நாளை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாச்சு. உணவு இடைவேளை வரை அலுவலகத்தில், மிஞ்சிய வேலைகள், தொலைபேசி உரையாடல்கள், திட்டமிடுதல். சந்திப்புகள். இரண்டு மணி வாக்கில் புறப்பட்டு வழியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தொடர்ந்து பெரியமேட்டில் மூன்று இடங்கள் சந்திப்புகளை முடித்து விட்டு அலுவலகம் திரும்பி வர நேரமாகி விட்டால் அப்படியே ரயிலேறப் போய் விடலாம்.
திட்டமிட்டுச் செயல்பட்டால் எதை வேண்டும் என்றாலும் சாதித்துக் காட்டலாம்.
இடுகை ஏதும் இல்லாவிட்டால் 0-10க்குள் இருக்கும் எண்ணிக்கை, ஏதாவது இடுகை போட்டால் தமிழ் மணம் மூலமாக 20-30க்குள் இருக்கும் எண்ணிக்கை. புதிய இடுகைகள் இல்லாமலேயே நேற்றைய நாளில் 407 காட்டுகிறது. 184 முதல் வருகையாளர்கள். வந்தவர்களில் ஓரிருவர் மேலே போட்டு வைத்திருக்கும் பொருளாதாரத் தொகுப்பையும் தோல் துறை தொகுப்பையும் புகுந்து மேய பழைய இடுகைகளுக்கும் வாழ்வு கிடைக்கிறது. இதுதான் ஊடகங்களின் சக்தி போலிருக்கிறது.
முதலிலேயே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் தொகுப்புகளைப் போட்டு வைத்திருக்கலாம். பட்டறை நடக்கும் போது வந்து பார்த்துச் சென்ற விகடன் நிருபர் ஒரே மூச்சாக பல வலைப் பதிவுகளைப் பற்றி எழுதி வைத்து விட்டு வாரம் ஒன்றாக வெளியிடுகிறாரோ என்று தோன்றியது.
பரவலாகப் படிக்கப் படாத ஆனால் பெரிதும் மதிக்கப்படும் பத்திரிகை ஒன்றின் தீபாவளி மலருக்கு இணையத்தில் தமிழ் பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார் நண்பர். நாள் தாமதம் செய்து மின்னஞ்சலில் அனுப்பினேன். ஒன்று மாற்றங்கள் எதுவும் தேவைப் படாத உயர் தரமாக இருந்திருக்க வேண்டும். அல்லது தேறவே செய்யாது என்று குப்பையில் போட்டு விடும்படியாக இருந்திருக்க வேண்டும். படித்த பிறகு என்ன மாறுதல்கள் செய்யலாம், எப்படி மேம்படுத்தலாம் என்று விவாதிக்கலாம் என்று சொன்ன நண்பரிடமிருந்து மேல் தகவலே இல்லை. தொலைபேசி கேட்க வேண்டும்.
ரம்சான் மாதத்தை ஒட்டி ராணிப்பேட்டை நிறுவனங்களில் சம்பளமும் ஆண்டு ஊக்கத் தொகையும் வழங்கினார்களாம். அடுத்த நான்கு நாட்கள் வங்கி விடுமுறையாகி விட நேற்றே கணக்குகளில் பணத்தை மாற்றி விடும் தேவை. மாலையில் போனால் கொண்டு போன ஆவணத்தில் குளறுபடி என்று வேலை நடக்கவில்லையாம். போய் வந்தவர், கடுப்போடு வீட்டுக்குக் கிளம்பினார். என்னையும் பேருந்து நிறுத்தத்தில் விட்டு விடுவதாக வண்டியில் ஏற்றிக் கொண்டார்.
புறவழிச் சாலையில் விரைவுப் பேருந்துகளையும் தோற்கடிக்கும் ஆத்திரத்தோடு பறந்தார். மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு விசி மோட்டூர் அருகில் இறக்கி விட்டு விட்டுத் திரும்புமாறு சொன்னதைக் கேட்காமல் வாலாஜா நோக்கித் தொடர்ந்தார். அந்த சாலையிலும் தனியார் பேருந்துகளுடம் போட்டி போடும் வேகம். எதிரில் வரும் விளக்கொளிகளை அலட்சியம் செய்து குறுகலான இடைவெளிகளில் புகுந்து முந்திப் போனார். இது இரண்டு சக்கர வண்டி, எதிரில் வரும் வாகனம் மோதினாலும் சேதம் அவர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கும். இந்த வண்டியில் ஓட்டும் அவர் தலைக்கவசம் போட்டிருந்தார். எனக்குத்தான் ஆகக்கூடி கலக்கம்.
நல்ல வேளையாக பத்திரமாக வாலாஜா கொண்டு சேர்த்து விட்டார். அப்படியே விமல் வெதுப்பகக் கடையில் ஒரு தேநீர் கேக்கு, பக்கோடா, இன்னொரு கொறிக்கும் பண்டம் வாங்கி தேநீரும் வாங்கினார். அவருக்குப் பகல் முழுவதும் நோன்பிருந்த வாட்டம். நான் மதியம் சிறப்பு சாப்பாடு என்று ஒரு பிடி பிடித்திருந்தேன். அதற்கெல்லாம் இதமாக இந்த தின்பண்டங்கள் உதவின.
போரூரில் இறங்கி நேரடியாக வீடு போய்ச் சேர்ந்து விட்டேன். அலுவலகம் போனால், கணினியைத் திறந்தால் குறைந்தது இரண்டு மணி நேரம் ஓடி, பன்னிரண்டு மணிக்கு அருகில்தான் தூங்க முடியும். அப்படித் தூங்கினால், காலையில் ஆறரைக்கு முன்பு எழுந்திருக்க முடியாது என்று சங்கிலித் தொடராக எல்லாம் குலைந்து விடும்.
பதினோரு மணிக்கு முன்பு படுத்துத் தூங்கியும் விட்டேன். மயக்கமூட்டும் குட்நைட் கொசு விரட்டும் திரவ ஆவி அறையில் நிரம்பியிருக்க, எழுந்திருக்கும் போது தெளிவான உற்சாகம் இருப்பதில்லை. ஏதோ மந்தமாக இருக்கிறது. மூன்றரை, நான்கரை எல்லாம் விட்டு விட்டு ஐந்தேகாலுக்கு எழுந்து விட்டேன்.
புத்தகம் படிக்கத் தடை. நாளிதழ்களுக்கு சின்ன விலக்கு. அதுவும் கழிவறையிலும், சாப்பிடும் போதும் படிப்பதை விட்டு விட வேண்டும் என்று தீர்மானம். நமக்கே நியாயமாகப் படாத பழக்கங்கள். 'தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது, தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணும்.' தெரிந்தே செய்யும் தப்புகளை நிறுத்தி விட வேண்டும்.
அந்த வகையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் பல தப்புகள் மறைந்திருக்கின்றன. மீராபென் காந்திக்கு எழுதும் கடிதத்தல் விட்டுக் கொடுப்பதற்கு குறைவான செல்வங்கள்தானே இருக்கின்றன என்று குறைப் பட்டுக் கொள்கிறார். பெரிய பெரிய தப்புக்களை விட்டு விடும் போது சுமை இறங்கிய ஆசுவாசம். தொடரும் காலங்களில் திருத்திக் கொள்ளும் தப்புகளின் தீவிரம் குறைந்து கொண்டே போகும். ஆனால் அதற்கு ஒரு முடிவே இருக்க முடியாது. மனிதனாகப் பிறந்த யாருக்கும் ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள், தேவைகள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஒரு நாளைக்கு மூன்று முறை நல்ல பசிக்கும் பேறு கிடைப்பது கூட பலருக்கு அரிதாக இருக்கிறது. தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி எடுக்கும். தேடி ஓட வேண்டும், மேலே மேலே சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், பசியை நெரித்துக் கொண்டிருந்தால் மந்தம்தான் மிஞ்சும்.
வியாழக்கிழமை திநகரில் இருக்கும் அடுக்கு மாடி கட்டிடத்துக்குள் போகும் போது மின் ஏணியில் ஏறிப் போக கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள். குடிப் பழக்கத்தினாலோ அல்லது வேறு ஏதாவது குறைபாட்டினாலோ தெரியவில்லை உடல் உழைப்பாளிகளில் சிலர், எலும்புகள் துருத்திக் கொண்டு கூனி நடக்கும் நிலைக்கு சின்ன வயதிலேயே வந்து விடுகிறார்கள்.
அக்டோபர் 2க்கு மதுக் கடைகளை மூடி விடுவார்கள் என்றோ தெரியவில்லை, ஆற்காடு சாலையில் ஒரு கடையின் முன்பு கூட்டம் பொங்கி வழிந்தது. ஒரு வேளை திங்கள் கிழமை வாங்கி வைக்க முடியா விட்டால் செவ்வாய்க் கிழமைக்கு என்ன செய்வது என்ற தவிப்பாக இருக்கலாம்.
ஆமாம், ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறையா அன்றும் சேவை உண்டா? உழைப்பவர்களை, வறியவர்களைச் சுரண்டும் மிகப்பெரிய கொடுமை இந்த மது விற்பனை. நம்முடைய வரிப் பணத்தில் இதை எல்லாம் செய்கிறார்கள் என்று ஆத்திரப்படுபவர்கள், இது போன்று விளிம்பு நிலையில் இருக்கும் குடும்பங்களிலிருந்து அரசு தட்டிப் பறிக்கும் பணம் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை.
சீனாவில் இது போல கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. குடிப்பது என்பது பொதுவாக எல்லாத் தரப்பிலும் இருக்கிறது. தொழில் முறை விருந்துகள், நண்பர்களின் சந்திப்பு என்று மாலை நேரங்களில் பீர், அல்லது சீன அரிசி சாராயத்தைக் குடித்துத் தீர்க்கிறார்கள். அதைத் தயாரித்து விற்பது தனி நிறுவனங்கள்தான் என்று நினைக்கிறேன். அந்த நிறுவனங்களும் ஏதோ அரசைச் சார்ந்தவை என்பது வேறு கதை.
மனித நாகரீகம் வளர ஆரம்பித்ததிலிருந்த எந்த வகையான பொருளாதார அரசியல் அமைப்பாக இருந்தாலும் மது போதை ஒரு முக்கிய நுகர்வுப் பொருளாக இருந்து வருகிறது. தனிப் பட்ட முறையில் அதன் காரணம் புரியவில்லை. பீர், அல்லது விஸ்கி குடித்து அல்லது புகை பிடித்து வரும் போதை அவ்வளவு அருமையாகப் படவில்லை.
முழு மதுவிலக்கு என்பது நடத்த முடியாத ஒன்று என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்களின் குடிப் பழக்கத்திலிருந்து வருமானம் பார்க்கும் அரசாங்கம் மக்களுக்காக சட்டமியற்றலை வழி நடத்தி, நிர்வாகம் செய்யும் உரிமையை இழந்து விட்டது. வேண்டியவர்கள் குடிக்கட்டும். அது பனங்கள்ளாகவோ, பட்டைச் சாராயமாகவோ, மேல்நாட்டு மது வகையாகவோ இருக்கட்டும். தரக்கட்டுப்பாடு மட்டும் அரசு நிறுவனம் ஒன்று கண்காணிக்கட்டும்.
ஆனால் கள்ளச்சாராயத்தின் ஆட்சி பெருகி விடும் அபாயம் இருக்கிறது. சாராயக் கடைகள் திறந்திருந்த காலங்களில் கள்ளச் சாராயத்தில் மெத்தனால் குடித்து உயிர் பலிகள் அடிக்கடி செய்திகளில் வரும். இந்த பாக்கெட் சாராயம், டாஸ்மாக் முறை வந்த பிறகு அத்தகைய சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. சாராயம் தயாரிக்கும் உரிமம் பெற்றவர்கள் சில நிறுவனங்கள் மட்டும்தான் என்று இருந்தால், திருட்டுத் தனமாக சாராயம் காய்ச்சுபவர்களை கண்காணிக்கவும், தடுக்கவும் எளிதாக இருக்கும் போலிருக்கிறது.
பொருள் செய்ய விரும்பு பதிவில் பத்து நாளைக்கு ஒரு முறையாவது ஒரு புது இடுகை போடுங்கள் என்று நண்பர் தொலைபேசி அறிவுறுத்துகிறார். எழுத்து பதிவில் எழுதுவதைப் போல இயல்பாக பெரிய பெரிய சொற்களைத் தேடாமல் எழுதினால் நன்றாக இருக்கும் என்பது அவரது கருத்து.
உண்மைதான். இந்த நாட்குறிப்புகளை எழுதும் போது மனதில் வருவதை எழுதிக் கொண்டே போக முடிகிறது. எந்த வடிவத்துக்குள்ளும் அடக்க வேண்டியதில்லை. காலையில் கஞ்சி குடித்ததிலிருந்து ஆரம்பித்து, ஊரைச் சுற்றிச் சுற்றி வந்து அண்டம் உருவான கதையைப் பற்றி எழுதி முடித்து விடலாம். மற்ற பதிவுகளுக்குக் கொஞ்சம் திட்டமிடல், எழுதியதைத் திரும்பிச் சரிபார்த்தல், விபரங்களை மறு உறுதிப்படுத்துதல் தேவைப்படுகிறது. அவ்வளவு இருந்தும் என்னுடைய பதிவுகளில் வெளியில் உறுதிப் படுத்தப்பட்ட தகவல்கள் குறைவுதான். ஆராய்ச்சி மாணவனாக நிச்சயமாக மாற முடியாது.
பத்ரி எழுதுவதைப் போல நடப்புச் செய்திகளை ஆராய்ந்து முழு விபரங்களுடன் கொடுப்பது எல்லோருக்கும் வராது. முன்பெல்லாம் ஆங்கிலத்தில் இந்தியா டுடே இதழை வாங்கினால் எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றிய எல்லா விபரங்களையும் பல கோணங்களில் கொடுத்திருப்பார்கள். இலங்கை பிரச்சனை குறித்து எழுத ஆரம்பித்தால், அது வரை அதைப் பற்றிக் கேள்விப் பட்டிராத வாசகர் கூட பல தரப்புகளையும் புரிந்து கொள்ளும் படி கொடுத்திருப்பார்கள்.
போகப் போக அது நீர்த்துப் போய் விட்டது. இந்து நாளிதழில் ஞாயிறு மலரில் அந்த வாரம் நடந்த தேசிய, உலக, மாநில செய்திகளில் முக்கியமானவற்றை எடுத்துக் கொண்டு 4 முதல் ஆறு பக்கங்களில் அவற்றை அலசும் அரைக் கால்பக்க கட்டுரைகள் போடுவார்கள். அதுவும் பல காலமாக நின்று விட்டது. எக்ஸ்பிரஸ் ஞாயிறு இணைப்பில் அது போன்று சில கட்டுரைகள் வருகின்றன.
தமிழ் நாளிதழ்களில் தினத்தந்தியின் தரத்துக்கு நிகரில்லைதான். அடர்த்தி குறைவாக இருப்பதால் அதிகம் படிக்கக் கூடியவர்களுக்கு பத்து இருபது நிமிடங்களுக்கு மேல் சரக்கு இருக்காது என்ற குறையிருந்தாலும், எந்த செய்தியையும் படிப்பவரை மதித்து வாசகருடன் ஒரே நிலையில் உரையாடும் தொனியில் எழுதுவார்கள். உலகச் செய்திகள், அறிவியல், வணிகச் செய்திகள் என்று தினத்தந்தியை முழுவதும் தினசரி படிப்பவரின் பொது அறிவு பரவலாக இருக்கும். ஆழம் வேண்டுமானால் தேடிப் படித்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் தினமலர் பீடத்தின் மீது ஏறி வாசகரை நோக்கி அறிவுரை செய்யும், வாசகர் கூட்டத்தை எப்படிக் கவருவது என்று வாசகர்களை தாழ்த்தி மதிப்பிட்டு எழுதப்படும் தொனி. தலைப்புகள், செய்தித் தேர்வு, கட்டுரைகள், வாரமலர் கேள்வி பதில்கள் எல்லாமே படிப்பவரை சிறுமைப் படுத்துவதாகவும், அந்த நாளிதழின் தரப்பு அதிபுத்திசாலியாகவும் காட்டுவதாக இருக்கும். பல செய்திகளைக் கண்டு கொள்ளாமலேயே விட்டு விடுவார்கள். விளையாட்டுச் செய்திகளுக்கு என்று வரையறுத்த இடம் கிடையாது. உலகச் செய்திகளும் அன்றாடம் ஆசிரியரின் மனப்போக்கில் வந்தால் உண்டு.
உள்ளூர் செய்திகள், இறப்பு விளம்பரங்கள், பாலம் திறப்பு போன்றவற்றில் கில்லாடிகள் அவர்கள். யார் யார் போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்து வைத்துக் கொள்ள தினமலர் படிப்பார் அம்மா. சமூக உறவுகளில் அதுவும் தேவைதானே. சமீபத்தில் யாரோ இறந்து விட்டார்கள் என்று ஒரு பொது நண்பர் சொல்ல, 'பேப்பரில் விளம்பரம் கூட கொடுக்கலையே' என்று வியந்து கொண்டார்.
டார்ஜான் என்று ஒரு படக்கதை வந்து கொண்டிருக்கும். அது கூட தொடராமல் நின்று போனது. வார மலரின் நோக்கம் என்ன, எப்படி இருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு குடும்ப உறுப்பினர் நடத்துவதாகக் கேள்விப் பட்டேன்.
சனி, செப்டம்பர் 29, 2007
குரங்கு மனம்
காலையில் அரை மணி நேரம் முன்னதாக ஆறரை மணிக்குக் கிளம்பி மாலையில் அரை மணி நேரம் தாமதமாக ஒன்பதரைக்கு வந்து சேர்ந்து விட்டேன். வண்டியில் நேராக போரூர் போய் நிறுத்தத்தில் விட்டு விட்டு ஏலகிரி மலை என்று பெயர் போட்டுக் கொண்டு வந்த 307 தடப் பேருந்தில் வேகமாக வாலாஜா.
காலையும் சரி, மாலையும் சரி, சொதப்பலான வேலைகள். ஆறு மணிக்குப் புறப்பட்டு ஒரு தேநீர் குடித்து விட்டு இன்னொரு வேகமாக ஓடிய பேருந்தைப் பிடித்து சரியாக ஒன்பது மணிக்கு போரூர். நல்ல மழை பெய்திருக்கிறது. வழியிலும் நல்ல மழையிலும் வேகத்தைக் குறைக்காமல் ஓட்டி வந்து விட்டார் ஓட்டுனர்.

- ஒரு கைக்குழந்தை பக்கத்து இருக்கையிலிருந்து எட்டி எட்டிக் கையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பாவிடமிருந்த அம்மாவிடம் தாவி ஓரிரு அடி பட்டுக் கொண்டு, புண் பட்ட முகத்தோடு அழ ஆரம்பித்தான். அடி படும் குழந்தைகளைப் பார்த்தால் கையாலாகத்தனம் பொங்கிக் கொண்டு வரும். கோழி மிதித்து குஞ்சு சாகாதுதான், ஆனால் மனதளவில் எவ்வளவு நெருக்கடி அடிபடும் குழந்தைக்கு.
- பத்து ரூபாய்க்கு விகடன் வாங்கி ஒரே பிரிப்பில் 120ம் பக்கத்தில் போய் விட்டேன். நல்ல தாங்கி எழுதியிருந்தார்கள். நாள் முழுவதும் பலர் சுட்டியைப் போட்டு பொருள் செய்ய விரும்பு வலைப் பதிவுக்கு வந்திருந்த எண்ணிக்கை தெரிந்தன. சுட்டியில் www என்று சேர்த்திருந்தது விகடன் பார்த்து வருபவர்களின் அடையாளத்தைத் தெரிவித்தது. பெயரில் சந்தி எழுத்து தேவை இல்லை என்று பள்ளியில் படிக்கும் போது யாரோ திருத்தியதிலிருந்து சிவக்குமாரை விட்டு விட்டு சிவகுமார் ஆகவே இருந்தேன். இங்கு க் சேர்த்து கொண்டிருந்தார்கள்.
- பேருந்தில் போகும் போது பாலபாரதி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். வாலாஜாவில் இறங்கியதும் அருள்குமார். மதியம் வாக்கில் உண்மைத்தமிழன். வீட்டுக்குத் தொலைபேசி அம்மா அப்பாவுக்குத் தகவல் சொன்னேன். காலையில் விகடன் வந்து விட்டது, இன்னும் திறந்து பார்க்கவில்லை என்று அம்மா சொன்னார்கள். அப்படிப் புரட்டியிருந்தாலும் கவனித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். அம்மா போன்ற பெரும்பாலானோர் கவனிக்காமலேயே விட்டு விடும் புதிய பகுதி.
- ஈழத்தமிழர் பற்றிய இரண்டு கட்டுரைகள். 'சின்ன மாமியே' பாடலைப் பாடியவர் குறித்த கட்டுரை, கவிஞர் முத்துலிங்கம் எழுதிய மலர்விழி என்ற அம்மாவைப் பற்றி அவரது மகளைப் பற்றிய கட்டுரை. படிக்கும் போது கலக்கி விட்டன இரண்டுமே. மாலையில் வரும் போது புரட்டிப் பார்த்தால் விகடனில் திரைப்படத்தின் ஆதிக்கம் குறைந்திருந்தது. நடைபாதை வாசிகள், இரட்டைத் தம்ளர் குறித்த கட்டுரை, சரசுவதி எழுதும் கிராமீயத் தொடர். வயதாகி விட்டாலும் பெண்களை அள் விகுதியுடனேயே குறிக்கும் பழம்போக்கை விட்டு அர் விகுதியுடன் அழகாக எழுதும் சரசுவதியின் எழுத்து இதமானது.
