இரண்டு மாதங்களாக 'இன்று நடக்கும் இன்று நடக்கும்' என்று எதிர்பார்த்து, 'இனிமேல் வந்தால் வகை இல்லையென்றால் போச்சு' என்று மனம் சலித்தாலும், கொஞ்சம் நப்பாசை ஒட்டிக் கொண்டிருந்து, போகப் போக அதை மறந்து மற்ற வேலைகளில் இறங்கி விட்ட பிறகு, முற்றிலும் நினைவில் பின் தள்ளி விட்ட நிலையில் நேற்று காலை அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு.
'இன்ன நாட்டிலிருந்து இவ்வளவு தொகை உங்கள் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது, என்ன செய்ய வேண்டும்' என்று முன் முயற்சி எடுத்து வங்கியின் மும்பை கிளையிலிருந்து தொலைபேசி அழைப்பு. நாள் முடிவதற்குள் கணக்கில் சேர்ந்து விட்டது. 'இது வந்தவுடன் எப்படித் துள்ளிக் குதிக்க வேண்டும், எப்படி கொண்டாட வேண்டும்' என்றெல்லாம் நினைத்திருந்தவை வடிந்து போயிருக்க அமைதியாகக் கேட்டுக் கொண்டு உணர்ச்சிகளின்றி மற்றவர்களுக்குச் சேதியைச் சொல்ல முடிந்தது.
காலையில் முதல் வேலையாக கடனே என்று ஒரு மின்னஞ்சல் நினைவுபடுத்தல் அனுப்ப முனையும் போதுதான் இந்த சேதி. மொத்தத்தில் புது ரத்தம் பாய்ந்தது போல எல்லோருக்கும் சுறுசுறுப்பு வந்து சேர்ந்தது. மளமளவென்று வேலைகள் ஓடின. மாலை ஏழு மணிக்கு ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்க பெரியமேட்டில் ஏற்பாடு. முற்பகலிலேயே இடையிடையே சேர்ந்திருந்த மின்னஞ்சல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் மறுபதில் அளித்துக் கொண்டேன்.
போன ஆண்டு கணக்குகளை முடித்து வருமான வரித்துறைக்குச் சமர்ப்பித்த படிவத்தின் நகலில் கையொப்பமிட தணிக்கையாளர் அலுவலகத்துக்குப் போய் விட்டு அப்படியே பெரிய மேடு போய் விடலாம் என்று திட்டம். கிளம்பும் போது நாலே முக்கால் மணி.
சின்ன வண்டியில் ஓட்டும் போது முதுகு வலி கண்டு விடுகிறது. 'ஐந்து மணிக்கு வந்து விடுகிறேன் இருப்பீர்களா!' என்றதற்கு 'ஐந்தரை வரை இருப்பேன்' என்று சொல்லியிருந்ததால் ஐந்தேகால் ஆனாலும் பிழையில்லை. நான் சீக்கிரம் போய் முடித்திருந்தால் அவர் முன்பே வீட்டுக்குப் போக முடிந்திருக்கலாம். மூன்றாவது ஆண்டாக தனியார் பங்கு நிறுவனமாக கணக்கு முடித்தல். அதற்கு முன்பு ஒன்றரை ஆண்டு தனியார் நிறுவனமாக ஓடிக் கொண்டிருந்தது.
அண்ணாநகருக்கு மிடுக்கு ஏறிக் கொண்டே போகிறது. சென்னையிலேயே இரண்டு நாடுகள் இருக்கின்றனவோ என்று தோன்றும் படி அண்ணா நகரில் உலவும் மக்களும், வீடுகளும், கடைகளும், மற்ற வணிக அமைப்புகளும் ராமாபுரத்துடன் ஒப்பிடும் போது ஹாங்காங், குவாங்சோ வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரே நகரம், இரண்டு அமைப்புகள்.
அண்ணா நகர் சிந்தாமணி சாலைச் சந்திப்பு வழியாக சுற்றி, வேறு எங்கு, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் வழியாக பெரியமேடு நோக்கி வந்தேன். நிறைய நேரம் இருந்தது, ஏழு மணிக்கு. வழியில் ஆரியாஸ் என்ற விடுதி பிடித்த இடம். அங்கு ஒரு குட்டி நிறுத்தம் அடித்து, தொலைபேசி மூலம் பேச்சுக்களை முடித்துக் கொண்டு, சேருமிடம் வந்து சேர்ந்தால் கால் மணி நேரம் முன்னதாக வந்து விட்டிருந்தேன்.
சந்திக்க வேண்டியவரோ, ஏழு மணிக்கும் வராமல், 'வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டேன்' என்று எட்டு மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். இடையில் நாளிதழ்கள். ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் சென்னைக்கும் பரவுகிறதாம். பத்து கடைகள் திறக்கிறார்களாம். பாரதி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைகிறது என்று அலறியது ஒரு செய்தித் தலைப்பு. அதைப் புகழ்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸில் தலையங்கம்.
தொலைதொடர்பு துறையில், தனியார் நிறுவனங்களை அனுமதித்தது போல இது போல எல்லோருக்கும் நல்லது செய்யும் என்று விளக்குகிறார்கள். தொலை தொடர்பு துறையில,் ஒரே அரசு நிறுவனம் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, பல நிறுவனங்களை போட்டி போட அனுமதித்ததும், சில்லறை விற்பனைத் துறையில் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கிளிக்கூட்டத்துக்கிடையே பூனையை அனுப்புவது போல இந்த பெரிய நிறுவனங்களை விடுவது எப்படி ஒன்றாகும் என்று புரியவில்லை.
கணினியைத் திறந்து பேச வேண்டிய முன்வைப்பை, மாதிரி காட்ட வேண்டிய பக்கங்களை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். இன்னும் வாடிக்கையாளரும் வரவில்லை, என்னுடன் சேர்ந்து கொள்ள வேண்டியவரும் வரவில்லை. அந்த அலுவலகத்திலும் ஒரே ஒருவரைத் தவிர எல்லோரும் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.
வார் அன்ட் பீஸ் மென்பதிப்பை சிறிது நேரம் மேய்ந்தேன். நடாஷா, இளவரசன் ஆண்ட்ரூவுடனான தனது திருமண நிச்சயத்துக்குப் பிறகான ஓராண்டு இடைவெளியைச் சகிக்க முடியாமல், கடைசி நாட்களில் அனடோல் என்ற ஊர்சுற்றியிடம் மனதைப் பறி கொடுத்து அவனுடன் ஓடிப் போக முயற்சிக்கிறாள். முதல் அத்தியாயத்திலேயே சந்தித்திருந்த மரியா என்ற முதுபெரும்பெண் தனது வளமையான கண்டிப்புடன் அதை முறியடித்து, நிலைமை மோசமாகாமல் தடுக்கிறாள்.
பீட்டருக்கு நடாஷா மீது பற்றுதல் என்பது இங்கே கோடு காட்டுகிறார். பீட்டருக்கு திருமணம் ஆகி, ஹெலென் (அனடோலின் சகோதரி) என்ற இன்னொரு ஊர் சுற்றியிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். விபரமறிந்து கோபத்துடன் வீட்டுக்குப் போய் மிரண்ட சாதுவாக, மனைவியையும, மைத்துனனையும் கையாண்டு, அவனை ஊரை விட்டே துரத்தி விடுகிறார்.
இன்னொரு பெரிய வேலை குழாயில் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் சேர்ந்து, இப்போதைய முன் முயற்சிகளில் இன்னும் இரண்டு கனிந்து விட்டால், அப்புறம் திண்டாட்டம்தான். வேறு வகையான திண்டாட்டம். எப்படி எல்லாவற்றையும் சமாளிக்கப் போகிறோம் என்ற திண்டாட்டம்.
எட்டு மணிக்கு முன்பே நம்ம ஆள் வந்து விட அவருடன் பேசிக் கொண்டிருக்கையில், எட்டே காலுக்கு எதிர்பார்த்திருந்தவர் வந்து சேர்ந்தார். தனது அருமை பெருமைகளைப் பேசிக் கொள்வதில் பற்று அதிகம் இவருக்கு. உலகெங்கும் சுற்றி, நிறைய நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதால் உலகளாவிய பார்வை. சரியான விலை கொடுத்து மென் பொருள் சேவை வாங்கிக் கொள்வதில் சுணக்கம் இருக்காது. ஆனால் அவரது இயல்பையும், மேலாண்மை பாணியையும் பார்த்த பிறகு அதைச் செயல்படுத்த கொஞ்சம் போராட வேண்டியிருக்கலாம் என்பதால், விலையில் எந்த விட்டுக் கொடுத்தலும் இருக்கக் கூடாது என்று சைகை செய்து கொண்டோம்.
அலுவலகம் வந்து சேரும் போது இரவு பத்து மணி. 'விக்கிபீடியாவில் எல்லோரும் எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே, முதலில் நீங்கள் எப்போது ஆரம்பிக்க எண்ணம்' என்று ஒரு நண்பரின் பின்னூட்டம். ஆங்கில விக்கிபீடியா இப்போது கூகிளுக்கு நிகராக குறிப்பிட்ட கலைக்களஞ்சியத் தகவல்களைத் தேடுபவர்களுக்கு உதவியாக உள்ளது. தமிழில் பல்லாயிரம் கோடி வலைப்பக்கங்கள் உருவாக பல பத்தாண்டுகள் பிடிக்கலாம். ஆனால் வலையில் இயங்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாரம் ஒரு பக்கம் என்று ஒவ்வொரு செங்கல்லாக வைத்தாலும் சீக்கிரமே பெரிய கட்டிடம் உருவாகி விடும்.
உறுதிமொழிகள் நிறைய எடுத்து, வாக்குறுதிகள் அள்ளிக் கொடுத்து, எல்லாவற்றையும் செய்து விடுவது நடக்காமல் இருக்கிறது. முதலிலேயே முடியாது என்று சொல்லி விடும் நேர்மையும், துணிவுமாவது இருக்க வேண்டும். இப்படி தொங்கிக் கொண்டே இருப்பது அசிங்கம். இன்றைக்குத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு சேதி அனுப்பி விட வேண்டியதுதான்.
ஆனால், விக்கிபீடியா எல்லா வேலைகளுக்கிடையேயும் செய்தே தீர வேண்டிய ஒரு கடமை. வாரம் ஒரு கட்டுரை என்று குறைந்த இலக்கு வைத்துக் கொண்டு, வாரத்துக்கு ஓரிரு மணி நேரம் செலவளிப்பதால் பெரும்பலன் ஏற்படும்.
இன்னும் இழுக்காமல், நேரம் காலத்தில் தூங்க வீடு வந்து தூங்கும் போது மணி பதினொன்று. குடிதண்ணீர்தான் பெரிய பிரச்சனை. குழாயில் வரும் நீரைக் கொதிக்க வைத்துக் குடித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால், கசப்பாக இருக்கிறது. ஒரு டப்பா தண்ணீர் வாங்கினால், இரண்டு மூன்று வாரங்கள் தீர்ந்து விடாமல், தேங்கிப் போகும். அதனால் வரும் போது அலுவலகத்திலிருந்தே ஒரு பாட்டில் பிடித்துக் கொண்டேன். ஆனால் சமைக்கக் குடிக்க போதாதுதான். வேறு ஏதாவது வழி பார்க்க வேண்டும்.
வியாழன், நவம்பர் 30, 2006
புதன், நவம்பர் 29, 2006
நாய்கள்
நாம் செய்யும் சில முடிவுகள் சிலருக்கு வருத்தத்தைத் தர நேரிடலாம். ஆனால், மனம் நோகாமல் எல்லாவற்றையும் செய்து விட வழி இருக்கத்தான் வேண்டும்.
நான் டாடாவில் வேலை பார்க்கும் போது, பூனாவில் இருக்கும் டாடா மேலாண்மை பயிற்சி மையத்தில் ஒரு வாரம் அனுப்பினார்கள். இளம் அலுவலர்கள் சுமார் முப்பது பேர் பல்வேறு பிரிவுகளிலிருந்து போயிருந்தோம். அதில் பல வகுப்புகள், பட்டறைகள், தொழிற்சாலை செலவுகள் நடந்தன. மறக்க முடியாத ஒன்று தலைமைப் பண்பு பற்றிய ஒரு பட்டறை.
சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிலும் பாத்திரங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். ஒரு விற்பனைப் பிரிவு மேலாளரின் கீழ், நான்கு விற்பனைப் பிரதிநிதிகள். அந்தப் பிரிவுக்குப் புதிதாக ஒரு வண்டியை கொடுக்கிறார்கள். நான்கு பேரில் யாருக்கு அந்த புது வண்டி சேர வேண்டும் என்று விவாதித்துத் தீர்மானிக்க வேண்டும். நடக்கும் விவாதங்களை, உணர்ச்சிகளைப் பதிவு செய்ய ஒருவர்.
இப்படிப் பிரிக்கப்பட்ட குழுக்களில் ஒன்றின் மேலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது பாத்திரங்களின் குணாதிசயங்கள் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவரும் பாத்திரத்திலேயே ஒன்றிப் போய் விளையாடினார்கள்.
அரை மணி நேர விவாதங்களுக்குப் பிறகு ஆறு குழுக்களும் கலைந்து வகுப்பறையில் கூடின. எல்லாவற்றிலுமே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய தலைமைதான் உள்ளதில் மோசமாக முடிந்தது. குழுவில் இருந்த யாருக்குமே மகிழ்ச்சி இல்லை. நான் வண்டியைக் கொடுப்பதாகச் சொன்னவர் கூட முழு மகிழ்ச்சியடைந்திருக்கவில்லை. விவாதம் எப்படிப் போயிருக்க வேண்டுமோ அப்படி இல்லாமல், ஒவ்வொவரும் தமது நலத்தையே பார்த்துக் கொண்டிருக்க தலைவர் அவர்களை ஒன்று சேர்க்க எந்த முயற்சியும் செய்யாமல் தன்னுடைய மேலாண்மையை காட்டுவதிலேயே மும்முரமாக இருந்திருக்கிறார்.
ஒவ்வொரு குழுவிலும் என்ன நடந்தது என்று ஒருங்கிணைப்பாளர் விவரிக்கும் போது என்னைக் காய்ச்சி எடுத்து விட்டார். இது ஒரு பெரிய பாடமாக அமைந்திருக்கும் என்று சமாதானமும் சொல்லிக் கொண்டார். எனக்கு வெட்கத்தில் அவமானத்தில் குறுகிப் போயிற்று.
என்னதான் பாடம் கற்றுக் கொண்டாலும் அடிப்படை இயல்பு மாறி விடாதுதானே. எல்லோருக்கும் நல்லவனாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று பேச்சும் நடத்தையும் இருக்க, மனதில் திரண்டு வரும் கருத்துக்களை மனம் நோகடிக்க வேண்டாமென்று இழுத்துப் பிடித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் அவற்றில் உறுதியாகவே இருக்கக் கடைசியில் முடிவு எடுக்கும் நேரம் வரும் போது சர்வாதிகாரியாக நினைத்து வைத்திருந்த முடிவை குண்டு வீசுவது போல வெளியே போடுவது இன்னும் நடந்து வருகிறது.
அப்படி நேற்று ஒரு உச்சக் கட்டம். இதில் சிதறிக் கிடக்கும் துண்டுகளைச் சேர்த்து மீண்டு வருவதற்கு கொஞ்ச நாளாவது ஆகும்.
காலையில் மூர்த்திஸ் மெஸ் தொட்டு விட்டு அப்படியே நண்பரை அவர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் விட்டு விட்டு, இன்னொரு இடத்துக்குப் போய் அடுத்த நான்கு மணி நேரம் அங்கு கழிந்தது. அவர்கள் தயவில் இணைய இணைப்பும் கிடைத்தது. வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வேலையை அரை மணி நேரத்தில் செய்து முடித்தேன். கேட்ட நாளிலேயே இந்த அரை மணி நேரத்தைச் செலவளித்திருக்கலமே என்று நினைத்தாலும், அதன் பிறகு கிடைத்த புதிய உத்திகள் அன்றைக்கு இல்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.
மதியம் சிப்காட் போகும் வழியில் சாய் மெஸ். சிப்காட் நிறுவனத்துக்குப் போனால் கணினிகள் எல்லாம் தொழிற்சாலையில் தேவையான பகுதிகளுக்குப் போய் விட்டிருந்தன. அப்புறம் அதட்டி மிரட்டி அன்பாகச் சொல்லு வேலை நடக்க வேண்டியதை திட்டம் போட்டோம். இடையில் மூன்று நான்கு மணி வாக்கில் எந்த வேலையும் ஓட முடியாமல், வேறு எல்லோரும் தத்தமது பணிகளில் போய் விட்டிருந்தார்கள். அதே நேரம் ஒரு தொலைபேசி அழைப்பும்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் குழப்பிக் கலக்கமாகப் போனது. மீண்டும் பணி ஆரம்பித்ததும் சுதாரித்துக் கொண்டேன். இரவில் வாலாஜாவிலேயே தூங்கி விட்டுக் காலையில் கிளம்பலாம் என்றால் இன்றும் நாள் முழுவதும் வீணாகி விடலாம் என்ற கருத்தை ஏற்று அறைக்குச் சென்று பையை எடுத்துக் கொண்டு பேருந்தைப் பிடித்தேன்.
வீட்டுக் காரர்கள் இரண்டு நாய்கள் வளர்க்கிறார்கள். டைகர், ஜூலி என்று பெயர் என்று நினைவு. காலையில் சாப்பாடு போட்டு விட்டு, மொட்டை மாடியில் விட்டு அடைத்துப் போய் விடுகிறார்கள். மாலை வந்து அடுத்தச் சாப்பாடு. இடையில் உள்ளேயே இரண்டும் விளையாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். மனித நடமாட்டம் அதிகமில்லாத பகல் பொழுது. எதிர் வீட்டு நாய்களுடன் குரைப்பதன் மூலம் பேசிக் கொள்ளலாம், பார்க்காமலேயே.
மாலை வந்து வெளிக் கதவைத் திறக்கும் ஓசை கேட்டதுமே இரண்டுக்கும் பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். மாடிப்படிக்குப் போகும் கதவின் தாழகற்றி திறந்ததும் சரேலென்று வெளியே பாய்ந்து குதித்து விளையாட ஆரம்பிக்கின்றன.
முதல் நாள் வரும் போது, நான் வெளியே நின்று கொள்ள அவரே சமாளித்தார். தனியாக வந்தால் வேறு வழியே இல்லை. "கடிக்கவே செய்யாது" என்ற உறுதி மொழி இருந்தாலும், ஒரே நாள் பழக்கத்தில் குழந்தைகள் போல விளையாட ஆரம்பித்து விட்ட அவற்றிடம் இயல்பு நிலை வரவில்லை. நாய்களுடன் விளையாடி மகிழும் குணம் எப்போதுமே இருந்ததில்லை. தலையைத் தடவிக் கொடுத்து, சாப்பிட ஏதாவது கொடுத்து அதன் முகம் மலரப் பார்க்க முடியும். ஆனால், தோளுக்கு மேல் குதித்து முகத்தை நக்க முனையும் நாய்க்குத் தயாராக இல்லை.
சின்ன வயதில் வீட்டில் ஒரு நாய். பெயர் மணி என்று வைக்கப்பட்டது. எங்கிருந்தோ வந்து எங்கள் வீட்டைத் தன் வீடாகச் செய்து கொண்ட நாய். வீட்டு அறைகளுக்குள் அனுமதி கிடையாது. வெளித் தோட்டத்தில், பின் புற வளைவில், முன் வாசலில் சுற்றி வரும். வேளா வேளைக்குச் சாப்பாடு கிடைக்கும். பெரும்பாலும் மீந்து போனதாக இருந்தாலும், பல நேரங்களில் அதற்கென்று செய்த உணவுகளும் குழந்தைகளாகிய நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தின்பண்டங்களும் அதற்கு விருந்து போல.
நிறையக் குட்டிகள் போட்டு அதன் பங்கிற்கு சமூகத் தொண்டாற்றி வந்தது. அழகிய கரிய கண்கள். நம்ம நாய் என்று பரிவை வெளிப்படுத்தும் முகம். இப்பொழுது, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் முகமும், வாலாட்டுதலும் நினைவில் இருக்கிறது.
எங்க அம்மாவிடம்தான் பயம். கூடவே பாசமும். "ஏ நாயே" என்ற ஒரு சத்தத்துக்கு ஓடியே போய் விடும். பொதுவாக வீட்டைச் சுற்றிதான் பின் வாசலிலிருந்து முன் வாசலுக்குப் போக வேண்டும் என்று இருந்தாலும், அடிக்கடி எல்லோரும் இருக்கும் நேரங்களில், வேகமாக வீட்டுக்குள் புகுந்து வீட்டைக் கடந்து விடும். நிலவரத்தைப் பொறுத்து ஒரு அதட்டல், பெரும்பாலும் ஒரு சிரிப்பும் அம்மாவிடமிருந்து விளைவாகக் கிடைக்கும். அதற்கு பூரித்துப் போய் விடும்.
முன் மாலை நேர வாசற்படி உரையாடல்களில் அதுவும் ஒரு குடும்ப உறுப்பினராக அமர்ந்திருக்கும். பேச்சு அதைக் குறித்துத் திரும்பினால் "அதப் பத்திதான் பேசுறோம்னு தெரிகிறது" என்று அம்மா சொல்லுவார்கள். அதன் பல ஆண்டு வாழ்க்கையில் யாரையும் விளையாட்டுக்குக் கூடக் கடித்ததாக நினைவில்லை. ஒரே ஒரு முறை உடம்பு சரியில்லாமல் வீட்டுக்குள் கக்கி விட்டது என்று வாங்கிக் கட்டிக் கொண்டதைத் தவிர யாரும் கற்றுக் கொடுக்காமலேயே தூய்மை பேணிய நாய்.
திடீரென்று முன் பக்கம் வளர்ந்திருக்கும் புற்களைத் தின்று கொண்டிருக்கும். "ஏதோ வயிற்றுக் கோளாறு, அதான்.." என்று விளக்கம்.
இதன் குட்டிகளும் பெரிதாக வளர்ந்து, பெயர் பெற்று விளங்கிய இன்னொன்று நம்பியார் என்ற நாய். பக்கத்து வீட்டுக் குட்டிப் பையன் ஏதோ விளையாட்டாகக் குட்டியிலேயே நம்பியார் என்று கூப்பிடப் போக அதே பெயர் நிலைத்து விட்டது. அது அதே பக்கத்து வீட்டைத் தனது குத்தகைக்கு எடுத்துக் கொண்டாலும், தாய் வீட்டு உரிமையில் இங்கும் வந்து போகும்.
ஒரு நாள் மழையில் நனைந்து வெட்டு வந்து, வாழ் முழுவதும் கழுத்தை வெட்டிக் கொண்டே இருக்கும் நோய் வந்து விட்டது நம்பியாருக்கு. அது கொஞ்சம் சண்டை இழுக்கும் நாய். ஒரு நாள் காலையில் தெருவில் வழியில் போன சில நாய்களைச் சண்டைக்கு இழுத்து அவை நம்பியாரை கடித்துச் சண்டை போட, அப்பா விரட்டுவதற்காக தோள் துண்டால் விளாச, நம்பியார் ஒரு கடி கடித்து விட்டது. மணி நாய் அந்த திசையிலேயே இல்லாமல் போய் விட்டது.
அப்புறம் ஊசி போடுதல், பத்தியம் பார்த்தல் என்று நாய்க்கடி பாராட்டி அப்பாவுக்கு நாட்கள் நகர்ந்தன.
மணி நாய் இருந்த வரை அம்மா வருவதற்கு இருட்டி விட்டால், பேருந்து நிறுத்தத்துக்குப் போய்க் காத்திருந்து அழைத்து வந்ததாக நினைவு. ஆனால், அதெல்லாம் வெகு நாட்கள் தொடர முடியாமல் ஒரு நாள் பள்ளியிலிருந்து வரும் போது அது செத்து விட்டிருந்தது. வயதாகி விட்டதாம்.
