொணர்வதுதானே செய்கிறான். அதுதான் மனிதனின் திறமை, அந்தத் திறமையின் வட்டம்.
யாரும் எதையும் புதிதாகப் படைத்து விடுவதில்லை. இருப்பதில் வடிவங்களையும், அமைப்புகளையும் வெளிக் கொணருகிறோம். ஒரு உயிர் உருவாவது கூட பல கோடி ஆண்டுகளாக புதைந்து கிடந்து தினமும் வெளிப்படும் ஆற்றலை சூரியனிலிருந்து பெற்று தண்ணீரையும், ஆக்சிஜனையும் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவை எரித்து உட்கொண்டு வளர்ந்து வரும் உடற் செல்கள் அந்த ஆற்றலை இன்னொரு வெளிப்பாடாக மாற்றுவதுதானே ஒரு உயிர்.
படைப்பு என்று எதுவுமில்லை. இருப்பதை மாற்றிப் போட்டு அதை இங்கே போட்டு, இதை அங்கே போட்டு விதவிதமாகப் பொருத்திப் பார்ப்பதுதான் எல்லோரும் செய்யும் வித்தைகள்.
அப்படி ஒரு கதை காலச்சுவடு இதழின் அறியப்படாத காந்தி சிறப்புப் பகுதியில். பிறகொரு இரவு என்ற தலைப்பில் தேவிபாரதி என்பவர் எழுதிய சிறுகதை. படங்களுடன், இடையிடையே விளம்பரங்களுடன் 18 பக்கங்களுக்கு. காலையில் எழுந்ததும் படித்து முடித்து விட்டேன். காந்தியின் கடைசி இரண்டு நாட்களில் அவர் மேற்கொண்டதாக ஒரு பயணத்தைப் பற்றிய புனைவு. தன்னைச் சூழ்ந்த அதிகார அமைப்புகளை வெறுத்து போலிகளைக் கண்டு மாளிகையிலிருந்து வெளியேறுகிறார் காந்தி. வழியெங்கும், போகும் ரயில் பெட்டியில் நிறைய காந்திகள். காந்தி வேஷம் போட்டால் நல்ல தொழில் செய்யலாம் என்று நூற்றுக் கணக்கானோர் காந்தி போலவே அலைகிறார்கள்.
வழியில் ஒரு சின்ன நிலையத்தில் இறங்கி நிற்கும் போது அந்த நிலைய அதிகாரி அடையாளம் கண்டு கொள்கிறார். 'மற்ற வேஷதாரிகள் யாருமே சீட்டு வைத்திருப்பதில்லை'. 'டால்ஸ்டாயைப் போல இந்தச் சின்ன நிலையத்தில் நீங்கள் இறந்தால் உங்கள் இறப்பு பலனற்றதாகப் போய் விடும். இது வரை அடக்கி வைத்திருந்தவர்கள் எல்லாம் வெறியாட்டத்தை ஆரம்பித்து விடுவார்கள். உங்கள் மரணம் எங்களுக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கும் படி திரும்பவும் தில்லிக்கே போய் விடுங்கள்' என்று எதிர்த் திசை ரயிலில் ஏற்றி விடுகிறார்.
காந்தி மாளிகைக்கு 30ம் தேதி மாலை 5 மணிக்கு வந்து சேரும் போது அவரை யாரும் தேடுவதாகத் தெரியவில்லை. அவரைப் போன்றே வேடமிட்டுக் கொண்டிருந்த போலிகளில் ஒருவர் வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருந்தார். மாலை பிரார்த்தனை கூட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இத்தோடு கதை முடிந்து விடுகிறது. கொல்லப்பட்டது போலி காந்திதானா? கதையின் நாயகர் காந்தி என்ன ஆனார் என்று நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். (போலி) காந்தி கொல்லப்பட்டதோடு வன்முறை ஓய வழி பிறக்கிறது. உண்மை காந்தி சாகவில்லை என்று நம்பவும் வழி செய்து தரும் புனைவு. '125 வயது வரை வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் 78 வயதிலேயே எப்படி உயிர் விடுவார்'. அப்படியே இருந்தாலும் 125 வயது என்றால் 1990களில் இறந்திருப்பார்.
'எல்லோரும் இறந்துதான் போக வேண்டும் என்பது இயற்கை விதி. இல்லை என்றால் ஹிட்லர்களும், ஸ்டாலின்களும் கூட நம்மோடு இன்னும் இருந்து கொண்டிருப்பார்கள்' என்று ஒருவர் பேசியதாகப் போட்டிருந்தார்கள்.
நேற்றுக் காலையில் அலுவலகம் போகும் வரை கிரிக்கெட் பற்றிப் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட பள்ளியில் படிக்கும் காலங்களில் கல்லூரி நாட்களில் பைத்தியமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வெற்றி தோல்வி, சதங்கள் என்று அளவுக்கு மீறிய ஆர்வம். இடையில் ஏற்படுத்திக் கொண்டிருந்தது போல அடுத்த நாள் காலையில் நாளிதழில் படிக்கும் அளவில் தெரிந்து கொண்டால் போதும். நிகழும் நேரத்திலேயே நடப்பது தெரிந்து என்ன ஆகி விடப் போகிறது. உருப்படியான வேலைகள் ஆயிரம் இருக்கின்றன.
வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தியா பன்னாட்டு தோல் கண்காட்சி நடைபெறும். அதற்கான தயாரிப்புகளில் முழுமூச்சாக ஈடுபடலாம். ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் எதிர்கால வளர்ச்சி, மேம்பாட்டைக் குறித்துத் திட்டமிடலில் செலவழிக்க வேண்டும்.
புத்தகங்கள் பல சேர்ந்து விட்டன. நண்பருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியதாக 5 புத்தகங்கள் ஆகி விட்டன. அவரிடம் வாங்கி இன்னொரு நண்பர் எடுத்துக் கொண்டு போன புத்தகம் ஒன்றையும் கேட்க வேண்டும். சென்னை பட்டறைக்குத் திரட்டிய பணமும் முடங்கிக் கிடக்கிறது. சிறு சிறு தொகைகள் இரண்டு பேர் கையில் இருக்கின்றன. இன்றைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைக்க வேண்டும்.
குளிர் காலம் முடிந்து வெயில் ஆரம்பித்து விட்டது. நாட்கள் மெதுவாக நகர்வது போன்ற ஒரு உணர்வு. டிசம்பர் இறுதியில் நான் மனதளவில் ஜனவரிக்கு வந்து விட்ட பிறகும் நான்கைந்து நாட்கள் டிசம்பர் இருந்தது. இப்போதும், பிப்ரவரி வந்து விட்டது போன்ற உணர்வு. இன்னும் ஏன் இவ்வளவு குளிராக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தேன். ஜனவரியில்தானே இருக்கிறோம்.

திங்கள், ஜனவரி 28, 2008
அண்டை அயல்கள்
'சார்' என்ற குரலைத் தொடர்ந்து, 'பதினொரு மணிக்கு மீட்டிங் இருக்காம், வெளியே போயிடப் போறீங்க, சொல்லச் சொன்னாங்க' என்று சொல்லி விட்டுப் போனார். வெளியே போகும் உத்தேசம் இருக்கவில்லை. 10 முதல் 12 வரை எழுதுவதுதான் வேண்டும். அதில் ஒரு மணி வெட்டிப் போகும்.
10 மணிக்கு எழுத ஆரம்பித்த போதும் தடைகள். அலுவலகத்தின் சாவி எடுத்துக் கொண்டு போகாத ஒருவர் வந்து சாவியை வாங்கிக் கொண்டார். பக்கத்து வீட்டுக் காரர் ஒருவர் வந்து 11 மணி சந்திப்புக்கு என்னென்ன பேச வேண்டும் என்று பட்டியல் தயாரித்து விட்டுப் போனார். செய்து வைத்த கஞ்சியையும் குடித்துக் கொண்டேன்.
11 மணிக்கு வெளியே வந்தால் வழக்கம் போல யாரையும் காணோம். ஒருவர் மட்டும் நின்றிருந்தார். இரண்டு நாற்காலிகளைப் போட்டு இரண்டு பேரும் உட்கார்ந்து கொண்டோம். இரண்டிரண்டாக நாற்காலிகள் மேலும் வந்து சேர்ந்தன. மக்களும் ஒவ்வொருவராக வர 10 பேருக்கு மேல் உட்கார்ந்து விட்டார்கள்.
இரவில் வெளிக் கதவை பூட்டுவது காலையில் திறப்பது குறித்த நடைமுறை முதலில். எல்லோரும் ஆளுக்கொரு சாவி வைத்துக் கொள்வது, 9 மணிக்கு காவலர் வீட்டுக்குப் போகும் போது பூட்டி விட்டுப் போய் விடுவது, அதன் பிறகு வருபவர்கள் திறந்து வந்து கொள்ள வேண்டும். அதிகாலையில் தண்ணீர் எடுக்க, பெருக்கி கோலம் போட வரும் அம்மா திறந்து விடுவார்கள்.
'சிலர் சாவி எடுக்காமல் போய் விட்டு கதவை தடதடவென்று தட்டி ஓசை எழுப்புகிறார்கள்' என்று புகார். வெளிப்புறத்திலிருந்து முதலில் இருக்கும் வீட்டினர்தான் எழுந்து கதவைத் திறக்க வேண்டியிருக்கிறது.
கூரையுடன் கார் நிறுத்தும் இடம் வாங்காதவர்களின் வண்டிகளை எங்கு நிறுத்த வேண்டும்? 'யாரும் பொது இடத்தில் நிறுத்தக் கூடாது, சாலையில் விட்டு விட வேண்டும்' என்று ஒரு கட்சி. அதை உடனேயே நிராகரித்து விட்டார்கள். 'ரோட்டில் கொண்டு காரை எப்படிங்க விடுவது'. ஒரு வீட்டுக்கு ஒரு காருக்கு மிகாமல் இடம் எடுத்துக் கொள்ளலாம், இன்ன இடம் எனக்குத்தான் என்று பிடிக்காமல் முதலில் வருபவர்கள் கிடைத்த இடத்தில் விட்டுக் கொள்ளலாம், கொஞ்சம் புரிதல் உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்கள்.
'காரை ரோட்டில் விடுவது எப்படிங்கிறீங்க, குழந்தைகள் விளையாடுவதற்கு என்ன வழி? அவங்க ரோட்டில் போயா விளையாட முடியும், பக்கத்தில் விளையாட்டு பூங்காக்களும் இல்லை. குழந்தைகள் விளையாடும் இடத்தை முடக்காமல் விட்டுக் கொள்ளுங்கள்' என்று இரண்டு மூன்று முறை சொல்லி அதையும் எல்லோரையும் கேட்க வைத்தாகி விட்டது.
'பராமரிப்பு தொகை (மாதம் ஒரு வீட்டுக்கு 400 ரூபாய்) போதவில்லை. ஒவ்வொரு கட்டிடத்துக்கும் (மொத்தம் 4) பொது மின்கட்டணத்துக்குத் தனியாக வசூலித்துக் கொள்வோம். இந்த 400ஐ மற்ற பராமரிப்பு செலவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வோம். இது வரை விலைக்குப் போகாத மூன்று வீடுகளுக்கும் சேர்த்து கட்டிடம் கட்டியவரிடம் காசு வாங்கி விடுவோம்' என்று முடிவு செய்தோம். இது வரை நான்கு வீடுகளை விற்காமல் வைத்துக் கொண்டு ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் காசு கொடுக்கிறாராம்.
காசு கையில் இருந்தால்தான் செய்ய முடியும் என்று, 'குப்பைகளை ஒரு தொட்டியில் போட்டு எடுத்துப் போகச் சொல்வது (அப்பாடா!), வெளியில் முகவரி எழுதி வைப்பது, ஒவ்வொரு கட்டிடத்திலும் தபால் பெட்டி வைப்பது, எரியாத பல்புகளை மாற்றுவது, காவல்காரருக்கு சம்பளம் உயர்த்துவது, பெருக்கி தூய்மை செய்யும் அம்மாவுக்கு கூட 200 ரூபாய் கொடுப்பது, இரவுக் காவலர் ஒருவரை ஏற்பாடு செய்வது' பட்டியலாக வேலைகள் நீண்டன. அதற்கு பூட்டிக் கிடக்கும் வீடுகளுக்கும் பராமரிப்புக் கட்டணம் தவறாமல் வசூலித்து விட வேண்டும்.
கூட்டம் முடிந்ததும் மூன்று நான்கு பேராக போய் கட்டிடம் கட்டியவரை சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். அவருக்குத் தொலைபேசி 10 நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொன்னேன். கொஞ்ச நேரம் பேசியதையே பேசி நேரம் போனது. இது போன்ற சந்திப்புகளில், 'எல்லாம் முடிஞ்சது, எழுந்திருக்கலாம்' என்று சொல்லி முடித்து வைப்பது இழுபறியாகவே போய் விடுகிறது. இரண்டு மூன்று முறை எழுந்து போய் விட்டு வந்த பிறகு கூட்டம் கலைந்தது.
புறப்பட்டு அலுவலகத்துக்கு வந்து கொண்டிருப்பதாக தொலைபேசினார்கள். ஒரு மணி நேரத்துக்குள் நானும் வந்து விடுகிறேன் என்று சொன்னேன். கட்டிடம் கட்டியவரின் அலுவலகத்துக்குப் போய் அவரிடம் பேசிவற்றை விளக்கினோம். 'விக்காத வீட்டுக்கு எப்படி சார் காசு கொடுக்க முடியும்' என்று ஆரம்பித்தவரை, 'கொடுப்பதுதான் நியாயம், பொது மின்கட்டணத்தை தனியாகப் பிரித்து விட்டோம். அதை வசிப்பவர்கள் மட்டும் பார்த்துக் கொள்கிறோம். இந்த 400 ரூபாய்கள் எல்லோருக்கும் கட்டாயம்' என்று முடித்து வைத்தோம்.
'வீட்டு வரி கட்ட வேண்டும். உங்க பத்திரத்தைக் கொடுத்து விண்ணப்பித்தால் வீட்டுக்கு வந்து வரி அளவை நிர்ணயிப்பார்கள். 600 சதுர அடி வரை 300 ரூபாய்கள். வரக் கூடியவனுக்கு ஒரு 500 ரூபாய் கொடுத்து விட்டால் 300 ரூபாய் என்றே நிர்ணயித்து விடுவான்' என்றார் அவர். 'ஏங்க மாதத்துக்கு முன்னூறு ரூபாயா?' 'இல்ல வருஷத்துக்கு'
'ஆமா, 1000 சதுர அடி என்றால் எவ்வளவு ஆகும்?' 'அது ஆகும் 1000 ரூபாய்க்கு மேல் ஆகி விடும். அத விட கொடுப்பத கொடுத்து குறைவா போடச் சொல்வதுதான் நல்லது'
'ஆண்டுக்கு ஒரு தடவை 700 ரூபா கூடுதல் கட்டுவதைத் தவிர்க்க 500 ரூபாய் ஒரு முறை லஞ்சம். அதற்கு முறை ஒவ்வொரு முறையும் மறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். உள்ள தொகையைக் கட்டி விட்டால் என்ன குறைஞ்சுடும்? இத்தனை லட்சம் கொடுத்து வீடு வாங்கியிருக்கிறோமில்லையா? அப்படியே 50 ஆண்டுகள் கட்டி விட்டாலும் கூடுதல் தொகை 35000 தான் வரும்'
'இப்படி எல்லாம் பேசினா எப்படிங்க பிசினஸ் பண்ண முடியும்' என்று பெரிதாக சிரித்தார். 'நீங்க வேணும்னா அப்படியே கட்டிக் கொள்ளுங்க' என்று முடித்து விட்டார். கூட வந்தவர்களிடமும் சிறிதளவு தாக்கம் தெரிந்தது.
இங்கும் முடித்து விட்டு எழுந்திருக்க இழுபறியானது. எந்த இடத்தில் புதிய சாலை போடப் போகிறார்கள், எப்படி நில விலைகள் ஏறிக் கொண்டு வருகின்றன என்று ஏதேதோ ஆரம்பித்தார்கள். 'நீங்க வேண்ணா பேசிக் கொண்டிருங்க, நான் கிளம்புறேன்' என்று எழுந்திருத்ததும் கூட்டம் கலைந்து விட்டது. 'நல்ல பசி, எப்ப முடியும் என்று காத்திருந்தேன்' என்று ஆளுக்காள் சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வந்து அவசரமாகக் கிளம்பினேன். 'ஏன் அங்கிள், உங்களுக்கு ரிபப்ளிக் டே கிடையாதா' என்று எதிர் வீட்டுக் குட்டிப் பையன். 'ரிபப்ளிக் டே முடிஞ்சது. இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. ஒரு சின்ன வேலையா போயிட்டு வருகிறேன்.'
அலுவலகத்துக்கு வந்து டாடா உடுப்பி ஓட்டலில் சாப்பாடு. சோறு தேறிப் போய் வறட்சியாக இருந்தது. ரசம் சோறும், மோர் சோறும் சாப்பிட்டுக் கொண்டேன். நல்ல முடிவு என்று தெரிந்தது. கடையில் வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டேன்.
தூக்கம் கண்களைச் சொக்கியது. சொல்லி விட்டுப் படுத்து நன்கு தூங்கி விட்டேன். சளி இன்னும் முழுதாக விட்டபாடில்லை. தூங்கி எழுந்து வரும் போது மென்பொருள் உருவாக்கம் திட்டமிடல் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் உட்கார்ந்து கொண்டேன். சரியான கருவிகளைப் பயன்படுத்துவது நல்ல பலன்களைக் கொடுக்கும். திட்டமிடும் போது செய்ய வேண்டிய வேலையின் எல்லைகள், ஆகப் போகும் நேரம், ஏற்படப் போகும் செலவு மூன்றையும் ஒரு முக்கோணமாகக் கொண்டு திட்டமிட வேண்டும்.
வடிவமைப்பை ஆவணப்படுத்திக் கொள்வது, சோதனை முறைகளை எழுதி வைத்துக் கொள்வது, ஒவ்வொரு மாற்றத்தையும் முழுமையாக சோதனை செய்து வழுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது என்று முக்கியமான கட்டங்களின் சிக்கல்களைப் பற்றியும் பேசினோம். இன்னும் ஒரு வேலையும் இருந்தது.
'சரியான அதிகாரப் பொறுப்பு வரைமுறை இல்லை' என்று ஒரு புகார் இருந்து வருகிறது. 'யாரிடம் என்ன கேட்க வேண்டும், யார் எதற்கு பொறுப்பு, யார் எதை முடிவு செய்ய வேண்டும்' என்ற குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.
மென்பொருளாக்கம், வாடிக்கையாளர் சேவை, புதிய விற்பனை, பொது நிர்வாகம் என்று நான்காகப் பிரித்துக் கொண்டோம். மற்ற எல்லா பொறுப்புகளையும் முதல் மூன்றில் ஒன்றினுள் அடக்கி விட முடிவு செய்தோம். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பொதுமேலாளர்.
வாடிக்கையாளர் சேவைப் பிரிவில், தேவை விபரங்களை திரட்டுவதிலிருந்து ஆரம்பித்து, பில்லிங் செய்து காசு வாங்குவது வரை பொறுப்பு. உருவாக்கப் பிரிவில் ஆவணப்படுத்தலிலிருந்து இறுதி சோதனை செய்து முடிப்பது வரையிலான பொறுப்பு. வாடிக்கையாளர் பொறுப்பாளர்கள் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் கீழ் வர வேண்டும். பொது நிர்வாக மேலாளரும் சேவைப் பிரிவின் கீழ் வந்து விட வேண்டும்.
இதை எல்லாம் பேசி முடிவு செய்ய ஐந்தரை மணி தாண்டி விட்டது. இடையில் எலுமிச்சை தேநீர் குடித்துக் கொண்டோம். அவர்கள் போன பிறகு சிறிது நேரம் உட்கார்ந்தாலும் மற்ற வேலைகள் ஓடவில்லை. ஆறரை மணிக்குப் புறப்பட்டு விட்டேன். வீட்டுக்குப் போய் பையையும் தேய்த்த துணிகளையும் வைத்து விட்டு, மீண்டும் வெளியே போகலாம் என்று எண்ணம்.
வீட்டுக்குள் வந்து வண்டியை நிறுத்தும் போது ஏதோ பெரிய சத்தம். இரண்டு பெண் குரல்களின் சண்டையும், குழந்தைகளின் அழுகையும். குரல் வந்த திசை நோக்கிப் போய்ப் பார்த்தால், அடுத்த அடுக்கு வளாகத்தின் வண்டி நிறுத்துமிடத்தில் களேபரம். வீட்டினுள் சமையலறை, படுக்கையறை வழியாக தினமும் பார்க்கும் இடம், மக்கள்.
இரண்டு பெண்கள் தரையில் விழுந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கி விட அவர்கள் கணவன்மார்கள் முயன்று கொண்டிருந்தார்கள். இரண்டு வயது குழந்தை முதல், ஏழெட்டு வயது குழந்தை வரை மூன்று நான்கு குழந்தைகள், அம்மா, மம்மி என்று அழுது கொண்டிருந்தார்கள்.
மதிலுக்கு இந்தப் பக்கம் நின்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் ஒரு வழியாக இருவரையும் பிரித்து விட்டார்கள் ஆண்கள். 'ஹவ் டேர் யு கால் மி எ மென்டல்' என்று ஒரு பெண், 'ஆமா, நீ பைத்தியம்தான்' என்று இன்னொருவரும் சொல்வது தெளிவானது.
'பில்டிங்கில் எல்லாரும் சொல்றாங்க, அது மென்டல் கேஸ்தான்' இந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள் போல, கூட அவரது கணவரும், அப்பாவும் வந்திருந்தார்கள். பைத்தியம் என்று சொல்லப்பட்ட அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள், கணவர் அணைத்தவாறு அழைத்துப் போய் விட்டார். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவாறே போனார்.
திரும்பிப் பார்த்தால் நம்ம பகுதியிலிருந்தும் மூன்று நான்கு பேர் கூடி விட்டார்கள். 'ஆமா அந்த அம்மா மென்டல்தான். வாட்ச்மேன்தான் சொன்னார். வேலைக்கு எல்லாம் யாரையும் சேர்த்து விட்டுறாதீங்க. என்னிடம் அன்பா பேசும்' என்றார்கள். 'நாம எல்லாரும் மென்டல்கள்தான். ஒரு மெலிய கோட்டில்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதனால யாரையும் பழிக்க வேண்டாம்' என்று முடித்து விட்டோம்.
பைகளை வைத்து விட்டு அசோக் நகர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சுக்குக் கிளம்பி விட்டேன். அருகில் இருந்த புத்தகக் கடையை மேய்ந்ததில் காலச்சுவடு ஜனவரி இதழ் கிடைத்தது. இருபது ரூபாய்கள், கனமான, அளவில் பெரிதான இதழ். கனிமொழியின் நாடாளுமன்ற உரை, நந்திகிராம் விவாதங்கள் என்று பார்த்து வாங்கும் போது அட்டையில் இருந்த காந்தியின் கோட்டோவியம் கண்ணில் பட்டிருக்கவில்லை. வாங்கிப் படிக்கப் பிரிக்கும் போது அறியப்படாத காந்தி என்ற சிறப்புப் பகுதி கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
கவனம் காலச்சுவடிலேயே பதிந்து விட்டிருந்தது. சுந்தரராமசாமி ஆரம்பித்த பத்திரிகை என்று ஆசிரியர் குழு பக்கத்தில் தெரிந்தது. 'விமரிசிக்க வேண்டுமானால், பாரதியார் புதுமைப்பித்தன், உங்க தோப்பனார் பற்றி விமரிசிக்க வேண்டியதுதானே' என்று முந்தைய இதழில் பெரியாரை விமரிசித்து வந்த சிறப்புப் பகுதி குறித்து ஒரு வாசகர் எழுதிய கடிதத்தின் மூலம் இப்போதைய பதிப்பாளர் கண்ணன் என்பவர் சுந்தரராமசாமியின் மகன் என்றும் தெரிந்தது.
நாகர்கோவிலில் இருந்து வெளிவரும் இதழ். நாகர்கோவிலில் நாடக விழா. காகங்கள் என்று ஓரிரு பக்கங்கள். ஊர்ப் பாசம் விடாதுதான். குமுதம், விகடனின் அதிகம் போனால் நான்கு பக்கங்களில் முடிந்து விடும் கதை கட்டுரைகளுக்குப் பழகிப் போன பிறகு, பெரிய அளவு தாளில் ஏழெட்டு பக்கங்களுக்குக் குறையாத கட்டுரைகள், கதைகள் புது அனுபவமாக இருந்தன.
யு ஆர் அனந்த மூர்த்தி எழுதிய காந்தியின் தேசிய சமூக தாக்கங்கள் பற்றிய கட்டுரை 7 பக்கங்களுக்கு நீள்கிறது. ராமச்சந்திர குஹா, ஆஷிஸ் நந்தி, ஆகியோரின் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகளையும் படித்து முடித்து விட்டேன். அதற்குள் வீட்டுக்குத் திரும்பி படுக்கையை விரித்து படுத்து விட்டிருந்தேன். சீக்கிரமாக எட்டரை மணிக்கெல்லாம் தூங்கி விட்டேன். 8.55க்கு யாரோ அழைத்திருக்கிறார்கள் என்று காலையில் எழுந்து பார்த்தால் தெரிகிறது.
காலையில் மூன்றே முக்காலுக்கு விழிப்பு, எழுந்திருத்தல். நாலேகாலுக்கு எழுத ஆரம்பித்து விட்டேன். 12 மணி நேரம் நிறுவன வேலைகள். 2 மணி நேரம் மனப் பயிற்சிகள், 6 மணி நேரம் இரவுத் தூக்கம். 4 மணி நேரம் மற்ற வேலைகள் என்று முடிவு. ஒன்றை முடித்து விட்டு அடுத்ததைக் கையில் எடுத்துக் கொள்வோம் என்பது நடக்காது. ஒரே நேரத்தில் பல பந்துகளை மேலே போட்டுப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். ஏதாவது ஒன்று தவறி கீழே விழுந்தாலும் சிக்கல்தான்.
வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும், உலாவி விட்டு வர வேண்டும். ஏழரை மணிக்கு கிளம்ப வேண்டும். 7 மணிக்குக் குளித்து முடித்திருக்க வேண்டும். ஆறரைக்கு துணி துவைத்து முடித்திருக்க வேண்டும். ஆறு மணிக்கு நடந்து முடித்து வந்திருக்க வேண்டும். ஐந்து நாற்பதுக்கு முன்பு வீடு ஒதுங்க வைத்தலை முடித்திருக்க வேண்டும்.
சுறுசுறுப்பு தொத்தி விடாதா என்ன?

ஞாயிறு, ஜனவரி 27, 2008
பயிற்சிகளும் தயாரிப்புகளும்
இந்து நாளிதழில் 18 ஆண்டுகள் கால்பந்து விளையாடி விட்டு ஓய்வு பெற்ற ஒரு பிரெஞ்சு வீரரின் பேட்டி போட்டிருந்தார்கள். ஓய்வு பெற்ற பிறகு பல பணிகளை எடுத்துக் கொண்டு உலகமெங்கும் சுற்றி வருகிறாராம். அதில் ஒன்று வானூர்தியிலிருந்து பாராசூட் மூலம் குதிப்பது. அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி,
'முழு நேர விளையாட்டு வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விளையாடிக் கொண்டிருக்கும் போது பின்பற்றிய உடற்பயிற்சி முறைகளை கைவிட்டதும், பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் சோர்வாக உணர்ந்தார்களாம். சிலர் தம்மை அசிங்கமாகக் கூட நினைக்க ஆரம்பித்தார்களாம், உங்களுக்கு எப்படி?' என்பது.'
ஒரு நாளைக்கு பல மணி நேரங்கள் உடற்பயிற்சி, மனப்பயிற்சி, திறமைகளுக்கான பயிற்சி என்று பழகி விட்டு அதை விட்டு விடும் போது சில நாட்கள், ஓரிரு வாரங்கள், ஏன் சில மாதங்கள் கூட நிம்மதியாக உணரலாம். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த நிம்மதியைத் தாண்டி பழகிய அதி உயர் நிலை வாழ்வுக்காக மனம் ஏங்க ஆரம்பித்து விடும்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் எல்லோருமே தமது மன, உடல், அறிவு நிலைகளை உச்சகட்டத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சோனியா காந்தியின் தலைமை நலிவானது என்று சொன்னாலும், பல ஆயிரக் கணக்கான பேரின் வாழ்க்கையைத் தீர்மானித்து பல கோடி மக்களின் அங்கீகாரத்தை ஈட்டும் பொறுப்பு நாமெல்லாம் கையாளும் பொறுப்புகளை விட பல மடங்கு உயர்ந்தது.
நேற்று ஐந்தே முக்காலுக்கு எழுந்து ஒரு மணி நேரம் எழுத்து. ஒரு மணி நேரத்தில் 25 சொற்கள் என்ற வேகத்தை நெருங்குகிறது. எழுதும் போது கை விரல்கள் பறப்பது போன்ற உணர்வு. தமிங்கில முறையில் ஷிப்டு விசையை அழுத்தி எழுத வேண்டும் என்று நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை இப்போது.
வெளியே போய் ஒரு முறை 20 நிமிடங்கள் உலாவல். வீட்டு வேலை எதுவும் பார்க்கவில்லை. இணையத்தில் இணைந்து சில கட்டுரைகள் படிப்பு. வலைப்பதிவுலகில் எனக்குப் படிக்கத் தேவையில்லாத உள்ளடக்கங்கள் அதிகம். வழக்கமாக சொல்வது போல உள்ளடக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தால், நாம் நாலைந்து கட்டுரைகளை எழுதி வெளியிட்டு விட வேண்டியுதுதான்.
குழலி சொன்னது போல குழுக்களாகத்தான் உள்ளே நுழைகிறோம், ஓய்ந்து விடுகிறோம். தொடர்ச்சியாக விடாமல் எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வலையுலக டெண்டூல்கர் என்று அழைக்கப்படும் டோண்டு சார் அவர்களில் ஒருவர். 11 மணிக்கு கட்டிடத்தில் வீடு உரிமையாளர்களின் சந்திப்பு என்று ஏற்பாடு செய்திருந்தோம்.