- நாளிதழில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் வழக்கம் போல ஆட்டத் தொடருக்கு முந்தைய வாளைக் கலக்கும் பேட்டியைக் கொடுத்திருந்தார்கள். ஸ்ரீசாந்தை ஒரு கை பார்த்து விடலாம் என்று கருவிக் கொண்டிருக்கிறார்களான்.
- ஆசிப் மீரான் எழுதிய மலையாளிகள் இல்லாத இடமே கிடையாது என்று தெரியாமல் கடைசிப் பந்தை அடித்து ஆட்டமிழந்தார் என்ற நகைச்சுவை ஆங்கில மின்னஞ்சல் நகைச்சுவையாக மாறி உலாவ ஆரம்பித்து விட்டது. அவருக்கே போய்ச் சேர்ந்து விடும்.அடுத்த பதிவில் இன்னொரு தாக்கல். பில்கேட்ஸ் நடத்தும் நேர்முகத்தில் கலந்து கொண்டிருந்த குட்டப்பனைக் குறித்த நகைச்சுவை.
- நாளை சனிக்கிழமையிலிருந்தே கதவடைப்பு ஆரம்பித்து விட்டது. ஞாயிறு போய், திங்கள் அன்று பொது வேலை நிறுத்தம், செவ்வாய்க் கிழமை தேசிய விடுமுறை என்று நான்கு நாள் நீண்ட விடுமுறை. மாதக் கடைசிக்கு என்று நெருக்கிக் கொண்டிருந்த வேலைகள் எல்லாம் தள்ளிப் போய் விடும். திரும்ப வேலை ஆரம்பிக்கும் போது அடுத்த மாதம் பிறந்திருக்கும்.
இரண்டாவது முறையாக இப்படி ஒரு பொது வேலை நிறுத்தம் நடத்துகிறார் கருணாநிதி என்று நினைவு. இவர்களையும் சுமந்து கொண்டு தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருப்பது கடவுள் செய்யும் அற்புதம்தான். - சொரணை இல்லாத கட்சி பாரதீய ஜனதா கட்சி. உத்தர பிரதேசத்தில் மாயாவதி, கர்நாடகாவில் இப்போது தேவகவுடா என்று முதல் வாய்ப்பை விட்டுக் கொடுத்து விட்டு தம் முறை வரும் போது ஏமாளியாக நிற்பது. நண்பர்களே இல்லாத சூழலில் எந்த நிபந்தனையுடனாவது எட்டி அவர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு அவர்கள் ஓடி விடும் போது அடுத்த தோளுக்குப் போவது என்று பார்க்க வேடிக்கையான வேதனையாக இருக்கிறது. காஷ்மீரில் அதே போன்ற ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காங்கிரசு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் ஏறிக் கொண்டு விட்டது இவர்களுக்குச் செய்யத் தெரியவில்லை.
'நம்மை வாழ விடாதவர் நம் வாசலில் வந்து வணங்கிட வைத்து விடும். செய்த தருமம் தலை காக்கும்' என்ற பாடல் வரும் படத்தைப் பார்த்த நினைவு இருக்கிறது. ஏதோ தொடர்பில்லாமல் வலிந்து புகுத்தப்பட்ட காட்சியாக தோன்றும். அந்தப் பாடலின் தரம் அதனால் எந்த வகையிலும் குறைந்து விடவில்லைதான்.
அதற்கு அடிப்படைத் தேவை தருமம். தருமம் என்றால் என்ன? வாய்மை எனப்படுவது யாதெனின் என்று வள்ளுவர் வகுத்தது போல தருமம் என்று வரையறுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. - ஒரு நிறுவனத்தை நடத்தும் போது செய்யக் கூடாதவற்றுள் தலையாயது வேலை செய்தவர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சுணக்கம் தாமதம் செய்வது. ஏற்கனவே ஒரு மாதம் தமது உழைப்பைக் கொடுத்து மாதம் முடிந்த பிறகு பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த உழைப்பை சரியான முறையில் பயன்படுத்தி பணமாக மாற்றித் தருதல்தான் மேலாளரின் அடிப்படை பொறுப்பு. அதில் தவறி விட்டால் அவரின் தார்மீக உரிமையை இழந்து விடுகிறார்.
சம்பளம் கொடுக்கத் தவறினால் தாமதம் ஆனால் எல்லோரையும் கூட்டிச் சொல்லி விட வேண்டும் என்று ஒருவர் சொன்ன போது வேடிக்கையாக இருந்தது. அது உறைக்க கொஞ்ச நாள் ஆனது. இப்போதெல்லாம் மாதக் கடைசி வாரம் வந்தாலே பரபரவென்று ஆரம்பித்து விடுகிறது. தலையை அடகு வைத்தாவது, வர வேண்டிய பணத்தைத் துரத்தி சம்பளத்தை 5 தேதிக்குள் வழங்கி விட வேண்டும் என்ற உறுதி.
பணம் வருவதை தொடர்ச்சியாக பராமரித்தல் நிறுவன நிர்வாகத்தில் தலையாய பணி. வர வேண்டிய பணம் நிறைய இருந்தும் கையில் காசு இல்லை என்றார் ஊழியர்களுக்கு, பொருள், சேவை வழங்குபவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியா விட்டால் கதவை இழுத்து மூடி விட வேண்டியதுதான். - பொருள் செய்ய விரும்பு பதிவில் மென்பொருள் துறை பற்றிய இடுகைகளையும் தொகுத்து ஒரு பக்கமாகப் போட வேண்டும். பொருளாதாரம் குறித்த, தோல் துறை குறித்த தொகுப்புப் பக்கங்கள் மூலம் உலாவுபவர்களே அதிகம். பிளாக்கர் அளிக்கும் வடிவமைப்பின் மூலமாக பழைய இடுகைளைப் படிப்பது எல்லோருக்கும் வசதியாக இருப்பதில்லை.
- வளர்தொழிலில் இருந்து தொலைபேசி இணைய முகவரி கேட்டு வாங்கிக் கொண்டார்கள். கைவசம் இருந்த பகுதிகள் தீர்ந்து விட்டன. இன்னும் எழுதித் தருமாறு கேட்டார். கிழக்குப் பதிப்பகத்தில் இப்போதைக்கு எழுதும் ஒழுக்கம் வருவது போலப் படவில்லை என்று சொல்லி விட்டிருந்தேன். வளர்தொழிலின் தூண்டலில் எழுதித்தான் விடுகிறேன்.
- எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் பதிவில் கேள்வி பதில், பொது அறிவு, அறிவியல், தகவல் தொழில் நுட்பக் குறிப்புகள் குறித்து எழுத வேண்டும். மென்பொருள் துறைக்கு அறிமுகமே இல்லாதவர்கள் கால் நனைக்க htmlலிருந்து ஆரம்பிக்கலாம் என்று செந்தழல் ரவியின் வழியில் எழுத ஆரம்பிக்கலாம்.
- புரட்டிப் போட்டப் படைப்புகளில் சேர்க்க அலி டேவிசின் வலைப்பதிவுகளின் சுட்டியைச் சேமித்து வைத்திருக்கிறேன். ஒரு உடல் நிலை எச்சரிக்கையுடன் வெளியிடப்பட வேண்டிய சுட்டி. பொதுவாக பொதுவில் விவாதிக்கப்படாத ஒரு பொருளைப் பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லும், முகம் சுளிக்காமல், தீர்ப்பு சொல்லாமல் போகும் அவரது எழுத்துக்கள் படித்த காலகட்டத்தில் புரட்டித்தான் போட்டன. அப்போதே ஐந்து மில்லியன் பேர் படித்திருக்கிறார்கள் என்று போட்டிருந்தார்கள் இப்போதும் அதே எண்ணிக்கை.
- ஸ்லாஷ் டாட்டின் மூலம் கிடைத்து போய்ப் பார்த்த சுட்டி. இன்னொரு சுட்டி goats.ex என்ற பக்கம். யாரோ வேலை மெனக்கெட்டு உருவாக்கி வைத்திருந்த புகைப்படம் ஒரு பெரிய கருப்பு நகைச்சுவையாக உலாவி வந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் பொறுப்பானவர்கள் அதை நீக்கி விட்டார்கள். அதே படம் வேறு இடங்களில் கிடைக்கலாம்.
இணையத்தின் அற்புதம், அலைபாயும் மனம் இருந்தால் கணத்தில் மர உச்சியிலிருந்து ஆற்றுக்குள் குதித்து விடலாம். ஏதாவது ஒரு விவாதத்தளத்தில் ஒருவரது கையொப்பப் பகுதியில் ஒரு சுட்டி இருந்தால் தொடர்பே இல்லாத அந்தப் பகுதிக்குள் போய் விடலாம். கொட்டிக் கிடக்கும் வளங்களில் எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம். நேரத்தைக் கொல்வதற்கு ஏதுவான ஊடகம். - நாகர்கோவிலிலிருந்து உங்கள் நண்பன் தொலைபேசி ஆனந்த விகடன் வெளிச்சத்துக்கு வாழ்த்து சொன்னார். நான் ஊருக்குப் போகும் நேரத்தில் அவரும் ஊருக்குப் போய் விடுகிறார். அடுத்த மாதம் சென்னை வருவதாகத் திட்டம் இருக்கிறதாம். அறியாமை உடைதலின் வியப்பும் நன்றியும் விபினுக்குப் போய்ச் சேர்ந்தது.
- பத்தரைக்கு முடித்து விட்டு பதினோரு மணிக்குத் தூங்கி விட்டால் காலையில் நான்கு மணிக்கு எழுந்திருக்கப் பார்க்கலாம். நாலரை முதல் ஐந்தரை வரை எழுத்து. ஐந்தரையிலிருந்து ஆறரை வரை வேலைகளை முடித்து விட்டு ஏழு மணிக்கு அலுவலகம் போய் விடலாம். இன்று முடிக்காமல் விட்ட பணிகளை முடித்து கோப்புகளை அனுப்பி வைக்க வேண்டும். அதைத் தவிர மூன்று பேரைச் சந்திப்பதாக ஏற்பாடு. பின்னிரவில் புறப்படும் ரயிலில் மைசூர் வழியாக முதுமலை போகும் ஏற்பாடும் செய்திருக்கிறார்கள். திரும்பி வரும் போது 3ம் தேதி ஆகி விடும். பத்து பேர்தான் கடைசியில் தேறப் போகிறோம்.
தொலைபேசியில் சில பேரைத் துரத்த வேண்டும். - காலையில் பேருந்தில் சின்னத் தம்பி படம் போட்டிருந்தார்கள். நல்ல வேளையாக பூந்தமல்லி தாண்டியதும் அணைத்து விட்டார். திரும்பும் போது சிவாஜி தத்துவப் பாடல்கள் ஒலித்ததைத் தொடர்ந்து பிபிஸ்ரீனிவாஸ் பாடல்கள், கடைசியில் ரேடியோ ஒன் என்று ஒரு பெண் கதறிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி. எல்லோருமே மிர்ச்சி சுச்சி போல ஆக வேண்டும் என்று அவரையே நகல் செய்கிறார்கள். அருமையான பெண்.
- கல்லூரியில் படிக்கும் போது சுசித்ரா என்ற குட்டித் தோழி உண்டு. பக்கத்து வீட்டில் இருந்த நான்கு வயது பெண். மிக நெருங்கிய தோழி ஆகி விட்டாள். நான் வீட்டில் இருக்கும் போதெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவாள். பொறாமையும், பிடிவாதமும் அதிகம். வேறு யாராவது விளாயாடினால் கோபம் வந்து விடும். பெண் குழந்தைகளை வியக்கும் பார்வை அப்போதுதான் வந்தது. அக்கா, தங்கை எல்லாம் வேறுபாடு இல்லாமல் சக மனிதர்களாகத்தான் தோன்றினார்கள். இந்தப் பெண்தான் எவ்வளவு முதிர்ச்சியுடன் பெண்கள் வளர்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வைத்தது.
பொருளாதார முறைகள்
பாட்டுக் கேட்டுப் பழகி விட்டதில் இன்னும் சில பாடல்களை நகல் செய்து கொண்டேன். விஜய் பாடல்கள். போட்டி என்று வந்து விட்டால் விஜய்தான் என்று குமுதம் கட்டுரை பற்றி வெளியில் தொங்கல் விளம்பரம். நடிகர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதன் நியாயத்தைக் குறித்து பிரபு ராஜதுரை எழுதியிருந்தார்.
காலையில் கணினியைத் திறந்தால் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை சிவபாலன் பதிவில் போட்டிருந்தார். மாலையில் பார்த்தால், பொருள் செய்ய விரும்பு பதிவுகளை விகடன் வரவேற்பரை பகுதியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்று விபின் பின்னூட்டம் போட்டிருந்தார். சிவபாலனின் இடுகையுடன் ஒட்டிக் கொண்டே அதற்கு இணைப்புக் கொடுத்து நான் போட்ட இடுகையும் படிப்பவர்களை இழுத்துக் கொண்டிருந்தது.
அதனால் என்ன பலன் என்ற சர்வேசனின் கேள்விக்கு தெளிவாக விளக்கமாகப் பின்னூட்டம் போட்டு விட்டார் ரவிசங்கர். தெளிவான ஆழமான கொள்கைப் பிடிப்பும் புரிதல்களும் நிரம்பிய ரவிசங்கரின் தாக்கம் பரவலாக இருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவில் ஆரம்பித்து பல இடங்களில் அவரது பங்களிப்பு மிகவும் ஆக்கபூர்வமாக இருந்து வருகிறது. வலைப்பதிவர் பட்டறையிலும் அவரது கொள்கை வழிகாட்டல்கள் பெரிதும் உதவியாக இருந்தன.
கொள்கைப் பிடிப்பில் தீவிரமாக இருக்கும் இன்னொருவர் அதியமான். அவருக்குத் தமிழில் எழுதச் சுணக்கம். அதனால் பல இடங்களில் ஆங்கிலக் கட்டுரைகள், தமிழில் ஏற்கனவே எழுதி வைத்திருப்பதை போட்டு விடுகிறார். அந்தந்த இடத்துக்குப் பொருத்தமாக தனது கருத்துக்களை தமிழில் கொடுத்தால் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்.
ஐகாரஸ் பிரகாஷ் நாடாளுமன்றத்தில் சாய்நாத்தின் பேச்சைக் குறித்து விளக்கமான பதிவு போட்டிருக்கிறார். 20/20ஐயும், பங்குக் குறியீட்டு எண் 17,000த்தையும் கொண்டாடும் அதே மும்பை இருக்கும் மகாராஷ்டிரத்தில், லக்மே பேஷன் திருவிழா நடக்கும் அதே மகாராஷ்டிரத்தில் 100 கிலோமீட்டர் தூரக் கிராமங்களில் விவசாயத் தற்கொலைகளும். 17 மணி நேர மின்தடையால் பள்ளித் தேர்ச்சி வாய்ப்பை இழக்கும் குழந்தைகளும் நிகழ்கின்றன. அதைப் பற்றி விசாரிக்க எழுத பத்திரிகைகளுக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை.
முதல் பக்கத்தில் கண்ணைக் கவரும் செய்தியை வெளியிட்டால்தான் விளம்பரதாரர்களைப் பிடிக்கலாம், வருமானம் பெருகும், லாபம் அதிகமாகும். லாபம் அதிகமாக்கப் பார்க்கும் சந்தைப் பொருளாதார முறை எல்லா இடங்களுக்கும் பொருந்துவதில்லை. என்னதான் வெறுப்பேற்றினாலும் பொதிகையிலும் தூர்தர்ஷனிலும்தான் சமூக அக்கறை நிகழ்ச்சிகள் வர வேண்டியிருக்கிறது.
நண்பர் ஒருவருக்குத் தெரிந்தவர் திருநெல்வேலியில் தொழில் நடத்தி வருகிறாராம். ஆர் எம் கே விஸ்வநாதனின் நிலத்தை பினாமி பெயரில் வைத்திருந்து பயன்படுத்திக் கொண்டிருந்தாராம். வாடகை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டிருந்தாராம். விசுவநாதன் இறந்த பிறகு நிலத்தை இழக்க விரும்பாத ஏதோ ஒரு வாரிசு, உடனடியாக இடத்தைக் காலி செய்து கொடுக்கும் படி மிரட்டுகிறார்களாம்.
ஓரிரு மாதங்கள் நேரம் கொடுங்கள் என்று கேட்டதற்கு ஆட்களை விட்டு மிரட்டி காவல் நிலையத்தில் குற்ற அறிக்கை பதிய வைத்து விட்டார்களாம். மிரட்டுபவர்களுக்கு அரசியல் கட்சி ஆதரவு இருக்கிறதாம். வைகோவின் கட்சி என்று சொல்கிறார். காவல் நிலையக் கண்காணிப்பாளரும் காவலர்களும் இவரது வீட்டுக்குத் தொழிற்சாலைக்குப் போய் மிரட்டியிருக்கிறார்கள். கைதாவதைத் தவிர்க்க அவர் ஊரை விட்டு வந்து விட்டாராம்.
மதுரை உயர் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் மனு போட்டு, பல இடங்களில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்களான். NDTVயிலிருந்தும் வந்தார்களாம். 'இந்த கும்பல் ஏதாவது அடாவடி செய்தால், அவர்கள் செய்தியாகக் காட்ட முன்வருவார்கள். அது வரை அது செய்தி இல்லையே'
பொதுவில், நேர்மையும் அடுத்தவர் குறித்த அக்கறையும் வளரா விட்டால் அரசு நடத்தும் நிறுவனமும் சரி, தனியார் நடத்தும் நிறுவனமும் சரி, சமூகத்துக்குப் பலனளிக்காமல் தீமையைத்தான் விளைப்பார்கள். அது வளர்ந்து விட்டால் எந்த பொருளாதார முறை என்பது விவாதிக்கப்பட வேண்டியதாக இல்லாமல் போய் விடலாம்.
சின்ன வயதில் பட்டப் பெயர் தத்துவஞானி. 'வந்துட்டான்யா தத்துவஞானி, உன் வாய மூடிக்கிட்டுச் சும்மா இரு' என்று என்னுடைய நீட்டல் முழக்கலை நிறுத்தி விடுவார்கள் தோழர்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவராக வவ்வால் அதையே அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.
200 வீடுகளாக ஆரம்பித்த புறநகர் குடியிருப்பில் குடிநீருக்காக ஒரு பெரிய பொதுக் கிணறு தோண்டி மோட்டர் மூலம் தொட்டியில் ஏற்றி குழாயில் விடுவார்கள். கடைக்கோடி வீடுகளுக்கும் வந்து சேரும் அழுத்தம் கொஞ்ச காலம்தான் இருந்தது. எல்லா வீடுகளும் கட்டி ஆட்கள் வந்து விட்ட பிறகு முதலில் இருப்பவர்கள் எடுத்தது போக இங்கு தண்ணீர் வருவது குறைய ஆரம்பித்தது.
கடைசி வீட்டுக் காரர்கள் சண்டை போட்டு தெருவில் தாழ் மட்டத்தில் ஒரு குழாய் அமைத்து வாங்கிக் கொண்டார்கள். பதினாறு வீடுகள் இருந்த அந்த பகுதியில் தண்ணீர்வரத்து முற்றிலும் நின்று போன பிறகு அந்த பொதுக் குழாய்க்குப் போய்த் தண்ணீர் பிடிக்க வரிசை போடுவோம். அதிகாலை நான்கு நான்கரைக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணிக்குத் தண்ணீர் நிற்கும் வரை மூன்று நான்கு குடங்கள் கிடைக்கும்.
மாலை நான்கு மணிக்குப் பிறகு ஏழு மணி வரை ஓரிரு குடங்கள் கிடைக்கும். குடத்தை வரிசையில் வைத்துக் கொண்டு காத்திருப்போம். குழாய்க்கு அருகில் இருக்கும் வீட்டின் கார் நுழைய வைத்திருந்த வாசலில் கருப்பு நிற பெயின்ட் அடித்த கதவு போட்டிருந்தார்கள். எல்லோரும் அதன் அருகில் உட்கார்ந்து கொண்டு அந்த கதவு முழுவதும் கிறுக்கி வைத்திருப்போம். பல படங்கள், வாசகங்கள் நிரம்பியிருக்கும்.
எடுத்துப் போகும் மூன்று நான்கு குடம் தண்ணீர் வீட்டுத் தேவைக்கு ஓரளவு கூடப் போதாது. இருந்தாலும் காலையிலும், மாலையிலும் விடுமுறை நாட்களிலும் ஒரு சமூகக் கூடம் போல கலகலப்பாக இருக்கும் அந்த இடம். பொறுக்க முடியாத நிலை வந்து விட்ட போது, அந்தக் குழாய் இருந்த இடத்துக்கு அருகிலேயே இருந்த தோப்பில் மரங்களுக்கு நீர் பாய்ச்ச இருந்த கிணற்றில் இருந்து இறைக்கும் தண்ணீரைப் பிடிக்க அனுமதித்தார் அந்த விளை சொந்தக்காரர். காலையில் அவர் வந்து மோட்டர் போடும் அரை மணி நேரத்தில் ஆளுக்கு ஏழெட்டு குடங்கள் பிடித்துக் கொண்டு விடுவோம்.
அது சின்னக் கிணறு. கொஞ்ச நாளில் தண்ணீர் பிடித்துக் கொண்டே அங்கேயே குளிக்கும் பழக்கமும் வந்து விட்டது. வீட்டுக்கு அருகிலேயே இருந்த பெரிய தோட்டத்தில் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தண்ணீர் பிடித்துக் கொள்ள அனுமதித்தார்கள். பெரிய கிணற்றில் இறைக்கப்பட்டு திபுதிபுவென்று தொட்டியில் பாயும் தண்ணீரை எடுத்து வந்து வீட்டுத் தொட்டியை நிரப்பிக் கொள்ளுவோம். மாதாக் கோவிலுக்குச் சொந்தமான அங்கிருந்துதான் பல மாதங்களாக தண்ணீர் தேவை நிறைவேறி வந்தது. இப்போது அந்த விளையை அழித்து மரங்களை வெட்டி விட்டு மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ நிறுவன ஊழியர் குடியிருப்பாக மாற்றி விட்டார்கள்.