வழக்கம் போல எனக்குப் பெரிய சோகம் எதும் தோன்றா விட்டாலும், அண்ணன்கள், அக்கா தங்கையுடன் சேர்ந்து குழி தோண்டி அதற்கு சகல மரியாதையுடன் அடக்கம் செய்தோம். இன்றைக்குத் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்று அண்ணன் சோகமான முகத்தோடு கேட்டுக் கொண்டான்.
பெரிய கண்ணீர் விடலோ, துக்கமோ காட்டா விட்டாலும் பின் வந்த நாட்களில் பல தடவை மணியைக் கண்கள் தேடி ஏமாந்ததும், அதன் பங்கான உணவை தவிர்க்க பல நாள் பிடித்ததும், பல தடவை குடும்பப் பேச்சுக்களில் அதன் நினைவுகள் இடம் பெற்றதும் அப்படியே மங்கிப் போய் விட்டன.
வெள்ளைச் சடை நாய்களான (பொமரேனியன்) ரூபி, பின்னர் அதன் குட்டி சுப்பிரமணி என்று எங்களது நான்காவது வீட்டில். அவற்றுக்கு வீட்டுக்குள்ளேயே இடம். நாங்கள் யாராவது போனால் கட்டிப் போட்டு விடுவார்கள். வாய் ஓயாமல் குரைத்துக் கொண்டே இருக்கும். அவை இருக்கும் முன்னறையிலும் வீட்டின் பல பகுதிகளிலும் மூத்திர வாடையும் நாய் புழக்கமும் ஒட்டிப் போய் விட்டிருந்தன. அவற்றைப் பார்த்து வீட்டிற்குள்ளேயே நாய் வளர்ப்பது கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே போய் விட்டது.
குழந்தைகளில் ஒன்றாக வளரும் நாய்களும் சில வீடுகளில் உண்டுதான்.
அலுவலகத்தின் வெளியில் ஒரு பெரிய கும்பலே இருக்கிறது. சென்ற ஆண்டு மழை வெள்ளத்தில் மாட்டிய குட்டிகளைக் காப்பாற்றி அவற்றில் ஒன்று காலணிகளையும் உறைகளையும் சேகரிக்கும் பழக்கத்தை மேற்கொண்ட பிறகு ஒரு மனிதக் கும்பலுக்கு வந்த ஆத்திரத்தில் செய்த வேலைகள் சமீபத்திய நாய் குறித்த நினைவுகள்.
சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் போது, 'மனிதனுக்கே சாப்பிட உணவில்லை, வளர்ப்புப் பிராணிகள் எதற்கு' என்று எல்லா நாய்களையும் கொன்று விட உத்தரவு பிறப்பித்து செய்தும் காட்டி விட்டார்களாம். நாய்க்கு சோறு போட்டு வளர்ப்பது சட்டப்படி குற்றம் ஆகி விட்டது.
நல்லதே நடந்தாலும் கம்யூனிஸ்டு அல்லது எந்த சர்வாதிகாரத்திலும் இது போன்ற ஆணைகள் சில நாட்களுக்குள் முற்றிலும் நடைமுறைக்கு வந்து விடும். நின்று நிதானிக்கும் முன்னால் சேதம் நடந்தே இருக்கும்.

செவ்வாய், நவம்பர் 28, 2006
கண்ணாடி
நம்மை நாமே நேசிக்கும் தருணங்கள் அற்புதமானவை. கண்ணாடியில் முகம் பார்க்கிறேன். சின்னக் கண்ணாடி. முகத்துடன் தோள்களின் சரிவு வரை மட்டும் காட்டும் கண்ணாடி. இரண்டு மூன்று நாட்களாக எண்ணெய் மட்டும் பார்த்து குழைந்து கலைந்திட்ட தலை முடி, அழகாகச் சிதறிக் கிடக்கிறது. நெற்றியில் காய ஆரம்பித்து விட்ட ஒரு பரு. யார் நம்மை நேசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், பருவாக முகத்தில் சேதி சொல்கிறது?
முப்பத்தைந்து ஆண்டுகளாக பதிந்த படிவுகளை பிரதிபலிக்கும் கண்கள். அவற்றில் வழக்கம் போல சிரிப்பு அதிகம் கிடையாது. எடுப்பான மூக்கு. குட்டிக் குட்டியாக வெள்ளை முடிகள் எட்டிப் பார்க்கும் மீசை. "பெரிய மேல் உதடு, அதற்குக் கீழே சின்னதாக கீழுதடு என்று வெஸ்ட் இண்டீஸ் போல" என்று அலோக் ஒரு காலத்தில் சொன்ன கோடாகக் கிழித்த உதட்டுச் சந்திப்புகள். முகம் நிம்மதியான தூக்கத்துக்குப் பிறகு உப்பிப் போயிருக்கிறது.
எல்லாமே நிறைந்து உணரும் அதிகாலை மூன்று மணி. ஆற்றில் வந்த புது வெள்ளமாகக் கலக்கி, குப்பை மிதக்க, உருட்டிப் போட்டு விட்டுச் சென்ற ஒரு நாளுக்கு அப்புறம், தண்ணீர் ததும்பி, மேற்பரப்பு தளும்பும், இரு கரையும் நிரம்பிப் பாயும் பொழுது.
எங்கும் நிசப்தம். சென்னையில் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு இயந்திரச் சத்தம் இல்லை. காதுக்கு எட்டிய தூரம் வரை சுவர்க் கோழிகளின் இரைச்சலுக்கு முன் புலமாக மடிப்புக் கணினியின் இரைச்சல் மட்டும் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. புலன்கள் கூர்மையாகக் காத்திருக்கின்றன.
நேற்றைக்குச் சீன மருத்துவக் கட்டுரையில் நாளின் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு உறுப்புக்கு உரியது, அதனால் எந்த நேரத்தில் என்ன செய்ய உகந்தது என்று எழுதியிருந்தார்கள். அதிகாலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை என்ன?
கதவுக்கு வெளியே குளிர் காத்திருக்கிறது. வெளி விளக்குப் போட்டு விட்டுத் தூங்கியதால், குழல் விளக்கின் வெளிச்சத்தில் ஏராளமான பூச்சிகள் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து கதவை அடைத்து உள்ளேயே வந்து விட்டிருந்தேன். சிறிது நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு வெளியே உட்கார்ந்து வெளியுடன் கலக்க வேண்டும்.
பரந்து விரிந்த ஆகாய வெளியுடன் ஆறடி உயர ஓரிரு அடி சுற்றளவில் எழுபது கிலோ பருப்பொருள் இணையும் போது மின்சாரம் பாய்கிறது. மேலே மேலே முடிவே இல்லாமல் பரவும் வெளியில் ஒவ்வொரு செல்லும் கலந்து உயிரின் பரவல் எல்லையின்றி விரிய முடிகிறது. அருகில் இருந்த விளக்குகளை அணைத்து விட்டுப் பூச்சிகளுக்குப் போக்குக் காட்ட மறுமுனையில் விளக்கு வெளிச்சம். இல்லையென்றால் கணினித் திரையைக் கூட மொய்க்க ஆரம்பித்து விடலாம்.
விழியில் நனைந்து இதயம் கலந்து உயிரில் கலந்த உறவே வானுக்கும் உடலுக்கும் இருக்கும் உறவு. தூரத்தில் நெடுஞ்சாலையில் ஏதோ லாரி ஓடிச் செல்வது மென்மையாகக் கேட்கிறது. எதிர் வீட்டில் ஓடும் மின் மோட்டார், நீர் பாயும் சத்தம் உறுத்துகிறது.
அதிகாலையில் வேலைக்குக் கிளம்ப யாரோ தயாராகிறார்கள். உயரழுத்த சமையற்கலனின் பெருமூச்சு விடும் சத்தம் மோட்டார் சத்ததுக்குத் துணையாக ஆரம்பித்து, இரண்டு முறையில் ஓய்ந்து விட்டிருக்கிறது. ஏதோ புத்திசாலித்தனமான சமையல்காரர். இரண்டே மூச்சுக்களில் பெரும்பாலான பொருட்கள் வெந்து விடுகின்றன. அதற்குப் பிறகு வெறும் சமாதானத்துக்குத்தான்.
இந்தச் சுவர்க் கோழிகள் என்பவை என்ன? உண்மையில் பல்லிகள்தான் இப்படிச் சத்தம் போடுகின்றனவா? ஒரு சுவர்க் கோழியைப் பிடித்து அதிலிருந்து வரும் அந்த இசை ஒலிகளை உருவத்தோடு சேர்த்துப் பார்த்தால்தாம் பிடிபடும். பின்னணி இசையாக ஒலித்துக் கொண்டே இருப்பவை, அவற்றை மிதித்துக் கொண்டு உரக்க ஒலித்துக் கொண்டிருக்கும் சோடிகள், திடீரென்று உரக்க ஒலிப்பது நின்று போகும் போதுதான் பின்னணி இசை பிடிபடுகிறது.
பூச்சிகளுக்கு நிம்மதி இல்லை. குழல் விளக்கை விட்டு விட்டுக் கணினித் திரைக்கும் படையெடுக்க ஆரம்பிக்கின்றன.
பெரிய மரங்களின் உச்சந்தலைகளைப் பார்க்க முடிகிற முதல் மாடி. அழகாக வளர்ந்து வருகின்ற சிறு பிள்ளையைப் போல தலையைத் தடவி உறவு பேண அழைக்கின்ற மரம், கொடிகள். மெலிந்த காற்றில், உணரவே முடியாத சிறு காற்றசைவில் தலையை அசைத்து அழைக்கின்ற கொடிக் கைகள். இடையில் கிக் கிக் கிக் என்று ஒரு பல்லி அழைப்பும் சேர்ந்து விட்டுப் போய் விட்டது.
முதல் காகம் கண் விழித்து சோம்பல் முறிப்பாகக் கரைந்து பார்க்கிறது. மூன்றரை மணிக்கு என்ன செய்யும்? அந்த எழுப்பலில் விழித்துக் கொண்டது போல தூரத்து நாய் ஒன்று குரைத்துக் காட்டுகிறது.
காலையில் எழுந்தவுடன் காரியங்களில் குதித்தாலே கலங்கிய நீராக நாள் முழுதும் தெளிவின்மைதான். அழுக்காகிக் கிடக்கும் பாத்திரங்களைத் துலக்கிட வேண்டும், காலை உணவுக்கு ஏதாவது ஆயத்தம் செய்ய வேண்டும் என்று வெதுவெதுவென்ற உடலை குளத்தின் குளிரில் முன்னறிவிப்பின்று குதிப்பது போல அதிர்ச்சியாகி விடுகிறது. எழுந்ததும் பதினைந்து நிமிடங்களுக்குக் குளியலறையில். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மனதுக்கு தடையில்லாத ஓட்டம். இன்னும் நேரம் இருந்தால் இன்னும் எழுதுவது.
அதன் பிறகு சற்று நேரம் கண் மூடி இளைப்பாறல் என்று உடலையும் மனதையும் படிப்படியாக எழுப்பி விட்டு வேலைகளில் இறங்கினால் தாமரை இலை போலப் பட்டும் படாமல் நாள் வழுக்கிக் கொண்டு செல்கிறது. பேசும் போது சொற்களில் அழுத்தம் வேண்டும், ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடாது என்று சித்த மருத்துவ மாநாட்டில் தொகுத்தளித்தவர் சொன்னார். அது ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு மட்டும்தானே! உணர்ச்சிகளின் மேலாளராக ஓட்டத் தெரிய வேண்டும்.
குதிரையின் மீதமர்ந்து ஓட்டும் போது கடிவாளமும் கட்டுப்பாடும் மனிதன் கையில் இருக்க வேண்டும். குதிரைக்குக் கட்டுப்பாடு போய் விட்டால் அதோ கதிதான்.
அப்படி ஏற்றி விடப்பட்டு விட்டது போலக் குதிரை போன போக்கில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவில் வேலையே செய்யாமல் காலம் கழிக்க ஒரு வர்க்கம். காலையில் எழுந்தவுடன் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து விட வேண்டியது. அதிலிருந்து தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறார் கவுண்ட் பெசுக்கோவ் என்ற பீட்டர் (Pierre). நாள்தோறும் வெவ்வேறு வீடுகளில், கிளப்புகளில் கும்மாளம், சாப்பாடு, குடி. இரவில் வந்ததும் தூங்கி விட வேண்டும். தன்னுடன் தானே தனியாக இருக்க முடியாது. வீட்டுக்கு வந்து பணியாளர்கள் சட்டையைக் கழற்றும் வரைக் கூடக் காத்திருக்காமல் ஒரு புத்தகம் கையில் ஏறி விடுகிறது.
வீட்டுக்குள் நுழைந்ததும் விளக்கு வெளிச்சத்துடன், தொலைக்காட்சி இரைச்சலையும் போட்டு விட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கச் சென்ற காலங்களும் உண்டு. இருட்டைக் கண்டால் அமைதியின்மை. வீட்டின் நிசப்தத்தில் பயம். எங்கே அந்த நிசப்தம் நம்மில் இருக்கும் நிசப்தத்துடன் இணைந்து விடுமோ என்று பெரிதாக ஒரு திரை போட்டுக் கொள்கிறோம்.
சோஷலிசக் கருத்துக்களை நம்பி வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதீர்கள் என்று ஒரு நண்பர் அக்கறையாக எழுதியிருந்தார். சொற்களுக்குச் சாயம் பூசப்பட்டு விட்டால் அவற்றைப் பயன்படுத்துவதை விட்டு விட வேண்டும். சோஷலிசம், கம்யூனிசம் என்பது குறிப்பிட்டக் குழுவினரின் குறிப்பிட்ட கோட்பாட்டைக் குறிப்பதாகப் போன பிறகு அதே சொற்களில் வேறு கோட்பாடுகளை விளக்க முயல்வது தவறுதான்.
உழைக்கும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற கம்யூனிச சோஷலிச வாழ்க்கை முறை என்றைக்கும் ஒத்து வராத கொடுந்தத்துவம். தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடும் கோபம்தான் சமவுடைமை. ஒவ்வொரு மனிதனும் தனக்கு உரிய, தனக்குப் பிடித்த வாழ்க்கையை முழு மனதுடன் வாழ வழி உள்ள சமூகமே சமவுடைமை சமுதாயம். அதை ஆயுதம் கொண்டு மிரட்டி, அடித்துக் கொன்று அடைந்து விடவோ, பராமரிக்கவோ முடியாது.
ஒரே ஒரு உயிர், கடைக் கோடி உறுப்பினர் மனம் நொந்தாலும் அந்தச் சமூக அமைப்பின் அழிவு விதை ஊன்றப்படுகிறது. நோகடித்தலையே மந்திரமாகக் கொண்டுள்ள கட்டற்ற முதலாளித்துவமாயிருந்தாலும் சரி, அதட்டி, உருட்டி, மிரட்டிக் கொன்று எல்லோரையும் வாழ வைப்போம் என்று முரண்பாடுகளின் மொத்தமான சோவியத் கம்யூனிசமாயிருந்தாலும் சரி பல கோடிக் கணக்கான அழிவுக் கண்கள் பதிந்த ஆடையாகவே இருக்கின்றன.
மிகப் பலவீனமானவரின் பலம்தான் சமூகத்தின் பலம். சமூகம் உடைபட வேண்டுமானால் அந்தப் பலத்தை அதிகரிக்க வேண்டும். நலிந்ததைக் களையெடுப்போம் என்ற நாசிசமோ, வன்முறையின் மூலம் எங்களுக்குப் பிடிக்காதவர்களை அப்புறப்படுத்தி விட்டு சமவுடைமை சமூகம் அமைப்போம் என்ற சோஷலிசமோ ஆரம்பத்திலேயே தனது அழிவின் விதைகளை தன்னுள்ளேயே கொண்டே உதிக்கின்றன.
தனி மனித உரிமை, ஒவ்வொரு உயிருக்கும் மதிப்பு என்று பார்க்கும் சமூகங்கள் தளைக்கும். ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பத்தை, ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தைப் பலி கொடுக்கலாம் என்ற மனுவாதித் தத்துவங்கள் மண்ணாகிப் போய்த்தான் தீர வேண்டும். அவசியமான வன்முறை மூலம் நல்லது செய்து விடுவோம் என்ற கம்யூனிஸ்டுகள் செய்யும் தீமை, வர்க்க வேறுபாடுகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் முதலாளிகளை விடக் கொடியது.

திங்கள், நவம்பர் 27, 2006
தமிழா தமிழா
இடம் : சென்னை தியாகராய நகரில், தியாகராயர் அரங்கம் (பாண்டி பஜார் முருகன் இட்லி கடை எதிரில், ரோஹிணி இன்டெர்நேஷனல் ஹோட்டல் அருகில்)
வசதி : குளிரூட்டப்பட்ட நவீன அரங்கம்.
நிகழ்ச்சி : ஒரு அமைப்பின் தேசிய மாநாடு
பார்வையாளர்கள், நிகழ்ச்சி நடத்துபவர்கள், பேச்சாளர்கள் எல்லோருமே பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு தகுதி படைத்தவர்கள், அல்லது இன்னும் மேலே ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள்.
இதைப் போல ஆண்டுக்கு நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இங்கு ஒரு சிறப்பு, பேச்சாளர்கள் எல்லோருமே இயல்பான தூய தமிழில் பேசினார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் பலர் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, தோளில் துண்டு என்று தென்பட்டார்கள்.
இப்படித் தமிழ் பற்றாளர்கள் தம்மை அடையாளம் காட்டிக் கொள்வது பொதுவாக அரசியல் கட்சி மாநாடுகளில் நடக்கலாம், உலகத் தமிழ் மாநாடு அல்லது இணையத் தமிழ் மாநாட்டில் நடக்கலாம், மிஞ்சிப் போனால் ஒரு பல்கலையின் தமிழ்த் துறையின் நிகழ்ச்சியாக இருக்கலாம். ஆராய்ச்சியும் பட்டப் படிப்பும் பணப் புழக்கமும் கலந்து ஒரு துறை தமிழில் இருக்கிறதா என்ன?
எனக்கும் கூட அரங்கில் நுழையும் வரை தெரிந்திருக்கவில்லை. மாலை நான்கே முக்காலிலிருந்து ஏழே முக்கால் வரை மூன்று மணி நேரம் இருக்கையை விட்டு அசையாமல் கட்டிப் போட்ட அந்த நிகழ்ச்சி நான்காவது தேசிய சித்த மருத்துவர்கள் மாநாடு.
காலம் காலமாக பரம்பரை வழிகளில் சித்த மருத்துவம் பயின்று பேணி வந்த சூழலுக்கு உரம் சேர்க்க 1965ல் மருத்துவப் பட்டப் படிப்பு பாளையங்கோட்டையில் தொடங்கினார்களாம். இன்றைக்கு அதைத் தவிர தமிழகமெங்கும் நான்கு கல்லூரிகள், கேரளாவில் ஒரு கல்லூரி என்று வளர்ந்திருக்கிறது. ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான பட்டதாரி மருத்துவர்கள் வெளி வருகிறார்கள். நூற்றுக் கணக்கான பேர் தமிழகத்தின் பல பகுதிகளில் மருத்துவப் பணி செய்து வருகிறார்கள்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக, கடையில் தோசை மாவு வாங்கி தோசை சாப்பிட்டு, துணிகளைத் துவைத்து, குளித்து அலுவலகம் போய் வேலைகளை முடித்து விட்டு பிற்பகலில் தாம்பரம் அண்ணன் வீட்டுக்குப் போவதாக திட்டம். தொலைபேசினால், அவர்களது இரண்டு நாள் தேசிய மாநாடு நடப்பதைக் குறிப்பிட்டு, 'இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லகண்ணு, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ராசேந்திரன் ஆகியோரும் நிறைவு விழாவுக்கு வருகிறார்கள். நான் வரவேற்புரை ஆற்றுகிறேன், நீயும் வாயேன், பார்க்கலாம்' என்று சொன்னார். (போய்ப் பார்த்தால் அவர்தான் மாநாட்டுத் தலைவர் - அடக்கத்துக்கும் ஒரு அளவேயில்லை. )
வீட்டுக்கு வந்து பாகற்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொரியல், பருப்புப் பொடி, பப்படம் என்று வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டுக் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று படுத்தால் திடீரென்று விழிப்பு வந்த போது எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. ஏதோ அவசர வேலையின் நேரம் தவறி விட்டது என்று பதட்டம். மணி பார்த்தால் நான்கு ஆகியிருந்தது. ஓரிரு நிமிடங்களில் தெளிந்து, தி நகர் கிளம்பினேன்.
முந்தைய நாள் தைத்துக் கிடைத்திருந்த புதிய பேன்ட், நல்ல சட்டை போட்டுக் கொண்டு நெசப்பாக்கம், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் பில்லர் வழியாகப் நேராகப் போன பிறகு வழி தெரியாது. குத்து மதிப்பாக உணர்ந்த திசை நோக்கிக் கேட்டுக் கேட்டுப் போனால், தி நகர் பேருந்து நிலையத்தைத் தொட்டுச் சேரும் சாலை வழியாக அந்த சாலை சந்திப்புக்கு வந்து விட்டிருந்தேன். அரங்கை அடையும் போது நாலே முக்கால் மணி.
கடைசி இருக்கைகளில் ஒன்றில் இருந்து கொண்டேன். பாளையங்கோட்டையிலிருந்து மூன்று பேருந்துகளில் மாணவ மாணவியர் வந்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை உறுத்தியது மேடையில் பேசுபவர்களைக் கவனிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த சிலர். எனக்கு நேர் பின்னால் உட்கார்ந்திருந்தவர்களைச் சொல்லி நிறுத்தச் சொன்னேன். நடை பாதையில் மறுபக்கத்திலிருந்த ஒருவர் தன் அருகில் இருந்த பெண்ணிடம் தொடர்ந்து இடை விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். சுற்றி இருந்தவர்கள் முறைக்க ஆரம்பித்ததும் வெகு நேரத்துக்குப் பின்னர் வெளியே போய் விட்டார்கள்.
ஐந்து மணிக்கு நிறைவு விழா தொடங்க வேண்டும். நல்லகண்ணு அவர்கள் அரங்கினுள் நுழையும் போது மணி ஐந்து இரண்டு. ஆனாலும் முந்தைய நிகழ்ச்சி நிரம்பி வழிந்து ஐந்தரைக்குத்தான் நிறைவு விழா விருந்தினர்கள் மேடையேறினார்கள். வரவேற்புரை, ஆடை அணிவித்துச் சிறப்பித்தல், வாழ்த்துரைகள் என்று முடிந்து ராசேந்திரன் பேச ஆரம்பிக்கும் போது ஏழு மணி தாண்டி விட்டது.
'எம்பிபிஎஸ்ஸில் இடம் கிடைக்கவில்லை. நம்ம மார்க்குக்கு இந்த டாக்டர் படிப்புதான் கிடைத்தது' என்று சேர்ந்து விடும் மாணவர்கள் பலர் சித்த மருத்துவத்தில் ஆழமான ஈடுபாடும், பற்றும் கொண்டு சேர்ந்தவர்களில்லை. இருந்தும், சிலர் அந்த ஈடுபாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள். பலர் டாக்டர் என்ற முத்திரையை வைத்துக் கொண்டு படித்ததை ஒதுக்கி விட்டு நவீன மருத்துவத் துறைகளுக்குள் போய் விடுகிறார்கள்.
நோய் நாடி நோய் முதல் நாடும் போது சித்த மருத்துவம் நோயின் அறிகுறிகளை மட்டும் பார்க்காமல், நோயாளியின் முழு வாழ்க்கை முறையையும் அவரது அப்போதைய நிலையையும் உணர்ந்து மருத்துவம் செய்ய வேண்டுகிறதாம். எக்ஸ்ரே எடுத்து, ஸ்கேன் எடுத்து உள் கோளாறுகளை தெரிந்து கொண்டு அதைக் குணப்படுத்த சித்த மருந்துகளைப் பயன்படுத்துவது சரியாகாது. சித்தர்கள் சொன்ன வழியில் நோய் உணர்ந்து அதன் அடிப்படையைப் பிடித்து மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒருவர் (வேலாயுதம்) பேசிக் கொண்டிருந்தார்.