10 மணி வாக்கில் நன்கு பசிக்கவே, வண்டியெடுத்துக் கொண்டு போரூர் சந்திப்பு. சமைக்க மனமில்லை. உடுப்பி கப்பாஜி ஓட்டலில் பொங்கல், பூரி, காபி. கூட படிப்பதற்கு ஜூனியர் விகடன். பல மாதங்களுக்கு முன்பே ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளை படிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததற்கு இன்னொரு உறுதி செய்தல் கிடைத்தது. அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கங்கள் கீழான எண்ணங்களைத் தூண்டுவதாகவே இருந்து விடுகிறது. படிக்காததால் எதையும் இழந்தும் விடப்போவதில்லை.
பதினொரு மணிக்கு ஒருவரையும் காணவில்லை. நினைத்தபடி கொஞ்சம் எழுதலாம் என்று பொருளாதாரம் குறித்த ஒரு கட்டுரை, சமூக அரசியல் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். இரண்டாவது கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட்டத்துக்கு வருமாறு அழைத்திருந்த ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். யாருமே வரவில்லை என்று கூட்டத்தை ரத்து செய்து மற்ற எல்லோருக்கும் தகவல் அனுப்பி விடுவதாக முடிவு செய்தோம்.
12 மணிக்கெல்லாம் வந்து பார்ப்பதாகச் சொல்லியிருந்த தம்பி தொலைபேசினான். தாம்பரத்திலிருந்த கிளம்பி கிண்டியில் இறங்கி வருகிறான். மணப்பாக்கம் அருகில் இறங்கிக் கொள்ளச் சொன்னேன். வண்டியில் ஏற்றிக் கொண்டு பூத்தப்பேடு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தோம். அலுவலகம் முழு விடுமுறை. யாரும் வந்து போனதாக அறிகுறி தெரியவில்லை.
பேசிக் கொண்டே நிறுவன விபரங்கள் மென்பொருள் உருவாக்கம் என்று தொட்டு விட்டு மதியம் சாப்பிட போகலாம் என்று கிளம்பினோம். கிருஷ்ணா ஸ்வீட்சின் லசான்யா சாப்பிடலாம் என்று வடபழனி நோக்கிப் போனால், இடது பக்கம் இருக்கும் கடையை தவற விட்டு ஜவஹர்லால் சாலை வரை போய் விட்டோம். திரும்பி வந்து முயற்சிக்காமல், முருகன் கோயில் இருக்கும் தெருவில் திரும்பி, அங்கிருக்கும் குஜராத்தி உணவு விடுதிக்குள் போனோம்.
குஜராத்தி சாப்பாடு, மூன்று பொங்கும்படி சுட்ட சப்பாத்திகள், மோர்க் குழம்பு போல ஒன்று, பருப்பு ஒன்று, மொச்சைக் கடலை குழம்பு ஒன்று, கலவையான காய்களின் பொரியல் ஒன்று, சோறு. இவை எல்லாமே சின்னச் சின்ன கிண்ணங்களில், பொரித்த வற்றல்கள். குடிப்பதற்கு மோர். அளவும், காரமும் மிதமாக இருப்பவை. 50 ரூபாய் ஒரு சாப்பாடு. இரண்டரை மணிக்கும் நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் கண்ணாடியில் தெரிந்த என் முகம் எனக்கே அன்னியமாகப் பட்டது. சாப்பாட்டுக்குப் பிறகு சும்மா இல்லாமல் பாசந்தி என்று ஒரு கிண்ணமும். அவ்வளவு தூரத்தில் வந்திருக்கும் தம்பிக்கு மரியாதையாக.
திரும்பும் வழியில் அடையார் ஆனந்தபவனில் நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொள்ளலாமா என்று நினைத்து நிற்கப் போகும் போது பின்வாங்கி விட்டேன். கடையில் அருகிலேயே அழுக்கு ஆடைகள் அணிந்து கொண்டு குழந்தைகள். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு கூடுதலாக நொறுக்குத் தீனிக்கு செலவழிப்பது அந்தக் குழந்தைகளின் உணவை திருடுவதற்கு சமம் என்பது உறைத்து நகர்ந்து விட்டேன்.
அதற்கு முன்பு கமலா திரையரங்கில் ஏதாவது பார்க்கும் படியான படமாக போட்டிருந்தால் போய் விடலாம் என்றும் ஒரு எண்ணம் இருந்தது. அங்கு ஓடும் படம் காளை. இப்படி இரண்டு குழிகளில் மாட்டாமல் தப்பித்து அலுவலகத்துக்கு.
பணிக்கான கோப்புகளை வைத்திருக்கும் கணினியை இயக்கி ஒரு சில திட்டமிடல்களை செய்தேன். வலைப்பதிவுகளில் ஒரு இடுகை, tamil stories என்று கூகிளில் தேடினால் பாலுணர்வு கதைகள் மட்டும்தான் வருகின்றன என்று, அதை வேலை மெனக்கெட்டு போட்டு அப்படி கதை எழுதுபவர்களை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்.
இன்னொருவர் தேனிலவுக்கு மனைவியுடன் போயிருக்கும் போது இன்னொரு தம்பதியரில் பெண்ணின் மார்பு இவர் முழங்கையில் இடித்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். தமிழச்சி, அய்யனார், அதைத் தொகுத்து லக்கிலுக் போடும் இடுகை.
இவை எல்லாம் செல்லா சொல்வது போல இணைய வெளியின் கட்டற்ற சுதந்திரத்தின் களங்களாக இருக்கலாம். எதற்கும் ஒரு விலை கொடுத்துதான் நாம் வசதிகளைப் பெற்றிருக்கிறோம். வசதியான நகரங்களில் அகலப்பட்டை இணைப்பில் எழுத வாய்ப்பு கிடைத்திருக்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள். பள்ளியில் படிக்கும் ஒரு புத்திசாலி ஏழை மாணவனுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல், நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த மாணவிக்கு பொறுப்புணர்வுடன், நமது நடவடிக்கைகள் வசதிகளை ஏற்படுத்தி தந்த சமூகத்துக்கு என்ன பலன் கிடைக்கும் என்ற எண்ணம் கொஞ்சமாவது இருக்கலாம்.
இப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரும் சட்டம் போட முடியாது. போடவும் கூடாது. ஆனால், நம்முடைய மனசாட்சியை விட உயர்ந்த நீதிபதி, காவல்காரன், ஆளுநர், தலைவர் நமக்கு வேறு யார் இருக்கிறார்கள்? கொஞ்சமாவது அதன் சின்னக் குரலுக்கு செவி சாய்க்கலாம்.
கூகிளில் தேடித்தான் பார்ப்போமே என்று tamil stories தேடினால் தமிழ் செக்ஸ் ஸ்டோரிஸ் என்றுதான் முதல் நான்கு சுட்டிகள். ஆர்வக் கோளாறு அத்துடன் நிற்க விடாமல் சில சுட்டிகளை கிளிக்கிப் போனால், கதைகளை பிடிஎப் ஆக மாற்றி கோப்புகளைப் போட்டிருக்கிறார்களாம். ஒரு தளத்தில் முன்னோட்டம் என்று ஆங்கிலத்தில் கொட்டிக் கிடக்கும் முறையற்ற உறவுகள் பற்றிய கதைகளின் ஒவ்வொரு பத்திகள்.
ஆங்கிலத் தளங்களில் முறையற்ற உறவுகளுக்கான கதைகள் ஏழெட்டு வகையான கதைகளில் ஒரு வகையாக இருக்கும். தமிழில், இந்திய தளங்களில் முறையற்ற உறவுக் கதைகள் பெரும்பான்மையாக இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட பாலுணர்வின் விளைவாக இருக்குமோ!
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கி வைத்து விட்ட உறுதிக்கு சோதனை. ஒரு வேளை பாசந்தி உள்ளே போகாமல் இருந்திருந்தால் எளிதாக இருந்திருக்கலாம். ஆனந்தபவன் தீனியும் திரைப்படமும் உள்ளே போயிருந்தால் உடைந்தே போயிருந்திருக்கலாம். வெண்ணெய் திரண்டு நிற்கும் தாளியை உடைத்து விடக் கூடாது என்று நகர்ந்து விட்டேன்.
அதன் பிறகும் நேரம் நகரவில்லை. ஏதாவது எழுதலாம், திட்டமிடலாம், வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. யூடியூபில் தமிழ் என்று தேடினால் அதில் முதலில் வருவதும் நம் சமூகத்து இளைஞர்களை ஈர்க்கும் பாலுணர்வு படங்கள். வின்னர் படத்தின் வடிவேலு நகைச்சுவை காட்சியைத் தொடர்ந்து, பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடிகட்டு படத் துண்டுகளைப் பார்த்துக் கொண்டேன். அடுத்த துண்டை ஆரம்பிக்கும் முன்பு நண்பர் வந்து சேர்ந்தார்.
பார்ப்பதற்கு புத்துணர்ச்சி ஊட்டக் கூடிய குழந்தை முகம். அவரது மனமும் குழந்தை உள்ளம். மனதில் இருப்பதை அப்படியே போட்டு உடைத்து விடுவார். பொருளாதார அடிப்படைக் கோட்பாடுகளை நன்கு புரிந்து கொண்டவர். உயர்நிலைப்பள்ளி மாணவன் முதன் முதலில் பொருளாதாரக் கோட்பாடுகளைப் புரிந்து கொண்ட கிளர்ச்சியில் தனக்கும் உறுதியான நிலைப்பாடுகள் உண்டு என்று நிலைநாட்ட முயலும் பரபரப்பில் பேசுவதைப் போல பேசுவார்.
அவர் தொழில்கள் ஆரம்பித்து நடத்திய அனுபவத்தின் மூலம் ஏதாவது அறிவுரை தர முடியுமா என்று கேட்டால் அதிலும் இளைஞராகவே இருக்கிறார். எல்லாம் இயக்கி விட்டு விட்டால், தானாக ஓடிக் கொண்டிருக்காதா என்று கேட்டார். சரி என்று அடுத்த பொருளுக்கு நகர்ந்து விட்டோம்.
அவருடைய பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையில் எதிர்க்கும் படி மாற்றுக் கொள்கைககைக் குறிப்பிட்டால், உடனேயே புரிந்து கொண்டு எதிர்த்தாக்குதல் ஆரம்பித்து விடுகிறார். ராஜாஜி எழுதியிருந்த நேருவின் சோஷலிசத்தை எதிர்க்கும் கட்டுரையை குப்பை என்று நான் ஒதுக்க அவருக்கு அழுகையே வந்து விட்டது. 'நேருதான் நவீன இந்தியாவின் சிற்பி. அவர் இல்லா விட்டால், இந்தியாவும் ஜிம்பாப்வே போல குப்பைக் கூடை நாடாகத்தான் வளர்ந்திருக்கும். நேருவின் சோஷலிசம் கொடுத்த அடித்தளத்தில்தான் நமது தொழில்களும் மக்களும் உலகில் போட்டி போட முடிகிறது. அவரை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளுவது மேல் வர்க்கத் திமிர். நம்முடைய சூழல்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் பொருந்தும் கொள்கைகளை வகுக்கக் கூடாது' என்று சரமாரியான அவரது பேச்சுக்களுக்கிடையில் நானும் நுழைந்து கொண்டேன்.
அப்படியே வெளியே போய் அவர் ஒரு காய்கறி உருளையும் நான் ஒரு கட்லெட் கடலையும் சாப்பிட்டுக் கொண்டோம். திரும்பும் வழியில் கறுப்பு திராட்சை அரை கிலோ 40 ரூபாய்களுக்கு வாங்கிக் கொண்டோம். பன்னீர் திராட்சை அரைக் கிலோ 20 ரூபாய்களாம்.
அதன் பின்னர் பிறந்த தேதியை வைத்து ஒருவரது குணநலன்களை எடை போடும் விளாயாட்டு விளையாடினோம். பொதுப்படையாக யாருக்கு வேண்டுமானாலும் எதையும் பொறுத்திக் கொள்ள முடியும் என்று இருந்தாலும், ஒருவரது பிறந்த தேதியை வைத்துக் கொண்டு இது போல வரும் விபரங்களை பொருத்திப் பார்ப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
ஜூன் மாதம் பிறந்தவர்கள் காதல் உணர்வு அதிகம் உள்ளவர்களாக இருப்பார்களாம். கலைஞர் கருணாநிதி ஜூன் 3ம் தேதி. வாக்குவன்மை அதிகம், யாரையும் பேச்சில் மடக்கி விடுவார்கள். பெண் நண்பர்கள் நிறைய இருப்பார்கள்.
அதுவே 1ம் தேதி என்றால் இன்னும் கூடுதல் பண்புகள் சொல்கிறார். 1ம் தேதி பிறந்தவர்கள் முதன்மை இடத்தில் இருப்பார்கள், மனதிலும் தம்மைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொள்வார்கள். தலைமை இடத்தை அடைந்திருப்பார்கள். தமக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வார்கள்.
இதைச் சொன்னால் வருத்தப்பட்டு விடுவார்களே என்று தயங்காமல் போட்டு உடைப்பவர் இவர்். 'பார்ப்பதற்கு அமைதியாக வெளியில் எல்லோருக்கும் நல்ல பேர் எடுத்தாலும், நெருக்கமான உறவுகள், நட்புகள், சக பணியாளர்களுக்குத் தெரியும் இவரது கொடூர பக்கம்' என்று எனக்கு ஒரு முறை சொன்னார். நான்கு நாட்கள் தூக்கம் போய் விட்டது. 'அவர் மனைவியிடம் கேட்டால் தெரியும், எப்படி வார்த்தையால் புண்படுத்துவார் என்று'.
'இவர் வெளிநாட்டில் போய்ப் படிக்கப் போகிறேன் என்கிறாரே' என்று ஆரம்பித்து எதிர் நோக்கப் போகும் நடைமுறை சிக்கல்களை போட்டு உடைக்கிறார். இந்தக் கேள்விகள் மனதில் எழாமலா அதற்கு விடை தேடாமலா முடிவு எடுக்கிறார்கள். அதைக் குறித்து கவலை இல்லை.
ஒன்பது மணி தாண்டி வீட்டுக்குத் திரும்பி விட்டேன். செய்ய நினைத்த வேலைகளில் நூற்றில் ஒரு பங்கு கூட முடியவில்லை. பங்களாதேச போரின் போது நடந்த நிகழ்ச்சிகளை ஒட்டி சுஜாதா எழுதியிருந்த 14 நாட்கள் என்ற கதை, தமிழ்நதி எழுதி கவிதைப் புத்தகம் இரண்டும் கிடைத்தன். தமிழ்நதியின் புத்தகத்தை பேசிக் கொண்டே பிரித்தால், பின்னட்டையில் நம்ம தங்கச்சியின் படம் எப்படி வந்தது என்று ஆச்சரியம். அதே போன்ற முகம். இவங்க படம்தான்.
சுஜாதாவின் எழுத்தின் மீதான பிரமிப்பும் மரியாதையும் வடிந்து கொண்டே வருகிறது. இந்தக் கதை கூட சின்ன வயதில் படித்ததுதான். இப்போது படிக்கும் போது எழுத்தில் பொதிந்திருக்கும் நேர்மையின்மையும் அதிர்ச்சியூட்டி விட வேண்டும் என்ற நோக்கமும், மேம்போக்கான கையாளலும் ஏமாற்றத்தைத் தான் விட்டுச் செல்கின்றன. புனித பிம்பமாக ஏற்றி வைத்து விட்டதால் ஏமாற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. படிக்கப் படிக்க வியப்பளிக்கும் படைப்புகள், முதல் முறை வியக்க வைத்து விட்டு அடுத்தடுத்த முறைகளில் ஏமாற்றும் படைப்புகள். சுஜாதா இரண்டாவது வகையில்தான் இருக்கிறார் என்று வருத்தமான உணர்வு.
