சரியாக 4 மணிக்கு விழித்து விட்டேன். நேற்றைக்குக் காலையில் ஐந்து மணி தாண்டி விட்டிருந்தது. முந்தைய நாள் குழந்தைகள் வந்து விளையாடிப் போனதில் முன்னறையிலும் உள்ளறையிலும் விளையாட்டு சாமான்கள் சிதறிக் கிடந்தன. அடுக்களையில் கழுவ வேண்டிய பாத்திரங்கள். மடித்து வைக்க வேண்டிய துணிகள் வெளியில் தொங்கிக் கொண்டிருந்தன. எழுத வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டை ஒதுங்க வைக்க ஆரம்பித்தேன்.
விளையாட்டு சாமான்களையும் புத்தகங்களையும் திரட்டி அவ்வவற்றின் இடத்தில் கொண்டு வைத்து விட்டு ஒவ்வொரு அறையாக தூத்து வாரினேன். பாத்திரம் கழுவி முடித்து விட்டு நேரம் பார்க்கும் போது ஆறு மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. முகம் மழித்து, குளித்து முடித்து வெளியில் வரும் போது நாளிதழ் வந்திருந்தது. மணி ஆறு இருபது. தியானத்துக்கு உட்கார்ந்து 10 நிமிடங்களில் எழுந்து விட்டேன்.
முந்தைய நாள் மாலையில் வாங்கி வந்திருந்த தோசை மாவில் மீதி இருந்ததை தோசை சுட்டு சாப்பிட்டேன். இட்லி மிளகாய்ப் பொடி பால் வாங்கி மாலையில் சாப்பிட்டிருந்தேன். காலையில் மூன்று தோசைகளுக்கு மாவு மீந்திருந்தது. வெளியில் வரும் போது காவலர், மேல் வீட்டுப் பையன் தனது பொம்மை கார்களை விட்டுப் போயிருந்தால் எடுத்துத் தரும்படி கேட்கவே கதவைத் திறந்து எடுத்துக் கொடுத்து விட்டேன்.
குடியிருப்புக்குள் குடிநீர் இணைப்பு வந்து விட்ட பிறகு தினமும் தண்ணீர் கிடைக்கும் முறை. தெருவின் மறுபக்கம் இருக்கும் குழாயில் ஒரு நாள் தண்ணீர் வந்தால் அடுத்த நாளில் உள்ளே இருக்கும் இணைப்பில் வருகிறது. இது வரை நான் உள்ளிருக்கும் இணைப்பு முறைக்கு மாறவில்லை. இரண்டு நாளைக்கு ஒரு முறை வெளியில்தான் எடுத்துக் கொண்டிருந்தேன். நேற்றைக்கு வெளியில் எடுக்க வேண்டாம் என்றுமுடிவு செய்து இன்றைக்கு உள் இணைப்பில் எடுத்துக் கொள்ளலாம் என்று புறப்பட்டுப் போய் விட்டேன்.
கருணாநிதி ஈழப் பிரச்சனைக்காக பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று தினத்தந்தியில் தலைப்புச் செய்தி. வெறுப்பாக உணர்ந்தேன். பின்னர் பழச்சாறு கடைக்குப் போகும் போது அந்த அம்மா, "என்ன சார், நாளைக்கு ஸ்டிரைக் என்கிறாங்களே! கடைகள் எல்லாம் இருக்குமா?" என்று கேட்டார். கொஞ்ச நேரம் எதுவும் பதில் சொல்லாமல், "வேறு வேலை இல்லை அவருக்கு. அவ்வளவு அக்கறை என்றால் ஆட்சியை துறந்து தெருவில் இறங்கிப் போராடட்டுமே! தமது குடும்ப நலன்களுக்கு எந்த பங்கமும் இல்லாமல் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதில் என்ன குறை அவருக்கு" என்று வெறுப்புடன் சொன்னேன்.
"ஆமாமா, காங்கிரஸ்தானே ஆயுதங்களை இலங்கை அரசுக்குக் கொடுத்தது. அவங்க கூட தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வதைக் கூட விட்டுத் தர முடியவில்லை. இப்போ பொதுமக்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட வந்துட்டார். வியாழக் கிழமை பொது வேலை நிறுத்தம் என்றால் அவனவன் வெள்ளி, சனியும் லீவு போட்டு விட்டு ஊருக்குப் போய் விடுவான். ஏற்கனவே ஓய்ந்து போயிருக்கும் வியாபாரம் இன்னும் அடி வாங்குவதுதான் மிஞ்சும்".
வழியில் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் தேநீர் விடுதியில் ஒரு தேநீர். அந்த நேரத்திலேயே சிகரெட் வாங்கி புகை ஊதுவதற்கு தயாராக இருந்தார் ஒரு வெள்ளை உடுப்பு வெள்ளைத் தோல் இளைஞர். "என்னப்பா, ஓனர் வரலியா இன்னும்?" என்று அவர் கேட்க, டீ போட்டுக் கொண்டிருந்தவர் "எட்டு மணிக்கு வருவார்" என்று சொல்ல, வடைக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தவர் "எட்டு மணிக்கு, அல்லது வீட்டில் சண்டை போட்டுக் கொண்டால் ரெண்டு மணி நேரம் தாமதமாகவும் வந்து சேருவார்" என்று சொல்லி சிரிக்கிறார்.
அந்தக் கடையில் கிடந்த தினத்தந்தி நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்து விட்டு வெளியில் வந்தேன். தேய்க்கக் கொடுத்திருந்த துணிகள் தயாராகி விட்டனவா என்று கடைக்கு அருகில் போனால் அப்போதுதான் எழுந்த தூக்கக் கலக்கத்துடன் கடையை தூய்மை செய்து கொண்டிருந்தார் கடைக்காரர். துணி தேய்த்து முடித்திருந்தார்கள். 9 துணி, 27 ரூபாய் - 30 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டேன்.
அலுவலகத்தில் தூய்மை செய்யும் அம்மா வேலைகளை முடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முந்தா நேற்று சொன்னது போல குடிதண்ணீர் பாட்டில்களில் எல்லா மேசைகளிலும் தண்ணீர் பிடித்து வைத்திருந்தார். அதற்கு நன்றி சொல்லி விட்டு நானும் என் பங்குக்கு சீரமைக்கும் வேலையில் இறங்கினேன். சாப்பிடும், விவாத பகுதியில் அதிகம் பதவல் இல்லை. மேசைகளும் ஓரளவு சீராகவே இருந்தன.
புத்தகங்கள், கணினி பகுதிகள், மின் பொருட்கள் வைத்திருந்த பகுதியில் யாரும் கை வைக்காமல் தூசி படிந்து குவிந்து கிடந்தவற்றை ஒதுக்க ஆரம்பித்தேன். கசங்கிக் கிடந்த நாளிதழ்கள், குப்பைகள் எல்லாம் வெளியில் போயின. ஒரு அட்டை பெட்டியையும் காலி செய்தேன். மூன்று அட்டை பெட்டிகளை இழுத்து அறையின் நடுவில் வைத்தேன். கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்து நாள் முழுவதும் முயற்சித்து எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டார். புத்தகங்களுக்கு மட்டும் ஒரு வழி செய்ய வேண்டும். இன்றைக்குப் போய் பார்த்தால் சரியாக இருக்கும்.
அதை முடித்து விட்டு கணினி. விற்பனை பிரதிநிதிக்கான ஆவணங்கள் தயாரிப்பு, குளோவியூ பயன்பாடு வழிமுறைக்கான ஆவணங்களை சரிபார்த்து மின்னஞ்சல் அனுப்பினேன். குளோவியூ குறித்த பத்திரிகைக் குறிப்பை ஆங்கிலத்தில் இறுதி செய்து தமிழில் மொழி பெயர்த்து புகைப்படங்களுடன் அனுப்ப வேண்டும். மதியத்துக்குள் தமிழ் மொழி பெயர்ப்பை முடித்து, புகைப்படங்களில் ஆறைத் தேர்ந்தெடுத்து அனுப்பி விட்டேன்.
குளோவியூ பயன்பாட்டை முதலில் பாவித்துப் பார்க்கலாம்தானே என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதைக் குறித்தும் மற்ற விதிகளைக் குறித்தும் பேசுவதற்கு அழைத்திருந்தேன். ஒன்பதரை மணிக்கு சாப்பிடக் கிளம்பினேன். வழியில் பாதாம், பழக் கலவை ஒரு கப். டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு கேரளா விடுதியில் இரண்டு செட் பூரி. 20 ரூபாய்க்கு வாங்குவதற்கு சில்லறை இல்லாமல் 19 ரூபாய் சில்லறையாக வாங்கிக் கொண்டார். ஒரு ரூபாய் அவருக்குத்தர வேண்டும். சாப்பிட்ட பிறகு தேநீர் குடிக்க தெருமுனையில் இருக்கு கேரளா தேநீர் கடைக்கு வந்தேன். சுசியன், தேநீர் கூடவே நாளிதழ் படிப்பு.
அலுவலகத்துக்கு வந்து கைவசமிருந்த பணிகளைத் தொடர்ந்தேன். 11 மணிக்கு குளோவியூ குறித்த சந்திப்பு. அந்த விவாதத்துக்கான பொருள்களை தயாரித்து அச்செடுத்து 5 பிரதிகள் எடுத்துக் கொண்டேன். சரியாக 11 மணிக்கு கலந்து கொள்ளவிருப்பவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்து விட்டேன்.
மொத்தம் மூன்று வகையான தயாரிப்புப் பணிகள் தேவை. முதலாவதாக பயனர் சேவை. குளோவியூ பயன்படுத்த நினைத்து பதிவு செய்து கொள்ள வரும் பயனர் பதிவு செய்து கொள்வதில் ஆரம்பித்து, கணக்கில் கடவுச் சொல் கையாள்வது, வசதிகளை தேர்ந்தெடுப்பது, காசு கொடுப்பது, கொடுத்த காசுக்கு விற்பனை ஆவணம் பெறுவது, கோப்பை உள்ளிடும் போது ஏற்படும் பிழைகளுக்கு பொருத்தமான தகவலை தெரிவிப்பது, தேவையான இடங்களில் பொருத்தமான உதவிக் குறிப்புகளைக் கொடுப்பது, கணக்கை முடித்துக் கொள்ள விரும்பினால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்று எல்லாவற்றையும் சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு வேலை செய்ய வேண்டும்.
இரண்டாவது பெரிய பணி, தகவல் கோப்பை உள்ளிடும் போது அதில் ஏற்படும் சிக்கல்களை எல்லாவற்றையும் கண்டறிந்து எப்படி சரி செய்வது என்பதை பயனருக்குத் தெரிவித்தல் அல்லது நாமே சரி செய்து ஏற்றுக் கொள்ளுதல். இப்போதைக்கு எக்செல், சிஎஸ்வி வடிவங்களில் உள்ளீடு வாங்குகிறோம். முன் வடிவமைக்கப்பட்ட கோப்பு அமைப்புகளையும் சீரமைக்க வேண்டும். பல விதமான கோப்பு அமைப்புகளை அமைத்துக் கொடுப்பது, அந்தக் கோப்புகளின் அமைப்பை முன்பார்வை அளிப்பது இவற்றையும் செய்ய வேண்டும். நேரடியாக தகவல்களை உள்ளிடும் வசதிகளையும் செய்து கொடுக்கலாம்.
மூன்றாவதாக பயனர் இடைமுகத்தை மாற்றுவதற்கு கொடுத்த தேவைகளையும் நாமாக உணர்ந்தவற்றையும் மேம்படுத்துதல்.
விற்பனைப் பணியில் குளோவியூ குறித்து தகவல் தொடர்புகளை ஊடகங்களுக்கு அறிவித்தல், மின்னஞ்சல்கள் மூலம் தகவலைப் பரவச் செய்தல் போன்ற பணிகளை ஏற்றுக் கொண்டார். வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு விற்பனையை முடித்துக் கொடுத்தல் கடைசிப் பணி. அடுத்த இரண்டு நாட்களில் தயாரிப்புப் பணிகளில் பெரும்பகுதியை முடித்து விட வேண்டும். 27ம் தேதியிலிருந்து விற்பனையில் தீவிரமாக இறங்கி விட வேண்டும். 30ம் தேதிக்கும் 10 நிறுவன பயனர்களும் 10 தனிநபர் பயனர்களும் சேர்க்க வேண்டும். மே மாதம் தலா 20 பயனர்கள் சேர்க்க வேண்டும்.