'தமிழ் மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள், நமக்குத் தன்னம்பிக்கை இல்லை, ஆயுர்வேதமும், யுனானியும் சக்கைப் போடு போடும் போது அவற்றை எல்லாம் விட முதிய சிறந்த நமது முறையை நாம்தான் அதற்குரிய இடத்துக்குக் கொண்டு வர வேண்டும்' என்று ஒவ்வொரு பேச்சாளர்களாக வலியுறுத்தினார்கள்.
தமிழ்ப் பற்றுடைய ஒரு அல்லோபதி மருத்துவரும் பேசினார். 'சித்த மருத்துவர்கள் தமது அறிவை, மருத்துவ முறையை, நாள் தோறும் பார்ப்பவற்றை ஆவணப்படுத்த வேண்டும், அப்படிச் செய்யாமல் இருப்பது பெரும் தவறு' என்று அவர் குறிப்பிட்டார். medical transcription என்று பல கோடி பணம் செலவளித்து ஆவணப்படுத்தலை மேலை நாட்டு மருத்துவர்கள் செய்கிறார்கள்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ராசேந்திரன் நகைச்சுவையாகவும் உணர்ச்சி நிரம்பவும் பேசினார். நல்லகண்ணு ஐயா பேசும் போது பாதியிலேயே கிளம்ப வேண்டியிருந்தது. எட்டரை மணிக்கு அலுவலகத்தில் அடுத்த வேலை காத்திருந்தது.
திரும்பி வரும் போது பனகல் பூங்கா சுற்றிக் கொண்டு ஆற்காடு வரும் போது கூட்ட நெரிசல் போத்தீஸ் திசையில் நலிந்து சரவணா ஸ்டோர்ஸ் திசையில் நிரம்பி இருந்தது. முன்பெல்லாம் பாண்டி பஜாரிலிருந்து ஒற்றை வழிப் பாதையில் போகும் போது தி நகர் பேருந்து நிலையம் நோக்கி, போத்தீஸ், ரங்கநாதன் தெரு வழியாகப் போகும் திசையில் வாகனங்கள் நிரம்பியும், ஆற்காடு நோக்கிப் போகும் திசையில் நெரிசல் குறைவாகவும் இருக்கும். நேற்று அதற்கு நேர் எதிர்.
வயிற்றுக்கு இரண்டு பன்கள் வாங்கிக் கொண்டேன். இரண்டு பன் ஐந்து ரூபாய்தான். காசு அதிகம் இல்லாத ஒருவர் ஐந்து ரூபாய்க்கு சிற்றுண்டி முடித்து விட முடியும்தான். தேநீர்க் கடையில் பன்னின் விலை இன்னும் குறைவாக இருக்கலாம்.
புதிய முடிவுகள், புதிய பணிகள் என்று பேச்சு ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. போஸ்டன் பாலா தமிழ் வலைப்பதிவுகளின் அடுத்தக் கட்டம் பற்றி தனக்கே உரிய பாணியில் அழகாக எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்த ஒவ்வொன்றையும் ஒரு குழு எடுத்துச் செயல்படுத்த முனையலாம.

ஞாயிறு, நவம்பர் 26, 2006
கொழுப்பைக் குறைப்பது எப்படி?
ஏதேதோ செய்ய விட்டுப் போய் விட்டது போல உணர்வு. ஒரு சின்னப் பட்டியல் போட்டதும் தெளிவாகி விடுகிறது. சில நாட்களாக ஞாபக மறதி மீண்டும் தலை காட்டுகிறது. பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் போவது, செய்ய வேண்டிய வேலைகளைத் தவற விடுவது என்று சறுக்கல்கள்.
மறதி என்பது கவனக் குறைவுதான் என்னைப் பொறுத்த வரை. ஏதாவது ஒன்றில் முழு ஆர்வமும் கருத்தும் இருந்தால் எப்படி மறக்கும்? அலட்சியமாக மனம் கருதுபவைதான் தவறிப் போய் விடுகின்றன. செய்பவை எல்லாமே தேவையானவை என்று ஆக்கிக் கொண்டால் மறதிக்கு இடமே இல்லை. கிட்டத்தட்ட பழக்கப்படுத்தப்பட்ட காட்டு விலங்கு போல எதில் மனதைப் பழக்குகிறோமோ அந்த வழியிலேயே போக ஆரம்பித்து விடுகிறது.
தேவையில்லாதவற்றில் நேரம் செலவழித்தால், இது நினைவில் கொள்ள வேண்டியதில்லை என்று உள்ளுணர்வு வலியுறுத்தி அதை மறக்கப் பழகிக் கொண்டால், தேவைப்படுபவற்றை நினைவில் நிறுத்த மனதை திசை மாற்ற வேண்டியிருக்கும்.
நேற்றைக்கு இன்னும் ஒரு தீவிர திசை மாற்றம். ஒவ்வொரு திசை மாற்றத்தின் போதும், இது வரை போய்க் கொண்டிருந்த திசை சரியில்லை என்றால், அந்தத் திசையில் போவதை முடிவு செய்தது யார் என்று ஒரு மனத் தோல்வி ஏற்பட்டு விடுகிறது. சிலவற்றில் தெரிந்தே முடிவெடுப்போம். கொஞ்ச தூரம் போன பிறகு திரும்பிக் கொள்ளலாம் என்ற திட்டத்துடன் எடுத்த முடிவானாலும் திரும்பும் நேரம் வரும் போது அதைச் செய்து விடுவது எளிதில்லை.
மின்னஞ்சல்கள், பிற தொடர்புகளுக்கு எவ்வளவு நேரம் கழித்து மறுமொழி அளிக்க வேண்டும்? இதற்கு ஒரு கால வரையறை வைத்துக் கொள்வது, வெளி எல்லை மட்டுமே இருக்க வேண்டும். இத்தனை மணி நேரத்துக்குள் விடை அளித்து விட வேண்டும் என்று இருந்தால் அந்த நேரம் விடை அளிப்பதற்கான விபரங்களைத் தொகுப்பதில் செலவிடப்பட்டால் சரி. இவ்வளவு நேரம் இருக்கிறதே என்று உடனேயே பதில் போட்டு விடக் கூடியவற்றையும் தள்ளிப் போட்டு விடுவது ஆரம்பித்து விடக் கூடாது.
உற்பத்தி துறையில் மதிப்பு சேர்க்கும் வேலைகள், மதிப்பு சேர்க்காத வேலைகள் என்று பிரிப்பார்கள். ஒரு பொருளின் உற்பத்தியின் போது வாடிக்கையாளருக்கு நேரடிப் பலனைக் கொடுக்கும் விதமாக செய்யும் ஒவ்வொரு வேலையும் மதிப்பு சேர்ப்பவை, மற்ற எல்லாம் மதிப்பு சேர்க்காதவை.
மின்னஞ்சல் ஒன்று நம்முடைய உற்பத்திப் பொருள். அது உடனடியாகப் போய்ச் சேர்ந்தால் மிக நல்லது. நம் பக்கம் பந்து இல்லாமல் அடுத்த பக்கம் தள்ளி விட்டு விடுவது, நமது வெற்றிக்கு எப்போதுமே உதவும். ஆனால் மடலை உருவாக்க தேவைப்படும் விபரங்கள், செய்து முடிக்க வேண்டிய பிற வேலைகள் இருந்தால் உடனடியாக எழுத முடியாது.
உடனடியாக உட்கார்ந்து தேவையான வேலைகளை எல்லாம் செய்து, தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தால், வேறு எதுவும் செய்யாமல் இதையே செய்தால் எவ்வளவு நேரம் ஆகுமோ அதுதான் நியாயமான நேரக் கெடு. இந்த நேரத்துக்குள் மடல் தயாராகாமல் போய் விடுவதற்கு இரண்டு காரணங்கள்:
இதே மாதிரி, புதிய ஆர்டர் ஒன்று வந்தால் கையாளும் முறை.
வீணாக்கலைக் குறைக்க வேண்டும், செலவை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்தால் கத்தி முதலில் இந்த மதிப்புச் சேர்க்காத பகுதிகளில் விழ வேண்டும். உடம்பு இளைக்க கொழுப்பைத்தான் குறைக்க வேண்டும், தசையை வெட்டி விடக் கூடாது. மதிப்புக் கூட்டாத பணி ஒன்றை செய்யாமல் விட்டு விட்டால், பொருளின் தரம் குறையாமலேயே செலவு குறைந்து விடும். உண்மையில் தரம் அதிகரித்து விடும்.
அப்படி ஒரு ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை என்னிடம் விட்டார்கள். அந்த முடிவுகளின் படி ஒரு கடிதத்துக்குப் பதில் தயாரிக்க மேலாளரே கணினியில் அமர்ந்து அச்செடுத்து அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் தொலைநகலி மூலம் அனுப்பி விட வேண்டும். (இப்போது மின்னஞ்சலும் வந்து விட்டதால் அச்செடுக்கும், தொலை நகலும் வேலையும் கிடையாது).
தேவைப் பட்டியலைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் மடலை நேரடியாக எடுத்துப் போய், சேவைப் பிரிவிலேயே வைக்கப்பட்ட கணினியில் உள்ளிட்டு, அங்கேயே அச்செடுத்து மேலாளர் கையொப்பமிட்டு அடுத்த பிரிவுக்கு அனுப்பி விட வேண்டியது. சராசரி நேரம் இரண்டு மணி நேரம்.
மூன்று நாட்களிலும் முடியாமல் போய்க் கொண்டிருந்த வேலை இரண்டு மணி நேரத்தில் முடிந்ததில் பல நன்மைகள்:
இவற்றை மாற்ற முயற்சிக்கும் போது கடுமையான எதிர்ப்புகள்.
தம்முடைய வேலை போய் விடுமோ என்று பயப்படும் ஊழியர்கள்,
தனது பிரிவில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தால் தனது மதிப்புக் குறைந்து விடுமே என்று மேலாளர், வேலை முறையை மாற்ற விரும்பாத மனித இயல்பு என்று சேர்ந்து பல தடைக் கற்கள்.
என்னுடைய பாணி அடாவடியாக மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காத வழியில் இருந்தது. 'சொன்னபடி செய்ய வேண்டும், இதுதான் உயர்மேலாளரின் கட்டளை' என்று அடித்துப் பேசி வேலை நடத்த முயன்று பல மனக் காயங்களுடன் அதனால் ஏற்பட்ட எதிரிகளுடன் மாற்றத்தைச் செய்து முடித்தேன்.
அறுவைச் சிகிச்சை முடிந்தது, நோயாளியும் தேறி விட்டார். ஆனால் மருத்துவரை நோயாளி வெறுக்கிறார். வேலை முடிந்த மகிழ்ச்சி ஒரு புறம், இதே பிரிவில் இவன் தொடர்ந்து பணியாற்ற முடியாத இக்கட்டு. சொன்னதைச் செய்து முடித்ததற்கு பாராட்டும்படியாகவும் இருக்க வேண்டும்.
அதன் முடிவுதான், வெளிநாட்டுப் பிரிவுக்கு அனுப்பியது. ஆயிரம் பேர் வேலை பார்க்கும் இடத்தில் செய்ய முடிபவை, ஆட வாய்ப்புகள் ஏராளம். சீனாவில் சின்ன அலுவலகம், என்னையும் சேர்த்து இரண்டே பேர்தான். புதிதாக வணிகத்தை உருவாக்கும் வேலை. கூடவே வீட்டு வாழ்க்கையிலும் மாறுதல்கள். அடுத்த நான்கு ஆண்டுகள் முந்தைய நான்கு ஆண்டுகளுக்கு மாறாக, மிக அதிகப் பணம், மிகக் குறைந்த வேலை அதனால் ஏற்படும் உளைச்சல்கள் என்று ஓடின.
போன வாரம் நண்பர் ஒருவரிடம் சொன்னது போல கடந்த ஒரு மாதமாகத்தான் முதல் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அதே உந்துதல், மகிழ்ச்சி, நிறைவு கிடைத்திருக்கிறது. இதே வேகத்தில் போக வேண்டியதுதான். உயரங்களில் பயணம் செய்வது எப்போதுமே தனிமைப் பயணம்தான்.
போன முறை உச்சத்தில் நின்ற போது செய்த தவறுகளைத் தவிர்த்து புதிய தவறுகளை மட்டும் செய்து கொண்டே போனால் அடுத்தத் தளத்தில் நகர்ந்து விடலாம். இப்போது பேச்சுக்கள் எல்லாம் பெரிய நிலையைப் பற்றித்தான். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த ஓட்டம் ஓடிக் கொண்டே அதற்குப் பிறகான வாழ்க்கைக்கு தயாரிப்புகளையும் செய்து கொண்டே இருந்தால், 2015ல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடலாம்.
எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்? காந்தி சொன்ன 120 ஆண்டுகள்?

- இதை விட முக்கியமான வேலைகளை முடித்து விட்டுத்தான் இதைச் செய்ய முடியும்.
- 'இவ்வளவு வேலை இன்று செய்தோம். உடனேயே பதில் அளிக்கா விட்டால் என்ன? வேறு ஏதோ வேலையில் மும்முரமாக இருக்கிறார் என்று மறுபக்கத்தவர் நினைத்துக் கொள்ளட்டும். நாம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோம்/பொழுது போக்கு வேலைகளில் ஈடுபடுவோம்' என்று தள்ளிப் போட்டு விடுதல்.
- பெரும்பாலான மடல்களுக்கு பிற பிரிவிகளிலிருந்து விபரங்கள் சேகரித்து பதில் போட வேண்டியிருக்கும்.
- அவற்றைக் குறித்துக் கொண்டு வந்து, எங்கள் பிரிவின் மேலாளர் வரைவு மடலை கையால் எழுதி தனது உதவியாளரிடம் கொடுப்பார்.
- அந்தப் பெண்மணி, அலுவலகத்தின் இன்னொரு முனையில் (ஏழெட்டு அடி தூரத்தில்) இருக்கும் கணினியில் உட்கார்ந்து வோர்ட்ஸ்டார் மென்பொருளில் கடிதத்தைத் தட்டச்சு செய்து, காகிதத்தில் அச்சடித்து மேலாளரிடம் கொண்டு வருவார்.
- மேலாளர் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் செய்து, தேவைப்பட்டால் உதவியாளர் மீண்டும் கணினிக்குப் போய் மறு அச்சடித்து, எல்லாம் சரியாக வந்தவுடன் மேலாளர் கையொப்பம் இட்டு தொலைநகலி இயங்கும் அறைக்குப் போக ஒரு தட்டில் வைத்து விடுவார்.
- முதல் மாடியில் இருக்கும் தொலை நகலி அறைக்கு யாராவது போனால், காத்திருக்கும் இந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு போய் அங்கு உட்கார்ந்திருக்கும் தொலைநகலி இயக்குனரிடம் கொடுப்பார்.
- அவர் ஒவ்வொன்றாக அனுப்பி விடுவார்.
இதே மாதிரி, புதிய ஆர்டர் ஒன்று வந்தால் கையாளும் முறை.
- தேவைப் பட்டியல், தொலை நகலியாக வந்து மேலாளரை வந்தடையும்.
- அவர் உற்பத்தித் திட்டமிடும் பிரிவிடம் பேசி எப்போது கொடுக்க முடியும் என்று உறுதி செய்த பிறகு மேலதிக விபரங்களை அந்த நகலிலேயே எழுதி, தனது உதவியாளரிடம் கொடுப்பார்.
- அந்த அம்மா, இதற்கென வைத்திருந்த ஒரு படிவத்தை நிரப்பி இன்னொரு பையனிடம் கொடுப்பார்.
- அந்தப் பையன் ஒரு குறிப்பேட்டில் இந்த விபரங்களை நிரப்பி ஒரு வரிசை எண்ணை பெற்றுக் கொள்ளுவான்.
- படிவம் பெண் உதவியாளரிடம் திரும்பிப் போய் விட, இந்தப் பையன் குறிப்பேட்டுடன், முதல் மாடியில் இருக்கும் கணினிப் பிரிவுக்குப் போய் விபரங்களை உள்ளிட்டு,
- திட்டப் பிரிவுக்குக் கொடுக்க வேண்டிய உத்தரவுப் படிவம் அச்சிட வேண்டுகோள் கொடுப்பான்.
- அது அச்சாகி வந்த பிறகு திரும்ப எடுத்து வந்து, மேலாளரோ உதவியாளரோ கையொப்பமிட்ட பிறகு உற்பத்திக்கு விபரம் போய்ச் சேரும்.
வீணாக்கலைக் குறைக்க வேண்டும், செலவை மட்டுப்படுத்த வேண்டும் என்று ஆரம்பித்தால் கத்தி முதலில் இந்த மதிப்புச் சேர்க்காத பகுதிகளில் விழ வேண்டும். உடம்பு இளைக்க கொழுப்பைத்தான் குறைக்க வேண்டும், தசையை வெட்டி விடக் கூடாது. மதிப்புக் கூட்டாத பணி ஒன்றை செய்யாமல் விட்டு விட்டால், பொருளின் தரம் குறையாமலேயே செலவு குறைந்து விடும். உண்மையில் தரம் அதிகரித்து விடும்.
அப்படி ஒரு ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை என்னிடம் விட்டார்கள். அந்த முடிவுகளின் படி ஒரு கடிதத்துக்குப் பதில் தயாரிக்க மேலாளரே கணினியில் அமர்ந்து அச்செடுத்து அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் தொலைநகலி மூலம் அனுப்பி விட வேண்டும். (இப்போது மின்னஞ்சலும் வந்து விட்டதால் அச்செடுக்கும், தொலை நகலும் வேலையும் கிடையாது).
தேவைப் பட்டியலைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் மடலை நேரடியாக எடுத்துப் போய், சேவைப் பிரிவிலேயே வைக்கப்பட்ட கணினியில் உள்ளிட்டு, அங்கேயே அச்செடுத்து மேலாளர் கையொப்பமிட்டு அடுத்த பிரிவுக்கு அனுப்பி விட வேண்டியது. சராசரி நேரம் இரண்டு மணி நேரம்.
மூன்று நாட்களிலும் முடியாமல் போய்க் கொண்டிருந்த வேலை இரண்டு மணி நேரத்தில் முடிந்ததில் பல நன்மைகள்:
- படிவம் நிரப்பும், குறிப்பேட்டில் எழுதும் ஆட்கள் வேறு உருப்படியான வேலை பார்க்க ஆரம்பிக்கலாம்.
- தேவைப்பட்டியல் விரைவில் உற்பத்தியை அடைந்து விற்பனை விரைவாக நடக்கிறது (மூன்று நாட்கள் முன்னதாக), காசும் மூன்று நாட்களுக்கும் முன்பாக வந்து விடுகிறது.
- வாடிக்கையாளருக்கு மூன்று நாட்கள் முன்பாகவே பொருள் கிடைத்து விடுகிறது.
இவற்றை மாற்ற முயற்சிக்கும் போது கடுமையான எதிர்ப்புகள்.
தம்முடைய வேலை போய் விடுமோ என்று பயப்படும் ஊழியர்கள்,
தனது பிரிவில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தால் தனது மதிப்புக் குறைந்து விடுமே என்று மேலாளர், வேலை முறையை மாற்ற விரும்பாத மனித இயல்பு என்று சேர்ந்து பல தடைக் கற்கள்.
என்னுடைய பாணி அடாவடியாக மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காத வழியில் இருந்தது. 'சொன்னபடி செய்ய வேண்டும், இதுதான் உயர்மேலாளரின் கட்டளை' என்று அடித்துப் பேசி வேலை நடத்த முயன்று பல மனக் காயங்களுடன் அதனால் ஏற்பட்ட எதிரிகளுடன் மாற்றத்தைச் செய்து முடித்தேன்.
அறுவைச் சிகிச்சை முடிந்தது, நோயாளியும் தேறி விட்டார். ஆனால் மருத்துவரை நோயாளி வெறுக்கிறார். வேலை முடிந்த மகிழ்ச்சி ஒரு புறம், இதே பிரிவில் இவன் தொடர்ந்து பணியாற்ற முடியாத இக்கட்டு. சொன்னதைச் செய்து முடித்ததற்கு பாராட்டும்படியாகவும் இருக்க வேண்டும்.
அதன் முடிவுதான், வெளிநாட்டுப் பிரிவுக்கு அனுப்பியது. ஆயிரம் பேர் வேலை பார்க்கும் இடத்தில் செய்ய முடிபவை, ஆட வாய்ப்புகள் ஏராளம். சீனாவில் சின்ன அலுவலகம், என்னையும் சேர்த்து இரண்டே பேர்தான். புதிதாக வணிகத்தை உருவாக்கும் வேலை. கூடவே வீட்டு வாழ்க்கையிலும் மாறுதல்கள். அடுத்த நான்கு ஆண்டுகள் முந்தைய நான்கு ஆண்டுகளுக்கு மாறாக, மிக அதிகப் பணம், மிகக் குறைந்த வேலை அதனால் ஏற்படும் உளைச்சல்கள் என்று ஓடின.
போன வாரம் நண்பர் ஒருவரிடம் சொன்னது போல கடந்த ஒரு மாதமாகத்தான் முதல் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அதே உந்துதல், மகிழ்ச்சி, நிறைவு கிடைத்திருக்கிறது. இதே வேகத்தில் போக வேண்டியதுதான். உயரங்களில் பயணம் செய்வது எப்போதுமே தனிமைப் பயணம்தான்.
போன முறை உச்சத்தில் நின்ற போது செய்த தவறுகளைத் தவிர்த்து புதிய தவறுகளை மட்டும் செய்து கொண்டே போனால் அடுத்தத் தளத்தில் நகர்ந்து விடலாம். இப்போது பேச்சுக்கள் எல்லாம் பெரிய நிலையைப் பற்றித்தான். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த ஓட்டம் ஓடிக் கொண்டே அதற்குப் பிறகான வாழ்க்கைக்கு தயாரிப்புகளையும் செய்து கொண்டே இருந்தால், 2015ல் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து விடலாம்.
எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்? காந்தி சொன்ன 120 ஆண்டுகள்?
சனி, நவம்பர் 25, 2006
எத்தனை காலம்தான் ...
"நான் பெங்களூரில் சாஃப்ட்வேர் கம்பெனியில வேல பார்க்கிறேன். இப்போ வாரக் கடைசிக்கு வீட்டுக்குப் போறேன்."
"அப்படியா நல்லது, எந்த கம்பெனி?"
"__________யில்"
"எத்தனை வருஷமா வேலை பார்க்கறீங்க?"
"இப்பதான் ஏழெட்டு மாசமா. ஆனா ரெண்டு வருஷம் ஃபேக் (fake) எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்துதான் சேர்ந்தேன். 2003ல எஞ்ஜீனியரிங் முடிச்சேன். அப்புறம் ஒரு சாப் (SAP) கோர்ஸ் பண்ணினேன். அப்புறம் சும்மாதான் சுத்திக்கிட்டிருந்தேன். இந்த கம்பெனியில எங்க சீனியர்கள்தான் புராஜெக்ட் லீட், ஹெஆர் இல் இருக்கிறாங்க. அவங்க சொல்லித்தான் அப்ளை பண்ணினேன். அவங்களே அப்ரூவ் பண்ணி வேலை கிடைச்சிருச்சி! என்ன மாதிரி இருபது பேரைச் சேர்த்து விட்டிருக்காங்க."
"எப்படி... சமாளிக்க முடியுதா?"
"எங்க சீனியர்கள்தானே, அவங்களே எங்க வேலையையும் சேர்த்து செஞ்சிடுவாங்க. பகல்ல லேப்டாப்ல விபரங்கள எடுத்துக்கிட்டு ரூமுக்கு வருவோம். அவரே முடிச்சுக் கொடுத்துடுவாரு. அடுத்த நாள் காலையில மீட்டிங்லயும் அவரேதானே ரிவியூ பண்ணணும். சமாளிச்சிருவாங்க!"
"நல்லா கத்துக்கிறீங்களா? காலேஜ்ல ஃபைனல் இயர் புராஜக்ட் என்ன பண்ணினீங்க? பிஈ கம்ப்யூட்டர் சைன்ஸ்தானே, கேம்பஸ் இன்டர்வியூ வந்திருப்பாங்களே!"