அதை ஒட்டி, கடைக்கோடியில் ஒதுங்கியது என்று சோர்ந்திருந்த எங்கள் பகுதிக்கும் மதிப்பு ஏறி விட்டது. பொருட்கள் வாங்க ஒரு கடை. அருகிலேயே வந்து இறங்கிக் கொள்ள பகிர்வூர்தி சேவை என்று பல முன்னேற்றங்கள். நிலத்தின் மதிப்பும் எகிறி விட்டது என்று கேள்வி.
பள்ளி வயதில் வீட்டிலிருந்து ஏதாவது பொருள் வாங்க ஓரிரண்டு கிலோமீட்டர் போக வேண்டும். ராமன் புதூரில் இருக்கும் சிலுவை ஸ்டோர் அல்லது எதிரிலேயே இருக்கும் அதன் போட்டிக் கடையில் போய் வாங்கி வர வேண்டும். அண்ணனின் வாடிக்கை சிலுவை ஸ்டோர். அதற்கு எதிராகச் செய்ய வேண்டும் என்று நான் மற்ற கடைக்குப் போவேன்.
இந்தப் பக்கம் என்றால் இன்னும் ஒரு கிலோமீட்டர் போய் இருக்கும் சின்னதான லதா ஸ்டோர்ஸ். நியாய விலைக்கடைக்குப் போகவும் இரண்டு கிலோமீட்டருக்குக் குறையாமல் நடக்க வேண்டும்.
மாதாமாதம் என்றைக்கு மண்ணெண்ணெய் கொடுப்பார்கள், என்று சீனி கொடுப்பார்கள் என்பது மர்மமாகவே இருக்கும். கொடுக்கும் நாளில் போகா விட்டால் இல்லை என்று அனுப்பி விடுவார்கள். கொடுக்கும் நாளில் நீளமான வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். மண்ணெண்ணெய் அளப்பதிலேயே திறமையாக ஒரு லிட்டருக்கு 950 மிலி மட்டும் வரும்படி ஊற்றுவார்கள்.
சீனி வேண்டும் என்றால் ரவையும் வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பாமாயில் என்று ஒன்று கொடுக்க ஆரம்பித்தார்கள். கடையில் வாங்கும் சமையல் எண்ணையின் விலையில் பாதி விலை. அதற்கும் வாங்கும் போட்டி அதிகம். அதனுடன் சோப்பு வாங்கிக் கொள்ளுங்கள், தீப்பெட்டி வாங்கிக் கொள்ளுங்கள் என்று மற்ற பொருட்களையும் தலையில் கட்டி விடுவார்கள்.
கோதுமைக்குத்தான் கூட்டம் அதிகம் இருக்காது. நல்ல கோதுமையில் தூசி தும்பு, கல் மண் கலந்து போடுவார்கள். வீட்டிற்கு கொண்டு வந்து அம்மாவாவது ஆத்தாவாவது புடைத்துத் தூய்மைப் படுத்தி வாளியில் போட்டு அரைத்து எந்திரத்துக்குக் கொண்டு போய் அரைத்து வருவோம். அதை அரித்து உமி நீக்கி வைத்துக் கொண்டால் அவ்வப்போது சப்பாத்திக்கும், கோதுமை தோசைக்கும் உதவும்.
இப்போது அன்னபூர்ணா என்றும் பில்ஸ்பரி என்றும் பொதிந்து கிடைக்கும் கோதுமை மாவில் அந்தத் தொந்தரவுகள் எதுவும் இல்லை.
சமையல் எண்ணைகளும், சீனியும் தட்டுப்பாடில்லாமல் ஆனால் அதிக விலையில் கிடைக்கின்றன. விலையைக் கட்டுப்படுத்தினால் அதிகரிக்கும் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அளவு அதிகரிக்காமல் தட்டுப்பாடும் காத்திருக்கும் வரிசைகளும் ஏற்படும் என்பது அடிப்படை பொருளாதாரம். சோவியத் யூனியனில் தெருவில் ஏதாவது நீள வரிசை தென்பட்டால் என்ன ஏது என்று விசாரிக்கும் முன் வரிசையில் நின்று கொள்வார்களாம். எது கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
பஜாஜ் ஸ்கூட்டர் வேண்டும் என்றால் பணம் கட்டி விட்டுக் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்த காலங்கள் உண்டு. சமையல் வாயு இணைப்புக்கு காத்திருத்தல் ஆண்டுகள் கணக்கில் போகும். தொலைபேசி இணைப்பு பெறுவது என்பது சாமானியர்களுக்குத் தேவை இல்லாத ஒன்று. தேவைப்பட்டால் ஒரு பஸ் பிடித்துப் போய்ப் பேசி விட்டு வந்து விடுங்கள் என்ற தாராள மனப்பான்மையில் இருந்த காலங்கள்.
1980களின் மத்தியில் ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டவை முந்தைய 35 ஆண்டுகளின் பொருளாதாரக் கொள்கைகளின் சீர்திருத்தங்கள். தொலைத் தொடர்பு துறை வளர்ச்சிக்கான அடிப்படை அப்போது ஆரம்பித்ததுதானாம். இன்றைக்கும் தெருவுக்கு தெருவுக்கு இருக்கும் எஸ்டிடி, ஐஎஸ்டி, பிசிஓ என்று கடைகள் எனக்கு நினைவு தெரிந்து மலர்ந்தவை. ஓரிரு ஆண்டுகளில் மூலை முடுக்குகளில் எல்லாம் தொலை பேசி வசதி வந்து சாதாரணர்களும் பயன்படுத்தும் வண்ணம் கட்டணம் குறைந்து விட்டது.
தனியார் நிறுவனங்கள் வந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள தொலைதொடர்புத் துறைக் கட்டமைப்பின் அடித்தளம் அப்போது ஆரம்பிக்கப்பட்டதுதான்.
உலகில் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் 40வது இடத்திற்கு பின்னால்தான் இருக்கிறார்களாம். ஐபிஎம் மட்டுமே எல்லா இந்திய நிறுவனங்களின் வருமானத்தை விட அதிக அளவு சம்பாதிக்கிறதாம். அது முதல் இடத்தில். இந்திய நிறுவனங்களில் டிசிஎஸ் நாற்பதுக்கு அருகில், அதன் பின்னர் இன்போசிஸ், விப்ரோ என்று மொத்தம் ஐந்து இந்திய நிறுவனங்கள் முதல் நூறு இடத்தில். அவற்றின் கூட்டுப் பங்கு ஒன்றரை சதவீதத்துக்குக் கொஞ்சம் அதிகமாம்.
மைக்ரோசாப்டு எக்செல்லின் சமீபத்திய பதிப்பில் ஒரு பெரும் பிழை இருக்கிறதாம். 0.1ல் முடியும் ஒரு பின்ன எண்ணையும் இன்னொரு முழு எண்ணையும் பெருக்கி வரும் விடை 655535 ஆக இருந்தால் அது 100000 ஆக காட்டப்படுகிறதாம். அந்த கட்டத்திலிருந்து கணக்குகள் போட்டால் சில இடங்களில் சரியான விடை கிடைக்கிறது. சில இடங்களில் தவறாக வருகிறதாம்.
அது எப்படி நடக்கிறது என்று 15 ஆண்டுகளுக்கு முன்பு எக்செல் உருவாக்கத்தில் பங்கேற்றுள்ள ஜோயல் விளக்கியுள்ளார். எக்செல்லின் எண்கள் இருமக் குறியீட்டில் சேமித்து வைக்கப்பட்டு திரையில் காட்டப்படும் போது ஒரு உரைத் தொடராக மாற்றப்பட்டுக் காட்டப்படுகிறதாம். 0.1ல் முடியும் எண்கள் இருமக் குறியீட்டில், 1/3 தசமக் குறியீட்டில் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருப்பது போல, முடியா பின்னம். அதனால் அத்தகைய எண்ணை சேமிக்கும் போது ஓரளவு மதிப்புக் குறைவாகத்தான் சேமிப்பார்கள்.

வியாழன், செப்டம்பர் 27, 2007
அரசியலும் சமூகமும் தனிமனிதர்களும்
'என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு, நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை' என்று எம்ஜிஆர் சொல்லும் வசனத்தோடு ஆரம்பிக்கும் யாழ் சுதாகரின் பாடல் தொகுப்பு சமீபத்திய நட்பு. அதை அறிமுகப்படுத்திய டோண்டு சாருக்கு நன்றிகளுடன் கணினியில் கேட்டுக் கொள்கிறேன். அருகில் இருப்பவர்கள் ஆரம்பிச்சாச்சா என்று சலித்துக் கொள்ளும் நிலைமை வந்து விடக் கூடாது. ஆரம்பித்தால் இரண்டு மணி நேரம் ஓடுகிறது.
வீடியோ வாடகைக்குக் கொடுக்கும் கடையில் வேலை பார்க்கும் பெண் ஒருவரின் குறிப்புகள் என்று மிகப் பிரபலமாக இணையத்தில் உலாவி வந்தது. இன்னும் இருக்கலாம். இப்போது அவரது விருப்பப்படியே விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார் என்று நினைவு. அலி டேவிஸ் என்ற அந்தப் பெண் வேறு நல்ல வேலை கிடைப்பது வரை கடையில் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று சேர்ந்து ஒரு ஆண்டு ஓடி விட்டதாக உணர்வதிலிருந்து ஆரம்பிக்கிறார்.
கடை திறந்ததும் கடையினுள் இருக்கும் இசை அமைப்பில் பாடல்கள் போடுவது அவரது பொறுப்பு. தனக்குப் பிடித்த பாடல்களாக அதே நேரத்தில் வருபவர்களை இம்சித்ததாக குறிப்பிட்டிருப்பார். குறிப்புகளில் பெரும்பகுதி X தரம் பிரிக்கப்பட்ட படங்களை எடுத்துச் செல்பவர்களைப் பற்றிய குறிப்புகள். நான்கைந்து படங்களை எடுத்துப் போய் விட்டு மாலையே திரும்பிக் கொண்டு வருபவர், படங்களுக்கு பெயர் சூட்டியிருக்கும் வேடிக்கைகள், படங்கள், ஆண்கள் இப்படிப்பட்ட படங்கள் பார்ப்பதை பெண்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தனது எண்ணங்களைச் சொல்லிக் கொண்டு போவார். மனித மனத்தின் கோணங்களை இப்படியும் இருக்கலாம் என்று புரிந்து கொள்ள உதவிய குறிப்புகள் அவை.
முன்பெல்லாம் வீட்டில் நாற்காலி மேசை போட்டுக் கொண்டு, கொத்து கொத்தாக தாள்களை வைத்துக் கொண்டு மை நிறைத்த பேனாவால் எழுத வேண்டும். அதை பதிப்பிக்கும் படி யாராவது ஒருவரை அணுக வேண்டும். வசதி இருந்தால், தானே காசு போட்டுப் பதிப்பித்துக் கொள்ள வேண்டும். அது புத்தகமாக வெளி வந்த பிறகு வாசகனைப் போய்ச் சேருவது எப்போது என்று தெரியாமல் காத்திருக்க வேண்டும். கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே தாழ்ந்து விடலாம். பாதிப்புகளை, அலைகளை ஏற்படுத்தினால், திடீரென்று உயிர் பெற்று வாசகரிடமிருந்து ஒரு கடிதம், அல்லது சுஜாதா குறிப்பிட்டிருந்தது போல கத்தியுடன் தீவிர வாசகர் ஒருவர் வீட்டுக்கு வருவதும் நடக்கலாம்.
அந்தக் கட்டங்களை எல்லாம் ஒழித்து ஒரே ஒரு வாசகருக்கு மட்டும் பிடித்திருக்கும் எழுத்துக்குக் கூட ஊடகம் கிடைத்திருக்கிறது. சிந்திக்க தெரிந்த ஒரு மனம் வேண்டும், எழுத்துக்கள் தெரிந்த ஒரு மொழி வேண்டும். பதிப்பாளர், பணம் கொடுப்பவர், விற்பனையாளர் என்று நீண்ட தூரங்களைக் குறுக்கி வாசகரையும் எழுதுபவரையும் அருகில் கொண்டு வந்து விட்டன இந்த வலைப்பதிவுகள்.
வாசகர்களே இல்லை என்று நிலைமையிலும் எழுதிக் கொண்டே போகலாம். எழுதுவதற்கான ஊக்கமும், நேரமும் இருந்தால் போதும். யாராவது தடுக்கி விழுந்து படித்து விட்டு மகிழ்ந்து போகலாம்.
நேற்று மீண்டும் போன ஆண்டு செப்டம்பர் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். ரம்ஜான் நோன்புக் கஞ்சி, நேரக் கட்டுப்பாடுகள் என்று விவாதங்கள். இரண்டு நாளாக சென்னையின் வெயிலும், மாலையில் வெதுவெதுப்பும் எல்லாவற்றையும் இருட்டாக்கிக் காட்டும் சூழல். எட்டே முக்காலுக்கு வீட்டுக்கு வரும் வழியில் கொசு விரட்ட திரவ மருந்து, கூடவே கண்ணில் பட்ட இஞ்சி பானகம் ஒன்று. இப்படிக் கண்ணில் பட்டதை வாங்கும் திமிருக்கு ஒரு அளவு வேண்டும்.
ஒன்பதேகாலிலிருந்து பத்தேகால் வரை எழுதி விட்டுப் படுக்கப் போனால் கொசுக்களுக்கு விடை கொடுத்திருந்தது அறை. பத்தே முக்காலுக்குத் தூங்கும் போது அதிகாலை ஏழு மணிக்கு அலுவலகம் கிளம்ப எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டேன்..
காலை உணவு வெளியே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஆறரைக்குக் குளித்து முடித்திருக்க வேண்டும். ஆறு மணிக்கு மற்ற வேலைகள் முடித்திருக்க வேண்டும். ஐந்தரைக்கு எழுத்து முடித்திருக்க வேண்டும். 4 மணிக்கு எழுந்திருந்தால் சரியாக இருக்கும். விழிப்பு வந்தது மூன்றரை மணிக்கு. அரை மணி நேர சுகத்துக்காக இழுத்துப் போர்த்திக் கொண்டால், ஆழ் நினைவுகளின் பல கனவுக் காட்சிகளோடு எழுந்திருந்தது ஐந்தேகாலுக்குத்தான். இரண்டு மூன்று நாட்களாக ஒதுங்க வைக்காமல் கிடந்த துணிகள், புத்தகங்கள், நாளிதழ்கள், பாத்திர அடுக்குகள் எல்லாவற்றையும் சீர் செய்து குளித்துக் கிளம்பி விட்டேன்,
வேலைகள் செய்யும் போது துணையாக கணினியிலிருந்து பாடல்கள் ஒலிக்க விட்டுக் கொண்டேன்.
அலுவலகத்துக்கு ஏழு மணிக்கு வந்து விட முடிந்தது. இன்னும் பல பேர் சீக்கிரமே வர ஆரம்பித்தார்கள். பசித்தால் மட்டுமே சாப்பிடுவதற்கேற்ப ஒரு எலுமிச்சை தேநீர், சில கேக்குத் துண்டுகள், தட்டைகள். கணினியை வலைப்பின்னலில் இணைத்துப் பார்த்தால் தமிழ் நாட்டுப் பாட நூல்கள் அனைத்தையும் இணையத்தில் பிடிஎஃப் ஆக கொடுத்திருக்கும் செய்தி சிவபாலனின் பதிவில்.
கோவி கண்ணன், இயற்கைக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையேயான சமநிலையைப் பற்றிய தனது எண்ணங்களை எழுதியிருந்தார். பல நாட்களாக நானும் யோசித்து வரும் ஒன்று.
மும்பைப் பங்குச் சந்தை குறியூட்டு எண் பதினேழாயிரத்தைத் தொட்டு விட்டதாம் நேற்று. சரி. அடுத்தது பதினெட்டாயிரம், ஐம்பதாயிரம் வந்ததும் என்ன ஆகும். ஐந்து லட்சம்? எகனாமிக் டைம்சில் தலைப்புச் செய்தி. இந்தியன் எக்ஸ்பிரசிலும் அதை செய்தி. கூடவே மும்பை 20/20லும் 17000இலும் போதை ஏறிக் கிடக்கிறதாம். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லையாம், நேற்று ரீடிஃப் தளத்தில் செய்தி
லின்டாஸ் என்ற விளம்பர நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பகுதி ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அறக்கட்டளையிடம் இருந்ததாம். நிறுவனத்தை விற்ற போது வந்த பணத்தில் வேலை பார்த்த எல்லோருக்கும் பங்கு. இது போன்று சேவைத் துறைகளில், ஒவ்வொருவரும் மதிப்புச் சேர்க்கும் நிறுவனங்களில் இது போன்ற கூட்டு உரிமை முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
அண்ணன் தம்பிகள் சேர்ந்து நடத்தும் சில்லறை விற்பனை வியாபாரங்கள், வக்கீல்கள், கணக்காளர்கள், தணிக்கையாளர்கள் சேர்ந்து செய்யும் சேவை நிறுவனங்கள் என்று பணி புரிபவர்கள் எல்லோருக்கும் பங்கு இருக்கும் சொத்து முறை முற்றிலும் புதிது இல்லை. லின்டாஸ் நிறுவனம் போன்ற விளம்பர நிறுவனங்களிலும் மனிதவளம்தான் பெரும் முதலீடு. எல்லோருக்கும் ஈடுபாடு இருக்கும் போது நிறுவனம் தளைக்கும்.
பண வளத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மனிதவளத்துக்குத் தரப்படுவதில்லை என்று பாலா சொல்லிக் கொண்டிருந்தார். பார்க்கப் போனால் மனித வளம் மட்டும்தான் தேவையானது. மற்ற வளங்களை எல்லாம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் எதுவுமே இல்லாமல் இருந்து திறமான மனிதர்கள் மட்டும் இருந்து, இன்னொரு நாட்டில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்க மனிதர்கள் சோம்பேறிகளாக, முட்டாள்களாக இருந்தால், முதல் நாட்டினர் மற்ற நாட்டின் வளங்களைக் கைப்பற்றுவது நடந்து விடும்.
மனித வளம் சமமாக இருக்கும் போதுதான் மற்ற வளங்களைப் பற்றிய கேள்விகள் வரும். குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் கூடாது, மக்கள் செல்வத்தை எப்படி நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது என்று திட்டம் தீட்டுங்கள் என்று ஜேஆர்டி டாடா நேருவின் காலத்தில் வாதிட்டாராம். இன்றைக்கும் குழந்தைகள் இறைவன் கொடுக்கும் கொடை என்று பிறப்புத் தடுப்பு முறைகளை பயன்படுத்த மறுப்பவர்களும் உண்டு.
'இன்றைய நிலைக்கு 91ல் ஆரம்பித்த சீர்திருத்தங்கள்தான் காரணம் என்றும் அதற்கு முன்பிருந்த சோசலிசக் கொள்கைகள்தான் நம்மைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன' என்றும் வாதிடலாம். '47 முதல் 91 வரை செய்த முட்டாள்தனங்களால்தான் இன்றைய பிரச்சனைகள். இன்றைய சாதனைகள் மட்டும் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் வந்தவை' என்றும் வாதிடலாம். வாதிடுபவர்களின் வாய்த் திறனைப் பொறுத்து இப்படியோ அப்படியோ நிலை நாட்டி விடலாம்.
எந்தக் கொள்கையும், எந்த சீர்திருத்தமும் முற்றிலும் சரியானது கிடையாது. 'இந்துத்துவா கொள்கைகளை முழுவதுமாக பின்பற்றாததால்தான் பாரதீய ஜனதா கட்சி சென்ற நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தர பிரதேச தேர்தலிலும் தோற்றது' என்று தீவிர வாதிகளும், 'இந்துத்துவா தீவிரவாதத்துக்கு இடம் கொடுக்க வேண்டியிருப்பதால்தான் தேர்தலில் தோற்றோம்' என்று மாறுதலை விரும்புபவர்களும் கட்சிக்குள் அடித்துக் கொண்டிருக்கலாம்.
எந்தக் கொள்கையும், முற்றிலும் கெட்டதும் கிடையாது. ஒரு தொழிற்சங்கத் தலைவர் நான்கு பொறியியல் கல்லூரி நடத்துவதாகவும், 2000 கோடி ரூபாய்களுக்குச் சொத்துச் சேர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார் நண்பர். மனிதனை மனிதன் ஏய்க்க உதவுவது முதலாளித்துவம், அதையேதான் கம்யூனிசமும் இன்னொரு வழியில் செய்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
அடிப்படை பண்புகள், நேர்மை, அடுத்தவரை மதித்தால் இல்லாத சமூகத்தில் எந்த இசமும் தோல்வி அடைந்து விடும். முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்று எல்லாவற்றையும் அவிழ்த்து விட்டு வாழைப்பழம் மட்டும் விற்கும் நாடுகளாக, போதை மருந்துகளை மட்டும் விளைவிக்கும் சமூகங்களாக உருவெடுத்த இடங்களும் உண்டு. தொழிலாளர்களின் சர்வாதிகாரம் என்ற பெயரில் தொழிலாளர்களையே சுரண்டி கொண்டிருந்த, கொண்டிருக்கும் அரசாங்கங்களும் உண்டு.
