டிசம்பர் 21, 2011 நேரம் காலை 5.30
நேற்று இரவு தூங்கும் போது வீடெல்லாம் குளிர். சமையலறையில் மேலே ஒரு திறப்பு, உள் அறைகளில் ஒன்றில் ஜன்னல் கதவு மாட்டியிருக்கவில்லை, இன்னொன்றில் ஜன்னல் கதவு கண்ணாடி உடைந்திருந்தது. 6 மணிக்கு மேல் எழுந்திருந்தேன். குளியலறை, பல் துலக்கக் கூட வெளியில் குளிரில் நடந்து போக வேண்டும். ஒரு சால்வையால் தலையையும் முகத்தையும் மூடிக் கொண்டு போய் வந்தேன்.
பார்க்கப் போனால் நம்ம நாகர்கோவில் வீட்டைப் போலத்தான். அங்குதான் வீடுகளின் அறைகள் ஒவ்வொன்றிலும் ஏதாவது துவாரம் கூரை அருகில் இருக்கும். கழிவறையும், குளியலறையும் வீட்டுக்கு வெளியில் இருக்கும். ஆனால், அங்கு அவ்வளவு குளிர் கிடையாது.
நாட்குறிப்பு எழுதி விட்டு பாடலை ஒலிக்க விட்டு உட்கார்ந்திருந்தேன். வீட்டு உரிமையாளர் மேலே ஏறி வந்தார். அவரிடம் விபரங்கள் சொல்லி வீட்டில் செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும் குறிப்பிட்டேன். எல்லாமே அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஏதோ பாட்டு கேட்கிறதே என்றும் கேட்டுக் கொண்டார். "உங்களுக்கு அந்த சிடி தருகிறேன் கேட்டுப் பாருங்க" என்றேன்.
பழைய வீட்டிலிருந்து மிதியடிகளை எடுத்து வர வேண்டும், மின்விசிறி கழற்றி மாட்ட வேண்டும். முன் அறைக்கு ஒரு விளக்கு வாங்கிப் பொருத்த வேண்டும். அந்த அறையில் இருக்கும் மின்விசிறி நன்றாகவே இருந்தது. அதன் வேகம் குறைத்து வைக்கப்பட்டிருந்ததால், மெதுவாக சுற்றியிருக்கிறது. வீட்டுக்காரர் போட்டுக் காட்டினார். வீட்டுச் சாவியை வைத்துக் கொள்ளும் படி சொன்னார். உலாவி வரப் போனேன்.
கடையில் டெக்கான் குரோனிக்கிள் வாங்கிக் கொண்டு வழியில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் பால் ஒரு கப். 7 ரூபாய் வாங்கி விட்டார். மொத்தம் 8.50 காசுகள் செலவு.
வீட்டுக்கு வந்து முன்னறையை ஒதுங்க வைத்தேன். அலமாரி தட்டுகளில் நாளிதழ் தாள்கள் விரித்து பொருள் அடுக்கி வைக்க வேண்டும். 8.30க்குப் பிறகு பசித்தது. போய் ஓடைப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் உணவு விடுதிக்குள் போனேன். அருகில் இருக்கும் நாளிதழ் கடையும் இந்த கடை அம்மாவின் சகோதரியின் கடை என்று தெரிந்தது. அந்தக் கடைக்குப் போவதை நிறுத்தியிருந்தேன். இங்கும் போக வேண்டாம்.
திரும்பும் வழியில் பாம்பா ஆனந்த பவனில் காரமான சமோசா போன்ற நொறுக்குத் தீனியும், முந்திரி கேக்கும் வாங்கிக் கொண்டேன். மளிகைக் கடையில் கழிவறை கழுவும் ஹார்பிக், அரசன் சோப்பு, பெப்சோடென்ட் பற்பசை, பல் தேய்க்கும் பிரஷ் வாங்கிக் கொண்டு 500 ரூபாய் நோட்டை மாற்றினேன். எங்கு மாற்றினேன் என்று பிற்பாடு குழம்பிக் கொண்டிருந்தேன்.