"புராஜெக்ட் எல்லாம் வாங்கியே கொடுத்துட்டோம். எங்க செட்ல இருபத்தி நாலு பேர், படிக்கவே மாட்டோம். எப்படியோ பாஸாயிட்டேன். கேம்பஸ் இன்டர்வியூ எல்லாம் நமக்கு சான்சே இல்லை"
"இப்ப தோணுதா, காலேஜ் நாட்கள்ள கொஞ்சம் நல்லா முயற்சி செஞ்சிருந்தா எங்கேயோ போயிருக்கலாம்ல?"
"ஆமாமா, விளையாடிட்டே இருந்துட்டோம். இப்பவும் இந்த சீனியரும் இல்லைன்னா, எங்கயாவது வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆனா, அவரு இன்னும் நாலஞ்சு மாசத்துல ஆன்சைட் போயிடுவாரு. அப்புறம் என்ன ஆகும் என்று தெரியல"
"அதுக்குள்ள ராப்பகலா உழைச்சி எல்லாம் கத்துக்குங்க. நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு."
"இப்பவும் ஒரே ஜாலிதான். காலையில பதினொரு மணிக்குத்தான் கம்பெனிக்குப் போவோம். நாலு மணிக்குக் கிளம்பி விடுவோம். எங்க சீனியர்தானே, கண்டுக்க மாட்டாங்க."
"காலேஜ் படிப்பில கோட்டை விட்டீங்க. நல்ல காலத்துக்கு இன்னொரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு, எல்லாருக்கும் முன்னே காலையில போயி ராத்திரி வெகு நேரம் உட்கார்ந்து வசதிகளைப் பயன்படுத்திக் கத்துக்க வேண்டாமா! இப்போ சனி, ஞாயிறு கூட வீட்டுக்கு என்ன போக வேண்டியது. கம்பெனியிலயே நேரம் செலவழிச்சால் உங்களைத் தயார் படுத்திக்கலாமே!"
"ஆமாமா, பண்ணணும்."
ஆம்பூரில் பேருந்து நிறுத்ததில் இறங்கியதும் வந்து நின்ற சுற்றுலா கார் ஒன்றில் சென்னை போக ஏற்றிக் கொண்டார்கள். மைசூரிலிருந்து வருகிறாராம் ஓட்டுனர். முந்தைய நாள் சென்னையிலிருந்து கிளம்பி மைசூரில் சவாரி இறக்கி விட்டுத் திரும்பி வருகிறார். முன்பக்கம் ஓட்டுனருக்கு அருகில் ஒருவர். பின்பக்கம் என்னையும் சேர்த்து மூன்று பேர். ஒருவர் வேலூரில் இறங்கிக் கொண்டார். இவர்கள் இருவரும் ஓசூரில் ஏறிக் கொண்டவர்களாம்.
பின் இருக்கையில் என்னுடன் இருந்த பையன்தான் மேலே சொன்ன உரையாடலில். 'போன மாதம்தான் ஸ்கார்பியோ கார் வாங்கினேன், இப்போ சென்னை போனதும் திரும்ப ஒரு கல்யாணத்துக்கு மதுரைக்குப் போகணும்" என்றெல்லாம் தகவல்கள் உதிர்ந்தன.
சென்னை நெருங்கும் போது ஓட்டுனருக்குக் கண்கள் சுற்றவே பத்து நிமிடங்கள் காரை நிறுத்தி ஓய்வெடுக்க முனைந்தார். இந்த இரண்டு பேரும் வெளியே போய் நின்றிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தால் இந்தப் பையன் கையில் பழுப்பு நிறத்திரவம் பிளாஸ்டிக் கப்பில்.
முன் இருக்கையில் இருந்தவர் வயசானவர். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையில் ஓசூரில் வண்டி ஓட்டுனராக வேலை செய்கிறாராம். குடும்பம் சென்னையில். மூன்று பிள்ளைகள். மூத்தவன் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறான்.
முதலில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையில் ஊழல் எல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டு, மிகவும் கறாராக தொழிற்சாலைகளை மாசுக் கட்டுப்பாடு செய்ய வைக்கிறார்கள் என்று சொன்னார். அப்புறம், பேச்சுத் தொடர்ந்து, நேற்று மட்டும் அறுநூறு கிலோமீட்டர் ஓட்ட வேண்டியிருந்ததால் குடிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்.
ஐந்தரைக்கு ஆம்பூரில் புறப்பட்டது எட்டரை மணிக்கு போரூர் வந்தாகி விட்டது. இடையில் நிறுத்திய நேரம் போக, இரண்டரை மணி நேரம்தான் பயணம். கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேரம் தூங்காமல் வண்டி ஓட்டி வந்தாலும் புது வண்டியில் அலுங்காமல் அதிவேகமாக ஓட்டி வந்தார். உலகப் புகழ் பெற்ற கார் வாடகைக்கு விடும் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த வண்டி.
நேற்றுக் காலையில் வாலாஜாவிலிருந்து வாணியம்பாடி போய், திட்டமிட்ட வேலை முடிந்த பிறகு ஒரு அவசர அழைப்பு அதே ஊர் வாடிக்கையாளரிடமிருந்து. உடனேயே போக முடிந்தது, அவர்களது கணினி உயிரை விட்டிருந்தது. எப்படியே அங்கே இங்கே இணைத்து கடைசியாக எடுக்கப்பட்டிருந்த தகவல் சேமிப்பை மீட்டுக் கொண்டு இன்னொரு கணினியில் நிறுவிக் கொடுத்து விட்டோம். நாள் முழுவதும் இழுத்து விட்டது.
இவர்களுக்கு தர்ம சேவைதான் இப்போது. பராமரிப்பு ஒப்பந்தம் போடுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தவர்கள். சூட்டோடு, சூட்டாக வேலைக்கு கட்டணம் குறித்துப் பேசி விட்டேன். போன வாரம் இன்னொரு வேலையாக ஒரு நாள் செலவளித்தது, இன்றைய வேலை இரண்டுக்கும் இன்வாய்ஸ் அனுப்பச் சொல்லி விட்டேன்.
இப்போதெல்லாம் போரூரில் இறங்கி பகிர்வூர்தியைப் பிடிக்க மனம் வருவதில்லை. இன்னும் அரைக் கிலோமீட்டர் நடந்து பேருந்து நிறுத்தம் வந்து விட்டால் இரண்டரை ரூபாய்க்குக் கொண்டு விட்டு விடுவார்களே. முன்பு ஐந்து ரூபாய் இருந்த போது பெரிதாகத் தோன்றவில்லை. இப்போது ஏழு ரூபாய் ஆகி விட்டதே!

வெள்ளி, நவம்பர் 24, 2006
பறவைகள் பலவிதம்
புதுமனை புகுந்தாயிற்று. என்னதான் இருந்தாலும் ஏற்கனவே மக்கள் வசிக்கும் வீட்டுக்குப் போய்த் தங்குவதிலும் புதிய இடத்தில் தங்குவதற்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. சின்னச் சின்ன பொருட்கள், புழங்க ஆரம்பித்த இடத்தில் இருப்பவை புதிய இடத்தில் இருப்பதில்லை. வாரியல், தண்ணீர் வாளி, முகம் பார்க்கும் கண்ணாடி, குடிக்கத் தண்ணீர் ஏற்பாடு என்று அடிப்படைத் தேவைகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.
காலையில் பையைக் கொண்டு புது இடத்தில் வைத்துக் கொண்டு வார் அன்ட் பீஸ் படித்துக் கொண்டிருக்கும் போது நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அதைத் தொடர்ந்த பத்து நிமிடங்களில் அவர் சொன்னவரிடம் பேசி புதிதாக ஒரு தொழில் வாய்ப்பைக் குறித்த தகவல்கள் கிடைத்தன. சூறாவளிச் சுற்றுப் பயணமாக எல்லா வாடிக்கையாளர்களையும் ஒரு முறை போய்ப் பார்த்து விட நினைத்திருந்த நாள்.
முதலில் போன இடத்தில் மீண்டும் ஒரு முறை மென்பொருள் செயல்படுத்தும் புதிய திட்டம். இந்தத் தடவையாவது சரியாக நடக்க வேண்டும். இன்னொரு இடத்தில் கணினி திரை வடிவமைப்புகளில் யாரோ விளையாடி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று புகார். போய் சரிசெய்து விட்டுக் கிளம்பியாகி விட்டது.
மூன்றாவது இடத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. இப்படி வந்து வந்து போய்க் கொண்டிருப்பதை விட ஒரு வாரம் முழுவதும் இங்கேயே தங்கி வேலையை முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். தங்குவதற்கு இடமும் இருப்பதால் அடுத்த வாரத்தோடு இந்த நிறுவன வேலை முடிவுக்கு வந்து விட வேண்டும்.
அப்புறம் தலைவலி கொடுக்கும் இடம். அங்கும் கறாராகப் பேசியிருந்ததில் அளவுக்கு உட்பட்டே தேவைகள் சொன்னார்கள். ஒவ்வொன்றாக முடித்துக் கொடுத்துக் கொண்டே அவர்களது அகலப்பட்டை இணைப்பில் அஞ்சல்களையும் படித்துக் கொண்டேன். மதியச் சாப்பாடும் அங்கு முடிந்தது. இரண்டரை மணி வரை கொடுத்திருந்த நேரம் முடிந்து கிளம்பி விட்டேன். திரும்ப சென்னையிலிருந்து வந்திருந்தவரையும் கூப்பிட்டுக் கொண்டு கடைசி இடத்துக்குப் பயணம். இன்னும் கணினி இணைப்புகள் கொடுத்து முடித்திருக்கவில்லை. கோப்புகளை நகல் செய்து விட்டுக் கிளம்பினோம்.
எஞ்சியிருந்த பொருட்களைத் திரட்டிக் கொண்டு சென்னை செல்பவரை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு இணைய மையத்தில் புகுந்தேன். விக்கி தொழில்நுட்ப உதவிக் குழு வேலைகளைத் தொடங்கி விட்டிருந்தார். பலவிதமான சமையல் குறிப்புகள் போட்டு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் பதிவு மக்கள். கொஞ்ச நேரம் மேய்ந்து விட்டு ஒரு சிலருடன் ஜிமெயில் டாக்கில் பேசிவிட்டுப் பார்த்தால் ஒன்றரை மணி நேரம் ஓடி விட்டிருந்தது. மணிக்கு இருபத்தைந்து ரூபாய் கட்டணம் என்று பெரிய கடியாக கடிப்பது இந்த இணைய மையம். ஆனால் வேகமும், கணினி பராமரிப்பும் நன்றாக இருப்பதால் வேறு வழியில்லை.
நம்மைச் சுற்றி நடக்கும் அடாவடிகளைப் பார்த்தால் மனம் நொந்து போகிறது என்று ஒரு சகோதரி பொறுக்க முடியாமல் கேட்டார். ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் உறுப்பினர்களில் உறுதிமொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். "இறைவா, என்னால் மாற்ற முடிந்தவற்றை மாற்றி விடும் ஊக்கத்தைக் கொடு, மாற்ற முடியாதவற்றைச் சகித்துக் கொள்ளும் வலிமையைக் கொடு, எது மாற்ற முடிந்தது, எது மாற்ற முடியாதது என்று தெரிந்து கொள்ளும் அறிவைக் கொடு" என்று.
கையாலாகாத உணர்வுதான் சோர்வுக்கு மிகப் பெரிய காரணம். ஏதாவது மனதுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைக் குறித்து நம்மால் முடிந்ததைச் செய்து விட வேண்டும். எதுவுமே செய்ய முடியாவிட்டால், அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்து விட வேண்டும்.
ஸ்டீபன் கோவி, இரண்டு வட்டங்களைக் குறிப்பிடுகிறார். கவன வட்டம், வல்லமை வட்டம். ஒவ்வொருவருக்கும் நமது கவனத்துக்கு உட்பட்ட பல உண்டு. இன்னொரு வட்டத்துக்குள் நம்மால் செயல் புரிய முடியக் கூடியவை.
நம் செயலுக்கு உட்பட்டவற்றின் மீது கவனத்தைச் செலுத்தினால் அந்த வட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கும். அந்த வட்டத்துக்கு வெளியே இருக்கும் கவனத்துக்குப் போராடும் விஷயங்களில் நேரம் செலவழித்தால் வீண்தான்.
நாட்டில் பொதுச் சுகாதாரம் கேடு கெட்டுப் போயிருக்கிறது. அது கவலைக்குரியது. அதைக் குறித்து நினைத்துக் கொண்டே இருந்தால் எதுவும் பலனில்லாமல் போவதோடு மனச் சோர்வு வந்து விடும். அதைக் குறித்து நாம் செய்ய முடிவது நம் சார்ந்த குப்பைகளைச் சரியாகக் கையாளுவது, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் நமது பிரச்சாரத்தைக் காட்டுவது. ஊரெல்லாம் தூய்மையாகி எப்போது நல்ல காலம் பிறக்கும் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மால் செய்ய முடிவதையும் செய்யாமல் போய் விடும்.
சிறப்பு ஆப்பு என்ற வலைப்பதிவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாராம். 'எல்லோருடைய கணினிக்குள்ளும் உள்ளே புகுந்து தகவல்களைத் திரட்டியிருக்கிறார்களே, என்ன ஒரு அநியாயம்!' என்று கலங்குகிறார்.
அப்புறம் சில தொலைபேசி பேச்சுக்கள். சில சமயம் அறுவைச் சிகிச்சை தேவைப்படும். மிகத் திறமையான மருத்துவர்தான் அறுத்துப் போட்டு விடுவதா, மருந்து மூலம் குணப்படுத்தி விட முடியாதா என்று தீர்மானிக்க வேண்டும். தேவை இல்லாது அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தில் கொண்டு விடலாம், தேவைப் படும்போது செய்யாமல் இருந்தாலும் உயிருக்கு ஆபத்துதான்.
அப்படி ஒரு குழப்பமான பொருளைக் குறித்து ஒரு சில தொலைபேசி உரையாடல்கள். வழியில் தங்குமிடத்துக்குத் தேவையான ஒரு சில பொருட்களை வாங்கிக் கொண்டேன். பெரிய இடம். இரண்டு பெரிய அறைகள், முன்னறை, சமையலறை, ஒரு வழிபாட்டு அறை, கதவைத் திறந்தால் உலாவிக் கொள்ள பெரிய முன் வெளி, முதல் மாடியில் இடம்.
மீண்டும் டால்ஸ்டாய். அப்படியே பாத்திரங்களின் நுணுக்கமான முக அசைவுகளையும் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். நடாஷாவின் இளமைத் துள்ளல்கள், இளவரசன் ஆண்ட்ரூவின் திறமையான நடுவயது வாழ்க்கை, இருவரும் காதலில் விழுவது, அவர்களுக்கிடையேயான உறவு என்று சுகமான பகுதி. மனித உணர்வுகளை இவ்வளவு சிறப்பாகப் படம் பிடிப்பது மிகச் சிலருக்கே கைவரும்.
பீட்டர் (pierre) என்ற குண்டான, கண்ணாடி போட்ட, சொதப்பலான பேர்வழிதான் கதாசிரியரின் தன் வடிவம் என்று தோன்றுகின்றது. திருமணம், வாக்குறுதிகள், மான அவமானங்கள், செல்வங்கள், சமூக நிலைகள் என்று பல விதமான ஓட்டங்கள் சந்திக்கின்றன.
முதலில் படிக்கும் போது இந்த எழுத்துப் பாணியை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறேன். நடாஷா வீட்டில் வளரும் சோனியா என்ற உறவுக்காரப் பெண்ணின் குழப்பங்களிலிருந்து, அந்த வீட்டு வேலைக்காரப் பெண்ணின் பெருமையிலிருந்து, பேரரசர் அலெக்சாண்டரின் விருப்பு வெறுப்புகள் வரை எல்லோரையும் மனிதர்களாக காட்டுகிறார். வரலாறு படிக்கும் போது அரசர்கள் என்றால் ஒளிவட்டம் பொருந்தியவர்கள் என்ற பொது உருவகத்தை உடைத்து, மாவீரம் நெப்போலியனையும் தோலுரித்துக் காட்டி அவனுக்கு சளி பிடித்ததால் வரும் தொல்லைகளையும் பட்டியலிட்டு விடுகிறார்.
வீட்டுக்குள் அடைத்து மூடி வெதுவெதுப்பாக இருக்கிறது. கதவைத் திறந்து வெளியே போனால் குளிர் பெட்டியைத் திறந்து உள்ளே புகுந்து விட்டது போல சில்லென்று அதிகாலைக் குளிர். இன்று வாணியம்பாடி போக வேண்டும். சென்னையிலிருந்து வரும் நண்பருடன் சேர்ந்து கொள்ள வேண்டும்.
இப்படியே நேரம் போத மாட்டேன் என்கிறது. தொலைக்காட்சியையும் தேவையில்லாத இணைய மேயல்களையும் விட்ட பிறகும் செய்வதற்கு கை நிறைய வேலைகள், எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியவில்லை. வீட்டுப் பொறுப்புகளும் இல்லை. எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியிருந்தால் (வீடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையக் குப்பைகள்) வேறு எதுவும் செய்ய வாய்ப்பே இல்லாமல் போய் விடும் போல் இருக்கிறது.
"வேற வழியில்லாமல் ஒரே ஒரு சீரியல் பார்ப்பேன். நேரம் போகணுமே" என்று ஒருவர் சொன்ன போது வியப்பாக இருந்தது. நமக்கு நேரம் போத மாட்டேன் என்கிறது.
நாள் தவறாமல் பொருள் பொதிந்த கனவுகள். ஆண்டவன் அருள் புரியட்டும்.
கார்த்திகை மாதம் பிறந்தாச்சு. டிசம்பர் இசை விழாவை பின் நீட்டி நவம்பர் திருவிழாவும் நடக்கிறது. இசை விழா கூட மார்கழியுடன் ஒட்டி வருவதுதானே. மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் சொன்னாராம். கார்த்திகையில் பிறந்தவர்கள் நிறைய நண்பர்களுடன், நடைமுறை வாழ்க்கையில் திறம்படச் செயல்படுபவர்களாக இருப்பார்களாம். மாழ்கழி என்றால் குளிர், வறட்சி. எப்போதுமே உர்ரென்று நகைச்சுவை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டுக் கொண்டு, பெரிய திட்டங்கள் போட்டுக் கொண்டு, வாயைத் திறந்தால் அறிவுரை மழை பொழிந்து கொண்டு இருப்பார்களாம்.
லிண்டா குட்மேனின் சன் சைன்ஸ் என்ற புத்தகம் தலையைத் திருப்பியது இந்தூரில் இருந்த போது. கிட்டத்தட்ட எல்லோருக்கும் எல்லா ராசிக்கான விபரமும் பொருந்தி விடுமாறு எழுதியிருந்தாலும், அவற்றை ஒரு சிறு பின்னணியாக மட்டும் வைத்துக் கொண்டால் உதவியாகத்தான் இருக்கிறது. குட்மேன் சொல்வது போல ஒருவர் திருநெல்வேலிக் காரர் என்றால் ஒரு உருவகம் கிடைத்து விடுகிறது. திருநெல்வேலியிலும் பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அதை மட்டும் வைத்து ஒருவரை எடை போடுவது தவறுதான். ஆனால் சென்னைக் காரர் என்பதற்கும் திருநெல்வேலிக் காரர் என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் உதவும்.
அதே போல அவர் பிறந்த ராசி, நட்சத்திரம் பற்றி அறிந்து கொண்டால் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், இன்னும் ஒரு சிறு புரிதல் கிடைக்கலாம். ஐப்பசி மாதம் பிறந்தவர்கள் அபாயகரமானவர்களாம். தை மாசக் காரர்கள் முக்காலமும் உணரக் கூடிய மாயக்காரர்கள். எந்த மாதத்தில் பிறந்தோம் என்பது சூரிய ராசி. நிலவின் நிலையைப் பொறுத்தது நம்ம ஊரில் கணக்கிடும் சோதிடம். இதில் இறங்கி விட்டவர்களுக்கு விடிவே இல்லைதான்.

வியாழன், நவம்பர் 23, 2006
தமிழரின் வியாதிகள்
"சரி, அப்புறம் ஒரு ஃபிஃப்டி ருபீஸ் கொடுங்க!"
"எதுக்கு? ஏன்?"
"பாஸ்போர்ட் வந்துருக்குல்ல, அதான்"
"பாஸ்போர்ட் வந்தா ஐம்பது ரூபாய் தரணுமா? ரூல்ஸ் எதாவது இருக்கா என்ன? ஏன், சம்பளம் தருவதில்லையா? சம்பளம் பத்தலைண்ணா, ஒரு ரெசீது புக் அடிச்சு வச்சு, பாஸ்போர்ட் வந்தா இன்ன ரேட்டுன்னு வாங்குங்க, இப்ப தர முடியாது!"
"பாருடா, சார் ரூல்ஸ் எல்லாம் பேசறார். எல்லாரும் வாங்கறதுதான் சார்"
என் குரல் உயர்ந்தது. "நான் கொடுக்கறது இல்ல. நாலு இடத்தில வாங்கியிருந்தா ஒங்களுக்குக் கொடுக்க வலிக்காது. நான் சம்பாதிக்கிற காசு நேர்மையானது."
எல்லோரும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்கள். உடனேயே வெளியே வந்து கிளம்பி விட்டேன்.
திங்கள் கிழமையே தொலைபேசி 'கடவுச்சீட்டு வந்து விட்டது, நீங்கதான் நேரில் வாங்க வேண்டுமாம்' என்று அலுவலகத்தில் தகவல் சொல்லியிருந்தார்கள். செவ்வாய்க் கிழமை ராணிப்பேட்டையிலிருந்து விடிவதற்கு முன்பே பேருந்து பிடித்து வந்து, அலுவலகத்தில் சில வேலைகளை முடித்து விட்டு பத்து மணிக்கு அஞ்சல் அலுவலகம் போனேன். போரூர் கிளை, கீழ் தளத்திலேயே அஞ்சல் வழங்குதல் என்று போட்ட அறைக்குள் போய் விபரம் கேட்டு குறித்த அலுவலரை பிடித்துக் கேட்டால், காத்திருக்கச் சொன்னார்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கட்டுகளுடன் வெளியே வந்தவர், வெளியே வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு அழைத்துப் போனார். அடையாள அட்டையை சரி பார்த்து விட்டு இரண்டு மூன்று இடத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொதியைக் கொடுத்த பிறகுதான் மேலே சொன்ன உரையாடல்.
வண்டியிலேறி திரும்பி வரும் போது, 'இத்தோடு விட்டிருக்கக் கூடாதோ, உள்ளே போய் புகார்க் கடிதம் கொடுத்திருக்கலாமோ' என்று எண்ணம். "அவருக்கு இது போதும். இங்கு வாங்கினால் வேறு எங்கும் போய் கொடுப்பாய் என்ற கருத்து தெரிந்திருக்கும்" என்று ஒரு ஆறுதல். எப்படியோ அத்தோடு போனது.
அந்த அலுவலருக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும். இன்றைக்கு இளைஞர்கள்தாம் மனம் சலித்து எல்லா விதமான சமுகச் சீர்கேடுகளையும் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள். 'தன் நலத்தை மட்டும் பார்த்துக் கொள்வேன், பணம் வந்தால் ஏன் விட வேண்டும்,' என்பதில் ஆரம்பித்து ஒவ்வொரு கட்டத்திலும் விட்டுக் கொடுக்கிறார்கள். பொதுவாக இருபது முப்பது வயது வரை நல்ல கொள்கைகளைப் பிடித்துக் கொண்டிருந்து விட்டு அப்புறம் மெதுவாக தாழ்ந்து போவதுதான் இயல்பு.
எப்படியோ, ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல், நேர் வழியில் நாற்பத்தைந்து நாட்களுக்குள் கடவுச் சீட்டு தேடி வந்து சேர்ந்து விட்டது. சரியாக தேவைப்பட்ட நாளில் கிடைத்து விட்டது. நாம் மனதறிந்து தவறு செய்யா விட்டால், நமக்கு நடப்பவை நல்லதாகத்தான் அமையும்.