ரயிலில் போகும் போது, பேருந்தில் பயணிக்கும் போது, நாம் வெளியில் இருக்கும் வரை வண்டி நிறுத்தத்தில் நிற்க வேண்டும் கதவு திறக்க வேண்டும், உள்ளே இருப்பவர்கள் வழி விட வேண்டும், ஒதுங்கி நாம் உட்கார இடம் தர வேண்டும் என்று தவிப்போம். வண்டியில் ஏறி புறப்பட்டதும் வண்டி நிற்காமலேயே போக வேண்டும், புதிதாக ஏறுபவர்கள் கிடைத்த இடத்தில் ஒண்டிக் கொள்ள வேண்டும், நம்மைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைக்க ஆரம்பித்து விடுவோம்.
தொழிற்சங்கங்களும் அதே போல ஆகி விடுகின்றன. முறைசாரா தொழிலாளர்களுக்கான திட்டங்களில் சேரவில்லையா என்று ஒரு கொத்தனாரிடம் கேட்டதற்கு அதனால் நேர விரயம்தான் மிச்சம். சலுகைகள் வாங்கித் தருகிறோம் என்று மாசத்துக்கு ஒரு தடவை கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம் போகச் சொல்கிறார்கள் பிழைப்புக் கெடுவதுதான் மிச்சம் என்று அலுத்துக் கொண்டார்களாம்.
உழைக்கும் வர்க்கம் என்பது தொழிற்சங்கத்தில் சேர்ந்து விட்டவர்கள் மட்டும்தானா? ஒரு தொழிற்சங்கத் தலைவர் குளிரூட்டப்பட்ட வண்டியில் சுற்ற நான்கு பொறியியல் கல்லூரி கட்டப் பணம் சேர்க்க வேண்டுமானால் எத்தனை தொழிலாளர்களில் வயிறு காய்ந்திருக்க வேண்டும். முதலாளியின் மாடமாளிகைகள் உழைப்பாளியின் உபரி மதிப்பைக் கொள்ளை அடித்ததிலிருந்து வந்தது என்றால், தொழிலாளர் தலைவர்களின் செல்வம் எங்கிருந்து வருகிறது!
'எதிரிகள் யார் என்று தெரிய மாட்டேங்கிறது' என்றும் அலுத்துக் கொண்டார் அந்த நண்பர். அந்தத் தொழிற்சங்கத் தலைவரை வழிக்குக் கொண்டு வாருங்கள் முதலில். வெளியில் இருந்து நம்மை அழிக்க வரும் பகைவர்களை விட நம்முடனே இருந்து நோக்கங்களை நீர்த்துப் போக வைக்கும் துரோகிகள் பயங்கரமானவர்கள்.
கருணாநிதியின் அபாயம் அந்த வகையில்தான். தமிழன், திராவிடன் என்று பேசிக் கொண்டே அரை குறையாக ஏதோ செய்து விட்டு போவதால் ஏற்படும் ஊறுகள் யாரும் கவனிக்காமல் இருந்து விட, இன எதிரி ஆட்சியில் இருக்கும் போது நலன்கள் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாதே என்று பலர் முனைந்து உழைப்பார்கள். இரண்டு வகையான கொள்ளிகளிலிருந்து மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் போது எதிரியை வர விட்டு மாற்று ஏற்பாட்டில் இறங்குவதுதான் எதிர்கால நன்மைக்கு வழி பிறக்கும்.
இரண்டு பேரைக் கொன்று போட்ட அழகிரியின் கூட்டத்துக்கும், நான்கு மாணவிகளை எரித்த ஜெயலலிதா கும்பலுக்கும் என்ன வேறுபாடு? நான்கு மாணவிகளுக்காக கவிதைகள் எழுதி உணர்ச்சிப் பிழம்பாக போராடிய தமிழ் ஆர்வலர்கள் மதுரையில் பலி கொடுக்கப்பட்ட இரண்டு உயிர்களுக்காக ஒரு கண்டனம் கூட உதிர்க்கவில்லை. அடாவடி, அராஜகத்தைப் பொறுத்த வரை ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்து விடாத கருணாநிதியின் ஆட்சியில் கூடுதல் கேடாக சமூக அக்கறை உள்ளவர்களின் அசட்டையும் சேர்ந்து விடுகிறது.
தொடர்பே இல்லாமல் இருக்கலாம். 2001 முதல் 2005 வரை ஈழத்தில் நிலவிய சூழலுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் பகுதிகளில் நிகழ்ந்து விட்ட சம்பவங்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்கலாம். அமைதி ஒப்பந்தம். வடக்கு கிழக்கில் வலிமை அதிகரிப்பு, சர்வதேச அளவில் மதிப்பு என்ற கவனமாக எடுத்து வைக்கப்பட்ட அடிகள் ஒன்றரை ஆண்டுகளில் பின்னடைவுகளாக மாறி விட்டதற்கும் மனதில் நேர்மை இல்லாத, தமிழரின் நலனை உதட்டளவில் மட்டும் பேணி வரும் தலைவர் தமிழகத்தின் ஆட்சி பீடம் ஏறியதற்கும் தொடர்பே இல்லையா என்ன?
இது போன்ற கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் வைத்து தலைவரை ஒன்றும் செய்து விட முடியாது. 1970லிருந்து முன்னேற்ற அறிக்கையைப் பார்ப்போம்.
ராமர் கோவிலுக்கு செங்கல் பூஜை, வீடுகளில் நடந்து வந்த பிள்ளையார் சதுர்த்தி தெருக்களுக்கு கொண்டு வரப்பட்டு மத நல்லிணக்கத்துக்குக் கேடு, தமிழகத்தில் மைல் கற்களில் மூன்றில் ஒன்றில் இந்தியில் பெயர் இருக்கலாம், என்று ஆரம்பித்த நோக்கங்களில் ஏதாவது மிச்சம் இருக்கிறதா? எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணைந்து அவர் ஏற்படுத்திய ஈழத் தமிழர் கொள்கை எங்கே போனது? தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக எந்த உணர்வையும் பலி கொடுக்கத் தயங்காத சந்தர்ப்பவாத சுயநல வாத தலைவர்தான் கருணாநிதி. அவரை நம்பி தமிழர் ஏமாற வேண்டும் என்பது கடந்த நாற்பது ஆண்டு தமிழகத் தலைவிதி.

எத்தனை பெரிய மனிதர்கள்
போன வாரத்திலிருந்து காலையில் ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை அலுவலக வேலை நேரம். 7 மணிக்கு வருபவர்கள் மதியம் மூன்று மணிக்குக் கிளம்பி விடுவார்கள். ஒரு மணிக்கு வந்து விட்டு ஒன்பது மணிக்குப் போவது ஒரு சிலர். ஒன்பதரைக்கு வந்து விட்டு மாலை ஏழு மணி வாக்கில் போய் விடுவது பெரும்பான்மை.
ஓரிருவர் காலையில் ஏழு மணிக்கே பிடித்து இரவு ஒன்பது மணி வரை இருக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள். கிட்டத்தட்ட ராணிப்பேட்டை போகும் நாட்களின் நேரக் கணக்கு. என்ன, வேறு மாற்றமே இல்லாமல் அலுவலகச் சுவர்களையும் முகங்களையும் கணினித் திரைகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ராணிப் பேட்டை போய் விட்டு வந்தால் இரண்டு பேருந்து பயணம், குறைந்தது இரண்டு நிறுவனங்களில் வேறுபட்டவர்களுடன் சந்திப்பு என்று போய் விடும்.
அலுவலகத்தில் உட்காரும் இடமும் மாறி விட்டதில் பணிகளின் சுழல்களில் நானும் சுழல ஆரம்பித்து விட்டேன். நிமிர்ந்து பார்க்க நேரம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக வேலைகள் ஓட்டமாக ஓடி விடுகின்றன. நாளைக்குக் கொஞ்சம் தொலைபேசி அழைப்புகளிலும் இறங்க வேண்டும். இன்றைக்கே திட்டம் போட்டு வைத்தது.
கூகுள் மின்னஞ்சல் சேவையில்தான் நிறுவன அஞ்சல் கணக்குகள் பயன்படுத்துகிறோம். நமது வலைத் தள முகவரியையே முகவரியாகக் கொண்டு இலவசச் சேவை அளிக்கிறார்கள். என்ன, படிக்கும் போது அவர்களது விளம்பரங்களையும் பார்க்க வேண்டியிருக்கும். ஆரம்பத்தில் 20 கணக்குகள் ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று கொடுத்தார்கள். அதிகமாக வேண்டும் என்று கேட்டதும் உடனேயே 100 ஆக உயர்த்தி விட்டார்கள்.
இதனால் பல வசதிகள். அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு முகவரி. இதைத் தவிர வாடிக்கையாளர் சேவை என்று ஒரு முகவரி. அதன் கடவுச் சொல் எல்லோரும் பயன்படுத்தும்படியாக இருக்க வாடிக்கையாளர்களுக்குப் போகும், அவர்களிடமிருந்து வரும் அஞ்சல்களை எல்லோரும் படித்துக் கொள்ளும் வசதி. ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கிற்குப் போகும், அவர்களிடமிருந்து வரும் அஞ்சல்களுக்கு குறிப்பிட்ட அடையாளம் போட்டு வைத்துக் கொண்டால் தேவைப் படும் போது தேடிப் பார்த்துக் கொள்ள முடிகிறது.
எங்கு போனாலும், இணையத்தில் மின்னஞ்சல்கள் அனைத்தும் அணுகக் கிடைக்கின்றன.
ஏதாவது கோப்பு இணைப்பாக வந்தால் அப்படியே கூகுள் அலுவலக மென்பொருளைப் பயன்படுத்தித் திறந்து பார்த்துக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது. அஞ்சலிலிருந்தே அதன் தொடர்பான நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து கொள்ள நாட்காட்டி சேவையும்.
தொழிலாளர்களின் கூலி அவர்கள் பிழைத்துக் கொள்ளும் அளவில்தான் இருக்க முடியும். அதற்கு மேல் போனால், அதிகப் பணத்தில் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக கூலியும் குறைந்து விடும். அதற்குக் குறைவாகப் போனால் வேலைக்கு ஆரோக்கியமான ஆட்கள் கிடைக்காமல் தொழிற்சாலையை மூடி விட நேரிடும்.
இதுதான் 19ம், 20ம் நூற்றாண்டின் உற்பத்தித் தொழிற்சாலை நடத்தும் மேலாண்மை தத்துவமாக சிலருக்கு இருந்திருக்கிறது. 21ம் நூற்றாண்டின் சேவைத் துறையின் வளர்ச்சிக்குப் பிறகு அந்த மனப் போக்கை மாற்றிக் கொள்ளத் தெரியாமல், உற்பத்திச் சாலைகளும் இயங்குகின்றன. இங்கிலாந்துக்குப் போயிருந்த போது அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலையில் அழுக்குத் வேதித் தண்ணீரில் தோல்களை கையாளும் ஊழியருக்கும், இரண்டாவது மாடியில் உட்கார்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருந்த மேற்பார்வையாளருக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. மாலையில் வேலை முடிந்ததும் இருவரும் தத்தமது வண்டிகளில் ஏறி வீட்டுக்குப் போய் விடுகிறார்கள்.
வேலை கொடுப்பதே ஏதோ பெரிய உபகாரம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலங்கள் மலையேறி விட்டன. ஒவ்வொருவருக்கும் பல வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தற்காலிக முறையில் வேலைக்கு வைத்துக் கொள்பவர்களைக் கூட நிறுவனங்கள் பரிவாகக் கவனித்து நிரந்தரப்படுத்த முயல்கின்றனவாம். இன்றைக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் செய்தி.
விவசாய சமூகத்தில் பண்ணையார், அரச குடும்பம் என்று உழைக்கும், ஆளும் வர்க்கங்கள் தேவையாக இருந்திருக்கலாம். அடுத்த தொழில் சமூகத்தில் மதிப்பாக ஒதுங்கி பெயரை மட்டும் காப்பாற்றிக் கொண்ட அரச குடும்பங்களும், கில்லட்டினில் வெட்டுப்பட்ட பிறகே வழி விட்ட நாடுகளும், விடாப்பிடியாக உயர் நிலையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இருக்கும் சமூகங்களுமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் தகவமைத்துக் கொண்டனர். பழைய கட்டுக்களை உடைத்து புதிய மாற்றங்களை இரு கரம் விரித்துத் தழுவிக் கொண்ட நாடுகள், சமூகங்கள் தளைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகள், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது பெருமைகளை மறுபடியும் நிலைநாட்டுவோம் என்று பின் நோக்கி இழுக்கும் கூட்டங்களால் பல நாடுகள் தேங்கிப் போய் விட்டன.
'எங்களை எல்லாம் கீழ எறக்கில்லா வச்சிருக்கு' இப்படி சொன்னார் ஊரில் சந்தித்த, பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர். முதலில் பொறுப்பிலிருந்து இறங்கி இருப்பதை குறிப்பிடுகிறார் என்று நினைத்து,
'அப்படி இல்லீங்க, ஓய்வுதான் கொடுத்திருக்கே தவிர, இறக்க எல்லாம் இல்ல' என்றேன்.
'அது இல்ல, இட ஒதுக்கீட்டில் வாய்ப்புகள் குறைந்து போயிருச்சில்லா' என்று விளக்கிய பிறகுதான் அவரது கசப்பு புரிந்தது, ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் பொறியியல் துறையில் முது நிலை ஆசிரியர் அவர். நினைவு தெரிந்த வரை பெரிய தொந்தியுடன் நடக்க முடியாமல் நடந்து பள்ளிக்கு வருவார். வாய் திறந்து அதிகம் பேசியதும் பார்த்ததில்லை. வகுப்புகளில் என்ன பாடம் நடத்தினார் என்பது யாருக்கும் தெரியாத மர்மம். கடனுக்கு உட்கார்ந்து விட்டு மாதம் பிறந்தால் சம்பளம் வாங்கி விட்டு சேர்ந்திருந்த சொத்தில் காலத்தை ஓட்டி விட்டு, வெளுத்த தேய்த்த உடைகளுடன் எல்லோரும் உலாவுவதைப் பார்த்தால் இப்போது கரிக்கிறது.
குறிப்பாக அரசுப் பணியில் ஆசிரியப் பணியில் எவ்வளவு கருத்தோடு பணி புரிந்தார்களோ அவ்வளவு நிறைவாக அவர்களது ஓய்வு பெறும் வாழ்க்கை அமைந்து விடுகிறது.
இன்னொரு பேராசிரியர் உண்டு. கல்லூரி தேர்வுகள் முடிந்ததும், அவரை அணுகுபவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு மதுரையில் இருக்கும் பல்கலைக் கழகத்துக்குப் போய் வருவார். அவர்கள் தேர்ச்சி பெற உதவி செய்வாராம். 'சும்மா பணத்தை வாங்கிக்கிட்டுப் போயிட்டு வாரார். பாசாயிட்டா காசை வைத்துக் கொள்வார். பெயில்னா, அவ்வளவு சொன்னேன், பெயில் போட்டுட்டான் போலிருக்கு என்று சலித்துக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்' என்று கிண்டலாகச் சொல்வார்கள். எவ்வளவு உண்மை எவ்வளவு கதை என்று தெரியாது.
ஒரு நண்பனின் அப்பா காவல் துறையில் உதவி ஆணையாளர். உயரமாக வெளுப்பாக இருப்பார், அதிகம் பேச மாட்டார். 'அவர் டிஎஸ்பியா, அவ டிஎஸ்பியா என்று தெரியாதபடி அவ்வளவு அலட்டுவா' என்று அந்த அம்மா பற்றிச் சொல்வார்கள். நேர்மையான அதிகாரியாக இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போதே இறந்து விட்டார்.
ஒரு பள்ளி ஆசிரியர் வீட்டில் மட்டும்தான் கார் இருக்கும். அவரும் அதை எடுத்து ஓட்டவே மாட்டார். தினமும் வேலைக்குப் போகும் போது மிதிவண்டியில் போய் வருவார். அந்த வீட்டு அம்மா நோஞ்சானாக சாதுவாக இருப்பார். ஒரே பையன். பெரிய முட்டைக் கண்ணாடி போட்டுக் கொண்டு நிற்பான். எப்போவாவது மாதத்துக்கு ஒரு முறை மூன்று பேரும் காரில் எங்காவது போய் வருவார்கள்.
மருந்து கலப்பு, விற்பனை தொழில் செய்த ஒருவர் வந்ததுதான் ஒரே தொழில் செய்யும் குடும்பம். அவர்கள் நல்ல கார் வைத்திருந்தார்கள். ஒரு முறை கேரளாவில் தேர்தல் நடந்து வாக்கு எண்ணும் நாளில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடைப்படும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்க அவர் தொலைக்காட்சியில் செய்தி பார்க்க ஜெனரேட்டர் வைத்துப் பார்த்தார். அன்றைக்கு நடந்த ஒரு கிரிக்கெட் பந்தயத்தைப் பார்க்க நாங்கள் எல்லோரும் அவர் வீட்டில் கூடி விட்டோம்.
அப்படி கணக்கில்லா மணிகளை செலவழித்துப் பார்த்த பந்தயங்களை காசு வாங்கிக் கொண்டு பேசி வைத்து தோற்க, ஜெயிக்கச் செய்திருக்கலாம் என்று முதலில் தெரிய வந்து ஏமாற்றம் மிக ஆழமாகப் பதிந்து விட்டது போலிருக்கிறது. ஏற்கனவே அதிக ஒட்டுதல் இல்லாத, எதிலும் நம்பிக்கை இல்லாத போக்கு. அடுத்த நாள் காலையில் நாளிதழில் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு வந்து விட்டது. பரபரப்பான பந்தயமாக இருந்தால் இணையத்தில் கிரிக் இன்போவின் ஒவ்வொரு பந்துக்கான வர்ணனையைப் பார்த்துக் கொள்வோம்.
சன் டிவியும் கேபிள் வினியோகஸ்தர்களும் சண்டை போட்டுக் கொண்டு தொலைக்காட்சி சேவைகளைத் துண்டித்து விட்டார்களாம். ஓரிரு மாதங்கள் அப்படி தொலைக்காட்சி சேவை இல்லாமல் இருக்கும் நிலை வந்தால் என்ன நடந்து விடும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. முதல் ஓரிரு வாரங்களில் எல்லா இடங்கிளிலும் சச்சரவுகளும், கோபதாபங்களும் அதிகரித்து இடும். தொலைக்காட்சிப் பார்க்க முடியாத தவிப்பில் பலருக்கு வாழ்க்கையே இம்சையாகப் போய் விடும்.
ஆரம்ப விடுபடும் அவஸ்தைகளுக்குப் பிறகு ஓரிரு மாதங்களுக்குப் பிறகு ஒரு நிதானம் ஏற்பட்டு அப்புறம் தொலைக்காட்சி வர ஆரம்பித்த பிறகும் முன்பு இருந்தது போன்ற பிடிப்பு இல்லாமல் போய் விடும்.
மக்களை ஏமாற்றவே கிரிக்கெட் பந்தயங்களை அரசு நடத்துகிறது என்று ஒரு இடுகையைப் பார்த்தேன். மதம் என்பது அபின், பெரும்பான்மை மக்கள் தமது உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியாமல் வைத்து, சிறுபான்மையினர் அவர்களை சுரண்ட உதவுகிறது என்று சொல்லப்படுவது போல, அரசியல்வாதிகளுக்கு அவர்களது துறைகளில் சாதிக்க முடியாததை மறைக்க இது போன்ற விளையாட்டு வெற்றிகளைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். மும்பையில் அணிக்கு நடந்து பாராட்டுக் கூட்டத்தில் அணி வீரர்கள் அனைவரும் பின் தள்ளப்பட்டு அரசியல் வாதிகள்தான் மேடையை ஆக்கிரமித்திருந்தார்கள். அடுத்து 10-15 ஆண்டுகளுக்கு, இன்னும் 4-5 உலகக் கோப்பைகளுக்கு விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாக கூட்டங்கள் தயாராகி விட்டன.
விளம்பரங்கள் மூலம் பொருட்களை விற்க நிறுவனங்களும், அந்த விளம்பரங்கள் தரும் பணச் செழிப்பில் திளைக்க கிரிக்கெட் வாரியமும் தயாராகி விட்டன. டிராவிட் சொன்னது போல ஒரு அளவு விகிதம் மீறிய எதிர் வினைகள். ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்று விட்டால் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆடுவது, இந்த இறுதிப் போட்டியில் கூட கடைசியில் அடித்தது கையில் போய்ச் சேராமல் ஆறு எண்களாக ஆகி விட்டிருந்தால், பந்தயத்தின் பல கட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்து யார் யார் தோல்விக்குக் காரணம் என்று அலசிக் காயப் போட்டிருப்பார்கள். அந்த நான்கு ஓட்ட வித்தியாசம் 11 பேரையும் அதி திறமைசாலிகளாக்கி விட்டிருக்கிறது.
அவர்களின் வெளிச்சத்தில் தமக்கும் புகழ் தேடிக் கொள்ள கிரிக்கெட் வாரியமும் தயாராக இருக்கிறது. அந்த ஒரு அடி வேறு திசையில் போயிருந்தால் இது எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்.
இந்திய அணி விளையாடும் ஆட்டங்களில் எல்லாமே ஒரு நடுநிலை பார்வையே மறைந்து நாட்டுப் பற்று முத்திரைக்குள் சிக்கிக் கொண்ட வேதனைகள் பொருளற்றவை. 'இது போன்ற ஆட்டங்களில் வெற்றி பெறுவது நாட்டின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தைக் காட்டுகிறது என்ற நிலையில் வேண்டுமானால் ஒரு சுட்டுக் காட்சியாக வைத்துக் கொள்கிறோம்' என்றால் கூட ஓரளவு உண்மை இருக்கிறது. வாழ்வதும் சாவதும் கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெறுவதைப் பொறுத்தது, அதைத் தொலைக்காட்சியில் பார்ப்பது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை (என்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறதாம்) என்று நடைபாதைகளில் வசிப்பவர்களும் கண்ணாடியினூடே கடைத் தொலைக்காட்சிகளைக் கண்டு களிப்பதுதான் இந்திய மக்களாட்சி.
சிட்னி பாலா இப்போது குவாலலம்பூரில் இருக்கிறாராம். அடுத்த வாரம் புதன்கிழமை சென்னைக்கு வருகிறாராம். அப்படியே சென்னையிலேயே தங்கி தொழில் செய்யும் உத்தேசமாம். பழைய நண்பர்களை எல்லாம் அழைத்து உறவைப் புதுப்பித்துக் கொள்கிறார்.
2001ல் சென்னை வந்து விட்டு, நான் குடியிருந்த வீட்டிலேயே தங்கிக் கொண்டு செயலாற்றிய அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட பிரேம் என்பவரின் வாய் ஜாலங்களில் மயங்கி, 'சென்னை வந்ததில் தங்கமும் கிடைத்து விட்டது, வெள்ளியும் கிடைத்து விட்டது. பிரேம் தங்கம். நீங்கள் வெள்ளி' என்று சொன்னதோடு எனக்கு ஏமாற்றமாகி விட்டது. பார்த்த உடனேயே ஏமாற்றப் போகிறார் என்று தெரியும் ஒருவரை எங்கோ தூக்கி வைத்து என்னுடைய முயற்சிகளைக் குறைத்து மதிப்பிடுவது கண்டு நான் கழன்று கொண்டேன். கடைசியில் பிரேமுடன் சிட்னிக்குத் திரும்பி கொஞ்சம் பணத்தையும் இழந்து விட்டார் என்று அவர் சொல்லித் தெரியும்.

ஞாயிறு, செப்டம்பர் 23, 2007
ஞாயிற்றுக் கிழமை மாலை எண்ணங்கள்
"நான் சின்ன பையனாக இருந்த போது எங்க வீட்டுத் தோட்டத்தில் ஒரு உயரமான மரம் இருந்தது. இந்த மரத்தின் உச்சியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்று எப்படியோ கேள்விப்பட்டிருந்தேன். நானும் எங்க அப்பா போல வளர்ந்து மரத்தின் மீது ஏறி உச்சிக்குப் போய் விட்டால் சொர்க்கம் கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அப்போது மகிழ்ச்சியாக இருந்தேன்.
இப்போது வளர்ந்து விட்டேன். நிறையத் தெரிந்து கொண்டேன். மரத்தின் உச்சியில் இலைகள்தான் இருக்கின்றன என்று பாடப்புத்தகங்கள் சொல்லித் தந்து விட்டன.
சின்ன வயது அறியாமை தந்த மகிழ்ச்சி தொலைந்து போய் விட்டது. "
இப்படி ஒரு ஆங்கிலக் கவிதை பள்ளிப் பாடத்தில் படித்தது. ஏதோ தெரிந்து கொண்டு விட்டோம் என்று உணரும் போது அறியாமையில் இருந்த பொய்யான மகிழ்ச்சி/நிம்மதி தொலைந்து போய் விடுகிறது.
நான்கும் நான்கும் எட்டு என்று கணக்கில் சொன்ன நம்பிக்கை இன்னும் தொலையவில்லை. பாடத்தின் இறுதியில் இருக்கும் பயிற்சி வினாக்களிலிருந்துதான் தேர்வில் கேட்பார்கள் என்று சொல்லிப் படிக்க வைத்த ஆசிரியரின் வார்த்தை தந்த நிம்மதி வேறு கேள்வியை வினாத்தாளில் பார்த்த நாள் தொலைந்து போனது. புத்தகத்தில் படிக்கவே செய்யாத ஒன்றைக் கூடக் கேட்பார்கள் என்று உணர்ந்த அன்று வந்து படபடப்புக்கு அளவே இல்லை.
17 வயதில் பள்ளி இறுதி வகுப்பு, அப்புறம் படிப்பு, அப்புறம் ஏதோ ஒரு வேலை, திருமணம், குழந்தைகள், அவர்கள் பெரிதாகி விடுவார்கள் என்று ஏதோ கணினி நிரல் எழுதி வைத்தது போல எல்லாம் நடந்து விடும் என்று நம்பிக்கையுடன் ஓடிக் கொண்டிருந்த போது சந்தித்த புதிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து விட்டன. இதைத்தான் இவ்வளவு காலம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்களா!
நேற்று மத்திய ரயில் நிலையத்தில் நிற்கும் போது பத்தே முக்கால் மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
'ஓ நெகடிவ் பிளட் குரூப் யாராவது தெரியுமா',
'ஓ தெரியுமே. நான் கூட ஓ நெகடிவ்தான். ஆனா கடைசியா ரத்தம் கொடுத்து மூன்று மாதம் முடிஞ்சிருக்காதே, பார்த்துட்டு கூப்பிடட்டுமா',
'இல்ல நாளைக்குக் காலைல ஆறரை மணிக்கு பிளட் வேணும்'
'வீட்டுக்குப் போய்ப் பார்த்து விட்டு பதினொண்ணரை மணிக்கு சொல்லி விடுகிறேன்'
சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைப்பு.
'95% தேவை இருக்காதாம். அறுவைச் சிகிச்சை நடக்கும் போது ஒரு அவசரத்துக்கு நீங்க வந்தா போதுமாம். இரண்டு மாதங்கள் ஆகியிருந்தாலே போதுமாம். வந்து விட முடியுமா!'.
'ஓகே, நோ பிராப்ளம். காலைல ஆறரை மணிக்கு வந்துடறேன்'
'இல்ல இல்ல, அஞ்சரை மணிக்கு ஆரம்பிக்கப் போறாங்களாம். உங்களுக்குத் தொந்தரவு தரதுக்கு சாரி. அஞ்சரைக்கு வர முடியுமா'.
'சரி வந்துடறேன்'
ரிப்பன் கட்டிடத்துக்கு எதிர் சாலை நிறுத்த விளக்கைத் தாண்டும் போது மீண்டும் தொலைபேசி.
'காலையில் உங்களை அழைத்து வர அனுப்பட்டுமா'
'இல்லங்க நானே வந்துர்றேன்.'
வீட்டுக்கு வரும் போது பதினொண்ணே முக்கால். தூங்கப் போகும் போது பன்னிரண்டு. கண்ணைச் சொக்கும் நேரத்தில் ஓரிரு முறை கண் விழிப்பு. அப்புறம் தூங்கி விட்டு விழிக்கும் போது அதிகாலை இரண்டரை மணி. இன்னும் ஒரு மணி நேரம் தூங்கி விட்டு நான்கு மணிக்கு எழுந்திருக்கலாம் என்று இழுத்துப் போர்த்திக் கொண்டால், அடுத்த விழிப்பின் போது நான்கு ஐம்பது நிமிடங்கள். கண்கள் எரிய எழுந்து, வாயில் பற்பசை நுரையோடு நிற்கும் போது தொலைபேசி அடித்தது.
'இழ்ழும் அங்சி நிமிசத்தில கிளம்பிர்றேன்' என்று சொல்லி விட்டாலும் வெளியே வண்டி எடுக்கும் போது 5.15 ஆகி விட்டிருந்தது. அதிகாலை சில்லென்ற குளிர். தலைக்கவசத்துக்கு மீண்டும் ஒரு நன்றி சொல்லிக் கொண்டே அதிகாலையிலேயே நடக்கக் கிளம்பி விட்டிருந்தவர்களைத் தாண்டி சாலையைப் பிடித்தேன்.
ராமாபுரம் திருவள்ளுவர் சாலையைத் தாண்டி மவுண்ட் சாலையில் ஏறும் போது அதிகாலை அசட்டையுடன் ஓட்டிய வண்டிகளைத் தாண்டி வேகம் பிடித்தேன். கண்ணாடியும் போட்டு, தலைக்கவச முக மறைப்பும் சேர்ந்து கொண்டால் எதிரில் வரும் வண்டிகளின் முகப்பு வெளிச்சம் கண்களை மறைத்து விடுகிறது. கத்திப்பாராவில் ஏதோ நினைவில் வாகனம் பார்க்காமலேயே தாம்பரத்திலிருந்து வரும் பாதையைக் கடந்து விட்டு அந்த நேரத்திலேயே போக்குவரத்துக் காவலர் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த ஈக்காட்டுத் தாங்கலிருந்து வரும் சாலையைக் கடந்து கிண்டி தாண்டும் போது ஒரு வழிப் பாதை நினைவுக்கு வந்தது.
அதிகாலை நேரத்தில் விலக்கு அளித்திருப்பார்கள் என்று ஒரு சின்ன நப்பாசை நடக்கவில்லை. விரட்டி விரட்டி ஆளுனர் மாளிகை அருகில் வலது பக்கம் திரும்பும் போது அகலமாகத் தெரிந்த திருப்பப் பாதை பயமுறுத்தியது. எதிரில் ஏதோ வண்டி வருகிறதோ என்று!
வேளச்சேரி சாலையில் திரும்பி போன தடவை வந்ததற்கு பெரிதும் மாறி விட்ட மேடு பள்ளங்கள் நீக்கப்பட்டு விட்ட சாலையில் ஒரு சாலை நிறுத்தத்தை தாண்டியதும் சந்தேகம் வந்து விட்டது. திரும்பியிருக்க வேண்டுமோ! இல்லையாம். நேராஆஆப் போனால் வேளச் சேரி பேருந்து நிலையம் வந்து விடும் என்று அந்த நேரத்தில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் வழி காட்டினார்.
தரமணி நோக்கிப் போகும் சாலையில் வலது பக்கம் இருக்கும் மருத்துவமனை என்று அடையாளம். கிட்டத்தட்டத் தவற விட்டு விட்டேன். குறுகலான நுழைவாயிலுடன், சின்ன பெயர்ப்பலகையுடன் ஒரு மருத்துவமனை.
அறுவைச் சிகிச்சை ஆரம்பித்து விட்டிருந்ததாம். கூட இருந்தவர் பேசப் பேச அவரது கனவுகள் விரிந்தன. இந்திய இளைஞர்கள் அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு அவரையும் உள்ளூருக்கு ஒரு பகுதியாவது வேலை செய்யச் சொல்லி விட்டு ஏழு மணி அடிக்கும் போது சிகிச்சை முடிந்து விட்டது, ரத்தம் தேவையில்லை என்று தகவல் வர நன்றி பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.
ஒன்பதரை மணிக்குச் சாப்பிட வரச்சொல்லியிருந்த இடத்திலும் அறுவைச் சிகிச்சை குறித்து பேச்சு. பேசும் போது இருமல் வந்து கொண்டே இருந்ததாம். ஆசிரியரான அவர் பாடம் எடுக்கப் போகும் போது தண்ணீர் குப்பியுடன்தான் போக வேண்டியிருந்ததாம். பிரபல மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்தால், உங்க கல்லீரல் பெரிதாகி விட்டது. மூக்கில் எலும்பு வளைந்து விட்டது. அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டியிருக்கும் என்றாராம் "மருத்துவர்". 'நானும் தயாராகி விட்டேன்'.
'உடனேயே மருத்துவமனையில் சேர்ந்து விடுங்கள். அறுவைக்கு நாள் குறித்து விடுவோம் என்று தொலைபேசி அழைப்புகள் பறக்கின்றன. ஒரு கட்டத்தில் மறுமுனையில் அறுவைக்குப் பிறகு தேறுவதற்குத் தங்கலுக்கு அறை இருக்காதே என்ற கேள்விக்கு, அதனால் என்ன வராந்தாவில் ஒரு கட்டில் போட்டுக் கொள்ளலாம் என்று கேட்டபிறகுதான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்'
இன்னொரு கருத்து கேட்டு விட்டு வருகிறோம் என்று வெளியே வந்தவர்கள் அந்தப் பக்கமே தலை வைக்கவில்லையாம் அவர்கள். இன்னொரு கருத்து சொன்ன மருத்துவர், 'வயதானால் கல்லீரல் மாறத்தான் செய்யும். மூக்கில் எலும்பு வளைந்து இருப்பதும் பெரிய தொல்லை கிடையாது' என்று சொல்லி விட இன்றைக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த நண்பர்.'
நான் வழக்கம் போல, 'கொலை கொலையாளிகள்' என்று ஆரம்பிக்கப் பார்க்கப் பேச்சை மாற்றி விட்டார்கள்.
வீட்டுக்கு வந்து குளித்து விட்டுக் கிளம்பி தியாகராயநகர். கடை கடையாக அலைந்து பொருள் பார்ப்பது சீக்கிரம் சோர்வடைய வைத்து விடுவது. அவ்வளவு கூட்டமும் ஒரு தாக்கமாக இருக்கலாம். 50% வரை தள்ளுபடி என்று வெளியே போட்டு விட்டு 5%லிருந்து ஆரம்பிக்கிறார்கள். இன்னொரு கடையில் 999 ரூபாய்க்கு மூன்று பேன்டு, மூன்று சட்டைகளுக்குத் துணி விற்கிறார்களாம். 'தீபாவளி வரை இந்தச் சலுகை விலை இருக்கும், நல்லா யோசிச்சு வந்து அப்புறமா வாங்கினாலும் போதும்' என்று அறிவுரை சொன்ன உண்மையான கடை ஊழியர். ஏற்கனவே மூன்று பேன்டுகள் ஆகி விட்டன. இதுவும் சேர வேண்டாம் என்று வெளியேறி விட்டோம்.
இட்லி அவிக்க தட்டு ஒன்று.
சாப்பாட்டுக் கடையில், 'பாம்பே மீல்ஸ், மெட்ராஸ் மீல்ஸ், டிஃபன் எல்லாம் மேலே போங்க. நிறைய இடம் இருக்கு, ஏசி.' என்றவர் 'டோக்கன் வாங்கினவங்க எல்லாம் அந்தப் பக்கம் போங்க' என்று கீழேயே வழி காட்டினார். கல்யாண வீட்டுச் சாப்பாட்டுக் கூடம் போல வரிசையாக மேசைகள் போடப்போட்டு, பிளாஸ்டிக் நாற்காலிகள்.
இரண்டு மணி நெருங்கும் போதும் நாலைந்து பேர்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடிக்கும் போது கூடம் நிறையும் அளவுக்கு ஆட்கள் வந்து விட்டார்கள். எல்லோருமே பொருட்கள் வாங்கிக் களைத்தவர்கள்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து நிற்கும் போது என்று இரண்டு முறை. டோக்கன் வாங்கிக் கொண்டிருக்கும் கணவனை ஆவேசமாக தான் இந்த மாதிரி கூடத்தில் சாப்பிட முடியாது என்று காசைத் திருப்பிக் கொடுக்க வைத்த இரண்டு திருமதிகள். அப்படியே மாடிக்கு இழுத்துப் போய் விட்டார்கள்.
பொதுவாக பெண்களுக்கு இது போன்று எளிமையான இடங்களில் சாப்பிடுவது விருப்பமாக இல்லை. தெருவோரக் கடையில் டீ குடிக்கப் போவதைக் குறித்து அப்பாவும் அம்மாவும் கடுப்பாவதைப் பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கு குறைவான விலையில் முடித்து விட வேண்டும். அம்மாவுக்கு அந்தக் கடையிலா என்று கடுப்பு.
ஒன்று, தூய்மையாக இருக்காது என்ற நியாயமான காரணம். தூய்மையாக இருக்கும் இடங்களிலும் சிறிய விடுதிகளில் பெண்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. அப்படி சின்னக் கடைகளில் நுழைந்தால் எல்லாம் ஆண்களாக இருப்பார்கள் என்றும் காரணம் இருக்கலாம்.
'நகையெல்லாம் போடாம போனா நம்மை ஒண்ணும் இல்லாதவங்க என்று மதிக்க மாட்டாங்க' என்பதும் ஒரு பொதுவான கருத்தாக இருக்கிறது.
'இப்ப எல்லாம் கிரெடிட் சிஸ்டம் வந்திருச்சி. நாங்க போடுறதுதான் மதிப்பெண். தேர்வு வைத்தாலும் சரி, அப்படியே போட்டாலும் சரி, ஆசிரியர் கையில்தான் எல்லா பவரும். இதப் பயன்படுத்தி வகுப்பில் 60 மாணவர்களிடம் ஆளுக்கு 3000 ரூபாய் வாங்கி விடுபவர்களும் உண்டு'
'ஆம்பிளைங்கல்லாம் மோசம் கிடையாது. உங்க கிட்ட படிச்சவன் 50000 ரூபாய் சம்பளம் வாங்க ஆரம்பிச்சிட்டான். நீங்க இன்னும் அந்தப் பிச்சைக் காசைத்தான் சம்பளமா கொண்டு வரீங்க என்று மூக்கைச் சிந்துவது யார்' என்று அருகில் இருந்தவர் ஒரு குத்து விட, அதில் இருந்த அடாவடியையும் மீறி ஒரு பகுதியினராவது அப்படி இருக்கும் கசப்பான உண்மை குத்தியது. தவறான வழியில் சம்பாதித்த கணவனை வெளியில் துரத்தினாள் மனைவி என்று இது வரை கேள்விப் பட்டிருக்கிறோமா?

புதன், செப்டம்பர் 19, 2007
மீண்டும் நிதானத்தில்
பதினேழாம் தேதி மதியம் பன்னிரண்டரை மணி வாக்கில் ரயில் சென்னை மத்திய ரயில் நிலையம் வந்து சேர்ந்து விட்டது. பைகளில் கனம் ஏறியிருந்ததால் ஆட்டோ பிடிக்கு முடிவு. வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தவற்றுடன் கூடவே வழியில் வாங்கியிருந்து பத்து கொய்யாப் பழங்களும் சேர்ந்திருந்தன. பத்து ரூபாய்க்கு நான்கு என்று நன்கு கனிந்த பழங்கள். சிலருக்கு காய் வெட்டாகப் பிடிக்கும், சிலருக்குப் பழுத்த பழங்கள் பிடிக்கும். எனக்குப் பழுத்தவைதான் பிடிக்கும்.
அலுவலகத்தில், சாப்பிடுவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நண்பர் ஒருவர் கொய்யாப் பழம் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுவேன் என்று சொன்னது நினைவில் இருக்க கூடையில் பார்த்தவுடன் வாங்கிப் போட்டுக் கொண்டேன். மட்டிப் பழங்களில் நசுங்கியிருந்த சிலவற்றை சாப்பிட்டு விட்டிருந்தேன்.
பசிக்கு இடைக்கால நிவாரணமாக ஹாட் பிரட்சில் ஒரு டோநட், வெளியே முன்பதிவு ஆட்டோ நிலையத்தை அணுகும் முன்பாகவே வந்து கேட்டவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டாலும், மிக அருகில் வைத்து ஒருவர் போட்ட தூண்டிலில் விழுந்தேன். 'விருகம்பாக்கம்தானே' என்று சரியாகப் போகும் திசையை ஊகித்து விட்டதால், அந்தப் பக்கத்துக்காரர், அவரது வண்டியில் போனால் அவருக்கும் பலன் என்று, அவர் சொன்ன பலகையில் எழுதியிருக்கும் அதே கட்டணம் பேசி ஏறிக் கொண்டேன்.
நல்ல பண்பான ஓட்டுநர். எல்லா சாலை நிறுத்தங்களிலும் ஒழுங்காக நிறுத்திப் போனார். வண்டியில் அனாவசியமான சத்தங்கள் இல்லாமல் சீராகப் போனது. வழியில் பேச்சுக் கொடுக்க மிக விபரமாக ஆட்டோ அரசியல், பொது நடப்புகளைப் பற்றிப் பேசினார். இறங்கியதும் 150 ரூபாய் கொடுத்ததில் 140 போக 10 ரூபாய் மறு பேச்சு கேட்காமல் கொடுத்து விட்டு நன்றி கூறிக் கிளம்பி போனார்.
'மீட்டர் எல்லாம் போட்டு ஒழுங்கா ஆகிட்டா. மெட்ராஸில பெங்களூரை விட நல்லா வருமானம் வரும் சார். இப்ப எல்லாம் காசு நல்ல புரளுது. இன்னும் பல ஆயிரம் ஆட்டோக்கள் விட்டாலும் வாய்ப்பு குறையாது.' புதிய மின்னணு அளவைமானி பொருத்தப்பட்டிருந்தாலும் இன்னும் இயக்கப்பட்டிருக்கவில்லை. நல்ல மனிதரைப் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.
வண்டி அலுவலகத்தில் இருக்கும். அங்கு போய் அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போய் குளித்து விட்டு வரலாம் என்று அலுவலகம் போய் விட்டேன். நான்கு நாட்கள் தாடி. இரண்டு மாதங்களுக்கு முன் வெட்டி காடாக வளர்ந்து விட்டத் தலைமுடி, 17 மணி நேரப் பயணத்துக்குப் பிறகான முகம் என்று பூச்சாண்டியைப் பார்த்தது போல எல்லோரும் பயந்து கொள்வது அவர்கள் முகங்களில் தெரிந்தது. அலுவலகத்தில் சேர்க்க வேண்டிய பொருட்களை விட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
நண்பரின் குடும்பத்தினர் பையனின் பள்ளி விடுமுறைக்குச் சென்னையில் நேரம் செலவழிக்க வந்திருக்க மதியச் சாப்பாடு அவர்கள் செய்து வைத்திருந்தது கிடைத்தது. பேசிக் கொண்டே சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் காலை நனைத்து, குதித்து விட்டேன். மாலையில் சீக்கிரம் வீட்டுக்குப் போகத் திட்டம். அப்புறமாகப் பார்த்தால் மூன்று பேர் சேர்ந்து கொடுக்கும் மாலை உணவும் அன்றுதானாம். அதைத் தியாகம் செய்து விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுச் சீக்கிரமாகத் தூங்க ஆயத்தமாகி 9 மணிக்குத் தூங்கி விட்டேன்.