வீட்டுக்கு வந்து பொருட்களை எடுத்து வைத்து விட்டு கட்டுரை எழுதுவதில் இறங்கினேன். ஏற்கனவே வெளியாகியிருந்த கட்டுரையின் வடிவித்திலேயே இதை எழுதினேன். நாள் முழுவதும் இந்த வேலைதான் போய்க் கொண்டிருந்தது. 11 மணிக்குப் புறப்பட்டேன்.
பிஎஸ்என்எல்லில் இணைப்பைத் துண்டிப்பதற்கான உறுதிச் சீட்டை வாங்க வேண்டும். எலக்ட்ரீஷியன் ஒருவரை தேட வேண்டும். கோபாலபுரத்தில் இருக்கும் கடையில் பார்த்தால் ஆள் இல்லை. எழுதிப் போடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்தால், அருகில் இருப்பதாகவும் 10 நிமிடங்களில் வந்து விடுவதாகவும் சொன்னார். வேறு வேலை முடித்து விட்டு அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லி விட்டுப் போனேன்.
பிஎஸ்என்எல்லில் எவ்வளவு நேரம் ஆகும் என்று யாருக்குத் தெரியும்! அங்கு போனால், எல்லா முறைகளையும் நிறைவு செய்து உறுதிச் சீட்டை தயாராக வைத்திருந்தார், கையில் கொடுத்து விட்டார்.
வரும் வழியில் பழம் நடைபாதையில் வைத்திருந்தவர்களிடம் 1 கிலோ ஆரஞ்சு, அரைக் கிலோ ஆப்பிள் வாங்கினேன்.
எலக்ட்ரீஷியன் கடைக்கருகில் அவர் இன்னும் வந்திருக்கவில்லை. 20 நிமிடங்கள் ஆகியிருந்தன. அவர் சொன்ன நேரத்தை விட 10 நிமிடங்கள் தாண்டியாச்சு. நான் சொன்ன நேரம் வர இன்னும் 10 நிமிடம் இருக்கிறது. நான் காத்திருந்தேன்.
வழக்கமாக கடையில் உட்கார்ந்திருப்பவரும், இன்னொருவரும் இரு சக்கர வண்டியில் வந்தார். அவர்தான் எலக்ட்ரீஷியன். இன்வெர்டர் பேட்டரி பற்றியும் குறிப்பிட்டேன். வரச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தேன். பின்னாலேயே இரு சக்கர வண்டியில் வந்தார். நான் திரும்பிய பிறகும் கண்ணில் படாததால் நின்று காத்திருந்தேன். அவர் வண்டியிலேயே ஏறிக் கொண்டேன். நான் புதிய வீட்டு அருகில் இறங்கி விட்டு, அவரை பழைய வீட்டு மேலே போய் பார்க்கச் சொன்னேன்.
மேலே வந்து பையை வைத்து விட்டு சாவியை கொண்டு போனேன். பக்கத்து அலுவலக பெப்சி ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தார். இவருக்கு பேட்டரி, இன்வெர்டர் பற்றி பரிச்சயம் இல்லை போலிருக்கிறது. வேறு யாரிடமோ தொலைபேசி கேட்டார்.
மின்விசிறியைக் கழற்றுவதற்கு ஸ்டூல் வேண்டும். பக்கத்து அலுவலகத்தில் கேட்டால் ஒரு நாற்காலி கொடுத்தார்கள், அது உயரம் போதாது, மறுபடியும் வீட்டுக்குப் போய் ஸ்டூல் எடுத்து வந்தேன். நாற்காலியின் மேல் ஸ்டூலைப் போட்டால் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் மீது வழுக்கி விடும் என்று பயந்தார். நான் போட்டு பிடித்துக் கொள்வதாக வாக்களித்த பிறகு பயந்து கொண்டே ஏறி ஓரிரு நிமிடங்களில் கழற்றி விட்டார். நாற்காலியை திருப்பிக் கொடுத்து விட்டு, ஸ்டூலை நானும், மின்விசிறியை அவரும் எடுத்துக் கொண்டு இந்தப் பக்கம் வந்தோம். வீட்டைப் பூட்டி சாவியையும், மின் அட்டையையும் எடுத்துக் கொண்டேன்.