அவரை நேரில் பார்த்து பழகும் போதும் நிறைய ஏமாற்றங்கள். எழுத்தின் மூலம் ஏற்பட்ட பிரமிப்பும் அவரது புலமையின் மீதான மரியாதையும் வெகுவாக குறைந்து போயின. எதையும் தேவையான அளவு மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு அதில் தனது மொழி நடையை கலந்து வாசகரை மயக்கிப் போடும் வித்தைக் காரராகத்தான் விளங்குகிறார்.
நேற்றுக் காலையில் பனியில் நடக்கப் போனதாலோ என்னவோ, அல்லது காலையில் நீண்ட நேரங்கள் தூங்கி எழுந்திருப்பதாலோ, இன்னும் சளி விட்ட பாடில்லை. தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
இதை எழுதி முடித்து விட்டு சாப்பிட கஞ்சி அடுப்பில் போட வேண்டும். கடைக்குப் போய் தேங்காய், பச்சை மிளகாய் வாங்கி துவையல் அரைத்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் நிலவரம் அவ்வப்போது பார்த்துக் கொள்ளலாம். கஞ்சி வெந்ததும் சாப்பிட வேண்டும். துணி ஊற வைக்க வேண்டும். 10 மணி வரை ஆகி விடலாம்
தொலைபேசி என்ன திட்டம் என்று கேட்டுக் கொள்ள வேண்டும். 2 மணி நேரங்கள் என்னென்ன பொறுப்புகள் என்று பட்டியலிட்டு அவற்றின் இப்போதைய நிலவரத்தையும் செய்ய வேண்டியதையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 10 மணி முதல் 12 மணி வரை.

சனி, ஜனவரி 26, 2008
ஆறு மனமே ஆறு
குடியரசு தினம் விடுமுறை. 'விடுமுறை என்றால் நல்ல பழக்கங்களுக்கும் விடுமுறை கொடுத்து விட வேண்டும்' என்று இல்லாமல் எழுந்து உட்கார்ந்து விட்டேன். மணி காலை ஆறு மணி.
இரவு தலையை சாய்க்கும் போது சரியாக நள்ளிரவு 12 மணி. மேற்கத்திய நேரப்படி புது நாள் ஆரம்பித்த நேரம். காலை ஆறு மணி என்பது இந்திய கணக்குப்படி புதிய நாள் ஆரம்பிக்கும் நேரம். ஆறு மணி என்று குறிப்பாக இல்லாமல் சூரியன் உதிக்கும் நேரம் என்று இருக்குமோ!
பல நாட்களுக்குப் பிறகு காலை நான்கே முக்காலுக்கு எழுந்து ஐந்தே காலுக்கு எழுத உட்கார்ந்தேன். ஐந்து நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பை எழுதி முடிக்கும் போது ஆறே கால். வாரா வாரம் சனிக்கிழமை நடக்கும் விவாதம் இன்றைக்கு இல்லாமல் போனதற்கு மாற்றாக நேற்று காலையிலேயே எனக்கு வாரத்தின் மறு ஓட்டம் கிடைத்து விட்டது.
உலாவி வரப் போவதற்கு சட்டை போட்டுக் கிளம்பினால், வெளியே அடர்த்தியாக பனி, இன்னும் இருட்டு விலகியிருக்கவில்லை. சளி திரும்பப் பிடித்து விடுமோ என்று பயந்தாலும், பின்வாங்கவில்லை. மனதெங்கும் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க திரும்பினேன். சளித் தொல்லை இருப்பதால் கஞ்சி வைப்பதை வேண்டாம் என்று முடிவு செய்தேன். முந்தைய நாள், நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேரளா பாணியில் பயறு கஞ்சி சாப்பிடுவதாகச் சொல்லியிருந்த நினைவின் தாக்கத்தில் கஞ்சியை மனம் கேட்டிருக்கலாம்.
சமையலறை மேடையைத் துடைத்து, குப்பைக் கூடையின் பையை முடி போட்டு வெளியே வைத்து விட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு தரை தூத்து வாரினேன். இன்று துடைக்க வேண்டாம் என்று முடிவு. தண்ணீரிடமிருந்து கூடிய வரை விலகி இருப்போம். துவைத்த துணிகள் பைகளுக்குள். கட்டிலின் காலிலிருந்து உடைந்து ஓடும் உறையின் மாதிரிகளாக அதே பையில் போட்டுக் கொண்டேன். வேறு வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்.
துணி துவைக்கும் போது 2 சட்டைகள், 5 பனியன்கள். 5 பனியன்கள் எப்போது அழுக்காக்கினோம் என்று புரியவில்லை. இந்த பனியன்களோடு அடையாளம் காண முடியாத தொல்லை. கழுத்துக்கு அருகில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்ப்பட்டியைப் பார்த்தால் வெவ்வேறாக இருக்கின்றன. துணிகளை வெளியில் போடும் முன்பு, பாத்திரங்களைக் கழுவுதல். பொங்கல் அன்று பொங்கல் சாப்பிட தாராள மனதோடு கொடுத்த தட்டுகளைக் கழுவி திரும்பக் கொடுத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. அவற்றை இன்னொரு முறை கழுவி வைத்து விட்டுக் குளியல்.
அதற்கிடையில் நாளிதழ் வருகிறது. கிரிக்கெட் ஆட்டத்தின் நிலவரங்கள் கைபேசியில் தேடுகிறது. சச்சின் டெண்டுல்கருக்கு புகழ் மாலைகள். அவரது முடிவுரையை எழுதியவர்கள், கரித்துக் கொட்டியவர்கள் எல்லாம் வெட்கத்துடன் நெளியும் அளவுக்கு விளையாடியிருக்கிறார். அவரது ரத்தத்தில் கிரிக்கெட் ஓடுகிறது. கிரிக்கெட் தவிர பிற விஷயங்களை பொருட்படுத்தவே மாட்டார். முழு நேரம் விளையாடுவதை நிறுத்துவதை அவரேதான் முடிவு செய்ய முடியும். நிறுத்திய பிறகு என்ன செய்வார்?
ஆஸ்திரேலியாவில் அவருக்கு பிராட்மேனுக்கு ஒத்த மரியாதையாம். நேற்று அவரை அவுட் ஆக்கிய லீ தலைக்கவசத்தை அன்பாகத் தட்டிக் கொடுக்கிறார்.
குளித்துப் புறப்பட்டு நண்பரோடு கிளம்பும் போது எட்டு மணிக்கே இரவு உடையுடன் ஒரு குட்டிப் பெண் தன் குட்டி மிதிவண்டியில் முன்னும் பின்னும் ஓட்ட ஆரம்பித்திருந்தாள். 'பள்ளி விடுமுறையா அல்லது பள்ளிக்குப் போகும் முன் ஒரு சின்ன விளையாட்டு நேரமா' என்று கேட்டுக் கொண்டே, 'காலையில் உடற்பயிற்சியோ, வண்டி ரிவர்சில் போகுமோ' என்றெல்லாம் கேட்ட விடைகளுக்கு கண்கள் மலர இதழோரம் சின்ன முறுவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தத் தேவதை.
நாட்காட்டி ஒன்று மாட்டி விட்டிருந்தான் தம்பி, முன்னறையில். ஒரு குழந்தையின் படம். இனம் புரியாத நேசத்தை உருவாக்கும் முகம். அப்போதுதான் தூங்கி எழுந்த மெலிதான சோகத்துடன், சிரிக்கத் தயாராகும், கண்களுடன், பிங்க நிற சட்டை போடப்பட்டு, கலைந்து கிடக்கும் தலைமுடி, ஒட்ட வெட்டப்பட்டது அல்லது இது வரை வெட்டவே படாத நீளம். இந்திய நிறம்.
அந்த முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் சலிக்காத அழகு முகம். எல்லா குழந்தை முகங்களும் மகிழ்ச்சியைத் தரும். இந்த நாட்காட்டி குழந்தைக்கு ஏதோ சிறப்பு ஈர்ப்பு.
அப்படியே லட்சுமி பவனுக்குப் போய் இரண்டு இட்லி, தோசை, சர்க்கரை குறைவா லைட்டா ஒரு காபி சாப்பிட்டு விட்டு அடுத்த பாதை. அந்தக் கடையில் இன்னும் சிறுவர்களை வேலைக்கு வைப்பது நிற்கவில்லை. பழைய சிறுவர்கள் போய் இப்போது இன்னொரு குழந்தை. என்ன நியாயத்தில் இப்படி செய்கிறார்கள் என்று புரியத்தான் இல்லை. நேற்று உடனேயே உலுக்காமல் விட்டிருக்கிறேன். இப்போது கேட்டால் இன்னும் அதிகமாக தாக்கம் இருக்கும். இன்று.
அலுவலகத்திற்கு எட்டரைக்கெல்லாம் வந்து முதலில் நாளுக்கான திட்டமிடல். வாரம் முடிந்து போக அடுத்த வாரத்துக்கான விரிதாளையும் உருவாக்கி ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல ஒவ்வொரு நாளும் சந்திப்புகள் வேலைக்கான திட்டமிடலை ஆரம்பித்தேன். ஆறு நாட்களுக்கும் இரண்டிரண்டு மணி நேர வேலைகள் திட்டமாகி விட்டன. அது தொடர்பான மின்னஞ்சல்களை அனுப்பி விட்டு, பதில் அளிக்காமல் இருந்த மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதல் ஆரம்பித்தேன்.
இடையில் தினசரி காலை சந்திப்பு. அதில் முந்தைய நாள் நிகழ்வுகளை விளக்கி விட்டு, மற்றவர்களின் விபரங்களையும் கேட்டுக் கொண்டு மீண்டும் கணினியில் தொடர்ந்தேன். எகனாமிக் டைம்ஸ் நிறுத்தி விட்டு மீண்டு இந்து ஆரம்பித்து விட்டார்கள். வீட்டிலாவது எகனாமிக் டைம்சும் போடச் சொல்லி விட வேண்டும்.
பதினொரு மணிக்கு பயிற்சி வகுப்புகள். முதலில் மென்பொருள் உருவாக்கப் பணி மேம்படுத்துவது பற்றிய விவாதம். அழகாக தயாரித்து புதிய திட்டங்களுடன் நான் முற்றிலும் ஒத்துப் போகும் கொள்கை முழக்கங்களுடன் விளக்கினார் ஒருவர். நிறுவனத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் தான் பேசி விடுபவர்கள் இரண்டு மூன்று பேர். வாயைத் திறக்கும் முன்னே அவர்கள் தலை ஆட ஆரம்பித்திருக்கும். சும்மா ஆமாம் சாமி போடும் முட்டாள்தனமான தலையாட்டல் இல்லாமல் ஆழமாகப் புரிந்து கொண்ட தலையாட்டல்.
மீண்டும் மீண்டும் ஒழுங்கும், விதித்த நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுவதும்தான் வந்து நிற்கின்றன. மாற்றங்களை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று அடுத்தவர் பேசினார். தலைமைப் பொறுப்பில் 3 பேர் கொண்ட ஒரு குழு என்று அடக்கத்துடன் குறிப்பிடுகிறார். சில நிமிடங்களில் மூன்று பேரில் ஒருவர் விலகிக் கொண்டார். குழு தலைமை எல்லாம் வேண்டாம். ஒருவரின் தலைமை மற்ற எல்லோரும் உதவி செய்கிறோம் என்று கொஞ்சம் அவசரப்பட்டுதான் சொன்னதாகப் பட்டது.
தொடர்ந்து இந்தி பாட வகுப்பு. கற்றுக் கொடுப்பது என்பது ஒரு திறமைதான். அதுவும் ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொடுப்பது அவ்வளவு எளிதானது இல்லை. முதலில் ஆங்கிலம் கற்றுக் கொண்டது இளவயதிலேயே வளமையாகப் போனது. நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் இந்தி, கல்லூரி நாட்களில் ஜெர்மன், சீனாவில் சீன மொழி கற்றுக் கொண்டது. உணர்வுடன் அலசி ஆராய்ந்து கற்றுக் கொண்டது. அறிவியல் பூர்வமாக பாடங்கள் தயாரித்து கற்றுக் கொடுத்தது ஜெர்மனின் மேக்ஸ் முல்லர் பவனில் மட்டும்தான்.
அந்த அனுபவங்களையும் இந்தி வகுப்பில் புகுத்தினால்தான் விறுவிறுப்பாக போனது. விதவிதமாக இருக்கட்டுமே என்று உருது பேசும் நண்பர்களையும் ஒவ்வொரு வகுப்புகள் எடுக்கச் சொன்னால், கொழுக்கவில்லை.
ஒன்றரை மணிக்கு மேல் வந்து விடுமாறு தகவல். அவசரமாக போக வேண்டாம் என்று தனியாக சாப்பிட்டு விட்டு பெரிய மேடு. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டாம். இப்போ இந்தக் களைப்பில் இவரிடம் போய்ப் பேச்சு கொடுத்தால் என்ன ஆகும் என்று தயங்கிக் கொண்டே போனால், உடனே பார்க்கவும் கிடைக்கவில்லை. காத்திருக்கும் நேரத்தில் இன்னோரு நிறுவனத்துக்குப் போய் வேலையை முடித்துக் கொண்டேன். எகனாமிக் டைம்சின் அலசல்களை புரட்டிப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டேன். ஈடி மெட்ராஸ் பிளஸ் என்ற இணைப்பையும் படித்துக் கொண்டேன். கார்பரோட் டோசியர் என்ற பகுதியும் துணைக்கு வந்தது.
கோபம் கோபமாக வந்தது, 'என்ன மனிதர் இவர், தன் நேரத்தை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் அடுத்தவர்களையும் துன்புறுத்துகிறாரே' என்று. இருபது இருபது நிமிடங்களாக முதலில் ஒரு முறை தூக்கக் கலக்கத்தை விரட்ட, அடுத்து ஒரு முறை மனதை அமைதிப் படுத்த என்றும் உட்கார்ந்த பிறகு, தொலைபேசியில் பேச வேண்டியவர்களை அழைத்து பேசி முடித்து விட்ட பிறகு மற்றவர்கள் எல்லாம் முடித்து விட்டு உள்ளே போக முடிந்தது.
களைத்துப் போய் இருந்தார். 'என்ன என்று தெரியவில்லை. உடம்பெல்லாம் களைத்துப் போகிறது' என்று ஆரம்பித்தார். அதிகமாக வளரவில்லை அந்தத் திசையில். மகளின் திருமண நிச்சயம் செய்யும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கொண்டு கொடுத்தார் உதவியாளர். அதைப் புரட்ட ஆரம்பித்தார். புகைப்படங்களின் தரம், எடுப்பவரின் திறமைக்கும் புகைப்படத்தின் நேர்த்திக்கும் உள்ள உறவு என்று பேச ஆரம்பித்து தனது செல்பேசியில் எடுத்த புகைப்படங்களை காட்டி நுணுக்கங்களை விளக்க ஆரம்பித்தார். சில முகங்கள் புகைப்படத்துக்குப் பொருத்தமானவை என்று ஆரம்பித்து அந்தத் திசையில் கொஞ்ச நேரம்.