இதைப் பேசி விட்டு அடுத்த கட்ட பணிகளுக்கு நகர்ந்தேன். ஒன்றேகாலுக்கு சாப்பாடு. சோறு, பருப்பு, காலிஃபிளவர் கூட்டு, இன்னொரு பருப்பு கூட்டு, அப்பளம். முதலில் எடுத்த சோறில் இரண்டு முறை பருப்பு,இரண்டாவது முறை சோற்றில் மோர் ஊற்றிச் சாப்பாடு. சாப்பிடும் போது ஈழத்தமிழர் துயரத்தை முன்னிட்டு கருணாநிதி ஆடும் நாடகங்களை சாடி உரத்த குரலில் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அது அப்படியே வளர்ந்து மாயாவதி, சாதி அரசியல் குறித்து வந்தது.
"தலித்துகளுக்கு மத்தியிலேயே ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. அதை சரி செய்து விட்டு வரட்டும். அதன் பிறகு மற்றவர்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவார்கள்" என்று முன்பொரு நாள் சார் சொன்ன விவாதத்தை கொண்டு வந்தார். 'நம்ம அலுவலகத்தில் சாதி பார்ப்பதில்லை, பேருந்தில் சாதி பார்ப்பதில்லை. எங்க வீட்டில் பார்ப்பதில்லை' என்று ஆரம்பித்தவரிடம், 'கல்யாணம் பண்ணும் போது சாதி பார்ப்பதை நிறுத்தும் வரை சாதி ஒழியாது. அது வரை ஏன் சிறப்புச் சலுகை என்று கேட்பது கீழ்மைத் தனம்'
ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு சலுகைகள் என்று வந்தால் சாதி இல்லை, ஒழிந்து விட்டது என்று பேச வேண்டியது, திருமணம் செய்து வைக்க வேண்டிய நேரம் வந்தால் சாதிக்குள்தான் இணை தேடுவது என்று இரட்டை வேடம் போடுவது வரை சாதி ஒழியாது. 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் நீதி கிடைக்க வேண்டுமானால் அரசியல் அதிகாரம் அவர்கள் கைக்குப் போய்ச் சேருவதுதான் வழி.' என்று சொன்னால் அதன் மூலம் சாதி முறை நிலைப் பெற்று விடும் என்கிறார்கள்.
அலுவலகம் முழுவதும் பேசியது கேட்டிருக்கும். கை கழுவி விட்டு அடுத்த வேலைகளில் இறங்கினேன். புகைப்படங்கள், பத்திரிகைச் செய்தி தயாராகி விட்டது. அதைத் தொடர்ந்து நிறுவனத்துக்கான கணக்கியல் பணிகளைச் செய்து கொண்டிருந்த மாணவர்களிடம் பேசினேன். அவர்களிடம் செய்ய வேண்டிய வேலைகளை பகிர்ந்து கொடுத்து விட்டு, குளோவியூவில் பயனர் இடைமுகத்துக்கான பணிகளை விவாதித்துக் கொண்டிருக்கும் போது ஜூனைதின் அழைப்பு. அவருக்கு அனுப்புவதாகச் சொல்லியிருந்த மின்னஞ்சலை இன்றாவது அனுப்ப வேண்டும்.
செய்ய வேண்டிய பணிகளின் குறிப்பை விரிதாளில் உள்ளிட்டுக் கொண்டேன். நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. குளோவியூ மீது வைத்திருக்கும் நம்பிக்கை எந்த அளவு பலனளிக்கும் என்று தெரியவில்லை. திங்கள் கிழமை காலையில் முடிவு செய்தது போல அடுத்த ஒரு மணி நேரத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு பணிகளைச் செய்து கொண்டே போக வேண்டும். இந்த பொருளாதாரச் சுணக்கம் மிகவும் நீண்டதாக, துன்பமளிப்பதாக இருக்கும் என்று ஆருடம் சொல்லும் இன்னும் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். குறைந்த விலையில் பரவலாகப் பயன்படக் கூடிய பலனுள்ள பொருள் சேவை தயாரித்து வழங்குவது இதைத் தாக்குப்பிடிப்பதற்கான ஒரு வழி.
தேநீர் கடைக்குப் போனோம். அண்ணன் கடை எனப்படும் அண்ணன் தம்பிகளில் மூத்தவரின் கடை. பஜ்ஜிகள் தட்டில் வைத்திருந்தார். ஒரு தேநீரும் 2 உருளைக்கிழங்கு பஜ்ஜிகளும். அவரவர் சாப்பிட்டதைக் கூட்டிப் பார்த்தால் 47 ரூபாய்கள் வந்தது. 50 ரூபாய் நோட்டைக் கொடுத்து மீதிக்கு ரசனா பொதிகளும் வாங்கினேன். கூட 5 ரூபாய் கொடுத்து 4 பொதிகளாக எடுத்துக் கொண்டேன். மூன்று பேருக்குக் கொடுத்து விட்டு நான் ஒன்று.
தயாரித்த அறிக்கைகளைக் காண்பித்தார். அதைச் சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது வந்தார். அவருக்காகத் தயாரித்திருந்த ஆவணங்களை அச்செடுக்க வேண்டும். பேசி முடித்து ஆவணங்களை அச்செடுத்துக் கொடுத்தேன். அவர் தனது பணிக்கான ஒப்பந்தத்தில் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வந்து ஊதியம் இரண்டு மடங்காக்க வேண்டும் என்றார். விற்பனையில் 3% ஊக்கத் தொகை என்பதை 5% என்று அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார்.
அவர் விடாக்கண்டர், நாங்கள் கொடாக்கண்டர்கள். 'ஆரம்பிக்கும் முன்னமேயே நான் எப்படி உறுதிமொழிகள் கொடுக்க முடியும்' என்று அவர் சொல்லியிருந்ததை, நமது பண நிலைமையை விளக்கி அதற்கு மேல் பணம் தருவது முடியாது என்றோம். ஊக்கத் தொகையை வேண்டுமானால் 5% ஆக்குவதை ஏற்றுக் கொள்ளலாம். விளைவுகளுக்கு அவர் உறுதி கொடுக்க முடியாமல் இருக்கும் போது, பணத்துக்கு மட்டும் நாங்கள் மேன்மேலும் எப்படி உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருக்க முடியும். தன்னுடைய பேரம் பேசும் திறமைகளை முழுமையாகக் காட்டினார். நானும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி அவரை மழுங்க அடித்துக் கொண்டிருந்தேன்.
அவருக்குத் தேவையான ஆவணங்கள் - அவரது பெயர் அட்டை, நிறுவனம் குறித்த எழுத்தாக்கம், எல்லாப் பொருட்களையும் குறித்த அட்டவணை, ஒவ்வொரு மென்பொருளையும் குறித்த அட்டைகள், தகவல் சேகரிக்கும் வடிவமைப்பு இவற்றைத் தயாரித்து திங்கள் கிழமைக்குள் கொடுத்து விடுவதாகச் சொன்னோம். மே 1 முதல் வேலையை ஆரம்பித்து விடலாம்.
அவரிடம் பேச்சை முடித்து விட்டு அனுப்பியிருந்த கோப்புகளை சரி பார்த்து இணையத்தில் போட்டு விட்டேன். வந்திருந்த புகார்களை பார்த்து அவற்றுக்கு பதில் போடுவதையும் செய்தேன். பத்திரிகைச் செய்திக் குறிப்பை மீஉரை வடிவத்துக்கு மாற்றியிருந்தார். ஓப்பன் ஆபிஸ் உருவாக்கிய மீஉரை வடிவம். அதை உரைக் கோப்பாக திறந்து உரை வடிவமைப்புகளை ஒழுங்கு படுத்தினேன். அதை சேர்க்கப் போகும் நேரத்தில் கணினி இயங்காமல் இருப்பதை உணர்ந்தேன். சேர்த்து விட்டுப் போகலாம் என்று கணினியை இயக்கி விட்டு வந்தார். அதில் சேர்த்து இணையத்திலும் ஏற்றி விட்டேன்.
இதை முடித்து விட்டு உலாவப் போய் விட்டு வர வேண்டும். கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாள் பேருந்தைப் பிடிப்பதற்கு ஓட வேண்டியிருந்தது. பேருந்தில் ஏறினால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. நமது உடலில் இதற்குக் கூடவா உறுதி இல்லை என்று தினமும் காலையில் ஓடி வருவதை பழக்கமாக ஆரம்பித்தேன். முந்தா நேற்று ஓடிப் பிடித்து விளையாடும் போது அதே மாதிரி மூச்சு வாங்கல். உடலில் உறுதி குறைந்திருக்கிறது. உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் முறையாகச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
20 நிமிடங்கள் நடக்கப் போவதால் வேலைகள் எல்லாம் முடங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். நடந்து விட்டு வந்து வீட்டை ஒதுங்க வைத்து பாத்திரம் கழுவ வேண்டும். முகம் மழித்து குளிக்க வேண்டும். குடிதண்ணீர் எடுத்து வர வேண்டும். தியானம், நாளிதழ் படித்து விட்டுக் கிளம்பலாம். சாப்பிட ஓட்சு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் புத்தகங்களைச் சீரமத்தைல், வலைப்பதிவு, மின்னஞ்சல்கள், கேரளா விடுதியில் 1 ரூபாய் திரும்பிக் கொடுத்தல், உட்கார்ந்து குளோவியூ விற்பனை முறையை சீர்படுத்தல் என்று நாள் போக வேண்டும்.
இன்றைக்கு வேலை நிறுத்தம் கிடையாது.
வியாழன், ஏப்ரல் 23, 2009
செவ்வாய், ஏப்ரல் 21, 2009
அழகு தெய்வம்
நேற்றைக்கு அப்படி என்னதான் சாப்பிட்டேன். காலையில் எதுவும் சாப்பிடவில்லை. வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்துக்குப் போய் தண்ணீர் குடித்துக் கொண்டேன். பத்து மணி வாக்கில் பழச் சாறு கடையில் திராட்சைப் பழச் சாறு இரண்டு டம்ளர்கள் குடித்தேன். அதன் பிறகு 12 மணிக்கு மாசா பாட்டில் ஒன்று. அடிக்கும் வெயிலில் தண்ணீர் தண்ணீராக வாங்கியது.
மதிய உணவாக ஒன்றரை மணிக்கு சோறும் காரக் குழம்பும், உருளைக் கிழங்கு பொரியல், முட்டைகோஸ் பொரியல். தொடர்ந்து மோர் சோறு. மோர் சோறு சாப்பிட்டால் தூக்கம் வரத்தான் செய்கிறது. அதன் பிறகு மாலையில் இண்ட்கெம் ஆட்களுடன் போய் டாடா உடுப்பி ஓட்டலில் ஒரு காபி.
ஞாயிற்றுக் கிழமை, சனிக்கிழமை சாப்பிட்ட உணவுகள் இன்னும் செரித்திருக்கவில்லை போலும். வீட்டுக்கு வரும் வழியிலும் வீட்டுக்கு வந்த பிறகும் ஏதாவது சாப்பிடும் எண்ணத்தைக் கை விட்டேன். ஒரு சொம்பு நிறைய தண்ணீர் குடித்து விட்டு தியானம் செய்து விட்டு படுத்து விட்டேன். ஒன்பதரை மணிக்கு தூங்கியிருப்பேன். காலையில் 2 மணிக்கு விழிப்பு வந்து விட்டது.
மாலை ஆறு மணிக்கு மேல் சாப்பிடாமல் இருந்து காலையிலும் எழுந்து நாட்குறிப்பு எழுதி, வீட்டு வேலைகளை முடித்து, குளித்து தியானம் செய்வது வரை சாப்பிடக் கூடாது. இந்த இரண்டையும் பின்பற்றினாலே வேறு பல சிக்கல்களை தவிர்த்து விடலாம். காலை உணவிலும் கொஞ்சம் குறைவாக சாப்பிட வேண்டும்.
நேற்றுக் காலையில் ஒரு மணி நேரம் எழுதி முடித்த பிறகு வீட்டைத் தூத்து முடித்தேன். வெளியில் போய் குடிதண்ணீர் எடுக்க வேண்டும். முகம் மழித்து குளித்த பிறகு 15 நிமிடங்கள் தியானம். அத்துடன் எழுந்து குடி தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு நாளிதழ் படித்துக் கொண்டிருந்தேன். அப்படியே கழிவறைக்கு இன்னொரு முறை போய் விட்டு வந்து கொதித்து விட்ட தண்ணீருக்கு அடுப்பை அணைத்து விட்டு அலுவலகம் புறப்பட்டேன்.
திருவள்ளுவர் சாலையிலேயே நேராக போய் ஆற்காடு சாலையைப் பிடித்தேன். காய்கனி வாங்கிப் போகும் சரக்கு மூன்று சக்கர ஊர்தி இரண்டு சாலையை அடைத்துக் கொண்டு போக அவற்றுக்குப் பின்னால் கல்லூரி பேருந்து ஒன்று போய்க் கொண்டிருக்க, அதற்கும் பின்னால் யாருக்கும் வழி விட விரும்பாத இரண்டு மகிழ்வுந்துகள். சாலை முற்றிலும் அடைத்துப் போயிருந்தது. டாடா உடுப்பி விடுதியைத் தாண்டிய பிறகு ஓரளவு தெளிவானது.
அலுவலகத்துக்கு வந்தால் எதிர்பார்த்தது போல வேறு யாரும் இருக்கவில்லை. தூய்மை செய்யும் அம்மா தரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். சனிக்கிழமை போட்டு வைத்த குப்பை எடுக்கப்படாமல் இருந்தது இன்னும் நாற்றம் அடித்துக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் பொருட்களை ஒதுங்க வைக்க 20 நிமிடங்கள் என்று ஒவ்வொரு பகுதியாக ஒதுங்க வைத்துக் கொண்டேன். வாடகைக்கான காசோலையை கொண்டு கொடுத்து வாடகையைக் குறைத்துக் கொள்ளச் சொல்வதற்காக போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். எழுதி வைத்திருந்த காசோலையைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
குளோவியூ நிகழ்ச்சி பற்றிய செய்தி அறிவிப்பை எழுத ஆரம்பித்தேன். சாயங்காலத்துக்குள் அருமையாக எழுதி அனுப்பி விட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அனுப்ப வேண்டிய விற்பனை ஆவணம் தயாரிப்பதில் இறங்கினேன்.
10.30க்கு அவரிடம் பேசி ஆவணங்களையும் கோப்புகளை பராமரிக்கும் பணியை ஒப்படைத்தேன். சோம்பேறியாக இல்லாமல் வேலைகளை அன்றன்றைக்கு முடித்து விட வேண்டும் என்று சொன்னேன்.
அதைத் தொடர்ந்து முதலில் வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கி விட்டு நிர்வாகத்தில் என்னென்ன செய்ய உத்தேசித்திருக்கிறோம் என்று சொல்லி, கணக்கியல் தொடர்பான பொறுப்புகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து நிரல் உருவாக்கும் பணியைப் பற்றி பேசுவதற்கு அதைத் தொடர்ந்து உற்பத்தித் திட்டமிடல் குறித்து விவாதித்தோம். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தேன்.
12 மணிக்கு வாராந்திரக் கூட்டம் நடக்க வேண்டும். கடைசி நிமிடத்தில் திட்டம் எழுதி அனுப்புபவர்கள் அவசர அவசரமாக எழுதிக் கொண்டிருந்தார்கள். நான் அந்த நேரத்தில் கீழே கடைக்குப் போய் ஏதாவது சாப்பிட்டு விட்டு வர நினைத்தேன். கடையில் ஒருவர் ரசனா குடித்துக் கொண்டிருந்தார். குடிக்க என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு மாசா கிடைத்தது. அது 8 ரூபாய் பாட்டிலில்.
கூட்டத்தில் திட்டமிட்டு செயல்படுவதை விளக்கி பேச ஆரம்பித்தேன். சின்ன வயதில் படித்த ஒரு சரித்திரக் கதை - கௌதம நீலாம்பரன் (அல்லது கோவி மணிசேகரன்) எழுதி கல்கியில் வந்ததாக நினைவு. கதை நடக்கும் காலம் 18ம் நூற்றாண்டு. ராபர்ட் கிளைவ் ஆங்கிலப் போர் வீரனாகவும், தூப்ளே பிரெஞ்சு தளபதியாகவும், ஆற்காடு நவாப்புகள் பதவிப் போட்டியில் ஈடுபடுவதாகவும் அமைந்திருக்கும் காலம். இளையபெருமாள் என்ற கதையின் நாயகன் பொறுப்பில் தங்க நகைகளின் குவியல் ஒன்று வந்து சேருகிறது. சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பிரிவினரில் யாருக்கு பண உதவி கிடைக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். தங்க நகைக் குவியலை பிரெஞ்சுக் காரர்களிடம் கொண்டு சேர்ப்பதாக காட்டு வழியாக பயணித்துக் கொண்டிருக்கிறான்.
வழியில் ஆங்கிலேய படையணி ஒன்று வருவதை தவிர்க்க மறைந்து இருக்கிறான். அந்தப் படையணியினர் நடுவே அவர்கள் சிறைப் பிடித்த அவர்களது எதிரி என்று நினைத்த ஒருவனையும் கட்டி அழைத்து வந்தார்கள். இளையபெருமாள் மறைந்திருக்கும் இடத்துக்கு அருகில் தங்கி இளைப்பாற முடிவு செய்கிறார்கள். கைது செய்யப்பட்டவனை என்ன செய்வது?
எல்லோரும் உட்கார்ந்த பிறகு ஒரு நீதிமன்றத்தை நியமிக்கிறார்கள். ஒருவர் நீதிபதி, கைதியின் மீது குற்றம் சாட்டி வாதாட ஒருவர், கைதியின் பக்கம் வாதாட இன்னொருவர் என்று ஏற்பாடு செய்து கொண்டு நீதிமன்றம் கூடுகிறது. விவரணையான விவாதங்களுக்குப் பிறகு கைதி எதிரிப் படையைச் சேர்ந்தவன்தான், அவனை தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு தரப்படுகிறது. அந்தத் தீர்ப்புக்கு ஏற்ப கைதியை தூக்கிலேற்றுகிறார்கள்.
அந்தக் காலகட்டத்தில் கேட்பார் கேள்வி கிடையாது. யார் மீதாவது சந்தேகம் இருந்தால் சுட்டுப் போட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பதுதான் படைப் பிரிவுகளின் வழக்கமாக இருந்து வந்தது. அந்தச் சூழலில் ஒருவனை தண்டிப்பதற்கு முன்பு வரையறுக்கப்பட்ட முறைமையைப் பின்பற்றிய ஆங்கிலேயர்களின் ஒழுக்கம் இளையபெருமாளை பெரிதும் கவர்கிறது. 'இப்படிச் செயல்படும் ஆங்கிலேயர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இந்தியாவுக்கும் சட்ட ஒழுங்கு முறைகளைக் கொண்டு வருவார்கள்' என்று நினைத்து தன் பொறுப்பில் இருந்த பணத்தை ராபர்ட் கிளைவிடம் போய்ச் சேருமாறு செய்கிறான். அடுத்த போரில் ராபர்ட் கிளைவின் படை வெற்றி பெற்று தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரூன்றச் செய்கிறான்.
உலக வரைபடத்தில் கோடு கிழித்தாற்போல இருக்கும் இங்கிலாந்து தேசம் அமெரிக்கா, கனடா, இந்தியா, மலேசியா, எகிப்து என்று உலகின் பெரிய பெரிய நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய முடிந்தது. சூரியன் மறையவே செய்யாத பிரித்தானிய பேரரசை உருவாக்க முடிந்தது. அதற்கான அடிப்படை பலம், அவர்கள் பின்பற்றிய சட்ட வழிமுறைகளும், சட்டங்களை மீறி விடாத மக்களின் ஒழுக்கமும்தான்.
ஒரு நிறுவனமும் பெரிதாக வளர்ந்து வெற்றிகரமாக பெயர் நாட்டுவதற்கு அடிப்படை அது வரையறுத்துள்ள வழிமுறைகளும் அதைத் தவறாமல் பின்பற்றும் போக்கும்தான். நாமும் ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். எதையும் உடைத்து விட முயற்சிக்கக் கூடாது. புதிய வழிமுறைகளை வகுத்து நம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்த மாதத்தில் செய்ய வேண்டிய வேலையை இந்த மாதம் 25ம் தேதிக்கு முன்னரே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
திட்டத்தை வாடிக்கையாளருக்குத் தெரிவித்து ஒப்புதல் வாங்கிக் கொள்ள வேண்டும்.
திட்ட விபரங்களை நிறுவன மென்பொருளில் உள்ளிட வேண்டும்.
பணிகளை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
பணிகள் செய்வதற்கான தேவையை பரிசீலித்தல், அதை வாடிக்கையாளருக்குத் தெரிவித்து ஒப்புதல் பெறுதல், தீர்வை வடிவமைத்தல், நிரலாக்கம் செய்தல், சோதனை செய்தல், நிரலை பரிசீலித்தல், முடித்த வேலையை வாடிக்கையாளருக்குக் கொண்டு சேர்த்தல், என்று எந்த படியையும் தவற விடாமல் செய்ய வேண்டும்.
திட்டமிட்ட வேலை முடிந்த பிறகு திட்டத்துடன் இணைத்து மென்பொருளிலிருந்து விற்பனை ஆவணம் தயாரிக்க வேண்டும்.
தயாரித்த ஆவணத்துக்கான அத்தாட்சி ஆவணங்களை இணைத்து வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும்
வாடிக்கையாளரிடமிருந்து பணம் வந்த விபரங்களை மென்பொருள் பயன்பாட்டில் உள்ளிட வேண்டும்.
ஒவ்வொருவரும் தத்தமது வருகைப்பதிவை தினமும் செய்ய வேண்டும்.
வருகைப்பதிவைப் பொறுத்து மாதச் சம்பள அறிக்கை அடுத்த மாதம் 2ம் தேதிக்குள் தயாரிக்கப்பட வேண்டும்.
5ம் தேதிக்குள் சம்பளம் கொடுக்கப்பட்டு விட வேண்டும்.
இந்த விபரங்கள் மென்பொருள் பயன்பாட்டில் உள்ளிடப்பட வேண்டும்.
12 மணி கூட்டம் முடிந்த பிறகு சாப்பாடு. பசியும் நன்கு எடுத்து விட்டிருந்தது. நாலரை மணி வாக்கில் நானும் போய்ச் சேர்ந்தேன். செய்த வேலை அவர்களுக்கு திருப்தியாக இருப்பதாகச் சொன்னார்கள். அடுத்து நிரலை அவர்கள் கணினியில் நிறுவி செயல்படுத்த வேண்டியதுதான் வேலை.
குளோவியூ பற்றிக் கேட்டவர்களிடம் அதன் விபரங்களை விளக்கினோம். அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இப்படி ஒரு பயன்பாடு இருந்தால் நம்முடைய டசன் கணக்கிலான எக்செல் கோப்புகளை கையாளுவது எளிதாக இருக்குமே என்று சொன்னார். உடனடியாக ஒரு கணக்கு உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார்.
அவர்களுடன் வெளியில் போய் டாடா உடுப்பி விடுதியில் காபி குடித்துக் கொண்டோம். போகும் வழியில் தொலைபேசி. இடையில் எந்தத் தகவலையும் தெரிவிக்கவும் இல்லை. மாவரைக்கும் எந்திரத்துக்கு கல் உடைந்து போயிருக்கிறது என்றும் மின்சாரக் கட்டணம் செலுத்திய சீட்டின் நகலும் தேவைப்படுகிறதாம். ஊருக்கு வரும் ஒருவரிடம் சேர்ப்பித்து விட்டால் அவர் கொண்டு போய் விடுவார் என்றாள்.
காபி குடித்து விட்டு அலுவலகம் வந்து வேலையைத் தொடர்ந்தேன். பராமரிப்புப் பணிக்கான ஆவணத்தை அனுப்பியிருந்தார். அதை மாற்றி அமைக்க வேண்டும். எட்டரை மணிக்குக் கிளம்பி வந்து விட்டேன். தொலைபேசி தேவைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். போக வர செலவுகளையும், மொத்தமாக ஒரு மாதத்துக்கான செலவையும் கொடுத்து விடுவதாகச் சொன்னார். கொஞ்சம் அதிகமாகத்தான் படும் அவருக்கு. மிகவும் ஆர்வத்துடன் வேலை விபரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
போஸ்ட்கிரெஸ்கியூஎல் 8.4 வெளியீட்டுக்கான சோதனை அறிவிப்பு வந்திருந்தது. பல புதிய வசதிகளை உருவாக்கியிருந்தார்கள். அதற்கான ஆவணத்தையும் பயனர் கையேட்டில் உள்ளிட்டு விட்டிருந்தார்கள். அதை தகவிறக்கி பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.
இதை முடித்து விட்டு படுக்கை மடித்து வைத்து விட்டு துணி துவைக்க வேண்டும். அதன் பிறகு ஓட்சு கொதிக்க வைக்க வேண்டும். குளித்து விட்டு தியானம். ஓட்சு குடித்து விட்டு அலுவலகம் போக வேண்டும். அலுவலகத்தில் முதல் 20 நிமிடங்கள் பொருட்களை ஒதுங்க வைத்தல். அதன் பிறகு ஆவணமாக்கம், மின்னஞ்சல்கள், இடுகையை பதிவில் போடுதல், தொலைபேசி உரையாடல்கள்.