இங்கு மின்விசிறியை மாட்டுவதற்கு மேசையை இழுத்துப் போடச் சொன்னேன். மேசை பலக்குமா என்றும் சந்தேகம். விலைவாசி உயர்வு பற்றிப் பேசினோம். விவசாயம் அழிந்தாகி விட்டது, சில்லறை வணிகத்தில் பெரு நிறுவனங்களை உள்ளே விடப் போகிறார்கள் என்று அரசியல் பேசினேன். கொஞ்சம் பயந்திருப்பார், சுபாவமே பயந்த சுபாவம்தான். மின்விசிறி ஓட ஆரம்பித்து விட்டது. மின்கலன்களை இன்று நாளைக்குள் விலைக்கு எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன்.
வீட்டை தூத்து துடைக்க லட்சுமி வந்தார். வேலை செய்யும் போது செலவுகளைக் குறைப்பதாகவும், வருமானம் குறைந்து விட்டதாகவும் சொன்னேன். சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 'நீ இல்லைன்னா, அந்த வாசன் ஆஸ்பிட்டலில் கேட்கிறாங்க, அங்க சொல்லி சேர்ந்துக்குவேன்' என்று சொல்லி விட்டார்.
மதிய உணவுக்கு வெளியில் போகும் உத்தேசம் இல்லை. கட்டுரையை திரும்பத் திரும்பப் படித்து பிழை திருத்தி, வாக்கியங்களை மாற்றி அமைத்து மேம்படுத்திக் கொண்டிருந்தேன். சுமார் 3 மணி வாக்கில் இறுதி செய்து இணைத்து அனுப்ப முடிவு செய்தேன். இணைத்த பிறகு படித்து இன்னும் சில திருத்தங்கள். பகல் பொழுதில் இந்த இணைய இணைப்பு கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கிறது. பழகுவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகலாம்.
அதன் பிறகு துணிகளை அடுக்கி வைத்தேன். குளிக்க வேண்டும். அதற்கிடையில் கொஞ்ச நேரம் இணையத்தில் மேய்ந்து கொண்டேன்.
சமையலறையில் டப்பாக்கள், பாத்திரங்களை அடுக்கி வைத்தேன். அதன் பிறகுதான் இன்று கேஸ் வாங்க வேண்டும். அதன் பிறகு கை கால் கழுவி விட்டு உடை மாற்றிப் புறப்பட்டேன்.
அழகர் விடுதிக்கு அருகில் அவுட்லுக் வாங்கினேன். அழகர் விடுதிக்குப் போய் 4 இட்லி+1 தோசை+பால். வெளியில் வரும் போது வைத்திருந்த எள்ளடை ஒரு பாக்கெட். அருகில் இருந்த மருந்துக் கடையில் குட்நைட் கொசு விரட்டும் திரவம், ஹார்லிக்ஸ். சாலையைக் கடந்த பிறகு வாழைப்பழம் பொதி ஒன்று. வழியில் ஹைபிரட்ஸ் என்ற கடையில் பிரெட் ஒன்று தேங்காய் மிட்டாய் ஒரு பொதி. cfl விளக்கு ஒன்று 110 ரூபாய். சாதாரண குண்டு பல்பு 9 ரூபாய்க்கு விற்கிறது. வயதான ஒருவர் வாங்கிப் போனார்.
வீட்டுக்கு வந்து விளக்கை மாட்டி விட்டு எள்ளடையை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தேன். உண்மை மனிதனின் கதையைப் படித்துக் கொண்டே முழு பொதியையும் தின்று தீர்த்தேன்.
இதை முடிக்கும் போது ஆறரை ஆகியிருக்கும். முன்கூட்டியே நிறுத்தினாலும் நிறுத்தி விடலாம். உலாவப் போய் வர வேண்டும்.
காலை உணவுக்கு வெளியில் போக வேண்டாம். வாழைப்பழம், பிரெட் இருக்கிறது, ஹார்லிக்ஸ் குடித்துக் கொள்ளலாம்.
முன்னறையில் வைக்க வேண்டிய புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். பணியறையில் செய்தித் தாள் விரித்து பொருட்களை வைக்க ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக