11 மணி பதினைந்து நிமிடங்கள். இரவு. இந்த நேரத்தில் என்ன எழுத்துக் கூத்து. தேவை இருக்கிறது. எழுத வேண்டிய நேரங்களிலெல்லாம் சோம்பலில் தூங்குவதும், கண்டதைப் படிப்பதுமாகக் கழித்து விட்டால் இந்த நேரத்தில்தான் எழுத முடியும்.
ஒரு மனிதனுக்கு வரும் சோதனைகள்தான் இவை. கொம்பு எதுவும் முளைத்து விடவில்லை, ஒவ்வொரு நாளும் போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு எல்லாம் எளிதாகிப் போய் விடும் என்பது நடக்கப் போவதில்லை.
ஆனால் ஒழுக்கம் தவறாமல் இருந்த போது எளிதாகத்தான் இருந்தது. அதிகாலையில் எழுந்திருத்தல், எழுதுதல், வீட்டைத் தூய்மை செய்தல், வெளியே உலாவப் போதல், துணிகளைத் துவைத்தல், தவறு நடப்பதைத் தட்டிக் கேட்டல், சமூகப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுதல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தேவையில்லாத குப்பைகளில் வாய் வைக்க இடமில்லாமல் இருந்தது. இன்றைக்கு அதிஷா எழுதிய கதையில் படம் பிடித்த குழந்தைகளைப் போன்றவர்களுக்கு நம்மைப் போன்றவர்கள் செய்ய வேண்டியது எவ்வளவு இருக்கிறது? அதை விட்டு விட்டு ஏதோ வெட்டிப் பொழுது போக்குவது என்ன நியாயம்?
சறுக்குதல் மனிதனாக இயல்பு என்பதை உணர்ந்து கொண்டு, உயர்வு மனப்பான்மை கொண்டு விடாமல், ஒவ்வொரு படியிலும் நமது குறைகளைப் புரிந்து கொண்டு, குறைகளை உணர்ந்தவனாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் நாம் சொல்வதை மதிப்புடன் கேட்கிறார்கள் என்றால் அது நமது குழுவினர் செய்த நற்பணியினால்தான். அதனால் நமது தற்பெருமை வீங்கி விடக் கூடாது. குழுவினர் நான் சொல்வதை செவி மடுக்கிறார்கள் என்றால் மரத்தின் மீது ஏறி வழி காட்டுபவனுக்கு இருக்கும் செவி மடுப்புதான் அது. மரத்தின் மீது ஏற முடிந்ததாலே, தரையில் பல விதமான பணிகளை அளித்துக் கொண்டு போகிறவர்களை விட நான் எந்த விதத்திலும் உயர்ந்தவனில்லை. மரமேறி வழி பார்த்து சொல்வதும் குழுவுக்குத் தேவையான ஒரு பணி அவ்வளவுதான்.
இதை நன்கு உணர்ந்து கொண்டு தற்பெருமை மனதை குழப்பி விடாமல் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதரையும் பார்க்கும் போதும், அவர்கள் நம்மை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களோ, எந்த விதத்திலும் மேம்பட்டவர்களோ இல்லை, நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான் என்பதை தெளிவாக உணர்ந்து உறவாட வேண்டும். பதவியால் கிடைக்கும் மரியாதைகளை நமக்குக் கிடைக்கும் மரியாதையாக நினைத்து இறுமாந்து விடக் கூடாது.
இன்று காலையில் எழுந்திருக்கும் போது ஆறு மணி தாண்டி விட்டது. நான்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்தும், எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கினேன். ஏழரை மணிக்கு அலுவலகத்தில் சந்திப்பு. கழிவறையில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருக்க நீண்ட நேரம் ஆகி விட்டது. பல் தேய்த்து, குளித்து விட்டுக் கிளம்பினால் சரியாக இருக்கும். எல்லாம் அழுக்காகி விட்டன. துவைக்கவும் ஊற வைக்கவில்லை. வெள்ளிக் கிழமை அலுவலகத்துக்குப் போட்டுக் கொண்டு போன அரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு அதற்கு மேல் முழுக்கால் சட்டையைப் போட்டுக் கொள்ளலாம் என்று திட்டம். போட்டுக் கொள்ளச் மேல் சட்டையும் துவைத்து தேய்த்தது இல்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒரு தடவை போட்டுக் கழற்றி வைத்திருந்த டி சட்டையை போட்டுக் கொண்டு போகலாம். இதற்குள் மழை தூற ஆரம்பித்திருந்தது. இரவு முழுவதும் மழை நின்று அமைதியாக இருந்தது. காலையில் திரும்பவும் ஆரம்பித்து விட்டதா என்று மலைப்பாக இருந்தது. மழை பெய்தாலும், போகும் வழியில் தண்ணீர் வடிந்திருந்ததைப் பார்த்திருந்த நினைவில் காரை எடுத்துக் கொண்டு போக முடிவு செய்தேன். குடையை எடுத்துக் கொண்டு போய் தெருவில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலவரம் பார்க்க முடிவு செய்தேன்.
மழை குறித்து பொதுவான பேச்சு பேசி விட்டு எட்டிப் பார்த்தேன். 'நம்ம கட்டிடத்துக்கு மட்டும் பேப்பர் காரன் வருவதை நிறுத்தி விட்டான்' என்று ஆதங்கத்துடன் சொன்னார். காலையில் நாளிதழ் படிக்காமல் பைத்தியம் பிடித்து விடும் பழக்கம் இருக்கும் போலிருக்கிறது. எனக்கும் கிட்டத்தட்ட அது போலத்தான்.
நாளிதழ் கொண்டு கதவருகே போடும் சத்தம் காதில் விழுந்து விடுகிறது. அலுவலகத்தில் யாருடைய செல்பேசி அடித்தாலும் கேட்டு விடுகிறது.
எழுத ஆரம்பித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. தூக்கம் கண்களைத் தழுவப் பார்க்கிறது. அதிகமான தூக்கமும், அதிகமான பசியும் இருப்பது அனுபவத்தில் உணர்ந்து உண்மை. அந்த பிணைப்பை உடைக்க வெகு நேரம் கண்விழித்து பணி செய்வதும் உதவியாக இருக்கலாம்.
நாம் செய்யும் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் முறைமைகள் முரட்டுத்தனமாக இருக்கின்றதோ? ஏதாவது நல்ல குருவை அண்டி அவரிடம் கற்றுக் கொண்டு சரியான பாதையில் போனால் இது போன்ற சறுக்கல்களைத் தவிர்த்து விடலாமோ?
கண்களை மூடினால் செயசேகரன் மருத்துவமனையில் பணம் கட்டப் போன இடம் மனத்திரையில் வருகிறது. எதை எப்போது இழுத்துக் கொண்டு வருகிறது என்பது விந்தையாகத்தான் இருக்கிறது. இவ்வளவு தேவையான, தவிர்க்க முடியாத நினைவுகளே அளவற்று இருக்கும் போது, தேவையில்லாத குப்பைகளையும் கொண்டு திணிக்காமல் இருக்கலாம். நினைவுகள், திட்டங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தகவிறக்கம் செய்து திட்டப்படி செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.
24 நிமிடங்கள்தான் ஆகியிருக்கின்றன. இன்னும் 36 நிமிடங்கள் இருக்கின்றன. பாதியில் நிறுத்தி விடக் கூடாது.
காரை எடுக்கும் போது முன்னால் போய் திரும்பி நேர் திசையிலேயே வெளியில் வந்து விடலாம் என்று நினைத்தேன். திருப்புவதற்கு இடம் போதவில்லை. பின் நோக்கியே எடுத்துப் போய் வீட்டுக்கு வெளியில் வந்து விட்டேன். காவல்காரர் மழைக்கு ஒதுங்கியிருந்தார். ரேடியோ மிர்ச்சி கேட்டுக் கொண்டே கிளப்பினேன். மழை பலத்து வலுத்தது. எஸ் ஆர் எம் கல்லூரி போகும் சாலையைத் தோண்டிப் போட்டிருந்தார்கள். நேராகப் போய் ஆற்காடு சாலையில் வளசரவாக்கம் தாண்டி மசூதி தெருவில் திரும்பிக் கொண்டேன். காரை நிறுத்தி விட்டு இடது புற இருக்கை தாண்டி அந்தப் பக்க கதவு வெளியில் வந்தேன். வலது பக்கம் தண்ணீர் தேங்கியிருந்தது.
அலுவலகத்தில் யாருமே வந்திருக்கவில்லை. மின்அளவு மானி பெட்டியில் சாவியை வைத்து விட்டுப் போயிருந்தார். திறந்து உள்ளே போய் கணினியை இயக்கி முதலில் செய்திகளைத்தான் படிக்கப் புகுந்தேன். மும்பையில் தீவிரவாதிகளுடனான போர் இன்னும் முடியவில்லையாம். காலை வரை தாச் ஓட்டலில் அப்போதும் சண்டை நடந்து கொண்டுதான் இருந்தது. மாலையில்தான் ஓய்ந்ததாம். நாரிமன் கட்டிடத்தில் 4 இசுரேலியர்களும் கொல்லப்பட்டார்களாம். அது யூதர்களின் வழிபாட்டு இடமாம்.
சனி, நவம்பர் 29, 2008
புதன், நவம்பர் 26, 2008
இதுதான் வாழ்க்கையா!
மணி ஐந்து நாற்பத்தி ஐந்து ஆகிறது. நேற்றைக்கு நல்ல சோதனை வந்தது. பிறந்த நாள் என்று கேக்கு வாங்கி வந்திருந்தார்கள். அதை வெட்டியதும் என் கையில் ஒரு துண்டை கொடுத்து விட்டார். அதன் பிறகு மதிய உணவுக்கு அழைக்க ஆரம்பித்தார். அவரிடம் பாதி விபரங்களைச் சொல்லி, ஒரு ஆண்டுக்கு அரிசி சாப்பிடப் போவதில்லை என்று முடிவை தெரிவித்தேன்.
மாலையில் பிறந்தநாள் விருந்தாக பிட்சா வரவழைத்திருந்தார். அவர் கொண்டு வந்து கொடுத்த பெரியதொரு துண்டிலிருந்து ஒரு கிள்ளல் எடுத்துக் கொண்டு திருப்பி அனுப்பி விட்டேன். ஒரு தட்டில் இரண்டு துண்டுகள் கொண்டு வந்து சாப்பிட வற்புறுத்தினார். வாயில் வைத்தது ஒரு மிளகாயை. காரத்தில் அலறி, தண்ணீரும் குடித்துக் கொண்டேன். அந்த பிட்சா துண்டை நன்கு மென்று சாப்பிட்டு விட்டு தண்ணீரும் குடித்து நிறுத்திக் கொண்டேன்.
திங்கள் கிழமை இரவிலேயே ஊற வைத்திருந்த கடலை, பயறு, பெரும்பயறு மூன்றையும் நேற்றுக் காலையில் அவித்து தாளித்து ஒரு சம்படத்தில் போட்டு வைத்திருந்தேன். மறந்து விட்டுப் போய் விட்டேன். வீட்டுக்குத் திரும்பியதும் அந்த சம்புடத்தைத் திறந்து சாப்பிட்டு முடித்தேன்.
மழை அடைத்து வைத்து பெய்கிறது. கார்த்திகை மாதம் பிறந்த பிறகுதான் மழை சூடு பிடித்திருக்கிறது.
நேற்றைக்குக் காலையில் எழுந்து தரை தூக்கவும் துடைக்கவும் முடிவு செய்தேன். துணி ஒன்றை நனைத்து அடுக்களை மேடையை துடைத்து விட்டேன். பாத்திரங்களை ஒதுக்கி கழுவும் குழியில் போட்டு விட்டு தூத்து வாரினேன். சாப்பிட வேண்டாம் என்று முடிவுக்கு பங்கம் வேண்டாம் என்று வாங்கி வைத்திருந்த வாழைப் பழங்களை அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.
தரை துடைப்பதற்கு உள் அறையிலிருந்து ஆரம்பித்து, அடுக்களை, முன்னறை, நான் இப்போது தூங்கும் அறை என்று துடைத்து முடித்தேன். முன்னறையில் அழுக்கும் காலடித் தடங்களும் அதிகமாக இருந்தன. துடைத்துக் கொண்டிருக்கும் போது தொலைபேசி. அவர்கள் நிறுவனத்தின் நிலவரம். நான் புண்படுத்துவது போல பேசியதாக சொன்னார்களாம். பார்க்கலாம்.
தூத்து துடைத்து முடித்ததும், குளியல். முகம் மளிக்க வேண்டாம் என்று முடிவு. எகனாமிக் டைம்சு நாளிதழில் சிட்டி குழுமத்துக்கு 20 பில்லியன் டாலர்கள் அரசு நிதி உதவி அளிக்கப்படுவதாக செய்தி. காரணம் இல்லாமல் பலர் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அல்லது மிகச் சின்ன அர்த்தமில்லாத காரணங்கள்.
'நன்கு தூங்க வேண்டும்' என்று சேவாக் சொன்னதாகப் படித்ததிலிருந்து அவர் மீது வெறுப்பு. அதுவும் தில்லியைச் சேர்ந்தவராக இருப்பதால் கூடுதல் வெறுப்பு. யுவராச்சிங் மீது வெறுப்பு. அவர் பஞ்சாபை சேர்ந்ததால் இன்னும் கொஞ்சம் கடுப்பு.
எழுதித் திட்டியவர் என்று பிரகாசு ராச் மீது வெறுப்பு.
இந்துத்துவா அரசியல் செய்வதாக அத்வானி, மோதி, நிதீஷ் குமார், எடியூரப்பா, இல கணேசன் போன்றவர்கள் மீது வெறுப்பு. குடும்ப அரசியல் செய்வதாக கருணாநிதி மீது வெறுப்பு. தமிழர்களை அழிக்க நினைப்பதற்காக சிங்களவர்கள் மீது வெறுப்பு. பாலசுதீனியர்களை ஒடுக்க நினைப்பதற்காக இசுரேலியர்கள் மீது வெறுப்பு.
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ, இன்ஃபோசிசு, சிட்டி வங்கி, கட்டுமான நிறுவனங்கள், அம்பானி சகோதரர்கள் என்று நான் நேசிப்பவர்களை விட வெறுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கிறது. யாரை எடுத்தாலும் ஏதாவது காரணத்துக்காக குறை கண்டுபிடித்து குற்றம் சாட்டுவது இயல்பாகப் போய் விட்டிருக்கிறது.
குளித்து தியானம் முடித்து விட்டு உட்கார்ந்து நாட்குறிப்பு எழுத ஆரம்பித்தேன். செய்ய வேண்டிய பணிகளின் பட்டியல், புதிய விரதங்களின் விபரங்கள் எழுதி விட்டுத் தொடர்ந்து திங்கள் கிழமை நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பதிய ஆரம்பித்தேன். நுணுக்கமாக எல்லாம் நினைவில் வந்தன.
எழுதி முடிக்கும் போது ஒன்பது மணி தாண்டியது. உடை மாட்டிக் கொண்டு, கணினியை மடித்து வைத்து விட்டுக் கிளம்பி விட்டேன். அலுவலகத்தில் எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள். நான்தான் கடைசி. மதியத்துக்கு மேல் வருபவர்கள் மட்டும் வந்திருக்கவில்லை. திட்டமிட்டபடி வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். முதலில் திருத்தங்களை முடித்து விட்டு ஒரு சுற்று சுற்றி வரலானேன்.
வேலை செய்யும் பணியிடத்தை மாற்றிக் கொண்டேன். நேரெதிராக வட்ட மேசையில் உட்கார்ந்து கொண்டேன்.
4 மணிக்கு ஒரு கூட்டம்.
நிறுவனத்தின் சின்னத்தை உருவாக்குவதற்காக ஒரு கணினிவரைபடக் கலைஞரிடம் சொல்லியிருந்தோம். அவர்கள் 2000 ரூபாய் முன்பணம் கொடுத்தால்தான் வேலையை ஆரம்பிப்போம் என்றார்கள். அதற்கான வரைவு ஆவணத்தை அனுப்பச் சொன்னால், ஏனா தானோவென்று அனுப்பியிருந்தார். தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்டதில் மிரண்டு விட்டார். நான் இப்படி சேவை வழங்குபவர்களை இழுத்தடிப்பதை குறை சொன்னார். முதலில் கணினி பராமரிப்பு குழுவினர், இப்போது இவர்கள். என் கையில் மாட்டியவர்கள் யாரும் உருப்படியாக வேலை முடிக்க முடியாது.
இது போன்ற ஒரு முறைக்கான பணிகளை மற்றவர்கள் கையில் கொடுத்து விடலாம். நாம் தலையிடாமல் வேலை முடிந்து இறுதி முடிவை மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தேவையில்லாமல் நமது கனத்தை சுமத்த வேண்டாம்.
மாலையில் கடையநல்லூர் போவதற்கு முன்பதிவு செய்து கொண்டேன். பொதிகை விரைவு வண்டியில் கடையநல்லூர் போவதற்கே வசதி இருந்தது. காத்திருப்போர் பட்டியலில்தான் இடம் கிடைத்தது. 3ம் தேதி புதன் கிழமை மாலை புறப்பட்டுப் போய் விட்டு வியாழக் கிழமை கல்யாணத்துக்குப் போய் விட்டு, வியாழன் மாலையில் நாகர்கோவிலுக்குப் போய் விட வேண்டும். வெள்ளி, சனி அங்கு இருந்து விட்டு, சனிக்கிழமை மாலை, கன்னியாகுமரி விரைவு வண்டியில் கிளம்பி ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்னை திரும்பி விடலாம்.
குற்றாலம் எல்லாம் சுற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நேரம்தான் எவ்வளவு குறைவாக இருப்பது போலத் தோன்றுகிறது. ஒரு நாளில் 24 மணி நேரங்கள் போதவில்லை. நமக்காவது வீட்டுக்கு வந்து விட்டால் மனதை அழுத்தும் பணிகள் கண்ணில் படுவதில்லை.
35 நிமிடங்களில் 807 சொற்கள். இன்னொரு பயன்பாட்டில் அறிக்கை ஒன்று ஓட விட்டுக் கொண்டிருக்கிறேன். இதே போல வேதிப் பொருள் சரக்கு கண்காணிக்கும் அறிக்கையையும் சீர்செய்ய வேண்டும்.

செவ்வாய், நவம்பர் 25, 2008
சீறும் பந்துகள்
பதினாறாம் தேதி உறுதி இரண்டு நாட்கள் கூட நீடிக்காமல் உடைந்து போனது. இன்றைக்குக் காலையில் மீண்டும் அதே உறுதி மொழி. அதற்குக் கூடுதல் தூண்டுதல், ஞாயிறு அன்று காலையில்.
ஒரு ஆண்டுக்கு அரிசி, அரிசியால் செய்யப்பட்ட எல்லா வித உணவு வகைகளையும் நீக்கி வைக்கவும் முடிவு செய்தேன். நமக்கு மிகவும் பிடித்தமான, அது இல்லாமல் வாழவே முடியாது என்று இருக்கும் பொருட்களைத் துறப்பதில் வெகுவாக மேம்படுத்தும்.
அலுவலகத்தில் உட்காரும் இடத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் சரக்கு சரி பார்த்தல், வேதிப் பொருள் திட்டமிடல், முடிக்கும் தேதி திட்டமிடல், தோல் சரக்கு திட்டமிடல் என்று எல்லாவற்றையும் சரிபார்க்க வேண்டும்.
மென்பொருளை இயக்கிப் பார்க்க வேண்டும். தோல் மற்றும் பிற பொருட்களின் குறியூட்டு முறையை முடிவு செய்து செயல்படுத்த வைக்க வேண்டும்.
தோல் சரக்கு மற்றும் வேதிப் பொருள் பயன்பாட்டு அறிக்கைகளைச் சரிபார்த்து இன்றைக்குக் கொடுத்து விடச் சொல்ல வேண்டும்.
நிறுவனத்திற்கு இருக்கும் சிக்கல்களை சரி செய்து கொடுத்து அவரிடம் தகவல் அனுப்ப வேண்டும். சந்திப்புக்கு தயாரித்துக் கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு பணித் திட்டம் முடிவு செய்ய முயற்சிக்க வேண்டும். தொலைபேசி விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பணி நிலவரங்களையும் சந்திப்புக்கான திட்டமிடல்களையும் முடித்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தால் வியாழக் கிழமை ராணிப்பேட்டை பயணம் என்பதை மாற்றி வெள்ளிக் கிழமை என்று திட்டமிட்டுக் கொள்ளலாம். மூன்று பேருக்கும் தெரிவிக்க வேண்டியிருக்கும். இன்றைக்கும் நாளைக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டும்.
சரக்கு மதிப்புக்கான நிரல்கள், சரக்கு சரிபார்ப்பதற்கான மாற்றங்கள், நிபந்தனைக்குட்பட்டு கூட்டல் போடும் முறை, சமன்பாடுகளுடன் கூட்டல் போடும் முறை இவற்றை ஆவணப்படுத்தி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தரவுத்தள பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான நுணுக்கங்களை ஆவணப்படுத்தி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தோல் கண்காட்சியில் பங்கு பெறுவதற்கான ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.
பயன்பாட்டில் என்னென்ன வசதிகள் இருக்கின்றனவோ அவற்றை வரிசையாக கண்காணிக்கச் சொல்ல வேண்டும். அறிவிப்பு அஞ்சல்களை சரி பார்த்து மேம்படுத்தச் சொல்ல வேண்டும்.
நம்முடைய முயற்சிகளை எல்லோரும் தெரிந்து கொள்ளும் படி பொதுவில் அறிவித்து விட வேண்டும். சோம்பல், தீனிப் பிரியம், குப்பைகளில் மனத்தை அலைய விடுவது இவற்றையும் களைந்து விட்டால் இன்னும் மேலே மேலே போகலாம். இல்லா விட்டால் இந்த இடத்திலேயே மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டியதுதான்.
அரிசி ஒதுக்க வேண்டும் என்றால், சமைத்த சோறு, இட்லி, தோசை, இடியாப்பம், பொங்கல், தட்டை, சீடை, கஞ்சி எல்லாம் ஒதுங்கி விட வேண்டும். கோதுமையில் செய்த உணவுப் பொருட்களை சாப்பிட்டுக் கொள்ளலாம். பால் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள், அசைவ உணவு வகைகள், எண்ணையில் பொரித்த உணவு வகைகள் இவற்றையும் தொடர்ந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கோதுமை சப்பாத்தி, கோதுமை தோசை, அவித்த பயறு, பருப்பு வகைகள், கோதுமை நூடுல்ஸ், காய்கறிகள், பழங்கள், நிலக்கடலை, கடலை மிட்டாய்கள், எலுமிச்சம் பழச் சாறு என்று சாப்பிடும் பெரும்பாலான உணவு வகைகளை உண்டு உயிர் வாழ்ந்து கொள்ளலாம். குவித்து வைத்து சோறும், இட்லி, தோசையும் நிறுத்தி விட வேண்டியிருக்கும்.
எட்டே காலுக்கு ராமாபுரம் அருகில் இருப்பேன் என்று வாக்கு கொடுத்திருந்தேன். ஞாயிறு மாலையில் அய்யப்ப வழிபாடு. அதில் இட்லி, பொங்கல், சர்க்கரை பொங்கல், இடியாப்பம், வடை என்று சாப்பிட்டு விட்டுக் காலையில் சாப்பிடுவதற்கு இடியாப்பங்களையும் வாங்கி வைத்து விட்டுத் தாமதமாகத்தான் தூங்கினேன். 5 மணிக்குப் பிறகுதான் விழிப்பு வந்தது.
முந்தைய நாள் வாங்கியிருந்த ஆனந்த விகடனை படித்துக் கொண்டே முடித்து விட்டுப் பல் தேய்த்தேன். ஞாயிறு மாலையில்தான் பயணம் முடிவானது. காலணி அலுவலகத்தில் இருந்தது. போட்டுக் கொண்டு போக துவைத்துத் தேய்த்த சட்டைகள் எதுவும் இல்லை. அலுவலகத்துக்குப் போய் தேய்க்கும் கடையில் சட்டை வாங்கி மாற்றிக் கொண்டு காலணியையும் மாட்டிக் கொண்டுதான் போக முடியும்.
உலாவி விட்டு வரலாம் என்று ஐந்து நாற்பதுக்கு வெளியில் புறப்பட்டேன். மழை பெய்து தரை எல்லாம் ஈரமாக சேறாகி இருந்தது. வழக்கமாக தென்படும் அதிகாலை நடையாளர்களில் பலரைக் காணவில்லை. நேராக நடந்து வலது புறம் திரும்பும், விமலா கான்வென்ட் இருக்கும் சாலை கும்மிருட்டாக இருந்தது. கோயில் முன்பு உரத்த ஓசையில் பாட்டை ஒலிக்க விட்டுக் கொண்டு ஒரு சீருந்து. வேகமாகக் கிளப்பி மைதானத்தில் ஒரு வட்டம் அடித்து புறப்பட்டுப் போனார். அப்படியே திருவள்ளுவர் சாலைக்கு வந்து திறந்து கொண்டிருக்கும் தேநீர் கடைகளைப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
நேற்று தண்ணீர் வரும் நாள். வெளியில் எட்டிப் பார்த்தால் தண்ணீர் வருவதாகத் தெரியவில்லை. குளித்து விடலாம் என்று குளித்து முடித்து விட்டேன். அதன் பிறகு போய் தண்ணீர் பிடித்து வந்தேன். போகும் போது அம்மா இரண்டு குடங்களுடன் குழாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவர் ஒரு குடம் பிடித்த பிறகு நான். அதன் பிறகு அடுத்த கட்டிடத்திலிருந்து ஒரு அம்மா. அதிகாலையிலேயே முகப் பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு வந்திருந்தார். உள்ளிருந்து வந்த மாமி வாசல் அருகிலேயே நின்றிருந்தார். மழையில் சேறாகிக் கிடந்து குழாயருகில் கவனமாக வழுக்கி விடாமல் தண்ணீர் பிடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன்.
வீட்டில் முதலில் குடிக்க வெந்நீர் அடுப்பில் எடுத்து வைத்தேன். இன்னொரு அடுப்பில் சின்னப் பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ். இரண்டையும் வைத்து விட்டு தியானம் செய்ய உட்கார்ந்தேன். பாதியில் எழுந்து பார்த்தால் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்திருந்தது. நூடுல்சும் இளக ஆரம்பித்திருந்தது. ஒரு முறை கிண்டி கொடுத்து விட்டுத் திரும்ப உட்கார்ந்தேன். 20 நிமிடங்களை முழுவதுமாக முடிக்காமல் 15 நிமிடங்களிலேயே எழுந்து கொண்டேன். வெந்நீர் பாத்திரத்து அடுப்பை மூடி விட்டு, நூடுல்சை பார்த்தால் அதுவும் வெந்து விட்டிருந்தது. இடியாப்பத்தின் மீது வெந்நீரை தெளித்து விட்டு இன்னொரு டம்ளரில் ஆர்லிக்சு கலக்க எடுத்துக் கொண்டேன்.
முதலில் இடியாப்பங்கள். கொஞ்சம் புளித்துப் போன சுவை, வீணாக்க முடியாதல்லவா? தொடர்ந்து நூடுல்சு, இடையிடையே ஆர்லிக்சு. ஆர்லிக்சு நீர்த்துப் போய் நீராகத் தெரிந்தது. ஆனாலும் இனிப்புச் சுவை இருக்கத்தான் செய்தது.
துவைத்துக் காய்ந்திருந்த சட்டைகளையும் ஒரு பையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். தேய்க்கும் கடையில் இந்தத் துணிகளை கொடுத்து விட்டு ஏற்கனவே கொடுத்திருந்த சட்டைகளைக் கேட்டால், தேய்த்து வைத்திருந்தார்கள். மூன்று சட்டைகளுக்கு 10 ரூபாய்கள் கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டேன். அலுவலகத்தில் கீழே சுகூட்டி தெரிந்தது. மேலிருந்து கீழே இறங்கி வந்தார். அவர்தான் வண்டியை எடுத்துப் போயிருந்தாராம். வண்டியை திரும்பக் கொண்டு வைத்து விட்டுப் போகிறார். ராணிப்பேட்டைக்குப் புறப்படுகிறாராம்.
கணினியை இணைத்துக் கொண்டேன். போட்டுக் கொண்டிருந்த சட்டையை மாற்றி தேய்த்த சட்டை போட்டுக் கொண்டேன. தோல் கண்காட்சி தொடர்பான வேலைகளை அழகாக திட்டம் போட்டுக் கொடுத்திருந்தார். அதற்கான செலவினங்களையும் பட்டியல் போட்டு எனக்கு அனுப்பியிருந்தார். வாரா வாரம் குழுக் கூட்டம் நடத்தி வேலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லியிருந்தார்.
சரக்கு அறிக்கைக்கான மாற்றங்களையும் முயற்சிக்கலானேன். அதற்குள் 8 மணி ஆகி விடவே புறப்பட்டு விட்டேன். பையில் கணினியை எடுத்துக் கொண்டு கீழிறங்கினேன். கார் மீண்டும் மின்கலன் மின்னூட்டம் இறங்கி விடக் கூடாதே என்று ஓரிரு நிமிடங்கள் அதனை இயக்கி விட்டு சாலைக்கு வந்தேன். சாலையின் ஓரத்தில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. நடு சாலையில் நடந்தால் வாகனங்கள் எங்கு போகும். கவனமாக நடந்து பேருந்து நிறுத்தம் வந்தேன்.
முதலில் வந்த சொகுசுப் பேருந்து ஒன்று நிற்காமல் போனது. குன்றத்தூர் போகும் பேருந்து நின்றது. 3 ரூபாய் சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால் சில்லறை இல்லையாம். கடைசியில் 5 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு விட்டார். போரூர் சாலை நிறுத்தத்தில் இறங்கும் போது இன்னொரு பெண்ணும் இறங்க எழுந்தார். 'வளசரவாக்கம் சீட்டு வாங்கி விட்டு போரூரில் இறங்கினா என்ன அர்த்தம்' என்று அவருக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார் அந்த நடத்துனர். அதைத் தட்டிக் கேட்டிருக்கலாம். நமக்குக் கூடத்தான் அவர் 2 ரூபாயைத் தராமல் அமுக்கிக் கொண்டாரே!.
குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சாலையைக் கடக்கலானேன். ஆற்காடு சாலையைக் கடந்து மவுண்ட் - பூந்தமல்லி சாலையின் ஒரு பாதியைக் கடந்து நடுவில் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் பக்கம் சிவப்பு விழுந்ததும் பெரிய கூட்டமே சாலையைக் கடந்தது. மறுபுறத்தில் கடையில் டைம்சு ஆஃப் இந்தியா நாளிதழ் வாங்கிக் கொண்டேன். 2 ரூபாய்கள். பேருந்துக்குக் காத்திருப்பவர்களை பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் போகுமாறு செய்வதற்கு ஒரு பெரிய காவலர் படையே இருந்தது. வெற்றிகரமாக எல்லோரையும் சாலை நிறுத்தத்திலிருந்து தள்ளியிருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் போகச் செய்து கொண்டிருந்தார்கள்.
நாம் காருக்குக் காத்திருந்தாலும் அங்கு நிற்கக் கூடாதுதான். குறுஞ்செய்தியிலேயே பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் நிற்பதாகச் சொல்லியிருந்தேன். நாளிதழைப் படித்துக் கொண்டே வாகனங்கள் வரும் போக்கை அவதானித்துக் கொண்டிருந்தேன். வெளியூர் பேருந்துகள் கொத்துக் கொத்தாக வந்து நின்று போய்க் கொண்டிருந்தன. நான் நிற்பதைப் பார்த்து விட்டதாகவும், பேருந்து நிறுத்தம் தாண்டி வந்து விடுமாறும் தொலைபேசியில் சொன்னார்.
இறங்கி வழி விட நான் பின்பக்கம் இருக்கும் இருக்கைக்குப் போய்க் கொண்டேன். கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்தது. வெள்ளிக் கிழமை நான் போகாததை அவரிடம் தெரிவிக்காதது, அவர் கேட்ட ஒளிப்படக் கருவிக்கான மின்னூட்டி வாங்குவதைக் குறித்து எந்த உதவியும் செய்யாதது என்று கொஞ்சம் கடுப்பாகியிருக்கலாம். வார இறுதி எப்படிப் போனது என்று கேட்டேன். மகாபலிபுரம் போனார்களாம், வழியில் பிசர்மேன் கோவ், முதலைப்பண்ணை எல்லாம் பார்த்தார்களாம். மழையில் நனைந்தும் போனார்களாம்.
வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத் தூங்கிய களைப்பு. பாதி வழி தூங்கி வழிந்து கொண்டே வந்தேன். இடையிடையே தொலைபேசி அழைப்புகள். புறவழிச் சாலையில் போய் கே எச் அருகில் திரும்பினார்கள்.
ஆய்வு நடப்பது பணி அறைக்கு உள்ளே இருக்கும் அறை. அதில் போய் உட்கார்ந்து கொண்டோம். குடிக்க காபி சொன்னார்கள். சர்க்கரை போடாமல் காபி வந்தது. அதைக் குடித்து விட்டு டேனரியை சுற்றிப் பார்க்க புறப்பட்டோம். மென்பொருள் பணிக்காக மேலோட்டமாக பார்த்த இடங்களையும் பணிகளையும் தொழில் நுட்பக் கோணத்தில் பார்க்க முடிந்தது. ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தார்கள். பின்பக்கம் இருந்த தோல்களை பெற்று தரம் பிரித்து சேமித்து வைக்கும் பகுதி, தோல்களை தடிமன் குறைக்கும் இயந்திரங்கள், அவற்றுக்கான பணியிடங்கள் என்று பார்த்துக் கொண்டே வந்தோம். தமது தணிக்கை ஆய்வுக்கான குறிப்புகளை சரிபார்த்துக் கொண்டே வந்தது புரிந்தது. கற்றுக் கொண்ட அடிப்படையில் சுவர்களிலும் தரைகளிலும் மாற்றங்களைச் செய்திருந்தார்கள்.
முதிர்ச்சி இல்லாத இளைஞர் குழுவாக பணியாற்றுகிறார்கள். சொல்வதை செய்கிறார்கள். தாமே முனைப்பெடுத்து மெருகேற்றுவது நடக்க மாட்டேன் என்கிறது.
மணி 8.55 ஆகியிருக்கிறது. இன்னும் 12 நிமிடங்கள் இருக்கின்றன. ஒன்பது மணி தாண்டி 7 நிமிடங்களில் எழுத்து முடியும். ஒன்பதேகாலுக்குப் புறப்பட்டால் ஒன்பதரைக்கு அலுவலகம் போய்ச் சேரலாம். மாலை 6 முதல் 10 வரை மின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக எட்டரை மணிக்கு வேலை ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பித்தது பிசுபிசுத்து போய் விட்டது. இது போன்று சரியாக சீர்தூக்காமல் புதிய முயற்சிகளை ஆரம்பிப்பதை தவிர்க்க வேண்டும்.
இது வரை 1394 சொற்கள் ஆகியிருக்கின்றன. 50 நிமிடங்களில் 1500 சொற்கள் எழுதினால் நிமிடத்துக்கு 30 சொற்கள் என்ற வீதம் வருகிறது. இன்னும் வேகம் அதிகரிக்க வேண்டும்.
அங்கிருந்து இரண்டாவது பணிமனைக்குப் புறப்பட்டு சென்றோம். நகரின் மறுமுனையில் சிப்காட்டில் இருக்கிறது. அங்கும் பெரிதாக முயற்சி செய்தி பல மாறுதல்களைச் செய்திருந்தார்கள். குறை கண்டுபிடிக்கும் அளவுக்கு எதுவும் இல்லை. அங்கிருந்து திரும்பி வந்து கேள்வி பதில் ஆரம்பித்தது.
அதே கேள்விகள். கொஞ்சம் போரடித்தது. மதிய உணவுக்கு 2 மணி தாண்டிய பிறகுதான் நகர்ந்தார்கள். கோழிக் கறி கொண்டு வந்தார்கள். வேண்டாம். முதலில் உப்பு அதிகமாகப் போட்ட ஒரு சூப்பு. காய்கறிகள், பழங்கள் கலந்து ஒரு கலவை அதில் கார்ன் பிளேக்சும் போட்டிருந்தார்கள். சப்பாத்தி. தொட்டுக் கொள்ள காய். கடைசியில் தட்டு நிறைய சோறு போட்டு விட்டார். அதைத் தள்ளித் தள்ளிச் சாப்பிட்டு முடித்தேன். அதன் விளைவு கண்கள் சொக்கிக் கொண்டு வந்தன.
மூன்று மணிக்கு மேல் ஆரம்பித்த அடுத்த சுற்று நாலரை மணிக்கெல்லாம் வேகம் குறைந்தது. இன்னும் ஓரிரு பிரிவுகளை முடித்து விட்டு ஐந்தரைக்கு மேல் கிளம்பினோம். நானும் அவர்களுடனேயே கிளம்பி விட்டேன். இப்போது தூங்கிக் கொண்டிருக்காமல், பேச்சில் நேரம் போனது.
1561 சொற்கள் ஆகியிருக்கின்றன. இன்னும் 3-4 நிமிடங்களில் 1700 சொற்களை தொட்டு விடலாம். மேலே போய் 1740 ஆகி விட்டால் நிமிடத்துக்கு 29 சொற்கள் என்ற வீதத்தில் எழுதி முடித்திருப்பேன்.
போரூரில் இறங்கி பேருந்தில் ஏறிக் கொண்டேன். லட்சுமி நகர் அருகில் பேருந்து வேகம் குறைந்ததும் இறங்கிக் கொண்டேன். வழியில் இருந்த பெட்டிக் கடையில் நான்கு கடலை மிட்டாய்கள். அலுவலகத்துக்குப் போய் ஒரு மணி நேரம் தரவு சரி செய்தலில் நேரம் போனது. எட்டரைக்கு மேல் புறப்பட்டேன். கதைப் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டேன். துர்கா விடுதியில் 6 இட்லிகள், வீட்டுக்கு வந்து பிசுகெட்டுகள், ஆர்லிக்சு, பழங்கள் என்று நிரம்ப சாப்பிட்டுக் கொண்டேன். பசுமைக் கடையில் பிசுகெட்டு குளிக்கும் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, பிசுகெட்டு, பழங்கள் வாங்கி வந்திருந்தேன். கூடவே மேகி நூடுல்சும்.
தூங்குவதற்கு முன்பு நிரல்களை சரி பார்த்து விடலாம் என்று உட்கார்ந்து 11 மணி வரை வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு தியானத்தில் உட்கார முயற்சித்து 12 மணிக்கு தூங்கி விட்டேன். பலவிதமான கனவுகள். அதிகாலை நான்கு மணி வாக்கில் விழிப்பு வந்தும் 6 மணிக்குத்தான் எழுந்திருந்தேன்.
1687 சொற்கள், நேரம் முடியப் போகிறது. நிமிடத்துக்கு 28 சொற்கள்.

லேபிள்கள்:
சுயமுன்னேற்றம்,
நிறுவனம்
ஞாயிறு, நவம்பர் 23, 2008
இன்னொரு ஞாயிற்றுக் கிழமை
இருபத்தி மூன்றாம் தேதி ஆகி விட்டது.
இன்றிலிருந்து தினமும் முயற்சி எடுக்க வேண்டும். நேற்றைய தொலைபேசி உரையாடலைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று அனுப்ப வேண்டும். செவ்வாய்க் கிழமை ஒரு நினைவூட்டல். அவர்களது வேலைகளை முடித்து விட வேண்டும்.
அறிக்கை தயாரித்துக் கொள்ள வேண்டும். மூன்று பணிமனைகளிலும் தகவல் உள்ளிட்டு அறிக்கை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல வேலை முடித்துக் கொள்ள வேண்டும். முடுக்கி விட்டுக் கொள்ள வேண்டும்.
நாளைக்கு தொலைபேச வேண்டும். பேசி கொஞ்சம் நிலவரத்தை தெரிவித்து விட வேண்டும். அறிக்கைகளை சரி பார்த்து எடுக்க வழி செய்து விட வேண்டும்.
இந்த வாரத்துக்குள் திரட்ட வேண்டும். இந்தக் கணக்கிற்கேற்ப வேலையையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பெரிய தொகை என்று வேலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், மற்ற சின்னத் தொகைகள் வருவதும் நின்று போய் விடும். நேரத்தை நியாயமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
மணி ஏழே கால் ஆகியிருக்கிறது. செல்பேசியில் எழுதுவதற்கான நேரத்தை உள்ளிட்டு செயல்படுத்தாமல் விட்டிருந்தேன். இப்போதுதான் பார்த்து செயல்படுத்தி விட்டேன். எட்டே கால் வரை எழுத வேண்டும். உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்து விட வேண்டும்.
நேற்றைக்குக் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விட்டேன். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மடிக்கணினியில் அறிக்கையை ஓட விட்டு விட்டு காலை பணிகளை செய்து கொண்டிருந்தேன். நேற்று முழுவதும் முயற்சித்து 15 நிமிடங்கள் வரை ஆகக் கூடிய அந்த அறிக்கையை ஓரிரு நிமிடங்களில் வரும்படி செய்து முடித்தேன். அதில்தான் நாள் முழுவதும் போனது. இப்படி இருந்தால் நாம் எப்படிப் பிழைப்பது?
சந்திப்புக்கு வர முடியாது என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மழை சிணுங்கிக் கொண்டே இருந்ததால், கார் இருந்தது வசதியாகப் போய் விட்டது. வெள்ளிக் கிழமை மாலையிலும் மழை பெய்து கொண்டிருந்ததால் காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தேன்.
வெள்ளி மாலை புறப்படும் போது சொன்னது ஆழமாகப் பாதித்து விட்டது. அதுதான் அதிகாலையில் எழுப்பி நிறுத்தி விட்டது. காரிலும் மடிக்கணினியை அணைக்காமல் வைத்திருந்தேன்.
மேலே போய்ப் பார்த்தால் யாரும் வந்திருக்கவில்லை. கதவை நானே திறந்து கொண்டேன். அதிகாலை பணி நேரத்துக்கு வருபவர்கள் கூட வந்திருக்கவில்லை. உட்கார்ந்து பணம் தரச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பினேன் முதலில்.
ஒன்பது மணிக்கு மேல் ஒரு சின்ன விவாதம் என்று கூடினோம். இனிமேல் காசு கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். அந்த முடிவு முற்பகலில் மாறி விடும் என்று அப்போது தோன்றவில்லை. இப்போதெல்லாம் என்னுடைய கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துகள் ஏராளமாக வர ஆரம்பித்திருக்கின்றன, அவற்றை சுமுகமாக ஏற்றுக் கொள்ளவும் செய்கிறேன். முன்பெல்லாம் யாராவது மாற்றிக் கருத்துச் சொன்னால் உடனேயே படபடவென வந்து விடும்.
கார்த்திகை மாதம் கல்யாண காலம். அவர் செய்து கொடுத்திருக்கும் தமிழ் 99 ஒட்டிகளை சரியாகப் பயன்படுத்தவும் இல்லை. இதிலிருந்து எப்படியே தாவித் தாவி வங்கி முறைமைக்கு மனம் தாவியிருந்தது. நேற்றைக்கு விளக்கும் போது முழுவதும் சரியாக எடுத்துச் சொல்ல முடியவில்லை.
தொழிலுக்கு பெருத்த அடி கிடைக்கும். சின்னச் சின்ன வியாபாரிகள் தொழிலை விட்டுப் போக ஆரம்பிப்பார்கள். நன்கு தோல் செய்து கொடுப்பவர்களுக்க நல்ல வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதனால் சிறு முகவர்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.
பணமும் நிலமும் நகைகளும் கூட்டி வருவதுதான் வாழ்க்கை என்றால் எல்லாமே எளிதாகப் போய் விடும். எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்தால்தான் தெரியும் என்றதற்கு அப்படி எல்லாம் ஆகாது, எப்படியாவது தனக்கு வேண்டியதைத் தேடிக் கொண்டு விடுவார்கள் என்று அப்பா சொன்னார்கள்.