லேபிள்கள்:
சுயமுன்னேற்றம்
திங்கள், ஏப்ரல் 20, 2009
ஒரு மணிக்கொரு மணி
பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற புத்தகத்துக்கு ஓஷோ உரை எழுதியிருந்தார். சாதகனுக்கு தடையாக இருப்பவை குறித்து சொல்லும் போது மனத் தளரச்சியைக் குறிப்பிடுவார். யோக நடைமுறைகளைப் பின்பற்றி வரும் சில நேரம் சறுக்கல்கள் ஏற்படும். அதைத் தொடர்ந்து மனம் தளர்ந்து இனிமேலும் நான் திரும்ப ஆரம்பித்தால் மறுபடியும் சறுக்கல்கள் வரத்தானே செய்யும் என்று ஆரம்பிப்பதையே தவிர்த்து விடும் மனச் சோர்வுதான் மிகப்பெரிய எதிரி.
கிட்டத்தட்ட அத்தகைய மனநிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது வண்டி. போன செப்டம்பரில் போனதிலிருந்து இந்த பின்னடைவா என்று தெரியவில்லை.
ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும். நான் செய்ததின் சிறப்பை விட்டுக் கொடுக்கக் கூடாது. பெரிய தூரத்துக்குச் சிந்திக்காமல் அடுத்த ஒரு மணி நேரம் திட்டமிட்டபடி இலக்கை நோக்கி நடந்து போக வேண்டும் என்று மட்டும் வரையறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்குக் கூட மனதை பறக்க விட வேண்டாம். 'நாளைக்குக் காலையில் என்ன ஆகும், அடுத்த மாதம் என்ன ஆகும், அடுத்த ஆண்டு என்ன ஆகும்' என்ற எண்ணங்களை எல்லாம் தள்ளிப் போட்டு விடலாம்.
நேற்று காலையில் ஐந்தே முக்காலுக்கு எழுந்து ஆறு ஐந்துக்கு எழுத ஆரம்பித்தேன். எழுதும் போதே காம்ப்ளான் கரைத்து அருகில் வைத்துக் குடித்துக் கொண்டே இருந்தேன். நாளிதழ் ஆறே காலுக்குப் போடப்பட்ட போது அதை எடுத்து வந்து தலைப்புச் செய்திகளை மேய்ந்து கொண்டேன். வெளியில் சுத்தம் செய்யும் அம்மா மேல் வீட்டில் வசிக்கும் மேற்பார்வை செய்யும் மாமியிடம் வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டது. 'தூத்த இடமெல்லாம் மண்ணாகக் கிடக்கிறது' என்று இவர் சொல்ல, 'அப்படித்தான் இருக்கும்' என்று முரண்டு பிடிக்கிறார் தூய்மை செய்பவர். 'இப்படி வாக்குவாதம் செய்யாமல் இருங்களேன்' என்று வெளியில் போய்ச் சொன்னேன். குரல் சளி பிடித்து கனத்துப் போயிருந்தது.
எழுதி முடித்த பிறகு நாளிதழ் படிக்க ஆரம்பித்தேன். கோதுமை மாவைக் கரைத்து தோசை சுட ஆயத்தம் செய்து கொண்டேன். மிளகாய்ப் பொடி ஒரு கரண்டிதான் இருந்தது. நாளிதழ் படித்துக் கொண்டே கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு தோசை சுட்டுச் சாப்பிட்டேன். அதன் பிறகு எழுதுவதை ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டம். சோபாவில் படுத்து சோம்பல் பாராட்ட ஆரம்பித்து, தூக்கம் தழுவி, மறுபடியும் உள்ளறையில் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். எதுவுமே உருப்படியாகச் செய்யவில்லை. எகனாமிக் டைம்ஸ் மடிக்கணினியில் இணையம் மூலம் ஸ்லாஷ் டாட் ஆர்டிக்கிள் என்றும் கொஞ்சம் படித்தேன்.
ஏதாவது வேலை செய்ய நினைத்து ஆரம்பிக்கவேவில்லை. அலுவலகத்துக்காவது போய் விடலாம் என்று கணினியைக் கட்டி விட்டு உச்சி வெயிலில் புறப்பட்டேன். வழியில் பதநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் 5 ரூபாய்க்கு ஒரு சொம்பு குடித்துக் கொண்டேன். பத்தரை மணிக்கெல்லாம் அலுவலகம். கணினியை இயக்கியதும் செய்திகளையும் மின்னஞ்சல்களையும்தான் படித்துக் கொண்டிருந்தேன். பதினோரு மணிக்கெல்லாம் தொலைபேசி. மதியம் சாப்பிட வீட்டுக்கு வரச் சொன்னார்கள். ரயில் முன்பதிவு செய்யவும் தேவை இருந்தது. பதிவு செய்து விட்டு அச்சிடக் கொடுத்தால் வரவில்லை. முந்தைய நாள் நிகழ்ச்சிக்கு எடுத்துச் சென்றவற்றை திரும்பக் கொண்டு வந்து பொருத்தி வைத்திருக்கவில்லை. ஒரு வயரை எடுத்து அச்சுக் கருவிக்கு இணைப்புக் கொடுத்ததும் பிரதி அச்சிட்டு வந்தது.
பன்னிரண்டே காலுக்கெல்லாம் புறப்பட்டேன். கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிப் படித்துக் கொண்டே பேருந்துக்குக் காத்திருந்தேன். கோடம்பாக்கம் போகும் பேருந்துகள் எல்லாம் கூட்ட நெரிசலுடன் வந்தன. பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து விட்டு வடபழனி பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டேன். வடபழனியின் இறங்கி 12B பேருந்தில் ஏறிக் கொண்டேன். அதில் காத்திருக்கும் போது தொலைபேசி. 'படிப்பதற்கு ஏதாவது புத்தகம் எடுத்துக் கொண்டு வாயேன்'. பாதி தூரம் வந்து விட்டிருந்தேன். இறங்கிய பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
கோடம்பாக்கத்தில் இறங்கி அருகில் இருந்த கடையில் ஐஸ் போடாமல் லசி ஒன்று கேட்டேன். அங்கிருந்தே தொலைபேசி அலுவலகத்தில் இருக்கிறாரா என்று கேட்டால் வேலூரில் இருக்கிறாராம். அவர் இருந்தால் அவர்கள் பதிப்பித்த புத்தகங்கள் ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாமே என்று நினைத்திருந்தேன்.
ஆற்காடு சாலையைக் கடந்து ரயில் நிலையம் போகும் வழியில் இருக்கும் புத்தகக் கடையில் பாலங்கள் என்ற சிவசங்கரி எழுதிய புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது. மூன்று தலைமுறைகளில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று மாற்றி மாற்றிச் சொல்லும் தொடர். கதையாக சொல்லப்பட்டாலும் வழக்கமான நாவல்கள் போல இல்லாமல் மூன்று பகுதியுமே தனித்தனியாகவே கொண்டு போய் முடிக்கப்பட்டன.
ஒரு டால்ஸ்டாயின் உழைப்பும் கற்பனைத் திறனும் இருந்திருந்தால், இதையே எடுத்துப் போய் ஒரு அமர காவியமாக எழுதியிருக்கலாம். பத்திரிகை உலகின் அவசரத் தேவைக்கேற்ப இருப்பதை கிள்ளிக் கொடுப்பதே போதுமானதாக இருந்திருக்கிறது. அவரும் அத்தோடு விட்டு விட்டிருக்கிறார்.
முதல் முறை சரியான சாலையில் வந்து ஏதோ ஐயத்தில் பக்கவாட்டு தெரு வழியாக தள்ளிப் போய் விட்டேன். மீண்டும் ஆற்காடு சாலை வரை போய் பழக்கமான பாதையில் வீட்டுக்கு அருகில் வந்தேன். தொலைபேசி கேட்காமலேயே சரியான குடியிருப்பில் நுழைந்து வீட்டுக்குப் போய் விட்டேன்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கையில் ஒரு புத்தகமும். கொண்டு போயிருந்த ரயில் பயணச்சீட்டு, சமோசா, பாலங்கள் புத்தகம், டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ் எல்லாவற்றையும் அங்கங்கு வைத்து விட்டு இடம் பிடித்து உட்கார்ந்தேன். சாப்பிடும் நேரம் கடந்திருந்தது. மூன்று பேரும் உட்கார்ந்து விட்டோம்.
அன்னாசிப் பழ மோர்க் குழம்பு, சாம்பார், ரசம், வாழைக்காய் பொரியல், பயறு துவரன், கோவைக்காய் பொரியல், அப்பளம், வற்றல், தயிர், சோறு, பொங்கல், வடை என்று ஏராளமான ரகங்கள். எப்போதுமே பல வகை கறிகளை வைத்துதான் சாப்பாடு.
சாப்பிட்ட பிறகு சோபாவில் நாங்கள் உட்கார அடுத்த பந்தி. தொலைக்காட்சியில் நகைச்சுவை ஓடைகள். சன் குழுமத்தின் ஆதித்யா என்ற ஓடையில் ஒருபட நகைச்சுவை என்று யூத் படத்திலிருந்து விவேக், விஜய் சிரிப்புக்காட்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கத் தகுதியில்லாத கீழ்த்தரமான வசனங்கள் காட்சிகள். விவேக் பெண் வேடம் போட்டு ஆடை அணிவகுப்பில் கலந்து கொள்வது, அவரை பெண்ணாக நினைத்து ஒரு பெரிய மனிதர் பேரம் பேசுவது, விஜய் தான் காப்பாற்றிய பெண் முத்தம் கொடுத்ததைக் குறித்து சொல்வது, விஜய் உணவுத் திருவிழாவில் பஜ்ஜிக்கு மாவு தோய்க்கும் முறை பற்றி விளக்குவது என்று அரைகுறை ஆபாசக் களஞ்சியம்.
குழந்தைகளுக்கு குடும்பத்தினருக்கு ஆண் பெண் உறவு குறித்து எதுவுமே காண்பிக்கப் படக்கூடாது என்று சொல்லவில்லை. இப்படிக் கீழ்த்தரமான ரசனையுடன் படம் எடுத்து அதை தொலைக்காட்சியிலும் போட்டுக் காட்டுவது சமூக வக்கிரத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வழியாக சாப்பிடுவதற்கு தொந்தரவு வேண்டாம் என்று தொலைக்காட்சியை அணைத்தோம். நான் பாலங்கள் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தேன்.
உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி வி ஆர் கிருஷ்ணய்யர், ஆவிகள் உலகத்தை தான் நம்புவதாக புத்தகம் எழுதியிருக்கிறார். வேறு சில பேரும் ஆவிகளின் இருப்பை உணர்ந்ததாக சொல்லிக் கொண்டிருந்தார். 'அறிவியல் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டால் நாம் அவற்றை செய்து பார்த்து நாமும் உணரலாம். ஆனால் ஆவிகள் போன்றவற்றை தனிநபர்கள் சிலர் உணர்ந்தாலும், புத்தகமாக எழுதுவதாலோ, விவாதிப்பதாலோ மற்றவர்களுக்கு என்ன பலன்? ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல குழப்பத்தை உருவாக்கி வியாபரமாக மாறுவதுதான் மிஞ்சும்' என்று சொன்னேன்.
மூன்று மணிக்கெல்லாம் புறப்பட்டோம். கூட வந்து அலுவலகத்திலிருந்து படிக்கப் புத்தகங்கள் எடுத்து வர வேண்டும். பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் வரும் போதே பேருந்து கிடைத்து விட்டது. நிறுத்தத்திலிருந்து நகர்ந்து வந்து கொண்டிருந்த வண்டிக்குக் கை காட்டியதும் நிறுத்தி ஏற்றிக் கொண்டார்கள். நடத்துனரிடம் சில்லறை இல்லை, எல்லோரையும் மிரட்டி மிரட்டி சில்லறை கொடுக்காமல் இருந்தார். எனக்கு 1 ரூபாய் தர வேண்டும். இன்னொரு பெண்ணுக்கு 4 ரூபாய்கள்.
வளசரவாக்கத்தில் இறங்கிய பிறகு கடையில் குளிர்பானங்கள் வாங்கிக் குடித்தோம். மதனுக்கு புரூட்டி, எனக்கு அப்பி. நான் மடிக்கணினியை இயக்கி மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை போட ஆரம்பித்தேன். இடையிடையே கண் அசரவும் செய்தேன் அரை மணி நேரத்துக்கு மேல் அப்படி உட்கார்ந்தே தூங்கியிருப்பேன்.
நான்கே முக்காலுக்கு பேருந்து ஏற்றி விடப் போனேன். அவனை பேருந்தில் ஏற்றிய பிறகு அலுவலகத்துக்கு வராமல் கடற்கரைக்குப் போக முடிவு செய்து பேருந்தில் ஏறினேன். வள்ளுவர் கோட்டத்தில் இறங்கி மாறிக் கொள்ளலாம். பாதியிலேயே திட்டம் மாற்றி வடபழனி முருகன் கோவில் நிறுத்தம் அருகில் இறங்கி நடந்தே நூறடி சாலையைக் கடந்து வடபழனி பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன்.