காலையில் விழிப்பு சீக்கிரமாக வந்தாலும் ஆறு மணி வரை புரண்டு கொண்டிருந்த பிறகுதான் எழுந்திருக்க முடிந்தது. கடைவாய்ப் பல்லின் அடுத்த நிலை பெயரலுக்கு அச்சாரமாக வலித்துக் கொண்டிருந்ததை பல் தேய்க்கும் போது தட்டிக் கொடுத்து விட்டு துணிகளை மடித்து ஒழுங்கு படுத்திக் கொண்டேன். தரை தூத்து, ஓரிரு பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டுக் குளித்துத் தயாராகி விட்டேன். சப்பாத்தி மாவு பிசைந்து வைத்திருந்ததைப் போட்டுக் கொடுத்து விட்டுச் சாப்பிட்டு எட்டே கால் மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம்.
அலுவலகத்தில் ஏழு மணிக்கு வரத் திட்டமிட்டிருந்தவர்கள் வேலை ஆரம்பித்திருந்தார்கள். மூன்று நான்கு பேருக்கு கணினி இருக்கைகள் போதவில்லை என்பதால் நான்கு+ நான்கு பேரை இரண்டு நேரப் பகுதிகளில் வரத் திட்டமிட்டிருந்தோம். காலை 7 முதல் மதியம் 3 வரை ஒரு பிரிவு, மதியம் 1 முதல் இரவு ஒன்பது வரை இரண்டாவது பிரிவு. இட நெருக்கடியும் குறைவாக இருக்கும். வியாழக் கிழமையே விவாதித்து யாரும் நடைமுறைப்படுத்தலைச் செய்து விடாமல் இருக்க திரும்பி வந்ததும் நானே செய்து விட்டேன்.
இந்த முறையைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் இரண்டு பிரிவிலும் சேர்ந்து கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள முடிவு செய்தேன். பேசும் போதே, பலருக்கு காலையில் சீக்கிரமாகவே ஆரம்பித்து நாள் முழுவதும் வேலை செய்யத்தான் விருப்பம்.
மின்னஞ்சல்கள், சீன மொழி மொழி பெயர்ப்பு, 10-15 நிமிடங்களில் நான்கு நாட்களாக எழுதி வைத்திருந்ததைப் பதித்து விட்டு ஒன்பதரை மணிக்கு தயாராகி விட்டேன். மின்னஞ்சல்கள், பின்னூட்டங்களுக்கு மறுமொழி அளிக்க முடியவில்லை.
சிறு சிறு மேம்படுத்தல்கள், விவாதங்கள், திட்டமிடல் என்று நேரம் ஓடிப் போய் விட பதினோரு மணி தாண்டி செவ்வாய்க் கிழமை பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தன. கற்றலும் கற்பித்தலும் ஒவ்வொருத்தரை எப்படி எல்லாம் பாதிக்கின்றன. சிலர் தூங்கி வழிகின்றார்கள். சிலரின் முகத்தில் ஏதோ பரபரப்பான உணர்வுகள், புதிய கதவுகள் திறப்பது போல.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்று மணிக்குச் சந்திப்பதாகப் பேசியிருந்தவருடன் விவாதிக்க வேண்டிய ஆயத்தம் முடித்து விட்டு. அவருக்குத் தொலை பேசினால் நான்கு மணிக்குப் பிறகு வரச் சொன்னார். மூன்றேகாலுக்கு கருப்புக்கட்டி காபி ஒன்று குடித்து விட்டுக் கிளம்பும் போது மழை தூறிக் கொண்டிருந்தது. நின்று விடவே வண்டியிலேயே கிளம்பினோம்.
அண்ணா நகர் வளைவுக்கு அருகில் வரும் போது தூறல் பலத்து விடவே மேலே தெரிந்த ஒற்றை கார்மேகத்தைப் பார்த்து இந்த இடத்தைத் தாண்டி விட்டால் போதும் என்று தலைக் கவசம், மழை அங்கி மாட்டிக் கொண்டு போய் விட்டோம். நாலரைக்கு ஆரம்பித்து ஒவ்வொரு குழுவாக ஏழரை வரை சந்திப்புகள். பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் இருக்கும் பள்ளியில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா ஆறரை மணிக்கு என்று பார்த்திருந்ததால் திரும்பும் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையை விட்டு விலக முடிவு செய்தோம்.
எழும்பூர் திரும்பும் மேம்பாலத்தில் இடது புறமாகத் திரும்பி காவல் துறை ஆணையாளர் அலுவலகம் வழியாக அருங்காட்சியகத்துக்கு எதிரிலான மேம்பாலத்தில் ஏறி நுங்கம்பாக்கம் வந்தோம். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் திரும்பும் போது மட்டும் கொஞ்சம் நெரிசல். அதன் பிறகு ஸ்டெர்லிங் சாலை, அங்கிருந்து மகாலிங்கபுரம் வழியாக கோடம் பாக்கம் மேம்பாலத்துக்கு ஏறும் வழியிலும், அந்தப் பாலத்திலும், ஆற்காடு சாலையிலும் அதிசயமாக நெருக்கடியே இல்லாமல் சாலை நிறுத்தங்களில் கூட அதிகம் நிற்க வேண்டியிராமல் அசோக் நகர் சாலை நிறுத்தம். கேகே நகர் வழியாக ஆழ்வார்த் திருநகர் அருகில் மீண்டும் ஆற்காடு சாலை.
எட்டரை மணிக்கு அலுவலகத்தில் நான்கு பேரின் வேலை தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்கள் உதவிகள் செய்து விட்டுப் பையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டோம்.
தமிழ்க் கம்பியூட்டர் மாத இதழில் பதிவர் பட்டறையில் வெளியிட்ட குறுந்தகட்டின் நகலை இலவசமாக வினியோகிக்கக் கொடுத்திருந்தோம். சிந்தாநதி தமிழ்நெட் 99 விசைப்பலகை பற்றி எழுதியிருந்த கணிச்சுவடி கட்டுரையும் வெளியாகியிருந்ததாம். பாலபாரதி பத்து நாட்கள் முன்பே வாங்கிப் பார்த்ததாகச் சொல்லியிருந்தார். நாமும் வாங்கிப் பார்ப்போம் என்று எண்ணம் வழியில் ஒரு கடையில் அதன் வெளித் தொங்கலைப் பார்த்ததும் செயல் வடிவானது.
பட்டறை அல்லது தமிழ் வலைப்பதிவர்கள் பெயரை குறிப்பிடாமலேயே குறுந்தகடு முகப்பு செய்து விட்டிருந்தார்கள். சரி, மக்களுக்குப் போய்ச் சேரும் நோக்கம் நடந்ததாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று சமாதானப் படுத்திக் கொண்டாலும், தொகுப்பு மற்றும் வடிவமைப்பு என்று அவர்களது மென்பொருள் குழுமத்தின் பெயரையே போட்டுக் கொண்டிருப்பதும் உறுத்தியது. இதழின் உள்ளேயும் படித்து விட்டு, இன்றைக்குத் தொலைபேசியில் கேட்டு விட வேண்டியதுதான்.
பரிகாரமாக அடுத்த இதழில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய கட்டுரை ஒன்று வெளியிடும் படியும், உபுண்டு லினக்சு குறுந்தகட்டை இலவசமாக வினியோகிக்க முன்வருமாறும் கேட்டுக் கொள்ளலாம்.
சாப்பாட்டைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று கை கால் கழுவி விட்டுப் படுத்து விட்டேன். இருட்டிய பிறகு சாப்பிடாமல் தூங்கினால் நல்ல தூக்கம் வந்து அதிகாலையில் விழிப்பு வந்து விடும் என்பது சரியாகத்தான் இருக்கிறது. இரண்டரைக்கு விழிப்பு வந்த போது சோம்பலாகப் புரளச் சொல்லாமல் எழுந்திருக்க முடிந்தது.
இதை முடிக்க நாலே கால். ஏழு மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பும் படி வேலைகளை முடிக்க வேண்டும். துணிகளை ஊற வைத்திருப்பது, தரை துடைத்து பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டிருப்பது எல்லாவற்றுக்கும் நிவாரணம் கிடைத்து விட வேண்டும். முடி வெட்டுவதற்கு இந்த வார இறுதியிலாவது மனம் வைத்து விட வேண்டும்.
10 நிமிடம் ஒதுங்க வைத்தல், 10 நிமிடங்கள் தரை தூய்மை, 20 நிமிடங்கள் துணி துவைப்பு, 20 நிமிடங்கள் தரை துடைப்பு, 20 நிமிடங்களில் குளித்துத் தயாராகி விட்டால் 20 நிமிட தியானத்துக்குப் பிறகு ஆறு மணிக்கு புறப்படத் தயாராகி விடலாம். சாப்பிட்டு விட்டுக் கிளம்பினால் ஏழு மணிக்கு முன் அலுவலகம் போய்ச் சேர்ந்து விடலாம்.
போற்றுவாரைப் போற்றும் அதே நேரம் வழி மாறி நடப்பவரை வேறு வழி பார்க்க அனுப்புவதும் தேவைப்படத்தான் செய்கிறது. இன்றைக்கு அந்த பணி ஒன்று இருக்கிறது. சேரும் போதே எச்சரிக்கையுடன் சேர்த்து, ஒரு மாத சோதனைக் காலத்திலும் பல முறை எச்சரித்து வேலை கடிதம் கொடுப்பதைத் தள்ளிப் போட்டு, ஒரு சில தடவை விவாதித்த பிறகும் வெளிப்படையான மாற்றங்கள் தெரியவில்லை. ஒரு நாள் விடுப்புக் கேட்டுப் போனவர் நேற்றும் அலுவலகத்துக்கு வரவில்லையாம். இன்னும் பணி நிரந்தரம் ஆகாத நிலையிலேயே இவ்வளவு பிடிப்பு என்றால் போகப் போக என்ன சிக்கல்கள் வந்து சேருமோ!
நேற்றைய சந்திப்புகளின் விபரங்களுக்கு மின்மடல்கள். வெள்ளிக் கிழமை சந்திப்புகளுக்கான தயாரிப்புகள். நிரல் எழுதுதல். பயிற்சி அளித்தல் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இன்றும் நாளையும் தம் பிடித்து இந்த மாதப் பணி முடிப்புகளுக்கு சுவர் எழுப்பி விடலாம்.
விளம்பரம் செய்ய, தோல் துறை தொடர்பான காட்சிகளில் இடம் எடுக்க பொருள் உதவி செய்வதாக ஒருவர் பேச வந்தார். அவருக்குக் கையில் இருக்கும் பணத்தை வெவ்வேறு இடங்களில் போட்டு ஒன்றில் குறைந்தால் இன்னொன்றில் அதிகமாக அள்ளி விட ஆர்வம். ஒன்று, நீங்கள் செலவழித்து விட்டு தொடர்ந்து வரும் ஆண்டு வருவாயில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளுங்கள், அல்லது கடனாகக் கொடுத்து விட்டு ஒரு ஆண்டு கழித்து வட்டியுடன் பெற்றுக் கொள்ளுங்கள், அல்லது முதலீடாகப் போட்டு விட்டு லாபம் வரும் போது பங்குத் தொகை பெற்றுக் கொள்ளுங்கள் என்று நமக்கு நியாயமாகப் பட்ட வழிமுறைகளைச் சொன்னால் அவர், மூன்றையும் இணைத்து, மூன்றிலும் தனக்குச் சாதகமான கூறுகளை இணைத்து தரச் சொல்கிறார்.
பணம் செலவழிக்கிறேன் (1), ஒரு ஆண்டுக்குள் பணம் திரும்பி வந்து விட வேண்டும் (2), கூடவே வருவாயில் ஒரு பகுதியும் தர வேண்டும் என்பது அவருக்கு சாதகமாக இருந்தாலும் அடாவடி இல்லாத பேரம் பேசுதல்தான். நண்பருடன் விவாதிக்கும் போது 'அவரிடம் மறு பேரத்தில் இறங்காமல் இப்போதைக்கு உங்கள் பணம் வேண்டாம், ஆறு மாதம் ஒரு ஆண்டு கழித்து இன்னும் திடமான நிலையில் உங்களிடமிருந்து முதலீடாகப் பெற்றுக் கொண்டு இத்தனை சதவீதம் ஆதாயம் என்று விளக்கிக் கொடுத்து விடுகிறோம்' என்று சொல்ல முடிவு செய்து கொண்டோம்.
வயது, அனுபவம் பார்க்காமல் நன்றாக பணி ஆற்றுபவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது நல்ல உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. பல இழப்புகளைச் சந்தித்துக் கற்றுக் கொண்ட பாடம். ஒரே நேரத்தில் ஒரே தகுதியுடன் சேர்ந்த இரண்டு பேரில் ஒருவர் அதிகமாக முன்னேறும் போது அதற்கேற்ற பலன்களை அவருக்கு மட்டும் கொடுத்தால் மற்றவரின் மனம் வருத்தப்படுமே என்று இரண்டு பேரையும் ஒரே தட்டில் வைத்துக் கொண்டால் பல பாதிப்புகள்:
1. தகுந்த ஊக்குவிப்புக் கிடைக்காமல் முதலாமவர் வருத்தப்படுவார்.
2. இரண்டாமவர் கூட நமக்கு உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்து விடாது என்று புரிந்து கொள்வார்.
3. புதிதாகச் சேருபவர்களுக்கு அதிக முயற்சி அதிக பலன் என்ற செய்தி போய்ச் சேராது.
அண்ணன் கல்யாணத்துக்குப் பொறுப்பேற்று வேலைகள் பார்க்க வேண்டும், திருப்பதி போக நான்கு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டும், சில நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய் விட்டது என்று ஒருவர். அது அவரது விருப்பம். வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்து கொள்கிறார். ஆனால்... அதற்கேற்ற விளைவுகளுக்குத் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

லேபிள்கள்:
சுயமுன்னேற்றம்,
நிறுவனம்
செவ்வாய், செப்டம்பர் 18, 2007
மாறாதவை
காலை ஐந்தே முக்கால் மணி. ரயில் ஏதோ இடத்தில் நின்றிருக்கிறது. நிதானமாக, வழி கிடைக்கும் வரை காத்திருந்து நகர்ந்து கொண்டிருக்கிறது ரயில். 920 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க இரவு 7.40க்குப் புறப்பட்டு அடுத்த நாள் மதியம் பன்னிரண்டரை மணிக்கு சென்னை அடைய வேண்டும் என்பது நேரத் திட்டம்.
இப்போது விட்டுச் செல்லும் ரயில் நிலையத்தின் பெயர் கொடுமுடி என்று தெரிகிறது. திருச்சி வரை நாகர்கோவில் - சென்னை நேர்வழியில் வந்து அங்கிருந்து கிளைப்பாதையில் திரும்பி, கரூர், சேலம், ஈரோடு தொட்டு அப்படியே ஜோலார் பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, வாலாஜா, அரக்கோணம், திருவள்ளூர் என்று சென்னை சென்ட்ரலைப் போய்ச் சேரும். இடையில் இருக்கும் மற்ற ஊர்களின் பெயர் தெரியாது.
நேற்றுக் காலையில் எழுந்திருக்கவும் நேரம் ஓடி விட்டது. ஆறு மணிக்கு மேல் எழுந்திருந்து, முந்தைய இரவு சாப்பிடாமல் படுத்திருந்த வயிறு இதமாகி விட கீழே இறங்கி பல் தேய்த்துத் தண்ணீர் குடித்துக் கொண்டேன். ஒரு அறையில் தரையில் பரப்பியிருந்த பொருட்களை மேலே ஏற்றி வைக்கும் வேலை. சாமான் வைக்கும் தட்டில் பழைய செய்தித் தாள்களை விரித்து, ஒவ்வொன்றாக மேலே ஏற்றினேன்.
அதன் பிறகு மாடிக்கு மீண்டும் போய் ஒரு மணி நேரம் எழுத்து. கீழே வந்தால் ஞாயிற்றுக் கிழமை சிறப்பு உணவான உளுந்தங் கஞ்சியும் தேங்காய்த் துவையலும். உளுந்தங்கஞ்சிக்குப் போட தேங்காய்த் துருவி விட்டு சிறிது நேரத்தில் சாப்பாடு. ஒரு சட்டையும் பேன்டும் எடுத்துத் தர வேண்டும் என்று அம்மாவுக்கு விருப்பம். அப்பாவும் நானும் கிளம்பி, மழை தூறிக் கொண்டிருந்ததால் இரு சக்கர வண்டியை விட்டு விட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தோம். அங்குக் காத்திருக்கும் போது அந்தப் பக்கம் வசிக்கும் ஒருவர் இரண்டு கைகளிலும் இரண்டு காய்கறிப் பைகளை சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தான்.
நின்று சில நிமிடங்கள் பேசி விட்டுத்தான் நகர்ந்தார். பேருந்து வருமோ வராதோ என்று கன்கார்டியா பள்ளி அருகில் போக நடக்க ஆரம்பித்தோம். அந்த சாலையின் முனையை சேரும் போது பேருந்தே எதிரில் வந்து விட்டது. அந்த முனையில் அரண்மனை போல ஒரு வீடு கட்டியிருந்தார்கள். அதைப் பற்றி அப்பாவிடம் கேட்க நினைக்கும் போது பேருந்த வந்து விடவே அது தடைப்பட்டு விட்டது.
பேருந்தில் ஒரே ஒருவர். நாங்கள் ஏறியதும் மூன்று பயணிகள். ஆளுக்கு ஒரு இருக்கையாக உட்கார்ந்திருந்தோம். அதன் பிறகும் நிறைய பேர் ஏறி விடவில்லை. பள்ளியில் படிக்கும் போது 10 ஆண்டுகள் நடந்தும், பேருந்திலும், மிதிவண்டியிலும் கடந்த பாதைகள். அப்போதெல்லாம் ஏதோ விரிவாகப் பட்ட தெருக்கள் இப்போது குறுகலாக தெரிகின்றன. பேருந்து சிரமப்பட்டுத்தான் நுழைந்து போய்க் கொண்டிருந்தது.
இந்துக் கல்லூரி அருகில் திரும்பும் போது அரவிந்தன் நீலகண்டன் நினைவு வந்தது. அவர் சுட்டிக் காட்டியபடி அவியல் தின்று கொண்டு, பட்டுப் புடவையும் நகைகளும் மினுக்கிக் கொண்டு கொடை கொண்டாடும் கூட்டங்களாகவே மக்கள் இருக்கிறார்கள். வேப்ப மூடு சந்திப்பில் இறங்கி நேதாஜி என்ற துணிக் கடைக்குள் போனோம்.
இந்தக் கடைக்குள் முதல் முதலில் போவதாக நினைவு. சின்ன வயதில் துணி எடுப்பது என்பது தீபாவளிக்கு அப்பாவும் அம்மாவும் போய் எல்லோருக்கும் துணிகளாக எடுத்து தையல்காரரிடம் கொடுத்துத் தைத்து வாங்கிக் கொள்வது. அவர்கள் நல்லபெருமாள் பைகளுடன் வருவார்கள். இந்த நேதாஜி கடை பெரிதாக இரண்டு மாடிகளில் இருந்தது. கீழ்த் தளத்தில் பெண்களுக்கான துணிகள், ஆண்களுக்கான உடைகள் இரண்டாவது மாடியில். அதற்கு மேல் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.
சீரோ என்று பெயர் பொறித்த பேன்டு ஒன்றும், அதைத் தொடர்ந்து சட்டையும். அப்படியே அப்பாவுக்கும் ஒரு சட்டை. கீழே வந்து பணம் கட்டி விட்டுத் திரும்பும் போது பொதிகளை அனுப்பி விட்டிருந்தார்கள். அதைச் சரிபார்த்து பையில் போட்டுக் கையில் கொடுத்து விட்டார் கடை ஊழியர்.
அங்கிருந்து ஒரு குறுக்குச் சந்து வழியாக மணிமேடையிலிருந்து வேப்பமூடுக்குப் போகும் சாலையை அடைந்தோம். வேப்பமூடு சாலை நிறுத்தத்தில் வந்து நின்று பார்வதிபுரம் பேருந்தில் ஏறிக் கொண்டோம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் இறங்கி லின்ஸ் என்ற அங்காடியில் மட்டிப் பழம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வேறு வண்டி பிடித்துக் கொள்ளலாம்.
பேருந்தில் இருக்கும் போதே தொலை பேசி அழைப்பு. கீழே இறங்கி அவர்களை அழைத்துப் பேசி விட்டு லின்ஸுக்குள் நுழைந்தேன். சென்னையின் புட் வேர்ல்டை விட விரிவாக வைத்திருக்கிறார்கள். நிறைய பேர் வந்து போவதாகவும் தெரிந்தது. ஆரம்பித்து நாலைந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று அப்பாவின் குறிப்பு.
வாழைப்பழம், காய்கறிகள், எள்ளுருண்டை, பற்பசை வாங்கிப் பணம் கொடுத்து பையை வெளியே வைத்து விட்டு மீண்டும் கடைக்கு உள்ளே போனோம். கடைசியில் தேநீர் கடை ஒன்று வைத்திருந்தார்கள். அங்கு உட்கார்ந்து கொண்டே நடக்கும் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே மாவு அரைத்து பைகளில் அடைப்பது போலத் தோன்றியது. தேநீர் நல்ல கடுப்பமாக, செறிவான பால் சுவையுடன்.