மதியத்துக்கு மேல் வீட்டுக்குப் போய் துணி துவைத்து, குளித்து அடுத்த நாள் காலையில் ராணிப்பேட்டை கிளம்புவதற்கான ஏற்பாடுகளை முடித்துக் கொண்டேன். மாலை உணவுக்காக தோசை செய்து, அதிகப்படியானவற்றை பாத்திரத்தில் அடைத்து கொண்டேன்.
இடையில், வந்து பார்க்குமாறு ஒரு நிறுவன அதிபர் தொலைபேசியில் அழைப்பு. நம்முடைய மென்பொருள் இயங்குவதை அவர் போன இடத்தில் பார்த்து விபரம் விசாரித்து அழைக்கிறார். இதே நிறுவனத்தில் ஏற்கனவே இரண்டு மூன்று முறை விற்பனைக்காக அணுகிய போது அதிபரை நெருங்கக் கூட முடியாமல் சுற்றியிருந்த கைத்தடிகளே துரத்தி விட்டிருந்தார்கள்.
மாலையில் ஆறு மணி போக்குவரத்து நெரிசலில் பெரியமேடு நோக்கிப் பயணம். ஆற்காடு சாலையிலிருந்து சின்மயா நகர் வழியே கோயம்பேடு போய் பூந்தமல்லி நெடுஞ்சாலையைப் பிடிக்கலாம் என்று ஒரு வழி உண்டு. சமீபத்திய மழையில் அந்தச் சாலை உடைந்திருந்ததால், அதைத் தவிர்த்து நேர்ப் பாதையிலேயே போய்க் கொண்டிருந்தோம். செவ்வாய்க் கிழமை போகும் போது, வாகன நெரிசலைப் பார்த்து, இதற்குள் சரியாயிருக்கலாம் என்று குறுக்குப் பாதையை தேர்ந்தெடுத்தோம்.
எப்படியோ கிளைச்சாலைகளில் சுற்றி சாலை உடைப்பெடுத்திருந்த பகுதிகளைத் தவிர்த்து விட்டாலும், கோயம்பேடுடன் சேரும் பகுதியில் சேறும் சகதியுமாக வயல் வெளி போல சாலை. எனக்குத் தெரிந்து இரண்டு மூன்று ஆண்டுகளாக, இந்த அரை கிலோ மீட்டர் நீளச் சாலை இப்படித்தான் கிடக்கிறது. அதில் சிக்கி வாகன நெரிசலில் மாட்டிக் கொண்ட போது, வயிறு எரிந்து சாபம் வந்தது. 'இந்த நிலையில் இதை விட்டு வைத்து விட்டு சுயநல திட்டங்களில் நேரத்தை வீணாக்கிய, வீணாக்கும் ஆட்சியாளர்கள் நாசமாகப் போக வேண்டும்' என்று நொந்து கொண்டேன்.
ஏழரை மணி சந்திப்புக்கு பத்து நிமிட தாமதம். அவரும் அப்போதுதான் வெளியூரிலிருந்து வந்திருந்தார். அரை மணி நேரத்துக்குள் தேவைகளை விளக்கி சொல்லி விட்டார். வெள்ளிக் கிழமை அடுத்தக் கட்ட நடவடிக்கை.
எட்டு மணிக்கு இணைய வழி உரையாடல் ஒன்று ஒத்துக் கொண்டிருந்தேன். அது என்றைக்கு என்று குளறுபடி. நேர வேறுபாடுகளினால் அவர் நாளைக்கு என்று எழுதியது, எதைக் குறித்தது என்பதில் குழப்பம். கடைசியில் போய்ப் பார்த்தால் அன்றைக்கேதான் எதிர்ப்பார்த்திருந்தார். ஒரு மணி நேரத் தாமதம். அப்புறம், இரண்டரை மணி நேரம் பேச்சு.
நேரத்தையும் நாளையும் குறிப்பிடுவதில் எப்போதுமே குழப்பத்தைத் தவிர்க்கப் பாடம் படித்தது டாடாவில். நேற்று, நாளை போன்ற சார்புடைய சொற்களைத் தவிர்த்து தேதி, மாதம், ஆண்டு குறிப்பிட்டு எழுத வேண்டும். எல்லாமே எண்களாக எழுதினால் தேதி/மாதம்/ஆண்டு என்று ஒரு சில நாட்டினர் படிக்க அதையே மற்றும் சிலர் மாதம்/தேதி/ஆண்டு என்று படித்து விடும் வாய்ப்பு இருப்பதால், மாதத்தை எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும். நேரம் குறிப்பிட்டால் எந்த நேரம் மண்டலத்தைக் குறிக்கிறோம் என்று தெரிவித்து விட வேண்டும்.
நவம்பர் 8, 2006 இந்திய நேரம் மாலை எட்டு மணி என்பதில் குழப்பம் வராது. 11/08/2006, 6.00 மணி என்றால் பல நேரங்களைக் குறிக்கும்.
பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்குப் போய்த் தூங்கி எழுந்து கிளம்பி பேருந்து ஏறும் போது காலை ஒன்பதரை மணி ஆகி விட்டிருந்தது. நேற்றைய நாள் முழுவதும் மனம் சலித்துப் போயிருந்தது. ஞாயிற்றுக் கிழமை நடந்த வலைப்பதிவர் கூட்டத்துக்குப் பின் விளைவாக நடக்கும் விவாதங்களில் சிலர் மாட்டிக் கொண்டிருந்தது ஒரு சோர்வு. தேவையில்லாத பொருளில் இறங்கி மனதை ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும் என்பது நமக்குப் புரிவதில்லை.
இத்தனை பேர் ஒன்று கூடிப் பேசி உருவான ஆக்கப்பூர்வமான உணர்வுகளை உடைத்தெறிவதில் போய் முடிந்து விடுகின்றன, இத்தகைய விவாதங்கள். எப்படியோ பேச்சுக்களால் செய்பவர்கள் நின்று போகப் போவதில்லை. இனி வரும் காலம் தமிழர்களின் மறுமலர்ச்சிக் காலம். நம் தளைகளை உடைத்துக் கொண்டு, நம்ம அமுக்கி வைத்திருக்கும் சுமைகளைத் தூக்கி எறிந்து விட்டு அடுத்த இருபது ஆண்டுகளில் உலகில் தனக்குரிய இடத்தைப் பிடித்துக் கொள்ளப் போவது நடக்கத்தான் போகிறது.
அதற்கு சாதியாகட்டும், மதமாகட்டும், அன்னிய மொழிவழிக் கல்வியாகட்டும், அரசியல் ஊழல் ஆகட்டும், மக்களின் சலிப்பாகட்டும், தொலைக்காட்சிகளில் நேரம் தொலைவதாகட்டும், எதுவுமே தடைக்கற்களாக இருக்கப் போவதில்லை. எல்லாம் தூள் தூளாகப் போய் வழி திறந்து விடும்.
அன்றைய கூட்டத்தில் நடந்த சில விவாதங்கள், அதைப் பற்றிய சில விபரங்கள் அறிந்தோ அறியாமலோ சிலருக்கு எதிர்ப்புணர்வை உருவாக்கியிருக்கிறது என்று படுகிறது.
மாலையில் மின்னஞ்சலில், அசுரன் காந்தி பற்றிய விவாதங்களை மீண்டும் தொடங்கியிருப்பதாக பின்னூட்டமிட்டிருந்த விபரம் வந்தது. நல்ல ஆரோக்கியமான விவாதங்கள்தாம். அவர் கொடுத்த சுருக்கத்திலேயே பெருமளவு ஒத்துப் போகும் விபரங்களைப் பட்டியலிட்டு விட்டார். 'காந்தியை மகாத்மா என்று கொண்டாட வேண்டாம், அதற்கு அவருக்குத் தகுதி இல்லை' என்பது மட்டும்தான் விவாதத்துக்கு எஞ்சியிருக்கிறது.
ராணிப்பேட்டையில் சுற்றி வந்து வேலைகள் செய்வது புதிய அனுபவம்தான். பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராணிப்பேட்டை, ஓட்ஸ் கஞ்சி என்று அடையாளங்கள் கூடக் கிடைத்து விட்டன.
மாலையில் போய் புதிய இடத்துக்கான சாவி வாங்கிக் கொண்டேன். மதியம், கல்லூரியில், ஒரு ஆண்டு முன்னால் படித்த - டாடாவில், சேர்ந்து பணியாற்றிய ஒருவரைச் சந்தித்து பேச்சு. அவருடனேயே போய் மதியச் சாப்பாடும் கிடைத்தது. கல்லூரியில் படிக்கும் போது உருவாகும் இயல்புகள் வாழ்நாள் முழுவதும் பெரிதும் மாறி விடுவதில்லை. அதே போல புத்தகப் புழுவாக, தத்துவங்களைப் பேசிக் கொண்டு, நடைமுறைக்கு மாறுபட்ட பழக்கங்களில் மூழ்கியிருக்கிறேன். சந்திக்கும் ஒவ்வொருவரும் அன்று பார்த்த அதே தளத்தில்தான் மூப்படைந்திருக்கிறார்கள். ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.

செவ்வாய், நவம்பர் 21, 2006
அமிலம்
நேற்றுக் காலை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். ஊரிலிருந்து வந்திருந்த அவல் ஒரு பையில் இருந்தது. ஒரு ஆளுக்கு அதிகம்தான். முழுவதையும் தாளித்து மீதி இருந்தால் வேறு யாருக்காவது எடுத்துப் போகலாம் என்று கணக்குப் போட்டு சாப்பிட்டு முடித்துப் பார்த்தால் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. மாலையிலேயே திரும்பி வந்து விடலாம் என்று துணிப்பையை எடுத்துக் கொள்ளாமலே காலணி அணிந்து கொண்டு போக அலுவலகம் போனேன்.
போனதற்கு ஒரு ஐந்து நிமிடம் மின்னஞ்சல்களை பார்த்து விட்டு சுறுசுறுப்பாக பொன்ஸும், டோண்டு ராகவனும் இட்டிருந்த சந்திப்பு பற்றிய பதிவுகளையும் மேய்ந்து விட்டு வெளியே பாய்ந்தேன். போரூர் வரை போவதற்கு மாநகரப் பேருந்து. நேரம் ஆகி விட்டதால்் உட்கார்ந்து போக இடம் கிடைக்குமோ என்ற கவலையில் காத்திருந்தால், கிடைத்தே விட்டது. விட்டுப் போயிருந்த மனப் பயிற்சியை செய்து கொண்டேன். அவ்வளவு எண்ணக் குவியல்கள் ஓய்வதற்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டதுதான். நேற்றுக் காலை போகும் போதும் சரி, இன்று காலை திரும்பி வரும் போதும் சரி, தூங்காமலேயே வந்தேன். இரவில் அவ்வளவு தூங்கினால் எப்படி தூக்கம் வரும்?
வண்டி நிறுத்தத்திலிருந்த பைக்கை எடுத்துக் கொண்டு நிறைவுடன் புறப்பட்டேன். இது மட்டும் இல்லையென்றால் பேருந்துக்குக் காத்திருந்து நேரம் வீணாயிருக்கும். அல்லது ஆட்டோவுக்கு அழுதிருக்க வேண்டியிருக்கும்.
வாடிக்கையாளர் இடத்துக்கு வந்தால் சனி, ஞாயிறில் கணினி வேலைகள் பாதிதான் முடிந்திருந்தன. சனிக்கிழமை இரவு ஏதோ பையன், சரியாகப் பயிற்சி இல்லாமல் விபரம் தெரியாமல் கந்தக அமிலத்தைக் கையாளப் போய் முகத்தில் துளிகள் தெறித்து காயமடைந்து விட்டானாம். நல்ல வேளையாக தோல் மேல் காயம் மட்டும்தானாம். கண்களுக்கு ஆபத்து இல்லையாம். கந்தக அமிலத்தைப் போல ஒரு அபாயமான தொழிற்சாலை வேதிப்பொருள் வெகு சிலவே இருக்கும்.
வேதித் தொழில்நுட்பம் படித்த எங்கள் சீனியர் ஒருவர், வேதிப் பொருள் தொழிலகத்தில் கந்தக அமிலத் தொட்டியில் தவறி விழுந்து விட்டாராம். அப்புறம் மிஞ்சியது, அவரது விரலில் போட்டிருந்த தங்க மோதிரம் மட்டும்தானாம். தங்கத்தைத் தவிர எல்லாவற்றையும் எரித்துக் கரைத்து விடும் வீரியம் படைத்தது இந்த அமிலம். கல்லூரியில் படிக்கும் போது அதை எப்படி தண்ணீர் கலந்து நீர்த்ததாக்குவது என்று பாடம் உண்டு. எப்போதுமே அமிலத்தை நீரில் ஊற்ற வேண்டும், அதுவும் மெல்லிய வரியாக ஊற்ற வேண்டும். குறைந்த அளவு நீர் அமிலத்தில் கலந்தால் வேதிவினை வேகத்தில் அமிலம் வெடித்துச் சிதறி விடும்.
கையில் கையுறை போட்டிருக்க வேண்டும், கண்களில் சிறப்புத் தடுப்புக் கண்ணாடி. அமிலம் வைத்திருக்கும் கலம் இருண்ட நிறத்தில் இருக்க வேண்டும். இப்படி பல பயிற்சிகள்.
இப்படி எதுவுமே தெரிந்திருக்காமல் ஒரு பின்னிரவில் தன்னை அபாயத்துக்கு உட்படுத்திக் கொண்டு விட்டான் அந்தப் பையன். இதற்கு முழுப் பொறுப்பும் நிறுவன உரிமையாளர்கள்தாம் என்பதில் வேறு கருத்தே கிடையாது. அவர்கள் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம்.
புதிதாக வந்திருந்த இரட்டை அலகு கணினிக் கரு, ஒரு ஜிபி நினைவகம், டிவிடி எழுதுவான், 17 அங்குல பட்டை திரை என்ற அசத்தலான கணினியில் சூசே லினக்ஸ் 10.2 ஐ நிறுவி ந்மது மென்பொருளைப் போட்டேன். தேவையான எல்லா மென்கருவிகளையும் நிறுவி எல்லா உபகருவிகளையும் இயக்கிக் கொண்டது சூசே. இவ்வளவு ஆற்றல் மிகுந்த குதிரையில் ஓடுவதும் தனி இன்பம்தான்.
மதியம் இரண்டு மணிக்கு மேல் சாப்பிடப் போனால், பத்து நிமிடம் சோறு வேகக் காத்திருந்து அப்புறமும் அரை குறைச் சாப்பாடாக சாப்பிட்டு விட்டு வந்தேன். அப்படியே வேலை தொடர்ந்தது. மாலை எட்டு மணிக்கு எல்ல்லோருக்கும் ஒரு விளக்க வகுப்பு நடத்தி விட்டுக் கிளம்பினோம். இதற்கு மேல் சென்னை போக வேண்டாம் என்று அங்கேயே அறைக்குத் தூங்கப் போய் விட்டேன்.
"சிப்காட் வரலாற்றிலேயே மாலை ஆறு மணிக்குப் போய் சாப்பிட்ட ஆள் நீங்க ஒருத்தராத்தான் இருக்கும்" என்று நான் சீக்கிரம் சாப்பிட்டு விட்ட தகவல் கேட்ட ஒருவர் சொன்னார். அந்த நேரத்தில் இரண்டாவது வேலைப் பருவத்தில் வேலை செய்யப் போகிறவர்கள் பொதிந்து எடுத்துப் போக செய்து வைத்திருப்பார்கள். உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் யாரும் இல்லைதான்.
அறையில் ஒருவருக்கு காய்ச்சல். ஐயப்பன் மாலை போட ஊருக்குப் போய் விட்டு வந்தாராம். காலை மாலையில் குளிக்கவும் வேண்டும். வேலைப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மனமில்லாமல் காய்ச்சல் இருந்தும் இங்கு வந்து விட்டிருக்கிறார். இந்த ஆண்டு நோய்களின் தொந்தரவு அதிகம்தான். சிக்குன் குன்யா, டைஃபாய்டு, டெங்கு, சிலருக்கு மெட்ராஸ் ஐ என்று ஒன்று மாற்றி ஒன்று அலைக்கழிக்கிறது.
அறையெல்லாம் நன்கு பெருக்கி வெளியே தள்ளி விட்டுப் பாய் விரித்துப் படுத்தேன். படுப்பதற்கு முன்பு ஐயப்ப மாலை போட்ட சாமி முன்பு கண் மூடி நம் வழிபாடு. அவரும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு அப்புறம் போய் விட்டார்.
இரவு முழுவதும் நல்ல தூக்கம், இடையிடையே பொருள் பொதிந்த கனவுகள். போர்வையையும் மீறி ஊடுருவும் குளிர். இந்த ஊரில் பனிப் பொழிவும், குளிரும் கொஞ்சம் அதிகம்தான்.

ஞாயிறும் வலைப்பதிவர்களும்
ஞாயிற்றுக் கிழமை காலையில் எழுந்திருக்கும் போதே சோம்பல் பட்டுக்கொண்டு ஆறு மணி வரை தூங்கியிருந்தேன். மெதுவாக காலைக் கடன்களை முடித்து சிறிதாக சமையல் செய்து விடலாம் என்று ஓட்ஸ் கஞ்சி, அரிசி/உளுந்து சேர்ந்த உளுந்தங்கஞ்சி செய்து கொண்டேன்.
மாலையில் வலைப்பதிவர் சந்திப்பை முன்னிட்டு மதியச் சாப்பாட்டுக்குச் சந்திக்கலாம் என்று சென்னைப்பட்டிணம் நண்பர்கள் திட்டமிட்டிருப்பதாக பாலா சொல்லியிருந்ததால், பத்து மணி போல அலுவலகம் போய் சில வேலைகளை முடித்து விட்டு அப்படியே எல்டாம்ஸ் சாலைக்குப் போய் விடலாம் என்று திட்டம். துணி துவைத்து குளித்து கொஞ்ச நேரம் எழுதி சாப்பிட்டு விட்டு அலுவலகம் போய்ச் சேரும் முன் திட்டம் மாறி விடவே, ஒரு மணி வரை அவசரமான அலுவலக வேலை ஒன்றை முடிக்க முடிந்தது.
ஒரு மணிக்கு சாப்பிட்டு விட்டு கட்டுரை அச்செடுத்துக் கொண்டு கிளம்பும் போது தடங்கல். நான் கொண்டு போயிருந்த டிவிஎஸ் பெப் வண்டியை நண்பர் எடுத்துக் கொண்டு போயிருக்க நான் அவரது பைக்கைப் பயன்படுத்திக் கொள்வதாக ஏற்பாடு. ஏற்கனவே அந்த பைக்கை உதைத்து கிளப்ப முடியாமல் போன அனுபவம் மறுபடியும் நடந்தது. பத்து நிமிடங்கள் போராடிப் பார்த்து விட்டு, கரிப் பகுதிகளையோ, பெட்ரோல் குழாய்களையோ தொட விரும்பாமல், பேருந்து நிறுத்தத்துக்குப் போய் விட்டேன்.
எல்டாம்ஸ் சாலை போக எந்த பேருந்து என்று தெரியாமல், தி நகர் போகும் பேருந்தில் ஏறி தி நகரில் பார்த்துக் கொள்ளலாம் என்று அமர்ந்து கொண்டேன். கல்லூரியில் படிக்கும் போது பல்லவனில்தான் நகர்வலம். குறைந்த செலவில் நகரின் எந்த மூலைக்கும் போய்ச் சேர்ந்து விடலாம். என்ன, நேரம் மட்டும் கொஞ்சம் கூடுதலாக ஆகி விடும். சிறிது தூரம் போனவுடனேயே உட்கார இடமும் கிடைத்தது.
மேற்கு மாம்பலம் தாண்டியவுடன் நடத்துனரிடம் தேனாம்பேட்டை போக எங்கே இறங்க வேண்டும் என்று கேட்டதும் பனகல் பூங்காவில் இறங்கி 12B பிடிக்கச் சொன்னார். அதுவும் வடபழனியிலிருந்து வருவதுதான். இறங்கி நேரத்தைப் பார்த்தால் மூன்றேகால் தாண்டியிருந்தது. இரண்டரையிலிருந்து மூன்றுக்குள் வந்து விடச் சொல்லியிருந்தார் பாலா. இனிமேலும் அடுத்த பேருந்துக்கு நின்றால் நடக்காது என்று முப்பது ரூபாய்க்கு ஆட்டோ.
ஆட்டோ ஓட்டுனர் சிந்தாதிரிப்பேட்டைகாரராம். இவரிடமும் சரியான மீட்டர் வைத்து நல்ல சேவை கொடுக்காமல் இருப்பதைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினேன். அதற்குள் டிடிகே சாலையில் திரும்பி எல்டாம்ஸ் சாலை முனையில் இறங்கிக் கொண்டேன்.
இடம் எது என்று தொலைபேசினால், சிவப்பு நிற சட்டை அணிந்து கை காட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். அங்கு போய்ச் சேர்ந்தேன். இந்த பார்வது ராமசாமி ஹால் முன்பு வீடாக இருந்திருக்கும். முன்னறை, உள்ளறை, சமையலறை, புற வாசல் என்று பழைய கால பாணி. முன்னறையில் நாற்காலிகள் போட ஏற்பாடு செய்திருந்தார் பாலா. சென்னைப்பட்டிணம் சார்பாக என்றுஅவர் பெருந்தன்மையாக சொன்னாலும், அவரது தனி முயற்சிதான் முழுவதும். முன்னறையில் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருக்கும் ஒரு ஷெல்ப் இருந்தது.
மேல்தளத்தில் ஒரு கலைக்கூடமாம். நிறைய பேர் வந்து கொண்டிருந்தார்கள்.
கூட்டம் சரியான நேரத்தில் தொடங்கி நன்கு மட்டுறுத்தப்பட்டு நடந்தது. பாலா தனது கணீர் என்ற குரலில் எல்லோரையும் கட்டிப் போட்டார். இடைவேளையில் தேநீர், பிஸ்கட்டுகள் தாராளமாகக் கிடைத்தன. 'நிறைய வாங்கி விட்டோம், தாராளமாகச் சாப்பிடுங்கள்' என்ற பாலாவின் தகவலை ஒட்டி ஏராளமான பிஸ்கட்டுகளை உள்ளே தள்ளினேன்.
குறித்த நேரத்துக்கு முன்பாகவே கூட்டம் முடிவடைந்து எல்லோரும் குழுக்களாகப் பேச நேரம் கிடைத்தது. வளசரவாக்கத்திலிருக்கும் கிளிநொச்சி நண்பருடன் (நிலவன்) பேருந்து நிறுத்தத்துக்குக் கிளம்பினேன். மரவண்டு கணேஷ் பேசிக் கொண்டு வந்தார். அவர் தற்போதெல்லாம் அதிகமாக எழுதுவது இல்லையாம்.
வடபழனி போய் இறங்கிக் கொள்ளக் கூடிய 12B பேருந்திலேயே ஏறிக் கொண்டோம். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் வந்ததை கணேஷ் குறிப்பிட்டு ஏற்றி விட்டார். ஈழத்து நண்பர் தற்போதைய சூழ்நிலையை விளக்கினார். எல்லைப்புறங்களில்தான் சண்டை நடக்கும், மற்ற பகுதிகளில் இயல்பு வாழ்க்கையும் உண்டு. தவறுகள் பல செய்திருந்தாலும் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் நிலையில் இருக்கிறார்கள்.
தனது மாமாவின் உதவியோடு சென்னை வந்து சேர்ந்துள்ளதாகவும், வெளிநாட்டுக்குப் போய் விடப் போவதாகவும் சொன்னார். பத்து ஆண்டுகள் கனடா வாழ்க்கை பொறுக்க முடியாமல் சென்னைக்கே வந்து விட்டதாக தமிழ் நதி என்ற பெயரில் எழுதும் பதிவர் சொல்லியிருந்தார்.