பிரான்சில் இருந்து பச்சைத் தோல் விற்பனையாளர்கள் குழு ஒன்று வரும் போது சந்திக்கப் போகிறவர்களில் இவரையும் சேர்த்திருக்கிறார்கள். அது தொடர்பான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து பச்சைத் தோல் வாங்கும் நுணுக்கங்கள், எப்படி ஒரு ரூபாய் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பேசினார்.
'20 டன் எடையுள்ள பொருள் வாங்கினால் 5% வரை கூடுதல் குறைவு ஏற்றுக் கொள்வோம். ஆனால் எப்பவுமே 5% குறைவாகவே அனுப்பினால் எப்படி' என்றவரிடம், 'பதப்படுத்தப்பட்ட தோல் ஏற்றுமதி செய்யும் நம்ம ஊர் ஆட்கள் 4% பரப்பு கூடுதல் குறைவு இருக்கலாம் என்று புரிதலைப் பயன்படுத்தி வேண்டும் என்றே 4% கூட்டிப் போடுபவர்கள் சிலர் உண்டு' என்றதும், 'சிலர் என்ன, எல்லோரும்தான் செய்றாங்க, நான் கூடத்தான் போடறேன்' என்று ஒப்புக் கொண்டார்.
விற்பவரிடம் வாங்குபவரிடம் ஒவ்வொரு வகையிலும் தனக்கு என்ன ஆதாயம் பெற்று விட முடியும் என்று அலசி ஆராய்ந்து செயல்பட்டால்தான் தாக்குப் பிடிக்க முடியும். ஒரு முறை சிவப்பு, வெள்ளை நிற தோல்கள் வேண்டும் என்று கேட்டிருந்தாராம். கருப்பு வெள்ளை நிறத் தோல்களை அனுப்பி விட்டாராம்.
பதப்படுத்தி எடுத்த பிறகு, ஆரம்பத்தில் இருந்த நிறத்தினால் எந்த மாறுபாடும் கிடையாது என்பது எனக்குப் புரிந்தது. தரமும் குறைவில்லை என்று அவரே சொன்னார்.
'நான் சிவப்பு நிற தோலைக் கேட்டிருந்தேன். ஒன்று, நீ அதை மதிக்காமல் தப்பாக அனுப்பியிருக்கிறாய், அல்லது பார்க்கவே இல்லை. இப்படிப்பட்ட நீ சொல்வதை நான் எப்படி நம்ப முடியும். உன் தவறுக்கு நீதானே தண்டம் கொடுக்க வேண்டும்' என்று 1000 பவுண்டு குறைக்கச் சொல்லியிருக்கிறார். அவர் தவறுக்கு பரிகாரமாக 300 பவுண்டு குறைத்திருக்கிறார். '300 பவுண்டுன்னா 25,000 ரூபாய், வாங்கிய தோலில் 60000 சதுர அடி வரும், சதுர அடிக்கு 40 பைசா குறைகிறது. ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும். நாம் கேட்கா விட்டால் போச்சு'
தொழில் வளர்ச்சியை எப்படித் திட்டமிடுகிறீர்கள் என்று அறிவுரை கேட்டேன். அவரது பாணியில் முதலீடு, பணம் திரட்டுதல், திருப்பிக் கொடுத்தல் என்று அடிப்படைகளை விளக்கினார்.
'என்னதான் நடக்குதுன்னு சொல்லுங்க' என்று ஆரம்பித்தார். போன தடவைகள் பேசியது எல்லாம் மறந்து விட்டது போல திரும்ப ஒவ்வொன்றாக கிளப்ப முயன்றார். அவ்வளவு நேரம் கேட்ட பாடம் மறக்குமா. நம்மிடமும் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு முயற்சிக்கிறார் என்று தெரிந்து விட்டது. 'நாங்கள் செய்த தாமதங்களுக்கான இழப்புகளை நாங்கள்தான் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆகக் குறைந்த கட்டணம்தான் உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம்' என்று ஆரம்பித்த ஒவ்வொரு கேள்விக்கு உறுதியான பதில்களைக் கொடுத்தேன். பல இடங்களில் அவருக்கும் என் மன ஓட்டம் பிடிபட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை.
'அப்படி என்ன பரிவு அவருக்கு உன் மேல்' என்றான் நண்பன் பின்மாலையில். 'என்னால் அவருக்கு நல்ல வேலை ஆக வேண்டும். அதனால் எனக்கு உதவுகிறார். அவருக்குத் தெரியாத ஒரு நுட்பம், அவருக்கு உதவியாக இருக்கும் என்று அவர் நினைக்கும் நுட்பத்தை நான் கொண்டு தருகிறேன். அதை நான் சரி வர செய்ய எனக்குக் கற்றுக் கொடுத்தால் அவருக்கும் ஆதாயம்தானே'
ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்காமல் பேசி நாள் வரை நிலுவையில் இருந்த முழுத் தொகையையும் கையில் வாங்கிக் கொண்டு, அடுத்தடுத்த பணிகளுக்கான கட்டணங்களையும் உறுதி செய்து கொண்டு கிளம்பினேன்.
வெளியில் வந்து பார்த்தால், பணம் தராமல் இழுத்தடிக்கும் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை என்று உறைத்தது. இந்த வாரம் முழுவதும் பண வரவு உச்சக் கட்டத்தில். குறைவான தொகை மட்டும் வர வேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் இந்த மாதப் பணிகளுக்கான பில்கள் போட்டு வர வேண்டியதை மேலே கொண்டு போக வேண்டும்.
நண்பன் எட்டரைக்குத்தான் வேலை முடியும் என்று சொல்லியிருந்தான். ஒரு மணி நேரத்தை எங்கு கொல்வது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, இடது புறம் திரும்பி எழும்பூர். வசந்தபவனில் இரண்டு இட்லிகள், தோசை, இனிப்பு குறைவாக ஒரு லைட் காபி. காலையிலும் அதேதானே சாப்பிட்டோம் என்று இப்போ உறைக்கிறது. படிக்க ஆனந்த விகடன்.
மல்லி தொடர்கதை என்னவாகப் போகிறது! பல கட்டங்களில் எளிமையான சொற்களில், அலங்காரம் இல்லாத வாக்கியங்களில் அழ வைத்து விடுகிறார் சரசுவதி.
மெதுவாக நகர்ந்து சேத்துப்பட்டில் ஷாப்பர்ஸ் ஷாப்பர் கட்டிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நிறுத்துமிடத்திலேயே நண்பனுக்கு காத்திருப்பு. 'உள்ளே வந்து வரவேற்பறையில் வசதியாக உட்கார்ந்து கொள்ளேன்' என்று தொலைபேசியவனிடம், உட்கார்ந்திருந்த இடத்தின் அருமையை விளக்கினேன். அதிகம் வாகன சத்தங்கள் இல்லாத, மரங்கள் நிறைந்த, உறுத்தாத வெளிச்சம் போடப்பட்ட, தூய்மையாக வைக்கப்பட்ட தரையுடன் கனவுலகம் போல இருந்தது அந்த இடம். ஒரு அறையின் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு விகடனையும் கடந்து செல்பவர்களையும் துணைக்குக் கொண்டு காத்திருந்தேன்.
நண்பன் வந்த பிறகு, கண்ணில் போடும் கண்ணாடியைப் பார்த்து கடிந்து கொண்டான். 'உடனே புதுசு வாங்கணும்' என்று கடை தேடல். 'இப்பதானே பணக்காரன் ஆகியிருக்கேன். தேவைப்படுபவற்றை ஒவ்வொண்ணா வாங்கிடுவேன்' என்று பாதி விளையாட்டாக கூறினேன். வழியில் கடை எதுவும் கிடைக்கவில்லை. அவன் தங்கியிருந்த விடுதி அறைக்குப் போய் உட்கார்ந்தோம்.
அடுத்தடுத்து நான் செய்ய வேண்டியவை, இது வரை செய்யத் தவறியிருப்பவை என்று ஆரம்பித்து விட்டான். ஒன்றை முடித்து விட்டு அடுத்தது என்பது சரிப்படாது, ஒரே நேரத்தில் பல பந்துகளை போட்டுப் பிடிக்க வேண்டியிருக்கும். பத்தரை மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு, இடையில் அவனது உணவில் இரண்டு சுட்ட சப்பாத்திகளையும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். அலுவலகத்துக்கு 11 மணிக்கு, பதினொன்றரைக்கு வீடு நோக்கி. 12 மணிக்குத் தூக்கம்.
கனவுகளான கனவுகள். முடிய விரும்பாத கனவுகள். தூங்கித் தூங்கி விழித்து மணி பார்க்கும் போது காலை ஐந்தே முக்கால். இன்றைய நாள் கொஞ்சம் நீளம்தான்.
நேற்று ஒரு மணி நேரத்தில் எழுதியது 1425 சொற்கள். இன்றைக்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கும் போதே 1440 ஆகி விட்டது. தன்னிச்சையாக எழுதுவதற்கு நிமிடத்துக்கு 24 சொற்களை தனி முயற்சியில்லாமல் தொட முடிகிறது. இன்னும் மாதாமாதம் இது அதிகரித்துக் கொண்டே போகும் என்று எண்ண இடமிருக்கிறது. 30 சொற்களை எப்போது தொடலாம்.
இதற்குப் பிறகு உலாவல். வீடு தரை துடைத்தல். 11 மணி சந்திப்பு. எழுதும் பணிகள். மாலையில் ஒரு நண்பர். 1492 சொற்கள்.

லேபிள்கள்:
எழுத்து,
சுயமுன்னேற்றம்,
நண்பர்கள்
விழுந்து எழுந்து
கடைசியாக ஞாயிற்றுக் கிழமை காலையில் ரயிலில் உட்கார்ந்து கொண்டு எழுதியது. இழுத்தடித்து ஏழரை மணிக்குத்தான் நிலையம் வந்து சேர்ந்தது. இறங்கி தொலைபேசி தொலைத்தவருக்கு சொன்னது போல தரையில் விழுந்திருக்கிறதா என்று ஒரு தடவை பார்த்து விட்டு வெளியே வந்தோம். ஆட்டோ தேடிப் போய் வாய் கொடுக்க மனதில்லாமல் சாலையைக் கடந்து பேருந்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்.
பக்கவாட்டு பாதை வழியாக வெளியே வந்து அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் தரைவழி நடைபாதை வழியாக சாலையைக் கடந்து மருத்துவமனையின் முன் வாசல் அருகில் ஏறினால், நல்ல கூட்டம். நான்கைந்து பேர் பாத்திரங்களில் உணவுப் பொருட்கள் விற்றுக் கொண்டிருக்க, வாங்குவதற்குத்தான் அந்தக் கூட்டம்.
பேருந்து நிறுத்தம் நோக்கிப் போகும் போதே பூந்தமல்லி போகும் ஒரு தடம் கடந்து சென்றது. நிறுத்தத்தின் அருகில் வந்ததும் இன்னொரு பேருந்து அதே தடம் வர, அந்த சொகுசு பேருந்தில் ஏறிக் கொண்டோம். 10 ரூபாய் சீட்டு. அண்ணா சாலைக்குத் திரும்பி, சைதாப்பேட்டை கிண்டி கத்திப்பாரா வழியாகப் போக வேண்டும். போரூரில் இறங்கி வேறு வண்டி பிடித்துக் கொள்ளலாம்.
கூட்டமும் அதிகமில்லை, வாகன நெரிசலும் இல்லை. வழியில் கூட வந்த நண்பரிடம் கொஞ்சம் சூடாகவே வாதங்கள். போரூரில் இறங்கி, ஆட்டோ ஒன்றை பிடித்தோம். 20 ரூபாய்க்கு என்று ஏறிக் கொண்டு அந்த ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தோம். 'சின்னச் சின்னப் பசங்க எல்லாம் இருபதாயிரம் சம்பாதிக்குது. நானும் சாஃப்ட்வேர் போகப் போறேன், தொழிலை மாத்தப் போறேன்' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். 'இந்தத் தொழிலில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்க வழி இருக்குதுங்க, ஒங்க பிடிவாதத்தால கெடுத்துக்கிறீங்க' என்று சொல்ல ஆரம்பித்து சீக்கிரம் இடம் வந்து விட்டது.
ஒன்பது மணி சந்திப்பு 11 மணி ஆகி விட்டிருந்தது. கைகால் கழுவி விட்டு இணைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பார்த்து விட்டு கேரளா விடுதியில் சாப்பிட்டு விட்டு 11 மணிக்கு உரையாடல். அவர் பக்கமிருந்து பேசுவது எனக்குக் கேட்டது. நான் பேசுவது அவருக்குக் கேட்கவில்லை, ஸ்கைப். அவர் பேச நான் எழுத என்று சமாளித்தோம்.
இடையில் ஒரு முறை இணைப்புப் போய் வர, நண்பர் வந்திருந்தார். அவர் எழுதிய நூலை சமீபத்தில் படித்திருந்ததைக் குறித்து ஒளிவு மறைவில்லாத விமரிசனத்தைக் கேட்டிருந்தார். பார்த்துப் பார்த்து எழுதியிருந்த புத்தகத்தை ஒருவர் குறை கூறுவதைக் கேட்க அபாரமான மனப் பக்குவம் வேண்டும். அதற்கான தயாரிப்புகளுடன் வந்திருந்தாலும், அடுத்த 10 நிமிடங்களில் முகம் இருண்டுதான் போயிருந்தது. 'நல்லா இருக்கு, அருமையான உழைப்பு' என்று சொல்ல நிறைய பேர் கிடைப்பார்கள். என்னென்ன மேம்படுத்த முடியும் என்று சொல்வதற்குத்தான் ஆள் கிடையாது. தயங்காமல் கருத்தைச் சொல்லுங்கள். என்று கேட்டிருந்தார்.
'முந்தைய புத்தகத்தை விட எழுத்து நடை பல படிகள் மேம்பட்டிருக்கிறது. யாரையும் பிரதிபலிக்காமல், உங்களுக்கு என்று ஒரு துள்ளல் நடை வகுத்துக் கொள்வதில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எடுத்துக் கொண்ட பொருளில் பல தகவல்களைத் திரட்டி ஒரு முழுமையான தொகுப்பாக உருவாக்கியிருப்பதும் பெரிய வெற்றி'
என்று முதலில் தடவிக் கொடுத்து விட்டுத் தாக்குதல். இரண்டுமே உண்மையாக உணர்ந்தவை.
'புத்தகத்தின் நீளம் அதிகமாகி விட்டது. நிறைய இடங்களில் கடுமையா வெட்டி இப்போதைய நீளத்தில் 10ல் ஓரு பங்கு மட்டும் புத்தகமாக வந்திருந்தால் எப்படி இருக்கும் என்று பாருங்கள். சிறந்த புத்தகம் அளவில் பெரிதாக இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது.'
'நம் நாட்டுச் சார்பை விட்டு விடவில்லை. எல்லா இடங்களிலும் இந்தியாவின் நிலைமையை நியாயப்படுத்துவதுதான் நோக்கமாகத் தெரிகிறது' என்று இன்னும் அடிப்படையான குறையைச் சுட்டிக் காட்டினேன்.