அங்கிருந்து வெளியேறி பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பு. வீட்டுக்கு அருகில் வரை போகும் பகிர்வூர்தி வர அதில் ஏறிக் கொண்டோம். அதுவும் மூன்று பேருடன் ஓடி, ஐஎஸ்ஆர்ஓ குடியிருப்பிற்கு அருகில் விட்டு விட்டார்கள். பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பிக்கலாம் என்று ஒதுக்கி கணினியையும் அணைத்து வைத்து விட்டேன். துணிகள், எடுத்துப் போக வாங்கியிருந்த தின்பண்டங்கள் என்று பைகளில் அடுக்க ஆரம்பித்தேன். நேயர் விருப்பமாக மட்டிப் பழமும், முறுக்கும் கொண்டு போக வேண்டும். ரயிலுக்குப் போகும் வழியில் முறுக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டம்.
சிறிது நேரம் தொலைக்காட்சி. மதியம் சாப்பிட்ட பிறகு முந்தைய நாள் காய்ச்சி இனிப்பு போட்டு வைத்த பாலில் உறை ஊற்றிய மோரைக் குடித்து விடச் சொல்லக் குடித்தும் விட்டேன். அதன் குளிர்ச்சி பிடித்திருந்த சளியை இன்னும் தீவிரமாக்கியது.
தொலைக் காட்சியில் ஆயுத எழுத்து என்ற படம் ஒரு ஓடையில், லிட்டில் ஜான் என்று ஒரு படம், விஜய் நடித்த படம் அதற்கு முன்பு, சந்திரமுகி பட வெற்றி விழாத் தொகுப்பு, யார் பையன் என்ற படத்தைப் பற்றிய பரிந்துரைகள் என்று மாறி மாறி ஓடியது. இடையில் பாத்திரங்களையும் தேய்த்து வைத்துக் கொண்டேன். அம்மா தோசை மாவு அரைக்க எந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த சத்தத்துக்கிடையே பேசிக் கொண்டிருந்தோம்.
தொலைக்காட்சி ஓய்ந்திருக்க அப்பாவும், அம்மாவும், நானும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மூன்றாவது வீட்டுத் தாத்தா வந்தார்கள். மிக இளைத்து சோர்ந்து போயிருந்தார்கள். குளிர் தாங்க முடியவில்லையாம். கம்பளி உடைகளை போட வேண்டியதுதானே என்று கேட்டால், பார்ப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை. அதனால் குளிரைத் தாங்கிக் கொள்ளலாம் என்று வழக்கமான உடையிலேயே வெளியே உலாவப் போகிறார்கள். கம்பளியில் ஒரு மேல் சட்டை, கம்பளி காலுறைகள், கம்பளி தலைக் குல்லா ஒன்று போட்டுக் கொண்டால் வெதுவெதுப்பான அறை ஒன்றை கூடவே உலாவ அழைத்துப் போகலாம்.
ஆறு மணி அடித்து விட்டிருந்தது. அவித்திருந்த இட்லிகளில் சிலவற்றைச் சாப்பிட்டு விட்டு, காலையில் சாப்பிடப் பொதிந்ததையும் எடுத்துக் கொண்டு பைகளை தயார் செய்து வைத்து விட்டுக் ஆறரைக்குக் கிளம்பினோம். போன தடவை வந்த போது விட்டுப் போயிருந்த கம்பளி காலுறை கிடைத்தது. அதன் உதவியால் இரவு முழுவதும் குளிரைக் குறைத்து சளிக் கட்டலை மோசமாகாமல் போகும் படிப் பார்த்துக் கொள்ள முடிந்தது.
வழியில் முறுக்கு விற்கும் வீட்டில் முறுக்குகளை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு ஏழு மணிக்கு முன்பே வந்து சேர்ந்து விட்டோம். தொடுதிரைக் கணினியில் பதிவு நிலவரம் பார்த்தால் இன்னும் படுக்கை வசதி உறுதியாகியிருக்கவில்லை. S1ல் 39ம் இருக்கையில் ஏதாவது ரத்தானால் படுக்கை என்ற நிபந்தனையிலான இடம். ரயில் வந்து நின்று பெட்டிகளில் விபரங்களை ஒட்டி ஏறி உட்கார்ந்தால் எல்லா இடங்களும் காலியாக இருந்தன. 39ம் எண்ணில் ஈரோடு கல்லூரிக்குப் போகும் ஒரு மாணவன்.
என்னோடு பாட்டுப் பாடுங்கள் என்று எஸ் பி பாலசுப்பிரமணியன் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு கல்லூரி மாணவன் சின்ன வயசிலேயே பாட்டுக் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன் என்றதும். இப்ப மட்டும் என்ன வயசான தாத்தாவாகிட்டீங்களோ என்று கிண்டலடித்தார் அவர். கல்லூரி மாணவர்களைப் பார்க்கும் போதும் அவர்களை சிறு குழந்தைகளாகப் பார்க்கும் பழக்கம் வந்து விடவில்லை. இன்னும் இளைஞன்தான்.
திருநெல்வேலி வரை எதிர்ப்புறம் யாருமில்லாத இருக்கையில் படுத்துக் குட்டித் தூக்கம் போட்டேன். திருநெல்வேலியில் எல்லாம் நிறைந்து விட்டது. பாளையங்கோட்டையில் சுவிசேஷ மாநாடு முடித்துக் கொண்டுத் திரும்பும் 15 பெண்மணிகளுக்கான முன்பதிவில் 34, 35, 36 மூன்றும், 37, 38ல் தென்காசியிலிருந்து வந்து வண்டி பிடிக்கும் சென்னை வரைச் செல்லும் இரண்டு பேர். 33க்கும் ஒருவர் வந்து விட்டார். 15 பேரில் யார் எந்தப் பெட்டியில் உட்காருவது என்று குழம்பி நிலை பெறுவது வரை வேடிக்கையாக இருந்தது.
தென்காசி இளைஞர்களில் ஒருவர் ராணிப்பேட்டை யுனைட்டட் பவுண்டரியின் அசோக் லேலண்ட் நிறுவன ஒருங்கிணைப்பாளராக சென்னையில் வேலை செய்கிறாராம். இன்னொருவர் நல்ல வாயாடி. கட்டடத் துறையில் என்று சொல்லிக் கொண்டு பேசிக் கொண்டே வந்தார். குற்றாலம் சாகசங்களை மூன்று பெண்களுக்கும் கதை சொல்லிக் கொண்டே வர எல்லோரும் வாய் திறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.
பத்து மணிக்கு மேல் அப்படியே உட்கார்ந்து தூங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்று இரண்டு பேரும் காலை நீட்டிப் படுத்த சிறிது நேரத்தில் ரயில்வே அலுவலர் வந்து படுக்கை எண் குறித்துக் கொடுத்து விட்டார். கூட இருந்தவர் வேறு இடத்துக்குப் போய் விட கால் நீட்டி இழுத்துப் போர்த்தித் தூங்க ஆரம்பித்தேன். தூங்கித் தூங்கித் தூங்கி ஐந்தரை மணிக்கு விழிப்பு.
ஈரோடு வந்து மின்இழுவண்டி பொருத்திக் கொண்டு புறப்படும் என்று ஒருவர் சொல்லியிருந்தார். ஈரோட்டில் அரை மணி நேரம் நிற்குமாம். இப்போது ஈரோட்டில் நிற்கிறது.
வண்டி விழித்துக் கொள்ள ஆரம்பித்தது. ஈரோடில் இறங்க வேண்டியவர்களில் பலர் இறங்கிப் போய் விட இங்கிருந்து சென்னை போக வேண்டியவர்கள் பலர் ஏறிக் கொள்கிறார்கள். நாகர்கோவிலிலிருந்தே சென்னை வரை போவதற்கு இந்த வண்டியில் ஏறுபவர்கள் குறைவாகத்தான் இருக்கும்.
தமிழ் இணையம் குறித்து விருபா கேட்டிருந்த கட்டுரையை முடித்து விட வேண்டும். வந்த போது நினைத்திருந்த வேலைகளில் பயிர் மட்டும்தான் தொடவே இல்லை. பொருளாதாரப் புத்தகத்தின் வரைவைப் படித்து மேம்படுத்து நாலைந்து மணி நேரம் கிடைத்து விடும். கணினியில் மின்கலம் ஓய்ந்த பிறகு படிக்க வேறு எதுவும் எடுத்துக் கொள்வதில்லை என்பதால் இது மட்டும்தான் வேலையாக இருக்கும்.
நேற்றே தொலைபேசி தாமதமாகத்தான் வந்து சேருவேன் என்று சொல்லியாச்சு. காபி, சாயா என்று விற்பவர்களின் குரல்கள். கடகடவென்று மாவு எந்திரம் போல ஓடும் மின்விசிறிகள். 'ஓய்ந்து போன பெட்டிகளைத்தான் இந்த வண்டியில் இணைத்திருக்கிறார்கள்' கன்னியாகுமரி விரைவு வண்டியில் புத்தம் புதிய பளபளக்கும் பெட்டிகள் படுக்க உட்காரக் கிடைக்கும். இங்கு உடைந்த கதவுகள், இடைவெளிகளுடன் தரை, தாழ்ப்பாள் குளறுபடியான வெளிக் கதவுகள் என்று பழைய உணர்வைக் கொடுக்கும் பெட்டிகள்.
இந்தப் பெட்டிகளையும் ஓட்டுவதற்கு இடம் வேண்டுமே! நீண்ட தூரம் பயணிக்கும் போது வசதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எது எப்படியோ இரவில் நல்ல தூக்கம். ஈரோட்டிலிருந்து சென்னை அல்லது காட்பாடி போக ஏறும் போது இருந்து நான்கு மணி நேரங்களைக் கழிக்க வேண்டும் என்றால் அதிகமாக அலட்டிக் கொள்ள மாட்டோம்.
யூகலிப்டஸ் தைலம் என்று விற்க ஒருவர் வந்து போக எங்கும் தைல மணம். அடுத்தது செய்தித்தாள் விற்பவர். எவ்வளவு உறுதியுடன் உட்கார்ந்திருக்கிறேன். 'I said வேண்டாம். he went away' பாரதி கடற்கரை மணலில் பெருமை முகத்துடன் சொன்னது படமாடுகிறது.

அரைகுறை அறிவியல்
நேற்று மதியம் மூன்றரை மணி வாக்கில் நான்கு இடங்களிலிருந்து தொலைபேசி அழைப்பு. நான்கில் இரண்டு ஒரே காரணத்துக்காக, அவர்கள் ஒரே நேரத்தில்தான் அழைப்பார்கள். அதே நேரத்தில் மற்ற இரண்டு அழைப்புகளும் வந்தது ஆச்சரியமான நிகழ்வுகள். நிகழ்தகவு கணக்கிட்டால் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.
உலகமே நிகழ்தகவின் அடிப்படையில்தான் இயங்குகிறது என்று வெப்ப இயக்கவியலில் விதிகளில் வேடிக்கையான ஒன்றான, 'நேரம் போகப் போக ஒரு அமைப்பின் ஓழுங்கின்மை அதிகரித்துக் கொண்டே போகும்' என்பதின் பக்க விளக்கங்கள். அந்த சமயத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருந்த மற்ற இயற்பியல் விதிகளைப் போல் இல்லாமல், இந்த விதி எல்லா சூழ்நிலைகளிலும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் செயல்படுவது இல்லை. பெரும்பாலான நேரங்களில் ஒழுங்கின்மை அதிகரிக்கும். ஒழுங்கின்மை அதிகரிப்பதற்கான நிகழ்தகவு, குறைவதற்கான நிகழ்தகவை விட மிக மிக அதிகம் என்று நிறுத்திக் கொள்கிறது.
ஒரு பெட்டிக்குள் 4 பொருட்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். 1, 2, 3, 4 என்ற வரிசையில் இருப்பது ஒழுங்கு என்று வரையறுத்துக் கொண்டால், 1 3 2 4, 1 3 4 2, 1 2 4 3, 1 4 2 3, 1 4 3 2 என்ற 24 முறைகளில் ஒன்றை ஒழுங்கு என்று வைத்துக் கொள்கிறோம். அந்த நிலையில்தான் நமக்குத் தேவையான பலன்கள் கிடைக்கின்றன. யாரும் கவனிக்காமல் விட்டு விட்டால், இயல்பாக நடக்கும் செயல்களால் பெட்டி அசைவதாலோ, நகர்வதாலோ உள்ளே இருக்கும் அமைப்பு மாறி விடும். அப்படி மாறும் போது 1 2 3 4 என்ற ஒழுங்கு ஒழுங்கின்மையாக மாற 23 வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்த அசைவில் 1 2 3 4 என்ற ஒழுங்கு அமைந்து விடும் வாய்ப்பு 24ல் ஒன்றுதான். அதனால்தான் மூடிய ஒரு அமைப்பினுள் ஒழுங்கின்மை அதிகரித்துக் கொண்டே போகிறது.
சரி போகட்டுமே, அதனால் நமக்கு என்ற வந்தது என்று கேட்டால், உயிர் அமைப்புகள் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவில் இருக்கின்றன. ஒழு புரத மூலக்கூறு உருவாக குறிப்பிட்ட எண்ணிக்கை கார்பன் அணுக்களும், குறிப்பிட்ட எண்ணிக்கை நீர்வாயு அணுக்களும், குறிப்பிட்ட எண்ணிக்கை உயிர் வாயு அணுக்களும், சிறு எண்ணிக்கைகளில் பிற அணுக்களும் திட்டமான வடிவில் ஒன்று சேர்ந்தாக வேண்டும். ஒவ்வொரு உயிர்ப் பொருளுக்கும் இந்த ஒழுங்கு தேவைப்படுகிறது.
கட்டற்ற முழு தன்னிச்சையான அமைப்பு என்று எதுவும் இருக்க முடியாது. ஏன் ஒழுங்கு வேண்டும்? ஒழுங்கை உருவாக்க ஆற்றலைச் செலவழிக்கிறோம். இயல்பான ஒழுங்கற்ற நிலையிலிருந்து ஒழுங்கு நிலைக்குப் போக வேலை பார்க்க வேண்டும். அந்த வேலையின் போது செலவாகும் ஆற்றலின் ஒரு பகுதி ஒழுங்காக்கப்பட்ட அமைப்புக்குள் பிடிபட்டு விடுகிறது.
ஒழுங்கை உடைக்கும் போது அந்த ஆற்றல் வெளிப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவில் தாவரங்கள் பிடித்து வைத்துள்ள ஆற்றல் நிலையான உயிர் மூலக்கூறுகளா உறைந்துள்ளது. ஏதாவது வேலை செய்யும் போது உணவின் சத்துக்கள் உயிர் வாயுடன் இணைந்து எரிந்து ஒழுங்கைக் குலைத்து ஆற்றலையும் ஒழுங்கின்மை அதிகமான சிறு மூலக்கூறுகளையும் வெளிப்படுகிறது.
ஒரு சர்க்கரை மூலக் கூறில் 10000 கரி மற்றும் நீர் வாயு அணுக்கள் இருந்தால் அது எரிந்த பிறகு நூற்றுக் கணக்கான நீர் மூலக்கூறுகளும், நூற்றுக் கணக்கான கரிவாயு மூலக்கூறுகளும் உருவாகி விடுகின்றன. கூடவே ஒழுங்கைப் பிடித்து வைத்திருந்த ஆற்றலும். ஆற்றல் நம் வேலையை நடத்த செலவழிந்து போகிறது. கரியும் நீரும் அடுத்த சுழற்சிக்கு தயாராக சுற்றுப் புறத்தை அடைந்து விடுகின்றன.
'கடவுள் பகடை ஆடுவதில்லை' என்று குவாண்டம் இயற்பியலின் ஆரம்ப கட்டங்களில் ஐன்ஸ்டைன் சொன்னராம். குவாண்டம் இயற்பியலிலும் எல்லாம் நிகழ்தகவுகள்தான். இந்த நேரத்தில் இந்த எலக்ட்ரான் இந்த இடத்தில் இருக்கும் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. இந்த இடத்தில் இருக்கலாம், அல்லது இல்லாமல் போகலாம் என்றுதான் சொல்ல முடியுமாம்.
அடிப்படை நிலையில் நம்முடைய தன்னிச்சையும் சுதந்திரமும் குவாண்டம் இயற்பியலின் இந்த நிச்சயமின்மை கோட்பாட்டைச் சார்ந்தே இருக்கின்றனவோ! இன்ன ஊரில், இன்ன நேரத்தில், இன்ன பெற்றோருக்குப் பிறந்தவர் இத்தனை ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்து கொண்டிருப்பார் என்று இன்றைக்குப் புரியப்பட்டுள்ள எந்த இயற்பியல் விதியும் கணிக்க முடியாது.
ஒவ்வொரு கணத்திலும் இயற்பியல் வரையறைகளுக்குட்பட்டு நாம் எடுக்கக் கூடிய முடிவுகளின் இறுதித் தன்மை நம் கையில்தான் இருக்கிறது. இப்படி பிறந்ததிலிருந்து கோடிக் கணக்கான முடிவுகளின் தொகுப்பை அலசிப் பார்த்தால் ஏன் இரண்டு பேர் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று புரிந்து கொள்ளலாம். ஒரே மாதிரியான இரட்டையர்களிடையே கூட வேறுபாடுகள் இருப்பது அவர்களை உருவாக்கும் உயிர்ப்பொருட்களின் தொடர்ந்த காலங்களில் மாறுபட்ட வழியிலான பயணத்தில்தான்.
இப்படி, தன்னுடைய சொந்த வாழ்வைக் கூட கணித்துச் சொல்லி விட முடியாத மனிதன், அப்படிச் சொல்வதற்கான அடிப்படைகளே இல்லாத உலகத்தில் எப்படி ஒரு பொருளாதார சமூகம் இப்படி நடந்து கொள்ளும் என்று கணித்து சொல்ல முடியும்.
இயற்பியலிலேயே ஒத்திசைவு என்று இன்னொரு நிகழ்வைப் பற்றிப் படித்த நினைவு. ஒரே அதிர்வில் பல ஒலிகள் வெளிப்படும் போது அவற்றின் தாக்கம் உச்ச நிலையை அடைந்து விடும் என்பதுதான் அதன் சாரம். இந்த இடத்தில் தமிழ் வழிப் புரிதல், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துதல் பற்றிய விவாதம் நினைவுக்கு வருகிறது. ஒத்திசைவு என்று சொன்ன உடனேயே ஒண்ணா சேர்ந்த நடப்பது என்று புரிந்து போகும். resonance என்று எழுதிப் படிக்க அழைக்கும் போது படிப்பவருக்கும் சொல்பவருக்கும் எவ்வளவு இழப்பு.
அந்த ஒத்திசைவின் காரணமாகத்தான், படை வீரர்கள் அணிவகுத்து ஒரே கதியில் நடந்தால் பாலங்கள் இடிந்து விடுமாம். அதனால் பாலங்களில் நடக்கும் போது படைவீரர்கள் சீரான நடையை கைவிட்டு விடுவார்களாம். இந்த பழக்கத்தை எப்படி படைப் பிரிவுகள் நடைமுறைப்படுத்துகின்றன என்று கேட்டுப் பார்க்க வேண்டும். அடுத்து வரும் தலைமுறையினருக்கு இந்த விதியை எப்படி கற்றுக் கொடுக்கின்றார்கள்? உலகின் இத்தனை படைப் பிரிவுகள் இருக்கும் போது ஒரு நாள் கூட படை வீரர்கள் நடந்ததால் ஒரு பாலம் இடிந்து போனது என்று செய்தி வருவதில்லையே, ஏன்?
ஒரு வேளை இன்றைய பாலங்களின் உறுதி இத்தகைய ஒத்திசைவுத் தாக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம். அல்லது கால்நடையாக பாலங்களைக் கடப்பது எல்லாம் நடக்காமலே இருக்கலாம். பழைய காலங்களில் காலாட்படை அணிவகுக்கும் போது, மரப் பாலங்கள் இருந்த போது இது பிரச்சனையாக இருக்கலாம்.
ஹேம்லினின் குழலூதியைப் போல தனது இசையால் கேட்கும் குழந்தைகளின் மனதை ஒரே அதிர்வில் இயங்கச் செய்து தன்னைப் பின்தொடரச் செய்யும் வாய்ப்புகள்தான் கூட்டு அமைப்புகள். ஆறேழு பேர் சேர்ந்து பதிவர் பட்டறைக்கு ஏற்பாடுகள் செய்யும் போது பொதுவான ஒரு குறிக்கோள் எல்லோரின் மனதையும் ஒரே திசையில் இயங்க வைத்தால் பணி நல்லபடியாக நடைபெறும். இடையில் குறிக்கோளைப் பற்றிய புரிதல்கள் வெவ்வேறாக இருந்தால் வாக்குவாதங்கள் ஏற்படலாம், அதைச் சரி செய்து விட்டால் மீண்டும் ஒத்திசைவு கிடைத்து விடும்.
ஒருவர் தனியே செய்வதை விட, இரண்டு பேர் ஒரே நோக்கத்துடன் செயல்படும் போது இரண்டு பேரின் கூட்டு முயற்சி தனி முயற்சிகளின் பலன்களை விடப் பல மடங்கு அதிகமாகி விடும். அதே இயற்பியலின் ஒத்திசைவுக் கோட்பாடுதான். எண்ணிக்கை கூட ஒத்திசைவின் தாக்கமும் அதிகமாகிக் கொண்டே போகும்.
அப்படிச் சேர்ந்து செயல்படும் போது எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் என்று கிடையாது. பல்வேறு பின்னணிகள், பல்வேறு அனுபவங்கள் கொண்டவர்கள் தம் போக்கில் பொதுக் குறிக்கோளைச் செயல்படுத்து முனையும் போது ஒத்திசைவின் தரமும், தாக்கமும் அதிகமாகும்.