திநகர் மக்கள் கூட்டத்தில் நீந்தி, அசோக் நகர் வழியாக வடபழனி வந்து சேர்ந்தது பேருந்து. கீழே இறங்கி பகிர்வூர்தியைப் பிடித்தோம். அலுவலகத்துக்குள் நுழையும் போது மணி சரியாக எட்டரை. இணைய வழி உரையாடல் ஆரம்பித்தது. ஒன்றரை மணி நேரத்துக்கு அது ஓடி முடியும் போது பத்து மணி ஆகி விட்டிருந்தது.
பலரைச் சந்தித்து பல கருத்துக்களைக் கேட்ட களைப்பு மனதில். அத்தோடு கடை கட்டி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். திங்கள் கிழமை ராணிப்பேட்டை கிளம்ப திட்டம் வேறு.

ஞாயிறு, நவம்பர் 19, 2006
ஒரு மழை நாள்
பத்து மணிக்கு ஆம்பூர் வந்து சேர்ந்து விடுபவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். ஆறரை மணிக்கு தொலைபேசினால் ஏழேகால் பிருந்தாவன் பிடிக்கிறார்களாம். நானும் வாலாஜா ரோடு அல்லது காட்பாடி போய் அதே ரயிலில் ஏறிக் கொள்வதா அல்லது பேருந்திலேயே ஆம்பூர் போய் விடுவதா என்று இரண்டு தேர்வுகள். பைக்கை எங்கு விட்டு விட்டுப் போவது என்று குழப்பம்.
ஏழரை மணிக்குக் கிளம்பி முதலில் விமல் உணவு விடுதியில் காலை உணவு, கையில் இந்து நாளிதழ். நேராக வாலாஜா பேருந்து நிலையம் அருகில் இருக்கும் புதிய வண்டி நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் நிறுத்தும் நிறுத்தத்தில் காத்திருந்து, தனியார் வண்டிகள், ஆற்காடு போகும் வண்டிகளைத் தவிர்த்து சென்னையிலிருந்து புறவழிச்சாலை வழியாகப் போகும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.
வேலூர் பேருந்து நிலையத்துக்கு வெளியே இறங்கிக் கொண்டு காத்திருந்தால், சிறிது நேரத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு போட்டி போட்டுக் கொண்டு, அவற்றுக்குப் பின்னால் அரசு பேருந்து. அரசு பேருந்து நிறுத்தாமலேயே அடுத்த வாய்ப்புக்காக முந்தி போய் விட்டது. நின்ற இரண்டு தனியார் பேருந்துகளில் பின்னால் நின்றதில் போய் ஏறிக் கொண்டேன். முன்பக்கம் இருக்கும் இறங்கும் வழியைத் தொட்ட இருக்கை. மழை பெய்தால் தூறல் அடிக்கும் இடம்.
அருமையான காலநிலை. முழுவதும் மேகம் மூடி, மழை பெய்தும் பெய்யாமலும் ஈரப்பதம் தாங்கிய காற்று மண்டலம். பேருந்து போகும் போது வரும் மெல்லிய காற்றோட்டத்தைத் தவிர வெளியே காற்றடிப்பே இல்லை. செடி கொடிகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு சில கிலோ மீட்டருக்கு ஒரு தடவை பன்னீர் தூவிப் போகும் மழைத் தூறல்.
மனமும் அமைதியாக, வயிற்றில் சரியான அளவு சாப்பாடுமாக ஏதோ முழுமை பெற்றது போன்ற நிறைவு. இடையிடையே கண்கள் மூடி தூக்கமும் வந்து போனது. நான்கு வழிச் சாலையில் பேருந்துக்கு தடையில்லாத பயணம்.
ஆம்பூர் வந்து சேர்ந்ததும் வருபவர்கள் வந்து சேரட்டும் என்று ஆட்டோ பிடித்து வேலை இடத்துக்குப் போய் விட்டேன். ஐம்பது ரூபாய் சொல்லி வாங்கிக் கொண்டார்கள். பின்னால் வந்தவர்கள் முப்பது ரூபாய் பேசி முப்பத்தைந்துதான் கொடுத்திருக்கிறார்கள். ஆட்டோ பேசும் போது வரிசையில் இரண்டாவதாக நின்றிருந்த வண்டிக்காரர் பேரம் எல்லாம் பேசி ஏற்றிக் கொண்டார். முதலில் நின்றவர் சண்டை போட்டு மாற்றிக் கொண்டார். முதலில் முரண்டு பிடித்த நானும் மாறிக் கொண்டேன்.
பத்து மணிக்கு தொழிற்சாலையில் உணவு இடைவேளைக்காக தொழிலாளர்கள் வெளியே போய்க் கொண்டிருந்தார்கள். முதலாளியிடம் கேட்டு வருவதாக உள்ளே போன காவலர் வெகு நேரம் வராமல் காவலர் அறையிலேயே நின்று கொண்டிருந்தேன். தன் மாமாவைப் பார்க்க வந்திருந்த குட்டிப் பையன் ஒரு முக்காலியில் உட்கார்ந்திருந்தான். மாமா காவல் அதிகாரியாக எதிர் நாற்காலியில். அவரது சக ஊழியர்கள், இந்தப் பையனிடம் பேச வேண்டுமே என்று ஏதாவது சொல்லி விட்டுப் போகிறார்கள்.
சின்ன வயதில் அப்பா அலுவலகத்துக்கு இது மாதிரி போகும் போது யாரும் நம்மைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும் என்று இருக்கும். இது மாதிரி பிள்ளை மொழி பேசி தட்டிக் கொடுப்பவர்களைப் பார்த்து கடுப்பாக இருக்கும்.
உள்ளே வரவேற்பரையில் உட்கார வைத்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து தொழிற்சாலையை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்து ஆள் வந்து விட்டார். ஏற்கனவே சந்தித்துப் பேசிய முதலாளிகள் இவருக்கு முழு விபரம் சொல்லியிருக்கவில்லை. எல்லாவற்றையும் விளக்கி இவரையும் நம்பிக்கை கொள்ள வைத்து சுற்றலுக்குக் கிளம்பினோம். இதற்கிடையில் மற்ற இருவரும் வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள்.
நான் பார்த்ததிலேயே சிறப்பாக நிர்வாகிக்கப்படும், அருமையான நெறிமுறைகளுடனான தொழிற்சாலை. எந்த இடத்திலும் தோல் குவியல்களோ, காகிதக் குவியல்களோ கிடையாது. எந்தக் கேள்விக்கும் சரியான பதில் இருந்தது. தேவைப்படும் விபரங்கள் எல்லாமே எழுதப்பட்டு வருகின்றன. உண்மையாக உணர்ந்த இவற்றை அவரிடம் சொன்னதும் அவருக்கு மிக மகிழ்ச்சி. தானாக முன் வந்து பல விபரங்களை சொன்னார். தயாரிக்கும் எல்லா அறிக்கைகளையும் எடுத்துக் காட்டினார். கடைசியில் நாங்கள் வற்புறுத்தாமலேயே, அருகிலிருக்கும் அவர்களது இன்னொரு தொழிற்சாலையையும் பார்க்க அனுப்பி வைத்தார்.
நான்கு மணி நேரம் பயணம் செய்து மூன்று பேர வந்த வேலை இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது. நேரத்தில் திரும்பி சென்னை போய்ச் சேருவோம் என்று முடிவு செய்து கொண்டோம். ஆம்பூர் பேருந்து நிலையம் போக ஆட்டோ எதுவும் கிடைக்காமல் தேடி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பேருந்து ஒன்று வர அதில் ஏறிக் கொண்டோம்.
ஆம்பூரில் சாப்பிட விரும்பினாலும், சோளக் கொண்டைகள் இயற்கையான பொதியில் கிடைக்க அவற்றை வாங்கி இடைக்கால நிவாரணம் செய்து கொண்டு பேருந்து ஏறிக் கொண்டோம். சேலத்திலிருந்து வரும் பேருந்து. ஆறு என்ற சூர்யா நடித்த படம் என்று புரிந்தது. வேலூர் வரை நெடுஞ்சாலையை விட்டு இறங்காமலேயே வந்ததால் திடீரென்று பேருந்து நிலையம் அருகே வந்து விட்டிருந்தது. வேலூர் கோட்டையிலிருந்து உள்ளே வரும் உடைந்த சாலையை தவிர்த்து விட்டிருந்தது.
அவசர அவசரமாக இறங்கும் போது சோவென்று மழை. ஓடிப் போய் அருகில் இருந்த ஆர்யாஸ் விடுதிக்குள் நுழைந்து விட்டோம். சாப்பாட்டில் சாம்பார், கீரைக்குழம்பு, ரசம், மோர்க்குழம்பு, மோர் என்று பல வரிசைகள். நடுவில் சொன்ன மூன்றையும் விட்டு சாப்பிட்டு முடித்துக் கொண்டேன். உள்ளே போகும் போதே பார்த்திருந்த தோசை போன்ற பண்டத்தை வெளியே வரும் போது வாங்கிக் கொண்டோம். அதிரசமாம்.
பேருந்தில் ஏறும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் போய் விட, வயிறு நிரம்பியிருந்தாலும் ஆசைக்கு அடிபணிந்து வாங்கிய இனிப்பில் ஒரு பகுதியை சாப்பிட்டு விட்டேன். இருக்கையில் சன்னலோர சகபயணி பிஸ்கட்டுகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். முழுவதையும் சாப்பிட்டு விடாமல் பொதிந்து மேலே வைத்து விட்டேன்.
இங்கு திரையில், அந்த ஏழு நாட்கள் என்ற பாக்கியராஜ் படம். படம் வந்திருந்த போது திருவனந்தபுரத்திலிருந்து வந்திருந்த ஒரு அத்தான், அண்ணன், நான் அம்மாவுடன் போய்ப் பார்த்த படம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகள். இரண்டாவது பாதியில் உணர்ச்சி நிரம்பிய காட்சிகள். இங்கு இரண்டாவது பாதியிலிருந்து பார்க்க முடிந்தது. ராஜேஷ் திரைப்படத் தயாரிப்பாளராக பாக்கியராஜை இசையமைப்பாளராக பணி செய்ய அணுக, தன் கதையையே திரைக்கதையாக சொல்லி கதையை இழுக்கிறார்கள்.
கடைசிக் கட்டத்தில், இன்னாள் மனைவியை அவள் முன்னாள் காதலனான பாக்யராஜுடன் போகும் படி ராஜேஷ் சொல்ல தாலியைக் கழற்றுங்கள் என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டுப் போய் விடுகிறார் பாக்யராஜ். ராஜேஷ் நல்ல கணவனாக இல்லாமல், கொடுமைக்காரராக இருந்திருந்தால் இது செல்லுபடியாகுமா, கழற்றிப் போட்டு விட்டு போயிருக்க மாட்டார் அந்தப் பெண்? சொதப்பலான உட்கரு, பாக்யராஜ் பாணியில் ஒப்பேறின படம்.
அதன் பிறகு விவேக் நகைச்சுவை. வழியில் ஊர்களுக்குள் எங்கும் போகாமல் நெடுஞ்சாலையிலேயே போய்க் கொண்டிருந்தது பேருந்து. இரண்டு மணி நேரத்தில் சென்னை போரூர். நண்பனைத் தேடி சென்னை வந்து பெட்டியையும், பணப்பையையும், பேன்டையும் உருவி, அப்புறம் சிறுநீரகத்தையும் திருடி விட்டு விடுகிறார்கள். கடைசியில் ஆபாசப் படம் எடுக்கும் கும்பலில் மாட்டிக்கொண்டு தப்பி வெளியே வந்து பாவாடைச் சாமியாராகப் புகழ் பெற்று விடுகிறார்.
அதன் பிறகு ஷாஜஹான் படத்தில் பிச்சைக்காரி கோவை சரளாவுடனான மலிவான கற்பனை நகைச்சுவை. அதை விடக் கீழ்த் தரமான விவேக், முரளி, வடிவேலு சேர்ந்து வரும் சில காட்சிகள் வர ஆரம்பித்த பிறகு பூவிருந்தவல்லி வந்து விடவே அணைத்து விட்டார்கள்.
போரூரில் இறங்கினால் வண்டிகளின் குழப்ப நெரிசல். ஆற்காடு சாலைக்குள் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், அரசுப்பேருந்துகள், இரு சக்கர வண்டிகள், பாதசாரிகள் என்று ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரை வெளி இல்லாத நெருக்கம். வேலூர் பேருந்திலிருந்து இறங்கினால் நடக்க இடம் இல்லை. நடு சாலையில் நடந்து வந்தோம்.
அந்த நெரிசலில் வந்த நகரப் பேருந்தில் ஏறிக் கொள்ள முடிந்தது. யாருமே திட்டமிடாத வளர்ச்சி இந்தப் பகுதி என்று தோன்றுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் போய் வர வாகனங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தப் பகுதிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு வாரத்துக்குப் பிறகு மாலை நேரத்தில் அலுவலக இருக்கையில் உட்கார நேரம். மின்னஞ்சல்களை எல்லாம் பார்த்து பதில் எழுதி, பதிவு ஒன்றைப் போட்டுக் கொண்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பதிவுகளைப் படித்தேன். இறைநேசன் போன்றவர்கள் மற்றவர்களின் கழிவுகளைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டிராமல், இஸ்லாத்தின் பெருமைகளை சுவைபடக் கொடுக்கும் வேலைகளைச் செய்யலாம். ஆப்பு வைப்பவர்களும் அவர்களுக்குப் பிடிக்காதவர்களை ஒதுக்கி விட்டு பிடித்த பதிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் நேரம் செலவிடலாம்.
கைப்புள்ளைக்கு வயதாகி விட்டதாகத் தோன்றும் பதிவில் அடுத்தவரைச் சொல்லியாவது திருத்தலாம் என்று பலர் எழுதியிருந்த பின்னூட்டங்கள். ஹரிதாஸ் திரைக்கதை, விமரிசனம் மற்றும் சில துளசிதள பதிவுகளையும் படித்தேன்.
technoratiயில் கொஞ்ச நேரம் செலவிட்டு, என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று மேய்ந்து கொண்டேன். வலைப்பூவுக்கு வெளியிலிருந்து வரும் சுட்டிகளைப் பொறுத்து வரிசை செய்திருக்கிறார்கள்.

சனி, நவம்பர் 18, 2006
வயிற்றுக்கும் மூளைக்கும் உணவு
இன்னொரு நாளுக்கு நீண்டு விட்டது. வெளியூரில் தங்கியோ மற்றபடியோ வெளிக் கடையில் சாப்பிடுவதில் ஒரு சிக்கல். ஊரோடு ஒத்து இல்லாமல் உண்ணும் நேரம் சீக்கிரமாக இருப்பதால் கடைக்குப் போகும் போது அப்போதுதான் சட்னி அரைத்துக் கொண்டிருப்பார்கள். நேற்று காலையில் ஏழரை மணிக்கு அருகில் இருந்த கணபதி எ செட்டிநாடு விடுதிக்குப் போனால் அந்தக் கதைதான். உட்கார்ந்து பத்து பதினைந்து நிமிடங்கள் நாளிதழ் படித்துக் கொண்டிருந்த பிறகு இட்லி கிடைத்தது.
சின்ன வயதில் எத்தனை இட்லி சாப்பிட வேண்டும் என்று ஒரு கணக்கு உண்டு. இட்லி என்றால் ஐந்து, தோசை என்றால் நான்கு. சில ஆண்டுகளில் அது போதாமல் போய் ஆறு, ஐந்து என்று மாற்றிக் கொண்டோம். அப்புறம் அந்த கணக்கு ஒரேயடியாக மறைந்து விட்டது. தோசை சுடுவது என்றால் அடுக்களைக்கு வெளியே ஒரு மண்ணெண்ணெய் அடுப்பை வைத்து கல்லைப் போட்டு அருகிலேயே பெரிய மாவு பாத்திரத்தையும் வைத்து விடுவார்கள். அவரவர் சுட்டுச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். நான்கு, ஐந்து என்றால் ஒருவர் சுட்டுப் போடலாம். பத்து பதினைந்து என்றால் தானே செய்து கொண்டால், வசதி அதிகம்.
அப்படிப்பட்ட பெருந்தீனிப் பழக்கங்கள் கல்லூரி விடுதியிலும் தொடர்ந்தது. சீனா போன பிறகுதான் எல்லாவற்றிலும் மண். அப்புறம் பல திசைகளில் பல விதமாக உழன்று இன்னும் இந்த இட்லி/ தோசை மீதான பெரும் பற்று நீடித்து இருக்கிறது. மிகச் சின்ன வயதில் இட்லி இருந்தால்தான் பள்ளிக்குப் போவேன் என்று அடம் பிடித்ததும் நினைவு இருக்கிறது.
கதை என்ன என்றால், நேற்று நான்கு, இரண்டு, இரண்டு என்று எட்டு இட்லி சாப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு மெதுவாக சின்ன இட்லிகள். சாப்பிடும் போது சாப்பிட்டு விடுவோம். பணம் கொடுக்கும் போது எட்டு இட்லி என்று சொன்னால், கூட யார் சாப்பிட்டார்கள் என்று நிமிர்ந்து பார்ப்பதுதான் கூச்சமாக இருக்கும்.
அலுவலகத்தில் இருந்து அனுப்பிய கோப்புகளை இணையத்திலிருந்து இறக்கிக் கொண்டு வர முற்பகலில் இணைய மையம் தேடிப் போனால், சிஃபியில் இருக்கைகள் நிரம்பி விட்டிருந்தன. கொஞ்சம் தாண்டிப் போனால் சைபர்டென் என்று பிஎஸ்என்எல் அகலப்பட்டை இணைப்புடன் ஒரு இடம். விண்டோசு எக்ஸ்பி நிறுவியிருந்ததால் தமிழும் தெரியும். கோப்புகளை எடுத்துக் கொண்டு அடுத்த கோப்புகளுக்காகக் காத்திருக்கும் போது கைவசமிருந்த பதிவுகளையும் போட்டுக் கொண்டேன். ஒரு மணி நேரம் ஓடி விட்டிருந்தது. பன்னிரண்டரை வழிபாட்டுக்கு போய் விட்ட ஒரு தொழிற்சாலையில் வேலை முடிக்க முடியாமல் திரும்பினேன்.
ஒன்றரை மணிக்குச் சாப்பிட போனால் செட்டிநாடு விடுதியில் பெரிய காத்திருப்போர் வரிசை. கிட்டத்தட்ட பதினைந்து பேர் உட்கார உள்ளே இடம். வெளியே ஏழெட்டு பேர் நிற்கிறார்கள். காத்திருக்கலாம் என்று நின்றால், இன்னும் சாரை சாரையாக பலர் வந்து கூட்டத்தில் சேர்கிறார்கள். அருகிலேயே இருந்த பாய் கடைக்கு வந்து விட்டோம்.
வேலையில் இறங்கினால் மிகச் சிக்கலானது என்று படம் காட்டும் பணிகளும் அரை மணி நேரத்தில் முடிந்து விடத்தான் செய்கின்றான. ஆனால் அதற்கு மன ஆற்றலைச் செலவிட்டு விடுகிறோம். அத்தகைய அரை மணி நேர வேலைக்குப் பிறகு, தொலைபேசி அழைப்பு வரவே இன்னொரு வாடிக்கையாளரை சந்திக்கக் கிளம்பினேன்.
குறைந்த கட்டணத்தில் நிறைய வேலை வாங்கி விட்ட இவர்கள் இன்னும் இன்னும் மிளகாய் அரைத்துக் கொண்டே போவதில் எல்லோருக்கும் கடுப்பு. போன தடவை போனவரிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று அவர் கடுப்பாகி வந்தார். இன்றைக்குப் போய் நமது நிலையை தெரிவித்து விட வேண்டும் என்று போனது. தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயன்றதை எல்லாம் கேட்டு விட்டு, 'எல்லாம் சரிதான், கோளாறு நமது அணுகுமுறையில்தான். தொக்கிய வேலைகளை இரண்டு நாட்களில் முடித்து விட்டு அப்புறம் புதிதாகப் பேசிக் கொள்ளலாம்' என்று சொல்லிக் கிளம்பி விட்டு, அடுத்த இடத்திலும் அரை மணி நேரம் வேலை முடித்து விட்டுத் திரும்பினேன்.
ஆர்வமாகக் கணினி மூலம் வேலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன் வருபவர்கள் ஒரு புறம். வருந்தி அழைத்தாலும் பயத்தாலோ அலட்சியத்தாலோ ஒதுங்கிப் போகிறவர்கள் இன்னொரு புறம். முதல் பிரிவினரை கையில் போட்டுக் கொண்டு மேலே போக வேண்டியதுதான் என்று முடிவு செய்தோம். இந்த வாரம் திட்டமிட்டிருந்த வேலைகளில் பெரும்பகுதி முடிந்து விட்டது. கூட இருந்தவர் நேற்றே சென்னை கிளம்ப நான் இங்கேயே தூங்கி விட்டு காலையில் ஆம்பூர் போக வேண்டும்.
அவரை வாலாஜா வரை கொண்டு விட்டு விட்டு, மறுபடியும் ஊருக்கு முந்தி சாப்பிடப் போகும் தொல்லைகளின் ஊடே சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் இணைய மேய்தல். அதற்குள் கை கால்கள் ஓய்ந்து விட்டிருந்தன. மலையில் அருகிலான இந்த ஊரில் குளிர் கால விளைவுகள் சீக்கிரமே தெரியும். காலையிலும் மாலையிலும் பனிப் பொழிவு கனமாக ஆரம்பித்து விடுகிறது.
நேற்றுக் காலையில் படிக்கக் கிடைத்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். காகித தரமும் அச்சுத் தரமும் எப்படி இவ்வளவு மோசமாக வைத்து பத்திரிகை நடத்துகிறார்கள்? அதே குழுமத்தில் வரும் தினமணி கூட நன்றாக இருக்கிறது. இந்து காலத்துக்கேற்ப மாறுகிறோம் என்று ஏற்கனவே சிறப்பாக இருந்த அச்சு நேர்த்தியை மேம்படுத்தி புது உருவில் வரும் போது இவர்கள் இன்னும் பழைய பாணியிலேயே பாடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான்.

வெள்ளி, நவம்பர் 17, 2006
புதிய காற்று
மறுபடியும் ராணிப்பேட்டையில். நேற்று காலையில் ஆறு மணிக்கு இரண்டு பேரும் பைக்கில் கிளம்பினோம். வழியில் பெட்ரோல் போட்டுக் கொண்டு குமணன் சாவடியிலிருந்து பூவிருந்தவல்லி வரை சாலை என்ற பெயரில் இருக்கும் அவமானத்தில் உழன்று நெடுஞ்சாலையைப் பிடிக்கும் போது ஆறரை மணி.
நல்ல வேளையாக அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மழை அச்சுறுத்தவில்லை. கொஞ்சம் குளிரடிக்கும் காற்று, அதிகாலை போக்குவரத்து, பெரும்பகுதி நான்கு வழிப்பாதையாகி விட்ட சாலை, வசதியான பயணம்.
யுண்டாய் கார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் எப்போதுமே அடாவடி இல்லாமல் சாலையில் சாதுவாக, கம்பீரமாக போகும். தனியார் கல்லூரிகள், பல நிறுவனங்களின் வெளி ஆட்கள் நிர்வாகத்துக்கு விடப்பட்ட போக்குவரத்து சேவை அந்த பெயர்களின் மீது வெறுப்பே வரும்படி செய்து விடுகின்றன. இந்த பேருந்து ஓட்டுனர்களுக்கு தனிப் பயிற்சி அளித்திருப்பார்கள் போலிருக்கிறது. வண்டிகளும் நல்ல பராமரிப்பில் மற்றவர்களை இடையூறு படுத்தாமல் செல்கின்றன.
திருப்பெரும்புதூர் தாண்டி, நோக்கியா தொழிற்சாலையை நெருங்கும் போது ஏழெட்டு பேருந்துகளும் வேன்களும் வெளியே கிளம்புகின்றன. அப்போதுதான் (ஏழு மணி) வேலை நேரம் முடிகிறது போலிருகிறது. வரிசையாக வண்டிகள் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டன. சுங்குவார் சத்திரம் புறவழிப்பாதையில் இன்னொரு நோக்கியா தொழிற்சாலை. இங்குதான் சில நாட்களுக்குப் பிறகு சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் வந்து திறந்து வைத்த விழா நடந்தது.