இந்த நேரத்துக்குள் ஞாயிற்றுக் கிழமை எட்டிப் பார்க்க வந்தவர்களில் சிலர் கிளம்ப ஆரம்பித்து விட்டிருந்தார்கள். முந்தைய நாள் பெங்களூரு விவாதங்களையும் பேச்சுக்களையும் விளக்கி அதற்கான திட்டமிடல்களை ஆரம்பிக்க முடிவு செய்தோம். இரண்டு பேர் அதில் இறங்கி விட, வங்கிக்குப் போய் பணம் எடுத்துக் கொண்டு, வழியில் சாப்பிட்டு விட்டு, பார்க்கப் போகும் நண்பருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குப் போய் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினேன். திரும்பும் வழியில் தேய்க்கக் கொடுத்திருந்த துணிகள்.
பொருட்களை மறந்து விடும் போக்கு ஒரு வாரமாகவே துரத்துகிறது.
சிறிது நேரம் தூங்க வேண்டும். பெங்களூரு போய் விட்டு வருவது ஒவ்வொரு முறையும் பெரிய அசதியை தருவதாக, நோயில் தள்ளி விடுவதாக அமைந்து விடுகிறது. காலநிலை வேறுபாடு, குளிர் அதிகம். இரவு ரயிலில் ஏறி வருவது எந்த நேரமானாலும் வசதிக் குறைவுதான். 6 மணி நேரப் பயணமாதலால், ஒன்று நள்ளிரவு வரை விழித்திருந்து ஏற வேண்டும் அல்லது அதிகாலை இறங்க வேண்டும். இடையில் குளிர் நடுக்கும் பயணத்தின் தூக்கம் வேறு..
வீட்டுக்குப் போய் நல்ல ஒரு தூக்கம். ஆறு மணிக்கு உலகத் தமிழர் தொழில் வணிகப் பேரவை சார்பாக விருந்துக் கூட்டம். வெள்ளிக் கிழமை ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். கடைசி நிமிடத்தில் அழைக்கிறாரோ என்பதற்கு அவரே சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
'ஞாயிற்றுக் கிழமை மாலை கோயம்பேட்டுக்கு அருகில் மாருதி பராமரிப்பு மையத்தில் ஒரு விருந்துக் கூட்டம். எல்லோருக்கும் அழைப்பு அனுப்ப பொறுப்பேற்றவர் உங்களுக்கு அனுப்பினாரா என்று தெரியவில்லை. உறுதி செய்து கொள்ளத்தான் கூப்பிடுகிறேன். தவறாமல் வந்துடுங்க'.
'சும்மா, எல்லோரும் சந்தித்து உறவாடத்தான். மற்றபடி கூட்டம் பேச்சு என்றெல்லாம் இருக்காது.' அப்படிச் சொல்ல வேண்டியதன் தேவை கூட்டத்துக்குப் போன பிறகு தெரிந்தது. சும்மா பழகுவதற்காக விருந்துக் கூட்டத்துக்குப் போவது எனக்கு அவ்வளவு விருப்பமில்லாத ஒன்றுதான். இன்னொரு நண்பரையும் அழைத்திருந்தார்கள். அவர் தொலைபேசி தான் போகப் போவதாகவும் அங்கு சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். அதற்காகவாவது போகலாம் என்று முடிவு செய்திருந்தேன். நல்லதாகப் போயிற்று.
கோயம் பேடு நெருங்கும் போது வருவதாகச் சொல்லியிருந்த நண்பரிடமிருந்து தொலைபேசி. இன்னும் கிளம்பவில்லை., தாமதமாக வந்து விடுவதாகச் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்துக்கு முன்பு வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே போனால், ஒலி பெருக்கி இல்லாமல் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். போகும் போது நெடுமாறன் பேசிக் கொண்டிருந்ததால், காதில் சரியாக விழ வேண்டும் என்று முன்பக்கமாக போய் உட்கார்ந்து கொண்டேன்.
அவரைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து தமிழ்ச் சங்க பொறுப்பாளர், கவிஞர் காசி ஆனந்தன், நாடாளு மன்ற உறுப்பினர் (காசிலிங்கம் என்று நினைவு). பிந்திய இரண்டு பேரையும் திருப்பூர் மாநாட்டில் பேசக் கேட்டிருக்கிறேன்.
காசி ஆனந்தன், பொங்கல் என்றால் பொங்குவது, போராட்டத்தின் அறிகுறி என்று புதிய கருத்தை அழகாக எடுத்து வைத்தார். நேரம் பார்க்க அலை பேசியை நேரம் பார்க்க எடுத்தால் ஒரு குறுஞ்செய்தி. 'வீ ஆர் ஆல்சோ ஹியர்' என்று பாலபாரதி. கழுத்தை வளைத்து பின்னால் பார்த்தால் அவரும் லக்கிலுக்கும் உட்கார்ந்திருந்தார்கள்.
தாமதமாக வருவதாகச் சொன்ன நண்பருக்கு கூட்ட விபரத்தை குறுஞ்செய்தியாக்கி, முழுதுமாக இருந்து விடப் போவதாகவும் வந்து விடுமாறும் என்று அனுப்பினால், பாதி எதிர்பார்த்தபடி ஏதோ சாக்கு சொல்லி வரவே இல்லை. தொலைபேசியில் அழைப்பு விடுத்த அமைப்பாளர் இப்படி எதிர்வினைகளை எதிர்பார்த்துதான் விபரங்களை சொல்லியிருக்கவில்லை என்று தோன்றியது.
திருப்பூர் மாநாட்டில் பேசும் போது இருந்ததை விட தளர்ச்சி முகங்களிலும் பேச்சிலும். 'கடைசித் தமிழன் இருக்கும் வரை போராட்டம் ஓயாது, வெளிநாட்டு ஆயுதங்களை வைத்துக் கொண்டு சிங்களப் பேரினவாதிகள் கொக்கரிக்கிறார்கள்' என்று போராட்டக் குரல்கள்.
ஒலிபெருக்கி கூட இல்லாமல், இருளடைந்த ஒரு வாகன பராமரிப்புக் கூடத்தில் கூட்டம் நடத்தும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. சொந்தச் சகோதரர் துன்புற்று மாள்வதைப் பார்த்தும் வாளாயிருக்கும் கூட்டத்தினராகப் போய் விட்டோம். என்னதான் குறை சொன்னாலும், தன் வாழ்வையும் உயிரையும் அர்ப்பணித்து உறுதியாக ஈழப் போராட்டத்தை ஆதரித்து நிற்கும் நெடுமாறன், திருமாவளவன், வைகோ போன்றவர்கள் பெரிவர்கள்தான்.
விருந்தில் பாக்கு மட்டையில் செய்த தட்டில் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், இரண்டு வகையான சாதம். புத்தகங்கள் வாங்கிக் கொண்டோம். குத்து விளக்கு என்ற ஈழத் திரைப்படம் ஒன்றைக் காண்பிக்கப் போகிறார்களாம் காந்தளகம் சச்சிதானந்தம் வந்ததும் அது ஆரம்பிக்கும். வலையுலக அரசியல், தமிழக அரசியல் குறித்த விவாதம் சூடாகும் போது படம் போடும் நேரம் வந்து விட்டதால் நுழைந்து விட்டோம். பழைய, கருப்பு வெள்ளைத் திரைப்படம். ஒரு ஆவணமாகப் பார்க்கலாம் என்று கருத்து சொன்னவரும் சீக்கிரமாகவே கிளம்பி விட்டார்.
வீட்டுக்கு வந்து தூங்கும் போது தாமதமாகி விட்டது.
திங்கள் முழுவதும் சோர்வும், மாற்றங்களின் அழுத்தமும். ஒரு நாள் பிற்பகலில் விவாதித்த உள்வாங்கிய மாற்றங்கள் அனைத்தும் எல்லோருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும். சின்னச் சின்னக் குழுக்களாப் பேசினோம். கூடவே வாடிக்கையாளர் சேவைப் பணிகளும். மதியம் மூன்று மணிக்கு மேல் பூந்தமல்லியில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர் தொழிற்சாலைக்கு.
ஆங்கிலப் புத்தாண்டு முடிந்து அடுத்த மாதம் சீனப் புத்தாண்டு. அங்கிருந்து விடுமுறை முடிந்து வணிகம் ஆரம்பிக்காத, சீனா பக்கமிருந்து விடுமுறைக்கு மூடப் போகும் கொஞ்சம் சுணக்கமான காலகட்டம். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அப்படிப் போய் ஜனவரி இறுதியில் நடக்கும் கண்காட்சிகளிலிருந்து சூடு பிடிக்கும். ஜனவரி மாதம் இதமான காலநிலை நிலவும் சென்னை ஒரு வகையில் கொடுத்து வைத்தது. ஆண்டை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு சரியான களம்.
அந்த வகையில் தையில் புத்தாண்டு தொடங்குவது நல்லதாகப் படுகிறது. ஆங்கில முறையில் ஏப்ரலில் புத்தாண்டு ஜனவரிக்கு மாறி சில நூற்றாண்டுகள் ஆகி விட்டன. மாதப் பிறப்பும் 15 நாட்கள் முன்கூட்டியே நடப்பதும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்து விட்டது. தமிழ் மாதங்களிலும் அந்த 15 நாட்கள் குறைத்தலை செய்து விட்டால், மேற்கத்திய மாத, ஆண்டு பிறப்பும் தமிழ் மாத ஆண்டு பிறப்பும் ஒன்றி விடும். இரண்டுமே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள்.
இசுலாமிய, இந்து நாட்காட்டிகள் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவையாம்.
மாலையில் கோடம்பாக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரைப் பார்க்க. அப்போதுதான் பிடிக்க ஆரம்பித்தது சளி. திரும்பும் போதே அலுப்பாக இருந்தது. நண்பனைப் பார்க்க ராதாகிருஷ்ணன் சாலை போக முயற்சித்து வழி சரியாகப் பிடிக்காமல், அசோக் நகர் வந்து சேர்ந்து விட்டேன். கிருஷ்ணா இனிப்பகத்தில், ரசம், லசான்யா என்று ஒரு மேற்கத்திய உணவு என்று சாப்பிட்டு விட்டு திரும்பினேன்.
தூங்கும் போது முன்னெச்செரிக்கையாக கெட்டியான போர்வை, விரிப்பு என்று படுத்துக் கொண்டாலும், காலையில் எழுந்திருக்கும் போது சளி தலைக்கு ஏறியிருந்தது. சமாளித்து தூங்கு மூஞ்சி முகத்தோடு அலுவலகம். பதினொரு மணிக்கெல்லாம் உட்கார்ந்திருக்க முடியாமல் திரும்பி விட்டேன். நான்கைந்து மணி நேரம் நன்கு தூங்கி விட்டு திரும்ப அலுவலகம்.
மின்னஞ்சல்கள், செய்ய வேண்டிய வேலைகள் நிறைய தேங்கி விட்டிருந்தன. சனிக்கிழமை பேசிவற்றின் குறிப்புகளை முடிவுகளைத் தொகுத்து அனுப்புவது கூடச் செய்திருக்கவில்லை. நல்ல வேளையாக வாடிக்கையாளர் யாரும் சந்திக்க நேரம் கொடுத்து விடவில்லை.
புதன் கிழமையும் நீண்ட தூக்கம் காலை முழுவதும். அலுவலகத்திற்கு சென்று ஒவ்வொன்றாக நூல்பிடிக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர் அலுவலகத்தில் அழைத்து 4 மணிக்கு வரச்சொன்னார்கள். எதுவும் ஓடவில்லைதான். மூன்று இடங்கள் என்று திட்டமிட்டுக் கொண்டு போனால், நான்கு மணிக்கு வரச் சொன்ன இடத்தில் தாமதமாகும் என்று அடுத்தடுத்த இடங்களுக்குப் போய் விட்டேன். இரண்டுமே திருப்தியாகப் போயின.
ஆறு மணிக்கு மேல் வந்தால் இன்னும் தாமதமாகும் என்றார்கள். பொடி நடையாக போய் ரயில் நிலையம் எதிரில் இருந்த வசந்தபவனில் இட்லி, தோசை பால். சரியான பசி.
எட்டு மணிக்கு மேல் சந்திக்க அழைத்தால், வாய் நிறைய வருத்தங்களுடன், காத்திருக்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பி விட்டேன்.
வியாழக்கிழமை ராணிப்பேட்டை போக வேண்டும்.
ஆங்கிலத்தில் feed the cold and starve the fever என்பார்களாம். சளி பிடித்திருந்தால் சாப்பிட மனதிருக்காது. அதற்காக சாப்பிடமல் இருந்தால் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். காய்ச்சலின் போது வயிற்றில் மக்கு இல்லாமல் செய்வது அவசியம்.
சளி பிடிக்கும் போது திரவ உணவாகச் சாப்பிட வேண்டும் என்று முயன்றிருக்கிறேன். இந்த முறை தண்ணீர் குடிப்பதை முடிந்த அளவு குறைத்துக் கொண்டு காய்ந்த பொரித்த உணவுகளை சாப்பிட்டுக் கொண்டேன். புதன் கிழமை மாலைக்குள் நல்ல தெளிந்து விட்டிருந்தது. அத்தோடு வீட்டுக்குப் போய் தூங்கியிருந்தால் சரியாகி இருக்கும். ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து மின்னஞ்சல்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தேன். அப்படியும் பல இன்னும் தேங்கி விட்டன.
வியாழக் கிழமை காலை, நேற்று சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. ஆறரைக்கு எழுந்து, குளித்து தயாராகி, வாங்கி வைத்திருந்த ரொட்டியை வாட்டி சாப்பிட்டு விட்டு மணப்பாக்கம் போய் பேருந்து பிடிக்கக் கிளம்பினேன். பக்கத்து வீட்டுக்காரர் சிறிது தூரம் தனது வண்டியில் கொண்டு விட்டார். நல்ல வேளை, அங்கிருந்த ஆட்டோ கிடைத்தது. சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும், அந்தக் குறும்பயணத்தை பகிர்வூர்தி பயணமாக மாற்றி விட்ட பெண், ஏறிப் போயிருக்க வண்டி கிடைத்திருக்காது. அந்தப் பெண் 5 ரூபாய் கொடுக்க நான் 10 ரூபாய் கொடுத்து இறங்கிக் கொண்டோம்.
நகரப் பேருந்தில் ஏறி போரூர் சந்திப்பில் இறங்கும் போது எட்டு மணி ஆகியிருந்தது. விரைவு வண்டியில் ஏறினால் அனுபவம் நிறைந்த நடத்துனர், புதிய ஓட்டுனர். பயணிகளில் ஒருவருக்கும் நடத்துனருக்கும் விவாதம், வண்டி விரட்டி விரட்டி மிதமான வேகத்தில் மட்டும் போக வாலாஜா 10.30 மணிக்கு. முதல் வாடிக்கையாளர் இடத்தில் வேலைகளைப் பார்த்தால் எதிர்பார்த்திருந்த முன்னேற்றம் இல்லை. அது தொடர்பான வாக்குவாதம். சண்டையும் போட்டுக் கொண்டோம். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டாவது இடம். எதிர்பார்த்த அளவு பணி போய்க் கொண்டிருந்தது. இன்னும் சிறப்பாக இருக்கலாமே என்று ஆதங்கம்.
மூன்றாவது இடத்துக்குப் போயிருந்தவர்களிடமிருந்து தொலைபேசி. போக வேண்டாம் என்று முடிவு. கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பி விடுவோம் என்று ஐந்து மணிக்கு முன்பு பேருந்து பிடித்து விட்டேன். குமுதம். பாமரன், லீனா மணிமேகலை சச்சரவில் அடுத்த குத்து பாமரன் பக்கங்களில்.