ஒரு தம்பதி பையனுடன் நடந்து கொண்டிருந்தார்கள். நான் வேகமாக நடக்கவே அவர்களைத் தாண்டி போய் விட்டேன். இடையில் கடை ஒன்றில் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு நடையைத் தொடர்ந்தால். அந்த தம்பதியினர் என்னைத் தாண்டிப் போய் விட்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி பேருந்து நிறுத்தம் வந்ததும் ஓரமாக நின்று கொண்டேன். கடந்து போய் விட்டார்கள்.
வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி குழந்தையை மடியில் தூங்க வைத்துக் கொண்டிருந்த கணவன் மனைவி உட்கார்ந்திருந்த இருக்கையின் பின்னிருக்கையில் உட்கார்ந்தேன்.
இறங்கி அலுவலகம் நோக்கி நடந்தேன். அலுவலகம் வந்து சேர்ந்ததும் பணித் திட்டமிடலாம் என்று நினைத்து வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து ஒன்பது மணிக்கு வெளியில் கீழ் வீட்டுப் பெண் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களிலேயே குழந்தையை எடுத்துக் கொண்டு போய் விட்டாள்.
10 மணி வரை உட்கார்ந்து மின்னஞ்சல்களுக்கு பதில் போடுவது, வலைப்பதிவுகளில் பதில், இடுகை போடுவது, வாரத்துக்கான பணித்திட்டம் வகுப்பது என்று செய்து கொண்டிருந்தேன். இணைய உரையாடலில் வந்து ஊருக்குத் திரும்பி வந்து சொந்தத் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேச ஆரம்பித்தார்.
கணினியை மூடி பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். வண்டியை எடுத்து வெளியில் வரும் போது எதிர் வீட்டு வீட்டுக்குச் சொந்தக்கார அம்மா வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்குக் காலையில் சீக்கிரம் போய் அவர்களிடம் வாடகையைக் குறைத்துத் தரும்படியும் இல்லையென்றால் வேறு இடம் பார்த்துக் கொள்வதாகவும் சொல்லி விட வேண்டும்.
கடைகள் எல்லாம் மூடி விட்டிருந்தார்கள். குடியிருப்பிற்கு வரும் போது காலையில் குளிக்காத குறைக்கு நன்கு ஒரு முறை குளித்து விட்டு படுக்க வந்தேன். மணி 10.40 ஆகியிருந்தது. 20 நிமிடங்கள் தியானம் செய்து விட்டுத் தூங்கி விட்டேன். 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 4.10க்கு விழிப்பு வந்து இன்னும் தூங்க எண்ணி, வலுக்கட்டாயமாக எழுந்து கொண்டேன். எழுந்து வந்த பிறகும் முன்னறையில் சோஃபாவில் தூங்கப் படுத்தேன். அங்கிருந்தும் வலுக்கட்டாயமாக எழுந்து விட்டேன்.
நான்கே முக்காலுக்கு எழுத ஆரம்பித்து இப்போது 50 நிமிடங்கள் ஆகி விட்டன. இன்னும் 10 நிமிடங்கள். இதை முடித்ததும், வீட்டை ஒதுங்க வைத்து தூத்து வார வேண்டும் (10 நிமிடங்கள்) . பாத்திரங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும் (10 நிமிடங்கள்). அதன் பிறகு முகம் மழித்து விட்டு, குளிக்க வேண்டும் (20 நிமிடங்கள்). அத்தோடு ஆறரை மணி ஆகியிருக்கும். 20 நிமிடங்கள் தியானம் முடித்து விட்டு அலுவலகம் போய் விட வேண்டும்.
முதலில் வாடகைப் பணத்தைக் கொண்டு கொடுத்து விட்டு தொடர்ந்து விளக்க ஆவணத்தைத் தயாரிப்பதில் ஈடுபட வேண்டும். 8 மணிக்கு குளோவியூ பத்திரிகைக் குறிப்பை தயாரித்து அனுப்ப வேண்டும். குளோவியூ நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். குளோவியூ குறித்து விபரங்கள் அனுப்ப வேண்டும். 11 மணிக்கு கணக்கியல் தொடர்பான பொறுப்புகளை விளக்கி ஆரம்பித்து வைக்க வேண்டும். இந்த மாதப் பணித்திட்டங்கள், இன்வாய்ஸ் அச்செடுப்பது குறித்து பேச வேண்டும்.
சம்பளக் குறிப்பறிக்கை உருவாக்குவது குறித்து சொல்ல வேண்டும். இப்படியே வேலைகளைப் பார்த்துக் கொண்டே வந்து ஒவ்வொரு மணி நேரமாக நன்கு செலவழிப்பதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஒரு மணி நேரம் எப்படி உருப்படியாகச் செலவழிக்க முடியும் என்பது மட்டும் குறிக்கோளாக இருந்தால் போதும். பெரிய திட்டங்கள், மாதங்கள், வருடங்களைக் குறித்து வருத்தப்பட வேண்டியதில்லை.
மணி ஐந்து முப்பத்தி ஐந்து. வீட்டு வேலைகளை முடித்து விட்டு சரியாக புறப்பட்டு விடலாம். ஆறரைக்கு நாளிதழ் வந்து விழுந்தால் சரியாக இருக்கும். துணி துவைக்க சோப்புத் தூள் இல்லாததால் துணிகளை ஊற வைத்திருக்கவில்லை. தரை தூப்பதும், பாத்திரம் கழுவுவதும்தான் வேலை. வண்டியையும் துடைத்துக் கொள்ள வேண்டும். தூசி படிந்த இரு சக்கர வண்டியை ஓட்டுவது அசிங்கம். செய்ய வேண்டிய பணிகள் 115 இருக்கின்றன. அவை அனைத்தையும் இந்த வாரத்துக்குள் முடித்து விட வேண்டும் என்று இலக்கு வைத்துக் கொள்வோம்.
வெளியில் மோட்டர் ஓடும் சத்தம் இரைச்சலாகக் கேட்கிறது. முன்பெல்லாம் அமைதியான காலை வேளைகளாக இருக்கும். இப்போது பல்வேறு சத்தங்கள் காதைத் தாக்குவதுதான் மிஞ்சுகிறது. வெளியில் உலாவப் போய் பல நாட்கள் ஆகி விட்டது. எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விட்டுத் தொலைத்திருக்கிறேன். ஒவ்வொரு பிடியாகப் பிடித்து மேலே ஏற ஆரம்பிக்க வேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 19, 2009
குளோவியூ
காலை மணி ஆறு. நேற்றைக்குக் காலையில் நான்கு மணிக்கு எழுந்து இரண்டு மணி நேரம் எழுதிய பிறகு புறப்பட்டு அலுவலகத்துக்குப் போகலாம் என்று திட்டம். எழுந்திருக்கும் போது ஐந்தரை மணி தாண்டி விட்டிருந்தது. காலையில் விழிப்பு வந்து விட்டாலும் எழுந்து விட முடியாமல் பெரிய சோம்பல் தடுக்கிறது. சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் கண்டதையும் கண்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.
ஒரு மணி நேரம் குளோவியூ பற்றிப் பேசவிருப்பதை எழுதிப் பார்க்க வேண்டும் என்று ஆரம்பித்து முக்கால் மணி நேரம் வரை எழுதினேன். அதற்குப் பிறகு குடிதண்ணீர் எடுத்து வந்தேன். புதிதாக குடியிருப்புக்குள் பொருத்தியிருக்கும் குழாய்களில் தண்ணீர் வர ஆரம்பித்திருக்கவில்லை. வெளியில் போய் எடுத்தேன். குழாய்க்கு அருகில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் யார் எதற்கு உட்கார்ந்திருக்கிறார் என்று கேட்க நினைத்துக் கேட்கவில்லை.
அழுக்காகக் கிடந்த பாத்திரங்களையும், முள்ளாக முளைத்திருந்த முகத் தாடியையும் விட்டு விட முடிவு செய்தேன். முக்கியமான ஒரு வாடிக்கையாளர் சந்திப்பும், மாலையில் குளோவியூ வெளியீட்டு விழாவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு இரண்டு நாள் தாடியோடு போவது எப்படி சரியாக இருக்கும்! ஏதோ ஒரு முரட்டு வீம்போடு சவரம் செய்து கொள்ளவில்லை. குளிக்கும் போது பிடித்திருக்கும் சளிக்கு மதிப்பு கொடுத்து தலையில் தண்ணீர் ஊற்றாமல் விட்டேன்.
பொங்கல் வடை சாப்பிட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே மனதில் திட்டம் ஆரம்பித்து விட்டது. போகும் போது எஸ்ஆர்எம் சாலையில் திரும்பாமல், திருவள்ளுவர் சாலையிலேயே தொடர்ந்தேன். அதன் கடைசியில் இடது பக்க தெருவில் திரும்பி தெருமுனையில் இருக்கும் கடையில் தி இந்து நாளிதழ். அதனருகில் இருக்கும் கடையில் சாப்பிடலாமா என்று நுழைந்தால் உள் கதவு வழியாக இன்னொரு அறைக்கு அனுப்பினார்கள். அந்த அறை தெருவின் மறு புறத்திலிருந்து போக வேண்டியது. அங்கு இன்னும் உணவு தயாராகவில்லை என்று பாதி மூடியிருந்த கதவைப் பார்த்துத் தாண்டி வந்திருந்தேன்.
ஆற்காடு சாலை வரை வந்து ஹாட்சிப்ஸ் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பல இரு சக்கர வண்டிகளுக்கிடையே நானும் வண்டியை நிறுத்தினேன். அழுக்கான தண்ணீர் ஊற்றி விட்டிருந்தார்கள். அருகில் இருக்கும் ரிலையன்சு பிரஷ் கடையிலிருந்து இருக்கும் என்று மனதில் சலித்துக் கொண்டேன். பொங்கல், வடை. முதலில் பணம் கொடுத்து அதற்கான சீட்டை வாங்கிக் கொண்டு உணவை இன்னொரு மேடையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
அங்கு இரண்டு பேர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் மேடைக்கு புறங்காட்டி ஏதோ பொதிந்து கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளர்கள் யாராவது காத்திருப்பார்களா என்று அக்கறை சிறிதளவும் இல்லாமல் நிற்பதாகப் பட்டது. இன்னொருவர் ஏற்கனவே சீட்டு கொடுத்திருந்த ஒருவருக்காக சாம்பார் இட்லி, அதற்கு சட்னி,சாம்பார் பொதிந்து கொண்டிருந்தார். அதை பையில் போட்டுக் கொடுத்த பிறகு என்னிடம் சீட்டு வாங்கினார். 'ஒரு பொங்கல் சாப்பிட' என்று சொல்லி விட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார். சில நொடிகளில் தட்டில் பொங்கல் வந்து விட்டது. அருகிலேயே இருந்த வடை தட்டிலிருந்து வடையை எடுத்து வைத்து பக்க மேளங்களையும் வைத்து தட்டைக் கொடுத்து விட்டார்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டி வைக்கும் இடத்தில் வேலை செய்யும் காவலர் வந்து வண்டி சாவியைக் கேட்டார். அழுக்குத் தண்ணியைத் தள்ளி விடுவதற்கு முன்பு வண்டியை நகர்த்தி வைக்க வேண்டுமாம். வெளியில் எட்டிப் பார்த்து விட்டு சாவியைக் கொடுத்தேன். அவருக்கு தமிழ் தெரிந்திருக்கவில்லை. இந்தியில் பேசினார். அவருக்கு அருகில் தூய்மை செய்யும் பையன் அதை எனக்குத் தமிழில் சொன்னான். தொடர்ந்து நானே இந்தியில் அவருடன் பேசிக் கொண்டேன்.
சாப்பிட்ட பிறகு காபி.அதைக் குடித்து விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன். துணி தேய்க்கும் கடை திறந்திருந்தது. முந்தைய நாள் துணிப் பையை வண்டியில் எடுத்துக் கொண்டு வந்திருந்தாலும் கடை மூடியிருந்ததால் கொடுக்காமல் அலுவலகத்திலேயே விட்டிருந்தேன். அலுவலத்தில் மாடிப்படி ஏறிப் போனால் காத்திருந்தார். கதவைத் திறந்து கணினியை இயக்கி அடுத்த கட்ட வேலைகள். முதலில் பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புதல். அந்த நேரத்தில் இணைய உரையாடலில் வந்து ஏதோ கேட்டார்.
எடுத்து செல்வதற்கான ஆவணங்களை தயார் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசி அவர்கள் செய்யும் உற்பத்தி விபரங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதைத் தொடர்ந்து மின்னஞ்சல்களுக்கு பதில் போடுதல்.