எதிரான நோக்குடன் ஒருவர் சேர்ந்து கொண்டால் தாக்கம் குறைவதும் நடக்கும். நாட்டில் இருக்கும் 100 கோடி மக்களின் சிந்தனைகள் பல்வேறு முறைகளில், பல்வேறு பின்னணிகளில் இருந்தாலும், குறைந்த பட்ச பொது குறிக்கோள், உயர் நிலையில் வைத்துப் பார்க்கக் கூடிய குறிக்கோள் ஒன்று இருந்தால் நாடு முன்னேற ஆரம்பிக்கும்.
அதே கதைதான் ஒரு நிறுவனத்திலும், ஒரு குடும்பத்திலும். பொதுவான கொள்கைகள் (shared values) என்று மேலாண்மை கோட்பாடுகளில் குறிப்பிடுகிறார்கள். எந்த ஒரு அமைப்புக்கும் பொதுவான கொள்கைகள் இருந்தால்தான் அது நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும். அந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களின் தாக்கம் அதற்கு எதிரானவர்களின் தாக்கத்தை விட அதிகமாக இருந்தால், மாறி வரும் போக்குக்கேற்ப, சின்னச் சின்னச் சரிசெய்தல்கள் செய்து கொண்டே போனால் அமைப்பு நீடிக்கும். மாற்றம் என்பது மானிட தத்துவம் (கண்ணதாசன்). நான் மாறவே மாட்டேன் என்று சொல்ல முடிவது கற்கள் மட்டும்தான். அவை கூட நாட்பட நாட்பட தேயவும் இயல்பு மாறவும் செய்கின்றன.
சீனாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், ரஷ்யாவில் 70 ஆண்டுகள் இன்றைக்கு கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் கோட்பாட்டினரின் கொள்கைகளைச் செயலபடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆயுதம் தாங்கி புரட்சி நடத்தி எதிரிகளைக் கொன்று குவித்து அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தி சோவியத் அரசுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இரும்புத் திரையும் மூங்கில் திரையும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள் மக்களை பாதித்து விடாமல் பாதுகாத்தன.
ஏன் இரண்டு அமைப்புகளும் குலைந்து போயின? எதிர்ப்பவர்கள் உள்ளேயே என்றால் அவர்களை நம்ப வைக்க முடியாத, நம்பக் கூடிய மக்களின் உறுதியை அதிகரிக்க முடியாத அளவுக்கு பலவீனமான கொள்கைகளா சோவியத் வழிமுறை? லெனின் கிராடு என்பது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று மாற்ற எத்தனை நாட்கள் பிடித்தது? பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து ஒரு நாட்டின் மக்களை மாற்ற முடியவில்லையே!
எந்த மாதிரியான புதிய கலாச்சாரம் கொண்டு வர திட்டமிடுகிறார்கள் தோழர்கள்? இப்படி இருக்கும் நாங்கள் ஏற்படுத்தப் போகும் சமவுடமை சமூகம் என்று சுட்டிக் காட்ட முடியுமோ? ஏதாவது வறண்ட மொழிபெயர்ப்பில் சில நூறு பக்கங்களில் ஏதாவது மொழிபெயர்ப்புப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லாமல், அவர்களுக்குப் புரிந்ததை எளிய தமிழில் நமக்குப் புரியுமாறு விளக்க முடியுமா?
அமெரிக்கப் பொய்ப் பிரச்சாரம் என்றால் எப்படி அமெரிக்காவால் அது சாத்தியமாகிறது? ரஷ்யாவை விட அளவில் பெரியதா? இயற்கை வளங்கள் ரஷ்யாவுக்குக் குறைவா? அமெரிக்கர்களின் பிரச்சாரத்தை எதிர் கொள்ள முடியாமல் போனது சோவியத் அமைப்பின் பலவீனம்தானே! உள்ளூரில் நிலைமை நன்றாக இருந்தால் மக்கள் ஏன் வெளி நாட்டுப் பிரச்சாரங்களுக்குச் செவி சாய்க்கிறார்கள்?

அடுத்தது ஆரம்பிச்சாச்சு
செப்டம்பர் 15, 2007
சனிக் கிழமை, பிள்ளையார் சதுர்த்தி, வீட்டில் மேல் அறை பால் காய்ச்சுதல். நேற்று காலையில் நாகர்கோவில் வந்து சேரும் போது பத்து மணி தாண்டி விட்டிருந்தது. ஒரு ஆட்டோ பிடித்து வீட்டில் இறங்க 60 ரூபாய்கள், தூரம் 5 கிலோமீட்டர்தான். குளித்து விட்டு ஆப்பம். 'போன தடவை மெட்ராஸ் வந்திருந்த போது ஆப்பம் மாவு வாங்கி பண்ண முடியாமல் போச்சே, அதான் இன்னைக்கு நீ வரும் போது ஆப்பம், கடலைக் கறி' இது அம்மாவின் திட்டமிடல்.
காலையிலேயே வந்து விட்டிருந்த மேரி மேல் அறைகளை ஒதுங்க வைத்து தரையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் சாப்பிட்ட பிறகு மேரிக்கும் ஆப்பமும் கடலைக் கறியும். அப்போது வெளி வாசலில் ஒரு சிறுவன் தயக்கமாக நுழைந்தான். 'மாஸ்டர் வந்துட்டாரே' என்று அப்பா வரவேற்று சொல்ல, மேரியின் மகன் என்ற தகவல் கிடைத்தது.
நீ அப்படியே சுத்தி வா என்று பின் வாசல் வழியே வரச் சொன்னார் மேரி. என் முகம் மாறா விட்டாலும், 'அவன் செருப்பை போட்டுட்டு வருவான்லா, அதான் அப்படி வரச் சொல்றா' என்று அம்மாவின் அவசர சமாதானம். வாங்கிப் போயிருந்த கேக்கு பங்கு போடப்பட்டு எல்லோருக்கும் கிடைத்தது. அதற்குள் பையன் பின் வாசல் வழியாக வந்து விட்டான். வந்து செருப்பை வெளியே விட்டு விட்டுத்தான் நுழைந்தான். அப்போ.....
மேரி தான் அடுக்களையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை அப்படியே மகனுக்குக் கொண்டு போய், கொடுத்த கேக்குகளோடு பின் முற்றத்திலேயே உட்காரச் சொன்னாள். மாற்றி அமைக்கப்படும் வரை கழிவறை இருந்த இடத்துக்கு அருகில், சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் அந்தப் பையன். எனக்கு பாதி உயிர் போய் விட்டது.
நாக்கை அடக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழிந்து, அம்மாவிடம் 'மேரிதான் அப்படி மகனை உட்காரச் சொன்னா, நாமளும் அப்படியே விட்டுடணுமே, சாப்பிடுவது உள்ளே வர வேண்டியதுதானே' என்று ஆரம்பித்ததும் 'நான் நினைச்சேன், எப்ப கேக்கப் போறியோன்னு, இனிமே அப்படியே செய்வோம்' என்று மேரி அந்தப் பக்கம் வந்ததும், 'பையன ஏன் வெளியே உட்காரச் சொன்னேன்னு கேக்கிறான்' என்று கேட்டு விட்டார் அம்மா.
'அதனால என்னா, அங்கயும் சுத்தமாத்தான இருக்கு. அவன் ஒண்ணும் நினைக்கவும் மாட்டான்.
'அவன் நினைக்கானோ இல்லையோ, நம்ம இப்படி நடந்து கிட்டா நாலு இடத்துக்குப் போகும் போது அவனுக்கு எப்படி இருக்கும்' என்று இழுத்ததும் மேரியும் பேச்சை முடித்துக் கொண்டாள். மதியச் சாப்பாடு சாப்பிடும் அறைக்குள்ளேயே அம்மாவும் பையனும் சாப்பிட்டுக் கொண்டார்கள். என்ன வந்தீங்களா, சாப்பிட்டீங்களா என்பதோடு பேச்சை முடித்துக் கொள்ளும் மேரி, மகேந்திர கிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தான் செய்யும் புல் வெட்டும் பணி குறித்து அதில் இருக்கும் அரசியல்கள் குறித்து சொல்ல ஆரம்பித்து விட்டார்.
உழைப்பிலும், சரியான உணவில்லாததாலும் மெலிந்த கருத்த தேகம். கண்ணாடி போட்டுக் கொண்டு எந்த வேலையையும் சலிக்காமல் செய்கிறார். நாங்களெல்லாம் வெளியூர்களுக்கு பெயர்ந்து விட, அப்பா அம்மாவுக்கு துணை இவங்கதான். மகேந்திர கிரியில் வேலை முடித்தது போக இருக்கும் நேரத்தில் வீட்டுக்கு வந்து வேலைகளை முடித்து விடுகிறார். அம்மாவும், சாப்பாட்டுப் பொருட்களாகவும், பணமாகவும் நிறையக் கொடுத்து விடுவார்கள். இரண்டு குழந்தைகள். உழைத்து சம்பாதிப்பதுதான் வயித்துப் பாட்டுக்கு.
பையன் நல்ல செழிப்பாக வசதியாக குடும்பம் போலத் தெரிந்தான். பள்ளியில் வாரத்துக்கு மூன்று நாட்கள் முட்டை கொடுக்கிறார்களாம். மதியச் சாப்பாட்டுக்கு கவலை இல்லை. அம்மாவும் தான் சம்பாதிப்பதை எல்லாம் குழந்தைகளுக்குத்தான் செலவிடுகிறார். மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று அதை ஒரு அமைப்பாக்கிக் காட்டிய காமராசரும், எம்ஜிஆரும் பல கோடி குழந்தைகளின் ஒளி பொருந்திய முகங்களில் தினம் தினம் வாழ்கிறார்கள்.
மேல் மாடியில் கட்டாமல் கிடந்த இடத்தில் ஒரே அறையாக கட்டி முடித்த பால்காய்ப்புதான் இன்றைக்கு. 'காலையில் நாமே விளக்கை ஏற்றி வைத்து சூடம் காண்பித்து பாலைக் காய்ச்சி விடுவோம். அய்யர் யாரும் கூப்பிடலை' என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார்கள். அழைத்திருப்பது வேலை செய்த கொத்தனார்கள், இரண்டு பக்க வீடுகள், பின் வீட்டு மாமா மட்டும்தான். 'ஆமாமா, வேலை செஞ்சவங்களுக்கு அழைப்பு, அருகில் இருப்பவர்களுக்கும் சாப்பாடு போதாதா. எல்லாரையும் கூப்பிட்டு, அவங்களுக்கும் ஒரு மெனக்கெடு, இதுதான் சரி' என்று எனக்கும் நிறைவு.
கீழ் வீட்டு அறைகளுக்கும் வெள்ளை அடிப்பு. ஒவ்வொரு அறையாக பொருள்களை நகர்த்தி அடிக்க இரண்டு பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்புறமாக மூன்றாமவர் சேர்ந்து கொண்டார். மேரி மாடி அறைகளை தூய்மை செய்து விட்டுக் கீழே வெள்ளை அடித்து முடித்த அறைகளையும் துடைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். எல்லா வேலைகளையும் முடித்துக் கிளம்பும் போது ஏழு மணி தாண்டி விட்டிருந்தது.
பையனுக்கும் படங்களை பெட்டிகளைத் துடைக்கும் வேலை. பள்ளிக்கு விடுமுறையாம். நாள் முழுவதும் செய்த வேலைக்கு அவனுக்கு ஊதியமாக 50 ரூபாய், மேரிக்கு 150 ரூபாய் என்று அம்மா கொடுத்து அனுப்பினார்கள். நிற்க, உட்கார, படுக்க இடமில்லாமல் எல்லாம் புரண்டு கிடந்தது. பொருட்களை இடம் மாற்றுதல், அடுக்குதல், துடைத்தல் என்று எல்லோருக்கும் வேலை. இடையில் பால்காய்ச்சுக்கான தயாரிப்புகளும்.
இங்கு எள்ளுருண்டை என்று, எள்ளையும் கருப்புக்கட்டியையும் சேர்த்து இடித்து இயற்கையான எண்ணெய்ப் பசையில் பிடித்த உருண்டைகள் கிடைக்கின்றது. அது, முறுக்கு, தட்டை, கேக்கு என்று அரைப்பது நிற்கவே இல்லை. மதியம் சாப்பாடு.
இரவு இலை எல்லாம் வெட்டி வைத்து விட்டுப் படுக்கும் போது பத்து மணி.
நாகர்கோவில் ஊர் என்று சொன்னாலும், இந்தூரைத் தெரிந்த அளவுக்கு, சாங்காய் அளவுக்கு, சென்னை அளவுக்கு நாகர்கோவில் பழக்கம் கிடையாது. 17 ஆண்டுகளாக 2 அடி உயரத்திலிருந்து ஆறு அடி வரை வளர்ந்த ஊரில் கண்ணில் தென்பட்டவே மிகவும் குறுகிய வட்டத்துக்குள்தான். சுய சிந்தனை வந்த பிறகு சென்னையில் கல்லூரி, இந்தூரில் வேலை, சாங்காயில் வேலை, சென்னையில் வாழ்க்கை என்று ஓட்டிய ஆண்டுகளில் நாகர்கோவிலுக்கு வந்து போவது அதிக பட்சம் பத்து நாட்களுக்குத்தான்.
அண்ணாந்து பார்க்காமல் உயரங்கள் எப்படித் தெரிகின்றன, குனிந்து பார்க்கும் போது எப்படித் தெரிகின்றன என்ற பார்வை இல்லாமலேயே போய் விட்டது. வீடு, பள்ளி, உறவினர் ஊர்கள் என்று பழகிய வட்டத்திலேயே அறிமுகம். இன்றைக்கும் ஊருக்கு வந்து விட்டால், ஒன்றும் தெரியாத செல்லப் பிள்ளைதான். கடைக்குப் போய் சாமான் வாங்கி வர அனுப்ப அப்பா அம்மாவுக்கு நம்பிக்கை குறைவுதான். உனக்கு தெரியாது, யாராவது ஏமாற்றி விடுவான் என்று அப்பாவே போய் வருவார்.
'இப்படி வீட்டில் மாற்றங்கள் எல்லாம் செய்து யார் வந்து இருக்கப் போறீங்க, வாடகைக்குத்தான் விடணும். அல்லது நல்ல விலைக்குப் போகும்' என்று அப்பாவுக்கு ஆதங்கம். 'ஏன், நாங்க வரும் போது பயன்படுத்திக் கொள்வோம்'.
'சிவாவுக்கு நாகர்கோவிலில் வந்து இருக்கும் எண்ணம் உண்டு' என்று அம்மா. அப்படி வந்து சில ஆண்டுகள் இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும். தகவல் தொழில் நுட்பப் பரவல் இன்னும் ஆழமாகி, எந்த மூலையிலிருந்தும் நம்ம வேலையைச் செவ்வனே செய்யலாம் என்று வசதி கிடைத்து விட்டால், போக்கு வரத்து வசதியும் பெருகி விட்டால்், சென்னையில் வளசரவாக்கத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையை நாகர்கோவில் சைமன் நகரிலேயே செய்யக் கூடி சாத்தியங்களும் உருவாகி விடும். தூரங்கள் இறந்து போகும்.
அப்போது நிச்சயமாக இங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
சின்ன வயதில் மாறுபட்டவர்களை சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கும் பழக்கத்துடன் வளர்ந்தது. இப்போது கிடைத்துள்ள புரிதல்களுடன் இங்கு தங்கி பணி புரிந்து வாழ்வதில் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
ரயில் காவல் கிணறு தாண்டும் போது படித்துக் கொண்டிருந்த கவனத்தையும் குலைத்தது சில்லென்று வீசிய குளிர் காற்று. ஒரு புள்ளியைத் தாண்டியதும் பொத்தானைத் தட்டியது போல் காலநிலை மாறும் அதிசயம், ஒவ்வொரு முறை வரும் போதும், இந்த இடத்தில் கிடைக்கிறது. அந்தக் குளிரில், பச்சைத் தண்ணீரில் குளித்துப் படுத்துத் தூங்கினால், எழுந்திருக்கும் போது தொண்டையில் கிச் கிச்.
தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளாமல் மேலுக்குக் குளித்து தயாராகி விட்டேன். குளித்ததும், இரவு தவற விட்ட தியானம். மொட்டை மாடியில் சூரியன் உதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கிழக்கு பார்த்து உட்கார்ந்தேன். ஆறேகாலுக்குப் போய் இட்லி எடுத்து வர ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ வந்து சேர்ந்த சத்தம் கேட்டு எழுந்து கொண்டேன். டிவிடி காலனியில் இருக்கும் அம்மாவின் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியையின் ஏற்பாட்டில் அவர்கள் வீட்டுக்கு அருகில் ஒரு உணவு விடுதியில் இட்லி எடுத்து வர வேண்டும். அப்பாவுடன் போய் எடுத்து வந்து வைத்தும் கொத்தனார்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். இலை போட்டு இட்லி வைத்து, சட்னி ஊற்றி, சாம்பார் ஊற்றி, ரசவடை போட்டு, ஜாங்கிரி வைத்து, மட்டி, கதலி பழங்கள் வைத்து, குடிக்கத் தண்ணீர், காபி என்று விளக்கமான காலை உணவுதான்.
இரண்டு பேரைத் தவிர 15 கொத்தனார்களும் வந்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டார்கள். அதன் பிறகு பக்கத்து வீட்டுக் காரர்கள்.
இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் படிப்பதை குறைத்துக் கொள்ள, நிறுத்தி விட வேண்டும். ஓயாமல் கண்டதை எல்லாம் படித்துக் கொண்டிருக்க மூளைக்கு ஓய்வில்லாமல் போய் விட்டிருக்கிறது. அமெரிக்கன் நூலகப் புத்தகங்கள், இரவல் நூலகப் புத்தகங்கள், வீட்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ், அலுவலகத்தில் எகனாமிக் டைம்ஸ் என்று படிக்க நேரம் இல்லாமல் போய் விட மற்ற வேலைகள் எல்லாம் ஒதுக்கப்பட்டு விட்டன.
நேற்றைக்கு ரயிலில் வரும் போது பாரதி முகர்ஜி என்ற அமெரிக்காவில் குடியுரிமை பெற்று விட்ட பெங்காலி பெண் எழுதிய நாவல்.
பஞ்சாபின் குக்கிராமத்தில், பிரிவினையின் போது லாகூரில் சொத்து சுகங்களை விட்டு ஓடி வந்த குடும்பத்தின் இளைய மகள் ஜோதி, முட்டி மோதி பள்ளியில் ஆங்கிலம் படித்து, நகரில் படித்த முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பிரகாஷை திருமணம் செய்து ஜலந்தர் வந்து. பிரகாஷால் ஜாஸ்மின் என்று பெயர் கொடுக்கப்பட்டு, அங்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்கக் கனவில் இருந்த கணவனை இழந்து, கள்ள ஆவணங்களில் ஐரோப்பா வழியாக அமெரிக்காவுக்கு கள்ளத் தோணி ஏறி, சட்ட விரோதமாக புளோரிடா கரையில் ஏறி கப்பலை ஓட்டி வந்தவன் கையில் சிக்கி, கோபத்தில் அவனைக் கொன்று போட்டு விட்டு, நல்லிதயம் படைத்த அமெரிக்கப் பெண்மணி ஒருவரின் ஆதரவில் பிழைத்து, தன் கணவனுக்கு கடிதம் போட்டிருந்த பஞ்சாபி பேராசிரியர் குடும்பத்தை நியூயார்க்கில் அடைந்து, அங்கு பேராசிரியர் உண்மையில் இந்தியாவிலிருந்து முடி இறக்குமதி செய்பவர்தான் என்று தெரிய வந்து, அங்கிருந்து அடுத்த கட்டமாக ஒரு இளம் தம்பதியினரின் குட்டிப் பெண்ணுக்கு வளர்ப்புத் தாயாக சேர்ந்து அங்கு அமெரிக்கக் கனவை கண்டு, வேலைகள் செய்து பணம் சம்பாதித்து, கடந்த காலம் துரத்த அயோவாவுக்கு ஓடி விடுகிறாள்.
அயோவாவில் ஒரு விவாகரத்து செய்த வங்கி அதிகாரியின் மனைவியாக, தத்து எடுத்துக் கொண்ட வியட்நாம் இளைஞனுடன் கதை ஆரம்பித்து நினைவூட்டலாக மேற்சொன்ன கதை விரிகிறது. அந்தப் புத்தகம் இந்தக் கட்டத்தில் நிற்கிறது.
அடுத்த ஒரு மாதத்துக்கு படிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்க, காலையில் செய்தித்தாள் போடுபவரிடம் இந்து பத்திரிகை தேவையில்லை என்று சொல்லி விட்டேன். ஜேஸ்மின் என்ற புத்தகத்தைப் படித்து முடிக்காமலேயே திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். ஜேஜே சில குறிப்புகளை இரண்டாவது தடவை படிக்க முடியாது. தினமும் எகறனாமிக் டைம்ஸ் படிப்பதை நிறுத்து விட வேண்டியிருக்கும். அதைத் தவிர வேறு பெரிய மாற்றங்கள் இருக்காது, வாரந் தோறும் வாங்கும் விகடன் நின்று விடும். அவ்வப்போது வாங்கும் பிற பத்திரிகைகளையும் நிறுத்தி விடலாம்.
கழிவறையில், சாப்பிடும் போது, படிப்பது நின்று போகும். பேருந்தில் போகும் போது சுற்றி இருப்பவர்களை பார்க்கவும், நடப்பதை கவனிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
இப்படி அதிகப்படிகளிலிருந்து தப்பிப் பிழைப்பதிலேயே வாழ்க்கை ஓடி விடுவது போல இருக்கிறது. மிதமாக எல்லாவற்றையும் செய்து கொண்டு சீராக வாழும் அமைதி வாய்க்கவில்லை.

உறவுகள்,
சுயமுன்னேற்றம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)