இது வரை ஓட்டி வந்த நான் பின் இருக்கைக்கு மாறிக் கொண்டேன். இனிமேல் சாலை வேலை முடிந்து விட்ட பகுதி. காஞ்சிபுரத்துக்கு உள்ளே போகாமல் புதிய சாலை ரயில் பாதைக்கு மேலே உயர்ந்த பாலம் கட்டி காஞ்சிபுரத்தை தாண்டிப் போகிறது. இப்படி ஆயிரக் கணக்கான வண்டிகள் வலம் வந்து போகாமல் தாண்டி போக அனுமதித்ததுதான் காஞ்சி மட அதிபதிக்கு வந்த தொந்தரவுகள் என்று யாராவது ஒரு கண்டுபிடிப்பைச் செய்யலாம்.
எது எப்படியோ கடந்த ஒரு ஆண்டாக இந்த ஆயிரக் கணக்கான வண்டிகளுக்கு அரை மணி நேர பயணம் மிச்சம். நெடுஞ்சாலையின் இரண்டு புற கிராமங்கள் புதிய விருந்தாளியான, தமது நிலத்தைச் சாப்பிட்டு விட்ட இந்த நான்கு வழிப் பாதையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நேரடி பலன் இருக்கிறது என்று தெரியா விட்டாலும், நோக்கியா போன்ற உற்பத்தி மையங்கள் வருவதற்கு இப்படி ஒரு சாலை இருப்பதும் காரணம்தான்.
திரும்பவும் ஓட்டுனர் இருக்கைக்கு மாறி, பாலுச்செட்டி சத்திரம், பெரும்புலிப்பாக்கம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம், இன்னும் வரிசையான சிறு கிராமங்களைக் கடந்து சுங்கச் சாவடி வந்தோம். எங்குமே இரண்டு சக்கர வண்டிகளுக்குக் கட்டணம் கிடையாது. கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் சரி, தெற்கு நோக்கிச் செல்லும் பெருஞ் சாலையிலும், இங்கும் ஓரத்திலிருக்கும் சிறு வழி மூலமாகப் போய் விடலாம்.
இன்னொரு சுங்கச் சாவடி பெருங்களத்தூரிலிருந்து மதுரவாயல் போகும் சென்னை புறவழிச் சாலை. வாலாஜா சேரும் போது எட்டு பத்து.
நாங்கள் கிளம்பியதிலிருந்து சென்னையிலிருந்து வரும் எந்த பேருந்துமே முந்திச் செல்லவில்லை. இரண்டு பேர் பேருந்தில் வந்திருந்தால் பயணச் சீட்டுக் கட்டணம் அறுபத்தைந்து ரூபாய்தான். பைக்கில் இந்த நூறு கிலோ மீட்டர் பயணத்துக்கு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பெட்ரோல் செலவு. நூற்று இருபது ரூபாய். பேருந்தில் தூங்கிக் கொண்டே வந்திருக்கலாம்.
பைக்கில் வருவதன் ஒரு ஆதாயம் உள்ளூர் பயணம். வாலாஜாவிலிருந்து உள்ளூர் பேருந்து பிடித்து போக வேண்டிய இடங்களுக்குப் போனால் நேர விரயம். ஆட்டோ பிடித்தால் மேலே சொன்ன அறுபது ரூபாய் ஆதாயம் பல மடங்கு மறைந்து விடும். கையில் வண்டி இருந்தால், நினைத்த இடத்துக்குப் போய் விட்டு வந்து விடலாம். சாப்பிடப் போக தயங்க வேண்டியதில்லை. பேருந்தே போகாத தொழிற்பேட்டை பகுதிகளுக்கு சுலபமாகப் போய் வந்து விடலாம். எனவே இந்த வண்டியை இங்கேயே விட்டு விடுவது, வருபவர்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டம்.
சென்னையிலிருந்து பேருந்தில் வந்திறங்கி வண்டியை எடுத்துக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டும். ஒரே ஒரு முடக்கம், வண்டி சென்னையில் இல்லாமல் போவது.
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் உணவு வேளையின் போது ராணிப்பேட்டையிலேயே சொந்த தொழில் செய்யும் கல்லூரியில் ஒருஆண்டு மூத்தவர் ஒருவர் வந்தார். அவரிடம் பேசிப் பேசி தங்குவதற்கு இடம் தேடுவதாகக் குறிப்பிட்டவுடன், தன் வீட்டு மாடிப் பகுதியை எடுத்துக் கொள்ளச் சொன்னார். வந்த வாய்ப்பை விட வேண்டாம் என்று உடனேயே போய் இடத்தைப் பார்த்தோம். நன்கு திட்டமிட்டு, வீடு, அவருக்கு அலுவலகம், மேலே பயன்பாட்டுக்கு தனி பகுதி என்று அழகாகக் கட்டியிருக்கிறார். கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடம். கையில் வண்டி இருந்தால் அது பிரச்சனையாக இருக்காது. இருந்தும் அடிக்கடி வரப் போகிறவர்கள் பார்த்து விட்டு முடிவு செய்யட்டும். வாடகை, முன்பணம் பற்றிக் கவலையில்லை என்று சொல்லி விட்டார்.
காலையில் சாப்பிட்ட அதே மூர்த்தீஸ் கபேயில் மதிய உணவு. காலையில் சாப்பிடும் போது கையில் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து, 'இடத்தை அடைக்காமல் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வெளியே உட்கார்ந்து படிங்க சார்' என்று சொன்னார் அவர். மதியமும் போனதும் அவருக்கே என்ன தோன்றியதோ, கூடுதலான கவனிப்பு. திட்டினாலும் விடாமல் நமக்கு ஆதரவு அளிக்கிறானே என்ற கருணையாக இருக்கலாம்.
சென்னையிலிருந்து அனுப்பியிருந்த கோப்புகளை வாலாஜாவிலேயே இருந்த இணைய மையத்தில் இறக்கிக் கொண்டு மதிய வேலை ஆரம்பித்தது. மாலையில் முடியும் நேரத்தில் ஒரு முதலாளி வந்துவிட ஏழு மணி வரை ஓடி விட்டது. வெளியே போய் சாப்பிட்டு வந்து விடலாம் என்ற திட்டம் தாமதமாகி விட்டது. நான்காவது நாளாக ஆறு மணி தாண்டி, ஏழரை மணிக்குச் சாப்பாடு.
அதன் விளைவு தெரியத்தான் செய்கிறது. அதிகாலையில் எழுந்திருக்கும் போது மந்த நிலை. சுறுசுறுப்பாக துள்ளி எழுந்திருக்க முடியவில்லை. அப்பாவுக்கு தொலைபேசினால் கானாவிலிருந்து, போய்ச் சேர்ந்த விபரம் இன்னும் வரவில்லை என்று சொன்னார்கள். தொலைபேசி எண் வாங்கி அருகில் இருந்த சிஃபி இணைய மையத்தின் வெளிநாட்டுத் தொலைபேசிச் சேவை மூலமாகப் பேசினேன். விமானம் இன்னும் போய்ச் சேர்ந்திருக்கவில்லை. ஐந்தரை மணி நேர வேறுபாட்டில் அங்கு இரண்டரை மணிதான் ஆகியிருந்தது. இங்கிருந்து கிளம்பி இருபத்தி நான்கு மணி நேரத்தில் மூன்று விமானங்கள், இரண்டு விமான நிலையக் காத்திருத்தலுக்குப் பிறகுதான் போய்ச் சேர முடிந்திருக்கிறது. சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு பதின்மூன்று மணி நேரம்தான்.
அவர்கள் பக்கத்து ஊரான புர்கினோ ஃபாஸோ பற்றிக் கேட்கச் சொல்லியிருந்தேன். பெரிய நிறுவனம்தான், நம்பிக்கைக்குரியதுதான் என்று தகவல் சொன்னார். வெளியே வந்ததும், கும்மென்று வந்த சோளப்பொரியின் மணத்தால் கவரப்பட்டு அதுவும் ஒரு பொது வாங்கிக் கொண்டேன். சென்னையில் பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் என்று விற்கப்படும் இந்த பொரி, இங்கு மூன்று ரூபாய்க்கு ஒரு பொதி என்று கிடைத்தது. கூட இருந்தவர் கட்டுப்பாட்டுடன் மறுத்து விடவே அவ்வளவையும் தின்று தீர்த்தேன்.
அறைக்குள் வந்ததும் சோம்பேறியாக அப்படியே உறங்கி விட முதலில் முயன்று அப்புறம் ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு கை கால்கள் கழுவி புத்தகத்தை ஏறக் கட்டி மனப் பயிற்சியில் உட்கார்ந்தேன். ஒன்பதரைக்குப் படுத்து விட்டாலும் காலையில் எழுந்திருக்க சுணக்கம்தான். நேற்று அதிகாலையில் எழுந்து விட்டது, நூறு கிலோமீட்டருக்கு மேல் பைக்கில் பயணித்தது எல்லாம் எலும்புகளைச் சோம்பலடையச் செய்திருக்கலாம்.
'விஜயகாந்த் என்ற தலைவர், விஜயகாந்த் ஒரு நடிகர் இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும்' என்று ஒருவர் சொன்னார்.
'அவரது கொள்கைகளால் கவரப்பட்டுத்தான் கட்சி உறுப்பினரானேன்.'
'கட்சி அப்புறம், முதலில் இருக்கும் இடத்திலிருந்தே பிறருக்குத் தொண்டு செய்யக் கற்றுக் கொண்டால்தான் அரசியல் வேலை செய்ய முடியும்' என்றதற்கு தெலுங்கில் ஸ்டாலின் என்ற பெயரில் வந்த படத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
எல்லா அமைச்சர்களின் பெயரையும், அவர்களது துறையையும் நினைவு வைத்திருக்கிறார். 'தவறாமல் செய்தித் தாள் வாசிக்கிறேன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொலைக்காட்சி செய்திகள் பார்க்கிறேன், அதனால்தான் இவ்வளவு விபரமும் தெரிகிறது' என்கிறார். தான் திருமணம் செய்தால் கைம்பெண் ஒருவருக்கு மறுவாழ்வு அளிப்பதாகத்தான் செய்வேன் என்று முன்பு ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
இந்த நேரம் தொழுகைக்கான அழைப்பு கேட்டது. 'தவறாம தொழுகை செய்து விடுகிறார்கள்' என்று பெண் ஊழியர் வியந்து சொல்ல உடனேயே ஒசாமா பின் லாடனும், தீவிரவாதமும் ஆரம்பித்து விட்டார்கள். தீவிரவாதத்தையும் ஒரு குறிப்பிட்ட மதத்தையும் முடிச்சு போட்டதற்கு முதல் பொறுப்பு, பாகிஸ்தானிய தலைவர்கள், இரண்டாவது இந்துத்துவா தலைவர்கள், சமீபத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டவர் அமெரிக்க அதிபர் புஷ். ஒரு பொய்யைத் திரும்ப திரும்ப பலபேர் பல முறை சொன்னால் அது உண்மையாகி விடாது என்றாலும் பரவலாக அது நம்பப்பட ஆரம்பித்து விடுகிறது. நேற்றைய செய்தித் தாளில் அல்-ஜஸீரா நிறுவனம் 24 மணி நேர ஆங்கில ஒளிபரப்புச் சேவையை ஆரம்பிப்பதாக தகவல்.
சிஎன்என்னும், பிபிசியும் கொடுக்கும் தகவல்கள்தான் உண்மை என்று இல்லாமல் மறு பக்கமும் என்ன நினைக்கிறது என்பதை உலகறியச் செய்ய இந்த முயற்சி உதவும். எந்த சண்டைக்கும் இரண்டு புற நியாயங்கள் இருக்கும். 'இவர்கள் எல்லோரும் தீமையின் வடிவம், நான்தான் ஆண்டவனின் தூதன்' என்று சண்டையின் போது நடந்து கொள்வது, சண்டை முடிந்த பிறகு அப்படியே வரலாறு எழுதுவதைப் போன்றே கொடியது. அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சண்டை போட்டு லட்சக் கணக்கானோர் செத்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தென் மாநிலங்களை அப்படியே வில்லன்களாக ஒதுக்கி விடாமல், இரண்டு பக்க கதையும் வெளி வர அனுமதித்தது போல இரண்டு உலக போர்களைப் பற்றியும் இப்போது நடக்கும் அமெரிக்காவின் புனித போர் பற்றியும் இரண்டு பக்க நிலைகளும் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதையே சகித்துக் கொள்ள முடியாத நிலை.
மாலை ஐந்தரைக்கு பேருந்தைப் பிடித்தால்தான் இரண்டு பேருந்து மாற்று ஆறரைக்கு வீடு போய்ச் சேர முடியும் என்று கிளம்பினார் ஒரு பெண். வீட்டுக்குப் போய் வேலைகள் காத்திருக்கின்றன. தூரம் என்னவோ ஆறேழு கிலோ மீட்டர்தான். இந்த நேரத்தில் நிரம்பி வழியும் பேருந்துகளில் போராடி இடம் பிடித்துப் போய்ச் சேர ஒரு மணி நேரம் ஆகி விடும். இரு சக்கர வாகனம் ஒன்று வாங்கிக் கொண்டால், பத்து நிமிடத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். சென்னையிலிருக்கும் அளவுக்கு இங்கு அந்த வசதிகள் பற்றிய புரிதல் வந்திருக்கவில்லை. இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ளச் சொன்னதும், முதலில் திகைப்புதான். 'நமக்கெல்லாம் கட்டுப்படியாகாது' என்று இழுத்தாலும், நாட்கள் போகப் போக அதில் இருக்கும் வசதி உறைத்து வாங்கி விடுவார் என்று நம்புவோம். சென்னைப் பேருந்துகளைப் போல இல்லாமல் பெண்களுக்கெதிரான அடாவடி குறைவாக இருந்தாலும், வீட்டிலும் வெளியிலும் வேலை பார்க்கும் ஒருவருக்கு தேவையில்லாமல் இரண்டு மணி நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கலாம்தான்.

வியாழன், நவம்பர் 16, 2006
சேருமிடங்கள்
நேற்று முன்தினம் ராணிப்பேட்டையில். அதிகாலையில் நடக்கப் போனது ஒரு கிராமத்துச் சாலையில். ராணிப்பேட்டையிலிருந்து திருவலம் வழியாக போகும் பிராதான சாலைக்கு ஒரு பக்கம் தொழிற்பேட்டை. மறு பக்கம் கிராமங்கள். மறுபக்கம் அதிகம் போனது இல்லை.
அதிகாலை பொழுது புலரும் வேளையில் அந்த குறுகிய சாலையில், ஒரு சின்ன ஏரி, வயல்கள் நடுவே நடந்தது நன்றாக இருந்தது. காற்றில் தூய்மை உடலுக்கு புத்துணர்ச்சி தந்தது. குறித்த நேரம் நடந்ததில் அடுத்த கிராமம் வந்து அந்த கிராமத்து மேல்மருவத்தூர் பராசக்தி வழிபாட்டு மையத்துக்கு முன்பு மணி அடித்தது.
திரும்பி நடக்கும் போது கடந்து போகும் பால் பாத்திரம் தாங்கிய வண்டிகள் உறைத்தன. விவசாயம் தவிர கால்நடை வளர்ப்பின் அடையாளங்கள் இரண்டு பக்கங்களும்.
காலை வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு ஒரு குட்டி இளைப்பாறல். அதன் பிறகு வேலை, நாள் முழுவதும். தொழிற்சாலை முழுவதும் கணினி பயன்பாட்டைப் புகுத்த வேண்டும். எல்லோரும் ஆர்வமாக கற்றுக் கொள்ள வருகிறார்கள். நம்முடைய தயாரிப்பில்தான் சுணக்கம்.
கூட இருந்த நண்பருக்கு சளி. எப்படியோ சமாளித்து, நன்றாக சாப்பிட்டு ஓய்வெடுத்து தங்கி, பின்தங்காமல் வேலையைப் பார்த்துக் கொள்கிறார். மாலை வேலை முடிந்த பிறகு சென்னை கிளம்பலாமா, அல்லது தூங்கி விட்டு விடிகாலையில் கிளம்பலாமா என்று இரு மனம். கடைசியில் தூங்க முடிவாகி விட்டது. இப்போதெல்லாம் ஆறு மணிக்கு மேல் சாப்பிடுவதில்லை என்பது முறிந்து போய் மூன்று நாட்களாக ஏழரை மணிக்குச் சாப்பாடு.
அதிகாலை, மூன்று மணிக்கே விழிப்பு வந்தும், இரண்டு மூன்று முறை புரண்டு படுத்து நான்கரைக்கு எழுந்து, புறப்பட்டு சரியாக ஐந்து மணிக்கு பையுடன் கிளம்பி விட்டேன். ஐந்து நிமிட நடையில் பேருந்து நிறுத்தம் வந்ததும், அருகிலேயே நிறுத்தியிருந்த வேன், ஏற்றிக் கொண்டு முத்துக் கடையில் விட்டு விட்டார். அதில் இறங்கி அப்போதுதான் வந்து நின்று கொண்டிருந்த வாலாஜா போகும் பேருந்து கிடைத்தது. அதில் இறங்கி சென்னை பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தால், விரைவுப் பேருந்து ஒன்று வந்து சேர, இருபதே நிமிடத்தில் சென்னை நோக்கிப் பயணம் ஆரம்பித்து விட்டிருந்தது.
ஏழு மணிக்கு போரூர் கொண்டு சேர்த்து விட்டார். பேருந்தினுள், எம்ஜிஆர் பாடல்கள் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. 'தரை மேல் பிறக்க வைத்தான்' என்ற பாடலில் தப்பட்டை வைத்துக் கொண்டு மீன் வலை தொங்கும் அறையில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருப்பவரை மட்டுமே காட்டி படமெடுத்திருந்தார். கேட்கும் நமக்கே உருக்கமாக இருக்கிறது என்றால் கடலில் போய் தண்ணீரில் மிதக்கும் மக்களுக்கு எப்படி இருக்கும்?
அப்புறம் தொடர்ந்த பாடல் காட்சிகளைத் தவிர்த்து விடலாம் என்று ஓட்டுனர் இடது புற இருக்கைக்குப் போய் விட்டேன். வெளிச்சம் வரும் வரை வெளியே பொழுது விடிவதைப் பார்த்துக் கொண்டு நெடுஞ்சாலை ஓரக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே வந்தேன். அதன் பிறகு கையில் இருந்த அமெரிக்க வரலாறு.
அலுவலகம் வந்து சேர்ந்ததும் இரண்டு மணி நேர இடைவெளி. அப்புறம் வீட்டுக்குப் புறப்பட வேண்டும், ஒரு நாள் விடுப்பு. தங்கை ஊருக்குக் கிளம்புவதை முன்னிட்டு. அந்த இடைவெளியில் போய் வந்திருந்த வேலைகளையும், மின்னஞ்சல்களையும் பார்த்துக் கொண்டேன். பைக் பராமரிப்புச் சேவைக்கு விட்டு இன்னும் திரும்பியிருக்காததால், நடந்தே வீட்டுக்குக் கிளம்பினேன். ஒன்பது மணி போக்குவரத்து ஆற்காடு சாலையை நிறைத்துக் கொண்டிருந்தது.
ராமாபுரத்திலிருந்து ஆற்காடு சாலை வந்து சேரும் தெருவில் ஏற்பட்டிருந்த பெரிய பள்ளத்துக்கு அருகில் மண்/கல் அடித்துப் போட்டு வெள்ளை வேட்டி/சட்டையுடனான ஒருவரின் மேற்பார்வையில் அதை நிரப்பும் வேலை நடந்து கொண்டிருந்தது. உள்ளூர் மக்களாட்சியின் பொறுப்புணர்வு.
அதன் பிறகு பல புதிய எண்ணங்கள் பீறிட்டுக் கொண்டு வந்தன. இந்தியாவின் நிறவெறி, தமிழ் வலைப்பதிவுலகில் ஒளிபரப்பும் நட்சத்திரம், இந்தியாவுக்காக ஒரு கனவு, எம்மானை வாழ்த்துதல் என்று மனதில் குறித்துக் கொண்டேன். வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று வந்த பசியில் தோசை, நூடில்ஸ், வாழைப் பழம், ஓட்ஸ் கஞ்சி, தட்டை என்று வரம்பின்றி உள்ளே போனது. அப்புறம் சின்னச் சின்ன வேலைகள், உதவிகள்.
அழுக்குத் துணிகளை துவைத்து முடித்து, குளித்து சாப்பிட்டதும் விமான நிலையம் கிளம்ப நேரம் ஆகி விட்டிருந்தது. பெட்டிகளை இறக்கி வரவழைத்திருந்த இரண்டு வண்டிகளில் ஆட்களும் பொருள்களுமாகப் போய்ச் சேர்ந்தோம்.
வழியில் முன் பின் தெரியாதவர்களிடம் காணக் கிடைக்கும் மனிதம் பற்றிய பேச்சுக்கள். நடுவழியில் பெட்ரோல் தீர்ந்து போய், அருகில் இருந்த சைக்கிள் கடையில் வண்டியை விட்டு விட்டு ஆட்டோ பிடித்து போகும் போது, தன் வண்டியை எடுத்துக் கொண்டு போகச் சொன்ன சைக்கிள் கடைக்காரரைப் பற்றி. இந்தூரில் அரை டஜன் உறவுக்காரக் குழந்தைகளை திரைப்படத்துக்குக் கூப்பிட்டுப் போய், ஆட்டோவை விட்டு தியேட்டரில் இறங்கும் போது, பணப் பையை வீட்டில் விட்டு வந்ததை உணர்ந்து கையைப் பிசைந்த நண்பருக்கு, ஆட்டோக்காரர் திரைப்படத்துக்கும் பணம் கொடுத்து அடுத்த நாள் வீட்டுக்கு வந்து பயணக் கட்டணத்துடன் சேர்த்து கடனை வாங்கிக் கொண்ட கதை.
சென்னையிலிருந்து மும்பை போய் அதிகாலை விமானத்தில் ஆப்பிரிக்கா போகிறார்கள். ஒன்றரை மணி நேரம் விமானம் தாமதம். எல்லோரும் முனையத்தின் வெளியேயே நின்று பேசிக் கொண்டிருந்தோம். பல விதமான பிராயணிகள்.
பெரும்பாலானவர்கள், பல முறை பயணித்துப் பழக்கப்பட்ட தோரணையில் போய்க் கொண்டிருந்தார்கள். வெளி நாட்டவர்கள் அவர்களை வழியனுப்ப வந்தவர்களுடன் போவது, விமான ஓட்டி, பிற ஊழியர்கள் சீருடையில். நடக்கவே முடியாத வயதான ஒரு பெண்மணியை ஆம்புலன்ஸில் கொண்டு வந்து சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு போகிறார்கள். கால்கள் சூம்பிப் போன இளம் பெண், கழுத்தும் சாய்ந்து கொண்டே இருக்கிறது, அவள் அம்மா தள்ளிப் போக தள்ளு வண்டியில்.
நேரத்தைப் போக்க தேநீர் குடிப்பவர்கள் குடித்து வந்து விடக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு நுழைவுச் சீட்டு வாங்கி எல்லோருமே உள்ளே போய் விடலாமே என்று தோன்றி விட்டது. தலைக்கு முப்பது ரூபாய். சீட்டு எடுக்கும் போது கூடவே காத்திருக்கும் வண்டி ஓட்டுனரை சேர்க்காமல் எடுத்து உள்ளே போய் விட்டோம். அவருக்கும் உள்ளே வர ஆசை இருந்திருக்கும். ஐந்தை ஆறாக எடுத்திருந்தால் அவரும் மகிழ்ந்திருப்பார்.
உள்ளே போய் பெட்டிகளை உள்ளே பதிவு செய்ய போய் விட, நான் கம்பித் தடுப்புக்கு இப்புறம் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் புள்ளிக்கு அப்புறம் பயணிகளுக்கு மட்டும்தான் அனுமதி. உறைந்த முகத்துடன் சீருடை தரித்த வட இந்திய காவலர் ஒவ்வொருவராக சரி பார்த்து உள்ளே விட்டுக் கொண்டிருந்தார். சிலர் தயாராக பயணச் சீட்டை விரித்துக் காட்டிக் கொண்டே கடந்தனர். சிலர் கேட்ட பிறகு பையைத் திறந்து காட்டுகின்றனர். சிலர் கையில் ஏதோ அச்சிட்ட தாள்.