இப்போது சோர்வு கண்களை அழுத்துகிறது. கண்டதைத் தின்றதன் சோர்வு. காலையில் எழுந்ததும் சும்மா இருக்க முடியாமல் ஆறேழு தட்டைகள், இடியாப்பம் விற்றவரிடம் 10 இடியாப்பம் வாங்கி சர்க்கரையுடம் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டேன். நேற்று மாலை சாப்பிட நினைத்து சுப்ரபாவிற்கு உள்ளே போனால் உட்காரும் இடம் எல்லாம் நிரம்பி வழிந்தது. அதனால் தட்டையும் மூன்று கேக்குகளும் மட்டும் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.
வீட்டில் குடிதண்ணீர் இல்லை என்ற எண்ணத்தில்தான் வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விடலாம் என்று நினைத்திருந்தேன். துர்கா பவன் திறந்திருக்கவில்லை. சனி. ஞாயிறு விடுமுறை என்று திட்டமான நடைமுறையில் நடக்கிறது அவர்களது தொழில்.
மணி ஏழரை ஆகிறது. இன்னும் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள். கனவில் யாரோ கல்லூரி மாணவனா என்று கேட்பதாக வந்தது. சில நாட்களாகவே தூங்குவதற்கு முன்பு தியானம் செய்வது நின்று போயிருக்கிறது. பழக்கங்களை ஆண்டுகள் கடந்து தொடர்வது எவ்வளவு சிரமமாக இருக்கிறது. இப்போது கூட எழுதுவதை வலுக்கட்டாயமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.
அடுத்தவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்து எழுதினாலே எழுத்தின் போக்கும் உள்ளடக்கமும் பெரிதும் மாறி விடத்தான் செய்கிறது.
வலைப்பதிவின் மூலம் மனதைக் கொட்டி வைத்து விட, பலரின் மனதைத் தொட்டு விட முடிகிறது. அதிகம் சந்தித்திராத பலர் நெடுநாள் நெருக்கத்துடன் பேசும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எழுத்துக் குறிப்புகளைப் படித்தார்களா என்று எனக்குத் தெரிவதில்லை. ஆனால் அவர்களுக்கு மன நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது.
இன்னொரு கனவில் வீட்டு வேலைகள் செய்வது போலவும், மாட்டி வைத்து விட்டீங்களே என்று புலம்புவதும் தெரிகிறது. பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசி விட்டுத் தன் வீட்டில் இப்படி ஆணாதிக்கத்தை செயல்படுத்துவது என்ன நியாயம் என்று சண்டை போடுகிறேன். வீடு என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். பெருசா கவிதை மட்டும்தான் எழுத முடிகிறது என்று சொல்லி முடிக்கிறேன்.
பெண்கள் அப்படி இருப்பதைத்தான் விரும்புகிறார்கள், அவர்களுக்கு எது நல்லது என்று அவர்களுக்குத் தெரியாதா என்றும் ஒரு வாதம் மனதில் முளைத்தது. வீட்டுக்கு ராணி, சமையலறைக்கு தலைவி, வெளியில் போய்ப் பழகத் தெரியாத மென்மை நிறைந்தவள் என்று போற்றிப் பாதுகாத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும். அதுதான் நியாயமான முறையா? பெண்மை என்பது வீட்டுக்குள் ஒடுங்கி இருப்பதாகத்தான் விளங்க வேண்டுமா?
முன்னறையில் உட்கார்ந்து கொண்டு மனைவியை பஜ்ஜியும் காபியும் போட்டுக் கொண்டு வர அதிகாரம் செய்து கொண்டிருப்பதுதான் ஆண்மையா? வேண்டுமென்றால் தனிமையில் தாஜா செய்து கொண்டு விடலாம். அப்படி வீட்டில் எலி வெளியில் புலி என்று இரட்டை வாழ்க்கைதான் மனிதமா!
உண்மையிலேயே தெரியவில்லை. மனதுக்குச் சரி என்று பட்ட வழியில் தொடர்ந்து போய்க் கொண்டே இருப்போம். அதனால் பல தொல்லைகள் வரலாம். ஆனால் அதற்காக தருமத்தைக் கைவிட்டு விடக் கூடாது.
எனக்கு எது நல்லதாக நன்மையாக இருக்கிறதோ அது பொருந்தத்தான் செய்யும். அளவுக்கு மிஞ்சிய பணம் கைவசம் வரும் போது, உழைக்காமல் பணம் கைவசம் வரும் போது ஏற்படும் பாவ எண்ணங்களை நான் அனுபவித்திருக்கிறேன். சாங்காயில் இருக்கும் போது மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பளத்தொகை வங்கியில் சேர்க்கப்பட்டு விடும். பணம் இல்லை என்று என்றைக்கும் உணர்ந்ததே இல்லை. சொல்லப் போனால், யாருக்கோ கண்களைக் கட்டித்தான் எனக்கு அந்த வாய்ப்பே கிடைத்தது.
இடையில் இருந்த பூசலுக்கு நடுவே நான் சாங்காய் போய்ச் சேர்ந்தேன். அங்கு போனதும் எதுவும் செய்யாமல் இருந்தாலும் 2 ஆண்டுகள் ஓட்டி அடைக்க முடிந்தது. அதைக் காட்டி வேலை பெற்று அடுத்த 2 ஆண்டுகள் ஓட்டினேன்.
அந்தக் கடன்களை எப்போது திரும்பி அடைக்கப் போகிறேன். பெய்ஜிங் பார்க்க வேண்டும் என்று அலுவலகப் பயணத்தையும் பெய்ஜிங் பயணத்தையும் சேர்த்து ஏற்பாடு செய்தேன். என்னுடைய நன்னடத்தைகளில் பெருமளவை பலி கொடுத்து சீரழிந்து கொண்டேன்.
சீனாவின் மூலை முடுக்குளுக்கெல்லாம் போய் வந்திருக்கிறேன். உறுப்பினர்களாக தோல் நிறுவனங்களைச் சேர்ப்பதற்காக தென் சீனாவிலும், வட சீனாவிலும், கிழக்கு சீனாவிலும் காலணி தேய அலைந்திருக்கிறேன். தோல் விற்க வென்சோ முதலான இடங்களில் ஓடி அலைந்திருக்கிறேன். அப்படி முயற்சி என்ற வகையில் பார்த்தால் கொடுத்த பணத்தில் பாதிக்கு வேலை பார்த்திருப்பேன். ஆனால் விளைவுகள் என்று பார்த்தால் எதுவும் உருப்படியாக இல்லைதான்.
இன்னும் 24 நிமிடங்கள் இருக்கின்றன. அப்படியே சரிந்து தூங்கி விடலாம் என்று உந்துதல். அப்படியே உட்கார்ந்த வாக்கில் கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டேன். சாப்பிடும் பொருளில்தான் என்னுடைய இயக்க உந்துதல் இருக்கிறது. கண்டதை திணித்துக் கொண்டிருந்தால் கண்டபடிதான் வாழ்க்கையும் ஓடும்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நேரம் அமைத்துக் கொண்டும் இப்போது 1200 சொற்கள்தான் வந்திருக்கின்றன. வியாழக்கிழமை காலையில் ராணிப்பேட்டைக்கு. இரண்டு பேர் சுற்றுப் புறசூழல் குறித்து தணிக்கை செய்ய வந்திருந்தார்கள். இறுக்கம் தளர்ந்தது மட்டும்தான் ஒரே பலன்.
அந்த ஆவணத்தில் முத்திரை நன்றாகவே தெரிந்தது. நான் சேரும் போது முதன் முதலில் பார்க்கும் போதே சரியா எடை போட்டிருப்பான். உள் அரசியலுக்காக, தன் பக்கம் சேர்த்துக் கொள்வதற்காக என்னை ஆதரித்திருப்பான். இரண்டு ஆண்டுகளில் செலவு வைத்து விட்டு நான் என்னுடைய பணியை முடித்துக் கொண்டிருந்தேன்.
இதை முடித்து விட்டு வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும். 1318 சொற்கள் ஆகி விட்டன. இன்னும் ஏழெட்டு நிமிடங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இன்னும் 5 நிமிடங்கள் இருக்கின்றன.
இனிமேலாவது கொஞ்சம் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டே வேலைகளில் இறங்க வேண்டும். காலையில் தினத்தந்தியும் எகனாமிக் டைம்சும் வருவது மோசமான சேர்க்கையாக இருக்கிறது. காலைப் பொழுதை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டு விடுகின்றன. தினத்தந்தியின் செய்திகளை செரித்துக் கொள்ளும் திறன் எனக்கு இல்லையோ!
பக்கத்து கட்டிடத்தில் முதல் மாடியில் அடம் பிடிக்குப் பெண் குழந்தையின் குரல் கேட்கிறது. பல நாட்களாக காணவில்லை. அப்படித்தான் அடம் பிடிப்பாள். திட்டும், அடியும் வாங்கி அதை விட்டு ஒழித்தாள். அதை எல்லாம் ஆழப்புதைத்து விட்டு இப்போது மென்மையும் நளினமும் நிறைந்த பெண்ணாகி விட்டிருக்கிறாள்.

ஞாயிறு, நவம்பர் 16, 2008
மீண்டும் தட்டுத் தடுமாறி எழுந்து....
நேற்று இரவு வீட்டுக்குத் திரும்பும் போது நல்ல மழை. மழையில் நனைந்து கொண்டே வரும் போது சோர்வு கலக்காத உறுதி காட்டும் புலம்பல்கள். குளிர் உடலை நடுக்கிக் கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்து குளிர்ந்த தண்ணீரில் குளித்து முடித்தேன். தூக்கத்தைக் குறைக்க வேண்டும், உணவைக் குறைக்க வேண்டும்.
நேற்றுக் காலையில் வீட்டில் பிசுகட்டுகள், ஆர்லிக்சு. அலுவலகத்தில் சந்திப்பு முடிந்த பிறகு டாடா உடுப்பி விடுதியில் இட்லிகளும் பூரியும். மற்றவர்கள் எல்லாம் இட்லியோடு நிறுத்துக் கொண்டாலும் எனக்குப் பூரியும் வேண்டியிருந்தது. மதியம் காலை உணவாக வந்த சேமியா உப்புமாவுடன் கொஞ்சம் சாம்பார் சோறு.
மாலை தாம்பரத்துக்குப் போகும் வழியில் 10 ரூபாய்க்கு லிட்டில் ஆர்ட்சு பிசுகட்டுகள், தாம்பரத்திலிருந்து திரும்பும் போது முறுக்குப் பொதி ஒன்று வாங்கி நொறுக்கி முடித்தேன். நூடுல் கிங் என்ற விடுதியில் காய்கறி சூப்பு, நூடுல்ஸ் சாப்பிட்டிருந்தேன். அவருடனேயே பேருந்தில் ஏறி வடபழனியில் இறங்கி காபி. கூட எதுவும் சாப்பிட ஆரம்பித்து விடாதது மறுப்பினால்தான். அங்கிருந்து கோயம்பேடு போகும் பேருந்தில் ஏற்றி விட்டு விட்டு, நான் 37G பிடித்து வளசரவாக்கத்தில் இறங்கிக் கொண்டேன். மழை தூறிக் கொண்டே இருந்தது.
பல நல்ல பழக்கங்களை வேலை மும்முரத்தில் கைவிட்டிருக்கிறேன். ஆரம்பிக்க வேண்டும். வழக்கமாகச் செய்யும் அலுவலக வேலைகளைத் தவிர்த்து வாரத் திட்டமிடலில் மற்ற நடவடிக்கைகளுக்கும் தவறாமல் நேரம் ஒதுக்க வேண்டும்.
காலைப் பொழுது: (மொத்தம் வாரத்துக்கு 6 மணி நேரம்)
1. உலாவப் போதல் - 20 நிமிடங்கள், வாரத்துக்குக் குறைந்தது 3 நாட்கள் - மொத்தம் 1 மணி நேரம்
2. வீட்டை ஒதுங்க வைத்தல் - 20 நிமிடங்கள் வாரத்துக்கு 6 முறை - மொத்தம் - 2 மணி நேரம்
3. நாட்குறிப்பு எழுதுதல் - 20 நிமிடங்கள் வாரத்துக்குக் குறைந்தது 9 முறை. ஒரே நாளில் 1 மணி நேரம் எழுதி விட்டால் 3 தவணைகள் முடிந்து விடும். - மொத்தம் - 3 மணி நேரம்
இணையம் (வாரத்துக்கு மொத்தம் 19 மணி நேரம்)
1. மடற்குழுக்களின் மடல்களைப் படித்தல் - வாரத்துக்கு 10 மணிநேரம்
2. விவாதக் குழுக்களில் எழுதுதல் - வாரத்துக்கு 3 மணி நேரம்
3. வலைப்பதிவுகளில் எழுதுதல் - வாரத்துக்கு 3+3 மணி நேரம்
கணினி (வாரத்துக்கு மொத்தம் 10 மணி நேரம்)
1. புதிய தொழில் நுட்பங்களை முயற்சித்தல் - வாரத்துக்கு 10 மணி நேரம்
பணி (வாரத்துக்கு மொத்தம் 20 மணி நேரம்)
1. வாடிக்கையாளர் அறிக்கைகளைப் பார்வையிடல் - ஒரு வாடிக்கையாளருக்கு வாரம் 2 மணி நேரம் - மொத்தம் 14 மணி நேரங்கள்
2. ஒன்றுக்கொன்று பேசுவது - வாரத்துக்கு 3 மணி நேரம்
3. முதலீட்டாளர்கள் தொடர்பு - வாரத்துக்கு 3 மணி நேரம்.
இவ்வளவும் செய்வதற்கு வாரத்துக்கு 45 மணி நேரங்கள் தேவைப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நான் என்னதான் செய்து கொண்டிருக்கிறேன்? வாடிக்கையாளர்களை சந்திக்கப் போவது கூட்டங்களில் கலந்து கொள்வது இவற்குக் 30 மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்துக்கு 168 மணி நேரங்கள் இருக்கின்றன. நேரு ஒரு கட்டத்தில் நாளைக்கு 2 மணி நேரம் கூடத் தூங்காமல் பயணம் செய்து மக்களை சந்தித்துக் கொண்டிருந்தாராம். நாமெல்லாம் எவ்வளவு பெரிய சோம்பேறிகளாக இருக்கிறோம்.
ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூக்கம். இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை போதும். வாரத்துக்கு 28 மணி நேரங்கள் அதில் போய் விட 140 மணி நேரங்கள் எஞ்சியிருக்கும்.