வருகைப் பதிவு விபரங்களை திறந்து பார்த்து எல்லோருக்கும் நினைவூட்டினேன். வருகைப்பதிவு, சம்பளக் கணக்கீடு, சம்பளப் பதிவு, சம்பளம் கொடுத்தல், பணி திட்டமிடுதல், பணியில் இருக்கும் வேலைகள், இன்வாய்ஸ் செய்தல், பணம் வருவதை உள்ளிடுதல், மற்ற செலவினங்கள், அவற்றுக்குப் பணம் கொடுத்தல், கணக்கியல் அறிக்கைகள், ஆவணங்கள், கோப்புகள், புத்தகங்கள் இவற்றை அடுக்கி, வரிசைப் படுத்தி ஆவணப்படுத்தி, கணினி வன்பொருட்கள், கணினி செயல்பாடு இவற்றை பார்த்து கொள்ள வேண்டும்.
சந்தைப்படுத்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தொழில் நுட்ப வேலைகளில் ஈடுபட வேண்டும். வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட வேண்டும். இதுதான் திட்டம்.
2 மணிக்கு போக வேண்டும். 1 மணிக்கு சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம் என்று திட்டம். ஒரு மணிக்கு சாப்பாடு வந்திருக்கவில்லை. ஒன்றேகாலுக்குப் பிறகுதான் வந்தது. காலையிலேயே சாப்பிட்டிருக்கவில்லை என்று தெரிந்தது. இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்த்து விட்டுக் காலையில் சாப்பிடாமலேயே வந்திருக்கிறார். இப்போதும் சாப்பிடாமல் போனால் சரிப்படாது.
ஒரு மணிக்குக் கிளம்பியிருந்தால் பேருந்தில் போயிருக்கலாம். ஒன்று நாற்பதுக்கு வண்டியில் புறப்பட்டோம். இருமக் காட்சிக் கருவியை எடுத்திருக்கலாமே என்று போரூர் அருகில் எண்ணம் வந்தது. திரும்பப் போய் எடுக்க வேண்டாம், அவர்களுக்குத் தொலைபேசி கேட்கலாம் என்று கேட்டதில் அவர்கள் அலுவலகத்தில் கருவி வசதி இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். வெயில் தலையில் உறைக்க அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம் தாண்டி வலது புறம் நூம்பல் சாலையில் போய் சாலை கடைசியில் இடது புறம். முன்பு ஒரு முறை போயிருந்த நிறுவனத்தின் தொழிற்சாலையைத் தாண்டி அடுத்த பாலத்தையும் கடந்து இடது புறம் தொழிற்சாலையைப் பார்த்தோம். தொலைபேசி கேட்டால் அதற்கு நேரெதிரில் வலது புறம் இருப்பதாகச் சொன்னார்
அப்போது சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும் வரவேற்பறையில் காத்திருக்கும்படியும் சொன்னார். அரை கிலோமீட்டர் போய் வட்டமடித்துத் திரும்பி போக வேண்டிய தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தோம். காவல் அறையில் பெயரட்டையைக் கொடுத்தால் அவர் தொலைபேசிப் பார்த்தார். முதலில் வேறு ஏதோ பிரிவுக்குப் பேசி விட்டு அதற்கு என் மீது பழி போட ஆரம்பித்தார். அதன் பிறகு சரியான இடத்துக்குத் தொலைபேசிப் பார்த்து விட்டு யாரும் எடுக்கவில்லை என்று சொன்னார். வரவேற்பறையில் போய் உட்கார கை காட்டினார்.
வரவேற்பறையில் ஒரு வரவேற்பு மேசை, ஒற்றை சோபா. ஒரே ஒரு மின்விசிறி ஓடிக் கொண்டிருந்தது. அதை தன்பக்கமாக திருப்பி வைத்திருந்தார் மேசையில் உட்கார்ந்திருந்த தாடி வைத்திருந்தவர். அவர் ஏறெடுத்துப் பார்த்து விசாரிக்கக் கூட முனையவில்லை. நாங்களாக பார்க்க வேண்டியவரின் பேரைச் சொல்லிக் கேட்டால், அவங்க அந்தப் பக்கம் இருக்காங்க என்று சொல்லி காவல் பிரிவை அணுகச் சொன்னார். அவங்கதான் இங்கு வந்து உட்காரச் சொன்னாங்க என்றதும் உட்காரச் சொன்னார்.
அடித்துப் பிடித்து சரியான நேரத்துக்கு வந்தால் அவர்கள் காத்திருக்கச் சொல்வது கடுப்பாக இருந்தது. அரை மணி நேரத்துக்கு மேல் காத்திருந்த பிறகு வந்தார். பக்கத்திலேயே இருந்த பயிற்சி அறை என்று கூடத்துக்குள் போனால் ஓரிரு இருக்கைகள், காட்சித் திரை, காட்சி உருவாக்கும் கருவி இருந்தன. கூடவே இரண்டு பேர் எதையோ குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். நம்மை வெளியில் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். மடிக்கணினித் திரையிலேயே மென்பொருள் விபரங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தோம்.
அடுத்த அறை காலியானதும் அங்கு நகர்ந்தோம். அவருக்குத் திரையில் விபரங்களைக் காண்பித்துக் கொண்டிருக்கும் போது உற்சாகமாக கேள்விகள் கேட்டு அவர்கள் பக்க தகவல்களை சொல்லிக் கொண்டும் இருந்தார். இடையில் தொலைபேசி அழைப்பு வர போய், தனது மேலாளரையும் அழைத்து வருவதாகச் சொல்லிப் போய் விட்டார். அடுத்த அரை மணி நேரத்துக்குக் காத்திருப்பு.
மாலை ஆறரை மணிக்கு மென்பொருள் வெளியீட்டு நிகழ்ச்சி. அதற்குப் போக வேண்டும், இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். என்று கடுப்படித்தது. அவருக்கு தொலைபேசி கேட்டால், 'காத்திருங்கள் எங்கள் மேலாண்மை இயக்குனரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரையும் அழைத்து வருகிறேன்' என்கிறார். இன்றைக்கே ஒரு முடிவைச் சொல்லி விடுவதாகவும் உறுதி சொன்னார். 'ஆகா இன்றைக்கு ஒரு ஆர்டரோடுதான் திரும்பப் போகிறோமா' என்று பேசிக் கொண்டோம்.
இன்னும் சில நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு முதலில் நம்மைத் தொடர்பு கொண்டு பேசிய மேலாளர் வந்தார். அவர் முன்பே என்னைப் பற்றித் தெரியுமாம். ஏற்கனவே போட்டியாளர் மென்பொருளையும் பார்த்திருக்கிறார்கள். உங்களைப் பற்றி நன்கு தெரியும் என்று பேசிக் கொண்டிருந்தார்.
அவர் கேட்ட விபரங்களுக்கு எல்லாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன். கடைசியில் அவரே மாலை நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு வழியனுப்பி வைத்தார். அதற்குப் பிறகும் அவரது உதவியாளர் பல நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். விலையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். போட்டியாளர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பின்னணி சொல்லிக் கொண்டிருந்தார்.
வெளியில் வந்து வண்டியைப் பிடித்தோம். அலுவலகத்துக்கு வந்தால் யாருமே இல்லை. எல்லோரும் தேநீர் சாப்பிடப் போயிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். மணி ஐந்தே கால் தாண்டி விட்டது. எந்தப் பொருளையும் எடுத்துப் போயிருக்கவில்லை. பொருட்களை திரட்ட ஆரம்பித்தேன். வண்டியும் கீழே வந்து விட்டிருந்தது. . நாங்கள்தான் முதலில் போய்ச் சேர்நதோம்.
தலைமை விருந்தினர் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டு 7 மணிக்குக் கிளம்பி விடுவதாகச் சொல்லியிருந்தார். அவர் தொலைபேசும் போது எதுவுமே தயாராகியிருக்கவில்லை. உரை மற்றும் விளக்கப் படத்தை அவருக்குக் காட்டுவதாக ஆரம்பித்தோம். என்னுடைய உரையில் தலைப்பு இருந்ததையும் ஒரு எழுத்துப் பிழையையும் சுட்டிக் காட்டினார். அவரது பதவியை தவறாகக் குறிப்பிட்டிருந்ததையும் சொன்னார்.
அந்த இரண்டுமே என்னுடைய தனிப்பட்டச் சறுக்கல்கள். இனிமேல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக் கிழமை நிறையப் பேசியிருந்தோம்.
நான் எனது என்ற அக்கறை கர்வம் இருக்க வேண்டும். அந்த கர்வம் பேர் தேடிக் கொள்வதிலோ, இருப்பதை பிடித்து வைத்துக் கொள்வதிலோ இருக்கக் கூடாது, நான் செய்யும் எதுவும் சிறப்பாக இருக்கும். உயர் தரத்துக்குக் குறைவாக எதுவும் இருக்காது என்று பெருமை வேண்டும்.
அந்தப் பெருமையை சரியான வழியில் செலுத்த வேண்டும். செய்பவை எப்போதுமே நியாயத்துக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
மூன்றாவதாக இந்த இரண்டையும் செயல்படுத்துவதற்கான வலிமை வேண்டும்.
ஏழு மணிக்குக் கிளம்பிப் போன பிறகு மற்றவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். ஏழரை மணி வாக்கில் ஆரம்பித்தோம். ஏறக்குறைய ஒரு மணி நேர தாமதம்.
ஒலி வாங்கியை சட்டையில் பொருத்திக் கொண்டு நான் ஆரம்பித்து வைத்தேன். எனது படக் காட்சியைத் திரையில் காண்பித்து விளக்க ஆரம்பித்தேன். காலையில் எழுதிப் பார்த்திருந்தது உதவியாகவே இருந்தது. அதிகத் தடங்கல் இல்லாமல் சொல்ல வந்தது கோர்வையாக வந்து கொண்டிருந்தது. எங்கெங்கு நிறுத்த வேண்டும், எங்கெங்கு முன்பின் நோக்கிப் போக வேண்டும் என்பதெல்லாம் மனதில் பதிந்து போய் நல்லபடியாகப் பேசி முடித்தேன். அடுத்ததாக விளக்கவுரை நடத்துவார் என்று அறிவித்து உட்கார்ந்தேன்.
அவரது பாணியில் பிரமாதமாக செயல்பட்டார். அருமையான சரளமான ஆங்கிலத்தில் மூன்று நாட்கள் உழைப்பில் தயார் செய்து வைத்திருந்த காட்சிப் படமும் அழகாக வந்திருந்தது. அதை ஒட்டியே பேசிக் கொண்டு போய் சொல்ல வந்ததை சொல்ல முயன்றார். புதிய கருதுகோளாக இருந்ததால் பார்த்தவர்கள் அதை உள்வாங்கி விவாதிக்க ஆரம்பிக்கவில்லை. தொடர்ந்து நான் சில கருத்துக்களைச் சொன்னேன். சில வார்த்தைகள் பேசக் கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
விலை விபரங்களைத் திரையில் காண்பித்தார். விலை மிகவும் குறைவாக இருப்பதாக பின்னர் சொன்னார்கள். எனக்கும் பல விதங்களில் ஓரே மாதிரியான சிந்தனைகள். நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொண்டு உணவு பற்றி அறிவித்து கூடவே செய்முறை விளக்கங்களையும் பார்க்கலாம் என்று சொன்னோம். மொன்பொருள் சேவைக்காக பதிவு செய்து கொள்பவர்களும் செய்யலாம்.

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009
வாய்மையும் பொய்மையும்
காலை 10 மணி. (தொலைபேசியில்)
'எங்க சார் இருக்கீங்க'
'உங்க ஊருக்குத்தான் சார் வந்துகிட்டு இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில் சேர்ந்து விடுவேன். உங்க பாஸிடம் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். எத்தனை மணிக்கு சார் வரலாம்'
'நீங்க என்ன சார் இமெயில் அனுப்பினீங்க? ரொம்ப கோபமா இருக்கார். இங்க எல்லாம் வர வேண்டாம்னு சொல்லிட்டார். ஏதோ நிறைய பணம் தர வேண்டியிருக்கிறது என்று அனுப்பினீங்களாமே!'
'ஆமா, அது போன வாரம் அனுப்பினது. நேற்றைக்கு செய்த பணி விபரங்களை பட்டியலிட்டு விட்டு சந்திக்க நேரம் கேட்டிருந்தேன்'
'அது என்னவோ எனக்குத் தெரியாது. இங்க எல்லாம் வந்துடாதீங்க! எங்க குழுமத்தில் எங்குமே நீங்க வர வேண்டாம்'
'சரிங்க. அப்படி சொல்லிட்டீங்க இல்ல. நான் வரலை'
11.45 மணி (தொலைபேசியில்)
'உங்க நிறுவனத் தலைவரிடம் பேச வேண்டும்.'