எங்கோ பார்த்தது மாதிரியான ஒருவர் நாலைந்து பேர் சூழ உள்ளே போனார். கூட வந்தவர்கள் சிலர் பயணிகள் இல்லை. தடுத்த காவலரை புறங்கையால் தள்ளி விட்டுப் போய் விட்டார்கள். அந்த தலைவர் இந்தப் புள்ளியில் நடை வேகத்தை குறைக்கக் கூடத் தேவை இல்லாமல் முன் கூட்டியே ஒருவர் வந்து வழி செய்து கொண்டிருந்தார். அருகில் நின்றவரிடம் கேட்டு அது ஆற்காடு வீராசாமி என்று தெரிந்தது.
'முப்பது ரூபாய்க்கு பரவாயில்லை. குளிரூட்டப்பட்ட இடம், வசதியாக உட்கார இருக்கைகள், பார்ப்பதற்கு செய்தித் தொலைக்காட்சி (NDTV). முதலிலேயே உள்ளே வந்திருக்கலாம்.' காத்திருக்கும் போது, வந்து சேர்ந்த விமானப் பயணிகளுக்கிடையே, வெள்ளை வெளேரென்று வெடவெடவென்று ஒரு உருவம். இதுவும் எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று சுட்டிக் காட்டியதில், அவர்தான் நடிகர் ரகுவரனாம். அவர் ஏதோ பக்கவாட்டுப் பாதையில் போய் விட்டார்.
காத்திருந்த வண்டியில் தாம்பரம் போகக் கூடியவர்கள் போய் விட, நானும் அப்பாவும் திரிசூலம் பேருந்து நிறுத்தம் அருகில் இறங்கிக் கொண்டோம். அந்த இடத்தில் பாதசாரி கடக்கும் இடம் என்று கோடு போட்டிருந்தும், வாகன ஓட்டம் ஓயவே இல்லை. விழுப்புரம் பணிமனையைச் சேர்ந்த வெளியூர் பேருந்து ஒன்றில் ஏறி கத்திப்பாராவுக்கு சீட்டு.
"எப்படி விழுப்புரம் பணிமனை பேருந்துகள் மட்டும் தூய்மையாக, நல்ல நிலையில், பராமரிக்க முடிகிறது?" என்று நடத்துனரைக் கேட்டதும் அவருக்குப் புரிந்த பதில் "திருப்பதி கோயிலில் வருமானம் காரணமாக நல்ல வசதிகள் செய்ய முடிவது போல பெரியார் போக்கு வரத்துக் கழகத்திலும் வருமானம் அதிகம். பௌர்ணமி தோறும் திருவண்ணாமலை போகும் பேருந்துகள் மூலம் நல்ல வருமானம்".
கத்திப்பாராவை நெருங்க நெருங்க இரண்டு மூன்று கிலோமீட்டர் முன்பிருந்தே வாகன நெரிசல். பால வேலைகள் நடைபெறுவதால் இடைக்கால தொந்தரவு. கடைசியில் நிறுத்தத்துக்கு முன்பே இறங்கி போரூர் நோக்கிப் போகும் பேருந்து நிறுத்தம். பெரிய மக்கள் கூட்டம். வரும் பேருந்துகள் எல்லாம் அடைத்துக் கொண்டும், பகிர்வூர்திகள் நிறைந்தும் வருகின்றன. சரி, ஆட்டோவிலேயே போய் விடுவோம் என்று சாலையைக் கடந்து போய்க் கேட்டால் எண்பது ரூபாயில் பேரம் ஆரம்பிக்கிறார்கள். கடைசியில் எழுபது ரூபாய்க்குக் குறைந்து வர முன்வரவில்லை.
வழியெங்கும் விவாதம். மற்ற நகரங்களில் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுகிறார்களே, சென்னையில் சரியான மீட்டர் இல்லாமல் மக்களை ஆட்டோக்களை நாட விடாமல் பயமுறுத்தி விடுகிறீர்கள் என்று சொன்னால், பெங்களூரில் தனக்குத் தெரிந்த அடாவடி என்று ஆரம்பித்து, சென்னையில் காவல் துறை, வாகனத் துறை ஊழல் செய்வது, மீட்டர் பல ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதில் கொண்டு முடித்தார்.
'நியாயமான மீட்டர் போட்டு போகலாம் என்று மக்களுக்குத் தெரிந்தால் நீங்கள் நிறுத்தத்திலேயே சோம்பியிருந்து விட்டு மாட்டுபவர்களிடம் கொள்ளை அடிக்காமல், நிறைய வேலை செய்து நியாயமாக சம்பாதிக்கலாம்'. 'மூன்று கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் அதற்கு மேல் கிலோமீட்டருக்கு ஐந்து ரூபாய் என்று வைத்து விடுங்கள், உங்களுக்கு இரண்டு திசைகளிலும் பயணிகள் கிடைத்து நல்ல தொழில் நடக்கும்,'
'நான் மட்டும் என்ன செய்ய முடியும்?'
'நீங்க சங்கம் வைத்து போராட வேண்டியதுதான். நீங்களே ஒரு தலைவராகி விடுங்கள்'
"என்னப் போய், எப்படி சார்!'
இன்று காலை பைக்கை ராணிப்பேட்டை கொண்டு போவதற்கு ஆறு மணிக்குப் புறப்பட வேண்டும். இரவு வீட்டுக்குப் போனதும் பொருட்களையெல்லாம் சீர்படுத்தி அடுக்கினோம். அதிகாலை இரண்டரை மணிக்கு விழிப்பு. நிதானமாக வேலைகளை முடித்துக் கொண்டு போக வேண்டிய துணிகளை பொதிந்து, ஓட்ஸ் காய்ச்சிக் குடித்து அலுவலகம் வந்து சேர்ந்து எழுத்து.

புதன், நவம்பர் 15, 2006
போகும் பாதை வெகு தூரம்
நேற்றுக் காலையில் ரயில் நிலையத்துக்குக் கிளம்பும் போது மழை தூற ஆரம்பித்தது. நகரப் பேருந்திலேயே போய் விடலாம் என்று ஓடிப் போய் நிறுத்தத்தை அடைந்தோம். சூளை யானைப் பாலம் நிறுத்தத்தில் இறங்கினால் இரண்டு நிமிட நடையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து விடலாம் என்ற நடத்துனரின் வழி காட்டலில் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டோம்.
கூட வரும் மூன்றாமவர் அவர் நண்பர் மூலம் சீட்டுக்களை வாங்க ஏற்பாடு செய்து விட்டதால் ஆறே காலுக்குச் சரியாகப் போய்ச் சேர்ந்து ஆறே கால் வண்டியைப் பிடிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் உட்கார இருக்கை கூடப் பிடித்து வைத்திருந்தார்கள். அதற்காக அந்த நண்பர் காலையில் நான்கரை மணிக்கு கோயம்பேட்டில் பேருந்து ஏறினாராம்.
ஆனைப்பாலத்திலிருந்து சென்ட்ரல் வருவதற்கு தூரம் ஓரிரு கிலோ மீட்டர் இருந்தது. நல்ல வேளையாக இறங்கியதும் ஒரு ஆட்டோ பிடித்து வந்து விட்டதால் நேரம் சரியாக இருந்தது.
ரயில் சரியான நேரத்தில் கிளம்பி விட்டாலும், வழியில் ஏதோ தட அடைப்பு காரணமாக அரக்கோணத்தில் அரை மணி நேரம், அடைப்பின் அருகில் அரை மணி நேரம் என்று நின்று விட்டுப் பின்னர் வேகம் பிடித்தது. கூட இருக்கும் யாரும் சேராவிட்டாலும், இருபது ரூபாய்க்கு கிடைத்த பொங்கல்/வடை பொதி சாப்பிட்டேன்.
ஆம்பூர் வந்து சேரும் போது இரண்டு மணி நேரம் தாமதம். பத்தரைக்கு இறங்கி கூட இருந்தவர்களுக்காக காலை உணவு சாப்பிட்டு விட்டு வாணியம்பாடி போகும் போது பதினொன்றரை. நமது வரவை எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்திருந்ததால், நாள் முழுவதும் நிறைவான வேலைகள் முடிந்தன.
வங்கி தானியங்கி பண இயந்திரத்தில் வாணியம்பாடியிலேயே பணம் எடுக்க முடிந்து மாலை பேருந்தைப் பிடித்து வேலூர் வந்து சேர்ந்தேன். நான் மட்டும் ராணிப்பேட்டை போய் அங்கு தங்கி விட்டு செவ்வாய்க் கிழமை வேலையைப் பார்ப்பதாக ஏற்பாடு. வேலூர் பேருந்து நிலையத்துக்கு வெளியே ஒரு கார் ஆள் ஏற்றிக் கொள்ள நாற்பது நிமிடங்கள் பிடித்திருக்கக் கூடிய முத்துக்கடை வரையிலான தூரத்தை பதினைந்து நிமிடத்தில் பயணித்து இறங்கிக் கொண்டேன்.
சிப்காட் செல்லும் பேருந்தில் ஏற வரும் போது குடிமகன் ஒருவர் மேலே மோதி விட்டார். "ஒங் கால்ல விழுந்துன்னாலும் மன்னிப்புக் கேட்கிறேன்" என்று அவர் அலறும் வரை பேசலானேன்.
"பிரதர், ஒன்ன மாதிரி கிடையாது என் லைஃப். பொண்டாட்டி போய்ச் சாகு எங்கிறா. நான் என்ன பண்றது சொல்லு? ஒரு மனுசனுக்கு வாழ்க்கையிலா பொண்டாட்டி இம்பார்டன்டா, புள்ளைகளா?"
"ரெண்டு பேரும் இல்லை ஒங்களுக்கு நீங்கதான் முதல் கவலை. உங்களை சரியாப் பார்த்துக்கவில்லை என்றால் பொண்டாட்டி பிள்ளைகளை எப்படிக் கவனிப்பீர்கள். காசையும் உடலையும் குடியில் வீணாக்கி விட்டா யாருக்கு நட்டம்? நீங்க சொல்வதுபடி பார்த்தால் குழந்தைகளுக்கு யார் செய்வார்கள்? அப்பா, காசையெல்லாம் குடியில் விட்டு விட்டு, உடலிலும் தெம்பு இல்லாமல் அழித்து விட்டால் குழந்தைகளுக்கு யார் காப்பு?"
"நெஞ்சத் தொட்டுட்டீங்க பிரதர்" என்று அடுத்தக் கட்டத்துக்குப் போகும் முன்னால் பேருந்து கிளம்ப ஆரம்பிக்கப் போய் ஏறிக் கொண்டேன். இவரும் அதே வண்டியில் ஏறுபவர்தான்.
சிப்காட்டில் இறங்கி வேலை செய்யும் இடத்தில் ஓரிரு மணி நேரம் செலவளித்து கொஞ்சம் மேசைப் பணிகளைத் தயார் செய்து கொண்டோம். ஒன்பது மணிக்கு மேல் கூடவே தங்குபவருடன் சாப்பிடப் போனோம். பசிக்கு ஆறு இட்லி உள்ளே போனது
தங்குமிடம் போன நிறுவனத்தில் 'கெஸ்ட் ஹவுஸ்'. அவர்கள் ஊழியர்கள் மூன்று பேர் தங்க ஒரு வீட்டை அமர்த்தியிருக்கிறார்கள். அதில் நமக்கும் தூங்க இடம். சனிக் கிழமை போய்ப் பார்க்கும் போதே குப்பை மலையாகிக் கிடந்ததைப் பார்த்திருந்தோம். தெருவில் குப்பை போடுபவர்களைப் பார்த்து உங்கள் வீட்டில் என்றால் இப்படி போடுவீர்களா என்று கேட்பது உண்மையிலேயே இங்கு நடந்திருந்தது.
அறை முழுவதும் கடலைத் தோல்கள், பிளாஸ்டிக் உறைகள், தூசி, மேலே சிலந்தி வலை. நான் வருவதற்கு முன்பே ஒரு முறை பெருக்கி ஒதுக்கியிருந்தார்கள். ஒரு இருபது நிமிட மெனக்கிடலில், எல்லாம் ஒதுங்கி விட்டது. வேறு பதவல்கள் இல்லாததால், சுத்தமான சூழல் உருவாகி விட்டது.
வீட்டிலிருந்தே மடிக்கப்பட்ட பாய், மூடிக் கொள்ள போர்வை கொண்டு வந்து விட்டதால், தூங்க வசதியான இடம். கொசுவுக்கு ஒரு மின் கொசு விரட்டி, குளிருக்கு மின்விசிறியை அணைத்து வைத்து விட, தூங்கி விழிக்கும் போது மணி அதிகாலை இரண்டரை. நிறையக் கனவுகள் நிரம்பிய தூக்கம். அதன் பிறகு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. எழுந்து பல் தேய்த்து விட்டு உட்கார்ந்து விட்டேன்.
இந்தப் பயணத்தில் துணையாக அமெரிக்க வரலாறு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்க நாடுகளில் பொது வசதிகள் இல்லாமல் இருந்தது, அடைசல்கள் இல்லாமல் உழைப்பையே மூலதனமாக யாரும் உயரும் வாய்ப்புகள், அடிமை முறையைத் தவிர்த்து எல்லா வெள்ளை மனிதர்களும் சமம் என்ற கோட்பாடுகள், அடிமை முறை ஒழிப்பு என்று விறுவிறுப்பான வரலாறு.
சரியான அடித்தளம் இருந்து விட்டால் எந்த நாடும் உயர்ந்து விடலாம். எல்லா மனிதர்களும் சமம், சாதி/மத/மொழி அடிப்படையில் வேறுபாடு கிடையாது, சட்டப்படி ஆட்சி, பொது மக்களின் விருப்பப்படி ஆட்சி அமையும் ஏற்பாடுகள் என்ற வேலிகள் இருந்து விட்டால் அதன் உள்ளே நல்ல பயிர் விளையும்.
இந்த ஆற்காடு பகுதியில் மலைகளும் அது சார்ந்த தட்பவெப்ப நிலையும் இதமானவை. சென்னையில் இருப்பதை விடத் தூங்கி எழுந்ததும் சுறுசுறுப்பாக இருப்பதாக ஒரு உணர்வு. இங்கேயே வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் தோல் துறை சார்ந்தவர்களுக்கு நிறைவான வாழ்க்கைதான் என்று சொல்ல வேண்டும். சென்னைக்குப் போகும் சாலை நான்குவழிப்பாதை ஆக்கப்பட்டு விட்ட பிறகு இரண்டு மணி நேரத்தில் பேருந்தில், ஒன்றரை மணி நேரத்தில் காரில் நகரை அடைந்து விடலாம்.
இன்னும் திருப்பெரும்புதூரிலிருந்து பூவிருந்தவல்லி வரையிலான சாலையும் முழுவதும் முடிந்து விட்டால், இந்தப் பகுதிகள் இன்னும் வேகமாக வளர்ந்து விடும். இங்கு இருக்கும் சாப்பாட்டுக் கடைகள் பெரும்பாலும் முஸ்லீம்கள் சார்ந்தவை. பிரியாணி, குஸ்கா, பொதுவாக புரோட்டா என்று அறியப்படும் இவர்களது ரொட்டி, வகை வகையான இனிப்புகள் என்று சாப்பாட்டுப் பிரியர்கள்.
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஒரு முஸ்லீம் சிறுஉணவு விடுதியில் சாப்பிடுவோம். நேற்று மாலை புரோட்டா இல்லை என்று சொல்லி விட்டார்கள். பொதிந்து செல்ல பெரிய ஆர்டர் ஓடிக் கொண்டிருப்பதால் அப்படி. குஸ்பு இட்லி என்று சோடா உப்பை நிறையப் போட்டுச் செய்கிறார்கள் என்று நண்பர் காத்திருந்து புரோட்டா சாப்பிட்டார். முதலில் நப்பாசை இருந்தாலும், வேறு வழியில்லாமல் இட்லியே சாப்பிட்டுக் கொண்டேன்.
புரோட்டாவை தவிர்க்க வேண்டும் என்று முடிவு. முட்டை, சொட்ட சொட்ட எண்ணெய் என்று பிசையப்படும் மாவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சில இடங்களைத் தவிர்த்து பெரும்பாலும் வயிற்றுக்கு சங்கடம்தான்.
இந்தப் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகளால் மாசுபடுதல் அதிகம். ஆம்பூரில் விளையும் இளநீரில் கூட குரோமியம் கலப்பு இருக்கும் என்று பேசிக் கொள்வோம். கடந்த பத்து ஆண்டுகளாக கோடிக் கணக்கான ரூபாய் செலவில் சுத்திகரிக்கும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலும், அடிப்படை தொழில் நுட்பம் மாறா விட்டால் மாசுபடுதலைத் தவிர்க்க முடியாதுதான்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, குரோம் மூலம் தோல் பதனிடுதல் கண்டு பிடிக்கப்பட்டது வரை, தாவர விலங்கு பொருட்களை வைத்துதான் தோல் பதனிட்டு வந்தார்கள்.
இன்றைக்கும் கோலாப்பூர் செருப்பு என்று கிடைப்பவை முழுவதும் கை வேலையில் பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்டதுதான். அந்த முறையின் பெரிய குறை என்னவென்றால் தோலின் பயன்பாடு குறைவு. தண்ணீர் பட்டால் கெட்டு விடும், அதிகமாக அடிபட்டால் அறுந்து/பிய்ந்து விடும் என்று சிக்கல்களை மேம்படுத்த உருவானதுதான் குரோமியம் மூலம் பதனிடுதல், அதைத் தொடர்ந்து பெட்ரோல் வேதிப் பொருட்கள் சார்ந்த வினைகள், மேற்பூச்சுகள் கழுத்தை அறுக்கின்றன.
கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஆராய்ச்சிக்குச் செலவிட ஆரம்பித்தால்தான் நிலைமை அடிப்படையில் மாற முடியும். இல்லா விட்டால், ஐரோப்பாவிலிருந்து இந்தியா/சீனாவுக்கு, இங்கிருந்து இன்னும் பின் தங்கிய நாடுகளுக்கு என்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கொல்லப்பட்ட அல்லது இறந்த விலங்குகளின் தோலை பொருளாதார மதிப்புடையதாக மாற்றுவது மூலம் விவசாயிக்கு அதிக வருமானத்தையும், அழுகிச் சீரழியும் பொருளை பயனுடையதாக மாற்றுவதையும் செய்வது இந்தத் துறையின் அடிப்படை நோக்கம்.
உலகின் இரண்டாவது பழமையான தொழில் உலோகத் தொழில் என்று சுஜாதா கற்றதும் பெற்றதுமில் எழுதியிருந்தது சரி கிடையாது. அதற்கும் முந்தியது தோல் பதனிடுதல். வேட்டையாடி இறைச்சியை சாப்பிட்ட பிறகு எஞ்சிய தோலைக் காயப் போட்டு ஆடையாக உடுத்ததுதான் முதலில் செய்த தொழில்நுட்பமாக இருந்திருக்க வேண்டும். அதை அடுத்தவருக்கு விற்கும் வர்த்தகம் இரண்டாவது மூத்த வர்த்தகம்.
இன்றைக்கு வேலையை முடித்து விட்டு இரவில் இங்கேயே தங்கி விட்டு நாளை அதிகாலை சென்னைப் பேருந்தைப் பிடிக்க வேண்டும். நாளைக்கும் ஆம்பூரில் ஒரு வேலை அமைந்திருக்கிறதாம். புதன் கிழமை சென்னைக்குப் போயே ஆக வேண்டும். அதன் பிறகு தேவைப்படும்போதெல்லாம் இங்கேயே தங்கிக் கொள்ள வேண்டியதுதான். வாரத்துக்கு ஓரிரு முறை சென்னை போய் வரலாம்.
மடிப்புக் கணினி மூலமாக இணையத்தில் இணைய கிடைக்கும் அட்டைகளை வாங்கிக் கொண்டால் அலுவலகப் பணிகளும், இங்கிருந்தே குறையில்லாமல் நடந்து விடலாம். ராணிப்பேட்டை, ஆம்பூர்/வாணியம்பாடிக்கு மையமாக காட்பாடி./வேலூரில் இடம் பார்த்துத் தங்கினால் எந்த இடமுமே அருகாமையில் இருக்காது. அதனால் முதலில் ராணிப்பேட்டையில் முகாம் போட்டு இங்கு ஒரு சேவை மையத்தை உருவாக்க திட்டம்.
வேலை செய்ய, தங்க ஒரு இடம், தொலைபேசி இணைப்பு, சுற்றி வர ஒரு இரு சக்கர வண்டி இருந்தால் வெளியிலிருந்து வருபவர்களும், உள்ளூரிலேயே வேலைக்குச் சேர்பவர்களும் வேலைகளை வசதியாகச் செய்து கொள்ளலாம். இங்கு ஓரளவு நிலை பெற்ற பிறகு, ஆம்பூரில் ஒரு இடம் பார்த்து இன்னொரு வண்டி விட்டு விடலாம். சென்னையை ஒப்பிடும் போது வாடகையும் குறைவு. மூன்று அறைகளுடனான இப்போது தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை மாதம் ஆயிரம் ரூபாய்.
வெளிநாடு போக வேண்டியதற்கு முன்பு ராணிப்பேட்டை மட்டுமாவது உறுதியாக அமைந்து விட்டால், அதே பாணியில் ஆம்பூர்/வாணியம்பாடியை மக்கள் அமைத்து விடுவார்கள். நான்கு ஆண்டுகளில் ராணிப்பேட்டையில் இடம்/ஆள் வேண்டும் என்று பல முறை முயன்றது, சென்னையிலிருந்தே ஆட்டுவிக்க நினைத்ததால் நடக்கவில்லை. மூத்த மேலாளர் ஒருவர் ஆரம்ப மாதங்களில் தங்கி வளமைகளை ஏற்படுத்தி விட்டால் பின்னால் நிலை பெற்று விடுவது எளிது. ஆரம்பத்திலிருந்தே புதிய ஆட்களை வைத்து ஓட்ட முயன்றால் பருப்பு வேகாது.
சிலவற்றைச் செய்ய ஆரம்பித்த பிறகுதான் அதன் முக்கியம் புரிகிறது. இது வரை இப்படிச் செய்யாமல் எப்படி வாழ்ந்தோம், எப்படி தொழில் செய்தோம் என்று ஒரே ஆச்சரியம். அப்படி மேலே மேலே போகும் சுழலில் பொருந்திக் கொள்வது எவ்வளவு இன்பமோ, அதே அளவு கொடுமை, இதை விட மோசமாக எதுவும் நடந்து விடாது என்று ஒவ்வொரு முறையும் தோன்றும் கீழே கீழே எடுத்துச் செல்லும் எதிர்மறை சூழ்நிலைகள். சுழற்சி எந்தத் திசையில் என்பது நம் கையில்தான். மேல் சுழற்சியைக் கீழாக மாற்ற யாரும் விரும்பா விட்டாலும், அதற்குத் தொடர்பில்லாத வேறு முடிவுகளால் திசை மாறி விடலாம்.
கீழ் சுழற்சியை தடுத்து நிறுத்தி மேல் நோக்கித் திரும்ப யாருக்கும் மறுப்பிருக்காது. அதை எப்படிச் செய்வது என்பதில்தான் சிக்கல். ஒரு நாள், கண்ணை மூடிப் பல்லை இறுகக் கடித்து, கைகளை திடமாக்கி மாட்டிக் கொண்டிருக்கும் வட்டப் பாதையை உடைத்து வெளியே வர வேண்டியிருக்கும். அது எளிதானது இல்லைதான். பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒரு திசை, மேல்நிலைப் பள்ளி/கல்லூரிப் படிப்பு முடியும் வரை இன்னொரு திசை, வேலையில் சேர்ந்து முதல் நான்கு ஆண்டுகளுக்கு திசை மாற்றம், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு திணறல், இப்போது மீண்டும் திசை மாற்றம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)