அதில் மேலே குறிப்பிட்ட முக்கியமான ஆனால் அவசரமில்லாத வேலைகளைச் செய்ய 45 மணி நேரங்களைக் கழித்துக் கொள்ளலாம். 95 மணி நேரங்கள் எஞ்சியிருக்கின்றன. வாடிக்கையாளர் சேவைக்கான நேரம் 30 மணி நேரம் 65 மணி இருக்கின்றது. அதில் காலைக்கடன்கள், குளித்தல், துணி துவைத்தல் என்று ஒரு நாளைக்கு 3 மணி நேரம் எடுத்துக் கொண்டாலும் 44 மணி நேரங்கள் மிஞ்சியிருக்கின்றன. இவற்றில் அவசர வேலைகள், நண்பர்கள் உறவினர்களின் வேலைகள் என்று முடித்து விடலாம்.
ஒரு நாளைக் கூட இப்படிப் பிரித்துக் கொள்ளலாம். அடிப்படைத் தேவைகளுக்கான பணிகள், தூக்கம், வாடிக்கையாளர் சேவை, வருங்கால முன்னேற்றப் பணிகள் என்று நான்காகப் பிரித்து நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வேலையை இன்னொரு வேலை நெருக்கி வெளியேற்றி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கமும் வேண்டும், உடற்பயிற்சியும் வேண்டும், துணிகளை துவைப்பதும் வேண்டும்.
இப்போது கூட சோர்வு கண்களைத் தழுவுகிறது. தூங்கி எழுந்த பாயின் மேலேயே தலையணையில் சாய்ந்து கொண்டு கணினியில் எழுதிக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?
நேற்றைக்கு பேசிக் கொண்டிருக்கும் போது நாம் எவ்வளவு செய்யாமல் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது உறைக்க ஆரம்பித்தது. நான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முழு நேரமும் உழைத்துக் கொண்டிராமல், கொஞ்சம் எதிர்கால சிந்தனையையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
நேற்று சந்திப்பில் பணம் இல்லை, சம்பளம் கிடைக்கவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போது குறைந்தது அணியில் பாதிப் பேரை மில்லியனர்களாக மாற்றுவேன் என்று எழுதியது கொஞ்சம் நகைப்பிற்கிடமாகத்தான் போனது. ஆனால், எல்லோருக்கும் அது மனதில் புகுந்திருக்கும். நாளைக்குக் காலையில் சந்திப்பின் போது கொஞ்சம் அந்தத் திசையில் தயாரித்தத் திட்டங்களை விளக்க முயற்சிக்க வேண்டும். எல்லோரும் தத்தமது திட்டங்களை விளக்கி முடித்த பிறகு நாம் களத்தில் இறங்க வேண்டும்.
நேற்று மாலையில் தொலைபேசியில் சண்டை போட்டுக் கொண்டே பலவற்றைக் கோட்டை விட்டேன். அப்பாவை வழியனுப்ப நேரத்துக்குப் போய்ச் சேர முடியாமல் தவற விட்டேன். மின்னஞ்சல் அனுப்பாமல் இருந்து விட்டேன். பணம் கேட்டு நினைவூட்டல் அனுப்பாமல் இருந்து விட்டேன்.
தொலைபேசிய போது அவர் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி அதன் பிறகு அழைப்பு வரவேவில்லை. வாடிக்கையாளர் சேவைக்காக பயணிக்கும் திட்டத்தை மற்றவர்கள் தயாரிக்கா விட்டால் நாமே தயாரித்து அனுப்ப வேண்டும்.
நீ பார்க்க விரும்பும் மாற்றமாக மாறு என்ற அண்ணல் காந்தியின் வாக்கியங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். யார் யாரிடம் என்னென்ன செய்யச் சொல்லியிருக்கிறேனோ, அந்த பணியின் அடிப்படை சுமையையும், அடித்தளம் போடும் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நேற்றைக்கு இவ்வளவு காலமாக சரியா திட்டமிடாமல் பணி புரிந்தோமா என்று கேட்ட வுடன் எனக்கும் கோபம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்துதானே சொதப்பினோம் என்று சூடாக பதிலளிக்க ஆரம்பித்ததை, அமைதிப் படுத்தினார். எனது பலவீனம் வெளிப்பட்ட தருணம் அது.
காசு இருக்கும் கொழுப்பில் டாடா உடுப்பி ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டோம். சின்ன விடுதிகளில் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அவர் பேரைச் சொல்லி ஆறு பேரையும் டாடா உடுப்பி ஓட்டலுக்குள் இழுத்து விட்டேன். 6 பேருக்கு 154 ரூபாய்கள்தான் கட்டணம் வந்தது. ஆளுக்கு 25 ரூபாய்கள்.
இன்றைக்கு தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கி விட வேண்டும். ஒரு நிறுவனத்தை நடத்திச் செல்ல எவ்வளவு சுமைகளைத் தாங்க வேண்டியிருக்கிறது. அந்தச் சுமைகளைத் தாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்மால் கொடுக்கப்படும் சேவையை செவ்வனே வழங்கி சுமை இறக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளிக் கிழமை சாப்பிடாமல் இருக்கலாம் என்ற முடிவு பாதியில் முடிந்து போனது. காலையில் 2 தோசைகள், மதியம் சந்திக்கக் காத்திருக்கும் போது டவுட்டன் கபேயில் மதிய உணவு. அதன் நிர்வாகிகள் மலையாளிகள். ஏதோ வட இந்தியர்களாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். இரவு வீடு திரும்பும் வழியில் துர்கா விடுதியில் இட்லிகள் - 8 இட்லிகள். ஆர்லிக்சு, பிசுகட்டுகள் வாங்கி அவற்றையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
நேற்றைக்கு அளவுக்கு மீறிய உறக்கம். நிறைய சாப்பிடவும், தூங்கவும் உந்துதல் இருக்கும். அவற்றை எதிர்த்து நீச்சல் போட்டால் உந்துதல் குறைந்து போகும்.
காரில் வந்து பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில் ஏற்றிக் கொண்டார்கள். சாப்பாட்டை எவ்வளவு முதன்மையாக வைத்துச் சாப்பிட்டார்கள் இரண்டு பேரும். எனக்கும் வாய்க்கு ருசியான உணவை அப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.
எழுத ஆரம்பித்து 1 மணி நேரம் ஆகி விடவில்லைதான். 927 சொற்கள்தான் ஆகியிருக்கின்றன. கணினியை இயக்கி 53 நிமிடங்கள்தான் ஆகியிருக்கின்றன. கணினி இயங்கத் தொடங்கி சிறிது நேரம் கழித்துதான் எழுத ஆரம்பித்தேன். இடையில் வாரத் திட்டமிடல் தாளையும் நிரப்பிக் கொண்டிருந்தேன். இப்போது 7.41 ஆகிறது. 8 மணி வரை எழுதினால் சரியாக இருக்கும்.
இதை முடித்து விட்டு படுக்கையை மடித்து வைத்தல், செய்தித் தாள்களை அடுக்கி வைத்தல், பாத்திரங்களை தேய்த்து வைத்தல் முடித்து விட்டு 20 நிமிடங்கள் உலாவப் போக வேண்டும். திரும்பி வந்து குளித்து, தியானம் செய்து விட்டு அலுவலகத்துக்குப் போக வேண்டும்.
காரின் மின்கலனை செப்பனிடக் கொடுக்க வேண்டும். சுகூட்டியை பராமரிப்பு சேவைக்குக் கொடுக்க வேண்டும். சமுராயையும் பராமரிப்புச் சேவைக்குக் கொடுக்க வேண்டும். காரின் உபரிச் சக்கரத்தை மாற்ற வேண்டும். முன்பக்கம் இடிபட்டதை நிமிர்த்த வேண்டும். சுகூட்டி, சமுராய், கார் மூன்றுக்கும் காப்பீடு ஏற்பாடு செய்ய வேண்டும். கார் ஓட்டுவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. பொறுப்புகள் இல்லாமல் இருக்கும் என்னிடம் சமூகக் கடமைகள் நிறைய இருக்க வேண்டும்.
தூக்கமும் சோர்வும் தழுவத் துடிக்கின்றன. வெளியில் பாய் விற்பவரின் அழைப்பு தெருவில் கேட்கிறது. இப்போது உரக்கவே கேட்கிறது. படுத்து அப்படியே தூங்கி விடலாமா என்று துடிக்கிறது. தவிர்த்து விட வேண்டும். அதிகமாகத் தூங்கத் தூங்க களைப்புதான் அதிகமாகும். நேற்றைக்கு இரவே தூங்காமல் நாட்குறிப்பு எழுதி விட்டுத்தான் படுக்க வேண்டும் என்று நினைத்திருந்து விட்டு தியானம் முடித்தவுடன் தூங்கி விட்டேன். 4 மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று திட்டமிட்டு விட்டு விழிப்பு வந்தும் ஆறரை மணி வரை தூங்கிக் கொண்டிருந்தேன். நமது தீர்மானங்களை நாமே மதிக்காமல் இருந்தால் எப்படி?
இப்போது 8 மணி வரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தபடி எழுத வேண்டும். எங்கோ அரவை எந்திரம் அடம் பிடிக்கும் ஓசையுடன் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ பளு அதிகமான பொருளை அரைக்கிறார்கள். அரிசி போட்டு தண்ணீர் நிறைய ஊற்றி அரைப்பது போலப் படுகிறது. மின்கலனில் மின்னூட்டமும் இறங்கியிருக்கிறது.
காதல் பறவைகளின் கிச் கிச் சத்தம் காலையில் எழுந்தது முதலே ஆரம்பித்து விடுகிறது. அரைப்பு நின்றிருக்கிறது. முழுவதும் முடிந்து விட்டதா என்று உறுதி இல்லை.
உலாவப் போகும் போது வேப்பங் குச்சியால் பல் துலக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதையும் விட்டு விட்டிருக்கிறேன். அரவை எந்திரம் மீண்டும் ஆரம்பித்து விட்டது. நின்றும் போய் விட்டது. ஈர அரவை எந்திரத்தில் இவ்வளவு ஓசை எழும்புவதில்லை.
நிறுவனம் தொடங்கிய துடிதுடிப்பில் இருக்கிறார். 90000 ரூபாய் வரும் வேலையை விட்டு விட்டு மாதா மாதம் 20000 ரூபாய் கூட கிடைக்காத முயற்சியில் இறங்கியிருக்கிறார். 2 லட்சம் ரூபாய் வருமானம் வந்தால், தனக்கு 1 லட்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார். செய்தும் காட்டி விடுவார்.
தமிழுக்கு தமிழர்களுக்கு என்று வணிகத் தொடர்பு தளம் ஒன்றை அமைக்கலாமே என்று கேட்டுக் கொண்டேன். நீண்ட கால நோக்கில் எந்த வழியில் போகப் போகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். இன்றைக்கு உலகத் தமிழர் தொழில் கூட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்து விடலாம். பிஎச்பி, போஸ்ட்கிரெஸ்குயெல் பயன்படுத்தி வேலையை ஆரம்பித்து விட வேண்டியதுதான். வடிவமைப்பு தமிழரின் மனப்பாங்குக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். தமிழரின் தொழில் முனைவை தளமாகப் பயன்படுத்தி பொருள் ஈட்டும் முயற்சியாக இருக்க வேண்டும். பயிர் திட்டத்தைப் போல நடைமுறைக்கு ஒவ்வாத மொழிப்பற்றை விடுத்து நடைமுறையில் என்ன சாத்தியம் என்பதை மட்டும் பார்த்து செய்ய வேண்டும்.
நேரமும் முடியப் போகிறது. எழுந்து பணிகளை பார்க்க ஆரம்பிக்கலாம். 1325 சொற்கள் முடிந்திருக்கின்றன.

வெள்ளி, நவம்பர் 14, 2008
சில சிந்தனைகள்
நவம்பர் 14, நேரு பிறந்த நாள். குழந்தைகள் தினம். சோகம் வருவது நின்று போயிருக்கிறது. தீர்க்க முடியாத வருத்தம் மட்டும் மிஞ்சியிருக்கிறது.
என்னுடன் வாழ ஆரம்பிக்க வேண்டுமானால் துறவிகளாக சேவை வாழ்க்கை தியாக வாழ்க்கைக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். அதுதான் சரியான வாழ்க்கை என்று எனக்குத் தோன்றுகிறது. பார்க்கலாம்!
வரையறைகள் தெளிவாகப் புரிந்து விட்டிருக்கும். எந்த அளவுக்கு ஆட்டுவிக்க முடியும் என்பதின் எல்லை தெரிந்து விட்டது. தீபாவளிக்கு துணி எடுக்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தது என்ன நோக்கத்தில் என்று தெரியவில்லை. பண்டிகை நாளில் தனியனாக இருப்பானே என்ற பரிதாபத்திலா அல்லது நமக்கும் வீட்டுக்காரர் துணி எடுத்துக் கொடுத்தார் என்று நிறைந்து கொள்வதற்காகவா என்று தெரியவில்லை. எது எப்படியோ பிடிக்க நினைத்த பிள்ளையார் குரங்காகத்தான் முடிந்தது.
எல்லோரும் தனி மனிதர்கள்தாம். விலங்குகளாகப் பிறந்திருந்தால் இது போன்ற உறவுகள், பாசம், நேசம் என்பதற்கு எந்தவிதப் பொருளும் இல்லாமல் போயிருக்கும். சமூக நெறிகளுக்கு உட்பட்டு, பரம்பரை பரம்பரையாகப் பழக்கப்பட்ட நடத்தைகளின் தாக்கத்தில்தான் பற்றுதலும், உரிமைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.
என்னைப் பெற்றவர் என்பதற்காக என் அம்மாவிடம் நான் எதையெல்லாம் உரிமையாக எதிர்பார்க்கிறேன்! எதுவுமே செய்யாமல், எப்போது கூப்பிட்டாலும் மகிழ்ச்சியுடன் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பு. ஏனென்றால், அவர்கள் என்னைப் பெற்ற அம்மா! ஒரு உயிரினமாக சாப்பிடவும், தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் நினைப்பதுதான் அடிப்படையாக இருக்க முடியும். அதற்கு மேல் நடப்பதெல்லாம் சீட்டுக்கட்டு மாளிகைதான்.
தனது பசி, தேவைகள், விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதுதான் முதன்மை உந்துதலாக இருக்க வேண்டும். அதற்காக அடுத்தவர்களை எந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளவும் தயங்குவதில்லை. அந்த முதன்மை விருப்பங்களை யாருக்காக தியாகம் செய்ய வேண்டும்? அதை எதிர்பார்ப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது எனக்கு?
அடுத்தவர்களை தனது கருவிகளாகப் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்பார்ப்பது தவறில்லைதான். ஒரு சமூக ஒப்பந்தத்தின் பேரில்தான் நாம் மற்றவர்களுடன் பழகிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமது உழைப்பை தமக்கு சாதகமாக மட்டும் பயன்படுத்திக் கொள்ள முனைவது ஏற்புடையது இல்லைதான்.
நமது உழைப்பின் செலாவணிதான் பணம் என்பது தெளிவாகப் பதிந்திருக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு ரூபாயையும் இழுத்துப் பிடிக்கிறாள். வேலை செய்யும் அம்மாவுக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் கொடுத்தால் அதற்கு ஏற்ற வேலையை வாங்கி விட முயற்சிக்கிறாள். எனக்கு பணம் என்ற கோட்பாட்டில் இருக்கும் ஓட்டை தெரிகிறது.