போன ஆண்டு பணிமுறைகளில் பெரிய மாற்றங்கள் செய்த போது விளைவுகள் தெரிய ஒரு ஆண்டு ஆகி விட்டிருந்தது. இந்த ஆண்டு அப்படிக் கட்டுப்படி ஆகாது. ஓரிரு மாதங்களில் மாற்றங்களுக்கு உருவம் வந்து விட வேண்டும். போன ஆண்டு செய்த தாமதங்களைப் படித்துப் பார்த்து கவனமாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். 2007 ஜனவரி முதலான நாட்குறிப்புகள் இப்போது பயன்படும்.
எழுதுவதற்கு நிறையத் தோன்றுகிறது. எழுதாமல் விட்டுப் போவதாக மனத்தாங்கல். காலையில் சோம்பலில் தூங்கிக் கொண்டிருந்தால் மனத்தாங்கல் மட்டும்தான் மிஞ்சும்.

உடல்நலம்,
விடுபட்ட நாட்கள்
ஞாயிறு, ஜனவரி 20, 2008
ஓடும் ரயிலில்
நேற்று நண்பகல் 12 மணிக்கு பெங்களூர் போய்ச் சேருவோம் என்று நினைத்திருக்க 6.10க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட ரயில் பத்தரை மணிக்கெல்லாம் கிருஷ்ணராஜபுரம் தாண்டிக் கொண்டிருந்தது. பதினொரு மணிக்கு முன்பு ரயில் நிலையத்துக்கு வெளியில் வந்து விட்டோம்.
வழக்கம் போல ஆட்டோ காரர்களின் மாயச் சுழல்கள். மகாத்மா காந்தி சாலை போக, '150 கொடு சார், 120, 100' என்றெல்லாம் பேசினார்கள். வரிசையில் நின்று முன்பதிவு ஆட்டோவில் சீட்டு வாங்கினால் 43 ரூபாய் கட்டணம். தூரமும் கணிசமாக இருந்தது. சென்னையில் இந்தத் தூரத்துக்கு 100 ரூபாய்க்குக் குறைய மாட்டார்கள். 50 ரூபாயில் போய்ச் சேர்ந்து விட்டோம்.
ரயிலில் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளும், ரொட்டித் துண்டுகளும், அட்டைப்பெட்டி சாறும் செரித்து பசி எடுத்திருக்க, இறங்கியதும் அருகில் இந்தியன் காபி ஹவுசில் மசால் தோசையும் காபியும். சந்திப்பு நடக்கும் நேரம் ஒன்றரை மணி. 12 மணிக்கெல்லாம் போய் விட்டோம். சில மாதங்களாக நேரில் பார்த்திராத நண்பர்கள். 1 மணிக்கு மதிய உணவுக்கு.
அது முடிந்து திரும்பும் போது 2 மணி ஆகி விட்டது. இன்னும் இரண்டு பேர் காத்திருந்தார்கள். போன ஆண்டு ஈட்டியது, இந்த ஆண்டு திட்டமிட்டது, அடுத்த ஆண்டுக்குச் செய்ய வேண்டியது என்று விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பேரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள்.
ஒருவர் எண் இலக்குகளை துரத்த வேண்டிய அவசியத்தை ஆழமாக உணர்ந்தவர். புதிய நிறுவனங்கள், வருமானம், ஆதாயம், மதிப்பீடு, என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று பல ஆண்டுகளாக அதிலேயே ஊறி ஊறி திளைத்து வல்லமைக்குரியவர். ஒருவர், நிறுவனத்தை நடத்திச் செல்ல வேண்டிய திசையைக் கணித்து சரியாக வழி காட்டும் நீண்ட கால சிந்தையினர். அவர் காட்டிய திருப்பங்களைப் பிடித்துக் கொண்டு பெரியப் பெரிய மாற்றங்களை செய்து கொள்ள முடிந்தது.
செய்வதை பதிவு செய்தல், பதிவு செய்ததைப் பின்பற்றுதல், விபரங்களை அலசி முன்னேற வழி காட்டுதல் என்று வாடிக்கையாளர் சேவையில் செய்யும் பணிகளை மதிப்பீடு செய்து மேம்படுத்தலில் ஒருவர் பெரும் பங்காற்றுகிறார்.
நான்காமவர், ஒரு ஆண்டாக கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருக்கிறார். எவரையும் கவரும்படி பேசி, பெரிய நிறுவனங்களில் விற்பனை அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று வழி காட்டுவதில் வித்தகர்.
2 மணிக்கு ஆரம்பித்த விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் முடியும் போது மாலை மணி ஏழரை. மூன்றரை மணிக்கு ஆரம்பித்து ஏழரை வரை உட்காரலாம் என்பது ஆரம்பத் திட்டமிடல். 2 மணி நேரம் முன்னதாக ஆரம்பித்ததால் நேரமாகி விட்டதே என்ற பதட்டம் இல்லாமல் எல்லாவற்றையும் அலசி ஆராய முடிந்தது.
காலையிலிருந்து ஆஸ்திரேலிய அணி 410க்கு மேல் அடித்து வெற்றி பெற முடியுமா என்று கவனிப்பும். முதலில் மடிக்கணினியில் இணைய இணைப்பில், பான்டிங்குக்கு இஷாந்த் சர்மா போட்ட பந்துகளின் விவரணனையைப் பார்த்து 'இந்தியாவின் ஒரு பந்து வீச்சாளர் பான்டிங் போன்ற மட்டையாளரை இவ்வளவு திணற வைக்க முடியுமா' என்று வியக்க வைத்தது. மதியம் பேச ஆரம்பித்து சில நிமிடங்களில் எல்லோரும் அவுட் ஆகி நல்ல மனநிலையும் கொண்டு வந்திருந்தது.
கிரிக் இன்போவில் பான்டிங் சந்தித்த அந்த ஒரு மணி நேரம் என்று கட்டுரை. இன்னும் நான்கு நாட்களுக்குப் பேசிப் பேசித் தீர்க்க ஒரு வெற்றி. அடுத்த போட்டியிலும் இந்த முனைப்பை விடாமல் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியர்களுக்கு விளையாட்டை விளையாட்டாக விளையாடுவதற்கு ஒரு நல்ல பாடமாக அமையலாம். முந்தைய போட்டி கூட வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒன்று.
ஏழரை மணிக்கு மேல் அக்கா வீடு நோக்கி. நண்பர்கள் மூன்று பேர் முதலில் போய் விட, நாங்கள் இன்னொரு தங்கை வீட்டுக்குப் போக வேண்டிய திட்டமும் இருந்தது. அங்கு போய் குட்டிப் பெண்ணிடம் நட்பு பிடித்து பேசிக் கொண்டிருந்து விட்டு, ஒன்பது மணிக்கு மேல் இங்கு வந்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.
நள்ளிரவு 12.15க்கு கிருஷ்ணராஜபுரத்தில் ரயில் வரும். பத்தரைக்கெல்லாம் ரயில் நிலையம் வந்து விட்டோம். வழியனுப்பவும் ஒரு நண்பர் கூட வந்து பேசிக் கொண்டிருந்தார். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும்படி பேச வல்லவர். தூக்கத்தை விரட்டி சிரித்து சிரித்து நேரம் போனது. அவ்வளவாக சலிப்பில்லாமல் 12 மணி தாண்டியது. சில நிமிடங்கள் தாமதத்தில் வண்டியும் வந்தது. உத்தேசித்து நின்றிருந்த இடத்திலிற்கு மறுபுறம் ஏற வேண்டிய பெட்டி. ஓடிப் போய் ஏறிக் கொண்டோம்.
பயணச் சீட்டு பரிசோதகர் வந்து போன பிறகு நல்ல தூக்கம். குளிருக்கு வேண்டும் என்று போர்வை, காலில் காலுறை, தலைக்கு வைக்க இன்னொரு போர்வையை மடித்து என்று பொதிந்து கொண்டு தூக்கம். நண்பர் காட்பாடியில் இறங்குவதற்காக மூன்றரை மணிக்கு ஆயத்தங்கள் செய்யும் போது ஒரு முறை விழிப்பு. ஆறு மணி வரை தூங்கி விட்டு எழுந்திருக்க நினைக்கும் போது கீழ் நடு படுக்கையில் படுத்திருந்த கணவன் மனைவி முகங்களில் கலக்கம்.
அவரது செல்பேசியைக் காணோமாம். குளிர் சட்டைக்குள், சட்டையில் பாதுகாப்பு ஊசியால் குத்தி வைத்து விட்டுப் படுத்திருந்தாராம். அணைத்தும் வைத்திருக்கிறார். இப்போது காணவில்லை. 'உங்களுக்கு கவனக்குறைவு' என்ற புலம்பல்களோடு பல தியரிகள்.
'யாரோ உருவி விட்டிருக்கிறார்கள், நீங்க கவனிக்காமல் தூங்கியிருக்கீங்க' 'தூங்கும் போது நழுவி விழுந்திருக்கும், விழுந்தது வண்டியின் ஓட்டத்தில் அடுத்தடுத்த பகுதிகளில் போயிருக்கலாம்' 'விழுந்திருந்ததே யாராவது எடுத்திருப்பார்களோ' 'அப்படி எடுப்பதற்கு யாரு வருவாங்க, இங்கதான் கிடக்கும், பெட்டிகளை நகர்த்தி விட்டு நல்லா பாருங்க'
'ஏறும் போது இருந்ததா' அது கூட உறுதி இல்லை. பெரம்பூரில் இறங்கி விட்டார்கள். 'கடைசி நிறுத்தத்தில்தான் நான் இறங்குகிறேன். ஒரு முறை எல்லா இடமும் பார்த்து விட்டு கிடைத்தால் உங்களுக்கு தொலைபேசுகிறேன்' என்று சொல்லி அனுப்பினேன். பெங்களூரில் ஏறுவதற்கு முன்பே தொலைத்திருப்பாரோ? கொத்தி எடுக்கும் மனைவிக்குத் தெரியாமல் செலவழிக்கக் காசு வேண்டி நேற்றே விற்று விட்டு இப்போது காணாமல் போன நாடகம் நடத்துகிறாரோ? என்று ஊகங்கள் கூட.
ஏழரை மணிக்கு சென்ட்ரல் போக வேண்டுமாம். ஆறு மணிக்கெல்லாம் அம்பத்தூர் வந்து விட்டது. தூரப்படி ஆறரை மணிக்குள் போய் விடலாம். நின்று நின்று நகர்வதில் இப்போது பெரம்பூர் வந்ததே ஏழு மணிக்கு அப்புறம்தான். ஏழு இருபது இப்போது. ஏழரைக்குப் போய்ச் சேர்ந்து விட்டால் அதிசயம்தான்.

பயணம் அங்கே
பெங்களூர் போகும் சதாப்தி ரயிலில். காலையில் 6 மணிக்குக் கிளம்பி மதியம் 12 மணிக்குப் போய்ச் சேருகிறது. மதியத்துக்கு மேல் வேலையை முடித்து விட்டு இரவு ரயிலில் திரும்பி விடலாம். இரவு ரயிலில் போனால் அதிகாலையில் போய் ஆட்டோ, தங்குமிடம் என்று இழுத்து விடும். காலையில் பிருந்தாவனில் போனால் நாள் முழுவதும் பயணமே ஆகி விடும். இது நல்ல வசதியான ஏற்பாடுதான்.
காலையில் 6 மணிக்கு வண்டியைப் பிடிக்க 5 மணிக்குக் கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். இரு சக்கர வண்டிகளைப் புறக்கணித்து விட்டு கோயம்பேடு வரை பகிர்வூர்தி. அங்கிருந்து வாடகை வண்டியில் மத்திய ரயில் நிலையம். நான்கு பேரில் மூன்று பேர் இந்த வழி, நான்காமவர் வீட்டிலிருந்து நேராக நிலையத்துக்கு வந்து விட வேண்டும்.
ஐந்தே முக்காலுக்கு வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு தொலைபேசினால், ஈகா தியேட்டர் தாண்டி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. கடைசி நிமிட தகவல் எல்லாம் பரிமாறிக் கொண்டு, குறுஞ்செய்திகள், நிலையத்தில் இறங்கி நடந்து கொண்டே தொலைபேசி அழைப்பு என்று சரியான நடைமேடைக்கு அவர் வந்து சேரும் போது வண்டி நகர ஆரம்பித்திருந்தது. தூரத்திலிருந்து கண்ணுக்கு எட்டியது காலுக்கு எட்டாமல் போவதைப் பார்த்து விட்டுத் திரும்பி விட்டார்.
நேற்றுக் காலையில் 5 மணிக்கு விடாப்பிடியாக எழுந்து கொண்டேன். ஆறேகால் வரை எழுத்து. நடக்கப் போகும் போது இறகு பந்து விளையாடுபவர்கள் இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. திரும்பும் போது இரண்டு பேர் ஆரம்பித்து விட்டார்கள், சமையல் மேடை துடைத்து, தூத்து, பாத்திரம் கழுவிய பிறகு தண்ணீர் பிடிக்க வெளியே போகும் போது இன்னும் இரண்டு பேர் சேர்ந்து சூடு பிடித்து விட்டிருந்தது.
தண்ணீர் பிடித்துக் குடிக்க பானையில் கொதிக்க வைத்துக் கொண்டே தரை துடைப்பு. அலமாரிகளில் விரிக்கப்பட்ட தாள்கள் எல்லாம் தூசி படிய ஆரம்பித்திருந்தன. வெளிப் பக்கமாக இருக்கும் ஜன்னல்களில் தூசி துடைக்கப்படாமலேயே அப்பியிருந்தன. அவற்றுக்கும் நல்ல நாள் வர வேண்டும். குளித்து புறப்படும் போது எட்டரை மணி. உணவு தயாரிப்பு சாப்பிடுவது இல்லாமல் உடனேயே கிளம்பி விட முடிந்தது.
அலுவலகத்திற்கு வந்து காலையில் முழுவதும் மனதில் ஓடிக் கொண்டிருந்த வேலைகளுக்ககான தயாரிப்பு ஆரம்பித்து விட்டிருந்தது. 8 மணிக்கு ஆரம்பிக்கு கிரிக்கெட் பந்தய நிலவரங்கள் ஒரு பக்கம். அடுத்த ஆண்டுக்கான திட்டமிடல் ஆவணம், வாடிக்கையாளர் சேவை விபரங்கள், மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்கு நிலவரம்.
பத்தரைக்கு பயிற்சி வகுப்புகள். பிற மென்பொருள் சேவை நிறுவனங்களில் எப்படி விற்பனை, சேவை, மென்பொருள் உருவாக்கம், பணம் கேட்டுப் பெறுதல் செய்கிறார்கள், என்று தனது நண்பரிடம் விபரமாகக் கேட்டுத் தெரிந்து வந்திருந்த ஒருவர் அதை எல்லோருக்கும் விளக்கினார். ஆங்கிலத்தில் ownership என்று சொல்லப்படும் பொறுப்புணர்வு பரவலாகிக் கொண்டிருக்கிறது.