'கொஞ்சம் இருங்க சார், லைன் கொடுக்கிறேன்'
'சொல்லுங்க'
'சார், உங்களைப் பார்த்து சில விளக்கங்கள் தர வேண்டும் என்று சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். எப்ப பார்க்கலாம் சார்?'
'எங்க இருக்கீங்க இப்போ?'
'உங்க ஊரில்தான் சார். சொன்னீங்கன்னா உடனேயே வந்து விடுகிறேன்'
'சரி வாங்களேன்'
12.15 மணி (நிறுவனத் தலைவரின் அறைக்கு வெளியே)
'என்ன சார் இங்க திடீர்னு?'
'ஆமாங்க. உங்க பாஸ்கிட்ட தொலைபேசி கேட்டேன். வந்து பார்க்கச் சொன்னார். அதுதான் காத்துக்கிட்டு இருக்கேன்.
சில நிமிடங்களுக்குப் பிறகு
'உங்களை 2 மணிக்குப் பிறகு வரச் சொன்னார். போயிட்டு வந்துடுறீங்களா'
'சரிங்க'
பிற்பகல் 2.15 மணி (நிறுவனத் தலைவரின் அறைக்கு வெளியே)
'என்ன சார் திடீர்னு எங்க போய்ட்டீங்க! ஒரு மணி இருக்கும் பாஸ் நீங்க இருக்கீங்களான்னு கேட்டார். நான் கேட்ல கேட்டேன். நீங்க போயிட்டதா சொன்னாங்க. ஏன் சார் போயிட்டீங்க?'
'இது என்னங்க அநியாயமா இருக்கு. அவரு வெளியில் வந்து 2 மணிக்குப் பிறகு வரச் சொன்னார். ஏன் அப்படி பொய் சொன்னார்!'
'நீங்க பாஸிடம் தொலைபேசியில் பேசிடுங்க சார். நீங்க இங்க இருக்கீங்கன்னு சொல்லிடுங்க. அவர் சாப்பிடப் போயிருக்கார். நீங்க பேசிட்டாத்தான் இங்க வருவார்.'
குறுஞ்செய்தி : 'முற்பகலில் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கும் போது, நீங்கள் 2 மணிக்கு வரச் சொன்னதாக சொல்லவே போய் விட்டு இப்போது இங்கு வந்திருக்கிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்'
சில நிமிடங்களுக்குப் பிறகு
'அந்த அறைக்கு வாங்க. நாம பேசிக்கிட்டு இருக்கலாம்'
'வேண்டாம். நான் இங்கேயே காத்திருக்கிறேன்'
'சும்மா வாங்க சார்'
'வேலை விஷயமா பேசணும்னா உங்ககிட்ட பேச விரும்பவில்லை. நான் உங்க நிறுவனத் தலைவரிடமே பேசிக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில், நட்பு முறையில், ஒரு சகோதரன் என்ற பாவனையில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்க கிட்ட ஏதோ தப்பு இருக்கு. திருத்திக்கோங்க. ஒரு மனுசன் கிட்ட நிறைய நல்லது இருந்து அடிப்படையில் ஒரு பிறளல் ஏற்பட்டு விட்டால் எல்லாம் சரிந்து விடும். நீங்க ஆழமா அலசிப் பார்க்க வேண்டிய கட்டம் இது.
'என்ன சார் என்னென்னவோ பேசுறீங்க?'
'எதிராளி பேசுவதை எல்லாம் சந்தேகத்தோடே பார்ப்பது என்னால் முடியாது சார். நீங்க சொல்வதை அப்படியே நம்புவதுதான் என் இயல்பு. அந்த நம்பிக்கைக்கு பாதகம் நேர்ந்து விட்டால் அப்புறம் நாம் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பொருள் சொல்லுங்க. நான் அங்கேயே போய் காத்திருக்கிறேன். நீங்க உங்க வேலையைப் பாருங்க'
பிற்பகல் 3.00 மணி (நிறுவனத் தலைவரின் அறைக்கு வெளியே)
'என்ன சார், பாஸ் வருவார்னு தோணலை. பொதுவா இரண்டரை மணிக்கு வந்துடுவார்.'
'நாலு மணி வரை காத்திருந்து பார்க்கிறேன். தொலைபேசியிலும் இணைப்பு கிடைக்க மாட்டேங்குது'
சில நிமிடங்களுக்குப் பிறகு
'வந்துட்டாரு சார். வேறு அலுவலக அறைக்குப் போயிருக்கிறார். அங்க வரச் சொல்லுகிறார்'
பிற்பகல் 3.30 மணி (இன்னொரு அலுவலக அறை)
'என்ன பட்டியல் அனுப்பியிருக்கீங்க?'
'சார். இது எதுவுமே இவங்க செய்யல சார். இது ஆறு மாசம் முன்னமேயே செய்து முடிச்சது. அடுத்தது இன்னும் முடிக்காமலேயே முடிச்சிட்டதா போட்டிருக்காங்க. இதெல்லாம் இன்னும் சரியாகவே வேலை செய்யலை'
'எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டு, உங்களுக்கு சொல்லி, முடிச்ச வேலைகள். நீங்களே சரிபார்த்துக்கோங்க'
'எப்ப தொலைபேசி ஏதாவது வேலை பத்தி கேட்டாலும், காசு கொடுத்தால்தான் வேலை செய்வோம் என்று இவங்க கம்பெனில எல்லாரும் சொல்றாங்க சார்.'
'அப்படியா!....... இனிமேல் நான் பேசத் தயாராக இல்லை.'
'இரண்டு நிமிடங்கள் கொடுங்க சார். நான் விளக்குகிறேன்'
'என்ன!!!'
'அப்படி யாராவது பேசியிருந்தா அது மன்னிக்க முடியாத தவறுதான். அதுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்'
'நீங்க காசு கேட்டு கறாரா பேசியிருந்தா நான் புரிந்து கொள்கிறேன். அதெப்படி எல்லாரும் அப்படி பேசலாம்.
எல்லாரும்னா என்னய்யா அர்த்தம்? வாட்ச் மேன்லருந்து எல்லாரும் உன்கிட்ட அப்படி பேசினாங்களா'
'எங்க நிறுவனத்தில் வாட்ச்மேனே கிடையாது சார்'
'இல்ல சார் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட எல்லாருமே அப்படிச் சொன்னார்கள்' நான்கைந்து பெயர்கள் அடுக்கப்பட்டன.
'இதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நான் மன்னிக்கவும் மாட்டேன். என்ன மாதிரி நிறுவனம் நடத்துறீங்க நீங்க? எல்லாரும் எப்படி இப்படி பேசலாம்'
'திரும்பவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் சார். அப்படி யாராவது பேசியிருந்தாங்கன்னா எந்த நிபந்தனையும் இல்லாம மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'
வேறு வேலையாக அவர் போன இடைவெளியில் தொலைபேசியில் ஒவ்வொருவராகப் பேசிப் பார்க்கிறேன்.
பல நிமிடங்கள் கழித்து:
'அவர் சொன்ன பேர்களிடம் எல்லாம் தொலைபேசி கேட்டு விட்டேன் சார். யாருமே அப்படி பேசியதில்லையாம். ஒருவர் பண விவகாரங்களில் நான் தலையிடுவதே இல்லை என்று உறுதியாக சொல்லி விட்டார். இரண்டாமவர் அந்த மாதிரி எல்லாம் பேசவே இல்லை என்று சொல்லி விட்டார். மூன்றாமவர் பணம் கேட்கும் போது கேட்டிருக்கிறேன், வேலை விவாதிக்கும் போது பணம் குறித்து கண்டித்ததே இல்லை என்றார். நான்காமவர், நீங்க நேரத்துக்கு பணம் கொடுத்து ஆதரிச்சாத்தானே நாங்க நல்லா வேலை பார்க்க முடியும்ணு மட்டும் ஒரு தடவை சொன்னதா சொல்கிறார்.
இவர் நிறைய பொய்கள் சொல்கிறார்.'
'ஏம்பா இவர் இப்படி சொல்கிறார். நீ எப்படி எல்லோரும் உன்னிடம் காசு கொடுத்தால்தான் வேலை செய்வதாகச் சொன்னாங்க என்று சொன்னாய்'
'இல்ல சார் சொன்னாங்க.'
'நான் வேணும்னா அவர் சொன்ன பேர் எல்லோரும் இங்கு வருகிறோம். நீங்க கேட்டுக் கோங்க'

செவ்வாய், ஏப்ரல் 07, 2009
பட்டினி விரதம்
காந்தியின் உண்ணாநோன்புகள் குறித்து படித்திருக்கிறேன். நிறைய யோசித்திருக்கிறேன். கொஞ்சம் எழுதவும் செய்திருக்கிறேன்.
ரம்சான் மாதங்களில் இசுலாமிய நண்பர்கள் பகல் முழுவதும் சாப்பிடாமல் இருப்பார்கள். சில பேர் மாதத்துக்கு இரண்டு முறை ஏகாதசி விரதம் இருப்பார்கள். சில பேர் அமாவாசை என்று சாப்பிட மாட்டார்கள். சில பேர் வாரத்துக்கு ஒரு நாள் விரதம் இருக்கிறார்கள். உணவை மறுத்து இருப்பதை ஒரு வழிபாட்டாக வலியிறுத்துகிறார்கள்.
'சாப்பிடாமல் இருந்தால் வயிறு எரிய ஆரம்பிக்கிறது, உணவுக் குழாய் எல்லாம் காந்துகிறது'
'ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால் தளர்ந்து போகிறது. நடக்க முடியவில்லை. இயல்பாக செயல்பட முடியவில்லை'
'சாப்பிடாமல் இருந்து விட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்'
இப்படி பல எண்ணங்கள் எதிர்வினைகள் நமக்கு இருக்கிறது. முயற்சித்துப் பார்த்ததில் சிந்தித்துப் பார்த்ததில் வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர மற்றவர்களுக்கு உணவு, தண்ணீர் இல்லாமல் இருப்பது சில நாட்கள் வரை எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்றே தோன்றுகிறது.
ஏற்படும் விளைவுகளாக தோன்றுவது மனதின் உருவாக்கங்கள்.
மருத்துவ ரீதியாக கடைசியாக சாப்பிட்டு 8 மணி நேரத்துக்குப் பிறகு நோன்பு ஆரம்பிக்கிறது என்று வரையறுக்கிறார்களாம் (உபயம் விக்கிபீடியா). வெறும் வயிற்றில் செய்ய வேண்டிய பரிசோதனைகள், சிகிச்சைகள் எல்லாம் இது போல பட்டினிக்குப் பிறகு ஆரம்பிக்கின்றன.
http://en.wikipedia.org/wiki/Fasting
அந்த நேரத்துக்கு மணி அடித்ததும் பாவ்லோவியன் தூண்டலினால் வயிற்றில் அமிலம் சுரந்து பசிக்க ஆரம்பிக்கிறது. இப்போது சாப்பிடாவிட்டால் இன்னின்ன நடந்து விடும் என்று மனம் முழுமையாக நம்புகிறது. சாப்பிடா விட்டால் அவை நடந்து விடுகின்றன.
உண்மை என்ன? நாம் இயங்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் ஆற்றல் செலவாகிறது. ஆற்றல் கிடைப்பதற்கு முதன்மை வழி உணவு உண்டு செரிப்பது. உண்ணும் உணவில் இருக்கும் சர்க்கரைப் பொருள் இரைப்பையிலிருந்து ரத்தத்தில் இணைந்து உடலின் பகுதிகளுக்கு இறைக்கப்படுகிறது. அந்தந்த இடத்தில் சர்க்கரைப் பொருள் உயிர்வாயுவுடன் சேர்ந்து எரிந்து ஆற்றலைக் கொடுக்கிறது.
சரி சாப்பிடாவிட்டால் என்ன ஆகும்? இதயம் துடிப்பது நின்று விடுமா? மூச்சு விடுவதற்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கும்?
வயிற்றிலிருந்து சர்க்கரைப் பொருள் கிடைக்கா விட்டால், கல்லீரலில் சேமித்து வைத்திருக்கும் சர்க்கரைக் கூட்டுப் பொருட்களை உடைத்து சர்க்கரை உருவாக்கும் வேலை ஆரம்பித்து விடும். இரண்டு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலும் நமது வழக்கமான செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும் வேலை தடையின்றி நடந்து விடுகிறது.
தசைத் தொகுப்புகளில் சேகரித்து வைத்திருக்கும் சர்க்கரைக் கூட்டுப் பொருட்கள் ஏழெட்டு நாட்கள் வரை தாக்குப் பிடிக்கலாம். கிட்டத்தட்ட ஓரிரு வாரங்களுக்குப் பிறகுதான் உண்மையான பட்டினி ஆரம்பமாகிறது.