ஒருவரிடம் 2000 ரூபாய்கள் இருந்தால் அந்த அளவுக்கு அவர் பணி செய்து அதை ஈட்டியிருக்கிறார் என்ற கோட்பாடு முழுமையாக சரி என்று இருப்பதில்லை. சிலரிடம் எந்த வேலையும் செய்யாமலேயே பணம் போய்ச் சேர்ந்திருக்கலாம். தமது புரட்டு நடவடிக்கைகளால் அடுத்தவர்களின் உழைப்புக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தை சுரண்டிச் சேர்த்திருக்கலாம். அவர்கள் தாம் கொடுக்கும் பணத்துக்கு சக மனிதர்களை உழைக்கச் சொல்வது அடாவடியாகப் படுகிறது.

ஞாயிறு, நவம்பர் 09, 2008
ஓடாத ஓட்டம்
ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி. சின்ன வயதில் குடை ராட்டினம், சுற்றுலாவில் பெரிய ராட்டினம் இவற்றிலெல்லாம் ஏறி சுற்றியதில்லை. தலை சுற்றும், பயமாக இருக்கும் என்று அதில் ஏறுவதற்கு கேட்டது கூட கிடையாது. வளர்ந்த பிறகும் அதே நிலைதான். ஒரு முறை சீனாவில் எங்கோ வெளியில் போன போது கைக் குழந்தையாக இருந்த மகனோடு ஏற வேண்டியிருந்தது. நான் தைரியமான அப்பாவாகி விட்டிருந்தேன். குழந்தை அழுது தீர்த்து விட்டான்.
ஒரு முறை கிஷ்கிந்தா போகும் போது தண்ணீரில் வேகமாக கீழே விழுவது போன்ற விளையாட்டுக்கும் போயிருந்தோம். அந்த உணர்வு மங்கலாகவே நினைவிருக்கிறது. போன வாரம் அப்படிப்பட்ட ஒரு உணர்வு. வேகம் வேகம், வேகம். நிற்க நேரமில்லாத, நின்று நிதானிக்க முடியாத ஓட்டம். இப்படி இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் நிலைமை சரியாகும் வரை வாரத்துக்கு 7 நாட்கள், நாளுக்கு 14 மணி நேரம் வேலை செய்வது என்று ஒரு நினைப்பு வந்து விட்டிருந்தது. அந்த தம் பிடித்து ஓட்டம் ஆரம்பித்து விட்டிருந்தது.
நேற்றைக்குக் காலையில் எழுந்திருக்கும் போது காலை 5 மணி. மூன்றே முக்காலுக்கு விழிப்பு வந்தாலும், கொஞ்ச நேரம் கூடுதல் தூங்க முயன்று இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. 4 மணிக்கு எழுந்து 5 மணிக்கு பேருந்தைப் பிடித்து விடுவேன் என்று சொல்லியிருந்தேன். வியாழக்கிழமை இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து ராணிப்பேட்டை தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்தேன். காலையில் 11 மணிக்குக் கிளம்பி சென்னை. நேராக வீட்டுக்குப் போய் குளித்துப் புறப்பட்டு 3.30 மணி சந்திப்புக்கு இரண்டரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம்.
மூன்றரை மணிக்கு சரியாக போய்ச் சேர்ந்து விட்டாலும், 4 மணிக்கு மேல்தான் பேச்சு ஆரம்பித்தது. நிறுவனத் தலைவர் வெளியில் கிளம்பிப் போய் விட அவரது மகனுடன் ஒரு மணி நேரம் விவாதம். ஆறு மணிக்கு மேல் வெளியில் வந்தோம். வேலை முடிந்திருக்காவிட்டால், நான் மாலையில் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன். தொலைபேசினால், நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று போயிருந்த தோழர்கள் சொன்னார்கள்.
சந்திப்புக்குக் கூட வந்த நண்பர் அவர் வீட்டுக்குப் அழைத்துப் போவதாகச் சொன்னார். பெரம்பூர். அங்கு சாப்பிட்டு விட்டு அவரே வண்டியில் கொண்டு வளசரவாக்கத்தில் விட்டார். அலுவலகத்தில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு 10 மணிக்கு வீடு திரும்பியிருந்தேன். இவ்வளவுக்கும் கொஞ்சம் அதிகமாகத் தூக்கம் வரத்தான் செய்யும். ராணிப்பேட்டையிலிருந்து சென்னைக்குக் காரில் வரும் போது தூங்கியிருந்தது கொஞ்சம் உதவியாக இருந்தது.
நேற்றைக்குக் காலையில் எழுந்ததும் தேவையான வேலைகளை மட்டும் முடித்து விட்டுக் கிளம்பலாம் என்று முடிவு. பல் தேய்த்து, குளித்து, தியானம் செய்யாமலேயே கிளம்பி விட்டேன். இரு சக்கர வண்டியை அலுவலகத்தில் விட்டு விட்டு, பையை எடுத்துக் கொண்டு போகலாம். அலுவலகத்துக்கு வரும் போது 6 மணி ஆகியிருந்தது. பையை எடுத்துக் கொண்டு கீழே வந்து காரை இயக்கிப் பார்த்தால் நகரவே இல்லைதான்.
பேருந்தில்தான். சாலைக்கு அருகில் வரும் போது மசூதியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர் இரவில் அலுவலகத்திலேயே தங்கிக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்கள் விடுமுறையாம்.
வந்து கொண்டிருந்த பேருந்து அங்கேயே கை காட்டலுக்கு நிறுத்தவில்லை. பேருந்து நிறுத்தத்தில் போனதும் குன்றத்தூர் பேருந்து வந்தது. இந்தத் தடப் பேருந்துகளில் மட்டும் போரூர் போவதற்கு 3 ரூபாய் கட்டணம். மற்ற பேருந்துகளில் 2 ரூபாய்தான். போரூர் சாலை நிறுத்தம் தாண்டி நிறுத்தினார்கள். இறங்கி அருகிலிருந்த நாளிதழ்கள் விற்கும் கடையில் டைம்ஸ் ஆப் இந்தியா வாங்கிக் கொண்டு வேலூர் போகும் பேருந்துகள் நிற்கும் இடம்.
நிறைய பேர் காத்திருந்தார்கள். வெகு நேரமாக பேருந்துகள் எதுவும் வரவில்லை போலிருக்கிறது. ராணிப்பேட்டை போகும் தகவலை குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு நின்றிருந்தேன். ஓசூர் போகும் பேருந்தில் வாலாஜாவுக்கு போகாது என்று தடுத்தார். ஆற்காடு புறவழிச்சாலையில் விட்டு விடுமாறு ஏறிக் கொண்டேன். 46 ரூபாய்கள் கட்டணம்.
கடைசி இருக்கையில் இடம் வசதியாக இல்லை. அதற்கு முந்தைய இருக்கை. வாசலுக்கு நேராக, பாதுகாப்பு கம்பி வைத்த இருக்கை. மூன்று பேருக்கு நெருக்கடியாக இருக்கும். போதாத குறைக்கு கால் வைக்கும் இடத்தில் ஒரு உருளையைப் போட்டு வைத்திருந்தார்கள். நடைபாதை அருகிலான இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.
பேருந்துகளில் வர வர உட்கார கால் வைக்கும் இடம் குறைந்து கொண்டே போகிறது. அதிகமான இருக்கைகளைத் திணிக்கும் முயற்சியில் பயணிகளை வசதிக் குறைவுக்கு ஆளாக்குகிறார்கள். கடைசி இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒருவர் உரக்க இதைச் சொல்லி நடந்துனரை கடிந்து கொண்டார். 'போய் நிர்வாகத்துக்குச் சொல்லு, இப்படி போட்டிருந்தா காலை எப்படி வைத்துக் கொண்டு போவது'.
குறைந்தது வெளியூர் போகும் பேருந்துகளிலாவது குறைந்த பட்ச இடவசதிகள் தர நிர்ணயம் செய்ய வேண்டும். பூவிருந்தவல்லியில் நிறைய பேர் ஏற இருக்கையின் மூன்றாவதாக நடுவில் உட்கார இளைஞர் சேர்ந்து கொண்டார். நல்ல வேளையாக மூன்று பேருமே ஒல்லியாக இருந்ததால் அவ்வளவு தொல்லையாக இருக்கவில்லை. நான் எனது பையை மடியில் வைத்திருக்க பூந்தமல்லியில் ஏறியவரும் அவரது பையை மேலே வைக்காமல் மடியில் வைத்திருந்தார். அவருடன் ஏறிய இன்னொருவர் தனது பையையும் இருக்கையின் அடியில் கால் வைக்கும் இடத்துக்கு அருகில் வைத்து விட முயன்றார். இருக்கையை ஒட்டி வைத்து விட்டார். அவரிடம் சொல்லி அதை இடம் மாற்றிக் கொள்ளக் கேட்டுக் கொண்டேன்.
கால் வலி எல்லாம் வந்து விடவில்லை. ஒவ்வொரு ஊருக்கு அருகில் வரும் போது புறவழிச்சாலையில் நிறுத்தி ஆள் இறக்கிக் கொண்டிருந்தார் நடத்துனர். தியானம் 20 நிமிடங்கள், நாளிதழ் படிப்பது என்று நேரம் போய்க் கொண்டிருந்தது.
வாலாஜாவில் கட்டண மையம் தாண்டியதும் பேருந்தை ஓரம் கட்டி நடத்துனர் கழிவறைகளை நோக்கி ஓடினார். பயணிகளில் பலரும் இறங்கி பேருந்துக்கு அருகிலேயே ஒதுங்க ஆரம்பித்தார்கள். வாலாஜா போக ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்தால் எதுவும் இல்லை. சில நிமிடங்களில் பேருந்தும் கிளம்பி விட்டது.
கே எச் அருகில் இரண்டு பேர் இறங்கினார்கள். என்னை ஆற்காடு புறவழிச்சாலை அருகில் இறக்கி விடுவாரா என்று உறுதி செய்து கொண்டேன். அங்கு இறங்கி தொலைபேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பேருந்து வந்தது. பேர் பலகையை பார்க்காமலேயே ஏறிக் கொண்டேன். நல்ல வேளையாக ராணிப்பேட்டை போகும் வண்டிதான். அதன் பின்னால் வந்து தனியார் பேருந்துக்கு வழி விட்டு இந்த அரசுப் பேருந்து சமர்த்தாக ஓட்டிப் போனார் ஓட்டுனர்.
ராணிப்பேட்டை, அடுத்தது முத்துக்கடை. முத்துக் கடையில் கற்பகம் விடுதியில் ரவா தோசை, 2 இட்லிகள், சர்க்கரை குறைவாக கடுப்பம் குறைவாக ஒரு காபி குடித்து விட்டு (31 ரூபாய்கள்), ஆட்டோ - 30 ரூபாய்கள் கேட்டார். போகும் சாலை குண்டும் குழியுமாக இருந்தது.
இரண்டு பேரும் பல சிக்கல்களுக்கு விடை கண்டு பிடித்து வைத்திருந்தார்கள். நான் உட்கார்ந்து அவர்களிடம் விபரங்களைக் கேட்டு விட்டு பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அவர்கள் கிளம்பி விட்டார்கள். ஒவ்வொருவராக சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் என்றார்.
மடிக்கணினியில் வலை இணைப்பு கிடைக்கவில்லை. உள்ளுறை இணைப்புக் கருவி பழுதடைந்திருக்கிறது என்றார்கள். நேராக வழங்கியில் உட்கார்ந்து வேலைகளை ஆரம்பித்தேன். தலை நிமிர்ந்து பார்க்கும் போது பன்னிரண்டரை மணி ஆகியிருந்தது. ஒன்றரை மணிக்குச் சாப்பிடப் போனோம். சாம்பார், பீட்ரூட் துவரன், ரசம், பப்படம். ரசத்தைக் கலக்கிக் கலக்கி ஊற்றிக் கொண்டிருந்தார். கடைசி முறை மோர் மறுத்து மீண்டும் ரசம் ஊற்றிக் கொண்டேன்.
சாப்பிட்டு விட்டு அதே வேலை தொடர்ந்தது. இருட்டுவதற்கு முன்பு கிளம்ப வேண்டும் என்று சொல்ல அவசரமும் பதற்றமும் தேவையில்லாமல் தொற்றிக் கொண்டது. பல முறை முயற்சி செய்து அமைதிப் படுத்திக் கொண்டு பெரும்பாலான சிக்கல்களை களைந்து விட்டேன். ஆறு மணிக்கு மேல் இருட்டிய பிறகே கிளம்பினோம். அவரது காரிலேயே சென்னைக்குப் போக இடம் கிடைத்து விட்டது.
இன்னும் உற்பத்திப் பிரிவில் 1000 தோல்களுக்கு மேல் கணக்கு சரியாக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் சரக்கு மதிப்பின் எல்லா விபரங்களையும் ஒரே பக்கத்தில் தருவதாகத் திட்டமிட்டு அவரிடம் சொல்லவும் செய்தேன். அறிக்கையின் விபரங்களை ஒவ்வொன்றாக சீர் தூக்கி கொடுத்து விட வேண்டும். கணக்கிடும் முறைகளையும் கொஞ்சம் எளிமைப் படுத்த முடியும் என்று தோன்றியது.
வேதிப் பொருட்களுக்கான மதிப்பை தனியாகப் பிரித்துக் காட்ட வேண்டும் என்றும் சொன்னார். அதையும் செய்து கொடுத்து விட்டால் இன்றைக்கு வேலை முடிந்து விடும்.

திங்கள், நவம்பர் 03, 2008
கருத்து உரிமையும் பொறுப்புணர்வும்
நேரம் காலை நான்கு மணி பதினாறு நிமிடங்கள். நேற்றுக் காலையில் விழிப்பு வரும் போது ஆறு மணி தாண்டியிருந்தது. சளிப் பிடிப்பு கனமாக தொண்டையில் உட்கார்ந்திருந்தது. ஏழு மணி வரை தூங்கி விட்டு எழுந்தேன். எட்டரை மணிக்கு அலுவலகம் போவதாக திட்டமிட்டிருந்தோம். என்னென்ன வேலைகளை முடித்து எத்தனை மணிக்குப் புறப்பட முடியும்?
இரண்டு நாட்களாகக் கழுவப் படாமல் அழுக்கு பாத்திரங்கள், நான்கு நாட்களுக்கும் மேல் சேர்ந்திருக்கும் அழுக்குத் துணிகள் இவை எல்லாவற்றையும் வைத்து விட்டு பசிக்கு இரை பார்த்தேன். மேகி நூடுல்சின் கடைசி பகுதி, மூசிலி என்று வாங்கி வைத்திருந்த அவல், உலர்ந்த பழங்கள் சேர்ந்த கலவை, காம்ப்ளான் என்று கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் சாப்பிடுவதிலேயே கழிந்தது. எட்டு இருபதுக்கு அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.