'வாடிக்கையாளர்களில் சரி பாதி உருது பேசும் முஸ்லீம்கள், அவர்களிடம் உரையாடும் போது பேச முடியா விட்டாலும் புரிந்து கொள்ள முடிவது நன்றாக இருக்கும்' என்று ஒரு தேவை இருப்பதை முன்னிட்டு உருதுவின் சகோதரி மொழியான இந்தி பேச கற்றுக் கொள்ளலாம் என்று வகுப்புகள் ஏற்பாடு செய்கிறார்கள். கற்றுக் கொடுக்கும் பொறுப்பு என் மீது வந்தது. அது சலிக்காமல் செய்ய முடியும் ஒரு பணி.
இரண்டு பேருக்கு உருது தெரியும், ஒருவருக்கு இந்தி நன்கு பேசத் தெரியும், இரண்டு/மூன்று பேர் இந்தி பிரச்சார சபாவில் கற்றுக் கொண்டவர்கள். நான்தான் வகுப்பில் கற்று, இந்தி பேசப்படும் மாநிலத்தில் வசித்து, இந்தி பேசுபவர்களிடம் உறவாடி, இருப்பதில் தேர்ச்சி பெற்றவன். இந்த வாரம் இரண்டாவது வாரம்.
'அடுத்தது நமது வாடிக்கையாளர்கள் ஆந்திராவில் அதிகமாக வந்தால், தெலுங்கு கற்றுக் கொள்ள வேண்டும்' சீனாவுக்குப் போவோம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த காலங்களில் சீன மொழி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
இந்தி வகுப்பைத் தொடர்ந்து இரண்டாகப் பிரிந்து கொண்டோம். ஒரு குழுவினர் வணிக முறையிலான வளர்ச்சியைப் பற்றிப் பேச வேண்டும். மற்ற குழுவினர் தொழில்நுட்ப முறையிலான வளர்ச்சி பற்றி விவாதிக்க வேண்டும். இயல்பாகவே சிலருக்கு திட்டமிடல், அடுத்தவருக்கு பணி செய்தல், வாடிக்கையாளரிடம் உறவாடுதல், பணம் திரட்டுதல் என்ற ஆர்வங்கள் அதிகமாகவும் இன்னும் சிலருக்குக் குறைவாகவும் இருக்கும். என்னுடைய இயல்பு பிந்தைய வகையிலானது என்றாலும், சூழலின் தாக்கங்களால் முதல் குழுவில் உட்கார்ந்திருந்தேன்.
இந்த ஆண்டு ஈட்டியது போல இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அல்லது நான்கு மடங்கு அதிகமாக அடுத்த ஆண்டு பொருள் சம்பாதிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்? ஒவ்வொருவரும் தமது திறமைகளை வளர்த்து குறைகளை நிவர்த்தி செய்வது, குழுவாக அமைப்புகளை மேம்படுத்தி நேர விரயங்களைத் தவிர்ப்பது, வாடிக்கையாளர்களிடமிருந்து ஈடான பொருளைக் கேட்டுப் பெறுவது என்று மூன்று முனைகளிலும் கவனம் செலுத்தி மேம்பாடுகள் செய்ய முயற்சிக்கலாம்.
ஒன்றரை மணி நேரம் விவாதித்ததில் சில நல்ல குறிப்புகள் கிடைத்தன. கணினிகள், பயணம் செய்யும் முறை, வாடிக்கையாளர்களிடம் தகவல் தொடர்புகள், குழுவினருக்குள் கருத்து பரிமாற்றம், யார் எந்த வேலையைச் செய்தால் சிறப்பாக முடியும் என்பதை முறையாக ஆவணப்படுத்தி பின்பற்றுதல் என்று அடையாளம் கண்டு கொண்டோம்.
விவாதக் குழுவில் எல்லோருமே ஒரே மாதிரியான, ஒத்தக் கருத்துடையவர்களாக இல்லாமல் வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு பின்னணியிலிருந்து சிந்திக்கக் கூடியவர்கள் கூடினால் விளைவுகள் சிறப்பாக இருக்கும்.
பயிற்சி வகுப்புகள் முடியும் போது மணி ஒன்றரை ஆகி விட்டிருந்தது. ஐசிஐசிஐ வங்கியில் ஒரு கடிதம் கொடுக்க வேண்டும் என்று நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தது வந்திருந்தது. கூடவே போட்டிருந்த காசோலை என்னவானது என்று 'அன்பான' கிளை மேலாளரிடம் கேட்டு விட்டு வரலாம் என்று புறப்பட்டு விட்டேன். சாப்பாட்டு வேளையிலிருந்து ஒதுங்கி விடவும் ஒரு வாய்ப்பு.
'இப்படிப்பட்ட மேலாளர்களைக் கொண்டு எப்படி வங்கி கிளைகளை திறம்பட நடத்துகிறார்கள்' என்று ஆச்சரியப்பட வைக்கும் மேலாளர்கள். கடனட்டை, கடன்கள், காப்பீடுகள் விற்கும் விற்பனையாளர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தும் திறமை இருப்பவர்களை கிளை மேலாளர் என்று பெயர் கொடுத்து உட்கார்த்தி வைத்து விட்டு, உண்மையான வங்கிப் பணிகளை, கணினி மூலமான கட்டுப்பாடுகள், கிளை பணி மேலாளர் எனப்படும் உதவி மேலாளர் அன்றாட வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் போலிருக்கிறது. பார்த்தது வரை இது போன்ற மேலாண்மை பட்டதாரிகள், விற்பனையாளர்கள் கிளை மேலாளராக இருப்பது இந்த நோக்கத்தில்தான் என்று படுகிறது.
மீண்டும் ஒரு முறை அவரிடம் பொருளற்ற புன்னகைகள், உபச்சார சொற்களை கேட்பது தவிர வேறு எந்த பலனும் இல்லாமல் நேரம் செலவழித்து விட்டு வந்தேன். கடிதத்தைக் கூட வாங்கிக் கொள்ளவில்லை, அடையாரில் வீட்டுக் கடன் கொடுக்கும் கிளைக்குப் போய்த்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.
அலுவலகத்துக்கு வரும் போது சாப்பாட்டுக் கடை முடிந்து விட்டிருந்தது. 5 மணிக்கு வாடிக்கையாளர் ஒருவரைப் பார்க்கப் போக வேண்டும். திட்டமிடல் ஆவணங்கள், திறமைகளைப் பட்டியலிடும் முறைக்கான திட்டமிடல், வாடிக்கையாளர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பணிகளை சரிபார்த்தல் என்று ஐந்து மணி ஆகும் போது பசியும் சோர்வும் எட்டிப் பார்த்தன. அந்த நேரம், தேநீருக்கு சுடுநீர் சேர்த்து வைக்கவா என்று ஒருவர் வலிய கேட்கவே, ஒரு எலுமிச்சை தேநீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம் என்று முடிவு.
அத்தோடு காலை வரை ஓட்டி விடலாம் என்று நினைத்திருந்தால், அடுத்தபடியாக இரண்டு பேர் இணைந்து கொடுக்கும் விருந்து வளசரவாக்கம் பாண்டியாஸ் விடுதிக்குப் போக வேண்டுமா. முதலாமவர் வந்து கேட்டதும், வரவில்லை என்று நிலைமையை விளக்கியதும் அரை மனதாகப் போய் விட்டார். தொடர்ந்து இன்னொருவரும் வந்து இடித்ததும் உறுதி தளர்ந்து விட்டது. போய் குறைவாக, ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு.
ஏழரை மணிக்கு மேல் அங்கு போனோம். அதற்கிடையில் இந்து மதம் குறித்து கல்வெட்டின் பின்னூட்டத்துக்கு பதில் பின்னூட்டம் போட்டேன். எப்படி கிடுக்கி போடுவார் என்று பயந்திருந்தேனோ அதே வழியில் பிடித்திருந்தார்.
மற்ற பதிவுகளில் பின்னூட்டங்களில், வீணான வெறுப்பு விதைப்பும் வளர்ப்பும்தான காரண காரியமில்லாத நிலைகளுக்குக் காரணம் என்று தோன்ற வைத்தன.
இளம் தோசை என்று முதலில் இரண்டு, அதிலேயே நிறுத்தியிருக்கலாம். பட்டர் நான் ஒரு பாதி, இன்னொரு இளம் தோசை. வயிறு திம்மென்றாகி விட்டது. அதை நிவர்த்தி செய்கிறேன் என்று கடைசியில் ஐஸ்கிரீமும் தின்று வைக்காமல் நின்று கொண்டேன்.
எல்லோரும் சாப்பிட்டு எழுந்திருக்கும் போது ஒன்பதேகால் ஆனது. வழியில் வங்கியில் காசு எடுத்து கணினி வலையமைப்புக்கான கருவி வாங்க பணம் எடுத்துக் கொடுக்க அலுவலகம். முதலில் நடந்து போகத் தொடங்கியிருந்தார்கள் மூன்று பெண்களும். நாங்கள் அவர்களைக் கவனிக்காமலேயே வண்டியில் கடந்து போய் பணம் வழங்கும் கருவியில் பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தால் மூன்று பேரும் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஆச்சரியத்தை மூக்கில் விரல் வைத்து காண்பித்தால், மலர்ந்து சிரித்த சிரிப்புகள் மனதில் ஒட்டிக் கொண்டன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிற்பகலில் அண்ணா நகர், முகப்பேரிலிருந்து மதுரவாயல் வழியாக பல்லாவரம் போவதற்கு முகப்பேரிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்து ஏறும் குறுஞ்சாலை வழியாக ஏறியதும் பார்த்தால் எதிரில் பள்ளி முடிந்து பேருந்து. இதில்தானே மகனும் வருவான் என்று பார்த்தால், கைகளில் முகத்தைப் பதித்து வெளியில் வேடிக்கை பார்த்தவாறே ஏதோ ஆழ்ந்த எண்ணங்களில் ஆழ்ந்திருந்தான். கவனத்தை ஈர்த்து புன்னகைத்ததும், மலர்ந்த முகத்தின் சிரிப்பு மறக்க முடியாத சித்திரம்.
வீட்டுக்கு வரும் போது பத்து மணி பத்து நிமிடங்கள். பத்தரை மணிக்குத் தூக்கம். சரியாக இரண்டரை மணிக்கு விழிப்பு வந்து விட்டது. பகலெல்லாம் சாப்பிடாமல் இருந்து எட்டரை மணிக்குச் சாப்பிட்டது செரித்து இரண்டரைக்கு எழுப்பி விட்டது. தூங்க முயற்சித்தும் தூங்க முடியவில்லை. மூன்றேகாலுக்கு எழுந்து பல் தேய்த்து விட்டு பழைய தூசி படிந்த தாள்களை மாற்றினேன்.
அது முடிந்ததும் அரை மணி நேரம் படிப்பும் ஓய்வும். கை கால் கழுவி விட்டு தியானம். எப்படிக் கண்கள் எரிந்தாலும், எவ்வளவு தூக்கம் சரியில்லாமல் போயிருந்தாலும். 20 நிமிட மனப்பயிற்சி அமைதியைத் தந்து விடுகிறது. 4.50க்குக் கிளம்பினோம்.
முதலில் வண்டி சாவியைக் காணோம் என்று எனக்குள்ளேயே பதறிக் கொண்டேன். மாற்றுச் சாவி போட்டுக் கூட முயற்சித்துக் கொண்டேன். பொருட்களை மாற்றி தூசி தட்டும் போது சாவியை இடம் மாற்றி வைத்திருக்கிறேன். அந்த நினைவே இல்லாமல் போய் அந்த தேடல். கிடைத்து விட்டது.
சாவி இல்லா விட்டால் எப்படி நிறுத்தத்தில் நிறுத்தி பூட்டி விட்டுப் போவது? அதனால் அந்த நேரத்தில் வண்டியை அலுவலகத்தில் விட்டு விட்டு வாடகை வண்டிகளைப் பிடிக்கலாம் என்று முடிவு. கூடவே தலைக்கவசம் எடுத்துப் போனால் எங்கு வைப்பது? காலையில் குளிரில் ஏன் அவதிப் பட வேண்டும் என்று நியாயங்களும்.
கையில் ஒரு தனிப்பையில் இரவில் மூடிக் கொள்ள ஒரு போர்வை, போட்டுக் கொள்ள ஒரு செருப்பு, புத்தகங்கள், மாற்று சட்டை என்று எடுத்துக் கொள்ள அலுவலகத்தில் எடுத்து வைத்த மடிக்கணினி பையை மறந்து வெளியே நடக்க ஆரம்பித்து விட்டேன். கூட வருபவர் நினைவூட்டிய பிறகு ஓடிப் போய் எடுத்துக் கொண்டேன்.
வடபழனி வரை போகும் பகிர்வூர்திகளில் ஒன்றைப் பிடித்து வடபழனியிலிருந்து வாடகை வண்டி பிடிக்கலாம் என்று திட்டம். ஏறிய பகிர்வூர்தி கோயம்பேடு போவதாம். மூன்று பேர் வடபழனி வாடிக்கை ஏறியதால் வடபழனி போய்ப் போவதாக முடிவு செய்தார். அப்போதும் நண்பர்தான் 'நாமும் கோயம்பேடில் இறங்கி ஆட்டோ பிடிக்கலாமே' என்று நினைவுபடுத்திய பிறகுதான், வடபழனிக்குப் போவதே ஒரு சமரசம்தான், கோயம்பேடு வழிதான் சரியானது என்பது உறைத்தது. மாறி விட்டிருக்கும் சூழலுக்கு ஏற்ப திட்டங்களையும் மாற்றிக் கொள்ள விழிப்பு வேண்டுமே!
பேருந்து நிலையத்தில் பின்புறம், சந்தைக்குப் போகும் சாலையின் திருப்பத்தில் இறக்கி விட்டு விட்டார். ஆட்டோக்கள், 120, 150, 140 என்று வரிசையாக ஏலம் போட்டார்கள். வடபழனியிலிருந்து 80 ரூபாய், இங்கிருந்து 70தானே வர வேண்டும்? 100 ரூபாய் கேட்டவரின் வண்டியில் உட்கார்ந்து விட்டோம்.
சாலை விளக்குகளில் சிவப்பு எதையும் பொருட்படுத்தாமலேயே வண்டி சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஐந்தே முக்காலுக்கு கொண்டு சேர்த்து விட்டார். ஆட்டோ நிறுத்தத்திலிருந்து அருகிலிருக்கும் வழியில் புகுந்தால் வண்டி நிற்பது 2A மறுபக்க நடைமேடையில். ஹாட்பிரட்சில் டோநட், அடையார் ஆனந்தபவனில் தின்பண்டங்கள், ஆனந்த விகடன் வாங்கும் திட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டு நண்பரைத் தொடர்ந்து வண்டிக்கு வந்து சேர்ந்து விட்டோம். ஏறிய பிறகு நான்காவது நண்பர் வந்து சேராமல் வண்டியும் கிளம்பியது.
முதலில் ஒரு தண்ணீர் பாட்டில், நாளிதழ்கள் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள், சிறிது நேரத்தில் தட்டில் பிஸ்கட்டுகள், சப்பும் இனிப்புகள், காபி. அடுத்து காலை உணவு முட்டை ஆம்லெட், பிரெட். காபி, சிறிது நேரம் கழித்து அட்டை டப்பாவில் அடைத்த சாறு. எழுத்து, வேலை, இணைய இணைப்பு என்று நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.
இப்போது மணி ஒன்பதரை. இன்னும் இரண்டரை மணி நேரப் பயணம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)