உடலில் சேகரித்து வைத்திருக்கும் எல்லா சர்க்கரை பொருட்களும் தீர்ந்த பிறகு கொழுப்பு உடைபடுவது ஆரம்பிக்கிறதாம். கொழுப்பு உடைபடும் போதும் சர்க்கரை பொருள் கிடைத்தாலும், கூடவே பக்கவிளைவாக நச்சுப் பொருட்களும் வெளியாகின்றன. இந்த நிலையில் ரத்தத்தில் நச்சுக்களின் செறிவு அதிகமாகி சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரித்து விடும். மிகவும் தேவையான உறுப்புகளைத் தவிர மற்றவற்றை இயக்கம் நிறுத்த ஆரம்பித்து விடலாம்.
இந்தக் கட்டத்தை தொடுவதற்கு 20 நாட்கள் வரை ஆகலாம். ஒரு நாள், இரண்டு நாட்கள், ஒரு வாரம் வரை முழுமையாக அன்னம் தண்ணீர் இல்லாமல் பட்டினியாக இருப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்பட்டு விடுவதில்லை. மனதளவில் சரிவர புரிந்து கொண்டு தயாராக இருந்தால் அத்தகைய பட்டினி விரதம் உடலுக்கும் மனதுக்கும் நன்மைகளைத் தரும்.

புதன், ஏப்ரல் 01, 2009
மாறும் இந்த உலகம்
செவ்வாய்க் கிழமை இரவு மணி 10.42. வெளியில் சாப்பிட்டு விட்டுத் திரும்பி வந்திருக்கிறேன். வேலையை விட்டுப் போகும் கடைசி நாளைக் குறிப்பதற்கான விருந்து.
போன வாரம் புதன் கிழமை ஆரம்பித்து 7 நாட்களில் ஒரு கலக்கு கலக்கி விட்டது. இரண்டு மாதம் விடுப்பில் அனுப்பியது அதைத் தொடர்ந்த பின் விளைவுகள் இன்னும் நிலைக்கு வந்தபாடில்லை. நான் கிட்டத்தட்ட வில்லன் போல ஆகி விட்டேன்.
இந்த நிறுவனத்தில் இருக்கும் நிரல், பயன்பாடுகள், வாடிக்கையாளர்கள் எல்லாமே நமக்குத்தான் எஞ்சுகின்றன. அவர்கள் அடுத்த நிறுவனத்துக்குப் போய் நிற்க வேண்டித்தானே இருக்க வேண்டியிருக்கிறது.
முதலாளி, தொழிலாளி என்ற பிரிபாடு இருக்கத்தான் செய்கிறது. எல்லோரும் ஒன்றாக பாவித்துக் கொள்ள வேண்டும் என்று நான் மட்டும் நினைத்துக் கொண்டதால் எதுவும் நடந்து விடவில்லை. அவரவர் அவரவர் போக்கில்தான் இருக்கிறார்கள்.
காந்தி பார்க்கும் எல்லோரையுமே தன்னைப் போலவே உத்தமர் என்று நினைத்துக் கொள்வாராம். அவரது நினைப்பு, செயல், வாக்கு எல்லாமே சக மனிதர்கள் உயர்வாக நோக்கி செய்யப்படுபவைதான். எனக்கு அதே குறைதான். எல்லா மனிதர்களுமே என்னைப் போலவே நிறை குறைகள் இருப்பவர்கள் என்று நினைத்துக் கொள்கிறேன். எத்தனை முறை சூடு பட்டாலும் உறைக்காமல் பேசுவதை அப்படியே நம்பி விடும் குணம் குடிகொண்டவனாக இருக்கிறேன்.
நிறுவனத்தில் சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குள் புதிய அலுவலகத்துக்கு இடம் பெயர்ந்தோம். விரிவாக உயர் நிலையில் சிந்திக்கும் ஒழுக்கம் வந்தது. இப்போது தொழிலில் ஆதாயம் சம்பாதிக்கும் கட்டம்.
நேரத்தில் பாதியை நிரலாக்கம், நிரல் வடிவமைத்தால், நிரல் பகுப்பாய்தலில் செலவழிக்க வேண்டும். மீதி நேரம் வாடிக்கையாளர்களிடம் உறவு வளர்ப்பது, வாடிக்கையாளர்களை சந்திப்பது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில் செலவழிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுடன் எப்போதுமே ஒரு உரசலுடனேயே இருக்க வேண்டும் என்பது மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். உரச உரசத்தான் கையில் பணம் கிடைக்கும்.
தனது நேரத்தில் பாதியை மென்பொருள் சோதனை செய்வது, மென்பொருளில் புதிய கூறுகளை பரிந்துரைப்பது, வாடிக்கையாளர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய மென்பொருள் ஆவணமாக்கல், வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வது என்று செலவிட வேண்டும். மீதி நேரத்தில் வாடிக்கையாளர்களை சந்தித்தல், அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிதல் என்று செலவிட வேண்டும்.
நேரத்தில் பாதியை குழுவினரை வழி நடத்துதல், குழுவினரிடம் வேலை வாங்குதல் என்றும் மீதி நேரத்தை வாடிக்கையாளர்களுடன் உறவு வளர்ப்பதிலும் செலவிட வேண்டும்.
தனது நேரத்தில் பாதியை தொழில் நுட்ப மேம்பாடுகளுக்கும், மீதி நேரத்தை மற்றவர்களுக்கு பயிற்சி கற்றுக் கொடுப்பதிலும் செலவிட வேண்டும். மற்றவர்களிடம் வேலை வாங்கும் பணியை அவர் சிறப்பாக செய்வது போலத் தெரியவில்லை. அவருக்குப் புதியதொரு பொறுப்பை உருவாக்கி மேலே உயர்த்தி விட வேண்டும். நிரல் ஆய்வு செய்வதிலும் இவர் பங்களிக்க வேண்டும்
வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப மென்பொருள் இருக்கிறதா? வாடிக்கையாளர்களின் தேவைகளை அலசுதல் என்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நிரல் வடிவமைத்தல், நிரலாக்கம், நிரல் பகுப்பாய்தலில் செலவழிக்க வேண்டும். தினமும் மென்பொருள் பயன்பாட்டில் என்னென்ன மேம்பாடு செய்ய முடியும் என்று பார்த்து, தரவுத்தள மேம்பாடு, நிரல் மேம்பாடு என்று பணியாற்ற வேண்டும்.
எனக்கு நிதானம் முழுவதும் தப்பிக் கொண்டிருக்கிறது. பேசும் போது நியாயங்கள் பிடிபடவேவில்லை. சொன்ன பிறகு ஒரு புறம் உறைத்தது. பிறகு இன்னொரு புறம் உறைக்கிறது. விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் நாட்குறிப்பு எழுதுவது, தியானம் செய்வது விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கர்வபங்கம் என்று நினைத்துக் கொண்டேன். என் வழிதான் சரியான வழி என்று இறுமாந்து நடந்த எனக்கு பாடம் இது. வாடிக்கையாளர்களிடம் பேசி அடுத்த நிலைக்கு நகர்வதை உறுதி செய்து கொண்டு விடுவோம். உண்மையில் பார்க்கப் போனால் இதை கைவிட்டு வேறு வழியைப் பார்க்க அவர்களுக்கு நிச்சயம் மனம் வராது. நாம் உண்மையில் நிறைய இழுத்துப் பார்க்கலாம்.
இவர்களின் நெறி குறைந்த காசில் நிறைய எப்படிப் பெறுவது என்ற ஒரே வழிதான். அதை நாம் புரிந்து கொண்டால் செய்ய ஆரம்பித்து விட வேண்டியதுதான்.
நேற்றைக்கு சொன்னது போல, எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று இருப்பதைப் போல எவ்வளவு தேவைக்கும் பணம் இருக்க வேண்டும். நியாயப்படுத்திக் கொண்டு பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஆக வேண்டும். அதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அடுத்தவர்களைச் சுரண்டி நாம் அதைச் செய்ய வேண்டாம். நமது திறமையினால் அதைச் சாதிப்போம்.
நேற்றைக்கு திருப்பெரும்புதூரில். மாலையில் வீட்டுக்கு வந்து சின்னக் குழந்தைகள் எல்லாம் விளையாடி விட்டுப் போன பிறகு காம்ப்ளான் கலக்கிக் குடித்து விட்டுப் படுத்தேன்.
இன்று மதியம் சுந்தரை சாப்பிட அழைத்து சோறும், சாம்பாரும், வெண்டைக்காய் பொரியலும், கத்தரிக்காய் கறியும், தொடர்ந்து ரசமும், அதைத் தொடர்ந்து மோருமாக நிறையவே சாப்பிட்டுக் கொண்டேன். மாலையில் விருந்துக்குப் போகலாம் என்று வந்து அழைத்தார். அதற்கு முன்பே எல்லாரும் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
மணி பதினொன்றரை ஆகி விட்டது. உட்கார்ந்திருக்கும் இடம் வசதியாகத்தான் இருக்கிறது. மின்விசிறி எட்டாத தூரம். கொசு கடிக்கிறது. மேசை சாப்பாட்டு மேசை. இந்தப் பொருட்களை அனுப்பி வைத்த பிறகுதான் எனக்கு உலகாதய நோக்கு அதிகமாகியிருக்கிறது. அப்படியும் சொல்லி விட முடியாது. நான்கைந்து மாதங்களாக அந்த உறைப்பு வந்திருக்கலாம்.
போட்டியாளர்களிடம் போய் விடுவேன் என்று மிரட்டுவதையும் ஆரம்பித்திருக்கிறார். பார்க்கலாம். போகிறார்கள் என்றால் போய்க் கொள்ளட்டும்.
சிலவற்றை வார்த்தையில் வடிக்காமல் விட்டு விடுவது நல்லது. மனம் பொல்லாதது, ஈறைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடும். கவனமாக இருக்க வேண்டும். இன்னும் ஊர் அடங்கவில்லை. வெளியில் அளிக்கதவு திறந்து மூடும் ஓசை. மேல் வீட்டில் இரண்டு பக்கமும் அறைக் குளிரூட்டியை இயக்கி விட்டிருப்பார்கள். ஒரு அறைக்கு மட்டும் அதைப் பொருத்தி ஒரு சிலர் மட்டும் அதற்குள் அடைந்து கொள்வது நாகரீகக் குறைச்சலாகப் பட்டது எனக்கு. அறைக்குள் ஏசி போட்டுக் கொண்டு போய் உட்கார்ந்திருப்பார்கள். குளிர்ச்சி வெளியில் போய் விடக் கூடாது என்று கதவு அடைக்கப்பட்டு விடும்.
நேற்றைக்கு வாசற்கதவை அடைத்து விட்டாள். உடனேயே அவசரமாகப் போய் திறந்து விட்டாள். அம்மா கூப்பிட்டால் கேட்க வேண்டுமல்லவா?
அடுத்த குடியிருப்பில் இரவு பாதுகாவலர் விசில் ஊதியபடியே போகிறார். நம்ம குடியிருப்பு பாதுகாவலர் ஒரு கம்பைத் தட்டியபடி நடந்து கொண்டிருப்பார்.
நாயும் பூனையும் போல அடித்துக் கொண்டு அதன் பிறகு மாலை உணவுக்கு போவதற்கு இரண்டு பேரும் சேர்ந்து வந்து விட்டார்கள். முழுக்க முழுக்க வியாபர புத்தி. அதுதான் எனக்கு நிரடிக் கொண்டே இருந்தது. ஒன்றைப் போட்டால் எனக்கு இரண்டு வந்து விடாதா என்று பார்க்கும் குணம். நான் என்னதான் வியாபார நுணுக்கங்கள் கற்றாலும் என் சுயம் அழிந்து போகமல்தான் இருக்கும். அதற்குள் அவர்கள் வந்து சேரத்தான் வேண்டும்.
காலையில் 4 மணிக்கு எழுந்து கொண்டு விட வேண்டும். 4.20 வரை காலைக்கடன்கள். 4.20 முதல் 5.20 வரை எழுத்து. 5.20 முதல் 6 மணி வரை வீடு தூத்து துடைத்தல். 6 மணி முதல் ஆறரை வரை குளித்து தயாராதல். ஆறரைக்கு நாளிதழை எடுத்துக் கொண்டு பேருந்தைப் பிடிக்கப் போக வேண்டும். அலுவலகத்துக்குப் போனபிறகு 1 மணி நேரம் வேலை. 9.20க்கு பூந்தமல்லியிலிருந்து கிளம்பும் தண்டலம், பேரம்பாக்கம் பேருந்தைப் பிடித்தால் போதும். அலுவலகத்திலிருந்து எட்டரைக்குக் கிளம்பலாம்.

சுயமுன்னேற்றம்,
நிறுவனம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)