முடிக்க வேண்டிய பணிகள் நிறைய இருந்தன. தரவுத்தள தரவுகளை பாதுகாக்கும் பணி, அறிக்கைகளில் செய்ய வேண்டிய பணிகளை முடிக்க வேண்டும். தோல் மதிப்பு குறித்து மின்னஞ்சல். மின்னஞ்சல்.
வேலைகளைப் பார்க்க இரண்டு பேரும் உட்கார்ந்து ஒவ்வொரு தேவையாக அலசினோம். முதலில் சின்னச் சின்ன சிக்கல்களைப் பேசி விட்டு, அதன் பின் பல நாட்களாக நிலுவையில் இருக்கும் அறிக்கைகளை கையில் எடுத்தோம். ஒவ்வொன்றாக பார்க்கும் போது செய்ய வேண்டிய பணிகள் ஏழெட்டுதான் இருந்தன. ஏற்கனவே கொடுத்திருந்த தகவல்களை வைத்துக் கொண்டு பெரும்பாலான விபரங்களைக் காண்பிக்க முடிந்தது. அதற்கான அறிக்கை மாதிரிகளை உருவாக்கி திங்கள் கிழமை அவர்கள் கணினியில் செயல்படுத்தி விடுவதாக முடிவு செய்தோம்.
அதைத் தொடர்ந்து தரவுத் தள மேம்பாட்டுப் பணிகள். இதை இவ்வளவு நாட்களாக கவனிக்காமல் எப்படி சமாளித்தோம் என்று வியப்பாக இருந்தது. தரவுத் தளத்தை அணுகுவதற்கு வெவ்வேறு பயனர்கள், ஒவ்வொரு வகை பயனருக்கும் வரையறுக்கப்பட்ட உரிமைகள், வெவ்வேறு தரவுத் தள அட்டவணைகளுக்கு அணுகல் உரிமைகளை மட்டுப்படுத்துதல், முக்கியமான தகவல்களுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு தவறான தகவல்களை ஏற்றுக் கொள்ள முடியாதபடி செய்தல் என்று சுறுசுறுப்பாக எண்ணம் ஓடியது.
தொலைபேசி விற்பனை அறிக்கையில் மதிப்பை தவறாகக் காண்பித்திருப்பதாகச் சொன்னார். ஞாயிற்றுக் கிழமையும் யாரும் எதுவும் சொல்லமலேயே போய் வேலை பார்க்கும் கடமை உணர்ச்சி வியப்பை அளித்தது. பணம் கொடுக்குமாறு கொஞ்சம் இறுகிக் கேட்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். பணத்தின் மீது கவனம் வந்து விட்டிருக்கிறது.
மதியத்துக்கு மேல் அவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் அடுத்த பணிக்கான அடித்தளத்தையும் போட்டுக்கொண்டேன். காலையில் மின்னஞ்சல்களுக்கான பதில்களை போட்டு விட்டிருந்தேன். செய்து முடித்த பணிகளை விளக்கி குழுவினருக்கு ஒரு மடல்.
சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமா என்று தொலைபேசி கேட்க, நானும் அதில் சேர்ந்து கொண்டேன். பூரியும் கிச்சடியும் வாங்கி வந்தார். எனக்கு இரண்டு பூரிகள். கொண்டு வந்திருந்த தீபாவளி தின்பண்டங்களை நொறுக்கிக் கொண்டிருந்தேன். சுடச் சுட காபி குடித்துக் கொண்டேன். மின்விசிறியை இயக்காமல் உட்கார்ந்திருக்க நல்ல வியர்த்து விட்டது.
இரண்டு மணி வாக்கில் படுத்து இளைப்பாறல். இடையில் அழைத்திருக்கிறாள். திரும்ப அழைத்தால் இணைப்பு கிடைக்கவில்லை. மாலையில் தொழிற்சாலைக்குப் போய் கணினியை இயக்குவதாகச் சொல்லியிருந்தார். அவருக்குத் தொலைபேசி நிலவரம் கேட்டுக் கொண்டேன். அவர் வந்து கணினியை இயக்கிய பிறகு அரை மணி நேரம் சரக்கு மதிப்புகளை மறு கணக்கீடு செய்யும் பணியை ஓட விட்டேன். அறிக்கைகளை அவரது ஆலோசனைகளின் படி மாற்றி அமைத்தேன். விற்பனை அறிக்கையில் சதுர அடிக்கு விலை, சதுர அடிக்கு பலவகை செலவுகள் என்று தகவல்களை சேர்த்துக் கொடுத்தேன்.
ஆறரை மணிக்கு வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். குடியிருப்போர் சங்கத்தின் வரவு செலவு கணக்கை அச்செடுத்து கொண்டு போக வேண்டும். அச்செடுக்க முயன்றால் அச்சியந்திரம் நகரவேயில்லை. ஏதேதோ முயன்று பார்த்து விட்டு கடைசியில் போய்ப் பார்த்தால் வலை இணைப்புக்கான ஒயர் தளர்ந்து போயிருந்தது. அந்த வேலையை முடிக்கும் வழியில் nmap என்ற வலைப்பின்னலில் இருக்கும் எல்லா கணினிகளையும் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளும் கருவியைப் பற்றிக் கற்றுக் கொண்டேன்.
கணினிகளை அணைத்து, மின்வழங்கியையும் செயலிழக்கச் செய்து விட்டுக் கதவை மூடி விட்டுப் புறப்பட்டேன். தேய்க்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்க வேண்டும். காரை விட்டு விட்டு இரு சக்கர வண்டியை எடுத்துக் கொண்டேன். தலைக் கவசம் சளிக்கும் பாதுகாப்பாக. இன்னும் தேய்த்து முடித்திருக்கவில்லை. இன்றைக்குப் போட்டுப் போக சட்டைகளே இல்லைதான். அதிகாலையில் தந்து விடுவதாகச் சொன்னார்கள்.
நாள் முழுவதிலும், காலையில் மேகி நூடுல்ஸ், 2 பூரிகள், மதியம் தூங்கி எழுந்த பிறகு மீதியிருந்த கிச்சடி, ஒரு வடை சாப்பிட்டிருந்தேன். இடையிடையே நொறுக்குத் தீனிகள். பசிக்கலாமா என்று வயிறு யோசித்தது. சளியும் பிடித்திருக்கிறது, சாப்பிட்டு விட்டுப் போய் ஒரு மணி நேரம் நாட்குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணம் எட்டிப் பார்த்தது. துர்கா பவன் மூடியிருந்தது. சுப்ரபாவிற்கு அருகில் கொஞ்சம் வேகத்தைக் குறைத்து விட்டு நிற்காமலேயே வந்து விட்டேன்.
வீட்டுக்கு வரும் போது ஏழே முக்கால் மணி. ரிச்சர்ட் ஃச்டால்மான் பற்றிய புத்தகத்தைப் படிக்கலாம் என்று ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் எழுதலாம் என்று தோன்றியது. நாள் முழுவதும் நிறைவாக பணி முடித்த மகிழ்ச்சி இருந்தது. கண்ணாடியில் முகம் இரண்டு நாள் தாடியுடன் தெரிந்தது. முகத்தின் வடிவமே மாறி விட்டது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எலும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு பஞ்சத்தில் அடிபட்ட தோற்றமும், ஒரு அசட்டுக் களையும் இருக்கும். இப்போது தோல் இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்டது போல எலும்புகளை மூடியிருக்கிறது. கண்களில் ஒரு உறுதியும், தசைகளில் திட எண்ணங்களின் தாக்கமும் தெரிந்தன.
அரை மணி நேரம் சனிக்கிழமை நிகழ்வுகளைப் பற்றி எழுதி விட்டுத் தூங்கப் போனேன். தூங்குவதற்கு முன்பு தியானம். நேரம் ஓட்டமாக ஓடி விட்டது. 9 மணிக்கு படுத்து விட்டேன். குழப்பமான எண்ணங்கள் ஓடின.
செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து கொண்டே போவோம். அதுதான் ஒரே காப்பு.
அனில் கும்ப்ளே கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து விட்டார். அவர் தலைமை ஏற்று நடத்திய போட்டிகளில் இந்தியா வெற்றி பெறவில்லை. இடையில் ஒரு போட்டியில் தோனி தலைமை நடத்த இந்தியா வெற்றி பெற்று விட்டது. நேற்று நடந்து முடிந்த ஐந்து நாள் போட்டி சவ்வு போல இழுத்தது. கும்ப்ளே பெரிதாக எதுவும் சாதித்து விட முடியவில்லை. இந்தப் போட்டித் தொடரின் முடிவில் கங்குலியும், கும்ப்ளேவும் ஓய்வு பெற்றிருப்பார்கள். டெண்டுல்கர், திராவிட், லட்சுமண் விளையாடிக் கொண்டிருப்பார்கள். டெண்டுல்கருக்கு 35 வயதுதான் ஆகிறது. மேத்யூ ஃகேடனை விட இளையவர்தான். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் விளையாடலாம்.
இதை முடித்து விட்டு வீட்டை ஒதுங்க வைக்க வேண்டும். பாத்திரங்களைக் கழுவ வேண்டும். ஊற வைத்திருக்கும் துணிகளைத் துவைத்துப் போட வேண்டும். குளித்து தியானம் செய்து சாப்பிட்டுக் கிளம்பும் போது ஏழு மணி ஆகி விடும்.
தன்னை சீண்டுபவர்களை வன்முறையுடன் திருப்பித் தாக்கினால் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்று சாரு நிவேதிதா கற்றுக் கொண்டிருக்கிறார். தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் போது வந்து வம்பு பண்ணிய ஒருவன் தலையில் மதுக்குப்பியால் அடித்தது, உட்கார்ந்திருக்கும் போது இடிப்பது போல வந்து வண்டியை நிறுத்தியவனின் தலையை மோதி மயக்கமடையச் செய்தது, எரிபொருள் நிலையத்தில் பின்னால் இருந்து பேசிய ஆட்டோ ஓட்டுனரை திட்டித் தீர்த்தது என்று தனது நண்பர் ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டாராம்.
பிச்சை எடுத்து பிழைக்கிறீர் என்று எழுதியிருந்த ஒரு வாசகருக்குப் பதிலாக மனக் குப்பைகளை குவித்திருந்தார். விருப்பமில்லை என்றால் படிக்காதீர்கள் என்று ஒரு விளக்கமும் இருக்கிறது. வாய்த்திருக்கும் எழுத்துத் திறனையும், அறிவையும் எப்படிப் பயன்படுத்துவது என்பது தனி மனிதத் தேர்வை மட்டும் சார்ந்தது இல்லைதான். கூட்டாக வாழும் சமூகத்தில் சமூக நெறிகளுக்கு உடைத்தே தீருவேன்று என்று நிற்பவரை கண்டு கொள்ளாமல் போக முடியுமா?
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் முதல் மணி அடித்ததும் வெளியில் வந்தேன். முதல் மணியில் உயர்வகுப்பு மாணவிகளும், ஆரம்பப் பள்ளி மாணவரும் புறப்படுவார்கள். சில நிமிடங்கள் கழித்து இரண்டாவது மணி அடுத்து மற்ற மாணவர்களுக்கு வகுப்பு முடியும். வெளியில் வந்து பார்த்தால், பள்ளியின் மதில் சுவரை ஒட்டிய சாக்கடையின் மடைச் சுவரில் ஒரு மனிதர் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். பல நாள் தாடி, நல்ல வெளுத்த உடம்பு, எதைப் பற்றியும் கவலைப் படாமல் நின்று கொண்டிருந்தார். 'குடிகாரன், பைத்தியக் காரன்' என்று ஏதேதோ சொன்னார்கள்.
அப்படி நிற்பது அவரது உரிமை, வேண்டாமென்றார் கண்களை மூடிக் கொண்டு போய் விடுங்கள் என்று அவரோ அவரைச் சார்ந்தவர்களோ சொல்லியிருந்தால் யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஞாயிறு, நவம்பர் 02, 2008
உன்மத்தம்
நேரம் மாலை ஏழு மணி ஐம்பத்தி மூன்று நிமிடங்கள். வெள்ளிக் கிழமை உறுதி மொழிகள் எடுத்த கையோடு அன்று இரவு வெகு நேரம் வரை கண் விழிக்க வேண்டிய மன வேகம். முடிக்க வேண்டிய வேலைகள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் கடுப்பில் பட்டியல் போட்டுச் சிக்கலான முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே தளர்ந்து போய் வீட்டுக்குக் கிளம்பும் போது அதிகாலை இரண்டு மணி.
கார் பல நாட்களாக எடுக்கப்படாமல் அலுவலகத்துக்கு அருகிலேயே நின்றிருந்தது. அதை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். இரு சக்கரவண்டியில் போதுமான அளவு எரிபொருள் இருக்கிறதா என்றும் ஐயம் இருந்தது. அதிகாலையில் பெங்களூருவிலிருந்து வருபவரை போய் அழைத்து வர வேண்டும். நடுவழியில் நின்று விட்டால் குழப்பமாகி விடும்.
புதன் கிழமை முடி வெட்டிக் குளித்த பிறகான சளி தொண்டையில் மையம் கொள்ள ஆரம்பித்திருந்தது. காரில் உட்கார்ந்து இயக்கினால் முரண்டு செய்யாமல் இயங்கி விட்டது. ஆனால் நகருவதற்கு இழுத்துப் பிடித்தது. ஏதோ சக்கரத்தின் கீழ் கல் வைத்து தடுத்திருப்பதைப் போல இழுத்தது. கீழே இறங்கி சுற்றி வந்து பார்த்தேன் எதுவும் இல்லை. அன்று காலையில் ஒரு கால் உடைந்த காகம் காருக்கு அருகில் வந்து உயிரை விடக் காத்திருந்தது. அதை மதியத்துக்கு மேல் அருகில் ஒதுக்கி வைத்திருந்தார். அதன் உயிரற்ற உடலும் கிடந்தது.
ஆனது ஆகட்டும் என்று பின்நோக்கிச் செல்லும் இயக்கியை போட்டு வேக முடுக்கியை அழுத்தினேன். கொஞ்ச கொஞ்சமாக நகர்ந்து சாலையில் ஏறியது. திருப்பி சந்துகள் சந்திக்கும் சந்தி வரை சென்று திருப்பி ஓட்ட ஆரம்பித்தேன். ஏதோ குளறுபடி இருப்பது போலத்தான் தோன்றியது. பாதி வழியில் இறங்கி இன்னொரு தடவை பார்த்துக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும் தூங்குவதா வேண்டமா என்று சின்னக் குழப்பம். முடிக்க வேண்டிய வேலைகள் முழுமையாக செய்து விடவில்லை. தொடர்வண்டியும் ஐந்தரை மணிக்கு மத்திய தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்து விடும். ஆறு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியிருக்கும்.
கொஞ்சமே கொஞ்சம் தூங்கிக் கொள்ளலாம் என்று அரை மணி நேரம் வைத்துக் கொண்டு தூங்கினேன். அதற்குப் பிறகு இன்னும் அரை மணி நேரம். 4 மணிக்கு விடாப்பிடியாக எழுந்து கொண்டேன். காலைக் கடன்களை முடித்து விட்டு 10 நாட்கள் வெளியில் நின்று பறவை எச்சங்களும் புழுதியும் படிந்து அலங்கோலமாக இருந்த காரின் மீது நீர் இறைத்துத் துடைப்பு. தொடர்ந்து 5 மணியிலிருந்து நாட்குறிப்பு, கூடவே நிரல்களை இயக்கி அறிக்கைகள் என்று நேரம் போய்க் கொண்டிருந்தது.
ஐந்தரை மணிக்குத் தொலைபேசி கேட்டால் வண்டி நிலையத்துக்குள் வந்து விட்டதாம். அத்தோடு நாட்குறிப்பை நிறுத்தி விட்டு மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். அழுக்காகக் கிடந்த பாத்திரங்கள், துவைக்க வேண்டிய துணிகள் எதுக்கும் நேரம் வரவில்லை. துவைத்த துணிகளை மடித்து வைத்து விட்டு, நாளிதழ்களை அடுக்கி வைத்து, கணினியையும் மூடி பையில் வைத்தேன். குளித்து விட்டு தியானம் செய்யலாம். உடைகளையும் அணிந்து கொண்டால் அப்படியே அலுவலகம் போய் விடலாம். அலுவலகத்தில் ஏழரை மணிக்கு சந்திப்புகள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்பும் கொஞ்சம் வேலை செய்து விட முடியும்.
நெசப்பாக்கம் வரை பேருந்தில் வந்து விடுவதாகச் சொல்ல, அலுவலகம் போகத் தயாராக புறப்பட்டு விட்டேன். வீட்டின் மாற்றுச் சாவியையும் இருசக்கர வண்டிய சாவிகளையும் எடுத்துக் கொண்டேன். நான் அலுவலகத்துக்குப் போய் விட்டு வீட்டுக்கு அவரை போய் குளித்து வரக் கேட்டுக் கொள்ளலாம். இரவு தூங்காத பதட்டம் இருந்து கொண்டே வந்தது. போட்டு விட்டுப் போயிருந்த தினத்தந்தி, எகனாமிக் டைம்சு எடுத்துக் கொண்டேன்.
அதனால் கூடுதல் கவனத்தோடு, மெதுவாக வண்டியை ஓட்டினேன். நெசப்பாக்கம் பாரத அரசு வங்கி எதிரில் நிறுத்தி விட்டு நாளிதழ் புரட்டிக் கொண்டே நின்றிருந்தேன். சில நிமிடங்களில் பேருந்து வந்து விட்டது. அலுவலகத்தில் குளிக்க வசதி இருந்தால் வீட்டுக்குப் போகத் தேவையில்லை என்று சொல்ல, நேராக அலுவலகம்.
ஏதோ அலந்து கிடந்தவன் போக கணினியை இயக்கி விட்ட இடத்தில் தொடர்ந்தேன். ஏழரை மணிக்கு சரியாக ஒருவர், அடுத்தடுத்து ஒவ்வொருத்தராக, தாமதாவதாக ஒருவர் மட்டும் தொலைபேசினார். ஒன்பது மணி வாக்கில் வந்து சேர்ந்து கொண்டார். முடிக்க வேண்டிய பணிகளை விளக்கி விட்டு, முடிந்த வரை கணினியில் போட்டு விட முடிவு செய்தேன்.
எட்டு மணிக்கெல்லாம் கூட்டம் ஆரம்பித்து விட்டோம். தலைமைப் பொறுப்பை ஏற்பவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்ப்பதற்கான பயிற்சிக் கூட்டம். எப்படி ஒரு பொறுப்பை அணுகுவது என்று சொல்லும்படி கேட்டுக் கொண்டேன். மேலாண்மை உயர்படிப்பில் தான் இரண்டு ஆண்டுகள் படித்ததை அரை மணி நேரத்தில் பிழிந்து கொடுத்து விட்டதாகச் சொன்னார். மிகவும் பலனுள்ள உத்தி. நான் வழக்கம் போல அந்த உத்திக்கு மேல் உள்ளுணர்வு சார்ந்த உணர்ச்சி பூர்வமான தலைமைப் பண்பையும் வலியுறுத்தினேன்.
முடித்திருந்த இரண்டு அவசர தேவைகளையும் போட்டு விட்டேன். மூன்றாவதை சரிபார்ப்பதற்கே வெகு நேரம் பிடிக்கும். அது சாயங்காலம்தான் போய் சேரும். அந்த மும்முரத்தில் காலை உணவுக்கு வெளியில் போவதையும் தவிர்த்து விட்டேன்.
சந்தைப்படுத்துதல் குறித்த கூட்டம் 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். நினைவுபடுத்திய பிறகு 11 மணிக்கு ஆரம்பித்தது. அதிலும் பாதியில் எழுந்து கொண்டேன். மாலைக் கூட்டத்திலும் அதே கதை. என்ன சொல்ல வருகிறார்கள் என்ற பொறுமை இல்லா விட்டால் கலந்து கொள்ளாமலேயே இருந்து விட வேண்டும். பாதியில் கலந்து கொண்டு பாதியில் எழுந்து போவது அடாவடி.
11 மணிக்கு நடக்க வேண்டிய வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடக்கவேவில்லை. தீபாவளி பண்டம் என்று வந்து சேர்ந்ததை இடையில் ஒரு கை பார்த்திருந்தேன். காலையில் சாப்பிடவில்லையாதலால் விதிகளுக்கு விடுமுறை. மதிய உணவையும் நன்கு சாப்பிட்டு விட்டு அதன் பிறகான கூட்டத்தில் போகாமலேயே வேலையில் இறங்கினேன். பல சிக்கலான முடிச்சுகளுக்கு விடை கொடுக்க முடிந்தது.
மாலையில் பணிமேலாண்மை குறித்த கூட்டம். அதிலும் ஆரம்பத்தில் கலந்து கொண்டு தொலைபேசி அழைக்க வெளியில் வந்தேன். மிகவும் உற்சாகமாக எல்லோரும் செயல்முறை பயிற்சி ஒன்றில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள். இடையில் வெளியில் போய் தேநீர் , கூடவே சுசியன்.
கடைசிக் கூட்டமும் நடக்காமலேயே நாளை முடித்து விட்டோம். இன்னும் நேரம் நிறைய இருக்கிறது. கடைத்தெருவுக்கு, திநகருக்குப் போகலாம். தூக்கத்தை நாடி உடல் கெஞ்சியது. இந்தக் கூட்டத்தில் பேருந்தில் போவதென்றால் எளிதில்லை. வாடகை வண்டியில் ஆளையே விலை கேட்பார்கள். இரு சக்கர வண்டியில் கிளம்பி விட்டோம்.
திநகரில் புதிய பாலத்துக்குக் கீழே வண்டியை நிறுத்தி விட்டு பார்த்தால் கொஞ்சத் தள்ளி அட்சய பவன் என்று உணவு விடுதி. அதை நோக்கிக் கால்கள் தானாக நடந்தன. திநகரில் எல்லா இடங்களிலுமே சாப்பிடுவதற்கு தள்ளல்தான் போலிருக்கிறது. அப்புறம் பார்த்தால் ஒரு பக்கவாட்டு தெருவில் கொஞ்சம் ஓய்வாகவே இருந்தது. ரவா தோசை 30 ரூபாய், சாதாரண தோசை 22 ரூபாய். குடிக்கத் தண்ணீர் தருவதற்குக் கூட நேரம் இல்லாத அளவுக்குப் பரபரப்பு.
சாப்பிட்டு விட்டு சென்னை சில்க்சு நகைக் கடை. அகலமாக, நிறைய ஊழியர்கள் அமைதியாக பேசிக் கொண்டு தளம் நன்றாக இருந்தது. விற்பனை உதவியாளர் கொஞ்சம் கூட சலிப்பே காட்டாமல் பல வகைகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார். விலையைக் கணக்கு போட்டுச் சொன்னார்.
குளிர் பதனம் செய்த இதமான சூழலில் அரைத் தூக்க மயக்கத்துக்குப் போய் மீண்டு வந்து கொண்டிருந்தேன். இறுதி விலை சொல்லும் போது, தன் மேலாளரை அழைத்தார். அவர் வந்து 10 ரூபாய் குறைத்து வாங்கிக் கொள்ளச் சொன்னார். கேட்காமலே விலை குறைத்துக் கொடுக்கிறார்களாம். வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் அணுகுமுறை.
பணம் கொடுக்கப் போக வேண்டியது கல்லறையில். அங்கு சாமி படம், பக்தி துண்டுப் பிரசுரங்கள் வைத்து ஒரு தட்டில் பொருளையும் பொதிந்து வைத்து, அப்படியே சுவரில் மாட்டியிருந்து சாமிப் படத்துக்கு முன்பு கண் மூடி நின்று விட்டு, திரும்பி 'வாழ்க வளமுடன்' என்று சொல்லி தட்டைக் கையில் கொடுத்தார். வேறு மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற சடங்குகளை செய்திருப்பார் என்று பட்டது. உதவியாளர் தட்டைக் கையிலிருந்து பெற்று பளபள கைப்பையில் போட்டுக் கொடுத்து விட்டார்.
மின் தூக்கியில் இறங்கி வெளியில் வந்தோம். மத்திய தொடர் வண்டி நிலையத்துக்குப் போய் விட்டு வர வேண்டும் அளவுக்கு திடம் இருப்பதாகப் படவில்லை. அப்படியே விடை பெற்றுக் கொண்டேன்.

சனி, நவம்பர் 01, 2008
தரையில்தான் நடக்க முடியும்
நேரம் காலை ஐந்து மணி. நாள். நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி. பணியை முடிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர்களிடம் பணம் கேட்க முடியாமல் தேங்கி விட்டிருக்கிறது.
அது தொடர்பாக ஒரு பெரிய குழப்பத்தை உண்டாக்கி வேலையை அதிகரித்து விட்டிருக்கிறேன். கெமிக்கல் மதிப்பை தனியாக காண்பிக்க வேண்டும் என்று சொன்னதை எல்லா சரக்குக்கும் வேதிப் பொருள் மதிப்பைப் பிரித்துக் காட்டும்படி மாற்றிக் கொண்டிருந்தேன். என்னால் சமாளிக்க முடியாமல் உதவியையும் அதில் எடுத்துக் கொண்டேன். ஆளுக்கு நான்கு நாட்கள் அதில் செலவழித்திருப்போம்.
இன்று இரவுக்குள் இந்தப் பணியை முடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் முயன்று கொண்டிருந்த போது திடீரென்று தனியாகக் காண்பிக்க வேண்டியது தோலுடன் சேர்ந்த வேதிப் பொருள் மதிப்புகளை அல்ல, தனியாக உற்பத்திக்கு கொடுக்கப்பட்ட வேதிப் பொருள் மதிப்பு மட்டுமே என்று உறைத்தது.
ஆரம்பத்திலேயே தேவையை தெளிவாக கேட்டுக் கொண்டு அதைக் குறித்த எனது புரிதலையும் சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டு வேலையை ஆரம்பித்திருந்தார் இந்த ஒரு வார இழுத்தடிப்பைத் தவிர்த்திருக்கலாம். விடுமுறை நாட்களிலெல்லாம் வேலை பார்த்தேன். இரவெல்லாம் கண் விழித்து வேலை பார்த்தேன் என்று யாருக்கும் பலனில்லாத சொத்தை வேலை செய்வதால் என்ன பெருமை. இரவில் அது உறைத்ததும் மிகவும் வருத்தமாகி விட்டது. இவ்வளவு மோசமான முறையில் முடிவு எடுத்து வேலை பார்த்திருக்கிறோமே!
கார்த்தி சொல்வது போல என்ன தேவை வந்தாலும் வாடிக்கையாளரிடம் தெளிவாகப் பேசி புரிந்து கொண்டு நமது புரிதலை அவர்களுக்கு விளக்கி ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் வேலை ஆரம்பிக்க வேண்டும். சும்மா, குத்துமதிப்பாக எனக்கு எல்லாம் தெரியும் என்ற அடாவடியை விட்டு விட வேண்டும்.
கொஞ்சம் ஆணவம், அடாவடி அதிகமாகித்தான் போய் விட்டது. இதைச் சமாளிக்காவிட்டால் தலை சுற்றி கீழே விழுவதுதான் நடக்கும். அடுத்து நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது வாடிக்கையாளர்களிடம் செய்யப் போகும் வேலையைத் தெளிவாக விளக்கி உறுதிப் படுத்திக் கொள்வது தான். அந்த பகுதியில்தான் நாம் மிக பலவீனமாக இருக்கிறோம். அங்கு கவனத்தையும் நேரத்தையும் செலுத்தினால் நல்லது.
இந்த நாட்குறிப்புகளைப் படிப்பவர்கள் இன்னொரு பரிமாணத்தில் தோன்றியிருக்கிறார்கள். யார் படிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எழுதுவதும், எழுதியதை வெளியிடுவதும் மாறி விடத்தான் செய்கிறது. பதியவே போவதில்லை என்ற சுவாதீனத்துடன் எழுதுவதை விட்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எழுதிய பிறகு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு வெட்டிக் கொண்டால் போகிறது.
நேற்றுக் காலையில் முடிவு செய்தது போல எழுந்து விட்டேன். எழுந்ததும், அடைக்கு ஊற வைத்து விட்டு எழுத ஆரம்பித்தேன். கணினியில் நிரலாக்கப் பணிகளை தொடங்கியிருக்கவில்லை. எழுதி முடித்ததும் புத்துணர்ச்சி நிறையவே கிடைத்தது. என்னைச் செதுக்கிய எம்ஜிஆர் பாடல்கள் கேட்கலாம் என்று ஆரம்பித்து விட்டு, சில நிமிடங்களில் நிறுத்தி விட்டேன். துணிகளை மடித்து வைத்து, நாளிதழ்களை அடுக்கி வைத்து விட்டு வீட்டைத் தூக்கும் முன்பே பாத்திரம் கழுவ ஆரம்பித்து விட்டேன். கிண்ணங்கள், சின்னக் கரண்டிகள் என்று நிரம்பியிருந்தன.
காலையில் ஆறரைக்குத்தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தாலும், பசிக்கிறது என்று பொரிகடலை ஒரு கை, காம்ப்ளான் கலக்கி ஒரு டம்ளர் உள்ளே போனது. துணி துவைக்கப் போவதில்லை, வெளியே நடக்கப் போவதில்லை, தரை துடைக்கப் போவதில்லை.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)